Servants of Knowledge
Tamil Nadu Gazette · Government of Tamil Nadu

Notification by Government - Tamil Translations

Published 27 July 2022

Type
Ordinary
Gazette no.
30
Part
Part II
Notifications
HOUSING AND URBAN DEVELOPMENT DEPARTMENT--Notifications
Section
Section 2-T-Supp
Identifier
in.gazette.tamilnadu.2022-07-27.Ordinary_30_Part-II_Section-2-T-Supp
Languages
English, Tamil
Published at
Original source ↗

© [Regd. No. TN/CCN/467/2012-14.

தமிழ்நாடு அரசு

2022

[R. Dis. No. 197/2009. [விலை: ரூ. 4.00 காசு

தமிழ்நாடு அரசிதழ் ஆணையின்படி வெளியிடப்பட்டது.

எண் 30] சென்னை, புதன்கிழமை, ஜூலை 27, 2022 ஆடி 11, சுபகிருது, திருவள்ளுவர் ஆண்டு–2053

பகுதி II—பிரிவு 2 இன் இணைப்பு

அரசாங்க அறிவிப்புகளின் தமிழ் மொழிபெயர்ப்புகள்

வீட்- -டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை

அறிவிக்கைகள்

[அரசாணை (நிலை) எண் 116, வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி [UD4-(2)]த் துறை, 16 ஜூன் 2022.] தமிழ்நாடு 1971 ஆம் ஆண்டு நகர் ஊரமைப்புச் சட்டத்தின் (தமிழ்நாடு சட்டம் 35/1972) 10 ஆம் பிரிவைச் சேர்ந்த (4) உட்பிரிவில் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களைக் கொண்டு, தமிழ்நாட்டு ஆளுநர் அவர்கள் 27.08.1975 ஆம் நாளிட்ட தமிழ்நாடு அரசிதழின் பாகம் II-பிரிவு 2 இல் 906 ஆம் பக்கத்தில் (ஆங்கிலத்தில்) வெளியிடப்பட்ட வீட்டுவசதி மற்றும் நகர்புற வளர்ச்சித் துறையின் II(2)/HOU/8896/86 ஆம் எண் அறிவிக்கையில் உள்ளூர் திட்டமிடல் பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ள தூத்துக்குடி உள்ளூர் திட்டமிடல் பகுதியில், பின்வரும் வருவாய் கிராமங்களை சேர்ப்பதற்காக பின்வரும் திருத்தத்தை இதனால் செய்கிறார்.

அவ்வாறு செய்வதற்கான நோக்கம், மேற்சொன்ன சட்டத்தின் 10 ஆம் பிரிவைச் சேர்ந்த (1) உட்பிரிவின் (b) பகுதியின் கீழ் கோரியுள்ளவாறாக, ஏற்கெனவே வெளியிடப்பட்டுள்ளது அதாவது:-

திருத்தம்

மேற்சொன்ன அறிவிக்கையில் அட்டவணைக்குப் பதிலாக, பின்வரும் அட்டவணை அமைத்துக் கொள்ளப்பட வேண்டும்.

அதாவது.-

அட்டவணை

''வருவாய் கிராமங்களின்

உள்ளூர் திட்டமிடல் பகுதியின் பெயர்

தொடர் எண்.

எண் மற்றும் பெயர்

(1) (2)

(3)

1. தூத்துக்குடி தூத்துக்குடி மாநகராட்சி

30. கோரம்பள்ளம் பகுதி II

24. மீளவிட்டான் பகுதி I

32. மீளவிட்டான் பகுதி II

25. சங்கரப்பேரி

26. புலிப்பாஞ்சான்குளம்

28. தூத்துக்குடி பகுதி I

33. தூத்துக்குடி பகுதி II

29. முள்ளக்காடு பகுதி I

[ 1 ]

DTP-II-2-(30) (T Sup)—12 ''வருவாய் கிராமங்களின்

உள்ளூர் திட்டமிடல் பகுதியின் பெயர்

தொடர் எண்.

எண் மற்றும் பெயர்

(1) (2)

(3)

தூத்துக்குடி வட்டம்

04. மேலத்தட்டப்பாறை

05. கீழத்தட்டப்பாறை

06. கூட்டுடன்காடு

12. முடிவைத்தானேந்தல்

10. வர்த்தகரெட்டிபட்டி

13. கட்டாலங்குளம்

14. சேர்வைக்காரன்மடம்

15. குலையன்கரிசல்

16. கோரம்பள்ளம் பகுதி I

17. மறவன்மடம்

18. குமாரகிரி

19. செந்திலாம்பண்ணை

20. தெற்கு சிலுக்கன்பட்டி

21. முத்துசாமிபுரம்

22. வடக்கு சிலுக்கன்பட்டி

23. அய்யனடைப்பு

27. மாப்பிள்ளையூரணி

31. முள்ளக்காடு பகுதி II

ஏரல் வட்டம்

16. இருவப்புரம் பகுதி II

17. மாரமங்கலம்

19. மஞ்சள்நீர்காயல்

20. பழையகாயல்

ஒட்டப்பிடாரம் வட்டம்

28. புதியம்புத்தூர்

29. சாமிநத்தம்

30. தெற்குவீரபாண்டியபுரம்

31. சில்லாநத்தம்

55. புதூர் பாண்டியாபுரம்

54. மேல அ்ரசடி

52. மேல மருதூர்

32. வாலசமுத்திரம்

33. சிந்தலக்கட்டை

49. பட்டிணமருதூர்

53. தருவைக்குளம்

56. கீழ அரசடி.''3 [அரசாணை (நிலை) எண் 118, வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி [(ந.வ 4(2)]த் துறை, 16 ஜூன் 2022.] தமிழ்நாடு 1971 ஆம் ஆண்டு நகர் ஊரமைப்புச் சட்டத்தின் (தமிழ்நாடு சட்டம் 35/1972) 10 ஆம் பிரிவைச் சேர்ந்த (1) உட்பிரிவின் (b) பகுதியில் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களைக் கொண்டு, தமிழ்நாட்டு ஆளுநர் அவர்கள், 20-03-2019 ஆம் நாளிட்ட தமிழ்நாடு அரசிதழின் பாகம் II—பிரிவு 2-இல் 314 ஆம் பக்கத்தில் (ஆங்கிலத்தில்) வெளியிடப்பட்ட வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறையின் II(2)/வீ.வ.ந/227/2019 ஆம் எண் அறிவிக்கையில் காங்கயம் இரண்டாம் நிலை நகராட்சியை உள்ளடக்கிய காங்கயம் உள்ளூர் திட்டமிடல் பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ள அத்தகைய பகுதியில், பின்வரும் வருவாய் கிராமங்களின் பகுதிகளைச் சேர்ப்பதற்கான அவருடைய நோக்கத்தை இதனால் அறிவிக்கிறார். அவையாவன:-

"வருவாய் கிராமங்களின் எண் மற்றும் பெயர்.

