©
GOVERNMENT OF TAMIL NADU 2023
[Regd. No. TN/CCN/467/2012-14.
[R. Dis. No. 197/2009.
[Price: Rs. 6.40 Paise.
| தமிழ்நாடு அரசிதழ் சிறப்பு வெளியீடு ஆணையின்படி வெளியிடப்பட்டது. | ||
No. 17A] சென்னை, வியாழக்கிழமை, ஜனவரி 12, 2023 மார்கழி 28, சுபகிருது, திருவள்ளுவர் ஆண்டு-2053
பகுதி IV—பிரிவு 1
தமிழ்நாடு சட்டமுன்வடிவுகள்தமிழ்நாடு சட்டமுன்வடிவுகள்
பொருளடக்கம்பொருளடக்கம்
பக்கங்கள் சட்டமுன்வடிவுகள்:சட்டமுன்வடிவுகள்:
எண். 1/2023-தமிழ்நாடு வேளாண் விளைபொருளைச் சந்தைப்படுத்துதல் (முறைப்படுத்துதல்)
திருத்தச் சட்டம் .. .. .. .. .. .. .. 2-4 எண். 2/2023-தமிழ்நாடு நீக்கறவு செய்தல் சட்டம் .. .. .. .. .. 5-14 எண். 3/2023-தமிழ்நாடு கட்டடம் மற்றும் கட்டுமானத் தொழிலாளர்கள் (வேலைவாய்ப்பு
நிபந்தனைகள் மற்றும் பல்வகை முறைகள்) நீக்கறவுச் சட்டம் .. .. 15-16 DTP—Ex-IV-1-T(17A)
[1]2 தமிழ்நாடு அரசிதழ் சிறப்பு வெளியீடு 2023ஆம் ஆண்டு ஜனவரி திங்கள் 12ஆம் நாளன்று தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் அறிமுகப்படுத்தப்பட்ட பின்வரும் சட்டமுன்வடிவு, நோக்கக் காரண விளக்கவுரையுடன் சேர்த்து, தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை விதிகளின் 130ஆம் விதியின் கீழ் பொதுத் தகவலுக்காக வெளியிடப்படுகின்றது.
சட்டமன்றப் பேரவை சட்டமுன்வடிவு எண். 1/20232023 சட்டமன்றப் பேரவை சட்டமுன்வடிவு எண். 1
1987ஆம் ஆண்டு தமிழ்நாடு வேளாண் விளைபொருளைச் சந்தைப்படுத்துதல் 1987ஆம் ஆண்டு தமிழ்நாடு வேளாண் விளைபொருளைச் சந்தைப்படுத்துதல் (முறைப்படுத்துதல்) சட்டத்தை மேலும் திருத்தம் செய்வதற்கானதொரு சட்ட (முறைப்படுத்துதல்) சட்டத்தை மேலும் திருத்தம் செய்வதற்கானதொரு சட்ட முன்வடிவு.முன்வடிவு.
இந்தியக் குடியரசின் எழுபத்தி மூன்றாம் ஆண்டில் தமிழ்நாடு மாநிலச்
சட்டமன்றப் பேரவையினால் பின்வருமாறு சட்டமியற்றப்படுவதாகுக:-
குறுந்தலைப்பு மற்றும்
தொடக்கம்.
1. (1) இந்தச் சட்டம், 2023ஆம் ஆண்டு தமிழ்நாடு வேளாண் விளைபொருளைச் சந்தைப்படுத்துதல் (முறைப்படுத்துதல்) திருத்தச் சட்டம் என வழங்கப்பெறும்.
(2) இது, 2022ஆம் ஆண்டு நவம்பர் திங்கள் 30ஆம் நாளன்று
நடைமுறைக்கு வந்துவிட்டதாகக் கொள்ளப்படுதல் வேண்டும்.
33ஆம் பிரிவிற்கான
தமிழ்நாடு சட்டம் திருத்தம்.
27/1989.
2. (இதன்பின்பு இதில் முதன்மைச் சட்டம் என குறிப்பிடப்படுவதான) 1987ஆம் ஆண்டு தமிழ்நாடு வேளாண் விளைபொருளைச் சந்தைப்படுத்துதல் (முறைப்படுத்துதல்) சட்டத்தின் 33ஆம் பிரிவில், (1)-ஆம் உட்பிரிவில் உள்ள வகைமுறையில், பதினொரு ஆண்டுகள் மற்றும் ஆறு மாதங்கள்" எனும் சொற்றொடருக்காக, பன்னிரண்டு ஆண்டுகள் மற்றும் ஆறு மாதங்கள்" எனும் சொற்றொடரானது மாற்றாக அமைக்கப்படுதல் வேண்டும்.
நீக்கறவு மற்றும்
தமிழ்நாடு அவசரச் காப்புரை.
சட்டம் 5/2022.
3. (1) 2022ஆம் ஆண்டு தமிழ்நாடு வேளாண் விளை பொருளைச் சந்தைப்படுத்துதல் (முறைப்படுத்துதல்) இரண்டாம் திருத்த அவசரச் சட்டமானது ஈங்கிதனால் நீக்கறவு செய்யப்படுகிறது.
(2) அத்தகைய நீக்கறவு எவ்வாறிருப்பினும், கூறப்பட்ட அவசரச் சட்டத்தால் திருத்தப்பட்டவாறான முதன்மைச் சட்டத்தின்படி செய்யப்பட்ட செயல் எதுவும் அல்லது எடுக்கப்பட்ட நடவடிக்கை எதுவும் இந்தச் சட்டத்தினால் திருத்தப்பட்டவாறான, முதன்மைச் சட்டத்தின்படி செய்யப்பட்டதாக அல்லது எடுக்கப்பட்டதாக கொள்ளப்படுதல் வேண்டும்.
செல்லுந்தன்மை.
4. முதன்மைச் சட்டத்தில் அடங்கியுள்ள எது எவ்வாறிருப்பினும், 2022 நவம்பர் 30ஆம் தேதியிலிருந்தும் மற்றும் அது முதற்கொண்டும் சந்தைக் குழுக்களின் ஒரு தனி அலுவலரின் அதிகாரங்களை செலுத்தும் மற்றும் செயற்பணிகளை நிறைவேற்றும் நபர் ஒவ்வொருவரும், இந்தச் சட்டத்தால் திருத்தம் செய்யப்பட்டவாறான முதன்மைச் சட்டத்தின் 33ஆம் பிரிவின் (1)ஆம் உட்பிரிவின்படி அத்தகைய தனி அலுவலர்களாக பணியமர்த்தப்பட்டுள்ளதாகக் கொள்ளப்படுதல் வேண்டும் மற்றும் 2022 நவம்பர் 30ஆம் நாள் தொடங்கியும், 2022 டிசம்பர் 15ஆம் நாள் முடிவடையும் காலஅளவு வரை கூறப்பட்ட தனி அலுவலர்களால் செய்யப்பட்ட செயல் எதுவும் அல்லது எடுக்கப்பட்ட நடவடிக்கை எதுவும், இந்தச் சட்டத்தால் திருத்தம் செய்யப்பட்டவாறான, முதன்மைச் சட்டத்தின்படி செல்லுந்தன்மையுடன் செய்யப்பட்டிருப்பதாக அல்லது எடுக்கப்பட்டிருப்பதாகக் கொள்ளப்படுதல் வேண்டும்.
தமிழ்நாடு அரசிதழ் சிறப்பு வெளியீடு 3நோக்கக் காரண விளக்கவுரைநோக்கக் காரண விளக்கவுரை
1987ஆம் ஆண்டு தமிழ்நாடு வேளாண் விளைப்பொருளைச் சந்தைப்படுத்துதல் (முறைப்படுத்துதல்) சட்டத்தின் (தமிழ்நாடு சட்டம் 27/1989) 33ஆம் பிரிவின் (1)ஆம் உட்பிரிவானது, ஒரு புதிய சந்தைக்குழு அமைக்கப்படுவது நிலுவையில் இருக்கும்போது, சந்தைக்குழு ஒன்றின் அலுவல்களை மேலாண்மை செய்வதற்கு மொத்தத்தில் மூன்று ஆண்டுகளுக்கு மேற்படாத ஒரு கால அளவிற்கு தனி அலுவலர் ஒருவரை பணியமர்த்தம் செய்ய அரசுக்கு அதிகாரம் அளிக்கிறது. கூறப்பட்ட வகைமுறையின் விளைவாக, மாநிலத்தில் சந்தைக் குழுக்களின் அலுவல்களை மேலாண்மை செய்வதற்கு பணியமர்த்தப்பட்ட தனி அலுவலர்களின் பதவிக்காலமானது, கூறப்பட்ட சட்டத்தின் 33ஆம் பிரிவின் (1)ஆம் உட்பிரிவின் வகைமுறையை அவ்வப்போது திருத்தம் செய்வதன் மூலம், கூறப்பட்ட மூன்று ஆண்டுகள் காலத்திற்கு அப்பாலும் நீட்டிக்கப்பட்டது. இறுதியாக, தமிழ்நாடு அவசரச் சட்டம் 5/2022-ன் மூலம் திருத்தம் செய்யப்பட்டவாறான கூறப்பட்ட வகைமுறையானது, தனி அலுவலர்களின் பதவிக் காலத்தினை மொத்தமாக பன்னிரண்டு ஆண்டுகள் மற்றும் ஆறு மாதங்கள் கால அளவு வரையிலும் நீட்டிப்பு செய்ய அரசுக்கு இயலச்செய்கிறது.
