Servants of Knowledge
Tamil Nadu Gazette · Government of Tamil Nadu

BILLS (TAMIL)

Published 12 April 2023

Department
TAMIL NADU LEGISLATIVE ASSEMBLY
Type
Extraordinary
Gazette no.
120
Part
Part IV
Notification no.
Bill No. 7 of 2023--The Chennai City Police (Amendment) Act, 2023
Extraordinary Type
Tamil Nadu Bills
Section
Section 1_T
Identifier
in.gazette.tamilnadu.2023-04-12.Extraordinary_120_Part-IV_Section-1_T
Languages
English, Tamil
Published at
Original source ↗

©

GOVERNMENT OF TAMIL NADU

2023

[Regd. No. TN/CCN/467/2012-14.

[R. Dis. No. 197/2009.

[Price: Rs. 2.40 Paise.

தமிழ்நாடு அரசிதழ் சிறப்பு வெளியீடு ஆணையின்படி வெளியிடப்பட்டது.

No.120A] சென்னை, புதன்கிழமை, ஏப்ரல் 12, 2023 பங்குனி 29, சுபகிருது, திருவள்ளுவர் ஆண்டு-2054

பகுதி IV—பிரிவு 1

தமிழ்நாடு சட்டமுன்வடிவுகள்

பொருளடக்கம்

பக்கங்கள் சட்டமுன்வடிவுகள்:

எண். 7/2023-சென்னை மாநகரக் காவல் (திருத்தச்) சட்டம் .. .. .. .. .. 2-4 எண். 8/2023-தொழிற்சாலைகள் (தமிழ்நாடு திருத்தச்) சட்டம் .. .. .. .. 5-6 DTP—Ex-IV-1-T(120A)

[1]2 தமிழ்நாடு அரசிதழ் சிறப்பு வெளியீடு 2023ஆம் ஆண்டு ஏப்ரல் திங்கள் 12ஆம் நாளன்று தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில்

அறிமுகப்படுத்தப்பட்ட பின்வரும் சட்டமுன்வடிவு, நோக்கக் காரண விளக்கவுரையுடன்

சேர்த்து, தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை விதிகளின் 130ஆம் விதியின் கீழ் பொதுத்

தகவலுக்காக வெளியிடப்படுகின்றது.

சட்ட மன்றப் பேர ை வ சட்டமுன்வடிவு எண். 7/2023

1888 ஆம் ஆண்டு சென்னை மாநகரக் காவல் சட்டத்தை மேலும் திருத்தம் செய்வதற்கானதொரு சட்டமுன்வடிவு.

இந்தியக் குடியரசின் எழுபத்தி நான்காம் ஆண்டில் தமிழ்நாடு மாநில

சட்டமன்றப் பேரவையால் பின்வருமாறு சட்டமியற்றப்படுவதாகுக:-

குறுந்தலைப்பு

1. (1) இந்தச் சட்டம், 2023ஆம் ஆண்டு சென்னை மாநகரக் காவல்

(திருத்தச்) சட்டம் என வழங்கப்பெறும்.

மற்றும் தொடக்கம்.

(2) இது உடனடியாக நடைமுறைக்கு வருதல் வேண்டும்.

35 ஆம்

தமிழ்நாடு சட்டம் 2. 1888ஆம் ஆண்டு சென்னை மாநகரக் காவல் சட்டத்தின் 35ஆம்

III/1888.

பிரிவில்,-

பிரிவிற்கான திருத்தம்.

(1) ஓரத் தலைப்பில், "மற்றும் உடற்பயிற்சிக் கூடம்" எனும்

சொற்றொடரானது விட்டுவிடப்படுதல் வேண்டும்;

(2) (1) ஆம் உட்பிரிவில், "அல்லது உடற்பயிற்சிக் கூடம்" எனும்

சொற்றொடர், அது காணப்படுகின்ற இரண்டு இடங்களிலும் விட்டுவிடப்படுதல்

வேண்டும்.

3 தமிழ்நாடு அரசிதழ் சிறப்பு வெளியீடு

நோக்கக் காரண விளக்கவுரை

உடற்தகுதியை பராமரிப்பதற்கு முக்கிய பயன்பாடாக, உடற்பயிற்சிக் கூடங்கள் அங்கீகரிக்கப்படக்கூடியதாகும், மக்களின் உடல்நலம் மற்றும் நலவாழ்வைக் கருத்தில் கொண்டு, உடற்பயிற்சிக் கூடங்களை எளிதாகத் தொடங்குவதற்கு வசதியாக, 2022 ஆம் ஆண்டு மே திங்கள் 5 ஆம் நாளன்று திருச்சிராப்பள்ளியில் நடைபெற்ற 39வது வர்த்தகர் தின மாநாட்டில், மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள், உடற்பயிற்சிக் கூடங்களுக்கு உரிமம் பெறுவதற்கான தேவையானது நீக்கப்படுமென அறிவித்தார். மேற்கண்ட அறிவிப்பிற்கு செயல்வடிவம் கொடுப்பதற்காக, 1888 ஆம் ஆண்டு சென்னை மாநகரக் காவல் சட்டத்தை (தமிழ்நாடு சட்டம் III/ 1888) தக்கவாறு திருத்தம் செய்வதென அரசானது முடிவு செய்துள்ளது.

