Servants of Knowledge
Tamil Nadu Gazette · Government of Tamil Nadu

Notifications of interest to a section of the public issued by Heads of Departments, etc.

Published 27 July 2022

Type
Ordinary
Gazette no.
30
Part
Part VI
Section
Section 2
Identifier
in.gazette.tamilnadu.2022-07-27.Ordinary_30_Part-VI_Section-2
Languages
English, Tamil
Published at
Original source ↗

©

GOVERNMENT OF TAMIL NADU 2022

[Regd. No. TN/CCN/467/2012-14.

[R. Dis. No. 197/2009.

[Price : Rs. 9.60 Paise.

TAMIL NADU GOVERNMENT GAZETTE PUBLISHED BY AUTHORITY

No. 30] CHENNAI, WEDNESDAY, JULY 27, 2022 Aadi 11, Subakiruthu, Thiruvalluvar Aandu–2053

Part VI—Section 2

Notifications of interest to a section of the public

issued by Heads of Departments, etc.

NOTIFICATIONS BY HEADS OF DEPARTMENTS, ETC.

CONTENTS

Pages.

தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம், சென்னை.

2021ஆம் ஆண்டு தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் (மின்கட்டமைப்புடன் இணைக்கப்படக் கூடிய சூரிய சக்தி ஒளி வோல்ட் (PV) மின்உற்பத்தி அமைப்பு முறைகள்) ஒழுங்குமுறை விதிகள் .. .. .. .. .. 78-98 GOVERNMENT EXAMINATIONS / EDUCATIONAL OFFICERS

Loss of Certificates .. .. .. .. .. .. .. 98 மூலச்சான்றிதழ்கள் ரத்து செய்தல் பற்றிய அறிவிக்கை .. .. .. 99

[77]

DTP—VI-2 (30)78 [Part VI—Sec. 2 TAMIL NADU GOVERNMENT GAZETTE

NOTIFICATIONS BY HEADS OF DEPARTMENTS, ETC.

தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம், சென்னை.

2021 ஆம் ஆண்டு தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம்

[மின்கட்டமைப்புடன் இணைக்கப்படக் கூடிய சூரிய சக்தி ஒளி வோல்ட் (PV) மின்உற்பத்தி அமைப்பு முறைகள்] ஒழுங்குமுறை விதிகள்

(அறிவிக்கை எண் த.மி.ஒ.ஆ./ஜி.ஐ.எஸ்.எஸ் ஒழுங்குமுறை விதி 23-1, 07-10-2021 நாளிட்டது) (Lr. No. TNERC/Legal/2009/D.No. 879/2021, 14-07-2022)

(ஆங்கிலத்தில் வெளியிடப்பட்டதன் தமிழாக்கம்)

No. VI(2)/73/2022.

2003ஆம் ஆண்டு மின்சாரச் சட்டத்தின் (மத்தியச் சட்டம் 36/2003)இன் 61ஆம் பிரிவின்படி, மாநில மின்சார ஒழுங்குமுறை ஆணையம், கட்டணம் நிருணயிப்பதற்கான ஷரத்துக்கள் மற்றும் நிபந்தனைகளை குறித்துரைத்தல் வேண்டும் என்பதாலும்;

மற்றும் கட்டணத்தை நிருணயிப்பதற்கான ஷரத்துக்கள் மற்றும் நிபந்தனைகளுக்கு வகை செய்யும் ஒழுங்குமுறை விதிகள் முன்னதாக வெளியிட வேண்டும் மற்றும் அதற்கிணங்க முந்தைய வெளியீடு மேற்கொள்ளப்பட்டது என்பதாலும்;

மற்றும், மின்சார சட்டம், 2003ஆம் ஆண்டு பிரிவு 176ன் மூலம் வழங்கப்பட்ட அதிகாரத்தின்படி இந்திய அரசு 2020ஆம் ஆண்டு மின்சார (மின்நுகர்வோர் உரிமைகள்) விதிகள் மற்றும் மின்சார (மின்நுகர்வோர் உரிமைகள்) திருத்த விதிகள், 2021 மூலம் மாநில ஆணையங்களை ஒழுங்குமுறை விதிகளை பிறப்பிக்க வேண்டுகிறது என்பதாலும்;

தற்போது, அதன் காரணமாக, 2003ஆம் ஆண்டு மின்சாரச் சட்டத்தின் 86(1)(e)ஆம் பிரிவு மற்றும் 181ஆம் பிரிவுடன் சேர்த்துப்படிக்கப்படும் 61(h) பிரிவின்படி வழங்கப்பட்ட அதிகாரங்களையும் மற்றும் இதன்பொருட்டு அதனை இயல்விக்கும் அனைத்துப் பிற அதிகாரங்களையும் செலுத்தி தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் இதன் மூலம் பின்வரும் ஒழுங்குமுறை விதிகளை உண்டாக்குகிறது.

ஒழுங்குமுறை விதிகள்

1. குறுந்தலைப்பு மற்றும் தொடக்கம்

1.1 இந்த ஒழுங்குமுறை விதிகள் 2021ஆம் ஆண்டு தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணைய (மின்கட்டமைப்புடன் இணைக்கப்படக் கூடிய சூரிய சக்தி ஒளி வோல்ட் (PV) மின்உற்பத்தி அமைப்பு முறைகள்) (GISS) ஒழுங்குமுறை விதிகள் என்று அழைக்கப்பெறும்.

1.2 இந்த ஒழுங்குமுறை விதிகள், தமிழ்நாடு மாநிலம் முழுவதும் பரவி நிற்கும்.

1.3 இந்த ஒழுங்குமுறை விதிகள், 1 மெகாவாட்டிற்கு குறைவான மின்சுமைக்குப் பொருந்தக் கூடியதாகும்.

1.4 இந்த ஒழுங்குமுறை விதிகள் தகுதியுடைய மின்நுகர்வோர், மின்நுகர்வும் மின்உற்பத்தியும் செய்பவர் மற்றும் மின்உற்பத்தியாளர்கள் ஆகியோருக்குப் பொருந்தக் கூடியதாகும்.

1.5 இந்த ஒழுங்குமுறை விதிகள், தமிழ்நாடு அரசிதழில் வெளியிடப்பட்ட நாளிலிருந்து நடைமுறைக்கு வரும்.

2. வரையறைகள்:

2.1 இந்த ஒழுங்குமுறை விதிகளில் சூழ்நிலை வேறுபொருள் குறித்தாலன்றி:-

(a) "சட்டம்" என்பது, அவ்வப்போது திருத்தம் செய்யப்பட்டவாறான, 2003ஆம் ஆண்டு மின்சாரச் சட்டம் (36/2003) என்று பொருள்படும்;

(b) "உடன்படிக்கை" என்பது, மின்பகிர்மான உரிமதாரர் மற்றும் மின்நுகர்வோர்/மின்நுகர்வும் மின்உற்பத்தியும் செய்பவர்/ மின்உற்பத்தியாளர் ஆகியோருக்கிடையே எழுதிக் கொடுக்கப்படும் மின்னிணைப்பு உடன்படிக்கை என்று பொருள்படும்;

(c) "மின் வழங்கல் பகுதி" என்பது, எந்தப்பகுதிக்குள் உரிமதாரர் அப்போதைக்கு, தன்னுடைய உரிமத்தின் மூலம் மின்சாரம் அதிகாரமளிக்கப்பட்டிருக்கிறதோ அந்த நிலவியற்பகுதி என்று பொருள்படும்;

(d) "பட்டியல் காலவட்டம்" அல்லது "பட்டியல் கால அளவு" என்பது சம்பந்தப்பட்ட மின் பகிர்மான உரிமதாரரால் மின் கட்டணம் வசூலிக்கப்படும் கால அளவு என்று பொருள்படும்.

(e) "சரிபார்த்தல் மின்னளவி" என்பது, நிகர மின்னளவி அல்லது சூரிய சக்தி உற்பத்தி மின்னளவி அளவிடத் தவறுகையில், பயன்படுத்தப்பட்ட மின்னளவினை கணக்கிடுவதற்கும், பட்டியலிடுவதற்கும் பயன்படுத்தப்படும் மின்னளவி எனப்படும்.

(f) "ஆணையம்" என்பது, இந்தச் சட்டத்தின்படி அமைக்கப்பட்ட தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் என்று பொருள்படும்;

July 27, 2022] TAMIL NADU GOVERNMENT GAZETTE 79

(g) "ஒப்பந்தப்படியான மின்சுமை" அல்லது "ஒப்புதல் அளிக்கப்பட்ட மின்சுமை" என்பது, மின் நுகர்வோருக்கும் மின்சாரம் வழங்கும் தொழிலில் ஈடுபட்டுள்ள உரிமதாரருக்குமிடையே செய்யப்பட்டுள்ள உடன்படிக்கையில் குறித்துரைக்கப்பட்ட மின்சுமை என்று பொருள்படும்;

(h) "ஒப்பந்தப்படியான மின்தேவை" என்பது, மின்நுகர்வோருக்கும் மின்சாரம் வழங்கும் தொழிலில் ஈடுபட்டுள்ள உரிமதாரருக்குமிடையே செய்யப்பட்டுள்ள உடன்படிக்கையில் குறித்துரைக்கப்பட்ட மின்தேவை என்று பொருள்படும்;

(i) "ஒப்பந்தப்படியான மின்திறன்" என்பது உரிமதாரரால் ஒப்புதல் அளிக்கப்பட்டு உரிமதாரர் மற்றும் தகுதியுடைய மின்நுகர்வோர்/ மின்உற்பத்தியாளர் ஆகியோரிடையே எழுதிக்கொடுக்கப்பட்ட ஒப்பந்தப்படியான உடன்படிக்கையில் உள்ளடக்கப்பட்ட சூரிய சக்தி மின் நிலையத்தின் மின்திறன் (GISS மின்திறன்) என்று பொருள்படும்;

(j) "நாட்கள்" என்பது முழுமையான பணிநாட்கள் என்று பொருள்படும்;

(k) "மின்பகிர்மான உரிமதாரர்" அல்லது "உரிமதாரர்" என்பது இந்தச் சட்டத்தின் 14ஆம் பிரிவின்படி, உரிமம் வழங்கப்பட்ட நபர், தம்முடைய மின் வழங்கல் பகுதியில் மின் நுகர்வோருக்கு மின்சாரம் வழங்குவதற்காக மின் பகிர்மான அமைப்பு முறையை இயக்கவும், பராமரித்து வரவும் அதிகாரம் அளிக்கப்பட்டவர் என்று பொருள்படும்;

(l) "மின் வழங்கல் விதித்தொகுப்பு" என்பது, 2004 ஆம் ஆண்டு தமிழ்நாடு மின்வழங்கல் விதித்தொகுப்பு மற்றும் அதன் பிந்திய திருத்தங்கள் என்று பொருள்படும்;

(m) "தகுதியுடைய மின்நுகர்வோர்" என்பது, ஒழுங்குமுறை விதிகளில் குறித்துரைக்கப்பட்ட மின்திறன் / மின்வகை/ மின்னழுத்த மட்டம் ஆகிய நிபந்தனைகளுக்கு உட்பட்டு 1 மெகா வாட்டிற்கும் குறைவான மின்திறனுடைய மின்கட்டமைப்புடன் இணைக்கப்படக் கூடிய சூரிய சக்தி ஒளி வோல்ட் (PV) மின்உற்பத்தி அமைப்பு முறையை பயன்படுத்தும் அல்லது பயன்படுத்துவதற்கு கருதும் மின்பகிர்மான உரிமதாரரின் மின்வழங்கல் பகுதியிலுள்ள மின்நுகர்வோர் என்று பொருள்படும்;

(n) "பொதுப்படையான மின்கட்டணம்" என்பது, அவ்வப்போது திருத்தம் செய்யப்பட்டவறான 2008ஆம் ஆண்டு தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணைய (புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி ஆதாரங்களிலிருந்து கொள்முதல் செய்யப்படும் மின் திறன்) ஒழுங்குமுறை விதிகளுக்கிணங்க மாறுபட்ட புதுப்பிக்கத்தக்க எரிசக்தி ஆதாரங்களிலிருந்து செய்யப்படும் மின்உற்பத்திக்காக ஆணையத்தினால் ஒப்புதலளிக்கப்பட்ட அல்லது ஏற்றுக் கொள்ளப்பட்ட பொதுப்படையான மின்கட்டணம் என்று பொருள்படும்;

(o) "மின்உற்பத்தியாளர்" என்பது, மின்உற்பத்தி நிலையத்தைச் சொந்தமாகக் கொண்டிருக்கிற அல்லது இயக்குகிற அல்லது அதனைப் பராமரித்து வருகிற நபர் எவரும் அல்லது நிறுவனம் அல்லது கூட்டமைப்பு அல்லது கழகம் அல்லது தனி நபர்களின் குழுமம் கூட்டு நிறுவனமாகப் பதிவு செய்யப்பட்டிருந்தாலும் அல்லது இல்லாவிட்டாலும் அல்லது புனைவு சட்ட நபர் என்று பொருள்படும்;

(p) "மின்உற்பத்தி" என்பது, எந்த வளாகத்திற்கும் மின்சாரம் வழங்குவதற்காக அல்லது அவ்வாறு வழங்குவதை இயல்விப்பதற்காக மின்உற்பத்தி நிலையத்திலிருந்து மின்சாரம் உற்பத்தி செய்தல் என்று பொருள்படும்;

(q) "மின்உற்பத்தி நிலையம்" அல்லது "நிலையம்" என்பது கட்டிடம் மற்றும் இயந்திர நிலையம் எதிலும் மின்மாற்றி இணைப்பமைப்பு, இணைப்பி முற்றம், கம்பிவடங்கள் அல்லது அதனை சேர்ந்ததாக இருக்கும் பிற சாதனம் ஏதேனுமிருப்பின் அதனை மற்றும் அந்த மனையிடத்தை அந்த நோக்கத்திற்காக பயன்படுத்துதல் உள்ளடங்கலாக மின்சாரம் உற்பத்தி செய்வதற்கான நிலையம் என்று பொருள்படும்;

(r) "நிதியாண்டு" அல்லது "ஆண்டு" என்பது ஆங்கில ஆண்டின் ஏப்ரல் (1) முதல் நாளன்று, தொடங்கி அடுத்த ஆண்டின் மார்ச் (31) முப்பத்து ஒன்றாம் நாளன்று முடிவடைகிற கால அளவு என்று பொருள்படும்;

(s) "ஜிஐஎஸ்எஸ்" (GISS) என்பது மின் நுகர்வோர் / மின்நுகர்வும் உற்பத்தியும் செய்பவர் / மின்உற்பத்தியாளர் ஆகியோர்களின் கூரை அல்லது நிலத்தின் மீது நிறுவப்பட்ட, சூரிய ஒளியை நேரடியாக மின்சாரமாக மாற்றுவதற்கான, மின்கட்டமைப்புடன் இணைக்கப்படக் கூடிய சூரிய சக்தி ஒளி வோல்ட் (PV) மின்உற்பத்தி அமைப்பாகும்;

(t) "முழு மின்னளவீடு" என்பது மின்நுகர்வும் மின்உற்பத்தியும் செய்பவரின் மின்கட்டமைப்புடன் இணைந்து செயற்படும் சூரிய சக்தி ஒளி வோல்ட் மின்கல அமைப்பு முறையிலிருந்து உற்பத்தி செய்யும் மொத்த சூரிய சக்தியையும் மற்றும் மின்நுகர்வும் மின்உற்பத்தியும் செய்பவரால் நுகரப்படும் மொத்த மின்சக்தியையும் பட்டியலிடப்படும் நோக்கத்திற்காக உரிய மின்னளவிடும் ஏற்பாடுகளின் மூலம் தனித்தனியாக கணக்கிடப்படும் முறையாகும். மின்நுகர்வும் மின்உற்பத்தியும் செய்பவரால் நுகரப்பட்ட மொத்த மின்சக்தியானது பொருந்தக்கூடிய சில்லறை மின்கட்டணத்தில் கணக்கிடப்படும், உற்பத்தி செய்யப்படும் மின்சாரம் ஆணையத்தினால் நிர்ணயிக்கப்பட்ட மின்னூட்ட மின்கட்டணத்தில் கணக்கிடப்படும்;

80 [Part VI—Sec. 2 TAMIL NADU GOVERNMENT GAZETTE

(u) "இடையிணைப்பு முனை" என்பது, மின்னளவியின் வெளிச் செல்லும் முனையங்கள்/மின்பகிர்மான உரிமதாரரின் தகுதியுடைய மின்நுகர்வோரின் வளாகத்தில் பொருத்தப்பட்ட உருகிகளையும் (cut-outs) / இணைப்பமைப்புடன் ஜிஐஎஸ்எஸ் இன் இடைத்தளம் என்று பொருள்படும்;

தகுதியுடைய மின்நுகர்வோர் உயர் அழுத்த (HT) இணைக்கப்பட்டுள்ள நேர்வில், இடையிணைப்பு முனையம், அத்தகைய மின்நுகர்வோர் கருவிக்கு முன் அமைக்கப்பட்ட மின்பகிர்மான உரிமதாரரின் மின்னளவி பெட்டகத்தின் வெளிச் செல்லும் முனையங்கள் ஜிஐஎஸ்எஸ் இன் இடைத்தளம் என்று பொருள்படும்;

(v) "kWp" என்பது கிலோ வாட் பீக், "MWp" என்பது மெகா வாட் பீக் என்று பொருள்படும்.

(w) "நிகர மின்னளவி" அல்லது "இருதிசை மின்னளவி" என்பது, மின்சாரத்தின் உள்வருகை மற்றும் வெளிச்செல்கை இரண்டையும் பதிவு செய்ய திறனுள்ள மின்சக்தி மின்னளவி என்று பொருள்படும்;

(x) "நிகர மின்னளவீடு" என்பது மின்நுகர்வும் மின்உற்பத்தி செய்பவரின் மின்கட்டமைப்பிலிருந்து யூனிட்டுகளில் (kWh) அனுப்பப்படும் மின்சக்தியை மின்கட்டமைப்பிலிருந்து இறக்குமதி செய்யப்படும் யூனிட்டுகளில் இருந்து கழித்து மீதமுள்ள இறக்குமதி அல்லது ஏற்றுமதி செய்யப்பட்ட யூனிட்டை கணக்கிட்டு வரவு வைக்கவோ அல்லது கணக்கீட்டில் வைக்கவோ செய்யும் செயலமைப்பு திட்டமாகும். இதை மின்வழங்கல் முனையத்தில் ஒற்றை இருதிசை மின்னளவியைப் பயன்படுத்தி பொருந்தக்கூடிய சில்லறை மின்கட்டணத்தின் அடிப்படையில் மின்பகிர்மான உரிமதாரரால் சம்பந்தப்பட்ட சில்லரை மின்கட்டண வீதத்தில் கணக்கிடப்படும்;

(y) "வலையமைப்பு கட்டணங்கள்" என்பது மின்கட்டமைப்பின்றி சுயமாக செயல்பட முடியாதபடியால், அதனைச் சார்ந்து இணையாக இயங்கக்கூடிய புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைப்பிற்கு தேவைப்படும் மின்கட்டமைப்பு ஆதரவு அளித்தல் உள்ளிட்ட மின்கட்டமைப்பை உருவாக்குதல், மேம்படுத்துதல், அதன் செயல்பாடுகளை பராமரித்தல் ஆகியவற்றிற்கும் மற்றும் அனைத்து உள்ளடக்கிய செயல்பாடுகளுக்கும் உரிமதாரரால் செய்யக் கூடிய அனைத்து செலவுகளையும் குறிக்கும்;

(z) "நிகர பட்டியலிடல்" அல்லது "நிகர மின்னூட்டம்" என்பது, மின்கட்டமைப்புடன் இணைக்கப்படக் கூடிய சூரியசக்தி ஒளி வோல்ட் மின்உற்பத்தி அமைப்பின் மின் வழங்கல் புள்ளியில் உபயோகப்படும் ஒற்றை இருதிசை மின்னளவியில் இரண்டு மாறுபட்ட மின் கட்டணங்களில் மதிப்பிடப்படுதல்; அவையாவன:

(i) இறக்குமதி செய்யப்பட்ட மின்சக்தியின் பண மதிப்பீடு பொருந்தக்கூடிய சில்லறை மின்கட்டணத்தின் அடிப்படையில் இருக்கும்;

(ii) ஏற்றுமதி செய்யப்பட்ட சூரிய மின்சக்தியின் பணமதிப்பீடு, ஆணையத்தினால் நிருணயிக்கப்படும் மின்னூட்ட மின்கட்டணத்தின் அடிப்படையில் இருக்கும்;

(iii) இறக்குமதி செய்யப்பட்ட மின்சக்தியின் பண மதிப்பீட்டிலிருந்து ஏற்றுமதி செய்யப்பட்ட மின்சக்தியின் பண மதிப்பீடு கழிக்கப்பட்டு வந்தடைந்த நிகரத் தொகைக்கு பட்டியலிடப்படும் (அல்லது வரவு வைக்கப்படும்/ எடுத்துச் செல்லப்படும்).