2. 26 சந்தைக் குழுக்களில், திருச்சிராப்பள்ளி மற்றும் கடலூர் சந்தைக் குழுக்களைத் தவிர 24 சந்தைக் குழுக்களுக்கு உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டனர். கூறப்பட்ட 24 சந்தைக் குழுக்களில், (தேனி சந்தைக் குழு நீங்கலாக) 23 சந்தைக் குழுக்களுக்கு தலைவர் மற்றும் துணைத்தலைவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர் மற்றும் கூறப்பட்ட 23 சந்தைக் குழுக்களில் அவர்கள் பொறுப்பேற்றுக்கொண்டனர்.
3. எனவே (திருச்சிராப்பள்ளி, கடலூர், தேனி சந்தைக் குழுக்கள் நீங்கலாக) 23 சந்தைக் குழுக்களின் தனி அலுவலர்களின் பதவிக்காலமானது 30.11.2020-லிருந்து, தொடர்புடைய சந்தைக் குழுக்களின் பொறுப்பினை உறுப்பினர்கள் ஏற்றுக்கொள்வதற்கு முந்தைய தேதி வரையிலும் நீட்டிக்கப்பட்டது. மேலும் திருச்சிராப்பள்ளி, கடலூர் மற்றும் தேனி சந்தைக் குழுக்களின் தனி அலுவலர்களின் பதவிக்காலமானது 30.11.2020-லிருந்து 29.11.2021 வரையில் நீட்டிக்கப்பட்டது.
4. இதற்கிடையே, 2021ஆம் ஆண்டு ஜூலை திங்கள் 23ஆம் நாளன்று கூறப்பட்ட 24 சந்தைக் குழுக்களுக்கு நியமிக்கப்பட்ட உறுப்பினர்கள் திரும்பப் பெறப்பட்டனர் மற்றும் திருச்சிராப்பள்ளி, கடலூர் மற்றும் தேனி சந்தைக் குழுக்கள் நீங்கலாக, மேற்கூறிய 23 சந்தைக் குழுக்களுக்கும், தனி அலுவலர்கள் ஓராண்டு கால அளவிற்கு அதாவது 23.07.2021 முதல் 22.07.2022 வரையிலும் பணியமர்த்தப்பட்டனர். மேலும் கூறப்பட்ட 23 சந்தைக் குழுக்களின் தனி அலுவலர்களின் பதவிக்காலமானது 23.07.2022 முதல் 22.07.2023 வரையிலும் நீட்டிப்பு செய்யப்பட்டது.
5. திருச்சிராப்பள்ளி, கடலூர் மற்றும் தேனி ஆகிய சந்தைக் குழுக்களின் தனி அலுவலர்களின் பதவிக்காலமானது 30.11.2021லிருந்து 29.11.2022 வரை நீட்டிப்பு செய்யப்பட்டது. திருச்சிராப்பள்ளி, கடலூர் மற்றும் தேனி ஆகிய சந்தைக் குழுக்களின் தனி அலுவலர்களின் நீட்டிக்கப்பட்ட பதவிக்காலமானது 29.11.2022 அன்றுடன் நிறைவடைந்துவிட்டது மற்றும் கூறப்பட்ட சந்தைக் குழுக்களுக்கு உறுப்பினர்களை நியமிப்பதற்கு மேலும் சிறிது காலம் தேவைப்படுகிறது மற்றும் கூறப்பட்ட மூன்று சந்தைக் குழுக்களின் தனி அலுவலர்களின் பதவிக்காலத்தை 29.11.2022-க்கு அப்பால் மேலும், ஓராண்டு காலத்திற்கு அல்லது கூறப்பட்ட சந்தைக் குழுக்களின் மறு அமைத்துருவாக்கம் செய்யப்படுகின்ற வரையில் இவற்றில் எது முந்தையதோ அதுவரையில் நீட்டிக்க வேண்டியது ஒரு கட்டாயத் தேவையாகிறது. எனவே, மேற்சொன்ன நோக்கத்திற்காக கூறப்பட்ட தமிழ்நாடு சட்டம் 27/1989-ஐ தக்கவாறு திருத்தம் செய்வதென அரசானது முடிவு செய்துள்ளது.
6. மேற்கண்ட முடிவிற்கு செயல்வடிவம் கொடுப்பதற்காக, 2022ஆம் ஆண்டு தமிழ்நாடு வேளாண் விளைபொருளைச் சந்தைப்படுத்துதல் (முறைப்படுத்துதல்) இரண்டாம் திருத்த அவசரச் சட்டமானது (தமிழ்நாடு அவசரச் சட்டம் 5/2022), 2022 டிசம்பர் திங்கள் 15ஆம் நாளன்று மாண்புமிகு ஆளுநரால் பிறப்பிக்கப்பட்டு, அது 2022 டிசம்பர் 15ஆம் தேதியிட்ட தமிழ்நாடு அரசு சிறப்பிதழில்தமிழ்நாடு அரசு சிறப்பிதழில் வெளியிடப்பட்டது. திருச்சிராப்பள்ளி, கடலூர் மற்றும் தேனி ஆகிய சந்தைக் குழுக்களின் தனி அலுவலர்கள் 2022 நவம்பர் 29க்குப் பின்னரும் மேற்கூறப்பட்ட அவசரச் சட்டம் பிறப்பிக்கப்பட்ட நாள் வரையிலும் தொடர்ந்த நடவடிக்கையானது செல்லுந்தன்மையுடையதாகுதல் வேண்டும்.
7. இந்தச் சட்டமுன்வடிவானது கூறப்பட்ட அவசரச் சட்டத்தை மாற்றி அமைக்க விழைகிறது.
எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், வேளாண்மை-உழவர் நலத்துறை அமைச்சர்.
4 தமிழ்நாடு அரசிதழ் சிறப்பு வெளியீடு2022ஆம் ஆண்டு தமிழ்நாடு வேளாண் விளைபொருளைச் சந்தைப்படுத்துதல் (முறைப்படுத்துதல்) இரண்டாம் திருத்த அவசரச் 2022ஆம் ஆண்டு தமிழ்நாடு வேளாண் விளைபொருளைச் சந்தைப்படுத்துதல் (முறைப்படுத்துதல்) இரண்டாம் திருத்த அவசரச் சட்டம் (தமிழ்நாடு அவசரச் சட்டம் 5/2022) பிறப்பிக்கப்பட்டதைத் தேவையானதாக்கிய சூழ்நிலைகளை விளக்குகின்ற சட்டம் (தமிழ்நாடு அவசரச் சட்டம் 5/2022) பிறப்பிக்கப்பட்டதைத் தேவையானதாக்கிய சூழ்நிலைகளை விளக்குகின்ற தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை விதிகளின் 168ஆம் விதியின்படியான விவர அறிக்கை. தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை விதிகளின் 168ஆம் விதியின்படியான விவர அறிக்கை.
1987ஆம் ஆண்டு தமிழ்நாடு வேளாண் விளைப்பொருளைச் சந்தைப்படுத்துதல் (முறைப்படுத்துதல்) சட்டத்தின் (தமிழ்நாடு சட்டம் 27/1989) 33ஆம் பிரிவின் (1)ஆம் உட்பிரிவானது, ஒரு புதிய சந்தைக்குழு அமைக்கப்படுவது நிலுவையில் இருக்கும்போது, சந்தைக்குழு ஒன்றின் அலுவல்களை மேலாண்மை செய்வதற்கு மொத்தத்தில் மூன்று ஆண்டுகளுக்கு மேற்படாத ஒரு கால அளவிற்கு தனி அலுவலர் ஒருவரை பணியமர்த்தம் செய்ய அரசுக்கு அதிகாரம் அளிக்கிறது. கூறப்பட்ட வகைமுறையின் விளைவாக, மாநிலத்தில் சந்தைக் குழுக்களின் அலுவல்களை மேலாண்மை செய்வதற்கு பணியமர்த்தப்பட்ட தனி அலுவலர்களின் பதவிக்காலமானது, கூறப்பட்ட சட்டத்தின் 33ஆம் பிரிவின் (1)ஆம் உட்பிரிவின் வகைமுறையை அவ்வப்போது திருத்தம் செய்வதன் மூலம், கூறப்பட்ட மூன்று ஆண்டுகள் காலத்திற்கு அப்பாலும் நீட்டிக்கப்பட்டது. இறுதியாக, தமிழ்நாடு அவசரச் சட்டம் 5/2022-ன் மூலம் திருத்தம் செய்யப்பட்டவாறான கூறப்பட்ட வகைமுறையானது, தனி அலுவலர்களின் பதவிக் காலத்தினை மொத்தமாக பன்னிரண்டு ஆண்டுகள் மற்றும் ஆறு மாதங்கள் கால அளவு வரையிலும் நீட்டிப்பு செய்ய அரசுக்கு இயலச்செய்கிறது.
