Servants of Knowledge
Tamil Nadu Gazette · Government of Tamil Nadu

BILLS No. 11 of 2023 and No. 12 of 2023 (Tamil)

Published 18 April 2023

Type
Extraordinary
Gazette no.
130
Part
Part IV
Extraordinary Type
Tamil Nadu Bills
Section
Section 1
Identifier
in.gazette.tamilnadu.2023-04-18.Extraordinary_130_Part-IV_Section-1
Languages
English, Tamil
Published at
Original source ↗

©

GOVERNMENT OF TAMIL NADU 2023

[Regd. No. TN/CCN/467/2012-14.

[R. Dis. No. 197/2009.

[Price: Rs. 6.40 Paise.

தமிழ்நாடு அரசிதழ் சிறப்பு வெளியீடு ஆணையின்படி வெளியிடப்பட்டது.

No. 130A] சென்னை, செவ்வாய்க்கிழமை, ஏப்ரல் 18, 2023 சித்திரை 5, சோபகிருது, திருவள்ளுவர் ஆண்டு-2054

பகுதி IV—பிரிவு 1

தமிழ்நாடு சட்டமுன்வடிவுகள்தமிழ்நாடு சட்டமுன்வடிவுகள்

பொருளடக்கம்பொருளடக்கம்

பக்கங்கள் சட்டமுன்வடிவுகள்:சட்டமுன்வடிவுகள்:

எண். 11/2023-தமிழ்நாடு சரக்குகள் மற்றும் சேவைகள் வரி (திருத்த) திருத்தச் சட்டம் .. 2-4 எண். 12/2023-தமிழ்நாடு சரக்குகள் மற்றும் சேவைகள் வரி (திருத்தச்) சட்டம் .. .. .. .. 5-15 DTP—Ex-IV-1-T(130A)

[1]2 தமிழ்நாடு அரசிதழ் சிறப்பு வெளியீடு 2023ஆம் ஆண்டு ஏப்ரல் திங்கள் 18-ஆம் நாளன்று தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில்

அறிமுகப்படுத்தப்பட்ட பின்வரும் சட்டமுன்வடிவு, நோக்கக் காரண விளக்கவுரையுடன்

சேர்த்து, தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை விதிகளின் 130-ஆம் விதியின் கீழ் பொதுத்

தகவலுக்காக வெளியிடப்படுகின்றது.

சட்டமன்றப் பேரவை சட்டமுன்வடிவு எண். 11//20232023

சட்டமன்றப் பேரவை சட்டமுன்வடிவு எண். 11

2019-ஆம் ஆண்டு தமிழ்நாடு சரக்குகள் மற்றும் சேவைகள் வரி (திருத்தச்) 2019-ஆம் ஆண்டு தமிழ்நாடு சரக்குகள் மற்றும் சேவைகள் வரி (திருத்தச்) சட்டத்தை திருத்தம் செய்வதற்கானதொரு சட்டமுன்வடிவு. சட்டத்தை திருத்தம் செய்வதற்கானதொரு சட்டமுன்வடிவு.

இந்தியக் குடியரசின் எழுபத்தி நான்காம் ஆண்டில் தமிழ்நாடு மாநிலச்

சட்டமன்றப் பேரவையால் பின்வருமாறு சட்டமியற்றப்படுவதாகுக:

குறுந்தலைப்பு

1. (1) இந்தச் சட்டம், 2023-ஆம் ஆண்டு தமிழ்நாடு சரக்குகள் மற்றும்

மற்றும்

சேவைகள் வரி (திருத்த) திருத்தச் சட்டம் என வழங்கப்பெறும்.

தொடக்கம்.

(2) இது உடனடியாக நடைமுறைக்கு வருதல் வேண்டும்.

8-ஆம் பிரிவின்

திருத்தம்.

தமிழ்நாடு சட்டம் 2. (இதன் பின்பு இதில் திருத்தச் சட்டம் எனக் குறிப்பிடப்படுவதான) 2019-ஆம் ஆண்டு தமிழ்நாடு சரக்குகள் மற்றும் சேவைகள் வரி (திருத்தச்) சட்டத்தின் 8-ஆம் பிரிவில், (2)-ஆம் கூறானது விட்டுவிடப்படுதல் வேண்டும். 3/2019. 18-ஆம் பிரிவை

3. திருத்தச் சட்டத்தின் 18-ஆம் பிரிவானது விட்டுவிடப்படுதல் வேண்டும்.

விட்டுவிடுதல்.

20-ஆம் பிரிவின்

4. திருத்தச் சட்டத்தின் 20-ஆம் பிரிவில், (1)-ஆம் கூறானது

திருத்தம்.

விட்டுவிடப்படுதல் வேண்டும்.

தமிழ்நாடு அரசிதழ் சிறப்பு வெளியீடு 3

நோக்கக் காரண விளக்கவுரை.நோக்கக் காரண விளக்கவுரை.

அறிக்கையை அளிப்பதற்கும் உள்ளீட்டு வரிவரவினை பெறுவதற்கும் ஒரு புதிய முறையை வழங்குவதற்காக, 2017-ஆம் ஆண்டு தமிழ்நாடு சரக்குகள் மற்றும் சேவைகள் வரிச் சட்டத்தில் (தமிழ்நாடு சட்டம் 19/2017) 43A-ஆம் பிரிவானது, 2019-ஆம் ஆண்டு தமிழ்நாடு சரக்குகள் மற்றும் சேவைகள் வரி (திருத்தச்) சட்டத்தின் மூலம் சேர்க்கப்பட்டது (தமிழ்நாடு சட்டம் 3/2019). கூறப்பட்ட 43A-ஆம் பிரிவானது இதுவரை நடைமுறைக்கு வரவில்லை.

2. அக்டோபர் 5, 2020 அன்று நடைபெற்ற சரக்குகள் மற்றும் சேவைகள் வரி மன்றத்தின் 42-வது கூட்டத்தில், GSTR-1/2/3 என்ற அறிக்கை தாக்கல் முறையை, தற்போது செயல்படும் GSTR-1/3B முறைக்கு நிரந்தரமாக மாற்றுமாறு பரிந்துரைத்துள்ளது. கூறப்பட்ட பரிந்துரைக்கு செயல்வடிவம் கொடுப்பதற்கு, 2017-ஆம் ஆண்டு மத்திய சரக்குகள் மற்றும் சேவைகள் வரிச் சட்டமானது (மத்தியச் சட்டம் 12/2017), 2022-ஆம் ஆண்டு நிதிச் சட்டத்தின் (மத்தியச் சட்டம் 6/2022) மூலம் திருத்தப்பட்டது. தொடர்புடைய திருத்தங்களை நிறைவேற்ற, 2019-ஆம் ஆண்டு தமிழ்நாடு சரக்குகள் மற்றும் சேவைகள் வரி (திருத்தச்) சட்டத்தை (தமிழ்நாடு சட்டம் 3/2019) தக்கவாறு திருத்தம் செய்யவதென அரசு முடிவு செய்துள்ளது.

