© [Regd. No. TN/CCN/467/2012-14. தமிழ்நாடு அரசு [R. Dis. No. 197/2009. 2022 [விலை : ரூ. 3.20 காசுவிலை : ரூ. 3.20 காசு
| தமிழ்நாடு அரசிதழ் ஆணையின்படி வெளியிடப்பட்டது. | ||
எண் 30] சென்னை, புதன்கிழமை, ஜூலை 27, 2022 ஆடி 11, சுபகிருது, திருவள்ளுவர் ஆண்டு-2053
பகுதி IV—பிரிவு 2 இன் இணைப்பு
தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையின் பின்வரும் சட்டமானது 2022 ஆம் ஆண்டு
ஜூன் திங்கள் 12 ஆம் நாளன்று ஆளுநரின் ஏற்பிசைவைப் பெற்றது மற்றும் அது
பொதுத்தகவலுக்காக இதன்மூலம் வெளியிடப்படுகிறது.
சட்ட எண். 33/2022.சட்ட எண். 33/2022.
1983 ஆம் ஆண்டு தமிழ்நாடு கூட்டுறவுச் சங்கங்கள் சட்டத்தினை மேலும் 1983 ஆம் ஆண்டு தமிழ்நாடு கூட்டுறவுச் சங்கங்கள் சட்டத்தினை மேலும்
திருத்தம் செய்வதற்கானதொரு சட்டம்.திருத்தம் செய்வதற்கானதொரு சட்டம்.
இந்தியக் குடியரசின் எழுபத்தி மூன்றாம் ஆண்டில் தமிழ்நாடு மாநிலச் சட்டமன்றப்
பேரவையினால் பின்வருமாறு சட்டமியற்றப்படுவதாகுக:-
குறுந்தலைப்பு மற்றும் 1. (1) இந்தச் சட்டம், 2022 ஆம் ஆண்டு தமிழ்நாடு கூட்டுறவுச் சங்கங்கள்
தொடக்கம்.
(நான்காம் திருத்தச்) சட்டம் என வழங்கப்பெறும்.
(2) இது உடனடியாக நடைமுறைக்கு வருதல் வேண்டும்.
தமிழ்நாடு சட்டம்
87-ஆம் பிரிவிற்கான 2. 1983 ஆம் ஆண்டு தமிழ்நாடு கூட்டுறவுச் சங்கங்கள் சட்டத்தின் 87 ஆம்
30/1983.
திருத்தம்.
பிரிவில், (1) ஆம் உட்பிரிவு மற்றும் அதன் உள்ளடங்கலான முதலாம் வரம்புரைக்கு
மாற்றாக, பின்வரும் உட்பிரிவு மற்றும் வரம்புரையானது அமைக்கப்படுதல் வேண்டும்.
அதாவது:-
(1) 80 ஆம் பிரிவின் கீழ் தணிக்கையொன்று அல்லது 81 ஆம் பிரிவின்
கீழ் விசாரணையொன்று அல்லது 82 ஆம் பிரிவின் கீழ் ஆய்வு அல்லது புலனாய்வு
ஒன்று அல்லது 83 ஆம் பிரிவின் கீழ் புத்தகங்களை ஆய்வு மேற்கொள்ளும்
அல்லது சங்கம் கலைக்கப்படுமிடத்து, சங்கத்தின் நிர்வாகம் அல்லது மேலாண்மை
ஒப்படைக்கப்பட்டிருக்கும் அல்லது ஒப்படைக்கப்பட்டிருந்த நபர் எவரும் அல்லது அந்தச்
சங்கத்தின் முன்னாள் அல்லது தற்போதுள்ள அலுவலர் அல்லது பணியாளர் எவரும் அவர்
தாமாக அல்லது பிற நபர் எவரின் உடந்தையுடன் பணம் அல்லது பிற சொத்து எதையும்
கையாடல் செய்துள்ளார் அல்லது மோசடியாக தக்கவைத்துள்ளார் அல்லது மாற்றம்
செய்துள்ளார் அல்லது சங்கம் தொடர்பாக நம்பிக்கைத் துரோகக் குற்றம் செய்துள்ளார்
அல்லது நம்பிக்கைத் துரோகம் அல்லது கவனமின்மையினால் சங்கத்தின் சொத்துக்களில்
குறைபாடு ஏதும் விளைவித்துள்ளார் அல்லது இந்தச் சட்டம், விதிகள் அல்லது