04. சிவன்மலை

31. பாப்பினி

32. ஆலாம்பாடி

34. வீராணம்பாளையம்

36. வட்டமலை

38. காடையூர்."

2. இந்த அறிவிக்கை, தமிழ்நாடு அரசிதழில் வெளியிடப்பட்ட நாளிலிருந்து இரண்டு திங்கள் கால அளவிற்குள் மேற்சொன்ன பகுதிகளிலுள்ள யாதொரு குடியிருப்பாளர் அல்லது யாதொரு உள்ளூர் அதிகார அமைப்பு அல்லது நிறுவனம் அவ்வாறு சேர்ப்பதற்குக் கருதப்பட்டுள்ள பகுதிகள் குறித்த யாதொரு மறுப்புரை அல்லது கருத்துரையை எழுத்து வடிவில் அரசிடம் அளிக்கலாம். மேற்சொன்ன கால அளவு முடிவடைவதற்குள் பெறப்படும் மறுப்புரைகள் அல்லது கருத்துரைகள் (எவையேனுமிருப்பின்), மேற்சொன்ன சட்டத்தின் 10-ஆம் பிரிவைச் சோர்ந்த (4) உட்பிரிவிற்கிணங்க மேற்கொண்டும் நடவடிக்கை எடுப்பதற்கு முன்னர் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்படும். மறுப்புரைகள் அல்லது கருத்துரைகள், 'அரசு முதன்மைச் செயலாளர், வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை, தலைமைச் செயலகம், புனித ஜார்ஜ் கோட்டை, சென்னை-600 009' என்ற முகவரிக்கு அனுப்பி வைக்கப்பட வேண்டும்.

ஹிதேஸ்குமார். எஸ். மக்வானா,

அரசு முதன்மைச் செயலாளர்.

(தமிழாக்கம்)

ந. அருள்,

இயக்குநர், (மொழிபெயர்ப்பு, மு.கூ.பொ),

தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை.

தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு்த் துறை

அறிவிக்கைகள்

[அரசாணை (ப) எண். 87, தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு்(J1)த் துறை, 4 மார்ச் 2022.] 1948 ஆம் ஆண்டு குறைந்தளவு ஊதியங்கள் சட்டத்தின் (மத்தியச் சட்டம் 11/1948) 3ஆம் பிரிவைச் சேர்ந்த (1) உட்பிரிவின் (b) பகுதியிலும் 5 ஆம் பிரிவைச் சேர்ந்த (2) உட்பிரிவிலும் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களைக் கொண்டு, பின்வரும் வரைவு அறிவிக்கை, மேற்சொன்ன சட்டத்தின் 5 ஆம் பிரிவைச் சேர்ந்த (1) உட்பிரிவின் (b) பகுதியில் கோரியுள்ளவாறு, அதனால் பாதிக்கப்படக்கூடிய அனைவரின் தகவலுக்காக இதனால் வெளியிடப்படுகிறது.

2. இந்த அறிவிக்கை, தமிழ்நாடு அரசிதழில் வெளியிடப்படும் நாளிலிருந்து இரண்டு மாதங்கள் முடிவடையும் நாளன்று அல்லது அதற்குப் பின்னர், இந்த வரைவுத் திருத்தங்கள் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்படுமென்றும், மேற்சொன்ன கால அளவு முடிவடைவதற்கு முன்னர், அது தொடர்பாக, யாதொரு நபரிடமிருந்தும் வரப்பெறுகிற யாதொரு மறுப்புரை அல்லது கருத்துரையை தமிழ்நாடு அரசு உரியவாறு பரிசீலிக்குமென்றும் இதனால் அறிவிக்கப்படுகிறது. மறுப்புரை அல்லது கருத்துரை ஏதேனுமிருப்பின், அவற்றை, சென்னை-600 006 - டி.எம்.எஸ் வளாகத்தில் உள்ள தொழிலாளர் ஆணையர் வாயிலாக அரசு செயலாளர், தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை, புனித ஜார்ஜ் கோட்டை, சென்னை-600 009 என்ற முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.

4

வரைவு அறிவிக்கை

1948 ஆம் ஆண்டு குறைந்தளவு ஊதியங்கள் சட்டத்தின் (மத்தியச் சட்டம் 11/1948) 3 ஆம் பிரிவைச் சேர்ந்த (1) உட்பிரிவின் (b) பகுதியிலும், 5 ஆம் பிரிவைச் சேர்ந்த (2) உட்பிரிவிலும் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களைக் கொண்டும், 18-07-2018 ஆம் நாளிட்ட தமிழ்நாடு அரசிதழின் பாகம் II—பிரிவு 2இல் 643 மற்றும் 644 ஆம் பக்கத்தில் (ஆங்கிலத்தில்) வெளியிடப்பட்ட தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறையின் II(2)/தொவேவா/619/2018 ஆம் எண் அறிவிக்கையை ரத்து செய்துவிட்டு அதற்குப் பதிலாகவும், தமிழ்நாட்டு ஆளுநர் அவர்கள், தமிழ்நாடு மாநிலத்தில் நேர்விற்கேற்ப அரசு மற்றும் உள்ளாட்சி அமைப்புகளால் நடத்தப்படுபவை நீங்கலாக, அரசு மானியமின்றி வர்த்தக ரீதியாக நடத்தப்படும் கல்வி பயிற்சி நிறுவனங்களில், அதாவது தனியார் பயிற்றுவிப்புக் கல்லூரிகள் (Tutorial Colleges), தொழில்நுட்ப நிறுவனங்கள், தொடக்க மற்றும் மழலையர் பள்ளிகள், ஆங்கிலவழிப்பள்ளிகள் ஆகியவற்றில் பணியமர்த்தப்பட்டுள்ள கீழேயுள்ள விவர அட்டவணையின் (1) நெடும்பத்்தியில் குறிப்பிடப்பட்டுள்ள பணியாளர் வகையினருக்கு, அந்த விவர அட்டவணையின் (2) நெடும்பத்தியின் நிகரான பதிவுகளில் குறிப்பிடப்பட்டுள்ளவாறு வழங்கத்தக்க குறைந்தளவு ஊதிய வீதங்களை இதனால் திருத்தியமைக்கிறார்.

