Servants of Knowledge
Tamil Nadu Gazette · Government of Tamil Nadu

Tamil Nadu Acts and Ordinances

Published 14 September 2022

Type
Ordinary
Gazette no.
37
Part
Part IV
Notifications
Tamil Nadu Act No. 35 of 2022
Section
Section 2T-Sup
Identifier
in.gazette.tamilnadu.2022-09-14.Ordinary_37_Part-IV_Section-2T-Sup
Languages
English, Tamil
Published at
Original source ↗

© [Regd. No. TN/CCN/467/2012-14. தமிழ்நாடு அரசு [R. Dis. No. 197/2009. 2022 [விலை : ரூ. 18.40 காசு

தமிழ்நாடு அரசிதழ் ஆணையின்படி வெளியிடப்பட்டது.

எண் 37] சென்னை, புதன்கிழமை, செப்டம்பர் 14, 2022 ஆவணி 29, சுபகிருது, திருவள்ளுவர் ஆண்டு-2053

பகுதி IV—பிரிவு 2 இன் இணைப்பு

தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையின் பின்வரும் சட்டமானது 2022 ஆம் ஆண்டு

ஜூன் திங்கள் 17 ஆம் நாளன்று ஆளுநரின் ஏற்பிசைவைப் பெற்றது மற்றும்

அது பொதுத்தகவலுக்காக இதன் மூலம் வெளியிடப்படுகிறது: -

சட்ட எண் 35/2022.

1998 ஆம் ஆண்டு தமிழ்நாடு நகர்ப்புர உள்ளாட்சி அமைப்புகள்

சட்டத்தை மேலும் திருத்துவதற்கும் நடைமுறைக்கு மீண்டும் கொண்டு

வருவதற்குமானதொரு சட்டம்.

குறுந்தலைப்பு மற்றும் இந்தியக் குடியரசின் எழுபத்து மூன்றாம் ஆண்டில் தமிழ்நாடு மாநில

தொடக்கம்.

சட்டமன்றப்பேரவையினால் பின்வருமாறு சட்டமியற்றப்படுவதாகுக:-

1. (1) இந்தச் சட்டம், 2022 ஆம் ஆண்டு தமிழ்நாடு நகர்ப்புர உள்ளாட்சி

அமைப்புகள் (திருத்தச்) சட்டம் என வழங்கப்பெறும்.

(2) இது, மாநில அரசு, அறிவிக்கையின் மூலம் குறித்திடலாகும்

அத்தகைய தேதியன்று நடைமுறைக்கு வருதல் வேண்டும்.

2 ஆம் பிரிவிற்கான தமிழ்நாடு சட்டம் 9/1999. 2. (இதன் பின்பு இதில் முதன்மைச் சட்டம் என குறிப்பிடப்படுவதான),

திருத்தம்.

1998 ஆம் ஆண்டு தமிழ்நாடு நகர்ப்புர உள்ளாட்சி அமைப்புகள் சட்டத்தின்

(2) ஆம் பிரிவில்,-

(1) (6), (7), (11), (13) மற்றும் (33) கூறுகளில், "நகராட்சி" எனும்

சொற்றொடர் காணப்படுகின்ற இடங்களில், "நகராட்சி மன்றம்" எனும்

சொற்றொடரானது மாற்றாக அமைக்கப்படுதல் வேண்டும்;

(2) (9) கூறில், (a) உட்கூறிற்காக, பின்வரும் உட்கூறானது மாற்றாக

அமைக்கப்படுதல் வேண்டும், அதாவது:-

"(a) 2013 ஆம் ஆண்டு நிறுமங்கள் சட்டத்தின் (மையச்சட்டம்

18/2013), 2 ஆம் பிரிவின் (42) கூறின் பொருளின்படியான அயல்நாட்டு நிறுமம்

உட்பட அந்தச் சட்டத்தில் பொருள்வரையறை செய்யப்பட்டவாறான நிறுமம்

எதுவும் என்றோ;";

IV-2(37)(T-Sup)-1

[1]2 (3) (19) கூறிற்காக, பின்வரும் கூறானது மாற்றாக அமைக்கப்படுதல்

வேண்டும், அதாவது:—

"(19) "நகராட்சி" என்பது அதன் இலக்கண வேறுபாட்டுடன், இச்சட்டத்தின்படி,

அமைத்துருவாக்கப்பட்ட அல்லது அமைத்துருவாக்கப்பட்டிருப்பதாகக்

கொள்ளப்படும் மாநகராட்சி அல்லது நகராட்சி மன்றம் அல்லது பேரூராட்சி

என்று பொருள்படும்;".

(4) (28) கூறிற்குப் பின்பு, பின்வரும் கூறானது உட்புகுத்தப்படுதல்

வேண்டும், அதாவது:-

"(28-A) "வகுத்துரைக்கப்பட்டது" என்பது இந்த சட்டத்தின் கீழ் செய்யப்பட்ட

விதிகளில் வகுத்துரைக்கப்பட்டது என்று பொருள்படும்".

3 ஆம் பிரிவிற்கான 3. முதன்மைச் சட்டத்தின் (3) ஆம் பிரிவில்,—

திருத்தம்.

(1) (1) ஆம் உட்பிரிவில்,—

(a) (a) கூறிற்காக, பின்வரும் கூறானது மாற்றாக அமைக்கப்படுதல்

வேண்டும், அதாவது:—

"(a) "பேரூராட்சி", ஒரு இடைமாறுபாட்டுப் பகுதி, அதாவது, ஒரு

கிராமப்பகுதியிலிருந்து, நகர்ப் பகுதிக்கு மாறும் போது, மக்கட்தொகையானது

பத்தாயிரத்திற்கு குறையாமல் இருப்பதாக மதிப்பிடப்படுகின்றவிடத்தும், அந்தப்

பரப்பிடத்தின் ஆண்டு வருமானம் முப்பது இலட்சம் ரூபாய்க்கு குறையாமல்

இருக்குமிடத்தும் ஒரு "பேரூராட்சி" என்பதாக;";

(b) (b) கூறில், "நகராட்சி", என்ற சொற்றொடருக்காக, "நகராட்சி

மன்றம்" எனும் சொற்றொடரானது மாற்றாக அமைக்கப்படுதல் வேண்டும்;

(c) (c) கூறில், "ஐந்து லட்சம்" எனும் சொற்றொடருக்காக,

"மூன்று லட்சம்" எனும் சொற்றொடரானது மாற்றாக அமைக்கப்படுதல் வேண்டும்;

(2) (2) ஆம் உட்பிரிவில்,—

(a) (b) கூறில், "நாற்பத்தைந்து நாட்கள்" எனும்

சொற்றொடருக்காக, "ஆறு வாரங்கள்" எனும் சொற்றொடரானது மாற்றாக

அமைக்கப்படுதல் வேண்டும்;

(b) (h) கூறிற்கு பின்பு, பின்வரும் கூறுகளானவை சேர்க்கப்படுதல்

வேண்டும், அதாவது:-

"(i) 1994 ஆம் ஆண்டு தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டம் (தமிழ்நாடு

சட்டம் 21/1994) நடைமுறையில் இருக்கும் போது உள்ளாட்சிப் பரப்பிடம்

எதுவும், இந்தச் சட்டத்தின் கீழ் பேரூராட்சி ஒன்று அமைத்துருவாக்கப்பட்டால்,

அத்தகைய உள்ளாட்சிப் பரப்பிடம் பேரூராட்சியாக அமைத்துருவாக்கப்பட்ட

தேதிக்கு உடனடியாக முன்பு தேர்ந்தெடுக்கப்பட்டு பதவியிலிருக்கும், அத்தகைய

உள்ளாட்சி பரப்பிடத்தின் தலைவர், துணைத்தலைவர் மற்றும் உறுப்பினர்கள்,

இந்தச் சட்டத்தின் கீழ், அத்தகைய பேரூராட்சிகளின் தலைமையாளர், துணைத்

தலைமையாளர் மற்றும் மன்ற உறுப்பினர்களாக கருதப்படுதல் வேண்டும்

மற்றும் அத்தகைய தலைமையாளர், துணைத் தலைமையாளர் மற்றும் மன்ற

உறுப்பினர்கள், 1994 ஆம் ஆண்டு தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டத்தின் (தமிழ்நாடு

சட்டம் 21/1994) கீழ் அவர்களது பதவிக்காலம் முடிவுறும் தேதி வரையில்

பதவியிலிருத்தல் வேண்டும் மற்றும் இந்தச் சட்டத்தின் கீழ் அவர்களுக்கு

குறித்தொதுக்கப்பட்ட அனைத்து கடமைகளை ஆற்றுதலும், வழங்கப்பட்ட

அனைத்து அதிகாரங்களை செயல்படுத்துதலும் வேண்டும்;

3

(j) இந்தச் சட்டத்தின் கீழ் பேரூராட்சி எதுவும் நகராட்சி மன்றமாக

அமைத்துருவாக்கப்பட்டால் அல்லது நகராட்சி மன்றம் எதுவும் மாநகராட்சியாக

அமைத்துருவாக்கப்பட்டால், இந்தச் சட்டத்தின் கீழ் அத்தகைய நகராட்சி

மன்றம் அல்லது மாநகராட்சி அமைத்துருவாக்கப்பட்ட தேதிக்கு உடனடியாக

முன்பு தேர்ந்தெடுக்கப்பட்டு பதவியிலிருக்கும், அத்தகைய பேரூராட்சி அல்லது

நகராட்சி மன்றத்தின் தலைமையாளர், துணைத் தலைமையாளர் மற்றும் மன்ற

உறுப்பினர்கள் அத்தகைய நகராட்சி மன்றத்தின் தலைமையாளர், துணைத்

தலைமையாளர் மற்றும் மன்ற உறுப்பினர்களாக அல்லது மாநகரட்சித் தலைவர்,

மாநகராட்சித் துணைத்தலைவர் மற்றும் மன்ற உறுப்பினர்களாக கருதப்படுதல்

வேண்டும் மற்றும் இந்தச் சட்டத்தின் கீழ் அவர்களது பதவிக்காலம் முடிவுறும்

தேதி வரையில் பதவியிலிருத்தல் வேண்டும் மற்றும் அத்தகைய தலைமையாளர்,

துணைத் தலைமையாளர் மற்றும் மன்ற உறுப்பினர்கள் இந்தச் சட்டத்தின் கீழ்

அவர்களுக்கு குறித்தொதுக்கப்பட்ட அனைத்துக் கடமைகளை ஆற்றுதலும்,

வழங்கப்பட்ட அனைத்து அதிகாரங்களை செயல்படுத்துதலும் வேண்டும்;

(k) 1994 ஆம் ஆண்டு தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டம் (தமிழ்நாடு

சட்டம் 21/1994) நடைமுறையில் இருக்கும் போது உள்ளாட்சிப் பரப்பிடம்

எதுவும், நேர்விற்கேற்ப பேரூராட்சி அல்லது நகராட்சி மன்றம் அல்லது

மாநகராட்சியுடன் இணைக்கப்பட்டால், பேரூராட்சி அல்லது நகராட்சி மன்றம்

அல்லது மாநகராட்சியில் இணைக்கப்பட்ட தேதிக்கு உடனடியாக முன்பு

தேர்ந்தெடுக்கப்பட்டு பதவியிலிருக்கும், நேர்விற்கேற்ப, அத்தகைய உள்ளாட்சிப்

பரப்பிடங்களின் தலைவர், துணைத்தலைவர் மற்றும் உறுப்பினர்கள், 1994 ஆம்

ஆண்டு தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டத்தின் (தமிழ்நாடு சட்டம் 21/1994) கீழ்

அவர்களது பதவிக்காலம் முடிவுறும் தேதி வரையில் பதவியிலிருத்தல் வேண்டும்

மற்றும் அத்தகைய தலைவர், துணைத்தலைவர், மற்றும் உறுப்பினர்கள்,

வகுத்துரைக்கப்படலாகும் அத்தகைய வரையறைக்குட்பட்டு, 1994 ஆம் ஆண்டு

தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டத்தின் (தமிழ்நாடு சட்டம் 21/1994) கீழ் அவர்களுக்கு

குறித்தொதுக்கப்பட்ட அத்தகைய அனைத்து கடமைகளை ஆற்றுதலும்,

வழங்கப்பட்ட அத்தகைய அனைத்து அதிகாரங்களை செயல்படுத்துதலும்

வேண்டும்;

(l) இந்தச் சட்டம் நடைமுறையில் இருக்கும் போது பரப்பிடம்

எதுவும், பேரூராட்சி அல்லது நகராட்சி மன்றம் அல்லது மாநகராட்சி ஒன்றில்

இணைக்கப்பட்டால், நேர்விற்கேற்ப, பேரூராட்சி அல்லது நகராட்சி மன்றம்

அல்லது மாநகராட்சியில் இணைக்கப்பட்ட தேதிக்கு உடனடியாக முன்பு

தேர்ந்தெடுக்கப்பட்டு பதவியிலிருக்கும், அத்தகைய உள்ளாட்சிப் பரப்பிடங்களின்

தலைமையாளர், துணைத் தலைமையாளர் மற்றும் மன்ற உறுப்பினர்கள்

இந்தச் சட்டத்தின் கீழ் அவர்களது பதவிக்காலம் முடிவுறும் தேதி வரையில்

பதவியிலிருத்தல் வேண்டும் மற்றும் அத்தகைய தலைமையாளர், துணைத்

தலைமையாளர் மற்றும் மன்ற உறுப்பினர்கள் வகுத்துரைக்கப்படலாகும் அத்தகைய

வரையறைக்குட்பட்டு, இந்தச் சட்டத்தின் கீழ் அவர்களுக்கு குறித்தொதுக்கப்பட்ட

அனைத்துக் கடமைகளை ஆற்றுதலும் வழங்கப்பட்ட அனைத்து அதிகாரங்களை

செயல்படுத்துதலும் வேண்டும்.";

4 ஆம் பிரிவிற்கான 4. முதன்மைச் சட்டத்தின் 4 ஆம் பிரிவில், (1) ஆம் உட்பிரிவிற்காக,

திருத்தம்.

பின்வரும் உட்பிரிவுகள் மாற்றாக அமைக்கப்படுதல் வேண்டும், அதாவது:—

"(1) 1920 ஆம் ஆண்டு தமிழ்நாடு மாவட்ட நகராட்சிகள் சட்டத்தின்படி,

(தமிழ்நாடு சட்டம் V/1920) அமைத்துருவாக்கப்பட்ட பேரூராட்சிகள் மற்றும்

நகராட்சி மன்றங்களானவை இந்தச் சட்டத்தின்படி அமைத்துருவாக்கப்பட்டு

மற்றும் நிறுவப்பட்டதாகக் கருதப்படுதல் வேண்டும் மற்றும் இதன் மூலம் அந்தந்த

தொடர்புடைய பெயர்களால் மற்றும் அந்தந்த தொடர்புடைய பகுதிகளில்.

நேர்விற்கேற்ப, பேரூராட்சிகள் மற்றும் நகராட்சி மன்றங்களாக விளம்புகை

செய்யப்படுதல் வேண்டும்;

4

(1-A) பின்வரும் மாநகராட்சிகள் இந்த சட்டத்தின் படி

அமைத்துருவாக்கப்பட்டு மற்றும் நிறுவப்பட்டுள்ளதாகக் கருதப்படுதல் வேண்டும்

மற்றும் அந்த தொடர்புடைய பெயர்களால் மற்றும் அந்தந்த பகுதிகளில் இதன்மூலம்

மாநகராட்சிகளாக விளம்புகை செய்யப்படுதல் வேண்டும், அதாவது.-

(i) 1919 ஆம் ஆண்டு சென்னை மாநகராட்சி சட்டத்தின் (தமிழ்நாடு சட்டம்

IV/1919) கீழ் அமைத்துருவாக்கப்பட்ட சென்னை மாநகராட்சி;

(ii) 1971 ஆம் ஆண்டு மதுரை மாநகராட்சி சட்டத்தின் (தமிழ்நாடு சட்டம்

15/1971) கீழ் அமைத்துருவாக்கப்பட்ட மதுரை மாநகராட்சி;

(iii) 1981 ஆம் ஆண்டு கோயம்புத்தூர் மாநகராட்சி சட்டத்தின் (தமிழ்நாடு

சட்டம் 25/1981) கீழ் அமைத்துருவாக்கப்பட்ட கோயம்புத்தூர் மாநகராட்சி;

(iv) 1994 ஆம் ஆண்டு திருச்சிராப்பள்ளி மாநகராட்சி சட்டத்தின் (தமிழ்நாடு

சட்டம் 27/1994) கீழ் அமைத்துருவாக்கப்பட்ட திருச்சிராப்பள்ளி மாநகராட்சி;

(v) 1994 ஆம் ஆண்டு திருநெல்வேலி மாநகராட்சி சட்டத்தின் (தமிழ்நாடு

சட்டம் 28/1994) கீழ் அமைத்துருவாக்கப்பட்ட திருநெல்வேலி மாநகராட்சி;

(vi) 1994 ஆம் ஆண்டு சேலம் மாநகராட்சி சட்டத்தின் (தமிழ்நாடு சட்டம்

29/1994) கீழ் அமைத்துருவாக்கப்பட்ட சேலம் மாநகராட்சி;

(vii) 2008 ஆம் ஆண்டு திருப்பூர் மாநகராட்சி சட்டத்தின் (தமிழ்நாடு சட்டம்

7/2008) கீழ் அமைத்துருவாக்கப்பட்ட திருப்பூர் மாநகராட்சி;

(viii) 2008 ஆம் ஆண்டு ஈரோடு மாநகராட்சி சட்டத்தின் (தமிழ்நாடு சட்டம்

8/2008) கீழ் அமைத்துருவாக்கப்பட்ட ஈரோடு மாநகராட்சி;

(ix) 2008 ஆம் ஆண்டு வேலூர் மாநகராட்சி சட்டத்தின் (தமிழ்நாடு சட்டம்

26/2008) கீழ் அமைத்துருவாக்கப்பட்ட வேலூர் மாநகராட்சி;

(x) 2008 ஆம் ஆண்டு தூத்துக்குடி மாநகராட்சி சட்டத்தின் (தமிழ்நாடு

சட்டம் 27/2008) கீழ் அமைத்துருவாக்கப்பட்ட தூத்துக்குடி மாநகராட்சி;

(xi) 2013 ஆம் ஆண்டு தஞ்சாவூர் மாநகராட்சி சட்டத்தின் (தமிழ்நாடு

சட்டம் 24/2013) கீழ் அமைத்துருவாக்கப்பட்ட தஞ்சாவூர் மாநகராட்சி;

(xii) 2013 ஆம் ஆண்டு திண்டுக்கல் மாநகராட்சி சட்டத்தின் (தமிழ்நாடு

சட்டம் 25/2013) கீழ் அமைத்துருவாக்கப்பட்ட திண்டுக்கல் மாநகராட்சி;

(xiii) 2019 ஆம் ஆண்டு ஓசூர் மாநகராட்சி சட்டத்தின் (தமிழ்நாடு சட்டம்

10/2019) கீழ் அமைத்துருவாக்கப்பட்ட ஓசூர் மாநகராட்சி;

(xiv) 2019 ஆம் ஆண்டு நாகர்கோவில் மாநகராட்சி சட்டத்தின் (தமிழ்நாடு

சட்டம் 11/2019) கீழ் அமைத்துருவாக்கப்பட்ட நாகர்கோவில் மாநகராட்சி;

(xv) 2019 ஆம் ஆண்டு ஆவடி மாநகராட்சி சட்டத்தின் (தமிழ்நாடு சட்டம்

24/2019) கீழ் அமைத்துருவாக்கப்பட்ட ஆவடி மாநகராட்சி;

(xvi) 2022 ஆம் ஆண்டு கடலூர் மாநகராட்சி சட்டத்தின் (தமிழ்நாடு சட்டம்

1/2022) கீழ் அமைத்துருவாக்கப்பட்ட கடலூர் மாநகராட்சி;

(xvii) 2022 ஆம் ஆண்டு காஞ்சிபுரம் மாநகராட்சி சட்டத்தின் (தமிழ்நாடு

சட்டம் 2/2022) கீழ் அமைத்துருவாக்கப்பட்ட காஞ்சிபுரம் மாநகராட்சி;

(xviii) 2022 ஆம் ஆண்டு சிவகாசி மாநகராட்சி சட்டத்தின் (தமிழ்நாடு

சட்டம் 3/2022) கீழ் அமைத்துருவாக்கப்பட்ட சிவகாசி மாநகராட்சி;

(xix) 2022 ஆம் ஆண்டு கரூர் மாநகராட்சி சட்டத்தின் (தமிழ்நாடு சட்டம்

4/2022) கீழ் அமைத்துருவாக்கப்பட்ட கரூர் மாநகராட்சி;

(xx) 2022 ஆம் ஆண்டு தாம்பரம் மாநகராட்சி சட்டத்தின் (தமிழ்நாடு

சட்டம் 5/2022) கீழ் அமைத்துருவாக்கப்பட்ட தாம்பரம் மாநகராட்சி;

5

(xxi) 2022 ஆம் ஆண்டு கும்பகோணம் மாநகராட்சி சட்டத்தின் (தமிழ்நாடு

சட்டம் 6/2022) கீழ் அமைத்துருவாக்கப்பட்ட கும்பகோணம் மாநகராட்சி."

7 ஆம் பிரிவிற்கான 5. முதன்மைச் சட்டத்தில் 7 ஆம் பிரிவில், (1) ஆம் உட்பிரிவில் "அதன்

திருத்தம்.

தலைமையாளர் தவிர" எனும் சொற்றொடருக்காக, "அதன் தலைமையாளர்

உட்பட" எனும் சொற்றொடரானது மாற்றாக அமைக்கப்படுதல் வேண்டும்.

8 ஆம் பிரிவிற்கான 6. முதன்மைச் சட்டத்தில் 8 ஆம் பிரிவில்,-

திருத்தம்.

(1) (a) (6) ஆம் உட்பிரிவில், "ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை" எனும்

சொற்றொடருக்காக, "தொடர்புடைய புள்ளி விவரங்களை வெளியிட்ட முந்தைய

மக்கள் தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் பத்து ஆண்டுகளுக்கு

ஒருமுறை" எனும் சொற்றொடரானது மாற்றாக அமைக்கப்படுதல் வேண்டும்;

(b) அவ்வாறு திருத்தப்பட்டவாறான (6) ஆம் உட்பிரிவிற்கு, பின்வரும்

வரம்புரையானது, சேர்க்கப்படுதல் வேண்டும், அதாவது.-

"வரம்புரையாக, பரப்பிடம் எதுவும், பேரூராட்சி, நகராட்சி மன்றம்

அல்லது மாநகராட்சியின் எல்லைக்குள் இணைக்கப்படுமிடத்து, நேர்விற்கேற்ப,

அத்தகைய பரப்பிடத்திற்கான சிற்றொகுதிகளின் எல்லை மறுவரையறையானது,

அடுத்த சாதாரண தேர்தலுக்கு முன் முடிக்கப்படுதல் வேண்டும்.".

(2) அவ்வாறு திருத்தப்பட்டவாறான (6) ஆம் உட்பிரிவிற்கு பின்பு,

பின்வரும் உட்பிரிவானது, சேர்க்கப்படுதல் வேண்டும், அதாவது:-

"(7) இந்த பிரிவில் உள்ளடங்கியது எவ்வாறு இருப்பினும், 2017ஆம்

ஆண்டு தமிழ்நாடு எல்லை வரையறை ஆணையச் சட்டத்தின் (தமிழ்நாடு சட்டம்

23/2017) கீழ் அமைத்துருவாக்கப்பட்ட எல்லை வரையறை ஆணையத்தால்

பரிந்துரைக்கப்பட்டதன்படி, அரசானது, நகராட்சி சிற்றொகுதிகளின் எல்லைகளை

வரையறை செய்யலாம்.".

11 ஆம் பிரிவிற்கான 7. முதன்மை சட்டத்தின் 11 ஆம் பிரிவில், உள்ள வரம்புரைகளானது

திருத்தம்.

விட்டுவிடப்படுதல் வேண்டும்.

12 ஆம் பிரிவிற்கான 8. முதன்மை சட்டத்தின் 12 ஆம் பிரிவில்,-

திருத்தம்.

(1) "மன்ற உறுப்பினர் அல்லது தலைமையாளர்" எனும்

சொற்றொடருக்காக, ஓரத்தலைப்பு உள்ளடங்கலாக, அவை காணப்படுகின்ற

இடங்களில், "மன்ற உறுப்பினர்" எனும் சொற்றொடரானது மாற்றாக

அமைக்கப்படுதல் வேண்டும்;

(2) (1) ஆம் உட்பிரிவில், (c) கூறுக்கு பின்பு, பின்வரும் கூறானது

சேர்க்கப்படுதல் வேண்டும், அதாவது:-

"(d) அவர் சட்டமன்ற உறுப்பினர் அல்லது நாடாளுமன்றத்தின்

எந்த அவையிலும் உறுப்பினராக இருந்தால்.";

(3) (2) ஆம் உட்பிரிவில், "ஒப்பந்தம் எதுவும்" எனும்

சொற்றொடருக்காக, "நடைமுறையிலுள்ள ஒப்பந்தம் எதுவும்" எனும்

சொற்றொடரானது மாற்றாக அமைக்கப்படுதல் வேண்டும்;

(4) (6) ஆம் உட்பிரிவில், (c) கூறில் உள்ள, முதலாம் வரம்புரையில்,

(iv) ஆம் இனத்திற்காக, அதன் கீழ் உள்ள வரம்புரை தவிர்த்து, பின்வரும்

இனமானது மாற்றாக அமைக்கப்படுதல் வேண்டும், அதாவது:-

"(iv) சரக்குகள் அல்லது சேவைகள் எவற்றையும் வழங்குவதற்காக,

நகராட்சியுடன் ஒப்பந்தங்கள் செய்து கொள்கிற நிறுவப்பட்ட அல்லது நிறுவப்படாத

நிறுமம் அல்லது அமைப்பு எதுவும்;";

6

12- A ஆம் பிரிவிற்கான 9. அவ்வாறு திருத்தப்பட்டவாறான முதன்மை சட்டத்தின் 12 ஆம் பிரிவிற்கு

திருத்தம், பின்பு, பின்வரும் பிரிவுகள் உட்புகுத்தப்படுதல் வேண்டும், அதாவது:-

"12-A வாக்குப்பதிவு நாளில் பணியாளர்களுக்கு ஊதியத்துடன் கூடிய

விடுமுறை வழங்குதல்.- (1) வணிகம், வர்த்தகம், தொழில்துறை வணிக நிறுவனம்

எதிலும் அல்லது பிற நிறுவனம் எதிலும் பணிபுரியும் நபர் ஒவ்வொருவரும் மற்றும்

நகராட்சி மன்றத்திற்கு வாக்களிக்கும் உரிமை உடையவரும் வாக்குப்பதிவு

நாளில், ஊதியத்துடன் கூடிய விடுமுறை அளிக்கப்படுதல் வேண்டும்.

(2) (1) ஆம் உட்பிரிவுக்கு இணங்கிய வகையில் வழங்கப்பட்ட விடுமுறையின்

காரணமாக, அத்தகைய நபர் எவரின் ஊதியத்தில் பிடித்தம் அல்லது குறைப்பு

செய்யப்படகூடாது மற்றும் அவர் அத்தகைய நாளுக்கு சாதாரணமாக ஊதியம்

பெறமாட்டார் என்ற அடிப்படையில் அத்தகைய நபர் பணியமர்த்தப்பட்டால்,

அவருக்கு விடுமுறை வழங்கப்படாவிட்டால், அவர் வாங்கிய ஊதியம் அத்தகைய

ஒரு நாளுக்கு அவருக்கு வழங்கப்படுதல் வேண்டும்.

(3) வேலையளிப்பவர், (1) ஆம் உட்பிரிவு அல்லது (2) ஆம் உட்பிரிவின்

வரம்புரைகளை மீறினால், அத்தகைய வேலையளிப்பவர் ஐயாயிரம் ரூபாய் வரை

நீட்டிக்கப்படலாகும் அபராதத்துடன் தண்டிக்கப்படுதல் வேண்டும்.

(4) பணிக்குவராதவர், அவர் ஈடுபட்டுள்ள பணியினை பொறுத்து,

ஆபத்தையோ அல்லது கணிசமான இழப்பையோ ஏற்படுத்தக்கூடிய நபர்

எவருக்கும் இந்த பிரிவு பொருந்தாது.".

16 ஆம் பிரிவிற்கான 10. முதன்மை சட்டத்தின் 16 ஆம் பிரிவில், (2) ஆம் உட்பிரிவில்,

திருத்தம்.

"இருநூற்று ஐம்பது ரூபாய் எனும் சொற்றொடருக்காக, "இரண்டாயிரம் ரூபாய்"

எனும் சொற்றொடரானது மாற்றாக அமைக்கப்படுதல் வேண்டும்.

19 ஆம் பிரிவிற்கான 11. முதன்மை சட்டத்தின் 19 ஆம் பிரிவில், (1) ஆம் உட்பிரிவில், "உதவி

திருத்தம்.

தேர்தல் அலுவலர்" எனும் சொற்றொடருக்காக, "உதவி தேர்தல் அலுவலர்

அல்லது மண்டல அலுவலர்" எனும் சொற்றொடரானது மாற்றாக அமைக்கப்படுதல்

வேண்டும்.

20 ஆம் பிரிவிற்கான 12. முதன்மை சட்டத்தின் 20 ஆம் பிரிவில், (2) ஆம் உட்பிரிவில்,

திருத்தம்.

"இருநூற்று ஐம்பது ரூபாய்" எனும் சொற்றொடருக்காக, "இரண்டாயிரம் ரூபாய்"

எனும் சொற்றொடரானது மாற்றாக அமைக்கப்படுதல் வேண்டும்.

