Servants of Knowledge
Tamil Nadu Gazette · Government of Tamil Nadu

Notifications or Orders of interest to a section of the public issued by Secretariat Departments.

Published 01 February 2023

Type
Ordinary
Gazette no.
5
Part
Part II
Notifications
GOVERNMENT NOTIFICATIONS - Tamil Translations
Section
Section 1-T-Sup
Identifier
in.gazette.tamilnadu.2023-02-01.Ordinary_5_Part-II_Section-1-T-Sup
Languages
English, Tamil
Published at
Original source ↗

© தமிழ்நாடு அரசு 2023

[Regd. No. TN/CCN/467/2012-14. [R. Dis. No. 197/2009. [விலை : ரூ. 1.60 காசு

தமிழ்நாடு அரசிதழ் ஆணையின்படி வெளியிடப்பட்டது.

எண் 5] சென்னை, புதன்கிழமை, பிப்ரவரி 1, 2023 ைத 18, சுபகிருது, திருவள்ளுவர் ஆண்டு–2054

பகுதி II—பிரிவு 1 இன் இணைப்பு

அரசாங்க அறிவிப்புகளின் தமிழ் மொழிபெயர்ப்புகள்

நிதித் துறை

குழந்தைகள் நீங்கலாக ஏனைய பயனாளிகளைக் கொண்ட மாநில திட்டங்களுக்கான அறிவிக்கை

[அரசாணை (நிலை) எண். 355, நிதி (T&A-III)த் துறை, நாள் : 21.11.2022]

பிற்சேர்க்கை-I

சேவைகள் அல்லது பயன்கள் அல்லது சலுகைகள் அல்லது மானியங்களை வழங்குவதற்கான அடையாள ஆவணமாக ஆதாரைப் பயன்படுத்துவது, அரசின் சேவை வழங்கல் நடைமுறையை எளிதாக்குவதுடன் அவற்றில் வெளிப்படைத்தன்மையையும், செயல்திறனையும் கொண்டுவந்து, பயனாளிகள், அவர்களின் உரிமைகளை நேரடியாக பெறுவதற்கு, அவர்கள் தம் அடையாளத்தை மெய்பிப்பதற்காக பல ஆவணங்களை அளிப்பதன் அவசியத்தை நீக்கி, வசதியான மற்றும் தடையற்ற முறையில் அத்தகைய சேவைகளை பெற வகை செய்ய வேண்டுமென்பதாலும்;

கருவூலக் கணக்குத் துறையானது (இனி, 'துறை' எனக் குறிப்பிடப்படும்) இணையவழியில் பட்டிகளுக்கான தொகையைச் செலுத்துவதற்கும் பயனாளிகளின் கணக்கில் தொகையைச் செலுத்துவதற்குமான மின்னணு இசைவளிப்பு முறை (ECS) வாயிலாக (இனி 'பயன்' எனக் குறிப்பிடப்படும்) வகை செய்யும் IFHRMS- ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனிதவள மேலாண்மை ஏற்பாட்டு முறையை, (இனி 'திட்டம்' எனக் குறிப்பிடப்படும்) நிருவகித்து வருகிறது. இது, கருவூலங்கள் மற்றும் கணக்குத் துறையின் (இனி 'செயற்படுத்தும் முகமை' எனக் குறிப்பிடப்படும்), வாயிலாக செயல்படுத்தப்பட்டு வருவதாலும்;

மின்னணு இசைவளிப்பு முறை வாயிலாக சம்பளம், ஓய்வூதியம் மற்றும் பல்வேறு திட்டப் பயனாளிகளுக்கான தொகை வழங்கல்கள் போன்றவற்றை இணைய வழி செலுத்தும் திட்டத்தின் கீழ் (இனி பயன் எனக் குறிப்பிடப்படும்) அரசு ஊழியர்களுக்கும், அரசு ஓய்வூதியதாரர்களுக்கும் தமிழ்நாடு அரசால் பல்வேறு துறைகள் வாயிலாக செயற்படுத்தப்படும் பல்வேறு திட்டங்களின் பயனாளிகளுக்கும் (இனி 'பயனாளிகள்' எனக் குறிப்பிடப்படும்) நடப்பில் உள்ள திட்ட வழிகாட்டுதல்களின்படி அவற்றைச் செயற்படுத்தும் முகமையால் வழங்கப்பட்டு வருவதாலும்;

