Servants of Knowledge
Tamil Nadu Gazette · Government of Tamil Nadu

Notifications or Orders of interest to a section of the public issued by Secretariat Departments.

Published 15 March 2023

Type
Ordinary
Gazette no.
11
Part
Part II
Notifications
LABOUR WELFARE AND SKILL DEVELOPMENT DEPARTMENT - Labour Welfare Act 1982
Section
Section 2-T-Sup
Identifier
in.gazette.tamilnadu.2023-03-15.Ordinary_11_Part-II_Section-2-T-Sup
Languages
English, Tamil
Published at
Original source ↗

[Regd. No. TN/CCN/467/2012-14.

[R. Dis. No. 197/2009.

© தமிழ்நாடு அரசு 2023

[விலை: ரூ. 4.80 காசு[விலை: ரூ. 4.80 காசு

தமிழ்நாடு அரசிதழ் ஆணையின்படி வெளியிடப்பட்டது.

எண் 11] சென்னை, புதன்கிழமை, மார்ச் 15, 2023 பங்குனி 1, சுபகிருது, திருவள்ளுவர் ஆண்டு–2054

பகுதி II—பிரிவு 2 இன் இணைப்பு

அரசாங்க அறிவிப்புகளின் தமிழ் மொழிபெயர்ப்புகள்

தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை துறை தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்

[தொழிலாளர் நலன்-1982 ஆம் ஆண்டு தமிழ்நாடு உடலுழைப்புத் தொழிலாளர்கள் (வேலைவாய்ப்பினை முறைப்படுத்தலும் [தொழிலாளர் நலன்-1982 ஆம் ஆண்டு தமிழ்நாடு உடலுழைப்புத் தொழிலாளர்கள் (வேலைவாய்ப்பினை முறைப்படுத்தலும் பணி நிலைமைகளும்) சட்டம் (தமிழ்நாடு சட்டம் 33/1982)-மேற்சொன்ன சட்டத்தின் 15 ஆம் பிரிவின் கீழ் அலோசனை பணி நிலைமைகளும்) சட்டம் (தமிழ்நாடு சட்டம் 33/1982)-மேற்சொன்ன சட்டத்தின் 15 ஆம் பிரிவின் கீழ் அலோசனை குழு-மாற்றியமைத்தல்-ஆணைகள்-தமிழாக்கம்-அனுப்புதல் தொடர்பாக.] குழு-மாற்றியமைத்தல்-ஆணைகள்-தமிழாக்கம்-அனுப்புதல் தொடர்பாக.]

கீழ்க்கண்ட அரசாணை வெளியிடப்படுகிறது :-

[அரசாணை (நிலை) எண். 158, தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு (I1)த் துறை, 29 நவம்பர் 2022, கார்த்திகை 13, சுபகிருது, திருவள்ளுவர் ஆண்டு-2053.]

படிக்கவும்:-

1. அரசாணை (நிலை) எண். 22, தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை, நாள் 19.02.2014.

2. சென்னை தொழிலாளர் ஆணையரின் 09.02.2022 ஆம் நாளிட்ட W4/43815/2018 ஆம் எண் கடிதம்.

-----

ஆணை: எண். 158, தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை, 29 நவம்பர் 2022.

தமிழ்நாடு 1982 ஆம் ஆண்டு உடலுழைப்புத் தொழிலாளர்கள் (வேலைவாய்ப்பினை முறைப்படுத்தலும் பணி நிலைமைகளும்) சட்டத்தின் (தமிழ்நாடு சட்டம் 33/1982) 15 ஆம் பிரிவின் கீழும் மேலே முதலாவதாக படிக்கப்பட்ட அரசாணையில் வெளியிடப்பட்ட ஆணைகளை இரத்து செய்துவிட்டு அதற்குப் பதிலாகவும், தமிழ்நாட்டு ஆளுநர் அவர்கள் பின்வரும் உறுப்பினர்களைக் கொண்டு ஆலோசனைக் குழுவை இதனால் மாற்றியமைக்கிறார் அவையாவன:-

அரசு பிரதிநிதிகள்:-

1. மாண்புமிகு தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் தலைவர்
2. முதன்மைச் செயலாளர் / தொழிலாளர் ஆணையர், சென்னை-600 006 உறுப்பினர்
3. தொழிலாளர் கூடுதல் ஆணையர் தொழிலாளர் ஆணையர், அலுவலகம் சென்னை-600 006 உறுப்பினர்- செயலர்
4. அரசு கூடுதல் தலைமைச் செயலாளர், தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை, சென்னை-600 009 உறுப்பினர்
5. அரசு கூடுதல் தலைமைச் செயலாளர், நிதித் துறை, சென்னை-600 009 உறுப்பினர்

[ 1 ]

DTP-II-2-(11) (T Sup)—12

1. திரு. எஸ். அரவிந்ரமேஷ், ச.ம.உ., சோழிங்கநல்லூர் தொகுதி உறுப்பினர்
2. திரு. ஐ. கருணாநிதி, ச.ம.உ., பல்லாவரம் தொகுதி உறுப்பினர்
3. திரு. கே.எஸ். சரவணகுமார், ச.ம.உ., பெரியகுளம் (தனி) தொகுதி உறுப்பினர்
4. திரு. A. சௌந்தரபாண்டியன், ச.ம.உ., லால்குடி தொகுதி உறுப்பினர்
5. திரு. எம். பண்ணீர்செல்வம், ச.ம.உ., சீர்காழி (தனி) தொகுதி உறுப்பினர்

வேலை அளிப்பவர்களின் பிரதிநிதிகள்:-

1. திரு. கே. மாணிக்கம், செயலாளர், பொது தென்னிந்திய வேலையளிப்போர் கூட்டமைப்பு, 2-D, எல்டாராடோ கட்டடம், 2 ஆவது தளம் எண்.112, நுங்கம்பாக்கம் நெஞ்சாலை, சென்னை-600 034 உறுப்பினர்
2. திரு. எஸ்.ஜே. ஆனந்த கிருஷ்ணன், CREDAI-கோயம்புத்தூர், எண். 21, ஆர்.ஆர். லேஅவுட், ஆர்.எஸ்.புரம், கோயம்புத்தூர்-641 002. உறுப்பினர்
3. திரு. A. கந்தசாமி, நிருவாக இயக்குநர், அஞ்சப்பர் உணவகம், எண்.17/35, சுப்ரபாத் அடுக்குமாடி குடியிருப்புகள் தியாகராய கிராமணி வீதி, தி.நகர், சென்னை-600 017. உறுப்பினர்
4. திரு. சி.ஆர். அன்பு ஆறுமுகம், பிளாஷ் தையல் கடை & ராஜா தையல் நிறுவனம், எண். 3039/6, சக்ரவர்த்தி ஐயங்காரா சந்து, கிழக்கு 2 ஆவது தெரு, புதுக்கோட்டை-622 001. உறுப்பினர்
5. திருமதி. எம். ஜெயபிரபா, சமூக ஆர்வலர், எண். 4, ராஜீவ் காந்தி நகர், 3 ஆவது வீதி நெல்லிக்குப்பம், பன்ருட்டி தாலுக்கா கடலூர்-607 105. உறுப்பினர்