3. இந்தச் சட்டமுன்வடிவானது, மேற்சொன்ன முடிவிற்கு செயல்வடிவம் கொடுக்க விழைகிறது.

பி. மூர்த்திபி. மூர்த்தி வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர்.

கி. சீனிவாசன், செயலாளர்.

தலைமைச் செயலகம், சென்னை, 2023 ஏப்ரல் 18.

4 தமிழ்நாடு அரசிதழ் சிறப்பு வெளியீடு தமிழ்நாடு அரசிதழ் சிறப்பு வெளியீடு 5

2023ஆம் ஆண்டு ஏப்ரல் திங்கள் 18-ஆம் நாளன்று தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில்

அறிமுகப்படுத்தப்பட்ட பின்வரும் சட்டமுன்வடிவு, நோக்கக் காரண விளக்கவுரையுடன்

சேர்த்து, தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை விதிகளின் 130-ஆம் விதியின் கீழ் பொதுத்

தகவலுக்காக வெளியிடப்படுகின்றது.

சட்டமன்றப் பேரவை சட்டமுன்வடிவு எண். 12//20232023

சட்டமன்றப் பேரவை சட்டமுன்வடிவு எண். 12

2017-ஆம் ஆண்டு தமிழ்நாடு2017-ஆம் ஆண்டு தமிழ்நாடு சரக்குகள் மற்றும் சேவைகள் சரக்குகள் மற்றும் சேவைகள்

வரிச்சட்டத்தினை மேலும் திருத்தம் செய்வதற்கானதொரு சட்டமுன்வசட்டமுன்வடிவு.டிவு. வரிச்சட்டத்தினை மேலும் திருத்தம் செய்வதற்கானதொரு

இந்தியக் குடியரசின் எழுபத்தி நான்காம் ஆண்டில் தமிழ்நாடு மாநிலச்

சட்டமன்றப் பேரவையினால் பின்வருமாறு சட்டமியற்றப்படுவதாகுக:

குறுந்தலைப்பு மற்றும் 1. (1) இந்தச் சட்டம், 2023-ஆம் ஆண்டு தமிழ்நாடு சரக்குகள் மற்றும்

தொடக்கம்.

சேவைகள் வரி (திருத்தச்) சட்டம் என வழங்கப்பெறும்.

(2) இந்தச் சட்டத்தில் வேறுவிதமாக வகை செய்யப்பட்டவாறல்லாமல், 2 முதல் 12, 14 மற்றும் 15-ஆம் பிரிவுகள் 2022-ஆம் ஆண்டு அக்டோபர் திங்கள் 1-ஆம் நாளன்று நடைமுறைக்கு வந்துவிட்டிருப்பதாகக் கொள்ளப்படுதல் வேண்டும்.

16-ஆம் பிரிவின் தமிழ்நாடு சட்டம்

திருத்தம். 19/2017.

2. (இதன் பின்பு இதில் முதன்மைச் சட்டம் எனக் குறிப்பிடப்படுவதான) 2017-ஆம் ஆண்டு தமிழ்நாடு சரக்குகள் மற்றும் சேவைகள் வரிச் சட்டத்தின் 16-ஆம் பிரிவில்,

(1) (2)-ஆம் உட்பிரிவில், (b)-ஆம் கூறிற்கு பின்பு, பின்வரும் கூறானது

உட்புகுத்தப்படுதல் வேண்டும், அதாவது:

(bb) 38-ஆம் பிரிவின் கீழ் அத்தகைய பதிவுபெற்ற நபருக்கு தெரிவிக்கப்பட்ட வழங்குகை தொடர்பான உள்ளீட்டு வரிவரவின் விவரங்களை கட்டுப்படுத்தப்படாமல் இருத்தல்;.

(2) (4)-ஆம் உட்பிரிவில், செப்டம்பர் மாதத்திற்கான 39-ஆம் பிரிவின் கீழ் அறிக்கை அளிப்பதற்கான உரிய தேதி எனும் சொற்றொடருக்காக, நவம்பர் முப்பதாம் நாள் எனும் சொற்றொடரானது மாற்றாக அமைக்கப்படுதல் வேண்டும்.

3. முதன்மைச் சட்டத்தின் 29-ஆம் பிரிவில், (2)-ஆம் உட்பிரிவில், 29-ஆம் பிரிவின்

திருத்தம்.

(1) (b)-ஆம் கூறில், தொடர்ச்சியாக மூன்று வரி காலங்களுக்கு அறிக்கைகள் எனும் சொற்றொடருக்காக, கூறப்பட்ட அறிக்கையினை அளிப்பதற்கான உரிய தேதியிலிருந்து மூன்று மாதங்கள் கடந்து ஒரு நிதியாண்டிற்கான அறிக்கை எனும் சொற்றொடரானது மாற்றாக அமைக்கப்படுதல் வேண்டும்;

(2) (c)-ஆம் கூறில், தொடர்ச்சியாக ஆறு மாதங்கள் கால அளவு எனும் சொற்றொடருக்காக வகுத்துரைக்கப்படலாகும் அத்தகைய தொடர்ச்சியான வரி கால அளவு எனும் சொற்றொடரானது மாற்றாக அமைக்கப்படுதல் வேண்டும்.

34-ஆம் பிரிவின்

திருத்தம்.

4. முதன்மைச் சட்டத்தின் 34-ஆம் பிரிவில், (2)-ஆம் உட்பிரிவில், செப்டம்பர் எனும் சொற்றொடருக்காக, நவம்பர் முப்பதாம் நாள் எனும் சொற்றொடரானது மாற்றாக அமைக்கப்படுதல் வேண்டும்.

5. முதன்மைச் சட்டத்தின் 37-ஆம் பிரிவில், 37-ஆம் பிரிவின்

திருத்தம்.

