[R. Dis. No. 197/2009.
© [Regd. No. TN/CCN/467/2012-14.
தமிழ்நாடு அரசு
2022
[விலை: ரூ. 1.60 காசு[விலை: ரூ. 1.60 காசு
| தமிழ்நாடு அரசிதழ் ஆணையின்படி வெளியிடப்பட்டது. | ||
எண் 38] சென்னை, புதன்கிழமை, செப்டம்பர் 21, 2022 புரட்டாசி 4, சுபகிருது, திருவள்ளுவர் ஆண்டு–2053
பகுதி II—பிரிவு 2 இன் இணைப்பு
அரசாங்க அறிவிப்புகளின் தமிழ் மொழிபெயர்ப்புகள்
தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு்த் துறை தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு்த் துறை
அறிவிக்கைகள்அறிவிக்கைகள்
[அரசாணை (ப) எண். 243, தொழிலாளர் நலன் மற்றும் தி்றன் மேம்பாட்டு (J1)த் துறை, 27 மே 2022.] 1948ஆம் ஆண்டு குறைந்தளவு ஊதியங்கள் சட்டத்தின் (மத்தியச் சட்டம் 11/1948) 3ஆம் பிரிவைச் சேர்ந்த (1) உட்பிரிவின் (b) பகுதியிலும், 5ஆம் பிரிவைச் சேர்ந்த (2) உட்பிரிவிலும் ஆகியவற்றில் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களைக் கொண்டு, வெளியிடக் கருதியுள்ள கீழ்க்காணும் வரைவு அறிவிக்கை மேற்சொன்ன சட்டத்தின் 5ஆம் பிரிவைச் சேர்ந்த (1) உட்பிரிவின் (b) பகுதியில் கோரியுள்ளவாறு, அதனால் பாதிக்கப்படக்கூடிய அனைவரின் தகவலுக்காக இதனால் வெளியிடப்படுகிறது.
2. இந்த அறிவிக்கை, தமிழ்நாடு அரசிதழிதமிழ்நாடு அரசிதழில் வெளியிடப்படும் நாளிலிருந்து இரண்டு திங்கள் கால அளவு முடிவடையும் நாளன்று அல்லது அதற்குப் பின்னர், இந்த வரைவு அறிவிக்கை பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்படுமென்றும், மேற்சொன்ன கால அளவு முடிவடைவதற்கு முன்னர், அது தொடர்பாக யாதொரு நபரிடமிருந்தும் வரப்பெறுகிற யாதொரு மறுப்புரை அல்லது கருத்துரை தமிழ்நாடு அரசால் பரிசீலிக்கப்படுமென்றும் இதனால் அறிவிக்கப்படுகிறது. மறுப்புரைகள் அல்லது கருத்துரைகள் ஏதேனுமிருப்பின், அதனை, சென்னை-600 006, DMS வளாகத்தி்லுள்ள தொழிலாளர் நல ஆணையாளர் வாயிலாக, அரசுச் செயலாளர், தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை, தலைமைச் செயலகம், சென்னை-600 009 என்ற முகவரிக்கு அனுப்பிவைக்க வேண்டும்.
வரைவு அறிவிக்கைவரைவு அறிவிக்கை
1948ஆம் ஆண்டு குறைந்தளவு ஊதியங்கள் சட்டத்தின் (மத்தியச் சட்டம் 11/1948) 3ஆம் பிரிவைச் சேர்ந்த (1) உட்பிரிவின் (b) பகுதியிலும், 5ஆம் பிரிவைச் சேர்ந்த (2) உட்பிரிவிலும் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களைக் கொண்டும், 09-01-2019 ஆம் நாளிட்ட தமிழ்நாடு அரசிதழிதமிழ்நாடு அரசிதழின் பாகம் II—பிரிவு 2 இல், 32 மற்றும் 33 ஆம் பக்கங்களில் (ஆங்கிலத்தில்) வெளியிடப்பட்ட தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறையின் II(2)/ தொ.வே./27/2019ஆம் எண் அறிவிக்கையை ரத்து செய்துவிட்டு அதற்குப் பதிலாகவும் தமிழ்நாட்டு ஆளுநர் அவர்கள், தமிழ்நாடு மாநிலத்தில், உப்பளங்களில் பணியமர்த்தப்பட்டுள்ள, கீழேயுள்ள விவர அட்டவணையின் (2) நெடும்பத்தியில் குறிப்பிடப்பட்டுள்ள பணிகள் மற்றும் தொழிலாளர் வகையினருக்கு அந்த விவர அட்டவணையின் (3) நெடும்பத்தியின் நிகரான பதிவுகளில் குறிப்பிடப்பட்டுள்ளவாறு வழங்கத்தக்க குறைந்தளவு ஊதிய வீதங்களை இதனால் திருத்தியமைக்கிறார்:-
