[Regd. No. TN/CCN/467/2012-14.
[R. Dis. No. 197/2009.
© தமிழ்நாடு அரசு 2023
[விலை : ரூ. 2.40 காசு[விலை : ரூ. 2.40 காசு
| தமிழ்நாடு அரசிதழ் ஆணையின்படி வெளியிடப்பட்டது. | ||
எண் 12] சென்னை, புதன்கிழமை, மார்ச் 22, 2023 பங்குனி 8, சுபகிருது, திருவள்ளுவர் ஆண்டு-2054
பகுதி III—பிரிவு 1(a) இன் இணைப்பு
அரசாங்க அறிவிப்புகளின் தமிழ் மொழிபெயர்ப்புகள்அரசாங்க அறிவிப்புகளின் தமிழ் மொழிபெயர்ப்புகள்
தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை
அறிவிக்கைகள்அறிவிக்கைகள்
[அரசாணை (நிலை) எண். 116, தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு (K2)த் துறை, 30 ஆகஸ்ட் 2022.] 1951ஆம் ஆண்டு மலைத் தோட்டத் தொழிலாளர்கள் சட்டத்தின் (மத்தியச் சட்டம் 69/1951) 43 ஆம் பிரிவை சேர்ந்த (1) மற்றும் (2) உட்பிரிவுகளில் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களைக் கொண்டும், 13-12-2017ஆம் நாளிட்ட தமிழ்நாடு அரசிதழின்தமிழ்நாடு அரசிதழின் பாகம் III—பிரிவு 1(a)-இல் 183 முதல் 185 வரையிலான பக்கங்களில் (ஆங்கிலத்தில்) வெளியிடப்பட்ட SRO A-57/2017 ஆம் எண்ணுள்ள தொழிலாளர் மற்றம் வேலைவாய்ப்புத் துறையின் அறிவிக்கையை ரத்து செய்துவிட்டு, அதற்கப் பதிலாகவும், தமிழ்நாட்டு ஆளுநர் அவர்கள், 1955 ஆம் ஆண்டு மலைத் ேதாட்டத் தொழிலாளர்கள் விதிகளில் பின்வரும் திருத்தங்களை இதனால் செய்கிறார். இந்நோக்கம், மேற்சொன்ன சட்டத்தின் 43ஆம் பிரிவைச் சேர்ந்த (1) உட்பிரிவில் கோரியுள்ளது ஏற்கெனவே வெளியிடப்பட்டுள்ளது.
திருத்தங்கள்
மேற்சொன்ன விதிகளில்.-
(1) 82 ஆம் விதியில்,-
(i) துணை விதி (1)க்குப் பதிலாக, பின்வரும் துணை விதி அமைத்துக் கொள்ளப்பட வேண்டும், அதாவது:-
"(1)(a) வேலையளிப்பவர் ஒவ்வொருவரும் கீழ்க்காணும் பதிவேடுகளை வைத்து வர வேண்டும்-
(i) படிவம் 29-இல் பணியாளர் பதிவேடு ஒன்று.
(ii) படிவம் 30-இல் வேலைவாய்ப்புப் பதிவேடு ஒன்று.
(iii) படிவம் 31-இல் ஊதியங்களுக்கான பதிவேடு ஒன்று.
(iv) படிவம் 32-இல் விடுப்பு மற்றும் சமூகப் பாதுகாப்புப் பயன்களுக்கான பதிவேடு ஒன்று.
(b) பகுதி (a)-இல் குறிப்பிடப்பட்ட பதிவேடுகள் மின்னணு வடிவில் அல்லது கையேடு வடிவில் வைத்துவரப்பட வேண்டும்.
(c) மின்னணு வடிவில் பகுதி (a)-இல் குறிப்பிடப்பட்ட பதிவேடுகள் வைத்து வரப்படும் போது, பதிவேட்டின் நெடும்பத்திகள் முழுமையாக, தொடர் எண் மற்றும் பொருளடக்கங்களை மாற்றாமல் பதிவேடுகளின் வடிவமைப்பு மற்றும் அளிக்கும் முறை பின்பற்றப்படலாம்.
(ii) துணை விதி 4-இல்,-
(a) பகுதி (b) விட்டுவிடப்பட வேண்டும்;
(b) பகுதி (c)-இல் "ஒரு ரூபாய்" மற்றும் "பணிப்பதிவேடு" என்ற சொற்றொடருக்குப் பதிலாக முறையே "பத்து ரூபாய்" மற்றும் பணியாளர் பதிவேடு" என்ற சொற்றொடர்கள் அமைத்துக்கொள்ளப்பட வேண்டும்.