2. 26 சந்தைக் குழுக்களில், திருச்சிராப்பள்ளி மற்றும் கடலூர் சந்தைக் குழுக்களைத் தவிர 24 சந்தைக் குழுக்களுக்கு உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டனர். கூறப்பட்ட 24 சந்தைக் குழுக்களில், (தேனி சந்தைக் குழு நீங்கலாக) 23 சந்தைக் குழுக்களுக்கு தலைவர் மற்றும் துணைத்தலைவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர் மற்றும் கூறப்பட்ட 23 சந்தைக் குழுக்களில் அவர்கள் பொறுப்பேற்றுக்கொண்டனர்.
3. எனவே (திருச்சிராப்பள்ளி, கடலூர், தேனி சந்தைக் குழுக்கள் நீங்கலாக) 23 சந்தைக் குழுக்களின் தனி அலுவலர்களின் பதவிக்காலமானது 30.11.2020-லிருந்து, தொடர்புடைய சந்தைக் குழுக்களின் பொறுப்பினை உறுப்பினர்கள் ஏற்றுக்கொள்வதற்கு முந்தைய தேதி வரையிலும் நீட்டிக்கப்பட்டது. மேலும் திருச்சிராப்பள்ளி, கடலூர் மற்றும் தேனி சந்தைக் குழுக்களின் தனி அலுவலர்களின் பதவிக்காலமானது 30.11.2020-லிருந்து 29.11.2021 வரையில் நீட்டிக்கப்பட்டது.
4. இதற்கிடையே, 2021ஆம் ஆண்டு ஜூலை திங்கள் 23ஆம் நாளன்று கூறப்பட்ட 24 சந்தைக் குழுக்களுக்கு நியமிக்கப்பட்ட உறுப்பினர்கள் திரும்பப் பெறப்பட்டனர் மற்றும் திருச்சிராப்பள்ளி, கடலூர் மற்றும் தேனி சந்தைக் குழுக்கள் நீங்கலாக, மேற்கூறிய 23 சந்தைக் குழுக்களுக்கும், தனி அலுவலர்கள் ஓராண்டு கால அளவிற்கு அதாவது 23.07.2021 முதல் 22.07.2022 வரையிலும் பணியமர்த்தப்பட்டனர். மேலும் கூறப்பட்ட 23 சந்தைக் குழுக்களின் தனி அலுவலர்களின் பதவிக்காலமானது 23.07.2022 முதல் 22.07.2023 வரையிலும் நீட்டிப்பு செய்யப்பட்டது.
5. திருச்சிராப்பள்ளி, கடலூர் மற்றும் தேனி ஆகிய சந்தைக்குழுக்களின் தனி அலுவலர்களின் பதவிக்காலமானது 30.11.2021லிருந்து 29.11.2022 வரை நீட்டிப்பு செய்யப்பட்டது. திருச்சிராப்பள்ளி, கடலூர் மற்றும் தேனி ஆகிய சந்தைக் குழுக்களின் தனி அலுவலர்களின் நீட்டிக்கப்பட்ட பதவிக்காலமானது 29.11.2022 அன்றுடன் நிறைவடைந்துவிட்டது மற்றும் கூறப்பட்ட சந்தைக் குழுக்களுக்கு உறுப்பினர்களை நியமிப்பதற்கு மேலும் சிறிது காலம் தேவைப்படுகிறது மற்றும் கூறப்பட்ட மூன்று சந்தைக் குழுக்களின் தனி அலுவலர்களின் பதவிக்காலத்தை 29.11.2022-க்கு அப்பால் மேலும், ஓராண்டு காலத்திற்கு அல்லது கூறப்பட்ட சந்தைக் குழுக்களின் மறு அமைத்துருவாக்கம் செய்யப்படுகின்ற வரையில் இவற்றில் எது முந்தையதோ அதுவரையில் நீட்டிக்க வேண்டியது ஒரு கட்டாயத் தேவையாகிறது. எனவே, மேற்சொன்ன நோக்கத்திற்காக கூறப்பட்ட தமிழ்நாடு சட்டம் 27/1989-ஐ தக்கவாறு திருத்தம் செய்வதென அரசானது முடிவு செய்துள்ளது.
6. மாநிலச் சட்டமன்றப் பேரவையானது, அந்த நேரத்தில் அமர்வில் இல்லாமல் இருந்ததால் மேற்கண்ட முடிவிற்கு செயல்வடிவம் கொடுப்பதற்கு அவசரச் சட்டம் ஒன்றை பிறப்பிப்பது தேவையானதாக இருந்தது. அதற்கிணங்கிய வகையில், 2022ஆம் ஆண்டு தமிழ்நாடு வேளாண் விளைபொருளைச் சந்தைப்படுத்துதல் (முறைப்படுத்துதல்) இரண்டாம் திருத்த அவசரச் சட்டமானது (தமிழ்நாடு அவசரச் சட்டம் 5/2022), 2022 டிசம்பர் திங்கள் 15ஆம் நாளன்று மாண்புமிகு ஆளுநரால் பிறப்பிக்கப்பட்டு, அது 2022 டிசம்பர் திங்கள் 15ஆம் தேதியிட்ட தமிழ்நாடு அரசு சிறப்பிதழில்தமிழ்நாடு அரசு சிறப்பிதழில் வெளியிடப்பட்டது.
எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், வேளாண்மை-உழவர் நலத்துறை அமைச்சர்.
கி. சீனிவாசன், செயலாளர்.
தலைமைச் செயலகம், சென்னை, 2023 ஜனவரி 12.
தமிழ்நாடு அரசிதழ் சிறப்பு வெளியீடு 52023ஆம் ஆண்டு ஜனவரி திங்கள் 12ஆம் நாளன்று தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் அறிமுகப்படுத்தப்பட்ட பின்வரும் சட்டமுன்வடிவு, நோக்கக் காரண விளக்கவுரையுடன் சேர்த்து, தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை விதிகளின் 130ஆம் விதியின் கீழ் பொதுத் தகவலுக்காக வெளியிடப்படுகின்றது.
சட்டமன்றப் பேரவை சட்டமுன்வடிவு எண். 2/20232023 சட்டமன்றப் பேரவை சட்டமுன்வடிவு எண். 2
குறித்த சில இயற்றுச் சட்டங்களை நீக்கறவு செய்வதற்கானதொரு சட்டமுன்வடிவு. குறித்த சில இயற்றுச் சட்டங்களை நீக்கறவு செய்வதற்கானதொரு சட்டமுன்வடிவு.
இணைப்புப்பட்டியலில் குறிப்பிடப்பட்டுள்ள இயற்றுச் சட்டங்கள் வழக்கத்திலிருந்தவை அல்லது மற்றபடி வழக்கத்தில் இல்லாமல் போயிருக்கிற அல்லது குறித்த வகையில் மற்றபடி வெளிப்படையாக நீக்கறவு செய்யப்பட்டதன் மூலம் தவிர பிறவாறு நடைமுறையில் இருக்கக்கூடியது அற்றுபோகக் கூடியவையான இருப்பவை கட்டாயமாக நீக்கறவு செய்யப்படுதல் வேண்டும் என்பது உகந்ததாய் இருப்பதாலும்;
இந்தியக் குடியரசின் எழுபத்தி மூன்றாம் ஆண்டில் தமிழ்நாடு மாநிலச்
சட்டமன்றப் பேரவையால் பின்வருமாறு சட்டமியற்றப்படுவதாகுக:-
குறுந்தலைப்பு.
1. இந்தச் சட்டம், 2023ஆம் ஆண்டு தமிழ்நாடு நீக்கறவுச் செய்தல் சட்டம்
என்று வழங்கப்பெறும்.
குறித்த சில 2. இணைப்புப்பட்டியலில் குறிப்பிடப்பட்டுள்ள இயற்றுச் சட்டங்கள்
இயற்றுச் ஈங்கிதனால் நீக்கறவு செய்யப்படுகின்றன.
சட்டங்களின்
நீக்கறவு
காப்புரைகள்.