23 ஆம் பிரிவிற்கான 13. முதன்மைச் சட்டத்தின் 23 ஆம் பிரிவில், (2) ஆம் உட்பிரிவில்,

திருத்தம்.

"இருநூற்று ஐம்பது ரூபாய்" எனும் சொற்றொடருக்காக, "இரண்டாயிரம் ரூபாய்"

எனும் சொற்றொடரானது மாற்றாக அமைக்கப்படுதல் வேண்டும்.

25 ஆம் பிரிவிற்கான 14. முதன்மை சட்டத்தின் 25 ஆம் பிரிவில், "வாக்குச்சீட்டு" எனும்

திருத்தம்.

சொற்றொடரானது ஓரத்தலைப்பு உள்ளடங்கலாக, அது காணப்படுகின்ற

மூன்று இடங்களிலும், "வாக்குச்சீட்டு அல்லது வாக்கு இயந்திரம்" எனும்

சொற்றொடரானது மாற்றாக அமைக்கப்படுதல் வேண்டும்.

34–A எனும் புதிய 15. முதன்மைச் சட்டத்தின் 34 ஆம் பிரிவுக்குப் பின்பு, பின்வரும் பிரிவானது

பிரிவினை உட்புகுத்தப்படுதல் வேண்டும், அதாவது:-

உட்புகுத்துதல்.

"34–A. சொத்து பற்றிய தகவல்களை அளித்தல்.- தலைமையாளர், துணைத்

தலைமையாளர் அல்லது மன்ற உறுப்பினர் ஒவ்வொருவரும், தனது பதவியில்

அமர்வதற்காக உறுதிமொழி அல்லது உறுதியேற்றல் செய்த நாளிலிருந்து

தொண்ணூறு நாட்களுக்குள், வகுத்துரைக்கப்படலாகும் அத்தகைய படிவத்திலும்

முறையிலும் பின்வரும் தகவல்களை, அளித்தல் வேண்டும்:-

(a) கூட்டாகவோ அல்லது தனித்தனி உரிமையாளர்களாக அல்லது

பயனாளிகளாக இருக்கக்கூடிய அவர், அவரது மனைவி மற்றும் அவரைச்

சார்ந்திருக்கும் குழந்தைகளின் அசையும் மற்றும் அசையா சொத்துக்கள்;

7

(b) பொது நிதி நிறுவனம் எவற்றிற்குமான அவரது பொறுப்புகள்;

மற்றும்

(c) மைய அரசு அல்லது மாநில அரசு அல்லது நகராட்சி எவற்றிற்குமான

அவரது பொறுப்புகள்.''.

35 ஆம் பிரிவிற்கான 16. முதன்மை சட்டத்தின் 35 ஆம் பிரிவில், (1) ஆம் உட்பிரிவில்.

திருத்தம்.

"அரசு'' எனும் சொற்றொடருக்குப் பின்பு, "அல்லது தமிழ்நாடு மாநில தேர்தல்

ஆணையம்'' எனும் சொற்றொடரானது உட்புகுத்தப்படுதல் வேண்டும்.

37 ஆம் பிரிவிற்கான 17. முதன்மைச் சட்டத்தின் 37 ஆம் பிரிவில், —

திருத்தம்.

(1) (4) மற்றும் (5) ஆம் உட்பிரிவுகளில், "மூன்றில் ஒரு பங்கிற்கும்

குறையாத" எனும் சொற்றொடருக்காக, "ஐம்பது விழுக்காட்டிற்கும் குறையாத"

எனும் சொற்றொடரானது மாற்றாக அமைக்கப்படுதல் வேண்டும்:

(2) (6) ஆம் உட்பிரிவிற்கு பின்பு, பின்வரும் உட்பிரிவானது

உட்புகுத்தப்படுதல் வேண்டும், அதாவது:–

"(6-A) இடஒதுக்கீட்டின் நோக்கத்திற்காக நகராட்சி ஒவ்வொன்றிலும்

இடங்களின் எண்ணிக்கையை நிர்ணயிக்கும் போது, பாதிக்கும் குறைவான

பின்னம் எதுவும் புறக்கணிக்கப்படுதல் வேண்டும், பாதி மற்றும் பாதிக்கும்

மேற்பட்ட பின்னம் முழுமையாகக் கருதப்படுதல் வேண்டும்.".

38 ஆம் பிரிவிற்கான 18. முதன்மைச் சட்டத்தின் 38 ஆம் பிரிவில், -

திருத்தம்.

(1) (1) ஆம் உட்பிரிவில், (b) கூறில், "மூன்றில் ஒரு பங்கிற்கும்

குறையாத" எனும் சொற்றொடருக்காக, "ஐம்பது விழுக்காட்டிற்கும் குறையாத"

எனும் சொற்றொடரானது மாற்றாக அமைக்கப்படுதல் வேண்டும்;

(2) அவ்வாறு திருத்தப்பட்டவாறான, (1) ஆம் உட்பிரிவிற்கு பின்பு,

பின்வரும் உட்பிரிவானது உட்புகுத்தப்படுதல் வேண்டும், அதாவது:-

"(1-A) இடஒதுக்கீட்டின் நோக்கத்திற்காக மாநகராட்சித்

தலைவர் பதவிகளின் எண்ணிக்கையை நிர்ணயிக்கும் போது, பாதிக்கும்

குறைவான பின்னம் எதுவும் புறக்கணிக்கப்படுதல் வேண்டும் மற்றும் பாதி,

பாதிக்கும் மேற்பட்ட பின்னம் முழுமையாகக் கருதப்படுதல் வேண்டும்.".

39 ஆம் பிரிவிற்கான 19. முதன்மைச் சட்டத்தின் 39 ஆம் பிரிவில்,-

திருத்தம்.

(1) (1) ஆம் உட்பிரிவில், (b) கூறில், "மூன்றில் ஒரு பங்கிற்கும்

குறையாத" எனும் சொற்றொடருக்காக, "ஐம்பது விழுக்காட்டிற்கு குறையாத"எனும்

சொற்றொடரானது மாற்றாக அமைக்கப்படுதல் வேண்டும்;

(2) (2) ஆம் உட்பிரிவில், "மூன்றில் ஒரு பங்கிற்கும் குறையாத"

எனும் சொற்றொடருக்காக, "ஐம்பது விழுக்காட்டிற்கு குறையாத" எனும்

சொற்றொடரானது மாற்றாக அமைக்கப்படுதல் வேண்டும்;

(3) அவ்வாறு திருத்தப்பட்டவாறான, (2) ஆம் உட்பிரிவிற்குப் பின்பு,

பின்வரும் உட்பிரிவானது உட்புகுத்தப்படுதல் வேண்டும், அதாவது:-

"(2-A) இடஒதுக்கீட்டின் நோக்கத்திற்காக நகராட்சி

மன்றங்களின் தலைமையாளர் பதவிகளின் எண்ணிக்கையை நிர்ணயிக்கும்

போது, பாதிக்கும் குறைவான பின்னம் எதுவும் புறக்கணிக்கப்படுதல் வேண்டும்,

பாதி மற்றும் பாதிக்கும் மேற்பட்ட பின்னம் முழுமையாகக் கருதப்படுதல்

வேண்டும்.".

(4) (4) ஆம் உட்பிரிவில், (b) கூறில், "மூன்றில் ஒரு பங்கிற்கும்

குறையாத" எனும் சொற்றொடருக்காக, "ஐம்பது விழுக்காட்டிற்கு குறையாத"

எனும் சொற்றொடரானது மாற்றாக அமைக்கப்படுதல் வேண்டும்;

8

(5) (5) ஆம் உட்பிரிவில், "மூன்றில் ஒரு பங்கிற்கும் குறையாத"

எனும் சொற்றொடருக்காக, "ஐம்பது விழுக்காட்டிற்கு குறையாத" எனும்

சொற்றொடரானது மாற்றாக அமைக்கப்படுதல் வேண்டும்:

(6) அவ்வாறு திருத்தப்பட்டவாறான, (5) ஆம் உட்பிரிவிற்கு பின்பு,

பின்வரும் உட்பிரிவுகள் உட்புகுத்தப்படுதல் வேண்டும், அதாவது:-

"(5-A) இடஒதுக்கீட்டின் நோக்கத்திற்காக பேரூராட்சியின்

தலைமையாளர் பதவிகளின் எண்ணிக்கையை நிர்ணயிக்கும் போது, பாதிக்கும்

குறைவான பின்னம் எதுவும் புறக்கணிக்கப்படுதல் வேண்டும் பாதி மற்றும்

பாதிக்கும் மேற்பட்ட பின்னம் முழுமையாகக் கருதப்படுதல் வேண்டும்.".

40 ஆம் பிரிவிற்கான 20. முதன்மைச் சட்டத்தின் 40 ஆம் பிரிவில், -

திருத்தம்.

(1) (1) ஆம் உட்பிரிவில்,-

(a) (iii) ஆம் கூறிற்காக, பின்வரும் கூறானது மாற்றாக அமைக்கப்படுதல்

வேண்டும், அதாவது;-

"(iii) நகராட்சிகளிடமுள்ள சொந்தமான நீர்நிலைகளை பாதுகாத்தல்;";

(b) (iv) ஆம் கூறில், "மற்றும் வடிகால் திட்டங்கள்", எனும்

சொற்றொடருக்காக, "வடிகால் திட்டங்கள் மற்றும் கழிவுநீர் மேலாண்மை" எனும்

சொற்றொடரானது மாற்றாக அமைக்கப்படுதல் வேண்டும்;

(c) (v) மற்றும் (vi) ஆம் கூறுகளுக்காக, பின்வரும் கூறுகளானவை

மாற்றாக அமைக்கப்படுதல் வேண்டும், அதாவது:-

"(v) சுற்றித்திரிகிற நாய்களை கட்டுப்படுத்துதல்;

(vi) கொசு உட்பட பூச்சிகளை கட்டுப்படுத்துதல்;";

(d) (viii) ஆம் கூறில், "ஆபத்தான வர்த்தகங்கள்" எனும்

சொற்றொடருக்காக, "வர்த்தகங்கள்" எனும் சொற்றொடரானது மாற்றாக

அமைக்கப்படுதல் வேண்டும்;

(e) (xiii) ஆம் கூறில், "மின்சாரம்" எனும் சொற்றொடரானது

விட்டுவிடப்படுதல் வேண்டும்;

(f) (xix) ஆம் கூறில், "நீர்மக்கழிவு மற்றும் நீர்ப்பயன்பாட்டின்

மேலாண்மை" எனும் சொற்றொடரானது இறுதியில் சேர்க்கப்படுதல் வேண்டும்;

(g) (xviii) ஆம் கூறுக்காக, பின்வரும் கூறானது மாற்றாக

அமைக்கப்படுதல் வேண்டும், அதாவது;-

"(xviii) பொது சந்தைகள், கடைகள், வணிக வளாகங்கள்,

பேருந்து நிலையங்கள், பேருந்து நிழற்குடைகள், ஓய்வு விடுதிகள், பொதுக்

கழிப்பறைகள் மற்றும் சமுதாய கழிப்பறைகள் ஆகியவற்றை பராமரித்தல்."

(h) (xxii) ஆம் கூறில், "விளம்பரப் பலகை" எனும் சொற்றொடருக்காக,

"விளம்பரப் பலகை, மின்னணு திரைகள் மற்றும் விளம்பர அட்டைகள்" எனும்

சொற்றொடர்களானவை மாற்றாக அமைக்கப்படுதல் வேண்டும்;

(i) (xxiv) எனும் கூறுக்காக, பின்வரும் கூறுகளானவை மாற்றாக

அமைக்கப்படுதல் வேண்டும், அதாவது:—

"(xxiv) கண்காட்சிகள் மற்றும் பொருட்காட்சிகளின் அமைப்பு

மற்றும் தனியார் கண்காட்சிகள் மற்றும் பொருட்காட்சிகளின் அமைப்பு;

(xxv) நகராட்சி நிதியத்தின் கீழ் செய்யப்படும் வேலைகளின்

தேர்வு மற்றும் ஒப்புதல் மற்றும் குறிப்பிடப்படும் செயல்திட்டங்களுக்கு நகராட்சி

நிதியத்திலிருந்து செய்யப்பட்ட ஒதுக்கீடு மற்றும் பங்களிப்பு; மற்றும்9 (xxvi) அரசால் நகராட்சிகளுக்கு குறித்தொதுக்கப்பட்ட பிற

கடமைகள் அல்லது செயல்பாடுகள் எதுவும்.";

(2) (2) ஆம் உட்பிரிவில், (vii) ஆம் கூறில், "மாற்றுத்திறனாளி மற்றும்

மனவளர்ச்சி குன்றியவர்" எனும் சொற்றொடருக்காக, "தெருவோர வியாபாரிகள்

மற்றும் குறைபாடுகளுடைய நபர்" எனும் சொற்றொடரானது மாற்றாக

அமைக்கப்படுதல் வேண்டும்;

(3) (3) ஆம் உட்பிரிவில், (vii) ஆம் கூறிற்கு பின்பு, அதன்கீழ் உள்ள

விளக்கம் உள்ளடங்களாக, பின்வரும் கூறானது மாற்றாக அமைக்கப்படுதல்

வேண்டும், அதாவது;-

"(viii) தனது பாதுகாப்பில் உள்ள ஆவணம் எதையும்

சமர்ப்பித்தலுக்கு ஆணையாளரிடம் கோருதல் வேண்டும்.".

43-A. எனும் புதிய 21. முதன்மைச் சட்டத்தின் 43 ஆம் பிரிவிற்கு பின்பு, பின்வரும் பிரிவானது

பிரிவை உட்புகுத்துதல்.

உட்புகுத்தப்படுதல் வேண்டும், அதாவது:-

"43-A. தலைமையாளர், துணைத் தலைமையாளர் மற்றும் மன்ற

உறுப்பினர்கள் விவாதத்திலும் வாக்கெடுப்பிலும் பங்கேற்பதை தவிர்த்தல்.-

(1) தலைமையாளர் அல்லது துணைத்தலைமையாளர் அல்லது 37 ஆம்

பிரிவின் (1) ஆம் உட்பிரிவின் (ii) மற்றும் (iii) ஆம் கூறுகளில் குறிப்பிடப்பட்ட

நபர் உள்ளடங்களாக மன்ற உறுப்பினர் எவரும், நேரடியாகவோ அல்லது

மறைமுகமாகவோ அல்லது அவரது பங்குதாரர் மூலம் பணம்சார் நலனை

கொண்டிருந்தால், பொது மக்களுக்கான அதன் பொதுவான பொருந்துகைக்கு

அப்பாற்பட்ட ஒன்றாக கேள்வியானது இருந்தால், மன்றம் அல்லது நிலைக்குழு

அல்லது சிற்றொகுதிகள் குழு அல்லது பிற குழு ஆகிய எதனின் கூட்டத்தின்

பரிசீலனைக்காக வரும் கேள்வியின் விவாதத்தில் பங்கேற்கவோ, வாக்களிக்கவோ

கூடாது.

(2) மன்ற உறுப்பினர் அல்லது அத்தகைய நபர்கள் பணம்சார் நலன்

எதையும் கொண்டிருப்பதாக நம்பப்படும் பொருட்பாடுகளில் மன்ற உறுப்பினர்

அல்லது அத்தகைய நபர்கள் எவரையும் விவாதத்தில் பங்கேற்பதையோ

அல்லது வாக்களிப்பதையோ தலைமையாளர் தடுக்கலாம் அல்லது அவர் மன்ற

உறுப்பினரையோ அல்லது அத்தகைய நபர்களையோ, விவாதத்தின் போது அவர்

வராதிருக்குமாறு கோரலாம்.

(3) தலைமையாளரின் முடிவிற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் அத்தகைய மன்ற

உறுப்பினர்கள் அல்லது அத்தகைய நபர்கள் மன்றத்தின் கூட்டத்தில் கேள்வியை

எழுப்பலாம் மற்றும் மன்றத்தின் முடிவே இறுதியானதாக இருத்தல் வேண்டும்.

(4) கூட்டத்தில் கலந்து கொண்ட மன்ற உறுப்பினர் அல்லது அத்தகைய

நபர்கள் எவரினாலும் விவாதத்தின் படியான பொருட்பாடு எதனில் பணம்சார்

நலன் ஏதேனும் தலைமையாளுருக்கு இருப்பதாகக் குற்றம் சாட்டப்பட்டால்,

அத்தகைய குற்றச்சாட்டின் பேரில், தீர்மானம் நிறைவேற்றப்பட்டால், விவாதத்தின்

போது அவர் கூட்டத்திற்கு வராது போதல் வேண்டும்.

(5) (2) ஆம் உட்பிரிவில் குறிப்பிடப்பட்டுள்ள மன்ற உறுப்பினர், (3) ஆம்

உட்பிரிவில் குறிப்பிடப்பட்டுள்ள கேள்வியின் மீது வாக்களிக்க தகுதியற்றவராவார்

மற்றும் தொடர்புடைய தலைமையாளர் (4) ஆம் உட்பிரிவில் குறிப்பிடப்பட்டுள்ள

தீர்மானத்தின் மீது வாக்களிக்கத் தகுதியற்றவராவார்.

விளக்கம்.- இந்தப் பிரிவில், 'தலைமையாளர்' என்பது, மன்றக்

கூட்டத்திற்குத் தலைமை வகிக்கும் துணைத்தலைமையாளர் அல்லது மன்ற

உறுப்பினரை உள்ளடக்கும்.".

10

44 ஆம் பிரிவிற்கான 22. முதன்மைச் சட்டத்தின் 44 ஆம் பிரிவில், -

திருத்தம்.

(1) (1) ஆம் உட்பிரிவிற்காக, பின்வரும் உட்பிரிவானது மாற்றாக

அமைக்கப்படுதல் வேண்டும், அதாவது:—

"(1) ஒவ்வொரு சாதாரண தேர்தலுக்கு பின்பு, அதன் முதல்

கூட்டத்தில் மன்றமானது, அதன் மன்ற உறுப்பினர்களுள் ஒருவரை மன்றத்தின்

தலைமையாளராக தேர்ந்தெடுத்தல் வேண்டும்.";

(2) (2) ஆம் உட்பிரிவானது விட்டு விடப்படுதல் வேண்டும்;

(3) (5) ஆம் உட்பிரிவிற்வாக, பின்வரும் உட்பிரிவானது மாற்றாக

அமைக்கப்படுதல் வேண்டும், அதாவது:-

"(5) மன்ற உறுப்பினராக அவரது பதவி அற்றுப்போதலின் பேரில்

தலைமையாளரானவர், தனது பதவியை விட்டு வெளியேறியதாக கருதப்படுதல்

வேண்டும்.".

45 ஆம் பிரிவிற்கான 23. முதன்மைச் சட்டத்தின் 45 ஆம் பிரிவில், (d) கூறில், "பிற திட்டம்"

திருத்தம்.

எனும் சொற்றொடருக்காக, "நகராட்சி நிதியித்திலிருந்து நிதியளிக்கப்பட்ட பிற

திட்டங்கள்" எனும் சொற்றொடரானது மாற்றாக அமைக்கப்படுதல் வேண்டும்;

46-A மற்றும் 24. முதன்மைச் சட்டத்தின் 46 ஆம் பிரிவிற்குப் பின்பு, பின்வரும்

46-B எனும் பிரிவுகளானவை உட்புகுத்தப்படுதல் வேண்டும். அதாவது-

புதிய பிரிவுகளை

உட்புகுத்துதல்.

"46-A தலைமையாளர், மற்றும் துணைத் தலைமையாளர், பதவிக்கான

மறுத்தகுதி.- பதவியை விட்டு வெளியேறும் தலைமையாளர், அல்லது துணைத்

தலைமையாளர், மறுதேர்தலுக்கு தகுதியுடையவராவர்.

46-B. தலைமையாளர், துணைத் தலைமையாளர், அல்லது மன்ற

உறுப்பினர் வெளிநாட்டுப் பயணம் மேற்கொள்வதற்கு அனுமதி பெறுதல்

வேண்டும்.- தலைமையாளர், துணைத் தலைமையாளர் அல்லது மன்ற உறுப்பினர்

பதவியை வகிக்கும் நபர் எவரும் அரசின் அனுமதியின்றி, அவரது அலுவல்

பொறுப்பில், எந்தவொரு வெளிநாட்டிற்கும் பயணம் மேற்கொள்ளக்கூடாது.".

49-A முதல் 49-H வரை 25. முதன்மைச் சட்டத்தின் 49 ஆம் பிரிவிற்குப் பின்பு, பின்வரும்

புதிய பிரிவுகளை பிரிவுகளானவை உட்புகுத்துதல் வேண்டும், அதாவது:-

உட்புகுத்துதல்.

"49-A. நிலைக்குழுக்களை அமைத்துருவாக்குதல்.-(1) அறிவிக்கையில்

குறிப்பிடலாகும், அத்தகைய அதிகாரங்களை செயல்படுத்துவதற்கும், அத்தகைய

கடமைகளை நிறைவேற்றுவதற்கும் அல்லது மன்றம் அவர்களுக்கு வழங்கும்

அத்தகைய செயல்பாடுகளை புரிவதற்கும், ஆறுக்கு மேற்படாத அத்தகைய

நிலைக்குழுக்களின் எண்ணிக்கையை அரசால், அறிவிக்கையின் மூலம்

அமைத்துருவாக்க வேண்டும்.

(2) நிலைக்குழுவின் அமைப்பு, தலைவரின் நியமன முறை

மற்றும் நிலைக்குழுக்களின் உறுப்பினர்கள் மற்றும் தலைவரின் பதவிக்காலம்

வகுத்துரைக்கப்படலாகும் அத்தகைய முறையில் இருத்தல் வேண்டும்.

49-B. நிலைக்குழுவினால் ஆணையாளருக்கு அதிகாரங்களை

அளித்தல்.- (1) ஒரு நிலைக்குழுவின் ஒப்புதல், அனுமதி, இசைவு அல்லது

உடன்பாட்டிற்குட்பட்டு ஆணையாளர் நடவடிக்கை எடுக்கலாம் என்று இந்தச்

சட்டத்தால் வழங்கப்பட்டுள்ள நேர்வு எதிலும், அத்தகைய நிலைக்குழுவானது,

எழுத்துப்பூர்வமான தீர்மானம் மூலம், அத்தகைய தீர்மானத்தில் குறிப்பிடப்படலாகும்

அத்தகைய நிபந்தனைகளுக்கு உட்பட்டு, அதன் ஒப்புதல், அனுமதி, இசைவு

அல்லது உடன்பாட்டினை எதிர்பார்த்து நடவடிக்கை எடுக்க அவருக்கு

அதிகாரமளிக்கலாம்.

11

(2) ஆணையாளர், அத்தகைய தீர்மானத்திற்கு இணங்க, ஒரு

நிலைக்குழுவின் ஒப்புதல், அனுமதி, இசைவு அல்லது உடன்பாட்டை எதிர்நோக்கி

நடவடிக்கை எதையும் எடுக்குமிடத்து, அவர் அத்தகைய நிலைக்குழுவின்

பொருண்மையை அதன் அடுத்த கூட்டத்தில் தெரிவித்தல் வேண்டும்.".

49.C. சிற்றொகுதி சபையினை அமைத்துருவாக்குதல்.- (1) நகராட்சிப்

பகுதிகளுக்குள், சிற்றொகுதி ஒவ்வொன்றுக்கும், சிற்றொகுதி சபை ஒன்று

மன்றத்தால் அமைத்துருவாக்கப்படுதல் வேண்டும்.

(2) சிற்றொகுதி சபை ஒவ்வொன்றும், சிற்றொகுதியினைச் சார்பாற்றம்

செய்கின்ற நகராட்சியின் மன்ற உறுப்பினரையும், சிற்றொகுதியின் வாக்காளர்

பட்டியலில் பதிவு செய்துள்ள மற்றும் மன்றத்தால் நியமனம் செய்யப்படும்

நபர்களுக்கிடையேயிருந்து, வகுத்துரைக்கப்படக்கூடியவாறான அத்தகைய

எண்ணிக்கையிலான நியமன உறுப்பினர்களையும் கொண்டிருத்தல் வேண்டும்.

(3) நியமிக்கப்பட்ட உறுப்பினர்களின் எண்ணிக்கை, தகுதிகள் மற்றும்

நியமன முறை ஆகியன வகுத்துரைக்கப்படவாகிறவாறு இருத்தல் வேண்டும்.

49.-D. சிற்றொகுதி சபையின் தலைவரின் பதவிக்காலம்.- (1) நகராட்சி

மன்றத்தில் சிற்றொகுதியைச் சார்பாற்றம் செய்கின்ற மன்ற உறுப்பினர்

அச்சபையின் தலைவராய் இருத்தல் வேண்டும்.

(2) மன்ற உறுப்பினராக இருப்பது அற்றுப் போவதன் பேரில் தலைவர்

பதவியை விட்டு உடனே விலகுதல் வேண்டும்.

49-E. சிற்றொகுதி சபையின் செயற்பணிகளும் கடமைகளும்:- (1)

சிற்றொகுதி சபையின் செயற்பணிகள் மற்றும் கடமைகள் மற்றும் அதன்

அலுவலை நடத்துவதற்கு அத்தகைய குழுவால் கடைப்பிடிக்கப்பட வேண்டிய

நடைமுறை ஆகியன வகுத்துரைக்கப்படலாகிறவாறு இருத்தல் வேண்டும்.

(2) சிற்றொகுதி சபையின் கால அளவானது மன்றத்தின் கால

அளவுடன் ஒத்திசைந்த அளவினதாக இருத்தல் வேண்டும்.

49.-F. பகுதி மன்றத்தை அமைத்துருவாக்குதல்.- (1) நகராட்சிப் பகுதியில்

சிற்றொகுதியொன்றின் பகுதி ஒவ்வொன்றிற்குமான பகுதி மன்றம் ஒன்று,

மன்றத்தால் அமைத்துருவாக்கப்படுதல் வேண்டும்.

(2) சிற்றொகுதி, ஒவ்வொன்றும், பத்துக்கு மேற்படாத

வகுத்துரைக்கப்படலாகும் அத்தகைய எண்ணிக்கையிலான பகுதி மன்றங்களை

கொண்டிருத்தல் வேண்டும்.

(3) பகுதி மன்றமொன்று, ஆட்சி நிலவரைப் பகுதியில் உள்ள

ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட வாக்குச் சாவடிகள் தொடர்பான வாக்காளர்

பட்டியல்களில் பதிவு செய்யப்பட்டுள்ள சாதாரணமாக குடியிருக்கும் அனைத்து

நபர்களும், அத்தகைய முழுமையான புவியியல் நிலவரைப் பகுதியைக்

கொண்டிருத்தல் வேண்டும்.

(4) ஒவ்வொரு பகுதி மன்றமும், சிற்றொகுதியின் தேர்ந்தெடுக்கப்பட்ட

மன்ற உறுப்பினர்களையும் அப்பகுதியின் வாக்காளர் பட்டியல்களில் பதிவு

செய்யப்பட்ட அனைத்து நபர்களையும் கொண்டிருத்தல் வேண்டும்.

49.-G. பகுதி மன்ற தலைவரின் பதவிக்காலம்.- (1) சிற்றொகுதியின். மன்ற

உறுப்பினர், அப்பகுதி மன்றத்தின் தலைவர் மற்றும் கூட்டத்தைக் கூட்டுபவராக

இருத்தல் வேண்டும்.

(2) பகுதி மன்றத்தின் பதவிக்காலமும், மன்றத்தின் பதவிக் காலமும்

ஒரே நேரத்தில் முடிவடைதல் வேண்டும்.

12

49-H. பகுதி மன்றத்தின் செயற்பணிகளும் கடமைகளும்:- பகுதி

மன்றத்தின் செயற் பணிகள், மற்றும் கடமைகள் மற்றும் அதன் அலுவலை

நடத்துவதற்காக கடைப்பிடிக்கப்பட வேண்டிய நடைமுறை ஆகியன

வகுத்துரைக்கப்படலாகிறவாறு இருத்தல் வேண்டும்; "

50 ஆம் பிரிவிற்கான 26. முதன்மைச் சட்டத்தின் 50 ஆம் பிரிவில், (1) ஆம் உட்பிரிவில் (ii) ஆம்

திருத்தம்.

கூறில், "தலைமையாளரிடமிருந்து" எனும் சொற்றொடருக்காக, "தலைமையாளர்

அல்லது ஆணையாளரிடமிருந்து" எனும் சொற்றொடரானது மாற்றாக

அமைக்கப்படுதல் வேண்டும்.

51 ஆம் பிரிவிற்கான 27. முதன்மைச் சட்டத்தின் 51 ஆம் பிரிவிற்காக பின்வரும் பிரிவானது

மாற்றீடு.

மாற்றாக அமைக்கப்படுதல் வேண்டும், அதாவது :-

"51. தலைமையாளர் அல்லது துணைத்தலைமையாளர் மீது நம்பிக்கையில்லா

தீர்மானம்.— (1) இந்தப் பிரிவின் வகைமுறைகளுக்கு உட்பட்டு, தலைமையாளர்

அல்லது துணைத்தலைமையாளர் மீது நம்பிக்கையினைக் கோரும் ஒரு

தீர்மானத்தை இதில் குறிப்பிடப்பட்டுள்ள நடைமுறையுடன் இணங்கி செய்யலாம்.

(2) தீர்மானத்தை உருவாக்குவதற்கான நோக்கத்தின் எழுத்துப்பூர்வமான

அறிவிப்பு, அரசால் குறிப்பிடப்படலாகும் அத்தகைய படிவத்தில், மன்றத்தின்

ஒப்புதலளிக்கப்பட்ட எண்ணிக்கையில் ஐந்தில் மூன்று பங்கிற்குக் குறையாத

அத்தகைய எண்ணிக்கையிலான மன்ற உறுப்பினர்களால் கையொப்பமிடப்பட்டு,

முன்மொழியப்பட்ட தீர்மானத்தின் அறிவிப்பில் கையெழுத்திடும் மன்ற

உறுப்பினர்களில் எவரேனும் இருவரால் ஆணையாளரிடம் நேரிடையாக

ஒப்படைக்கப்படுதல் வேண்டும்.

