தமிழ்நாடு அரசு 2022
[Regd. No. TN/CCN/467/2012-14. [R. Dis. No. 197/2009. [விலை : ரூ. 0.80 காசு.
| தமிழ்நாடு அரசிதழ் ஆணையின்படி வெளியிடப்பட்டது. | ||
எண் 30] சென்னை, புதன்கிழமை, ஜூலை 27, 2022 ஆடி 11, சுபகிருது, திருவள்ளுவர் ஆண்டு–2053
பகுதி VI—பிரிவு 1 இன் இணைப்பு
துறைத் தலைவர்களுடைய அறிவிப்புகள்
1983ஆம் ஆண்டு தமிழ்நாடு கூட்டுறவுச் சங்கங்களின் சட்டம் பிரிவு 140(1)-ன்கீழ் சங்கப் பதிவு இரத்து செய்தல் பற்றிய அறிவிக்கை.
ஜி.கே. 212, டாக்டர் பி.எஸ். சீனிவாசன் நகராட்சி மேல்நிலைப்பள்ளி ஆசிரியர் மற்றும் மாணவர் கூட்டுறவு பண்டகசாலை.
[ந.க. எண். 2976/2013அ4 (கலைத்தல்)]
ஜி.கே. 212, டாக்டர் பி.எஸ். சீனிவாசன் நகராட்சி மேல்நிலைப்பள்ளி ஆசிரியர் மற்றும் மாணவர் கூட்டுறவு பண்டகசாலை லிட், 1983-ம் ஆண்டு தமிழ்நாடு கூட்டுறவுச் சங்கங்களின் சட்டப் பிரிவு 140(1)-ன் கீழ் காஞ்சிபுரம் மாவட்டம் மற்றும் வட்டம் ஜி.கே. 212, டாக்டர் பி.எஸ். சீனிவாசன் நகராட்சி மேல்நிலைப்பள்ளி ஆசிரியர் மற்றும் மாணவர் கூட்டுறவு பண்டகசாலை லிட், பதிவு எண் ரத்து செய்யப்பட்டு அதன் அலுவல்கள் இறுதியாக முடிவு கட்டப்படுகிறது.
இவ்வறிவிப்பு 12-10-2015 அன்று நடைமுறைக்கு வருகிறது.
காஞ்சிபுரம், த. சுவாதி, 2022 பிப்ரவரி 28. துணைப்பதிவாளர், காஞ்சிபுரம் சரகம்.
தூத்துக்குடி சரகக் கூட்டுறவுச் சங்கங்களின் துணைப்பதிவாளரின் கட்டுப்பாட்டில் இருந்த ட்டி.சி. 56 தூத்துக்குடி மீன்வளக்கல்லூரி மாணவர் மற்றும் அலுவலர் கூட்டுறவு பண்டகசாலையின் பதிவினை 1983 ஆம் வருடத்திய தமிழ்நாடு கூட்டுறவுச் சங்கங்களின் சட்டப் பிரிவு 140(1) இன் கீழ் ரத்து செய்தல் பற்றிய அறிவிக்கை.
(ஜி.எல். 4/2003 பதொ)
ட்டி.சி. 56 தூத்துக்குடி மீன்வளக்கல்லூரி மாணவர் மற்றும் அலுவலர் கூட்டுறவு பண்டகசாலையின் கலைப்பு நடவடிக்கையை இறுதி முடிவு கட்டுவதற்கான முன்மொழிவு ஏற்றுக்கொள்ளப்பட்டு இப்பண்டகசாலையின் பதிவினை 1983ஆம் வருடத்திய தமிழ்நாடு கூட்டுறவுச் சங்கங்களின் சட்டப் பிரிவு 140(1)இன் கீழ் ரத்து செய்து கீழ்க்காணுமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
| வ . எண் | கலைக்கப்பட்ட கூட்டுறவு சங்கத்தின் பெயர் | சங்கத்தினை இறுதி முடிவு கட்டிய நாள் | சங்கத்தின் பதிவு எண் | பதிவு எண் ரத்து செய்யப்பட்ட தூத்துக்குடி சரக கூட்டுறவுச் சங்கங்களின் துணைப்பதிவாளரின் உத்தரவு விபரம் |
| 1. | ட் டி சி . 5 6 தூ த் து க் கு டி மீன்வளக்கல்லூரி மாணவர் மற்றும் அலுவலர் கூட்டுறவு பண்டகசாலை, தூத்துக்குடி. | 10.06.2022 | ட்டி. சி. 56 | ஜி.எல்.04/2003/பதொ நாள். 10.06.2022 |
மேற்படி உத்தரவு 2022ஆம் ஆண்டு ஜூன் திங்கள் 10ஆம் தேதியன்று நடைமுறைக்கு வருகிறது.