(1) (1)-ஆம் உட்பிரிவில்,-

(a) மின்னணுவில் அளித்தல் எனும் சொற்றொடருக்கு பின்பு, அத்தகைய நிபந்தனைகள் மற்றும் வரையறைகளுக்குட்பட்டு மற்றும் எனும் சொற்றொடரானது உட்புகுத்தப்படுதல் வேண்டும்;

6 தமிழ்நாடு அரசிதழ் சிறப்பு வெளியீடு

(b) வகுத்துரைக்கப்படலாகும் அத்தகைய காலத்திற்குள்ளும் மற்றும் அத்தகைய முறையிலும் மேற்சொன்ன வழங்குகைகளைப் பெறுபவருக்குத் தெரிவிக்கப்படுதல் வேண்டும் எனும் சொற்றொடருக்காக, அத்தகைய நிபந்தனைகள் மற்றும் வரையறைகளுக்குப்பட்டு, வகுத்துரைக்கப்படலாகும் அத்தகைய முறையிலும் அத்தகைய காலத்திற்குள்ளும் கூறப்பட்ட வழங்குகைகளைப் பெறுபவருக்குத் தெரிவிக்கப்படுதல் வேண்டும் எனும் சொற்றொடரானது மாற்றாக அமைக்கப்படுதல் வேண்டும்;

(c) முதலாம் வரம்புரையானது விட்டுவிடப்படுதல் வேண்டும்;

(d) இரண்டாம் வரம்புரையில், மேலும் வரம்புரையாக எனும் சொற்றொடருக்காக, வரம்புரையாக எனும் சொற்றொடரானது மாற்றாக அமைக்கப்படுதல் வேண்டும்;

(e) மூன்றாம் வரம்புரையில் மேலும் வரம்புரை எனும் சொற்றொடருக்காக, மேலும் வரம்புரையாக எனும் சொற்றொடரானது மாற்றாக அமைக்கப்படுதல் வேண்டும்;

(2) (2)-ஆம் உட்பிரிவானது விட்டுவிடப்படுதல் வேண்டும்;

(3) (3)-ஆம் உட்பிரிவில்,

(a) அவை 42-ஆம் பிரிவின் கீழோ அல்லது 43-ஆம் பிரிவின் கீழோ ஒத்திசைவு செய்யப்படாமல் எனும் சொற்றொடரானது விட்டுவிடப்படுதல் வேண்டும்;

(b) முதலாம் வரம்புரையில், 39-ஆம் பிரிவின் கீழ் செப்டம்பர் மாதத்திற்கான அறிக்கை அளித்தல் எனும் சொற்றொடருக்காக, நவம்பர் முப்பதாம் நாள் எனும் சொற்றொடரானது மாற்றாக அமைக்கப்படுதல் வேண்டும்;

(4) (3)-ஆம் உட்பிரிவிற்கு பின்பு, பின்வரும் உட்பிரிவானது

உட்புகுத்தப்படுதல் வேண்டும், அதாவது:-

(4) முந்தைய வரிக்கால அளவு எதற்குமான வெளிப்புற வழங்குகைகளின் விவரங்களானது அவரால் அளிக்கப்படவில்லையெனில், ஒரு வரிக்கால அளவிற்காக (1)-ஆம் உட்பிரிவின் கீழ் வெளிப்புற வழங்குகைகளின் விவரங்களை அளிப்பதற்கு ஒரு பதிவுபெற்ற நபரை அனுமதிக்கலாகாது:

வரம்புரை. அரசானது, மன்றத்தின் பரிந்துரையின் பேரில், அறிவிக்கையின் வாயிலாக, அதில் குறித்துரைக்கப்படலாகும் அத்தகைய நிபந்தனைகள் மற்றும் வரையறைகளுக்குப்பட்டு, ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட முந்தைய வரிக்கால அளவிற்கான வெளிப்புற வழங்குகைகளின் விவரங்களை அவர் அளிக்காமல் இருந்தாலும் கூட, (1)-ஆம் உட்பிரிவின் கீழ் வெளிப்புற வழங்குகைகளின் விவரங்களை அளிப்பதற்கு பதிவு பெற்ற நபர் அல்லது பதிவுபெற்ற நபர்களின் வகைகளை அனுமதிக்கலாம்..

38-ஆம் பிரிவின்

6. முதன்மைச் சட்டத்தின் 38-ஆம் பிரிவிற்காக, பின்வரும் பிரிவானது

மாற்றீடு.

மாற்றாக அமைக்கப்படுதல் வேண்டும், அதாவது:

38. உட்புற வழங்குகைகள் மற்றும் உள்ளீட்டு வரிவரவு ஆகியவற்றின் 38. உட்புற வழங்குகைகள் மற்றும் உள்ளீட்டு வரிவரவு ஆகியவற்றின் விவரங்களை தெரியப்படுத்துதல்.விவரங்களை தெரியப்படுத்துதல்.(1) 37-ஆம் பிரிவின் (1)-ஆம் உட்பிரிவின் கீழ் பதிவுபெற்ற நபர்களால் அளிக்கப்பட்ட வெளிப்புற வழங்குகைகள் மற்றும் வகுத்துரைக்கப்படலாகும் அத்தகைய பிற வழங்குகைகளின் விவரங்கள் மற்றும் உள்ளீட்டு வரிவரவின் விவரங்கள் அடங்கிய தானாக உருவாக்கப்படும் விவர அறிக்கையானது, வகுத்துரைக்கப்படலாகும் அத்தகைய நிபந்தனைகள் மற்றும் வரையறைகளுக்குப்பட்டு மற்றும் அத்தகைய காலத்திற்குள்ளாக, அத்தகைய முறையிலும் படிவத்திலும், அத்தகைய வழங்குகைகளின் பெறுநர்களுக்கு மின்னணு முறையில் செய்யப்படுதல் வேண்டும்.

தமிழ்நாடு அரசிதழ் சிறப்பு வெளியீடு 7

(2) (1)-ஆம் உட்பிரிவின் கீழ் தானாக உருவாக்கப்படும் விவர

அறிக்கையானது பின்வருவனவற்றைக் கொண்டிருத்தல் வேண்டும்

(a) பெறுநருக்கு கிடைக்கலாகும் உள்ளீட்டு வரிவரவினைப்

பொறுத்தவகையில் உட்புற வழங்குகைகளின் விவரங்கள்; மற்றும்

(b) 37-ஆம் பிரிவின் (1)-ஆம் உட்பிரிவின் கீழ் அளிக்கப்பட வேண்டிய கூறப்பட்ட வழங்குகைகளின் விவரங்களின் பேரில், பெறுநரால், முழுமையாகவோ அல்லது பகுதியாகவோ, பெற முடியாத அத்தகைய வரவினைப் பொறுத்தவகையில் வழங்குகையின் விவரங்களானது,

