© [Regd. No. TN/CCN/467/2012-14. தமிழ்நாடு அரசு [R. Dis. No. 197/2009. 2022 [விலை : ரூ. 3.20 காசுவிலை : ரூ. 3.20 காசு
| தமிழ்நாடு அரசிதழ் ஆணையின்படி வெளியிடப்பட்டது. | ||
எண் 40] சென்னை, புதன்கிழமை, அக்டோபர் 5, 2022 புரட்டாசி 18, சுபகிருது, திருவள்ளுவர் ஆண்டு-2053
பகுதி IV—பிரிவு 2 இன் இணைப்பு
2022 செப்டம்பர் 2 ஆம் நாளன்று ஆளுநரால் பிறப்பிக்கப்பட்ட பின்வரும் அவசரச்
சட்டமானது இதன் மூலம் பொதுத் தகவலுக்காக வெளியிடப்படுகிறது:-
தமிழ்நாடு அவசரச் சட்ட எண். 3/2022.
1937 ஆம் ஆண்டு தமிழ்நாடு மதுவிலக்குச் சட்டத்தினை மேலும் திருத்தம் செய்வதற்கானதோர் அவசரச் சட்டம்.
தமிழ்நாடு சட்டமன்றமானது அமர்வில் இல்லாதிருப்பதால் மற்றும் தமிழ்நாடு ஆளுநர்
இதில் இதன்பின்பு காணப்படுகின்ற நோக்கங்களுக்காக உடனடியாக நடவடிக்கை
எடுப்பது அவருக்கு அவசியமாக்குவதாக தற்போதுள்ள சூழ்நிலைகள் இருப்பதாக
மனநிறைவடைந்திருப்பதால்;
ஆகையால், அரசமைப்பின் 213 ஆம் உறுப்பின் (1) ஆம் கூறால் அளிக்கப்பட்டுள்ள
அதிகாரங்களைப் பயன்படுத்தி ஆளுநர் இதன் மூலம் பின்வரும் அவசரச் சட்டத்தை
பிறப்பிக்கிறார்:-
குறுந்தலைப்பு 1. (1) இந்த அவசரச் சட்டம், 2022 ஆம் ஆண்டு தமிழ்நாடு மதுவிலக்கு (திருத்த)
அவசரச் சட்டம் என வழங்கப்பெறும்.
மற்றும் தொடக்கம்.
(2) இது உடனடியாக நடைமுறைக்கு வருதல் வேண்டும்.
தமிழ்நாடு சட்டம்
18-BB ஆம் 2. 1937 ஆம் ஆண்டு தமிழ்நாடு மதுவிலக்குச் சட்டத்தின் 18-BB ஆம் பிரிவில்,
X/1937.
பிரிவிற்கான நானூற்று ஐம்பது ரூபாய்கள் எனும் சொற்றொடருக்காக, ஆயிரம் ரூபாய்கள் எனும்
திருத்தம்.
சொற்றொடரானது மாற்றாக அமைக்கப்படுதல் வேண்டும்.
