Servants of Knowledge
Tamil Nadu Gazette · Government of Tamil Nadu

Notifications or Orders of interest to a section of the public issued by Secretariat Departments.

Published 30 November 2022

Type
Ordinary
Gazette no.
48
Part
Part II
Notifications
ENVIRONMENT, CLIMATE CHANGE AND FOREST DEPARTMENT - Notification
Section
Section 2-T-Sup
Identifier
in.gazette.tamilnadu.2022-11-30.Ordinary_48_Part-II_Section-2-T-Sup
Languages
English, Tamil
Published at
Original source ↗
[R. Dis. No. 197/2009. © [Regd. No. TN/CCN/467/2012-14. தமிழ்நாடு அரசு 2022 [விலை: ரூ. 0.80 காசு[விலை: ரூ. 0.80 காசு
தமிழ்நாடு அரசிதழ் ஆணையின்படி வெளியிடப்பட்டது.

எண் 48] சென்னை, புதன்கிழமை, நவம்பர் 30, 2022 கார்த்திகை 14, சுபகிருது, திருவள்ளுவர் ஆண்டு–2053

பகுதி II—பிரிவு 2 இன் இணைப்பு

அரசாங்க அறிவிப்புகளின் தமிழ் மொழிபெயர்ப்புகள்

சுற்றுச் சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத் துறைதுறை சுற்றுச் சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத்

அறிவிக்கைஅறிவிக்கை

[அரசாணை (நிலை) எண். 154, சுற்றுச் சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வன (வனம்-5)த் துறை, நாள் 12, செப்டம்பர் 2022.]

வன உயிரினங்கள் மற்றும் அவற்றின் சுற்றுச் சூழலைப் பாதுகாத்தல், பரப்புதல் மற்றும் மேம்படுத்துதல் ஆகியவற்றின் நோக்கத்திற்காக, கீழ்க்காணும் விவர அட்டவணையில் வரையறுக்கப்பட்டுள்ள திருப்பூர் மாவட்டத்தில் உள்ள திருப்பூர் வடக்கு மற்றும் ஊத்துக்குளி வட்டத்தின் நெருப்பரிச்சல் மற்றும் சர்கார் பெரியபாளையம் கிராமங்களில் அமைந்துள்ள நஞ்சராயன் குளம் (சர்கார் பெரியபாளையம்), போதிய சுற்றுச் சூழல் விலங்கினங்கள், தாவர இனங்கள், இயற்கை மற்றும் புவியியல் முக்கியத்துவம் வாய்ந்தது என தமிழ்நாடு அரசு கருதுவதால்.

தற்போது 1972ஆம் ஆண்டு வன உயிரினங்கள் (பாதுகாப்பு) சட்டத்தின் (மத்தியச் சட்டம் 53/1972) 18 ஆம் பிரிவைச் சேர்ந்த (1) உட்பிரிவில் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களைக் கொண்டு தமிழ்நாட்டு ஆளுநர் அவர்கள் மேற்சொன்ன பகுதியை நஞ்சராயன் குளம் பறவைகள் சரணாலயமாக அமைப்பதற்கான அவரது நோக்கத்தை இதனால் அறிவிக்கிறார்.

விவர அட்டவணை

1. மாவட்டத்தின் பெயர் : திருப்பூர்
2. வட்டத்தின் பெயர் : ஊத்துக்குளி மற்றும் திருப்பூர் வடக்கு.
3. கிராமங்களின் பெயர் மற்றும் பரப்பளவுடன் கூடிய நில அளவை எண் : கிராம எண்கள் நில அளவை எண்கள் பரப்பளவு (எக்டேரில்)
37 சர்க்கார் பெரியபாளையம் 1 106.54.5
3 நெருப்பெரிச்சல் 443 19.32.0
மொத்தம் 125.86.5