(i) வகுத்துரைக்கப்படலாகும் பதிவு ஏற்றுக்கொள்ளும் அத்தகைய கால

அளவிற்குள் பதிவுபெற்ற நபர் எவராலும்; அல்லது

(ii) வரி செலுத்துதலில் தவறிய பதிவுபெற்ற நபர் எவராலும் மற்றும் அத்தகைய தவறுதலானது, வகுத்துரைக்கப்படலாகும் அத்தகைய கால அளவிற்கு தொடருதல்; அல்லது

(iii) பதிவுபெற்ற நபர் எவராலும், கூறப்பட்ட உட்பிரிவின் கீழ் அவரால் அளிக்கப்பட்ட வெளிப்புற வழங்குகைகளின் அறிக்கையுடன் இணங்கி, அவர் செலுத்த வேண்டிய வெளியீட்டு வரியானது, வகுத்துரைக்கப்படலாகும் அத்தகைய காலத்தில், அவரால் செலுத்தப்பட்ட வெளிப்புற வரியினை வகுத்துரைக்கப்படலாகும் அத்தகைய வரம்பை கூறப்பட்ட காலத்தில் மீறுதல்; அல்லது

(iv) பதிவு பெற்ற நபர் எவராலும், வகுத்துரைக்கப்படலாகும் அத்தகைய காலத்தில், வகுத்துரைக்கப்படலாகும் அத்தகைய வரம்பின் மூலம் (a) கூறுடன் இணங்கி, அவரால் பெறக்கூடிய வரவினை விட அதிகமான உள்ளீட்டு வரியின் வரவுகளைப் பெறுதல்; அல்லது

(v) பதிவு பெற்ற நபர் எவராலும், வகுத்துரைக்கப்படலாகும் அத்தகைய நிபந்தனைகள் மற்றும் வரையறைகளுக்குட்பட்டு, 49-ஆம் பிரிவின் (12)-ஆம் உட்பிரிவின் வகைமுறைகளுடன் இணங்கி வரிப்பொறுப்பினை செலுத்தத் தவறுதல்; அல்லது

(vi) வகுத்துரைக்கப்படலாகும் அத்தகைய பிறவகை நபர்களினால்..

7. முதன்மைச் சட்டத்தின் 39-ஆம் பிரிவில், 39-ஆம் பிரிவின்

திருத்தம்.

(1) 5-ஆம் உட்பிரிவில் இருபது நாட்கள் எனும் சொற்றொடருக்காக, பதின்மூன்று நாட்கள் எனும் சொற்றொடரானது மாற்றாக அமைக்கப்படுதல் வேண்டும்;

(2) (7)-ஆம் உட்பிரிவில், முதலாம் வரம்புரைக்காக, பின்வரும்

வரம்புரையானது மாற்றாக அமைக்கப்படுதல் வேண்டும், அதாவது:

வரம்புரை. (1)-ஆம் உட்பிரிவின் வரம்புரையின் படி அறிக்கையினை அளிக்கும் பதிவுபெற்ற நபர் ஒவ்வொருவரும், வகுத்துரைக்கப்படலாகும் அத்தகைய காலத்திற்குள், அத்தகைய முறையிலும் மற்றும் படிவத்திலும், அரசுக்கு செலுத்துதல் வேண்டும்,

( a ) சரக்குகள் அல்லது சேவைகள் அல்லது இரண்டின் உட்புற மற்றும் வெளிப்புற வழங்குகைகள், பெறப்பட்ட உள்ளீட்டு வரிவரவு, செலுத்த வேண்டிய வரி ஒரு மாத காலத்தின் அத்தகைய பிற விவரங்கள் ஆகியவற்றைக் கணக்கில் கொண்டு செலுத்த வேண்டிய வரிக்கு சமமான தொகை; அல்லது

( b ) (a)-ஆம் கூறில் குறிப்பிடப்பட்ட தொகைக்குப் பதிலாக, வகுத்துரைக்கப்படலாகும் அத்தகைய நிபந்தனைகள் மற்றும் வரையறைகளுக்குட்பட்டு, அத்தகைய முறையில் தீர்மானிக்கப்பட்ட தொகை.;

8 தமிழ்நாடு அரசிதழ் சிறப்பு வெளியீடு

(3) (9)-ஆம் உட்பிரிவில்,

(i) 37 மற்றும் 38-ஆம் பிரிவுகளின் வகைமுறைகளுக்குட்பட்டு, எனும் சொற்றொடருக்காக, எங்கே எனும் சொற்றொடரானது மாற்றாக அமைக்கப்படுதல் வேண்டும்;

(ii) வரம்புரையில், செப்டம்பர் மாதம் அல்லது இரண்டாம் காலாண்டிற்கான அறிக்கையினை அளிப்பதற்கான உரிய தேதி எனும் சொற்றொடருக்காக, நவம்பர் முப்பதாம் நாள் எனும் சொற்றொடரானது மாற்றாக அமைக்கப்படுதல் வேண்டும்;

(4) (10)-ஆம் உட்பிரிவில், அவரால் அளிக்கப்படாமல் எனும் சொற்றொடருக்காக, அல்லது கூறப்பட்ட வரிக் காலத்திற்காக 37-ஆம் பிரிவின் (1)-ஆம் உட்பிரிவின் கீழ் வெளிப்புற வழங்குகைகளின் விவரங்களானது அவரால் அளிக்கப்படாமல் எனும் சொற்றொடரானது, மாற்றாக அமைக்கப்படுதல் வேண்டும்;

(5) அவ்வாறு திருத்தம் செய்யப்பட்டவாறான (10)-ஆம் உட்பிரிவிற்கு,

பின்வரும் வரம்புரையானது சேர்க்கப்படுதல் வேண்டும், அதாவது:

வரம்புரை. அரசானது, மன்றத்தின் பரிந்துரைகளின் பேரில், அறிவிக்கையின் மூலம், அதில் குறிப்பிடப்படலாகும் அத்தகைய நிபந்தனைகள் மற்றும் வரையறைகளுக்குட்பட்டு, அவர் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட முந்தைய வரி காலங்களுக்காக அறிக்கையை அளிக்கவில்லையெனினும் அல்லது கூறப்பட்ட வரிக்காலத்திற்காக, 37-ஆம் பிரிவின் (1)-ஆம் உட்பிரிவின் படி வெளிப்புற வழங்குகைகளின் விவரங்களை அளிக்கவில்லையெனினும், பதிவு பெற்ற நபரை அல்லது பதிவுபெற்ற நபர்களின் வகைகளின் அறிக்கையினை அளிப்பதற்கு அனுமதித்தல் வேண்டும்..