துணை விதிகளுக்கு இணங்கியபடியல்லாத செலுத்தம் எதையும் செய்துள்ளாரெனத்
IV-2(30)(T-Sup)-1
[1]2 தோன்றினால், பதிவாளர் தாமாகவோ அல்லது இதன் பொருட்டு அவரால் சிறப்பு
அதிகாரம் அளிக்கப்பட்ட நபரெவரும் அவரது சொந்த முயற்சியில் அல்லது நிர்வாகச்
சபை, கலைப்பு அலுவலர் அல்லது கடன் கொடுத்தவர் அல்லது பங்களித்தவர் எவரேனும்
அளித்த விண்ணப்பத்தின் பேரிலோ, அத்தகைய நபர் அல்லது அலுவலர் அல்லது
பணியாளர் அல்லது அத்தகைய பிற நபருக்கு எதிராக குற்றச்சாட்டுகளை சுமத்தலாம்
மற்றும் தொடர்புடைய நபர் மற்றும் அவர் இறந்துவிட்ட நேர்வில் அவரது சொத்தை
மரபுரிமையாக பெறுகின்ற அவரது சார்பாளர் அல்லது அவரது சொத்தை வைத்திருக்கும்
நபருக்கு, குற்றச்சாட்டுகளுக்கு பதிலளிக்க நியாயமான வாய்ப்பொன்றை வழங்கிய பின்பு,
பதிவாளர் அல்லது மேற்சொன்னவாறு அதிகாரமளிக்கப்பட்ட நபரானவர், நியாயமெனக்
கருதும் அத்தகைய வீதத்தில் வட்டியுடன் அத்தொகை அல்லது சொத்து அல்லது அதன்
பகுதி எதனையும் திருப்பிச் செலுத்த அல்லது மீட்டளிக்க அல்லது கையாடல், நிதிகளின்
தவறான பயன்பாடு, தொகை அல்லது பிற சொத்தினை மோசடியாக தக்கவைத்தல்
அல்லது மாற்றம் செய்தல் அல்லது நம்பிக்கை மோசடி அல்லது கவனமின்மை அல்லது
இந்தச் சட்டம், விதிகள் அல்லது துணை விதிகளுக்கு இணங்கியவாறன்றி செய்துள்ள
செலுத்தங்கள் பொறுத்த இழப்பீட்டின் மூலம் சங்கத்தின் சொத்துக்களுக்கு அத்தகைய
தொகையினை பங்களிக்க அவரைக் கோரி, பதிவாளர் அல்லது மேற்சொன்னவாறு
அதிகாரமளிக்கப்பட்ட நபரானவர் நியாயமெனக் கருதும் ஆணை ஒன்றைச் செய்யலாம்.
வரம்புரையாக, இந்த உட்பிரிவில் குறிப்பிடப்பட்ட செயல் அல்லது செய்யாமை
எதுவும் கண்டுபிடிக்கப்பட்ட தேதியிலிருந்து ஏழு ஆண்டுகள் முடிவடைந்த பின்பு இந்த
உட்பிரிவின்படி நடவடிக்கை எதுவும் தொடரப்படுதல் ஆகாது:.
(ஆளுநரின் ஆணைப்படி)
ச. கோபி ரவிகுமார்,ச. கோபி ரவிகுமார்,
அரசுச் செயலாளர் (சட்டமியற்றல்), சட்டத் துறை.
(தமிழாக்கம்)
வெ. வெ. அரசகுமார், அரசகுமார், உதவி இயக்குநர்,
சட்ட (தமிழ்ப்பிரிவு)த் துறை.
3தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையின் பின்வரும் சட்டமானது 2022 ஆம் ஆண்டு
ஜூன் திங்கள் 17 ஆம் நாளன்று ஆளுநரின் ஏற்பிசைவைப் பெற்றது மற்றும் அது
பொதுத்தகவலுக்காக இதன்மூலம் வெளியிடப்படுகிறது.
சட்ட எண். 36/2022
1983 ஆம் ஆண்டு தமிழ்நாடு கூட்டுறவுச் சங்கங்கள் சட்டத்தினை மேலும் திருத்தம் 1983 ஆம் ஆண்டு தமிழ்நாடு கூட்டுறவுச் சங்கங்கள் சட்டத்தினை மேலும் திருத்தம்
செய்வதற்கானதொரு சட்டம். செய்வதற்கானதொரு சட்டம்.
