©
GOVERNMENT OF TAMIL NADU
2023
[Regd. No. TN/CCN/467/2012-14.
[R. Dis. No. 197/2009.
[Price: Rs. 2.40 Paise.
| தமிழ்நாடு அரசிதழ் சிறப்பு வெளியீடு ஆணையின்படி வெளியிடப்பட்டது. | ||
No. 129A] சென்னை, திங்கட்கிழமை, ஏப்ரல் 17, 2023 சித்திரை 4, சோபகிருது, திருவள்ளுவர் ஆண்டு-2054
பகுதி IV—பிரிவு 1
தமிழ்நாடு சட்டமுன்வடிவுகள்
2023ஆம் ஆண்டு ஏப்ரல் திங்கள் 17ஆம் நாளன்று தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் அறிமுகப்படுத்தப்பட்ட பின்வரும் சட்டமுன்வடிவு, நோக்கக் காரண விளக்கவுரையுடன் சேர்த்து, தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை விதிகளின் 130ஆம் விதியின் கீழ் பொதுத் தகவலுக்காக வெளியிடப்படுகின்றது.
சட்டமன்றப் பேரவை சட்டமுன்வடிவு எண். 10/2023
1899ஆம் ஆண்டு இந்திய முத்திரைச் சட்டத்தை தமிழ்நாடு மாநிலத்திற்கு பொருந்தும் வகையில், மேலும் திருத்தம் செய்வதற்கானதொரு சட்டமுன்வடிவு.
இந்தியக் குடியரசின் எழுபத்தி நான்காம் ஆண்டில் தமிழ்நாடு மாநிலச் சட்டமன்றப் பேரவையினால் பின்வருமாறு சட்டமியற்றப்படுவதாகுக:-
குறுந்தலைப்பு, 1. (1) இந்தச் சட்டம், 2023ஆம் ஆண்டு இந்திய முத்திரைச்
தொடக்கம் (தமிழ்நாடு திருத்த) சட்டம் என வழங்கப்பெறும்.
மற்றும்
அளாவுகை (2) இது தமிழ்நாடு மாநிலம் முழுவதும் அளாவி நிற்கும்.
(3) இது உடனடியாக நடைமுறைக்கு வருதல் வேண்டும்.
மையச் சட்டம்
Iஆம் இணைப்புப் 2. 1899-ஆம் ஆண்டு இந்திய முத்திரைச் சட்டத்தின் II/1899.
பட்டியலிற்கான I-ஆம் இணைப்புப் பட்டியலில்,-
திருத்தம்.
(1) 3-ஆம் உறுப்பில், "நூறு ரூபாய்" எனும் சொற்றொடருக்கு பதிலாக, "ஆயிரம் ரூபாய்" எனும் சொற்றொடரானது அமைக்கப்படுதல் வேண்டும்;
(2) 4-ஆம் உறுப்பில், "இருபது ரூபாய்" எனும் சொற்றொடருக்கு பதிலாக, "இருநூறு ரூபாய்" எனும் சொற்றொடரானது அமைக்கப்படுதல் வேண்டும்;
(3) 5-ஆம் உறுப்பின், கூறு (j)-ல், "இருபது ரூபாய்" எனும் சொற்றொடருக்கு பதிலாக, "இருநூறு ரூபாய்" எனும் சொற்றொடரானது அமைக்கப்படுதல் வேண்டும்;
[1]
DTP—Ex-IV-1-T(129A)2 தமிழ்நாடு அரசிதழ் சிறப்பு வெளியீடு (4) 10-ஆம் உறுப்பிற்கு பதிலாக, பின்வரும் உறுப்பானது அமைக்கப்படுதல் வேண்டும், அதாவது:-
"10. நிறுமம் ஒன்றின் சங்க
அமைப்பு விதிகளுக்கு
ஐந்து இலட்சம் ரூபாய் பெரும அளவு ஒன்றுக்கு உட்பட்ட பங்கு முதலீட்டின் ஒவ்வொரு பத்து இலட்சம் ரூபாய்க்கு அல்லது அதனின் பகுதிக்கு ஐந்நூறு ரூபாய்.