நாற்புற எல்லைகள்

வடக்கு: இந்த எல்லையானது திருப்பூர் - வடக்கு வட்டத்தின் கிராமம் எண். 7 மண்ணரை மற்றும் கிராமம் எண். 3 நெருப்பெரிச்சல் மற்றும் ஊத்துக்குளி வட்டத்தின் கிராமம் எண் 37 சர்க்கார் பெரியபாளையம் ஆகியவை சந்திக்கும்முச்சந்திப்பில் தொடங்கி கிராம எண் 3, நெருப்பெரிச்சல் கிராமத்தின் நில அளவை புல எண்கள் 458, 457, 456, 448 மற்றும் 447 ஆகியவற்றின் தெற்குப் பக்க வழியாக கிழக்கு நோக்கியும் பின்னர் கிராம எண் 3 நெருப்பெரிச்சல் கிராமத்தின் நில அளவை புல எண்கள் 445, 444, 451 மற்றும் 462 ஆகியவற்றின் கிழக்குப் பக்க வழியாக வடக்கு நோக்கியும், பின்னர் கிராம எண் 3, நெருப்பெரிச்சல் கிராமத்தின் நில அளவை புல எண்கள் 442, 441 மற்றும் 440 ஆகியவற்றின் தெற்கு பக்க வழியாக கிழக்கு நோக்கியும் கிராம எண் 3, நெருப்பெரிச்சல் கிராமத்தின் நில அளவை புல எண்கள் 437,436 மற்றும் 433 ஆகியவற்றின் மேற்குப் பக்க வழியாக தெற்கு நோக்கிச் செல்கிறது. [ 1 ] DTP-II-2-(48) (T Sup)—1 2 கிழக்கு: இந்த எல்லையானது, பொதுவாக கிராம எண் 37, சர்க்கார் பெரியபாளையத்தின் நில அளவை புல எண்கள் 123,122,121 மற்றும் 39 ஆகியவற்றின் மேற்குப் பக்க வழியாக தெற்கு நோக்கிச் செல்கிறது.

தெற்கு: இந்த எல்லையானது, கிராம எண் 37, சர்க்கார் பெரியபாளையத்தின் நில அளவை புல எண்கள் 38, 36, 35, 31, 30, 21, 20, 19, 18, 17 மற்றும் 16 ஆகியவற்றின் வடக்குப் பக்கமாக மேற்கு நோக்கிச் செல்கிறது.

மேற்கு: பின்னர் இந்த எல்லையானது, பொதுவாக, கிராம எண் 37, சர்க்கார் பெரியபாளையத்தின் நில அளவை புல எண்கள் 9, 5, 4, 3 மற்றும் 2 மற்றும் கிராம எண் 7, மண்ணரை கிராம எல்லையின் நில அளவை புல எண்கள் 2, 1 மற்றும் 13 ஆகியவற்றின் கிழக்குப் பக்க வழியாக வடக்கு நோக்கிச் சென்று ஆரம்ப எல்லையை அடைகிறது.

சர்க்கார் பெரியபாளையம் குளம் (நஞ்சராயன் குளம்) 11 8' 5 வடக்கு மற்றும் 77 22' 59 கிழக்கு பகுதியில் அமைந்துள்ள ஒரு பெரிய அளவிலான ஈரநிலமாகும். இது தமிழ்நாட்டின் திருப்பூர் மாவட்டத்தின் ஊத்துக்குளி பகுதியின் வடகிழக்குப் பகுதியிலும், திருப்பூர் வடக்கு வட்டங்களிலும் அமைந்துள்ளது.

சுப்ரியா சாகுசுப்ரியா சாகு,

அரசு கூடுதல் தலைமைச் செயலாளர்.

(தமிழாக்கம்)

ந. அருள்,ந. அருள், இயக்குநர் (மு.கூ.பொ), தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தி (மொழிபெயர்ப்பு)த் துறை.

தமிழ்நாடு அரசுக்காக சென்னை எழுதுபொருள் மற்றும் அச்சுத் துறை ஆணையரால் அச்சிடப்பட்டு வெளியிடப்பட்டது.
Cite this issue. Tamil Nadu Gazette, Government of Tamil Nadu, 30 November 2022. Indian Gazettes, https://egazette.servantsofknowledge.in/details/in.gazette.tamilnadu.2022-11-30.Ordinary_48_Part-II_Section-2-T-Sup/. Archive identifier in.gazette.tamilnadu.2022-11-30.Ordinary_48_Part-II_Section-2-T-Sup.