© தமிழ்நாடு அரசு 2022
[Regd. No. TN/CCN/467/2012-14. [R. Dis. No. 197/2009. [விலை : ரூ. 2.40 காசு
| தமிழ்நாடு அரசிதழ் ஆணையின்படி வெளியிடப்பட்டது. | ||
எண் 30] சென்னை, புதன்கிழமை, ஜூலை 27, 2022 ஆடி 11, சுபகிருது, திருவள்ளுவர் ஆண்டு-2053
பகுதி III—பிரிவு 1(a) இன் இணைப்பு
அரசாங்க அறிவிப்புகளின் தமிழ் மொழிபெயர்ப்புகள்
தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை
அறிவிக்கைகள்
[அரசாணை (நிலை) எண். 3, தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு (K2)த் துறை, 06 ஜனவரி 2022.] 1951 ஆம் ஆண்டு மலைத்தோட்டத் தொழிலாளர்கள் சட்டத்தின் (மத்தியச் சட்டம் 69/1951) 43 ஆம் பிரிவை சேர்ந்த (1) ஆம் உட்பிரிவில் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களைக் கொண்டும், 13-12-2017ஆம் நாளிட்ட தமிழ்நாடு அரசிதழின் பாகம் III—பிரிவு 1(a)- இல் 183-185 ஆம் பக்கங்களில் (ஆங்கிலத்தில்) வெளியிடப்பட்ட தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறையின் SRO A-57/2017ஆம் எண் அறிவிக்கையை இரத்து செய்து விட்டு அதற்கு பதிலாகவும் தமிழ்நாடு 1955 ஆம் ஆண்டு மலைத்தோட்டத் தொழிலாளர் விதிகளில் செய்ய கருதப்பட்டுள்ள பின்வரும் வரைவு திருத்தங்கள் மேற்சொன்ன சட்டத்தின் 43ஆம் பிரிவை சேர்ந்த (1) உட்பிரிவில் கோரியுள்ளவாறு, அதனால் பாதிக்கக்கூடிய நபர்கள் அனைவரின் பொதுத் தகவலுக்காக இதனால் வெளியிடப்படுகிறது.
2. இந்த அறிவிக்கை தமிழ்நாடு அரசிதழில் வெளியிடப்படும் நாளிலிருந்து ஆறு வாரங்கள் முடிவடையும் நாளன்று அல்லது அதற்குப் பின்னர், இந்த வரைவுத் திருத்தங்கள் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்படுமென்றும், அது தொடர்பாக, மேற்சொன்ன கால அளவு முடிவடைவதற்கு முன்னர், எவரிடமிருந்தேனும் யாதொரு மறுப்புரை அல்லது கருத்துரையை தமிழ்நாடு அரசு உரியவாறு பரிசீலிக்குமென்றும், இதனால் அறிவிக்கப்படுகிறது. மறுப்புரைகள் அல்லது கருத்துரைகள் எவையேனுமிருப்பின், அவற்றை, சென்னை-600 006-இல் உள்ள தொழிலாளர் ஆணையர் வாயிலாக அரசு செயலாளர், தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை, புனித ஜார்ஜ் கோட்டை, சென்னை-600 009 என்ற முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.
வரைவுத் திருத்தங்கள்
மேற்சொன்ன விதிகளில்.--
(1) விதி 78 விட்டுவிடப்பட வேண்டும்;
(2) 82ஆம் விதியில்,-
(i) துணை விதி (1)க்குப் பதிலாக, பின்வரும் துணை விதி அமைத்துக் கொள்ளப்பட வேண்டும், அவையாவன:-
(1) (a) வேலையளிப்பவர் ஒவ்வொருவரும் கீழ்க்காணும் பதிவேடுகளை வைத்து வர வேண்டும்.
(i) படிவம் 29-இல் பணியாளர் பதிவேடு ஒன்று.
(ii) படிவம் 30-இல் வேலைவாய்ப்புப் பதிவேடு ஒன்று.
(iii) படிவம் 31-இல் ஊதியங்களுக்கான பதிவேடு ஒன்று.