2. இந்தச் சட்ட முன்வடிவானது மேற்சொன்ன முடிவிற்கு செயல்வடிவம் கொடுக்க விழைகிறது.

மு.க. ஸ்டாலின்,

முதலமைச்சர்.

கி. சீனிவாசன்,

செயலாளர்.

தலைமைச் செயலகம், சென்னை, 2023 ஏப்ரல் 12.

4 தமிழ்நாடு அரசிதழ் சிறப்பு வெளியீடு 5 தமிழ்நாடு அரசிதழ் சிறப்பு வெளியீடு

2023ஆம் ஆண்டு ஏப்ரல் திங்கள் 12ஆம் நாளன்று தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில்

அறிமுகப்படுத்தப்பட்ட பின்வரும் சட்டமுன்வடிவு, நோக்கக் காரண விளக்கவுரையுடன்

சேர்த்து, தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை விதிகளின் 130ஆம் விதியின் கீழ் பொதுத்

தகவலுக்காக வெளியிடப்படுகின்றது.

சட்டமன்றப் பேரவை சட்டமுன்வடிவு எண். 8 /2023

1948 ஆம் ஆண்டு தொழிற்சாலைகள் சட்டத்தினை தமிழ்நாடு மாநிலத்திற்குப் பொருந்தும் வகையில் மேலும் திருத்தம் செய்வதற்கானதொரு சட்டமுன்வடிவு.

இந்தியக் குடியரசின் எழுபத்தி நான்காவது ஆண்டில் தமிழ்நாடு மாநிலச்

சட்டமன்றப் பேரவையினால் பின்வருமாறு சட்டமியற்றப்படுவதாகுக:-

குறுந்தலைப்பு, 1. (1) இந்தச் சட்டம், 2023 ஆம் ஆண்டு தொழிற்சாலைகள் (தமிழ்நாடு

அளாவுகை திருத்தச்) சட்டம் என வழங்கப்பெறும்.

மற்றும் (2) இது, தமிழ்நாடு மாநிலம் முழுவதையும் அளாவி நிற்கும்.

தொடக்கம்.

(3) இது உடனடியாக நடைமுறைக்கு வருதல் வேண்டும்.

மையச் சட்டம்

65-A எனும் புதிய 2. 1948 ஆம் ஆண்டு தொழிற்சாலைகள் சட்டத்தின் 65 ஆம் பிரிவிற்குப்

LXIII/1948.

பிரிவினை பின்பு, பின்வரும் பிரிவானது உட்புகுத்தப்படுதல் வேண்டும், அதாவது:-

உட்புகுத்துதல்.

"65-A. சிறப்பு நேர்வுகளில் விலக்களிப்பதற்கான அதிகாரம்.- 64 ஆம் பிரிவு அல்லது 65 ஆம் பிரிவில் அடங்கியது எவ்வாறிருப்பினும், மாநில அரசானது, அதிகாரபூர்வமான அரசிதழில் அறிவிக்கையின் வாயிலாக, அத்தகைய நிபந்தனைகள் மற்றும் வரையறைகள் ஏதேனுமிருப்பின், அவற்றிற்குட்பட்டு, இந்தச் சட்டத்தின் 51, 52, 54, 55, 56 அல்லது 59 ஆம் பிரிவுகளின் வகைமுறைகள் அல்லது அதன்கீழ் செய்யப்பட்ட விதிகள் அனைத்திலிருந்தும், அல்லது எவற்றிலிருந்தும், தொழிற்சாலை அல்லது தொழிற்சாலைகளின் குழு அல்லது வகை அல்லது விவரிப்பு எதற்கும், அறிவிக்கையில் குறிப்பிடப்படலாகும் அத்தகைய காலத்திற்கு அல்லது காலங்களுக்கு விலக்களிக்கலாம்.".

6 தமிழ்நாடு அரசிதழ் சிறப்பு வெளியீடு

நோக்கக் காரண விளக்கவுரை.

