© தமிழ்நாடு அரசு 2023
[Regd. No. TN/CCN/467/2012-14. [R. Dis. No. 197/2009. [விலை: ரூ. 4.00 காசு
| தமிழ்நாடு அரசிதழ் ஆணையின்படி வெளியிடப்பட்டது. | ||
எண் 7] சென்னை, புதன்கிழமை, பிப்ரவரி 15, 2023 மாசி 3, சுபகிருது, திருவள்ளுவர் ஆண்டு–2054
பகுதி II—பிரிவு 2 இன் இணைப்பு
அரசாங்க அறிவிப்புகளின் தமிழ் மொழிபெயர்ப்புகள்
அறிவிக்கைகள்
வீட்- -டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை
[அரசாணை (நிலை) எண். 216, வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி [UD4(2)]த் துறை, 2 டிசம்பர் 2022.] தமிழ்நாடு 1971 ஆம் ஆண்டு நகர் ஊரமைப்புச் சட்டத்தின் (தமிழ்நாடு சட்டம் 35/1972) 10ஆம் பிரிவைச் சேர்ந்த (4) உட்பிரிவில் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களைக் கொண்டு, தமிழ்நாட்டு ஆளுநர் அவர்கள் கீழே அட்டவணையில் குறிப்பிடப்பட்டுள்ளவாறு, கூடலூர் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளை "கூடலூர் உள்ளூர் திட்டமிடல் பகுதி" என்று இதனால் அறிவிக்கிறார். அவ்வாறு செய்வதற்கான இதன் நோக்கம், மேற்சொன்ன இச்சட்டத்தின் 10-ஆம் பிரிவைச் சேர்ந்த (1) உட்பிரிவின் (b) பகுதியில் கோரியுள்ளவாறாக, ஏற்கெனவே வெளியிடப்பட்டுள்ளது.
"அட்டவணை"
வருவாய் கிராமங்களின்
உள்ளூர் திட்டமிடல் பகுதியின் பெயர்
தொடர் எண்.
எண் மற்றும் பெயர்
(1) (2)
(3)
1. கூடலூர் கூடலூர் நகராட்சி
[அரசாணை (நிலை) எண். 217, வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி [UD4(2)]த் துறை, 2 டிசம்பர் 2022.] தமிழ்நாடு 1971 ஆம் ஆண்டு நகர் ஊரமைப்புச் சட்டத்தின் (தமிழ்நாடு சட்டம் 35/1972) 10ஆம் பிரிவைச் சேர்ந்த (1) உட்பிரிவின் (b) பகுதியில் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களைக் கொண்டு தமிழ்நாட்டு ஆளுநர் அவர்கள் 10.04.1974 ஆம் நாளிட்ட தமிழ்நாடு அரசிதழின் பாகம் II—பிரிவு 2 இல் 210ஆம் பக்கத்தில் (ஆங்கிலத்தில்) வெளியிடப்பட்ட ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சி நிருவாகத் துறையின் II(2)/RUL/2024/74 ஆம் எண் அறிவிக்கையில் உள்ளூர் திட்டமிடல் பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ள மணப்பாறை உள்ளூர் திட்டமிடல் பகுதியில் பின்வரும் வருவாய் கிராமங்களைச் சேர்ப்பதற்கான அவருடைய நோக்கத்தை இதனால் அறிவிக்கிறார். அதாவது:-
வருவாய் கிராமங்களின் எண் மற்றும் பெயர்
44. மொண்டிப்பட்டி
62. பொய்கைப்பட்டி
87. வடுகப்பட்டி
95. வேங்கைக்குறிச்சி
[ 1 ]
DTP-II-2-(7) (T Sup)—12 2. இந்த அறிவிக்கை தமிழ்நாடு அரசிதழில் வெளியிடப்பட்ட நாளிலிருந்து இரண்டு திங்கள் கால அளவிற்குள் மேற்சொன்ன பகுதிகளில் வசிக்கும் யாதொரு நபர் அல்லது யாதொரு உள்ளூர் அதிகார அமைப்பு அல்லது நிறுவனம் அவ்வாறு சேர்ப்பதற்குக் கருதப்பட்டுள்ள பகுதிகள் குறித்த யாதொரு மறுப்புரை அல்லது கருத்துரையை எழுத்து வடிவில் அரசிடம் அளிக்கலாம். மேற்சொன்ன கால அளவிற்குள் பெறப்படும் மறுப்புரைகள் அல்லது கருத்துரைகள் (எவையேனுமிருப்பின்), மேற்சொன்ன சட்டத்தின் 10 ஆம் பிரிவைச் சேர்ந்த (4) உட்பிரிவிற்கிணங்க மேற்கொண்டும் நடவடிக்கை எடுப்பதற்கு முன்னர் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்படும். மறுப்புரைகள் அல்லது கருத்துரைகள், அரசு முதன்மைச் செயலாளர், வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை, தலைமைச் செயலகம், புனித ஜார்ஜ் கோட்டை, சென்னை-600 009, என்ற முகவரிக்கு அனுப்பி வைக்கப்பட வேண்டும்.