விவர அட்டவணை

நேர்விற்கேற்ப அரசு மற்றும் உள்ளாட்சி அமைப்புகள் நீங்கலாக, அரசு மானியமின்றி வர்த்தக ரீதியாக நடத்தப்படும் கல்வி பயிற்சி நிறுவனங்களில், அதாவது தனியார் பயிற்றுவிப்புக் கல்லூரிகள் (Tutorial Colleges), தொழில்நுட்ப நிறுவனங்கள், தொடக்க மற்றும் மழலையர் பள்ளிகள், ஆங்கிலவழிப்பள்ளிகள் ஆகியவற்றில் வேலைவாய்ப்பு

பணியாளர் வகைகள் குறைந்தளவு அடிப்படை ஊதிய வீதங்கள் (மாதமொன்றுக்கு)

(ரூ. காசு)

(1)

(2)

மண்டலம் மண்டலம் மண்டலம் ஆசிரியர் அல்லாத பிற பணியாளர் A B C (அ) எழுத்தர்/தட்டச்சர்/காசாளர்/நூலகர்

8506.00 8241.00 7977.00 (ஆ) ஓட்டுநர்

8241.00 7977.00 7713.00 (இ) அலுவலக உதவியாள்/தோட்டப் பணியாளர்/ஆயா/காவலாள் 6919.00 6787.00 6655.00 (ஈ) துப்புரவுப் பணியாளர்

6787.00 6655.00 6522.00 விளக்கங்கள்: (1) மண்டலங்களின் வகைப்பாடு:- மண்டலங்களின் வகைப்பாடு பின்வருமாறு இருக்க வேண்டும்.

மண்டலம் -A: அனைத்து மாநகராட்சிகள்

மண்டலம் -B: நகராட்சிகளின் அனைத்து நிலைகள்

மண்டலம் -C: பேரூராட்சிகள், ஊராட்சிகள் மற்றும் ஏனைய பகுதிகள்

(2) அகவிலைப்படி : மேலே நிர்ணயிக்கப்பட்ட குறைத்தளவு அடிப்படை ஊதிய வீதங்களுடன் பணியாளர்களுக்கு கீழே குறிப்பிடப்பட்டுள்ளவாறு அகவிலைப்படி வழங்கப்பட வேண்டும்.

(i) அகவிலைப்படி, 2010ஆம் ஆண்டிற்கான சென்னை மாநகர நுகர்வோர் சராசரி விலைக்குறியீட்டு எண்ணுடன் இணைக்கப்பட்டுள்ளது அதாவது 2001 = 100 என்பதன் அடிப்படையில் 161 புள்ளிகள் ஆகும். 161 புள்ளிகளுக்கு மேல் உயரும் ஒவ்வொரு புள்ளிக்கும் மாதமொன்றுக்கு ரூ. 40.50 (நாற்பது ரூபாய் ஐம்பது காசுகள் மட்டும்) கூடுதலாக அகவிலைப்படி வழங்கப்பட வேண்டும்.

(ii) முந்தைய 12 மாதங்களுக்கான, அதாவது ஜனவரியிலிருந்து டிசம்பர் வரை நுகர்வோர் விலைப்புள்ளிகளின் சராசரியை அடிப்படையாகக் கொண்டு ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் முதல் நாளிலிருந்து அகவிலைப்படி கணக்கிடப்பட வேண்டும்.

(iii) முதல் கணக்கீடு, முந்தைய ஆண்டிற்கான சென்னை மாநகர் நுகர்வோர் விலைப்புள்ளிக் குறியீட்டு எண்ணின் சராசரியை அடிப்படையாகக் கொண்டு இந்த அறிவிக்கை தமிழ்நாடு அரசிதழில் வெளியிடப்படும் நாளிலிருந்து செயலுக்கு வரும்.

(3) ஒரே தன்மையுடைய பணியைச் செய்யும்போது, ஆண் மற்றும் பெண் தொழிலாளர்களுக்கு வழங்கும் ஊதியத்தில் எவ்வித வேறுபாடும் இருக்கக்கூடாது.

(4) நாள் ஊதியவீதங்களைக் கணக்கிடுவதற்கு, மாதாந்திர ஊதியத்தை 26 ஆல் வகுக்க வேண்டும்.

(5) தற்போது வழங்கப்பட்டு வரும் ஊதியங்கள், இங்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள குறைந்தளவு ஊதியங்களைக் காட்டிலும் அதிகமாக இருக்குமிடங்களிெலல்லாம் அதே ஊதியம் தொடர்ந்து வழங்கப்பட வேண்டும்.

5

[அரசாணை (2ப) எண் 35 தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு (J1)த் துறை, 3 ஜூன் 2022.] 1948 ஆம் ஆண்டு குறைந்தளவு ஊதியங்கள் சட்டத்தின் (மத்தியச் சட்டம் 11/1948) 3ஆம் பிரிவைச் சேர்ந்த (1) உட்பிரிவின் (b) பகுதியிலும், 5-ஆம் பிரிவைச் சேர்ந்த (2) உட்பிரிவிலும் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களைக் கொண்டும், 14-2-2018 ஆம் நாளிட்ட தமிழ்நாடு அரசிதழின் பாகம் II—பிரிவு 2-இல் 162 ஆம் பக்கத்தில் (ஆங்கிலத்தில்) வெளியிடப்பட்ட தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறையின் II(2)/தொ.வே.வா/140/2018 ஆம் எண் அறிவிக்கையை ரத்து செய்துவிட்டு, அதற்குப் பதிலாகவும், தமிழ்நாட்டு ஆளுநர் அவர்கள், ஆலோசனைக் குழுவுடன் கலந்தாலோசித்தப் பின்னர் தமிழ்நாடு மாநிலத்தில் கீழேயுள்ள விவர அட்டவணையின் (2) நெடும்பத்தியில் குறிப்பிடப்பட்டுள்ள அடுமனைகள் மற்றும் பிஸ்கெட் தயாரிப்புத் தொழிலில் பணியமர்த்தப்பட்டுள்ள பணியாளர் வகையினருக்கு வழங்கத்தக்க குறைந்தளவு ஊதிய வீதங்களை, அதன் (3) நெடும்பத்தியின் நிகரான பதிவுகளில் குறிப்பிடப்பட்டுள்ளவாறு இதனால் திருத்தியமைக்கிறார். இதன் வரைவு, மேற்சொன்ன சட்டத்தின் 5 ஆம் பிரிவைச் சேர்ந்த (1) உட்பிரிவின் (b) பகுதியில் கோரியுள்ளவாறு ஏற்கெனவே வெளியிடப்பட்டுள்ளது.

