© [Regd. No. TN/CCN/467/2012-14. தமிழ்நாடு அரசு [R. Dis. No. 197/2009. 2023 [விலை : ரூ. 3.20 காசு
| தமிழ்நாடு அரசிதழ் ஆணையின்படி வெளியிடப்பட்டது. | ||
எண் 6] சென்னை, புதன்கிழமை, பிப்ரவரி 8, 2023 தை 25, சுபகிருது, திருவள்ளுவர் ஆண்டு-2054
பகுதி IV—பிரிவு 2 இன் இணைப்பு
தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையின் பின்வரும் சட்டமானது 2022 ஆம் ஆண்டு
டிசம்பர் திங்கள் 28 ஆம் நாளன்று ஆளுநரின் ஏற்பிசைவைப் பெற்றது
மற்றும் அது பொதுத் தகவலுக்காக இதன் மூலம் வெளியிடப்படுகிறது:-
சட்ட எண். 45/2022.
2018 ஆம் ஆண்டு தமிழ்நாடு வணிக எளிதாக்குதல் சட்டத்தை மேலும் திருத்தம் செய்வதற்கானதொரு சட்டம்.
இந்தியக் குடியரசின் எழுபத்தி மூன்றாம் ஆண்டில் தமிழ்நாடு மாநிலச் சட்டமன்றப்
பேரவையினால் பின்வருமாறு சட்டமியற்றப்படுவதாகுக:-
குறுந்தலைப்பு மற்றும் 1. (1) இந்தச் சட்டம் 2022 ஆம் ஆண்டு தமிழ்நாடு வணிக எளிதாக்குதல்
தொடக்கம்.
(திருத்தச்) சட்டம் என வழங்கப்பெறும்.
(2) இது, உடனடியாக நடைமுறைக்கு வருதல் வேண்டும்.
தமிழ்நாடு சட்டம்
2ஆம் பிரிவிற்கான 2. (இதன் பின்பு இதில் முதன்மைச் சட்டம் எனக் குறிப்பிடப்படுவதான)
7/2018.
திருத்தம்.
2018 ஆம் ஆண்டு தமிழ்நாடு வணிக எளிதாக்குதல் சட்டத்தின் 2ஆம் பிரிவில்,-
(1) (a) எனும் கூறானது, (aa) எனும் கூறாக மறுஎழுத்திடப்படுதல் வேண்டும்
மற்றும் (aa) எனும் கூறானது அவ்வாறு மறுஎழுத்திடப்படுவதற்கு முன்பு, பின்வரும்
கூறானது உட்புகுத்தப்படுதல் வேண்டும், அதாவது:-
"(a) "ஒப்புகைச் சான்றிதழ்" என்பது 11Aஆம் பிரிவின் (2) ஆம்
உட்பிரிவின் (a) கூறின் கீழ் ஒருங்கிணைப்பு முகமையினால் வழங்கப்பட்ட ஒரு சான்றிதழ்
என்று பொருள்படும்;";
(2) (l) கூறிற்காக, பின்வரும் கூறானது மாற்றாக அமைக்கப்படுதல் வேண்டும்,
அதாவது:-
(l) "தொழில் வழிகாட்டி" என்பது மாநிலத்தில், தொழில் நிறுவனங்களை
அமைப்பதற்கு வசதியாக அரசால் உருவாக்கப்பட்ட மற்றும் 1975 ஆம் ஆண்டு
தமிழ்நாடு சங்கங்களை பதிவு செய்தல் சட்டத்தின் (தமிழ்நாடு சட்டம் 27/1975) கீழ்
பதிவு செய்யப்பட்ட சங்கம் என்று பொருள்படும்;';
(3) (r) கூறிற்கு பின்பு, பின்வரும் கூறானது உட்புகுத்தப்படுதல் வேண்டும்,
அதாவது:-
"(rr) "அறிவிக்கை செய்யப்பட்ட நிறுவனம்" என்பது அரசால்
அவ்வப்போது அறிவிக்கப்படலாகிறவாறான நிறுவனம் அல்லது நிறுவனத்தின் வகை
அல்லது இனம் எதுவும் என்று பொருள்படும்.".
IV-2-6-(T-Sup)-1
[1]2 3ஆம் பிரிவிற்கான
3. முதன்மைச் சட்டத்தின் 3 ஆம் பிரிவில், (1) ஆம் உட்பிரிவில், "தொழில் வழிகாட்டி
திருத்தம்.