[அரசாணை (நிலை) எண். 219, வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி [UD4(2)]த் துறை, 2 டிசம்பர் 2022] தமிழ்நாடு 1971 ஆம் ஆண்டு நகர் ஊரமைப்புச் சட்டத்தின் (தமிழ்நாடு சட்டம் 35/1972) 10 ஆம் பிரிவைச் சேர்ந்த (1) உட்பிரிவின் (b) பகுதியில் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களைக் கொண்டு தமிழ்நாட்டு ஆளுநர் அவர்கள் 10.04.1974 ஆம் நாளிட்ட தமிழ்நாடு அரசிதழின் பாகம் II—பிரிவு 2 இல் 206 ஆம் பக்கத்தில் (ஆங்கிலத்தில்) வெளியிடப்பட்ட ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சி நிருவாகத் துறையின் II(2)/RUL/1997/74 ஆம் எண் அறிவிக்கையில் உள்ளூர் திட்டமிடல் பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ள பரமக்குடி உள்ளூர் திட்டமிடல் பகுதியில் பின்வரும் வருவாய் கிராமங்களின் பகுதிகளை சேர்ப்பதற்கான அவருடைய நோக்கத்தை இதனால் அறிவிக்கிறார். அதாவது:-
வருவாய் கிராமங்களின் எண் மற்றும் பெயர்
93. எமனேஸ்வரம் பகுதி
19. காட்டுபரமக்குடி பகுதி
20. வேந்தோணி பகுதி
21. உரப்புளி
2. இந்த அறிவிக்கை தமிழ்நாடு அரசிதழில் வெளியிடப்பட்ட நாளிலிருந்து இரண்டு திங்கள் கால அளவிற்குள் மேற்சொன்ன பகுதிகளில் வசிக்கும் யாதொரு நபர் அல்லது யாதொரு உள்ளூர் அதிகார அமைப்பு அல்லது நிறுவனம் அவ்வாறு சேர்ப்பதற்குக் கருதப்பட்டுள்ள பகுதிகள் குறித்த யாதொரு மறுப்புரை அல்லது கருத்துரையை எழுத்து வடிவில் அரசிடம் அளிக்கலாம். மேற்சொன்ன கால அளவிற்குள் பெறப்படும் மறுப்புரைகள் அல்லது கருத்துரைகள் (எவையேனுமிருப்பின்), மேற்சொன்ன சட்டத்தின் 10ஆம் பிரிவைச் சேர்ந்த (4) உட்பிரிவிற்கிணங்க மேற்கொண்டும் நடவடிக்கை எடுப்பதற்கு முன்னர் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்படும். மறுப்புரைகள் அல்லது கருத்துரைகள், அரசு முதன்மைச் செயலாளர், வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை, தலைமைச் செயலகம், புனித ஜார்ஜ் கோட்டை, சென்னை-600 009, என்ற முகவரிக்கு அனுப்பி வைக்கப்பட வேண்டும்.
[அரசாணை (நிலை) எண். 222, வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி [UD4(2)]த் துறை, 2 டிசம்பர் 2022] தமிழ்நாடு 1971-ஆம் ஆண்டு நகர் ஊரமைப்புச் சட்டத்தின் (தமிழ்நாடு சட்டம் 35/1972) 10-ஆம் பிரிவைச் சேர்ந்த (1) உட்பிரிவின் (b) பகுதியில் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களைக் கொண்டு தமிழ்நாட்டு ஆளுநர் அவர்கள் 10.04.1974 ஆம் நாளிட்ட தமிழ்நாடு அரசிதழின் பாகம் II—பிரிவு 2 இல் 210 ஆம் பக்கத்தில் (ஆங்கிலத்தில்) வெளியிடப்பட்ட ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சி நிருவாகத் துறையின் II(2)/RUL/2027/74 ஆம் எண் அறிவிக்கையில் உள்ளூர் திட்டமிடல் பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ள பவானிசாகர் உள்ளூர் திட்டமிடல் பகுதியில் பின்வரும் வருவாய் கிராமங்களின் பகுதிகளை சேர்ப்பதற்கான அவருடைய நோக்கத்தை இதனால் அறிவிக்கிறார். அதாவது:-
வருவாய் கிராமங்களின் எண் மற்றும் பெயர்
41. முடுக்கன்துறை பகுதி
43. தொப்பம்பாளையம்
40. புங்கார்
42. தொட்டம்பாளையம்
39. கொத்தமங்கலம்
34. பகுத்தம்பாளையம்
38. இக்கரை தத்தப்பள்ளி
49. கரிதொட்டாம்பாளையம்
50. அக்கரை தத்தப்பள்ளி
51. பூசாரிபாளையம்
46. பனையம்பள்ளி
45. பெரிய கள்ளிப்பட்டி3 2. இந்த அறிவிக்கை தமிழ்நாடு அரசிதழில் வெளியிடப்பட்ட நாளிலிருந்து இரண்டு திங்கள் கால அளவிற்குள் மேற்சொன்ன பகுதிகளில் வசிக்கும் யாதொரு நபர் அல்லது யாதொரு உள்ளூர் அதிகார அமைப்பு அல்லது நிறுவனம் அவ்வாறு சேர்ப்பதற்குக் கருதப்பட்டுள்ள பகுதிகள் குறித்த யாதொரு மறுப்புரை அல்லது கருத்துரையை எழுத்து வடிவில் அரசிடம் அளிக்கலாம். மேற்சொன்ன கால அளவு முடிவடைவதற்குள் பெறப்படும் மறுப்புரைகள் அல்லது கருத்துரைகள் (எவையேனுமிருப்பின்), மேற்சொன்ன சட்டத்தின் 10ஆம் பிரிவைச் சேர்ந்த (4) உட்பிரிவிற்கிணங்க மேற்கொண்டும் நடவடிக்கை எடுப்பதற்கு முன்னர் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்படும் மறுப்புரைகள் அல்லது கருத்துரைகள், அரசு முதன்மைச் செயலாளர், வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை, தலைமைச் செயலகம், புனித ஜார்ஜ் கோட்டை, சென்னை-600 009, என்ற முகவரிக்கு அனுப்பி வைக்கப்பட வேண்டும்.