(iv) படிவம் 32-இல் விடுப்பு மற்றும் சமூக பாதுகாப்பு பயன்கள் பதிவேடு ஒன்று.
(b) பகுதி (a) இல் குறிப்பிடப்பட்ட பதிவேடுகள் மின்னணு வடிவில் அல்லது கையேடு வடிவில் வைத்துவரப்பட வேண்டும்.
[ 1 ]
III-1a-(30) (T Sup)—12 (c) மின்னணு வடிவில் பகுதி (a) இல் குறிப்பிடப்பட்ட பதிவேடுகள் வைத்து வரப்படும் போது, பதிவேட்டின் நெடும்பத்திகளின் பிரிவு, தொடர் எண் மற்றும் பொருளடக்கங்களை மாற்றாமல் பதிவேடுகளின் வடிவமைப்பு மற்றும் அளிக்கும் முறை பின்பற்றப்படலாம்.
(ii) துணை விதி 4-இல்,-
(i) பகுதி (b) விட்டுவிடப்பட வேண்டும்;
(ii) பகுதி (c)-இல் "ஒரு ரூபாய்" மற்றும் "பணிப்பதிவேடு" என்ற சொற்றொடருக்குப் பதிலாக "பத்து ரூபாய்" பணியாளர் பதிவேடு" என்ற சொற்றொடர் அமைத்துக் கொள்ளப்பட வேண்டும்.
(3) படிவம் எண்கள் "11", "12", "13", "14", "14-A", "14-B" மற்றும் "26" விட்டுவிடப்பட வேண்டும்.
(4) படிவம் எண். 28-க்கு பின்னர், பின்வரும் படிவங்கள் சேர்த்துக்கொள்ளப்பட வேண்டும், அவையாவன:-
படிவம் எண்-29
பணியாளர் பதிவேடு
[82(1)(a) ஆம் விதியைக் காண்க]
மலைத் தோட்டத்தின் பெயர் மற்றும் முகவரி:
வேலையளிப்பவரின் பெயர் மற்றும் முகவரி:
மேலாளரின்/ பொறுப்பாளரின் பெயர்:
பதிவு சான்றிதழ் எண்:
பயிரிடப்படும் பரப்பளவு (ஹெக்டேர்களில்):
| தொடர் எண் | பணியாளரின் பெயர் | பணியாளர் அடையாள எண் | பாலினம் | தந்தை/கணவன்/மனைவி பெயர் | பிறந்த நாள் | பணியில் சேர்ந்த நாள் | வகைப்பாடு (உயரளவு பயிற்சிபெற்றோர் / பயிற்சியற்றோர் / ஓரளவு பயிற்சிபெற்றோர் / பயிற்சிபெற்றோர்) | பதவிப்பெயர் | தற்போதைய முகவரி | நிரந்தர முகவரி | பணியாளரின் வருங்கால வைப்பு நிதி எண் | மாநில தொழிலாளர் ஈட்டுறுதிக் கழக எண் | பணிப்பதிவேடு வழங்குதல் ஆதார் எண் | பணியில் சேர்ந்து 480 நாட்கள் நிறைவடையும் நாள் | பணி நிரந்தரம் செய்யப்பட்ட நாள் | பணி இடை நீக்கம் கால அளவு (ஏதேனுமிருப்பின்) | வங்கி கணக்கு எண். வங்கியின் பெயர், கிளை (IFSC) | புகைப்படம் | அலை பேசி எண் | மாதிரி கையொப்பம்/கை/பெருவிரல் கைரேகை பதிவு | பணியிலிருந்து வெளியேறிய நாள் | பணியிலிருந்து வெளியேற்றத்திற்கான காரணம் | குறிப்புரைகள் | |||
| பணியாளருக்கு வழங்கப்பட்ட நாள் | பதிவுகளை மேற்கொள்வதற்காக பணிப்பதிவேடு பெறப்பட்ட நாள் மற்றும் திருப்பியளிக்கப்பட்ட நாள் | இரண்டாம் படிக்கான விண்ணப்பம் பெறப்பட்ட நாள் மற்றும் இரண்டாம்படி வழங்கப்பட்ட நாள் | ||||||||||||||||||||||||
| 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | 8 | 9 | 10 | 11 | 12 | 13 | 14 | 15 | 16 | 17 | 18 | 19 | 20 | 21 | 22 | 23 | 24 | 25 | 26 | 27 |
"படிவம் எண்-30
வேலைவாய்ப்புப் பதிவேடு
[82(1)(a) ஆம் விதியைக் காண்க]
