© [Regd. No. TN/CCN/467/2012-14.
தமிழ்நாடு அரசு
2023
[R. Dis. No. 197/2009. [விலை : ரூ. 1.60 காசு
| தமிழ்நாடு அரசிதழ் ஆணையின்படி வெளியிடப்பட்டது. | ||
எண் 3] சென்னை, புதன்கிழமை, ஜனவரி 18, 2023 தை 4, சுபகிருது, திருவள்ளுவர் ஆண்டு–2054
பகுதி II—பிரிவு 2 இன் இணைப்பு
அரசாங்க அறிவிப்புகளின் தமிழ் மொழிபெயர்ப்புகள்
தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை
அறிவிக்கை
[அரசாணை (2ப) எண். 100, தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு (J1)த் துறை, 8 நவம்பர் 2022] 1948ஆம் ஆண்டு குறைந்தளவு ஊதியங்கள் சட்டத்தின் (மத்தியச் சட்டம் 11/1948) 3ஆம் பிரிவைச் சேர்ந்த (1) உட்பிரிவின் (b) பகுதியிலும் 5ஆம் பிரிவைச் சேர்ந்த (2) உட்பிரிவிலும் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களைக் கொண்டும், 9-1-2019ஆம் நாளிட்ட தமிழ்நாடு அரசிதழின் பாகம் II, பிரிவு - 2 இல் 23 முதல் 25 வரையிலான பக்கங்களில் (ஆங்கிலத்தில்) வெளியிடப்பட்ட II(2)/தொ.வே/22/2019ஆம் எண்ணுள்ள, தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறையின் அறிவிக்கையை இரத்து செய்துவிட்டு அதற்குப் பதிலாகவும், தமிழ்நாட்டு ஆளுநர் அவர்கள், ஆலோசனை குழுவுடன் கலந்தாலோசித்த பின்னர், தமிழ்நாடு மாநிலத்தில் தங்கம் மற்றும் வெள்ளிப் பொருட்கள் தயாரிப்புத் தொழில் சார்ந்த பணி இனங்களில் பணியமர்த்தப்பட்டோருள்ளோ வழங்கத்தக்க குறைந்தளவு ஊதிய வீதங்களை, கீழ்க்காணும் விவர அட்டவணைகள் I மற்றும் II இல் குறிப்பிடப்பட்டுள்ளவாறு இதனால் திருத்தியமைக்கிறார். இதன் வரைவு, மேற்சொன்ன சட்டத்தின் 5 ஆம் பிரிவைச் சேர்ந்த (1) உட்பிரிவின் (b) பகுதியில் கோரியுள்ளவாறு, ஏற்கெனவே வெளியிடப்பட்டுள்ளது.
(2) இந்த அறிவிக்கை தமிழ்நாடு அரசிதழில் வெளியிடப்பட்ட நாளிலிருந்தும், அந்நாள் முதற்கொண்டும் நடைமுறைக்கு வரும்.
விவர அட்டவணை-I
தங்கத்தாலான பொருட்கள் தயாரிப்பு
தொடர்
பொருட்கள் தயாரிப்பதற்கான
குறைந்தளவு அடிப்படை ஊதிய வீதங்கள் எண்
தங்கத்தின் எடை
(கிராம் ஒன்றுக்கு)
(1) (2)
(3)
கற்கள்
கற்கள்
பொருத்தப்படும் பொருத்தப்படாத
பொருட்கள்
பொருட்கள்
(ரூ. காசு)
(ரூ. காசு)
அ. செய்யும் வேலைக்கேற்ற ஊதியங்கள்
1. 1 கிராம் முதல் 5 கிராம் வரை 120.17 300.40
[ 1 ]
DTP-II-2-(3) (T Sup)—12 தொடர் பொருட்கள் தயாரிப்பதற்கான குறைந்தளவு அடிப்படை ஊதிய வீதங்கள் எண்
தங்கத்தின் எடை
(கிராம் ஒன்றுக்கு)
(1) (2)
(3)
கற்கள்
கற்கள்
பொருத்தப்படும் பொருத்தப்படாத
பொருட்கள்
பொருட்கள்
(ரூ. காசு)
(ரூ. காசு)
5. 30 கிராமுக்கு மேல் 40 கிராமிற்குள் 48.07 96.14
6. 40 கிராமுக்கு மேல் 50 கிராமிற்குள் 42.09 84.15
7. 50 கிராமுக்கு மேல் 75 கிராமிற்குள் 36.07 72.12
8. 75 கிராமுக்கு மேல் 30.03 60.07
ஆ. நாள் அடிப்படையிலான அடிப்படை ஊதியங்கள்: நாளொன்றுக்கு ரூ.399.50
விவர அட்டவணை-II
வெள்ளிப் பொருட்கள் தயாரிப்பு
அ. கொலுசு தயாரிப்பு
தொடர்
பணியின் வகை குறைந்த அளவு அடிப்படை ஊதிய வீதங்கள் எண்
(கிலோ ஒன்றுக்கு)
(ரூ. காசு)
(1) (2)
(3)
1. கம்பி இழுத்தல்
48.07
2. ஜதை வளைத்தல்
600.83
3. பூக்கள் தயாரிப்பு
(a) கெட்டி
360.52
(b) மெல்லியது
300.40
4. அரும்பு
72.12
5. சங்கிலி
120.17
6. சலங்கை