IV-2(40)(T-Sup)-1
[1]2
விளக்கவுரை
தற்போது, 1937 ஆம் ஆண்டு தமிழ்நாடு மதுவிலக்குச் சட்டத்தின் (தமிழ்நாடு சட்டம் X/1937) 18-BB ஆம் பிரிவின் கீழ், அரசால் அவ்வப்போது அறிவிக்கையின் வாயிலாக குறித்துரைக்கக்கூடியவறான புரூஃப் லிட்டர் ஒன்றுக்கு நானூற்று ஐம்பது
ரூபாய்க்கு மிகாத அத்தகைய வீதத்தில், ஆயத்தீர்வை விதிக்கத்தக்க அனைத்து பொருட்கள்
அதாவது, இந்தியாவில் தயாரிக்கப்பட்ட வெளிநாட்டு மதுபானங்கள், இந்தியாவின் சுங்க
எல்லையைக் கடந்து தமிழ்நாடு மாநிலத்திற்குள் கொண்டு வரப்படும் வைன் மற்றும் பீர்
ஆகியவற்றின் மீது சிறப்புக் கட்டணம் விதிக்கப்படுகிறது. அரசால் அதிகபட்ச வீதம்
2014 ஆம் ஆண்டில் அறிவிக்கை செய்யப்பட்டது மற்றும் அதன் பின்பு சிறப்புக் கட்டணம்
உயர்த்தப்படவில்லை, மாநிலத்தின் வருவாயைப் பெருக்கும் வகையில், ஆயத்தீர்வை
விதிக்கத்தக்க அத்தகைய அனைத்து பொருட்களின் மீதும் விதிக்கப்படக்கூடிய சிறப்புக்
கட்டணத்தின் அதிகபட்ச தொகையினை புரூஃப் லிட்டர் ஒன்றுக்கு ரூ. 450 (ரூபாய்
நானூற்று ஐம்பது மட்டும்)-லிருந்து ரூ.1000 (ரூபாய் ஆயிரம் மட்டும்) ஆக உயர்த்த முடிவு
செய்துள்ளது.
2. எனவே அரசானது, மேற்சொன்ன நோக்கத்திற்காக, 1937 ஆம் ஆண்டு தமிழ்நாடு மதுவிலக்குச் சட்டத்தினை (தமிழ்நாடு சட்டம் X/1937), தக்கவாறு திருத்தம் செய்வதென முடிவு செய்துள்ளது.
3. இந்த அவசரச் சட்டம் மேற்சொன்ன முடிவிற்குச் செயல்வடிவம் கொடுக்க
விழைகிறது.
(ஆளுநரின் ஆணைப்படி)
ச. கோபி ரவிகுமார்ச. கோபி ரவிகுமார், அரசுச் செயலாளர் (சட்டமியற்றல்), சட்டத் துறை.
(தமிழாக்கம்)
வெ. அரசகுமார்வெ. அரசகுமார், உதவி இயக்குநர்,
சட்ட (தமிழ்ப்பிரிவு)த் துறை.
3தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையின் பின்வரும் சட்டமானது 2021 ஆம் ஆண்டு செப்டம்பர்
திங்கள் 22 ஆம் நாளன்று ஆளுநரின் ஏற்பிசைவைப் பெற்றது மற்றும் அது பொதுத்
தகவலுக்காக இதன் மூலம் வெளியிடப்படுகிறது:-
சட்ட எண். 16/2021.
1997 ஆம் ஆண்டு தமிழ்நாடு மருத்துவ நிறுவனங்கள் (முறைப்படுத்துதல்) சட்டத்தினை மேலும் திருத்தம் செய்வதற்கானதொரு சட்டம்.
இந்தியக் குடியரசின் எழுபத்தி இரண்டாம் ஆண்டில் தமிழ்நாடு மாநில சட்டமன்றப்
பேரவையினால் பின்வருமாறு சட்டமியற்றப்படுவதாகுக:-
குறுந்தலைப்பு 1. (1) இந்தச் சட்டம் 2021 ஆம் ஆண்டு தமிழ்நாடு மருத்துவ நிறுவனங்கள்
மற்றும் தொடக்கம்.
(முறைப்படுத்துதல்) திருத்தச் சட்டம் என வழங்கப்பெறும்.
(2) இது உடனடியாக நடைமுறைக்கு வருதல் வேண்டும்.
தமிழ்நாடு சட்டம்
2-D ஆம் 2. 1997 ஆம் ஆண்டு தமிழ்நாடு மருத்துவ நிறுவனங்கள் (முறைப்படுத்துதல்)
4/1997.
பிரிவிற்கான சட்டத்தின் 2-D ஆம் பிரிவில், (2) ஆம் உட்பிரிவில், (a) ஆம் கூறுக்கு பின்பு, பின்வரும்
திருத்தம்.