....................................லிருந்து ................... கால அளவு வரையில்
மலைத் தோட்டத்தின் பெயர் மற்றும் முகவரி:
வேலையளிப்பவரின் பெயர் மற்றும் முகவரி: ஒப்புதலளிக்கப்பட்ட பண்டிகை விடுமுறை நாட்களுக்கான செயல்முறை எண் & நாள்:
மேலாளரின்/பொறுப்பாளரின் பெயர்: ஒப்புதலளிக்கப்பட்ட பண்டிகை விடுமுறை நாட்கள்
பதிவு சான்றிதழ் எண்:
பயிரிடப்பட்ட பரப்பளவு (ஹெக்டேர்களில்):
| (1) | (2) | (3) | (4) | (5) |
| தொடர் எண் | பணியாளரின் பெயர் | பணியாளரின் அடையாள எண் | வேலையை தொடங்கும் நேரம் | ஓய்வு இடைவேளை | வேலை முடிவடையும் நேரம் | மிகைப்பணி நேரம் உட்பட நாள்தோறும் வேலை செய்த நேரங்கள் (ஏதேனுமிருப்பின்) | வேலை செய்த மொத்த நாட்கள் | வேலை செய்த மொத்த கால அளவு | ஊதியமில்லா விடுப்பெடுத்த மொத்த நாட்கள் | தேசிய விடுமுறையில் வேலை செய்ததற்காக பெறப்பட்ட ஆதாயம் | பண்டிகை விடுமுறை நாளில் வேலை செய்ததற்காக பெறப்பட்ட ஆதாயம் | குறிப்புரைகள் | ||||||||||||||||||||||||||||||
| 1 2 3 4 5 6 7 8 9 1 | 0 | 11 | 12 | 13 | 14 | 15 | 16 | 17 | 18 | 19 | 20 | 21 | 22 | 23 | 24 | 25 | 26 | 27 | 28 | 29 | 30 | 31 | ||||||||||||||||||||
| 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 8 | 9 | 10 | 11 | 12 | 13 | |||||||||||||||||||||||||||||||
III-1a-(30) (T Sup)—2 III-1a-(30) (T Sup)—24
படிவம் எண் - 31
ஊதியங்கள் பதிவேடு
[82(1)(a) ஆம் விதியைக் காண்க]
பணியமர்த்தப்பட்டுள்ள மொத்தப் பணியாளர்களின் எண்ணிக்கை
| ஆண்கள் | பெண்கள் | இளைஞர்கள் | இளம் பெண்கள் |
நிறுவனத்தின் பெயர் மற்றும் முகவரி:
வேலையளிப்பவரின் பெயர் மற்றும் முகவரி:
மேலாளரின்/பொறுப்பாளரின் பெயர்: :
பதிவு சான்றிதழ் எண்:
.............................. லிருந்து ................ கால அளவு வரையிலான ஊதியம் (மாதம்/இரண்டு வாரங்கள்/ வாரம்/ நாள்தோறும்/ செய்யும் வேலைக்கேற்ற ஊதியம்)
| தொடர் எண் | பணியாளரின் பெயர் | பணியாளர் அடையாள எண் | பணி செய்த மொத்த நாட்கள் | அடிப்படை ஊதியம் | அகவிலைப்படி | வீட்டு வாடகைப்படி | ஏனைய படிகள் (தன்மையை குறிப்பிடவும்) | மிகைப்பணி நேர ஊதியங்கள் | விடுப்பு ஊதியங்கள் | மொத்த ஊதியங்கள் | பிடித்தங்கள் | ||||||||||||||||||
| வருங்கால வைப்பு நிதி | தொழிலாளர்களின் மாநில காப்புறுதி | தொழிலாளர் நல நிதி | முன்பணங்கள் | சேதங்கள் /அபராதங்கள் | |||||||||||||||||||||||||