41-ஆம் பிரிவின்

8. முதன்மைச் சட்டத்தின் 41-ஆம் பிரிவிற்காக, பின்வரும் பிரிவானது

மாற்றீடு.

மாற்றாக அமைக்கப்படுதல் வேண்டும், அதாவது:

41. உள்ளீட்டு வரிவரவினை துய்த்தல்.41. உள்ளீட்டு வரிவரவினை துய்த்தல்.(1) பதிவு பெற்ற நபர் ஒவ்வொருவரும், வகுத்துரைக்கப்படலாகும் அத்தகைய நிபந்தனைகள் மற்றும் வரையறைகளுக்குப்பட்டு, அவரின் அறிக்கையில், சுய மதிப்பீடாக, தகுதியுடைய உள்ளீட்டு வரிவரவினை பெறத் தகுதியுடையவராவர் மற்றும் அத்தகைய தொகையானது அவரது மின்னணு வரவு பேரேட்டில் வரவு வைக்கப்படுதல் வேண்டும்.

(2) சரக்குகள் அல்லது சேவைகள் அல்லது இரண்டின் வழங்குகைகளைப் பொறுத்த நேர்வில், செலுத்தப்பட வேண்டிய வரியானது வழங்குநரால் செலுத்தப்படாதவிடத்து, (1)-ஆம் உட்பிரிவின் கீழ் பதிவுபெற்ற நபரினால் பெறப்பட்ட உள்ளீட்டு வரிவரவானது, வகுத்துரைக்கப்படலாகும், அத்தகைய முறையில், கூறப்பட்ட நபரால், பொருந்தக்கூடிய வட்டியுடன் திருப்பியளிக்கப்படுதல் வேண்டும்:

வரம்புரை. மேற்கூறப்பட்ட வழங்குகைகளைப் பொறுத்த நேர்வில், செலுத்தப்பட வேண்டிய வரியின் செலுத்தத்தை கூறப்பட்ட வழங்குநர் செய்யுமிடத்து, கூறப்பட்ட பதிவுபெற்ற நபர், வகுத்துரைக்கப்படலாகும் அத்தகைய முறையில் அவரால் திருப்பியளிக்கப்பட்ட வரவு தொகையினை மீண்டும் பயன்படுத்தலாம்..

42 மற்றும்

9. முதன்மைச் சட்டத்தின் 42 மற்றும் 43 ஆகிய பிரிவுகள் விட்டுவிடப்படுதல்

43-ஆம் பிரிவுகளை வேண்டும்.

விட்டுவிடுதல்.

47-ஆம் பிரிவின்

10. முதன்மைச் சட்டத்தின் 47-ஆம் பிரிவில், (1)-ஆம் உட்பிரிவில்,

திருத்தம்.

தமிழ்நாடு அரசிதழ் சிறப்பு வெளியீடு 9

(1) அல்லது உள்வரு எனும் சொற்றொடரானது விட்டுவிடப்படுதல்

வேண்டும்;

(2) அல்லது 38-ஆம் பிரிவு எனும் சொற்றொடரானது

விட்டுவிடப்படுதல் வேண்டும்;

(3) 39-ஆம் பிரிவு அல்லது 45-ஆம் பிரிவு எனும் சொற்றொடருக்குப் பின்பு, அல்லது 52-ஆம் பிரிவு எனும் சொற்றொடரானது உட்புகுத்தப்படுதல் வேண்டும்.

48-ஆம் பிரிவின்

திருத்தம்.

11. முதன்மைச் சட்டத்தின் 48-ஆம் பிரிவில், (2)-ஆம் உட்பிரிவில் 38-ஆம் பிரிவின் கீழ் உள்வரு வழங்குகையின் விவரங்கள் எனும் சொற்றொடரானது விட்டுவிடப்படுதல் வேண்டும்.

12. முதன்மைச் சட்டத்தின் 49-ஆம் பிரிவில், 49-ஆம் பிரிவின்

திருத்தம்.

(1) (4)-ஆம் உட்பிரிவில், அத்தகைய நிபந்தனைகளுக்குட்பட்டும் எனும் சொற்றொடருக்குப் பின்பு, மற்றும் வரையறைகளுக்கு உட்பட்டும் எனும் சொற்றொடரானது உட்புகுத்தப்படுதல் வேண்டும்;

(2) (11)-ஆம் உட்பிரிவிற்கு பின்பு, பின்வரும் உட்பிரிவானது

உட்புகுத்தப்படுதல் வேண்டும், அதாவது:

மத்தியச் சட்டம்

13/2017

(12) இந்தச் சட்டத்தில் அடங்கியது எவ்வாறிருப்பினும், அரசானது, மன்றத்தின் பரிந்துரையின் பேரில், அத்தகைய நிபந்தனைகள் மற்றும் வரையறைகளுக்கு உட்பட்டு இந்தச் சட்டத்தின் கீழ் அல்லது 2017-ஆம் ஆண்டு ஒருங்கிணைந்த சரக்குகள் மற்றும் சேவைகள் வரிச் சட்டத்தின் கீழ் வகுத்துரைக்கப்படலாகிறவாறு பதிவுபெற்ற நபர் அல்லது பதிவு பெற்ற நபர்களின் வகையில் ஒருவரால் மின்னணு வரவுப் பேரேட்டின் மூலம் விடுவிக்கப்படலாகும் வெளியீட்டு வரி பொறுப்பின் அதிகபட்ச விகிதத்தை குறிப்பிடலாம்..

50-ஆம் பிரிவின்

திருத்தம்.

13. முதன்மைச் சட்டத்தின் 50-ஆம் பிரிவில், (3)-ஆம் உட்பிரிவிற்காக, பின்வரும் உட்பிரிவானது மாற்றாக அமைக்கப்படுதல் வேண்டும் மற்றும் அது 2017-ஆம் ஆண்டு ஜூலை மாதம் 1-ஆம் தேதியிலிருந்து மாற்றியமைக்கப்பட்டதுடன் நடைமுறைக்கு வந்துவிட்டதாகக் கருதப்படுதல் வேண்டும், அதாவது:

(3) உள்ளீட்டு வரிவரவு தவறாக துய்க்கப்பட்டு மற்றும் பயன்படுத்தப்பட்டிருந்தால், பதிவு பெற்ற நபரானவர், மன்றத்தின் பரிந்துரையின் பேரிலும், அரசால் அறிவிக்கப்படலாகிறவாறு இருபத்து நான்கு விழுக்காட்டிற்கு மேற்படாத அத்தகைய வீதத்தில், தவறாக துய்க்கப்பட்ட மற்றும் பயன்படுத்தப்பட்ட அத்தகைய உள்ளீட்டு வரிவரவு மீது வட்டித் தொகையை செலுத்துதல் வேண்டும், மற்றும் வகுத்துரைக்கப்படலாகும் அத்தகைய முறையிலும், வட்டியானது கணக்கிடப்படுதல் வேண்டும்..