நிறுவனம்" எனும் சொற்றொடருக்காக, "தொழில் வழிகாட்டி" எனும் சொற்றொடரானது
மாற்றாக அமைக்கப்படுதல் வேண்டும்.
4ஆம் பிரிவிற்கான
4. முதன்மைச் சட்டத்தின் 4 ஆம் பிரிவில், (1) ஆம் உட்பிரிவில் (i) ஆம் இனத்தின்
திருத்தம்.
இறுதியில் பின்வரும் சொற்றொடரானது சேர்க்கப்படுதல் வேண்டும், அதாவது:-
"மற்றும் 11A-ஆம் பிரிவின் (2) ஆம் உட்பிரிவின் (a) கூறின் கீழ் ஒப்புகைச்
சான்றிதழ் வழங்குதல்;".
5ஆம் பிரிவிற்கான
5. முதன்மைச் சட்டத்தின் 5 ஆம் பிரிவில், (1) ஆம் உட்பிரிவில், "அனுமதிகளுக்கான
திருத்தம்.
விண்ணப்பம்" எனும் சொற்றொடருக்கு பின்பு, "அல்லது ஒப்புகைச் சான்றிதழ்
வழங்குதல்" எனும் சொற்றொடரானது உட்புகுத்தப்படுதல் வேண்டும்.
9ஆம் பிரிவிற்கான
6. முதன்மைச் சட்டத்தின் 9 ஆம் பிரிவில், (1) ஆம் உட்பிரிவில், "இயல் வடிவம்
திருத்தம்.
அல்லது மின்னணு வடிவம் ஆகிய இரண்டில் ஏதேனும் ஒரு வடிவத்தில் எதிலும்"
எனும் சொற்றொடருக்காக, "மின்னணு வடிவத்தில்" எனும் சொற்றொடரானது மாற்றாக
அமைக்கப்படுதல் வேண்டும்.
11Aஎனும் புதிய
7. முதன்மைச் சட்டத்தின் 11 ஆம் பிரிவிற்குப் பின்பு, பின்வரும் பிரிவானது,
பிரிவினை
உட்புகுத்தப்படுதல் வேண்டும், அதாவது:-
உட்புகுத்துதல்.
"11A. ஒப்புகைச் சான்றிதழ்.- (1) ஒரு புதிய நடவடிக்கையை தொடங்குவதற்கோ
அல்லது அதன் நடவடிக்கைகளை விரிவாக்கம் செய்யக்கருதுகிற, அறிவிக்கை
செய்யப்பட்ட நிறுவனம் எதுவும், ஒற்றைச் சாளர வலைவாயில் வழியாக, தற்சான்றிதழுடன்
கூடிய ஒருங்கிணைந்த விண்ணப்பப்படிவத்தையும் மற்றும் வகுத்துரைக்கப்படலாகும்
அத்தகைய கட்டணத்தையும் சமர்ப்பிக்கலாம்.
(2) (a) (1)ஆம் உட்பிரிவின் கீழ் அறிவிக்கை செய்யப்பட்ட நிறுவனம்
ஒன்றிலிருந்து, ஒருங்கிணைந்த விண்ணப்பப் படிவம் ஒன்று பெறப்பட்டதன் பேரில்,
ஒருங்கிணைப்பு முகமையானது, வகுத்துரைக்கப்படலாகும் அத்தகைய முறையில்
படிவத்திலும் அத்தகைய கால வரம்பிற்குள்ளும் விண்ணப்பதாரருக்கு ஒப்புகைச்
சான்றிதழ் ஒன்றினை வழங்குதல் வேண்டும்;
(b) (a)-கூறின் கீழ் வழங்கப்பட்ட ஓர் ஒப்புகைச் சான்றிதழானது அனைத்து
நோக்கங்களுக்காக, அரசால் அவ்வப்போது அறிவிக்கை செய்யப்படலாகும் அத்தகைய
அனுமதிகளுக்காக, அது வழங்கப்பட்ட தேதியிலிருந்து மூன்று ஆண்டுகள்
காலத்திற்காக, 2 ஆம் பிரிவின் (c) கூறில் பொருள்வரையறை செய்யப்பட்டவாறான
அனுமதியைப் போன்ற செயல்விளைவைக் கொண்டிருத்தல் வேண்டும். மூன்று
ஆண்டுகள் காலம் முடிவடைவதற்கு முன்னர், அத்தகைய நிறுவனமானது தகுதிவாய்ந்த
அதிகார அமைப்பிடமிருந்து அனுமதிகளைப் பெறுதல் வேண்டும்;
(c) தற்சான்றிதழை மீறும் ஏதேனும் நிகழ்வில், ஒப்புகைச் சான்றிதழானது
ஒருங்கிணைப்பு முகமையினால் ரத்து செய்யப்படுதல் வேண்டும்:
வரம்புரையாக, விண்ணப்பதாரருக்கு கேட்பதற்கான நியாயமான வாய்ப்பொன்று
வழங்கப்பட்டிருந்தாலன்றி அத்தகைய ரத்தானது செய்யப்படுதலாகாது.".
