Servants of Knowledge
Tamil Nadu Gazette · Government of Tamil Nadu

Notifications or Orders of interest to a section of the public issued by Secretariat Departments

Published 08 February 2023

Type
Ordinary
Gazette no.
6
Part
Part II
Notifications
ENVIRONMENT CLAIMATE CHANGE AND FOREST DEPARTMENT - Notification
Section
Section 2-T-Sup.
Identifier
in.gazette.tamilnadu.2023-02-08.Ordinary_6_Part-II_Section-2-T-Sup.
Languages
English, Tamil
Published at
Original source ↗

[Regd. No. TN/CCN/467/2012-14.

[R. Dis. No. 197/2009.

© தமிழ்நாடு அரசு 2023

[விலை: ரூ. 3.20 காசு[விலை: ரூ. 3.20 காசு

தமிழ்நாடு அரசிதழ் ஆணையின்படி வெளியிடப்பட்டது.

எண் 6] சென்னை, புதன்கிழமை, பிப்ரவரி 8, 2023 ைத 25, சுபகிருது, திருவள்ளுவர் ஆண்டு–2054

பகுதி II—பிரிவு 2 இன் இணைப்பு

அரசாங்க அறிவிப்புகளின் தமிழ் மொழிபெயர்ப்புகள்

சுற்றுச் சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத் துறை சுற்றுச் சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத் துறை

அறிவிக்கைஅறிவிக்கை

[அரசாணை (நிலை) எண். 201, சுற்றுச் சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வன (FR.5)த் துறை, 21 நவம்பர் 2022.] வன உயிரினங்கள் மட்டுமல்லாது வளர்ப்பு உயிரினங்கள், வட்டாரச் சிறப்பினங்கள், அரிதான மற்றும் அழிந்துவிடும் அபாயமுள்ள உயிரினங்கள், தெளிவுச் சிற்றினங்கள், பரிணாம முக்கியத்துவம் வாய்ந்த உயிரினங்கள், தனித்துவமான வன வகைகள், புனிதச் சோலைகள், மருத்துவ தாவர பாதுகாப்புப் பகுதிகள், வனத்துறையால் பராமரிக்கப்படும் பாதுகாக்கப்பட்ட நிலங்கள், அரிய மற்றும் அழிந்துவரும் (RET) தாவர விலங்கினங்களுக்கான வழித்தடங்கள், பயிரிடப்படும் உள்நாட்டு வன முன்னோடித் தாவர இனங்கள் அல்லது அவற்றின் வகைகள், புதைபடிம படு்கைகளால் குறிப்பிடப்படும் உயிரியற் கூறுகளின் பழம் பெருமை வாய்ந்த இடங்கள் மற்றும் குறிப்பிடத்தக்க பண்பாடு நெறிமுறை அல்லது அழகியல் மதிப்புகள் போன்றவற்றைக் கொண்டு, பண்பாட்டு பன்முகத்தன்மையை பராமரிப்பதற்கு முக்கியத்துவம் வாய்ந்த வளமான உயிரியற் பல்வகைமையுடைய நீர், நிலம் மற்றும் கடல் சார்ந்த யாதொரு சூழல் அமைப்புகளும் 2002ஆம் ஆண்டுட உயிரியல் பல்வகைமைச் சட்டத்தின் (மத்திய சட்டம் 18/2003) பிரிவு 37ன் கீழ் மாநிலத்தின் உயிரிப் பல்வகைமைப் பகுதிகளாக (BHS) அறிவிக்கப்படலாம் என்பதாலும்.

மேலும், மதுரை மாவட்டம் அரிட்டாப்பட்டி கிராமத்தில் உள்ள சில குன்றுகள், லகுடு (பால்கோ ஜக்கர்), இராசாளி (பால்கோ பெரிக்ரைன்ஸ்), இராசாளிப் பருந்து (அக்விலா பேசியாட்டம்) ஆகிய 3 முதன்மையான வேட்டையாடும் பறவைகள் உள்ளிட்ட 250 பறவையினங்கள் மற்றும் எறும்புத் தின்னிகள் (மனிஸ் கிராசிகாடாடா), மலைப்பாம்புகள் (பைதான் மோலூரஸ்) மற்றும் தேவாங்குகள் (லோரிஸ் எஸ்பிபி) போன்ற வனவிலங்குகள் ஆகியவற்றைக் கொண்ட வளமான உயிரியல் மற்றும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தவை என்பதாலும், மேலும், தனித்துவமான பாறை நிலப்பகுதியாக விளங்கும் அரிட்டாபட்டி ஏழு வறண்ட கருங்கற் குன்றுகளின் தொடரைக் கொண்டு ஒரு நீர்ப்பிடிப்புப் பகுதியாகச் செயற்பட்டு, 72 ஏரிகள், 200 இயற்கை ஊற்றுக் குழிகள் மற்றும் 3 தடுப்பணைகளுக்கு நீராதாரமாக விளங்குவதாலும், மேலும், இப்பகுதி வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்ததுடன், 2200 ஆண்டுகள் பழமையான பெருங்கற்காலத்தைச் சேர்ந்த பல கட்டமைப்புகள், தமிழ் பிராமி கல்வெட்டுகள் சமணப் படுகைகள் மற்றும் குடைவரைக் கோயில்கள் ஆகியவற்றைப் பாதுகாத்து வருவதாலும்.

