Servants of Knowledge
Tamil Nadu Gazette · Government of Tamil Nadu

Tamil Nadu Acts and Ordinances

Published 20 July 2022

Type
Ordinary
Gazette no.
29
Part
Part IV
Notifications
Tamil Nadu Act No. 31 of 2022
Section
Section 2-T-Sup
Identifier
in.gazette.tamilnadu.2022-07-20.Ordinary_29_Part-IV_Section-2-T-Sup
Languages
English, Tamil
Published at
Original source ↗

© [Regd. No. TN/CCN/467/2012-14. தமிழ்நாடு அரசு [R. Dis. No. 197/2009. 2022 [விலை : ரூ. 1.60 காசு

தமிழ்நாடு அரசிதழ் ஆணையின்படி வெளியிடப்பட்டது.

எண் 29] சென்னை, புதன்கிழமை, ஜூலை 20, 2022 ஆடி 4, சுபகிருது, திருவள்ளுவர் ஆண்டு-2053

பகுதி IV—பிரிவு 2 இன் இணைப்பு

தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையின் பின்வரும் சட்டமானது 2022 ஆம் ஆண்டு ஜூன் திங்கள் 1 ஆம் நாளன்று ஆளுநரின் ஏற்பிசைவைப் பெற்றது மற்றும்

அது பொதுத் தகவலுக்காக இதன்மூலம் வெளியிடப்படுகிறது:-

சட்ட எண். 31/2022.

2006-ஆம் ஆண்டு தமிழ்நாடு மதிப்புக்கூட்டு வரிச் சட்டத்தினை மேலும்

திருத்தம் செய்வதற்கானதொரு சட்டம்.

இந்தியக் குடியரசின் எழுபத்து மூன்றாம் ஆண்டில் தமிழ்நாடு மாநில சட்டமன்றப்

பேரவையினால் பின்வருமாறு சட்டமியற்றப்படுவதாகுக:—

குறுந்தலைப்பு மற்றும் 1. (1) இந்தச் சட்டம், 2022-ஆம் ஆண்டு தமிழ்நாடு மதிப்புக்கூட்டு வரி (திருத்தச்)

தொடக்கம்.

சட்டம் என அழைக்கப்பெறும்.

(2) இது 2007-ஆம் ஆண்டு சனவரி திங்கள் 1-ஆம் நாளன்று நடைமுறைக்கு

வந்துவிட்டிருப்பதாகக் கொள்ளப்படுதல் வேண்டும்.

தமிழ்நாடு சட்டம்

இரண்டாம் இணைப்புப் 2. 2006-ஆம் ஆண்டு தமிழ்நாடு மதிப்புக்கூட்டு வரிச் சட்டத்தின் இரண்டாம்

32/2006.

பட்டியலுக்கான இணைப்புப்பட்டியலில், IA என்ற விளக்கத்திற்கு பின்பு, பின்வரும் விளக்கம்

திருத்தம்.

சேர்க்கப்படுதல் வேண்டும், அவையாவன:—

"விளக்கம் IB.— மாநில அரசிற்கு முழுவதும் சொந்தமான மற்றும் கட்டுப்பாட்டில்

உள்ள கழகமான, தமிழ்நாடு மாநில வாணிபக் கழகத்தின் விற்பனை அளவினை

தீர்மானிக்கும் நோக்கத்திற்காக,—

(a) வரிசை எண்கள் 1 மற்றும் 3-இல் குறித்துரைக்கப்பட்டுள்ள பொருட்கள்

தொடர்பாக, மாநிலத்தில் முதலாம் முனை விற்பனையில் வரி விதிப்பிற்கு உள்ளாகும்

போது, பின்வரும் முறை பின்பற்றப்படுதல் வேண்டும், அதாவது:—

IV-2(29)(T-Sup)-1

[1]2 விற்கப்படும் விலை (அதிகபட்ச சில்லறை விற்பனை விலை)

x 100

100+மாநிலத்தில் முதலாம் முனை விற்பனையில் விதிக்கப்படும்

வரியின் வீதம்.

(b) வரிசை எண் 2-இல் குறித்துரைக்கப்பட்டுள்ள பொருட்கள் தொடர்பாக,

மாநிலத்தில் இரண்டாம் முனை விற்பனையில் வரி விதிப்பிற்கு உள்ளாகும் போது,

பின்வரும் முறை பின்பற்றப்படுதல் வேண்டும், அதாவது:—

விற்கப்படும் விலை

(அதிகபட்ச சில்லறை

தொகை (இது கலால் வரியை

– கொள்முதலின் போது செலுத்திய

விற்பனை விலை)

உள்ளடக்கும் ஆனால் முதலாம் முனை

விற்பனையில் செலுத்தப்பட்ட

மதிப்புக்கூட்டு வரியை உள்ளடக்காது)

x 100

100+மாநிலத்தில் இரண்டாம் முனை விற்பனையில் விதிக்கப்படும்

வரியின் வீதம்.".