கூறானது, புகுத்தப்படுதல் வேண்டும், அதாவது:-
(aa) மாவட்ட பொதுச் சுகாதாரம் மற்றும் நோய்த் தடுப்பு மருந்துத் துறையின்
துணை இயக்குநர்;.
(ஆளுநரின் ஆணைப்படி)
ச. கோபி ரவிகுமார்ச. கோபி ரவிகுமார்,
அரசுச் செயலாளர் (சட்டமியற்றல்), சட்டத் துறை.
(தமிழாக்கம்)
வெ. அரசகுமார்வெ. அரசகுமார்,
உதவி இயக்குநர், சட்ட (தமிழ்ப்பிரிவு)த் துறை.
4 5தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையின் பின்வரும் சட்டமானது 2022 ஆம் ஆண்டு
ஆகஸ்ட் திங்கள் 6 ஆம் நாளன்று ஆளுநரின் ஏற்பிசைவைப் பெற்றது மற்றும் அது
பொதுத் தகவலுக்காக இதன் மூலம் வெளியிடப்படுகிறது:-
சட்ட எண். 41/2022.
1908 ஆம் ஆண்டு பதிவுச் சட்டத்தை தமிழ்நாடு மாநிலத்திற்கு பொருந்தும் வகையில், 1908 ஆம் ஆண்டு பதிவுச் சட்டத்தை தமிழ்நாடு மாநிலத்திற்கு பொருந்தும் வகையில், மேலும் திருத்தம் செய்வதற்கானதொரு சட்டம். மேலும் திருத்தம் செய்வதற்கானதொரு
இந்தியக் குடியரசின் எழுபத்தி இரண்டாவது ஆண்டில் தமிழ்நாடு மாநிலத்தின்
சட்டமன்றப் பேரவையினால் பின்வருமாறு சட்டமியற்றப்படுவதாகுக:—
1. (1) இந்தச் சட்டம், 2021 ஆம் ஆண்டு பதிவுச் (தமிழ்நாடு இரண்டாம் திருத்த) குறுந்தலைப்பு, சட்டம் என அழைக்கப்பெறும்.
அளாவுகை மற்றும்
தொடக்கம்.
(2) இது தமிழ்நாடு மாநிலம் முழுவதும் அளாவி நிற்கும்.
(3) இது உடனடியாக நடைமுறைக்கு வருதல் வேண்டும்.
மையச்சட்டம்
2-ஆம் பிரிவிற்கான XVI/1908.
திருத்தம்.
2. 1908-ஆம் ஆண்டு பதிவுச்சட்டத்தின் (இதன்பின்பு இதில் முதன்மைச்சட்டம் என குறிப்பிடப்படுவதான) 2 ஆம் பிரிவில் (5) ஆம் கூறுக்குப் பின்பு, பின்வரும் கூறானது உட்புகுத்தப்படுதல் வேண்டும், அதாவது :—
மையச்சட்டம்
XLV/1860.
(5-A) பொய்யான ஆவணம் என்பது, 1860 ஆம் ஆண்டு இந்திய தண்டனை தொகுப்புச்சட்டத்தின் 470 ஆம் பிரிவில் கொடுக்கப்பட்டுள்ள அதே பொருளைக் கொண்டிருக்கும்;".
3. முதன்மைச் சட்டத்தின் 22-A-ஆம் பிரிவிற்கு பின்பு, பின்வரும் பிரிவானது
உட்புகுத்தப்படுதல் வேண்டும், அதாவது :
22-B. சட்டத்தால் தடைசெய்யப்பட்ட பொய்யான ஆவணங்கள் மற்றும் 22-B. சட்டத்தால் தடைசெய்யப்பட்ட பொய்யான ஆவணங்கள் மற்றும்
22-B எனும் புதிய பிற ஆவணங்களை பதிவு செய்ய மறுத்தல்.-பிற ஆவணங்களை பதிவு செய்ய மறுத்தல்.- இந்தச்சட்டத்தில் என்ன அடங்கியிருந்த
பிரிவினை போதிலும், பதிவு செய்யும் அலுவலரானவர் பின்வரும் ஆவணங்களை பதிவு செய்வதற்கு
உட்புகுத்துதல்.