3. இந்தச் சட்டத்தால் நீக்கறவு செய்யப்படும் இயற்றுச் சட்டம் எதுவும் பிற இயற்றுச் சட்டம் எதனையும் பாதிக்காது. அதில் நீக்கறவு செய்யப்பட்ட இயற்றுச் சட்டம் பயன்படுத்தப்பட்டிருக்கிறபோதும் சேர்க்கப்பட்டிருக்கிறபோதும் அல்லது சுட்டப்படும் போதும்;
மற்றும் இந்தச் சட்டம் செல்லுந்தன்மையையோ, செல்லாத் தன்மையையோ அல்லது செல்திறத்தையோ அல்லது ஏற்கனவே செய்து முடிக்கப்பட்ட எதனையும் அல்லது பாதிக்கப்பட்டதையோ அல்லது உரிமையையோ, உரிமை மூலத்தையோ, கடப்பாட்டையோ அல்லது ஏற்கனவே பெறப்பட்ட கடப்பாட்டினை அதிகப்படியானதையோ அல்லது ஏற்படுத்தப்பபட்டிருப்பதையோ அல்லது தீர்வு எதனையும் அல்லது தொடர்பான நடைமுறையை அல்லது பற்று எதனலிருந்தும் அல்லது பற்றினை விடுவிப்பதை, தண்டம், உதவியையோ, கடப்பாட்டினையோ, கோருதலையோ அல்லது ஏற்கனவே வழங்கப்பட்ட உறுதிமொழியையோ அல்லது நிரூபிக்கப்படும் கடந்தகால செயல் அல்லது விசயம் எதனையும் பாதிக்காது;
கொள்கை எதனையும் அல்லது சட்டத்தின் ஆட்சியை அல்லது ஏற்படுத்தப்பட்ட அதிகாரவரம்பை அல்லது அமைவுமுறையையோ அல்லது வாதுரையின் போதோ, வழக்கத்தையோ அல்லது நடைமுறையையோ அல்லது இருந்து வரும் பழக்கவழக்கத்தையோ, வழக்காறையோ, சலுகையையோ, தடையையோ, விலக்கையோ, அலுவலகத்தையோ அல்லது பணியமர்த்தத்தையோ எவ்வாறிருப்பினும் அவை முறையே எந்த முறையிலும் ஈங்கிதனால் இயற்றுச் சட்டத்தில் அல்லது இயற்றுச் சட்டம் எதிலிருந்தும் எந்த முறையிலும் உறுதி செய்யப்பட்டிருக்கலாம் அல்லது ஏற்பளிக்கப்பட்டிருக்கலாம் அல்லது அதன்மூலம் பெறப்பட்டிருக்கலாம் என்றிருக்கிற எதுவும் பாதிக்காத வகையில் இருக்கும்;
இயற்றுச் சட்டம் எதுவும் புத்துயிரளித்தல் அல்லது அதிகாரவரம்பு எதனையும் மீட்டெடுத்தல், பதவி, பழக்கவழக்கம், பொறுப்பு, உரிமை, உரிமை மூலம், சலுகை, தடை, விலக்கு, பயன்படுத்துதல், செய்தொழில், நடைமுறை அல்லது பிற பொருட்பாடு அல்லது தற்பொழுது இல்லாமல் இருக்கும் பொருள் அல்லது செல்லாற்றலிலுள்ளவை இந்தச் சட்டத்தால் நீக்கறவு செய்யப்படுவதால் பாதிப்பிற்குள்ளாகாது.
6 தமிழ்நாடு அரசிதழ் சிறப்பு வெளியீடுஇணைப்புப் பட்டியல்.இணைப்புப் பட்டியல்.
நீக்கறவுகள்.நீக்கறவுகள்.
(2ஆம் பிரிவைக் காண்க)
ஆண்டு எண் குறுந்தலைப்பு
வ. எண்.
(1) (2) (3)
(4)
தமிழ்நாடு சட்டங்கள்தமிழ்நாடு சட்டங்கள்
1. 1930 XI 1930ஆம் ஆண்டு தமிழ்நாடு உள்ளாட்சி மன்றங்கள் (திருத்தச்) சட்டம்.
2. 1942 XXIV 1942ஆம் ஆண்டு சென்னை மாநகராட்சி, மாவட்ட நகராட்சிகள் மற்றும் உள்ளாட்சி மன்றங்கள் (இரண்டாம் திருத்தச்) சட்டம்.
3. 1946 XVI 1946ஆம் ஆண்டு தமிழ்நாடு மாவட்ட நகராட்சிகள் மற்றும் உள்ளாட்சி மன்றங்கள் (இரண்டாம் திருத்தச்) சட்டம்.
4. 1947 II 1947ஆம் ஆண்டு தமிழ்நாடு மாவட்ட நகராட்சிகள் மற்றும் உள்ளாட்சி மன்றங்கள் (திருத்தச்) சட்டம்.
5. 1947 XXXIV 1947ஆம் ஆண்டு அபின் மற்றும் அபாயகரமான மருந்துச் சரக்குகள்
(தமிழ்நாடு திருத்தச்) சட்டம்.
6. 1951 XXXII 1951ஆம் ஆண்டு அபின் (தமிழ்நாடு திருத்தச்) சட்டம்.
7. 1954 III 1954ஆம் ஆண்டு தமிழ்நாடு தனியார் காடுகளைப் பாதுகாத்தல் (திருத்தச்) சட்டம்.
8. 1954 XVIII 1954ஆம் ஆண்டு தமிழ்நாடு தனியார் காடுகளைப் பாதுகாத்தல்
(இரண்டாம் திருத்தச்) சட்டம்.
9. 1954 XXX 1954ஆம் ஆண்டு தமிழ்நாடு தனியார் காடுகளைப் பாதுகாத்தல்
(மூன்றாம் திருத்தச்) சட்டம்.
10. 1955 XVI 1955ஆம் ஆண்டு சென்னை மாநகர காவல் மற்றும் சூதாட்ட (திருத்தச்) சட்டம்.
11. 1955 XXXIV 1955ஆம் ஆண்டு குற்றவியல் நடைமுறை தொகுப்பு (தமிழ்நாடு திருத்தச்) சட்டம்.
12. 1955 XXXV 1955ஆம் ஆண்டு தமிழ்நாடு தனியார் காடுகளைப் பாதுகாத்தல் (திருத்தச்) சட்டம்.
13. 1956 XXXI 1956ஆம் ஆண்டு குற்றவியல் நடைமுறை தொகுப்பு (தமிழ்நாடு திருத்தச்) சட்டம்.
14. 1957 XV 1957ஆம் ஆண்டு தமிழ்நாடு தனியார் காடுகளைப் பாதுகாத்தல் (திருத்தச்) சட்டம்.
15. 1959 20 1959ஆம் ஆண்டு தமிழ்நாடு தனியார் காடுகளைப் பாதுகாத்தல் (திருத்தச்) சட்டம்.
16. 1960 17 1960ஆம் ஆண்டு தமிழ்நாடு ஊராட்சி ஒன்றிய குழுக்கள் (முதல் அரசியலமைப்பிற்கான சிறப்பு வகைமுறைகள்) சட்டம்.
17. 1960 22 1960ஆம் ஆண்டு தமிழ்நாடு தனியார் காடுகளைப் பாதுகாத்தல் (திருத்தச்) சட்டம்.
18. 1961 27 1961ஆம் ஆண்டு தமிழ்நாடு ஊராட்சிகள் (மாற்றப்பட்ட ஆட்சிப் பகுதிக்கு நீட்டிப்பு) மற்றும் ஊராட்சி ஒன்றிய குழுக்கள் (முதல் அரசியலமைப்பிற்கான சிறப்பு வகைமுறைகள்) திருத்தச் சட்டம்.
19. 1961 33 1961ஆம் ஆண்டு தமிழ்நாடு தனியார் காடுகளைப் பாதுகாத்தல் (திருத்தச்) சட்டம்.
20. 1961 45 1961ஆம் ஆண்டு தமிழ்நாடு மலைப்பகுதிகள் (மரங்களைப் பாதுகாத்தல்) திருத்தச் சட்டம்.
21. 1962 16 1962ஆம் ஆண்டு தமிழ்நாடு தொழிற்சாலை நிறுவனங்கள் (தேசிய மற்றும் பண்டிகைக் கால விடுமுறைகள்) திருத்தச் சட்டம்.
தமிழ்நாடு அரசிதழ் சிறப்பு வெளியீடு 7ஆண்டு எண் குறுந்தலைப்பு
வ. எண்.
(1) (2) (3)
(4)
22. 1963 23 1963ஆம் ஆண்டு தமிழ்நாடு தனியார் காடுகளைப் பாதுகாத்தல் (திருத்தச்) சட்டம்.
23. 1965 12 1965ஆம் ஆண்டு தமிழ்நாடு தனியார் காடுகளைப் பாதுகாத்தல் (திருத்தச்) சட்டம்.