15ஆம் பிரிவிற்கான 8. முதன்மைச் சட்டத்தின் 15 ஆம் பிரிவில், (1) ஆம் உட்பிரிவில், "தொழில் வழிகாட்டி
திருத்தம்.
நிறுவனத்தின் செயல்-துணைத் தலைவரை தலைவராகவும், தொழில் வழிகாட்டி
நிறுவனத்தின் செயலாளரை கூட்டுநர் உறுப்பினராகவும்" எனும் சொற்றொடருக்காக,
"தொழில் வழிகாட்டியின் மேலாண் இயக்குநர் மற்றும் தலைமைச் செயல் அலுவரை
தலைவராகவும், தொழில் வழிகாட்டியின் செயல் இயக்குநரை கூட்டுநர் உறுப்பினராகவும்"
எனும் சொற்றொடரானது மாற்றாக அமைக்கப்படுதல் வேண்டும்.
(ஆளுநரின் ஆணைப்படி)
ச. கோபி ரவிகுமார்,
அரசுச் செயலாளர் (சட்டமியற்றல்),
சட்டத் துறை.
(தமிழாக்கம்)
வெ. அரசகுமார்,
உதவி இயக்குநர்,
சட்ட (தமிழ்ப்பிரிவு)த் துறை.
3தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையின் பின்வரும் சட்டமானது 2022 ஆம் ஆண்டு
டிசம்பர் திங்கள் 28 ஆம் நாளன்று ஆளுநரின் ஏற்பிசைவைப் பெற்றது
மற்றும் அது பொதுத் தகவலுக்காக இதன் மூலம் வெளியிடப்படுகிறது:-
சட்ட எண். 46/2022.
1998 ஆம் ஆண்டு தமிழ்நாடு ஒளிவுமறைவற்ற ஒப்பந்தப்புள்ளிகள் சட்டத்தை
மேலும் திருத்தம் செய்வதற்கானதொரு சட்டம்.
இந்தியக் குடியரசின் எழுபத்தி மூன்றாம் ஆண்டில் தமிழ்நாடு மாநிலச்
சட்டமன்றப் பேரவையினால் பின்வருமாறு சட்டமியற்றப்படுவதாகுக:-
குறுந்தலைப்பு மற்றும் 1. (1) இந்தச் சட்டம் 2022 ஆம் ஆண்டு தமிழ்நாடு ஒளிவுமறைவற்ற
தொடக்கம்.
ஒப்பந்தப்புள்ளிகள் (திருத்தச்) சட்டம் என வழங்கப்பெறும்.
(2) இது, உடனடியாக நடைமுறைக்கு வருதல் வேண்டும்.
தமிழ்நாடு சட்டம்
2ஆம் பிரிவிற்கான 2. (இதன் பின்பு இதில் முதன்மைச் சட்டம் எனக் குறிப்பிடப்படுவதான)
43/1998.
திருத்தம்.