(aa) "கடமையாக்கப்பட்ட நிறுவனம்" என்பது, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி கொள்முதல் கடப்பாடு ஒழுங்குமுறை விதிகளில் ஆணையத்தினால் குறித்துரைக்கப்பட்டவாறு புதுப்பிக்கத்தக்க கொள்முதல் கடப்பாட்டினை நிறைவேற்றுவதற்கு வேண்டுறுத்தப்பட்ட நிறுவனம் என்று பொருள்படும்.

(ab) "மின்நுகர்வும் மின்உற்பத்தியும் செய்பவர்" என்பது மின்கட்டமைப்பிலிருந்து மின்சாரத்தை நுகருகிறவரும் மற்றும் நுகரப்படும் அதே மின்வழங்கல் புள்ளியில் மின்பகிர்மான உரிமதாரர் மின்கட்டமைப்பிற்கு மின்சாரத்தை உட்செலுத்துகிற நபர் என்று பொருள்படும்.

(ac) "வளாகம்" என்பது, பொருள் தந்து உள்ளடக்குவதாவது, மின்பகிர்மான உரிமதாரரால் மின்வழங்கலுக்காக தனிப்பட்ட மின்னளவி வழங்கப்பட்டுள்ள கூரையின் மீது அல்லது நிலத்தின் கட்டிடத்தின் பகுதி எதிலும் அல்லது உள் கட்டமைப்பில் அல்லது ஒரு பகுதி அல்லது அதன் ஒற்றிணைந்த பகுதி ஆகும்.

(ad) "புதுபிக்கத்தக்க எரிசக்தி உற்பத்திக்கான மின்னளவி" என்பது, சூரிய சக்தி மின்உற்பத்தி அமைப்பு முறையினால் மின்உற்பத்தி செய்யப்படும் முனையத்தில், கணக்கிடும் மற்றும் தீர்வு செய்யும் பொருட்டு நிறுவப்படும் ஒரே திசையில் பதிவு செய்யும் மின்சக்தி மின்னளவி என்று பொருள்படும்;

வரம்புரையாக: கலப்பினம் அல்லது ஒன்றிணைந்த ஆதாரங்கள் இருக்கும் பட்சத்தில் தனிப்பட்ட புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மின்உற்பத்தி மின்னளவி ஒவ்வொரு ஆதாரத்திலும் நிறுவப்படுதல் வேண்டும்.

(ae) "புதுப்பிக்கத்தக்க எரிசக்தி சான்றிதழ்" என்பது, 2010ஆம் ஆண்டு தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணைய (புதுபிக்கத்தக்க கொள்முதல் கடப்பாடு) ஒழுங்குமுறை விதிகளில் பொருள்வரையறை செய்யப்பட்டுள்ளவாறானதாகும்." (af) "தீர்வுக் காலம்" என்பது, ஆங்கில ஆண்டின் ஏப்ரல் முதல் நாளிலிருந்து தொடங்கி பின்வரும் ஆங்கில ஆண்டின் மார்ச் முப்பத்து ஒன்றாம் நாளன்று முடிவடையும் காலம் என்று பொருள்படும்;

July 27, 2022] TAMIL NADU GOVERNMENT GAZETTE 81

வரம்புரையாக: புதியதாகத் தொடங்கப்பட்ட சூரிய சக்தி அமைப்பிற்கு முதலாம் தீர்வுக்காலம் என்பது தொடங்கப்பட்ட தேதியிலிருந்து அடுத்த ஆண்டின் மார்ச் மாதம் வரை ஆகும்.

இந்த ஒழுங்குமுறை விதிகளில் குறிப்பாக பொருள்வரையறை செய்யப்படாத வார்த்தைகளும் சொற்தொடர்களும் சட்டத்தில் பொருள்வரை செய்யப்பட்டு இருக்குமேயானால் இந்தச் சட்டத்தில் அவற்றிற்குக் குறித்தளிக்கப்பட்ட அதே பொருளினை உடையனவாகும்; மற்றும் இந்த சட்டத்தில் பொருள்வரையறை செய்யப்படவில்லை எனில், மின்தொழிலுக்குப் பொருந்தக்கூடிய நாடாளுமன்ற அல்லது மாநிலச் சட்டமன்றச் சட்டம் எதிலும் அவற்றிற்கு குறித்தளிக்கப்பட்ட பொருளினை உடையனவாகும்.

3. நோக்கம் மற்றும் பொருந்துகை

3.1 இந்த ஒழுங்குமுறை விதிகள், மின்பகிர்மான உரிமதாரர் மற்றும் தன்னுடைய மின்வழங்கல் பகுதியில் தம்மிடமிருந்து மின்வழங்கலைப் பயன்படுத்துகிற மின்பகிர்மான உரிமதாரரின் மின்நுகர்வோர் மற்றும் தமிழ்நாடு மாநிலத்திலுள்ள மின்கட்டமைப்புடன் இணைக்கப்படக் கூடிய சூரிய சக்தி ஒளி வோல்ட் மின்கல மின்நிலையத்தை (GISS) அமைக்கிற மின்உற்பத்தியாளர் ஆகியோருக்குப் பொருந்தும்;

3.2 இந்த ஒழுங்குமுறை விதிகள், இந்த ஒழுங்குமுறை விதிகள் அறிவிக்கை செய்யப்பட்ட பின்பு அதற்கான விண்ணப்பங்கள் தாக்கல் செய்யப்படக்கூடிய மின்கட்டமைப்புடன் இணைக்கப்படக் கூடிய சூரிய சக்தி (P.V.) ஒளி வோல்ட் மின்கல மின்உற்பத்தி நிலையம் அனைத்திற்கும் பொருந்தக்கூடியதாகும்;

3.3 தகுதியுடைய மின்நுகர்வோர் மற்றும் மின்உற்பத்தியாளர், (GISS) மின் கட்டமைப்புடன் இணைக்கப்படக் கூடிய சூரியசக்தி (P.V.) ஒளிவோல்ட் மின்கல மின்உற்பத்தி அமைப்பு முறையை நிகர மின்னளவீடு அல்லது நிகர பட்டியலிடல் அல்லது மொத்த மின்னளவீடு ஏற்பாட்டின் அடிப்படையில் நிறுவலாம்.-

(அ) இந்த ஒழுங்குமுறை விதிகளின் கீழ் பொருள்வரை செய்யப்பட்டவாறான அனுமதிக்கத்தக்க வரையளவிட்ட மின்திறன் அளவிற்குள் இருத்தல் வேண்டும்.

(ஆ) தொடர்புடைய விதித் தொகுப்புகள் மற்றும் ஒழுங்குமுறை விதிகள் அனைத்திற்கும் இணங்க, மின்பகிர்மான உரிமதாரரின் மின்னமைப்பிற்கு இணையாகவும் பாதுகாப்பாகவும் இடையிணைப்பு செய்தல் மற்றும் இயக்குதல் வேண்டும்.

4. தகுதியுடைய மின்நுகர்வோர், மின்உற்பத்தியாளர்கள் மற்றும் தனிப்பட்ட திட்ட மின்திறன்.

4.1 GISS (மின்கட்டமைப்புடன் இணைக்கப்படக் கூடிய சூரிய சக்தி ஒளி வோல்ட் மின்உற்பத்தி) அமைப்பின் திறன் மாற்று முறை (AC) மின்சார வெளிப்பாடு மின்திறனை குறிக்கும் மற்றும் மொத்த மின்உற்பத்தி மின்னளவியில் பதிவு செய்யப்பட்ட மின்தேவையின் மூலம் கணக்கிடப்படும்.

4.2 நிகர மின்னளவீடு: வீட்டு உபயோக மின்நுகர்வோர் அனைவரும், மின்னழுத்த அளவைப் பொருட்படுத்தாமலேயே அவர்களுடைய மின்னிணைப்பின்ஒப்புதலளிக்கப்பட்ட மின்சுமை அளவு / ஒப்பந்தப்படியான மின்தேவையளவு வரையிலான நிகர மின்னளவி செயலமைவுத் திட்டத்திற்கு தகுதியுடையவர்களாவர்.

(i) வீட்டு உபயோக மின்நுகர்வோர் கூடுதல் தெரிவாக நிகர மின்னூட்ட செயலமைவுத் திட்டத்தை தேர்வு செய்வதற்கு உரிமையுடையோராவர்.

(ii) சூரியசக்தி நிகர மின்னூட்ட வசதி வழங்கப்பட்டுள்ள வீட்டு உபயோக மின்நுகர்வோர் சூரிய சக்தி நிகர மின்னளவீட்டு செயலமைவுத் திட்டத்திற்கு மாறுவதற்கு தெரிவுரிமையுடையவராவர்.

4.3 நிகர பட்டியலிடல் அல்லது நிகர மின்னூட்டம்: (குடிசை மற்றும் வேளாண் அல்லாத) மின்நுகர்வோர் வகையினர் அனைவரும், மின்சுமை மின்கட்டணம், மின்னழுத்த அளவு ஆகியவற்றைப் பொருட்படுத்தாமலேயே, தம்முடைய மின்னிணைப்பின் ஒப்புதலளிக்கப்பட்ட மின்சுமை / ஒப்பந்தப்படிபான மின்தேவை அளவு அல்லது 999 கிலோவாட், இதில் எது குறைவானதோ, அது வரை நிகர பட்டியலிடல் அல்லது நிகர மின்னூட்ட செயலமைவுத் திட்டத்திற்கு தகுதியுடையவராவர்.

4.4 மொத்த – மின்னளவீடு 150 கிலோ வாட் வரையிலான தாழ்வழுத்த வகையினர் தவிர அனைத்து வகையான இருந்துவரும் மற்றும் புதிய மின்நுகர்வோர், மற்றும் மின்உற்பத்தியாளர்கள் ஆகியோரின் மின்கட்டண வீதத்தைப் பொருட்படுத்தாமலேயே, மொத்த மின்னளவீட்டு செயலமைவுத் திட்டத்திற்கு தகுதியுடையவர்களாவர். மொத்த மின்னளவீட்டு செயலமைவுத் திட்டத்தின்படி அமைக்கப்படும் சூரிய சக்தி அமைப்பு முறையின் குறைந்தபட்ச அளவாவது 151 கிலோ வாட் முதல் அதிகபட்ச மின்திறன் 999 கிலோ வாட்டுக்குள் இருக்கும்.

(i) ஒரு வளாகத்தில் அல்லது திறந்த வெளியில் சூரியசக்தி மின்உற்பத்தி நிலையத்தை GISS அடிப்படையில் அமைப்பதற்கு விரும்புகிற மற்றும் உரிமதாரருக்கு மொத்தம் உற்பத்தி செய்யப்பட்ட மின்சக்தியை விற்கிற புதிய மின்நுகர்வோர் அல்லது மின்உற்பத்தியாளர்கள் 999 கிலோ வாட் அதிகபட்ச மின்திறன்வரை மொத்த மின்னளவீட்டு செயலமைவுத் திட்டத்திற்கு தகுதியுடையவர்களாவர். அத்தகைய நேர்வுகளில், ஒப்புதளிக்கப்பட்ட மின்சுமை/ ஒப்பந்தப்படியான மின்தேவையை கருதலாகாது. இரவு நேரங்களில் பாதுகாப்பு போன்ற காரணங்களுக்காக மின்கட்டமைப்பிலிருந்து மின்சக்தி தேவைப்படுமானால், அதை உரிய சில்லறை மின்கட்டணத்தின் கீழ் தனிப்பட்டவாறு கணக்கிடப்படுவதற்கும் பட்டியலிடப்படுவதற்கும் தகுதியுடையதாகும்.

82 [Part VI—Sec. 2 TAMIL NADU GOVERNMENT GAZETTE

வரம்புரையாக: தகுதியுடைய மின்நுகர்வோர் வளாகத்தில் GISS மொத்த மின்னளவீட்டை நிறுவி மின்உற்பத்தி நிலையத்திலிருந்து உற்பத்தி செய்யப்பட்ட மொத்த மின்சாரத்தை உரிமதாரரின் மின்கட்டமைப்பிற்கு உட்செலுத்த விரும்புகிற மின்நுகர்வோர் அருகிலுள்ள உயர் அழுத்த வலையமைப்பிற்கு மின்சாரத்தை வெளியேற்றுவதற்காக தனிப்பட்ட மின்னிணைப்பு மின்தொடரை பயன்படுத்துதல் வேண்டும். கட்டிடம் மற்றும் உயர்த்து மின்மாற்றி, இணைப்பமைப்பு, இணைப்பி முற்றம், மின்வடங்கள் அல்லது பிற அதனைச் சேர்ந்துள்ள சாதனங்களுடன் கூடிய மின்நிலையம் ஏதேனுமிருப்பின், அது உள்ளடங்கலாக, அதே மின்னழுத்தமுடைய அருகிலுள்ள உயர் அழுத்த வலையமைப்பிற்கு மின்சாரத்தை வெளியேற்றுவதற்காக அத்தகைய மின்னிணைப்பு மின்தொடர் அந்த நோக்கத்திற்காக பயன்படுத்துகிற தகுதியுடைய மின்நுகர்வோர் தம்முடைய சொந்த செலவில் அதனை அமைத்துப் பராமரிக்க வேண்டும்.

(ii) தகுதியுடைய மின்நுகர்வோர் / மின்உற்பத்தியாளர், அவசரநிலை காலங்களின்போது பாதுகாப்பு மற்றும் மின்கட்டமைப்பின் நிலைப்பாட்டினை உறுதிசெய்வதற்காக GISS நிலையத்திற்குள் உள்வரும் இணைப்பி மற்றும் பிரிகலனை தொலைவிலிருந்து கட்டுப்பாடு செய்வதற்கு உரிமதாரருக்கு உதவுதல் வேண்டும். தகுதியுடைய மின்நுகர்வோர் மின்உற்பத்தியாளருக்கு தானியங்கி மின்பயனீட்டுக் கணக்கீடு வசதியையும் ஏற்பாடு செய்தல் வேண்டும்.

4.5 அனைத்துவகை சூரிய மின்சக்தி நிலைய மின்திறன் என்பது மாற்றுமுறை மின்சார (AC) பக்கமுள்ள மின்திறன் வெளிப்பாடை குறிக்கும்.

4.6 ஒப்புதலளிக்கப்பட்ட GISS மின்நிலைய மின்திறன் (AC வெளியேற்ற திறன்) அளவிற்கு நேரடி மின்னோட்ட (DC panel) பலகைகளின் திறன்களை கூட்டுவது தகுதியுடைய மின்நுகர்வோர் / மின்நுகர்வும் மின்உற்பத்தியும் செய்பவர் / மின்உற்பத்தியாளரின் விருப்பத்திற்கு விடப்படும்; மற்றும் குறிப்பிட்ட பட்டியலிடல் காலவட்டத்தில் அடைந்து மொத்த மின்உற்பத்தி மின்னளவியல் பதிவான மாறுதிசை மின்னோட்ட மின்தேவை கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும். 10 கிலோ வாட்டிற்கு குறைவான அமைப்பில் அடையப் பெற்ற மின்தேவை இன்வெர்ட்டர் மூலமாக கணிக்கப்படும்.

4.7 உள்ளூர் மின்பகிர்மான உரிமதாரரின் மின்நுகர்வோராகவும் மற்றும் கூரை மீது அல்லது மொட்டை மாடியில் அல்லது கட்டிடத்தில் அல்லது உள்கட்டமைப்பின் அல்லது நிலத்தின் திறந்த வெளியில் அல்லது அதன் பகுதியில் அல்லது அதன் கலவையில், சூரியமின்சக்தி ஒளி வோல்ட் அமைப்பு முறையை நிறுவுவதற்கு உத்தேசித்திருத்தல் உள்ளலடங்கலாக வளாகத்தை சொந்தமாகக் கொண்டிருக்கிற அல்லது அதன் சட்டப்படியான உடைமையை வைத்திருக்கிறவர் விண்ணப்பதாரராக இருப்பார். வாடகை அல்லது குத்தகை உடன்படிக்கையின் விளைவாக உடைமையை வைத்திருத்தலும் சட்டப்படியான உடைமையை வைத்திருத்தல் என்ற அர்த்தத்தில் உள்ளடங்கும்.

4.8 இருந்துவரும் மின்நுகர்வும் மின்உற்பத்தியும் செய்பவரின் அனைத்து வகையினர் அல்லது மின்உற்பத்தியாளர் சம்பந்தப்பட்ட GISS இன் கூடுதல் மின் சுமைக்கு, அதாவது நிகர மின்சுமையானது கூடுதல் சுமைக்குப் பின்பு இந்த ஒழுங்குமுறை விதிகளில் குறிப்பிடப்பட்ட உச்சவரம்பு மின்சுமைக்கு மேற்படுதல் ஆகாது என்ற நிபந்தனைக்கு உட்பட்டு தகுதியுடையவராவார்.

4.9 மின்பகிர்மான உரிமதாரருக்கு கொடுக்கப்பட வேண்டிய நிலுவைத் தொகையுடைய / இன்னும் கொடுக்கபடாதிருக்கிற மின்நுகர்வோர் இந்த ஒழுங்குமுறை விதி வகுப்புகளின் கீழ் தகுதியுடையவராகமாட்டார்.

5. மின்னளவீட்டிற்கான ஏற்பாடு

5.1 நிகர மின்னளவீடு செயலமைவு முறை மற்றும் நிகர பட்டியலிடல் அல்லது மின்னூட்ட செயலமைவு முறை:

நிகர மின்னளவீடு அல்லது நிகரபட்டியலிடல் அல்லது மின்னூட்ட செயலமைவு முறையின்படி தகுதியுடைய மின்நுகர்வோர், தம்முடைய வளாகத்தில் GISSலிருந்து உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தை பயன்படுத்திக் கொள்வதற்கும் மற்றும் உபரி மின்சாரத்தை இடையிணைப்பு முனையத்தில் உரிமதாரரின் மின்பகிர்மான அமைப்பிற்கு உட்செலுத்துவதற்கும் உரிமையுடையவராவார்;

சேவை மின்னிணைப்பு முனையத்தில், ஒரு இருதிசை மின்சார மின்னளவி உரிமதாரரின் மின்கட்டமைப்பிலிருந்து மின்சாரம் இறக்குமதி செய்யப்படும் மற்றும் உரிமதாரரின் மின்கட்டமைப்பிற்கு ஏற்றுமதி செய்யப்படும் மின்சாரத்தை பதிவு செய்ய அமைக்கப்படும். இந்த மின்னளவி இலக்கமுறை நான்கு கால்வட்ட மின்னளவினை பதிவு செய்வதுடன், இருதிசை மின்சக்தியை அளவிடுதலின் மூலம் இறக்குமதி செய்யப்பட்ட மற்றும் ஏற்றுமதி செய்யப்பட்ட செயலாற்ற மின்சக்தி இரண்டினுடைய மற்றும் அளவு எடுத்தல் தொடர்புடைய அளவுருக்களையும் காட்சி படுத்துமாறு வடிவமைக்கப்படும். நாள் நேரம் (TOD-Time of Day) கட்டண முறை எல்லைக்குள் தகுதியுடைய மின்நுகர்வோர் இருப்பாரானால், அவருக்கு அமைக்கப்படும் இருதிசை மின்னளவி குறைந்தபட்சம் நான்கு மின் ஏற்றுமதி நேர பதிவேடுகள் மற்றும் நான்கு மின் இறக்குமதி நேர பதிவேடுகளுடன் கூடிய TOD பதிவேடுகள் அடங்கியவாறு செயலமைவு முறை திட்டமிடப்பட்டு இருக்கும்.