தொழிலாளர்களின் பிரதிநிதிகள்:-

1. திரு. ஆர். பொன்னுராம், செயலாளர், தொழிலாளர் முன்னேற்ற கூட்டமைப்பு, எண். 12/241, மு.க.ஸ்டாலின் தெரு, பொழிச்சலூர் அஞ்சல், சென்னை-600 074 உறுப்பினர்
2. திரு. ஜி. சுகுமாரன், பொதுச் செயலாளர் (சி.ஐ.டி.யு) தமிழ்நாடு மாநிலக் குழு, எண்.27, மசூதி தெரு, சேப்பாக்கம், சென்னை-600 005. உறுப்பினர்
3. திரு. கே. ரவி, மாநில துணை பொதுச் செயலாளர், அனைத்திந்திய வர்த்தகர்கள் கூட்டமைப்பு (AITUC), எண்.7/4B, 13 ஆவது குறுக்கு வீதி, புது காலனி, குரோம்பேட்டை, சென்னை-600 044. உறுப்பினர்
4. திரு. கே. பாலமுருகன், அனைத்து அமைப்புசாரா தொழிலாளர்கள் முன்னேற்ற சங்கம், காருன்யா அடுக்குமாடி குடியிருப்புகள் எண். 24/67, 3 ஆவது குறுக்கு (கிராஸ்) வீதி, குமரன் நகர், விருகம்பாக்கம், சென்னை-600 092. உறுப்பினர்
5. திரு. கே. ராஜேந்திர பிரசாத், சமூக ஆர்வலர், எண். 40/51, 4-A, 4 ஆவது தளம், ஹாம்ப்டண் கோர்ட், கிரீன் டீஸ், 100 அடி சாலை, அசோக் நகர், சென்னை-600 083. உறுப்பினர்

2. மேற்சொன்ன ஆலோசனைக் குழுவின் அலுவல் சார்ந்த உறுப்பினர்கள் மற்றும் அலுவல் சாரா உறுப்பினர்களின் பதவிக்காலம். 1986 ஆம் ஆண்டு தமிழ்நாடு உடலுழைப்புத் தொழிலாளர்கள் (வேலைவாய்ப்பினை முறைப்படுத்துதலும் பணி நிலைமைகளும்) விதிகளின் விதி (4)-இல் உள்ள விதிகளின்படி இருக்கும்.

3. அலுவல் சாரா உறுப்பினர்கள் பயணப்படி மற்றும் நாட்படி பெறுவதற்கான நோக்கத்திற்காக இந்தக் குழு முதல் வகுப்பு குழுவாக கருதப்பட வேண்டும். அலுவல் சாரா உறுப்பினர்களின் பயணப்படி பட்டிகளை மேலொப்பமிடுவதற்கு குழுவின் உறுப்பினர்- செயலர் அதிகாரம் பெற்றவராவார்.

4. பயணப்படிக்கான செலவினம் "2230-தொழிலாளர், வேலைவாய்ப்பு மற்றும் திறன் மேம்பாடு - 01. தொழிலாளர் -001. உத்தரவு மற்றும் நிருவாகம் - மாநிலச் செலவினம் - AA தலைமையிடப் பணியாளர் - தொழிலாளர் ஆணையர் - 304. பயணச் செலவுகள் - 01. சுற்றுலா பயணப்படி'' எனும் தலைப்பில் பற்று வைக்கப்படும்.

[IFHRMS குறியீடு 2230 01 001 AA 30401]

5. சென்னை-600 001-இல் உள்ள அரசு மைய அச்சக பணி மேலாளர், இந்த ஆணையின் முதல் பத்தியை தமிழ்நாடு அரசிதழின்தமிழ்நாடு அரசிதழின் சிறப்பு வெளியீட்டில் வெயியிடுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்.

6. இந்த ஆணைக்கு நிதித் துறையின் இசைவு தேவையில்லை (காண்க நிதித்துறையின் 29.09.1997 ஆம் நாளிட்ட 519 ஆம் நிலை எண் அரசாணை)

(ஆளுநரின் ஆணைப்படி)

முகமது நசிமுத்தின், முகமது நசிமுத்தின்,

அரசு கூடுதல் தலைமைச் செயலாளர்.அரசு கூடுதல் தலைமைச் செயலாளர்.

(தமிழாக்கம்)

ந. அருள், இயக்குநர், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தி (மொழிபெயர்ப்பு)த் துறை.

3

[அரசாணை (ப) எண். 573, தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு (J1)த் துறை, 28 நவம்பர் 2022.] 1948ஆம் ஆண்டு குறைந்தளவு ஊதியங்கள் சட்டத்தின் (மத்தியச் சட்டம் 11/1948) 3ஆம் பிரிவைச் சேர்ந்த (1) உட்பிரிவின் (b) பகுதியிலும், 5ஆம் பிரிவைச் சேர்ந்த (2) உட்பிரிவிலும் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களைக் கொண்டு வெளியிடக் கருதியுள்ள பின்வரும் வரைவு அறிவிக்கை, மேற்சொன்ன சட்டத்தின் 5 ஆம் பிரிவைச் சேர்ந்த (1) உட்பிரிவின் (b) பகுதியில் கோரியுள்ளவாறு, அதனால் பாதிக்கப்படக்கூடிய அனைவரின் தகவலுக்காக இதனால் வெளியிடப்படுகிறது.

(2) இந்த அறிவிக்கை தமிழ்நாடு அரசிதழில்தமிழ்நாடு அரசிதழில் வெளியிடப்படும் நாளிலிருந்து இரண்டு திங்கள் நிறைவடையும் நாளன்று அல்லது அந்நாளுக்குப் பின்னர் வரைவு அறிவிக்கை கருத்தில் கொள்ளப்படும் என்றும் மேற்சொன்ன காலம் நிறைவடைவதற்கு முனனர், இது குறித்து எவரிடமிருந்தேனும் வரப்பெறுகிற மறுப்புரை அல்லது கருத்துரை தமிழ்நாடு அரசால் பரிசீலிக்கப்படும் என்றும் இதனால் அறிவிக்கப்படுகிறது. மறுப்புரை அல்லது கருத்துரை ஏதேனுமிருப்பின், அவற்றை, சென்னை-600 006, DMS வளாகத்தில் உள்ள தொழிலாளர் நல ஆணையாளர் வாயிலாக அரசு கூடுதல் தலைமைச் செயலாளர், தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை, தலைமைச் செயலகம், சென்னை-600 009 என்ற முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.

வரைவு அறிவிக்கைவரைவு அறிவிக்கை

1948ஆம் ஆண்டு குறைந்தளவு ஊதியங்கள் சட்டத்தின் (மத்தியச் சட்டம் 11/1948) 3ஆம் பிரிவைச் சேர்ந்த (1) உட்பிரிவின் (b) பகுதியிலும், 5ஆம் பிரிவைச் சேர்ந்த (2) உட்பிரிவிலும் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களைக் கொண்டும் 03.07.2019 ஆம் நாளிட்ட தமிழ்நாடு அரசிதழின்தமிழ்நாடு அரசிதழின் பாகம் II-பிரிவு 2-இல் 614 மற்றும் 615 ஆம் பக்கங்களில் (ஆங்கிலத்தில்) வெளியிடப்பட்ட தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறையின் II(2)/தொ.வே.வா./526/2019 ஆம் எண் அறிவிக்கையை ரத்து செய்துவிட்டு, அதற்குப் பதிலாகவும், தமிழ்நாட்டு ஆளுநர் அவர்கள், தமிழ்நாடு மாநிலத்தில், பாய் நெசவு மற்றும் கூடை முடைதல் தொழிலில் பணியமர்த்தப்பட்டுள்ள கீழேயுள்ள விவர அட்டவணையின் (2) ஆம் நெடும்பத்தியில் குறிப்பிடப்பட்டுள்ள பணியாளர் வகையினருக்கு வழங்கத்தக்க குறைந்தளவு அடிப்படை ஊதிய வீதங்களை, அந்த விவர அட்டவணையின் (3)ஆம் நெடும்பத்தியின் நிகரான பதிவுகளில் குறிப்பிட்டுள்ளவாறாக இதனால் திருத்தியமைக்கிறார்.