1998 ஆம் ஆண்டு தமிழ்நாடு ஒளிவுமறைவற்ற ஒப்பந்தப்புள்ளிகள் சட்டத்தின்
2ஆம் பிரிவில்,-
(1) (aa) கூறுக்காக, பின்வரும் கூறானது மாற்றாக அமைக்கப்படுதல்
வேண்டும், அதாவது:-
"(aa) "உள்நாட்டு தொழில் நிறுவனம்" என்பது மாநிலத்திற்குள்
சரக்குகளை தயாரிக்கின்ற அல்லது உற்பத்தி செய்கின்றதும் அல்லது
சேவைகளை வழங்குகின்ற அல்லது அளிக்கின்றதுமான, மற்றும் 2006 ஆம்
ஆண்டு குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் மேம்படுத்துதல்
சட்டத்தின் (மையச்சட்டம் 27/2006) 7 ஆம் பிரிவின் (1) ஆம் கூறின் கீழ்
மைய அரசினால் அறிவிக்கப்படலாகும் குறு அல்லது சிறு தொழில் நிறுவனமாக
தகுதி பெறுவதற்கான அடிப்படைத் தகுதிகளை நிறைவு செய்கின்றதுமான,
மாநிலத்திற்குள் அமைந்துள்ள தொழில் நிறுவனம் எதுவும் என்று பொருள்படும்.";
(2) அவ்வாறு மாற்றியமைக்கப்பட்ட (aa) கூறுக்குப் பின்பு, பின்வரும்
கூறானது உட்புகுத்தப்படுதல் வேண்டும், அதாவது:-
"(aaa) "பட்டியல் இனத்தவர் அல்லது பட்டியல் பழங்குடியினருக்குச்
சொந்தமான உள்நாட்டு தொழில் நிறுவனம்" என்பது,-
(i) பட்டியல் இனத்தவர் அல்லது பட்டியல் பழங்குடியினரைச்
சேர்ந்த நபர் எவருக்கும் சொந்தமான மாநிலத்தில் அமைந்துள்ள உள்நாட்டு
தொழில் நிறுவனம் எதுவும்; அல்லது
(ii) பட்டியல் இனத்தவர் அல்லது பட்டியல் பழங்குடியினரைச்
சேர்ந்த பங்குதாரர்களை நான்கில்-மூன்று பங்கிற்கும் குறையாத, மாநிலத்தில்
அதன் பதிவு செய்யப்பட்ட அலுவலகம் மற்றும் வணிகம் செய்யும் இடத்தினைக்
கொண்டுள்ள நிறுவனமான அல்லது வரையறுக்கப்பட்ட பொறுப்பு
கூட்டாண்மையான உள்நாட்டு தொழில் நிறுவனம் எதுவும்; அல்லது
(iii) (1) பட்டியல் இனத்தவர் அல்லது பட்டியல் பழங்குடியினரைச்
சார்ந்த நபர்களுக்கு உரித்தாயிருக்கிற சாதாரண பங்குகளை ஐம்பது
விழுக்காட்டிற்கும் அதிகமாகக் கொண்டிருக்குமிடத்து; மற்றும்
(2) 2013 ஆம் ஆண்டு நிறுமங்கள் சட்டத்தின், (மையச்சட்டம்
18/2013) 2 (27) ஆம் பிரிவில் வரையறுக்கப்பட்டவாறான நிறுவனத்தின்
கட்டுப்பாடானது, பட்டியல் இனத்தவர் அல்லது பட்டியல் பழங்குடியினரைச்
சார்ந்த நபர்களுடன் உற்றமைந்திருக்குமிடத்து;";
மாநிலத்தில் அதன் பதிவு செய்யப்பட்ட அலுவலகம் மற்றும்
வணிகம் செய்யும் இடத்தினைக் கொண்டுள்ள நிறுமமான உள்நாட்டு தொழில்
நிறுவனம் எதுவும் என்று பொருள்படும்;";
4(3) (ee) கூறானது, (eee) எனும் கூறாக மறுஎழுத்திடப்படுதல்
வேண்டும் மற்றும் அவ்வாறு மறுஎழுத்திடப்பட்ட (eee) கூறுக்கு முன்னர்,
பின்வரும் கூறானது உட்புகுத்தப்படுதல் வேண்டும், அதாவது:-
"(ee) "பட்டியல் இனத்தவர்" மற்றும் "பட்டியல்
பழங்குடியினர்" என்பது அரசியலமைப்பின் 366 ஆம் உறுப்பின் (24) மற்றும் (25)
கூறுகளின் கீழ் முறையே, அதற்கென குறித்தொதுக்கப்பட்ட அதே பொருளைக்
கொண்டிருத்தல் வேண்டும்.";
(4) (eee) கூறுக்குப் பின்பு, பின்வரும் கூறானது
உட்புகுத்தப்படுதல் வேண்டும். அதாவது;-
"(eeee) "மாநிலம்" என்பது தமிழ்நாடு மாநிலம் என்று
பொருள்படும்".
10ஆம் பிரிவிற்கான
3. முதன்மைச் சட்டத்தின் 10 ஆம் பிரிவில், (2) ஆம் உட்பிரிவில், மூன்றாம்
திருத்தம்.
வகைமுறைக்குப்பின்பு, பின்வரும் வகைமுறையானது சேர்க்கப்படுதல் வேண்டும்.