(3) (2) ஆம் உட்பிரிவின்படி ஆணையாளரானவர் அவருக்கு

அறிவிப்பு வழங்கப்பட்ட தேதியிலிருந்து முப்பது நாட்களுக்கு மிகாத, அவரால்

குறித்திட்ட நேரத்தில், நகராட்சி அலுவலகத்தில் நடத்தப்படும் தீர்மானத்தின்

பரிசீலனைக்காக ஒரு கூட்டத்தைக் கூட்ட வேண்டும். அத்தகைய கூட்டத்தின்

பதினைந்து முழுமையான நாட்களுக்கு குறையாத மற்றும் அதற்காக குறித்திட்ட

நேரத்தின் அறிவிப்பினை மன்ற உறுப்பினர்களுக்கு வழங்குதல் வேண்டும்.

(4) ஆணையரானவர், இந்தப் பிரிவின் கீழ் கூட்டப்பட்ட கூட்டத்திற்கு

தலைமை வகித்தல் வேண்டும் மற்றும் வேறு எந்த நபரும் அதற்குத் தலைமை

வகிக்கக் கூடாது. கூட்டத்திற்கு நியமிக்கப்பட்ட அரை மணி நேரத்திற்குள்

ஆணையாளர் கூட்டத்திற்கு வருகை தந்து தலைமை வகிக்கவில்லையெனில்,

குறிப்பிடப்படும் நேரத்திற்கு கூட்டமானது ஒத்திவைக்கப்படுதல் வேண்டும்

மற்றும் (5) ஆம் உட்பிரிவின் கீழ் ஆணையாளரால், மன்ற உறுப்பினர்களுக்கு

அறிவிக்கப்படுதல் வேண்டும்.

(5) ஆணையாளரால் கூட்டத்திற்குத் தலைமை வகிக்க

இயலவில்லையெனில், அவர் தனது காரணங்களை எழுத்துப்பூர்வமாகப்

பதிவு செய்த பின்பு, அவர் நிர்ணயிக்கக்கூடிய வேறு நேரத்திற்கு கூட்டத்தை

ஒத்திவைக்கலாம். அவ்வாறு நிர்ணயிக்கப்பட்ட தேதி, (3) ஆம் உட்பிரிவின்

கீழ் கூட்டத்திற்கு நிர்ணயிக்கப்பட்ட தேதியிலிருந்து முப்பது நாட்களுக்கு மேல்

இருக்கக்கூடாது. ஒத்திவைக்கப்பட்ட கூட்டத்திற்காக நிர்ணயிக்கப்பட்ட நேரம்

குறித்து, மன்ற உறுப்பினர்களுக்கு ஏழு முழுமையான நாட்களுக்கு குறையாத

அறிவிப்பினை வழங்குதல் வேண்டும்.

(6) (4) மற்றும் (5) உட்பிரிவுகளில் வழங்கப்பட்டுள்ளவாறு தவிர, இந்தப்

பிரிவின் கீழ் ஒரு தீர்மானத்தை பரிசீலிக்கும் நோக்கத்திற்காக கூட்டப்பட்ட

கூட்டமானது காரணம் எதற்காகவும் ஒத்திவைக்கப்படுதல் கூடாது.

(7) இந்தப் பிரிவின் கீழ் கூட்டப்பட்ட கூட்டம் தொடங்கியவுடன்,

ஆணையாளர், மன்றம் கூட்டப்பட்டதற்கான பரிசீலனைத் தீர்மானத்தினை

வாசித்து, அதன் மீதான விவாதத்தினை தொடங்கலாம் என அறிவித்தல்

வேண்டும்.

13

(8) இந்தப் பிரிவின் கீழ் தீர்மானம் எதனின் மீதும் விவாதமானது

ஒத்திவைக்கப்படுதலாகாது.

(9) கூட்டம் தொடங்குவதற்கு நிர்ணயிக்கப்பட்ட நேரத்திலிருந்து

இரண்டு மணிநேரம் முடிந்தவுடன் அத்தகைய விவாதம் முன்னதாகவே

முடிக்கப்படாவிட்டால், அது தானாகவே முடிவடையும் விவாதத்தின் முடிவின்

பேரிலோ அல்லது மேற்சொன்ன இரண்டு மணிநேரம் முடிவடைந்ததன் பேரிலோ

நேற்விற்கேற்ப, அந்த தீர்மானமானது மன்றத்தின் வாக்கெடுப்புக்கு விடப்படும்.

(10) ஆணையாளர், தீர்மானத்தின் சிறப்பைப் பற்றி பேசக்கூடாது,

அதன் மீதான வாக்களிப்பிற்கு தகுதி உரிமையுடையராகார்.

(11) கூட்ட குறிப்பின் நகலுடன், இணைந்த தீர்மானத்தின்

நகலும், அதன் மீதான வாக்கெடுப்பின் முடிவும், கூட்டம் முடிவடைந்தவுடன்

ஆணையாளரால் அரசிற்கு அனுப்பப்படுதல் வேண்டும்.

(12) மன்றத்தின் ஒப்புதலளிக்கப்பட்ட எண்ணிக்கையில் ஐந்தில்

நான்கு பங்கிற்குக் குறையாத ஆதரவுடன் தீர்மானம் நிறைவேற்றப்பட்டால்,

அரசானது அறிவிக்கையின் மூலம், நேர்விற்கேற்ப தலைமையாளர் அல்லது

துணைத் தலைமையாளரை நீக்குதல் வேண்டும்.

(13) மேற்சொன்ன அத்தகைய பெரும்பான்மையால் தீர்மானம்

நிறைவேற்றப்படாவிட்டால், அல்லது குறைவெண் இல்லாததால் கூட்டத்தை

நடத்த முடியாவிட்டால், அதே தலைமையாளர் அல்லது துணைத் தலைமையாளர்

மீது நம்பிக்கை இல்லை என்பதை வெளிப்படுத்தும் எந்த ஒரு அடுத்தடுத்த

தீர்மானத்தின் அறிவிப்பும், கூட்டத்தின் தேதியிலிருந்து ஓர் ஆண்டு

காலாவதியாகும் வரை பெறப்படுதலாகாது.

(14) இந்தப் பிரிவின் கீழ் தீர்மானத்தின் அறிவிப்பு எதுவும்,-

(i) தலைமையாளர் அல்லது துணைத் தலைமையாளர் பதவி

ஏற்ற ஓர் ஆண்டிற்குள்; அல்லது

(ii) தலைமையாளர் அல்லது துணைத் தலைமையாளரின் பதவிக்

காலத்தின் கடைசி ஆண்டின்போது பெறப்படுதலாகாது.".

52 ஆம் பிரிவிற்கான 28. முதன்மை சட்டத்தின் 52 ஆம் பிரிவில், பின்வரும் பிரிவானது மாற்றாக

மாற்றீடு.

அமைக்கப்படுதல் வேண்டும், அதாவது:-

"52. அரசானது, மன்ற உறுப்பினர் அல்லது துணைத் தலைமையாளர்

அல்லது தலைமையாளரை நீக்கம் செய்தல் (1) இந்த சட்டத்தின் வகைமுறைகள்

அல்லது விதிகள், துணை விதிகள், ஒழுங்குமுறைகள் அல்லது அதன் கீழ்

வெளியிடப்பட்ட சட்டப்பூர்வமான ஆணைகள் எதனையும் வேண்டுமென்றே

தவிர்ப்பது அல்லது செயல்படுத்த மறுப்பது, அல்லது அவற்றை மீறுவது அல்லது

தம்மிடம் உற்றமைந்துள்ள அதிகாரங்கள் எதனையும் தவறாக பயன்படுத்துவதாக

கருதுவதன் பேரில், மன்ற உறுப்பினர், துணைத் தலைமையாளர் அல்லது

தலைமையாளர் எவரையும் அறிவிக்கையின் மூலம் அரசானது பதவி நீக்கம்

செய்யலாம்.

(2) (1) ஆம் உட்பிரிவின் கீழ் நடவடிக்கை எடுப்பதற்கு முன்மொழியப்பட்ட

நிலையில் அரசானது, மன்ற உறுப்பினர், துணைத் தலைமையாளர் அல்லது

தொடர்புடைய தலைமையாளருக்கு விளக்கம் அளிப்பதற்கான வாய்ப்பொன்றை

வழங்குதல் வேண்டும் மற்றும் கூறப்பட்ட உட்பிரிவின் கீழ் வெளியிடப்பட்ட

அறிவிக்கையானது அரசால் எடுக்கப்பட்ட நடவடிக்கைக்கான காரணங்கள்

அடங்கிய அறிக்கை ஒன்றினைக் கொண்டிருத்தல் வேண்டும்.

(3) மன்ற உறுப்பினர், துணைத் தலைமையாளர் அல்லது

தலைமையாளர் பதவியிலிருந்து (1) ஆம் உட்பிரிவின் கீழ் நீக்கம் செய்யப்பட்ட

நபரொருவரும், வகுத்துரைக்கப்படலாகும், முறையில் நகராட்சி மன்றத்திற்கான

அடுத்த சாதாரண தேர்தலுக்கான அறிவிப்பானது வெளியிடப்படும் நாள் வரை

அல்லது அத்தகைய அறிவிக்கையில் குறிப்பிடப்படும் நாளிலிருந்து ஓராண்டு

காலம் நிறைவடையும் வரை, இதில் எது பிந்தையதோ அந்நாள் வரை கூறப்பட்ட

பதவிக்கு தேர்ந்தெடுக்கப்படுவதற்கான தகுதியுடையவராகார்.".

14

54 ஆம் பிரிவிற்கான 29. 54 ஆம் பிரிவில், (1) ஆம் உட்பிரிவில், "தொடர்புடைய மாவட்ட

திருத்தம்.

ஆட்சியர் அல்லது இந்திய ஆட்சிப் பணியின் மூத்த அலுவலர்" எனும்

சொற்றொடருக்காக, "ஆணையாளர் அல்லது பிற அலுவலர் எவரும்" எனும்

சொற்றொடரானது மாற்றாக அமைக்கப்படுதல் வேண்டும்.

55 ஆம் பிரிவிற்கான 30. முதன்மைச் சட்டத்தின் 55 ஆம் பிரிவில், (1) ஆம் உட்பிரிவின்,

திருத்தம்.

வரம்புரைக்கு பின்பு, பின்வரும் வரம்புரையானது சேர்க்கப்படுதல் வேண்டும்,

அதாவது:-

"மேலும் வரம்புரையாக, இந்தப் பிரிவின்கீழ் அரசின் அதிகாரங்கள்

நகராட்சி மன்றம் அல்லது பேரூராட்சிக்கு தொடர்புடைய இயக்குநரால்

செயல்படுத்தப்படுதல் வேண்டும்.".

55-A எனும் புதிய 31. முதன்மைச் சட்டத்தின் 55 ஆம் பிரிவிற்குப் பின்பு, பின்வரும் பிரிவானது

பிரிவினை உட்புகுத்தப்படுதல் வேண்டும், அதாவது:-

உட்புகுத்துதல்.

"55-A. உள்ளாட்சி அமைப்புகளுக்கிடையேயான பூசல்களை தீர்த்தல்.-

(1) இந்த சட்டம் அல்லது பிற சட்டம் எதனின் வகைமுறைகளின் கீழ் எழும்

பொருட்பாடுகள் எதனின் தொடர்பாக, மன்றம் மற்றும் ஒன்று அல்லது

அதற்கு மேற்பட்ட பிற உள்ளாட்சி அமைப்புகளுக்கிடையே பூசல்கள் இருக்கும்

போது மற்றும் தொடர்புடைய உள்ளாட்சி அமைப்புகள் அவர்களுக்கிடையே

நட்புமுறையில் அதை தீர்வுக்காண இயலவில்லையென அரசு கருதும் நேர்வில்,

அரசானது பூசலை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளலாம், மற்றும்-

(a) அதன் சொந்த விருப்பத்தின் பேரில் அதை முடிவு செய்தல்;

அல்லது

(b) விசாரணைக்காக அதை அனுப்புதல் மற்றும் அதன்

நோக்கத்திற்காக, 41 ஆம் பிரிவின் கீழ் அமைத்துருவாக்கப்பட்ட இணைக்

குழுவிற்கு அறிக்கை செய்தல்.

(2) (1) ஆம் உட்பிரிவின் (b) கூறில் குறிப்பிடப்பட்டுள்ள அறிக்கை,

அரசிடம் சமர்ப்பிக்கப்படுதல் வேண்டும், அரசு பொருத்தமெனக் கருதலாகும்

அத்தகைய முறையில் பூசலை முடிவு செய்தல் வேண்டும்.

(3) இந்த உட்பிரிவு நடைமுறைக்கு வருவதற்கு முன்னரோ அல்லது

அதற்குப் பின்னரோ கொடுக்கப்பட்ட எந்த முடிவும், (1) ஆம் உட்பிரிவின்

(a) கூறின் கீழ் அல்லது (2) ஆம் உட்பிரிவின் கீழ், தொடர்புடைய உள்ளூர்

அமைப்புகளின் கோரிக்கையின் பேரில், அரசால் பொருத்தமெனக் கருதும்

அத்தகைய முறையில் அவ்வப்போது மாற்றியமைக்கலாம், மற்றும் இந்த உட்பிரிவின்

கீழ் அதில் செய்யப்பட்ட மாற்றங்களுடனான அத்தகைய முடிவு ஏதேனும்

உள்ளூர் அமைப்புகள் கோரிக்கையின் பேரில் அரசால் எந்த நேரத்திலும் ரத்து

செய்யப்படலாம். அத்தகைய முடிவு அல்லது அதில் ஏதேனும் மாற்றம் அல்லது

அதை ரத்து செய்வதானது, தொடர்புடைய ஒவ்வொரு உள்ளூர் அதிகாரமைப்பை

கட்டுப்படுத்தும் மற்றும் எந்த நீதிமன்றத்திலும் கேள்விக்குட்படுத்தப்படாது.

(4) ,இந்தப் பிரிவின் கீழ் அரசின் அதிகாரங்கள், தொடர்புடைய

உள்ளாட்சி அமைப்புகளின் ஒன்று இராணுவ அமைப்பாகவோ அல்லது பெரிய

துறைமுகத்தின் துறைமுக அமைப்பாகவோ இருந்தால், மத்திய அரசின்

ஒப்புதலுடன் மட்டுமே செயல்படுதல் வேண்டும்.".

57ஆம் பிரிவிற்கான 32. முதன்மைச் சட்டத்தின் 57 ஆம் பிரிவில், (5) ஆம் உட்பிரிவானது

திருத்தம்.

விட்டுவிடப்படுதல் வேண்டும்;

15

61 ஆம் பிரிவிற்கான 33. முதன்மைச் சட்டத்தின் 61 ஆம் பிரிவில், (1) ஆம் உட்பிரிவில்,-

திருத்தம்.

(1) "இயக்குநர்" எனும் சொற்றொடருக்காக, "பேரூராட்சிகள் மற்றும்

நகராட்சி மன்றங்களைப் பொருத்த வகையில் இயக்குநர் மற்றும் மாநகராட்சிகளைப்

பொருத்த வகையில் அரசு" எனும் சொற்றொடரானது மாற்றாக அமைக்கப்படுதல்

வேண்டும்;

(2) அந்த வகைமுறையானது விட்டுவிடப்படுதல் வேண்டும்.

62 ஆம் பிரிவிற்கான 34. முதன்மைச் சட்டத்தின் 62ஆம் பிரிவில் (1) ஆம் உட்பிரிவிற்காக,

திருத்தம்.

பின்வரும் உட்பிரிவானது மாற்றாக அமைக்கப்படுதல் வேண்டும், அதாவது;-

"(1) (a) நகராட்சியினால், நிதி ஆணையத்தின் பரிந்துரைகளிலிருந்து

உருவாகுபவைகள் உள்ளடங்களான வரிகள், கட்டணங்கள் மற்றும் பிற கட்டண

தொகைகள், அதிகாரப் பகிர்வு நிதியங்கள், மானியங்கள் மூலம் பெறப்பட்ட

அனைத்து தொகைகளும் "நகராட்சி நிதியம்" என்று அழைக்கப்படும் ஒரு

நிதியத்தை அமைத்துருவாக்குதல் வேண்டும் மற்றும் இந்தச் சட்டத்தின்

வகைமுறைகள் மற்றும் இதன் கீழ் செய்யப்பட்ட விதிகளுடன் இணங்கி

பொருந்துதல் வேண்டும் மற்றும் தீர்வு செய்தல் வேண்டும்;

(b) கடன்கள், முன்தொகைகள், பங்களிப்புகள் மற்றும் மானியங்களின்

மூலமாக நகராட்சியினால் திட்டங்கள் அல்லது சிறப்பித்திட்டங்களுக்காக

பெறப்பட்ட அனைத்து தொகைகளும் திட்டங்கள் அல்லது பணிகளுக்காக

ஒதுக்கப்பட்டவை எதனையும் குறித்து தனி கணக்கில் பராமரிக்கப்படுதல்

வேண்டும்.".

66 ஆம் பிரிவிற்கான 35. முதன்மைச் சட்டத்தின் 66 ஆம் பிரிவில், (1) ஆம் உட்பிரிவில்,

திருத்தம்.

பின்வரும் சொற்றொடரானது இறுதியில் சேர்க்கப்படுதல் வேண்டும், அதாவது:-

"நகராட்சியின் திட்ட வருவாய் உருவாக்கம், நிதி நம்பகத்தன்மை மற்றும்

திருப்பிச் செலுத்தும் திறன் ஆகியவற்றிற்கு உட்பட்டு.".

71ஆம் பிரிவிற்கான 36. முதன்மைச் சட்டத்தின் 71 ஆம் பிரிவானது, (1) ஆம் உட்பிரிவாக

திருத்தம்.

மறு எண்ணிடப்படுதல் வேண்டும் மற்றும் அவ்வாறு மறுஎண்ணிடப்பட்ட (1)

ஆம் உட்பிரிவிற்கு பின்பு, பின்வரும் உட்பிரிவுகள் சேர்க்கப்படுதல் வேண்டும்,

அதாவது:-

"(2) வரவு செலவு ஆவணங்கள் ஒப்புதலுக்கு பின்பு நிர்வாக

அலுவலரின் மின்னணு கையொப்பத்துடன் ஒதுக்கப்பட்ட இணையதளங்கள்

அல்லது வலைவாயிலில் பதிவேற்றம் செய்தல் வேண்டும். வரவு செலவில்

செய்யப்பட்ட ஒதுக்கீடானது ஆண்டின் இறுதியில் காலாவதியாகிவிடும் மற்றும்

உபரியானது வைப்புத் தொகைக்கு மாற்றப்படவோ அல்லது கணக்கிற்கு

வெளியே வைத்திருக்கவோ அல்லது பிற எந்த வகையிலும் ஒதுக்கீடு செய்யவோ

கூடாது.

(3) இயக்குநரின் முன் ஒப்பிதலின்றி நகராட்சி மன்றமானது வரவு

செலவுத் திட்ட ஒதுக்கீட்டைவிட அதிகமாகவோ அல்லது நகராட்சியின்

வருவாயை விட அதிகமாகவோ செலவு செய்வதற்கு ஒப்புதல் அளிக்கக்

கூடாது.".

73 ஆம் பிரிவிற்கான 37. முதன்மைச் சட்டத்தின் 73 ஆம் பிரிவில், (ii) ஆம் கூறிற்கு பின்பு,

திருத்தம்.

பின்வரும் கூறானது சேர்க்கப்படுதல் வேண்டும், அதாவது:-

"(iii) அரசின் ஒப்புதலுடன் பயன்படுத்தப்படலாகும் அறக்கட்டளைக்கு

வழங்கப்பட்ட சொத்து எதுவும், அது உருவாக்கப்பட்டதற்கான நோக்கத்தை தவிர

பிற நோக்கத்திற்காக, அறக்கட்டளையின் நோக்கமானது சாத்தியமற்றதாகவோ

அல்லது செயற்படுத்த இயலாததாகவோ இருந்தால்.".

16

74 ஆம் பிரிவிற்கான 38. முதன்மைச் சட்டத்தின் 74 ஆம் பிரிவில், (1) ஆம் உட்பிரிவில், "1894

திருத்தம்.

ஆம் ஆண்டு நிலம் கையகப்படுத்துதல் சட்டம் (மையச் சட்டம் 1/1894)" எனும்

சொற்றொடருக்காக, 2013-ஆம் ஆண்டு நியாயமான இழப்பீட்டு உரிமை மற்றும்

வெளிப்படையான நிலம் கையகப்படுத்துதல் புனர்வாழ்வு மற்றும் மீள் குடியேற்றச்

சட்டம் (மையச் சட்டம் 30/2013) அல்லது பிற மாநிலச் சட்டம் எதுவும்" எனும்

சொற்றொடரானது மாற்றாக அமைக்கப்படுதல் வேண்டும்.

75-A எனும் புதிய 39. முதன்மைச் சட்டத்தின் 75 ஆம் பிரிவிற்குப் பின்பு, பின்வரும்

பிரிவை உட்புகுத்துதல்.

பிரிவானது உட்புகுத்தப்படுதல் வேண்டும், அதாவது:-

"75-A. வணிகத் திட்டங்களை நிறுவுதல்.- மன்றமானது, அரசின்

ஒப்புதலுடன், சொந்தமாகவோ அல்லது பொது அல்லது தனியார் பங்கேற்பு

முறையின் மூலமாகவோ, மாவட்ட மையங்கள், சமுதாய மற்றும் அருகிலுள்ள

வணிக மையங்கள், தொழிற்பேட்டைகள், பேருந்து அல்லது சரக்கு வாகன

முனையங்கள் மற்றும் வணிக வளாகங்களுடனான சுற்றுலா விடுதிகள் அல்லது

வேறு ஏதேனும் வணிக அல்லது சமூகத் திட்டம் ஆகியவை உள்ளடங்கலான

வணிக உட்கட்டமைப்புத் திட்டங்களின் திட்டமிடல், கட்டுமானம், செயல்பாடு,

பராமரிப்பு அல்லது மேலாண்மை ஆகியவற்றை மேற்கொள்ளலாம்.".

76 ஆம் பிரிவிற்கான 40. முதன்மைச் சட்டத்தின் 76 ஆம் பிரிவில், "மற்றும் அத்தகைய

திருத்தம்.

பண வரம்பு ஐந்து கோடி ரூபாய்க்கு மிகாமல் இருத்தல் வேண்டும்" எனும்

சொற்றொடரானது விட்டு விடப்படுதல் வேண்டும்.

78 ஆம் பிரிவிற்கான 41. முதன்மைச் சட்டத்தின் 78 ஆம் பிரிவில்,-

திருத்தம்.

(1) (2) ஆம் உட்பிரிவில், அதன் வரம்புரைக்காக, பின்வரும்

வரம்புரையானது மாற்றாக அமைக்கப்படுதல் வேண்டும், அதாவது;—

"வரம்புரையாக நகராட்சி நிலம் அல்லது கட்டடம் எதுவும் மைய அல்லது

மாநில அரசு அல்லது மைய அல்லது மாநில அரசின் பொதுத்துறை நிறுவனங்கள்

எதற்கும், பொது நோக்கம் எதற்காகவும் தேவைப்பட்டால், மன்றமானது

அத்தகைய நிலம் அல்லது கட்டடத்தை வாடகைக்கோ அல்லது குத்தகைக்கோ

அனுமதிக்கலாம்.";

(2) (3) ஆம் உட்பிரிவில்,-

(a) "உரிமம்" எனும் சொற்றொடருக்காக, அது காணப்படுகின்ற

இரு இடங்களிலும், "உரிமம் அல்லது குத்தகை" எனும் சொற்றொடரானது

மாற்றாக அமைக்கப்படுதல் வேண்டும்;

(b) "கட்டணம் செலுத்துதல்" எனும் சொற்றொடருக்காக,

"நேர்விற்கேற்ப, கட்டணம் அல்லது வாடகை செலுத்துதல்" எனும்

சொற்றொடரானது மாற்றாக அமைக்கப்படுதல் வேண்டும்.

80 ஆம் பிரிவிற்கான 42. முதன்மைச் சட்டத்தின் 80 ஆம் பிரிவில், (1) ஆம் உட்பிரிவில், (e)

திருத்தம்.

இனத்திற்காக, பின்வரும் இனமானது மாற்றாக அமைக்கப்படுதல் வேண்டும்.

அதாவது:-

"(e) நிறும வரி.".

81 ஆம் பிரிவிற்கான 43. முதன்மைச் சட்டத்தின் 81ஆம் பிரிவில்,-

திருத்தம்.

(1) (1) ஆம் உட்பிரிவிற்கு பின்பு, பின்வரும் உட்பிரிவானது

உட்புகுத்தப்படுதல் வேண்டும். அதாவது:-

"(1-A) வரிகளானது, அரசினால் நிர்ணயிக்கப்பட்ட தரை வீதங்களின்

அடிப்படையில், மன்றத்தினால் நிர்ணயிக்கப்படலாகும் கட்டடம் மற்றும் கட்டத்தில்

அமைந்துள்ள அல்லது அருகில் உள்ள அல்லது அதனுடன் தொடர்புடைய நிலம்

அல்லது இரண்டு ஆண்டு மதிப்பின் அத்தகைய விழுக்காட்டிற்கு விதிக்கப்படுதல்

வேண்டும்;";

17

(2) (3) ஆம் உட்பிரிவிற்கு பின்பு, பின்வரும் உட்பிரிவானது

சேர்க்கப்படுதல் வேண்டும். அதாவது:-

"(4) மன்றமானது, அரசின் முன் ஒப்பதலளிப்பின்றி, விதிக்கப்பட்ட

சொத்துவரி அல்லது அத்தகைய வரியின் வகையம் எதனின் வீதத்தையும்

குறைப்பதோ அல்லது அத்தகைய வரியினை நீக்குவதோ கூடாது.".

82 ஆம் பிரிவிற்கான 44. முதன்மைச் சட்டத்தின் 82 ஆம் பிரிவில்,-

திருத்தம்.

(1) (1) ஆம் உட்பிரிவில் "கட்டங்கள் மற்றும் நிலங்கள்" எனும்

சொற்றொடருக்காக "நிலங்கள், கட்டடங்கள், தொலைத்தொடர்பு கோபுரங்கள்

மற்றும் அதன் மீது கட்டப்பட்ட சேமிப்பு கட்டமைப்புகள் அல்லது நிலத்துடன்

இணைந்த" எனும் சொற்றொடரானது மாற்றாக அமைக்கப்படுதல் வேண்டும்;

(2) (6) ஆம் உட்பிரிவில், "இருநூற்று ஐம்பது ரூபாய்கள்" எனும்

சொற்றொடருக்காக, "இரண்டாயிரம் ரூபாய்கள்" எனும் சொற்றொடரானது

மாற்றாக அமைக்கப்படுதல் வேண்டும்.

83, 84 மற்றும் 85 ஆம் 45. முதன்மைச் சட்டத்தின் 83, 84 மற்றும் 85 ஆம், பிரிவுகளுக்காக,

பிரிவுகளுக்கான பின்வரும் பிரிவுகளானவை மாற்றாக அமைக்கப்படுதல் வேண்டும், அதாவது:-

மாற்றீடு.

"83. சொத்து வரியினை வரிக்கணிப்பு மற்றும் கணக்கிடும் முறை.- (1)

அத்தகைய இடம் அல்லது வளாகத்தின் உரிமையாளரிடமிருந்து கட்டடத்தின்

உரிமையாளர் வேறுபட்ட நபராக இல்லாதவிடத்து, கட்டடம் ஒவ்வொன்றும் அதன்

இடம் மற்றும் அதற்கு அண்டையிலுள்ளதாக ஆக்கிரமிக்கப்பட்ட அருகிலுள்ள

பிற வளாகங்களுடன் சேர்த்து வரிக்கணிப்பு செய்யப்படுதல் வேண்டும்.

(2) நிலம் மற்றும் கட்டடத்தின் ஆண்டு மதிப்பானது, மாதந்தோறும்

அல்லது ஆண்டு தோறும் அவை வாடகைக்கு விடப்படுவதிலிருந்து

நியாயமாக எதிர்ப்பார்க்கப்படும் மொத்த ஆண்டு வாடகைத் தொகையிலிருந்து,

கட்டடத்தினை பொறுத்து அதற்கு சேர்மானமாக அனுபவிக்கப்படும் அதன்

இடங்கள் மற்றும் அருகிலுள்ள நிலங்களைத் தவிர்த்து கட்டடத்திற்கு மட்டுமே

உரித்தான அத்தகைய ஆண்டு வாடகைத் தொகையின் பகுதியில் பத்து

விழுக்காடு கழித்து மீதமுள்ள தொகை என்று கருதப்படுதல் வேண்டும் மற்றும்

கூறப்பட்ட கழிவானது பழுது பார்த்தலுக்கான படித்தொகைகள் அல்லது பிற

கணக்குகள் எதுவாயினும் அதற்கு ஈடானதாக இருத்தல் வேண்டும்:

வரம்புரையாக-

(a) ஆணையாளரின் கருத்துப்படி, சாதாரணமாக வாடகைக்கு

விடப்படாத ஒரு வகுப்பின் கட்டடம் எதனின் நேர்வில், அதன் ஆண்டு மதிப்பு ,

அந்த நிலத்தின் கணித்த மொத்த மதிப்பின் ஆறு சதவீதமாக கொள்ளப்படுதல்

வேண்டும் மற்றும் தேய்மனாத்திற்கான கழிப்பினை செய்த பின்பு கட்டடத்தின்

கட்டுமானத் திற்கான தற்போதய செலவு, அத்தகைய செலவின் பத்து

விழுக்காட்டிற்கு எவ்வகையிலும் குறையாத நியாமான தொகையாக இருத்தல்

வேண்டும்;

(b) ஏதேனும் ஒரு தொழிற்பேட்டையில் உள்ள கட்டடம் எதனையும்

பொறுத்து, குடிநீர் வழங்கல் வடிகால் மற்றும் விளக்குகள் உள்ளிட்ட அத்தியாவசிய

வசதிகள் நகராட்சியால் வழங்கப்படாமல், ஆனால், அரசின் தொழில் துறையால்

வழங்கப்பட்டால், அத்தகைய கட்டிடத்தின் ஆண்டு மதிப்பானது அதன் மூலதன

மதிப்பின் நான்கு விழுக்காடாகக் கருதப்படுதல் வேண்டும்:

வரம்புரையாக, இந்த கூறின் நோக்கத்திற்காக, தொழில் துறை அல்லது

பிற அதிகார அமைப்பினால் அத்தியாவசிய வசதிகள் வழங்கப்படுகின்றனவா

என்ற கேள்வி எழும் நிலையில், அது வகுத்துரைக்கப்படலாகும் அத்தகைய

அதிகார அமைப்பினால் தீர்மானிக்கப்படுதல் வேண்டும்.