5.2 மொத்த-மின்னளவீடு செயலமைவு முறை திட்டம்:

மொத்த சூரிய மின்சக்தி உற்பத்தியை பதிவு செய்வதற்கு புதுப்பிக்கத்தக்க மின்உற்பத்தி மின்னளவி அமைக்கப்படும். இந்த மின்னளவி, சூரிய ஒளி மின்கட்டமைப்பு இன்வெர்ட்டருக்கு பின்னால் அமைக்கப்படும். தகுதியுடைய மின் நுகர்வோர் அல்லது மின்உற்பத்தியாளர், TOD கட்டணப்பட்டியல் எல்லைக்குள் இருப்பாரானால், மின்சக்தி மின்னளவி, குறைந்தபட்சம் நான்கு மின் ஏற்றுமதி நேரப்பதிவேடுகளுடன் கூடிய TOD பதிவேடுகள் அடங்கியவாறு செயலமைவுJuly 27, 2022] TAMIL NADU GOVERNMENT GAZETTE 83 முறை திட்டமிடப்படுதல் வேண்டும். ஆணையத்தினால் அவ்வப்போது நிர்ணயிக்கப்படும் மின்னூட்ட கட்டணப் பட்டியலின்படி, உற்பத்தி செய்யப்படும் மொத்த சூரிய மின்சக்தி கணக்கீடு செய்யப்படும். மின்நுகர்வும் மின்உற்பத்தியும் செய்பவர் அல்லது மின்உற்பத்தியாளர் உரிமதாரரின் மின்கட்டமைப்பிலிருந்து நுகரப்படும் மின்சக்தி ஏதேனுமிருப்பின், பொருந்தக்கூடிய சில்லறை மின்கட்டணத்தின்படி தனியாக மின்னளவீடு செய்யப்பட்டு கணக்கிடப்படும்.

5.3 ஒரே மின்னிணைப்பின் கீழ் ஒன்றிற்கும் மேற்பட்ட GISS அலகுகள் இருக்கும் நேர்வில், ஒவ்வொரு இன்வெர்ட்டருக்கும்/ ஒவ்வொரு புள்ளிலுள்ள தொகுப்பு இன்வெர்ட்டர்களுக்கும் / இடம்/கட்டிட வளாகம் இவற்றிற்கு தனிப்பட்ட மின்உற்பத்தி மின்னளவி நிறுவப்படுதல் வேண்டும். ஒவ்வொரு மின்உற்பத்தி மின்னளவிகளின் மின்கணக்கீடுகள் தனித்தனியாக மதிப்பிடப்பட்டு அவை அனைத்தையும் ஒன்றாக ஒரே அளவாக கூட்டப்பட்டு (ஒவ்வொரு பட்டியலிடல் சுற்றின் போது பதிவாகும் மின்சக்தி மற்றும் மின்தேவை ஆகிய இரண்டும்) சம்பந்தப்பட்ட மின்னிணைப்பின் பட்டியலிடல் சுற்றில் மின்நுகர்வாகவும் மற்றும் மின்தேவையாகவும் பட்டியலிடல் நோக்கத்திற்காக கணக்கிடப்படும்.

5.4 மின்சுமை 10 கிலோ வாட் வரை ஒப்புதலளிக்கப்பட்ட நுகர்வோர்களுக்கு, சூரிய மின்சக்தி உற்பத்தியை மொத்த மின்உற்பத்தி மின்னளவியை அமைத்து கணக்கிடுவதற்கு பதிலாக நிருணயிக்கப்பட்ட CUFன் அடிப்படையிலோ அல்லது இன்வெர்ட்டரில் பதிவுசெய்யப்பட்ட மின்சக்தி அளவு இதில் எது குறைவோ அதன் அடிப்படையில் கணக்கிடப்படும். அத்தகைய முறையில் கணக்கிடப்படும் மின்சக்தி மற்றும் மின்தேவையின் மதிப்பீட்டில் பூசல் ஏதேனும் எழுமானால், குறையுற்றதரப்பினர், மின்உற்பத்தி தொடர்பான மின்னளவீடுகளின் உண்மையான மதிப்பீட்டை இயல்விக்கும் பொருட்டு தமது சொந்தச் செலவில் மின்உற்பத்தி மின்னளவியை நிறுவிக்கொள்ளலாம்.

5.5 10 கிலோ வாட்டிற்கு மேற்பட்ட மின்சுமையுடைய இருந்துவரும் மின்நுகர்வோர்களுக்கு, உரிமதாரர் தேவைப்படும் மின்திறன், வசதி மற்றும் விவரக்குறிப்பு கொண்ட மின்உற்பத்தி மின்னளவியை நிறுவும் பொருட்டு அறிவிப்பு வழங்க வேண்டும். அந்த மின்னளவி நிறுவப்படும் வரையில், மின்வலையமைப்பு கட்டணங்கள் வசூலிக்கும் நோக்கத்திற்காகவும் புதுபிக்கத்தக்க எரிசக்தி கொள்முதல் கடப்பாடு நோக்கத்திற்காகவும் CUF அடிப்படையில் மின்உற்பத்தி கணக்கிடப்படும். 10 கிலோ வாட்டிற்கு மேற்பட்ட புதிய விண்ணப்பதாரர்கள், GISS அமைப்பின் ஒரு பகுதியாக தமது சொந்த செலவில், மின்தேவை பதிவு செய்யும் வசதியுடன் கூடிய மின்உற்பத்தி மின்னளவியை நிறுவ வேண்டும். மொத்த மின்உற்பத்தி மின்னளவீடு முறைக்கு, நான்கு கால்வட்ட TOD கட்டண முறை மின்னளவியுடன் கூடிய தானியங்கி மின்னளவி கணக்கிடுதல் (AMR) வசதியுடன் விண்ணப்பதாரர் செலவில் நிறுவ வேண்டும். மின்உற்பத்தி மின்னளவியின் திறன் மற்றும் விவரக்குறிப்பீடுகள் உரிமதாரரால், ஒப்புதல் / அனுமதிக்கப்பட்ட மின்சுமை/ மின்னிணைப்பு ஆகியவையுடன் விண்ணப்பதாரருக்கு தெரிவிக்கப்படும்;

5.6 உயர் அழுத்த (HT) (11 கிலோ வோல்ட் மற்றும் அதற்கு மேலுள்ள) மின்நுகர்வோர், தம்முடைய தாழ்வழுத்த (LT) மின்னூற்று அமைப்பில் புதுப்பிக்கத்தக்க மின்சக்தி மின்உற்பத்தி செய்யும் அமைப்பு முறையை நிறுவி இணைக்கலாம்.

வரம்புரையாக: அத்தகைய நேர்வுகளில், இருதிசை மின்னளவி மின்நுகர்வோர் மின்மாற்றி உயர் அழுத்தப்பகுதியில் நிறுவப்படும்;

5.7 மின்சக்தி மின்னளவிகள் துல்லியமான 1.0 வகையினதாக இருத்தல் வேண்டும் மற்றும் பொருந்தக்கூடிய CEA (மத்திய மின்சார அதிகார அமைப்பு) மற்றும் BIS (இந்திய செந்தரங்கள் செயலகம்) செந்தரங்களுக்கு இணங்க வேண்டும்.

6. பட்டியலிடல் மற்றும் கணக்கிடுதல் செயல்முறை

6.1 நிகர மின்னளவு முறை:

6.2 சூரிய மின்சக்தி ஒளி வோல்ட் அமைப்பு முறையுடன் இணைக்கப்பட்ட மின்கட்டமைப்பிலிருந்து மின்கட்டமைப்பிற்கு ஏற்றுமதி செய்யப்பட்ட சூரிய மின்சக்தி, மின்கட்டமைப்பிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட மின்சக்தியிலிருந்து யூனிட்டுகளாக கழிக்கப்பட்டு நிகர ஏற்றுமதி அல்லது இறக்குமதி செய்யப்பட்ட மின்சக்தி கணக்கிடப்படும். நிகர இறக்குமதி அல்லது ஏற்றுமதி செய்யப்பட்ட மின்சக்தியானது சில்லறை மின்கட்டண முறை அடிப்படையில் கணக்கிடப்படும் அல்லது வரவு வைக்கப்படும் அல்லது எடுத்துச் செல்லப்படும். இந்தச் செய்முறையானது, தீர்வுக்கால அளவு முடிவடையும் வரையில் தொடரும். தீர்வுக்கால அளவு முடிவடைகையில், வரவிலுள்ள அதாவது மீதம் இருக்கக்கூடிய உபரி மின்உற்பத்தி யூனிட்டுகள் எவையேனுமிருப்பின், அவை காலாவதியாகிவிடும்.

6.3 தகுதியுடைய மின்நுகர்வோர், TOD நேர மின்கட்டண எல்லைக்குள் இருக்கும் நேர்வில், எந்த ஒரு ஒதுக்கப்பட்ட நேரத்திலும் நுகரப்பட்ட மின்னளவு அதாவது உச்ச நேரம், உச்சமில்லாத நேரம் முதலியவை ஒதுக்கப்பட்ட அதே நேர அளவில் உட்செலுத்தப்பட்ட மின்சக்தி அளவில் முதலில் ஈடு செய்யப்படும். பட்டியலிடல் சுற்றின் புதுப்பிக்கப்பட்ட பிறநேர அளவில் நுகரப்பட்ட மின்னளவு போக மிகையான உட்செலுத்துகை எதுவும் இருப்பின், மிகையான உட்செலுத்துகையானது உச்சநேரமல்லாத நேரங்களில் ஏற்பட்டிருந்தாற் போன்று கணக்கிடப்படும்.

6.4 நிகரபட்டியலிடல் அல்லது நிகர மின்னூட்டல்:

6.5 இறக்குமதி செய்யப்பட்ட மின்சக்தியின் பணமதிப்பு, பொருந்தக்கூடிய சில்லறை மின்கட்டண அடிப்படையில் பற்றுவைக்கப்படும். ஏற்றுமதி செய்யப்பட்ட மின்சக்தியின் பணமதிப்பு ஆணையத்தினால் நிர்ணயிக்கப்பட்ட மின்னூட்ட மின்கட்டண அடிப்படையில் வரவு வைக்கப்படும். ஏற்றுமதி செய்யப்பட்ட மின்சக்தியின் பண மதிப்பு, இறக்குமதி செய்யப்பட்ட மின்சக்தியின் பண மதிப்பிலிருந்து கழித்து வரப்பெற்ற நிகரத் தொகை பட்டியலிடப்படும். பட்டியலிடல்84 [Part VI—Sec. 2 TAMIL NADU GOVERNMENT GAZETTE சுற்று எதிலும் மொத்த வரவுத் தொகையானது பற்றுத் தொகைக்கு மேற்படுமானால், நிகர வரவுத்தொகை, அடுத்த பட்டியலிடல் சுற்றிற்கு எடுத்துச் செல்லப்படும். 12 மாதத் தீர்வுகால அளவின் முடிவில், மின்நுகர்வோர், நிகர வரவுத்தொகையின் பாக்கியை (ஏதேனுமிருப்பின்) பெறுவதற்கோ அல்லது அத்தகைய வரவுத்தொகை பாக்கியை அடுத்த தீர்வுக்கால நிலுவையுடன் சேர்ப்பதற்கோ விரும்பும் உரிமையுடையவராவார்.

6.6 மொத்த மின்னளவீடு:

6.7 தகுதியுடைய மின்நுகர்வோர் அல்லது மின் உற்பத்தியாளரில் எவர் உற்பத்தி செய்யப்பட்ட சூரிய மின்சக்தி அனைத்தையும் மின்பகிர்மான உரிமதாரருக்கு விற்றுவிடுவதற்கு தெரிவு செய்கிறாறோ அவருக்கு மொத்த மின்னளவீடு செய்ய அனுமதியளிக்கப்படும். மொத்த மின்னளவீடு திட்டத்தின்படி தகுதியுடைய மின் நுகர்வோர் அல்லது மின்உற்பத்தியாளர், GISS மின் நிலையத்திலிருந்து உற்பத்தி செய்யப்பட்ட முழுமையான மின் சக்தியை அருகிலுள்ள அதே மின்னழுத்தமுடைய உயர் அழுத்த (HT) மின்னமைப்பிற்குள் உட்செலுத்துதல் வேண்டும். ஏற்றுமதி செய்யப்பட்ட சூரிய சக்தியானது ஆணையத்தினால் நிருணயிக்கப்பட்ட மின்னூட்ட மின் கட்டணப்படி வரவு வைக்கப்படும். மின்உற்பத்தியாளர் / மின்நுகர்வோரின் மின் கட்டணப் பட்டியலில் ஒவ்வொரு பட்டியலிடல் சுற்றிலும் உரிய பணம் வரவுவைக்கப்படும், அல்லது மின்உற்பத்தியாளர் / மின்நிலைய உரிமையாளர் மின்நுகர்வோராக இல்லாதிருப்பாரானால், சூரிய மின்சக்தி உற்பத்தியாளர் /GISS மின்நிலைய உரிமையாளரிடம் செலுத்தப்படும்.

6.8 மின்வலையமைப்பு கட்டணங்கள் (Network charges), நிகர மின் அளவீட்டில் மற்றும் நிகர பட்டியலிடலில் அல்லது நிகர மின்னூட்ட செயலமைப்புத் திட்டத்தில் உற்பத்தி செய்யப்பட்ட மொத்த மின்சக்திக்கு விதிக்கதக்கதாகும். வலையமைப்பு கட்டணங்கள் மொத்த மின்னளவீடு செயலமைத் திட்டத்திற்கு பொருந்தாது.

6.9 பொது:

(i) அவ்வப்போது ஆணையத்தினால் நிருணயிக்கப்பட்ட பிற கட்டணங்கள் எதுவும், தகுதியுடைய மின்நுகர்வோருக்கு / மின்நுகர்வும் மின்உற்பத்தியும் செய்பவருக்கு / மின்உற்பத்தியாளருக்கு விதிக்கத் தக்கதாகும்.

6.10 மின்நுகர்வோரின் இருதிசை மின்னளவியில் அந்தந்த இறக்குமதி மற்றும் ஏற்றுமதி மற்றும் நிகரப்பதிவேட்டில் பதிவு செய்யப்பட்ட இறுக்குமதி, ஏற்றுமதி மற்றும் நிகர மின்சக்தி, மின்னலகுகள் மற்றும் தொடர்புடைய அளவுருக்கள் மின்கட்டணப்பட்டியலிடும் நோக்கத்திற்காக முறையே கணக்கிடப்படும். மொத்த மின்உற்பத்தி மின்னளவி அல்லது இன்வெர்ட்டரில் பதிவு செய்யப்பட்ட அதிகபட்ச மின்தேவை எதுவாக இருந்தாலும், பட்டியலிடல் சுற்று எதிலும் ஒப்புதலளிக்கப்பட்ட / ஒப்பந்தப்படியான GISS மின்திறனை மீறக்கூடாது. மின்தேவையானது, பட்டியலிடல் சுற்று எதிலும் ஒப்புதலளிக்கப்பட்ட வரம்பை மீறுமானால், மொத்த மின்னளவீடை பொருத்தமட்டில், ஒருங்கிணைப்புக்கால அளவின் (DIP – Demand Integration Period) போது இருதிசை மின்னளவியில் பதிவு செய்யப்பட்ட ஏற்றுமதி மின் யூனிட்டுகளின் அளவும், நிகர மின்னளவீடு மற்றும் நிகரப் பட்டியலிடலைப் பொறுத்தமட்டில், சம்பந்தப்பட்ட பட்டியலிடல் சுற்றில் ஒப்புதலளிக்கப்பட்ட வரம்பிற்கு மீறப்பட்ட மின்தேவை பகுதியின் விகிதாச்சார மின் யூனிட்டுகளும் மின்கட்டமைப்பில் கவனக்குறைவான உட்செலுத்துகையாகப் பாவிக்கப்படும்; மற்றும் உரிமதாரரால் செலுத்த வேண்டிய தொகைக்கு தகுதியுடையது ஆகாது.

7. தொழில் நுட்பத் தேவைகள்:

7.1 தகுதியுடைய மின்நுகர்வோர் எவரேனும் மின்பகிர்வு உரிமதாரரின், மின்கட்டமைப்பு வலையில் மின்கட்டமைப்புடன் இணைக்கப்படக்கூடிய சூரிய மின்சக்தி ஒளி வோல்ட் மின்உற்பத்தி அமைப்பை நிறுவியுள்ளார்களோ (அல்லது) நிறுவ கருதியுள்ளார்களோ, அத்தகையோருக்கு மின்உரிமதாரர் பாகுபாடின்றி மின்பகிர்வு மின்மாற்றி வாரியாக முதலில் வருபவருக்கு முதலில் சேவை என்ற அடிப்படையில் மின்நுகர்வுக்கேற்ப நிகர மின்னளவீடு (அல்லது) நிகர மின்னூட்ட அளவீடு (அல்லது) மொத்த மின்னளவீடு முறை ஏற்பாட்டிற்கு அனுமதி அளிக்க வேண்டும். மின்பகிர்மான உரிமதாரரின் மின்கட்டமைப்புடனான இடையிணைப்பானது, அவ்வப்போது திருத்தம் செய்யப்பட்டவாறான 2007ஆம் ஆண்டு மத்திய மின்சார அமைப்பு (CEA) (மின்கட்டமைப்புடனானஇணைப்பிற்குரிய தொழில் நுட்பச் செந்தரங்கள்) ஒழுங்குமுறை விதியில் மற்றும் அவ்வப்போது திருத்தம் செய்யப்பட்டவாறான 2013ஆம் ஆண்டு (CEA) மத்திய மின்சார அதிகார அமைப்பு (மின்பகிர்மான மின்உற்பத்தி ஆதாரங்களின் இணைப்பிற்குரிய தொழில் நுட்பச் செந்தரங்கள்) ஒழுங்குமுறை விதிகளில் வகை செய்யப்பட்டவாறான செந்தரங்களுக்கு இணங்கி இருத்தல் வேண்டும், மற்றும் அவ்வப்போது திருத்தம் செய்யப்பட்டவாறான மின்கட்டமைப்பு விதித் தொகுப்புகள், மற்றும் தமிழ்நாடு மின்பகிர்மான விதித் தொகுப்புகளுக்கு பொருந்தக் கூடியதாக இருத்தல் வேண்டும்.

7.2 அனைத்து மின்னளவீடு செயலமைப்பு முறைகளிலும் மின்னளவிடல் மற்றும் தொடர்பான உரிய அளவுருக்கள் சரியாக மதிப்பீடு செய்யப்பட்டு அதை தெளிவாக மின்நுகர்வோரின் மின்கட்டணப் பட்டியலில் வழங்குவதற்கு ஏதுவாக மின்னளவிடுதல் மற்றும் பட்டியலிடுதல் அமைப்பை ஒழங்குமுறை விதிகளின் தேவைக்கேற்ப மின்பகிர்வு உரிமதாரர் விரிவுபடுத்திடவும் மற்றும் மேம்படுத்திடவும் வேண்டும். மின்பகிர்மான உரிமதாரர்கள் பல்வேறு பட்டியல்களின் உறுப்புகள் பற்றி விளக்கம் அளிக்கும் பொருட்டு, மாதிரி பட்டியலுடன் சேர்த்து, ஒவ்வொரு மின் நுகர்வோருக்கும் மேலேயுள்ள பட்டியல் தரவுகள் அனைத்தும் உடன் நிகழ்வில் (online) கிடைக்கக் கூடியவகையில் செய்தல் வேண்டும்.

7.3 சூரிய மின்சக்தி நிலையத்தின் மின்திறன், ஒப்புதளிக்கப்பட்ட மின்சுமை / ஒப்பந்தப்படியான மின்தேவையை மீறக்கூடாது.

7.4 மின்பகிர்மான மின்மாற்றியுடன் ஒறுங்கே சேர்த்து இணைக்கப்பட்ட நிகர மின்னளவீடு அல்லது நிகர பட்டியலிடலின் கீழ் உள்ள சூரிய மின்சக்தி (PV) ஒளி வோல்ட் மின்கல மின்னமைப்பு முறைகளின் ஒட்டு மொத்த மின்திறன், 90% மின்பகிர்மான மின்மாற்றியின் திறனிற்கு மேற்படுதலாகாது.

July 27, 2022] TAMIL NADU GOVERNMENT GAZETTE 85

7.5 துணைமின்நிலைய மின்மாற்றியுடன் உயர் அழுத்த மின்னிணைப்பு செய்யப்பட்டிருக்கும் மொத்த மின்னளவிடுதல் செயலமைவுத் திட்டத்தின் கீழ் உள்ள அனைத்து சூரியசக்தி மின்உற்பத்தி அமைப்புகளின் ஒட்டு மொத்த திறன் 70% துணைமின்நிலைய மின்மாற்றி திறனிற்கு மேற்படுதலாகாது.

7.6 மின்பகிர்மான உரிமதாரர்கள், ஒவ்வொரு மின்மாற்றிகளுடன் இணைக்கப்பட்ட ஒட்டு மொத்த சூரிய மின்சக்தி அமைப்பு முறையின் மின்திறனையும் மற்றும் ஒவ்வொரு அமைப்பு முறையில் உற்பத்தி செய்யப்பட்ட சூரிய மின்சக்தி ஆகியவற்றின் புள்ளி விவரங்களை அவர்களது இணைய தளத்தில் ஒவ்வொரு மாதமும் புதுப்பிக்க வேண்டும்.