(2) இந்த அறிவிக்கை தமிழ்நாடு அரசிதழில் வெளியிடப்பட்ட நாளிலிருந்தும், அந்நாள் முதற்கொண்டும் செயலுக்கு வரும்.

விவர அட்டவணை

அடுமனைகள் மற்றும் பிஸ்கெட் தயாரிப்புத்தொழிலில் வேலைவாய்ப்பு

தொடர் எண் பணியாளர் வகைகள் குறைந்தளவு அடிப்படை ஊதிய வீதங்கள்

(ரூ. காசு)

(1) (2)

(3)

1. பொது வகைப்பாடுகள்:

1. மேலாளர்

8251.00 மாதமொன்றுக்கு

2. உதவி மேலாளர்

7836.00 மாதமொன்றுக்கு

3. காசாளர் / எழுத்தர்

7311.00 மாதமொன்றுக்கு

4. தட்டச்சர்

7311.00 மாதமொன்றுக்கு

5. விற்பனையாளர்

7311.00 மாதமொன்றுக்கு

6. பண்டக சாலை உதவியாளர்

7176.00 மாதமொன்றுக்கு

7. ஓட்டுநர்

7176.00 மாதமொன்றுக்கு

8. காவலாள் / ஏவலாள்

6826.00 மாதமொன்றுக்கு

2. ஏனைய வகைப்பாடுகள்:

உயரளவு பயிற்சி பெற்றோர்:

1. அடுமனை மேலாள்

275.50 நாளொன்றுக்கு

2. எனைய யாதொரு உயரளவு பயிற்சி பெற்ற வகையினர்

பயிற்சி பெற்றோர்:

1. மேற்பார்வையாளர்

259.00 நாளொன்றுக்கு

2. தலைமை அடுமனையாளர்

3. மேற்சொன்னவற்றின் கீழ் இடம் பெறாத ஏனைய யாதொரு பிற பயிற்சி பெற்ற வகையினர்

ஓரளவு பயிற்சி பெற்றோர்:

1. அடுமனையாளர்

244.50 நாளொன்றுக்கு

2. அடுப்பை பராமரிப்பவர்

3. மேசைப்பணியாளர்

4. மாவு தயாரிப்பவர்

5. பன்னை வட்டமாக்குபவர்

6. ரொட்டி வார்ப்பவர்

7. மேற்சொன்னவற்றின் கீழ் இடம் பெறாத ஏனைய யாதொரு ஓரளவு பயிற்சி பெற்ற வகையினர்6 தொடர் எண் பணியாளர் வகைகள் குறைந்தளவு அடிப்படை ஊதிய வீதங்கள்

(ரூ. காசு)

(1) (2) (3)

பயிற்சி பெறாதோர்:

1. உதவி அடுமனையாளர்

228.00 நாளொன்றுக்கு 2. உதவி செய்பவர் / உதவியாளர்கள்

3. அனைத்து வகையைச் சேர்ந்த

தூய்மை செய்பவர்

4. அனைத்து வகையைச் சேர்ந்த

உதவியாளர்

5. மேற்சொன்னவற்றின் கீழ் இடம் பெறாத ஏனைய யாதொரு பயிற்சி பெறாத வகையினர்

விளக்கங்கள்:—(1) அகவிலைப்படி : மேலே நிர்ணயிக்கப்பட்ட குறைந்தளவு அடிப்படை ஊதியவீதங்களுடன் பணியாளர்களுக்கு கீழே குறிப்பிடப்பட்டுள்ளவாறு அகவிலைப்படி வழங்கப்பட வேண்டும்.

(i) அகவிலைப்படியானது, 2010 ஆம் ஆண்டிற்கான சென்னை மாநகர நுகர்வோர் சராசரி விலைக்குறியீட்டு எண்ணுடன் இணைக்கப்பட்டுள்ளது (அதாவது 2001 ஆம் ஆண்டில் 100 புள்ளிகள் என்பதை அடிப்படையாகக் கொண்டு தற்போது கணக்கிடப்பட்ட 161 புள்ளிகள்). 161 புள்ளிகளுக்கு மேல் உயரும் ஒவ்வொரு புள்ளிகளுக்கும், நாளொன்றுக்கு ரூ. 1.40 (ஒரு ரூபாய் நாற்பது காசுகள் மட்டும்) கூடுதலாக அகவிலைப்படி வழங்கப்பட வேண்டும்.

(ii) முந்தைய 12 மாதங்களுக்கான (அதாவது ஜனவரியிலிருந்து டிசம்பர் வரையில்) சராசரி நுகர்வோர் விலைக்குறியீட்டினை அடிப்படையாகக் கொண்டு, ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் முதல் நாளிலிருந்து அகவிலைப்படி கணக்கிடப்பட வேண்டும்.

(iii) முந்தைய ஆண்டிற்கான சென்னை மாநகர நுகர்வோர் சராசரி விலைக் குறியீட்டு எண்ணை அடிப்படையாகக் கொண்ட முதல் கணக்கீடு, இந்த அறிவிக்கை தமிழ்நாடு அரசிதழில் வெளியிடப்படும் நாளிலிருந்து செயலுக்கு வரும்.

(2) (i) நாள் ஊதிய வீதங்களைக் கணக்கிடுவதற்கு, மாதாந்திர ஊதியத்தை 26-ஆல் வகுக்க வேண்டும்.

(ii) மாதாந்திர ஊதியத்தைக் கணக்கிடுவதற்கு, நாள் ஊதியத்தை 30-ஆல் பெருக்க வேண்டும்.

(3) பணியின் தன்மை ஒரே மாதிரியாக இருக்கும்போது, ஆண் மற்றும் பெண் தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் ஊதியத்தில் எவ்வித வேறுபாடும் இருக்கக்கூடாது.

(4) தற்போது வழங்கப்பட்டு வரும் ஊதியங்கள் இங்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள குறைந்தளவு ஊதியங்களைக் காட்டிலும் அதிகமாக இருக்குமிடங்களிளெல்லாம் அதே ஊதியம் தொடர்ந்து வழங்கப்பட வேண்டும்.