18

விளக்கம்.- இந்த கூறின் நோக்கத்திற்காக, 'தொழிற்பேட்டை' என்பது

அரசால் தேர்ந்தெடுக்கப்பட்ட மற்றும் மேம்படுத்தப்பட்ட அல்லது அரசின்

கட்டுப்பாட்டின் கீழ் உள்ள வேறு அதிகார அமைப்பு எதனாலும் மேம்படுத்தப்பட்ட

எந்தவொரு பகுதி என்று பொருள்படும். இதில் தொழில் எதற்கும் அல்லது ஒரு

வகை தொழில்துறைக்கு இடமளிக்கப்படுகிறது; மற்றும்

(c) இயந்திரங்கள் மற்றும் தளவாடங்கள் இந்தப் பிரிவின் கீழ்

மதிப்பீடு செய்வதிலிருந்து விலக்கப்படுதல் வேண்டும்.

(3) அரசானது (2) ஆம் உட்பிரிவிற்கான வரம்புரையின் (a) கூறு

அல்லது (b) கூறுக்கு பொருந்தக்கூடிய நேர்வெதிலும் அல்லது நேர்வின்

வகைகளிலும் நிலத்தின் மதிப்பு, கட்டுமானத்திற்காக தற்போதைய செலவினம்

மற்றும் தேய்மானத்திற்காக கழிக்கப்படும் தொகை ஆகியவற்றை மதிப்பிடும்

அல்லது திருத்தியமைக்கும் அத்தகைய நபர் அல்லது நபர்கள் மற்றும்

அத்தகைய கால இடைவேலைகள் மற்றும் முறைகள் தொடர்பாக விதிகளை

உருவாக்குவதற்கான அதிகாரத்தைக் கொண்டிருத்தல் வேண்டும் மற்றும்

அவர்கள் அத்தகைய விதிகள் அத்தகைய நேர்வு அல்லது நேர்வுகளின்

வகைகளுக்கான வரம்புரைகளின் பயன்பாட்டினை கட்டுப்படுத்தலாம் அல்லது

மாற்றியமைக்கலாம்.

(4) இந்தப் பிரிவின்படி கணக்கிடப்பட்ட சொத்து வரியானது

ஒவ்வொரு அரையாண்டுக்கும் செலுத்தப்படுதல் வேண்டும் மற்றும் உரிமையாளர்

அல்லது குடியிருப்பாளரால் அரையாண்டு காலத்திற்குள் செலுத்தப்பட்டிருத்தல்

வேண்டும்.

விளக்கம்.- இந்த உட்பிரிவின் நோக்கத்திற்காக, "அரையாண்டு" என்ற

சொற்றொடரானது, ஆண்டு ஒன்றில் ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் செப்டம்பர் 30

ஆம் தேதி வரையிலும், அக்டோபர் 1 ஆம் தேதி முதல் மார்ச் 31 ஆம் தேதி

வரையிலும் இருத்தல் வேண்டும்.

(5) ஆணையாளர், கட்டடம் அல்லது நிலத்தின் அனைத்து விவரங்கள்

மற்றும் வகுத்துரைக்கப்படலாகும் அத்தகைய படிவத்தில் அத்தகைய கட்டடம்

அல்லது நிலம் தொடர்பாகச் செலுத்த வேண்டிய சொத்து வரி ஆகியவற்றைக்

கொண்ட சொத்து வரி புத்தகத்தை வழங்குதல் வேண்டும்.

(6) (a) மன்றமானது, விவசாய நோக்கங்களுக்காக தனியாக

பயன்படுத்தப்படாத மற்றும் கட்டடங்களால் ஆக்கிரமிக்கப்படாத அல்லது

அருகில் உள்ள மற்றும் இணைக்கப்படாத நிலங்களைப் பொறுத்த நேர்வில்,

அந்த நிலங்களுக்கு, அதன் அமைவிடம் மற்றும் சதுரடி ஒன்றுக்கு அரசால்

வகுத்துரைக்கப்படலாகும் குறைந்தபட்ச மற்றும் அதிகபட்ச வீதத்திற்கு

உட்பட்டதான அத்தகைய வீதத்தில் சொத்து வரி விதித்தல் வேண்டும்.

(b) நகராட்சி எல்லைக்குள் கட்டடத்துடன் கூடிய நிலம்

ஏதேனும் இருப்பின் மற்றும் காலியாக உள்ள நிலத்தின் பரப்பளவு கட்டடத்தின்

மொத்த பரப்பளவை விட இரு மடங்கு அதிகமாக இருப்பின், மன்றத்தினால்

நிர்ணயிக்கப்பட்ட வீதத்தில் கட்டடத்தின் வெளிப்பரப்பளவு இருமடங்கு அதிகமாக

இருக்கும் அந்த காலி நிலத்தின் மீது சொத்து வரியினை ஆணையாளர்

நிர்ணயித்தல் வேண்டும்.

84. சொத்து வரி செலுத்துவதற்கான ஊக்கத்தொகை மற்றும்

தண்டத்தொகை.- (1) அரையாண்டு தொடங்கிய நாளிலிருந்து முப்பது

நாட்களுக்குள் சொத்து வரி விதிப்புக்குரியவருக்கு வேண்டிய நிகர சொத்து

வரியின் ஐந்து சதவீதத்தினை அதிகபட்சம் ஐந்தாயிரம் ரூபாய்க்கு உட்பட்டு,

ஊக்கத்தொகையாக வழங்கப்படுதல் வேண்டும்.

(2) ஒர் அரையாண்டு முடிந்த பின்பு, சொத்து வரி

ஏதேனும் செலுத்தப்படாமல் இருந்தால், வரி விதிப்புக்குரியவரால்

வகுத்துரைக்கப்படலாகிறவாறான, மாதம் ஒன்றுக்கு தனி வட்டி முறையில் ஒரு

சதவீதத்திற்கு மிகாத அத்தகைய வீதத்தில் வட்டியானது செலுத்தப்பட வேண்டிய

தொகைக்கு கூடுதலாக, செலுத்தப்பட வேண்டும்.

19

(3) உரிமையாளரால் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டில்

வரிவிதிப்பு மேல்முறையீட்டுக் குழு அல்லது நீதிமன்றம் எதனாலும் வழங்கப்பட்ட

ஆணைகளின் விளைவுகளில், நகராட்சிக்கு நிலுவைத் தொகை செலுத்த

வேண்டியிருக்குமிடத்து, உரிமையாளரானவர், ஆணை வழங்கப்பட்ட

நாளிலிருந்து முப்பது நாட்களுக்குள், கூறப்பட்ட தொகையின் செலுத்த வேண்டிய

தேதியிலிருந்து மாதம் ஒன்றுக்கு ஒரு சதவீத தனி வட்டியுடன் கூறப்பட்ட

தொகையினை செலுத்துதல் வேண்டும்.".

86-A எனும் புதிய 46. முதன்மைச் சட்டத்தின் 86 ஆம் பிரிவிற்கு பின்பு, பின்வரும் பிரிவானது

பிரிவினை உட்புகுத்தப்படுதல் வேண்டும்.

உட்புகுத்துதல்.

அதாவது:-

"86-A சொத்து வரியினை உயர்த்துதல்.- மன்றமானது, தீர்மானத்தின்

மூலம், அவ்வப்போது, அரசால் அறிவிக்கை செய்யப்படலாகும், குறைந்தபட்ச

மற்றும் அதிகப்பட்ச வீதங்களுக்குள் அத்தகைய வீதத்தில் சொத்து வரியினை

உயர்த்துதல் வேண்டும்.".

47. முதன்மைச் சட்டத்தின் 87 ஆம் பிரிவில்,- 87 ஆம் பிரிவிற்கான

திருத்தம்.

(1) (c) கூறுக்காக, பின்வரும் கூறானது மாற்றாக அமைக்கப்படுதல்

வேண்டும், அதாவது:-

"(c) மைய அல்லது மாநில அரசு அல்லது நகராட்சி அல்லது

மன்றத்தால் ஏற்பளிக்கப்பட்ட அரசின் உதவி பெறும் நிறுவனங்களால் நடத்தப்படும்

விடுதிகள் மற்றும் நூலகங்கள் உள்ளடங்கலான கல்வியியல் நோக்கங்களுக்காக

பயன்படுத்தப்படும், கட்டடங்கள்:

வரம்புரையாக, சுயநிதி படிப்புகள் நடத்துவதற்காக, அரசு உதவி பெறும்

நிறுவனங்களால் கல்வியியல் நோக்கத்திற்காக பயன்படுத்தப்பட்ட கட்டடங்கள்,

சொத்துவரி விதித்தலுக்கு உட்படுத்தப்படுதல் வேண்டும்.".

(2) (e) கூறிற்காக, பின்வரும் கூறானது மாற்றாக அமைக்கப்படுதல்,

வேண்டும், அதாவது:-

"(e) இதன் பொருட்டு அரசால் வகுத்துரைக்கப்படலாகும்

வழிகாட்டுதல்களுக்குட்பட்டு, ஆனால் அவற்றுடன் இணைந்த குடியிருப்பு

கட்டடங்கள் உள்ளடக்காத அறம்சார் மருத்துவமனைகள் மற்றும் மருந்தகங்கள்;".

91-A எனும் புதிய 48. முதன்மைச் சட்டத்தின் 91-ஆம் பிரிவிற்கு பின்பு, பின்வரும் பிரிவானது

பிரிவினை உட்புகுத்தப்படுதல் வேண்டும், அதாவது:-

உட்புகுத்துதல்.

"91-A நிறுவன வரியினை விதித்தல் மற்றும் வசூலித்தல்.-

மன்றத்தால் தீர்மானிக்கப்பட்டவாறான அரையாண்டிற்கு ஒருமுறை பத்தாயிரம்

ரூபாய்க்கு மிகாத வீதத்தில் நிறுவன வரியை மன்றமானது விதிக்கலாம்

மற்றும் வகுத்துரைப்படலாகும் அத்தகைய முறையில் அத்தகைய வரியினை

வசூலிக்கலாம்.".

92, 93 மற்றும் 49. 92, 93 மற்றும் 94 ஆம் பிரிவுகளானது விட்டுவிடப்படுதல்

94ஆம் பிரிவுகளை வேண்டும்.

விட்டுவிடுதல்.

98ஆம் பிரிவிற்கான 50. முதன்மைச் சட்டத்தின் 98 ஆம் பிரிவில், 1 ஆம் உட்பிரிவில்,

திருத்தம்.

"ஆறு மாதங்கள்" எனும் சொற்றொடருக்காக, "இரண்டு ஆண்டுகள்" எனும்

சொற்றொடரானது மாற்றாக அமைக்கப்படுதல் வேண்டும்,20 100 ஆம் பிரிவிற்கான 51. முதன்மைச் சட்டத்தின் 100 ஆம் பிரிவில்,-

திருத்தம்.

(1) (1) ஆம் உட்பிரிவில்,-

(a) (ii) ஆம் கூறில், "நகராட்சி" எனும் சொற்றொடருக்காக,

"நகராட்சி மன்றம்" எனும் சொற்றொடரானது மாற்றாக அமைக்கப்படுதல்

வேண்டும்;

(b) (ii) ஆம் கூறுக்கு பின்பு, பின்வரும் கூறானது உட்புகுத்தப்படுதல்

வேண்டும், அதாவது;-

"(iii) வரிவிதிப்பு மேல்முறையீட்டு குழுவின் தலைவராக

இருக்கும் மன்றத்தின் தலைவர் மற்றும் அரசால் அறிவிக்கப்படலாகும்

ஒன்பது அலுவலர்களுடனான மன்றத்தால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒன்பது மன்ற

உறுப்பினர்களைக் கொண்டிருக்கும் மாநகராட்சி ஒவ்வொன்றுக்காக.";

(c) அதன் வகைமுறையில் "அல்லது நகராட்சி" எனும்

சொற்றொடருக்காக, "நகராட்சி மன்றம் அல்லது மாநகராட்சி" எனும்

சொற்றொடரானது மாற்றாக அமைக்கப்படுதல் வேண்டும்;

(2) (3) ஆம் உட்பிரிவிற்கு, பின்வரும் வரம்புரைகளானது

சேர்க்கப்படுதல் வேண்டும், அதாவது:-

"வரம்புரையாக, 2022 ஆம் ஆண்டு தமிழ்நாடு நகர்ப்புர உள்ளாட்சி

அமைப்புகள் (திருத்தம்) சட்டத்தின் தொடக்கத்தேதியன்றும் அது முதற்கொண்டும்,

1919 ஆம் ஆண்டு சென்னை மாநகராட்சி சட்டத்தின் (தமிழ்நாடு சட்டம் IV/1919)

கீழ் அமைந்துருவாக்கப்பட்ட வரி விதிப்பு மேல்முறையீடுகள் தீர்ப்பாயத்தின்

முன்பு கூறப்பட்ட தேதியில் நிலுவையிலிருக்கும் அனைத்து பொருட்பாடுகள்

மற்றும் நடவடிக்கைகளும், சென்னை மாநகர உரிமையியல் நீதிமன்றம் அல்லது

சென்னை மாநகராட்சிப் பகுதியின் மீது நீதிமன்ற ஆள்வரையைக் கொண்டுள்ள

முதன்மை மாவட்ட நீதிபதிக்கு மாற்றம் செய்யப்படுதல் வேண்டும் மற்றும்

சென்னை மாநகர உரிமையியல் நீதிமன்றம் அல்லது முதன்மை மாவட்ட நீதிபதி,

அத்தகைய பொருட்பாடு அல்லது நடவடிக்கைகளை, அது மாற்றம் செய்யப்பட்ட

நிலையிலிருந்தோ அல்லது தொடக்க நிலையிலிருந்தோ அல்லது புதிதாகவோ

சென்னை மாநகர உரிமையியல் நீதிமன்றம் அல்லது முதன்மை மாவட்ட நீதிபதி,

ஆகியோருக்கு தக்கதெனக் கருதலாகும் அத்தகையவாறு, நடத்துதல் வேண்டும்:

மேலும் வரம்புரையாக, வரிவிதிப்பு மேல்முறையீடுகள் தீர்ப்பாயத்தால்

வழங்கப்பட்ட இடைக்கால அல்லது இடைக்கால ஆணை, சென்னை நகர

உரிமையியல் நீதிமன்றம் அல்லது முதன்மை மாவட்ட நீதிபதியின் உத்தரவின்

மூலம் மாறுபடும் அல்லது மாற்றியமைக்கும் வரை தொடர்ந்து செயல்பாட்டில்

இருக்கும்.";

(3) (4) ஆம் உட்பிரிவிற்கு "பேரூராட்சி அல்லது நகராட்சி",

காணப்படுகின்ற இரு இடங்களில் "பேரூராட்சி, நகராட்சி மன்றம் அல்லது

மாநகராட்சி" எனும் சொற்றொடரானது மாற்றாக அமைக்கப்பட வேண்டும்.

101 ஆம் பிரிவினை 52. முதன்மைச் சட்டத்தின் 101 ஆம் பிரிவானது விட்டு விடப்படுதல்

விட்டுவிடுதல்.

வேண்டும்.

102 ஆம் பிரிவிற்கான 53. முதன்மைச் சட்டத்தின் 102 ஆம் பிரிவில், (3) ஆம் உட்பிரிவிற்காக,

திருத்தம்.

பின்வரும் உட்பிரிவு மற்றும் விளக்கமானது மாற்றாக அமைக்கப்படுதல்

வேண்டும், அதாவது;-

"(3) அத்தகைய விண்ணப்பத்தினை பெறுவதின் பேரில்,

விண்ணப்பமானது ஒழுங்கில் இருந்தால் ஆணையாளர் உரிமத்தை வழங்குதல்

வேண்டும்:

வரம்புரையாக, ஆணையாளர், தேவையெனக் கருதினால், வணிகம்

அல்லது வர்த்தகம் நடைபெறும் இடங்களை ஆய்வு செய்யலாம்:

21

மேலும் வரம்புரையாக, உரிமம் வழங்குவதற்கான விண்ணப்பம்

எதுவும், கேட்கப்பட்டதற்கான நியாயமான வாய்ப்பொன்றை வழங்காமல்,

மறுக்கப்படுதலாகாது:

மேலும் வரம்புரையாக, விண்ணப்பமானது அது பெறப்பட்ட நாளிலிருந்து

அறுபது நாட்களுக்குள்ளாக தீர்வு செய்யப்படவில்லையெனில், கூறப்பட்ட காலம்

முடிவடைந்ததன் பேரில் விண்ணப்பிக்கப்பட்ட உரிமமானது வழங்கப்பட்டதாகக்

கருதப்படுதல் வேண்டும்.

விளக்கம். – இந்த அத்தியாயத்தின் நோக்கத்திற்காக, 'வணிகம் அல்லது

வர்த்தகம்' என்பது, அவ்வப்போது, அரசால் அறிவிக்கப்படலாகும், கடை,

நிறுவனம், ஆலை அல்லது தொழிற்சாலை ஆகியவற்றின் வகையம் எதுவும்

என்று பொருள்படும்.".

102-A எனும் 54. திருத்தப்பட்டவாறான முதன்மைச் சட்டத்தின் 102 ஆம் பிரிவிற்கு

புதிய பிரிவினை பின்பு, பின்வரும் பிரிவானது உட்புகுத்தப்படுதல் வேண்டும், அதாவது;

உட்புகுத்துதல்.

"102-A சீரற்ற ஆய்வினை மேற்கொள்வதற்கான அதிகாரம்.-

ஆணையாளர், வகுத்துரைக்கப்படலாகும் அத்தகைய முறையில், இந்த

அத்தியாயத்தின் கீழ் வழங்கப்பட்ட உரிமத்திற்கான வணிகம் அல்லது வர்த்தகம்

எதிலும் சீரற்ற தற்போக்கான ஆய்வினை மேற்கொள்ளலாம்.".

107 ஆம் பிரிவிற்கான 55. முதன்மைச் சட்டத்தின் 107ஆம் பிரிவில், (2) ஆம் உட்பிரிவில்,

திருத்தம்.

"அழிக்கப்பட்டது" எனும் சொற்றொடருக்காக, "நீக்கப்பட்டது" எனும்

சொற்றொடரானது மாற்றாக அமைக்கப்படுதல் வேண்டும்.

108-A எனும் 56. முதன்மைச் சட்டத்தின் 108 ஆம் பிரிவிற்கு பின்பு, பின்வரும் பிரிவானது

புதிய பிரிவினை உட்புகுத்தப்படுதல் வேண்டும், அதாவது,-

உட்புகுத்துதல்.

"108–A ஸ்பா மற்றும் மசாஜ் நிலையத்திற்கு உரிமம் வழங்குதல்.-

(1) ஆணையாளரால் வழங்கப்பட்ட உரிமமின்றி, நகராட்சி எல்லைக்குள்

ஸ்பா மற்றும் மசாஜ் நிலையமாக எந்தவொரு இடத்தையும் பயன்படுத்தலாகாது.

(2) ஸ்பா மற்றும் மசாஜ் நிலையத்தை மேற்கொள்வதற்கு ஆர்வமுள்ள

நபரெவரும், வகுத்துரைக்கப்படலாகும் அத்தகைய முறையிலும் அத்தகைய

படிவத்திலும் மற்றும் அத்தகைய கட்டணத்தை செலுத்துவதின் பேரில்

உரிமத்தினை பெறுவதற்காக ஆணையரிடம், விண்ணப்பித்தல் வேண்டும்.

(3) (2) ஆம் உட்பிரிவின் கீழ் விண்ணப்பம் ஒன்றினை பெறுவதன்

பேரில், ஆணையர், ஆணையின் மூலம், அவர் தக்கதெனக் கருதலாகும்

அத்தகைய விசாரணையை மேற்கொண்ட பின்பு, உரிமத்தை வழங்கலாம்

அல்லது எழுத்துபூர்வமாக காரணங்களை பதிவு செய்வதற்காக, கேட்பதற்கான

நியாயமான வாய்ப்பொன்றை வழங்கிய பின்பு, அந்த உரிமத்தை வழங்குவதற்கு

மறுக்கலாம். அத்தகைய உரிமம், அது வழங்கப்பட்டதற்கான கால அளவிற்கு

மிகாமல் ஒரு கால அளவிற்கு புதுப்பிக்கலாம்.".

114 ஆம் பிரிவிற்கான 57. முதன்மைச் சட்டத்தின் 114 ஆம் பிரிவானது, அந்தப் பிரிவிற்கு

திருத்தம்.

(1) ஆம் உட்பிரிவாக மறு எண்ணிடப்படுதல் வேண்டும் மற்றும் அவ்வாறு

மறு எண்ணிடப்பட்ட (1) ஆம் உட்பிரிவிற்கு பின்பு, பின்வரும் பிரிவானது

சேர்க்கப்படுதல் வேண்டும், அதாவது:-

"(2) உரிமதாரர், உரிமத்தின் நிபந்தனைகளை தொடர்ச்சியாக மீறுகிறார்

அல்லது (1) ஆம் உட்பிரிவின் கீழ் வழங்கப்பட்ட ஆணைக்கு கீழ்படியாமல்

இருக்கும் நேர்வில், ஆணையாளர், வர்த்தகத்திற்கான வளாகத்தினை பூட்டி,

முத்திரையிடலாம் மற்றும் அதற்காக குற்ற வழக்கைத் தொடரலாம்.".

114-A எனும் 58. முதன்மைச் சட்டத்தின் 114ஆம் பிரிவிற்குப் பின்பு, பின்வரும் பிரிவானது

புதிய பிரிவினை உட்புகுத்தப்படுதல் வேண்டும், அதாவது:—

உட்புகுத்துதல்.

22

"114-A. உரிமம் முதலியனவற்றை பெற தவறுதலுக்கான அல்லது

அவற்றை மீறுதலுக்கான விளைவுகள்.—இந்தச் சட்டத்தின் கீழ் அல்லது அதன்

கீழ் உருவாக்கப்பட்ட விதி, துணை விதி அல்லது ஒழுங்குமுறை எதுவும்,

எந்த ஒரு செயலையும் செய்வதற்குத் தேவையான உரிமம் அல்லது அனுமதி

அவசியமாக இருந்தால் மற்றும் அத்தகைய உரிமம் அல்லது அனுமதி இன்றியோ

அல்லது அத்தகைய உரிமம் அல்லது அனுமதி எதனின் விதிமுறைகளுக்கு

முரணான வகையிலோ செய்தால், இந்தச் சட்டத்தின் தறுவாய் வேறுபொருள்

குறித்தாலன்றி;-

(a) ஆணையாளர் அறிவிக்கையின் வாயிலாக அறிவிக்கையில்

குறிப்பிடப்பட்ட நேரத்திற்குள், பாதிக்கப்பட்ட அசையும் அல்லது அசையா

பொது அல்லது தனியார் சொத்து எதனையும் முழுமையாகவோ, பகுதியாகவோ

ஆகக்கூடியவரையில் மாற்றியமைக்க, அகற்ற, அதன் உண்மை நிலைக்கு

மாற்றியமைக்க, அத்தகைய செயலை செய்யக் கூடிய நபரினைக் கோரலாம்;

(b) ஆணையாளர் அல்லது அவரால் முறையாக அங்கீகரிக்கப்பட்ட

அலுவலர் எவரும், அத்தகைய செயல் நடைபெற்ற கட்டடம் அல்லது நிலத்திற்குள்

எதனிலும், அத்தகைய தொடர் செயலை தடுக்க சட்டத்திற்கு இணங்கி

தேவையான நடவடிக்கைகள் அனைத்தையும் எடுக்கலாம்; மற்றும்

(c) அத்தகைய செயலை செய்யும் நபர், குற்றவியல் நீதிமன்ற

நடுவர் முன், தண்டனையின் பேரில் அத்தகைய ஒவ்வொரு குற்றத்திற்கும்

இருபத்தைந்தாயிரம் ரூபாய்க்கு மிகாமல் அபராதம் விதிப்பதற்கு

பொறுப்புடையவராகுதல் வேண்டும்.".

116-A எனும் 59. முதன்மைச் சட்டத்தின் 116 ஆம் பிரிவிற்குப் பின்பு, பின்வரும்

புதிய பிரிவினை பிரிவானது உட்புகுத்தப்படுதல், வேண்டும், அதாவது;—

உட்புகுத்துதல்.

"116-A. வரியினை திரும்ப பெறுதல்.- (1) அறிவிக்கை வழங்கப்பட்ட

நாளிலிருந்து பதினைந்து நாட்களுக்குள் வரி செலுத்த வேண்டிய தொகை

செலுத்தப்படாவிட்டால், வரி செலுத்த வேண்டிய நபர் அத்தொகையானது ஏன்

செலுத்தப்படவில்லை என்ற காரணத்தை ஆணையாளரின் மனநிறைவடைவதற்கு

காண்பிக்கவில்லை எனில், ஆணையாளர் வகுத்துரைக்கப்படலாகும்.

அத்தகைய நடைமுறையைப் பின்பற்றி தனது பிடியாணையின் கீழ், கடனை

திருப்பிச் செலுத்தாதவர் கட்டடம் அல்லது நிலத்தின் ஆக்கிரமிப்பிலிருந்து

வரி நிலுவையினைக் கொண்டிருக்கும் நேர்வில், அத்தகைய கட்டடம் அல்லது

நிலத்தில் அல்லது அதன் மீது இருப்பதாகக் கண்டறியப்படலாகும் அசையும்

சொத்து எதனையும் கைப்பற்றுவது மூலமோ அல்லது அதனை விற்பனை

செய்வதன் மூலமோ அவ்வாறு பறிமுதல் செய்யப்பட்ட சொத்தினை காப்பில்

வைத்தும் விற்பனையுடன் தொடர்பாக ஏற்படும் சாத்தியக் கட்டணத்தை நிறைவு

செய்யும் அத்தகைய அதிக தொகைகளுடனும், வரி கணக்கில் நிலுவையிலுள்ள

தொகையினை திரும்பப்பெறலாம்:

வரம்புரையாக, 1908 ஆம் ஆண்டு உரிமையியல் நடைமுறை தொகுப்புச்

சட்டத்தின் (மையச் சட்டம் v/1908) 60ஆம் பிரிவின் (1) ஆம் உட்பிரிவிற்கான

வரம்புரையில் வரையறுக்கப்பட்டுள்ள அசையும் சொத்தினை கைப்பற்றுதலுக்கு

உட்படுத்தலாகாது.

(2) காரணம் எதற்காகவும், தவணைத் திருப்பிச் செலுத்தாவரின்

சொத்தினை கைப்பற்றுதல் அல்லது போதுமான கைப்பற்றுதலானது

நடைமுறைப்படுத்தப்பட முடியாதெனில், ஆணையாளரானவர், குற்றவியல்

நீதித்துறை நடுவர் முன் தவணைத் திருப்பிச் செலுத்தாதவர் மீது வழக்கு

தொடரலாம்.

(3) இதில் அடங்கியுள்ள எதுவும், இந்தச் சட்டத்தின் கீழ்

நகராட்சியினை அதற்குச் செலுத்த வேண்டிய வரி, தீர்வை அல்லது பிற செலுத்த

வேண்டிய தொகையை வசூலிப்பதற்காக உரிமையியல் நீதிமன்றத்திடம் வழக்கு

தொடர்வதிலிருந்து தடுக்காது.".

23

60. முதன்மைச் சட்டத்தின் 117-B ஆம் பிரிவில்,— 117-B ஆம் பிரிவிற்கான

திருத்தம்.