[அரசாணை (நிலை) எண். 225, வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி [UD4(2)]த் துறை, 2 டிசம்பர் 2022] தமிழ்நாடு 1971 ஆம் ஆண்டு நகர் ஊரமைப்புச் சட்டத்தின் (தமிழ்நாடு சட்டம் 35/1972) 10-ஆம் பிரிவைச் சேர்ந்த (1) உட்பிரிவின் (b) பகுதியில் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களைக் கொண்டு தமிழ்நாட்டு ஆளுநர் அவர்கள் 07.03.1990 ஆம் நாளிட்ட தமிழ்நாடு அரசிதழின் பாகம் II—பிரிவு 2 இல் 126 ஆம் பக்கத்தில் (ஆங்கிலத்தில்) வெளியிடப்பட்ட வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறையின் II(2)/HOU/1235/90 ஆம் எண் அறிவிக்கையில் உள்ளூர் திட்டமிடல் பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ள குழித்துறை உள்ளூர் திட்டமிடல் பகுதியில் பின்வரும் வருவாய் கிராமங்களின் பகுதிகளைச் சேர்ப்பதற்கான அவருடைய நோக்கத்தை இதனால் அறிவிக்கிறார். அதாவது:-
வருவாய் கிராமங்களின் எண் மற்றும் பெயர்
நல்லூர் பேரூராட்சி:
07. நல்லூர்
48. நட்டாலம் 'ஆ'
49. கொல்லஞ்சி
உண்ணாமலைக்கடை பேரூராட்சி
07. நல்லூர்
47. உண்ணாமலைக்கடை
49. கொல்லஞ்சி
பாகோடு பேரூராட்சி
08. பாகோடு 'அ'
32. மருதங்கோடு
33. பாகோடு 'ஆ'
களியக்காவிளை பேரூராட்சி
34. களியக்காவிளை
கொல்லஞ்சி கிராம ஊராட்சி
18. நட்டாலம் 'அ'
49. கொல்லஞ்சி
நட்டாலம் கிராம ஊராட்சி
18. நட்டாலம் 'அ'
49. கொல்லஞ்சி
மருதங்கோடு கிராம ஊராட்சி
32. மருதங்கோடு
விளவங்கோடு கிராம ஊராட்சி
9. விளவங்கோடு
வன்னியூர் கிராம ஊராட்சி
34. களியக்காவிளை
(2) இந்த அறிவிக்கை தமிழ்நாடு அரசிதழில் வெளியிடப்பட்ட நாளிலிருந்து இரண்டு திங்கள் கால அளவிற்குள் மேற்சொன்ன பகுதிகளில் வசிக்கும் யாதொரு நபர் அல்லது யாதொரு உள்ளூர் அதிகார அமைப்பு அல்லது நிறுவனம் அவ்வாறு சேர்ப்பதற்குக் கருதப்பட்டுள்ள பகுதிகள் குறித்த யாதொரு மறுப்புரை அல்லது கருத்துரையை எழுத்து வடிவில் அரசிடம் அளிக்கலாம். மேற்சொன்ன கால அளவிற்குள் பெறப்படும் மறுப்புரைகள் அல்லது கருத்துரைகள் (எவையேனுமிருப்பின்), மேற்சொன்ன சட்டத்தின் 10ஆம் பிரிவைச் சேர்ந்த (4) உட்பிரிவிற்கிணங்க மேற்கொண்டும் நடவடிக்கை எடுப்பதற்கு முன்னர்4 பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்படும் மறுப்புரைகள் அல்லது கருத்துரைகள், அரசு முதன்மைச் செயலாளர், வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை, தலைமைச் செயலகம், புனித ஜார்ஜ் கோட்டை, சென்னை-600 009, என்ற முகவரிக்கு அனுப்பி வைக்கப்பட வேண்டும்.
ஹிதேஸ் குமார் எஸ். மக்வானா, அரசு முதன்மைச் செயலாளர்.
(தமிழாக்கம்)
ந. அருள், இயக்குநர், தமிழ் வளர்ச்சி மற்றும்
செய்தி (மொழிபெயர்ப்பு)த் துறை.
[அரசாணை (நிலை) எண். 263, வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி [UD4(2)]த் துறை, 16 டிசம்பர் 2022.] தமிழ்நாடு 1971ஆம் ஆண்டு நகர் ஊரமைப்புச் சட்டத்தின் (தமிழ்நாடு சட்டம் 35/1972) 10 ஆம் பிரிவைச் சேர்ந்த (4) உட்பிரிவில் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களைக் கொண்டு, தமிழ்நாட்டு ஆளுநர் அவர்கள் பழனி உள்ளூர் திட்டமிடல் பகுதியில் கீழ்க்காணும் வருவாய் கிராமங்களைச் சேர்ப்பதுடன் 17.04.1974 ஆம் நாளிட்ட தமிழ்நாடு அரசிதழின் பாகம் II-பிரிவு 2 இல் 218-ஆம் பக்கத்தில் (ஆங்கிலத்தில்) வெளியிடப்பட்ட ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சி நிருவாகத் துறையின் II(2)/RUL/2141/74 ஆம் எண் அறிவிக்கையில் பின்வரும் திருத்தத்தை இதனால் செய்கிறார். அவ்வாறு செய்வதற்கான இதன் நோக்கம், மேற்சொன்ன சட்டத்தின் 10 ஆம் பிரிவைச் சேர்ந்த (1) உட்பிரிவின் (b) பகுதியில் கோரியுள்ளவாறாக, ஏற்கெனவே வெளியிடப்பட்டுள்ளது.
திருத்தம்
மேற்சொன்ன அறிவிக்கையின் அட்டவணைக்குப் பதிலாக, பின்வரும் அட்டவணை அமைத்துக் கொள்ளப்பட வேண்டும்.
அதாவது:-
"அட்டவணை
வருவாய் கிராமங்களின்
தொடர் எண்.
உள்ளூர் திட்டமிடல் பகுதியின் பெயர்
எண் மற்றும் பெயர்
(1) (2)
(3)
1 பழனி பழனி நகராட்சி
35. சிவகிரிப்பட்டி
31. கலிக்கநாயக்கன்பட்டி
32. கோதைமங்கலம்
39. தாமரைக்குளம்
45. சின்னக்கலையம்புத்தூர்
43. பெரியகலையம்புத்தூர்
44. நெய்க்காரப்பட்டி
30. ஆயக்குடி (மேற்கு)
23. மொல்லம்பட்டி
42/1. அ. கலையம்புத்தூர்
42/2. கலையம்புத்தூர்
34. பழனி (கிராமம்)
33. தட்டான்குளம்
அபூர்வா, அரசு முதன்மைச் செயலாளர்.