(ஆளுநரின் ஆணைப்படி)

ச. கோபி ரவிகுமார், அரசுச் செயலாளர் (சட்டமியற்றல்),

சட்டத் துறை.

(தமிழாக்கம்)

வெ. அரசகுமார்,

உதவி இயக்குநர்,

சட்ட (தமிழ்ப்பிரிவு)த் துறை.

3

தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையின் பின்வரும் சட்டமானது 2022 ஆம் ஆண்டு ஜூன் திங்கள் 12 ஆம் நாளன்று ஆளுநரின் ஏற்பிசைவைப் பெற்றது மற்றும்

அது பொதுத் தகவலுக்காக இதன் முலம் வெளியிடப்படுகிறது:-

சட்ட எண். 32/2022. 1951 ஆம் ஆண்டு தமிழ்நாடு சம்பளங்கள் வழங்கல் சட்டத்தினை மேலும் திருத்தம் செய்வதற்கானதொரு சட்டம்.

இந்தியக் குடியரசின் எழுபத்து மூன்றாம் ஆண்டில் தமிழ்நாடு மாநிலச்

சட்டமன்றப் பேரவையினால் பின்வருமாறு சட்டமியற்றப்படுவதாகுக:-

குறுந்தலைப்பு மற்றும் 1. (1) இந்தச் சட்டம், 2022 ஆம் ஆண்டு தமிழ்நாடு சம்பளங்கள் வழங்கல்

தொடக்கம்.

(திருத்தச்) சட்டம் என வழங்கப்பெறும்.

(2) இது, உடனடியாக நடைமுறைக்கு வருதல் வேண்டும்.

தமிழ்நாடு சட்டம்

12-ஆம் பிரிவிற்கான 2. 1951 ஆம் ஆண்டு தமிழ்நாடு சம்பளங்கள் வழங்கல் சட்டத்தின்

XX/1951.

திருத்தம். 12-ஆம் பிரிவில், (2) ஆம் உட்பிரிவிற்காக அதன் வரம்புரை நீங்கலாக, பின்வரும்

உட்பிரிவானது மாற்றாக அமைக்கப்படுதல் வேண்டும், அதாவது;-

"(2) (1)-ஆம் உட்பிரிவின் (a) கூறில் சுட்டப்பட்டுள்ள சம்பளமும், (1-A)

உட்பிரிவில் சுட்டப்பட்டுள்ள சரியீட்டுப் படித்தொகையும், (1-AA) உட்பிரிவில்

சுட்டப்பட்டுள்ள தொகுதி படித்தொகையும், அஞ்சல் படித்தொகையும், (4-B)

உட்பிரிவில் சுட்டப்பட்டுள்ள தொலைபேசிப் படித்தொகையும் ஓர் உறுப்பினருக்கு,

அவர் முறையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டதாக விளம்பப்பட்ட தேதியிலிருந்து,

அல்லது அத்தகைய விளம்புகையானது, அந்தக் காலியிடம் ஏற்படுவதற்கு

முன்பு செய்யப்பட்டால், அந்தக் காலியிடம் ஏற்பட்ட தேதியிலிருந்து வந்தடைதல்

வேண்டும்:".

(ஆளுநரின் ஆணைப்படி)

ச. கோபி ரவிகுமார், அரசுச் செயலாளர் (சட்டமியற்றல்),

சட்டத் துறை.

(தமிழாக்கம்)

வெ. அரசகுமார்,

உதவி இயக்குநர்,

சட்ட (தமிழ்ப்பிரிவு)த் துறை.

தமிழ்நாடு அரசுக்காக சென்னை எழுதுபொருள் மற்றும் அச்சுத் துறை ஆணையரால்

அச்சிடப்பட்டு வெளியிடப்பட்டது.

Cite this issue. Tamil Nadu Gazette, Government of Tamil Nadu, 20 July 2022. Indian Gazettes, https://egazette.servantsofknowledge.in/details/in.gazette.tamilnadu.2022-07-20.Ordinary_29_Part-IV_Section-2-T-Sup/. Archive identifier in.gazette.tamilnadu.2022-07-20.Ordinary_29_Part-IV_Section-2-T-Sup.