7.7. எந்தெந்த இடத்தெல்லாம், 10 கிலோவாட்டிற்கு மேற்பட்ட தற்போது இருந்துவரும் மின்கட்டமைப்புடன் இணைக்கப்பட்ட சூரிய மின்சக்தி அமைப்பில் மொத்த சூரிய மின்சக்தி மின்உற்பத்தியை அளவிடுவதற்கு தனிப்பட்ட மின்னளவி இல்லையோ, அவைகளை ஆணையிட்டவாறு நிறுவுவதற்கு உரிமதாரர் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

8. மின்கட்டமைப்புடன் இடைஇணைப்பு, தரநிலைகள் மற்றும் பாதுகாப்பு:

8.1. நிகர மின்னளவீடு அல்லது நிகர பட்டியலிடலைப் பொறுத்தவரை, இடைத்தள முனையானது, மின்நுகர்வோரின் வளாகத்தில் இருதிசை மின்னளவின், மின்நுகர்வும் மின்உற்பத்தியும் செய்பவரின் பக்கமாகும். மொத்த மின்னளவிடுதல் பொறுத்தவரை இடைத்தளமுனையானது, உரிமதாரர் பக்கம் நிறுவப்படும் மொத்த சூரியசத்தி மின்உற்பத்தி மின்னளவியாகும். நிகரமின்னளவிடுதல் அல்லது நிகரபட்டியலிடல் செயலமைவுத் திட்டத்தைப் பொறுத்தவரை, தகுதியுடைய மின்நுகர்வோரின் வளாகத்தில் நிறுவப்படும் சூரிய மின்சக்தி அமைப்பு, தற்போது மின்பகிர்மான உரிமதாரரிடமிருந்து மின்சாரம் பெறுவதற்கு மின்நுகர்வோரால் பயன்படுத்தபட்டு வருகிற அதே மின்தொடர் மற்றும் அமைப்பு முறையை மிகையான மின்சக்தியை மின்கட்டமைப்பிற்குள் உட்செலுத்துவதற்கு பயன்படுத்த வேண்டும். மொத்த மின்னளவிடல் செயலமைப்பு முறையைப் பொறுத்த வரையில், உற்பத்தி செய்யப்படும் மொத்த மின்சக்தியையும் மின்கட்டமைப்பிற்குள் செலுத்த விரும்பும் தகுதியுடைய மின்நுகர்வோர் அல்லது மின்உற்பத்தியாளரின் வளாகத்தில் நிறுவப்படும் மொத்த மின்னளவீடு சூரிய மின்சக்தி அமைப்பு, மின்சக்தியை வெளியேற்றுவதற்கு தனியாக சேவை மின்தடத்தை பயன்படுத்த வேண்டும். அத்தகைய சேவை மின்தடத்தை அருகிலுள்ள உயர் அழுத்த (HT) மின்வலையமைப்பு வரையில், 4.4 ஒழுங்குமுறை விதியில் விதிக்கப்பட்டவாறு தன்னுடைய சொந்தச் செலவில் தகுதியுடைய மின்நுகர்வோரால் அமைக்கப்பட்டு பராமரிக்கப்படுதல் வேண்டும். அத்தகைய மின்னிணைப்பு திட்டத்தை காட்டும் தேவைப்படும் வரைபடத்தை விண்ணப்பத்துடன் சேர்த்து சமர்ப்பிக்க வேண்டும்.

8.2. மின்வலையமைப்புடனான புதுப்பிக்கத்தக்க மின்சக்தி மின்உற்பத்தியின் இடையிணைப்பு, அவ்வப்போது திருத்தம் செய்யப்பட்டவாறான, 2013 ஆம் ஆண்டு (CEA) மத்திய மின்சார அதிகார அமைப்பு (மின்பகிர்மான மின்உற்பத்தி ஆதாரங்களின் மின்னிணைப்பிற்கான தொழில்நுட்ப செந்தரங்கள்) ஒழுங்குமுறை விதிகளில், 2010ஆம் ஆண்டு மத்திய மின்சார அதிகார அமைப்பு (CEA) (பாதுகாப்பு மற்றும் மின்வழங்கல் தொடர்பான நடவடிக்கைகள்) ஒழுங்குமுறை விதிகளில் மற்றும் 2005ஆம் ஆண்டு தமிழ்நாடு மின்கட்டமைப்பு விதித்தொகுப்பில் குறித்துரைக்கப்பட்ட குறிப்பீடுகள், செந்தரங்கள் மற்றும் பிற விதிவகுப்புகள் ஆகியவற்றிற்கு இணங்கி உள்ளது என்று மின்பகிர்வு உரிமதாரர் உறுதி செய்தல் வேண்டும்.

8.3. தகுதியுடைய மின்நுகர்வோர், புதுப்பிக்கத்தக்க மின்சக்தி உற்பத்தி அமைப்புமுறை சேமிப்புடனோ அல்லது இல்லாமலோ நிறுவப்படலாம்:

வரம்புரையாக: தகுதியுடைய மின்நுகர்வோர், சேமிப்புடனான மின்னிணைப்பிற்கு தெரிவு செய்வாரானால், மின்விபத்துக்களை தடுப்பதற்கு மின்கட்டமைப்பின் மின்வழங்கல் இல்லாத போது, மின்கட்டமைப்பிற்குள் மின்சாரம் பாய்வதை தடுப்பதற்கு இன்வெர்ட்டர் உரிய ஏற்பாடுகளை கொண்டிருக்க வேண்டும் மற்றும் தானியங்கி, அதோடு ஆளியக்க இணைப்பியும் பொருத்தப்படுதல் வேண்டும்.

(i) மின்கட்டமைப்பில் மின்வழங்கல் தடைபடும்போது அல்லது மின்வழங்கல் நிறுத்தப்படும் போது மின்கட்டமைப்பிற்கு மின்கலத்திலிருந்து மின்வழங்கல் ஊட்டத்தை தடுப்பதற்கு குறிப்பிடப்பட்டவாறு அத்தகைய பாதுகாப்பு அம்சங்கள் மின்னிணைப்பு மற்றும் செயற்பாட்டில் வகைசெய்யப்பட்டுள்ளன என்பதை உரிமதாரர் ஆய்வு செய்து, நிரூபித்து தமக்குத்தாமே திருப்தி செய்து கொள்ள வேண்டும்.

8.4. மின்நுகர்வோர்/மின்நுகர்வும் மின்உற்பத்தியும் செய்பவர்/மின்உற்பத்தியாளர், இருதிசை மின்னளவி முனை வரை புதுப்பிக்கத்தக்க மின்சக்தி உற்பத்தி அமைப்பு முறையின் பாதுகாப்பான இயக்கம், பராமரிப்பு மற்றும் அதிலுள்ள குறைபாடு எதற்கும் பொறுப்பாவார்; அத்தகைய முனைக்கு அப்பால் அத்தகைய பொறுப்பு மின்னளவி சம்பந்தப்பட்டு உள்ளடங்கலாக, உரிமதாரரைச் சார்ந்ததாகும்.

(i) மொத்த மின்உற்பத்தி மின்நுகர்வோர்/ மின்உற்பத்தியாளர்களுக்கான மின்கட்டமைப்பின் வலையமைப்பு இடைத்தளமுனை வரையிலான அத்தகைய பொறுப்பு மின்நுகர்வோர் நேர்வுக்கேற்ப, மின்உற்பத்தியாளரைச் சார்ந்ததாகும்.

வரம்புமுரையாக : மொத்த புதுப்பிக்கத்தக்க மின்உற்பத்தியின் மின்னளவி, மின்உற்பத்தி மின்நுகர்வோர்/ மின்உற்பத்தியாளரின் செலவில் மின்வழங்கல் உரிமதாரரால் பராமரிக்கப்படும்.

8.5. (GISS) மின்கட்டமைப்புடன் இணைக்கப்படக் கூடிய சூரிய சக்தி ஒளி வோல்ட் (PV) மின்உற்பத்தி அமைப்பு முறை மின்நிலையம் எதுவும் ஒப்புதலளிப்பு இல்லாமல் மின்பகிர்மான உரிமதாரரின் மின்வழங்கல் அமைப்பு முறைக்கு86 [Part VI—Sec. 2 TAMIL NADU GOVERNMENT GAZETTE இணையாக இயங்குவதாக காணப்படும் நேர்வில் அத்தகைய மின்நுகர்வோரின் மின்வழங்கல், 3 நாட்கள் அறிவிப்புடன் துண்டிக்கப்படலாம் மற்றும் அந்த சம்பந்தப்பட்ட மின்நிலையம் உரிமதாரரரின் மின்வழங்கல் அமைப்பு முறையிலிருந்து தனித்து ஒதுக்கப்பட்ட பின்பு மட்டுமே மீளப்பெறப்படுதல் வேண்டும். அத்தகைய மின்நுகர்வோர், அடுத்த நிதியாண்டில் GISS மின்நிலையத்திற்காக விண்ணப்பிக்கலாம். ஆனால், அவருடைய விண்ணப்பமானது, விண்ணப்பதாரர்களின் பட்டியலின் அடியில் வைக்கப்படும். அத்தகைய மின்நுகர்வோர், அவருக்கு மேலேயுள்ள வெற்றிகரமான விண்ணப்பதாரர்கள் அனைவருக்கும் மின்திறன் ஒதுக்கீடு செய்யப்பட்ட பின்பு மட்டுமே ஒதுக்கீடு செய்வதற்காக இன்னும் மின்திறன் கிடைக்கத்தக்கதாக இருக்குமானால் மின்நிலையத்தை அமைப்பதற்கு அனுமதியளிக்கப்படும்.

8.6. புதுப்பிக்கத்தக்க மின்சார உற்பத்தி அமைப்பு முறை மூலமாக விபத்து அல்லது சேதம் குறித்த அச்சுறுத்தல் இருக்கையில் அதற்குரிய விபத்து அல்லது சேதம் எதனையும் அதன் விளைவோடு தவிர்க்கும் பொருட்டு, எந்த நேரத்திலும், சம்பந்தப்பட்ட மின்சார உற்பத்தி அமைப்பு முறையை தன்னுடைய மின்னமைப்பிலிருந்து மின்னிணைப்பு துண்டிக்கப்படுவதற்கு மின்பகிர்மான உரிமதாரர் உரிமையுடையவராவார்.

வரம்புரையாக: மின்பகிர்மான உரிமதாரர், நெருக்கடியை கருத்திற்கொண்டு, நியாயமான காலத்திற்குள் குறைபாட்டை சரிசெய்யுமாறு மின்நுகர்வோரை நிர்பந்திக்கலாம்.

8.7. சூரியசக்தி மின்னாக்கி மற்றும் சாதனம், அவ்வப்போது திருத்தம் செய்யப்பட்டவாறான, 2013ஆம் ஆண்டு (CEA) மத்திய மின்சார அதிகார அமைப்பின் (மின்பகிர்வு செய்யப்பட்ட மின்உற்பத்தி ஆதாரங்களின் மின்னிணைப்பிற்கான தொழில்நுட்ப செந்தரங்கள்) ஒழுங்குமுறை விதிகளில் குறித்துரைக்கப்பட்ட தேவைகளைப் பூர்த்தி செய்தல் வேண்டும். அனைத்து துணைக்கருவிகள் மற்றும் கருவிகள் உள்ளடங்கலாக சூரியசக்தி மின்சார மின்னாக்கியின் இயக்கம் மற்றும் பராமரிப்பு சூரியசக்தி மின்உற்பத்தியாளரைச் சார்ந்ததாகும். GISSஇன் வடிவமைப்பு மற்றும் நிறுவுகை, அந்த அமைப்பில் இயல்புக்கு மாறான புலனுணர்வுக்குப் பொருத்தமான வரையளவிட்ட பாதுகாப்பான சாதனங்களைக் கொண்டுள்ளதாக இருத்தல் வேண்டும் மற்றும் மின்கட்டமைப்பிலிருந்து GISS அமைப்பை தானாகவே பிரித்து வைக்கும் பொருட்டு, பயன்படுத்தக்கூடிய இன்வெர்ட்டர் தேவையான தரத்தையும் தேவைகளையும் பூர்த்தி செய்தல் வேண்டும். பாதுகாப்பு தருக்க முறை, மின்நிலையம் இயக்கப்படும் முன்பு சோதிக்கப்படுதல் வேண்டும். நிறுவுகைக்கான பாதுகாப்பு சான்றிதழ் உரிய அதிகாரிகளிடமிருந்து பெறப்படுதல் வேண்டும்.

8.8. மின்கட்டமைப்பில் மின்சாரம் இல்லாத போதும் மற்றும் குறைந்த அல்லது அதிக மின்னழுத்த நிகழ்வுகளின் போதும், குறிப்பிட்ட காலத்திற்குள் GISS அமைப்பு தானாகவே மின்கட்டமைப்பிலிருந்து பிரிக்கப்படுவதை உறுதி செய்தல் வேண்டும். போதிய திறனுள்ள எரியிழைகள் மற்றும் பராமரிப்பிற்காக இன்வெர்ட்டரின் உள்வரும் மற்றும் வெளிச்செல்லும் இடங்களிலுள்ள DC மற்றும் AC அமைப்புகளை வேகமாக மின்துண்டிப்பு செய்யவல்ல மின்சுற்று பிரிகலன்களை நிறுவுதல் வேண்டும். தரையிணைப்பு, திரிநிலை, DC தரைப்பிழை, எழுச்சி முதலியவற்றிலிருந்து பாதுகாப்பிற்கு தேவையான அனைத்து உட்புற பாதுகாப்பு செயல் அமைப்புகளையும் (CEA) மத்திய மின் அதிகார அமைப்பின் ஒழுங்குமுறை விதிகள்/செந்தரங்கள் படி நிறுவுதல் வேண்டும்.

8.9. இன்வெர்ட்டர் மின்பகிர்மான உரிமதாரரின் மின்கட்டமைப்புடன் ஒத்துப்போவதற்கு பொருத்தமான நெடுக்கை அதிர்வலையுடையதாக (Sine Wave) இருத்தல் வேண்டும். மின்பகிர்மான உரிமதாரரின் அமைப்புமுறையில் மின்சாரத்தை உட்செலுத்துவதற்கு முன்பு இன்வெர்ட்டர் கிளையலைகளையும் மற்றும் பிற சிதைவுகளையும் வடிகட்டக்கூடிய அம்சங்களைக் கொண்டதாக இருக்க வேண்டும்.

8.10. மாற்று மின்கல அடுக்கு இணைப்பு எதுவும் மின்நுகர்வோரின் மின்கட்டமைப்பு வலைக்குள் கட்டுப்படுத்தப்பட வேண்டும் மற்றும் மின்பகிர்வு உரிமதாரரின் மின்கட்டமைப்பில் மின்வழங்கல் இல்லாதபோது, மின்பகிர்வு உரிமதாரரின் தாழ்வழுத்த மின்கட்டமைப்பிற்கு மின்கல மின்சக்தி / டீசல் மின்னாக்கியின் (DG) மின்சக்தி / பின்னணி மின்சக்தி நீட்டிப்பதை தடுக்கும் பொருட்டு போதிய பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுப்பதற்கு மின்நுகர்வோர் பொறுப்புடையவராவார்.

8.11. மின்பகிர்மான உரிமதாரரின் பணியாளர் தம்முடைய மின்மைப்பில் பராமரிப்பு பணிகளைச் செய்து கொண்டிருக்கும் போது பின்னூட்டத்தையும் / நிகழக்கூடிய விபத்துக்களையும் தடுக்கும் பொருட்டு, பொருத்தமான தனிப்படுத்தி / தனிப்படுத்தும் மின்னிணைப்புத் துண்டிப்புத் திறப்பான்களை மின்பகிர்மான உரிமதாரரின் பணியாளர்களால் பூட்டி வைப்பதற்கு ஏதுவாக இருத்தல் வேண்டும். இது மின்கட்டமைப்பிலிருந்து மின்வழங்கல் இல்லாத போது செயல்படும் தானியங்கி உணர்வு உறுப்பு மற்றும் தனிமைப்படுத்தி போன்ற உள்ளக மின்துண்டிப்பு இணைப்பிகளுக்குக் கூடுதலாகும். மின்பகிர்மான உரிமதாரரின் தாழ்வழுத்த (LT) மின்தடை ஏற்படும் நேர்வில், GISS யானது, மின்பகிர்மான உரிமதாரரின் தாழ்வழுத்த (LT) மின்கட்டமைப்பிற்கு சூரிய மின்சக்தி ஊட்டம் செய்யப்படவில்லை என்பதை உறுதி செய்தல் வேண்டும். மனித இனம் / விலங்குகள் எதுவாகினும் (மரணம் விளைவிக்கக்கூடிய / மரணம் விளைவிக்க கூடியதல்லாத / துறைசார்ந்த / துறைசாராத) மின்கட்டமைப்பிலிருந்து மின்வழங்கல் நிறுத்தப்படும் போது GISSலிருந்து பின்னூட்டம் பொருட்டு ஏற்படும் எந்த விபத்திற்கும் மின்நுகர்வோர்/மின்நுகர்வும் மின்உற்பத்தியும் செய்பவர்/மின்உற்பத்தியாளர், முழுவதும் பொறுப்புடையவராவார். மின்பகிர்மான உரிமதாரர், அத்தகைய நெருக்கடியான நேரங்களில், மனிதருக்கு அல்லது பொருள்களுக்கு ஏற்படும் விபத்து அல்லது சேதத்தைத் தடுக்கும் பொருட்டு மின்நுகர்வோர் வளாகத்திற்கு மின்துண்டிப்பு செய்யும் உரிமையை கொண்டுள்ளார்.

8.12. மின்நுகர்வோர் / மின்நுகர்வும் மின்உற்பத்தியும் செய்பவர் / மின்உற்பத்தியாளர், அவ்வப்போது நடைமுறையிலுள்ள மத்திய மின்சார அதிகார அமைப்பினால் (CEA) / ஆணையத்தினால் பிறப்பிக்கப்பட்ட விதித்தொகுப்புகள் மற்றும் ஒழுங்குமுறை விதிகள் அனைத்தையும் பொருந்தக்கூடிய அளவுக்கு கடைப்பிடித்தல் வேண்டும். GISS நிலையத்தின்July 27, 2022] TAMIL NADU GOVERNMENT GAZETTE 87 பாதுகாப்பு, இடரற்ற மற்றும் நம்பத்தகுந்த செயல்பாடுகளைப் பொருத்த வரையில், மத்திய மின்சார அதிகார அமைப்பு / தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் / அரசுத் தலைமை மின் ஆய்வாளர் (CEIG) / மின்பகிர்மான உரிமதாரரின் தேவைப்பாடுகளுக்கு பொருந்தக்கூடிய அளவிற்கு மின்நுகர்வோர் இணங்கி நடத்தல் வேண்டும். மின்கட்டமைப்பிற்கு உட்செலுத்தப்படும் மின்சாரத்தின் அலைவடிவம், அதிர்வெண் (DC) நேர்மின்னோட்ட உறுப்புகள் இல்லாமை போன்றவைகளை பொறுத்து தேவைப்படுமளவு தரமுடையதாக இருத்தல் வேண்டும்.

8.13. மத்திய மின்சார அதிகார அமைப்பினால் பிறப்பிக்கப்பட்ட இந்திய மின்சார மின்கட்டமைப்பு விதித்தொகுப்பு மற்றும் தொடர்புடைய ஒழுங்குமுறை விதிகளில் குறித்துரைக்கப்பட்ட வரம்பிற்குள், கிலையலை மின்உற்பத்தி, மின்சலனம் ஆகியவற்றை GISS கட்டுப்படுத்துதல் வேண்டும்.