(தமிழாக்கம்)
ந. அருள், இயக்குநர் (மு.கூ.பொ.),
தமிழ் வளர்ச்சி மற்றும்
செய்தி (மொழிபெயர்ப்பு)த் துறை.
5தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை
[அரசாணை (ப) எண். 640, தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு (J1)த் துறை, 22 டிசம்பர் 2022.] 1948 ஆம் ஆண்டு குறைந்தளவு ஊதியங்கள் சட்டத்தின் (மத்தியச் சட்டம் 11/1948) 3 ஆம் பிரிவைச் சேர்ந்த (1) உட்பிரிவின் (b) பகுதி, 5ஆம் பிரிவைச் சேர்ந்த (2) உட்பிரிவு ஆகியவற்றில் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களைக் கொண்டும், வெளியிடக்கருதியுள்ள அறிவிக்கையின் கீழ்க்காணும் வரைவு, மேற்சொன்ன சட்டத்தின் 5ஆம் பிரிவைச் சேர்ந்த (1) உட்பிரிவின் (b) பகுதியில் கோரியுள்ளவாறு, அதனால் பாதிக்கப்படக்கூடிய அனைவரின் தகவலுக்காக இதனால் வெளியிடப்படுகிறது.
2. இந்த வரைவு அறிவிக்கை தமிழ்நாடு அரசிதழில் வெளியிடப்படும் நாளிலிருந்து இரண்டு திங்கள் கால அளவு முடிவடையும் நாளன்று அல்லது அதற்குப் பின்னர் அறிவிக்கை பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்படுமென்றும், மேற்சொன்ன கால அளவு முடிவடைவதற்கு முன்னர், இது தொடர்பாக, எவரிடமிருந்தேனும் வரப்பெறுகிற ஏதேனும் மறுப்புரை அல்லது கருத்துரையை தமிழ்நாடு அரசு பரிசீலிக்குமென்றும், இதனால் அறிவிக்கப்படுகிறது. மறுப்புரை அல்லது கருத்துரை ஏதேனுமிருப்பின், அவற்றை சென்னை-600 006 DMS வளாகத்திலுள்ள தொழிலாளர் நல ஆணையாளர் வாயிலாக அரசுக் கூடுதல் தலைமைச் செயலாளர், தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை, தலைமைச் செயலகம், சென்னை-600 009 என்ற முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.
வரைவு அறிவிக்கை
1948 ஆம் ஆண்டு குறைந்தளவு ஊதியங்கள் சட்டத்தின் (மத்தியச் சட்டம் 11/1948) 3ஆம் பிரிவைச் சேர்ந்த (1) உட்பிரிவின் (b) பகுதி, 5ஆம் பிரிவைச் சேர்ந்த (2) உட்பிரிவு ஆகியவற்றில் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களைக் கொண்டும், 10-07-2019ஆம் நாளிட்ட தமிழ்நாடு அரசிதழின் பாகம் II பிரிவு-2ல், 666 லிருந்து 667 வரையிலான பக்கங்களில் (ஆங்கிலத்தில்) வெளியிடப்பட்ட II(2)/LE/564/2019 ஆம் எண்ணுள்ள தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறையின் அறிவிக்கையினை ரத்து செய்துவிட்டு, அதற்குப் பதிலாகவும், தமிழ்நாட்டு ஆளுநர் அவர்கள், தமிழ்நாடு மாநிலத்தில் யாதொரு எண்ணெய் ஆலையில் பணியமர்த்தப்பட்டு கீழேயுள்ள விவர அட்டவணையின் (1) ஆம் நெடும் பத்தியில் குறிப்பிடப்பட்டுள்ள பணியாளர் வகையினருக்கு வழங்கத்தக்க குறைந்தளவு அடிப்படை ஊதிய வீதங்களை, அந்த விவர அட்டவணையின் (2) நெடும்பத்தியின் நிகரான பதிவுகளில் குறிப்பிட்டுள்ளவாறாக இதனால் திருத்தியமைக்கிறார்.
விவர அட்டவணை
யாதொரு எண்ணெய் ஆலையில் வேலைவாய்ப்பு
| பணியாளர் வகையினர் | குறைந்தளவு அடிப்படை ஊதிய வீதங்கள் (ரூ. காசு) | ||||||||
| ( 1 ) | ( 2 ) | ||||||||
| I. அலுவலகப் பணியாளர்கள்: | |||||||||
| (1) | எழுத்தர் | மாதமொன்றுக்கு 7584.00 | |||||||
| (2) | நேரக்காப்பாளர் / நேரங்குறிப்பவர் | ||||||||
| (3) | காசாளர் | ||||||||
| (4) | தட்டச்சர் | ||||||||
| (5) | ஏவலர் | மாதமொன்றுக்கு 7382.00 | |||||||
| (6) | சிற்றேவலர் (அலுவலகப் பையன்) | மாதமொன்றுக்கு 7149.00 | |||||||
| (7) | காவலாள் | மாதமொன்றுக்கு 7481.00 | |||||||
| II. தேர்ச்சி பெற்றவர்கள்: | |||||||||
| (1) | மின் கம்மியர் | நாளொன்றுக்கு 291.00 | |||||||
| (2) | என்ஜின் ஓட்டுநர்/இயக்குபவர் | ||||||||
| (3) | கசடுகளை வெளித்தள்ளும் இயந்திரம் மேஸ்திரி / மேற்பார்வையாளர் | ||||||||
| (4) | தச்சர்/கருமார் | நாளொன்றுக்கு 288.00 | |||||||
| (5) | பொருத்துநர்/இயந்திரக் கம்மியர் | நாளொன்றுக்கு 286.00 | |||||||
| (6) | கொதிகலன் பொறுப்பாளர் | நாளொன்றுக்கு 288.00 | |||||||
| (7) | உருளை இயக்குபவர் | நாளொன்றுக்கு 286.00 |
DTP-II-2-(7) (T Sup)—2 DTP-II-2-(7) (T Sup)—26 இருப்பினும், உருளை இயக்குபவரைப் பொறுத்த நேர்வில் செய்யும் வேலைக்கேற்ப ஊதியம் வழங்கப்படுமாயின், 80 கிலோகிராம் எடையளவு கொண்ட நிலக்கடலை வித்துகள் மூட்டை ஒன்றுக்கு ரூ.75.20 ரூபாயும், 75 கிலோகிராம் எடையளவு கொண்ட எள் வித்துகள் மூட்டை ஒன்றுக்கு 92.25 ரூபாயும் அவர்களுக்கு வழங்கப்படும்.