21983ஆம் வருடத்திய தமிழ்நாடு கூட்டுறவுச் சங்கங்களின் சட்டம் பிரிவு 137 (2) (b)ன் கீழ் சங்கம் கலைத்தல் பற்றிய அறிவிக்கை.
ஒய்.எம். 32 (ஏ), தொட்டியம் அரசினர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் கூட்டுறவு பண்டகசாலை.
[ந.க. எண். 2502/2020/விஅ(1)]
திருச்சிராப்பள்ளி மண்டலம், முசிறி சரக கூட்டுறவுச் சங்கங்களின் துணைப்பதிவாளர் அலுவலகக் கட்டுப்பாட்டில் தொட்டியம் ஒன்றியத்தில் செயல்பட்டு வந்த ஒய்.எம். 32 (ஏ), தொட்டியம் அரசினர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் கூட்டுறவு பண்டகசாலை 19.05.2022 அன்று தமிழ்நாடு கூட்டுறவுச் சங்கங்களின் சட்டம் 1983, சட்டப் பிரிவு 137(2)(b)-இன் கீழ் கலைத்தும், தமிழ்நாடு கூட்டுறவுச் சங்கங்களின் சட்டம் 1983, சட்டப் பிரிவு 138(1)-இன் கீழ் கலைத்தல் அலுவலராக கூட்டுறவு சார்பதிவாளர்/கலைத்தல், கூட்டுறவுச் சங்கங்களின் துணைப்பதிவாளர் அலுவலகம், முசிறி-ஐ நியமனம் செய்து ஆணையிடப்பட்டுள்ளது.
ஒய்.எம். 43, ஏலூர்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் கூட்டுறவு பண்டகசாலை
[ந.க. எண். 2502/2020/விஅ(2)]
திருச்சிராப்பள்ளி மண்டலம், முசிறி சரகக் கூட்டுறவுச் சங்கங்களின் துணைப்பதிவாளர் அலுவலகக் கட்டுப்பாட்டில் தொட்டியம் ஒன்றியத்தில் செயல்பட்டு வந்த ஒய்.எம். 43, ஏலூர்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் கூட்டுறவு பண்டகசாலை 19.05.2022 அன்று தமிழ்நாடு கூட்டுறவுச் சங்கங்களின் சட்டம் 1983, சட்டப் பிரிவு 137(2)(b)-இன் கீழ் கலைத்தும், தமிழ்நாடு கூட்டுறவுச் சங்கங்களின் சட்டம் 1983, சட்டப் பிரிவு 138(1)-இன் கீழ் கலைத்தல் அலுவலராக கூட்டுறவு சார்பதிவாளர்/கலைத்தல், கூட்டுறவுச் சங்கங்களின் துணைப்பதிவாளர் அலுவலகம், முசிறி-ஐ நியமனம் செய்தும் ஆணையிடப்பட்டுள்ளது.
முசிறி, நா.அ. கமலக்கண்ணன், 2022 ஜூன் 16. துணைப்பதிவாளர், கூட்டுறவுச் சங்கங்களின் துணைப்பதிவாளர் அலுவலகம், முசிறி சரகம்.