(1) அதில் உள்ள அட்டவணை உள்ளடங்கலாக (2) ஆம் உட்பிரிவிற்காக,

பின்வரும் உட்பிரிவானது மாற்றாக அமைக்கப்படுதல் வேண்டும், அதாவது:-

"(2) நகராட்சி பகுதிக்குள், ஒரு நிறுவனத்தின் ஒவ்வொரு கிளை

அல்லது அலகு, பிரிபடாத இந்து குடும்பம், கூட்டுவணிகம், கூட்டுகுழுமம்

அல்லது பிற கூட்டுகுழும அமைப்பு, சமூகம், சங்கம், வணிக பரிவர்த்தனை

செய்யும் நபர்களின் அமைப்பு அல்லது கழகம் மற்றும் எந்தவொரு தொழிலிலும்,

வர்த்தகம், அலுவல் அல்லது வேலைவாய்ப்பில் தீவிரமாகவோ அல்லது

வேறுவிதமாகவோ ஈடுபட்டுள்ள நபர் ஒவ்வொருவரும் அறிக்கை தாக்கல்

செய்யப்பட வேண்டிய அரையாண்டின் முதல் நாளில், வகுத்துரைக்கப்படலாகும்

அத்தகைய முறையில் குறித்துரைக்கப்பட்ட வீதத்தில் அரையாண்டு வரியை

செலுத்துதல் வேண்டும்:

வரம்புரையாக, ஒரு ஊழியருக்கான அத்தகைய வரி வீதம் ஆண்டொன்றுக்கு

இரண்டாயிரத்து ஐநூறு ரூபாய்க்கு மிகாமல் இருத்தல் வேண்டும்.";

(2) (4) ஆம் உட்பிரிவில்,-

(a) "ஒரு நிறுவனம் அல்லது நபர்", எனும் சொற்றொடருக்காக "ஒரு

நிறுவனத்தின் கிளை அல்லது அலகு, இந்து பிரிபடாத குடும்பம், கூட்டுவணிகம்,

கூட்டுகுழுமம் அல்லது பிற கூட்டுகுழும அமைப்பு, சமூகம், சங்கம் நபர்களின்

அமைப்பு அல்லது நபர்களின் சங்கம்" என்ற சொற்றொடரானது மாற்றாக

அமைக்கப்படுதல் வேண்டும்;

(b) "அத்தகைய நிறுவனம் அல்லது நபர்" எனும் சொற்றொடருக்காக

" அத்தகைய ஒரு நிறுவனத்தின் கிளை அல்லது அலகு, இந்து பிரிபடாத

குடும்பம், கூட்டுவணிகம், கூட்டுகுழுமம் அல்லது பிற கூட்டுகுழும அமைப்பு,

சமூகம், சங்கம், நபர்களின் அமைப்பு அல்லது நபர்களின் சங்கம்" எனும்

சொற்றொடரானது மாற்றாக அமைக்கப்படுதல் வேண்டும்;

(3) (6) ஆம் உட்பிரிவானது விட்டுவிடப்படுதல் வேண்டும்.

117-H ஆம் பிரிவிற்கான 61. முதன்மைச் சட்டத்தின் 117-H ஆம் பிரிவில், (c) கூறுக்காக,

திருத்தம்.

அதன்கீழுள்ள வகைமுறை உள்ளடங்கலாக, பின்வரும் கூறானது மாற்றாக

அமைக்கப்படுதல் வேண்டும், அதாவது;-

"(c) 2016 ஆம் ஆண்டு மாற்றுத் திறனாளிகள் உரிமைகள் சட்டத்தின்

(மையச் சட்டம் 49/2016) 2 ஆம் பிரிவில், (r) கூறில் வரையறுக்கப்பட்டவாறான

வரையளவு குறைபாடுள்ள நபர்கள்.".

VI-B எனும் புதிய 62. முதன்மைச் சட்டத்தின் VI-A அத்தியாயத்திற்கு பின்பு பின்வரும்

அத்தியாயத்தை அத்தியாயமானது உட்புகுத்தப்படுதல் வேண்டும், அதாவது:-

உட்புகுத்தல்.

"அத்தியாயம் VI-B.

விளம்பரப்பலகை, மின்னணுத்திரை மற்றும் விளம்பர அட்டை ஆகியவற்றை

முறைப்படுத்துதல்.

117-K. பொருள் வரையறைகள்.- இந்த அத்தியாயத்தில்,-

(a) "மின்னணுத்திரை" என்பது திருமணம், சமயச் சடங்கு, பிறந்தநாள்

அல்லது இறந்த நாள் குறித்த ஆண்டு விழா, அல்லது அரசியல் மதம் அல்லது

வகுப்புவாத அமைப்பு, வணிக ஊக்குவிப்பு கூட்டம் எதனின் தொடர்பான

விளம்பரம் எதனையும் அல்லது தகவல் எதனையுமோ காட்சிப்படுத்துவதற்காகப்

பயன்படுத்தப்படும் அல்லது பயன்படுத்தக் கருதப்பட்ட, பொது அல்லது தனியார்

இடம் எதிலும் மின்னணு அச்சுத் தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தி, வடிவமைத்து

அச்சடிக்கப்பட்ட பலகைத் தட்டிகள் எதுவும் எனப் பொருள்படும்;

24

(b) "விளம்பரப்பலகை" என்பது நிலம் கட்டடம், சுவர் அல்லது

கட்டமைப்பு எதனின் மீதும் அல்லது அதன் மீது முழுவதுமோ அல்லது

பகுதியாகவோ எழுப்பப்பட்ட கட்டமைப்பு அல்லது பிற தாங்கி அல்லது

பொது மக்களுக்கு முழுவதுமாக அல்லது பகுதியாக காட்சிபடுத்தப்பட்டவை

உள்ளடங்கலான விளம்பரத்தை காட்சிப்படுத்துவதற்காக பயன்படுத்தப்பட்ட

அல்லது பயன்படுத்தக் கருதப்பட்ட பொது அல்லது தனியார் இடம் எதிலும்

வைக்கப்பட்ட மின்னணுத்திரை அல்லது விளம்பர அட்டை அல்லாத பலகைத்

தட்டி அல்லது பிற கட்டமைப்பு எதுவும் என்று பொருள்படும்;

(c) "விளம்பர அட்டை" என்பது, திருமணம், சமயச் சடங்கு, பிறந்தநாள்

அல்லது இறந்த நாள் குறித்த ஆண்டு விழா, அல்லது கூட்டம் அல்லது

எந்தவொரு அரசியல் கூட்டம், மதம் அல்லது வகுப்புவாத அமைப்பு, வணிக

ஊக்குவிப்பு தொடர்பான விளம்பரம் எதையும் அல்லது தகவல் எதனையுமோ

காட்சிப்படுத்துவதற்காகப் பயன்படுத்தப்படும் அல்லது பயன்படுத்தக்

கருதப்பட்ட, பொது அல்லது தனியார் இடம் எதிலும் மின்னணு அச்சுத் தொழில்

நுட்பத்தைப் பயன்படுத்தி வடிவமைத்து அச்சடிக்கப்பட்ட, எட்டு அடி உயரம்

நான்கு அடி அகலத்திற்கு மேற்படாத அளவிலான பலகைத் தட்டிகள் எதுவும்

எனப்பொருள்படும்.

117-L. விளம்பரப்பலகை வைப்பதற்கான ஒழுங்முறை-

(1) ஆணையாளரிடமிருந்து, உரிமம் ஒன்றைப் பெறாமல் நபரெவராலும் எந்த

இடத்திலும் விளம்பரப்பலகை எதுவும் வைக்கப்படுதல் ஆகாது.

(2) (1) ஆம் உட்பிரிவின் கீழ் உரிமத்திற்கான விண்ணப்பம்

ஒவ்வொன்றும், வகுத்துரைக்கப்படலாகும் அத்தகைய படிவத்தில், அத்தகைய

விவரங்களை உள்ளடக்கி, அத்தகைய விண்ணப்பக் கட்டணத்துடன்

ஆணையரிடம் செய்யப்படுதல் வேண்டும்.

(3) ஆணையர், உள்ளக ஆய்வினை செய்ததன் பின்பும்

ஆண்டொன்றுக்கு ஒரு சதுர அடிக்கு இருபதாயிரம் ரூபாய்க்கு மிகாத

வகுத்துரைக்கப்படலாகும் அத்தகைய கட்டணத்தை செலுத்துவதன் பேரிலும்,

வகுத்துரைக்கப்படலாகும் அத்தகைய நிபந்தனைகளுடன் உரிமத்தினை

வழங்கலாம்.

(4) ஆணையர், எழுத்துப்பூர்வமாக பதிவு செய்யும் காரணங்களுக்காக,

உரிமம் வழங்குவதை மறுக்கலாம்:

வரம்புரையாக, விண்ணப்பதாரருக்கு அவரின் முறையீட்டினை வழங்குவதற்கு

வாய்ப்பொன்றை வழங்காமல், உரிமமானது மறுக்கப்படுதலாகாது.

(5) (3) ஆம் பிரிவின் கீழ் வழங்கப்பட்ட உரிமம் ஒவ்வொன்றும், மூன்று

ஆண்டுகள் காலத்திற்கு செல்லுபடியாகும் மற்றும் புதுப்பிக்கலாம்.

(6) (2) மற்றும் (3) ஆம் உட்பிரிவின் படி செலுத்தப்பட்ட கட்டணத்

தொகையானது, வகுத்துரைக்கப்படலாகும் அத்தகைய முறையில், தொடர்புடைய

நகராட்சியின் கணக்கிற்கு வரவு வைக்கப்படுதல் வேண்டும்.

117-M. மின்னணுத் திரைகளையும் விளம்பர அட்டைகளையும்

நிறுவியமைப்பதை முறைப்படுத்துதல்.- (1) விளம்பரம் அல்லது தகவல் எதனையும்

காட்சிப்படுத்துவதற்காக மின்னணுத்திரை அல்லது விளம்பர அட்டை எதுவும்,

நபர் எவராலும், ஆணையரின் முன்அனுமதி பெறாமல் வைக்கப்படுதலாகாது.

(2) (1) ஆம் உட்பிரிவின்படியான அனுமதிக்கான விண்ணப்பம்

ஒவ்வொன்றும், விளம்பர அட்டை அல்லது மின்னணுத்திரை ஒன்றுக்கு பத்தாயிரம்

ரூபாய்க்கு மிகாத அத்தகைய கட்டணத்துடன் வகுத்துரைக்கப்படலாகும்

அத்தகைய படிவத்தில் அத்தகைய விவரங்களை உள்ளடக்கி, மின்னணுத்திரை

அல்லது விளம்பர அட்டையை வைப்பதன் தேதிக்கு பதினைந்து நாட்களுக்கு

முன்னதாக ஆணையரிடம் எழுத்துருவில் செய்யப்படுதல் வேண்டும்.

25

(3) மின்னணுத்திரை அல்லது விளம்பர அட்டை வைப்பதற்கான

அனுமதியானது, ஆணையாளரால் குறித்துரைக்கப்படலாகும் அத்தகைய

நிபந்தனைகளுக்கு உட்பட்டு அத்தகைய நோக்கத்திற்காக ஆறு நாட்களுக்கு

மேற்படாத அத்தகைய கால அளவிற்கு, வழங்கப்படலாம்.

(4) ஆணையாளர், எழுத்துருவில் பதிவு செய்யப்படவேண்டிய

காரணங்களுக்காக அனுமதியினை வழங்க மறுக்கலாம்.

(5) அனுமதி பெற்றதற்குப் பின்னர் மின்னணுத்திரை அல்லது

விளம்பர அட்டையை வைத்திருக்கின்ற ஒவ்வொரு நபரும், அத்தகைய

அனுமதி முடிவுற்றதன் பேரில், வகுத்துரைக்கப்படலாகும் அத்தகைய முறையில்,

சுகாதாரத்திற்கும் சுற்றுச்சூழலுக்கும் இன்னல் எதுவும் ஏற்படாத வகையில்

அதனை அகற்றி அழித்தல் வேண்டும்.

117-N. உரிமத்தினை இடைநிறுத்தம் அல்லது ரத்து செய்வதற்கான

அதிகாரம்:- (1) இந்த அத்தியாயத்தின் கீழ் உரிமதாரர் பொறுப்பாகும் பிற தண்டம்

எதற்கும், குந்தகமின்றி, ஆணையாளர், எந்த நேரத்திலும், எழுத்துப்பூர்வமான

ஆணையின் மூலம்,-

(a) அத்தகைய உரிமமானது, மோசடி, தவறான சித்தரிப்பு அல்லது

பொருள் விவரங்களை வெளியிட மறுத்தலின் மூலம் பெற்றிருந்தால், அல்லது.

(b) உரிமதாரர், வழங்கப்பட்ட உரிமத்திற்குட்பட்டு, இந்த

அத்தியாயத்தின் வகைமுறைகள் எதனையும் அல்லது அதன்கீழ் செய்யப்பட்ட

விதிகள் அல்லது நிபந்தனைகள் எதனையும் மீறினால், 117-L ஆம் பிரிவின் கீழ்

வழங்கப்பட்ட அல்லது புதுப்பிக்கப்பட்ட உரிமம் எதனையும் இடை நிறுத்தலாம்

அல்லது ரத்து செய்யலாம்.

(2) (1) ஆம் உட்பிரிவின் கீழ் உரிமம் ஒன்றை ரத்து செய்வதற்கு

முன்பு, ஆணையாளர் உரிமதாரருக்கு அவரின் முறையீட்டை செய்வதற்கு

வாய்ப்பொன்றை வழங்குதல் வேண்டும்.

117-O. அதிகாரமளிக்கப் பெறாமல் அமைத்த விளம்பரப் பலகை,

மின்னணுத்திரை அல்லது விளம்பர அட்டையை அகற்றுதல்.- உரிமமொன்று

இல்லாமல் அமைக்கப்பட்ட விளம்பரப் பலகை எதனையும் அல்லது

அனுமதியின்றி அமைக்கப்பட்ட மின்னணுத்திரை அல்லது விளம்பர அட்டை

எதனையும், அறிவிப்பு ஏதுமின்றி ஆணையாளர் அகற்றிப் பறிமுதல் செய்தல்

வேண்டும் மற்றும் அகற்றுவதற்கான செலவினை அங்கீகரிக்கப்படாத, விளம்பர

பலகை, மின்னணுத்திரை அல்லது விளம்பர அட்டை ஆகியவற்றை அமைத்த

நபரிடமிருந்து நிலவருவாயின் நிலுவைத் தொகையாக வசூலித்தல் வேண்டும்.

117-P. குறித்த சில நேர்வுகளில் விளம்பரப் பலகை, மின்னணுத்திரை

அல்லது விளம்பர அட்டையினை அகற்றுதல்.- (1) விளம்பரப் பலகை அல்லது

மின்னணுத்திரை அல்லது விளம்பர அட்டை எதுவும் உரிமத்தின் கால அளவு

முடிவடைந்த பின்னரும் அகற்றாமல் வைக்கப்பட்டிருக்குமிடத்து அல்லது உரிமம்

அல்லது அனுமதியின் நிபந்தனைகளுக்கு முரணாக அமைக்கப்பட்டிருக்குமிடத்து,

நேர்விற்கேற்ப, ஆணையாளர் எழுத்துருவிலான அறிவிப்பின் மூலமாக, உரிமதாரர்

அல்லது அனுமதிப்பெற்றிருப்பவரை வகுத்துரைக்கப்படலாகும் அத்தகைய கால

அளவுக்குள்ளாக, அத்தகைய விளம்பரப் பலகை அல்லது மின்னணுத்திரை

அல்லது விளம்பர அட்டையினை அகற்றுமாறு கோரலாம்.

(2) அறிவிப்பில் குறித்துரைக்கப்பட்ட காலத்திற்குள்ளாக விளம்பரப்

பலகை அல்லது மின்னணுத்திரை அல்லது விளம்பர அட்டை அகற்றப்படாதவிடத்து,

ஆணையாளர், மேற்கொண்டு அறிவிப்பு கொடுக்காமலேயே, அத்தகைய

விளம்பரப் பலகையை அகற்றி மற்றும் அதற்கான செலவினங்களை தொடர்புடைய

நபரிடமிருந்து நில வருவாயின் நிலுவைத்தொகையாக வசூலித்தல் வேண்டும்.

26

117 - Q விலக்களித்தல்,- இந்த அத்தியாயத்தில் அடங்கியுள்ள

எதுவும்,-

(a) அத்தகைய விளம்பரப்பலகை மின்னணுத்திரை அல்லது விளம்பர

அட்டையானது அமைக்கப்பட்டுள்ள நிலம் அல்லது கட்டடத்திற்குள் அல்லது

அதில் மேற்கொள்ளப்படும் வணிகம் அல்லது வர்த்தகம் அல்லது அத்தகைய

நிலம் அல்லது கட்டடத்தின் விற்பனை அல்லது வாடகைக்கு விடுதல் எதுவும்

அல்லது அதன் மீதான விளைவுகள் எதுவும் அல்லது அங்கு அல்லது அத்தகைய

நிலம் அல்லது கட்டடத்தில் நடைபெறவிருக்கும் விற்பனை, கேளிக்கை அல்லது

கூட்டம் எதற்கும்;

(b) அத்தகைய விளம்பரப்பலகை, மின்னணுத்திரை அல்லது

விளம்பர அட்டை அமைக்கப்பட்டுள்ள நிலம் அல்லது கட்டடத்தின் பெயர்

அல்லது அத்தகைய நிலம் அல்லது கட்டடத்தின் உரிமையாளர் அல்லது

அனுபவத்திலிருப்பவரின் பெயர் ஆகியவற்றிற்கு தொடர்புடைய விளம்பரம்

எதனையும் காட்சிப்படுத்தும் விளம்பரப் பலகை, மின்னணுத்திரை அல்லது

விளம்பர அட்டை ஆகியவற்றிற்குப் பொருந்தாது;

வரம்புரையாக, இந்தப் பிரிவின் கீழ், விலக்களிப்பானது,

வகுத்துரைக்கப்படலாகும் அத்தகைய விளம்பரப்பலகை, மின்னணுத்திரை

அல்லது விளம்பர அட்டை ஆகியவற்றின் அளவு மற்றும் தன்மைக்கு உட்பட்டு

இருத்தல் வேண்டும்.

117-R. மேல்முறையீடு.- (1) இந்த அத்தியாயத்தின் கீழ்,

ஆணையாளரால் உரிமம் வழங்குவதற்கு அல்லது புதுப்பித்தலுக்கு மறுத்தல்

அல்லது அனுமதி வழங்குதலை மறுத்தல் அல்லது ரத்து செய்தல் ஆகியவற்றின்

ஆணைக்கெதிராக, அந்த ஆணை பெறப்பட்ட தேதியிலிருந்து முப்பது

நாட்களுக்குள், அரசால் அறிவிக்கை செய்யப்படலாகும் அத்தகைய அதிகார

அமைப்பிடம் மேல்முறையீட்டினை செய்யலாம்.

(2) மேல் முறையீடானது, வகுத்துரைக்கப்படலாகும் அத்தகைய

முறையிலும், படிவத்திலும் மற்றும் அத்தகைய கட்டணத்துடனும் இருத்தல்

வேண்டும்.

(3) மேல் முறையீட்டு அதிகார அமைப்பானது, அத்தகைய மேல்

முறையீட்டினை பெறுவதன் பேரில், தேவைப்படலாகும் அத்தகைய விசாரணையை

செய்த பின்னர் மற்றும் மேல்முறையீட்டாளருக்கு கேட்பதற்கான நியாயமான

வாய்ப்பொன்றை வழங்கிய பின்னர், அது தக்கதெனக் கருதலாகும் அத்தகைய

ஆணையினை பிறப்பிக்கலாம்.

117-S. நகராட்சியிடமுள்ள சொத்துக்களில் விளம்பரம் செய்வதற்கான

உரிமையை வழங்குவதற்கான அதிகாரம்:- 1959 ஆம் ஆண்டு தமிழ்நாடு

திறந்தவெளி (சிதைவைத் தடுத்தல்) சட்டம் (தமிழ்நாடு சட்டம் 2/1959) அல்லது

அப்போதைக்கு நடைமுறையிலுள்ள பிற சட்டம் எதனின் வகைமுறைகளுக்குட்பட்டு,

வகுத்துரைக்கப்படலாகும் கட்டணத்தை செலுத்துவதின் பேரில், நகராட்சியிடம்

உள்ள, அல்லது நகராட்சிக்கு சொந்தமான சொத்துக்களில் விளம்பரங்களை

காட்சிப்படுத்துவதற்கு, ஆணையாளர், நபர் எவருக்கும் அல்லது நபர்களின்

வகைகள் அல்லது நிறுவனம் அல்லது அமைப்பு எதற்கும் உரிமையினை

வழங்கலாம்:

வரம்புரையாக, பொது தனியார் கூட்டு திட்டத்தில் தனியார் பங்குதாரராக

இருக்கும் நேர்வில், அந்த கட்டணமானது, தனியார் பங்குதாரரால் ஏற்படும்

செலவுக்கு, கட்டணமானது சரிகட்டப்படுதல் வேண்டும்.

27

117-T குறித்த சில விளம்பரப் பலகைகளை, மின்னணுத்திரைகளை

அல்லது விளம்பர அட்டைகளை வைப்பதற்கான தடை.- இந்தச் சட்டத்தில்

அல்லது அப்போதைக்கு நடைமுறையிலுள்ள பிற சட்டம் எதிலும் அல்லது

நீதிமன்றம் அல்லது தீர்ப்பாயம் அல்லது பிற அதிகார அமைப்பு எதனின் தீர்ப்பு,

தீர்ப்புரை அல்லது ஆணை எதிலும் அடங்கியுள்ளது எவ்வாறிருப்பினும்,-

(a) (i) தடையற்ற மற்றும் பாதுகாப்பான போக்குவரத்து இயக்கத்தினை

பாதிப்பதை போன்று சாலையில் போக்குவரத்திற்கு தெளிவாக தெரியக்கூடிய

விளம்பரப் பலகை எதுவும் (போக்குவரத்து அடையாளக் குறி மற்றும் சாலை

வழிகாட்டியைத் தவிர) பாதுகாப்பான சாலை போக்குவரத்து இயக்கத்திற்கு

ஆபத்தாக மற்றும் இடையூறாக இருக்கிறவிடத்து, ஆணையாளர் எழுத்து

மூலமான அறிவிப்பினால், அறிவிப்பில் குறித்துரைக்கப்பட்டுள்ள அத்தகைய

காலத்திற்குள் உரிமம் பெற்றவரை அல்லது அத்தகைய விளம்பரப் பலகையை

வைத்துள்ள நபர் எவரையும் அத்தகைய விளம்பரப் பலகையை அகற்றுமாறு

கோருதல் வேண்டும்:

வரம்புரையாக, அத்தகைய காலமானது அத்தகைய அறிவிப்பை வெளியிட்ட

தேதியிலிருந்து பதினைந்து நாட்களுக்கு மிகாது இருத்தல் வேண்டும்;

(ii) (i) ஆம் உட்கூறில் குறிப்பிடப்பட்டுள்ள விளம்பரப் பலகையானது,

அறிவிக்கையில் குறித்துரைக்கப்பட்டுள்ள காலத்திற்குள் அகற்றப்படாதவிடத்து,

ஆணையாளர், மேற்கொண்டு அறிவிப்பு கொடுக்காமலேயே, அத்தகைய

விளம்பரப் பலகையை அகற்றி மற்றும் அதற்கான செலவினங்களை தொடர்புடைய

நபரிடமிருந்து நிலவருவாயின் நிலுவைத்தொகையாக வசூலித்தல் வேண்டும்;

(b) (i) தடையற்ற மற்றும் பாதுகாப்பான போக்குவரத்து இயக்கத்தினை

பாதிப்பதைப் போன்று சாலையில் போக்குவரத்திற்கு தெளிவாக தெரியுமாறு

வைக்கப்பட்டுள்ள விளம்பரப் பலகை அல்லது மின்னணுத்திரை அல்லது

விளம்பர அட்டை எதுவும், (போக்குவரத்து அடையாளக் குறி மற்றும் சாலை

வழிகாட்டியைத்தவிர, பாதுகாப்பான சாலை வழிகாட்டியைத்தவிர போக்குவரத்து

இயக்கத்திற்கு ஆபத்தை மற்றும் இடையூறினை ஏற்படுத்த கூடுமென

ஆணையாளர் மனநிறைவு அடைகிறவிடத்து, நேர்விற்கேற்ப, 117-L பிரிவு

அல்லது 117-M பிரிவின் படி அவர் உரிமம் அல்லது அனுமதி எதையும்

வழங்குதல் கூடாது;

(ii) (i) ஆம் உட்கூறுக்கு முரணாக விளம்பரப் பலகை

அல்லது மின்னணுத்திரை அல்லது விளம்பர அட்டைகள் எதுவும்

அமைக்கப்பட்டிருக்கிறவிடத்து, அதனை அறிவிப்பு ஏதுமின்றி ஆணையரால்

அகற்றி பறிமுதல் செய்ய வேண்டும் மற்றும் அதற்கான செலவினங்களை

தொடர்புடைய நபரிடமிருந்து நில வருவாயின் நிலுவைத்தொகையாக வசூலித்தல்

வேண்டும்.

117-U பணத்தண்டம்.- இந்த அத்தியாயத்தின் வகைமுறைகள்

அல்லது அதன் கீழ் செய்யப்பட்ட விதிகள் அல்லது ஆணை எவற்றையும்

மீறுபவர் அல்லது இந்த அத்தியாயத்தின் கீழ் அல்லது அத்தியாயத்தால்

வழங்கப்பட்ட அதிகாரம் எதனின் சட்டப்பூர்வ செயல்பாட்டினை தடை செய்யும்

நபரெவரும், மூன்று ஆண்டுகள் வரை நீட்டிக்கப்படலாகும் சிறை தண்டனை

அல்லது இருபத்தைந்தாயிரம் ரூபாய் வரை நீட்டிக்கப்படலாகும் பணத்தண்டமும்

விதித்தோ அல்லது அவை இரண்டும் விதித்தோ தண்டிக்கப்படுதல் வேண்டும்:

வரம்புரையாக, ஆணையாளரின் அனுமதியின்றி மின்னணுத்திரையை

அல்லது விளம்பர அட்டையை அமைக்கின்ற நபர் எவரும், ஓராண்டு வரை

நீட்டிக்கப்படலாகும் சிறைத் தண்டனையோ அல்லது ஐந்தாயிரம் ரூபாய் வரை

நீட்டிக்கப்படலாகும் பணத் தண்டமோ அல்லது அவை இரண்டுமோ விதித்து

தண்டிக்கப்படுதல் வேண்டும்.".

28

120 ஆம் பிரிவிற்கான 63. முதன்மைச் சட்டத்தின் 120 ஆம் பிரிவில்,—

திருத்தம்.

(1) (5) ஆம் உட்பிரிவில், (iv) ஆம் கூறிற்கு பின்பு, பின்வரும் கூறானது

சேர்க்கப்படுதல் வேண்டும், அதாவது:-

"(v) நிலத்தின் மேம்படுத்துநர் அல்லது உரிமையாளர் திறந்தவெளியையோ

அல்லது சாலைகளுக்காக ஒதுக்கப்பட்ட இடத்தையோ, பரிந்துரைக்கப்பட்ட

மேம்பாட்டுக் கட்டணங்களுடன் ஒப்படைக்கவில்லையெனில்." ;

(2) (6) ஆம் உட்பிரிவில், அதன் வரம்புரை உட்பட "மன்றம்"

என்ற சொற்றொடருக்காக, அது காணப்படுகின்ற இரண்டு இடங்களிலும்

"ஆணையாளர்" என்ற சொற்றொடரானது மாற்றாக அமைக்கப்படுதல் வேண்டும்;

(3) (7) ஆம் உட்பிரிவிற்கு பின்பு, பின்வரும் உட்பிரிவானது

சேர்க்கப்படுதல் வேண்டும். அதாவது:-

"(8) ஏதேனும் ஒரு தனியார் தெரு, உரிமையாளர்களினால் சமன்

செய்யப்பட்டிருந்தால், நடைபாதை அமைக்கப்பட்டிருந்தால், கல் பாதை

அமைக்கப்பட்டிருந்தால் சாலையை அளந்து அடையாளப்பட்டிருந்தால்,

வாய்க்கால் அமைக்கப்பட்டிருந்தால், வடிகால், அமைக்கப்பட்டிருந்தால்,

பாதுகாக்கப்பட்டிருந்தால் மற்றும் மின்சாரமளிக்கப்பட்டிருந்தால், அந்த

தெரு, அதன் உரிமையாளர்களில் நான்கில் மூன்று பங்கிற்கு குறையாத

உரிமையாளர்களினால் கோரப்படுமிடத்து அது பொது தெரு என அறிவிக்கை

செய்யப்படுதல் வேண்டும்.".

64. முதன்மைச் சட்டத்தின் 121 ஆம் பிரிவில்,- 121 ஆம் பிரிவிற்கான

திருத்தம்.

(1) (2) ஆம் உட்பிரிவில் பின்வரும் சொற்றொடரானது இறுதியில்

சேர்க்கப்படுதல் வேண்டும், அதாவது:—

"மற்றும் அத்தகைய அறிவிப்பு வழங்கப்பட்ட நபரிடமிருந்து செலவை

திரும்பப்பெறுதல்.";

(2) அவ்வாறு திருத்தப்பட்டவாறான (2) ஆம் உட்பிரிவிற்கு பின்பு,

பின்வரும் உட்பிரிவானது சேர்க்கப்படுதல் வேண்டும், அதாவது:-

"(3) ஆணையாளரின் முன் அனுமதியின்றி ஒரு வரைப்படம் அல்லது

புதிய தனியார் தெருவை உருவாக்குபவர், குற்றம் நிரூபிக்கப்பட்டால், ஓர் ஆண்டு

வரை நீட்டிக்கப்படலாகும் சிறைத்தண்டனையும், ஒரு லட்சம் ரூபாய் வரை

நீட்டிக்கப்படலாகும் பணத்தண்டத்துடன் சேர்த்து தண்டிக்கப்படுதல் வேண்டும்.

மேலும் தொடர் மீறுகையின் நேர்வில் நாள் ஒன்றுக்கு ஆயிரம் ருபாய்க்கு மிகாத

தொகையினை அத்தகைய தொடர் மீறுகையின் போது விதிக்கலாம்.".

125 ஆம் பிரிவிற்கான 65. முதன்மைச் சட்டத்தின் 125ஆம் பிரிவில், (3) ஆம் உட்பிரிவில் "1894

திருத்தம்.