| (8) | அளந்து ஊற்றுபவர் (pintman) | நாளொன்றுக்கு 286.00 |
அளந்து ஊற்றுபவரைப் (pintman) பொறுத்தநேர்வில், செய்யும் வேலைக்கேற்ப ஊதியம் வழங்கப்படுமாயின், 80 கிலோகிராம் எடையளவு கொண்ட நிலக்கடலை வித்துகள் மூட்டை ஒன்றுக்கு ரூ.98.45 ரூபாயும், 75 கிலோகிராம் எடையளவு கொண்ட எள் வித்துகள் மூட்டை ஒன்றுக்கு 115.50 ரூபாயும் அவர்களுக்கு வழங்கப்படும்.
| (9) | ஓட்டை உடைச்சல் அடைப்பவர் (Tinker) | டின் எனப்படும் தகரக் கொள்கலன் ஒன்றுக்கு 8.25 |
(பணியாளர்கள் கொண்டுவர வேண்டிய மூலப்பொருள்களும் அடங்கும்)
| (10) | சுத்திகரிப்பு இயந்திரம் இயக்குபவர் | மாதமொன்றுக்கு 8699.00 | |||||
| (11) | வடித்தெடுக்கும் கருவி இயக்குபவர் | ||||||
| III. தேர்ச்சி பெறாதவர்கள்: | |||||||
| (1) | பெருக்குபவர் | நாளொன்றுக்கு 269.00 | |||||
| (2) | புண்ணாக்கு எடுத்துச் செல்பவர் | ||||||
| (3) | மஸ்தூர் | ||||||
| (4) | நிலக்கடலை வித்துகளை இயக்குபவர் (Decorticator) (நிலக்கடலை சுமப்பவர், உமி சுமப்பவர், கோணிப்பைகள் தைப்பவர்) | பிரித்தெடுக்கும் இயந்திரத்தை நிரப்புபவர், கோணிப்பைகள் | நாளொன்றுக்கு 277.00 | ||||
| (5) | தூசு, உமி நீக்குபவர் | ||||||
| (6) | வடித்தெடுக்கும் கருவிக் கையாளுபவர் | நாளொன்றுக்கு 279.00 | |||||
| (7) | எண்ணெய் சிப்பமாக்குபவர் | ||||||
| (8) | கொதிகலன் பராமரிப்பு உதவியாள் |
விளக்கங்கள்:(1) அகவிலைப்படி: மேலே நிர்ணயிக்கப்பட்ட குறைந்தளவு அடிப்படை ஊதிய வீதங்களுடன் பணியாளர்களுக்கு கீழே குறிப்பிடப்பட்டுள்ளவாறு அகவிலைப்படி வழங்கப்பட வேண்டும்.
(i) அகவிலைப்படியானது, 2010-ஆம் ஆண்டிற்கான சென்னை மாநகர நுகர்வோர் சராசரி விலைக்குறியீட்டு எண்ணுடன் இணைக்கப்பட்டுள்ளது (அதாவது 2001-ஆம் ஆண்டில் 100 புள்ளிகள் என்பதை அடிப்படையாகக் கொண்டு தற்போது கணக்கிடப்பட்ட 161 புள்ளிகள்). 161 புள்ளிகளுக்கு மேல் உயரும் ஒவ்வொரு புள்ளிக்கும் மாதம் ஒன்றுக்கு ரூ. 44.40 (நாற்பத்தி நான்கு ரூபாய் நாற்பது காசுகள் மட்டும்) கூடுதலாக அகவிலைப்படி வழங்கப்பட வேண்டும்.
(ii) முந்தைய 12 மாதங்களுக்கான (அதாவது ஜனவரியிலிருந்து டிசம்பர் வரை) சராசரி விலைக்குறியீட்டினை அடிப்படையாகக் கொண்டு, ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் முதல் நாளன்று அகவிலைப்படி கணக்கிடப்படவேண்டும்.
(iii)) முந்தைய ஆண்டிற்கான சென்னை மாநகர நுகர்வோர் சராசரி விலைக் குறியீட்டு எண்ணை அடிப்படையாகக் கொண்ட முதல் கணக்கீடு, இந்த அறிவிக்கை தமிழ்நாடு அரசிதழில் வெளியிடப்படும் நாளிலிருந்து செயலுக்கு வரும்.
(2) பணியின் தன்மை ஒரே மாதிரியாக இருக்கும்போது, ஆண் மற்றும் பெண் தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் ஊதியத்தில் எவ்வித வேறுபாடும் இருக்கக்கூடாது.
(3) (i) நாள் ஊதியத்தைக் கணக்கிடுவதற்கு மாதாந்திர ஊதியத்தை 26ஆல் வகுக்க வேண்டும்.
(ii) மாதாந்திர ஊதியத்தைக் கணக்கிடுவதற்கு நாள் ஊதியத்தை 30ஆல் பெருக்க வேண்டும்.
(4) தற்போது வழங்கப்பட்டு வரும் ஊதியங்கள், இங்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள குறைந்தளவு ஊதியங்களைக் காட்டிலும் அதிகமாக இருக்குமிடங்களிலெல்லாம், அதே அதிகளவு ஊதியம் தொடர்ந்து வழங்கப்பட வேண்டும்.