மேலும், உயிரியற் பல்வகைமைப் பாதுகாப்பை வலுப்படுத்தவும், உயிரியற் பல்வகைமை விரைந்து அழியாத வண்ணம் இப்பகுதியைப் பாதுகாக்கவும், தமிழ்நாடு உயிரிப்பல்வகைமை வாரியத்தின் பரிந்துரையின் பேரில், இப்பகுதியை அரிட்டாப்பட்டி உயிரிப்பல்வகைமை பாரம்பரியப் பகுதியாக அறிவிக்க வேண்டும் என்று மாநில அரசு கருதுவதாலும்.

மேலும், கீழ்க்காணும் விவர அட்டவணையில் விவரிக்கப்பட்டுள்ள மதுரை மாவட்டத்தில் உள்ள அரிட்டாப்பட்டியைச் சேர்ந்த எச்சக் குன்றுகள் போதிய உயிரிப்பல்வகைமை முக்கியத்துவம் வாய்ந்தவை என்று தமிழ்நாடு அரசு கருதுவதாலும்.

2002ஆம் ஆண்டு உயிரியற் பல்வகைமைச் சட்டத்தின் (மத்தியச் சட்டம் 18/2003)இன் 37 ஆம் பிரிவின் உட்பிரிவு (1)ல் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களைக் கொண்டு தமிழ்நாடு ஆளுநர் அவர்கள் உள்ளாட்சி அமைப்புகளுடன் கலந்தாலோசித்து, கீழ்க்காணும் விவர அட்டவணையில் குறிப்பிடப்பட்டுள்ள பகுதிகளை பாரம்பரிய உயிரியற் பல்வகைமைப் பகுதியாக இதனால் அறிவிக்கிறார்.

[ 1 ]

DTP-II-2-(6) (T Sup)—12 அட்டவணை.அட்டவணை.

1. உயிரியற் பல்வகைமை பாரம்பரியப் பகுதி : அரிட்டாபட்டி உயிரி பல்வகைமை பாரம்பரியப் பகுதி 2. மாவட்டத்தின் பெயர் : மதுரை

3. கிராமங்களின் எண் மற்றும் பெயர் மற்றும் : 74, மீனாட்சிபுரம் பிட்-I, மதுரை கிழக்கு வட்டம், 54, அரிட்டாபட்டி- வட்டம் மேலூர் வட்டம்.