இந்தியக் குடியரசின் எழுபத்தி மூன்றாம் ஆண்டில் தமிழ்நாடு மாநிலச்
சட்டமன்றப் பேரவையினால் பின்வருமாறு சட்டமியற்றப்படுவதாகுக:-
குறுந்தலைப்பு 1. (1) இந்தச் சட்டம், 2022 ஆம் ஆண்டு தமிழ்நாடு கூட்டுறவுச்
மற்றும் சங்கங்கள் (மூன்றாம் திருத்தச்) சட்டம் என வழங்கப்பெறும்.
தொடக்கம்.
(2) இது, உடனடியாக நடைமுறைக்கு வருதல் வேண்டும்.
தமிழ்நாடு சட்டம்
136-D ஆம் 2. 1983 ஆம் ஆண்டு தமிழ்நாடு கூட்டுறவுச் சங்கங்கள் சட்டத்தின்
30/1983.
பிரிவிற்கானத் 136-D ஆம் பிரிவில், (2) ஆம் உட்பிரிவானது விட்டுவிடப்படுதல் வேண்டும்.
திருத்தம்.
(ஆளுநரின் ஆணைப்படி)
ச. கோபி ரவிகுமார்,ச. கோபி ரவிகுமார், அரசுச் செயலாளர் (சட்டமியற்றல்),
சட்டத் துறை.
(தமிழாக்கம்)
வெ. வெ. அரசகுமார், அரசகுமார், உதவி இயக்குநர்,
சட்ட (தமிழ்ப்பிரிவு)த் துறை.
4 5தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையின் பின்வரும் சட்டமானது 2022 ஆம் ஆண்டு ஜூன் திங்கள் 17 ஆம் நாளன்று ஆளுநரின் ஏற்பிசைவைப் பெற்றது மற்றும் அது பொதுத்தகவலுக்காக இதன்மூலம் வெளியிடப்படுகிறது.
சட்ட எண். 37/2022.சட்ட எண். 37/2022.
2012 ஆம் ஆண்டு தமிழ்நாடு உள்கட்டமைப்பு மேம்பாட்டு சட்டத்தினை மேலும் 2012 ஆம் ஆண்டு தமிழ்நாடு உள்கட்டமைப்பு மேம்பாட்டு சட்டத்தினை மேலும்
திருத்தம் செய்வதற்கானதொரு சட்டம். திருத்தம் செய்வதற்கானதொரு சட்டம்.
இந்தியக் குடியரசின் எழுபத்தி மூன்றாம் ஆண்டில் தமிழ்நாடு மாநிலச்
சட்டமன்றப் பேரவையினால் பின்வருமாறு சட்டமியற்றப்படுவதாகுக:-
குறுந்தலைப்பு 1. (1) இந்தச் சட்டம், 2022 ஆம் ஆண்டு தமிழ்நாடு உள்கட்டமைப்பு
மற்றும் மேம்பாட்டு (திருத்தச்) சட்டம் என வழங்கப்பெறும்.
தொடக்கம்.
(2) இது, உடனடியாக நடைமுறைக்கு வருதல் வேண்டும்.
3-ஆம் தமிழ்நாடு சட்டம்
பிரிவிற்கானத் திருத்தம். 22/2012.
2. (இதன்பின்பு இதில் முதன்மைச் சட்டம் என சுட்டப்படுவதான), 2012 ஆம் ஆண்டு தமிழ்நாடு உள்கட்டமைப்பு மேம்பாட்டு சட்டத்தின் 3 ஆம் பிரிவில் (3) ஆம் உட்பிரிவிலுள்ள, (c) முதல் (m) வரையுள்ள கூறுகளுக்காக, பின்வரும் கூறுகளானது மாற்றாக அமைக்கப்படுதல் வேண்டும், அதாவது:-
"(c) அரசு தலைமைச் செயலாளர், பதவி வழி உறுப்பினர்,
(d) அரசுச் செயலாளர் நிதித்துறை, பதவி வழி உறுப்பினர் செயலாளராக
இருத்தல் வேண்டும், மற்றும்
(e) வாரியத்தின் தலைமைச் செயல் அலுவலர், பதவி வழி உறுப்பினர்".