[ 1 ]
III-1a-(12) (T Sup)—12 (2) படிவம் எண்கள் 12, 13, 14, 14-A, 14-B மற்றும் 26 விட்டுவிடப்பட வேண்டும்.
(3) படிவம் எண். 28-க்கு பின்னர், பின்வரும் படிவங்கள் சேர்த்துக்கொள்ளப்பட வேண்டும், அவையாவன:-
படிவம் எண்-29
பணியாளர் பதிவேடு
[82(1) (a)(i) ஆம் விதியைக் காண்க]
மலைத் தோட்டத்தின் பெயர் மற்றும் முகவரி :
வேலையளிப்பவரின் பெயர் மற்றும் முகவரி :
பதிவு சான்றிதழ் எண் :
பயிரிடப்படும் பரப்பளவு (எக்டேர்களில்) :
| தொடர் எண் | பணியாளரின் பெயர் | பணியாளர் அடையாள எண் | பாலினம் | தந்தை/கணவன்/மனைவி பெயர் | பிறந்த நாள் | பணியில் சேர்ந்த நாள் | வகைப்பாடு (உயரளவு பயிற்சி பெற்றோர் / பயிற்சி பெற்றோர் / ஓரளவு பயிற்சி பெற்றோர் / பயிற்சி பெற்றோர்) | பதவிப்பெயர் | தற்போதைய முகவரி | நிரந்தர முகவரி | பணியாளரின் வருங்கால வைப்பு நிதி எண் | மாநில தொழிலாளர் ஈட்டுறுதிக் கழக எண் | பணிப்பதிவேடு வழங்குதல் ஆதார் எண் | பணியில் சேர்ந்து 480 நாட்கள் நிறைவடையும் நாள் | பணி நிரந்தரம் செய்யப்பட்ட நாள் | பணி இடை நீக்கம் கால அளவு (ஏதேனுமிருப்பின்) | வங்கி கணக்கு எண். வங்கியின் பெயர், கிளை (IFSC) | புகைப்படம் | அலை பேசி எண் | மாதிரி கையொப்பம்/கை/பெருவிரல் கைரேகை பதிவு | பணியிலிருந்து வெளியேறிய நாள் | பணியிலிருந்து வெளியேற்றத்திற்கான காரணம் | குறிப்புரைகள் | |||
| பணியாளருக்கு வழங்கப்பட்ட நாள் | பதிவுகளை மேற்கொள்வதற்காக பணிப்பதிவேடு பெறப்பட்ட நாள் மற்றும் திருப்பியளிக்கப்பட்ட நாள் | இரண்டாம் படிக்கான விண்ணப்பம் பெறப்பட்ட நாள் மற்றும் இரண்டாம்படி வழங்கப்பட்ட நாள் | ||||||||||||||||||||||||
| 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | 8 | 9 | 10 | 11 | 12 | 13 | 14 | 15 | 16 | 17 | 18 | 19 | 20 | 21 | 22 | 23 | 24 | 25 | 26 | 27 |
"படிவம் எண்-30
வேலைவாய்ப்புப் பதிவேடு
[82(1) (1) (a)(ii) ஆம் விதியைக் காண்க]
....................................லிருந்து ................... கால அளவு வரையில்
மலைத் தோட்டத்தின் பெயர் மற்றும் முகவரி:
வேலையளிப்பவரின் பெயர் மற்றும் முகவரி: ஒப்புதலளிக்கப்பட்ட பண்டிகை விடுமுறை நாட்களுக்கான செயல்முறை எண் & நாள்:
மேலாளரின்/பொறுப்பாளரின் பெயர்: ஒப்புதலளிக்கப்பட்ட பண்டிகை விடுமுறை நாட்கள்
பதிவு சான்றிதழ் எண்:
பயிரிடப்பட்ட பரப்பளவு (எக்டேர்களில்):
| (1) | (2) | (3) | (4) | (5) |
| தொடர் எண் | பணியாளரின் பெயர் | பணியாளரின் அடையாள எண் | வேலையை தொடங்கும் நேரம் | ஓய்வு இடைவேளை | வேலை முடிவடையும் நேரம் | மிகைப்பணி நேரம் உட்பட நாள்தோறும் வேலை செய்த நேரங்கள் (ஏதேனுமிருப்பின்) | வேலை செய்த மொத்த நாட்கள் | வேலை செய்த மொத்த கால அளவு | ஊதியமில்லா விடுப்பெடுத்த மொத்த நாட்கள் | தேசிய விடுமுறையில் வேலை செய்ததற்காக பெறப்பட்ட ஆதாயம் | பண்டிகை விடுமுறை நாளில் வேலை செய்ததற்காக பெறப்பட்ட ஆதாயம் | குறிப்புரைகள் | ||||||||||||||||||||||||||||||