7[அரசாணை (ப) எண். 650, தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு (J1)த் துறை, 28 டிசம்பர் 2022.] 1948ஆம் ஆண்டு குறைந்தளவு ஊதியங்கள் சட்டத்தின் (மத்தியச் சட்டம் 11/1948) 3ஆம் பிரிவைச் சேர்ந்த (1) உட்பிரிவின் (b) பகுதி, 5ஆம் பிரிவைச் சேர்ந்த (2) உட்பிரிவு ஆகியவற்றில் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களைக் கொண்டும், வெளியிடக்கருதியுள்ள அறிவிக்கையின் கீழ்க்காணும் வரைவு, மேற்சொன்ன சட்டத்தின் 5ஆம் பிரிவைச் சேர்ந்த (1) உட்பிரிவின் (b) பகுதியில் கோரியுள்ளவாறு, அதனால் பாதிக்கப்படக்கூடிய அனைவரின் தகவலுக்காக இதனால் வெளியிடப்படுகிறது.
(2) இந்த அறிவிக்கை தமிழ்நாடு அரசிதழில் வெளியிடப்படும் நாளிலிருந்து இரண்டு திங்கள் கால அளவு முடிவடையும் நாளன்று அல்லது அதற்குப் பின்னர் இந்த வரைவு அறிவிக்கை பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்படுமென்றும், மேற்சொன்ன கால அளவு முடிவடைவதற்கு முன்னர், இது தொடர்பாக, எவரிடமிருந்தேனும் வரப்பெறுகிற ஏதேனும் மறுப்புரை அல்லது கருத்துரையை தமிழ்நாடு அரசு பரிசீலிக்குமென்றும், இதனால் அறிவிக்கப்படுகிறது. மறுப்புரை அல்லது கருத்துரை ஏதேனுமிருப்பின், அவற்றை சென்னை-600 006-இல் உள்ள தொழிலாளர் நல ஆணையாளர் வாயிலாக அரசு கூடுதல் தலைமைச் செயலாளர், தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை, தலைமைச் செயலகம், சென்னை-600 009 என்ற முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.
வரைவு அறிவிக்கை
1948ஆம் ஆண்டு குறைந்தளவு ஊதியங்கள் சட்டத்தின் (மத்தியச் சட்டம் 11/1948) 3ஆம் பிரிவைச் சேர்ந்த (1) உட்பிரிவின் (b) பகுதி, 5ஆம் பிரிவைச் சேர்ந்த (2) உட்பிரிவு ஆகியவற்றில் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களைக் கொண்டு, 10-07-2019ஆம் நாளிட்ட தமிழ்நாடு அரசிதழின் பாகம் II பிரிவு-2ல், 666-667 ஆம் பக்கங்களில் (ஆங்கிலத்தில்) வெளியிடப்பட்ட II(2)/LE)/565/2019 ஆம் எண்ணுள்ள தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அறிவிக்கையினை ரத்து செய்துவிட்டு, தமிழ்நாட்டு ஆளுநர் அவர்கள், தமிழ்நாடு மாநிலத்தில் திரைப்படத் தொழிலில் (தயாரிப்பு, விநியோகம், விளம்பரம் ஆகியவை உட்பட) பணியமர்த்தப்பட்டுள்ள கீழ்க்காணும் விவர அட்டவணையின் (1) ஆம் நெடும் பத்தியில் குறிப்பிடப்பட்டுள்ள பணிகளை செய்கிற தொழிலாளர் வகையினருக்கு வழங்கத்தக்க குறைந்தளவு ஊதிய வீதங்களை, அந்த விவர அட்டவணையின் (2) நெடும்பத்தியின் நிகரான பதிவுகளில் குறிப்பிட்டுள்ளவாறு இதனால் திருத்தியமைக்கிறார்.
விவர அட்டவணை
திரைப்படத் தொழிலில் (தயாரிப்பு, விநியோகம் மற்றும் விளம்பரம் உட்பட) வேலைவாய்ப்பு
| பணியாளர்களின் வகைகள் | திங்களொன்றுக்கான குறைந்தளவு அடிப்படை ஊதிய வீதங்கள் ( ரூ . காசு) | ||||
| (1) | ( 2 ) | ||||
| I. திரைப்படப் பிடிப்பு நிலையங்கள்: | |||||
| 1. தயாரிப்பு | |||||
| 1 | துப்புரவுப் பணியாளர் / பெருக்குபவர் | 8444.00 | |||
| 2 | பணிப்பெண் / அலுவலக உதவியாள் / ஏவலாள் | 8531.00 | |||
| 3 | காவலாள் | 8531.00 | |||
| 4 | ஓட்டுநர் (கனரக வாகனம் மற்றும் வேன்) | 9603.00 | |||
| 5 | ஓட்டுநர் (இலகு ரக வாகனங்கள்) | 9187.00 | |||
| 6 | உதவியார் (Attendar) | 8618.00 | |||
| 7 | உதவிக் கணக்காளர் | 10178.00 | |||
| 8 | கணக்காளர் | 11249.00 | |||
| 9 | எழுத்தர் | 9974.00 | |||
| 10 | தட்டச்சர் | 9934.00 | |||
| 11 | சுருக்கெழுத்துத் தட்டச்சர் | 10418.00 | |||
| 12 | உதவி மேலாளர் | 12638.00 | |||
| 13 | மேலாளர் | 14613.00 | |||
| 2. மின் பிரிவு | |||||
| 1 | மின்விளக்கு தூக்குபவர் | 9187.00 | |||
| 2 | மின் பணியாளர் நிலை - II | 9820.00 |
| பணியாளர்களின் வகைகள் | திங்களொன்றுக்கான குறைந்தளவு அடிப்படை ஊதிய வீதங்கள் ( ரூ . காசு) | |||||||||||