24. 1965 32 1965ஆம் ஆண்டு தமிழ்நாடு தனியார் காடுகளைப் பாதுகாத்தல் (தொடர்ச்சிச்) சட்டம்.
25. 1969 16 1969ஆம் ஆண்டு தமிழ்நாடு ஊராட்சிகள் (இரண்டாம் திருத்தச்) சட்டம்.
26. 1970 7 1970ஆம் ஆண்டு தமிழ்நாடு தொழிற்சாலை நிறுவனங்கள் (தேசிய மற்றும் பண்டிகைக் கால விடுமுறைகள்) திருத்தச் சட்டம்.
27. 1970 11 1970ஆம் ஆண்டு தமிழ்நாடு ஊராட்சிகள் (திருத்தச்) சட்டம்.
28. 1970 29 1970ஆம் ஆண்டு தமிழ்நாடு கூட்டுறவுச் சங்கங்கள் (திருத்தச்) சட்டம்.
29. 1970 31 1970ஆம் ஆண்டு தமிழ்நாடு கூட்டுறவுச் சங்கங்கள் (இரண்டாம் திருத்தச்) சட்டம்.
30. 1970 32
1970ஆம் ஆண்டு தமிழ்நாடு கூட்டுறவுச் சங்கங்கள் (மூன்றாம் திருத்தச்) சட்டம்.
31. 1971 38 1971ஆம் ஆண்டு தமிழ்நாடு கூட்டுறவுச் சங்கங்கள் (திருத்தச்) சட்டம்.
32. 1971 39 1971ஆம் ஆண்டு தமிழ்நாடு கூட்டுறவுச் சங்கங்கள் (இரண்டாம் திருத்தச்) சட்டம்.
33. 1972 15 1972ஆம் ஆண்டு தமிழ்நாடு ஊராட்சிகள் (திருத்தச்) சட்டம்.
34. 1975 34 1975ஆம் ஆண்டு தமிழ்நாடு ஊராட்சிகள் மற்றும் ஊராட்சி ஒன்றிய குழுக்கள் (பதவி காலத்தினை நீட்டித்தல்) சட்டம்.
35. 1978 6 1978ஆம் ஆண்டு தமிழ்நாடு ஊராட்சிகள் (அலுவலர்களின் பதவி காலத்தினை நீட்டித்தல்) சட்டம்.
36. 1979 22 1979ஆம் ஆண்டு தமிழ்நாடு ஊராட்சி ஒன்றிய குழுக்கள் (தனி அலுவலர்களை நியமனம் செய்தல்) இரண்டாம் திருத்தச் சட்டம்.
37. 1982 39 1982ஆம் ஆண்டு தமிழ்நாடு ஊராட்சிகள் (தனி அலுவலர்களை நியமனம் செய்தல்) இரண்டாம் திருத்தச் சட்டம்.
38. 1984 22 1984ஆம் ஆண்டு தமிழ்நாடு பொது விற்பனை வரி (இரண்டாம் திருத்தச்) சட்டம்.
39. 1984 23 1984ஆம் ஆண்டு தமிழ்நாடு பொது விற்பனை வரி (மூன்றாம் திருத்தச்) சட்டம்.
40. 1984 27 1984ஆம் ஆண்டு தமிழ்நாடு கேளிக்கைகள் வரி (இரண்டாம் திருத்தச்) சட்டம்.
41. 1984 28 1984ஆம் ஆண்டு தமிழ்நாடு பொது விற்பனை (நான்காம் திருத்தச்) சட்டம்.
42. 1985 9 1985ஆம் ஆண்டு தமிழ்நாடு ஊராட்சி ஒன்றிய குழுக்கள் (தனி அலுவலர்களை நியமனம் செய்தல்) திருத்தச் சட்டம்.
43. 1985 10 1985ஆம் ஆண்டு தமிழ்நாடு ஊராட்சிகள் (தனி அலுவலர்களை நியமனம் செய்தல்) திருத்தச் சட்டம்.
44. 1985 17 1985ஆம் ஆண்டு தமிழ்நாடு கேளிக்கைகள் வரி (திருத்தச்) சட்டம்.
45. 1985 18 1985ஆம் ஆண்டு தமிழ்நாடு பொது விற்பனை வரி (திருத்தச்) சட்டம்.
46. 1985 19 1985ஆம் ஆண்டு தமிழ்நாடு பொது விற்பனை வரி (இரண்டாம் திருத்தச்) சட்டம்.
47. 1985 26 1985ஆம் ஆண்டு தமிழ்நாடு ஊராட்சிகள் ஒன்றிய குழுக்கள் (தனி அலுவலர்களை நியமனம் செய்தல்) இரண்டாம் திருத்தச் சட்டம்.
8 தமிழ்நாடு அரசிதழ் சிறப்பு வெளியீடுஆண்டு எண் குறுந்தலைப்பு
வ. எண்.
(1) (2) (3)
(4)
48. 1985 27 1985ஆம் ஆண்டு தமிழ்நாடு ஊராட்சிகள் (தனி அலுவலர்களை நியமனம் செய்தல்) இரண்டாம் திருத்தச் சட்டம்.
49. 1985 34 1985ஆம் ஆண்டு தமிழ்நாடு கேளிக்கைகள் வரி (இரண்டாம் திருத்தச்) சட்டம்.
50. 1985 35 1985ஆம் ஆண்டு தமிழ்நாடு கேளிக்கைகள் வரி (மூன்றாம் திருத்தச்) சட்டம்.
51. 1985 36 1985ஆம் ஆண்டு தமிழ்நாடு பொது விற்பனை வரி (மூன்றாம் திருத்தச்) சட்டம்.
52. 1985 43 1985ஆம் ஆண்டு தமிழ்நாடு வரிவிதிப்புச் சட்டங்கள் (பொருந்தா வரம்புகள்) சட்டம்.
53. 1986 9 1986ஆம் ஆண்டு தமிழ்நாடு ஊராட்சிகள் ஒன்றிய குழுக்கள் (தனி அலுவலர்களை நியமனம் செய்தல்) திருத்தச் சட்டம்.
54. 1986 10 1986ஆம் ஆண்டு தமிழ்நாடு ஊராட்சிகள் (தனி அலுவலர்களை நியமனம் செய்தல்) திருத்தச் சட்டம்.
55. 1986 36 1986ஆம் ஆண்டு தமிழ்நாடு பொது விற்பனை வரி (திருத்தச்) சட்டம்.
56. 1986 37 1986ஆம் ஆண்டு தமிழ்நாடு உணவகங்கள் மற்றும் தங்கும் விடுதிகளின் ஆடம்பர பொருள்கள் மீதான வரி (திருத்தச்) சட்டம்.
57. 1986 40 1986ஆம் ஆண்டு தமிழ்நாடு பொது விற்பனை வரி (இரண்டாம் திருத்தச்) சட்டம் 58. 1986 41 1986ஆம் ஆண்டு தமிழ்நாடு பொது விற்பனை வரி (மூன்றாம் திருத்தச்) சட்டம்.
59. 1986 42 1986ஆம் ஆண்டு தமிழ்நாடு பொது விற்பனை வரி (நான்காம் திருத்தச்) சட்டம்.
60. 1986 43 1986ஆம் ஆண்டு தமிழ்நாடு பொது விற்பனை வரி (ஐந்தாம் திருத்தச்) சட்டம்.
61. 1986 44 1986ஆம் ஆண்டு தமிழ்நாடு பொது விற்பனை வரி (ஆறாம் திருத்தச்) சட்டம்.
62. 1989 36 1989ஆம் ஆண்டு தமிழ்நாடு கூட்டுறவுச் சங்கங்கள் (திருத்தச்) சட்டம்.
63. 1992 19 1992ஆம் ஆண்டு தமிழ்நாடு கூட்டுறவு சங்கங்கள் (திருத்தம் மற்றும் சிறப்பு வகைமுறைகள்) சட்டம்.
64. 1992 32 1992ஆம் ஆண்டு தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழக (திருத்தச்) சட்டம்.
65. 1992 33 1992ஆம் ஆண்டு தமிழ்நாடு சம்பளங்கள் வழங்கல் (திருத்தச்) சட்டம்
66. 1993 8 1993ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை (தகுதியின்மையைத் தடுக்கும்) திருத்தச் சட்டம்.
67. 1993 21 1993ஆம் ஆண்டு தமிழ்நாடு சம்பளங்கள் வழங்கல் (திருத்தச்) சட்டம்.
68. 1994 35 1994ஆம் ஆண்டு தமிழ்நாடு சம்பளங்கள் வழங்கல் (இரண்டாம் திருத்தச்) சட்டம்.
69. 1994 57 1994ஆம் ஆண்டு தமிழ்நாடு சம்பளங்கள் வழங்கல் (மூன்றாம் திருத்தச்) சட்டம்.