6-ஆம் 3. முதன்மைச் சட்டத்தின் 6 ஆம் பிரிவில், (1) ஆம் உட்பிரிவிற்காக, பின்வரும்
உட்பிரிவானது மாற்றாக அமைக்கப்படுதல் வேண்டும். அதாவது:-
பிரிவிற்கானத் திருத்தம்.
"(1) வாரியத்திற்கு, அரசால் நியமிக்கப்பட்ட தலைமைச் செயல் அலுவலர்
ஒருவர் இருத்தல் வேண்டும்.";
(2) (2) ஆம் உட்பிரிவில்,"அரசின் ஒப்புதலுடன்" எனும் சொற்றொடரானது
விட்டுவிடப்படுதல் வேண்டும்.
9-ஆம்
பிரிவிற்கானத் திருத்தம்.
4. முதன்மைச் சட்டத்தின் 9 ஆம் பிரிவில் (2) ஆம் உட்பிரிவிலுள்ள (c) முதல் (i) வரையுள்ள கூறுகளுக்காக, பின்வரும் கூறுகளானது மாற்றாக அமைக்கப்படுதல் வேண்டும், அதாவது:-
"(c) வாரியத்தின் தலைமைச் செயல் அலுவலர், பதவி வழி உறுப்பினர்
செயலாளராக இருத்தல் வேண்டும்; மற்றும்
"(d) செயற்குழுவின் தலைமையாளரால் நியமிக்கப்படலாகும், நிதி, பொருளாதாரம், உள்கட்டமைப்பு மற்றும் அது போன்ற புலங்களில் இரண்டு நபர்களுக்கும் மேற்படாத வல்லுநர்கள்,".
5. முதன்மைச் சட்டத்தின் 15 ஆம் பிரிவிலுள்ள (2) ஆம் உட்பிரிவானது, 1-ஆம் விட்டுவிடப்படுதல் வேண்டும்.
பிரிவிற்கானத் திருத்தம்.
(ஆளுநரின் ஆணைப்படி)
ச. கோபி ரவிகுமார்,ச. கோபி ரவிகுமார்,
அரசுச் செயலாளர் (சட்டமியற்றல்), சட்டத் துறை.
(தமிழாக்கம்)
வெ. வெ. அரசகுமார், அரசகுமார், உதவி இயக்குநர்,
சட்ட (தமிழ்ப்பிரிவு)த் துறை.
6 7தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையின் பின்வரும் சட்டமானது 2022 ஆம்
ஆண்டு ஜூன் திங்கள் 21 ஆம் நாளன்று ஆளுநரின் ஏற்பிசைவைப் பெற்றது
மற்றும் அது பொதுத்தகவலுக்காக இதன்மூலம் வெளியிடப்படுகிறது.
சட்ட எண். 39/2022.சட்ட எண். 39/2022.
1982 ஆம் ஆண்டு தமிழ்நாடு கள்ளச்சாராயக்காரர்கள், கணினிவெளிச் 1982 ஆம் ஆண்டு தமிழ்நாடு கள்ளச்சாராயக்காரர்கள், கணினிவெளிச் சட்டக் குற்றவாளிகள், மருந்து சரக்குக் குற்றவாளிகள், வனக் குற்றவாளிகள், சட்டக் குற்றவாளிகள், மருந்து சரக்குக் குற்றவாளிகள், வனக் குற்றவாளிகள், குண்டர்கள், விபச்சாரத் தொழில் குற்றவாளிகள், மணல் கடத்தல் குற்றவாளிகள், குண்டர்கள், விபச்சாரத் தொழில் குற்றவாளிகள், மணல் கடத்தல் குற்றவாளிகள், பாலியல் குற்றவாளிகள், குடிசை பகுதி நில அபகரிப்பாளர்கள் மற்றும் காணொலி பாலியல் குற்றவாளிகள், குடிசை பகுதி நில அபகரிப்பாளர்கள் மற்றும் காணொலி திருடர்கள் ஆகியோரின் அபாயகரமான நடவடிக்கைகளைத் தடுத்தல் திருடர்கள் ஆகியோரின் அபாயகரமான நடவடிக்கைகளைத் தடுத்தல் சட்டத்தினை மேலும் திருத்தம் செய்வதற்கானதொரு சட்டம். சட்டத்தினை மேலும் திருத்தம் செய்வதற்கானதொரு சட்டம்.