  1. {{^{{FOOTNOTE 54}}}}, அரிட்டாபட்டி {{^{{FOOTNOTE 379}}}}/{{^{{FOOTNOTE 1}}}} சுப்ரியா சாஹுசுப்ரியா சாஹு, அரசு கூடுதல் தலைமைச் செயலாளர்அரசு கூடுதல் தலைமைச் செயலாளர். (தமிழாக்கம்) ந. அருள்,ந. அருள், இயக்குநர் (மு.கூ.பொ), தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தி (மொழிபெயர்ப்பு)த் துறை. தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு்த் துறை தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு்த் துறை அறிவிக்கைகள்அறிவிக்கைகள் [அரசாணை (ப) எண் 470, தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு (J1)த் துறை, 27 செப்டம்பர் 2022] 1948 ஆம் ஆண்டு குறைந்தளவு ஊதியங்கள் சட்டத்தின் (மத்தியச் சட்டம் 11/1948) 3ஆம் பிரிவைச் சேர்ந்த (1) உட்பிரிவின் (b) பகுதி 5ஆம் பிரிவைச் சேர்ந்த (2) உட்பிரிவு ஆகியவற்றின் கீழ் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களைக் கொண்டு வெளியிடக் கருதப்பட்டுள்ள பின்வரும் வரைவு அறிவிக்கையானது மேற்சொன்ன சட்டத்தின் 5ஆம் பிரிவைச் சேர்ந்த (1) உட்பிரிவின் (b) பகுதியில், கோரப்பட்டுள்ளவாறு அதனால் பாதிக்கப்படக்கூடிய நபர்கள் அனைவரின் தகவலுக்காக இதனால் வெளியிடப்படுகிறது. 2. இந்த அறிவிக்கை, குறித்து 23.12.2022 அன்று அல்லது அதற்குப் முன்னர் எவரிடமிருந்தேனும் வரப்பெறுகிற ஏதேனும் மறுப்புரை அல்லது கருத்துரையை தமிழ்நாடு அரசு உரியவாறு பரிசீலிக்குமென்றும், இதனால் அறிவிக்கப்படுகிறது. மறுப்புரை அல்லது கருத்துரை ஏதேனுமிருப்பின், அவற்றை டி.எம்.எஸ் வளாகம், சென்னை-600 006-இல் உள்ள தொழிலாளர் ஆணையர் வாயிலாக அரசு கூடுதல் தலைமைச் செயலாளர், தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை, தலைமைச் செயலகம், சென்னை-600 009 என்ற முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும். வரைவு அறிவிக்கைவரைவு அறிவிக்கை 1948ஆம் ஆண்டு குறைந்தளவு ஊதியங்கள் சட்டத்தின் (மத்தியச் சட்டம் 11/1948) 3ஆம் பிரிவைச் சேர்ந்த (1) உட்பிரிவின் (b) பகுதி, 5ஆம் பிரிவைச் சேர்ந்த (2) உட்பிரிவு ஆகியவற்றின் கீழ் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களைக் கொண்டும், 10-07-2019ஆம் நாளிட்ட தமிழ்நாடு அரசிதழின் தமிழ்நாடு அரசிதழின் பாகம்-II, பிரிவு 2 இல் 663 மற்றும் 664 பக்கங்களில் (ஆங்கிலத்தில்) வெளியிடப்பட்ட தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறையின் II(2)/LE/561/2019 ஆம் எண் அறிவிக்கையை ரத்து செய்துவிட்டு அதற்குப் பதிலாகவும், தமிழ்நாட்டு ஆளுநர் அவர்கள், தமிழ்நாடு மாநிலத்தில் பாதுகாப்புப் பணியில் பணியமர்த்தப்பட்டு கீழ்க்காணும் விவர அட்டவணையின் நெடும்பத்தி (2)-இல் குறிப்பிடப்பட்டுள்ள பணியாளர் வகையினருக்கு அதன் (3)-ஆம் நெடும்பத்தியின் நிகரான பதிவுகளில் குறிப்பி்டப்பட்டவாறான குறைந்தளவு ஊதிய வீதங்களை, இதனால் திருத்தியமைக்கிறார். அவையானவை ↩
  2. அமைவிடம் ↩
தொடர் எண் கிராமத்தின் எண் மற்றும் பெயர் நில அளவை எண் பரப்பளவு (எக்டேரில்)
1. 54, அரிட்டாபட்டி 379/1 379/2 139.230 0.405
2. 74, மீனாட்சிபுரம் பிட்-I 137 53.580
மொத்தம் மொத்தம் 193.215
3

விவர அட்டவணைவிவர அட்டவணை

பாதுகாப்புப் பணியில் வேலைவாய்ப்பு

பாதுகாப்புப் பணியில் வேலைவாய்ப்பு

தொடர் எண் ( 1 ) பணியாளர்களின் வகைகள் ( 2 ) குறைந்தளவு அடிப்படை ஊதிய வீதங்கள் ( மாதமொன்றுக்கு) ( 3 )
மண்டலம் "A" ( ரூ . காசு) மண்டலம் "B" ( ரூ . காசு) மண்டலம் "C" ( ரூ . காசு)
1. மேலாளர் 17428.00 16104.00 13892.00
2. உதவி மேலாளர் 16104.00 15220.00 13008.00
3. மேற்பார்வையாளர் 13008.00 12123.00 10799.00
4. உதவியாள் 10799.00 10355.00 9471.00
5. முதுநிலை பாதுகாப்பு ஆய்வாளர்/ பாதுகாப்பு அலுவலர் 16104.00 15220.00 13008.00
6. படைத்துறைச் சிற்றலுவலர் (Corporal)/ படைத்துறை அலுவலர் (Seargent)/ உதவி பாகாப்பு அலுவலர் 14336.00 13452.00 12567.00
7. முதன்மை காவலாள்/ முதுநிலை காவலாள் 12567.00 11683.00 10799.00
8. பாதுகாப்பு பணியாளர் (ஆண்/பெண்) 9915.00 9471.00 9031.00