70. 1995 6 1995ஆம் ஆண்டு தமிழ்நாடு மீன் வளர்ப்பு (ஒழுங்குமுறைப்படுத்துதல்) சட்டம்.
71. 1995 11 1995ஆம் ஆண்டு தமிழ்நாடு சம்பளங்கள் வழங்கல் (திருத்தச்) சட்டம்.
72. 1995 22 1995ஆம் ஆண்டு தமிழ்நாடு சம்பளங்கள் வழங்கல் (இரண்டாம் திருத்தச்) சட்டம்.
73. 1995 24 1995ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை (தகுதியின்மையைத் தடுக்கும்) திருத்தச் சட்டம்.
74. 1995 40 1995ஆம் ஆண்டு தமிழ்நாடு சம்பளங்கள் வழங்கல் (மூன்றாம் திருத்தச்) சட்டம்.
தமிழ்நாடு அரசிதழ் சிறப்பு வெளியீடு 9ஆண்டு எண் குறுந்தலைப்பு
வ. எண்.
(1) (2) (3)
(4)
75. 1997 9 1997ஆம் ஆண்டு தமிழ்நாடு சம்பளங்கள் வழங்கல் (திருத்தச்) சட்டம்.
76. 1997 15 1997ஆம் ஆண்டு தமிழ்நாடு கடல் வாரியம் (திருத்தச்) சட்டம்.
77. 1997 23 1997ஆம் ஆண்டு தமிழ்நாடு சம்பளங்கள் வழங்கல் நீக்கறவு (திருத்தச்) சட்டம் 78. 1997 52 1997ஆம் ஆண்டு தமிழ்நாடு சம்பளங்கள் வழங்கல் (இரண்டாம் திருத்தச்) சட்டம்.
79. 1997 66 1997 ஆம் ஆண்டு தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழக (திருத்தச்) சட்டம்.
80. 1998 22 1998ஆம் ஆண்டு தமிழ்நாடு பொது விற்பனை வரி (சிறப்பு வகைமுறைகள் மற்றும் செல்லுந்தன்மை) சட்டம்.
81. 1998 25 1998ஆம் ஆண்டு தமிழ்நாடு பொது விற்பனை வரி (மூன்றாம் திருத்தச்) சட்டம்.
82. 1998 26 1998ஆம் ஆண்டு தமிழ்நாடு கேளிக்கைகள் வரி (சிறப்பு வகைமுறைகள்) சட்டம்.
83. 1998 31 1998ஆம் ஆண்டு தமிழ்நாடு உள்ளூர் பகுதிகளில் மோட்டார் வாகனங்கள் நுழைவதற்கான வரி (இரண்டாம் திருத்தச்) சட்டம்.
84. 1998 32 1998ஆம் ஆண்டு தமிழ்நாடு கேளிக்கைகள் வரி (திருத்தச்) சட்டம்.
85. 1998 45 1998ஆம் ஆண்டு தமிழ்நாடு பொது விற்பனை வரி (நான்காம் திருத்தச்) சட்டம்.
86. 1998 46 1998ஆம் ஆண்டு தமிழ்நாடு கேளிக்கைகள் வரி (திருத்தம்) திருத்தச் சட்டம்.
87. 1998 47 1998ஆம் ஆண்டு தமிழ்நாடு கேளிக்கைகள் வரி (இரண்டாம் திருத்தச்) சட்டம்.
88. 1999 12 1999ஆம் ஆண்டு தமிழ்நாடு விற்பனை வரி, கேளிக்கைகள் வரி மற்றும் ஆடம்பர வரி (பூசல்களுக்கான தீர்வு) சட்டம்.
89. 1999 13 1999ஆம் ஆண்டு தமிழ்நாடு உணவகங்கள் மற்றும் தங்கும் விடுதிகளின் ஆடம்பர பொருள்கள் மீதான வரி (திருத்தச்) சட்டம்.
90. 1999 14 1999ஆம் ஆண்டு தமிழ்நாடு பொது விற்பனை வரி (நான்காம் திருத்தச்) சட்டம்.
91. 1999 15 1999ஆம் ஆண்டு தமிழ்நாடு பொது விற்பனை வரி (ஐந்தாம் திருத்தச்) சட்டம்.
92. 1999 26 1999ஆம் ஆண்டு தமிழ்நாடு பொது விற்பனை வரி (இரண்டாம் திருத்தச்) சட்டம்.
93. 1999 27 1999ஆம் ஆண்டு தமிழ்நாடு பொது விற்பனை வரி (மூன்றாம் திருத்தச்) சட்டம்.
94. 1999 28 1999ஆம் ஆண்டு தமிழ்நாடு பொது விற்பனை வரி (ஆறாம் திருத்தச்) சட்டம்.
95. 1999 36 1999ஆம் ஆண்டு தமிழ்நாடு பொது விற்பனை வரி (திருத்தச்) சட்டம்.
96. 1999 42 1999ஆம் ஆண்டு தமிழ்நாடு பொது விற்பனை வரி (எட்டாம் திருத்தச்) சட்டம்.
97. 1999 47 1999ஆம் ஆண்டு தமிழ்நாடு பொது விற்பனை வரி (ஏழாம் திருத்தச்) சட்டம்.
98. 1999 50 1999ஆம் ஆண்டு தமிழ்நாடு கூட்டுறவுச் சங்கங்கள் (திருத்தச்) சட்டம்
99. 2000 2 1999ஆம் ஆண்டு தமிழ்நாடு தொழில் நோக்கங்களுக்காக நிலம் கையப்படுத்துதல் (திருத்தச்) சட்டம்.
100. 2000 6 2000ஆம் ஆண்டு தமிழ்நாடு பொது விற்பனை வரி (திருத்தச்) சட்டம்.
101. 2000 7 2000ஆம் ஆண்டு தமிழ்நாடு பொது விற்பனை வரி (இரண்டாம் திருத்தச்) சட்டம்.
102. 2000 11 2000ஆம் ஆண்டு தமிழ்நாடு ஆடம்பர பொருட்கள் மீதான வரி (திருத்தச்) சட்டம்.
10 தமிழ்நாடு அரசிதழ் சிறப்பு வெளியீடுஆண்டு எண் குறுந்தலைப்பு
வ. எண்.
(1) (2) (3)
(4)
103. 2000 12 2000ஆம் ஆண்டு தமிழ்நாடு பொது விற்பனை வரி (மூன்றாம் திருத்தச்) சட்டம்.
104. 2000 13 2000ஆம் ஆண்டு தமிழ்நாடு பொது விற்பனை வரி (நான்காம் திருத்தச்) சட்டம்.
105. 2000 14 2000ஆம் ஆண்டு தமிழ்நாடு பொது விற்பனை வரி (ஐந்தாம் திருத்தச்) சட்டம்.
106. 2000 15 2000ஆம் ஆண்டு தமிழ்நாடு பொது விற்பனை வரி (ஆறாம் திருத்தச்) சட்டம்.
107. 2000 16 2000ஆம் ஆண்டு தமிழ்நாடு பொது விற்பனை வரி (ஏழாம் திருத்தச்) சட்டம்.
108. 2000 17 2000ஆம் ஆண்டு தமிழ்நாடு கேளிக்கைகள் வரி (திருத்தச்) சட்டம்.
109. 2000 18 2000ஆம் ஆண்டு தமிழ்நாடு கேளிக்கைகள் வரி (இரண்டாம் திருத்தச்) சட்டம்.
110. 2000 22 2000ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை (தகுதியின்மையைத் தடுக்கும்) திருத்தச் சட்டம்.
111. 2000 32 2000ஆம் ஆண்டு தமிழ்நாடு பொது விற்பனை வரி (எட்டாம் திருத்தச்) சட்டம்.
112. 2000 36 2000ஆம் ஆண்டு தமிழ்நாடு சம்பளங்கள் வழங்கல் (திருத்தச்) சட்டம்
113. 2000 38 2000ஆம் ஆண்டு தமிழ்நாடு பொது விற்பனை வரி (ஒன்பதாம் திருத்தச்) சட்டம்.
114. 2000 39 2000ஆம் ஆண்டு தமிழ்நாடு பொது விற்பனை வரி (பத்தாம் திருத்தச்) சட்டம்.
115. 2000 40 2000ஆம் ஆண்டு தமிழ்நாடு பொது விற்பனை வரி (பதினொன்றாவது திருத்தச்) சட்டம்.
116. 2000 41 2000ஆம் ஆண்டு தமிழ்நாடு பொது விற்பனை வரி (பன்னிரண்டாவது திருத்தச்) சட்டம்.
117. 2000 42 2000ஆம் ஆண்டு தமிழ்நாடு கேளிக்கைகள் வரி (மூன்றாம் திருத்தச்) சட்டம்.