52-ஆம் பிரிவின்

திருத்தம்.

14. முதன்மைச் சட்டத்தின் 52-ஆம் பிரிவில், (6)-ஆம் உட்பிரிவிலுள்ள, வரம்புரையில், செப்டம்பர் மாதத்திற்கான அறிக்கையை அளிப்பதற்கான உரிய தேதி எனும் சொற்றொடருக்காக, நவம்பர் முப்பதாம் தேதி எனும் சொற்றொடரானது மாற்றாக அமைக்கப்படுதல் வேண்டும்.

15. முதன்மைச் சட்டத்தின் 54-ஆம் பிரிவில், 54-ஆம் பிரிவின்

திருத்தம்.

(1) (1)-ஆம் உட்பிரிவிலுள்ள வரம்புரையில், 39-ஆம் பிரிவின்படி அளிக்கப்பட்ட அறிக்கையில் எனும் சொற்றொடருக்காக, அத்தகைய படிவத்தில் மற்றும் எனும் சொற்றொடரானது மாற்றாக அமைக்கப்படுதல் வேண்டும்;

10 தமிழ்நாடு அரசிதழ் சிறப்பு வெளியீடு

(2) (2)-ஆம் உட்பிரிவிலுள்ள, ஆறு மாதங்கள் எனும் சொற்றொடருக்காக, இரண்டு ஆண்டுகள் எனும் சொற்றொடரானது மாற்றாக அமைக்கப்படுதல் வேண்டும்;

(3) (10)-ஆம் உட்பிரிவில், (3)-ஆம் உட்பிரிவின்கீழ் எனும்

சொற்றொடரானது விட்டுவிடப்படுதல் வேண்டும்;

(4) (2)-ஆம் கூறில், விளக்கத்தில், (b)ஆம் உட்கூறுக்குப் பின்பு,

பின்வரும் உட்கூறானது, உட்புகுத்தப்படுதல் வேண்டும், அதாவது:

(bb) ஒரு சிறப்புப் பொருளாதார மண்டல மேம்படுத்துநர் அல்லது ஒரு சிறப்புப் பொருளாதார மண்டல அலகு ஆகியவற்றுக்கு பூஜ்ஜிய மதிப்பீட்டு சரக்குகள் அல்லது சேவைகள் அல்லது அவை இரண்டும் வழங்கப்படுமிடத்தும் அவற்றுக்கு அத்தகைய வழங்குகைகளைப் பொறுத்து செலுத்தப்பட்ட வரியானது திரும்பக் கிடைக்குமிடத்தும், அல்லது, நேர்விற்கேற்ப, அத்தகைய வழங்குகைகளில் பயன்படுத்தப்பட்ட உள்ளீடுகள் அல்லது உள்ளீட்டு சேவைகளானது, அத்தகைய வழங்குகைகளைப் பொறுத்து, 39-ஆம் பிரிவின்படி அறிக்கையினை உரிய தேதியில் வழங்குதல் வேண்டும்;.

முதன்மைச் சட்டத்தின்

146-ஆம் பிரிவின்

கீழ் பிறப்பிக்கப்பட்ட

அறிவிக்கைக்கான

பின்னோக்கிய

திருத்தம்.

16. (1) முதன்மைச் சட்டத்தின் 146-ஆம் பிரிவின் கீழ், மன்றத்தின் பரிந்துரையின் பேரில், அரசால் பிறப்பிக்கப்பட்ட 2018-ஆம் ஆண்டு ஜனவரி திங்கள் 23-ஆம் தேதியிட்ட தமிழ்நாடு அரசு சிறப்பிதழின்தமிழ்நாடு அரசு சிறப்பிதழின் 2-ஆம் பக்கத்தில் பகுதி IIபிரிவு 2-இல் வெளியிடப்பட்ட வணிகவரி மற்றும் பதிவுத் துறையின் அறிவிக்கை எண்.II(2)/CTR/79(h-5)/2018-ஆனது அந்த இணைப்புப்பட்டியலின் (3)-ஆம் கலத்தில் குறிப்பிடப்பட்டுள்ள தேதியிலிருந்தும் அது முதற்கொண்டும், முதல் இணைப்புப்பட்டியலின் (2)-ஆம் கலத்தில் குறிப்பிடப்பட்டுள்ள முறையிலும் திருத்தம் செய்யப்படுதல் வேண்டும் மற்றும் அது பின்னோக்கி திருத்தப்பட்டதாகக் கருதப்படுதல் வேண்டும்.

(2) (1)-ஆம் உட்பிரிவின் நோக்கத்திற்காக, அனைத்து நேரங்களிலும், பின்னோக்கியவாறு முதன்மைச் சட்டத்தின் 146-ஆம் பிரிவின் கீழ் கூறப்பட்ட அறிவிக்கையினை திருத்துவதற்கு அரசானது அதிகாரம் கொண்டதாக இருக்குமிடத்து, பின்னோக்கிய விளைவுடன் கூறப்பட்ட உட்பிரிவில் சுட்டப்பட்ட அறிவிக்கையினை திருத்தம் செய்வதற்கு அரசானது அதிகாரம் கொண்டிருத்தல் வேண்டும் மற்றும் அவ்வாறு கொண்டிருப்பதாகக் கருதப்படுதல் வேண்டும்.

முதன்மைச் சட்டத்தின்

50-ஆம் பிரிவின்

(1) மற்றும்

(3)-ஆம்

உட்பிரிவுகள்,

54-ஆம் பிரிவின்

(12)-ஆம் உட்பிரிவு

மற்றும் 56-ஆம்

பிரிவின் கீழ்

பிறப்பிக்கப்பட்ட

அறிவிக்கைக்கான

17. (1) முதன்மைச் சட்டத்தின் 50-ஆம் பிரிவின் (1) மற்றும் (3)-ஆம் உட்பிரிவுகள், 54-ஆம் பிரிவின் (12)-ஆம் உட்பிரிவு மற்றும் 56-ஆம் பிரிவின் கீழ், மன்றத்தின் பரிந்துரையின் பேரில், அரசால் பிறப்பிக்கப்பட்ட 2017-ஆம் ஆண்டு ஜுன் திங்கள் 29-ஆம் தேதியிட்ட தமிழ்நாடு அரசு சிறப்பிதழின்தமிழ்நாடு அரசு சிறப்பிதழின் 2-ஆம் பக்கத்தில் பகுதி IIபிரிவு 2-இல் வெளியிடப்பட்ட வணிகவரி மற்றும் பதிவுத் துறையின் அறிவிக்கை எண்.II(2)/CTR/532(d-3)/2017 ஆனது அந்த இணைப்புப்பட்டியலின் (3)-ஆம் கலத்தில் குறிப்பிடப்பட்டுள்ள தேதியிலிருந்தும் அது முதற்கொண்டும், இரண்டாம் இணைப்புப்பட்டியலின் (2)-ஆம் கலத்தில் குறிப்பிடப்பட்டுள்ள முறையிலும் திருத்தம் செய்யப்படுதல் வேண்டும் மற்றும் அது பின்னோக்கி திருத்தப்பட்டதாகக் கருதப்படுதல் வேண்டும்.