| (1) | ( 2 ) | |||||||||||
| 3 | மின் பணியாளர் நிலை - I | 10418.00 | ||||||||||
| 3. வார்ப்படப் பிரிவு | ||||||||||||
| 1 | உதவியாள் | 8531.00 | ||||||||||
| 2 | வார்ப்பட மேஸ்திரி | 10833.00 | ||||||||||
| 4. ஓவியப் பிரிவு | ||||||||||||
| 1 | உதவியாள் | 8531.00 | ||||||||||
| 2 | உதவி ஓவியர் | 10178.00 | ||||||||||
| 3 | தலைமை ஓவியர் | 10833.00 | ||||||||||
| 5. கலைப் பிரிவு | ||||||||||||
| 1 | உதவியாள் | 8531.00 | ||||||||||
| 2 | தச்சர் (நிலை - II) | 10178.00 | ||||||||||
| 3 | தச்சர் (நிலை - I) | 10833.00 | ||||||||||
| 4 | மேஸ்திரி | 11078.00 | ||||||||||
| 6. ஒப்பனைப் பிரிவு | ||||||||||||
| 1 | ஒப்பனை உதவியாளர் | 9187.00 | ||||||||||
| 7. புகைப்படக் கருவிப் பிரிவு | ||||||||||||
| 1 | புகைப்படக் கருவி உதவியாளர் நிலை - II | 9603.00 | ||||||||||
| 2 | புகைப்படக் கருவி உதவியாளர் நிலை - I | 10418.00 | ||||||||||
| 3 | புகைப்படப் பிரிவுக்குப் பொறுப்பு வகிப்பவர் | 13298.00 | ||||||||||
| 8. திரைப்படச் சுருளைக் கழுவும் பிரிவு (Laboratory Department) | ||||||||||||
| 1 | திரைப்படச் சுருளை வேதியியல் முறையில் மேம்படுத்தும் உதவியாளர் நிலை - I | 10219.00 | ||||||||||
| 2 | திரைப்படச் சுருளை வேதியியல் முறையில் மேம்படுத்தும் உதவியாளர் நிலை - II | 9402.00 | ||||||||||
| 3 | திரைப்படச் சுருளை வேதியியல் முறையில் மேம்படுத்தும் உதவியாளர் நிலை - III | 8772.00 | ||||||||||
| 4 | பிரிவுப் பொறுப்பாளர் | 11666.00 | ||||||||||
| 5 | திரைப்படச் சுருள் நெகட்டிவ் பரிசோதிப்பவர் | 9402.00 | ||||||||||
| 6 | திரைப்படச் சுருள் பாசிட்டிவ் பரிசோதனை உதவியாளர் | 8772.00 | ||||||||||
| 9. வேதியியல் பிரிவு | ||||||||||||
| 1 | வேதியியல் பொருட்களைக் கலப்பவர் | 10004.00 | ||||||||||
| 2 | வேதியியல் பொருட்களைக் கலக்கும் உதவியாளர் | 9187.00 | ||||||||||
| 3 | வேதியியல் | 11666.00 | ||||||||||
| 10. அச்சகப் பிரிவு | ||||||||||||
| 1 | அச்சக உதவியாளர் நிலை-I | 10833.00 | ||||||||||
| 2 | அச்சக உதவியாளர் நிலை-II | 10004.00 | ||||||||||
| 3 | அச்சக உதவியாளர் நிலை-III | 9187.00 | ||||||||||
| 11. திரைப்படச் சுருளை மேம்படுத்தும் பிரிவு | ||||||||||||
| 1 | திரைப்படச் சுருள் நெகட்டிவ் பரிசோதிப்பவர் | 9402.00 | ||||||||||
| 12. | திரைப்படம் காட்டும் இயந்திரப் பிரிவு | |||||||||||
| 1 | திரைப்படம் காட்டும் இயந்திரத்தை இயக்குபவர் நிலை-I | 10004.00 | ||||||||||
| 2 | திரைப்படம் காட்டும் இயந்திரத்தை இயக்குபவர் நிலை-II | 9187.00 | ||||||||||
| 3 | திரைப்படம் காட்டும் இயந்திரத் தலைமை இயக்குபவர் | 11666.00 |
| பணியாளர்களின் வகைகள் | திங்களொன்றுக்கான குறைந்தளவு அடிப்படை ஊதிய வீதங்கள் ( ரூ . காசு) | |||||
| (1) | ( 2 ) | |||||
| 13. ஒலிப்பதிவுப் பிரிவு | ||||||
| 1 | உதவியாள் | 87772.00 | ||||
| 2 | ஒலிப்பதிவு செய்யும் உதவியாள்/ஒலிப்பதிவு அறை உதவியாள் | 9187.00 | ||||
| 3 | ஒலிப்பதிவாளர் | 11666.00 | ||||
| 14. படத்தொகுப்புப் பிரிவு | ||||||
| 1 | படத்தொகுப்புப் பிரிவுப் வேலையாள் | 9187.00 | ||||
| II. வெளிப்புறப் படப்பிடிப்புப் பிரிவு | ||||||
| 1 | வேன் ஓட்டுநர் (கனரக வாகனம்) | 9674.00 | ||||
| 2 | மின் பணியாளர் நிலை-I | 10418.00 | ||||
| 3 | மின் பணியாளர் நிலை-II | 9820.00 | ||||
| 4 | மின்விளக்கு பொறுப்பாளர் (Lightman) | 9187.00 | ||||
| 5 | ஒளிப்படக் கருவி உதவியாளர்-I | 11249.00 | ||||
| 6 | ஒளிப்படக் கருவி உதவியாளர்-II | 10178.00 | ||||
| 7 | ஒலிப்பதிவாளர் | 10418.00 | ||||
| 8 | ஏவலாள் அல்லது காவலாள் | 8531.00 | ||||
| 9 | ஒலிப்பதிவு உதவியாளர் | 8686.00 | ||||