ஆம் ஆண்டு நிலம் கையகப்படுத்துதல் சட்டம் (மைய சட்டம் I/1894)" என்ற

சொற்றொடருக்காக, "2013 ஆம் ஆண்டு நியாயமான இழப்பீட்டு உரிமை

மற்றும் வெளிப்படையான நிலம் கையகப்படுத்துதல் புனர்வாழ்வு மற்றும்

மீள்குடியேற்றச் சட்டம் (மைய சட்டம் 30/2013) அல்லது பிற மாநிலச் சட்டம்"

எனும் சொற்றொடரானது மாற்றாக அமைக்கப்படுதல் வேண்டும்.

127-A எனும் 66. முதன்மைச் சட்டத்தின் 127ஆம் பிரிவிற்கு பின்பு, பின்வரும் பிரிவானது

புதிய பிரிவினை உட்புகுத்தப்படுதல் வேண்டும். அதாவது:-

உட்புகுத்துதல்.

"127-A. நகர்ப்புர காடுகள், மரக்கன்றுகன்று நடுதல், பூங்காக்கள்

மற்றும் விளையாட்டு மைதானங்கள் ஆகியவற்றை மேம்படுத்துதல்.- நகர்ப்புர

காடுகளை மேம்படுத்துதல், மரங்கள் நடுதல், பொது பூங்காக்கள், தோட்டங்கள்

மற்றும் குழந்தைகள் மற்றும் இளைஞர்களுக்கான உட்புற மற்றும் வெளிப்புற

விளையாட்டு மைதானங்களை உருவாக்குதல் ஆகியவற்றுக்காக நகராட்சியானது

தேவையான நடவடிக்கைகளை எடுத்தல் வேண்டும்.".

29

67. முதன்மைச் சட்டத்தின் 128 ஆம் பிரிவில்,- 128 ஆம் பிரிவிற்கான

திருத்தம்.

(1) (1) ஆம் உட்பிரிவில், (a) மற்றும் (b) கூறுகளில், "நகராட்சி அல்லது

மத்திய அல்லது மாநில அரசுகளின் துறைகளுக்குச் சொந்தமான நிலம்" எனும்

சொற்றொடருக்காக, "நகராட்சிக்கு சொந்தமான அல்லது நகராட்சியிடமுள்ள

நிலம்" என்ற சொற்றொடரானது மாற்றாக அமைக்கப்படுதல் வேண்டும்;

(2) (2) ஆம் உட்பிரிவில்,-

(a) "நகராட்சி அல்லது மத்திய அல்லது மாநில அரசுகளின் துறைகளுக்குச்

சொந்தமான நிலம்" என்ற சொற்றொடருக்காக, "நகராட்சிக்குச் சொந்தமான

அல்லது நகராட்சியிடமுள்ள நிலம்" எனும் சொற்றொடரானது மாற்றாக

அமைக்கப்படுதல் வேண்டும்;

(b) "இருபதாயிரம் ரூபாய்" என்ற சொற்றொடருக்காக "ஐம்பதாயிரம் ரூபாய்"

எனும் சொற்றொடரானது மாற்றாக அமைக்கப்படுதல் வேண்டும்.

131 ஆம் பிரிவினை 68. முதன்மைச் சட்டத்தின் 131 ஆம் பிரிவானது விட்டுவிடப்படுதல்

விட்டுவிடுதல்.

வேண்டும்.

133 ஆம் பிரிவிற்கான 69. முதன்மைச் சட்டத்தின் 133 ஆம் பிரிவில், -

திருத்தம்.

(1) ஓரத்தலைப்பு மற்றும் (2) மற்றும் (4) ஆம் உட்பிரிவுகளில் உள்ள,

"புனரமைப்பு" எனும் சொற்றொடருக்காக, "புனரமைப்பு அல்லது இடித்தல்" எனும்

சொற்றொடரானது மாற்றாக அமைக்கப்படுதல் வேண்டும்;

(2) (5) ஆம் உட்பிரிவில், "கட்டுமானம் அல்லது புனரமைப்பு"எனும்

சொற்றொடருக்காக "கட்டுமானம் புனரமைப்பு அல்லது இடித்தல்" எனும்

சொற்றொடரானது மாற்றாக அமைக்கப்படுதல் வேண்டும்.

134 ஆம் பிரிவிற்கான 70. முதன்மைச் சட்டத்தின் 134 ஆம் பிரிவில், "பத்தாயிரம் ரூபாய்கள்"

திருத்தம்.

எனும் சொற்றொடருக்காக "ஒரு லட்சம் ரூபாய்கள்"எனும் சொற்றொடரானது

மாற்றாக அமைக்கப்படுதல் வேண்டும்.

135 ஆம் பிரிவிற்கான 71. முதன்மைச் சட்டத்தின் 135 ஆம் பிரிவில், (6) ஆம் உட்பிரிவில் உள்ள

திருத்தம்.

"ஆணையாளர்" எனும் சொற்றொடருக்காக, "ஆணையாளர் கட்டடத்தை பூட்டி

முத்திரையிடலாம் அல்லது" எனும் சொற்றொடரானது மாற்றாக அமைக்கப்படுதல்

வேண்டும்.

137 ஆம் பிரிவிற்கான 72. முதன்மைச் சட்டத்தின் 137 ஆம் பிரிவிற்காக, பின்வரும் பிரிவானது

மாற்றீடு.

மாற்றாக அமைக்கப்படுதல் வேண்டும், அதாவது:-

"137. வீதியில் விழுந்த மரங்கள், கட்டமைப்புகள், கட்டடப் பொருட்கள்

போன்றவற்றை அகற்றுதல்.- (1) விழுந்த மரங்கள், கட்டமைப்புகள் அல்லது

வேலிகள் அல்லது கட்டிடப் பொருட்களை அடுக்கி வைப்பதன் மூலம் தெருவில்

ஏதேனும் தடை ஏற்பட்டால், தொடர்புடைய கட்டடத்தின் உரிமையாளர் அல்லது

அனுபவத்திலிருப்பவர், அத்தகைய தடை ஏற்பட்ட பன்னிரெண்டு மணி

நேரத்திற்குள் அல்லது ஆணையாளர் அறிவிப்பின் மூலம் அனுமதிக்கும்

அத்தகைய கூடுதல் காலத்திற்குள், தெருவிலுள்ள அத்தகைய தடைகளை

அகற்றுதல் வேண்டும். கட்டடத்தின் உரிமையாளர் அல்லது அனுபவத்திலிருப்பவர்

அறிவிப்புக்கு இணங்கத் தவறினால், ஆணையாளர் தெருவில் உள்ள

தடைகளை அகற்றி, உரிமையாளர் அல்லது அனுபவத்திலிருப்பவரிடமிருந்து

அகற்றுவதற்கான செலவை நில வருவாயின் நிலுவைத் தொகையாக வசூலித்தல்

வேண்டும். தெருவில் அத்தகைய இடையூறு ஏற்படுத்தியதற்காக ஆணையாளர்

இரண்டாயிரம் ரூபாய்க்கு மிகாத அபராதத்தினையும் விதிக்கலாம்.

137-A மற்றும் 73. முதன்மைச் சட்டத்தின் 137 ஆம் பிரிவிற்குப்பின்பு, பின்வரும்

137-B எனும் பிரிவானது உட்புகுத்தப்படுதல் வேண்டும், அதாவது:-

புதிய பிரிவுகளை

உட்புகுத்தல்.

30

"137-A. நீச்சல் குளம் கட்டுவதற்கான அனுமதி.- (1) ஆணையாளரிடம்

அனுமதி பெறாமல், எந்த இடத்திலும் நீச்சல் குளமானது கட்டப்படுதல் கூடாது.

(2) நீச்சல் குளத்தினை கட்டும் அனுமதிக்கான விண்ணப்பம்

ஒவ்வொன்றும் ஆணையரிடம் செய்யப்படுதல் வேண்டும், மற்றும்

இருபத்தைந்தாயிரம் ரூபாய்க்கு மிகாத அத்தகைய கட்டணத்துடனும்

வகுத்துரைக்கப்படலாகும் அத்தகைய விவரங்களுடனும் இணைக்கப்படுதல்

வேண்டும்.

(3) (2) ஆம் உட்பிரிவின் கீழ் விண்ணப்பம் ஒன்றினைப் பெறுவதன்

பேரில், ஆணையாளர், அவர் தேவையெனக் கருதலாகும் விசாரணையை

மேற்கொண்ட பின்பு, அனுமதி வழங்கலாம் அல்லது அனுமதி வழங்க மறுக்கலாம்.

வழங்கப்பட்ட ஒவ்வொரு அனுமதியும் வகுத்துரைக்கப்படலாகும் அத்தகைய

நிபந்தனை மற்றும் வரையறைகளுக்குட்பட்டு அத்தகைய படிவத்தில் இருத்தல்

வேண்டும்.

(4) (3) ஆம் உட்பிரிவின் கீழ் அனுமதி வழங்க ஆணையாளர்

மறுக்குமிடத்து, அத்தகைய மறுப்புக்கான காரணங்களை அவர் எழுத்துப்பூர்வமாக

அளித்தல் வேண்டும்.

(5) நீச்சல் குளம் அமைந்துள்ள கட்டடம் அல்லது நிலத்தின்

உரிமையாளரும் அல்லது அனுபவத்தில் இருப்பவர், ஒவ்வொருவரும் நீச்சல்

குளத்தை வகுத்துரைக்கப்படலாகும் அத்தகைய முறையில் பராமரித்தல்

வேண்டும் மற்றும் பாதுகாப்பு விதிமுறைகளைப் பின்பற்றுதல் வேண்டும்.

(6) இதன் பொருட்டு அரசால் அங்கீகரிக்கப்பட்ட நபர் எவரும், 190

ஆம் பிரிவின் வகைமுறைகளுக்கு உட்பட்டு, நீச்சல் குளத்தைப் பயன்படுத்தும்

நபர்களின் பாதுகாப்பிற்காக அல்லது நீச்சல் குளத்தை மேம்படுத்தும்

நோக்கத்திற்காகவும் அவரின் கருத்தில், தேவைப்படும் விசாரணை அல்லது

ஆய்வினை மேற்கொள்வதற்கு மற்றும் நடவடக்கைகள் எடுப்பதற்கு, நீச்சல்

குளம் அமைந்துள்ள நிலம் அல்லது கட்டடம் எதனுள்ளும் நுழையலாம்:

வரம்புரையாக, இந்த உட்பிரிவின் நோக்கத்திற்காக,-

(i) பள்ளிகளின் வளாகத்தில் அமைந்துள்ள நீச்சல் குளங்களைப்

பொறுத்தவரையில், பள்ளிக் கல்வி இயக்குநரகத்தில் இணை இயக்குநரின்

படிநிலைக்கும் குறையாத;

(ii) கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களின் வளாகத்தில்

அமைந்துள்ள நீச்சல் குளங்களைப் பொறுத்தவரையில், கல்லூரிக் கல்வி

இயக்குநரகத்தின் இணை இயக்குநரின் படிநிலைக்குக் குறையாத அலுவலர்

எவரையும் அரசானது அங்கீகரிக்கலாம்;

மேலும், வரம்புரையாக, நீச்சல் குளம் அமைந்துள்ள வெவ்வேறு வகையான

கட்டிடங்கள் அல்லது நிலத்திற்காக அரசானது வெவ்வேறு நபர்களை

அங்கீகரிக்கலாம்.".

137-B மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பை நிறுவுதலுக்கான வகைமுறை.-

(1) அரசு அல்லது அரசினால் சொந்தமாக்கப்பட்ட அல்லது கட்டுப்படுத்தப்பட்ட

சட்டப்பூர்வமான அமைப்பு அல்லது நிறுமம் அல்லது நிறுவனம் ஆகியவற்றினால்

சொந்தமாக்கப்பட்ட அல்லது ஆக்கிரமிக்கப்பட்ட கட்டடம் ஒவ்வொன்றிலும்

மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பானது, நேர்விற்கேற்ப அரசு அல்லது அத்தகைய

சட்டப்பூர்வ அமைப்பு அல்லது நிறுமம் அல்லது பிற நிறுவனத்தினால்

வகுத்துரைக்கப்படலாகும் அத்தகைய முறையில், வழங்கப்படுதல் வேண்டும்.

(2) கட்டடத்தின் உரிமையாளர் அல்லது அனுபவத்திலிருப்பவர்,

ஒவ்வொருவரும், வகுத்துரைக்கப்படலாகும் அத்தகைய முறையில், கட்டடத்தில்

மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பினை வழங்குதல் வேண்டும்.

31

விளக்கம்:- கட்டடமானது ஒன்றுக்கு மேற்பட்ட நபரால்

சொந்தமாக்கப்பட்டிருந்தால் அல்லது அனுபவத்திலிருந்தால் அத்தகைய நபர்

ஒவ்வொருவரும் இந்தப்பிரிவின் கீழ் பொறுப்புடையவராகுதல் வேண்டும்.

(3) (2) ஆம் உட்பிரிவின் படி தேவைப்பட்டவாறான, மழைநீர் சேகரிப்பு

கட்டமைப்பானது வழங்கப்படாதவிடத்து, ஆணையாளர் அல்லது அவரால் இதன்

பொருட்டு அங்கீகரிக்கப்பட்ட நபர் எவரும், கட்டடத்தின் உரிமையாளர் அல்லது

அனுபவத்திலிருப்பவருக்கு அறிவிப்பு கொடுத்த பின்பு, அத்தகைய கட்டடத்தில்

மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பை வழங்கலாம் மற்றும் சொத்துவரியினைப் போன்ற

முறையில் அதன் தன்னியல்பான செலவுகளுடன் அத்தகைய ஏற்பாடுகளின்

செலவினைத் திரும்பப்பெறவும் செய்யலாம்.

(4) (3) ஆம் பிரிவின் கீழ் எடுக்கப்பட்ட நடவடிக்கை எதுவும்

எவ்வாறிருப்பினும், கட்டடத்தின் உரிமையாளர் அல்லது அனுபவத்திலிருப்பவர்,

அந்தக் கட்டடத்தில் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பை வழங்குவதற்கு தவறுமிடத்து,

அத்தகைய கட்டடத்திற்கு வழங்கப்பட்ட குடிநீர் வழங்கல் தொடர்பானது, மழைநீர்

சேகரிப்பு கட்டமைப்பு வழங்கப்படும் வரையில், துண்டிக்கப்படுதல் வேண்டும்.".

141 ஆம் பிரிவிற்கான 74. முதன்மைச் சட்டத்தின் 141 ஆம் பிரிவில், "அரசு" எனும்

திருத்தம்.

சொற்றொடருக்காக, "மாவட்ட ஆட்சியர்" எனும் சொற்றொடரானது மாற்றாக

அமைக்கப்படுதல் வேண்டும்.

144 ஆம் பிரிவிற்கான 75. முதன்மைச் சட்டத்தின் 144 ஆம் பிரிவில், "ஓராண்டுக்காலம்" எனும்

திருத்தம்.

சொற்றொடருக்காக, "ஐந்து ஆண்டுகள் காலம்" எனும் சொற்றொடரானது

மாற்றாக அமைக்கப்படுதல் வேண்டும்.

145 ஆம் பிரிவிற்கான 76. முதன்மைச் சட்டத்தின் 145 ஆம் பிரிவில், (2) ஆம் உட்பிரிவில்,

திருத்தம்.

பின்வருவன இறுதியாக சேர்க்கப்படுதல் வேண்டும், அதாவது;-

"தேவை எனக் கருதினால், கட்டடத்தை பூட்டி முத்திரையிடலாம்.".

145-A முதல் 145- 77. முதன்மைச் சட்டத்தின் 145 ஆம் பிரிவிற்கு பின்பு, பின்வரும்

C வரை புதிய பிரிவுகளானது உட்புகுத்தப்படுதல் வேண்டும், அதாவது:-

பிரிவுகளை

உட்புகுத்துதல்.

" 145-A. கட்டடத்தின் அங்கீகரிக்கப்பட்ட பயன்பாட்டினை

மாற்றுவதைத் தடைசெய்யும் அதிகாரம்.-

(1) ஆணையரின் முன் அனுமதியின்றி அல்லது அத்தகைய

அனுமதியின் நிபந்தனைகளுக்கு இணங்காத நபர் எவரும்,-

(a) உண்மையாக அங்கீகரிக்கப்படாத நோக்கத்திற்காக பயன்படுத்த

அல்லது பயன்படுத்துவதற்கு அனுமதியோ; அல்லது

(b) அனுமதிக்கப்பட்ட திட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதைத் தவிர,

கட்டடத்தின் பயன்பாட்டினை மாற்றவோ அல்லது மாற்றுவதற்கு அனுமதித்தலோ

ஆகாது.

(2) (1)-ஆம் உட்பிரிவினை மீறியதற்காக, கட்டடத்தின் உரிமையாளர்

அல்லது அனுபவத்திலிருப்பவருக்கு எதிராக எடுக்கப்படும் வேறு எந்த

நடவடிக்கைக்கும் குந்தகமின்றி ஆணையாளர் அத்தகைய நபரிடம் அத்தகைய

மீறல் தொடர்ந்த காலம் முழுவதும் அங்கீகரிக்கப்படாத பயன்பாட்டிற்கு உட்பட்ட

பகுதிக்கு, மாதம் ஒன்றுக்கு ஒரு சதுர மீட்டருக்கு நூறு ரூபாய்க்கு மிகாத

அத்தகைய பணத்தண்டத்தை விதிக்கலாம்.

32

145-B. சுற்றுச்சூழல் காரணங்களுக்காக குறிப்பிட்ட பகுதியில்

குறிப்பிட்ட நோக்கத்திற்காக வளாகத்தைப் பயன்படுத்துவதைத் தடுக்கும்

அதிகாரம்.-நகராட்சி அல்லது அரசு அல்லது மாவட்ட ஆட்சியர், அதன் அல்லது

அவரின் நோக்கத்தில் அதில் குறிப்பிடப்பட்ட சுற்றுச்சூழல் காரணங்களுக்காக,

அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள ஏதேனும் நோக்கங்களுக்காக அன்றி,

நபரெவரும் குறிப்பிடப்பட்ட பரப்பிடம் எதனையும் பயன்படுத்தக்கூடாதென

விளம்பரம் செய்யலாம்.

145-C. நிறைவுச் சான்றிதழ்.- கட்டடம் கட்டி முடிக்கப்பட்ட ஒரு

மாதத்திற்குள் கட்டடத்தின் உரிமையாளர் ஒவ்வொருவரும் தகுதி வாய்ந்த

அதிகார அமைப்பிடம் நிறைவுச் சான்றிதழை வழங்க விண்ணப்பித்தல் வேண்டும்.

அதிகார அமைப்பானது கட்டடத்தை ஆய்வு செய்து மற்றும் அனுமதிக்கப்பட்ட

திட்டத்தின்படி கட்டுமானம் இருப்பதாக மனநிறைவடைந்தால், விண்ணப்பித்த

தேதியிலிருந்து ஒரு மாதத்திற்குள், நிறைவுச் சான்றிதழை வழங்குதல்

வேண்டும்.".

151 ஆம் பிரிவிற்கான 78. முதன்மைச் சட்டத்தின் 151 ஆம் பிரிவில்,- "ஆட்சியர்" எனும்

திருத்தம்.

சொற்றொடருக்காக, "மாவட்ட ஆட்சியர் அல்லது பிற அலுவலர் எவரும்" எனும்

சொற்றொடரானது மாற்றாக அமைக்கப்படுதல் வேண்டும்.

154 ஆம் பிரிவிற்கான 79. முதன்மைச் சட்டத்தின் 154 ஆம் பிரிவில், (2) ஆம் உட்பிரிவிற்கு,

திருத்தம்.

பின்வரும் வகைமுறையானது சேர்க்கப்படுதல் வேண்டும்:-

"வரம்புரையாக, நகராட்சி எல்லைக்கு அப்பாற்பட்டு எந்தொவொரு பணியும்,

அரசின் முன்அனுமதி இன்றி எடுக்கப்படுதலாகாது.".

157 ஆம் பிரிவிற்கான 80. முதன்மைச் சட்டத்தின் 157 ஆம் பிரிவில்,- (1) "கட்டணத் தொகை"

திருத்தம்.

எனும் சொற்றொடருக்காக அது காணப்படுகின்ற இடங்களில் "கட்டணங்கள்"

எனும் சொற்றொடரானது மாற்றாக அமைக்கப்படுதல் வேண்டும்.

(2) (2) ஆம் உட்பிரிவிற்கு பின்பு, பின்வரும் உட்பிரிவானது

உட்புகுத்தப்படுதல் வேண்டும், அதாவது:-

"(2-A) மன்றமானது, ஒவ்வொரு ஆண்டும் கட்டணங்களை

மாற்றியமைப்பதற்கான அதிகாரத்தை கொண்டிருத்தல் வேண்டும் மற்றும்

புதிய குடிநீர் வழங்கல் திட்டமாக இருக்கும் நேர்வில், கட்டங்களானவை

வகுத்துரைக்கப்படலாகும், அத்தகைய முறையில், அங்கு ஏற்பட்ட செலவினத்தின்

அடிப்படையில் வசூலிக்கப்படுதல் அல்லது மாற்றியமைக்கப்படுதல் வேண்டும்.".

159 ஆம் பிரிவிற்கான 81. முதன்மைச் சட்டத்தின் 159 ஆம் பிரிவில், (2) ஆம் உட்பிரிவிற்குப்

திருத்தம்.

பின்பு, பின்வரும் உட்பிரிவானது சேர்க்கப்படுதல் வேண்டும், அதாவது:-

"(3) நகராட்சியால், கழிவுநீர் அமைப்பானது பராமரிக்கப்படுமிடத்து,

அந்த நோக்கத்திற்காக உருவாக்கப்பட்ட துணை விதிகளுக்கிணங்கி,

மன்றமானது, ஒவ்வொரு வீட்டு சேவை இணைப்புக்கான கட்டணங்கள் மற்றும்

பாதுகாப்பு வைப்புத்தொகையை, நிர்ணயித்தல் வேண்டும்.".

161 ஆம் பிரிவிற்கான 82. முதன்மைச் சட்டத்தின் 161 ஆம் பிரிவில், (1) ஆம் உட்பிரிவில், "வடிகால்"

திருத்தம்.

எனும் சொற்றொடருக்காக, அது காணப்படுகின்ற இரு இடங்களிலும், "வடிகால்

அல்லது கழிவுநீர்" எனும் சொற்றொடரானது மாற்றாக அமைக்கப்படுதல்

வேண்டும்.

161-A எனும் 83. முதன்மைச் சட்டத்தின் 161 ஆம் பிரிவிற்கு பின்பு, பின்வரும் பிரிவானது

புதிய பிரிவினை உட்புகுத்தப்படுதல் வேண்டும், அதாவது:-

உட்புகுத்துதல்.

33

"161-A. குடிநீர் வழங்கல் அல்லது கழிவுநீர் அமைப்புடன்

இணைக்கப்பட்ட வளாகங்கள் மீதான அத்துமீறல்.- (1) குடிநீர் வழங்கல் அல்லது

கழிவுநீர் அமைப்புடன் இணைந்த வளாகங்கள் எதனின் மீதும் இயங்குகிற குழாய்

அல்லது குழாயுடன் கூடிய நகராட்சிக்கு சொந்தமான அல்லது அதனிடமுள்ள

நிலம் எதிலும் அனுமதியின்றி நபரெவரும் நுழைதல் கூடாது. .

(2) மன்றத்தின் அனுமதியின்றி, தனியார் கட்டடம், சுவர் அல்லது பிற

கட்டமைப்புகள் எதுவும் அமைக்கப்படுதலாகாது மற்றும் நகராட்சியின் குடிநீர்

குழாய்கள் அல்லது வடிகால் அல்லது கழிவுநீர் குழாய்கள் எதனின் மீதும்

தனியார் தெரு எதுவும் கட்டப்படுதலாகாது.

(3) தனியார் கட்டடம், சுவர் அல்லது கட்டமைப்பு வேறு எதுவும்

அவ்வாறு அமைக்கப்பட்டாலோ அல்லது தனியார் தெரு ஏதேனும் அவ்வாறு

கட்டப்பட்டாலோ, மன்றமானது அதை அகற்றலாம் மற்றும், அத்தகைய

அகற்றுதலுக்கான செலவை நில வருவாயின் நிலுவைத்தொகையாக

வசூலிக்கலாம்.".

164-A மற்றும் 84. முதன்மைச் சட்டத்தின் 164 ஆம் பிரிவிற்கு பின்பு, பின்வரும்

164-B எனும் பிரிவுகளானது உட்புகுத்தப்படுதல் வேண்டும்:-

புதிய பிரிவுகளை

உட்புகுத்துதல்.

"164-A. கிணறைத் தோண்டுவதற்கான அனுமதியை வழங்குதல்.- (1)

நபர் எவரும், அவரோ அல்லது அவருக்குப் பதிலாக நபர் எவரின் மூலமாகவோ

ஆணையாளரிடமிருந்து அனுமதி ஒன்றைப் பெறாமல், எந்த நோக்கத்திற்காகவும்

நகராட்சி பரப்பிடம் எதிலும் கிணறு எதனையும் தோண்டுதலில் ஈடுபடுதலாகாது:

வரம்புரையாக, இந்த உட்பிரிவானது வீட்டு உபயோகத்திற்காக

தோண்டப்படும் கிணற்றிற்குப் பொருந்தாது:

மேலும் வரம்புரையாக, இந்த உட்பிரிவானது, 1987 ஆம் ஆண்டு

சென்னைப் பெருநகர் பரப்பிட நிலத்தடி நீர் (ஒழுங்குமுறைப்படுத்துதல்) சட்டத்தின்

(தமிழ்நாடு சட்டம் 27/1987) 2 ஆம் பிரிவின் (g) கூறில் பொருள் வரையறை

செய்யப்பட்டவாறான "பட்டியலிடப்பட்ட பகுதிக்கு" பொருந்தாது.

(2) கிணறு ஒன்றைத் தோண்டுவதற்கு விரும்பும் நபர் எவரும், இந்த

நோக்கத்திற்காக அனுமதியைப் பெறுவதற்கு ஆணையாளரிடம் விண்ணப்பிக்க

வேண்டும் மற்றும் ஆணையாளரால் அனுமதியொன்று வழங்கப்படாதவரையில்

அத்தகைய கிணற்றை தோண்டுவதற்குத் தொடர்புடைய செயல் எதனையும்

செய்தலாகாது.

(3) அனுமதி வழங்குவதற்கான விண்ணப்பம் ஒவ்வொன்றும்,

வகுத்துரைக்கப்படலாகும் அத்தகைய படிவத்தில் மற்றும் அத்தகைய விபரங்கள்

உள்ளடக்கி செய்யப்படுதல் வேண்டும் மற்றும் பத்தாயிரம் ரூபாய்க்கு மிகாத

வகுத்துரைக்கப்படலாகும் அத்தகைய கட்டணத்துடன் இருத்தல் வேண்டும்.

(4) (2) ஆம் உட்பிரிவின்படி, விண்ணப்பமொன்று பெறப்பட்டதன்

பேரில், ஆணையாளர் குறித்துரைக்கலாகும் அத்தகைய நிபந்தனைகள் மற்றும்

வரையறைகளுக்குட்பட்டு, கிணற்றை தோன்றுவதற்கான அனுமதி ஒன்றினை

வழங்கலாம் அல்லது அத்தகைய அனுமதியை வழங்க மறுக்கலாம்:

வரம்புரையாக, விண்ணப்பதாரருக்கு கேட்பதற்கான நியாயமான

வாய்ப்பொன்று வழங்கப்பட்டாலன்றி அனுமதி எதுவும் மறுக்கப்படுதலாகாது.

(5) அனுமதி வழங்குவது அல்லது வழங்க மறுப்பது தொடர்பான

முடிவானது, ஆணையாளரால் விண்ணப்பதாரருக்கு வகுத்துரைக்கப்படலாகும்

அத்தகைய காலத்திற்குள் தெரிவிக்கப்படுதல் வேண்டும்.

34

(6) (5) ஆம் உட்பிரிவின் கீழ் ஆணையாளரின் முடிவால் பாதிக்கப்பட்ட

நபர் எவரும் வகுத்துரைக்கப்படலாகும், அத்தகைய காலத்திற்குள் மற்றும்

அத்தகைய முறையில், இதன் பொருட்டு, அறிவிக்கையின் மூலம், அரசால்

குறிப்பிடப்படலாகும் அத்தகைய அதிகார அமைப்பிடம் மேல்முறையீடு செய்யலாம்.

(7) பயன்பாட்டில் உள்ள அல்லது பயன்படுத்தப்படாத ஒவ்வொரு

கிணற்றினுடைய உரிமையாளரும், வகுத்துரைக்கப்படலாகும் அத்தகைய

பாதுகாப்பு நடவடிக்கைகளைப் பின்பற்றுதல் வேண்டும்.

164-B. கிணறு தோண்டும் வேலையை மேற்கொள்வதற்கு, பதிவுச்

சான்றிதழை வழங்குதல்.- (1) மாநகராட்சி பரப்பிடம் எதிலும் கிணறு தோண்டும்

தொழிலைச் செய்ய விரும்பும் நபர் ஒவ்வொருவரும், பதிவுச் சான்றிதழ்

ஒன்றினைப் பெறுவதற்காக மாவட்ட ஆட்சியரிடம் விண்ணப்பித்தல் வேண்டும்:

வரம்புரையாக, இந்தப் பிரிவானது, 1987 ஆம் ஆண்டு சென்னை பெருநகர்

பரப்பிட நிலத்தடி நீர் (ஒழுங்குமுறைப்படுத்துதல்) சட்டத்தின் (தமிழ்நாடு சட்டம்

27/1987) 2 ஆம் பிரிவின் (g) கூறில் பொருள் வரையறை செய்யப்பட்ட

"பட்டியலிடப்பட்ட பகுதி" க்கு பொருந்தாது.