விளக்விளக்கங்கள்கங்கள்:—(1) —(1) மண்டலங்களின் வகைப்பாடு மண்டலங்களின் வகைப்பாடு வறுமாறு:வறுமாறு:

(1) மண்டலம் - A — அனைத்து மாநகராட்சிகள்

(2) மண்டலம் - B — அனைத்து வகையான நகராட்சிகள்

(3) மண்டலம் - C — மண்டலம் A மற்றும் B-யில் வராத ஏனைய பகுதிகள்

(2) அகவிலைப்படி: மேலே நிர்ணயிக்கப்பட்ட குறைந்தளவு அடிப்படை ஊதியவீதங்களுடன், பணியாளர்களுக்கு கீழே குறிப்பிட்டுள்ளவாறு அகவிலைப்படி வழங்கப்பட வேண்டும்:-

(i) அகவிலைப்படியானது, 2010ஆம் ஆண்டிற்கான சென்னை மாநகர நுகர்வோர் சராசரி விலைக்குறியீட்டு எண்ணுடன் இணைக்கப்பட்டுள்ளது, (அதாவது 2001ஆம் ஆண்டில் 100 புள்ளிகள் என்பதை அடிப்படையாகக் கொண்டு தற்போது கணக்கிடப்பட்ட 161 புள்ளிகளாகும் ) 161 புள்ளிகளுக்கு மேல் உயரும் ஒவ்வொரு புள்ளிகளுக்கும் மாதமொன்றுக்கு ரூ.

56.00 (ஐம்பத்தி ஆறு ரூபாய் மட்டும்) கூடுதலாக அகவிலைப்படி வழங்கப்பட வேண்டும்.

(ii) முந்தைய 12 மாதங்களுக்கான (அதாவது ஜனவரியிலிருந்து டிசம்பர் வரை) சராசரி நுகர்வோர் விலைக் குறியீட்டினை அடிப்படையாகக் கொண்டு, ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் முதல் நாளிலிருந்து அகவிலைப்படி கணக்கிடப்பட வேண்டும்.

(iii) முந்தைய ஆண்டிற்கான சென்னை மாநகர நுகர்வோர் சராசரி விலைக்குறியீட்டு எண்ணை அடிப்படையாகக் கொண்டு முதல் கணக்கீடு இந்த அறிவிக்கை தமிழ்நாடு அரசிதழில்தமிழ்நாடு அரசிதழில் வெளியிடப்படும் நாளிலிருந்து செயலுக்கு வரும்.

(3) பணியின் தன்மை ஒரே மாதிரியாக இருக்கும்போது, ஆண் மற்றும் பெண் பணியாளர்களுக்கு வழங்கப்படும் ஊதியத்தில் எவ்வித வேறுபாடும் இருக்கக்கூடாது.

(4) நாள் ஊதிய வீதங்களைக் கணக்கிடுவதற்கு, மாதாந்திர ஊதியத்தை 26ஆல் பெருக்க வேண்டும்.

(5) தற்போது வழங்கப்பட்டு வரும் ஊதியங்கள், இங்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள குறைந்தளவு ஊதியங்களைக் காட்டிலும் அதிகமாக இருக்குமிடங்களிலெல்லாம், அதிகளவு ஊதியம் தொடர்ந்து வழங்கப்பட வேண்டும்.

[அரசாணை (2ப) எண் 94, தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு (J1)த் துறை, 7 நவம்பர் 2022.] 1948 ஆம் ஆண்டு குறைந்தளவு ஊதியங்கள் சட்டத்தின் (மத்தியச் சட்டம் 11/1948) 3 ஆம் பிரிவைச் சேர்ந்த (1) உட்பிரிவின் (b) பகுதி, மேற்படி சட்டத்தின் 5 ஆம் பிரிவைச் சேர்ந்த (2) உட்பிரிவு ஆகியவற்றில் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களைக் கொண்டும், 26-12-2018 ஆம் நாளிட்ட தமிழ்நாடு அரசிதழின்தமிழ்நாடு அரசிதழின் பாகம்-II, பிரிவு 2 இன் 1172 மற்றும் 1173 பக்கங்களில் (ஆங்கிலத்தில்) வெளியிடப்பட்ட தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறையின் II(2)/LE/1085/2018-ஆம் எண் அறிவிக்கையை ரத்து செய்துவிட்டு அதற்குப் பதிலாகவும், தமிழ்நாட்டு ஆளுநர் அவர்கள், ஆலோசனை வாரியத்துடன் கலந்தோலோசித்தப் பிறகு, கீழ்க்காணும் விவர அட்டவணையின் (2) நெடும்பத்தியில் குறிப்பிடப்பட்டுள்ள தமிழ்நாடு மாநிலத்தில் சாலை அமைத்தல் அல்லது பராமரித்தல் அல்லது கட்டுமானத் தொழிலில்4 ஈடுபட்டுள்ள பணியாளர்கள் வகையினருக்கு வழங்க வேண்டிய குறைந்தளவு ஊதிய வீதங்களை, இவ்விவர அட்டவணையின் (3) நெடும்பத்தியின் நிகரான பதிவுகளில் குறிப்பிட்டுள்ளவாறு, இதனால் திருத்தியமைக்கிறார். இதன் வரைவு மேற்சொன்ன சட்டத்தின் 5 ஆம் பிரிவை சேர்ந்த (1) ஆம் உட்பிரிவின் (b) பகுதியில் கோரியுள்ளவாறு ஏற்கனவே வெளியிடப்பட்டுள்ளது.

