©
GOVERNMENT OF TAMIL NADU 2022
[Regd. No. TN/CCN/467/2012-14.
[R. Dis. No. 197/2009.
[Price: Rs. 1.60 Paise.
| TAMIL NADU GOVERNMENT GAZETTE PUBLISHED BY AUTHORITY | ||
No. 47] CHENNAI, WEDNESDAY, NOVEMBER 23, 2022 Karthigai 7, Subakiruthu, Thiruvalluvar Aandu–2053
Part II—Section 1
Notifications or Orders of specific character or of particular interest to the public
issued by Secretariat Departments.
NOTIFICATIONS BY GOVERNMENT
CONTENTS Pages.
வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறைவருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை
[வருவாய் நிருவாகம் - ஆட்சி எல்லை - விருதுநகர் மாவட்டம் - சிவகாசி, சாத்தூர் மற்றும் அருப்புக்கோட்டை வருவாய் கோட்டங்களில் உள்ள இராஜபாளையம் மற்றும் விருதுநகர் வருவாய் வட்டங்களைச் சீரமைத்து - ஆணை வெளியிடப்படுகிறது.] 86-87
[85]
DTP—II-1—4786 TAMIL NADU GOVERNMENT GAZETTE [Part II—Sec. 1
NOTIFICATIONS BY GOVERNMENT
வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறைவருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை
No. II(1)/REVDM/41/2022
[வருவாய் நிருவாகம் - ஆட்சி எல்லை - விருதுநகர் மாவட்டம் - சிவகாசி, சாத்தூர் மற்றும் அருப்புக்கோட்டை வருவாய் கோட்டங்களில் உள்ள இராஜபாளையம் மற்றும் விருதுநகர் வருவாய் வட்டங்களைச் சீரமைத்து - ஆணை வெளியிடப்படுகிறது.] கீழ்க்கண்ட அரசாணை வெளியிடப்படுகிறது.
[அரசாணை (நிலை) எண். 526, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை, வருவாய் நிருவாக அலகு, (வ.நி.) 1(1) பிரிவு, 3 நவம்பர் 2022, ஐப்பசி 17, சுபகிருது, திருவள்ளுவர் ஆண்டு-2053.] படிக்கவும் :-படிக்கவும் :-
1. அரசாணை (நிலை) எண். 279, வருவாய்த் துறை நாள் 09.06.2003.
2. முதன்மைச் செயலாளர்/வருவாய் நிருவாக ஆணையர் கடித எண். பணி 3(4)/12949/2022, நாள் 08.04.2022 எண். 526, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை, வருவாய் நிருவாக அலகு, (வ.நி.) 1(1) பிரிவு,(வ.நி.) 1(1) பிரிவு, ஆணை : ஆணை : எண். 526, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை, வருவாய் நிருவாக அலகு, 3 நவம்பர் 2022.
மேலே பார்வை இரண்டில் படிக்கப்பட்ட கடிதத்தில், முதன்மைச் செயலாளர்/வருவாய் நிருவாக ஆணையர் தனதறிக்கையில் விருதுநகர் மாவட்ட ஆட்சியர் கீழ்க்கண்டவாறு தெரிவித்துள்ளதாக அறிக்கை சமர்ப்பித்துள்ளார் :
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள வருவாய் கோட்டங்கள் தற்போது உள்ளபடி : விருதுநகர் மாவட்டத்தில் உள்ள வருவாய் கோட்டங்கள் தற்போது உள்ளபடி :
| மாவட்டம் | கோட்டம் | வட்டம் |
| விருதுநகர் மாவட்டம் | சிவகாசி | 1. சிவகாசி 2. திருவில்லிபுத்தூர் 3. வத்ராயிருப்பு |
| சாத்தூர் | 1. சாத்தூர் 2. வெம்பக்கோட்டை 3. இராஜபாளையம் | |
| அருப்புக்கோட்டை | 1. அருப்புக்கோட்டை 2. காரியாப்பட்டி 3. விருதுநகர் 4. திருச்சுழி |
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள வருவாய் கோட்டங்கள் சீரமைப்பிற்கு பின் : விருதுநகர் மாவட்டத்தில் உள்ள வருவாய் கோட்டங்கள் சீரமைப்பிற்கு பின் :
| மாவட்டம் | கோட்டம் | வட்டம் |
| விருதுநகர் மாவட்டம் | சிவகாசி | 1. சிவகாசி 2. இராஜபாளையம் 3. திருவில்லிபுத்தூர் 4. வத்ராயிருப்பு |
| சாத்தூர் | 1. சாத்தூர் 2. வெம்பக்கோட்டை 3. விருதுநகர் | |
| அருப்புக்கோட்டை | 1. அருப்புக்கோட்டை 2. காரியாப்பட்டி 3. திருச்சுழி |
2. 2. இந்நேர்வு தொடர்பாக, விருதுநகர் மாவட்ட ஆட்சியரது அறிக்கையின்படி புதிய கோட்டம் உருவாக்க அளவு கோலாக உள்ள வட்டங்களின் பரப்பளவு, மக்கள்தொகை மற்றும் வருவாய் கிராமங்கள் அனைத்தும் அரசாணை (நிலை) எண். 279, வருவாய்த்துறை, நாள் 09.06.2003-இல் உள்ள விதிகளின்படி அமைந்திருப்பதால் அருப்புக்கோட்டை, திருச்சுழி, காரியாப்பட்டி ஆகிய மூன்று ்வட்டங்களை ஒன்றிணைத்து அருப்புக்கோட்டை கோட்டமாகவும், விருதுநகர், சாத்தூர் வெம்பக்கோட்டை ஆகிய மூன்று ்வட்டங்களை ஒன்றிணைத்து சாத்தூர் கோட்டமாகவும் மற்றும் சிவகாசி, இராஜபாளையம், திருவில்லிபுத்தூர், வத்திராயிருப்பு ஆகிய நான்கு வட்டங்களை ஒன்றிணைத்து சிவகாசி கோட்டமாகமாவும் மறுசீரமைத்தல் தொடர்பான சாத்தியகூறுகள் உள்ளதாக தெரிவித்துள்ளார்.