மேற்சொன்ன திட்டம், தமிழ்நாடு அரசின் தொகுப்பு நிதியிலிருந்து மேற்கொள்ளப்படும் தொடர் செலவினங்களுடன் தொடர்புடையதாக இருப்பதாலும்;

தற்போது, 2016ஆம் ஆண்டு ஆதார் (நிதி மற்றும் ஏனைய மானியங்கள், பயன்கள் மற்றும் சேவைகளை உண்மையான பயனாளிகளைக் கண்டறிந்து வழங்குதல்) சட்டத்தின் (மத்தியச் சட்டம் 18/2016) (இனி மேற்சொன்ன சட்டம் என்று குறிப்பிடப்படும்) 7 ஆ ம் பிரிவில் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களைக் கொண்டு, தமிழ்நாட்டு ஆளுநர் அவர்கள், பின்வருவனவற்றை இதனால் அறிவிக்கிறார், அவையாவன;

(1) திட்டத்தின் கீழ் பயன்களைப் பெறத் தகுதியுடைய நபரொருவர், தான் ஆதார் வைத்திருப்பதற்கான சான்றை அளிக்க அல்லது ஆதார் சரிபார்ப்பு நடைமுறையை மேற்கொள்ள வேண்டும்.

5-II-1-(T Sup)—1

[ 1 ]2 (2) திட்டத்தின் கீழ் பயன்களைப் பெற விரும்புகிற ஆதார் எண் வைத்திருக்காத அல்லது நாளது வரையில் ஆதார் எண்ணுக்கு விண்ணப்பிக்காத பதிவு செய்யாத யாதொரு நபரும், திட்டத்தில் பதிவு செய்வதற்கு முன்னர் ஆதார் எண்ணுக்கு விண்ணப்பிப்பது அவசியமாகும்.

மேலும், மேற்சொன்ன சட்டத்தின் 3ஆம் பிரிவின் படி, ஆதார் எண் பெறுவதற்கு உரிமையுடைய அத்தகைய நபர்கள் யாதொரு ஆதார் பதிவு மையத்திற்குச் (இந்திய தனித்துவ அடையாள எண் வழங்கல் ஆணைய இணையதளம்: www.uidai.gov.in ) இல் பட்டியல் இடம் பெற்றுள்ளது) சென்று ஆதார் எண்ணுக்காக பதிவு செய்து கொள்ள வேண்டும்.

(3) 2016ஆம் ஆண்டு, ஆதார் (பதிவு மற்றும் நாளதுவரையாக்குதல்) ஒழுங்குமுறை விதிகளின் 12ஆம் ஒழுங்குமுறை விதியின் படி, துறையானது, தன் செயற்படுத்தும் முகமை வாயிலாக ஆதார் எண்ணை நாளதுவரையில் பதிவு செய்யாத பயனாளிகளுக்கு ஆதார் எண் பதிவு செய்வதற்கான வசதிகளை வழங்க வேண்டும். மேலும், தொடர்புடைய வட்டாரம் அல்லது வட்டத்தில் ஆதார் பதிவு மையம் இல்லாத நேர்வில், துறையானது, தன் செயற்படுத்தும் முகமை வாயிலாக, தற்போதைய இந்திய தனித்துவ அடையாள எண் வழங்கல் ஆணையப் பதிவாளர்களுடன் ஒருங்கிணைந்து அல்லது இந்திய தனித்துவ அடையாள எண் வழங்கல் ஆணையப் பதிவாளராக தம்மைப் பதிவு செய்து கொண்டு பயனாளிகளுக்கு வசதியான இடங்களில் ஆதார் பதிவு செய்வதற்கான வசதிகளை வழங்க வேண்டும்;

மேலும், நபரொருவருக்கு ஆதார் எண் ஒதுக்கீடு செய்யும் வரையில், பின்வரும் ஆவணங்களை அளிக்கவேண்டும் என்ற நிபந்தனைக்குட்பட்டு, அத்தகைய நபருக்கு இத்திட்டத்தின் கீழ் வரும் பயன்கள் வழங்கப்பட வேண்டும். அவையாவன;- (அ) நபரொருவர் ஆதார் எண் வேண்டி விண்ணப்பித்திருந்தால், அவரின் ஆதார் விண்ணப்ப அடையாளச் சீட்டு மற்றும் பின்வரும் ஆவணங்களில் ஏதேனும் ஒன்று, அவையாவன;-

