Servants of Knowledge
Tamil Nadu Gazette · Government of Tamil Nadu

L.A Bill No. 4 of 2023 - The Tamil Nadu Government Servants (Conditions of Service) Amendment Act, 2023 (Tamil)

Published 13 January 2023

Type
Extraordinary
Gazette no.
20
Part
Part IV
Extraordinary Type
Tamil Nadu Bills
Section
Section 1
Identifier
in.gazette.tamilnadu.2023-01-13.Extraordinary_20_Part-IV_Section-1
Languages
English, Tamil
Published at
Original source ↗

©

GOVERNMENT OF TAMIL NADU 2023

[Regd. No. TN/CCN/467/2012-14.

[R. Dis. No. 197/2009.

[Price: Rs. 1.60 Paise.

தமிழ்நாடு அரசிதழ் சிறப்பு வெளியீடு ஆணையின்படி வெளியிடப்பட்டது.

No. 20A] சென்னை, வெள்ளிக்கிழமை, ஜனவரி 13, 2023 மார்கழி 29, சுபகிருது, திருவள்ளுவர் ஆண்டு-2053

பகுதி IV—பிரிவு 1

தமிழ்நாடு சட்டமுன்வடிவுகள்தமிழ்நாடு சட்டமுன்வடிவுகள்

2023ஆம் ஆண்டு ஜனவரி திங்கள் 13ஆம் நாளன்று தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் அறிமுகப்படுத்தப்பட்ட பின்வரும் சட்டமுன்வடிவு, நோக்கக் காரண விளக்கவுரையுடன் சேர்த்து, தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை விதிகளின் 130ஆம் விதியின் கீழ் பொதுத் தகவலுக்காக வெளியிடப்படுகின்றது.

சட்டமன்றப் பேரவை சட்டமுன்வடிவு எண். 4/20232023 சட்டமன்றப் பேரவை சட்டமுன்வடிவு எண். 4

2016 ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசுப் பணியாளர்கள் (பணி நிபந்தனைகள்) சட்டத்தை 2016 ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசுப் பணியாளர்கள் (பணி நிபந்தனைகள்) சட்டத்தை மேலும் திருத்தம் செய்வதற்கானதொரு சட்டமுன்வடிவு. மேலும் திருத்தம் செய்வதற்கானதொரு சட்டமுன்வடிவு.

இந்தியக் குடியரசின் எழுபத்தி மூன்றாம் ஆண்டில் தமிழ்நாடு மாநிலச் சட்டமன்றப் பேரவையினால் பின்வருமாறு சட்டமியற்றப்படுவதாகுக:-

1. (1) இந்தச் சட்டம் 2023ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசுப் பணியாளர்கள் (பணி குறுந்தலைப்பு மற்றும் தொடக்கம்.

நிபந்தனைகள்) திருத்தச் சட்டம் என வழங்கப்பெறும்.

(2) இது, 2021 ஆம் ஆண்டு டிசம்பர் திங்கள் 1ஆம் நாளன்று நடைமுறைக்கு வந்துவிட்டதாக கொள்ளப்படுதல் வேண்டும்.

தமிழ்நாடு சட்டம்

21-A எனும் புதிய பிரிவினை 14/2016.

உட்புகுத்துதல்.

2. (இதன் பின்பு இதில் முதன்மைச் சட்டம் எனக் குறிப்பிடப்படுவதான) 2016 ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசுப் பணியாளர்கள் (பணி நிபந்தனைகள்) சட்டத்தின் 21 ஆம் பிரிவிற்குப் பின்பு, பின்வரும் பிரிவானது உட்புகுத்தப்படுதல் வேண்டும், அதாவது:-

21-A. ஆட்சேர்ப்புக்கான கட்டாய தமிழ் மொழித் தாள்.

21-A. ஆட்சேர்ப்புக்கான கட்டாய தமிழ் மொழித் தாள்.-(1) 21 ஆம் பிரிவில் உள்ளடங்கியது எது எவ்வாறு இருப்பினும், 2021 ஆம் ஆண்டு டிசம்பர் திங்கள் 1 ஆம் நாளன்றும் அது முதற்கொண்டும், ஆட்சேர்ப்புக்காக, நேரடி ஆட்சேர்ப்பு மூலம் எந்தவொரு பணியிலும் எந்தவொரு பதவிக்கும், விண்ணப்பிக்கும் நபர் எவரும் ஆட்சேர்ப்புக்காக நடத்தப்படும் தேர்வில் தமிழ் மொழித் தாளில் நாற்பது விழுக்காட்டிற்குக் குறையாமல் மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெறுதல் வேண்டும்.

(2) தமிழ் மொழித் தாளுக்கான பாடத்திட்டம் மற்றும் உள்ளடக்கம் ஆகியன அவ்வப்போது அரசால் ஆணையிடப்படலாகிறவாறு இருத்தல் வேண்டும்.