(2) இந்த அறிவிக்கை, தமிழ்நாடு அரசிதழில்தமிழ்நாடு அரசிதழில் வெளியிடப்படும் நாளிலிருந்தும் அந்நாள் முதற்கொண்டும் நடைமுறைக்கு வரும்.

விவர அட்டவணைவிவர அட்டவணை

சாலை அமைத்தல் அல்லது பராமரித்தல் அல்லது கட்டுமானத் தொழிலில் வேலைவாய்ப்பு சாலை அமைத்தல் அல்லது பராமரித்தல் அல்லது கட்டுமானத் தொழிலில் வேலைவாய்ப்பு

தொடர் எண் பணியாளர்களின் வகைகள் நாளொன்றுக்கான குறைந்தளவு அடிப்படை ஊதியங்கள்
மண்டலம் A மண்டலம் B மண்டலம் C
( 1 ) ( 2 ) ( 3 )
ரூ . காசு ரூ . காசு ரூ . காசு
(1) கல் உடைப்பவர் அலலது கல் நொறுக்குபவர் அல்லது கல் தூளாக்குபவர் வகை - I 622.50 611.50 588.00
வகை - II 603.00 596.00 582.00
(2) கொத்தனார் அல்லது செங்கல் பாவுபவர் வகை - I 625.00 622.50 596.00
வகை - II 611.00 603.00 588.00
(3) தச்சர் வகை - I 625.00 622.50 596.00
வகை - II 611.50 603.00 588.00
(4) வண்ணம் பூசுபவர் அல்லது மெருகெண்ணெய் பூசுபவர் வகை - I 603.00 596.00 582.00
வகை - II 588.00 582.00 566.00
(5) கம்பி வளைத்தல் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ளும் பொருத்துநர் வகை - I 603.00 596.00 582.00
வகை - II 588.00 582.00 566.00
(6) சாலைக் குழாய்ப் பணிகளை மேற்கொள்ளும் குழாய் சீர்செய்பவர் / குழாய் பணியாளர் வகை - I 603.00 596.00 582.00
வகை - II 588.00 582.00 566.00
(7) மின் வினைஞர்/ஆய்வகத் தொழில் நுட்பப் பணியாளர் வகை - I 622.50 611.50 588.00
வகை - II 603.00 596.00 582.00
(8) இயந்திரக் கம்மியர் வகை - I 622.50 611.50 588.00
வகை - II 603.00 596.00 582.00
(9) கிணறு தோண்டுபவர் (i) ஆழ் கிணறு தோண்டுபவர் 640.50 625.00 611.50
(ii) சாதாரணக் கிணறு தோண்டுபவர் 603.00 596.00 588.00
(10) பற்றவைப்பவர் 625.00 622.50 596.00
(11) தலைமைக் கூலியாள் (Head Mazdoor) 464.50 460.00 454.00
(12) கூலியாள் மஸ்தூர் வகை - I 454.00 449.00 443.00
வகை - II 445.00 440.00 434.00
(13) தண்ணீர் தெளிப்பவர் அல்லது கலவைக்காரர் (சாலை பரத்துதல்) ஒட்டு போடும் கருவி இயக்குபவர் 572.00 563.00 557.50
(14) மரம் அல்லது கல் அடைப்பவர் 572.00 563.00 557.00
(15) சேறு அகற்ற கிணற்றுள் செல்பவர் வகை - I 603.00 596.00 588.00
வகை - II 588.00 582.00 574.00
(16) சுத்தியல்காரர் 577.00 572.00 563.00
(17) ஓலை முடைபவர் 566.00 560.00 552.00
(18) மேஸ்திரி / மேற்பார்வையாளர் 640.50 625.00 611.50
(19) கருமார் வகை - I 625.00 622.50 596.00
வகை - II 611.50 603.00 588.00
(20) மரம் அறுப்பவர் 611.50 603.00 588.00
(21) இடைவெளி அடைப்பவர் (Caulker) 577.00 572.00 563.00
(22) (கலவை இயந்திரம் இயக்குபவர் உட்பட) கலவைக்காரர் 596.00 588.00 574.00
(23) மின்மோட்டார் (பம்ப் இயக்குபவர்
(24) கலவை இயந்திரம் இயக்குபவர்
(25) லாரி ஓட்டுநர் 611.50 596.00 588.00
(26) லாரி உதவியாளர்் (Lorry Cleaner) 577.00 572.00 563.00
(27) ரோடு உருளை இயந்திரம் ஓட்டுநர் / பாரச் சக்கர ஓட்டுநர் 611.50 596.00 588.00
(28) குமாஸ்தா (எழுத்தர் அல்லது நேரக் காப்பாளர்) பண்டகக் காப்பாளர் 588.00 582.00 574.00
(29) கனரக இயந்திர பாலம் அமைத்தல் உள்ளிட்ட, கனரக பொறியியல் கட்டுமானப் பணிகளில் ஈடுபடுத்தப்படும் கலாசி அல்லது சீரங்கு முதலானோர் வகை - I 640.50 625.00 611.50
வகை - II 625.00 622.50 596.00
(30) பிக்கோட்டா பணியாளர் (Picothaman) 560.00 552.00 546.00
(31) காவலாள் / உதவியாள் 560.00 552.00 546.00
(32) மொசைக் மெருகேற்றுபவர் 625.00 622.50 596.00
(33) ஜேசிபி இயக்குபவர் 656.00 640.50 627.00
5