பின்னோக்கிய

திருத்தம்.

(2) (1)-ஆம் உட்பிரிவின் நோக்கத்திற்காக, அனைத்து நேரங்களிலும் பின்னோக்கியவாறு முதன்மைச் சட்டத்தின் 50-ஆம் பிரிவின் (1) மற்றும் (3)-ஆம் உட்பிரிவுகள், 54-ஆம் பிரிவின் (12)-ஆம் உட்பிரிவு மற்றும் 56-ஆம் பிரிவின் கீழ், கூறப்பட்ட அறிவிக்கையினை திருத்துவதற்கு அரசானது அதிகாரம் கொண்டதாக இருக்குமிடத்து, பின்னோக்கிய விளைவுடன் கூறப்பட்ட உட்பிரிவில் சுட்டப்பட்ட அறிவிக்கையினை திருத்தம் செய்வதற்கு அரசானது அதிகாரம் கொண்டிருத்தல் வேண்டும் மற்றும் அவ்வாறு கொண்டிருப்பதாகக் கருதப்படுதல் வேண்டும்.

தமிழ்நாடு அரசிதழ் சிறப்பு வெளியீடு 11

குறிப்பிட்ட

நேர்வுகளில்

மாநில வரியை

பின்னோக்கியவாறு

விதித்தல் அல்லது

வசூலித்தலிலிருந்து

விலக்களித்தல்.

18. (1) முதன்மைச் சட்டத்தின் 9-ஆம் பிரிவின் (1)-ஆம் உட்பிரிவின் கீழ் அதிகாரங்களை செயல்படுத்துவதற்கு, மன்றத்தின் பரிந்துரையின் பேரில், 2017-ஆம் ஆண்டு ஜூன் திங்கள் 29-ஆம் தேதியிட்ட தமிழ்நாடு அரசு சிறப்பிதழின் தமிழ்நாடு அரசு சிறப்பிதழின் 3-ஆம் பக்கத்தில் பகுதி II-பிரிவு 2-ல் வெளியிடப்பட்ட வணிகவரி மற்றும் பதிவுத் துறையின் அறிவிக்கை எண் II(2)/CTR/532(d-4)/2017-இல் அடங்கியுள்ள எது எவ்வாறிருப்பினும், 2017-ஆம் ஆண்டு ஜூலை திங்கள் 1-ஆம் நாளிலிருந்தும் மற்றும் 2019-ஆம் ஆண்டு செப்டம்பர் திங்கள் 30-ஆம் நாள் முடிவடையும் வரையிலும் (இரண்டு நாட்கள் உள்ளடங்கலாக) உள்ள கால அளவானது மீன் எண்ணெய் தவிர, மீன் உணவு (2301 தலைப்பின் கீழ் வருகின்ற) உற்பத்தியின் போது உருவாக்கப்படும் திட்டமிடப்படாத கழிவுகள் வழங்குவதைப் பொறுத்து, மாநில வரியானது விதிக்கப்படவோ அல்லது வசூலிக்கப்படவோ கூடாது.

(2) (1)-ஆம் உட்பிரிவில் குறிப்பிடப்பட்டுள்ள அறிவிக்கையானது, அனைத்து நேரங்களிலும் நடைமுறையில் இருந்திருந்தால், வசூலிக்கப்பட்ட மற்றும் அவ்வாறு வசூலிக்கப்படாமல் இருக்கின்ற அத்தகைய அனைத்து வரிகளும் திரும்ப அளிக்கப்படமாட்டாது.

முதன்மைச்

சட்டத்தின்

7-ஆம் பிரிவின்

(2)-ஆம்

உட்பிரிவின் கீழ்

பிறப்பிக்கப்பட்ட

அறிவிக்கைக்கான

பின்னோக்கிய

விளைவு.

19. (1) முதன்மைச் சட்டத்தின் 7-ஆம் பிரிவின் (2)-ஆம் உட்பிரிவின் கீழ் அதிகாரங்களை செயல்படுத்துவதில், மன்றத்தின் பரிந்துரையின் பேரில், 2019-ஆம் ஆண்டு செப்டம்பர் திங்கள் 30-ஆம் தேதியிட்ட தமிழ்நாடு அரசு தமிழ்நாடு அரசு சிறப்பிதழின்சிறப்பிதழின் 12-ஆம் பக்கத்தில் பகுதி II-பிரிவு 2-ல் வெளியிடப்பட்ட வணிகவரி மற்றும் பதிவுத் துறையின் அறிவிக்கை எண்.II(2)/CTR/773(a-14)/2019-ஆனது, (2)-ஆம் உட்பிரிவின் வகைமுறைகளுக்கு உட்பட்டு, 2017-ஆம் ஆண்டு ஜூலை திங்கள் 1-ஆம் நாளிலிருந்தும் அது முதற்கொண்டும் அனைத்து நோக்கங்களுக்காகவும் நடைமுறைக்கு வருதல் வேண்டும் மற்றும் அது எப்போதும் இருப்பதாகவும் கருதப்படுதல் வேண்டும்.

(2) (1)-ஆம் உட்பிரிவில் குறிப்பிடப்பட்டுள்ள அறிவிக்கையானது, அனைத்து நேரங்களிலும் நடைமுறையில் இருந்திருந்தால், வசூலிக்கப்பட்ட மற்றும் அவ்வாறு வசூலிக்கப்படாமல் இருக்கின்ற அத்தகைய அனைத்து மாநில வரிகளும் திரும்ப அளிக்கப்படமாட்டாது.

முதல் இணைப்புப்பட்டியல்.முதல் இணைப்புப்பட்டியல்.