8.14. மின்நுகர்வோர், மின்னளவிக்குப் பின்பு மின்கட்டமைப்புடன் இணைக்கப்படக் கூடிய புதுப்பிக்கத்தக்க மின்உற்பத்தி அமைப்புகளை நிகர மின்அளவீடு ஏற்பாடு அல்லது நிகர பட்டியலிடல் ஏற்பாடுகளை தேர்வு செய்யவில்லையெனினும் சம்பந்தப்பட்ட மின்பகிர்மான உரிமதாரருக்கு முன் தகவலளிப்புக்குப் பின்பு மட்டுமே அனுமதிக்கப்படுதல் வேண்டும்:

வரம்புரையாக : மின்நுகர்வோர் / மின்நுகர்வும் மின்உற்பத்தியும் செய்பவர் / மின்உற்பத்தியாளர், மத்திய மின்சார அதிகார அமைப்பினால் குறித்துரைக்கப்பட்டவாறு தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகள் அனைத்தும் எடுக்கப்பட்டுள்ளன என்று உறுதி செய்வதற்கு பொறுப்புடையவராவார்:

மேலும், வரம்புரையாக : ஆணையம் நிலக்கரி அல்லாத எரிபொருள் அடிப்படையிலான இணை-மின்உற்பத்தி நிலையங்கள் நீங்கலாக, அத்தகைய மின்னிணைப்பு பெற்ற அமைப்பு முறைகளுக்கான சில்லறை மின்கட்டண ஆணையில் குறிப்பிடப்பட்ட கூடுதல் நிலையான கட்டணங்கள் அல்லது மின்தேவைக் கட்டணங்கள் மற்றும் எவையேனும் பிற கட்டணங்களை மின்பகிர்மான உரிமதாரர், அத்தகைய கூடுதல் நிலையான கட்டணங்கள் அல்லது மின்தேவைக்கட்டணங்கள் மற்றும் அத்தகைய மின்னமைப்புகளுக்கான பிற கட்டணங்கள் எவற்றையும் தன்னுடைய சில்லறை மின்வழங்கல் மின்கட்டண மனுவில் போதுமான முறைப்படுத்துகைக்கு ஆதராவாக முன்மொழிவாரானால் நிருணயிக்கலாம். இன்னும் வரம்புரையாக தொடர்புடைய மின்பகிர்மான உரிமதாரருக்கு முன் தகவலளிப்புக்கு முன்பே, மின்நுகர்வோர் மின்னளவிக்குப் பின்பு, மின்நுகர்வோர், புதுப்பிக்கத்தக்க மின்சக்தி உற்பத்தி அமைப்பு முறையை நிறுவியதைப் பொறுத்தவரை, மொத்த கூடுதல் கடப்பாடுகள், கூடுதல் நிலையான கட்டணங்கள் அல்லது மின்தேவைக் கட்டணங்கள் மற்றும் அத்தகைய அமைப்புகளுக்கான எவையேனும் பிற கட்டணங்கள் என்ற அளவில், அத்தகைய தவறுகைக் கால அளவிற்கு நிருணயிக்கப்பட்ட வீதத்தில் இருமடங்கு விதிக்கப்படுதல் வேண்டும்.

8.15. மின்கட்டமைப்பின் மின்வழங்கல் முறிவு செய்யப்பட்ட போது புதுப்பிக்கத்தக்க மின்சார உற்பத்தி அமைப்பிலிருந்து பின்னூட்டத்தின் பொருட்டு ஏற்படும். எந்த விபத்திற்கும் அதன் விளைவாக மனித இனத்திற்கு அல்லது விலங்குகளுக்கு ஏற்பட்ட காயம் அல்லது சொத்திற்கு ஏற்பட்ட சேதத்திற்கும் உரிமதாரர் பொறுப்பாகமாட்டார். அதுபோன்ற நிகழ்வுகளில், விபத்தையும் சேதத்தையும் தடுக்கும் பொருட்டு, வளாகத்தின் மின்னிணைப்பை துண்டிப்பதற்கு உரிமதாரருக்கு உரிமையுண்டு.

9. மின்அளவீடு கட்டமைப்பு

9.1. புதுப்பிக்கத்தக்க மின்சார உற்பத்தி அமைப்பில் நிறுவப்பட்டுள்ள மின்னளவிகள் அனைத்தும், 2006ஆம் ஆண்டு மத்திய மின்சார அதிகார அமைப்பின் (CEA) (மின்னளவிகள் நிறுவுதல் மற்றும் இயக்குதல்) ஒழுங்குமுறை விதிகளுக்கு இணங்கி இருத்தல் வேண்டும்.

9.2. அனைத்து மின்னளவிகளும், RS485 (அல்லது அதற்கும் உயர்ந்த) தகவல்கள் வசதியுடன் (AMI) மேம்பட்ட மின்அளவீட்டு உள்கட்டமைப்பு கொண்டிருத்தல் வேண்டும்.

9.3. இருதிசை மின்அளவீட்டு ஏற்பாடு, மின்பகிர்மான உரிமதாரரால் கண்டறியப்பட்ட இடை இணைப்பு முனையில் தகுதியுடைய மின்நுகர்வோரின் தேவையின்படி ஒரு முனை அல்லது மும்முனை இருதிசை மின்னளவி அமைக்கப்படும்.

9.4. தகுதியுடைய மின்நுகர்வோர் வளாகத்தில் இருந்து வரும் மின்னளவிக்கு பதிலாக, மின்வழங்கல் விதித்தொகுப்பின் வகைமுறைகளுக்கிணங்க, மின்நுகர்வோர் செலவில் இருதிசை மின்னளவி வைக்கப்படும்.

9.5. தகுதியுடைய மின்நுகர்வோர் நேரத்திற்குத்தகுந்த மின்கட்டணத்தின் சுற்றெல்லைக்குள் (ToD) இருப்பாரானால் மின்உற்பத்தி மின்னளவி மற்றும் இருதிசை மின்னளவி ஆகிய இரண்டும் நிறுவுதல் நேரத்திற்குத் தகுந்த (ToD) மின்நுகர்வு மற்றும் மின்உற்பத்தியை பதிவு செய்ய தகுதிவாய்ந்ததாகும்.

9.6. மின்பகிர்மான உரிமதாரர் சோதனையிடுதல், நிறுவுதல் மற்றும் மின்னளவிடும் சாதனங்களை பராமரித்தல் மற்றும் அதனை பொருந்தக்கூடிய செந்தரங்கள் மற்றும் தரநிலைகளை பின்பற்றுதல் ஆகியவற்றிற்கு பொறுப்புடையவராவார்.

9.7. தகுதியுடைய மின்நுகர்வோர் / மின்உற்பத்தியாளர், தம்முடைய சொந்த செலவில் பொருந்தக்கூடிய மத்திய மின்சார அதிகார அமைப்பின் ஒழுங்குமுறை விதிகளுக்கு இணங்க புதுப்பிக்கத்தக்க மின்சார உற்பத்தி மின்னளவியை கொள்முதல் செய்து புதுப்பிக்கத்தக்க மின்சார உற்பத்தி அமைப்பு முறையிலிருந்து உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தை அளவீடு செய்வதற்கு உரிய இடத்தில், அமைப்பு முறையின் ஒருசேர்ந்த பகுதியாக நிறுவுதல் வேண்டும்.

88 [Part VI—Sec. 2 TAMIL NADU GOVERNMENT GAZETTE

9.8. புதுப்பிக்கத்தக்க மின்சார மின்உற்பத்தி மின்னளவியானது, தகுதியுடைய மின்நுகர்வோர் / மின்உற்பத்தியாளரின் செலவில் மின்பகிர்மான உரிமதாரரால் பராமரிக்கப்படுதல் வேண்டும்.

வரம்புரையாக: தகுதியுடைய மின்நுகர்வோர் / மின்உற்பத்தியாளர் நிகர மின்னளவி / மின்உற்பத்தி மின்னளவி ஆகியவற்றை கொள்முதல் செய்து, சோதனையிடுவதற்காகவும் நிறுவுவதற்காகவும் உரிமதாரருக்கு அதனை வழங்கலாம். உரிமதாரரால் மின்னளவிகள் வழங்கப்படும் நேர்வில், மின்நுகர்வோர், மின்னளவிகளின் முழுவிலையையும் செலுத்துவார். மின்நுகர்வோரிடமிருந்து மின்னளவி வாடகை வசூலிக்கப்படமாட்டாது. மின்னளவி அமைக்கும் இடம், (CEA) மத்திய மின்சார அதிகார அமைப்பின் மின்னளவிடுதல் ஒழுங்குமுறை விதிகளின் படி இருத்தல் வேண்டும். நிறுவப்பட்ட மின்னளவிகள் சேர்ந்து ஆய்வு செய்யப்பட்டு, அதன் பின்பு மின்நுகர்வோர் முன்னிலையில் உரிமதாரரால் முத்திரையிடப்படும்.

9.9 இருதிசை மின்னளவி புதுப்பிக்கத்தக்க மின்சார உற்பத்தி மின்னளவி முதலியவை போன்ற இந்த ஒழுங்குமுறை விதியின் இயங்குமுறைகள் அனைத்தின் படி அனைத்து மின்னளவிகளும் எந்த நேரத்திலும் ஆய்வு செய்வதற்கும் மின்பயனீட்டுக் கணக்கீடு செய்வதற்கும் மின்பகிர்மான உரிமதாரருக்கு எளிதாகவும் பாதுகாப்பாகவும் அணுகக்கூடியவாறு தகுதியுடைய மின்நுகர்வோரின் வளாகத்திலுள்ள இடங்களில் நிறுவப்படுதல் வேண்டும்.

9.10. 20 கிலோவாட்டிற்கு மேலுள்ள மின்திறன் கொண்ட புதுப்பிக்கத்தக்க மின்சார உற்பத்தி அமைப்பைப் பொறுத்தவரை உரிய வகையான சரிபார்ப்பு மின்னளவி மின்பகிர்மான உரிமதாரரால் நிறுவப்படலாம்:

வரம்புரையாக: சரிபார்ப்பு மின்னளவி நிறுவுகையானது 20 கிலோவாட் வரையிலும் மற்றும் அது உள்ளடங்கலான புதுப்பிக்கத்தக்க மின்சார மின்உற்பத்தி அமைப்புகளில், விருப்பப்படியானதாகும்.

9.11. மின்பகிர்மான உரிமதாரரால் எடுக்கப்படும் மின்பயனீட்டு கணக்கீடு வணிகத்தீர்விற்கு அடிப்படையாக இருக்கும்.

10. வலையமைப்பு / மின்சாரம் கொண்டு செல்லுதல் கட்டணங்கள்:

10.1. மின்வலையமைப்பு / மின்சாரம் கொண்டு செல்லுதல் கட்டணங்கள், 2005 ஆம் ஆண்டு தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணைய (மின்கட்டண வீதத்தினை நிர்ணயம் செய்வதற்கான விதிமுறைகள் மற்றும் வரையறைகள்) ஒழுங்குமுறை விதிகளின் 70ஆம் ஒழுங்குமுறை விதியின் படி ஆணையத்தினால் அவ்வப்போது நிர்ணயிக்கப்பட்டவாறு நிகர மின்னளவீடு அல்லது நிகர பட்டியலிடல் அல்லது நிகர மின்னூட்ட இயங்குமுறைகளின் படி வகைப்படுத்தப்பட்ட மின்நுகர்வும் மின்உற்பத்தியும் செய்பவருக்கு பொருந்தக்கூடியதாகும்.

10.2. எந்த வகையான மின்நுகர்வோர்களுக்கும் உரிய நியாயமான முறையில் சலுகை ஏதேனுமிருப்பின் அதன் அளவை அவ்வப்போது ஆணையத்தினால் முடிவு செய்யப்படும்.

10.3. சூரியசக்தி முழு மின்உற்பத்தியின் மதிப்பீட்டிற்காக நிறுவப்பட வேண்டிய மொத்த மின்உற்பத்தி மின்னளவியில் பதிவு செய்யப்படும் மொத்த உற்பத்தி செய்யப்பட்ட யூனிட்டுகள் வலையமைப்புக் கட்டணங்களின் கணக்கிடுகைக்காக கணக்கிடப்படும்.

10.4. வலையமைப்புக் கட்டணங்கள் / மின்சாரம் கொண்டு செல்லுதல் கட்டணங்கள், அடுத்த மின்கட்டண ஆணையில் அல்லது பிற ஏதேனும் சிறப்பு ஆணையில் ஆணையத்தினால் திருத்தப்படும் வரையில், அந்தந்த வகையின் கீழ் குறித்துரைக்கப்பட்டவாறு இருந்து வரும் மற்றும் புதிய மின்நுகர்வரும் மற்றும் மின்உற்பத்தி செய்யும் நபர்கள் அனைவருக்கும் பொருந்தக்கூடியதாகும்.

11. பொது நிபந்தனைகள்:

11.1. இந்த ஒழுங்குமுறை விதியின் வகைகள் அனைத்தின் கீழ்வரும் விண்ணப்பதாரர்களின் முதுநிலையானது, முதலில் வருபவருக்கு முதல் சேவை என்ற அடிப்படையில் கருதப்படும்.

11.2. ஒராண்டுக்கால அளவின் முடிவில், மின்பகிர்மான உரிமதாரர் நிகர மின்னளவீடு, நிகரப்பட்டியலிடல் மற்றும் மொத்த மின்னளவி ஆகியவைகளின் படி நிறுவப்பட்ட சூரியசக்தி PV அமைப்புமுறையின் மின்திறன், மின்கட்டமைப்பு மற்றும் மின்பகிர்மான உரி்மம்தாரரின் பிற காரணிகள் மீது அத்தகைய சூரியசக்தி அமைப்புமுறைகளின் தாக்கம் ஆகியவற்றை அளித்தல் வேண்டும். திருத்தம் எதுவும், தேவைப்படுமானால் பலவகையான சம்பந்தப்பட்டவர்களின் கருத்துரைகள் / மறுப்புரைகள் / பரிந்துரைகளை உரியவாறு கருத்தில் கொண்டு முடிவு செய்யப்படலாம்.

11.3. மின்பகிர்மான உரிமதாரர், மின்பகிர்மான மின்மாற்றி துணைமின்நிலைய மின்மாற்றிகளின் தற்போதுள்ள திறன், கிடைக்கக்கூடிய மின்சக்தி மற்றும் நிகர மின்அளவீடு / நிகர மின்னூட்டம் / மொத்த மின் அளவீடு ஆகியவற்றின் படி நிறுவப்பட்ட புதுப்பிக்கத்தக்க மின்சார உற்பத்தி அமைப்புகளின் மொத்த திறன் ஆகியவைகளை நாளது தேதி வரையில் இருக்கும் தகவல்களை தன்னுடைய இணையதளத்தில் ஒவ்வொரு மாதமும் புதுப்பித்து அளிக்க வேண்டும்.

11.4. மின்பகிர்மான உரிமதாரர், புதிய மின்நிலையங்களுக்கு அதோடு தற்போது உள்ள மின்நிலையங்களில் கூடுதல் மின்திறனுக்கான விண்ணப்ப படிவம் மற்றும் உடன்படிக்கைகளின் படிவம் ஆகியவைகளுடன் சேர்த்து பொருந்தக்கூடிய செயல்முறைகளை, தன் னுடைய இணையதளத்தில் இந்த ஒழுங்குமுறை விதிக ள் அறிவிக்கப்பட்ட இரண்டு மாதங்களுக்குள் இருக்கும்படி செய்ய வேண்டும்.

July 27, 2022] TAMIL NADU GOVERNMENT GAZETTE 89

11.5. மின்நுகர்வும் உற்பத்தியும் செய்பவர் / மின்உற்பத்தியாளர் அமைப்பை விட்டுச்செல்லும் அல்லது மின்வழங்கல் உரிமதாரரை மாற்றும் நேர்வில் மிகையான மின்சாரம் பின்வரும் முறையில் கருதப்படும்:

(அ) அமைப்பை விட்டுச்செல்கிற அல்லது மின்வழங்கல் உரிமதாரரை மாற்றும் தேதியன்று இருக்கும் சரிப்படுத்தப்படாத யூனிட்டுகள், பொதுப்படையான மின்கட்டணத்தில் ஈடுசெய்யப்பட்டு இருந்துவரும் மின்வழங்கல் உரிமதாரருடன் இறுதியான பட்டியலில் சேர்த்து தீர்வு செய்யப்படும்.

(ஆ) புதிய மின்வழங்கல் உரிமதாரருடன் நிகர மின்அளவீடு உடன்படிக்கை எழுதிக்கொடுக்காமல் மின்சார உட்செலுத்துகை எதுவும், கவனக்குறைவுடைய உட்செலுத்துகை என்று கருதப்படும் மற்றும் புதிய மின்வழங்கல் உரிமதாரரால் செலுத்தப்பட மாட்டாது.

11.6. மின்பகிர்மான உரிமதாரர் அதனுடைய மின்அளவீட்டை மற்றும் பட்டியலிடும் முறையை மேலே ஆணையிடப்பட்ட தேவைகளின் படி மேம்படுத்தி நாளது தேதி வரை புதுப்பிக்க வேண்டும். அத்தகைய அளவுருக்கள், மொத்த சூரியமின்சக்தி மின்உற்பத்தி, ஏற்றுமதி, இறக்குமதி நிகர யூனிட்டுகள், மின்தேவை முதலியன தொடர்பான அளவுருக்களை தெளிவாக மின்நுகர்வோரின் மின்கட்டண பட்டியலில் அளிக்கப்படும் விதமாக மேம்படுத்தி புதுப்பிக்க வேண்டும். மின்பகிர்மான உரிமதாரர்கள், பல்வேறு பட்டியலிடல் செயற்கூறுகளுடன் மாதிரிப் பட்டியல் விளக்கத்துடன் சேர்த்து ஒவ்வொரு மின்நுகர்வோருக்கான மேலேயுள்ள பட்டியல் தரவுகள் அனைத்தையும் நிகழ் நிலையில் (online) கிடைக்கக்கூடியதாக செய்தல் வேண்டும்.

11.7. மின்பகிர்மான உரிமதாரர் புதிய மற்றும் கூடுதல் மின்திறன்களுக்கான இரண்டிற்குமான மின்கட்டமைப்புடன் இணைக்கப்படக்கூடிய சூரியசக்தி மின்உற்பத்தி திட்டத்தின் அனைத்து வகைகளுக்கான நிகழ் நிலை விண்ணப்பங்களை நடைமுறைப்படுத்த வேண்டும். நிகழ் நிலையில் (online) மற்றும் நேரில் பெறப்பட்ட விண்ணப்பங்கள் அனைத்தின் தகுநிலையை காட்சிப்படுத்த வேண்டும். உரிமதாரர் பிரிவு வாரியாக பெறப்பட்ட விண்ணப்பங்களின், ஒப்புதலளிப்பு, தகுநிலை, நிறுவுகை மற்றும் இயக்கப்பட்ட விவரங்களை பராமரித்து வர வேண்டும்.

12. மின்னளவி குறைபாடு / தவறுகை / எரிந்துபோதல் ஆகியவற்றின் போது மின்சக்தி கணக்கிடுதல்:

12.1 மின்னளவி எதுவும் குறைபாடு / தவறுகை / எரிந்துபோதல் நிலையில் இருக்கும் நேர்வில் மின்பகிர்மான உரிமதாரர், மின்வழங்கல் விதித்தொகுப்பில் குறித்துரைக்கப்பட்டவாறு வேறு மின்னளவியை வைத்தல் வேண்டும்.

12.2. புதுப்பிக்கத்தக்க மின்சக்தி உற்பத்தி அமைப்பினால் மின்உற்பத்தி செய்யும் போது அந்தக்கால அளவில் மின்னளவி குறைபாடுடையதாகிற போது சரிபார்ப்பு மின்னளவியின் பயனீட்டுக் கணக்கீடு அல்லது இன்வெர்ட்டரில் பதிவான பயனீட்டு கணக்கீடு அடிப்படையில் கணக்கிடப்படும்.

12.3. மின்னளவி மற்றும் இன்வெர்ட்டர் இரண்டும் குறைபாடுடையதாகும் நேர்வில், பதிவு செய்யப்பட்ட தரவு, மின்னளவியின் உள்ளடக்க பட்டியலின் தொகுப்பிலிருந்து மீட்டெடுக்கப்படுமானால், அவ்வாறு மீட்டெடுக்கப்பட்ட தரவின் அடிப்படையில் கணக்கிடப்படும்.

12.4. தரவு மீட்டெடுக்கப்பட முடியாதிருக்கும் நேர்வில் மின்னளவி குறைபாடுடையதாக இருக்கையில் அந்தக் காலஅளவின்போதான மின்நுகர்வு, மின்வழங்கல் விதித்ெ தாகுப்பில் குறித்துரைக்கப்பட்டவாறு கணக்கிடப்படும். மின்னளவியின் விவரங்கள், குறைபாட்டின் தன்மை, தரவை மீட்டெடுக்க எடுக்கப்பட்ட நடவடிக்கை, தரவை மீட்டெடுக்க முடியாமைக்கான காரணம், தகுதியுடைய அதிகாரியினால் ஆவணப்படுத்தப்படுதல் வேண்டும் மற்றும் எதிர்காலத்தில் எந்த நேரத்திலும் முன்னிலைப்படுத்தப்படுவதற்காக பாதுகாக்கப்பட வேண்டும்.