விவர அட்டவணைவிவர அட்டவணை

பாய் நெசவு மற்றும் கூடை முடைதல் தொழிலில் வேலைவாய்ப்பு பாய் நெசவு மற்றும் கூடை முடைதல் தொழிலில் வேலைவாய்ப்பு

தொடர் எண் தொழிலாளர்களின் வகைகள் குறைந்தளவு அடிப்படை ஊதிய வீதங்கள்
(1) (2) (3)
ரூ . காசு
I. I. விசைத்தறிப் பாய்கள் விசைத்தறிப் பாய்கள்::
1. கோரை வகை பிரிப்பவர் நாளொன்றுக்கு 244.00
2. சாயமேற்றுபவர் நாளொன்றுக்கு 321.00
3. சாயமேற்றுபவரின் உதவியாள் (உலை உதவியாள்) நாளொன்றுக்கு 244.00
4. பாய் நெசவாளர் (i) சாதாரண பாய் (ii) அழகுபடுத்திய பாய் பாய் ஒன்றுக்கு 4.14 பாய் ஒன்றுக்கு 5.53
5. பாய் விளிம்பு தைப்பவர் (நீளப் பக்கங்கள் இரண்டிலும் விளிம்பு தைப்பதற்கு) (தைப்பதற்கான துணி அல்லது நாடா மற்றும் நூல் வேலையளிப்பவரால் வழங்கப்படவேண்டும்) பாய் ஒன்றுக்கு 2.77
II. கைத்தறிப் பாய்கள்:
1. கோரை வகிர்பவர் நாளொன்றுக்கு 244.00
2. சாயமேற்றுபவர் நாளொன்றுக்கு 244.00
3. பாய் நெசவாளர்:
(i) 40ஆம் எண் பாய் நெசவுக்கு நாளொன்றுக்கு 236.00
(ii) 50ஆம் எண் பாய் நெசவுக்கு நாளொன்றுக்கு 264.00
(iii) 100ஆம் எண் பாய் நெசவுக்கு நாளொன்றுக்கு 378.00
(iv) 120ஆம் எண் பாய் நெசவுக்கு நாளொன்றுக்கு 387.50
(v) 140ஆம் எண் பாய் நெசவுக்கு நாளொன்றுக்கு 435.00
4. பாய் விளிம்பு தைப்பவர் (நான்கு விளிம்புகளிலும் தைக்க) (தைப்பதற்கான துணி அல்லது நாடா மற்றும் நூல் வேலையளிப்பவரால் வழங்கப்படவேண்டும்) பாய் ஒன்றுக்கு 13.84
5. மெருகேற்றுபவர் பாய் ஒன்றுக்கு 5.53
6. எழுத்து வடிவமைப்பவர் வரி ஒன்றுக்கு 69.19
III. III. கூடை முடைதல் கூடை முடைதல்:
1. மண் கூடை கூடை ஒன்றுக்கு 55.35
2. விவசாயக் கூடை
3. பரிசுக்கூடை
4. அரிசிக்கூடை
5. கோழிக்கூடை (பஞ்சாரம்)
6. காய்கறிக்கூடை மற்றும் இதர கூடைகள்
4

விளக்கங்கள்.- (1) அகவிலைப்படி: மேலே நிர்ணயிக்கப்பட்ட குறைந்தளவு அடிப்படை ஊதிய வீதங்களுடன் தொழிலாளர்களுக்கு கீழே குறிப்பிடப்பட்டுள்ளவாறு அகவிலைப்படி வழங்கப்பட வேண்டும்.

(i) அகவிலைப்படியானது, 2010 ஆம் ஆண்டிற்கான சென்னை மாநகர நுகர்வோர் சராசரி விலைக்குறியீட்டு எண்ணுடன் இணைக்கப்பட்டுள்ளது (அதாவது 2001 ஆம் ஆண்டில் 100 புள்ளிகள் என்பதை அடிப்படையாகக் கொண்டு தற்போது கணக்கிடப்பட்ட 161 புள்ளிகள்) மற்றும் 161 புள்ளிகளுக்கு மேல் உயரும் ஒவ்வொரு புள்ளிக்கும் நாளொன்றுக்கு ரூபாய் 1.46 (ஒரு ரூபாய் நாற்பத்து ஆறு காசுகள் மட்டும்) கூடுதலாக அகவிலைப்படி வழங்கப்பட வேண்டும்.

(ii) அகவிலைப்படியானது, ஜனவரியிலிருந்து டிசம்பர் வரையிலான முந்தைய 12 மாதங்களுக்கான, நுகர்வோர் விலைப்புள்ளியின் சராசரியை அடிப்படையாகக் கொண்டு, ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் முதல் நாளன்று கணக்கிடப்படவேண்டும்.

(iii) முந்தைய ஆண்டிற்கான சென்னை மாநகர நுகர்வோர் சராசரி விலைப்புள்ளிக் குறியீட்டு எண்ணின் சராசரியை அடிப்படையாகக் கொண்டு, முதல் கணக்கீடு, இந்த அறிவிக்கை தமிழ்நாடு அரசிதழில்தமிழ்நாடு அரசிதழில் வெளியிடப்படும் நாளிலிருந்து செயலுக்கு வரும்.

(2) பணியின் தன்மை ஒரே மாதிரியாக இருக்கும்போது, ஆண் மற்றும் பெண் தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் ஊதியத்தில் எவ்வித வேறுபாடும் இருக்கக்கூடாது.

(3) மாதாந்திர ஊதியத்தைக் கணக்கிடுவதற்கு நாள் ஊதிய வீதங்களை 30ஆல் பெருக்க வேண்டும்.

(4) தற்போது வழங்கப்பட்டு, வரும் ஊதியங்கள், இங்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள குறைந்தளவு ஊதியங்களைக் காட்டிலும் அதிகமாக இருக்குமிடங்களிலெல்லாம் அதே ஊதியம் தொடர்ந்து வழங்கப்பட வேண்டும்.

[அரசாணை (2ப) எண். 92, தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு (J1)த் துறை, 31 அக்டோபர் 2022.] 1948ஆம் ஆண்டு குறைந்தளவு ஊதியங்கள் சட்டத்தின் (மத்தியச் சட்டம் 11/1948) 3-ஆம் பிரிவைச் சேர்ந்த (1) உட்பிரிவின் (b) பகுதியிலும், 5ஆம் பிரிவைச் சேர்ந்த (2) உட்பிரிவிலும் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களைக் கொண்டும், 26-12-2018-ஆம் நாளிட்ட தமிழ்நாடு அரசிதழின்தமிழ்நாடு அரசிதழின் பாகம்-IIபிரிவு-2 இல் 1177 முதல் 1178 வரையிலான பக்கங்களில் (ஆங்கிலத்தில்) வெளியிடப்பட்ட தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறையின் II(2)/LE/1090/2018 ஆம் எண் அறிவிக்கையை ரத்து செய்துவிட்டு, அதற்குப் பதிலாகவும், தமிழ்நாட்டு ஆளுநர் அவர்கள், ஆலோசனைக் குழுவுடன் கலந்தாலோசித்தப் பின்னர், தமிழ்நாடு மாநிலத்தில் காடு வளர்ப்பில் பணியமர்த்தப்பட்டுள்ள, கீழேயுள்ள விவர அட்டவணையின் (1) நெடும்பத்தியில் குறிப்பிடப்பட்டுள்ள தொழிலாளர் வகையினருக்கு வழங்கத்தக்க குறைந்தளவு ஊதிய வீதங்களை, அந்த விவர அட்டவணையின் (2) நெடும்பத்தியின் நிகரான பதிவுகளில் குறிப்பிடப்பட்டுள்ளவாறாக இதனால் திருத்தியமைக்கிறார். இதன் வரைவு, மேற்சொன்ன சட்டத்தின் 5ஆம் பிரிவைச் சேர்ந்த (1) உட்பிரிவின் (b) பகுதியில் கோரப்பட்டுள்ளவாறு, முன்னரே வெளியிடப்பட்டுள்ளது.