118. 2000 47 2000ஆம் ஆண்டு தமிழ்நாடு உள்ளூர் பகுதிகளில் மோட்டார் வாகனங்கள் நுழைவதற்கான வரி (திருத்தச்) சட்டம்.
119. 2001 14 2001ஆம் ஆண்டு தமிழ்நாடு ஒளிவுமறைவற்ற ஒப்பந்தப்புள்ளிகள் (திருத்தச்) சட்டம்.
120. 2001 21 2001ஆம் ஆண்டு தமிழ்நாடு கேளிக்கைகள் வரி (திருத்தச்) சட்டம்.
121. 2001 23 2001ஆம் ஆண்டு தமிழ்நாடு பொது விற்பனை வரி (திருத்தச்) சட்டம்.
122. 2001 24 2001ஆம் ஆண்டு தமிழ்நாடு பொது விற்பனை வரி (இரண்டாம் திருத்தச்) சட்டம்.
123. 2002 5 2002ஆம் ஆண்டு தமிழ்நாடு பொது விற்பனை வரி (திருத்தச்) சட்டம்.
124. 2002 12 2002ஆம் ஆண்டு தமிழ்நாடு பொது விற்பனை வரி (இரண்டாம் திருத்தச்) சட்டம்.
125. 2002 13 2002ஆம் ஆண்டு தமிழ்நாடு பொது விற்பனை வரி (மூன்றாம் திருத்தச்) சட்டம்.
126. 2002 16 2002ஆம் ஆண்டு தமிழ்நாடு உள்ளூர் பகுதிகளில் மோட்டார் வாகனங்கள் நுழைவதற்கான வரி (திருத்தச்) சட்டம்.
127. 2002 17 2002ஆம் ஆண்டு தமிழ்நாடு விற்பனை வரி (பூசல்களுக்கான தீர்வு) சட்டம்.
128. 2002 18 2002ஆம் ஆண்டு தமிழ்நாடு பொது விற்பனை வரி (நான்காம் திருத்தச்) சட்டம்.
129. 2002 19 2002ஆம் ஆண்டு தமிழ்நாடு பொது விற்பனை வரி (ஐந்தாம் திருத்தச்) சட்டம்.
130. 2002 20 2002ஆம் ஆண்டு தமிழ்நாடு பொது விற்பனை வரி (ஆறாம் திருத்தச்) சட்டம்.
131. 2002 22 2002ஆம் ஆண்டு தமிழ்நாடு பொது விற்பனை வரி (ஏழாம் திருத்தச்) சட்டம்.
தமிழ்நாடு அரசிதழ் சிறப்பு வெளியீடு 11ஆண்டு எண் குறுந்தலைப்பு
வ. எண்.
(1) (2) (3)
(4)
132. 2002 24 2002ஆம் ஆண்டு தமிழ்நாடு ஆடம்பர பொருட்கள் மீதான வரி (திருத்தச்) சட்டம்.
133. 2002 43 2002ஆம் ஆண்டு தமிழ்நாடு ஒளிவுமறைவற்ற ஒப்பந்தப்புள்ளிகள் (திருத்தச்) சட்டம்.
134. 2002 47 2002ஆம் ஆண்டு தமிழ்நாடு பொது விற்பனை வரி (எட்டாம் திருத்தச்) சட்டம்.
135. 2002 48 2002ஆம் ஆண்டு தமிழ்நாடு பொது விற்பனை வரி (ஒன்பதாம் திருத்தச்) சட்டம்.
136. 2002 51 2002ஆம் ஆண்டு தமிழ்நாடு உள்ளூர் பகுதிகளில் மோட்டார் வாகனங்கள் நுழைவதற்கான வரி (இரண்டாம் திருத்தச்) சட்டம்.
137. 2002 54 2002ஆம் ஆண்டு தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழக (திருத்தச்) சட்டம்.
138. 2003 1 2003ஆம் ஆண்டு தமிழ்நாடு ஆடம்பர பொருட்கள் மீதான வரி (திருத்தச்) சட்டம்.
139. 2003 2 2003ஆம் ஆண்டு தமிழ்நாடு கேளிக்கைகள் வரி (திருத்தச்) சட்டம்.
140. 2003 15 2003ஆம் ஆண்டு தமிழ்நாடு கேளிக்கைகள் வரி (மூன்றாம் திருத்தச்) சட்டம்.
141. 2003 21 2003ஆம் ஆண்டு தமிழ்நாடு பொது விற்பனை வரி (திருத்தச்) சட்டம்.
142. 2003 22 2003ஆம் ஆண்டு தமிழ்நாடு உள்ளூர் பகுதிகளில் மோட்டார் வாகனங்கள் நுழைவதற்கான வரி (திருத்தச்) சட்டம்.
143. 2003 23 2003ஆம் ஆண்டு தமிழ்நாடு கேளிக்கைகள் வரி (இரண்டாம் திருத்தச்) சட்டம்.
144. 2003 31 2003ஆம் ஆண்டு தமிழ்நாடு மதுவிலக்கு (திருத்தச்) சட்டம்.
145. 2003 40 2003ஆம் ஆண்டு தமிழ்நாடு பொது விற்பனை வரி (இரண்டாம் திருத்தச்) சட்டம்.
146. 2004 2 2004ஆம் ஆண்டு தமிழ்நாடு மதுவிலக்கு (திருத்தச்) சட்டம்.
147. 2004 6 2004ஆம் ஆண்டு தமிழ்நாடு நிதிநிலை நிருவாக பொறுப்புடைமை (திருத்தச்) சட்டம் 148. 2004 18 2004ஆம் ஆண்டு தமிழ்நாடு கூட்டுறவு சங்கங்கள் (இரண்டாம் திருத்தச்) சட்டம்.
149. 2004 20 2004ஆம் ஆண்டு தமிழ்நாடு விலங்குகள் மற்றும் பறவைகள் பலியிடுவதை தடைசெய்தல் (நீக்கறவு) சட்டம்.
150. 2004 32 2004ஆம் ஆண்டு தமிழ்நாடு கள்ளச் சாராயக்காரர்கள், மருந்து சரக்கு குற்றவாளிகள், வனக் குற்றவாளிகள், குண்டர்கள், விபச்சாரத் தொழில் குற்றவாளிகள், குடிசை நில அபகரிப்பாளர்கள் ஆகியோரின் அபாயகரமான நடவடிக்கைகளைத் தடுத்தல் (திருத்தச்) சட்டம்.
151. 2005 5 2005ஆம் ஆண்டு தமிழ்நாடு சம்பளங்கள் வழங்கல் (திருத்தச்) சட்டம்.
152. 2005 7 2005ஆம் ஆண்டு தமிழ்நாடு நிதிநிலை நிருவாக பொறுப்புடைமை (திருத்தச்) சட்டம்.
153. 2006 16 2008ஆம் ஆண்டு தமிழ்நாடு கள்ளச்சாராயக்காரர்கள், மருந்து சரக்கு குற்றவாளிகள், வனக் குற்றவாளிகள், குண்டர்கள், விபச்சாரத் தொழில் குற்றவாளிகள், குடிசை நில அபகரிப்பாளர்கள் மற்றும் காணொளி திருடர்கள் ஆகியோரின் அபாயகரமான நடவடிக்கைகளைத் தடுத்தல் (திருத்தச்) சட்டம்.
154. 2006 24 2006ஆம் ஆண்டு தமிழ்நாடு சம்பளங்கள் வழங்கல் (திருத்தச்) சட்டம்.
155. 2006 31 2006ஆம் ஆண்டு தமிழ்நாடு சம்பளங்கள் வழங்கல் (இரண்டாம் திருத்தச்) சட்டம்.
156. 2007 22 2007ஆம் ஆண்டு தமிழ்நாடு மதுவிலக்கு (திருத்தச்) சட்டம்.
12 தமிழ்நாடு அரசிதழ் சிறப்பு வெளியீடுஆண்டு எண் குறுந்தலைப்பு
வ. எண்.
(1) (2) (3)
(4)
157. 2008 23 2008ஆம் ஆண்டு தமிழ்நாடு மதுவிலக்கு (திருத்தச்) சட்டம்.
158. 2008 16 2008ஆம் ஆண்டு தமிழ்நாடு கள்ளச் சாராயக்காரர்கள், மருந்து சரக்கு குற்றவாளிகள், வனக் குற்றவாளிகள், குண்டர்கள், விபச்சாரத் தொழில் குற்றவாளிகள், மணல் கடத்தும் குற்றவாளிகள், குடிசை நில அபகரிப்பாளர்கள் மற்றும் காணொளி திருடர்கள் ஆகியோரின் அபாயகரமான நடவடிக்கைகளைத் தடுத்தல் (திருத்தச்) சட்டம்.
159. 2008 44 2008ஆம் ஆண்டு தமிழ்நாடு கடைகள் மற்றும் வணிக நிறுவனங்கள் (திருத்தச்) சட்டம்.