13. புதுப்பிக்கத்தக்க கொள்முதல் கடப்பாடு

(i) அனைத்து வகைகளின் கீழ் உற்பத்தி செய்யப்படும் சூரிய மின்சக்தி யூனிட்டுகள் கடப்பாடுடைய உறுப்பு நிறுவனத்தின் அந்தந்த GISS உருவாக்குபவரின் RPOவை ஏற்பதற்கு தகுதியுடையனவாகும்.

(ii) மாநிலம் முழுவதும் GISSஇன் அனைத்து வகைகளின் கீழ் உற்பத்தி செய்யப்படும் மொத்த சூரிய மின்சக்தியின் யூனிட்டுகள் மின்பகிர்மான உரிமதாரர்களின் RPOவை ஏற்பதற்கு தகுதியுடையனவாகும்.

14. புதுப்பிக்கத்தக்க மின்சக்திச் சான்றிதழ் இயங்குமுறை:

புதுப்பிக்கத்தக்க மின்சக்திச் சான்றிதழை பிறப்பிப்பதற்கான தகுதியுடைமையானது அவ்வப்போது திருத்தம் செய்யப்பட்டவாறு 2010 ஆம் ஆண்டு மத்திய மின்சார ஒழுங்குமுறை ஆணைய புதுப்பிக்கத்தக்க மின்சக்தி உற்பத்திக்கான புதுப்பிக்கத்தக்க மின்சக்திச் சான்றிதழின் அங்கீகாரம் மற்றும் பிறப்பிதலுக்கான ஷரத்துகள் மற்றும் நிபந்தனைகள் ஒழுங்குமுறை விதிகளின்படி குறித்துரைக்கப்பட்ட தகுதியுடையமைக்கான அளவு கோலின் படி இருக்கும்.

15. விண்ணப்பம் மற்றும் பதிவு செய்தல் நடைமுறை:

15.1. மின்பகிர்மான உரிமதாரர், புதிய மற்றும் கூடுதல் GISS மின்திறன் மின்நிலையங்கள் ஆகிய இரண்டின் விண்ணப்பங்களையும் செயல்படுத்தும் வகையில் இணையதள அடிப்படையிலான விண்ணப்ப செய்முறையை நடைமுறைப்படுத்த வேண்டும்.

90 [Part VI—Sec. 2 TAMIL NADU GOVERNMENT GAZETTE

15.2. மின்பகிர்மான உரிமதாரர், மின்நுகர்வோர் வளாகத்தில் GISS அமைப்புமுறையை அமைப்பதற்கான செயல்முறையை எளிதாக்குதல் வேண்டும். இது குறித்து, உரிமதாரர் தனது வலைய தளத்திலும், அலுவலகங்களிலும், பின் வருபவைகளை நன்றாக காட்சிப்படுத்த வேண்டும்:

(i) GISSயை நிறுவுதல் மற்றும் இயக்குதலுக்குரிய விரிவான தர அளவுப்படுத்தப்பட்ட நடைமுறை;

(ii) GISS அமைப்புமுறை நிறுவுகை சம்பந்தமாக விண்ணப்பபடிவம் தாக்கல் செய்வதில் இருந்து இயக்குதல் வரை தகுதியுடைய மின்நுகர்வோருக்கு உதவுவதற்கு ஒருமுனை தொடர்பு;

(iii) அத்தகைய விண்ணப்பங்களுடன் சேர்த்து அளிக்கப்படுவதற்கு தேவைப்படும் ஆவணங்களின் முழுமையான பட்டியல்;

(iv) விண்ணப்பதாரரால் வைப்பீடு செய்யப்பட வேண்டிய பொருந்தத்தக்க கட்டணங்கள்

(v) சேவை அளிப்பவர் மூலம் GISSயை நிறுவ விரும்புகிற மின்நுகர்வோரின் நலனுக்காக ஒப்புதலளிக்கப்பட்ட சேவை அளிப்பவர்களுடைய பட்டியல்.

(vi) ஒப்புதலளிக்கப்பட்ட மின்னளவி விற்பவரின் பட்டியல்.

(vii) மத்திய மற்றும் மாநில அரசின் பல்வேறு திட்டங்கள் மற்றும் செயற்திட்டங்களின்படி பொருந்தத்தக்க மின்நுகர்வும் உற்பத்தியும் செய்பவருக்கு நிதி ஊக்கத்தொகை.

(viii) நிர்ணயம் செய்யப்பட்ட மின்னிணைப்பு உடன்படிக்கை(கள்).

15.3 தகுதியுடைய மின்நுகர்வோர், தொடர்புடைய மின்பகிர்மான உரிமதாரருக்கு மின்கட்டமைப்புடன் இணைக்கப்படக் கூடிய சூரிய சக்தி ஒளி வோல்ட் (PV) மின் உற்பத்தி அமைப்பின் மின்னிணைப்பிற்காக உரிமதாரரின் மின்னிணைப்பிற்கு விண்ணப்பித்தல் வேண்டும். பின்வரும் பதிவுக் கட்டணத்துடன் நிகழ்நிலை மூலமோ (online) அல்லது பிரிவு அலுவலகத்திலோ (இணைக்கப்பட்ட) வகுத்துரைக்கப்பட்ட படிவத்திலான விண்ணப்பத்தை அளிக்க வேண்டும்.

வரிசை எண். விவரம் பதிவுக்கட்டணம்
1. தாழ்வழுத்தம் LT – 20 கிலோவாட் வரை ரூ.500
2. தாழ்வழுத்தம் – LT – 20 கிலோ வாட்டிற்குமேல் 150 கிலோவாட் வரை 20 கிலோவாட் வரை ரூ.500ம் மற்றும் அதற்கு மேற்பட்ட ஒவ்வொரு 20 கிலோவாட்டிற்கும் ரூ.100 (அல்லது) அதன் பகுதிற்கும்.
3. உயர்அழுத்தம் HT – 150 கிலோவாட்டிற்கு மேல் மற்றும் 500 கிலோவாட் வரை ரூ.5,000
4. உயர்அழுத்தம் HT – 500 கிலோவாட்டிற்கு மேல் 1 மெகா வாட்டிற்கு கீழ் ரூ.10,000

15.4 விண்ணப்பப் படிவம் வன்பொருள் வடிவத்தில் அளிக்கப்படும் நேர்வில், அதனைப் பெற்ற உடனேயே அதை ஊடுகதிர்படமெடுத்து இணையதளத்தில் பதிவேற்றம் செய்தல் வேண்டும்.

15.5. அந்த விண்ணப்பத்தின் பதிவு எண்ணுடன் ஒப்புகை உண்டாக்கப்பட்டு விண்ணப்பம் பெறப்பட்ட மூன்று பணி நாட்களுக்குள் விண்ணப்பதாரருக்கு தெரிவிக்கப்படுதல் வேண்டும். நிகழ் நிலையில் பெறப்பட்ட விண்ணப்பங்களைப் பொறுத்தவரை, பதிவு எண்ணுடன் ஒப்புகை உருவாக்கப்பட்டு மின்னஞ்சல் வாயிலாக விண்ணப்பதாரர்களுக்கு தெரிவிக்கப்படுதல் வேண்டும்.

15.6. விண்ணப்பப் படிவத்தில் குறைபாடுகள் எவையேனும் இருக்கும் பட்சத்தில், விண்ணப்பம் பெறப்பட்ட தேதியிலிருந்து மூன்று பணி நாட்களுக்குள் அதை தெரியப்படுத்துதல் வேண்டும். மின்நுகர்வோர் தங்களது பதிவு எண்ணை தக்க வைத்துக் கொள்ளும் பொருட்டு, குறைபாடுகளை சரிசெய்து 7 நாட்களுக்குள் திருப்பி சமர்ப்பிக்க வேண்டும். விண்ணப்படிவம் 7 நாட்களுக்குள் சரி செய்யப்பட்டு சமர்ப்பிக்கப்படவில்லை என்றால், அந்த விண்ணப்பம் ரத்து செய்யப்பட்டதாகிவிடும் மற்றும் பதிவுக்கட்டணம் பறிமுதல் செய்யப்படும்

15.7. விண்ணப்பம், பதிவு எண்ணுடன் ஒப்புகை உருவாக்கப்பட்ட தேதியன்று பெறப்பட்டதாக் கருதப்படும்.

15.8. மின்பகிர்மான உரிமதாரர் விண்ணப்பப் பதிவுத் தேதியிலிருந்து 15 நாட்களுக்குள் தொழில்நுட்ப சாத்தியங்களை வெளிப்படுத்த வேண்டும்.

July 27, 2022] TAMIL NADU GOVERNMENT GAZETTE 91

15.9. பின்வரும் கூறுகள் மற்றும் உரிமதாரர் பொருத்தமானது என கருதுகிற பிற காரணங்கள் எவையும் தொழில்நுட்ப சாத்தியங்களுக்கு எடுத்துக்கொள்ளப்படும்.

(i) AC மின்னழுத்த இணைப்பு கோரும் அளவு;

(ii) விண்ணப்பதாரரின் ஒப்புதலளிக்கப்பட்ட மின்சுமை / ஒப்பந்தப்படியான மின்தேவை;

(iii) உத்தேசிப்பட்ட புதுப்பிக்கத்தக்க மின்சக்தி உற்பத்தி அமைப்பு முறையின் AC மின்னழுத்ததின் வரையளவிட்ட வெளிப்பாடு

(iv) தொடர்புடைய மின்பகிர்மான / துணைமின் நிலை மின்மாற்றியில் தற்போதுள்ள மொத்த மின்திறன். தொழில்நுட்ப சாத்தியம் காணப்படுமானால், மின்பகிர்மான உரிமதாரர், சாத்தியக்கூறு ஆய்வு முடிவடைந்த 5 பணி நாட்களுக்குள் புதுப்பிக்கத்தக்க மின்சக்தி உற்பத்தி அமைப்பு முறையை நிறுவுவதற்கு ஒப்புதலளித்தல் வேண்டும். அந்த ஒப்புதலளிப்பு அமைப்பின் அதிகபட்சம் அனுமதிக்கத்தக்க திறனை சுட்டிக்காட்டுதல் வேண்டும் மற்றும் ஒப்புதலளிப்பு தேதியிலிருந்து 6 மாதங்களுக்கு அல்லது மின்பகிர்மான உரிமதாரரால் ஒத்துக்கொள்ளப்பட்டு நீட்டிக்கப்பட்ட கால அளவிற்கு செல்லத்தக்கதாகும். தொழில்நுட்பம் சார்ந்த வாய்ப்பு காணப்படவில்லையாயின் அதற்கான காரணம், விண்ணப்ப பதிவுத் தேதியிலிருந்து 20 பணி நாட்களுக்குள் விண்ணப்பதாரருக்கு தெரிவிக்கப்பட வேண்டும்.

15.10. விண்ணப்பதாரர், அத்தகைய ஒப்புதலளிப்பின் செல்லுந்தன்மைக் கால அளவிற்குள், பொருந்தக்கூடிய (தொழில்நுட்ப குறியீடுகள், மின்உற்பத்தியாளர் / அமைப்புமுறை அளிப்பவர்களிடமிருந்து பெறப்பட்ட சோதனை அறிக்கைகள், அரசுத் தலைமை மின் ஆய்வாளிரிடமிருந்து பெறப்படும் பாதுகாப்புச் சான்றிதழ் முதலியன) தொடர்புடைய விவரங்களுடன் சேர்த்து பணிமுடிப்பு சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும் மற்றும் மின்உற்பத்தி / மின்நுகர்வோர் மின்னளவியை (அந்த மின்னளவி ஏற்கெனவே சோதனை செய்யப்படாதிருக்குமானால்) புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மின்உற்பத்தி அமைப்பின் சோதனை மற்றும் இயக்கத்திற்காக மின்பகிர்மான உரிமதாரரிடம் ஒப்படைக்க வேண்டும்.

15.11. மின்பகிர்மான உரிமதாரர் மின்உற்பத்தி / மின்நுகர்வோர் மின்னளவியை சோதனை நிறைவடைந்த பின்பு, விண்ணப்பதாரரால் அமைப்பில் நிறுவப்பட வேண்டிய மின்உற்பத்தி மின்னளவியை விண்ணப்பதாரரிடம் ஒப்படைத்தல் வேண்டும் மற்றும் அந்த உரிமதாரர் அத்தகைய கோரிக்கையை பெற்றதலிருந்து 20 பணி நாட்களுக்குள் அமைப்பின் சோதனை மற்றும் இயக்கத்தை நிறைவு செய்தல் வேண்டும் மற்றும் அதன் பின்பு 10 நாட்களுக்குள் இரு திசை மின்னளவியை நிறுவி புதுப்பிக்கத்தக்க மின் உற்பத்தி அமைப்பை மின்கட்டமைப்புடன் ஒத்தியங்க வைக்க வேண்டும்.

15.12 விண்ணப்பதாரர் மற்றும் உரிமதாரர், சூரிய மின்சக்தி அமைப்பு நிறுவப்பட்ட பின்பு, ஆனால் மின்னமைப்புடன் ஒத்தியங்குவதற்கு முன்பு வகுத்துரைக்கப்பட்ட படிவத்திலான உடன்படிக்கையை எழுதிக்கொடுத்தல் வேண்டும்.

15.13 GISS மின்கட்டமைப்புடன் இணைக்கப்படக் கூடிய சூரிய சக்தி ஒளி வோல்ட் (PV) மின் உற்பத்தி அமைப்பின் தொடக்க சோதனை GISS –இன் மின்நுகர்வோரின் / உரிமையாளரின் மற்றும் தொடர்புடைய மின்பகிர்மான உரிமதாரரின் அலுவலரின் பிரதிநிதிகளின் முன்னிலையில் நடைபெறுதல் வேண்டும். இயக்கச் சான்றிதழ் மேலே பெயரிடப்பட்ட தரப்பினர்கள் அனைவராலும் கையொப்பமிடப்படுதல் வேண்டும்.

15.14 இயக்கச் சான்றிதழ் பின்வரும் விவரங்களைக் கொண்டிருத்தல் வேண்டும்:

(i) சூரிய சக்தி (PV) ஒளி வோல்ட் உற்பத்தியாளரின் பெயர், வகை, அளவு / திறன், பலகைகளின் எண்ணிக்கை முதலியவை உள்ளடங்களான பலகைகளின் விவரங்கள்.

(ii) நிறுவனப் பெயர், திறன், வகை, வரிசை எண் முதலியவை போன்ற இன்வெர்ட்டர் தொடர்பான விவரங்கள்.

(iii) GISS – இன் மொத்த மின்திறன்.

(iv) நிறுவனப் பெயர், வகைகள், திறன் வரையளவின் துல்லியம், வரிசை எண் போன்ற விவரங்களுடன் நிறுவப்பட்ட மின்னளவியின் விவரங்கள்.

15.15 ஒப்பந்த உடன் படிக்கையின் படிவங்கள் மற்றும் நிறுவுகைச் சான்றிதழ்களை உரிமதாரரின் இணைய தளத்தில் பதிவேற்ற வேண்டும்.

15.16 விண்ணப்பம் பெறுதல், கள ஆய்வு செய்தல், மின்னளவியை நிறுவுதல், செயல்முறை படுத்துதல் போன்றவற்றின் நிலைகளை இணைய தள அடிப்படையிலான மாதிரி அல்லது பிற ஏதேனும் வகையின் மூலம் கண்காணிப்பதற்கு தனித்தன்மை வாய்ந்த பதிவு எண்ணின் அடிப்படையிலான விண்ணப்பம் கண்காணிக்கும் நடைமுறையை மின்பகிர்பான உரிமதாரர் ஏற்படுத்த வேண்டும்.

15.17 மின்நுகர்வோர் அதிகாரமளிக்கப்பட்ட விற்பனையாளர்களிடமிருந்து தேவையான மின்னளவியை வாங்குவதற்கான தெரிவுரிமை உடையவராவார். அது உரிமதாரரால் சோதனையிடப்பட்டு முத்திரையிடப்பட்டுள்ளதாக இருக்க வேண்டும் அல்லது குறிப்பிட்ட கால வரம்பிற்குள் உரிமதாரரின் சோதனைச் சாலையில் சோதனை செய்யப்படுதல் வேண்டும் அல்லது பிற அதிகாரமளிக்கப்பட்ட சோதனைச் சாலையில் மின்நுகர்வோரால் சோதனை செய்யப்படுதல் வேண்டும்.

15.18 இந்த ஒழுங்குமுறை விதிகளில் குறித்துரைக்கப்பட்ட கால அளவுகள் உரிமதாரரால் கடைபிடிக்கப்படுதல் வேண்டும்.

92 [Part VI—Sec. 2 TAMIL NADU GOVERNMENT GAZETTE

16. அணுகுதல் மற்றும் மின்துண்டிப்பு

16.1 மின்நுகர்வும் உற்பத்தியும் செய்பவர், புதுப்பிக்கத்தக்க மின்சக்தி அமைப்பில் தானாகவும் மற்றும் ஆளியக்கியவும் உள்ள மின்னளவி சாதனம் மற்றும் மின்துண்டிப்பு கருவிகளை, உரிமதாரர் அணுகுவதற்கு வகை செய்தல் வேண்டும்.

16.2 நெருக்கடியான அல்லது மின்தடங்கல் ஏற்படும் சூழ்நிலைகளில், உரிமதாரர், புதுப்பிக்கத்தக்க மின்சக்தி உற்பத்தி அமைப்பின் மின்துண்டிப்பு சாதனங்கள் தானியக்கம் அல்லது ஆளியக்க ஆகிய இரண்டின் மூலமும் அணுக முடியாதிருப்பாரானால், உரிமதாரர் வளாகத்திற்குரிய மின்வழங்கலை துண்டிக்கலாம்.

16.3 இந்த உடன்படிக்கை முடிவுறுவதன் பேரில், மின்நுகர்வும் உற்பத்தியும் செய்பவர், உடனடியாக புதுப்பிக்கத்தக்க மின்சக்தி உற்பத்தி அமைப்பினை உரிமதாரரின் மின்னமைப்பிலிருந்து துண்டித்தல் வேண்டும்.

17. இணைப்பு உடன் படிக்கை

17.1 மின்பகிர்மான உரிமதாரர் மற்றும் தகுதியுடைய மின்நுகர்வோர் / மின் உற்பத்தியாளர் மின்பகிர்மான மின்னமைப்புடன் GISS இன் மின்னிணைப்பிற்கான ஒப்புதலளிப்பிற்குப் பின்பு, ஆனால், அந்த அமைப்பிலிருந்து உள்ளபடியேயான மின்உற்பத்தி தொடங்குவதற்கு முன்பு மின்னிணைப்பு உடன்படிக்கையை எழுதிக் கொடுத்தல் வேண்டும்.

17.2 மின்னிணைப்பு உடன்படிக்கையின் மாதிரி பின்னிணைப்பில் வழங்கப்பட்டுள்ளது. மின்பகிர்மான உரிமதாரர், இந்த ஒழுங்குமுறை விதிகளுக்குடனான இசைவுக்கு உட்பட்டு, தகுந்தவாறு மாற்றியமைக்கலாம்.

17.3 மின்னிணைப்பு உடன்படிக்கையானது, இருபத்தைந்து ஆண்டுகளுக்கு நடைமுறையில் இருக்கும்;

வரம்புரையாக மின்நுகர்வும் உற்பத்தியும் செய்பவர், எந்த நேரத்திலும், மின்பகிர்மான உரிமதாரருக்கு 90 நாட்கள் அறிவிப்பு கொடுப்பதன் மூலம் உடன் படிக்கையை முடிவுறுத்தலாம்.

17.4 மின்பகிர்மான உரிமதாரரின் நிகர மின்னளவிடுதல் ஏற்பாட்டினை இடைநிறுத்த கருதுகிற மின்நுகர்வும் உற்பத்தியும் செய்பவர் / மின்உற்பத்தி செய்பவர் எவருக்கும் குறைந்தது ஒரு மாதத்திற்கு முன்னதாக மின்பகிர்மான உரிமதாரருக்கு கொடுக்கப்பட்ட எழுத்துவடிவிலான அறிவிப்பிற்கு உட்பட்டு அனுமதியளிக்கப்படும்;

வரம்புரையாக மின்நுகர்வும் உற்பத்தியும் செய்பவர் / மின்உற்பத்தியாளர் உடன்படிக்கையின் ஷரத்து எதனையும் மீறுவாறானால் மற்றும் அத்தகைய மீறுகைக்கான பரிகாரத்தை 30 நாட்களுக்குள்ளோ அல்லது அத்தகைய மீறுகைக்கு உரிமதாரரிடமிருந்து அறிவிப்பு பெறுவதற்கு வகை செய்யப்பட்ட பிற நீண்ட கால அளவிற்குள்ளோ அல்லது எழுத்துவடிவில் தெரிவிக்கப்பட்ட பிற சட்டபூர்வமான காரணங்களை செய்யாதிருப்பாரானால், மின்பகிர்வு உரிமதாரர் 30 நாட்கள் அறிவுப்பு அளித்து உடன்படிக்கையை ரத்து செய்யலாம்.