2. இந்த அறிவிக்கை, தமிழ்நாடு அரசிதழில்தமிழ்நாடு அரசிதழில் வெளியிடப்படும் நாளன்று அந்நாள் முதற்கொண்டும் செயலுக்கு வரும்.

5

விவர அட்டவணை

காடு வளர்ப்பில் வேலைவாய்ப்பு

தொழிலாளர் வகைகள் குறைந்தளவு அடிப்படை ஊதிய வீதங்கள் (ரூ. காசு)
( 1 ) ( 2 )
(1) நாற்றுப்பண்ணை மசூதூர்/ நாற்றுப்பண்ணை தொழிலாளர் நாளொன்றுக்கு 311.00
(2) மனை மசூதூர் / மனைக்காவலர்
(3) தீத்தடுப்பு ரோந்து காவலாள்
(4) சந்தன மரப்பாதுகாப்பு / சுற்றிவரும் காவலாள்
(5) மசூதூர்களின் நாள் ஊதியங்கள்:
நிலை-I நாளொன்றுக்கு 327.00
நிலை-II நாளொன்றுக்கு 321.00
நிலை-III நாளொன்றுக்கு 311.00
குறிப்பு:- 1. நிலை-I/ வகை- A- சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், நீலகிரி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்கள். 2. நிலை-II/ வகை- B- சேலம், கோயம்புத்தூர் மற்றும் மதுரை மாவட்டங்கள். 3. நிலை-III/ வகை- C- ஏனைய மாவட்டங்கள்
(6) சந்தன மர கிடங்கில் மசூதூர்:
வகை-I (இறுதி தூய்மையாக்கல்) நாளொன்றுக்கு 327.00
வகை-II (ஓரளவு தூய்மையாக்கல்) நாளொன்றுக்கு 321.00
வகை-III (ஏனையப் பணி) நாளொன்றுக்கு 311.00
(7) வேலி அமைத்தல்:
பட்டை உரித்தல் மெட்ரிக் டன் ஒன்றுக்கு 4297.00
சுமை ஏற்றும் செயல்பாடுகள் மெட்ரிக் டன் ஒன்றுக்கு 1283.00
பட்டைகளை வெட்டி அடுக்குதல் 3 கன மீட்டர்களுக்கான கட்டு ஒன்றுக்கு 990.00
(8) நீலகிரி மலைத் தைல மரம் (புளூ கம்):
வெட்டுதல் மற்றும் அடுக்குதல் 3 கன மீட்டர்களுக்கான கட்டு ஒன்றுக்கு 899.00

விளக்கங்கள்:- (1) அகவிலைப்படி: மேலே நிர்ணயிக்கப்பட்ட குறைந்தளவு அடிப்படை ஊதிய வீதங்களுடன், தொழிலாளர்களுக்குக் கீழே குறிப்பிடப்பட்டுள்ளவாறு அகவிலைப்படி வழங்கப்பட வேண்டும்.

(i) அகவிலைப்படி, 2010ஆம் ஆண்டிற்கான சென்னை மாநகர நுகர்வோர் சராசரி விலைக்குறியீட்டு எண்ணுடன் இணைக்கப்பட்டுள்ளது, அதாவது 2001 = 100 என்பதன் அடிப்படையில் 161 புள்ளிகள் ஆகும். 161 புள்ளிகளுக்கு மேல் உயரும் ஒவ்வொரு புள்ளிக்கும் நாளொன்றுக்கு ரூ. 1.92 (ஒரு ருபாய் தொன்னூற்று இரண்டு காசுகள் மட்டும்) கூடுதலாக அகவிலைப்படி வழங்கப்பட வேண்டும்.

(ii) முந்தைய 12 மாதங்களுக்கான, அதாவது ஜனவரியிலிருந்து டிசம்பர் வரையில் விலைப்புள்ளிகளின் சராசரியை அடிப்படையாகக் கொண்டு, ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் முதல் நாளன்று அகவிலைப்படி கணக்கிடப்பட வேண்டும்.

(iii) முதல் கணக்கீடு, முந்தைய ஆண்டிற்கான சென்னை மாநகர நுகர்வோர் விலைப்புள்ளிக் குறியீட்டு எண்ணின் சராசரியை அடிப்படையாகக் கொண்டு இந்த அறிவிக்கை தமிழ்நாடு அரசிதழில்தமிழ்நாடு அரசிதழில் வெளியிடப்படும் நாளிலிருந்து செயலுக்கு வரும்.

(2) ஒரே தன்மையுடைய பணியைச் செய்யும் போது, ஆண் மற்றும் பெண் தொழிலாளர்களுக்கு வழங்கும் ஊதியத்தில் எவ்வித வேறுபாடும் இருக்கக்கூடாது.

(3) வாராந்திர விடுமுறை ஊதிய இனங்களும் தினப்படி ஊதிய வீதங்கள் மற்றும் அகவிலைப்படியில் அடங்கும்.

(4) தற்போது வழங்கப்பட்டு வரும் ஊதியங்கள், இங்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள குறைந்தளவு ஊதிய வீதங்களைக் காட்டிலும் அதிகமாக இருக்குமிடங்களிலெல்லாம் அதே ஊதியம் தொடர்ந்து வழங்கப்பட வேண்டும்.

6

[அரசாணை (2ப) எண். 93, தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு (J1)த் துறை, 1 நவம்பர் 2022.] 1948 ஆம் ஆண்டு குறைந்தளவு ஊதியங்கள் சட்டத்தின் (மத்தியச் சட்டம் 11/1948) 3ஆம் பிரிவைச் சேர்ந்த (1) உட்பிரிவின் (b) பகுதியிலும் 5 ஆம் பிரிவைச் சேர்ந்த (2) உட்பிரிவிலும், வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களைக் கொண்டும் 01-08-2018 ஆம் நாளிட்ட தமிழ்நாடு அரசிதழின்தமிழ்நாடு அரசிதழின் பாகம் IIபிரிவு-2-இல், 717 முதல் 718 வரையிலான பக்கங்களில் (ஆங்கிலத்தில்) வெளியிடப்பட்ட தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறையின் II(2)/LE/674/2018 ஆம் எண் அறிவிக்கையை இரத்து செய்துவிட்டு அதற்குப் பதிலாகவும் தமிழ்நாட்டு ஆளுநர் அவர்கள், ஆலோசனைக் குழுவுடன் கலந்தாலோசித்த பின்னர், தமிழ்நாடு மாநிலத்தில் கடல்படு உணவு பதப்படுத்தும் தொழிலகங்களில் பணியமர்த்தப்பட்டுள்ள கீழ்க்காணும் விவர அட்டவணையின் (1) நெடும்பத்தியில் குறிப்பிடப்பட்டுள்ள பணியாளார் வகையினருக்கு வழங்கத்தக்க குறைந்தளவு ஊதிய வீதங்களை, அதன் (2) நெடும்பத்தியின் நேரான பதிவுகளில் குறிப்பிட்டுள்ளவாறு இதனால் திருத்தியமைக்கிறார். இதன் வரைவு, மேற்சொன்ன சட்டத்தின் 5 ஆம் பிரிவைச் சேர்ந்த (1) உட்பிரிவின் (b) பகுதியில் கோரியுள்ளவாறு ஏற்கெனவே வெளியிடப்பட்டுள்ளது.