[அரசாணை (2ப) எண் 45, தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு (J1)த் துறை, 10 ஜூன் 2022.] 1948 ஆம் ஆண்டு குறைந்தளவு ஊதியங்கள் சட்டத்தின் (மத்தியச் சட்டம் 11/1948) 3ஆம் பிரிவைச் சேர்ந்த (1) உட்பிரிவு 5 ஆம் பிரிவைச் சேர்ந்த (2) உட்பிரிவு ஆகியவற்றில் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களைக் கொண்டும், 03.01.2018 ஆம் நாளிட்ட தமிழ்நாடு அரசிதழின் பாகம் II—பிரிவு 2இல் 11 மற்றும் 12 ஆம் பக்கங்களில் (ஆங்கிலத்தில்) வெளியிடப்பட்ட தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறையின் II(2)/தொ.வே/13/2018 ஆம் எண் அறிவிக்கையினை ரத்து செய்துவிட்டு, அதற்குப் பதிலாகவும், தமிழ்நாட்டு ஆளுநர் அவர்கள், ஆலோசனைக்குழுவுடன் கலந்தாலோசித்தப் பின்னர் தமிழ்நாடு மாநிலத்தில் தேங்காய் உரித்தல் தொழிலில் பணியமர்த்தப்பட்டுள்ள கீழக்காணும் விவர அட்டவணையின் (2) நெடும்பத்தியில் குறிப்பிடப்பட்டுள்ள தொழிலாளர் வகையினருக்கு வழங்கத்தக்க குறைந்தளவு ஊதிய வீதங்களை அந்த விவர அட்டவனையின் (3) நெடும்பத்திக்கு நிகரான பதிவுகளில் குறிப்பிட்டுள்ளவாறு இதனால் திருத்தியமைக்கிறார். இதன் வரைவு, மேற்சொன்ன சட்டத்தின் 5 ஆம் பிரிவைச் சேர்ந்த (1) உட்பிரிவின் (b) பகுதியில் கோரியுள்ளவாறு ஏற்கெனவே வெளியிடப்பட்டுள்ளது.

(2) இந்த அறிவிக்கை தமிழ்நாடு அரசிதழில் வெளியிடப்படும் நாளிலிருந்தும், அந்நாள் முதற்கொண்டும் செயலுக்கு வரும்.

விவர அட்டவணை

தேங்காய் உரித்தல் தொழிலில் வேலைவாய்ப்பு

தொடர் எண். பணிகளின் வகைகள் குறைந்தளவு அடிப்படை ஊதிய வீதங்கள் (1) (2)

(3)

1. தேங்காய் உரித்தல்:

(i) காலத்திற்கேற்ற ஊதியம் நாளொன்றுக்கு ரூ. 288.00

(ii) செய்யும் வேலைக்கேற்ப ஊதியம் 1000 தேங்காய்களுக்கு ரூ. 364.567 தொடர் எண். பணிகளின் வகைகள் குறைந்தளவு அடிப்படை ஊதிய வீதங்கள் (1) (2)

(3)

2. மரம் ஏறுதல் மற்றும் தேங்காய் பறித்தல்:

(i) காலத்திற்கேற்ற ஊதியம் நாளொன்றுக்கு ரூ. 288.00 (ii) செய்யும் வேலைக்கேற்ப ஊதியம் மரம் ஒன்றிற்கு ரூ. 5.11 3. தேங்காய்களை தரம் பிரித்தல்

(i) காலத்திற்கேற்ற ஊதியம் நாளொன்றுக்கு ரூ. 241.00 (ii) செய்யும் வேலைக்கேற்ப ஊதியம் 1000 தேங்காய்களுக்கு ரூ. 38.28 4. தேங்காய்களை ஏற்றி இறக்குதல் 1000 தேங்காய்களுக்கு ரூ. 364.56 5. பயிற்சி பெறாத தொழிலாளர்கள் நாளொன்றுக்கு ரூ. 234.50 6. மரங்களை சுத்தப்படுத்துதல், உரமிடுதல் மரம் ஒன்றிற்கு ரூ. 12.15 மற்றும் பூச்சிக்கொல்லியிடுதல்.

விளக்கங்கள்:-(1)அகவிலைப்படி : மேலே நிர்ணயிக்கப்பட்ட குறைந்தளவு அடிப்படை ஊதிய வீதங்களுடன் தொழிலாளர்களுக்கு கீழே குறிப்பிடப்பட்டுள்ளவாறு அகவிலைப்படி வழங்கப்பட வேண்டும்:—

(i) அகவிலைப்படியானது, 2010 ஆம் ஆண்டிற்கான சென்னை மாநகர நுகர்வோர் சராசரி விலைக்குறியீட்டு எண்ணுடன் இணைக்கப்பட்டுள்ளது (அதாவது 2001ஆம் ஆண்டில் 100 புள்ளிகள் என்பதை அடிப்படையாகக் கொண்டு தற்போது கணக்கிடப்பட்ட 161 புள்ளிகள்). 161 புள்ளிகளுக்கு மேல் உயரும் ஒவ்வொரு புள்ளிக்கும், நாளொன்றுக்கு ரூ. 1.45 (ஒரு ரூபாய் நாற்பத்தைந்து காசுகள் மட்டும்) கூடுதலாக அகவிலைப்படி வழங்கப்பட வேண்டும்.

(ii) முந்தைய 12 மாதங்களுக்கான (அதாவது ஜனவரியிலிருந்து டிசம்பர் வரை)யில் சராசரி விலைக் குறியீட்டினை அடிப்படையாகக் கொண்டு, ஒவ்வோராண்டும் ஏப்ரல் முதல் நாளன்று அகவிலைப்படி கணக்கிடப்படவேண்டும்.

(iii) முந்தைய ஆண்டிற்கான சென்னை மாநகர நுகர்வோர் சராசரி விலைக் குறியீட்டினை அடிப்படையாகக் கொண்ட முதல் கணக்கீடு, இந்த அறிவிக்கை தமிழ்நாடு அரசிதழில் வெளியிடப்படும் நாளிலிருந்து செயலுக்கு வரும்.

(2) பணியின் தன்மை ஒரே மாதிரியாக இருக்கும்போது, ஆண் மற்றும் பெண் தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் ஊதியத்தில் எவ்வித வேறுபாடும் இருக்கக்கூடாது.