| வழங்கப்பட்ட முன்பணம் | மாத தொடக்கத்தில் வசூலிக்காமல் நிலுவையிலுள்ள முன்பணம் | வசூலிக்கப்பட்ட முன்பணம் | வசூலிக்கப்பட வேண்டிய நிலுவைத்தொகை | சேதங்கள், இழப்புகள் அல்லது அபராதங்கள் வகையில் செய்யப்பட்ட பிடித்தங்கள் | மாத தொடக்கத்தில் வசூலிக்காமல் நிலுவையிலுள்ள பிடித்தம் செய்ய வேண்டிய தொகை | சேதங்கள், இழப்புகள் அல்லது அபராதங்கள் வகையான பிடித்தங்கள் | நிலுவையிலுள்ள வசூலிக்கப்பட வேண்டிய தொகை | ஏனைய யாதொரு பிடித்தங்கள் | மொத்த பிடித்தங்கள் | நிகர ஊதியம் | தொகை வழங்கிய நாள் | செலுத்தப்படாத திரண்ட தொகை | கணக்கிடப்பட்ட பிழைப்பூதியப் படியின் விகிதம் மற்றும் வழங்கப்பட்ட தொகை | பணியாளரின் இரசீது / வங்கி பரிவர்த்தனை எண் / நாள் | குறிப்புரைகள் | ||||||||||||||
| 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | 8 | 9 | 10 | 11 | 12 | 13 | 14 | 15 | 16 | 17 | 18 | 19 | 20 | 21 | 22 | 23 | 24 | 25 | 26 | 27 | 28 | 29 | 30 |
படிவம் எண்.- 32
விடுப்பு மற்றும் சமூகப் பாதுகாப்பு பயன்கள் பதிவேடு
[82(1)(a) ஆம் விதியைக் காண்க]
தோட்டத்தின் பெயர் மற்றும் முகவரி:
வேலையளிப்பவரின் பெயர் மற்றும் முகவரி:
மேலாளரின் / பொறுப்பாளரின் பெயர்:
பதிவு சான்றிதழ் எண்:
பயிரிடப்படும் பரப்பளவு (ஹெக்டேர்களில்):
--------------ஆம் ஆண்டு ------------- மாதத்திற்காக
| தொடர் எண் | பணியாளரின் பெயர் | பணியாள் அடையாள எண் | ஈட்டிய விடுப்பு | மருத்துவ விடுப்பு | ஏனைய விடுப்பு | மகப்பேறு பயன்கள் | பணிக்கொடை பயன்கள் | |||||||||||||
| மாதத்தின் தொடக்கத்திலிருந்த விடுப்பு | அந்த கால அளவில் ஈட்டிய விடுப்பு | அந்த மாதத்தின் போது எடுக்கப்பட்ட விடுப்பு | மாதத்தின் இறுதியில் எஞ்சியுள்ள விடுப்பு | மாதத்தின் தொடக்கத்திலுள்ள விடுப்பு | அந்த மாதத்தின் போது எடுக்கப்பட்ட விடுப்பு | மாதத்தின் முடிவில் எஞ்சியுள்ள விடுப்பு | மாதத்தின் தொடக்கத்திலிருந்த விடுப்பு | அந்த மாதத்தின் போது எடுக்கப்பட்ட விடுப்பு | மாதத்தின் முடிவில் எஞ்சியுள்ள விடுப்பு | கருவுற்ற நிலை / பிரசவம் குறித்த அறிவிப்பு அளிக்கப்பட்ட நாள் | மகப்பேறினை எதிர்ப்பார்த்து அதன் அடிப்படையில் முன்னதாகவோ வழங்கப்பட்ட மகப்பேறு உதவித் தொகை மற்றும் தொகை வழங்கப்பட்ட நாள் | அதனைத் தொடர்ந்து வழங்கப்பட்ட மகப்பேறு உதவித் தொகை மற்றும் தொகை வழங்கப்பட்ட நாள் | மருத்துவ மிகை சம்பளமாக வழங்கப்பட்ட தொகை மற்றும் வழங்கப்பட்ட நாள் | 1961 ஆம் ஆண்டு பேறுகாலச் சலுகை சட்டத்தின் 9 அல்லது 10 ஆம் பிரிவின் கீழ் ஊதியத்துடன் கூடிய விடுப்பு | பணியாளரிடமிருந்து நேமகம் பெறப்பட்டதா | பணியாளரின் வெளியேற்றம் அல்லது இறப்பு குறித்த நேர்வில் பணிக்கொடையாக வழங்கப்பட்ட தொகை | குறிப்புரைகள் | |||
| 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | 8 | 9 | 10 | 11 | 12 | 13 | 14 | 15 | 16 | 17 | 18 | 19 | 20 | 21 |
இரா. கிர்லோஷ் குமார்,
அரசுச் செயலாளர்.