அதாவது:-
"மேலும் வரம்புரையாக, ஒப்பந்தப்புள்ளி ஏற்பு
அதிகார அமைப்பானது, பட்டியல் இனத்தவர் அல்லது
பட்டியல் பழங்குடியினருக்குச் சொந்தமான உள்நாட்டு தொழில் நிறுவனத்தின்
ஒப்பந்தப்புள்ளியினை வகுத்துரைக்கப்படலாகிறவாறான அத்தகைய
நிபந்தனைகளை நிறைவு செய்வதன் பேரில், அவர்களால் தயாரிக்கப்பட்ட அல்லது
உற்பத்தி செய்யப்பட்ட சரக்குகள் மற்றும் வழங்கப்பட்ட அல்லது அளிக்கப்பட்ட
சேவைகள் ஆகியவற்றைப் பொருத்து குறைவான ஒப்பந்தப்புள்ளியாக
அல்லாதவாறும், அத்தகைய நிறுவனங்கள் குறைவான ஒப்பந்தப்புள்ளியின்
விலையினை நிகர் செய்திட விரும்பினால், அந்தக் கொள்முதலின் மொத்தத்
தேவையின் ஐந்து விழுக்காட்டளவிற்கும் ஏற்றுக்கொள்ளுதல் வேண்டும்.".
(ஆளுநரின் ஆணைப்படி)
ச. கோபி ரவிகுமார்,
அரசுச் செயலாளர் (சட்டமியற்றல்),
சட்டத் துறை.
(தமிழாக்கம்)
வெ. அரசகுமார்,
உதவி இயக்குநர்,
சட்ட (தமிழ்ப்பிரிவு)த் துறை.
5தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையின் பின்வரும் சட்டமானது 2022 ஆம் ஆண்டு
டிசம்பர் திங்கள் 28 ஆம் நாளன்று ஆளுநரின் ஏற்பிசைவைப் பெற்றது,
மற்றும் அது பொதுத் தகவலுக்காக இதன் மூலம் வெளியிடப்படுகிறது.
சட்ட எண். 47/2022.
1983 ஆம் ஆண்டு தமிழ்நாடு கூட்டுறவுச் சங்கங்கள் சட்டத்தினை மேலும் திருத்தம்
செய்வதற்கானதொரு சட்டம்.
இந்தியக் குடியரசின் எழுபத்தி மூன்றாம் ஆண்டில் தமிழ்நாடு மாநிலச்
சட்டமன்றப் பேரவையினால் பின்வருமாறு சட்டமியற்றப்படுவதாகுக:
குறுந்தலைப்பு மற்றும் 1. (1) இந்தச் சட்டம், 2022ஆம் ஆண்டு தமிழ்நாடு கூட்டுறவுச் சங்கங்கள்
தொடக்கம்.
(ஐந்தாம் திருத்தச்) சட்டம் என வழங்கப்பெறும்.
(2) இது உடனடியாக நடைமுறைக்கு வருதல் வேண்டும்.
தமிழ்நாடு சட்டம்
34ஆம் பிரிவிற்கான 2. 1983ஆம் ஆண்டு தமிழ்நாடு கூட்டுறவுச் சங்கங்கள் சட்டத்தின் 34ஆம்
30/1983.
திருத்தம்.
பிரிவில், (1) ஆம் உட்பிரிவில், (c) கூறிலுள்ள (ii) ஆம் உட்கூறானது, (iii) ஆம்
உட்கூறாக மறு எண்ணிடப்படுதல் வேண்டும் மற்றும் அவ்வாறு (iii) ஆம் உட்கூறாக
மறுஎண்ணிடப்படுவதற்கு முன்பு, பின்வரும் உட்கூறு மற்றும் வகைமுறையானது
உட்புகுத்தப்படுதல் வேண்டும், அதாவது:—
"(ii) கூட்டுறவுச் சங்கம் எதிலும் பணியில் உள்ள அல்லது கூட்டுறவுச்
சங்கங்களின் நிர்வாகம் அல்லது தணிக்கையில் ஈடுபட்டுள்ள அரசுப் பணியாளர்
ஒருவர்:
வரம்புரையாக, கூட்டுறவுச் சங்கத்தின் அத்தகைய பணியாளர்கள்
அல்லது அத்தகைய அரசுப் பணியாளர்களை பிரத்தியேகமாகக் கொண்ட,
பதிவு செய்யப்பட்ட சங்கம் எதனின் நிருவாகக் குழுவின் உறுப்பினர் ஒருவராக
தேர்ந்தெடுக்கப்படுவதிலிருந்து அல்லது நியமிக்கப்படுவதிலிருந்து, நபர் ஒருவருக்கு
(ii) ஆம் உட்கூறிலுள்ள தகுதியின்மையானது பொருந்தாது; அல்லது".
