Servants of Knowledge
Tamil Nadu Gazette · Government of Tamil Nadu

Notifications or Orders of interest to a section of the public issued by Secretariat Departments

Published 05 April 2023

Type
Ordinary
Gazette no.
14
Part
Part II
Notifications
Government Notifications and Tamil Translations
Section
Section 2T-Sup.
Identifier
in.gazette.tamilnadu.2023-04-05.Ordinary_14_Part-II_Section-2T-Sup.
Languages
English, Tamil
Published at
Original source ↗

© தமிழ்நாடு அரசு 2023

[Regd. No. TN/CCN/467/2012-14. [R. Dis. No. 197/2009. [விலை: ரூ. 2.40 காசு

தமிழ்நாடு அரசிதழ் ஆணையின்படி வெளியிடப்பட்டது.

எண் 14] சென்னை, புதன்கிழமை, ஏப்ரல் 5, 2023 பங்குனி 22, சுபகிருது, திருவள்ளுவர் ஆண்டு–2054

பகுதி II—பிரிவு 2 இன் இணைப்பு

அரசாங்க அறிவிப்புகளின் தமிழ் மொழிபெயர்ப்புகள்

சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத் துறை.

[அரசாணை (நிலை) எண். 136, சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வன (வன.5)த் துறை, 10 ஆகஸ்ட் 2022.] வனச் சுற்றுச்சூழல் அமைப்பொன்றின் வளமையின் முதன்மையான குறியீட்டாக திகழும், ஆசிய யானைகள் முதன்மை வாய்ந்த முன்னோடி இனமாகக் கருதப்படுவதாலும்

யானைகளையும் அவற்றின் வாழ்விடங்களையும் பாதுகாப்பதில் தமிழ்நாடு அரசு மிகுந்த அர்ப்பணிப்புடன் செயற்படுவதாலும், அகத்தியமலை நிலப்பரப்பிலுள்ள களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம் கன்னியாகுமரி வனவிலங்கு சரணாலயம் ஆகியவற்றின் வனப்பகுதிகள், மேற்கு தொடர்ச்சி மலையின் தென்கோடிப் பகுதியில் ஆசிய யானைகளின் மிகவும் முதன்மையான வாழ்விடங்களாக அமைந்திருப்பதாலும்,

உரிய ஆராய்ச்சி மற்றும் திறம்பட்ட மேலாண்மை தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி அப்பகுதியிலுள்ள யானைகளின் வளமான வாழ்விடங்களைப் பாதுகாப்பதை உறுதிசெய்யவும் அகத்தியமலை நிலப்பரப்பில் யானைகள் நடந்து செல்லும் பாதைகளின் வளமை மற்றும் இணைப்பை மேம்படுத்தவும் தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளதாலும்,

மத்திய அரசின் 13-07-2022 ஆம் நாளிட்ட F.No.7-2/2022-PE ஆம் எண் கடிதத்தில் யானையைப் பாதுகாக்கும் நோக்கத்திற்காக தமிழ்நாடு மாநிலத்தில் அகத்தியமலை யானைகள் காப்பகத்தை உருவாக்குவதற்கு இசைவளித்திருப்பதாலும்,

மேற்சொன்ன நோக்கங்களுக்காக கீழே அட்டவணையில் பட்டியலிடப்பட்டுள்ள பின்வரும் பகுதிகளைக் கொண்ட 1,19,748.26 ஹெக்டேர் மொத்தப் பரப்பளவுடன் கூடிய பகுதியை அகத்தியமலை யானைகள் காப்பகமாக அறிவிப்பதற்கு தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளது.

அட்டவணை

திருநெல்வேலி மாவட்டம்

வட்டம் காப்பு வனத்தின் பெயர் காப்பு வனமாக அறிவிக்கப்பட்ட நாள் மற்றும் எண் பரப்பளவு ( ஹெக்டேரில்)
எண் நாள்
அம்பாசமுத்திரம் பாபநாசம் ஆழ்வார்குறிச்சி மலைத் தொடர் மேல்சரிவு பகுதி 1611 20.12.1883 25,835.23
பாபநாசம் ஆழ்வார்குறிச்சி மலைத் தொடர் கீழ்சரிவு பகுதி 534 27.11.1890 7.851.166
ஆழ்வார்குறிச்சி காப்பு வனம் II மற்றும் IIB 19 20.12.1911 76.67
பாபநாசம் வனப்பகுதியின் கலோலி இணைப்பு 81 31.01.1912 3.55