மேலும் வரம்புரையாக மின்நுகர்வும் உற்பத்தியும் செய்பவர்/ மின்உற்பத்தியாளர், உரிய கால முறையில் தன்னால் செலுத்தப்பட வேண்டிய தொகைகளைச் செலுத்தத் தவறும் பட்சத்தில் அல்லது ஒழுங்கற்ற செயல் எதிலும் ஈடுபடும் பட்சத்தில் மின்பகிர்மான உரிமதாரர் 15 நாட்கள் அறிவிப்பு கொடுப்பதன் மூலம் உடன்படிக்கையை முடிவுறுத்தலாம்.

இன்னும் வரம்புரையாக: இந்த உடன்படிக்கையானது பரஸ்பர இசைவின் மூலம் எந்த நேரத்திலும் முடிவுறுத்தப்படலாம்.

17.5 உடன்படிக்கை முடிவுறுத்தப்பட்டத் தேதியன்று பட்டியலிடப்படாத மின்உற்பத்தி எதுவும், மின்பகிர்மான உரிமதாரரால் உடன்படிக்கை முடிவுறுத்தப்பட்ட தேதியிலிருந்து ஒரு மாதத்திற்குள் செலுத்தப்படும்.

17.6 மின்நுகர்வும் உற்பத்தியும் செய்பவர் / மின் உற்பத்தியாளர் உடன்படிக்கை முடிவுறுத்தப்பட்டதன் பேரில், உடனடியாக தம்முடைய GISS அமைப்பை மின்பகிர்மான உரிமதாரரின் மின்கட்டமைப்பிலிருந்து துண்டித்தல் வேண்டும்.

17.7 இந்த உடன்படிக்கையானது, 25 ஆண்டுகள் காலாவதியான பின்பு ஐந்தாண்டுகள் படிமுறை வீதப்படி நீட்டிக்கப்படலாம் மற்றும் உரிமதாரர் மற்றும் மின்நுகர்வும் உற்பத்தியும் செய்பவர், GISS அமைப்பு உற்பத்தி செய்த மின்சாரத்தை தன்னுடைய நீடித்த ஆயுட் கால அளவுவரையில் உடன்படிக்கை நீட்டிக்கப்படுமாறு செய்யலாம்.

18. உத்தரவுகள் பிறப்பிப்பதற்கான அதிகாரம்:

இந்தச் சட்டத்தின் வகைமுறைகளுக்கு உட்பட்டு, ஆணையம், அவ்வப்போது, அத்தகைய உத்தரவுகளை பிறப்பிக்கலாம் மற்றும் இந்த ஒழுங்குமுறை விதிகளை நிறைவேற்றுவதற்காக உரிய நடைமுறைக்கான ஆணைகள் பிறப்பிக்கலாம்.

19. தளர்த்துவதற்கான அதிகாரம்:

ஆணையம், பொது அல்லது சிறப்பு ஆணைவாயிலாக, எழுத்துவடிவில் பதிவு செய்யப்பட வேண்டிய காரணங்களுக்காகவும் அநேகமாக பாதிக்கப்படக்கூடிய தரப்பினர்களுக்கு கேட்கப்படுவதற்கான வாய்ப்பு நல்கியபின்பும் தானே முற்பட்டு அல்லது உரித்தமுடைய நபரினால் தம்முன்பு செய்யப்பட்ட விண்ணப்பத்தின் பேரில், இந்த ஒழுங்குமுறை விதிகளின் வகைமுறைகளில் எதனையும் தளர்த்தலாம்.

July 27, 2022] TAMIL NADU GOVERNMENT GAZETTE 93

20. திருத்தம் செய்வதற்கான அதிகாரம்:

ஆணையம், அவ்வப்போது, பதிவு செய்யப்பட வேண்டிய காரணங்களுக்காக இந்த ஒழுங்குமுறை விதிகளின் வகைமுறைகள் எவற்றையும் சேர்க்கலாம், மாறுதல் செய்யலாம், திருத்தியமைக்கலாம், மாற்றியமைக்கலாம், திருத்தம் செய்யலாம், நிறுத்திவைக்கலாம் அல்லது நீக்கவும் செய்யலாம்.

21. இடர்பாடுகளை அகற்றுவதற்கான அதிகாரம்:

இந்த ஒழுங்குமுறை விதிகளின் வகைமுறைகளைச் செயற்படுத்துவதில் இடர்பாடு எதுவும் எழுமானால், ஆணையம், ஆணையின் மூலம் அத்தகைய இடர்பாட்டினை அகற்றுவதற்கு அவசியமெனத் தோன்றினால், சட்டத்தின் மற்றும் இந்த ஒழுங்குமுறை விதிகளின் வகைமுறைகளுக்கு முரணாக இராத வகையில் தேவையான வகை முறைகளை ஏற்படுத்தலாம்.

(தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் ஆணைப்படி)

சென்னை–600 032, 2022 ஜுலை 11.

C. VEERAMANI, செயலாளர்,

தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம்.

விளக்கவுரை அறிக்கை

2003 ஆம் ஆண்டு மின்சாரச் சட்டத்தின் (மத்தியச் சட்டம் 36/2003) 61, 66, 86(1) (e) ஆம் பிரிவுகளுடன் சேர்த்துப் படிக்கப்படும் 181 ஆம் பிரிவினால் வழங்கப்பட்ட அதிகாரங்களையும் மற்றும் இதன் பொருட்டு அதனை இயல்விக்கும் பிற அதிகாரங்கள் அனைத்தையும் செலுத்தி ஆணையத்தினால் பின்வரும் ஒழுங்குமுறை விதிகள் இயற்றப்படுகிறது.

2. தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தினால் தாக்கல் செய்யப்பட்ட இதர மனு எண்.14, சூரிய மின்சக்திக்கான பொதுப்படையான மின்கட்டணத்தை நிருணயிக்குமாறு ஆணையத்தை கோருகிறது. அவ்வாறு நிருணயிக்கப்பட்ட மின்கட்டணத்தை செயற்படுத்துவதற்காக பல்வேறு இயல்விக்கும் வகைமுறைகளை கொண்ட ஒழுங்குமுறை விதியை இயற்றுவது அவசியமாகும்.

3. ஆணையம் முன்னதாக, 2005 ஆம் ஆண்டு தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணைய (மின்கட்டண வீதத்தை நிருணயிப்பதற்கான ஷரத்துக்கள் மற்றும் நிபந்தனைகள்) ஒழுங்குமுறை விதிகளின் 70 ஆம் ஒழுங்குமுறை விதியின்படி மின்நுகர்வோரிடமிருந்து மின்கட்டமைப்பு செலவுக் கட்டணத்தை மீட்க இயல்விக்கும் வகைமுறையை அறிவிக்கை செய்துள்ளது. (அறிவிக்கை எண். த.மி.ஒ.ஆ/மி.க./5/3, 26-05-21 நாளிட்டது).

4. 2021 ஆம் ஆண்டு மின்சார (மின்நுகர்வோர் உரிமைகள்) திருத்த விதிகள், சட்டத்தின் 181 ஆம் பிரிவின்படி வழங்கப்பட்ட அதிகாரங்களைச் செலுத்தி நிகர – மின்னளவீடு, நிகர – பின்னூட்டம் மற்றும் மொத்த மின்னளவீடு இயங்குமுறை ஆகியவற்றை செயற்படுத்துவதற்காக மின்கட்டமைப்புடன் இணைக்கப்படக் கூடிய சூரிய சக்தி ஒளி வோல்ட் (PV) மின் உற்பத்தி அமைப்புக்கான (GISS) ஒழுங்குமுறை விதியை இயற்றுவதற்கு மாநில ஆணையங்களுக்கு கட்டாயப்படுத்தப்பட்டுள்ளது.

5. மேலேயுள்ள சட்ட தேவைகளின் தொகுப்பு, வேறுபட்ட மின்னளவீடு இயங்குமுறைகளின்படி மின்நுகர்வோர்கள் / மின்நுகர்வும் உற்பத்தியும் செய்பவர்கள் மின் உற்பத்தியாளர்களின் பல்வேறு வகையினருக்கான பொதுப்படையான மின்கட்டணத்தை உருவாக்குவதற்கும் நிருணயிப்பதற்கும் மின்கட்டமைப்புடன் இணைக்கப்படக் கூடிய சூரிய சக்தி ஒளி வோல்ட் (PV) மின் உற்பத்தி அமைப்பிற்குரிய (GISS) ஒழுங்குமுறை விதியை வகுத்து செயற்படுத்துவதற்கான தேவையை உருவாக்குகிறது.

இந்த உத்தேசிக்கப்பட்ட ஒழுங்குமுறை விதிகள் மேலேயுள்ள நோக்கங்களை நிறைவேற்ற விழைகிறது.

(தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் ஆணைப்படி)

சென்னை–600 032, 2022 ஜுலை 11.

C. VEERAMANI, செயலாளர்,

தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம்.

94 [Part VI—Sec. 2 TAMIL NADU GOVERNMENT GAZETTE

படிவம் – 1

மின்கட்டமைப்புடன் இணைக்கப்படக்கூடிய சூரிய சக்தி ஒளிவோல்ட் (PV) மின் உற்பத்தி அமைப்பு முறை

விண்ணப்பப் படிவம்

விண்ணப்ப தாரர்களின்

நிழற்படம் பெறுநர்,

பிரிவு அலுவலர் / சுட்டியமர்த்தப்பட்ட அலுவலர் மின்பகிர்மான உரிமதாரர் (அலுவலகத்தின் பெயர்)

i) நான் / நாங்கள், மின்கட்டமைப்புடன் – இணைக்கப்படக்கூடிய சூரியசக்தி ஒளிவோல்ட் (PV) மின்உற்பத்தி அமைப்பு பின்வரும் விவரங்களடங்கிய மின்னிணைப்புடன் இணைக்கப்படுவதற்கு இத்துடன் விண்ணப்பித்து கோருகிறோம்:

1. விண்ணப்பதாரர்(களின்) பெயர்(கள்) முழுமையாக
2. சூரியசக்தி மின்உற்பத்தி அமைப்பு நிறுவப்படவுள்ள வளாகத்தின் முகவரி
3. கடிதப்போக்குவரத்துக்கான முகவரி
4. மின்னிணைப்பு எண்
5. மின்னிணைப்பிற்கான வீதப்பட்டி
6. ஒப்புதலளிக்கப்பட்ட மின்சுமை / ஒப்பந்தப்படியான மின்தேவை
7. அலைபேசி எண்(கள்)
8. மின்னஞ்சல் முகவரி
9. நிறுவப்படவுள்ள சூரியசக்தி அமைப்பின் உத்தேசிக்கப்படும் AC மின் திறன்.
10. கூரை மீது அல்லது தரை அமைப்பு
11. நிகர மின்னளவீடு/நிகர மின்னூட்டு அளவீடு/ மொத்த மின்னளவீடு
12. சூரியசக்தி இன்வெர்ட்டர், தயாரிப்பாளர் பெயர் வகை, மற்றும் மின்திறன்.
13. சூரியசக்தி இன்வெர்ட்டரில், தானியங்கி தனிமைப்படுத்தி பாதுகாப்பு உள்ளதா? (ஆம்/இல்லை)
14. சூரியசக்தி மின்உற்பத்தி மின்னளவி நிறுவப்பட்டுள்ளதா? (ஆம்/இல்லை)
15. மின்உற்பத்தி மின்னளவியின் தயாரிப்பாளர் பெயர், திறன், வரிசை எண்.
16. எதிர்பார்க்கப்படும் சூரியசக்தி(PV) ஒளி வோல்ட் அமைப்பு இயக்கத் தேதி

ii) நான்/நாங்கள், விதிகள், விதித்தொகுப்புகள், ஒழுங்குமுறை விதிகள் ஆகியவற்றிற்கிணங்க கோரப்படுகிறவாறு கட்டணங்களை செலுத்துவதற்கு ஒப்புக்கொள்கிறோம்.

iii) நான்/நாங்கள், பாதுகாப்பு தொடர்பான ஒழுங்குமுறை விதிகளில் ஆணையிடப்பட்டவறான பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பு தரநிர்ணயங்களுடன் கூடிய நிலையத்தை நிறுவுவதற்கு ஒப்புக்கொள்கிறோம்.

iv) நான்/நாங்கள், ஒழுங்குமுறை விதிகளின்படி உடன்படிக்கை எழுதிக்கொடுக்க ஒப்புக்கொள்கிறோம்.

v) மொத்த மின் அளவீடு ஏற்பாட்டினைப் பொறுத்தவரை, மொத்தம் உற்பத்தி செய்யப்பட்ட மின்சாரத்தை மின்கட்டமைப்பிற்கு உட்செலுத்துவதற்குரிய நான், தனிப்பட்ட மின்னிணைப்பு மின்ெ தாடர் நிறுவுவதற்கான, முழுச்செலவுத் தொகையையும் ஏற்றுக் கொள்கிறேன்.

தேதி

பெயர்(கள்)

கையொப்பங்(கள்)July 27, 2022] TAMIL NADU GOVERNMENT GAZETTE 95 மின்கட்டமைப்பு – இணைக்கப்படக்கூடிய சூரியசக்தி மின்சக்தி விண்ணப்பத்தின் ஒப்புகை மின்கட்டமைப்பு – இணைக்கப்படக்கூடிய சூரியமின் உற்பத்தி அமைப்பிற்காகப் பெறப்பட்ட விண்ணப்பம்.

பெயர்(கள்)

:

தேதி

:

மின்னிணைப்பு எண்

:

விண்ணப்ப பதிவு எண்

:

சூரியசக்தி நிலைய மின்திறன்

:

நிகர மின்னளவீடு / நிகர பின்னூட்டம்/மொத்த மின்னளவீடு :

அலுவலரின் பெயர்

:

கையொப்பம்

:

:

பதவிப்பெயர் / உரிமதாரர் (பதிவேற்றம் செய்யப்பட வேண்டிய) விண்ணப்பத்துடன் இணைக்கப்பட்ட ஆவணங்களின் பட்டியல்.

1. தரையில் அமைக்கப்படும் சூரிய சக்தி மின்உற்பத்தி அமைப்பாக இருக்குமேயானால் உடைமையுரிமை சான்று குத்தகைப் பத்திரம்.

2. பதிவுக்கட்டணம் செலுத்தியதற்கான நிரூபணம்.

3. மொத்த அளவீடாக இருக்குமேயானால் : வளாகத்தினுடைய தளவமைப்பு மின்னளவி வைக்கப்பட்டுள்ள மின்னிணைப்பு இடம், சேவை மின்தொடரின் அமைவு முதலியவற்றைக் காட்டும் வரைபடம்.

******

படிவம் – 2

மின்கட்டமைப்புடன் இணைக்கப்படக்கூடிய சூரிய சக்தி ஒளிவோல்ட் (PV) மின்உற்பத்தி அமைப்பு (GISS) – உடன்படிக்கை இந்த உடன்படிக்கையானது, ............................. நாளில் ......................... மாதத்தில்...................ஆண்டில்....................

இடத்தில்,....................(முகவரி)யில் குடியிருந்து வரும் தகுதியுடைய மின்நுகர்வோர் / மின்நுகர்வும் உற்பத்தியும் செய்பவர் / மின்உற்பத்தியாளர் முதல் தரப்பினருக்கும் ..............................................................................................................................................

......................................................................................................................................................................................................................

.......................மற்றும் ............................................................. மின்பகிர்மான உரிமதாரர் (இதன்பின்பு உரிமதாரர் என்று அழைக்கப்படும்) அவருடைய பதிவு செய்யப்பட்ட அலுவலகத்தை ......................... (முகவரி) என்ற இடத்தில் கொண்டிருக்கும் ..........................

.........உடன்படிக்கையின் இரண்டாம் தரப்பினருக்கும் இடையே ஏற்படுத்தப்படுகிறது:

மற்றும் உரிமையாளர் (மின்கட்டமைப்பில் இணைக்கப்படக்கூடிய (PV) ஒளிவோல்ட் மின்உற்பத்தி அமைப்பு) தகுதியுடைய மின் நுகர்வோரின் / மின்நுகர்வும் உற்பத்தியும் செய்பவரின்/ மின்உற்பத்தியாளரின் GISS –க்கு ஒப்பந்தப்படியான மின்திறன் ....................வாட்டிற்கு ............................... என்ற வளாகத்தில், நிகர மின்னளவிடுதல் / நிகரமின்னூட்டம்/மொத்த மின்அளவீட்டு இயங்குமுறைக்கு, அவ்வப்போது தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தினால் பிறப்பிக்கப்படும் ஒழுங்குமுறை விதிகள் / ஆணைகளில் நிபந்தனைகளின்படி மின்னிணைப்பு செய்வதற்கு அனுமதியளிக்க இந்த உடன்படிக்கையின்படி உடன்படுகிறார்.

மேலும், இரண்டுதரப்பினர்களும் இந்த உடன்படிக்கையின் மூலம் பின்வருமாறு ஒத்துக்கொள்கின்றனர் :

1. தகுதியுடைமை

நிகர மின்னளவீடு/நிகர மின்னூட்டம் / மொத்த மின்னளவீடு, ஆகியவற்றிற்கான தகுதியுடைமை திருத்தம் செய்யப்பட்டவாறு தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் தொடர்புடைய ஒழுங்குமுறை விதிகளில் / விதித்தொகுப்புகளில் / ஆணைகளில் குறித்துறைக்கப்பட்டவாறு இருக்கும். முன்னதாக தகுதியுடைய மின்நுகர்வோர் / மின்நுகர்வும் உற்பத்தியும் செய்பவர் / மின் உற்பத்தியாளர் மின்கட்டமைப்பு உரிமதாரரின் மின்பகிர்மான அமைப்புடன் ஒருங்கிணைந்து அவருடைய அமைப்பு பாதுகாப்பாக இயங்குவதற்கு உண்டான நிலைகள் மற்றும் நிபந்தனைகளை அறிந்திருக்க வேண்டும்.

2. தொழில்நுட்ப மற்றும் இடை இணைப்பு தேவைப்பாடுகள்

2.1. தகுதியுடைய மின்நுகர்வோர் / மின்நுகர்வும் உற்பத்தியும் செய்பவர் / மின்உற்பத்தியாளர், தம்முடைய GISS மின்உற்பத்தி ஆலை / நிலையம் அவ்வப்போது திருத்தம் செய்யப்பட்ட பின்வரும் ஒழுங்குமுறை விதிகளில் மற்றும் விதித்தொகுப்புகளில் குறித்துரைக்கப்பட்ட செந்தரங்களுக்கும் தேவைப்பாடுகளுக்கும் இணங்கி இருக்கிறது என்று ஒத்துக் கொள்கிறார்.

96 [Part VI—Sec. 2 TAMIL NADU GOVERNMENT GAZETTE

(i) 2013ஆம் ஆண்டு மத்திய மின்சார அதிகார அமைப்பு (மின்பகிர்மானம் செய்யப்பட்ட மின்உற்பத்தி வள ஆதாரங்களின் மின்னிணைப்பு தொழில்நுட்ப செந்தரங்கள்) ஒழுங்குமுறை விதிகள்.

(ii) 2006ஆம் ஆண்டு மத்திய மின்சார அதிகார அமைப்பு (மின்னளவிகள் நிறுவுதல் மற்றும் இயக்குதல்)– ஒழுங்குமுறை விதி.

(iii) 2010ஆம் ஆண்டு மத்திய மின்சார அதிகார அமைப்பு (பாதுகாப்பான நடவடிக்கைகள் மற்றும் மின் வழங்கல்) – ஒழுங்குமுறை விதி

(iv) 2021ஆம் ஆண்டு தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் (மின்கட்டமைப்புடன் இணைக்கப்படக்கூடிய சூரிய மின்சக்தி ஒளிவோல்ட் (PV) மின் உற்பத்தி அமைப்பு) ஒழுங்குமுறை விதி.

(v) தமிழ்நாடு மின்பகிர்மான விதித் தொகுப்பு

(v) தமிழ்நாடு மின்வழங்கல் விதித் தொகுப்பு.