DTP—Ex-IV-1-T(20A)

[1]2 தமிழ்நாடு அரசிதழ் சிறப்பு வெளியீடு செல்லுந்தன்மை. 3. முதன்மைச் சட்டம் அல்லது நீதிமன்றம் அல்லது பிற அதிகார அமைப்பு எவற்றாலும் வழங்கப்பட்ட தீர்ப்புகள், தீர்ப்பாணைகள் அல்லது கட்டளைகள் எதிலும், அடங்கியுள்ளது எது எவ்வாறிருப்பினும், 2021ஆம் ஆண்டு டிசம்பர் திங்கள் 1 ஆம் நாளன்று தொடங்கும் காலத்தின் போதும் தமிழ்நாடு அரசிதழில் இந்தச் சட்டம் வெளியிடப்படும் தேதியுடன் முடிவடையும் போதும் செய்யப்பட்ட எதுவும் அல்லது எடுக்கப்பட்ட நடவடிக்கை எதுவும், அனைத்து நோக்கத்திற்காக, அனைத்து நேரங்களிலும் இந்தச் சட்டம் நடைமுறையில் இருந்ததைப் போல, சட்டத்துடன் இணங்கிய வகையில் செல்லுந்தன்மையுடன் செய்யப்பட்டிருப்பதாகக் கொள்ளப்படுதல் வேண்டும்.

தமிழ்நாடு அரசிதழ் சிறப்பு வெளியீடு 3

நோக்கக் காரண விளக்கவுரை.நோக்கக் காரண விளக்கவுரை.

2016 ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசுப் பணியாளர்கள்(பணி நிபந்தனைகள்) சட்டத்தின், (தமிழ்நாடு சட்டம் 14/2016) 21ஆம் பிரிவின்படி, நபர் எவரும், மாநிலத்தின் அலுவல் மொழி அதாவது, தமிழ் மொழி குறித்த போதிய அறிவு பெற்றிருந்தாலன்றி, அவர் நேரடி ஆட்சேர்ப்பு மூலம் பணி எதிலும் நியமனம் செய்யத் தகுதியுடையவர் ஆகார். ஆட்சேர்ப்பிற்கான விண்ணப்பத்தின் போது தமிழில் போதிய அறிவு இல்லாத விண்ணப்பதாரர்கள், தகுதி பெற்றிருந்து பணி நியமனம் பெற்றால், அவர்கள் பணியமர்த்தப்பட்ட தேதியிலிருந்து இரண்டாண்டுகள் கால அளவிற்குள் தமிழில் இரண்டாம் வகுப்பு மொழித் தேர்வில் அவர்கள் தேர்ச்சி பெறுதல் வேண்டும் என்ற நிபந்தனைக்கு உட்பட்டு ஆட்சேர்ப்புக்கு விண்ணப்பிக்கவும், அவ்வாறு தவறினால், அவர்கள் பணியிலிருந்து விடுவிக்கப்படுதலும் வேண்டும் என்பதையும் கூறப்பட்ட பிரிவானது இயலச் செய்கிறது.

2. மாநிலத்தில் உள்ள அனைத்து மாநில அரசுத் துறைகளிலும், மாநில பொதுத்துறை நிறுவனங்களிலும் தமிழ் இளைஞர்களை நூறு விழுக்காடு அளவிற்கு ஆட்சேர்ப்பு செய்வதை உறுதி செய்யும் பொருட்டு, ஆட்சேர்ப்பு முகமைகள் நடத்தும் நேரடி ஆட்சேர்ப்புக்கான அனைத்து போட்டித் தேர்வுகளிலும் கட்டாயத் தமிழ் மொழித் தாள் அறிமுகப்படுத்தப்பட்டு, அதற்கிணங்கி 01.12.2021ஆம் தேதியிட்ட அரசாணை (நிலை) எண். 133, மனிதவள மேலாண்மை (எம்) துறையில் ஆணைகள் வெளியிடப்பட்டன. கூறப்பட்ட செயல் ஆணைக்கு சட்டப்பூர்வ விளைபயனை வழங்குவதற்கு, 2016 ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசுப் பணியாளர்கள்(பணி நிபந்தனைகள்) சட்டத்தினை (தமிழ்நாடு சட்டம் 14/2016) தக்கவாறு திருத்தம் செய்வதெனவும், மேலும் கூறப்பட்ட ஆணையின் அடிப்படையில் எடுக்கப்பட்ட நடவடிக்கை எதையும் அல்லது செய்யப்பட்ட எதையும் இயலச் செய்வதெனவும் அரசானது முடிவு செய்துள்ளது.

3. இந்தச் சட்டமுன்வடிவானது, மேற்சொன்ன முடிவிற்கு செயல் வடிவம் கொடுக்க விழைகிறது.

முனைவர். பழனிவேல் தியாக ராஜன், முனைவர். பழனிவேல் தியாக ராஜன், நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சர்.

கி. சீனிவாசன்,கி. சீனிவாசன், செயலாளர்.

தலைமைச் செயலகம், சென்னை, 2023 ஜனவரி 13.

தமிழ்நாடு அரசுக்காக சென்னை எழுதுபொருள் மற்றும் அச்சுத் துறை ஆணையரால் அச்சிடப்பட்டு வெளியிடப்பட்டது.

Cite this issue. Tamil Nadu Gazette, Government of Tamil Nadu, 13 January 2023. Indian Gazettes, https://egazette.servantsofknowledge.in/details/in.gazette.tamilnadu.2023-01-13.Extraordinary_20_Part-IV_Section-1/. Archive identifier in.gazette.tamilnadu.2023-01-13.Extraordinary_20_Part-IV_Section-1.