3. தற்போது சாத்தூர் வட்டத்திலிருந்து இராஜபாளையம் வட்டம் சுமார் 50 கி.மீ. தூரம் கொண்டதாக உள்ளது. கோட்டம் சீரமைப்பிற்கு பின் 17 கி.மீ. தூரம் குறைந்து 33 கி.மீ. கொண்டதாக சிவகாசி கோட்டத்திற்கு அருகில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இராஜபாளையத்தை சிவகாசி கோட்டத்திற்கு மாற்றும் பட்சத்தில் சாத்தூர் கோட்டத்திற்கு சாத்தூர் மற்றும் வெம்பக்கோட்டை என்ற 2 வட்டங்கள் மட்டுமே உள்ளதால் அருப்புக்கோட்டை கோட்டத்தில் உள்ள 4 வட்டங்களில் சாத்தூர் கோட்டத்திற்கு மிக அருகாமையில் உள்ள விருதுநகர் வட்டத்தை சாத்தூர் கோட்டத்துடன் கீழ்க்கண்டவாறு இணைத்திடலாம் என முதன்மைச் செயலாளர்/ வருவாய் நிருவாக ஆணையர் பரிந்துரை செய்துள்ளார்.
| மாவட்டம் | கோட்டம் | வட்டம் |
| விருதுநகர் மாவட்டம் | சிவகாசி | 1. சிவகாசி 2. இராஜபாளையம் 3. திருவில்லிபுத்தூர் 4. வத்ராயிருப்பு |
| சாத்தூர் | 1. சாத்தூர் 2. வெம்பக்கோட்டை 3. விருதுநகர் | |
| அருப்புக்கோட்டை | 1. அருப்புக்கோட்டை 2. காரியாப்பட்டி 3. திருச்சுழி |
4. முதன்மைச் செயலாளர்/வருவாய் நிருவாக ஆணையரின் கருத்துருவினை அரசு நன்கு கவனமுடன் ஆய்வு செய்து, மேற்படி இராஜபாளையத்தை சிவகாசி கோட்டத்திற்கு மாற்றும் பட்சத்தில் சாத்தூர் கோட்டத்திற்கு சாத்தூர் மற்றும் வெம்பக்கோட்டை என்ற 2 வட்டங்கள் மட்டுமே உள்ளதால் அருப்புக்கோட்டை கோட்டத்தில் உள்ள 4 வட்டங்களில் சாத்தூர் கோட்டத்திற்கு மிக அருகாமையில் உள்ள விருதுநகர் வட்டத்தை சாத்தூர் கோட்டத்துடன் கீழ்க்கண்டவாறு இணைக்க அரசு ஆணையிடுகிறது:-
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள வருவாய் கோட்டங்கள் சீரமைப்பிற்கு பின் : விருதுநகர் மாவட்டத்தில் உள்ள வருவாய் கோட்டங்கள் சீரமைப்பிற்கு பின் :
| மாவட்டம் | கோட்டம் | வட்டம் |
| விருதுநகர் மாவட்டம் | சிவகாசி | 1. சிவகாசி 2. இராஜபாளையம் 3. திருவில்லிபுத்தூர் 4. வத்ராயிருப்பு |
| சாத்தூர் | 1. சாத்தூர் 2. வெம்பக்கோட்டை 3. விருதுநகர் | |
| அருப்புக்கோட்டை | 1. அருப்புக்கோட்டை 2. காரியாப்பட்டி 3. திருச்சுழி |
(ஆளுநரின் ஆணைப்படி)
குமார் ஜயந்த்,குமார் ஜயந்த்,
அரசு முதன்மைச் செயலாளர்.
PRINTED AND PUBLISHED BY THE COMMISSIONER OF STATIONERY AND PRINTING, CHENNAI ON BEHALF OF THE GOVERNMENT OF TAMIL NADU