விலக்களிப்பு.- ஆதாயத்திற்காக உருவாக்கப்படாத மற்றும் 2013-ஆம் ஆண்டு நிறுமங்கள் சட்டத்தின்படி (மையச் சட்டம் 18/2013) பதிவு செய்யப்பட்ட சங்க அமைப்பு எதனின் விதிகள்.";
(5) 17-ஆம் உறுப்பில்,-
(a) "சான்றொப்பமிடப்பட்டிருக்குமாயின்" எனும் சொற்றொடருக்குப் பின்பு "இது சொத்து பரிமாற்றத்தை உள்ளடக்கி இருப்பினும் அல்லது இல்லாவிடினும்" எனும் சொற்றொடரானது உட்புகுத்தப்படுதல் வேண்டும்;
(b) "ஐம்பது ரூபாய்" எனும் சொற்றொடருக்கு பதிலாக, "ஆயிரம் ரூபாய்" எனும் சொற்றொடரானது அமைக்கப்படுதல் வேண்டும்;
(6) 24-ஆம் உறுப்பில்,-
(a) கூறு (i)-ல், "ஐந்து ரூபாய்" எனும் சொற்றொடருக்கு பதிலாக, "நூறு ரூபாய்" எனும் சொற்றொடரானது அமைக்கப்படுதல் வேண்டும்;
(b) கூறு (ii)-ல், "இருபது ரூபாய்" எனும் சொற்றொடருக்கு பதிலாக, "நூறு ரூபாய்" எனும் சொற்றொடரானது அமைக்கப்படுதல் வேண்டும்;
(7) 25-ஆம் உறுப்பின், கூறு (b)-ல், "இருபது ரூபாய்" எனும் சொற்றொடருக்கு பதிலாக, "ஐந்நூறு ரூபாய்" எனும் சொற்றொடரானது அமைக்கப்படுதல் வேண்டும்;
(8) 35-ஆம் உறுப்பில், கூறுகள் (a), (b) மற்றும் (c) ஆகியவற்றில், "அல்லது செலுத்தத்தக்க, முன் பணம் ஏதேனும் இருப்பின்" எனும் சொற்றொடருக்கு பதிலாக, "திரும்பச் செலுத்தத்தக்க அல்லது செலுத்த இயலாத முன் பணம் அல்லது வைப்புத்தொகை" எனும் சொற்றொடரானது அமைக்கப்படுதல் வேண்டும்;
(9) 39-ஆம் உறுப்பிற்கு பதிலாக, பின்வரும் உறுப்பானது அமைக்கப்படுதல் வேண்டும், அதாவது:-
"39. நிறுமம் ஒன்றின் சங்க அமைப்பாவணம் இருநூறு ரூபாய்.
விலக்களிப்பு.- ஆதாயத்திற்காக உருவாக்கப்படாத மற்றும் 2013-ஆம் ஆண்டு நிறுமங்கள் சட்டத்தின்படி (மையச் சட்டம் 18/2013) பதிவு செய்யப்பட்ட சங்க அமைப்பு எதனின் அமைப்பாவணம்.";
(10) 42-ஆம் உறுப்பில், "பத்து ரூபாய்" எனும் சொற்றொடருக்கு பதிலாக, "இருபது ரூபாய்" எனும் சொற்றொடரானது அமைக்கப்படுதல் வேண்டும்;
(11) 45-ஆம் உறுப்பில்,-
(a) கூறு (b)-ல், "தொகையின் மதிப்பு" எனும் சொற்றொடருக்கு பதிலாக, "தொகையின் சந்தை மதிப்பு" எனும் சொற்றொடரானது அமைக்கப்படுதல் வேண்டும்;
(b) விளக்கத்தில், பின்வரும் சொற்றொடரானது இறுதியாக சேர்க்கப்படுதல் வேண்டும், அதாவது:-
"மற்றும் ஓர் இறந்த குடும்ப உறுப்பினரின் சட்டப்பூர்வ வாரிசுகள் எவரேனும் இருந்தால், அவர்களையும் உள்ளடக்குதல் வேண்டும்.";
3 தமிழ்நாடு அரசிதழ் சிறப்பு வெளியீடு(12) 46-ஆம் உறுப்பில்,-
(a) கூறு A-ன், உட்கூறு (b)-ல், "முந்நூறு ரூபாய்" எனும் சொற்றொடருக்கு பதிலாக, "ஆயிரம் ரூபாய்" எனும் சொற்றொடரானது அமைக்கப்படுதல் வேண்டும்;
(b) கூறு B-ன், விளக்கத்தில், பின்வரும் சொற்றொடரானது இறுதியாக சேர்க்கப்படுதல் வேண்டும், அதாவது:-