(3) மாதாந்திர ஊதியத்தைக் கணக்கிடுவதற்கு நாள் ஊதியத்தை 30-ஆல் பெருக்க வேண்டும்.

(4) தற்போது வழங்கப்பட்டு வரும் ஊதியங்கள், இங்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள குறைந்தளவு ஊதியங்களைக் காட்டிலும் அதிகமாக இருக்குமிடங்களிலெல்லாம் அதே ஊதியம் தொடர்ந்து வழங்கப்பட வேண்டும்.

[அரசாணை (ப) எண் 251, தொழிலாளர் நலன் மற்றும் தி்றன் மேம்பாட்டு (J1)த் துறை, 30 மே 2022.] 1948 ஆம் ஆண்டு குறைந்தளவு ஊதியங்கள் சட்டத்தின் (மத்தியச் சட்டம் 11/1948) 3 ஆம் பிரிவைச் சேர்ந்த (1) உட்பிரிவின் (b) பகுதியிலும், 5 ஆம் பிரிவைச் சேர்ந்த (2) உட்பிரிவிலும் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களைக் கொண்டு, வெளியிடக் கருதியுள்ள பின்வரும் வரைவு அறிவிக்கை மேற்சொன்ன சட்டத்தின் 5 ஆம் பிரிவைச் சேர்ந்த (1) உட்பிரிவின் (b) பகுதியில் கோரியுள்ளவாறு, அதனால் பாதிக்கப்படக்கூடிய அனைவரின் தகவலுக்காக இதனால் வெளியிடப்படுகிறது.

2. இந்த அறிவிக்கை, தமிழ்நாடு அரசிதழில் வெளியிடப்படும் நாளிலிருந்து இரண்டு திங்கள் கால அளவு முடிவடையும் நாளன்று அல்லது அதற்குப் பின்னர், இந்த வரைவு அறிவிக்கை பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்படுமென்றும், மேற்சொன்ன கால அளவு முடிவடைவதற்கு முன்னர், அது தொடர்பாக யாதொரு நபரிடமிருந்தும் வரப்பெறுகிற யாதொரு மறுப்புரை அல்லது கருத்துரையை தமிழ்நாடு அரசு பரிசீலிக்கும், என்றும் இதனால் அறிவிக்கப்படுகிறது. மறுப்புரை அல்லது கருத்துரை ஏதேனுமிருப்பின், அதனை, --600 006, டி.எம்.எஸ். வளாகத்தி்லுள்ள தொழிலாளர் நல ஆணையர் வாயிலாக, அரசு செயலாளர், தொழிலாளர் நலன் சென்னை- மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை, தலைமைச் செயலகம், சென்னை--- -600 009 என்ற முகவரிக்கு அனுப்பி வைக்கவேண்டும்.

வரைவுஅறிவிக்கை

1948 ஆம் ஆண்டு குறைந்தளவு ஊதியங்கள் சட்டத்தின் (மத்தியச் சட்டம் 11/1948) 3 ஆம் பிரிவைச் சேர்ந்த (1) உட்பிரிவின் (b) பகுதியிலும், 5 ஆம் பிரிவைச் சேர்ந்த (2) உட்பிரிவிலும் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களைக் கொண்டும், 23-01-2019 ஆம் நாளிட்ட தமிழ்நாடு அரசிதழின் பாகம் II—பிரிவு 2 இல்,114 மற்றும் 115 ஆம் பக்கங்களில் வெளியிடப்பட்ட தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறையின் II(2)/ தொ.வே.வா/97/2019 ஆம் எண் அறிவிக்கையை இரத்து செய்துவிட்டு தமிழ்நாட்டு ஆளுநர் அவர்கள், தமிழ்நாடு மாநிலத்தில், காற்றூட்டப்பட்ட பானங்கள் தயாரிக்கும் தொழிலில் ஈடுபட்டுள்ள, கீழ்க்காணும் அட்டவணையின் (1) நெடும்பத்தியில் குறிப்பிடப்பட்டுள்ள தொழிலாளர் வகையினருக்கு குறிப்பிடப்பட்டுள்ளவாறு வழங்கத்தக்க குறைந்தளவு ஊதிய வீதங்களை, அந்த விவர அட்டவணையின் (2) நெடும்பத்தியின் நிகரான பதிவுகளில் இதனால் திருத்தியமைக்கிறார்:- --8

அட்டவணை

காற்றூட்டப்பட்ட பானங்கள் தயாரிப்புத் தொழிலில் வேலைவாய்ப்பு

பணியாளர்களின் வகைகள்

குறைந்தளவு அடிப்படை ஊதிய வீதங்கள்

ரூ.காசு

(1)

(2)

மண்டலம்--A மண்டலம்--B மண்டலம்--C

(நாளொன்றுக்கு)

குடிசைத்தொழில் பிரிவுகள் :

(1) பொதுவான தொழிலாளர்கள் 239.50 231.00 227.00

(2) உதவியாட்கள் 234.50 228.00 220.00

ஓரளவு தானியங்கிப் பிரிவுகள் :

(1) வேதியியலர்

288.00 281.00 275.00

(2) மேற்பார்வையாளர்/மேலாள் 275.50 267.00 260.50

(3) இயந்திரக் கம்மியர் 260.50 253.00 247.00

(4) பொருத்துநர்

260.50 253.00 247.00

(5) மின் கம்மியர் 260.50 253.00 247.00

257.00 248.00 242.00

(6) புட்டியில் நிரப்புபவர்/ இயந்திரம் இயக்குபவர்

(7) புட்டி கழுவுபவர் 248.00 239.50 234.50

(8) உதவியாள்

(9) சரக்குகளை ஏற்றி இறக்குபவர்

தானியங்கிப் பிரிவுகள் :

(மாதம் ஒன்றுக்கு)

(1) பொது மேலாளர்

11303.00 10764.00 10495.00

(2) உற்பத்தி மேலாளர் 11032.00 10495.00 10229.00

10764.00 10229.00 9957.00

(3) தலைமை வேதியியலார்/ தரக் கட்டுப்பாட்டு ஆய்வாளர்

10764.00 10229.00 9957.00

(4) முறை மாற்றுப் பணி பொறியாளர்/ உற்பத்தி பொறியாளர்

8614.00 8076.00 7805.00

(5) முதலாள் / மேற்பார்வையாளர்/ கொதிகலன் இயக்குபவர் / இயந்திரக்கம்மியர் / உற்பத்தி உதவியாளர்