விவர அட்டவணைவிவர அட்டவணை
உப்பளங்களில் வேலைவாய்ப்புஉப்பளங்களில் வேலைவாய்ப்பு
| தொடர் எண். | பணியாளர் வகைகள் | குறைந்த அளவு அடிப்படை ஊதிய வீதங்கள் (ரூபாய் காசு.) |
| ( 1 ) | ( 2 ) | ( 3 ) |
| 1. | உப்பைச் சுரண்டி எடுத்தல் | நாளொன்றுக்கு ரூ. 284.00 |
| 2. | உப்பளத்திலிருந்து உலர்த்தும் தளத்திற்குக் கொண்டு செல்லுதல் |
[ 1 ]
DTP-II-2-(38) (T Sup)—12
| தொடர் எண். | பணியாளர் வகைகள் | குறைந்த அளவு அடிப்படை ஊதிய வீதங்கள் (ரூபாய் காசு.) |
| ( 1 ) | ( 2 ) | ( 3 ) |
| (i) உத்தரவாதமளிக்கப்பட்ட குறைந்தளவு அடிப்படை ஊதிய வீதங்கள் | நாளொன்றுக்கு ரூ. 280.00 | |
| (ii) செய்யும் வேலைக்கேற்ற ஊதியம் | ||
| (a) 45 மீட்டர் தொலைவுக்கு (lead) கொண்டு செல்ல மெட்ரிக் டன் ஒன்றுக்கு | ரூ. 42.62 | |
| (b) 45 மீட்டருக்கு மேற்பட்டு 105 மீட்டர் வரையிலான தொலைவுக்குக் கொண்டுசெல்ல மெட்ரிக் டன் ஒன்றுக்கு | ரூ. 25.87 | |
| (c) 105 மீட்டர் தொலைவுக்கு மேல் கூடுதலாக உள்ள ஒவ்வொரு 60 மீட்டர் தொலைவுக்கு மெட்ரிக் டன் ஒன்றுக்கு | ரூ. 25.87 | |
| 3. | மராமத்து | நாளொன்றுக்கு ரூ. 280.00 |
| 4. | நீரிறைக்கும் எந்திரப் பணியாளர் | நாளொன்றுக்கு ரூ. 283.00 |
| 5. | நீரிறைக்கும் எந்திர உதவிப் பணியாளர் | நாளொன்றுக்கு ரூ. 280.00 |
| 6. | மேலாள் | திங்களொன்றுக்கு ரூ. 8286.00 |
| 7. | காவலாள் | திங்களொன்றுக்கு ரூ. 7895.00 |
| 8. | (i) டிராக்டர் ஓட்டுநர் (வேளாண் பணி டிராக்டர் உட்பட) | திங்களொன்றுக்கு ரூ. 8286.00 |
| (ii) நீரிறைக்கும் இயந்திரத்தை இயக்கும் கம்மியர் (டீசல் அல்லது மின்சக்தியில் இயங்குகிற உப்பைப் பொடியாக்கும் இயந்திரம்) | ||
| 9. | எழுத்தர் | திங்களொன்றுக்கு ரூ. 8286.00 |
| 10 | உப்பை அகற்றுதல், எடையிடுதல் மற்றும் மூட்டைகளில் நிரப்புதல் | 100 மூட்டைகளுக்கு ரூ. 285.70 |
| 11. | உப்பை அகற்றுதல், எடையிடுதல் மூட்டைகளில் நிரப்புதல், தைத்தல் மற்றும் உப்பு மூட்டைகளை அனுப்புதல் (30 மீட்டர் தொலைவுக்கு 75 கிலோ கிராம் முதல் 80 கிலோ கிராம் வரை எடையுள்ள மூட்டை) | 100 மூட்டைகளுக்கு ரூ. 806.89 |
| 12. | பொதுவான பணிவகைள் (மேற்சொன்ன எந்தவொரு வகையின் கீழும் வராதவை) | நாளொன்றுக்கு உத்தரவாதம் அளிக்கப்பட்ட கு ை ற ந் த ள வு அ டி ப் ப ை ட ஊ தி ய ம் ரூ. 280.00 என்ற வரையறைக்குட்பட்டுச் செய்யும் வேலைக்கேற்ற ஊதியம் |
விளக்கவிளக்கம்ம்: : (1) அகவிலைப்படிஅகவிலைப்படி: மேலே நிர்ணயிக்கப்பட்ட குறைந்தளவு அடிப்படை ஊதிய வீதங்களுடன் தொழிலாளர்களுக்கு கீழே குறிப்பிடப்பட்டுள்ளவாறு அகவிலைப்படி வழங்கப்பட வேண்டும்:
(i) அகவிலைப்படியானது, 2010ஆம் ஆண்டிற்கான சென்னை மாநகர நுகர்வோர் சராசரி விலைக்குறியீட்டு எண்ணுடன் இணைக்கப்பட்டுள்ளது (அதாவது 2001ஆம் ஆண்டில் 100 புள்ளிகள் என்பதை அடிப்படையாகக் கொண்டு தற்போது கணக்கிடப்பட்ட 161 புள்ளிகள் ஆகும்). 161 புள்ளிகளுக்கு மேல் உயரும் ஒவ்வொரு புள்ளிக்கும், நாளொன்றுக்கு ரூ.1.73 (ஒரு ரூபாய் எழுபத்து மூன்று காசுகள் மட்டும்) கூடுதலாக அகவிலைப்படி வழங்கப்பட வேண்டும்.