DTP-II-2-(14) (T Sup)—1

[ 1 ]2

வட்டம் காப்பு வனத்தின் பெயர் காப்பு வனமாக அறிவிக்கப்பட்ட நாள் மற்றும் எண் பரப்பளவு ( ஹெக்டேரில்) NaN
எண் நாள் NaN
பாபநாசம் ஆழ்வார்குறிச்சி காப்பு வனம் கீழ்சரிவு IIBன் கூடுதல் பகுதி 581 28.11.1913 0.89 NaN
சிங்கம்பட்டி காப்பு வனம் 3 12.01.2018 22,979.20 NaN
தெற்கு வீரநல்லூர் காப்பு வனம் 534 27.11.1890 1,289.82 NaN
மண்பொத்தை காப்பு வனம் 511 08.11.1898 502.58 NaN
கொழுந்துமாமலை காப்பு வனம் 88 17.02.1890 622.88 NaN
நாங்குநேரி திருக்குறுங்குடி மற்றும் களக்காடு வனப்பகுதியின் மேல்சரிவு 1911 20.12.1883 13,559.67 NaN
திருக்குறுங்குடி மற்றும் களக்காடு வனப்பகுதியின் கீழ்சரிவு 533 27.11.1890 8,532.25 NaN
வானமுட்டி 194 25.04.1898 0.81 NaN
மகேந்திரகிரி 249 18.05.1898 13.67 NaN
நாடுகாணி பகுதி-I 487 12.12.1903 1.55 NaN
நாடுகாணி பகுதி-II 244 14.06.1905 2.61 NaN
குழிசல்கிடை 244 14.06.1905 0.40 NaN
ஜாதிக்காய் தோட்டம் 244 14.06.1905 1.03 NaN
லாடன் தோட்டம் 247 20.07.1906 4.14 NaN
தரகனார் எஸ்டேட் தொகுதி 243 10.05.1907 44.52 NaN
மாயன்பரம்பு எஸ்டேட் தொகுதி 497 05.09.1910 44.19 NaN
களக்காடு காப்பு வனம்-I (a)ன் கூடுதல் பகுதி 147 11.03.1912 2.63 NaN
திருக்குறுங்குடி மற்றும் களக்காடு காப்பு வனத்தின் கூடுதல்பகுதி 349 14.07.1913 0.53 NaN
திருக்குறுங்குடி காப்பு வனத்தின் கூடுதல்பகுதி 163 12.07.1921 4.00 NaN
நாங்குநேரி க ள க் க ா டு க ா ப் பு வ ன த் தி ன் கூ டு த ல் ப கு தி (கருமாண்டியம்மன் சர்வே எண் 803-1 மற்றும் 803-3) 110 21.04.1923 36.72 NaN
வள்ளியூர் காப்பு வனம் 51 28.01.1904 244.89 NaN
வள்ளியூர் காப்பு வனத்தின் கூடுதல் பகுதி் 478 06.11.1908 45.52 NaN
நாங்குநேரி ராதாபுரம் களக்காடு தேக்கு பாதைகள் I முதல் II 165 10.06.1889 109.75 NaN
திருநெல்வேலி மாவட்டத்தில் யானைக் காப்பகத்தின் மொத்தப் பரப்பளவு 81,811.36 NaN
கல்குளம் வீரப்புலி காப்பு வனம் (பகுதி) 40 06-10-1903 5,942.00 NaN
விளவங்கோடு கிளாமலை காப்பு வனம் (பகுதி) 31 21-07-1901 1,786.00 NaN
கிளாமலை காப்பு வனம் (பகுதி) 181 26-01-1929 5,938.00 NaN
திருவட்டாறு கல்குளம், தோவாளை வீரப்புலி காப்பு வனம் (பகுதி) 31 17-07-1903 15,220.18 NaN
தோவாளை அசம்பு காப்பு வனம் 51 12-01-1980 5,116.57 NaN
மகேந்திரகிரி காப்பு வனம் (பகுதி) 40 29-09-1902 3,239.15 NaN
வட்டம் காப்பு வனத்தின் பெயர் காப்பு வனமாக அறிவிக்கப்பட்ட நாள் மற்றும் எண் . பரப்பளவு ( ஹெக்டேரில்) NaN
எண் நாள் NaN
பொய்கைமலை 3 06-10-1903 695.00 NaN
கன்னியாகுமரி மாவட்டத்தில் யானைக் காப்பகத்தின் மொத்தப் பரப்பளவு 37,936.900 NaN
வட்டம் காப்பு வனத்தின் பெயர் காப்பு வனமாக அறிவிக்கப்பட்ட நாள் மற்றும் எண் பரப்பளவு (ஹெக்டேரில்) NaN
காப்பகத்தின் மொத்தப் பரப்பளவு 1,19,748.26 NaN
3

1197.48 சதுர கி.மீ.

2. களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகத்தின் வனப் பாதுகாவலர் மற்றும் கள இயக்குநர் அகத்தியமலை யானைகள் காப்பகத்தின் கள ஒரு ஒருங்கிணைப்பாளராகச் செயற்படுவார்.

சுப்ரியா சாஹூ, அரசு கூடுதல் தலைமைச் செயலாளர்.

(தமிழாக்கம்)

ந. அருள், இயக்குநர் (மு.கூ.பொ), தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தி (மொழிபெயர்ப்பு)த் துறை.

தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை.

அறிவிக்கை.

[அரசாணை (2ப) எண். 97, தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு (J1)த் துறை, 7 நவம்பர் 2022.] 1948-ஆம் ஆண்டு குறைந்தளவு ஊதியங்கள் சட்டத்தின் (மத்தியச் சட்டம் 11/1948) 3-ஆம் பிரிவைச் சேர்ந்த (1) உட்பிரிவின் (b) பகுதியிலும், 5-ஆம் பிரிவைச் சேர்ந்த (2) உட்பிரிவிலும் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களைக் கொண்டும், 12-12-2018-ஆம் நாளிட்ட தமிழ்நாடு அரசிதழின் பாகம் II பிரிவு-2-இல் 1113 மற்றும் 1114-ஆம் பக்கங்களில் (ஆங்கிலத்தில்) வெளியிடப்பட்ட தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத்துறையின் II(2)/LE/1027/2018-ஆம் எண் அறிவிக்கையை இரத்து செய்துவிட்டு, அதற்குப் பதிலாகவும், தமிழ்நாட்டு ஆளுநர் அவர்கள். தமிழ்நாடு மாநிலத்தில் திரைப்படத் தொழிலில் பணியமர்த்தப்பட்டுள்ள, கீழ்க்காணும் விவர அட்டவணையின் (2) நெடும்பத்தியில் குறிப்பிடப்பட்டுள்ள பணியாளர் வகையினருக்கு வழங்கத்தக்க குறைந்தளவு ஊதிய வீதங்களை அந்த விவர அட்டவணையின் (3) நெடும்பத்தியின் நிகரான பதிவுகளில் குறிப்பிடப்பட்டுள்ளவாறாக இதனால் திருத்தியமைக்கிறார்.

மேலும், இந்நோக்கம் மேற்சொன்ன சட்டத்தின் 5-ஆம் பிரிவைச் சேர்ந்த (1) உட்பிரிவின் (b) பகுதியில் கோரப்பட்டவாறு ஏற்கெனவே வெளியிடப்பட்டுள்ளது:-

2. இந்த அறிவிக்கை தமிழ்நாடு அரசிதழில் வெளியிடப்பட்ட நாளிலிருந்தும் அந்நாள் முதற்கொண்டும் செயலுக்கு வரும்.

விவர அட்டவணை

திரைப்படத் தொழிலில் வேலைவாய்ப்பு

தொடர் எண் பணியாளர் வகையினர் திங்களொன்றுக்கு குறைந்தளவு அடிப்படை ஊதிய வீதங்கள் (ரூ.)
( 1 ) ( 2 ) ( 3 )
மண்டலம்-A மண்டலம்-B மண்டலம்-C
வகை-I
1. மேலாளர் 11606.00 10896.00 10277.00
வகை-II மண்டலம்-A மண்டலம்-B மண்டலம்-C
(1) உதவி மேலாளர்
(2) மேற்பார்வையாளர் 10896.00 10449.00 10034.00
(3) திரையரங்கில் படம் திரையிடுபவர்
(4) கணக்கர்
(5) காசாளர்/எழுத்தர்
(6) மின் கம்மியர்
வகை-III
(1) திரையிடுவதில் பயிற்சிபெறுபவர் 10224.00 9929.00 9929.00
(2) நுழைவுச் சீட்டு முன்பதிவு எழுத்தர்
(3) வாயிற் காப்பாளர்
(4) நுழைவுச் சீட்டு சேகரிப்பவர்
(5) இயந்திரக் கம்மியர்/ சீர்வளி சாதனம் இயக்குபவர்
(6) காவலாள்/ வழிகாட்டுபவர்
வகை-IV
(1) துடைப்பவர் 10089.00 9929.00 9929.00
(2) சிற்றேவலர்
(3) சிப்பமாக்கும் உதவியாள்
(4) மிதிவண்டிப் பையன்
(5) துப்புரவு பணியாளர்
(6) தோட்டக்காரர்
(7) பெருக்குபவர்
(8) மேற் குறித்தவற்றில் சேராத ஏனைய யாதொரு பணியாளர் வகையினர்
4

விளக்கங்கள்:- (1) மண்டலங்களின் வகைப்பாடு: A, B மற்றும் C மண்டலங்களில் பின்வரும் பகுதிகள் அடங்கும்:-

(1) மண்டலம்-A: மாநகராட்சிகள், நிலை-I நகராட்சிகள், தேர்வு நிலை மற்றும் சிறப்புநிலை நகராட்சிகள்.