300.40
7. முகப்பு
480.69
8. திருகாணி 420.55
9. ஒன்று சேர்த்தல் (முழு வடிவம்)
540.74
ஆ. ஏனைய வெள்ளிப் பொருட்கள்:
தொடர்
பொருட்கள் தயாரிப்பதற்கான
குறைந்த அளவு அடிப்படை ஊதிய வீதங்கள் எண்
வெள்ளியின் எடை
(ஒவ்வொரு 10 கிராம் மற்றும் அதன்
பகுதிக்கு)
(1) (2)
(3)
எளிய
இனங்களுக்கு
கலை வேலைப்பாடுகளுடன் கூடியவைகளுக்கு
(ரூ. காசு) (ரூ. காசு)
1. 1 கிராம் முதல் 10 கிராம் வரை 72.12 96.14
2. 10 கிராமுக்கு மேல் 20 கிராமிற்குள் 70.08 90.14
3. 20 கிராமுக்கு மேல் 30 கிராமிற்குள் 66.13 84.15
4. 30 கிராமுக்கு மேல் 40 கிராமிற்குள் 62.07 78.11 3 தொடர் பொருட்கள் தயாரிப்பதற்கான குறைந்த அளவு அடிப்படை ஊதிய வீதங்கள் எண்
வெள்ளியின் எடை
(ஒவ்வொரு 10 கிராம் மற்றும் அதன்
பகுதிக்கு)
(1) (2)
(3)
எளிய
இனங்களுக்கு
கலை வேலைப்பாடுகளுடன் கூடியவைகளுக்கு
(ரூ. காசு) (ரூ. காசு)
7. 100 கிராமுக்கு மேல் 200 கிராமிற்குள் 54.06 72.12
8. 200 கிராமுக்கு மேல் 500 கிராமிற்குள் 48.07 62.07
9. 500 கிராமுக்கு மேல் 1000 கிராமிற்குள் 36.07 48.07
10. ஒரு கிலோ கிராமுக்கு மேல் 30.03 38.03
A. நாள் அடிப்படையிலான அடிப்படை ஊதியங்கள்: நாளொன்றுக்கு ரூ.386.00
விளக்கங்கள்:—(1) அகவிலைப்படி : மேலே நிர்ணயிக்கப்பட்ட குறைந்த அளவு அடிப்படை ஊதிய வீதங்களுடன் பணியாளர்களுக்குக் கீழே குறிப்பிடப்பட்டுள்ளவாறு அகவிலைப்படி வழங்கப்பட வேண்டும்.
(i) அகவிலைப்படியானது, 2010 ஆம் ஆண்டிற்கான சென்னை மாநகர நுகர்வோர் சராசரி விலைக்குறியீட்டு எண்ணான (2001=100 புள்ளிகள் என்பதை அடிப்படையாகக் கொண்ட) 161 உடன் இணைக்கப்பட்டுள்ளது. 161 புள்ளிகளுக்கு மேல் உயரும் ஒவ்வொரு புள்ளிக்கும் அகவிலைப்படி நாளொன்றுக்கு ரூ. 2.36 (இரண்டு ரூபாய் முப்பத்தாறு காசுகள் மட்டும்) கூடுதலாக அகவிலைப்படி வழங்கப்பட வேண்டும்.
(ii) முந்தைய 12 மாதங்களுக்கான (அதாவது ஜனவரி முதல் டிசம்பர் வரை) சராசரி நுகர்வோர் விலைக் குறியீட்டினை அடிப்படையாகக் கொண்டு, ஒவ்வோர் ஆண்டும் ஏப்ரல் முதல் நாளிலிருந்து அகவிலைப்படி கணக்கிடப்பட வேண்டும்.
(iii) முந்தைய ஆண்டிற்கான சென்னை மாநகர சராசரி நுகர்வோர் விலைக் குறியீட்டு எண்ணை அடிப்படையாகக் கொண்ட முதல் கணக்கீடு, இந்த அறிவிக்கை தமிழ்நாடு அரசிதழில் வெளியிடப்படும் நாளிலிருந்து செயலுக்கு வரும்.
(2) மாதாந்திர ஊதிய வீதங்களைக் கணக்கிடுவதற்கு நாள் ஊதிய வீதத்தை 30 ஆல் பெருக்க வேண்டும்.
(3) பணியின் தன்மை ஒரே மாதிரியாக இருக்கும்போது, அல்லது ஒரே பணியைச் செய்யும் போது ஆண் மற்றும் பெண் தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் ஊதியத்தில் எவ்வித வேறுபாடும் இருக்கக்கூடாது.
(4) தற்போது வழங்கப்பட்டு வரும் ஊதியங்கள், இங்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள குறைந்த அளவு ஊதியங்களைக் காட்டிலும் அதிகமாக இருக்குமிடங்களிலெல்லாம் அதே ஊதியம் தொடர்ந்து வழங்கப்பட வேண்டும்.
முகமது நசிமுத்தின்,
அரசு கூடுதல் தலைமைச் செயலாளர்.
(தமிழாக்கம்)
ந. அருள், இயக்குநர் (மு.கூ.பொ), தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தி (மொழிபெயர்ப்பு)த் துறை.
தமிழ்நாடு அரசுக்காக சென்னை எழுதுபொருள் மற்றும் அச்சுத் துறை ஆணையரால்
அச்சிடப்பட்டு வெளியிடப்பட்டது.