| III. விநியோகம் | ||||||
| 1 | துப்புரவுப் பணியாளர் | 8444.00 | ||||
| 2 | அலுவலக உதவியாளர்/சிப்பம் செய்பவர் (ஏவலாள் எனப்படுபவர்) | 8531.00 | ||||
| 3 | காவலாள் | 8531.00 | ||||
| 4 | ஓட்டுநர் (கனரக வாகனம் மற்றும் வேன்) | 9603.00 | ||||
| 5 | ஓட்டுநர் (இலகு ரக வாகனங்கள்) | 9187.00 | ||||
| 6 | லைன் ஆப்பரேட்டர் | 8859.00 | ||||
| 7 | விநியோகஸ்தரின் பிரதிநிதி | 8686.00 | ||||
| 8 | தொலைபேசி இயக்குபவர் | 9674.00 | ||||
| 9 | எழுத்தர் | 9674.00 | ||||
| 10 | விளம்பர அறைப் பொறுப்பாளர் | 9603.00 | ||||
| 11 | தட்டச்சர் | 9934.00 | ||||
| 12 | சுருக்கெழுத்துத் தட்டச்சர் | 10418.00 | ||||
| 13 | காசாளர் | 10178.00 | ||||
| 14 | உதவிக் கணக்காளர் | 10178.00 | ||||
| 15 | கணக்காளர் | 11249.00 | ||||
| 16 | உதவி மேலாளர் | 12638.00 | ||||
| 17 | அலுவலகக் கண்காணிப்பாளர் | 11249.00 | ||||
| 18 | மேலாளர் | 14613.00 | ||||
| IV. விளம்பரம் | ||||||
| 1 | துப்புரவுப் பணியாளர் | 8444.00 | ||||
| 2 | அலுவலகப் பையன்/ஏவலாள் | 8531.00 | ||||
| 3 | காவலாள் | 8531.00 | ||||
| 4 | ஓட்டுநர் (விளம்பர வேன், கனரக வாகனம்) | 9603.00 |
| பணியாளர்களின் வகைகள் | திங்களொன்றுக்கான குறைந்தளவு அடிப்படை ஊதிய வீதங்கள் ( ரூ . காசு) | ||
| (1) | ( 2 ) | ||
| 5 | ஓட்டுநர் (விளம்பர வேன், இலகு ரக வாகனங்கள்) | 9187.00 | |
| 6 | தொலைபேசி இயக்குபவர் | 9674.00 | |
| 7 | எழுத்தர் | 9674.00 | |
| 8 | தட்டச்சர் | 9934.00 | |
| 9 | சுருக்கெழுத்துத் தட்டச்சர் | 10418.00 | |
| 10 | உதவிக் கணக்காளர் | 10178.00 | |
| 11 | காசாளர் | 10178.00 | |
| 12 | கணக்காளர் | 11249.00 | |
| V. ஏனைய பிரிவுகள் | |||
| 1. | ஏனையோர் | 8444.00 |
விளக்கங்கள்:- (1) அகவிலைப்படி: மேலே நிர்ணயிக்கப்பட்ட குறைந்தளவு அடிப்படை ஊதியங்களுடன் பணியாளர்களுக்கு கீழே குறிப்பிடப்பட்டுள்ளவாறு அகவிலைப்படி வழங்கப்பட வேண்டும்.
(i) அகவிலைப்படியானது, 2010ஆம் ஆண்டிற்கான சென்னை மாநகர நுகர்வோர் சராசரி விலைக்குறியீட்டு எண்ணுடன் இணைக்கப்பட்டுள்ளது (அதாவது 2001=100 புள்ளிகள் என்பதை அடிப்படையாகக் கொண்டு தற்போது கணக்கிடப்பட்ட 161 புள்ளிகள் ஆகும்). 161 புள்ளிகளுக்கு மேல் உயரும் ஒவ்வொரு புள்ளிக்கும் அகவிலைப்படி மாதமொன்றுக்கு ரூ. 52.40 (ஐம்பத்திரண்டு ரூபாய் நாற்பது காசுகள் மட்டும்) கூடுதலாக அகவிலைப்படி வழங்கப்பட வேண்டும்.
(ii) முந்தைய 12 மாதங்களுக்கான (அதாவது ஜனவரியிலிருந்து டிசம்பர் வரை) சராசரி விலைக் குறியீட்டினை அடிப்படையாகக் கொண்டு, ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் முதல் நாளிலிருந்து அகவிலைப்படி கணக்கிடப்படவேண்டும்.
(iii) முந்தைய ஆண்டிற்கான சென்னை மாநகர சராசரி நுகர்வோர் விலைக் குறியீட்டு எண்ணை அடிப்படையாகக் கொண்ட முதல் கணக்கீடு, இந்த அறிவிக்கை தமிழ்நாடு அரசிதழில் வெளியிடப்படும் நாளிலிருந்து செயலுக்கு வரும்.
(2) பணியின் தன்மை ஒரே மாதிரியாக இருக்கும்போது, ஆண் மற்றும் பெண் தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் ஊதியத்தில் எவ்வித வேறுபாடும் இருக்கக்கூடாது.
(3) நாள் ஊதியத்தைக் கணக்கிடுவதற்கு மாதாந்திர ஊதியத்தை 26ஆல் வகுக்க வேண்டும்.
(4) தற்போது வழங்கப்பட்டு வரும் ஊதியங்கள், இங்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள குறைந்தளவு ஊதியங்களைக் காட்டிலும் அதிகமாக இருக்குமிடங்களிளெல்லாம் அதே அதிகளவு ஊதியமே தொடர்ந்து வழங்கப்பட வேண்டும்.
முகமது நசிமுத்தீன், அரசு கூடுதல் தலைமைச் செயலாளர்.
(தமிழாக்கம்)
ந. அருள், இயக்குநர், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தி (மொழிபெயர்ப்பு)த் துறை.
தமிழ்நாடு அரசுக்காக சென்னை எழுதுபொருள் மற்றும் அச்சுத் துறை ஆணையரால்
அச்சிடப்பட்டு வெளியிடப்பட்டது.