| 1 2 3 4 5 6 7 8 9 1 | 0 | 11 | 12 | 13 | 14 | 15 | 16 | 17 | 18 | 19 | 20 | 21 | 22 | 23 | 24 | 25 | 26 | 27 | 28 | 29 | 30 | 31 | ||||||||||||||||||||
| 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 8 | 9 | 10 | 11 | 12 | 13 | |||||||||||||||||||||||||||||||
III-1a-(12) (T Sup)—2 III-1a-(12) (T Sup)—24
படிவம் எண்-31
ஊதியங்கள் பதிவேடு
[82(1) (a)(iii) ஆம் விதியைக் காண்க]
பணியமர்த்தப்பட்டுள்ள மொத்தப் பணியாளர்களின் எண்ணிக்கை
| ஆண்கள் | பெண்கள் | வளரிளம் பருவ ஆடவர் | வளரிளம் பருவ மகளிர் |
நிறுவனத்தின் பெயர் மற்றும் முகவரி :
வேலையளிப்பவரின் பெயர் மற்றும் முகவரி :
மேலாளரின் / பொறுப்பாளரின் பெயர் :
பதிவுச் சான்றிதழ் எண் :
பயிரிடப்பட்ட பரப்பளவு (எக்டேர்களில்) :
.............................. லிருந்து ................ கால அளவு வரையிலான ஊதியம் (மாதம்/இரண்டு வாரங்கள்/ வாரம்/ நாள்தோறும்/ செய்யும் வேலைக்கேற்ற ஊதியம்)
| தொடர் எண் | பணியாளரின் பெயர் | பணியாளர் அடையாள எண் | பணி செய்த நாட்கள் | அடிப்படை ஊதியம் | அகவிலைப்படி | வீட்டு வாடகைப்படி | ஏனைய படிகள் (தன்மையை குறிப்பிடவும்) | மிகைப்பணி நேர ஊதியங்கள் | விடுப்பு ஊதியங்கள் | பிடித்தங்கள் | தொகை வழங்கிய நாள் | செலுத்தப்படாத திரண்ட தொகை | கணக்கிடப்பட்ட பிழைப்பூதியப் படியின் விகிதம் மற்றும் வழங்கப்பட்ட தொகை | பணியாளரின் இரசீது / வங்கி பரிவர்த்தனை எண் / நாள் | குறிப்புரைகள் | ||||||||||||||
| மொத்த ஊதியங்கள் | வருங்கால வைப்பு நிதி | தொழிலாளர் நல நிதி | வழங்கப்பட்ட முன்பணம் | முன்பணங்கள் | சேதங்கள் / அபராதங்கள் | மொத்த பிடித்தங்கள் | நிகர ஊதியம் | ||||||||||||||||||||||
| மாத தொடக்கத்தில் வசூலிக்க வேண்டிய முன்பணம் நிலுவை | வசூலிக்கப்பட்ட முன்பணம் | வசூலிக்கப்பட வேண்டிய நிலுவைத்தொகை | சேதங்கள், இழப்புகள் அல்லது அபராதங்கள் வகையில் செய்யப்பட்ட பிடித்தங்கள் | மாத தொடக்கத்தில் வசூலிக்காமல் நிலுவையிலுள்ள பிடித்தம் செய்ய வேண்டிய தொகை | சேதங்கள், இழப்புகள் அல்லது அபராதங்கள் வகையான பிடித்தங்கள் | நிலுவையிலுள்ள வசூலிக்கப்பட வேண்டிய தொகை | ஏனைய யாதொரு பிடித்தங்கள் | ||||||||||||||||||||||
| 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | 8 | 9 | 10 | 11 | 12 | 13 | 14 | 15 | 16 | 17 | 18 | 19 | 20 | 21 | 22 | 23 | 24 | 25 | 26 | 27 | 28 | 29 |
படிவம் எண்.- 32
விடுப்பு மற்றும் சமூகப் பாதுகாப்பு பயன்களுக்கான பதிவேடுவிடுப்பு மற்றும் சமூகப் பாதுகாப்பு பயன்களுக்கான பதிவேடு
[82(1) (a)(iv) ஆம் விதியைக் காண்க]
மலைத்தோட்டத்தின் பெயர் மற்றும் முகவரி :
வேலையளிப்பவரின் பெயர் மற்றும் முகவரி :
மேலாளரின் / பொறுப்பாளரின் பெயர் :
பதிவு சான்றிதழ் எண் :
பயிரிடப்படும் பரப்பளவு (எக்டேர்களில்) :
--------------ஆம் ஆண்டு ------------- மாதத்திற்காக
| தொடர் எண் | பணியாளரின் பெயர் | பணியாளர் அடையாள எண் | ஈட்டிய விடுப்பு | மருத்துவ விடுப்பு | மகப்பேறு பயன்கள் | பணிக்கொடை பயன்கள் | |||||||||||