விளக்கங்கள்:-விளக்கங்கள்:- (1) மண்டலங்களின் வகைப்பாடுகள் பின்வருமாறு:-

மண்டலம்மண்டலம்-A-A:: காப்பு வனப்பகுதிகள் மற்றும் அதனைச் சுற்றிலும் ஐந்து கி.மீ. தொலைவுக்குட்பட்ட பகுதியில் மேற்கொள்ளப்படும் பணிகள் உட்பட கீழே பட்டியலிடப்பட்டுள்ள அனைத்து மாநகராட்சிகளும் மலை வாழிடங்களும் இதில் அடங்கும்.

மலை வாழிடங்கள்மலை வாழிடங்கள்

(1) நீலகிரி பீடபூமி

(2) கோயமுத்தூர் மாவட்டத்தின் வால்பாறை குறுவட்டம்6 (3) சேர்வராயன் குன்றுகள்

(4) கொடைக்கானல்

(5) பீர்மேடு

(6) திருநெல்வேலி மாவட்டம், நாங்குநேரி சரக களக்காடு காப்புவனப்பகுதியில் அமைந்துள்ள செங்கல்தேரி (7) விருதுநகர் மாவட்டம், திருவில்லிப்புத்தூர் சரக திருவில்லிப்புத்தூர் காப்புவனப்பகுதியிலுள்ள முதலியார் ஊத்து (8) நீலகிரி மாவட்டத்தில் கூடலூர் வட்டம்

(9) வேலூர் மாவட்டத்தில் ஜவ்வாது மற்றும் ஏலகிரி மலைகள்

மண்டலம்மண்டலம்-B:-B: அனைத்து வகை நகராட்சிகளும் இதில் அடங்கும்.

மண்டலம்-மண்டலம்-C: A மற்றும் B மண்டலங்களில் சேர்க்கப்படாத ஏனைய பகுதிகள் அனைத்தும் இதில் அடங்கும்.

(2) தொழிலாளர்களின் வகை-1 மற்றும் வகை-2 என்ற வகைப்பாடு உடற் திறன், தனித்திறமை, இயங்குதிறன் மற்றும் பணி முடிக்கும் அளவு ஆகியவற்றின் அடிப்படையிலானது ஆகும்.