இந்தியக் குடியரசின் எழுபத்தி மூன்றாம் ஆண்டில் தமிழ்நாடு மாநிலச்
சட்டமன்றப் பேரவையினால் பின்வருமாறு சட்டமியற்றப்படுவதாகுக:-
குறுந்தலைப்பு மற்றும்
தொடக்கம்.
1. (1) இந்தச் சட்டம், 2022 ஆம் ஆண்டு தமிழ்நாடு கள்ளச்சாராயக்காரர்கள், கணினிவெளிச் சட்டக் குற்றவாளிகள், மருந்து சரக்குக் குற்றவாளிகள், வனக் குற்றவாளிகள், குண்டர்கள், விபச்சாரத் தொழில் குற்றவாளிகள், மணல் கடத்தல் குற்றவாளிகள், பாலியல் குற்றவாளிகள், குடிசை பகுதி நில அபகரிப்பாளர்கள் மற்றும் காணொலி திருடர்கள் ஆகியோரின் அபாயகரமான நடவடிக்கைகளைத் தடுத்தல் (திருத்தச்) சட்டம் என வழங்கப்பெறும்.
(2) இது உடனடியாக நடைமுறைக்கு வருதல் வேண்டும்.
தமிழ்நாடு சட்டம்
15-ஆம் பிரிவிற்கான 2. 1982 ஆம் ஆண்டு தமிழ்நாடு கள்ளச்சாராயக்காரர்கள்,
14/1982.
திருத்தம்.
கணினிவெளிச் சட்டக் குற்றவாளிகள், மருந்து சரக்குக் குற்றவாளிகள், வனக்
குற்றவாளிகள், குண்டர்கள், விபச்சாரத் தொழில் குற்றவாளிகள், மணல் கடத்தல்
குற்றவாளிகள், பாலியல் குற்றவாளிகள், குடிசை பகுதி நில அபகரிப்பாளர்கள்
மற்றும் காணொலி திருடர்கள் ஆகியோரின் அபாயகரமான நடவடிக்கைகளைத்
தடுத்தல் சட்டத்தின் 15-ஆம் பிரிவில், -
(1) (1) ஆம் உட்பிரிவிற்கு, பின்வரும் வரம்புரையானது சேர்க்கப்படுதல்
வேண்டும், அதாவது:-
"வரம்புரையாக, தடுப்புக் காவல் சிறைவாசி ஒருவர், அவரது
நெருங்கிய உறவினரின் இறப்பு அல்லது இறுதிச் சடங்கில் கலந்து
கொள்வதற்காக, விடுவித்தல் ஆணையை, 3 ஆம் பிரிவின் (2) ஆம் உட்பிரிவில்
குறிப்பிடப்பட்ட அலுவலர் ஒருவர், வழங்கலாம்.
விளக்கம்.- இந்த வரம்புரையின் நோக்கத்திற்காக,
"நெருங்கிய உறவினர்" என்பது தந்தை, தாய் நேர்விற்கேற்ப, மனைவி அல்லது கணவன், மகன், மகள், உடன் பிறந்த சகோதரர் அல்லது சகோதரி ஆகும்." .
(2) (2) ஆம் உட்பிரிவில், "மாநில அரசு" என்ற
சொற்றொடருக்குப் பின்பு, "அல்லது நேர்விற்கேற்ப, 3 ஆம் பிரிவின் (2) ஆம் உட்பிரிவில் குறிப்பிடப்பட்ட அலுவலர் ஒருவர்" எனும் சொற்றொடரானது
உட்புகுத்தப்படுதல் வேண்டும்.
(ஆளுநரின் ஆணைப்படி)
ச. கோபி ரவிகுமார்,ச. கோபி ரவிகுமார், அரசுச் செயலாளர் (சட்டமியற்றல்),
சட்டத் துறை.
(தமிழாக்கம்)
வெ. வெ. அரசகுமார், அரசகுமார், உதவி இயக்குநர், சட்ட (தமிழ்ப்பிரிவு)த் துறை.
தமிழ்நாடு அரசுக்காக சென்னை எழுதுபொருள் மற்றும் அச்சுத் துறை ஆணையரால் அச்சிடப்பட்டு வெளியிடப்பட்டது.
IV-2(30)(T-Sup)-1a