i. புகைப்படத்துடன் கூடிய வங்கி அல்லது அஞ்சலக சேமிப்புக் கணக்கு புத்தகம்; அல்லது

ii. நிரந்தர கணக்கு எண் அட்டை; அல்லது

iii. கடவுச்சீட்டு; அல்லது

iv. குடும்ப அட்டை, அல்லது

v. வாக்காளர் அடையாள அட்டை; அல்லது

vi. மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதிச்சட்ட (MGNREGA) அடையாள அட்டை; அல்லது vii. புகைப்படத்துடன் கூடிய உழவர் (கிசான் வங்கிக் கணக்குப் புத்தகம்)

viii. 1988ஆம் ஆண்டு மோட்டார் வாகனங்கள் சட்டத்தின் (மத்திய சட்டம் 59/1988) கீழ் உரிமம் வழங்கும் அதிகாரியால் வழங்கப்பட்ட ஓட்டுநர் உரிமம்

ix. அரசிதழ் பதிவு பெற்ற அலுவலர் அல்லது வட்டாட்சியரால் அலுவல் முறை கடித ஏட்டில் வழங்கப்பட்ட தொடர்புடைய நபரின் புகைப்படத்துடன் கூடிய அடையாளச் சான்றிதழ்

x. துறையால் குறிப்பிடப்பட்டுள்ளவாறான ஏனைய யாதொரு ஆவணம்.

இருப்பினும், இந்நோக்கத்திற்காகவே துறையால் பணியமர்த்தப்பட்ட அலுவலர் ஒருவரால் மேற்சொன்ன ஆவணங்கள் சரிபார்க்கப்படலாம்.

2. இத்திட்டத்தின் கீழ் பயன்பெறும் பயனாளிகளுக்கு வசதியாக பயன்களை வழங்குவதற்கு ஏதுவாக, மேற்சொன்னவாறு தேவைப்படும் ஆவணங்கள் குறித்து பயனாளிகள் அறிந்து கொள்ளும் வகையில் ஊடகங்கள் வாயிலாக பரவலாக விளம்பரம் செய்யப்படுவதை உறுதிசெய்யத் தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் துறை அதன் செயற்படுத்தும் முகவரமைப்பு வாயிலாக மேற்கொள்ள வேண்டும்.

3. பயனாளிகளின் உயிரி அளவு உள்ளீடுகளைச் சரியான முறையில் பெற இயலாத சூழலில் அல்லது ஏனைய யாதொரு காரணத்தால் தொடர்புடைய நபரின் ஆதார் எண்ணை உறுதிப்படுத்தும் சோதனை தோல்வியுறும் அனைத்து நேர்வுகளிலும், பின்வரும் தீர்வு வழிமுறைகள் பின்பற்றப்பட வேண்டும். அவையாவன;-

(அ) கைரேகை தெளிவின்றி இருக்கும் நேர்வில், உறுதிப்படுத்துவதற்காக, கருவிழி ஒளிநகல் அல்லது முக அடையாள உறுதி ச் சோதனை மேற்கொள்ளப்பட வேண்டும். துறை தன் செயற்படுத்தும் முகமை வாயிலாக, தடையில்லாமல் தொடர்ந்து பயன்களை வழங்குவதற்காக கைரேகை சரிபார்ப்பு வசதியுடன், கருவிழி ஒளிநகலெடுப்பான் அல்லது முக அடையாள உறுதிச் சோதனை ஆகியவற்றுக்கும் வகை செய்திருக்க வேண்டும்.

(ஆ) கைரேகைகள் அல்லது கருவிழி ஒளிநகலெடுப்பான் அல்லது முக அடையாள உறுதிச்சோதனை வாயிலான உயிரி அள வு (biometric) உறுதிச்சோதனை நிறைவுறாத நிலையில், நேர்விற்கேற்ப, இயன்றவரை ஆதார் ஒரு முறை மட்டுமே பயன்படும் கடவுச்சொல் அல்லது வரையறுக்கப்பட்ட செல்லுபடியாகும் கால அளவைக் கொண்ட ஒரு முறை மட்டுமே பயன்படும் கடவுச்சொல் வழங்கப்பட வேண்டும்; மற்றும்

