© [Regd. No. TN/CCN/467/2012-14. தமிழ்நாடு அரசு [R. Dis. No. 197/2009. 2023 [விலை : ரூ. 0.80 காசுவிலை : ரூ. 0.80 காசு
| தமிழ்நாடு அரசிதழ் ஆணையின்படி வெளியிடப்பட்டது. | ||
எண் 1] சென்னை, புதன்கிழமை, ஜனவரி 4, 2023 மார்கழி 20, சுபகிருது, திருவள்ளுவர் ஆண்டு-2053
பகுதி IV—பிரிவு 2 இன் இணைப்பு
தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையின் பின்வரும் சட்டமானது 2022 ஆம் ஆண்டு
நவம்பர் திங்கள் 30 ஆம் நாளன்று ஆளுநரின் ஏற்பிசைவைப் பெற்றது,
அது பொதுத் தகவலுக்காக இதன் மூலம் வெளியிடப்படுகிறது:-
சட்ட எண். 43/2022.
1920 ஆம் ஆண்டு தமிழ்நாடு மாவட்ட நகராட்சிகள்
சட்டத்தை மேலும் திருத்தம் செய்வதற்கானதொரு சட்டம்.
இந்தியக் குடியரசின் எழுபத்தி மூன்றாம் ஆண்டில் தமிழ்நாடு மாநிலச்
சட்டமன்றப் பேரவையினால் பின்வருமாறு சட்டமியற்றப்படுவதாகுக:-
குறுந்தலைப்பு மற்றும் 1. (1) இந்தச் சட்டம், 2022 ஆம் ஆண்டு தமிழ்நாடு மாவட்ட நகராட்சிகள்
தொடக்கம்.
(திருத்தச்) சட்டம் என வழங்கப்பெறும்.
(2) இது, 2022 ஆம் ஆண்டு ஜூன் திங்கள் 30 ஆம் நாளன்று
நடைமுறைக்கு வந்துவிட்டதாகக் கொள்ளப்படுதல் வேண்டும்.
3UU எனும் புதிய தமிழ்நாடு சட்டம் V/1920. 2. 1920 ஆம் ஆண்டு தமிழ்நாடு மாவட்ட நகராட்சிகள் சட்டத்தின் 3-U
பிரிவினை ஆம் பிரிவிற்குப் பின்பு, பின்வரும் பிரிவானது உட்புகுத்தப்படுதல் வேண்டும்,
உட்புகுத்தல்.
அதாவது:-
3UU. குறித்த சில நேர்வுகளில் பேரூராட்சிக்கு தனி அலுவலரை நியமனம் செய்தல். இந்தச் சட்டம் அல்லது தற்போதைக்கு நடைமுறையிலுள்ள பிற சட்டம் எதிலும் அடங்கியிருப்பது
எவ்வாறிருப்பினும், தேர்தல் செயல்முறைக்கு வழிமுறை செய்த பின்பும், 2022
ஆம் ஆண்டு ஜூலை திங்கள் 1 ஆம் தேதியன்று அமைத்துருவாக்க இயலாத
தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள கடம்பூர் பேரூராட்சியினை பொறுத்த வரையில்,
மாநில அரசானது, அறிவிக்கையின் வாயிலாக, பேரூராட்சிக்கான சாதாரண
தேர்தலுக்குப் பின்னர் நடைபெறும் முதல் மன்றக் கூட்டம் நடைபெறும் நாள்
வரை, அல்லது 2022 ஆம் ஆண்டு டிசம்பர் திங்கள் 31 ஆம் நாள் வரை, இதில்
எது முந்தையதோ அது வரை, கூறப்பட்ட பேரூராட்சியின் அதிகாரங்களைச் 2 நீக்கறவு மற்றும்
தமிழ்நாடு ்அவசரச் 3. (1) 2022 ஆம் ஆண்டு தமிழ்நாடு மாவட்ட நகராட்சிகள் (திருத்த)
காப்புரை.
சட்டம் 2/2022.
அவசரச் சட்டமானது இதன்மூலம் நீக்கறவு செய்யப்படுகிறது.
(2) அத்தகைய நீக்கறவு இருந்த போதிலும், கூறப்பட்ட அவசரச்
சட்டத்தினால் திருத்தம் செய்யப்பட்டவாறான, 1920 ஆம் ஆண்டு தமிழ்நாடு
மாவட்ட நகராட்சிகள் சட்டத்தின்படி செய்யப்பட்ட எதுவும் அல்லது எடுக்கப்பட்ட
நடவடிக்கை எதுவும், இந்தச் சட்டத்தினால் திருத்தம் செய்யப்பட்டவாறான
கூறப்பட்ட சட்டத்தின்படி செய்யப்பட்டிருப்பதாக அல்லது எடுக்கப்பட்டிருப்பதாக
கொள்ளப்பட வேண்டும்.
(ஆளுநரின் ஆணைப்படி)
ச. கோச. கோபி ரவிகுமார்பி ரவிகுமார்,
அரசுச் செயலாளர் (சட்டமியற்றல்),
சட்டத் துறை.
(தமிழாக்கம்)
வெ. அரசகுமார்வெ. அரசகுமார்,
உதவி இயக்குநர்,
சட்ட (தமிழ்ப்பிரிவு)த் துறை.