மறுத்தல் வேண்டும், அதாவது :
(1) பொய்யான ஆவணம்;
(2) அப்போதைக்கு நடைமுறையிலுள்ள மையச்சட்டம் அல்லது மாநிலச்சட்டம்
எதனாலும் தடை செய்யப்பட்ட பரிமாற்றங்கள் தொடர்பான ஆவணம்;
(3) அப்போதைக்கு நடைமுறையிலுள்ள மையச்சட்டத்தின் அல்லது
மாநிலச்சட்டத்தின் கீழுள்ள ஒரு தகுதி வாய்ந்த அதிகார அமைப்பினால் அல்லது
நீதிமன்றம் அல்லது தீர்ப்பாயம் எதனாலும் நிரந்தரமாக அல்லது தற்காலிகமாக
இணைக்கப்பட்டுள்ள அசையா சொத்தினை விற்பனை, கொடை, குத்தகை அல்லது
மற்ற வகையின் மூலம் உரிமை மாற்றம் செய்வது தொடர்பான ஆவணம்;
(4) மாநில அரசு அறிவிக்கையின் வாயிலாக குறித்திடலாகும் பிற ஆவணம்
எதுவும்..
4. முதன்மைச் சட்டத்தின் 77 ஆம் பிரிவிற்கு பின்பு, பின்வரும் பிரிவுகளானது 77-A மற்றும் உட்புகுத்தப்படுதல் வேண்டும், அதாவது:
77-B எனும்
புதிய பிரிவுகளை 77-A. குறித்த சில நேர்வுகளில் பதிவு செய்யப்பட்ட ஆவணங்களை 77-A. குறித்த சில நேர்வுகளில் பதிவு செய்யப்பட்ட ஆவணங்களை
உட்புகுத்துதல்.
இரத்து செய்தல்.இரத்து செய்தல். (1) 22-A-ஆம் பிரிவு அல்லது 22-B-ஆம் பிரிவுக்கு முரணாக
ஆவணம் பதிவு செய்யப்பட்டுள்ளது என பதிவாளர் கருதுகிறவிடத்து, அந்த பதிவினை
பதிவாளர், தானாக முன்வந்தோ அல்லது நபர் எவரிடமிருந்து வரப்பெற்ற புகார் ஒன்றின்
மீதோ, எழுதிக்கொடுத்தவருக்கும், ஆவணத்தின் அனைத்து தரப்பினருக்கும் மற்றும்
தொடர்ச்சியான ஆவணங்கள் ஏதேனும் இருப்பின் அவற்றின் தரப்பினருக்கும் மற்றும்
பதிவாளரின் கருத்தில், ஆவணத்தின் இரத்தினால் பாதிக்கப்படலாகும் அனைத்து
பிற நபர்களுக்கும் ஆவணத்தின் பதிவானது ஏன் இரத்து செய்யப்படக்கூடாது
என்பதற்கான காரணத்தைக் கேட்டு ஒரு அறிவிப்பை வழங்க வேண்டும். அதற்காக
பெறப்பட்ட பதில் ஏதேனும் இருப்பின், அதை கருத்தில் கொண்டு பதிவாளரானவர்
ஆவணத்தின் பதிவினை இரத்து செய்யலாம் மற்றும் தொடர்புடைய புத்தகங்களில்
மற்றும் அட்டவணையில் அத்தகைய இரத்து குறித்து உள்ளீடு செய்யலாம்.
6(2) (1)-ஆம் உட்பிரிவின் கீழான அதிகாரம் பதிவுத்துறைத் தலைவரினாலும்
செலுத்தப்படலாம்.