(நாளொன்றுக்கு)

(6) மின் கம்மியர் 281.00 268.50 260.50

(7) பொருத்துநர்

281.00 268.50 260.50

(8) சரக்குகளை ஏற்றி, இறக்குபவர் 275.50 260.50 253.00

(9) உதவியாள் 275.50 260.50 253.00

நிருவாகப் பணியாளர்கள் (மாதம் ஒன்றுக்கு)

(1) மேலாளர்

8614.00 8076.00 7805.00

(2) காசாளர்/ கணக்காளர் 8345.00 7805.00 7538.00

(3) எழுத்தர் / தட்டச்சர் 7270.00 7000.00 6731.00

(4) ஓட்டுநர்

7270.00 7000.00 6731.00

7000.00 6779.00 6193.00

(5) ஏவலாள்/குற்றேவலர்/காவலாள்/ பெருக்குபவர்9 விளக்கம்:—(1) மண்டலங்களின் வகைப்பாடு:- - மண்டலங்கள் - A,B மற்றும் C பின்வரும் பகுதிகளைக் கொண்டிருக்கும்.

(1) மண்டலம் - A - மாநகராட்சிகள்

(2) மண்டலம் - B - அனைத்து வகை நகராட்சிகள்

(3) மண்டலம் - C - மண்டலம் A, மண்டலம் B, ஆகியவற்றில் குறிப்பிடப்பட்டவை நீங்கலாக பிற பகுதிகள்.

(2) அகவிலைப்படி: தொழிலாளர்களுக்கு மேலே நிர்ணயிக்கப்பட்ட குறைந்தளவு அடிப்படை ஊதிய வீதங்களுடன், கீழே குறிப்பிட்டுள்ளவாறு அகவிலைப்படி வழங்கப்பட வேண்டும்:-

(i) அகவிலைப்படியானது, 2010 ஆம் ஆண்டிற்கான சென்னை மாநகர நுகர்வோர் சராசரி விலைக்குறியீட்டு எண்ணுடன் இணைக்கப்பட்டுள்ளது, (அதாவது 2001 ஆம் ஆண்டில் 100 புள்ளிகள் என்பதை அடிப்படையாகக் கொண்டு தற்போது கணக்கிடப்பட்ட 161 புள்ளிகள் ஆகும்) 161 புள்ளிகளுக்கு மேல் உயரும் ஒவ்வொரு புள்ளிக்கும் மாதமொன்றுக்கு கூடுதலாக, ரூ. 38.45 (ரூபாய் முப்பத்தெட்டு மற்றும் நாற்பத்தைந்து காசுகள் மட்டும்) அகவிலைப்படியாக வழங்கப்பட வேண்டும்.

(ii) இந்த அகவிலைப்படி, முந்தைய 12 (பன்னிரண்டு) மாதங்களுக்கு அதாவது ஜனவரியிலிருந்து டிசம்பர் வரையிலான நுகர்வோர் விலைக் குறியீட்டின் சராசரியை அடிப்படையாகக் கொண்டு, ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் முதல் தேதியிலிருந்து கணக்கிடப்பட வேண்டும்.

(iii) முந்தைய ஆண்டிற்கான சென்னை மாநகர நுகர்வோர் விலைக் குறியீட்டு எண்களின் சராசரியை அடிப்படையாகக் கொண்டு இந்த அறிவிக்கை தமிழ்நாடு அரசிதழில் வெளியிடப்படும் நாளிலிருந்து முதல் கணக்கீடு செயலுக்கு வரும்.

(3) பணியின் தன்மை ஓரே மாதிரியாக இருக்கும்போது, ஊதியம் வழங்குவதில் ஆண், பெண் தொழிலாளர்களிடையே எவ்வித பாகுபாடும் காட்டக்கூடாது.

(4) (i) நாட்கூலியைக் கணக்கிட, மாத ஊதியத்தை 26 ஆல் வகுக்க வேண்டும்.

(ii) மாத ஊதியத்தைக் கணக்கிட, நாள் ஊதியத்தை 30 ஆல் பெருக்க வேண்டும்.

(5) தற்போது வழங்கப்பட்டு வரும் ஊதியங்கள், இங்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள குறைந்தளவு ஊதியங்களைக் காட்டிலும் அதிகமாக இருக்குமிடங்களில் எல்லாம், அதே ஊதியம் தொடர்ந்து வழங்கப்பட வேண்டும்.

[அரசாணை (2ப) எண் 51, தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு(J1)த் துறை, 10 ஜூன் 2022.] 1948 ஆம் ஆண்டு குறைந்தளவு ஊதியங்கள் சட்டத்தின் (மத்தியச் சட்டம் 11/1948) 3ஆம் பிரிவைச் சேர்ந்த (1) உட்பிரிவின் (b) பகுதியிலும், 5-ஆம் பிரிவைச் சேர்ந்த (2) உட்பிரிவிலும் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களைக் கொண்டும், 03-01-2018 ஆம் நாளிட்ட தமிழ்நாடு அரசிதழின் பாகம்-II, பிரிவு-2-இல் 12 மற்றும் 13ஆம் பக்கங்களில் (ஆங்கிலத்தில்) வெளியிடப்பட்ட II(2)/தொ.வே.வா/14/2018 ஆம் எண்ணுள்ள தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறையின் அறிவிக்கையை ரத்து செய்துவிட்டு, அதற்குப் பதிலாகவும், தமிழ்நாட்டு ஆளுநர் அவர்கள், ஆலோசனைக்குழுவுடன் கலந்தாலோசித்தப் பின்னர் தமிழ்நாடு மாநிலத்தில் அப்பளம் தயாரிப்புத் தொழிலில் பணியமர்த்தப்பட்டுள்ள கீழேயுள்ள விவர அட்டவணையின் (1) நெடும்பத்தியில் குறிப்பிடப்பட்டுள்ள தொழிலாளர் வகையினருக்கு வழங்கத்தக்க குறைந்தளவு ஊதிய வீதங்கனை, அதன் (2) நெடும்பத்தியின் நிகரான பதிவுகளில் குறிப்பிடப்பட்டுள்ளவாறு இதனால் திருத்தியமைக்கிறார். இதன் வரைவு, மேற்சொன்ன சட்டத்தின் 5 ஆம் பிரிவைச் சேர்ந்த (1) உட்பிரிவின் (b) பகுதியில் கோரியுள்ளவாறு ஏற்கெனவே வெளியிடப்பட்டுள்ளது.