(2) இந்த அறிவிக்கை தமிழ்நாடு அரசிதழில்தமிழ்நாடு அரசிதழில் வெளியிடப்படும் நாளிலிருந்து செயலுக்கு வரும்.

விவர அட்டவணை

கடல்படு உணவைப் பதப்படுத்தும் தொழிலகங்களில் பணியமர்த்தம்

பணியாளர் வகையினர் திங்களொன்றுக்கான குறைந்தளவு அடிப்படை ஊதியங்கள் ( ரூ . )
( 1 ) ( 2 )
அ. நிருவாகப் பணியாளர்கள்
1. மேலாளர். 8442.00
2. உதவி மேலாளர். 7097.00
3. காசாளர்.
4. கணக்காளர். 6689.00
5. உதவியாளர் / எழுத்தர் 6558.00
6. தட்டச்சர். 6419.00
7. ஓட்டுநர்.
8. குற்றேவலர் / ஏவலாள். 6150.00
9. காவலாள் 6291.00
ஆ. தொழிற்சாலைப் பணியாளர்கள்
1, பொறியாளர். 9785.00
2. உற்பத்திப் பொறுப்பாளர். 8442.00
3. உற்பத்தி மேற்பார்வையாளர். 7636.00
4. மேற்பார்வையாளர்கள் ( எந்திரத் தளவாடங்கள் / பதப்படுத்தல் / கொள்முதல் / சிப்பமாக்குதல்). 7636.00
5. உதவி மேற்பார்வையாளர்கள் 7097.00
6. எந்திர தளவாடத்தை இயக்குபவர். 7636.00
7. தொழில்நுட்ப வல்லுநர். 7636.00
8. மின் கம்மியர். 7097.00
9. இயந்திரக் கம்மியர் 7097.00
10. பதப்படுத்தும் பணியாளர். 6827.00
11. தோல் உரிக்கும் பணியாளர் 6687.00
12. தரம் பிரிக்கும் தொழிலாளர். 6687.00
13. சிப்பமாக்குபவர் 6419.00
14. பதப்படுத்தும் உதவியாளர். 6419.00
15. சுத்தம் செய்தல் / பொருத்துதல் பணியாளர்கள். 6419.00
16. உதவியாட்கள் (அனைத்து வகையினரும்). 6419.00
17. பாரம் ஏற்றுதல் / இறக்குதல் பணிகளில் ஈடுபட்டுள்ள பணியாளர்கள் 6150.00
18. மேற்சொன்ன யாதொரு வகைபாட்டின் கீழும் வராத பணியாளர்கள். 6419.00
7

விளக்கம்:

(1) அகவிலைப்படி:- மேலே நிர்ணயிக்கப்பட்ட குறைந்தளவு அடிப்படை ஊதியவீதங்களுடன் பணியாளர்களுக்குக் கீழே குறிப்பிடப்பட்டுள்ளவாறு அகவிலைப்படி வழங்கப்பட வேண்டும்.

(i) அகவிலைப்படியானது, 2010 ஆம் ஆண்டிற்கான சென்னை மாநகர சராசரி நுகர்வோர் விலைக்குறியீட்டு எண்ணுடன் இணைக்கப்பட்டுள்ளது (அதாவது 2001 ஆம் ஆண்டில் 100 புள்ளிகள் என்பதை அடிப்படையாகக் கொண்டு தற்போது கணக்கிடப்பட்ட 161 புள்ளிகள் ஆகும்). 161 புள்ளிகளுக்கு மேல் உயரும் ஒவ்வொரு புள்ளிக்கும், திங்கள் ஒன்றுக்கு ரூ. 38.19/- (முப்பத்தெட்டு ரூபாய் பத்தொன்பது காசுகள் மட்டும்) கூடுதலாக அகவிலைப்படி வழங்கப்பட வேண்டும்.

(ii) அகவிலைப்படியானது, முந்தைய 12 மாதங்களுக்கான (அதாவது ஜனவரியிலிருந்து டிசம்பர் வரை) சராசரி விலைக் குறியீட்டினை அடிப்படையாகக் கொண்டு, ஒவ்வோராண்டும் ஏப்ரல் முதல் நாளில் கணக்கிடப்பட வேண்டும்.

(iii) முந்தைய ஆண்டிற்கான சராசரி நுகர்வோர் விலைக் குறியீட்டு எண்ணை அடிப்படையாகக் கொண்ட முதல் கணக்கீடு, இந்த அறிவிக்கை தமிழ்நாடு அரசிதழில் வெளியிடப்படும் நாளிலிருந்து செயலுக்கு வரும்.

(2) பணியின் தன்மை ஒரே மாதிரியாக இருக்கும்போது, ஆண் மற்றும் பெண் பணியாளர்களுக்கு வழங்கப்படும் ஊதியத்தில் எவ்வித வேறுபாடும் இருக்கக்கூடாது.

(3) நாள் ஊதியத்தைக் கணக்கிடுவதற்கு மாதாந்திர ஊதியத்தை 26 ஆல் வகுக்க வேண்டும்.

(4) இங்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள குறைந்தளவு ஊதியங்களைக் காட்டிலும் தற்போது வழங்கப்படும் ஊதியங்கள், அதிகமாக இருக்குமிடங்களிலெல்லாம் அந்த அதிகளவு ஊதியமே தொடர்ந்து வழங்கப்பட வேண்டும்.

[அரசாணை (2ப) எண். 95, தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு (J1)த் துறை, 7 நவம்பர் 2022.] 1948ஆம் ஆண்டு குறைந்தளவு ஊதியங்கள் சட்டத்தின் (மத்தியச் சட்டம் 11/1948) 3ஆம் பிரிவைச் சேர்ந்த (1) உட்பிரிவின் (b) பகுதியிலும் 5 ஆம் பிரிவைச் சேர்ந்த (2) உட்பிரிவிலும் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களைக் கொண்டும், 02-01-2019-ஆம் நாளிட்ட தமிழ்நாடு அரசிதழின் பாகம் II-பிரிவு 2-இல் 2 மற்றும் 3 ஆம் பக்கங்களில் (ஆங்கிலத்தில்) வெளியிடப்பட்ட தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறையின் II(2)/தொவேவா/5/2019 ஆம் எண் அறிவிக்கையை இரத்து செய்துவிட்டு அதற்குப் பதிலாகவும், தமிழ்நாட்டு ஆளுநர் அவர்கள், ஆலோசனைக் குழுவுடன் கலந்தாலோசித்தப் பின்னர், தமிழ்நாடு மாநிலத்தில், பட்டுப்புழு வளர்ப்புத் தொழிலில் பணியமர்த்தப்பட்டுள்ள கீழேயுள்ள விவர அட்டவணையின் (1) நெடும்பத்தியில் குறிப்பிடப்பட்டுள்ள வகைகளைச் சேர்ந்த பணியாளர்களுக்கு வழங்கத்தக்க குறைந்தளவு ஊதிய வீதங்களை, அந்த விவர அட்டவணையின் (2) நெடும்பத்தியின் நிகரான பதிவுகளில் குறிப்பிடப்பட்டுள்ளவாறு இதனால் திருத்தியமைக்கிறார். இதன் வரைவு, மேற்சொன்ன சட்டத்தின் 5ஆம் பிரிவைச் சேர்ந்த (1) உட்பிரிவின் (b) பகுதியில் கோரியுள்ளவாறு, ஏற்கெனவே வெளியிடப்பட்டுள்ளது.