2020 ஆம் ஆண்டு தொழிலகப் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் பணி நிலைமைகள் தொகுப்புச் (மையச் சட்டம் 37/2020) சட்டமானது 2020 ஆம் ஆண்டு செப்டம்பர் திங்களில் இந்திய அரசால் இயற்றப்பட்டது. இச்சட்டம் இந்திய அரசினால் அறிவிக்கையின் மூலம் நடைமுறைக்கு கொண்டு வரப்படவிருக்கிறது. கூறப்பட்ட தொகுப்புச் சட்டமானது, தொழிலாளர்களின் தொழில், பாதுகாப்பு, உடல்நலம் மற்றும் பணி நிலைமைகள் தொடர்புடைய 1948 ஆம் ஆண்டு தொழிற்சாலைகள் சட்டம் (மையச் சட்டம் 63/1948) உள்ளடங்கலான 13 மைய தொழிலாளர் சட்டங்களை உள்ளடக்கியதாகும்.

2. தமிழ்நாடு பெரிய உற்பத்தி நிறுவனங்களின் மையமாக விளங்குகிறது மற்றும் இது நாட்டிலேயே அதிக எண்ணிக்கையிலான தொழிற்சாலைகளையும் தொழில்சார் தொழிலாளர்களையும் கொண்டுள்ளது. வேலை நேர சீர்திருத்தங்களைக் கொண்டு வருவதற்காக, எளிதில் பின்பற்றுகிற வேலை நேரங்களுக்கு சட்டப்பூர்வ வழிவகைகளை உருவாக்குவதன் மூலம், தொழிலாளர்களுக்கு, குறிப்பாக, பெண் பணியாளர்கள், தொழிலகம் மற்றும் ஒட்டுமொத்த பொருளாதாரம் ஆகியவற்றிற்கு கொண்டு வரக்கூடிய நன்மைகளின் எண்ணிக்கையை மேற்கோள் காட்டி, பல்வேறு தொழிலகங்கள் மற்றும் தொழில்துறை சங்கங்களிடமிருந்து விண்ணப்பங்களானது மாநில அரசால் பெறப்படுகிறது. கூறப்பட்ட மையத் தொகுப்புச் சட்டத்தின் 127 ஆம் பிரிவானது, தொழிற்சாலை அல்லது தொழிற்சாலைகளின் வகைகள் எதற்கும் தொடர்புடையதும், அத்தகைய வரையறைகள் மற்றும் கட்டுப்பாடுகளுக்குட்பட்டும், அது பொருத்தமெனக் கருதலாகும் அத்தகைய காலத்திற்கும், ஓய்வு இடைவெளிகளை உள்ளடக்கிய கூடுதல் நேரம் மற்றும் நீட்டிக்கப்பட்ட நேரங்கள் உட்பட, எளிதில் பின்பற்றுகிற வேலை செய்யும் நேரங்களை அறிவிக்கையின் மூலம் வழங்குவதற்கு மற்றவற்றுக்கிடையில், மாநில அரசினை இயலச் செய்கிறது. கூறப்பட்ட மைய தொகுப்புச் சட்டம் இந்திய அரசால் இதுவரை நடைமுறைக்கு கொண்டு வரப்படாத நிலையில் தொழிலாளர்கள் மற்றும் தொழிலகங்களின் நலன் கருதி தொழிற்சாலைகளில் எளிதில் பின்பற்றுகிற வேலை செய்யும் நேரத்தினை வழங்கும் நோக்கத்துடன் இம்மாநிலத்திற்கு பொருந்தும் வகையில் 1948 ஆம் ஆண்டு தொழிற்சாலைகள் சட்டத்தினை (மையச் சட்டம் 63/1948) திருத்தம் செய்வதென மாநில அரசு முடிவு செய்துள்ளது.

3. இந்தச் சட்டமுன்வடிவானது மேற்சொன்ன முடிவிற்கு செயல் வடிவம் கொடுக்க விழைகிறது.

சி.வி. கணேசன், தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர்.

கி. சீனிவாசன்,

செயலாளர்.

தலைமைச் செயலகம், சென்னை, 2023 ஏப்ரல் 12.

தமிழ்நாடு அரசுக்காக சென்னை எழுதுபொருள் மற்றும் அச்சுத் துறை இயக்குநரால்

அச்சிடப்பட்டு வெளியிடப்பட்டது.

Cite this issue. Tamil Nadu Gazette, Government of Tamil Nadu, 12 April 2023. Indian Gazettes, https://egazette.servantsofknowledge.in/details/in.gazette.tamilnadu.2023-04-12.Extraordinary_120_Part-IV_Section-1_T/. Archive identifier in.gazette.tamilnadu.2023-04-12.Extraordinary_120_Part-IV_Section-1_T.