2.2 தகுதியுடைய மின்நுகர்வோர் / மின்நுகர்வும் உற்பத்தியும் செய்பவர் / மின் உற்பத்தியாளர், உரிமதாரரின் மின்பகிர்மான அமைப்பிற்கு GISS இன் இணைப்பிற்கு முன் தனிப்படுத்தும் சாதனம் (தானியங்கி மற்றும் இன்வெர்ட்டருக்குள் உள்ளமைக்கப்பட்ட மற்றும் வெளிப்புற ஆளியக்க உணர்த்திகள் ஆகிய இரண்டையும்) அவர் நிறுவவுள்ளதாக / நிறுவ விரும்பியுள்ளதாக ஒப்புக் கொண்டுள்ளார் மற்றும் தேவைபடுமானால் மின்பகிர்மான அமைப்பை பழுதுபார்ப்பதற்கும் பராமரிப்பதற்காகவும் உரிமதாரர் இதனை அணுகுவதற்கும் இயக்குவதற்கும் ஒப்புக்கொள்கிறார்.

2.3 தகுதியுடைய மின்நுகர்வோர் / மின்நுகர்வும் உற்பத்தியும் செய்பவர்/ மின்உற்பத்தியளார், உரிமதாரரின் அமைப்பில் மின்சாரம் நின்று போனால் GISS ஆனது தானாகவே இயக்கத்தை நிறுத்தும் என்றும் மின்சாரத்தை உற்பத்தி செய்யாது என்றும் உடன்படுகிறார்.

2.4 மின்பகிர்மான அமைப்புடன் இணைக்கப்பட்ட சாதனம் அனைத்தும், தொடர்புடைய பன்னாட்டு (IEEE/IEC) அல்லது இந்தியச் செந்தரங்களுக்கும் (BIS) இணங்கவுள்ளது மற்றும் மின்சார செயற் கருவி பாதுகாப்பு சாதனங்கள், நில இணைப்பு தரநிலை முதலியவை, அவ்வப்போது திருத்தம் செய்யப்பட்ட 2010ஆம் ஆண்டு மத்திய மின்சார அதிகார அமைப்பு (பாதுகாப்பு நடவடிக்கைகள் மற்றும் மின்வழங்கல்) ஒழுங்குமுறை விதிகளுக்கு இணங்கி இருக்க வேண்டும்.

2.5 தகுதியுடைய மின்நுகர்வோர்/ மின்நுகர்வும் உற்பத்தியும் செய்பவர் / மின்உற்பத்தியாளர், இடைமுக/இடை இணைப்பு முனை மற்றும் மின்னளவீடு முனைகளை உரிமதாரர் முடிவு செய்ய உடன்படுகிறார்.

2.6 தகுதியுடைய மின்நுகர்வோர் / மின்நுகர்வும் உற்பத்தியும் செய்பவர் / மின்உற்பத்தியாளர் மற்றும் உரிமதாரர், நிலையத்தின் கள, இயக்குதலும் பராமரித்தலுக்கும் உண்டான மனைப்பொறுப்பு அட்டவணை, கிளையலைகள், ஒத்தியங்குகை, மின்னழுத்த அலைவெண், இமைத்தல் முதலியவை பொறுத்து தொடர்புடைய மத்திய மின்சார அதிகார அமைப்பு ஒழுங்கு விதிகளுக்கு இணங்கி நடக்க ஒப்புக்கொள்கிறார்கள்.

2.7 பாதுகாப்பான மற்றும் நம்பகத்தன்மையுடைய மின்பகிர்மான அமைப்பை பராமரிக்கும் உரிமதாரரின் கட்டுப்பாட்டின் பொருட்டு தகுதியுடைய மின்நுகர்வோர் / மின்நுகர்வும் உற்பத்தியும் செய்பவர் / மின்உற்பத்தியாளர், தகுதியுடைய மின்நுகர்வோரின் / மின்நுகர்வும் மின்உற்பத்தியும் செய்பவரின் / மின்உற்பத்தியாளரின் GISS க்கு ஒன்று சேதம் விளைவிக்க மற்றும் / அல்லது எதிரான விளைவுகளைப் பாதிக்கும் பிற மின்நுகர்வோர் அல்லது உரிமதாரரின் சொத்திருப்புகள், மின்நுகர்வோர் / மின்நுகர்வும் உற்பத்தியும் செய்பவர் / மின்உற்பத்தியாளர் உரிமதாரரிடமிருந்தான உத்தரவின் பேரில் மின்பகிர்மான அமைப்பிலிருந்து உடனடியாக தம்முடைய GISS அமைப்பை துண்டிப்பு செய்யவும் மற்றும் மறு மின்னிணைப்பு பெறுவதற்கு முன்பு தம்முடைய சொந்தச் செலவில் அந்தப் பிரச்சனையை சரி செய்யவும் சம்மதிக்கிறார்.

2.8 இந்த உடன்படிக்கையின் இரண்டு தரப்பினர்களும், 2021ஆம் ஆண்டு தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் (மின்கட்டமைப்புடன் இணைக்கப்படக்கூடிய சூரியசக்தி ஒளிவோல்ட் (PV) மின் உற்பத்தி அமைப்பு முறைகள், ஒழுங்குமுறை விதி மற்றும் தொடர்புடைய தமிழ்நாடு ஒழுங்குமுறை ஆணையத்தின் ஒழுங்குமுறை விதிகள், விதித்தொகுப்புகள் மற்றும் ஆணைகள் அனைத்து சட்டங்களுக்கும் உட்படுத்தப்பட்டுள்ளனர்.

3. தடைநீக்கங்கள் மற்றும் ஒப்புதலளிப்புகள்:

3.1 தகுதியுடைய மின்நுகர்வோர்/மின்நுகர்வும் உற்பத்தியும் செய்பவர்/மின்உற்பத்தியாளர், மின்பகிர்மான அமைப்புடன் GISS இன் மின்னிணைப்பிற்கு முன்பு (சுற்றுச் சூழல் மற்றும் மின்கட்டமைப்பின் தொடர்புடைய ஒப்புதலளிப்புகள்) அவசியமான ஒப்புதல்கள் மற்றும் தடைநீக்கச் சான்றிதழ்கள் அனைத்தையும் பெறுவதற்கு ஒப்புக் கொள்கிறார்.

4. அணுகுகை மற்றும் மின்துண்டிப்பு:

4.1 தகுதியுடைய மின்நுகர்வோர் / மின்நுகர்வும் உற்பத்தியும் செய்பவர் / மின்உற்பத்தியாளர், GISS இன் மின் அளவீடு கருவி மற்றும் மின்துண்டிப்பு சாதனங்களை உரிமதாரர் அணுகுவதற்கு உண்டான வழிவகை செய்ய வேண்டும்.

July 27, 2022] TAMIL NADU GOVERNMENT GAZETTE 97

4.2 நெருக்கடியான அல்லது மின்தடங்கள் சூழ்நிலைகளில், மின்விசை அல்லது பிரிகலன் போன்ற தானியங்கி மற்றும் ஆளியக்க மின்துண்டிப்பு வழிகளை அணுக முடியாத பட்சத்தில் உரிமதாரர் வளாகத்திற்கு மின்னிணைப்பை துண்டிக்கலாம்.

4.3 இந்த உடன்படிக்கையின் முடிவுறுத்தத்தின் பேரில் தகுதியுடைய மின்நுகர்வோர் /மின்நுகர்வும் உற்பத்தியும் செய்பவர்/ மின் உற்பத்தியாளர், உரிமதாரரின் மின்னமைப்பிலிருந்து உடனடியாக, சூரியசக்தி அமைப்பை துண்டிப்பு செய்தல் வேண்டும்.

5. கடப்பாடுகள்.

5.1 தகுதியுடைய மின்நுகர்வோர் / மின்நுகர்வும் மின்உற்பத்தியும் செய்பவர் / மின்உற்பத்தியாளர் மற்றும் உரிமதாரர், GISS இன் அல்லது உரிமதாரரின் மின்பகிர்மான அமைப்பின் மின்னிணைப்பு மற்றும் இயக்கத்தில் ஒன்று தரப்பினரின் அலட்சியம் அல்லது வேண்டுமென்றேயான தவறான நடத்தையிலிருந்து சேதங்கள் அல்லது எதிரான விளைவுகளிலிருந்து ஒருவரோடொருவர் ஈட்டுறுதி செய்தல் வேண்டும்.

5.2 உரிமதாரர் மற்றும் தகுதியுடைய மின்நுகர்வோர் / மின்நுகர்வும் மின்உற்பத்தியும் செய்பவர் / மின்உற்பத்தியாளர், இலாப நஷ்ட அல்லது வருவாய்கள் எவற்றிற்காகவும், தொழில் இடையூறு இழப்புகள், ஒப்பந்த இழப்பு அல்லது நற்பெயர் இழப்பு அல்லது மறைமுகமான பின் விளைவாக எழுகிற, இடைவிளைவாக எழுகிற அல்லது சிறப்பின இழப்புகள் உள்ளடங்கலாக ஆனால், வரப்பிடப்படாத ஒப்பந்தத்தில் எழும் தண்டிப்பு அல்லது முன்மாதிரியான இழப்புகள், போன்ற காரணங்களினாலான இழப்பு அல்லது சேதங்கள் ஆகியவற்றிற்கு ஒருவருக்கு ஒருவர் பொருப்பாளர்கள் ஆக மாட்டார்கள்.

5.3 உரிமதாரர், ஆணையத்தினால், தன்னுடைய பொருத்தமான ஆணையில் குறித்துரைக்கப்பட்ட அளவுகைக்கு அப்பால் மத்திய / மாநில அரசினால் வகைசெய்யப்பட்ட நிதி அல்லது பிற ஊக்கத்தொகை எதற்காகவும் தகுதியுடைய மின்நுகர்வோர் / மின்நுகர்வும் உற்பத்தியும் செய்பவர் / மின்உற்பத்தியாளரால் ஒப்புவிப்பு அல்லது வசூலிப்பிற்கு பொருப்பாளராக மாட்டார்.

6. வணிகத்தீர்வு

6.1 இந்த உடன்படிக்கையின்படி தகுதியுடைய மின்நுகர்வோர் / மின்நுகர்வும் உற்பத்தியும் செய்பவருக்கு / மின்உற்பத்தியாளருக்கு ............................... மின்னளவீடு இயங்குமுறையின்படி ……………… (ரூபாய்………………………………………), தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணை ............................................. நாளிட்ட ஆணைகளின்படி உரிமதாரரால் செலுத்தப்பட வேண்டிய ஒப்பந்தபடியான மின்னூட்ட மின்கட்டணம் ஆகும்.

6.2 மின்னளவீட்டு முறை, பட்டியலிடல் மற்றும் பிற கட்டணங்கள் அனைத்தும் மற்றும் இந்த உடன்படிக்கையின்படியான வணிகத் தீர்வு அவ்வப்போது திருத்தம் செய்யப்பட்ட தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் ஒழுங்குமுறை விதிகள் / விதித்தொகுப்புகள் / ஆணைகளின்படி இருக்கும்.

6.3 தகுதியுடைய மின்நுகர்வோர் / மின்நுகர்வும் உற்பத்தியும் செய்பவர் / மின்உற்பத்தியாளருக்கு, அவருடைய சூரியசக்தி அமைப்பு, மின்கட்டமைப்பில் மின்வழங்கல் தடையின் பொருட்டு உரிமதாரரின் மின்னமைப்பிற்கு மின்சாரத்தை உட்செலுத்த இயலாதிருக்குமானால், உரிமதாரர் ஈடுசெய்வதற்கு உள்ளாக மாட்டார்.

7. இணைப்பு மற்றும் பராமரிப்பு செலவுகள்

7.1 தகுதியுடைய மின்நுகர்வோர் / மின்நுகர்வும் உற்பத்தியும் செய்பவர் / மின்உற்பத்தியாளர், மின்சாரம் வெளியேற்றுதல் செலவுகளுக்காக மின்னளவிடுதல் மற்றும் இடையிணைப்பு மற்றும் உள்கட்டமைப்பு உள்ளடங்கலாக ஒளி வோல்ட் அமைப்பை அமைப்பதற்கு தொடர்புடைய செலவுகள் அனைத்தையும் ஏற்றுக்கொள்ளுதல் வேண்டும்.

7.2 தகுதியுடைய மின்நுகர்வோர்/ மின்நுகர்வும் உற்பத்தியும் செய்பவர் /மின்உற்பத்தியாளர், மாற்றியமைத்தல்கள் மற்றும் மின்னிணைப்பு மின்தொடரை தரம் உயர்த்துவதற்கும் / அது தேவைப்படும் நேர்வில், GISS யுடன் இணைப்பதற்கு வேண்டுறுத்தப்படும் மின்சார வெளியேற்றுதல் மின்தொடர் ஆகியவற்றிற்கு உள்ளபடியேயான செலவை செலுத்துவதற்கு உடன்படுகிறார்.

7.3 மொத்த மின்னளவி ஏற்பாட்டினைப் பொறுத்தவரை, தகுதியுடைய மின்நுகர்வோர் மின்உற்பத்தியாளர் தன்னுடைய மொத்த உற்பத்தி செய்யப்பட்ட மின்சாரத்தை வெளியேற்றி மின்கட்டமைப்பிற்குள் செலுத்துவதற்கு, நிறுவுதல் மற்றும் தனிப்பட்ட மின்னிணைப்பு மின்தொடர் பராமரிப்பிற்கு செலவு முழுவதையும் ஏற்றுக்கொள்ளுதல் வேண்டும்.

98 [Part VI—Sec. 2 TAMIL NADU GOVERNMENT GAZETTE

8. உடன்படிக்கை கால அளவு மற்றும் முடிவுறுத்தல்

8.1 இந்த உடன்படிக்கை இருபத்து ஐந்து ஆண்டுகள் கால அளவிற்கு இருக்கும். ஆனால், பரஸ்பர சம்மதத்துடன் முன்னதாகவே முடிவுறுத்தப்படலாம்.

8.2 தகுதியுடைய மின்நுகர்வோர் / மின்நுகர்வும் மின்உற்பத்தியும் செய்பவர் / மின்உற்பத்தியாளர், உரிமதாரருடனான உடன்படிக்கையை எந்த நேரத்திலும் 90 நாட்கள் முன் அறிவிப்பு கொடுத்து முடித்துக்கொள்ள முடியும்.

8.3 தகுதியுடைய மின்நுகர்வோர் /மின்நுகர்வும் உற்பத்தியும் செய்பவர் மின்உற்பத்தியாளர், இந்த உடன்படிக்கையின் ஷரத்துகளை மீறுவாரானால் மற்றும் உரிமதாரரிடமிருந்து எழுத்துவடிவிலான அறிவிப்பு பெற்ற தேதியிலிருந்து 30 நாட்களுக்குள் அந்த மீறுகைக்கு பரிகாரம் செய்யப்படவில்லை என்றால், உரிமதாரர் 30 நாட்கள் எழுத்து வடிவிலான முன் அறிவிப்பின் பேரில் உடன்படிக்கையை முடிவுறுத்துவதற்கு உரிமையுடையவராவார்.

8.4 தகுதியுடைய மின்நுகர்வோர் / மின்நுகர்வும் உற்பத்தியும் செய்பவர் /மின்உற்பத்தியாளர், உரிய கால முறையில் தாம் செலுத்த வேண்டிய தொகைகளைச் செலுத்தத் தவறுகிற அல்லது ஒழுங்கற்ற செயல் எதிலும் ஈடுபடும் நேர்வில், 15 நாட்கள் அறிவிப்பு கொடுத்த பின்பு, உடன்படிக்கையை முடிவுறுத்துவதற்கு உரிமதாரர் உரிமையுடையவராவார்.

8.5 தகுதியுடைய மின்நுகர்வோர் / மின்நுகர்வும் உற்பத்தியும் செய்பவர் / மின்உற்பத்தியாளர், உடன்படிக்கையை முடிவுறுத்துவதன் பேரில், உரிமதாரரின் மின்பகிர்மான அமைப்பிலிருந்து உரியகால முறையில் மற்றும் உரிமதாரருக்கு திருப்தி ஏற்படும் வகையில் மின்கட்டமைப்புடன் இணைக்கப்படக்கூடிய சூரிய சக்தி ஒளிவோல்ட் (PV) மின்உற்பத்தி அமைப்பை மின்துண்டிப்பு செய்தல் வேண்டும்.

சாட்சியின் பேரில், திரு........................ (தகுதியுடைய மின்நுகர்வோர் /மின் நுகர்வும் உற்பத்தியும் செய்பவர் / மின் உற்பத்தியாளர்) ........................ சார்பாகவும், மற்றும் திரு........................ அவர்கள்....................... (உரிமதாரர்) சார்பாகவும் இந்த இரண்டு அசல் உடன்படிக்கைகளில் கையொப்பமிடுகிறார்கள்.

மின்பகிர்மான உரிமதாரர்

பெயர்

தகுதியுடைய மின்நுகர்வோர்/ மின்நுகர்வும் உற்பத்தியும் செய்பவர்/ மின் உற்பத்தியாளர் பெயர்

(தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் ஆணைப்படி)

சென்னை–600 032, 2022 ஜுலை 14.

C. VEERAMANI, செயலாளர்,

தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம்.

GOVERNMENT EXAMINATIONS / EDUCATIONAL OFFICERS

LOSS OF CERTIFICATES

It is hereby notified that the Original Higher Secondary Certificates / Matriculation Certificates / Diploma Certificates / School Certificates of the following pupils are reported to have been lost beyond recovery. Necessary steps are being taken to issue the duplicate of the said Certificates. If the Originals were to be found by anybody, they should be treated as invalid and sent to the Secretary, Board of Higher Secondary Examination / Directorate of Government Examinations, Chennai-6 / Director of Technical Education, Chennai-25 / Inspector / Inspectress of Matriculation and Anglo-Indian Schools as the case may be for cancellation:–

Name of the

Month

C.N.C.

Register

Certificate

Details of

Reference

Candidate and

and Year

Number

Number

Number

Examination

Number and Date

Institution

(1) (2) (3) (4) (5) (6)

(7) No.VI(2)/74/2022.

673934 SC

Arumugadevi, N. (04-05-1976)

718846

August 2014

கடித எண். 112323/ட்டி3/2022, 04-07-2022.

Typewriting English Senior First ClassJuly 27, 2022] TAMIL NADU GOVERNMENT GAZETTE 99

தமிழ்நாடு அரசு

தொழில்நுட்பக் கல்வி இயக்ககம், சென்னை-600 025

மூலச்சான்றிதழ் கள் ரத்து செய் தல் பற்றிய அறிவிக்கை

(கடித எண். 109986/ட்டி3/2022, 7-07-2022)

கீழ்க்காணும் நபர் தேர்வு விதிகளுக்கு முரணாக தேர்வெழுதி தேர்ச்சி பெற்றுள்ளது தேர்வு விதிகளை மீறிய செயலாகும். எனவே இது குறித்து சம்பந்தப்பட்டவர்களுக்கு அறிவிப்பது யாதெனில் கீழ்க்காணும் சான்றிதழ் ரத்து செய்யப்பட்டுவிட்டது. எனவே இச்சான்றிதழ்கள் செல்லுபடியாகாது எனவும் இச்சான்றிதழ்களை எந்த ஒரு பணி நியமனத்திற்கும் பயன்படுத்தக்கூடாது எனவும் தெரிவித்துக்கொள்ளப்படுகிறது.

No.VI(2)/75/2022.

பெயர்

பதிவு

மற்றும்

வ. எண்.

பாடம் வகுப்பு ஆண்டு சான்றிதழ் எண் எண்.

பிறந்த தேதி.

(1) (2) (3) (4) (5) (6) (7) 337279 Typewriting

February 2014 SC 1 Sandeep Kumar S.

(17-12-1999)

768689

English Senior

First Class with Distinction

337279 Typewriting

Do. SC 2 Sandeep Kumar S.

(17-12-1999)

723507

Tamil Senior

First Class with Distinction

680781 Shorthand

February 2020 GTE 3 Sandeep Kumar S.

(17-12-1999)

755560

Tamil Senior

First Class with Distinction

680781 Shorthand First Class Do. GTE 4 Sandeep Kumar S.

(17-12-1999)

755124

English Senior

K. பிரபாகரன், கூடுதல் இயக்குநர் (தேர்வுகள்) (மு.கூ.பொ),

தேர்வு வாரியம்,

தொழில்நுட்பக் கல்வி இயக்ககம்,

சென்னை-600 025.

PRINTED AND PUBLISHED BY THE COMMISSIONER OF STATIONERY AND PRINTING, CHENNAI ON BEHALF OF THE GOVERNMENT OF TAMIL NADU

Cite this issue. Tamil Nadu Gazette, Government of Tamil Nadu, 27 July 2022. Indian Gazettes, https://egazette.servantsofknowledge.in/details/in.gazette.tamilnadu.2022-07-27.Ordinary_30_Part-VI_Section-2/. Archive identifier in.gazette.tamilnadu.2022-07-27.Ordinary_30_Part-VI_Section-2.