விவர அட்டவணை

பட்டுப்புழு வளர்ப்புத் தொழிலில் வேலைவாய்ப்பு

பணியாளர்களின் வகைகள் (1) குறைந்தளவு அடிப்படை ஊதிய வீதங்கள் ( ரூ . காசு.) ( 2 )
I. பொதுவான வகையினர்:
1. மேலாளர் மாதமொன்றுக்கு ரூ. 10410.00
2. ஆய்வாளர் மாதமொன்றுக்கு ரூ. 10234.00
3. இயக்குபவர் மாதமொன்றுக்கு ரூ. 10234.00
4. முதலாள் மாதமொன்றுக்கு ரூ. 10234.00
5. எழுத்தர் II. பட்டுப்புழு வித்தகம்: மாதமொன்றுக்கு ரூ. 9409.00
1. கலப்பினச் சேர்க்கைப் பட்டுப்புழுக் கூடுகளை இனம் பிரித்தல் நாளொன்றுக்கு ரூ. 310.00
2. பாலின வகைபிரித்தல் தொடர்பான பணிகள்
3. இணை சேர்த்தல்
4. முட்டையிடுதல் தொடர்பான பணிகள்
5. இணை பிரித்தல்
6. முட்டை சேகரத் தட்டுகளை சுகாதாரமாகப் பராமரிப்பதற்கான வேதிமுறைச் செயற்பாடு
III. சக்கி வளர்த்தல் மற்றும் கவனித்தல் நாளொன்றுக்கு ரூ. 310.00
1. வளர்ப்பு அறையைத் தொற்றுநீக்கம் செய்தல்
2. குறுக நறுக்குதல், வேதிப்பொருள் ஊட்டமிட்டுப் பேணி வளர்த்தல்
3. கட்டளைச் சட்டமிடுகின்ற கூருணர்வுப்பணி
4. மூங்கில் சேகரிப்பு தட்டுகளில் புழுக்களை சேர்த்தல்
IV. ஏனைய வகைகள்
1. பட்டு நூலிழை பிரித்தல் (நூலிழை பிரிப்பவர்) நாளொன்றுக்கு ரூ. 310.00
2. ஸ்ட்ரிஃப்லிங் (Striffling) நீராவி கொண்டு பட்டுப் புழுக்களை கொல்லுதல்
3. வகை பிரித்தல் (Sorting)
4. தரநிலை காத்தல் (Preservation)
5. வேகவைத்தல்
6. நூலிழை பிரித்தல் (Reeling)
7. மீள நூலிழை பிரித்தல் (Re-reeling)
V. பட்டுப்புழுக் கூடு சந்தைப்படுத்தல்
1. சந்தையில் புழுக்கூட்டுக் கூடைகளை இறக்குதல் நாளொன்றுக்கு ரூ. 305.00
2. ஏலம் நிகழ்ந்த பின்னர் கூடைகளை நிரப்புதல் மற்றும் எடை இயந்திரத்திற்குக் கொண்டுசெல்லுதல்
3. எடையிடுதல் அல்லது ஏற்றி இறக்குதல்
4. ஏனைய யாதொரு ஒத்த பணி
VI. ஏனைய வகைகள்
1. மஸ்தூர் அல்லது காவலாள் அல்லது தோட்டக்காரர் நாளொன்றுக்கு ரூ. 305.00
2. கையாள் (Attender)
VII. பட்டுப் பண்ணை அல்லது முசுக்கட்டை மரத் (மல்பெரி) தோட்டம்
1. குழி தோண்டுதல்
2. நாற்றங்கால்
3. பரம்படித்தல் (கட்டிகள் உடைத்தல்)
4. செடி நடுதல்
5. மேடு அணைத்தல் (Mounting)
6. ஊடு சாகுபடி
7. களையெடுத்தல் (களைபிடுங்குதல்) (Up-rooting)
8. இலை பறித்தல் 9. வேதிப்பொருட்கள் மற்றும் உரங்கள் கலக்கும் வேதிச் செயற்பாடுகள்
10. வேதிப்பொருட்கள் மற்றும் உரங்கள் தெளித்தல் மற்றும் வேதிச் செயற்பாடுகள் நாளொன்றுக்கு ரூ. 305.00
11. தழை வெட்டுதல் (Prown-Cutting)
12. நாற்றங்கால் பாத்தி அமைத்தல்
13. பாத்தி அமைத்தல்
14. நீர் மேலாண்மை
15. களையெடுத்தல்
16. ஏனைய யாதொரு பணி
VIII. கால்நடை மற்றும் கலப்பை கொண்டு உழுபவர் நாளொன்றுக்கு ரூ. 315.00
8 9

விளக்கங்கள்:(1) அகவிலைப்படி: மேலே நிர்ணயிக்கப்பட்ட குறைந்தளவு அடிப்படை ஊதிய வீதங்களுடன் பணியாளர்களுக்கு கீழே குறிப்பிடப்பட்டுள்ளவாறு அகவிலைப்படி வழங்கப்பட வேண்டும்:

(i) அகவிலைப்படியானது, 2010ஆம் ஆண்டிற்கான சென்னை மாநகர நுகர்வோர் விலைக் குறியீட்டு எண்ணுடன் இணைக்கப்பட்டுள்ளது (அதாவது 2001ஆம் ஆண்டில் 100 புள்ளிகள் என்பதை அடிப்படையாகக் கொண்டு தற்போது கணக்கிடப்பட்ட 161 புள்ளிகள்). 161 புள்ளிகளுக்கு மேல் உயரும் ஒவ்வொரு புள்ளிக்கும், அகவிலைப்படி நாள் ஒன்றுக்கு ரூ. 1.88 (ஒரு ரூபாய் எண்பத்தெட்டு காசுகள் மட்டும்) கூடுதலாக அகவிலைப்படி வழங்கப்பட வேண்டும்.

(ii) முந்தைய 12 மாதங்களுக்கான (அதாவது ஜனவரியிலிருந்து டிசம்பர் வரை) சராசரி விலைக் குறியீட்டினை அடிப்படையாகக் கொண்டு, ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் முதல் நாளிலிருந்து அகவிலைப்படி கணக்கிடப்பட வேண்டும்.

(iii) முந்தைய ஆண்டிற்கான சென்னை மாநகர நுகர்வோர் சராசரி விலைக் குறியீட்டு எண்ணை அடிப்படையாகக் கொண்ட முதல் கணக்கீடு, இந்த அறிவிக்கை தமிழ்நாடு அரசிதழில் வெளியிடப்படும் நாளிலிருந்து செயலுக்கு வரும்.

(2) பணியின் தன்மை ஒரே மாதிரியாக இருக்கும்போது, ஆண் மற்றும் பெண் தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் ஊதியத்தில் எவ்வித வேறுபாடும் இருக்கக்கூடாது.

(3) (i) நாள் ஊதியத்தைக் கணக்கிடுவதற்கு, மாதாந்திர ஊதியத்தை 26 ஆல் வகுக்க வேண்டும்.