"மற்றும் ஓர் இறந்த குடும்ப உறுப்பினரின் சட்டப்பூர்வ வாரிசுகள் எவரேனும் இருந்தால், அவர்களையும் உள்ளடக்குதல் வேண்டும்.";
(13) 48-ஆம் உறுப்பில்,-
(a) கூறு (a)-ல், "ஐந்து ரூபாய்" எனும் சொற்றொடருக்கு பதிலாக, "ஐந்நூறு ரூபாய்" எனும் சொற்றொடரானது அமைக்கப்படுதல் வேண்டும்;
(b) கூறு (b)-ல், "பதினைந்து ரூபாய்" எனும் சொற்றொடருக்கு பதிலாக, "ஐந்நூறு ரூபாய்" எனும் சொற்றொடரானது அமைக்கப்படுதல் வேண்டும்;
(c) கூறு (c)-ல், "நூறு ரூபாய்" எனும் சொற்றொடருக்கு பதிலாக, "ஆயிரம் ரூபாய்" எனும் சொற்றொடரானது அமைக்கப்படுதல் வேண்டும்;
(d) கூறு (d)-ல், "நூற்று எழுபத்தைந்து ரூபாய்" எனும் சொற்றொடருக்கு பதிலாக, "ஆயிரம் ரூபாய்" எனும் சொற்றொடரானது அமைக்கப்படுதல் வேண்டும்;
(e) கூறு (e)-ல், "மறுபயன் தொகைக்குச் சமமான சந்தை மதிப்பு" எனும் சொற்றொடருக்கு பதிலாக, "அசையா சொத்தின் சந்தை மதிப்பு" எனும் சொற்றொடரானது அமைக்கப்படுதல் வேண்டும்;
(f) கூறு (f)-ற்கு பதிலாக, பின்வரும் கூறுகளானவை அமைக்கப்படுதல் வேண்டும், அதாவது:-
ஆயிரம் ரூபாய்.
"(f) மறுபயனில்லாமல் வழங்கப்பட்டு, அசையாச் சொத்து எதனையும் விற்பனை செய்வதற்கு, குடும்ப உறுப்பினராக உள்ள பகராள் ஒருவருக்கு, அதிகாரம் அளிக்கப்பட்டிருக்கும் போது.
அசையாச் சொத்தின் சந்தை மதிப்பின் ஒவ்வொரு நூறு ரூபாய்க்கு அல்லது அதனின் பகுதிக்கு ஒரு ரூபாய்.
(g) மறுபயனில்லாமல் வழங்கப்பட்டு, அசையாச் சொத்து எதனையும் விற்பனை செய்வதற்கு, குடும்ப உறுப்பினராக அல்லாத பகராள் ஒருவருக்கு, அதிகாரம் அளிக்கப்பட்டிருக்கும் போது.
(h) பிற நேர்வு எதிலும். அங்கீகரிக்கப்பட்ட நபர் ஒவ்வொருவருக்கும்
ஆயிரம் ரூபாய்.";
(g) தற்போதுள்ள விளக்கமானது, விளக்கம்-I என மறுஎண்ணிடப்படுதல் வேண்டும், மற்றும் அவ்வாறு மறுஎண்ணிடப்பட்ட விளக்கம்-I-ற்குப் பின்பு, பின்வரும் விளக்கமானது சேர்க்கப்படுதல் வேண்டும், அதாவது:-
4 தமிழ்நாடு அரசிதழ் சிறப்பு வெளியீடு"விளக்கம்-II.- இந்த உறுப்பின் நோக்கத்திற்காக, "குடும்பம்" என்ற சொல்லானது 58-ஆம் உறுப்பிற்கான விளக்கத்தில் வரையறுக்கப்பட்டுள்ளவாறான அதே பொருளைக் கொண்டிருத்தல் வேண்டும்.";
(14) 54-ஆம் உறுப்பின், கூறு (b)-ல்,-
(a) உட்கூறு (i)-ல், "எண்பது ரூபாய்" எனும் சொற்றொடருக்கு பதிலாக,
"ஆயிரம் ரூபாய்" எனும் சொற்றொடரானது அமைக்கப்படுதல் வேண்டும்;
(b) உட்கூறு (ii)-ல், "எழுபது ரூபாய்" எனும் சொற்றொடருக்கு பதிலாக,
"ஆயிரம் ரூபாய்" எனும் சொற்றொடரானது அமைக்கப்படுதல் வேண்டும்;
(15) 55-ஆம் உறுப்பின் விளக்கத்தில், பின்வரும் சொற்றொடரானது இறுதியாக
சேர்க்கப்படுதல் வேண்டும், அதாவது:-
"மற்றும் ஓர் இறந்த குடும்ப உறுப்பினரின் சட்டப்பூர்வ வாரிசுகள் எவரேனும்