(2) பதிவுச் சான்றிதழ் ஒன்றினை வழங்குவதற்கான விண்ணப்பம்

ஒவ்வொன்றும், வகுத்துரைக்கப்படலாகும் அத்தகைய படிவத்தில் மற்றும்

அத்தகைய விவரங்கள் உள்ளடக்கி செய்யப்படுதல் வேண்டும் மற்றும்

இருபதாயிரம் ரூபாய்க்கு மிகாத வகுத்துரைக்கப்படலாகும் அத்தகைய

கட்டணத்துடன் இருத்தல் வேண்டும்.

(3) (1) ஆம் உட்பிரிவின்படி விண்ணப்பமொன்று பெறப்பட்டதன்

பேரில், குறித்துரைக்கப்படலாகும் அத்தகைய வரையறைகள் மற்றும்

நிபந்தனைகளுக்குட்பட்டு, மாவட்ட ஆட்சியர் பதிவுச்சான்றிதழ் ஒன்றினை

வழங்கலாம் அல்லது பதிவுச் சான்றிதழ் ஒன்றினை வழங்க மறுக்கலாம்:

வரம்புரையாக, பதிவுச்சான்றிதழ் எதுவும், விண்ணப்பதாரருக்கு

கேட்பதற்கான நியாயமான வாய்ப்பு ஒன்று அளிக்கப்பட்டிருந்தாலன்றி

மறுக்கப்படுதலாகாது.

(4) பதிவுச் சான்றிதழை வழங்குதல் அல்லது வழங்க மறுத்தல்

தொடர்பான முடிவானது, வகுத்துரைக்கப்படலாகும் அத்தகைய காலத்திற்குள்

விண்ணப்பதாரருக்கு, மாவட்ட ஆட்சியரால் தெரிவிக்கப்படுதல் வேண்டும்.

(5) (4) ஆம் உட்பிரிவின்படி மாவட்ட ஆட்சியரின் முடிவினால்

பாதிக்கப்பட்ட நபர் எவரும், வகுத்துரைக்கப்படலாகும் அத்தகைய

காலத்திற்குள்ளும் அத்தகைய முறையிலும், இதன் பொருட்டு அறிவிக்கையின்

மூலம், அரசால் குறித்துரைக்கப்படலாகும் அத்தகைய அதிகார அமைப்பிடம்

மேல்முறையீடு செய்யலாம் .

(6) கிணறு தோண்டும் தொழிலைச் செய்யும் நபர் ஒவ்வொருவரும்,

கிணறு ஒன்றினை தோண்டும்பொழுது அல்லது கிணறு ஒன்றினை தோண்டி

முடிக்கும்பொழுது, வகுத்துரைக்கப்படலாகும் அத்தகைய பாதுகாப்பு முறைகளைப்

பின்பற்றுதல் வேண்டும்.

விளக்கம்.- 164, 164-A மற்றும் 164-B பிரிவுகளின் நோக்கத்திற்காக,-

(a) "தோண்டுதல்" என்பது அகழ்தல், துளையிடுதல், ஆழ்

துளையிடுதல் அல்லது ஆழப்படுத்துதல் ஆகியவை உள்ளடங்கலான அதனுடைய

அனைத்து இலக்கண வேறுபாடுகளுடன் மற்றும் அதன் குடும்பத்தைச் சேர்ந்த

சொற்றொடர்களைக் குறிக்கும்;

35

(b) "கிணறு" என்பது, திறந்த வெளிக் கிணறு, தோண்டப்பட்ட கிணறு,

ஆழ்துளைக் கிணறு, தோண்டப்பட்டுள்ள ஆழ்துளைக் கிணறு, ஆழ்குழாய் கிணறு,

வடிகட்டும் இடம் சேகரிப்புக் கிணறு அல்லது வடித்தெடுக்கும் சுரங்க நிலவரை

வழி எதனையும் உள்ளடக்கிய நிலத்தடி நீரைத் தேடிக்கண்டுபிடிப்பதற்காக

அல்லது பிரித்தெடுப்பதற்காக தோண்டப்படும் ஒரு கிணறு என்று பொருள்படும்.

ஆனால் அறிவியல் ஆராய்ச்சி, ஆய்வுப்பயணம், நிலத்தடிநீர் வள ஆதாரங்களின்

ஆய்வு மற்றும் மதிப்பீட்டிற்கான மேம்பாடு அல்லது மேலாண்மைப்பணியினை

மேற்கொள்வதற்காக அரசு அல்லது மைய அரசால் தோண்டப்பட்ட கிணறு

ஒன்றை உள்ளடக்காது;

(c) "நபர்" என்பது, கூட்டுருமமாக இருக்கின்ற அல்லது கூட்டுருமமாக

இல்லாத ஒரு நிறுமத்தை அல்லது தனிநபர்களின் கழகத்தை உள்ளடக்கும்.".

167 ஆம் பிரிவிற்கான 85. முதன்மைச் சட்டத்தின் 167 ஆம் பிரிவில், பின்வரும் சொற்றொடரானது

திருத்தம்.

இறுதியில் சேர்க்கப்படுதல் வேண்டும், அதாவது:-

"அவ்வப்போது அரசால் வெளியிடப்படும் நிலையான செயல்பாட்டு

நடைமுறையைப் பின்பற்றுவதன் மூலம்.".

170 ஆம் பிரிவிற்கான 86. முதன்மைச் சட்டத்தின் 170 ஆம் பிரிவில், (2) ஆம் உட்பிரிவில்,

திருத்தம்.

பின்வரும் சொற்றொடரானது இறுதியில் சேர்க்கப்படுதல் வேண்டும், அதாவது:-

"தொகையினை செலுத்தாததினால், உரிமையாளர் அல்லது

அனுபவத்திலிருப்பவருக்கு அறிவிப்பு ஒன்றினை வழங்குவதன் மூலம்,

நகராட்சியானது பணியை மேற்கொண்டு, கூறப்பட்ட உரிமையாளர் அல்லது

அனுபவத்திலிருப்பவரிடமிருந்து அதற்கான செலவை நில வருவாயின் நிலுவைத்

தொகையாக வசூலித்தல் வேண்டும்.".

171 ஆம் பிரிவிற்கான 87. முதன்மைச் சட்டத்தின் 171 ஆம் பிரிவில்,-

திருத்தம்.

(1) ஒரத் தலைப்பிற்காக, பின்வரும் ஒரத் தலைப்பானது மாற்றாக

அமைக்கப்படுதல் வேண்டும், அதாவது:-

"குடும்ப நலம் மற்றும் சிறிய குடும்பம் குறித்த நிலை.".

(2) "மக்கள் தொகை கட்டுப்பாட்டு திட்டம்" என்ற சொற்றொடரானது

விட்டுவிடப்படுதல் வேண்டும்.

172 ஆம் பிரிவிற்கான 88. முதன்மைச் சட்டத்தின் 172 ஆம் பிரிவில், "மன்றம்" எனும்

திருத்தம்.

சொற்றொடருக்காக, "ஆணையாளர்" எனும் சொற்றொடரானது மாற்றாக

அமைக்கப்படுதல் வேண்டும்.

173 ஆம் பிரிவிற்கான 89. முதன்மைச் சட்டத்தின் 173 ஆம் பிரிவானது, அந்த பிரிவின் (1)

திருத்தம்.

ஆம் உட்பிரிவாக மறு எண்ணிடப்படுதல் வேண்டும் மற்றும் அவ்வாறு மறு

எண்ணிடப்பட்ட (1) ஆம் உட்பிரிவில்,—

(1) (b) கூறில் "ஆணையாளர் அல்லது குற்றவியல் நடுவர்" எனும்

சொற்றொடருக்காக, "குற்றவியல் நீதித்துறை நடுவர்" எனும் சொற்றொடரானது

மாற்றாக அமைக்கப்படுதல் வேண்டும்.

(2) (c) கூறுக்குப் பின்பு, பின்வரும் கூறானது சேர்க்கப்படுதல்

வேண்டும். அதாவது:-

(d) சடலம் ஒன்றை தகனம் செய்யாமல், புதைக்காமல் அல்லது

சட்டப்பூர்வமாக அப்புறப்படுத்தாமல், வகுத்துரைக்கப்படலாகும் அத்தகைய

காலத்திற்கும் மேலாக மற்றும் அத்தகைய முறையில், வளாகம் எதிலும்

வைத்திருத்தல்;";

36

(3) அவ்வாறு திருத்தப்பட்டவாறான (1) ஆம் உட்பிரிவிற்கு பின்பு,

பின்வரும் உட்பிரிவுகள் சேர்க்கப்படுதல் வேண்டும், அதாவது:-

"(2) பொது அல்லது தனிப்பட்ட இடம் ஏதேனுமிருந்தால், சுடுகாடாகவோ

அல்லது இடுகாடாகவோ பயன்படுத்தப்பட்டால், பொது சுகாதாரத்திற்கு கேடு

விளைவிப்பதாகக் கண்டறியப்பட்டாலோ அல்லது வேறு எந்த இடத்திலோ

இடுகாடுகள் அதிகமாகக் காணப்பட்டாலோ அல்லது செய்யக்கூடிய வேறு பிற

காரணங்களுக்காக ஆணையாளர் மன்றத்தின் ஒப்புதலுடன், மாவட்ட அரசிதழில்

ஒரு அறிவிக்கையொன்றின் மூலம், அத்தகைய சுடுகாடு அல்லது இடுகாட்டை

மூடலாம்.

(3) நகராட்சி ஒன்றில் போதுமான நவீன தகன நிலையங்கள்

இருந்தால், மன்றமானது, அறிவிப்பு மூலம், அத்தகைய நகராட்சி வரம்பிற்குள்

திறந்த முறையில் தகனம் செய்வதை தடை செய்யலாம்.".

175 ஆம் பிரிவிற்கான

90. முதன்மைச் சட்டத்தின் 175 ஆம் பிரிவில்,-

திருத்தம்.

(1) (1), (2) மற்றும் (3) ஆம் உட்பிரிவுகளுக்காக, பின்வரும்

உட்பிரிவுகளானவை மாற்றாக அமைக்கப்படுதல் வேண்டும், அதாவது:-

"(1) நகராட்சியால், அறிவிக்கப்படலாகும் இந்த நோக்கத்திற்காக,

நகராட்சி எல்லைக்கு உள்ளே அல்லது வெளியே குறிப்பிட்டு ஒதுக்கப்படும்

ஓரிடத்தில் மூலத்திலிருந்து பிரிக்கப்பட்ட கழிவுகளை சேகரித்தல், கொண்டு

செல்லுதல், பதப்படுத்துதல் மற்றும் அறிவியல் பூர்வமாக திடக்கழிவுகளை

அகற்றுதல் போன்ற முறையினை ஏற்றுக் கொள்வதன் மூலம் பொது இடம்

எதனையும் தூய்மையாக வைத்துக்கொள்வது மன்றத்தின் கடமையாக இருத்தல்

வேண்டும்.

(2) நகராட்சியால் சேகரிக்கப்படும் அனைத்து திடக்கழிவுகள்,

குப்பைகள் மற்றும் பிற பொருட்கள் நகராட்சியின் சொத்தாக இருத்தல் வேண்டும்.

பொதுமக்கள் திடக்கழிவுகளை மூலத்திலிருந்து தரம் பிரித்து மற்றும் வெவ்வேறு

கொள்கலன்களில் சேமித்து மற்றும் விதிகளில் வகுத்துரைக்கப்பட்டுள்ளவாறு

அப்புறப்படுத்துதல் வேண்டும். பல்வேறு மூலங்களிலிருந்து பெறப்படும்

திடக்கழிவுகளை சேகரித்தல், சேமித்தல், மறுசுழற்சி செய்தல், செயலாக்குதல்

மற்றும் அப்புறப்படுத்துதல் ஆகியவற்றுக்கு நகராட்சியானது உரிய வசதிகளை

வழங்குதல் வேண்டும்.

(3) நகராட்சி எல்லைக்குள் அல்லது அதன் பகுதியில் முறையான வடிகால் அமைப்பு வழங்கப்படாதவிடத்து சேகரிக்க, கொண்டு செல்ல மற்றும் சேகரித்த வடிகால் நீரை அறிவியல் பூர்வமாக செயல்படுத்தவும் (treat) மற்றும் வகுத்துரைக்கப்படலாகும் அத்தகைய முறையில் அதனை அப்புறப்படுத்தவும் நகராட்சியானது தேவைப்படும் ஏற்பாடுகளைச் செய்யலாம்.";

(2) (4) ஆம் உட்பிரிவில், உள்ள வரம்புரையானது விட்டுவிடப்படுதல்

வேண்டும்;

(3) (5) ஆம் உட்பிரிவில்,-

(a) (b) கூறில் "மக்கிய உரம்" என்ற சொற்றொடருக்காக, "மக்கிய உரம் அல்லது உயிரி எரிவாயு அல்லது மின்சாரம் அல்லது வேறு ஏதேனும்

தயாரிப்பு" என்ற சொற்றொடரானது மாற்றாக அமைக்கப்படுதல் வேண்டும்;

(b) (d) கூறுக்காக, பின்வரும் கூறானது மாற்றாக அமைக்கப்படுதல்

வேண்டும், அதாவது:-

"(d) (1) மருத்துவமனைகள், முதியோர் இல்லங்கள், சுகாதார மையங்கள், நோயறிதல் மையங்கள், மருத்துவ ஆய்வகங்கள் மற்றும் அரசால் அவ்வப்போது அறிவிக்கையின் மூலம் குறிப்பிடப்படலாகும் தொழிற்சாலைகள் அல்லாத அபாயகரமான கழிவுகள் ஆகியவற்றிலிருந்து உருவாகும் உயிரி மருத்துவ கழிவினை அப்புறப்படுத்துவதற்கான எரித்தல், ஆழமாக புதைத்தல், அழுத்த அறைகலன், பல்தர அறைகலன்.";

37

(4) அவ்வாறு திருத்தப்பட்டவாறான, (5) ஆம் உட்பிரிவிற்குப் பின்பு,

பின்வரும் உட்பிரிவுகளானது சேர்க்கப்படுதல் வேண்டும், அதாவது:-

"(6) நகராட்சியில் உள்ள அனைத்து நிலங்கள் மற்றும் கட்டடங்களின்

உரிமையாளர்கள் மற்றும் அனுபவத்திலிருப்பவர்கள் தங்கள் வளாகத்தை

சுகாதாரமாகவும், தூய்மையாகவும் வைத்திருப்பது கடமையாக இருத்தல்

வேண்டும்.

(7) மருத்துவமனைகள், முதியோர் இல்லங்கள், சுகாதாரப் பராமரிப்பு

மையங்கள், தனி மருத்துவமனை மற்றும் நோய் கண்டறியும் ஆய்வகங்களில்

இருந்து வரும் உயிர் மருத்துவக் கழிவுகள் நகராட்சி திடக்கழிவுடன்

கலக்கப்படுதல் கூடாது.

(8) நகராட்சியானது வகுத்துரைக்கப்படலாகும் அறிவியல் பூர்வமான

செயலாக்கம் மற்றும் அப்புறப்படுத்துதல் ஆகியவை உள்ளடங்கலான நெகிழிக்

கழிவு மேலாண்மைக்காக ஒரு தனி அமைப்பை நிறுவுதல் வேண்டும்.

(9) நகராட்சியானது, மின் மற்றும் மின்னணுப் பொருட்களின்

உற்பத்தியாளர்கள் அல்லது விற்பனையாளர்களை கூட்டாகவோ அல்லது

தனியாகவோ வகுத்துரைக்கப்படலாகும் மின்-கழிவுகளைச் சேகரிக்க,

அப்புறப்படுத்த அல்லது மறுசுழற்சி செய்வதற்காக, சேகரிப்பு மையம் அல்லது

சேகரிப்புப் இடம் அல்லது இரண்டையும் நிறுவுவதற்குக் கோரலாம்.

(10) நகராட்சியானது, புதிய கட்டுமானம், கட்டிடங்களை

மாற்றியமைத்தல் மற்றும் மாற்றியமைப்பதில் இருந்து எழும் கட்டுமான மற்றும்

இடிப்புக் கழிவுகளை தனித்தனியாக சேகரித்து, மற்றும் குறிப்பிட்ட பகுதியில்

சேமித்து வைக்க வேண்டும் அல்லது வகுத்துரைக்கப்படலாகும் விதிகளின்படி

செயலாக்கம் செய்தல் வேண்டும். மன்றமானது கட்டுமானம் மற்றும் இடிப்பு

கழிவுகள் ஒவ்வொன்றையும் உருவாக்குவதிலிருந்து சேகரித்தல், கொண்டு

செல்லுதல், செயலாக்கம் செய்தல் மற்றும் அப்புறப்படுத்துதல் ஆகியவற்றிற்கான

கட்டணம் அல்லது கட்டணங்களை விதித்தல் வேண்டும்.

(11) சுகாதாரமற்ற கழிவறைகளைக் கொண்ட எந்த வளாகமும்

நகராட்சியால் இடிக்கப்படுதல் வேண்டும் மற்றும் அத்தகைய இடிப்புக்கான

செலவை நில வருவாயின் நிலுவைத் தொகையாக வசூலித்தல் வேண்டும்.

(12) நபர் எவரும் தெருக்களில், பொது கட்டடங்களில் அல்லது பிற

பொது இடத்தில் எச்சில் துப்பக்கூடாது.".

91. முதன்மைச் சட்டத்தின் 176 ஆம் பிரிவில்,- 176 ஆம் பிரிவிற்கான

திருத்தம்.

(1) (1) ஆம் உட்பிரிவிற்காக, பின்வரும் உட்பிரிவானது மாற்றாக

அமைக்கப்படுதல் வேண்டும், அதாவது:-

"(1) மன்றமானது, திடக்கழிவுகளை சேகரித்தல், சேமித்தல்,

கொண்டு செல்லுதல், அறிவியல் பூர்வமாக செயலாக்குதல் மற்றும் அகற்றுதல்

ஆகியவற்றுக்கான நவீன முறைகளை வகுத்துரைக்கப்படலாகும் முறையில்

நடைமுறைப்படுத்தலாம்.";

(2) (2) ஆம் உட்பிரிவிற்குப் பின்பு, பின்வரும் உட்பிரிவானது

சேர்க்கப்படுதல் வேண்டும், அதாவது:-

"(3) மொத்தக் கழிவு உற்பத்தியாளர்கள் தங்கள் வளாகத்தில்

இருந்து உருவாக்கப்படும் திடக்கழிவுகளை அகற்றுவதற்காக தங்கள் சொந்த

செயலாக்க வசதியை நிறுவுதல் வேண்டும். அதனை செய்ய தவறுகையில்,

வகுத்துரைக்கப்படலாகும் அத்தகைய கட்டணத்தை வசூலிப்பதன் மூலம்

மொத்தக் கழிவு உற்பத்தியாளர்களால் உருவாக்கப்படும் அத்தகைய கழிவுகளைக்

கையாளுவதற்காக, மன்றமானது ஏற்பாடு செய்யலாம்.".

38

177 ஆம் பிரிவிற்கான

92. முதன்மைச் சட்டத்தின் 177 ஆம் உட்பிரிவில்,-

திருத்தம்.

(1) (2) ஆம் உட்பிரிவில், (vi) மற்றும் (vii), இனங்களுக்காக,

பின்வரும் இனங்கள் மாற்றாக அமைக்கப்படுதல் வேண்டும், அதாவது:-

"(vi) ஒரு பொது ஓய்வு விடுதி, அல்லது தங்கும் இல்லம், அல்லது

(vii) திருமண மண்டபம் அல்லது வணிக வளாகம், அல்லது

(viii) ஒரு மத இடமாக,".

(2) (3) ஆம் உட்பிரிவிற்குப் பின்பு, அதன் வரம்புரை உட்பட, பின்வரும்

உட்பிரிவுகளானவை சேர்க்கப்படுதல் வேண்டும், அதாவது:-

"(4) நபர் எவரின் நிலம் அல்லது கட்டடத்தின் உரிமையாளரோ அல்லது

அனுபவத்திலிருப்பவரோ, திடக்கழிவுகளை குப்பைகளை போடவோ அல்லது

சேர்த்து வைக்கவோ அல்லது எந்தவொரு பொது வெளியிலோ அல்லது திறந்த

நிலத்திலோ எந்தவொரு அசுத்தத்தையும் அனுமதிக்கவோ அல்லது அதற்கென

குறிப்பிடப்பட்ட இடத்தைத் தவிர வேறு வகையில் சடலத்தை அகற்றவோ

கூடாது.".

(5) கோயில், மசூதி, தேவாலயம், மடம் ஆகிய மத இடங்கள் அல்லது

மத முக்கியத்துவம் வாய்ந்த ஏதேனும் பிற இடங்கள், அல்லது நிறுவனம் அல்லது,

மன்றத்தால் தீர்மானிக்கப்படலாகும் அத்தகைய கட்டணங்களுடன் அத்தகைய

இடங்களின் மீது கட்டுப்பாட்டைக் கொண்ட நபரிடமிருந்து எழுத்துப்பூர்வ

கோரிக்கையின் அடிப்படையில் நகராட்சி எல்லைக்குள் நடைபெறும் மத

நோக்கங்களுக்காக அல்லது பொருட்காட்சி, திருவிழாக்கள், மக்கள்

கூடுவதற்காக பயன்படுத்தப்படும் எந்தவொரு இடத்திலும் இருந்து உருவாகும்

திடக்கழிவுகளை அகற்ற நகராட்சியானது ஏற்பாடு செய்தல் வேண்டும்.

(6) திடக்கழிவுகளை அகற்றுவதற்காக நகராட்சியின் எல்லைக்குள்

உள்ள அனைத்து கழிவு உற்பத்தியாளர்களிடமிருந்தும் பயனீட்டாளர்

கட்டணத்தை மன்றமானது வசூலித்தல் வேண்டும்.

(7) நபர் எவரும் தன்னைத் தானே ஆசுவாசப்படுத்திக் கொள்வதன்

மூலம் அல்லது எந்தவொரு தெரு அல்லது பொது இடத்திலும் மலம் கழித்தல்

அல்லது சிறுநீர் கழிப்பதன் மூலம் இடையூறு செய்யக்கூடாது.

(8) கடனை செலுத்தத் தவறியவர்கள் மீது, அவ்வப்போது மன்றத்தால்

தீர்மானிக்கப்படலாகும் உடனடி அபராதத் தொகையை ஆணையாளர் விதிக்க

வேண்டும். அத்தகைய உடனடி அபராதத் தொகையானது இதன் பொருட்டு

நகராட்சியால் முறையாக அங்கீகரிக்கப்பட்ட துப்புரவு ஆய்வாளரின் படிநிலைக்குக்

குறையாத அலுவலர்களால் வசூலிக்கப்படலாம்.".

X-A எனும் புதிய

93. முதன்மைச் சட்டத்தின் X-ஆம் அத்தியாயத்திற்கு பின்பு, பின்வரும்

அத்தியாயத்தை

அத்தியாயமானது உட்புகுத்தப்படுதல் வேண்டும், அதாவது:-

உட்புகுத்துதல்.

"அத்தியாயம்-X-A.

மலக்கசடு மற்றும் கழிவுநீர்.

179-A. பொருள் வரையறைகள்.- இந்த அத்தியாயத்தின்

நோக்கத்திற்காக,-

(a) "அகற்றும் வசதி" என்பது, வகுத்துரைக்கப்படக்கூடியவாறு

அறிவியல் பூர்வமான செயலாக்கம் மற்றும் மலக்கசடு மற்றும் கழிவுநீரை

வெளியேற்றுதலுக்காக செய்யப்பட்ட ஏற்பாடுகள் என்று பொருள்படும்.

(b) "உரிமம் வழங்கும் அதிகார அமைப்பு" ஒன்றைப்

பொறுத்தவரையில்,-39 (i) பேரூராட்சி என்பது பேரூராட்சியின் செயல் அலுவலர் என்று

முறையே பொருள்படும்;

(ii) நகராட்சி மன்றம் அல்லது மாநகராட்சி என்பது நகராட்சி மன்றம்

அல்லது மாநகராட்சியின் ஆணையாளர் என்று பொருள்படும்;

(c) "மலக்கசடு" என்பது, செரிமானமாகாத அல்லது பாதி

செரிமானமான அரைநீர்ம அல்லது அரைதிண்ம வடிவிலுள்ள, மலக்கழிவு

மற்றும் சாம்பல் நீருடனான அல்லது இல்லாத கருப்புநீரின் சேர்க்கை என்று

பொருள்படும்;

(d) "உரிமதாரர்" என்பது, இந்த அத்தியாயத்தின் கீழ் வழங்கப்பட்ட

உரிமம் ஒன்றினை வைத்து வரும் நபரெவரரும் என்று பொருள்படும்;

(e) "கழிவுநீர்" என்பது, கழிவுநீர்த் தொட்டி அல்லது கழிவுநீர்

குளங்களில் சேர்ந்தடைந்துள்ள அல்லது அடங்கியுள்ள திரவ மற்றும் திடப்பொருள்

என்று பொருள்படும்;

(f) "குறிப்பிடப்பட்ட வாகனம்" என்பது, மலக்கசடு மற்றும் கழிவுநீரை

சேகரித்தல் மற்றும் கொண்டுசெல்லுதலுக்காக, 1988 ஆம் ஆண்டு இயக்கூர்திகள்

சட்டத்தின் (மையச் சட்டம் 59/1988) கீழ் அவ்வப்போது ஒப்புதலளிக்கப்படலாகும்,

அத்தகைய விவரக்குறிப்புகளுடன் கூடிய மோட்டார் பொருத்தப்பட்ட குழாய்களம்

மற்றும் சேமிப்புத் தொட்டியுடன் பொருத்தப்பட்ட வெற்றிட சரக்குந்துகள் அல்லது

அத்தகைய பிற வாகனம் என்று பொருள்படும்;

(g) "பணியாளர்" என்பது, மலக்கசடு மற்றும் கழிவுநீரை சேகரித்தல்

மற்றும் கொண்டுசெல்லுதல் மற்றும் அகற்றுதலுக்காக உரிமதாரரால்

ஈடுபடுத்தப்பட்ட நபரெவரும் என்று பொருள்படும்.

179-B. மலக்கசடு மற்றும் கழிவுநீரை சேகரித்தல், கொண்டு

செல்லுதலுக்கான உரிமம்.- (1) நபரெவரும், செல்லுபடியாகும் உரிமமின்றி,

நகராட்சி எல்லைகளுக்குள் குடியிருப்பு அல்லது வணிக அல்லது நிறுவன

நோக்கங்களுக்காக பயன்படுத்தப்படும் கட்டடம் எதிலுமிருந்து மலக்கசடு அல்லது

கழிவுநீரை சேகரித்தல், கொண்டு செல்லுதல், அல்லது அப்புறப்படுத்துதல்

ஆகியவற்றை செய்தல் கூடாது.

வரம்புரையாக, அரசின் உள்ளாட்சி அமைப்பு அல்லது சட்டப்பூர்வமான

வாரியம் எதனினாலும், மலக்கசடு அல்லது கழிவுநீரைக் கொண்டு செல்லுதல்,

சேகரித்தல் அல்லது அப்புறப்படுத்துதலுக்காக அத்தகைய உரிமம் எதுவும்

தேவையானதாகாது.

(2) மலக்கசடு அல்லது கழிவுநீரை சேகரித்தல், கொண்டு செல்லுதல்

அல்லது அப்புறப்படுத்துதலுக்கு கருதும் நபரெவரும், உரிமம் வழங்குவதற்காக

வகுத்துரைக்கப்படலாகும் அத்தகைய விவரங்கள், ஆவணங்கள் அடங்கிய

அத்தகைய படிவத்தில் மற்றும் இரண்டாயிரம் ரூபாய்க்கு மிகாத அத்தகைய

கட்டணத்துடன், உரிமம் வழங்கும் அதிகார அமைப்பிடம் விண்ணப்பித்தல்

வேண்டும்.

(3) (2) ஆம் உட்பிரிவின் கீழ் விண்ணப்பம் ஒன்று பெறப்பட்ட

தேதியிலிருந்து முப்பது நாட்களுக்குள், உரிமம் வழங்கும் அதிகார

அமைப்பானது, வகுத்துரைக்கப்படலாகும் அத்தகைய நிபந்தனைகள் மற்றும்

வரையறைகளுக்குட்பட்டு உரிமத்தை வழங்கலாம் அல்லது அதற்கான

காரணத்தை பதிவு செய்து, உரிமம் வழங்குவதற்கு மறுக்கலாம்.

40

(4) (3) ஆம் உட்பிரிவின் கீழ் வழங்கப்பட்ட உரிமமானது, அது

வழங்கப்பட்ட தேதியிலிருந்து இரண்டு ஆண்டுகள் கால அளவிற்கு

செல்லுபடியாகுதல் வேண்டும்.

(5) உரிமத்தினை புதுப்பித்தலுக்கான விண்ணப்பமானது, அது

முடிவடைவதற்கு முப்பது நாட்களுக்கு முன்பு, வகுத்துரைக்கப்படலாகும் அத்தகைய

முறையில் இரண்டாயிரம் ரூபாய்க்கு மிகாத அத்தகைய கட்டணத்துடன் உரிமம்

வழங்கும் அதிகார அமைப்பிடம் செய்யப்படுதல் வேண்டும்.

(6) (3) ஆம் உட்பிரிவில் அடங்கியுள்ள கால வரம்பு மற்றும்

செயல்முறையானது, உரிமத்தினை புதுப்பித்தலுக்கும் சமமாக பொருந்துதல்

வேண்டும்.