(ஆளுநரின் ஆணைப்படி)
ச. கோபி ரவிகுமார்,
அரசுச் செயலாளர் (சட்டமியற்றல்),
சட்டத் துறை.
(தமிழாக்கம்)
வெ. அரசகுமார்,
உதவி இயக்குநர்,
சட்ட (தமிழ்ப்பிரிவு)த் துறை.
6 7தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையின் பின்வரும் சட்டமானது 2022 ஆம் ஆண்டு
டிசம்பர் திங்கள் 28 ஆம் நாளன்று ஆளுநரின் ஏற்பிசைவைப் பெற்றது
மற்றும் அது பொதுத் தகவலுக்காக இதன் மூலம் வெளியிடப்படுகிறது:-
சட்ட எண். 48/2022.
1937 ஆம் ஆண்டு தமிழ்நாடு மதுவிலக்குச் சட்டத்தினை மேலும் திருத்தம்
செய்வதற்கானதொரு சட்டம்.
இந்தியக் குடியரசின் எழுபத்தி மூன்றாம் ஆண்டில் தமிழ்நாடு மாநில சட்டமன்றப்
பேரவையினால் பின்வருமாறு சட்டமியற்றப்படுவதாகுக:-
குறுந்தலைப்பு மற்றும் 1. (1) இந்தச் சட்டம், 2022 ஆம் ஆண்டு தமிழ்நாடு மதுவிலக்கு (திருத்தச்)
தொடக்கம்.
சட்டம் என வழங்கப்பெறும்.
( 2) இது, 2022 ஆம் ஆண்டு செப்டம்பர் திங்கள் 5 ஆம் நாளன்று நடைமுறைக்கு
வந்துவிட்டதாகக் கொள்ளப்படுதல் வேண்டும்.
தமிழ்நாடு சட்டம்
18-BB ஆம் 2. (இதன்பின்பு இதில் முதன்மைச் சட்டம் என குறிப்பிடப்படுவதான)
X/1937.
பிரிவிற்கான 1937 ஆம் ஆண்டு தமிழ்நாடு மதுவிலக்குச் சட்டத்தின் 18-BB ஆம் பிரிவில், "நானூற்று
திருத்தம்.
ஐம்பது ரூபாய்கள்" எனும் சொற்றொடருக்கு பதிலாக, "ஆயிரம் ரூபாய்கள்" எனும்
சொற்றொடரானது மாற்றாக அமைக்கப்படுதல் வேண்டும்.
தமிழ்நாடு அவசரச்
நீக்கறவு மற்றும் 3. (1) 2022 ஆம் ஆண்டு தமிழ்நாடு மதுவிலக்கு (திருத்த) அவசரச் சட்டமானது
சட்டம் 3/2022.
காப்புரை.
இதன்மூலம் நீக்கறவு செய்யப்படுகிறது.
(2) அத்தகைய நீக்கறவு இருந்த போதிலும், கூறப்பட்ட அவசரச் சட்டத்தினால்
திருத்தம் செய்யப்பட்டவாறான, முதன்மைச் சட்டத்தின்படி செய்யப்பட்ட எதுவும் அல்லது
எடுக்கப்பட்ட நடவடிக்கை எதுவும், இந்தச் சட்டத்தினால் திருத்தம் செய்யப்பட்டவாறான
முதன்மைச் சட்டத்தின்படி செய்யப்பட்டிருப்பதாக அல்லது எடுக்கப்பட்டிருப்பதாக
கொள்ளப்படுதல் வேண்டும்.
(ஆளுநரின் ஆணைப்படி)
ச. கோபி ரவிகுமார்,
அரசுச் செயலாளர் (சட்டமியற்றல்),
சட்டத் துறை.
(தமிழாக்கம்)
வெ. அரசகுமார்,
உதவி இயக்குநர்,
சட்ட (தமிழ்ப்பிரிவு)த் துறை.
தமிழ்நாடு அரசுக்காக சென்னை எழுதுபொருள் மற்றும் அச்சுத் துறை ஆணையரால்
அச்சிடப்பட்டு வெளியிடப்பட்டது.