இருந்தால், அவர்களையும் உள்ளடக்குதல் வேண்டும்.";
(16) 57-ஆம் உறுப்பின், கூறு (b)-ல், "எண்பது ரூபாய்" எனும் சொற்றொடருக்கு
பதிலாக, "ஐந்நூறு ரூபாய்" எனும் சொற்றொடரானது அமைக்கப்படுதல் வேண்டும்;
(17) 58-ஆம் உறுப்பின், கூறு (b)-ல், "எண்பது ரூபாய்" எனும் சொற்றொடருக்கு
பதிலாக, "ஆயிரம் ரூபாய்" எனும் சொற்றொடரானது அமைக்கப்படுதல் வேண்டும்;
(18) 61-ஆம் உறுப்பின், கூறு (b)-ல், "நாற்பது ரூபாய்" எனும் சொற்றொடருக்கு
பதிலாக, "ஆயிரம் ரூபாய்" எனும் சொற்றொடரானது அமைக்கப்படுதல் வேண்டும்;
(19) 62-ஆம் உறுப்பின், கூறு (e)-ற்கு பதிலாக, பின்வரும் கூறானது
அமைக்கப்படுதல் வேண்டும், அதாவது:-
"(e) அறக்கட்டளையாளர் ஒருவரிடமிருந்து ஆயிரம் ரூபாய் அல்லது இந்த உறுப்பின் கூறு (c)-ன்படி வசூலிக்கப்படலாகும் அத்தகைய சிறிய தொகை."
மற்றொரு அறக்கட்டளையாளருக்கு அல்லது அறக்கட்டளையாளர் ஒருவரிடமிருந்து அதே அறக்கட்டளையின் பயனாளி ஒருவருக்கு மாற்றப்படும் அறக்கட்டளையின் சொத்து எதுவும்.
(20) 64-ஆம் உறுப்பின்,-
(i) கூறு (a)-ல், "நூற்று எண்பது ரூபாய்" எனும் சொற்றொடருக்கு
பதிலாக, "ஆயிரம் ரூபாய்" எனும் சொற்றொடரானது அமைக்கப்படுதல் வேண்டும்;
(ii) கூறு (b)-ல், "நூற்று இருபது ரூபாய்" எனும் சொற்றொடருக்கு
பதிலாக, "ஆயிரம் ரூபாய்" எனும் சொற்றொடரானது அமைக்கப்படுதல் வேண்டும்.
5 தமிழ்நாடு அரசிதழ் சிறப்பு வெளியீடுநோக்கக் காரண விளக்கவுரை.
1899-ஆம் ஆண்டு இந்திய முத்திரைச் சட்டத்தின் (மையச் சட்டம் II/1899) I-ஆம் இணைப்புப் பட்டியலில் குறிப்பிடப்பட்ட வீதத்தில் ஆவணங்களுக்கான முத்திரைத் தீர்வையானது விதிக்கப்படுகிறது. சில முறையாவணங்களுக்கு நிர்ணய விலை மதிப்பீட்டின் பேரிலும், சில முறையாவணங்களுக்கு நிர்ணய அடிப்படையின் பேரிலும் கட்டணமானது விதிக்கப்படுகிறது. 2001-ஆம் ஆண்டிலிருந்து பெரும்பாலான ஆவணங்களுக்கான முத்திரைத் தீர்வை வீதமானது மாற்றியமைக்கப்படவில்லை. அதன்பிறகு, நீதித்துறை அல்லாத அச்சிடப்பட்ட முத்திரைத் தாள்களை அச்சிடுவதற்கான செலவு பன்மடங்காக அதிகரித்துள்ளது. எனவே, 1899-ஆம் ஆண்டு மையச் சட்டத்தின் I-ஆம் இணைப்புப் பட்டியலை தக்கவாறு திருத்தம் செய்வதன் மூலம் சில முறையாவணங்களுக்கான முத்திரைத் தீர்வை வீதத்தை மாற்றியமைப்பதென அரசானது முடிவு செய்துள்ளது.
2. இந்தச் சட்டமுன்வடிவானது மேற்சொன்ன முடிவிற்குச் செயல்வடிவம் கொடுக்க விழைகிறது.
பி. மூர்த்தி, வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர்.
கி. சீனிவாசன்,
செயலாளர்.
தலைமைச் செயலகம், சென்னை, 2023 ஏப்ரல் 17.
தமிழ்நாடு அரசுக்காக சென்னை எழுதுபொருள் மற்றும் அச்சுத் துறை இயக்குநரால்
அச்சிடப்பட்டு வெளியிடப்பட்டது.