(2) மண்டலம்-B: நிலை-II மற்றும் நிலை-III நகராட்சிகள், நகரியங்கள் பாளையங்கள் மற்றும் பேரூராட்சிகள்.

(3) மண்டலம்-C: கிராம ஊராட்சிகள்.

(2) அகவிலைப்படி:- மேலே நிருணயிக்கப்பட்ட குறைந்தளவு அடிப்படை ஊதியவீதங்களுடன், பணியாளர்களுக்கு கீழே குறிப்பிடப்பட்டுள்ளவாறு அகவிலைப்படி வழங்கப்பட வேண்டும்:-

(i) அகவிலைப்படியானது, 2010-ஆம் ஆண்டிற்கான சென்னை மாநகர நுகர்வோர் சராசரி விலைக்குறியீட்டு எண்ணுடன் இணைக்கப்பட்டுள்ளது (அதாவது 2001-ஆம் ஆண்டில் 100 புள்ளிகள் என்பதை அடிப்படையாகக் கொண்டு தற்போது கணக்கிடப்பட்ட 161 புள்ளிகள்). 161 புள்ளிகளுக்கு மேல் உயரும் ஒவ்வொரு புள்ளிக்கும் திங்களொன்றுக்கு ரூ.61.65 (அறுபத்தோறு ரூபாய் அறுபத்தைந்து காசுகள் மட்டும்) கூடுதலாக அகவிலைப்படி வழங்கப்பட வேண்டும்.

5

(ii) முந்தைய 12 மாதங்களுக்கான (அதாவது ஜனவரியிலிருந்து டிசம்பர் வரை) சராசரி நுகர்வோர் விலைக்குறியீட்டினை அடிப்படையாகக் கொண்டு, ஒவ்வொராண்டும் ஏப்ரல் முதல் நாளன்று அகவிலைப்படி கணக்கிடப்படும்.

(iii) முந்தைய ஆண்டிற்கான சென்னை மாநகர நுகர்வோர் சராசரி விலைக் குறியீட்டு எண்ணை அடிப்படையாகக் கொண்டு, இந்த அறிவிக்கை தமிழ்நாடு அரசிதழில் வெளியிடப்படும் நாளிலிருந்து அகவிலைப்படியின் முதல் கணக்கீடு செயலுக்கு வரும்.

(3) பணியின் தன்மை ஒரே மாதிரியாக இருக்கும்போது, ஆண் மற்றும் பெண் பணியாளர்களுக்கு வழங்கப்படும் ஊதியத்தில் எவ்வித வேறுபாடும் இருக்கக்கூடாது.

(4) நாள் ஊதியத்தைக் கணக்கிடுவதற்கு மாதாந்திர ஊதியத்தை 26-ஆல் வகுக்க வேண்டும்.

(5) தற்போது வழங்கப்பட்டு வரும் ஊதியங்கள், இங்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள குறைந்தளவு ஊதியங்களைக் காட்டிலும் அதிகமாக இருக்குமிடங்களிலெல்லாம் அதே உயரளவு ஊதியம் தொடர்ந்து வழங்கப்பட வேண்டும்.

முகமது நசிமுத்தின்,

அரசு கூடுதல் தலைமைச் செயலாளர்.

(தமிழாக்கம்)

ந. அருள், இயக்குநர் மு.கூ.பொ), தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தி (மொழிபெயர்ப்பு)த் துறை.

தமிழ்நாடு அரசுக்காக சென்னை எழுதுபொருள் மற்றும் அச்சுத் துறை ஆணையரால்

அச்சிடப்பட்டு வெளியிடப்பட்டது.

Cite this issue. Tamil Nadu Gazette, Government of Tamil Nadu, 05 April 2023. Indian Gazettes, https://egazette.servantsofknowledge.in/details/in.gazette.tamilnadu.2023-04-05.Ordinary_14_Part-II_Section-2T-Sup./. Archive identifier in.gazette.tamilnadu.2023-04-05.Ordinary_14_Part-II_Section-2T-Sup..