77-B. மேல்முறையீடு.-77-B. மேல்முறையீடு.- (1) 77-A-ஆம் பிரிவின் (1)-ஆம் உட்பிரிவின் கீழ்
பதிவாளரின் ஆணை ஒன்றினால் இடருற்ற நபர் எவரும், ஆவணம் இரத்து செய்யப்பட்ட
தேதியிலிருந்து முப்பது நாட்களுக்குள் பதிவுத்துறைத் தலைவரிடம் மேல்முறையீடு
ஒன்றினை அளிக்கலாம் மற்றும் பதிவாளரின் ஆணையை உறுதிப்படுத்தும், திருத்தம்
அல்லது இரத்து செய்யும் ஆணை ஒன்றினை பதிவுத்துறைத் தலைவர் வழங்குதல்
வேண்டும்.
(2) 77-A-ஆம் பிரிவின் (2)-ஆம் உட்பிரிவின் கீழ் பதிவுத்துறைத் தலைவரால்
வழங்கப்பட்ட ஓர் ஆணையை பொறுத்த நேர்வில், ஆணையின் தேதியிலிருந்து முப்பது
நாட்களுக்குள் மேல்முறையீடானது மாநில அரசிடம் செய்யப்படுதல் வேண்டும் .
5. முதன்மைச் சட்டத்தின் 81 ஆம் பிரிவிற்கு பின்பு, பின்வரும் பிரிவுகளானது
81-A மற்றும் 81-B
உட்புகுத்தப்படுதல் வேண்டும், அதாவது:
எனும் புதிய
பிரிவுகளை
81-A. 22-A மற்றும் 22-B-ஆம் பிரிவுகளுக்கு முரணாக ஆவணங்களைப் 81-A. 22-A மற்றும் 22-B-ஆம் பிரிவுகளுக்கு முரணாக ஆவணங்களைப்
உட்புகுத்துதல்.
பதிவு செய்தலுக்கான தண்டத்தொகை.-பதிவு செய்தலுக்கான தண்டத்தொகை.- (1) இந்தச் சட்டத்தின்படி பணியமர்த்தப்பட்ட
ஒவ்வொரு பதிவு அலுவலரும் மற்றும் இந்தச்சட்டத்தின் நோக்கங்களுக்காக அவரின்
அலுவலகத்தில் பணியிலுள்ள இந்தச் சட்டத்தின் கீழ் பதிவிற்காக அளிக்கப்பட்ட
ஆவணங்களின் பதிவுக்கு பொறுப்புடையவரான ஒவ்வொரு நபரும் 22-A-ஆம் பிரிவு
அல்லது 22-B-ஆம் பிரிவிற்கு முரணாக ஆவணத்தை பதிவு செய்தால், மூன்று
ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்படலாகும் ஒரு கால அளவிற்கான சிறை தண்டனையுடன்
அல்லது தண்டத்தொகையுடன் அல்லது இவ்விரண்டும் விதித்து தண்டிக்கப்படுதல்
வேண்டும்.
(2) இந்தப் பிரிவில் அடங்கியுள்ள எதுவும் நல்லெண்ணத்தில் செய்யப்பட்ட
ஆவணப்பதிவின் நேர்வில் பொருந்தலாகாது.
விளக்கம்.விளக்கம்.இந்த உட்பிரிவின் நோக்கத்திற்காக, நல்லெண்ணம் என்ற மையச்சட்டம் சொற்றொடரானது உரிய கவனத்துடன், எச்சரிக்கையுடன் மற்றும் பொறுப்புணர்வுடன் XLV/1860.
அல்லது 1860 ஆம் ஆண்டு இந்திய தண்டனைத் தொகுப்புச்சட்டத்தின் 79 ஆம் பிரிவின்
கீழான சட்டத்தின் படி தவறுதலாக அவர்தாம் சரியென நம்பி நல்லெண்ணத்தில் நபர்
ஒருவரால் செய்யப்பட்ட அல்லது செய்யப்பட்டதாக கருதப்பட்ட செயல் எதுவும் என்று
பொருள்படும்.