(தமிழாக்கம்)
ந. அருள், இயக்குநர் (மு.கூ.பொ.),
தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தி (மொழிபெயர்ப்பு)த் துறை.
6[அரசாணை (நிலை) எண் 22, தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு (K2)த் துறை, 03 மார்ச் 2022.] தமிழ்நாடு 1951 ஆம் ஆண்டு மலைத்தோட்டத் தொழிலாளர் சட்டத்தின் (மத்தியச் சட்டம் 69/1951) 43 ஆம் பிரிவை சேர்ந்த (1) ஆம் உட்பிரிவு, 18ஆம் பிரிவு ஆகியவற்றில் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களைக் கொண்டு, வெளியிட கருதப்பட்ட தமிழ்நாடு 1955 ஆம் ஆண்டு மலைத்தோட்ட தொழிலாளர் விதிகளின் பின்வரும் வரைவு திருத்தம் மேற்சொன்ன சட்டத்தின் 43ஆம் பிரிவை சேர்ந்த (1) உட்பிரிவின் கீழ் கோரப்பட்டவாறு, அதனால் பாதிக்கக்கூடிய நபர்கள் அனைவரின் தகவலுக்காக இதனால் வெளியிடப்படுகிறது.
2. இந்த அறிவிக்கை தமிழ்நாடு அரசிதழில் வெளியிடப்படும் நாளிலிருந்து ஆறு வாரங்கள் முடிவடையும் நாளன்று அல்லது அதற்குப் பின்னர், இந்த வரைவுத் திருத்தங்கள் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்படுமென்றும், அது தொடர்பாக, மேற்சொன்ன கால அளவு முடிவடைவதற்கு முன்னர், யாதொரு நபரிடமிருந்தும் வரப்பெறுகிற யாதொரு மறுப்புரை அல்லது கருத்துரையை தமிழ்நாடு அரசு பரிசீலிக்குமென்றும், இதனால் அறிவிக்கப்படுகிறது. மறுப்புரை அல்லது கருத்துரை ஏதேனுமிருப்பின், அதனை, சென்னை-600 006- டிஎம்எஸ் வளாகத்தில் உள்ள தொழிலாளர் ஆணையர் வாயிலாக அரசு செயலாளர், தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை, புனித ஜார்ஜ் கோட்டை, சென்னை-600 009 என்ற முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.
வரைவுத் திருத்தம்
மேற்சொன்ன தமிழ்நாடு 1955ஆம் ஆண்டு மலைத்தோட்ட தொழிலாளர் விதிகளில், 68-Bஇல் பகுதி (i)க்கு பின்னர் பின்வரும் பகுதி சேர்த்து கொள்ளப்பட வேண்டும்:-
(j) "சென்னையிலுள்ள தமிழ்நாடு தொழிலாளர் கல்வி நிலையத்தில், வழங்கப்படும் நிருவாகவியல் சட்டத்துடன் கூடிய தொழிலாளர் சட்டங்களில் பட்டயம்".
இரா. கிர்லோஷ் குமார்,
அரசுச் செயலாளர்.
(தமிழாக்கம்)
ந. அருள், இயக்குநர் (மு.கூ.பொ.)
தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தி (மொழிபெயர்ப்பு)த் துறை.
தமிழ்நாடு அரசுக்காக சென்னை எழுதுபொருள் மற்றும் அச்சுத் துறை ஆணையரால்
அச்சிடப்பட்டு வெளியிடப்பட்டது.