160. 2008 51 2008ஆம் ஆண்டு தமிழ்நாடு பிற்படுத்தப்பட்ட கிருத்துவர்கள் மற்றும் பிற்படுத்தப்பட்ட இஸ்லாமியர்கள் (கல்வி நிறுவனங்களில் இட ஒதுக்கீடு மற்றும் மாநிலத்தின் கீழுள்ள பணிகளில் நியமனங்கள் அல்லது பதவிகள்) திருத்தச் சட்டம்.
161. 2008 62 2008ஆம் ஆண்டு தமிழ்நாடு கூட்டுறவுச் சங்கங்கள் (மூன்றாம் திருத்தச்) சட்டம்.
162. 2009 13 2009ஆம் ஆண்டு தமிழ்நாடு சம்பளங்கள் வழங்கல் (திருத்தச்) சட்டம்.
163. 2010 1 2010ஆம் ஆண்டு தமிழ்நாடு சம்பளங்கள் வழங்கல் (திருத்தச்) சட்டம்.
164. 2010 11 2010ஆம் ஆண்டு தமிழ்நாடு நிதிநிலை நிருவாக பொறுப்புடைமை (திருத்தச்) சட்டம்.
165. 2010 31 2010ஆம் ஆண்டு தமிழ்நாடு சம்பளங்கள் வழங்கல் (இரண்டாம் திருத்தச்) சட்டம்.
166. 2010 39 2010ஆம் ஆண்டு தமிழ்நாடு கூட்டுறவுச் சங்கங்கள் (மூன்றாம் திருத்தச்) சட்டம்.
167. 2010 43 2010ஆம் ஆண்டு தமிழ்நாடு நிதிநிலை நிருவாக பொறுப்புடைமை
(இரண்டாம் திருத்தச்) சட்டம்.
168. 2012 37 2012ஆம் ஆண்டு தமிழ்நாடு கூட்டுறவுச் சங்கங்கள் (மூன்றாம் திருத்தச்) சட்டம்.
169. 2012 38 2012ஆம் ஆண்டு தமிழ்நாடு கூட்டுறவுச் சங்கங்கள் (நான்காம் திருத்தச்) சட்டம்.
தமிழ்நாடு அரசிதழ் சிறப்பு வெளியீடு 13நோக்கக் காரண விளக்கவுரை.நோக்கக் காரண விளக்கவுரை.
தமிழ்நாடு மாநிலச் சட்ட ஆணையமானது கூறப்பட்ட இயற்றுச் சட்டங்கள் மிகவும் பழமையானதாக மற்றும் வழக்கத்தில் இல்லாமல் போயிருக்கிற குறித்த சில இயற்றுச் சட்டங்களை நீக்கறவு செய்வதற்கு தன்னுடைய பல்வேறு அறிக்கைளில் பரிந்துரை செய்துள்ளது. மாநிலச் சட்ட ஆணையத்தின் பரிந்துரைகளை கருத்தில் கொண்டு அரசானது அத்தகைய மிகவும் பழமையான மற்றும் வழக்கத்தில் இல்லாமல் போயிருக்கிற சட்டங்களை நீக்கறவு செய்வதற்கு முடிவு செய்துள்ளது.
2. இச்சட்டமுன்வடிவானது, மேற்சொன்ன முடிவிற்குச் செயல்வடிவம் கொடுக்க விழைகிறது.
எஸ். இரகுபதி எஸ். இரகுபதி சட்டத்துறை அமைச்சர்.
கி. சீனிவாசன், செயலாளர்.
தலைமைச் செயலகம், சென்னை, 2023 ஜனவரி 12.
14 தமிழ்நாடு அரசிதழ் சிறப்பு வெளியீடு தமிழ்நாடு அரசிதழ் சிறப்பு வெளியீடு 152023ஆம் ஆண்டு ஜனவரி திங்கள் 12ஆம் நாளன்று தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் அறிமுகப்படுத்தப்பட்ட பின்வரும் சட்டமுன்வடிவு, நோக்கக் காரண விளக்கவுரையுடன் சேர்த்து, தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை விதிகளின் 130ஆம் விதியின் கீழ் பொதுத் தகவலுக்காக வெளியிடப்படுகின்றது.
சட்டமன்றப் பேரவை சட்டமுன்வடிவு எண். 3/20232023 சட்டமன்றப் பேரவை சட்டமுன்வடிவு எண். 3
1984ஆம் ஆண்டு தமிழ்நாடு கட்டடம் மற்றும் கட்டுமானத் தொழிலாளர்கள் 1984ஆம் ஆண்டு தமிழ்நாடு கட்டடம் மற்றும் கட்டுமானத் தொழிலாளர்கள் (வேலைவாய்ப்பு நிபந்தனைகள் மற்றும் பல்வகை முறைகள்) சட்டத்தை (வேலைவாய்ப்பு நிபந்தனைகள் மற்றும் பல்வகை முறைகள்) சட்டத்தை நீக்கறவு செய்வதள்கானதொரு சட்டமுன்வடிவு.நீக்கறவு செய்வதள்கானதொரு சட்டமுன்வடிவு.
இந்தியக் குடியரசின் எழுபத்தி மூன்றாம் ஆண்டில் தமிழ்நாடு மாநிலச்
சட்டமன்றப் பேரவையால் பின்வருமாறு சட்டமியற்றப்படுவதாகுக:-
குறுந்தலைப்பு 1. இந்தச் சட்டம், 2023ஆம் ஆண்டு தமிழ்நாடு கட்டடம் மற்றும் கட்டுமானத் தொழிலாளர்கள் (வேலைவாய்ப்பு நிபந்தனைகள் மற்றும் பல்வகை முறைகள்) நீக்கறவுச் சட்டம் என வழங்கப்பெறும்.
தமிழ்நாடு
தமிழ்நாடு சட்டம் சட்டம்
29/1986 இன் 29/1986.
நீக்கறவு 2. 1984ஆம் ஆண்டு தமிழ்நாடு கட்டடம் மற்றும் கட்டுமானத் தொழிலாளர்கள் (வேலைவாய்ப்பு நிபந்தனைகள் மற்றும் பல்வகை முறைகள்) சட்டம் ஈங்கிதனால் நீக்கறவு செய்யப்படுகின்றது.
16 தமிழ்நாடு அரசிதழ் சிறப்பு வெளியீடுநோக்கக் காரண விளக்கவுரைநோக்கக் காரண விளக்கவுரை
1984ஆம் ஆண்டு தமிழ்நாடு கட்டடம் மற்றும் கட்டுமானத் தொழிலாளர்கள் (வேலைவாய்ப்பு நிபந்தனைகள் மற்றும் பல்வகை முறைகள்) சட்டமானது (தமிழ்நாடு சட்டம் 29/1986), கட்டடம் மற்றும் கட்டுமானத் தொழிலாளர்களின் வேலைவாய்ப்பு மற்றும் பணி நிபந்தனைகளை ஒழுங்குபடுத்தவும், அவர்களின் பாதுகாப்பு, உடல்நலம் மற்றும் நலன் மற்றும் அதனுடன் தொடர்புடைய பிற பொருட்பாடுகளுக்காகவும் இயற்றப்பட்டது. கூறப்பட்ட சட்டமானது, இதுநாள்வரை நடைமுறைக்கு வரவில்லை. இதற்கிடையில், மைய அரசானது, 1996ஆம் ஆண்டு கட்டடம் மற்றும் இதர கட்டுமானத் தொழிலாளர்கள் (வேலைவாய்ப்பு முறைப்படுத்துதல் மற்றும் பணி நிபந்தனைகள்) சட்டத்தினை (மையச் சட்டம் 27/1996) இயற்றியுள்ளது. இதன் விளைவாக, கூறப்பட்ட தமிழ்நாடு சட்டம் 29/1986 ஆனது, வழக்கொழிந்து தேவையற்றதாகிவிட்டது. எனவே அரசானது, கூறப்பட்ட தமிழ்நாடு சட்டம் 29/1986-ஐ நீக்கறவு செய்வதென முடிவு செய்துள்ளது.
2. இந்தச் சட்டமுன்வடிவானது மேற்சொன்ன முடிவிற்குச் செயல்வடிவம் கொடுக்க விழைகிறது.
சி.வி. கணேசன், சி.வி. கணேசன், தொழிலாளர் நலன் மற்றும் திறன்
மேம்பாட்டுத்துறை அமைச்சர்.
கி. சீனிவாசன், செயலாளர்.
தலைமைச் செயலகம், சென்னை, 2023 ஜனவரி 12.
தமிழ்நாடு அரசுக்காக சென்னை எழுதுபொருள் மற்றும் அச்சுத் துறை ஆணையரால் அச்சிடப்பட்டு வெளியிடப்பட்டது.