(இ) உயிரி அளவு அல்லது ஆதார் ஒரு முறை மட்டுமே பயன்படும் கடவுச்சொல் அல்லது கால அடிப்படையிலான ஒரு முறை மட்டுமே பயன்படும் கடவுச்சொல் வாயிலான உறுதிச்சோதனைக்கு வாய்ப்பில்லாத, ஏனைய அனைத்து நேர்வுகளிலும், இத்திட்டத்தின் கீழ்வரும் பயன்கள், பயனாளிகளால் நேரடியாக அளிக்கப்படும் ஆதார் கடிதத்தில் அச்சிடப்பட்டுள்ள உடன் விளைவுக் குறியீடு (QR Code) வாயிலாக உண்மைத்தன்மை உறுதிசெய்யப்பட்டு, பயனாளிகளுக்கு வழங்கப்படும். மேலும், துறை தன் செயற்படுத்தும் முகமை வாயிலாக ஏதுவான இடங்களில் உடன் விளைவுக் குறியீடு உள்ளீட்டு கருவிகளுக்குத் (QR Code) தேவையான ஏற்பாடுகளைச் செய்து தர வேண்டும்.

3

4. மேற்சொன்னவற்றுடன், இத்திட்டத்தின் கீழ் யாதொரு உண்மையான பயனாளியும் அவருக்குரிய பயன்களைப் பெறாமல் இருந்துவிடக் கூடாது என்பதை உறுதி செய்வதற்காக, மத்திய அமைச்சரவைச் செயலகத்தின் நேரடி பயன் மாற்ற திட்டத்தின் 19.12.2017 ஆம் நாளிட்ட அலுவலகக் குறிப்பாணையில் குறிப்பிடப்பட்டுள்ளவாறு, பிழைகளைக் கையாளும் ஏற்பாட்டுமுறையைத் துறை தன் செயற்படுத்தும் முகமை வாயிலாகப் பின்பற்றப்பட வேண்டும்.

5. இந்த அறிவிக்கை, தமிழ்நாடு அரசிதழில் வெளியிடப்படும் நாளிலிருந்து செயலுக்கு வரும்.

ந. முருகானந்தம், கூடுதல் தலைமைச் செயலாளர்.

பிற்சேர்க்கை -II

குழந்தைகள் பயனாளிகளாக உள்ள நேர்வில், மாநில திட்டங்களுக்கான அறிவிக்கை

சேவைகள் அல்லது பயன்கள் அல்லது சலுகைகள் அல்லது மானியங்களை வழங்குவதற்கான அடையாள ஆவணமாக ஆதாரைப் பயன்படுத்துவது, அரசின் சேவை வழங்கல் நடைமுறையை எளிதாக்குவதுடன் அவற்றில் வெளிப்படைத்தன்மையையும், செயல்திறனையும் கொண்டுவந்து, பயனாளிகள், அவர்களின் உரிமைகளை நேரடியாக பெறுவதற்கு, அவர்கள் தம் அடையாளத்தை மெய்பிப்பதற்காக பல ஆவணங்களை அளிப்பதன் அவசியத்தைத் நீக்கி, வசதியான மற்றும் தடையற்ற முறையில் அத்தகைய சேவைகளை பெற வகை செய்ய வேண்டுமென்பதாலும்;

கருவூலக் கணக்குத் துறையானது (இனி, 'துறை' எனக் குறிப்பிடப்படும்) இணையவழியில் பட்டிகளுக்கான தொகையைச் செலுத்துவதற்கும் பயனாளிகளின் கணக்கில் தொகையைச் செலுத்துவதற்குமான மின்னணு இசைவளிப்பு முறை (ECS) வாயிலாக (இனி 'பயன்' எனக் குறிப்பிடப்படும்) வகை செய்யும் IFHRMS- ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனிதவள மேலாண்மை ஏற்பாட்டு முறையை, (இனி 'திட்டம்' எனக் குறிப்பிடப்படும்) நிருவகித்து வருகிறது.

இது, கருவூலங்கள் மற்றும் கணக்குத் துறையின் (இனி 'செயற்படுத்தும் முகமை' எனக் குறிப்பிடப்படும்), வாயிலாக செயல்படுத்தப்பட்டு வருவதாலும்;