(3) செய்யும் வேலைக்கேற்ற ஊதியம் பெறும் தொழிலாளர்களைப் பொறுத்தவரையில், நாளொன்றுக்கு எட்டு மணி நேரத்தில் அவர்கள் பெறும் ஊதியம், அதே வகையிலான தொழிலாளர்களுக்கு தற்போது திருத்தியமைக்கப்பட்டுள்ள ஊதியத்தை விடக் குறையக்கூடாது. மேற்குறிப்பிட்ட கூலி வீதங்களைக் கணக்கிடும்போது ஒரு நாள் பணி என்பது எட்டு மணி நேர வேலையாகும். பணியாளர் எட்டு மணி நேரத்திற்கும் குறைவாகப் பணியாற்றினால் அதற்குத் தக்கவாறான வீதத்தில் ஊதியம் கணக்கிடப்படவேண்டும்.

(4) அகவிலைப்படி :அகவிலைப்படி : (1) மேலே நிருணயிக்கப்பட்ட அடிப்படை ஊதியங்களுடன் பணியாளர்களுக்கு கீழே குறிப்பிடப்பட்டுள்ளவாறு அகவிலைப்படி வழங்கப்பட வேண்டும்.

(i) அகவிலைப்படியானது, 2010ஆம் ஆண்டிற்கான சென்னை மாநகர நுகர்வோர் சராசரி விலைக்குறியீட்டு எண்ணுடன் இணைக்கப்பட்டுள்ளது (அதாவது 2001ஆம் ஆண்டில் 100 புள்ளிகள் என்பதை அடிப்படையாகக் கொண்டு தற்போது கணக்கிடப்பட்ட 161 புள்ளிகள்). 161 புள்ளிகளுக்கு மேல் உயரும் ஒவ்வொரு புள்ளிக்கும் அகவிலைப்படி நாளொன்றுக்கு ரூ. 2.69 (இரண்டு ரூபாய் அறுபத்தொன்பது காசுகள் மட்டும்) கூடுதலாக அகவிலைப்படி வழங்கப்பட வேண்டும்.

(ii) முந்தைய 12 மாதங்களுக்கான (அதாவது ஜனவரியிலிருந்து டிசம்பர் வரை) சராசரி விலைக்குறியீட்டினை அடிப்படையாகக் கொண்டு, ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் முதல் நாளிலிருந்து அகவிலைப்படி கணக்கிடப்படவேண்டும்.

(iii) முந்தைய ஆண்டிற்கான சென்னை மாநகர நுகர்வோர் சராசரி விலைக் குறியீட்டு எண்ணை அடிப்படையாகக் கொண்ட முதல் கணக்கீடு, இந்த அறிவிக்கை தமிழ்நாடு அரசிதழில்தமிழ்நாடு அரசிதழில் வெளியிடப்படும் நாளிலிருந்து செயலுக்கு வரும்.

(5) பணியின் தன்மை ஒரே மாதிரியாக இருக்கும்போது, ஆண் மற்றும் பெண் தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் ஊதியத்தில் எவ்வித வேறுபாடும் இருக்கக்கூடாது.

(3) மாதாந்திர ஊதியத்தைக் கணக்கிடுவதற்கு நாள் ஊதியத்தை 30 ஆல் பெருக்க வேண்டும்.

(4) தற்போது வழங்கப்பட்டு வரும் ஊதியங்கள், இங்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள குறைந்தளவு ஊதியங்களைக் காட்டிலும் அதிகமாக இருக்குமிடங்களிெலல்லாம் அதே அதிகளவு ஊதியமே தொடர்ந்து வழங்கப்பட வேண்டும்.

[அரசாணை (ப) எண். 574, தொழிலாளர் மற்றும் திறன் மேம்பாட்டு (H1)த் துறை, 28 நவம்பர் 2022.] 1970 ஆம் ஆண்டு ஒப்பந்தத் தொழிலாளர் (ஒழுங்கு முறைப்படுத்துதல் மற்றும் ஒழித்தல்) சட்டத்தின் (மத்தியச் சட்டம் 37/1970) 4 ஆம் பிரிவில் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களைக் கொண்டும், 19.04.2017ஆம் நாளிட்ட தமிழ்நாடு அரசிதழின்தமிழ்நாடு அரசிதழின் பாகம் II-பிரிவு 2-இல் 352 முதல் 353 வரையிலான பக்கங்களில் (ஆங்கிலத்தில்) வெளியிடப்பட்ட தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறையின் II(2)/தொ.வே./16/2017ஆம் எண் அறிவிக்கையை ரத்து செய்தும், தமிழ்நாட்டு ஆளுநர் அவர்கள், பின்வரும் உறுப்பினர்களைக் கொண்டு மாநில ஒப்பந்த தொழிலாளர் ஆலோசனை வாரியத்தை இதனால் மாற்றியமைக்கிறார்.

I 1. அரசு கூடுதல் தலைமைச் செயலாளர், தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை, தலைவர் சென்னை-600 009.