(ii) மாதாந்திர ஊதியத்தைக் கணக்கிடுவதற்கு நாள் ஊதியத்தை 30 ஆல் பெருக்க வேண்டும்.

(4) தற்போது வழங்கப்பட்டு வரும் ஊதியங்கள், இங்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள குறைந்தளவு ஊதியங்களைக் காட்டிலும் அதிகமாக இருக்குமிடங்களிலெல்லாம், அதே ஊதியம் தொடர்ந்து வழங்கப்பட வேண்டும்.

[அரசாணை (2ப) எண். 96, தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு (J1)த் துறை, 7 நவம்பர் 2022.] 1948 ஆம் ஆண்டு குறைந்தளவு ஊதியங்கள் சட்டத்தின் (மத்தியச் சட்டம் 11/1948) 3 ஆம் பிரிவைச் சேர்ந்த (1) உட்பிரிவின் (b) பகுதியிலும், 5ஆம் பிரிவைச் சேர்ந்த (2) உட்பிரிவிலும் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களைக் கொண்டும், 26-12-2018ஆம் நாளிட்ட தமிழ்நாடு அரசிதழின் பாகம்-II பிரிவு-2 இல் 1178 மற்றும் 1179 ஆம் பக்கங்களில் (ஆங்கிலத்தில்) வெளியிடப்பட்ட தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறையின் II(2)/LE/1091/2018 ஆம் எண் அறிவிக்கையை இரத்து செய்துவிட்டு, அதற்குப் பதிலாகவும், தமிழ்நாட்டு ஆளுநர் அவர்கள், ஆலோசனைக் குழுவுடன் கலந்தாலோசித்தப் பின்னர், தமிழ்நாடு மாநிலத்தில், பட்டு முறுக்கேற்றும் தொழிலில் பணியமர்த்தப்பட்டுள்ள, கீழ்க்காணும் விவர அட்டவணையின் (2) நெடும்பத்தியில் குறி்ப்பிடப்பட்டுள்ள, பணியாளர் வகையினருக்கு வழங்கத்தக்க குறைந்தளவு ஊதிய வீதங்களை அவ்விவர அட்டவணையின் (3) நெடும்பத்தியின் நிகரான பதிவுகளில் குறிப்பிடப்பட்டுள்ளவாறாக இதனால் திருத்தியமைக்கிறார். இதன் வரைவு, மேற்சொன்ன சட்டத்தின் 5ஆம் பிரிவைச் சேர்ந்த (1) உட்பிரிவின் (b) பகுதியில் கோரியுள்ளவாறு, ஏற்கெனவே வெளியிடப்பட்டுள்ளது.

2. இந்த அறிவிக்கை, தமிழ்நாடு அரசிதழில் வெளியிடப்படும் நாளிலிருந்தும் அந்நாள் முதற்கொண்டும் செயலுக்கு வரும்.

10

விவர அட்டவணை

பட்டு முறுக்கேற்றும் தொழிலில் வேலைவாய்ப்பு

தொடர் எண் (1) பணி / பணியாளர் வகைகள் (2) குறைந்தளவு அடிப்படை ஊதிய வீதங்கள் (ரூ.காசு) (3)
1. நூல் இழைத்தல் நாளொன்றுக்கு 305.00
2. மடித்தல் நாளொன்றுக்கு 306.50
3. சுற்றுதல்
4. முறுக்கேற்றுதல்
5. பாவு போடுதல் நாளொன்றுக்கு 317.50
6. மேலாள் / எழுத்தர் மாதமொன்றுக்கு 9289.00
7. நிருவாக உதவியாளர் மாதமொன்றுக்கு 9946.00

விளக்கங்கள்:- (1) அகவிலைப்படி: மேலே நிர்ணயிக்கப்பட்ட குறைந்தளவு அடிப்படை ஊதிய வீதங்களுடன் கீழே குறிப்பிடப்பட்டுள்ளவாறு தொழிலாளர்களுக்கு அகவிலைப்படி வழங்கப்பட வேண்டும்.

(i) அகவிலைப்படி, 2010 ஆம் ஆண்டிற்கான சென்னை மாநகர நுகர்வோர் சராசரி விலைக் குறியீட்டு எண்ணுடன் இணைக்கப்பட்டுள்ளது. (அதாவது 2001 = 100 என்பதன் அடிப்படையில் 161 புள்ளிகள்). 161 புள்ளிகளுக்கு மேல் உயரும் ஒவ்வொரு புள்ளிக்கும் மாதமொன்றுக்கு ரூ. 1.86 (ஒரு ரூபாய் எண்பத்து ஆறு காசு மட்டும்) கூடுதலாக அகவிலைப்படி வழங்கப்பட வேண்டும்.

(ii) முந்தைய 12 மாதங்களுக்கான அதாவது ஜனவரியிலிருந்து டிசம்பர் வரையில் நுகர்வோர் விலைப்புள்ளிகளின் சராசரியை அடிப்படையாகக் கொண்டு, ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் முதல் நாளிலிருந்து அகவிலைப்படி கணக்கிடப்பட வேண்டும்.

(iii) முதல் கணக்கீடு, முந்தைய ஆண்டிற்கான சென்னை மாநகர நுகர்வோர் விலைப்புள்ளிக் குறியீட்டு எண்ணின் சராசரியை அடிப்படையாகக் கொண்டு, இந்த அறிவிக்கை தமிழ்நாடு அரசிதழில் வெளியிடப்படும் நாளிலிருந்து செயலுக்கு வரும்.

(2) ஒரே தன்மையுடைய பணியைச் செய்யும்போது, ஆண் மற்றும் பெண் தொழிலாளர்களுக்கு வழங்கும் ஊதியத்தில் எவ்வித வேறுபாடும் இருக்கக்கூடாது.

(3) நாள் ஊதியவீதங்களைக் கணக்கிடுவதற்கு, மாதாந்திர ஊதியத்தை 26-ஆல் வகுக்க வேண்டும்.

(4) மாதாந்திர ஊதியங்களைக் கணக்கிடுவதற்கு, நாள் ஊதியத்தை 30-ஆல் பெருக்க வேண்டும்.

(5) தற்போது வழங்கப்பட்டு வரும் ஊதியங்கள், இங்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள குறைந்தளவு ஊதியங்களைக் காட்டிலும் அதிகமாக இருக்குமிடங்களிலெல்லாம் அதே ஊதியமே தொடர்ந்து வழங்கப்பட வேண்டும்.

[அரசாணை (2ப) எண். 101, தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு (J1)த் துறை, 9 நவம்பர் 2022.] 1948ஆம் ஆண்டு குறைந்தளவு ஊதியங்கள் சட்டத்தின் (மத்தியச் சட்டம் 11/1948) 3 ஆம் பிரிவைச் சேர்ந்த (1) உட்பிரிவின் (b) பகுதி, 5ஆம் பிரிவைச் சேர்ந்த (2) உட்பிரிவு ஆகியவற்றில் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களைக் கொண்டும், 26-12-2018ஆம் நாளிட்ட தமிழ்நாடு அரசிதழின் பாகம்-II பிரிவு-2 இல் 1179-1180ஆம் பக்கங்களில் (ஆங்கிலத்தில்) வெளியிடப்பட்ட தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறையின் II(2)/தொ.வே.வா./1092/2018 ஆம் எண் அறிவிக்கையினை இரத்து செய்துவிட்டு, அதற்குப் பதிலாகவும், தமிழ்நாட்டு ஆளுநர் அவர்கள், ஆலோசனைக் குழுவுடன் கலந்தாலோசித்தப் பின்னர், தமிழ்நாடு மாநிலத்தில், சவ்வரிசி தயாரிப்புத் தொழிலில் பணியமர்த்தப்பட்டுள்ள, கீழ்க்காணும் விவர அட்டவணையின் (2) நெடும்பத்தியின் குறிப்பிடப்பட்டுள்ள தொழிலாளர் வகையினருக்கு வழங்கத்தக்க குறைந்தளவு ஊதிய வீதங்களை, அந்த விவர அட்டவணையின் (3) நெடும்பத்தியின் நிகரான பதிவுகளில் குறிப்பிடப்பட்டுள்ளவாறு இதனால் திருத்தியமைக்கிறார். இதன் வரைவு, மேற்சொன்ன சட்டத்தின் 5 ஆம் பிரிவைச் சேர்ந்த (1) உட்பிரிவின் (b) பகுதியில் கோரியுள்ளவாறு, ஏற்கெனவே வெளியிடப்பட்டுள்ளது.