81-B. நிறுமங்களால் செய்யப்படும் குற்றங்கள்,81-B. நிறுமங்களால் செய்யப்படும் குற்றங்கள், (1) இந்தச்சட்டத்தின்
படியான குற்றம் ஒரு நிறுமத்தினால் செய்யப்பட்டிருக்கிறவிடத்து, அந்த குற்றம்
செய்யப்பட்ட நேரத்தில், அந்த நிறுமத்தின் அலுவலை நடத்தி வருவதற்கான அந்த
நிறுமத்தின் பொறுப்புடைய மற்றும் அதற்கு பொறுப்பாயிருந்த நபர் ஒவ்வொருவரும்,
அதோடு அந்த நிறுமமும் அந்தக் குற்றத்தினை செய்ததாக கருதப்படுதல் வேண்டும்
மற்றும் அதற்கிணங்க அவருக்கெதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டு தண்டனைக்கு
உள்ளாக்கப்படுதல் வேண்டும்:
வரம்புரையாக அந்தக் குற்றம் தமக்கு அறியாமல் செய்யப்பட்டதாக அல்லது
அத்தகைய குற்றம் செய்யப்படாமல் தடுக்க தாம் உரிய முயற்சி அனைத்தையும்
மேற்கொண்டதாக அத்தகைய நபர் எவரும் மெய்ப்பிப்பாரானால் இந்த உட்பிரிவில்
அடங்கியுள்ள எதுவும் அவரை தண்டனை எதற்கும் உள்ளாக்காது.
(2) (1)-ஆம் உட்பிரிவில் என்ன அடங்கியிருந்த போதிலும், இந்தச்
சட்டத்தின்படி குற்றம் எதுவும் ஒரு நிறுமத்தினால் செய்யப்பட்டிருந்து அந்நிறுமத்தின்
இயக்குநர், மேலாளர், செயலாளர் அல்லது பிற அலுவலர் எவரின் இசைவுடனோ
மறைமுக ஆதரவுடனோ அந்தக் குற்றம் செய்யப்பட்டிருக்கிறது அல்லது அவர்பாலுள்ள
கவனக்குறைவு எதற்கும் சாட்டத்தக்கதாக இருக்கிறது என்று மெய்ப்பிக்கப்படுகிறவிடத்து
அந்த இயக்குநர், மேலாளர், செயலாளர் அல்லது பிற அலுவலர் அந்தக் குற்றத்தை
செய்திருப்பதாக கருதப்பட வேண்டும் மற்றும் அதற்கிணங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு
தண்டனைக்கு உள்ளாக்கப்படுதல் வேண்டும்.
7விளக்கம். விளக்கம். இந்தப்பிரிவின் நோக்கங்களுக்காக,
(அ) நிறுமம் என்பது கூட்டுறுமம் எதுவும் என்று பொருள்படும் மற்றும் ஒரு
நிறுவகம் அல்லது பிற தனிநபர்களின் கழகத்தை உள்ளடக்கும், மற்றும்
(ஆ) இயக்குநர் என்பது ஒரு நிறுவகத்தை பொறுத்தவரையில் அந்த
நிறுவகத்தில் உள்ள ஒரு கூட்டாளி என்று பொருள்படும்..
(ஆளுநரின் ஆணைப்படி)
ச. கோபி ரவிகுமார்ச. கோபி ரவிகுமார்,
அரசுச் செயலாளர் (சட்டமியற்றல்),
சட்டத் துறை.
(தமிழாக்கம்)
வெ. அரசகுமார்வெ. அரசகுமார், உதவி இயக்குநர்,
சட்ட (தமிழ்ப்பிரிவு)த் துறை.
தமிழ்நாடு அரசுக்காக சென்னை எழுதுபொருள் மற்றும் அச்சுத் துறை ஆணையரால் அச்சிடப்பட்டு வெளியிடப்பட்டது.