உறுப்பினர் 2. அரசு முதன்மைச் செயலாளர்/தொழிலாளர் ஆணையர் அல்லது அவர் கலந்து கொள்ள இயலாத நேர்வில் கூடுதல் தொழிலாளர் ஆணையர் (இணக்கப்படுத்துதல்) சென்னை-600 006.

3. தொழிலகப் பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்குநர், சென்னை-600 032. உறுப்பினர்7 II பொதுத்துறை நிறுவனங்களின் பிரதிநிதி:

திருமதி S. ஈஸ்வரி, பணியாளர் அலுவலர், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் மின் பகிர்மான கழகம், 144, அண்ணா சாலை, சென்னை-600 002.

III ஒப்பந்தாரர்களின் பிரதிநிதிகள்:

(1) திரு. P.M.Y. அன்சர் அலி, வானவில் பேருந்து சேவை, எண். 6, அண்ணா வீதி, புதுப்பேட்டை, விருதாச்சலம், கடலூர் மாவட்டம்-606 001.

(2) திரு. S. ஜான் ஆலன் தாஸ், பொறியியல் ஒப்பந்ததாரர், 6/239 வலிய வீடு, காப்புக்காடு & அஞ்சல், கன்னியாகுமாரி மாவட்டம்-629 162.

IV தனியார் நிறுவனங்களின் பிரதிநிதி:

திருமதி K. மாணிக்கம், பொதுச் செயலாளர், தென்னிந்திய பணியாளர்கள் கூட்டமைப்பு, 2-D, இரண்டாம் தளம், எல்டோராடோ கட்டடம், எண்.112, நுங்கம்பாக்கம் நெடுஞ்சாலை, சென்னை-600 034.

V தொழிற் சங்கங்களின் பிரதிநிதிகள்:

(1) திரு. K. நடராசன், பொருளாளர், தொழிலாளர் முன்னேற்ற சங்கப் பேரவை, எண். 30/75, ஆடம் சாலை, மைலாப்பூர், சென்னை-600 004.

(2) திரு. K. விஜயன், துணைத் தலைவர், இந்திய தொழிற்சங்கங்களின் மத்திய அமைப்பு, (CITU), தமிழ்நாடு மாநிலக்குழு, 17, அண்ணாமலை நகர், சிங்கிலிமேடு, பொன்னேரி, திருவள்ளூர் மாவட்டம்-601 204

(3) திரு. K. ரவி, துணைப் பொதுச் செயலாளர், அனைந்திந்திய தொழிற்சங்க காங்கிரஸ் (AITUC), 7/4B, 13வது குறுக்குத் தெரு, புது காலனி, குரோம்பேட்டை, சென்னை-600 044

(4) திரு. S.V. நாகராஜன், அமைப்புச் செயலாளர், இந்திய தேசிய தொழிற்சங்க காங்கிரஸ், (தமிழ்நாடு கிளை), எண்.7, வேலு இல்லம், 20வது தெரு, 5வது நிழற்சாலை, அசோக்நகர், சென்னை-600 083.

(5) திரு. M. சேகர், தமிழ்நாடு திராவிடர் கழக தொழிலாளர் அணி, பெரியார் படிப்பகம், சாந்தி திரையரங்கம் அருகில், நாவல்பட்டு சாலை, திருவெறும்பூர், திருச்சி-620 013.

(6) திரு. N. திருக்குமரன், தொழிலாளர் விடுதலை முன்னணி, பூதமங்கலம் அஞ்சல், மேலூர் வட்டம், மதுரை மாவட்டம்-625 108.

முகமது நசிமுத்தீன், முகமது நசிமுத்தீன், அரசு கூடுதல் தலைமைச் செயலாளர்.

(தமிழாக்கம்)

ந. அருள்,ந. அருள், இயக்குநர் (மு.கூ.பொ), தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தி (மொழிபெயர்ப்பு)த் துறை.

தமிழ்நாடு அரசுக்காக சென்னை எழுதுபொருள் மற்றும் அச்சுத் துறை ஆணையரால் அச்சிடப்பட்டு வெளியிடப்பட்டது.

Cite this issue. Tamil Nadu Gazette, Government of Tamil Nadu, 08 February 2023. Indian Gazettes, https://egazette.servantsofknowledge.in/details/in.gazette.tamilnadu.2023-02-08.Ordinary_6_Part-II_Section-2-T-Sup./. Archive identifier in.gazette.tamilnadu.2023-02-08.Ordinary_6_Part-II_Section-2-T-Sup..