© [Regd. No. TN/CCN/467/2012-14. தமிழ்நாடு அரசு [R. Dis. No. 197/2009. 2022 [விலை : ரூ. 1.60 காசு
| தமிழ்நாடு அரசிதழ் ஆணையின்படி வெளியிடப்பட்டது. | ||
எண் 32] சென்னை, புதன்கிழமை, ஆகஸ்ட் 10, 2022 ஆடி 25, சுபகிருது, திருவள்ளுவர் ஆண்டு-2053
பகுதி IV—பிரிவு 2 இன் இணைப்பு
2022 ஜூன் 29 ஆம் நாளன்று ஆளுநரால் பிறப்பிக்கப்பட்ட பின்வரும் அவசரச் சட்டமானது இதன் மூலம் பொதுத்தகவலுக்காக வெளியிடப்படுகிறது:-
தமிழ்நாடு அவசரச் சட்ட எண். 2/2022.
1920 ஆம் ஆண்டு தமிழ்நாடு மாவட்ட ந௧ராட்சிகள் சட்டத்தை மேலும் திருத்தம்
செய்வதற்கானதொரு அவசரச் சட்டம்.
தமிழ்நாடு சட்டமன்றமானது, அமர்வில் இல்லாதிருப்பதால் மற்றும் தமிழ்நாடு
ஆளுநர் இதில் இதன்பின்பு காணப்படுகின்ற நோக்கங்களுக்காக உடனடியாக
நடவடிக்கை எடுப்பது அவருக்கு அவசியமாக்குவதாக தற்போதுள்ள சூழ்நிலைகள்
இருப்பதாக மனநிறைவடைந்திருப்பதால்;
ஆகையால், அரசமைப்பின் 213 ஆம் உறுப்பின் (1)ஆம் கூறால்
அளிக்கப்பட்டுள்ள அதிகாரங்களைப் பயன்படுத்தி ஆளுநர் இதன் மூலம் பின்வரும்
அவசரச் சட்டத்தை பிறப்பிக்கிறார்:-
குறுந்தலைப்பு 1. (1) இந்த அவசரச் சட்டம், 2022 ஆம் ஆண்டு தமிழ்நாடு மாவட்ட
நகராட்சிகள் (திருத்த) அவசரச் சட்டம் என வழங்கப்பெறும்.
மற்றும் தொடக்கம்.
(2) இது, உடனடியாக நடைமுறைக்கு வருதல் வேண்டும்.
தமிழ்நாடு சட்டம்
3-UU எனும் புதிய 2. 1920 ஆம் ஆண்டு தமிழ்நாடு மாவட்ட நகராட்சிகள் சட்டத்தின்
V/1920.
3-Uஆம் பிரிவிற்குப் பின்பு, பின்வரும் பிரிவானது உட்புகுத்தப்படுதல் வேண்டும்,
பிரிவினை உட்புகுத்தல்.
அதாவது:-
IV-2(32)(T-Sup)-1
[1]2 "3-UU. குறித்த சில நேர்வுகளில் பேரூராட்சிகளுக்கு தனி அலுவலரை
நியமனம் செய்தல்.-- (1) இந்தச் சட்டம் அல்லது தற்போதைக்கு நடைமுறையிலுள்ள
பிற சட்டம் எதிலும் அடங்கியிருப்பது எவ்வாறிருப்பினும் தேர்தல் செயல்முறைக்கு
வழிமுறை செய்த பின்பும், 2022-ஆம் ஆண்டு ஜூலை திங்கள் 1 ஆம்
தேதியன்று அமைத்துருவாக்க முடியாத கடம்பூர் பேரூராட்சியினை பொறுத்த
வரையில், மாநில அரசானது, அறிவிக்கையின் வாயிலாக பேரூராட்சிகளுக்கான
சாதரண தேர்தலுக்குப் பின்னர் நடைபெறும் முதல் மன்றக் கூட்டம் நடைபெறும்
வரை அல்லது 2022-ஆம் ஆண்டு டிசம்பர் திங்கள் 31ஆம் நாள் வரை, இதில் எது முந்தையதோ அது வரை, கூறப்பட்ட பேரூராட்சிகளின் அதிகாரங்களைச் செயலுறுத்துவதற்கும் செயற்பணிகளைச் செய்து முடிப்பதற்கும் தனி அலுவலர் ஒருவரை நியமனம் செய்யலாம்."3
விளக்கவுரை
மாண்பமை சென்னை உயர்நீதிமன்றத்தின் 2016 அக்டோபர் திங்கள் 4ஆம் தேதியிட்ட நீதிப்பேராணை மனு எண்.33984/2016-இன் ஆணைக்கிணங்கி பேரூராட்சிகள், நகராட்சிகள் மற்றும் மாநகராட்சிகளில் தனி அலுவலர்கள் பணியமர்த்தப்பட்டனர். பேரூராட்சிகள், நகராட்சிகள் மற்றும் மாநகராட்சிகளின் கூறப்பட்ட தனி அலவலர்களின் பதவிக் காலமானது அவ்வப்போது நீட்டிக்கப்பட்டது மற்றும் இறுதியாக 2022ஆம் ஆண்டு ஜூன் 30 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது.