| மாதத்தின் தொடக்கத்திலிருந்த விடுப்பு | அந்த கால அளவில் ஈட்டிய விடுப்பு | அந்த மாதத்தின் போது எடுக்கப்பட்ட விடுப்பு | மாதத்தின் இறுதியில் எஞ்சியுள்ள விடுப்பு | மாதத்தின் தொடக்கத்திலுள்ள விடுப்பு | அந்த மாதத்தின் போது எடுக்கப்பட்ட விடுப்பு | மாதத்தின் இறுதியில் எஞ்சியுள்ள விடுப்பு | கருவுற்ற நிலை / பிரசவம் குறித்த அறிவிப்பு அளிக்கப்பட்ட நாள் | மகப்பேறினை எதிர்ப்பார்த்து அதன் அடிப்படையில் முன்னதாகவே வழங்கப்பட்ட மகப்பேறு உதவித் தொகை மற்றும் தொகை வழங்கப்பட்ட நாள் | அதனைத் தொடர்ந்து வழங்கப்பட்ட மகப்பேறு உதவித் தொகை மற்றும் தொகை வழங்கப்பட்ட நாள் | மருத்துவ மிகை சம்பளமாக வழங்கப்பட்ட தொகை மற்றும் வழங்கப்பட்ட நாள் | 1961 ஆம் ஆண்டு பேறுகாலச் சலுகை சட்டத்தின் 9 அல்லது 10 ஆம் பிரிவின் கீழ் ஊதியத்துடன் கூடிய விடுப்பு | பணியாளரிடமிருந்து நேமகம் பெறப்பட்டதா | பணியாளரின் வெளியேற்றம் அல்லது இறப்பு குறித்த நேர்வில் பணிக்கொடையாக வழங்கப்பட்ட தொகை | குறிப்புரைகள் | |||
| 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | 8 | 9 | 10 | 11 | 12 | 13 | 14 | 15 | 16 | 17 | 18 |
[அரசாணை (நிலை) எண் 129, தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு (M2)த் துறை, 11 அக்டோபர் 2022.] 1948 ஆம் ஆண்டு தொழிற்சாலைகள் சட்டத்தின் (மத்திய சட்டம் 63/1948) பிரிவு 19 மற்றும் பிரிவு 112 இல் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களை கொண்டு, தமிழ்நாடு 1950 ஆம் ஆண்டு தொழிற்சாலைகள் சட்டத்தில் மேற்கொள்ளக் கருதப்பட்டுள்ள திருத்தம் ஒன்றுக்கான கீழ்க்காணும் வரைவு, மேற்சொன்ன சட்டத்தின் பிரிவு 115 இல் கோரியுள்ளவாறு, அதனால் பாதிக்கப்படக்கூடிய அனைவரின் தகவலுக்காக இதனால் வெளியிடப்படுகிறது.
(2) இந்த அறிவிக்கை தமிழ்நாடு அரசிதழில்தமிழ்நாடு அரசிதழில் வெளியிடப்படும் நாளிலிருந்து நாற்பத்தைந்து நாட்களுக்குப் பின்னர் இவ்வரைவுத் திருத்தம் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்றும், மேற்சொன்ன கால அளவு முடிவடைவதற்கு முன்னர் இது தொடர்பாக யாதொரு நபரிடமிருந்தும் வரப்பெறும் யாதொரு மறுப்புரை அல்லது கருத்துரையை தமிழ்நாடு அரசு பரிசீலிக்கும் என்றும், இதனால் அறிவிக்கப்படுகிறது. மறுப்புரை அல்லது கருத்துரை ஏதேனுமிருப்பின், அதன் இரு படிகள் 47/1-திரு.வி.க. தொழிற்பேட்டை, கிண்டி, சென்னை-32 எனும் முகவரியிலுள்ள தொழிலகப் பாதுகாப்பு மற்றும் நல வாழ்வு இயக்குநர் வாயிலாக கூடுதல் அரசு தலைமை செயலாளர், தெழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை, சென்னை-600 009 என்ற முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.
வரைவுத் திருத்தம்
மேற்சொன்ன விதிகளில், விதி எண் 47 நீக்கப்படலாம்.
முகமது நசிமுத்தின்,
கூடுதல் அரசு தலைமைச் செயலாளர்.
(தமிழாக்கம்)
ந. அருள், இயக்குநர்
தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தி (மொழிபெயர்ப்பு)த் துறை.
தமிழ்நாடு அரசுக்காக சென்னை எழுதுபொருள் மற்றும் அச்சுத் துறை ஆணையரால் அச்சிடப்பட்டு வெளியிடப்பட்டது.