2. இந்த அறிவிக்கை, தமிழ்நாடு அரசிதழில் வெளியிடப்படும் நாளிலிருந்தும் அந்நாள் முதற்கொண்டும் செயலுக்கு வரும்.

11

விவர அட்டவணை

சவ்வரிசி தயாரிப்புத் தொழிலில் வேலைவாய்ப்பு

தொடர் எண் தொழிலாளர்களின் வகைகள் குறைந்தளவு அடிப்படை ஊதிய வீதங்கள் ( ரூ . காசு)
( 1 ) ( 2 ) ( 3 )
1. உரிப்பவர்கள் (செய்யும் வேலைக்கேற்ற ஊதியம்) 70 கிலோ கிராம் பை ஒன்றுக்கு 31.37
2. நசுக்கி, வகைப்படுத்தி, அரைத்து, வறுக்கும் மற்றும் ஏனைய பல்வகை தொழில்களில் பணியமர்த்தப்படும் தொழிலாளர்கள் நிலை-I நிலை-II 312.50 நாளொன்றுக்கு 301.50 நாளொன்றுக்கு
3. ஓட்டுநர்கள் நிலை-I நிலை-II 8456.00 மாதமொன்றுக்கு 7924.00 மாதமொன்றுக்கு
4. எழுத்தர்கள் நிலை-I நிலை-II 8571.00 மாதமொன்றுக்கு 8139.00 மாதமொன்றுக்கு
5. காவலாள் 7924.00 மாதமொன்றுக்கு

விளக்கங்கள்: 1. (i) உடல்திறன், செயல்திறன் திறமை மற்றும் செய்யும் வேலையின் அளவு மற்றும் பணிமூப்பு நிலை அடிப்படையில் நசுக்குதல், வகைப்படுத்துதல், அரைத்தல், வறுத்தல் ஆகியவற்றில் பணியமர்த்தப்பட்டவர்கள் நிலை-I மற்றும் நிலை-II தொழிலாளர்களாக வகைப்படுத்தப்படுகிறார்கள்.

(ii) ஓட்டுநர்களை நிலை-I மற்றும் நிலை-II ஆக வகைப்படுத்துதல்:-

நிலை-I: ஐந்து ஆண்டுகள் முறையாக பணி நிறைவு செய்தவர்கள்

நிலை-II: ஐந்து ஆண்டுகள் பணி நிறைவு செய்யாதவர்கள்

(iii) எழுத்தர்களை நிலை-I மற்றும் நிலை-II ஆக வகைப்படுத்துதல்:-

நிலை-I: ஐந்து ஆண்டுகள் முறையாக பணி நிறைவு செய்தவர்கள்

நிலை-II: ஐந்து ஆண்டுகள் பணி நிறைவு செய்யாதவர்கள்

(2) அகவிலைப்படி: மேலே நிர்ணயிக்கப்பட்ட குறைந்தளவு அடிப்படை ஊதிய வீதங்களுடன் தொழிலாளர்களுக்கு கீழே குறிப்பிடப்பட்டுள்ளவாறு அகவிலைப்படி வழங்கப்பட வேண்டும்.

(i) அகவிலைப்படியானது, 2010 ஆம் ஆண்டிற்கான சென்னை மாநகர நுகர்வோர் சராசரி விலைக்குறியீட்டு எண்ணுடன் இணைக்கப்பட்டுள்ளது (அதாவது 2001 = 100 புள்ளிகள் என்பதை அடிப்படையாகக் கொண்டு தற்போது கணக்கிடப்பட்ட 161 புள்ளிகள் ஆகும்). 161 புள்ளிகளுக்கு மேல் உயரும் ஒவ்வொரு புள்ளிக்கும், மாதமொன்றுக்கு ரூ. 49.20 (நாற்பத்து ஒன்பது ரூபாய் இருபது காசுகள் மட்டும்) கூடுதலாக அகவிலைப்படி வழங்கப்பட வேண்டும்.

(ii) முந்தைய 12 மாதங்களுக்கான (அதாவது ஜனவரியிலிருந்து டிசம்பர் வரை) சராசரி நுகர்வோர் விலைக்குறியீட்டினை அடிப்படையாகக் கொண்டு, ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் முதல் நாளன்று அகவிலைப்படி கணக்கிடப்பட வேண்டும்.

(iii) முந்தைய ஆண்டிற்கான சராசரி நுகர்வோர் விலைக்குறியீட்டு எண்ணை அடிப்படையாகக் கொண்ட முதல் கணக்கீடு, இந்த அறிவிக்கை தமிழ்நாடு அரசிதழில் வெளியிடப்படும் நாளிலிருந்து செயலுக்கு வரும்.

(3) பணியின் தன்மை ஒரே மாதிரியாக இருக்கும்போது, ஆண் மற்றும் பெண் தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் ஊதியத்தில் எவ்வித வேறுபாடும் இருக்கக்கூடாது.

(4) (i) நாள் ஊதியத்தைக் கணக்கிடுவதற்கு, மாதாந்திர ஊதியத்தை 26ஆல் வகுக்க வேண்டும்.

(ii) மாதாந்திர ஊதியத்தைக் கணக்கிடுவதற்கு, நாள் ஊதியத்தை 30ஆல் பெருக்க வேண்டும்.

(5) தற்போது வழங்கப்பட்டு வரும் ஊதியங்கள், இங்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள குறைந்தளவு ஊதியங்களைக் காட்டிலும் அதிகமாக இருக்குமிடங்களிலெல்லாம், அதே ஊதியம் தொடர்ந்து வழங்கப்பட வேண்டும்.

முகமது நசிமுத்தின், முகமது நசிமுத்தின்,

அரசு கூடுதல் தலைமைச் செயலாளர்.அரசு கூடுதல் தலைமைச் செயலாளர்.

(தமிழாக்கம்)

ந. அருள், இயக்குநர், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தி (மொழிபெயர்ப்பு)த் துறை.

தமிழ்நாடு அரசுக்காக சென்னை எழுதுபொருள் மற்றும் அச்சுத் துறை ஆணையரால் அச்சிடப்பட்டு வெளியிடப்பட்டது.

Cite this issue. Tamil Nadu Gazette, Government of Tamil Nadu, 15 March 2023. Indian Gazettes, https://egazette.servantsofknowledge.in/details/in.gazette.tamilnadu.2023-03-15.Ordinary_11_Part-II_Section-2-T-Sup/. Archive identifier in.gazette.tamilnadu.2023-03-15.Ordinary_11_Part-II_Section-2-T-Sup.