[Regd. No. TN/CCN/467/2012-14.
[R. Dis. No. 197/2009.
© தமிழ்நாடு அரசு 2022
[விலை : ரூ. 0.80 காசு.
| தமிழ்நாடு அரசிதழ் ஆணையின்படி வெளியிடப்பட்டது. | ||
எண் 46] சென்னை, புதன்கிழமை, நவம்பர் 16, 2022 ஐப்பசி 30, சுபகிருது, திருவள்ளுவர் ஆண்டு–2053
பகுதி VI—பிரிவு 1 இன் இணைப்பு
துறைத் தலைவர்களுடைய அறிவிப்புகள்
ன் படி சிதம்பரம் மாவட்டப் பதிவாளர் அலுவலகத்தில் செயல்படாத
1975ம் ஆண்டு தமிழ்நாடு சங்கப் பதிவுச் சட்டம் பிரிவு 44(4)-ன் படி சிதம்பரம் மாவட்டப் பதிவாளர் அலுவலகத்தில் செயல்படாத
1975ம் ஆண்டு தமிழ்நாடு சங்கப் பதிவுச் சட்டம் பிரிவு 44(4)
சங்கங்களை சங்கப் பதிவேட்டிலிருந்து நீக்கம் செய்தது பற்றிய அறிவிக்கை
சங்கங்களை சங்கப் பதிவேட்டிலிருந்து நீக்கம் செய்தது பற்றிய அறிவிக்கை
(ந.க. எண். 1789/அ3/2021.)
கீழே குறிப்பிட்டுள்ள சங்கமானது, தமிழ்நாடு சங்கப் பதிவுச் சட்டம் பிரிவு 16(3) (பி)ன் படி கோர்வை செய்ய வேண்டிய அறிக்கைகளைக் கடந்த 3 (மூன்று) நிதி ஆண்டுகளுக்கு மேல் கோர்வை செய்யாமல் இருப்பதைத் தமிழ்நாடு அரசிதழ் எண். 9 நாள் 21.08. ஏற்கனவே பிரசுரிக்கப்பட்டுள்ளதை தொடர்ந்து, 1975ஆம் ஆண்டு தமிழ்நாடு சங்கப் பதிவுச் சட்டம் பிரிவு 44(4)ன்படி செயல்படாத சங்கங்களாக கருத வேண்டியுள்ளதால், தமிழ்நாடு அரசிதழில் இவ்வறிவிப்பு வெளியிடப்பட்ட 3 (மூன்று) மாதங்களுக்குள் மேற்க்கண்ட அறிக்கைகளைக் கோர்வை செய்யாமைக்கு தகுந்த காரணம் அளிக்கப்படவில்லையெனில், சங்கப் பதிவேட்டிலிருந்து பதிவு நீக்கம் செய்யப்படும் என அறிவிப்பு பிரசுரமானது. அதனைத் தொடர்ந்து ஐந்து மாதங்களுக்கு மேலாகியும் இது குறித்து முகாந்திரம் மற்றும் எவ்வித மறுப்பும் வரப்பெறாமையால் கீழ்க்கண்ட சங்கங்கள் செயல்படவில்லை என தீர்மானித்து தமிழ்நாடு சங்கப் பதிவுச்சட்டம் பிரிவு 44(4)ன்படி சங்கப் பதிவேட்டிலிருந்தும் நீக்கம் செய்யப்படுகிறது.
| வ . எண். | சங்கத்தின் பதிவு எண். மற்றும் வருடம் | சங்கத்தின் பெயர் மற்றும் முகவரி |
| ( 1 ) | ( 2 ) | ( 3 ) |
| 1 | 45/2020 | சேத்தியாத் தோப்பு டாக்டர் எம்.ஜி.ஆர் ரெக்ரியேஷன் கிளப், நெ. 6/1, மேல்நிலைப்பள்ளி சாலை, சேத்தியாத்தோப்பு, புவனகிரி வட்டம்-608 792. |
சிதம்பரம், ச. மகாலட்சுமி, 2022 செப்டம்பர் 20.
சங்கங்களின் பதிவாளர் மற்றும், மாவட்டப் பதிவாளர் (நிர்வாகம்).
தமிழ்நாடு அரசுக்காக சென்னை எழுதுபொருள் மற்றும் அச்சுத் துறை ஆணையரால் அச்சிடப்பட்டு வெளியிடப்பட்டது.
DTP—VI-I-T-Sup,(46)—1