2. பின்னர், மாநிலத்திலுள்ள அனைத்து நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கும், அதாவது 21 மாநகராட்சிகள், 110 நகராட்சிகள் மற்றும் 490 பேரூராட்சிகளுக்கு சாதாரண தேர்தல்களானது 19.02.2022 அன்று நடைபெறும் என அறிவிக்கப்பட்டது மற்றும் தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள கடம்பூர் பேரூராட்சி தவிர்த்து கூறப்பட்ட அனைத்து உள்ளாட்சி அமைப்புகளுக்கும் தேர்தல்களானது நடத்தப்பட்டது.
3. தேர்தல் அலுவலர்கள் மற்றும் உதவி தேர்தல் அலுவலர்களால் 05.02.2022 அன்று வேட்பு மனுக்கள் பரிசீலனை செய்த நாளில், 2006 ஆம் ஆண்டு தமிழ்நாடு பேரூராட்சிகள், நகராட்சிகள் மற்றும் மாநகராட்சிகள் (தேர்தல்) விதிகளின் வகைமுறைகள் பின்பற்றப்படாததால், தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள கடம்பூர் பேரூராட்சியின் தொடர்புடைய அனைத்து சிற்றொகுதிகளிலும் தேர்தல் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அரசின் கவனத்திற்கு தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையமானது கொண்டு சென்றுள்ளது. மேலும், சென்னை உயர்நீதிமன்றமானது, நீதிப்பேராணை மனு (MD) எண்கள் 3131, 3132 மற்றும் 3133/2022-இன் 27.04.2022ஆம் தேதியிட்ட ஆணையின் மூலம் ஆணையம் மற்றும் பிற பிரதிவாதிகள் 14.06.2022 வரை கூறப்பட்ட பேரூராட்சியின் சிற்றொகுதி உறுப்பினர்களின் பதவிக்கு தேர்தல் நடத்துவதைத் தடை செய்துள்ளது.
4. மாண்பமை உயர்நீதிமன்றத்தின் ஆணையினைக் கருத்தில் கொண்டு, 30.06.2022ஆம் தேதிக்கு முன்னர் தூத்துக்குடி மாவட்டத்தின் கடம்பூர் பேரூராட்சிகளின் சிற்றொகுதி உறுப்பினர்களின் பதவிக்கு தேர்தலை நடத்தும் நிலையில் தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையமானது இல்லை, அத்தேதியில் கூறப்பட்ட கடம்பூர் பேரூராட்சியின் தனி அலுவலரின் பதவிக் காலமானது முடிவடைகிறது.
5. கூறப்பட்ட சூழ்நிலையில், 1920ஆம் ஆண்டு தமிழ்நாடு மாவட்ட நகராட்சிகள் சட்டத்தினை (தமிழ்நாடு சட்டம் V/1920) தக்கவாறு திருத்தம் செய்வதன் மூலம் தூத்துக்குடி மாவட்டத்தின் கடம்பூர் பேரூராட்சியின் தனி அலுவலர்களின் பதவிக் காலத்தை 01.07.2022 முதல் 31.12.2022 வரை மேலும் ஆறு மாதங்களுக்கு அல்லது கூறப்பட்ட பேரூராட்சியின் சாதாரண தேர்தலுக்கு பின்னர் நடத்தப்படும் மன்றத்தின் முதல் கூட்டம் வரை இவற்றில் எது முந்தையதோ, அது வரையில் நீட்டிப்பதென அரசானது முடிவு செய்துள்ளது.
6. இந்த அவசரச் சட்டம் மேற்சொன்ன முடிவிற்கு செயல்வடிவம் கொடுக்க விழைகிறது.
(ஆளுநரின் ஆணைப்படி)
ச. கோபி ரவிகுமார்,
அரசு செயலாளர் (சட்டமியற்றல்),
சட்டத்துறை.
(தமிழாக்கம்)
வெ. அரசகுமார்,
உதவி இயக்குநர்,
சட்ட (தமிழ்ப்பிரிவு)த் துறை.
தமிழ்நாடு அரசுக்காக சென்னை எழுதுபொருள் மற்றும் அச்சுத் துறை ஆணையரால்
அச்சிடப்பட்டு வெளியிடப்பட்டது.