(ii) முந்தைய 12 மாதங்களுக்கான (அதாவது ஜனவரியிலிருந்து டிசம்பர் வரை) சராசரி விலைக்குறியீட்டினை அடிப்படையாகக் கொண்டு, ஒவ்வோராண்டும் ஏப்ரல் முதல் நாளிலிருந்து அகவிலைப்படி கணக்கிடப்பட வேண்டும்.
(iii) முந்தைய ஆண்டிற்கான சென்னை மாநகர நுகர்வோர் சராசரி விலைக் குறியீட்டு எண்ணை அடிப்படையாகக் கொண்ட முதல் கணக்கீடு இந்த அறிவிக்கை தமிழ்நாடுதமிழ்நாடு அரசிதழில்அரசிதழில் வெளியிடப்படும் நாளிலிருந்து செயலுக்கு வரும்.
(2) பணியின் தன்மை ஒரே மாதிரியாக இருக்கும்போது, ஆண் மற்றும் பெண் பணியாளர்களுக்கு வழங்கப்படும் ஊதியத்தில் எவ்வித வேறுபாடும் இருக்கக்கூடாது.
(3) (i) நாள் ஊதியத்தைக் கணக்கிடுவதற்கு, மாத ஊதியத்தை 26ஆல் வகுக்க வேண்டும்.
(ii) மாத ஊதியத்தைக் கணக்கிடுவதற்கு, நாள் ஊதியத்தை 30ஆல் பெருக்க வேண்டும்.
3(4) தற்போது வழங்கப்பட்டு வரும் ஊதியங்கள், இங்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள குறைந்தளவு ஊதியங்களைக் காட்டிலும் அதிகமாக இருக்குமிடங்களிலெல்லாம், அதே ஊதியம் தொடர்ந்து வழங்கப்பட வேண்டும்.
இரா. கிர்லோஷ் குமார், இரா. கிர்லோஷ் குமார், அரசுச் செயலாளர்.
(தமிழாக்கம்)
ந. அருள்,ந. அருள், இயக்குநர் (மு.கூ.பொ), தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தி (மொழிபெயர்ப்பு)த் துறை.
[அரசாணை (ப) எண். 344, தொழிலாளர் நலன் மற்றும் தி்றன் மேம்பாட்டு (J1)த் துறை, 7 ஜூலை 2022.] 1948ஆம் ஆண்டு குறைந்தளவு ஊதியங்கள் சட்டத்தின் (மத்தியச் சட்டம் 11/1948) 3ஆம் பிரிவைச் சேர்ந்த (1) உட்பிரிவின் (b) பகுதியிலும், 5ஆம் பிரிவைச் சேர்ந்த (2) உட்பிரிவிலும் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களைக் கொண்டு, வெளியிடக் கருதியுள்ள கீழ்க்காணும் வரைவு அறிவிக்கை மேற்சொன்ன சட்டத்தின் 5ஆம் பிரிவைச் சேர்ந்த (1) உட்பிரிவின் (b) பகுதியில் கோரியுள்ளவாறு, அதனால் பாதிக்கப்படக்கூடிய அனைவரின் தகவலுக்காக இதனால் வெளியிடப்படுகிறது.