179-C. உரிமையாளர் அல்லது அனுபவத்தில் இருப்பவரால்

மலக்கசடுகள் மற்றும் கழிவு நீரினை அகற்றுதல்:- நகராட்சி எல்லைக்குள்

அமைந்திருக்கும் கட்டடம் அல்லது அதன் பகுதியொன்றின், நேர்விற்கேற்ப,

உரிமையாளர் அல்லது அனுபவத்தில் இருப்பவர்,-

(a) 2016 ஆம் ஆண்டு தேசிய கட்டட நெறி தொகுப்பின்

தேவைகளுக்கு இணங்க கழிவுநீர்த் தொட்டி அல்லது அத்தகைய அமைவிட

துப்புரவு அமைப்புகளின் கட்டமைப்பினை உறுதி செய்தல் வேண்டும்;

(b) 2016 ஆம் ஆண்டு தேசிய கட்டட நெறி தொகுப்பின்படி கழிவு நீர்த்

தொட்டி அல்லது அமைவிட துப்புரவு அமைப்பின் வடிவ மற்றும் இயக்குமுறை

தேவைகளின்படி முறையான கசடகற்றுதலை நடத்துதல் வேண்டும்.

(c) அவரது கட்டடத்திலிருந்து மலக்கசடு மற்றும் கழிவுநீரை

சேகரித்தல், கொண்டுசெல்லுதல் அல்லது அப்புறப்படுத்தலுக்காக உரிமதாரர்

ஒருவரைத் தவிர நபரெவரும் ஈடுபடுத்தப்படவில்லை அல்லது ஈடுபடுத்துமாறு

செய்யப்படவில்லை என்பதை உறுதி செய்தல் வேண்டும்;

(d) 2013 ஆம் ஆண்டு கைகளால் துப்புரவுசெய்யும் பணியாளர்களாக

வேலையமர்த்தம் செய்வதைத் தடை செய்தல் மற்றும் அவர்களுக்கு

மறுவாழ்வளித்தல் சட்டத்தில் (மையச் சட்டம் 25/2013) தடை செய்யப்பட்டவாறான,

கழிவுநீர்த் தொட்டியில் அல்லது அமைவிட துப்புரவு அமைப்பில் அபாயகரமாக

சுத்தம் செய்தலில் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ நபரெவரும்

ஈடுபடவில்லை அல்லது பணியமர்த்தப்படவில்லை என்பதை உறுதி செய்தல்

வேண்டும்.

179-D. உரிமதாரர்களின் கடமைகள்.- உரிமதாரர் ஒவ்வொருவரும்,-

(a) உரிமத்தில் குறிப்பிடலாகும் நேரம், வழித்தடம் மற்றும் வடிகட்டு

இடம் ஆகியவை தொடர்பான நெறிமுறைகளையும் வரையறைகளையும்

பின்பற்றுதல் வேண்டும்;

(b) அப்புறப்படுத்தல் வசதிக்காக அல்லது வடிகட்டும் இடத்தைப்

பயன்படுத்துவதற்காக வகுத்துரைக்கப்படலாகிறவாறான, முறை ஒன்றுக்கு

ஐந்நூறு ரூபாய்க்கு மிகாத வடிகட்டும் கட்டணம் செலுத்துதல் வேண்டும்;

(c) மலக்கசடுகள் மற்றும் கழிவுநீரை சேகரித்தல், கொண்டு

செல்லுதல் மற்றும் அப்புறப்படுத்துதல் ஆகியவற்றிற்காக மேற்கொள்ளப்படும்

ஒவ்வொரு முறையையும் பதிவு செய்வதற்காக வகுத்துரைக்கப்பட்ட வடிவத்தில்

ஊர்தி குறிப்பேட்டை பராமரித்தல் மற்றும் ஓர் ஆண்டில், ஒவ்வொரு காலாண்டின்

10 ஆம் தேதிக்கு முன்னர் உரிமம் வழங்கும் அதிகார அமைப்பிடம் சமர்ப்பித்தல்

வேண்டும்;

(d) குறிப்பிட்ட வாகனம் வகுத்துரைக்கப்படலாகும் புவி இடங்காட்டியுடன்

பொருத்தப்பட்டிருப்பதை உறுதி செய்தல் மற்றும் புவி இடங்காட்டி கருவியானது

இடையூறு இல்லாமல் செயல்படுவதையும், தரவினை அனுப்புவதையும் உறுதி

செய்தல் வேண்டும்.

41

179-E. கசடகற்றல் செயல்முறைகளின் மேற்பார்வை மற்றும்

பாதுகாப்பற்ற வெளியேற்றத்திற்கு தடை:- (1) உரிமம் வழங்கும் அதிகார

அமைப்பானது,-

(a) மலக்கசடு அல்லது கழிவுநீரை வடிகட்டுதலுக்கான இடங்கள்;

(b) உரிமதாரர்களின் பட்டியல் மற்றும் அவற்றை காலமுறை தோறும்

புதுப்பித்தல்; மற்றும்

(c) உரிமதாரர்களுக்கு எதிராக புகார்களை பதிவு செய்தல் அல்லது

விதிமீறல்களை தெரியப்படுத்துவதற்கான இயந்திர மயமாக்குவதற்காக வழிமுறை

ஆகியவற்றை மாவட்ட அரசிதழில் அறிவிக்கை செய்தல் மற்றும் வலைதளம்

அல்லது வலைவாயிலில் பதிவேற்றம் செய்தலும் வேண்டும்.

(2) கழிவுநீரை சிந்துவதாக தகவலினைப் பெறுமிடத்து, உரிமம்

வழங்கும் அதிகார அமைப்பானது உடனடியாக உரிமதாரர் அல்லது குறிப்பிட்ட

வாகனத்தின் பொறுப்பிலுள்ள நபரை, கழிவு நீரை செறுக்க, சுற்றுச்சூழல்

தாக்கத்தினை குறைக்க மற்றும் சிந்திய இடத்திலிருந்து உடனடியாக கழிவுநீர்

முழுவதையும் அகற்ற பணிப்புரையிடுதல் வேண்டும்.

(3) உரிமம் வழங்கும் அமைப்பானது அப்புறப்படுத்தலுக்காக

அடையாளம் காணப்பட்ட இடங்களை தவிர பிற இடங்களில் மலக்கசடு

மற்றும் கழிவுநீர் அகற்றுதலைத் தடுக்க, ஆய்வுசெய்தல் அல்லது குறிப்பிட்ட

வாகனங்களில் பொறுத்தப்பட்ட புவி இடங்காட்டி போன்றவை மூலம் நகராட்சி

எல்லைகளுக்குள் உரிமதாரர்களின் நடவடிக்கைளை மேற்பார்வையிடுவதற்கு,

சுகாதார ஆய்வாளரின் படிநிலைக்கு குறையாத அத்தகைய அலுவலரை நியமனம்

செய்தல் வேண்டும்.

179-F. தண்டத் தொகைகள்.- நபரொருவரும், இந்த அத்தியாயத்தின்

வகைமுறைகள் எதையும் அல்லது இந்தச் சட்டத்தின் கீழ் செய்யப்பட்ட விதிகள்

அல்லது உரிமத்தினை வழங்கப்படுவதற்குட்பட்ட நெறிமுறைகள் மற்றும்

வரையறைகளும் மீறினால் அல்லது அதனுடன் இணங்கத் தவறினால், அவரின்

முதல் குற்றத்திற்காக இருப்பதைந்தாயிரம் ரூபாய் வரை நீட்டிக்கலாகும் மற்றும்

இரண்டாவது அல்லது தொடர்ச்சியான குற்றங்களுக்காக ஐம்பதாயிரம் ரூபாய்

வரை நீட்டிக்கப்படலாகும் தண்டத் தொகையுடன் தண்டிக்கப்படுதல் வேண்டும்.

179-G. உரிமத்தை இடைநிறுத்தம் அல்லது ரத்து செய்வதற்கான

அதிகாரம்.- (1) உரிமத்தின் நெறிமுறைகள் மற்றும் வரையறைகள் அல்லது

இந்த அத்தியாயத்தின் வகைமுறைகள் எதையும் உரிமதாரர், மீறினால் உரிமம்

வழங்கும் அதிகார அமைப்பானது உரிமத்தினை இடைநீக்கம் செய்யலாம்.

(2) உரிமதாரர், இந்த அத்தியாயத்தின்படி இரண்டாவது குற்றத்திற்கான

தண்டனை விதிக்கப்பட்டால் உரிமம் வழங்கும் அதிகார அமைப்பானது உரிமத்தை

ரத்து செய்யலாம்:

வரம்புரையாக, உரிமம் ரத்து செய்யும் ஆணையினை பிறப்பிப்பதற்கு முன்பு

உரிமதாரருக்கு பதினைந்து நாட்களுக்குள் அவரது தரப்பு முறையீட்டினை

செய்வதற்கான வாய்ப்பு ஒன்று வழங்கப்படுதல் வேண்டும்.

179-H. குறிப்பிட்ட வாகனங்கள், பொருட்கள் போன்றவற்றை

பறிமுதல் மற்றும் கைப்பற்றுவதற்கான அதிகாரம்.- (1) இந்தச் சட்டத்தில்

அல்லது தற்போது நடைமுறையில் உள்ள பிற சட்டம் எதிலும் அடங்கியுள்ள

எது எவ்வாறிருப்பினும், இந்த அத்தியாயத்தின் படியான குற்றமொன்று

செய்யப்பட்டுள்ளதாக நம்பப்படுமிடத்து அல்லது செய்யப்பட்டிருந்த, பேரூராட்சியை

பொருத்தளவில் வருவாய்த் துறையின் வட்டாட்சியரின் படிநிலைக்குக் குறையாத

அலுவலர் எவரும், நகராட்சி மன்றத்திப் பொருத்தளவில், ஆணையாளர் மற்றும்

மாநகராட்சிகளைப் பொருத்தளவில், உதவி ஆணையாளர் படிநிலைக்கு42 குறையாத அலுவலர் எவரும், அத்தகைய குற்றம் செய்வதற்கு

பயன்படுத்தப்பட்ட வாகனம் அல்லது மோட்டார், குழாய், குழல், கருவி அல்லது

உபகரணங்கள் உள்ளடங்கலாக பிற பொருள்கள் எதையும் கைப்பற்றலாம் மற்றும்

காரணமற்ற தாமதம் எதுவுமின்றி அரசால் இதன்பொருட்டு அதிகாரமளிக்கப்பட்ட

அலுவலர் முன்பு அதனை முன்வைத்தல் வேண்டும்.

(2) அதிகாரமளிக்கப்பட்ட அலுவலர் முன்பு அத்தகைய

வாகனம் அல்லது பிற பொருள் எதுவும் முன்வைக்கப்படுமிடத்து, மற்றும்

இந்த அத்தியாயத்தின் கீழ் குற்றம் ஒன்று செய்யப்பட்டுள்ளதாக அவர்

மனநிறைவடைந்தால் அதிகாரமளிக்கப்பட்ட அலுவலரானவர் அத்தகைய

குற்றத்திற்காக வழக்கு தொடரடப்பட்டாலும், இல்லாவிட்டாலும் இந்த

அத்தியாயத்தின் கீழ் அக்குற்றவாளி பொறுப்பாகும் பிற தண்டணை எதற்கும்

குந்தகமின்றி அவ்வாறு கைப்பற்றப்பட்ட வாகனம் அல்லது பிற பொருள்களை

பறிமுதல் செய்ய அவர் ஆணையிடலாம்:

வரம்புரையாக, பறிமுதல் செய்வதற்கான ஆணை ஒன்றை பிறப்பிப்பதற்கு

முன்பு, அத்தகைய வாகனம் அல்லது பொருள் எவரிடமிருந்து கைப்பற்றப்பட்டதோ,

அந்த உரிமையாளர் அல்லது நபருக்கு,-

(a) பறிமுதல் செய்வதற்கு முன்மொழியப்பட்ட காரணங்களை

அவருக்குத் தெரிவிக்கும் எழுத்து வடிவிலான அறிவிப்பு;

(b) இந்தப் பொருட்பாட்டில் எழுத்து வடிவிலான அவரது முறையீடு

ஒன்றினை செய்வதற்கான வாய்ப்பொன்று மற்றும் கேட்பதற்கான வாய்ப்பொன்று

வழங்கப்படுதல் வேண்டும்.

(3) அதிகாரமளிக்கப்பட்ட அலுவலரானவர், (2) ஆம் உட்பிரிவின்

கீழ் பறிமுதல் செய்வதற்கான ஆணையை பிறப்பித்த பின்பு, பொதுநலன் கருதி

அவ்வாறு செய்வது உகந்தது என்று கருதினால் பறிமுதல் செய்யப்பட்ட வாகனம்

அல்லது பொருட்களை பொது ஏலத்தில் விற்பதற்கு அவர் ஆணையிடலாம்.

(4) (3) ஆம் உட்பிரிவின் கீழ் பறிமுதல் செய்யப்பட்ட சொத்து

எதுவும் விற்கப்படுமிடத்து மற்றும் இந்தப்பிரிவின் கீழ் செய்யப்பட்ட பறிமுதல்

செய்வதற்கான ஆணையானமது 179-I ஆம் பிரிவின் படியான ஆணையொன்றின்

மூலம் ஒதுக்கப்படும் அல்லது ரத்து செய்யப்படுமிடத்து அத்தகைய ஏலத்தின்

செலவுகளை கழித்த பின்பு, அல்லது அதற்கு தற்செயலான அத்தகைய

விற்பனையின் வருமானமானது, அத்தகைய ஆணையில் குறிப்பிட்டவாறான

எவரிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்டதோ அந்த நபருக்கு அல்லது அதன்

உரிமையாளருக்கு செலுத்தப்படுதல் வேண்டும்.

179-I. மேல்முறையீடு.- இந்த அத்தியாயத்தின் பிரிவுகளின் கீழ்

செய்யப்பட்ட ஆணை ஒன்றினால் பாதிக்கப்பட்ட நபரெவரும், வகுத்துரைக்கப்பட்ட

அத்தகைய காலத்திற்குள் மற்றும் அத்தகைய முறையில் அத்தகைய அதிகார

அமைப்பிடம் மேல்முறையீடு செய்யலாம்.

(2) (1) ஆம் உட்பிரிவின் கீழ் குறிப்பிடப்பட்ட அதிகார அமைப்பானது,

மேல்முறையீட்டை தீர்மானிக்கையில் வகுத்துரைக்கப்படலாகும் அத்தகைய

நடைமுறைகளைப் பின்பற்றுதல் வேண்டும் மற்றும் அத்தகைய மேல்முறையீடு

மீதான அத்தகைய அதிகார அமைப்பின் முடிவு இறுதியானதாகும் மற்றும்

நீதிமன்றம் எதிலும் கேள்வி எழுப்பப்படுதல் ஆகாது.".

180 ஆம் பிரிவிற்கான

94. முதன்மைச் சட்டத்தின் 180 ஆம் பிரிவில், -

திருத்தம்

(1) ''பத்தாயிரம் ரூபாய்'' எனும் சொற்றொடருக்காக

''இருபத்தைந்தாயிரம் ரூபாய்'' எனும் சொற்றொடரானது மாற்றாக

அமைக்கப்படுதல் வேண்டும்;

(2) அதன் வரம்புரையில், ''ஐந்நூறு ரூபாய்'' எனும் சொற்றொடருக்காக,

''ஆயிரம் ரூபாய்'' எனும் சொற்றொடரானது மாற்றாக அமைக்கப்படுதல்

வேண்டும்;

43

180 – A எனும் 95. முதன்மைச் சட்டத்தின் 180 ஆம் பிரிவிற்கு பின்பு, பின்வரும் பிரிவானது

புதிய பிரிவினை உட்புகுத்தப்படுதல் வேண்டும், அதாவது:-

உட்புகுத்துதல்.

''180 – A அனுமதியின்றி அல்லது பதிவின்றி உள்ள ஆழ்துளைக்

கிணற்றிற்கான தண்டம்.- 164 – A அல்லது 164 – B அல்லது அதன்கீழ்

செய்யப்பட்ட விதிகளின் வகைமுறைகள் எதனையும் மீறுகின்றவர், குற்றம்

சாட்டப்பட்டதன் பேரில், மூன்று ஆண்டுகளுக்கு குறையாத ஆனால்

ஏழு ஆண்டுகள் வரை நீட்டிக்கப்படலாகும் ஒரு கால அளவிற்கு சிறைத்

தண்டனையும், ஐம்பதாயிரம் ரூபாய் வரை நீட்டிக்கப்படலாகும் பணத்தண்டமும்

விதித்து தண்டிக்கப்படுதல் வேண்டும்.".

182 ஆம் பிரிவிற்கான 96. முதன்மைச் சட்டத்தின் 182 ஆம் பிரிவிற்காக, பின்வரும் பிரிவானது

மாற்றீடு.

மாற்றாக அமைக்கப்படுதல் வேண்டும், அதாவது:-

"182. கட்டணம் மற்றும் செலவுத் தொகைகளை செலுத்தத் தவறினால்

சிறைத்தண்டனை விதித்தல் போன்றவை.- (1) இந்தச் சட்டத்தின் கீழ் அல்லது

அதன் கீழ் செய்யப்பட்ட விதி அல்லது துணை விதி எதனின் கீழும் குற்றவியல்

நீதித்துறை நடுவரால் விதிக்கப்பட்ட அல்லது மதிப்பிடப்பட்ட அபராதம் அல்லது

செலவுகள் எதுவும் செலுத்தப்படாமல் இருந்தால், இந்திய தண்டனைச் சட்டத்தின்

(மையச் சட்டம் XLV/1860) 64 ஆம் பிரிவு முதல் 70 ஆம் பிரிவுகள் வரை

(இரண்டும் உட்பட) விதிக்கப்பட்டுள்ள அனைத்து வரையறைகள், வரம்புகள்

மற்றும் நிபந்தனைகளுக்குட்பட்டு, பணம் செலுத்தத் தவறுவதன் பேரில்,

குற்றவாளியை சிறையில் அடைக்க குற்றவியல் நீதிமன்ற நடுவர் உத்தரவிடலாம்.

(2) இந்தச் சட்டம் அல்லது அதன்கீழ் செய்ப்பட்ட விதி அல்லது

துணை விதி எதனின் கீழும் குற்றவியல் நடுவரால் விதிக்கப்பட்ட அல்லது

மதிப்பிடப்பட்ட அபராதம், செலவுகள், வரி அல்லது பிற தொகை எதுவும், 1973

ஆம் ஆண்டு குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின், (மையச் சட்டம் 2/1974)

கீழ் அபராதம் என்பது போல், அத்தகைய குற்றவியல் நடுவரால் வசூலித்தல்

வேண்டும், மற்றும் அதனை வசூலித்ததின் பேரில், அபராதம் எனும் நேர்வினைத்

தவிர, இந்தச் சட்டத்தின் நோக்கங்களுக்காக பொருந்தக்கூடிய நகராட்சிக்கு

செலுத்தப்படுதல் வேண்டும்.".

186 – A எனும் 97. முதன்மைச் சட்டத்தின் 186 ஆம் பிரிவிற்கு பின்பு பின்வரும் பிரிவானது

புதிய பிரிவினை உட்புகுத்தப்படுதல் வேண்டும், அதாவது:-

உட்புகுத்துதல்.

"186 – A சமரசம் செய்து கொள்ளக்கூடிய குற்றம்.- (1) இந்தச் சட்டம் அல்லது அதன் கீழ் செய்யப்பட்ட விதிகள் அல்லது துணை விதிகளின் கீழ் தண்டிக்கப்படக்கூடிய குற்றம் எதுவும், வழக்கு விசாரணையின் தொடர்வதற்கு முன்னரோ அல்லது பின்னரோ, ஆணையாளரால் குறிப்பிடப்படலாகும் அத்தகைய தொகையினை நகராட்சிக்கு வரவு வைப்பதற்காக, அந்த நபரால் செலுத்தப்பட்டதன் பேரில், ஆணையாளரால் சமரசம் செய்து கொள்ளலாம்:

வரம்புரையாக, அந்த அபராதத் தொகையானது, இந்தச் சட்டத்தின் அல்லது அதன்கீழ் செய்யப்பட்ட விதிகள் அல்லது துணைவிதிகளின் கீழ் குறித்துரைக்கப்பட்ட தொகைக்கு மிகாது இருத்தல் வேண்டும்.

(2) குற்றமொன்று, (1) ஆம் உட்பிரிவின் கீழ் சமரசம் செய்து கொள்ளப்படுமிடத்து, நேர்விற்கேற்ப, நடவடிக்கை அல்லது மேல் நடவடிக்கை எதுவும், சமரசம் செய்து கொள்ளப்பட்ட அத்தகைய குற்றத்தினைப்பொறுத்து, குற்றவாளிக்கு எதிராக தொடரப்படுதலாகாது. மற்றும், குற்றவாளி, காவலில்

இருந்தால் உடனே விடுவிக்கப்படுதல் வேண்டும்."

189 ஆம் பிரிவிற்கான 98. முதன்மைச் சட்டத்தின் 189 ஆம் பிரிவில்,-

திருத்தம் (1) (b) கூறில், இறுதியில் உள்ள "அல்லது" எனும் சொல்லானது

விட்டுவிடப்படுதல் வேண்டும்;

(2) (c) கூறுக்கு பின்பு பின்வரும் கூறானது சேர்க்கப்படுதல் வேண்டும்,

அதாவது:-

44

"(d) நகர சுகாதாரம் அல்லது சுத்திகரிப்பு நிலையம் அல்லது உரம்

தயாரிக்கும் மையங்களை செயல்படுத்துதல்; அல்லது

(e) நகராட்சி நிலங்களிலுள்ள ஆக்கிரமிப்புகளை வெளியேற்றுதல்.".

194 ஆம் பிரிவிற்கான

99. முதன்மைச் சட்டத்தின் 194 ஆம் பிரிவில்,-

திருத்தம்.

(1) (1) ஆம் உட்பிரிவில், (c) கூறில் "பதிவு தபால்" எனும்

சொற்றொடருக்காக, "பதிவுத் தபால் அல்லது செய்தித்தாளில் அல்லது

வலைதளத்தில் வெளியிடப்பட்ட'' எனும் சொற்றொடரானது மாற்றாக

அமைக்கப்படுதல் வேண்டும்;

(2) (3) ஆம் உட்பிரிவில், "பதிவு தபால்" எனும் சொற்றொடருக்காக,

"பதிவு" தபால் அல்லது செய்தித்தாளில் அல்லது வலைதளத்தில் வெளியிடப்பட்ட''

எனும் சொற்றொடரானது மாற்றாக அமைக்கப்படுதல் வேண்டும்.

197 ஆம் பிரிவிற்கான

100. முதன்மைச் சட்டத்தின் 197 ஆம் பிரிவிற்காக பின்வரும் பிரிவானது

மாற்றீடு.

மாற்றாக அமைக்கப்படுதல் வேண்டும். அதாவது.-

"197. இடர்ப்பாடுகளை நீக்குவதற்கான அதிகாரம்.- 2022 ஆம் ஆண்டு

நகர்ப்புர உள்ளாட்சி அமைப்புகள் (திருத்தச்) சட்டத்தினை திருத்தியதன் மூலம்,

இந்தச் சட்டத்தின் வகைமுறைகளைச் செயற்படுத்துகையில் இடர்ப்பாடு எதுவும்

எழுமாயின், தமிழ்நாடு அரசிதழில் ஆணை மூலம் வெளியிடுவது வாயிலாக

அரசானது, அந்த இடர்ப்பாட்டினை நீக்குவதற்குத் தேவையானது அல்லது

உகந்தது என அதற்குத் தோன்றுகின்ற திருத்தப்பட்டவாறான 2022 ஆம் ஆண்டு

தமிழ்நாடு நகர்ப்புர உள்ளாட்சி அமைப்புகள் (திருத்தச்) சட்டத்தினை இந்தச்

சட்டத்தின் வகைமுறைகளுக்கு முரணாக இல்லாத அத்தகைய வகைமுறைகளை

செய்யலாம்:

வரம்புரையாக, 2022 ஆம் ஆண்டு தமிழ்நாடு நகர்ப்புர உள்ளாட்சி

அமைப்புகள் (திருத்தச்) சட்டத்தின் தொடக்கத் தேதியிலிருந்து இரண்டு

ஆண்டுகள் கால அளவு முடிவடைந்த பின்னர், அத்தகைய ஆணை எதுவும்

செய்யப்படுதல் ஆகாது"."

200 ஆம் பிரிவிற்கான

101. முதன்மைச் சட்டத்தின் 200 ஆம் பிரிவில்,-

திருத்தம்

(1) (1) ஆம் உட்பிரிவில், ( j ) இனத்திற்கு பின்பு, பின்வரும் இனங்களானவை

சேர்க்கப்படுதல் வேண்டும், அதாவது;-

"(k) 2008 ஆம் ஆண்டு திருப்பூர் மாநகராட்சிச் சட்டம் (தமிழ்நாடு சட்டம் 7/2008);

(l) 2008 ஆம் ஆண்டு ஈரோடு மாநகராட்சிச் சட்டம் (தமிழ்நாடு சட்டம் 8/2008);

(m) 2008 ஆம் ஆண்டு வேலூர் மாநகராட்சிச் சட்டம் (தமிழ்நாடு சட்டம் 26/2008);

(n) 2008 ஆம் ஆண்டு தூத்துக்குடி மாநகராட்சிச் சட்டம் (தமிழ்நாடு சட்டம் 27/2008);

(o) 2013 ஆம் ஆண்டு தஞ்சாவூர் மாநகராட்சிச் சட்டம் (தமிழ்நாடு சட்டம் 24/2013);

(p) 2013 ஆம் ஆண்டு திண்டுக்கல் மாநகராட்சிச் சட்டம் (தமிழ்நாடு சட்டம் 25/2013);

(q) 2019 ஆம் ஆண்டு ஓசூர் மாநகராட்சிச் சட்டம் (தமிழ்நாடு சட்டம் 10/2019);

(r) 2019 ஆம் ஆண்டு நாகர்கோவில் மாநகராட்சிச் சட்டம் (தமிழ்நாடு சட்டம் 11/2019)45 (s) 2019 ஆம் ஆண்டு ஆவடி மாநகராட்சிச் சட்டம் (தமிழ்நாடு சட்டம் 24/2019);

( t ) 2022 ஆம் ஆண்டு கடலூர் மாநகராட்சிச் சட்டம் (தமிழ்நாடு சட்டம் 1/2022);

(u) 2022 ஆம் ஆண்டு காஞ்சிபுரம் மாநகராட்சிச் சட்டம் (தமிழ்நாடு சட்டம்

2/2022);

(v) 2022 ஆம் ஆண்டு சிவகாசி மாநகராட்சிச் சட்டம் (தமிழ்நாடு சட்டம் 3/2022);

(w) 2022 ஆம் ஆண்டு கரூர் மாநகராட்சிச் சட்டம் (தமிழ்நாடு சட்டம் 4 / 2 0 2 2 ) ;

(x) 2022 ஆம் ஆண்டு தாம்பரம் மாநகராட்சிச் சட்டம் (தமிழ்நாடு சட்டம்

5/2022);

(y) 2022 ஆம் ஆண்டு கும்பகோணம் மாநகராட்சிச் சட்டம் (தமிழ்நாடு சட்டம்

6/2022);

(z) 2000 ஆம் ஆண்டு தமிழ்நாடு உள்ளாட்சி அமைப்புகள் (செயல்பாட்டினை

இடைநிறுத்தம் செய்தல்) சட்டம் (தமிழ்நாடு சட்டம் 33/2000);".

(2) (3) ஆம் உட்பிரிவில், "இந்தச் சட்டத்தின் தொடக்கம்" எனும்

சொற்றொடருக்காக அது காணப்படுகின்ற ஐந்து இடங்களில் "2022 ஆம்

ஆண்டு தமிழ்நாடு நகர்ப்புர உள்ளாட்சி அமைப்புகள் (திருத்தச்) சட்டத்தின்

தொடக்கம்" எனும் சொற்றொடரானது மாற்றாக அமைக்கப்படுதல் வேண்டும்.

முதன்மைச் சட்டத்தின் 102. 2000 ஆம் ஆண்டு தமிழ்நாடு நகர்புர உள்ளாட்சி அமைப்புகள்

செயல்பாட்டின் (செயல்பாட்டினை இடைநிறுத்தம் செய்தல்) சட்டத்தினால் (தமிழ்நாடு சட்டம்

புத்தாக்கம். 33/2000) இடைநிறுத்தம் செய்யப்பட்ட, கூறப்பட்ட சட்டத்தின் செயல்பாடுகளின்

அளாவுகைக்கு, முதன்மைச் சட்டம் முழுவதும், 2022 ஆம் ஆண்டு

தமிழ்நாடு நகர்புர உள்ளாட்சி அமைப்புகள் (திருத்தச்) சட்டத்தின் தொடக்கத்

தேதியிலிருந்தும், அது முதற்கொண்டும் மீண்டும் புத்தாக்கம் பெறுதல் வேண்டும்.

(ஆளுநரின் ஆணைப்படி)

ச. கோபி ரவிகுமார்,

அரசுச் செயலாளர் (சட்டமியற்றல்),

சட்டத் துறை.

(தமிழாக்கம்)

வெ. அரசகுமார்,

உதவி இயக்குநர்,

சட்ட(தமிழ்ப்பிரிவு)த் துறை.

தமிழ்நாடு அரசுக்காக சென்னை எழுதுபொருள் மற்றும் அச்சுத் துறை ஆணையரால்

அச்சிடப்பட்டு வெளியிடப்பட்டது.

Cite this issue. Tamil Nadu Gazette, Government of Tamil Nadu, 14 September 2022. Indian Gazettes, https://egazette.servantsofknowledge.in/details/in.gazette.tamilnadu.2022-09-14.Ordinary_37_Part-IV_Section-2T-Sup/. Archive identifier in.gazette.tamilnadu.2022-09-14.Ordinary_37_Part-IV_Section-2T-Sup.