(2) இந்த அறிவிக்கை தமிழ்நாடு அரசிதழில் வெளியிடப்பட்ட நாளிலிருந்தும், அந்நாள் முதற்கொண்டும் நடைமுறைக்கு வரும்.

விவர அட்டவணை

அப்பளம் தயாரிப்புத் தொழிலில் வேலைவாய்ப்பு

குறைந்தளவு அடிப்படை ஊதிய

வீதங்கள்

தொழிலாளர் வகைகள்

மண்டலம்-1

மண்டலம்-2

(ரூ.காசு)

(ரூ.காசு)

(1)

(2)

(1) சிப்பம் செய்பவர்

7352.00 மாதம் ஒன்றிற்கு

7191.00 மாதம் ஒன்றிற்கு

(2) கணக்காளர்

7502.00 மாதம் ஒன்றிற்கு

7352.00 மாதம் ஒன்றிற்கு

(3) எடையிடுபவர் / உதவியாளர் 7352.00

மாதம் ஒன்றிற்கு

7191.00 மாதம் ஒன்றிற்கு

(4) நறுக்குதல் (100 கிலோ கிராம் ஒன்றுக்கு) 604.75 455.86

(5) கலவை (100 கிலோ கிராம் ஒன்றுக்கு) 707.09 521.01

10

குறைந்தளவு அடிப்படை ஊதிய

வீதங்கள்

தொழிலாளர் வகைகள்

மண்டலம்-1

மண்டலம்-2

(ரூ.காசு)

(ரூ.காசு)

11.72 8.42

(6) அப்பளம் தயாரித்தல் (i) அப்பளங்கள் (3 அங்குலம்) அல்லது 7.6 செ.மீ (விட்டம்) 100 எண்ணிக்கை (300 கிராம்)

14.97 11.04

(ii) அப்பளங்கள் (4 அங்குலம்) அல்லது 10.2 செ.மீ (விட்டம்) 100 எண்ணிக்கை (400 கிராம்)

22.15 16.29

(iii) அப்பளங்கள் (5 அங்குலம்) அல்லது 12.7 செ.மீ (விட்டம்) 100 எண்ணிக்கை (500 கிராம்)

24.74 18.28

(iv) அப்பளங்கள் (6 அங்குலம்) அல்லது 15.2 செ.மீ (விட்டம்) 100 எண்ணிக்கை (700 கிராம்)

விளக்கங்கள்:- (1) மண்டலம் - I மற்றும் மண்டலம் - II இல் பின்வரும் பகுதிகள் அடங்கும்.

மண்டலம் - l : அனைத்து மாநகராட்சிகள் மற்றும் சிறப்பு நிலை மற்றும் தெரிவுநிலை நகரியங்கள் உட்பட சிறப்பு நிலை மற்றும் தெரிவுநிலை நகராட்சிகள்

மண்டலம் - ll ஏனைய பகுதிகள்.

(2) அகவிலைப்படி : மேலே நிர்ணயிக்கப்பட்ட குறைந்தளவு அடிப்படை ஊதியவீதங்களுடன் தொழிலாளர்களுக்கு கீழே குறிப்பிடப்பட்டுள்ளவாறு அகவிலைப்படி வழங்கப்பட வேண்டும்.

(i) அகவிலைப்படியானது, 2010 ஆம் ஆண்டிற்கான சென்னை மாநகர நுகர்வோர் சராசரி விலைக்குறியீட்டு எண்ணுடன் இணைக்கப்பட்டுள்ளது (அதாவது 2001 ஆம் ஆண்டில் 100 புள்ளிகள் என்பதை அடிப்படையாகக் கொண்டு தற்போது கணக்கிடப்பட்ட 161 புள்ளிகள்). 161 புள்ளிகளுக்கு மேல் உயரும் ஒவ்வொரு புள்ளிக்கும், அகவிலைப்படியானது திங்கள் ஒன்றுக்கு ரூ. 44.65 (நாற்பத்து நான்கு ரூபாய் அறுபத்தைந்து காசு மட்டும்) கூடுதலாக அகவிலைப்படி வழங்கப்பட வேண்டும்.

(ii) அகவிலைப்படியானது, ஜனவரி முதல் டிசம்பர் வரையிலான முந்தைய 12 மாதங்களுக்கான விலைப்புள்ளியின் சராசரியை அடிப்படையாகக் கொண்டு, ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் திங்கள் முதல் நாளிலிருந்து கணக்கிடப்பட வேண்டும்.

(iii) முந்தைய ஆண்டில் சென்னை மாநகர சராசரி நுகர்வோர் விலைக் குறியீட்டினை அடிப்படையாகக் கொண்ட முதல் கணக்கீடு, இந்த அறிவிக்கை தமிழ்நாடு அரசிதழில் வெளியிடப்படும் நாளிலிருந்து செயலுக்கு வரும்.

(3) பணியின் தன்மை ஒரே மாதிரியாக இருக்கும்போது, ஊதியம் வழங்குவதில் ஆண் பெண் தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் ஊதியத்தில் எவ்வித வேறுபாடும் காட்டக்கூடாது.

(4) நாள் ஊதியத்தை கணக்கிட மாத ஊதியத்தை 26-ஆல் வகுக்க வேண்டும்.

(5) இங்கு நிர்ணயிக்கப்பட்ட குறைந்தளவு ஊதியங்களைக் காட்டிலும் தற்போது வழங்கப்படும் ஊதியங்கள் அதிகமாக இருக்குமிடங்களிளெல்லாம், அதே ஊதியம் தொடர்ந்து வழங்கப்பட வேண்டும்.

இரா. கிர்லோஷ் குமார்,

அரசுச் செயலாளர்.

(தமிழாக்கம்)

ந. அருள், இயக்குநர், (மு.கூ.பொ), தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தி (மொழிபெயர்ப்பு)த் துறை.

தமிழ்நாடு அரசுக்காக சென்னை எழுதுபொருள் மற்றும் அச்சுத் துறை ஆணயைரால்

அச்சிடப்பட்டு வெளியிடப்பட்டது.

Cite this issue. Tamil Nadu Gazette, Government of Tamil Nadu, 27 July 2022. Indian Gazettes, https://egazette.servantsofknowledge.in/details/in.gazette.tamilnadu.2022-07-27.Ordinary_30_Part-II_Section-2-T-Supp/. Archive identifier in.gazette.tamilnadu.2022-07-27.Ordinary_30_Part-II_Section-2-T-Supp.