2. இந்த அறிவிக்கை, தமிழ்நாடு அரசிதழிதமிழ்நாடு அரசிதழில் வெளியிடப்படும் நாளிலிருந்து இரண்டு திங்கள் கால அளவு முடிவடையும் நாளன்று அல்லது அதற்குப் பின்னர், இந்த வரைவு அறிவிக்கை பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்படுமென்றும், மேற்சொன்ன கால அளவு முடிவடைவதற்கு முன்னர், இது தொடர்பாக யாதொரு நபரிடமிருந்தும் வரப்பெறுகிற ஏதேனும் மறுப்புரைகள் அல்லது கருத்துரைகள் தமிழ்நாடு அரசால் பரிசீலிக்கப்படுமென்றும், இதனால் அறிவிக்கப்படுகிறது. மறுப்புரைகள் அல்லது கருத்துரைகள் எவையேனுமிருப்பின், அவற்றை, சென்னை-600 006, DMS வளாகத்தி்லுள்ள தொழிலாளர் நல ஆணையாளர் வாயிலாக, அரசுச் செயலாளர், தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை, தலைமைச் செயலகம், சென்னை-600 009 என்ற முகவரிக்கு அனுப்பி வைக்கவேண்டும்.
வரைவு அறிவிக்கைவரைவு அறிவிக்கை
1948ஆம் ஆண்டு குறைந்தளவு ஊதியங்கள் சட்டத்தின் (மத்தியச் சட்டம் 11/1948) 3ஆம் பிரிவைச் சேர்ந்த (1) உட்பிரிவின் (b) பகுதியிலும், 5ஆம் பிரிவைச் சேர்ந்த (2) உட்பிரிவிலும் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களைக் கொண்டும், 23-01-2019 ஆம் நாளிட்ட தமிழ்நாடு அரசிதழிதமிழ்நாடு அரசிதழின் பாகம் II—பிரிவு 2 இல், 111 மற்றும் 112 ஆம் பக்கங்களில் (ஆங்கிலத்தில்) வெளியிடப்பட்ட தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறையின் II(2)/ தொ.வே./95/2019 ஆம் எண் அறிவிக்கையை ரத்து செய்துவிட்டு அதற்குப் பதிலாகவும், தமிழ்நாட்டு ஆளுநர் அவர்கள், தமிழ்நாடு மாநிலத்தில், வெட்டுமரத் தொழிலில் பணியமர்த்தப்பட்டுள்ள, கீழேயுள்ள விவர அட்டவணையின் (2) நெடும்பத்தியில் குறிப்பிடப்பட்டுள்ள பணிகள் மற்றும் தொழிலாளர் வகையினருக்கு அந்த விவர அட்டவணையின் (3) நெடும்பத்தியின் நிகரான பதிவுகளில் குறிப்பிடப்பட்டுள்ளவாறு வழங்கத்தக்க குறைந்தளவு ஊதிய வீதங்களை இதனால் திருத்தியமைக்கிறார்.
விவர அட்டவணைவிவர அட்டவணை
வெட்டுமரத் தொழிலில் வேலைவாய்ப்புவெட்டுமரத் தொழிலில் வேலைவாய்ப்பு
| தொடர் எண். | தொழிலாளர் வகைகள் | குறைந்தளவு அடிப்படை ஊதிய வீதங்கள் ( நாளொன்றுக்கு) (ரூ. காசு.) |
| ( 1 ) | ( 2 ) | ( 3 ) |
| (I) பயிற்சி பெற்றோர் பயிற்சி பெற்றோர்: | ||
| (1) | மரம் வெட்டுபவர் / மரம் வெட்டு கருவி இயக்குபவர் | 414.00 |
| (2) | இரம்பம் கொண்டு அறுப்பவர் | |
| (3) | இரம்பத்திற்குக் கூர் ஏற்றுபவர் (Saw Sharpener) | |
| (4) | அனைத்து வகை இரம்பப் பொறிகளையும் இயக்குபவர் (All Saw - driver Operator) | |
| (5) | மெல்லொட்டுப் பலகை பொருத்தும் பொறியை இயக்குபவர் (Veneering Machine Operator) | |
| (6) | மின்பணியாளர் | |
| (7) | முதலாள் | |
| (8) | கடைசல் பொறி இயக்குபவர் | |
| (9) | கொதிகலன் இயக்குபவர் | |
| (10) | இயந்திரக் கம்மியர் | |