மின்னணு இசைவளிப்பு முறை வாயிலாக சம்பளம், ஓய்வூதியம் மற்றும் பல்வேறு திட்டப் பயனாளிகளுக்கான தொகை வழங்கல்கள் போன்றவற்றை இணைய வழி செலுத்தும் திட்டத்தின் கீழ் (இனி பயன் எனக் குறிப்பிடப்படும்) அரசு ஊழியர்களுக்கும், அரசு ஓய்வூதியதாரர்களுக்கும் தமிழ்நாடு அரசால் பல்வேறு துறைகள் வாயிலாக செயற்படுத்தப்படும் பல்வேறு திட்டங்களின் பயனாளிகளுக்கும் (இனி 'பயனாளிகள்' எனக் குறிப்பிடப்படும்) நடப்பில் உள்ள திட்ட வழிகாட்டுதல்களின்படி அவற்றைச் செயற்படுத்தும் முகமையால் வழங்கப்பட்டு வருவதாலும்;

மேற்சொன்ன திட்டம், தமிழ்நாடு அரசின் தொகுப்பு நிதியிலிருந்து மேற்கொள்ளப்படும் தொடர் செலவினங்களுடன் தொடர்புடையதாக இருப்பதாலும்;

தற்போது, 2016ஆம் ஆண்டு ஆதார் (நிதி மற்றும் ஏனைய மானியங்கள், பயன்கள் மற்றும் சேவைகளை உண்மையான பயனாளிகளைக் கண்டறிந்து வழங்குதல்) சட்டத்தின் (மத்தியச் சட்டம் 18/2016) (இனி மேற்சொன்ன சட்டம் என்று குறிப்பிடப்படும்) 7ஆம் பிரிவில் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களைக் கொண்டு, தமிழ்நாட்டு ஆளுநர் அவர்கள், பின்வருவனவற்றை இதனால் அறிவிக்கிறார், அவையாவன:

1. (1) திட்டத்தின் கீழ் பயன்களைப் பெற விரும்பும் குழந்தை ஒன்று, ஆதார் வைத்திருப்பதற்கான சான்றை அளிக்க அல்லது ஆதார் சரிபார்ப்பு நடைமுறையை மேற்கொள்ள வேண்டும்.

(2) திட்டத்தின் கீழ் பயன்களைப் பெற விரும்புகிற ஆதார் எண் வைத்திருக்காத அல்லது நாளது வரையில் ஆதார் எண்ணுக்கு விண்ணப்பிக்காத பதிவு செய்யாத யாதொரு குழந்தையும், திட்டத்தில் பதிவு செய்வதற்கு முன்னர் ஆதார் எண்ணுக்கு விண்ணப்பிப்பது அவசியமாகும்;

மேலும், மேற்சொன்ன சட்டத்தின் 3 ஆம் பிரிவின் படி, ஆதார் எண் பெறுவதற்கு உரிமையுடைய அத்தகைய கு ழந்தை யாதொரு ஆதார் பதிவு மையத்திற்குச் (இந்திய தனித்துவ அடையாள எண் வழங்கல் ஆணைய இணையதளம்: www.uidai.gov.in) இல் பட்டியல் இடம் பெற்றுள்ளது) சென்று ஆதார் எண்ணுக்காக பதிவு செய்து கொள்ள வேண்டும்.

(3) 2016ஆம் ஆண்டு, ஆதார் (பதிவு மற்றும் நாளதுவரையாக்குதல்) ஒழுங்குமுறை விதிகளின் 12ஆம் ஒழுங்குமுறை விதியின் படி, துறையானது, தன் செயற்படுத்தும் முகமை வாயிலாக ஆதார் எண்ணை நாளதுவரையில் பதிவு செய்யாத பயனாளிகளுக்கு ஆதார் எண் பதிவு வசதிகளை வழங்க வேண்டும். மேலும், தொடர்புடைய வட்டாரம் அல்லது வட்டத்தில் ஆதார் பதிவு மையம் இல்லாத நேர்வில், துறையானது, தன் செயற்படுத்தும் முகமை வாயிலாக, தற்போதைய இந்திய தனித்துவ அடையாள எண் வழங்கல் ஆ ணை யப் பதிவாளர்களுடன் ஒருங்கிணைந்து அல்லது இந்திய தனித்துவ அடையாள எண் வழங்கல் ஆணையப் பதிவாளராக தம்மைப் பதிவு செய்து கொண்டு பயனாளிகளுக்கு வசதியான இடங்களில் ஆதார் பதிவு செய்யும் வசதிகளை வழங்க வேண்டும்;