| (11) (II) ஓரளவு பயிற்சி பெற்றோர்: ஓரளவு பயிற்சி பெற்றோர்: | தச்சர் | |
| (1) | மெருகேற்றுபவர் | 403.00 |
| (2) | வரிச்சட்டங்களைக் கொண்டு சிப்பம் செய்பவர் | |
| (3) | சிப்பம் பெட்டி செய்பவர் | |
| (4) | இரம்பப் பொறி இயக்குபவருக்கு உதவியாள் அனைவரும் | |
| (5) | மரத் திம்மைகள் அறுப்பவரின் உதவியாள் (Log Helper) | |
| பயிற்சி பெறாதோர்: (III) பயிற்சி பெறாதோர்: | ||
| (1) | வெட்டுமரங்களைச் சுமந்து செல்வோர் | 393.00 |
| (2) | பொது உதவியாள் | |
| (3) | சிப்பம் கட்டும் உதவியாள் | |
| (4) | பயிற்சி பெறாத உதவியாள் | |
| (5) | காவலர் | |
| (6) | வண்டிக்காரர் (Cartman) | |
| (7) | வெட்டு மரத் தொகுப்பு எண்ணிக்கை உதவியாள் (Lot Helper) |
விளக்கம்விளக்கம்: (1) அகவிலைப்படி.- மேலே நிர்ணயிக்கப்பட்ட குறைந்தளவு அடிப்படை ஊதிய வீதங்களுடன், தொழிலாளர்களுக்கு கீழே குறிப்பிடப்பட்டுள்ளவாறு அகவிலைப்படி வழங்கப்பட வேண்டும்:-
(i) அகவிலைப்படியானது, 2010ஆம் ஆண்டிற்கான சென்னை மாநகர நுகர்வோர் சராசரி விலைக்குறியீட்டு எண்ணுடன் இணைக்கப்பட்டுள்ளது (அதாவது 2001 ஆம் ஆண்டில் 100 புள்ளிகள் என்பதை அடிப்படையாகக் கொண்டு தற்போது கணக்கிடப்பட்ட 161 புள்ளிகள் ஆகும்). 161 புள்ளிகளுக்கு மேல் உயரும் ஒவ்வொரு புள்ளிக்கும் நாளொன்றுக்கு ரூ.2.43 (இரண்டு ரூபாய் நாற்பத்து மூன்று காசுகள் மட்டும்) கூடுதலாக அகவிலைப்படி வழங்கப்பட வேண்டும்.
(ii) முந்தைய 12 மாதங்களுக்கான (அதாவது ஜனவரியிலிருந்து டிசம்பர் வரை) சராசரி விலைக்குறியீட்டினை அடிப்படையாகக் கொண்டு, ஒவ்வோராண்டும் ஏப்ரல் முதல் நாளிலிருந்து அகவிலைப்படி கணக்கிடப்பட வேண்டும்.
(iii) முந்தைய ஆண்டிற்கான சென்னை மாநகர நுகர்வோர் சராசரி விலைக் குறியீட்டு எண்ணை அடிப்படையாகக் கொண்ட முதல் கணக்கீடு இந்த அறிவிக்கை தமிழ்நாடு அரசிதழில்தமிழ்நாடு அரசிதழில் வெளியிடப்படும் நாளிலிருந்து செயலுக்கு வரும்.
(2) பணியின் தன்மை ஒரே மாதிரியாக இருக்கும்போது, ஆண் மற்றும் பெண் பணியாளர்களுக்கு வழங்கப்படும் ஊதியத்தில் எவ்வித வேறுபாடும் இருக்கக்கூடாது.
(3) மாதாந்திர ஊதியத்தைக் கணக்கிடுவதற்கு நாள் ஊதியத்தை 30ஆல் பெருக்க வேண்டும்.
(4) தற்போது வழங்கப்பட்டு வரும் ஊதியங்கள், இங்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள குறைந்தளவு ஊதியங்களைக் காட்டிலும் அதிகமாக இருக்குமிடங்களிலெல்லாம் அதே ஊதியம் தொடர்ந்து வழங்கப்பட வேண்டும்.
முகமது நசிமுத்தின், முகமது நசிமுத்தின்,
அரசு கூடுதல் தலைமைச் செயலாளர்.
(தமிழாக்கம்)
ந. அருள்,ந. அருள், இயக்குநர் (மு.கூ.பொ), தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தி (மொழிபெயர்ப்பு)த் துறை.
தமிழ்நாடு அரசுக்காக சென்னை எழுதுபொருள் மற்றும் அச்சுத் துறை ஆணையரால் அச்சிடப்பட்டு வெளியிடப்பட்டது.