மே லும், நபரொருவருக்கு ஆதார் எண் ஒதுக்கீடு செய்யும் வரையில், பின்வரும் ஆவணங்களை அளிக்கவேண்டும் என்ற நிபந்தனைக்குட்பட்டு, அத்தகைய நபருக்கு இத்திட்டத்தின் கீழ் வரும் பயன்கள் வழங்கப்பட வேண்டும். அவையாவன;- (அ) குழந்தை ஐந்து வயது எய்திய பின்னர், உயிரி அளவு (பயோமெட்ரிக்) முறையில் ஆதார் எண் வேண்டி விண்ணப்பித்திருந்தால் அவரின் ஆதார் விண்ணப்ப அடையாளச் சீட்டு அல்லது பயோமெட்ரிக் புதுப்பித்தல் குறித்த அடையாளச்சீட்டு; மற்றும் பின்வரும் ஆவணங்களில் ஏதேனும் ஒன்று, அவையாவன;-4 i. பிறப்பு சான்றிதழ் அல்லது உரிய அதிகாரியால் வழங்கப்பட்ட பிறப்பு குறித்த ஆவணம்; அல்லது ii. பள்ளி முதல்வரால் உரியவாறு கையொப்பமிடப்பட்ட பெற்றோர் பெயருடன் கூடிய பள்ளி அடையாள அட்டை மற்றும் (c) தற்போதுள்ள திட்ட வழிகாட்டி குறிப்புகளின் படி பெற்றோர் அல்லது சட்டப்படியான காப்பாளருடன் பயனாளியின் உறவுமுறை குறித்த சான்றாக பின்வரும் ஆவணங்களில் ஏதேனும் ஒன்று. அதாவது;-

i. பிறப்புச் சான்றிதழ் அல்லது, உரிய அதிகாரியால் வழங்கப்பட்ட பிறப்பு குறித்த ஆவணம்; அல்லது ii. குடும்ப அட்டை; அல்லது

iii. முன்னாள் படைவீரர் பங்களிப்பு நலத்திட்ட அட்டை அல்லது தொழிலாளர் மாநில ஈட்டுறுதிக் கழக அட்டை; அல்லது ஒன்றிய அரசு நலத்திட்ட அட்டை; அல்லது

iv. ஓய்வூதிய அட்டை; அல்லது

v. இராணுவப் பண்டகசாலை அட்டை; அல்லது

vi. யாதொரு அரசு குடும்ப உரிம அட்டை; அல்லது

vii. அரசால் குறிப்பிடப்பட்டவாறான ஏனைய யாதொரு ஆவணம்.

இந்நோக்கத்திற்காகவே துறையால் பணியமர்த்தப்பட்ட அலுவலர் ஒருவரால் மேற்சொன்ன ஆவணங்கள் சரிபார்க்கப்படலாம்.

2. இத்திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு பயன்களை வழங்குவதற்கு ஏதுவாக, மேற்சொன்ன தேவையைப் பற்றி பயனாளிகள் அறிந்து கொள்ளும் வகையில், ஊடகங்கள் வாயிலாக பரவலாக விளம்பரம் வழங்கப்படுவதை உறுதிசெய்யத் தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் துறை அதன் செயற்படுத்தும் முகவரமைப்பு வாயிலாக மேற்கொள்ள வேண்டும்.

3. உயிரி அளவு உள்ளீடுகளைச் சரியான முறையில் பெற இயலாத சூழலில், அல்லது ஏனைய யாதொரு காரணத்தால் தொடர்புடைய நபரின் ஆதார் எண்ணை உறுதிப்படுத்தும் சோதனை தோல்வியுறும் அனைத்து நேர்வுகளிலும், பின்வரும் தீர்வு வழிமுறைகள் உடனடியாக பின்பற்றப்படும். அவையாவன;-

(அ) கைரேகை தெளிவின்றி இருக்கும் நேர்வில், உறுதிப்படுத்துவதற்காக, கருவிழி ஒளிநகல் அல்லது முக அடையாளத்திற்கான உறுதிதன்மை மேற்கொள்ளப்பட வேண்டும். துறை அதன் செயற்படுத்தும் முகமை வாயிலாக, தடையில்லாமல் தொடர்ந்து பயன்களை வழங்குவதற்காக கைரேகை சரிபார்ப்பு வசதியுடன் கருவிழி ஒளிநகலெடுப்பான் அல்லது முக அடையாள உறுதிச் சோதனை ஆகியவற்றுக்கும் வகை செய்திருக்க வேண்டும்;

(ஆ) கைரேகைகள் அல்லது கருவிழி ஒளிநகலெடுப்பான் அல்லது முக அடையாள உறுதி சோதனை வாயிலான உயிரி அளவு (biometric) உறுதிச் சோதனை நிறைவுறாத நிலையில், நேர்விற்கேற்ப, இயன்றவரை ஆதார் ஒரு முறை மட்டுமே பயன்படும் கடவுச்சொல் அல்லது வரையறுக்கப்பட்ட செல்லுபடியாகும் கால அளவைக் கொண்ட ஒரு முறை மட்டுமே பயன்படும் கடவுச்சொல் வழங்கப்பட வேண்டும்;

(இ) உயிரி அளவு அல்லது ஆதார் ஒரு முறை மட்டுமே பயன்படும் கடவுச்சொல் அல்லது கால அடிப்படையிலான ஒரு முறை மட்டுமே பயன்படும் கடவுச்சொல் வாயிலான உறுதிச்சோதனைக்கு வாய்ப்பில்லாத, ஏனைய அனைத்து நேர்வுகளிலும், இத்திட்டத்தின் கீழ்வரும் பயன்கள், பயனாளிகளால் நேரடியாக அளிக்கப்படும் ஆதார் கடிதத்தில் அச்சிடப்பட்டுள்ள உடன் விளைவுக் குறியீடு (QR Code) வாயிலாக உண்மைத்தன்மை உறுதிசெய்யப்பட்டு, பயனாளிகளுக்கு வழங்கப்படும். மேலும், துறை தன் செயற்படுத்தும் முகமை வாயிலாக ஏதுவான இடங்களில் உடன் விளைவுக் குறியீடு உள்ளீட்டு கருவிகளுக்குத் (QR Code) தேவையான ஏற்பாடுகளைச் செய்து தர வேண்டும்.

4. மேலே என்ன சொல்லியிருப்பினும், ஆதார் எண் சரிபார்ப்பு வாயிலாக குழந்தை ஒருவரின் அடையாளத்தை மெய்பிக்கத் தவறினால், அல்லது ஆதார் எண்ணை வைத்திருப்பதற்கான சான்றினை அளிக்கத் தவறினால் அல்லது ஆதார் எண் பதிவுக்கான விண்ணப்பத்தைத் அளித்திருக்கும் குழந்தைக்கு ஆதார் எண் ஒதுக்கப்படாத நேர்வில், யாதொரு குழந்தைக்கும் திட்டத்தின் கீழ் பயன் மறுக்கப்படக்கூடாது. பத்தி 1 இன் துணைப் பத்தி (3) இன் விதித்துறையின் உட்பிரிவுகள் b மற்றும் c இல் குறிப்பிடப்பட்டுள்ளபடி உட்பிரிவுகளில் குறிப்பிடப்பட்டுள்ளவாறு ஏனைய ஆவணங்களின் அடிப்படையில் அவரது அடையாளத்தைச் சரிபார்ப்பதன் வாயிலாக அவருக்கு உரிய பயன் வழங்கப்படும். மற்ற ஆவணங்கள், அவ்விவரங்களைப் பதிவு செய்வதற்காக தனிப் பதிவேடு ஒன்றும் பராமரிக்கப்பட வேண்டும், இது துறையால் அதன் செயல்படுத்தும் முகமை வாயிலாக குறித்த காலத்திற்கொரு முறை ஆய்வு செய்யப்பட்டு தணிக்கை செய்யப்படும்.

5. இந்த அறிவிக்கை, தமிழ்நாடு அரசிதழில் வெளியிடப்படும் நாளிலிருந்து செயலுக்கு வரும்.

ந.  முருகானந்தம், கூடுதல் தலைமைச் செயலாளர்.

(தமிழாக்கம்)

ந. அருள், இயக்குநர் (மு.கூ.பொ.), தமிழ் வளர்ச்சி மற்றும், செய்தி (மொழிபெயர்ப்பு)த் துறை.

தமிழ்நாடு அரசுக்காக சென்னை எழுதுபொருள் மற்றும் அச்சுத் துறை ஆணையரால்

அச்சிடப்பட்டு வெளியிடப்பட்டது.

Cite this issue. Tamil Nadu Gazette, Government of Tamil Nadu, 01 February 2023. Indian Gazettes, https://egazette.servantsofknowledge.in/details/in.gazette.tamilnadu.2023-02-01.Ordinary_5_Part-II_Section-1-T-Sup/. Archive identifier in.gazette.tamilnadu.2023-02-01.Ordinary_5_Part-II_Section-1-T-Sup.