[16(1)-ஆம் பிரிவைக் காண்க]

[16(1)-ஆம் பிரிவைக் காண்க]

அறிவிக்கை எண் மற்றும் தேதி (1) திருத்தம் (2) திருத்தத்தின் செயல் விளைவின் தேதி (3)
2018-ஆம் ஆண்டு ஜனவரி திங்கள் 23-ஆம் தேதியிட்ட வணிகவரி மற்றும் பதிவுத் துறை அறிவிக்கை எண்.II(2)/CTR/79(h-5)/2018. கூறப்பட்ட அறிவிக்கையில், பத்தி 1-இல் அறிக்கைகள் அளித்தல் மற்றும் ஒருங்கிணைக்கப்பட்ட வரியின் வரிக்கணக்கீடு மற்றும் தீர்வு செய்தல் எனும் சொற்களுக்காக பின்வருவன மாற்றாக அமைக்கப்படுதல் வேண்டும், அதாவது: 2017-ஆம் ஆண்டு தமிழ்நாடு சரக்குகள் மற்றும் சேவைகள் வரி விதிகளின் படி வழங்கப்பட்ட அனைத்து செயற்பணிகள் மற்றும் 2019-ஆம் ஆண்டு டிசம்பர் திங்கள் 17-ஆம் தேதியிட்ட வணிகவரி மற்றும் பதிவுத் துறை அறிவிக்கை எண்.II(2)/CTR/976(c)/2019-இல், பிறவாறு வகை அளித்தல் மற்றும் செய்யப்பட்டிருந்தாலன்றி, அறிக்கைகள் ஒருங்கிணைக்கப்பட்ட வரியின் வரிக்கணக்கீடு மற்றும் தீர்வு செய்தல்.. ஜூன் 28, 2017
12 தமிழ்நாடு அரசிதழ் சிறப்பு வெளியீடு

இரண்டாம் இணைப்புப்பட்டியல்.இரண்டாம் இணைப்புப்பட்டியல்.

[17(1)-ஆம் பிரிவைக் காண்க] [17(1)-ஆம் பிரிவைக் காண்க]

அறிவிக்கை எண் மற்றும் தேதி (1) திருத்தம் (2) திருத்தத்தின் செயல் விளைவின் தேதி (3)
2017-ஆம் ஆண்டு ஜூன் திங்கள் 29-ஆம் தேதியிட்ட வணிகவரி மற்றும் பதிவுத் துறை அறிவிக்கை எண்.II(2)/CTR/532(d-3)/2017. கூறப்பட்ட அறிவிக்கையில், அட்டவணையில், இரண்டாம் எண் வரிசைக்கு எதிராக உள்ள (3)-ஆம் கலத்தில், 24 எனும் எண்ணுக்காக, 18 எனும் எண்ணானது மாற்றாக அமைக்கப்படுதல் வேண்டும். ஜூலை 1, 2017
தமிழ்நாடு அரசிதழ் சிறப்பு வெளியீடு 13

நோக்கக் காரண விளக்கவுரை.நோக்கக் காரண விளக்கவுரை.

2017-ஆம் ஆண்டு தமிழ்நாடு சரக்குகள் மற்றும் சேவைகள் வரிச் சட்டமானது (தமிழ்நாடு சட்டம் 19/2017), சரக்குகள் அல்லது சேவைகள் அல்லது இரண்டையும் மாநிலத்திற்குள் வழங்குவதன் மீது மாநில அரசால் வரி விதிப்பதற்கும் வசூலிப்பதற்கும் வகை செய்யும் நோக்கத்துடன் இயற்றப்பட்டது.

2. சரக்குகள் மற்றும் சேவைகள் வரி மன்றமானது 28 மே, 2021 மற்றும் 17 செப்டம்பர், 2021 ஆகிய தேதிகளில் நடைபெற்ற அதன் 43-வது மற்றும் 45-வது கூட்டங்களில், 2017-ஆம் ஆண்டு மத்திய சரக்குகள் மற்றும் சேவைகள் வரிச் சட்டத்தில் (மத்தியச் சட்டம் 12/2017) பல்வேறு திருத்தங்களை மேற்கொள்ள பரிந்துரைத்துள்ளது. மேற்கூறிய பரிந்துரைகளுக்கு செயல்வடிவம் கொடுப்பதற்கு, மத்திய அரசானது, 2022-ஆம் ஆண்டு நிதிச் சட்டத்தின் (மத்தியச் சட்டம் 6/2022) மூலம் மேற்கூறிய மத்தியச் சட்டத்தை திருத்தம் செய்தது. எனவே, 2017-ஆம் ஆண்டு தமிழ்நாடு சரக்குகள் மற்றும் சேவைகள் வரிச் சட்டத்தில் (தமிழ்நாடு சட்டம் 19/2017) தொடர்புடைய திருத்தங்கள் செய்யப்படுதல் வேண்டும். எனவே, தமிழ்நாடு சட்டம் 19/2017-ஐ தக்கவாறு திருத்துவதென அரசானது முடிவு செய்துள்ளது.

3. இந்தச் சட்டமுன்வடிவானது, மேற்சொன்ன முடிவிற்கு செயல்வடிவம் கொடுக்க விழைகிறது.

பி. மூர்த்தி,பி. மூர்த்தி, வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர்.

14 தமிழ்நாடு அரசிதழ் சிறப்பு வெளியீடு

சட்டமியற்று அதிகார ஒப்படைவு பற்றிய குறிப்பு. சட்டமியற்று அதிகார ஒப்படைவு பற்றிய குறிப்பு.

இந்தச் சட்டமுன்வடிவின் 3, 5, 6, 7, 8, 12 மற்றும் 13 ஆகிய கூறுகள் அதில் குறித்துரைக்கப்பட்ட நோக்கங்களுக்காக, நேர்விற்கேற்ப, அறிவிப்புகள் வெளியிடுவதற்கு அல்லது விதிகளைச் செய்வதற்கு அரசுக்கு அதிகாரமளிக்கின்றன.

2. ஒப்படைவு செய்யப்பட்ட அதிகாரங்கள் இயல்பானவையேயன்றி மற்றும் தனித்தன்மை வாய்ந்தவையல்ல.

பி. மூர்த்திபி. மூர்த்தி, வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர்.

தமிழ்நாடு அரசிதழ் சிறப்பு வெளியீடு 15

நிதி விவரக் குறிப்புநிதி விவரக் குறிப்பு.

இந்தச் சட்டமுன்வடிவு இயற்றப்பட்டு, செயற்பாட்டிற்கு கொண்டுவரப்படும் போது, மாநில அரசின் தொகுப்பு நிதியிலிருந்து செலவினங்கள் மேற்கொள்ளப்படுவதாக இருக்கும். ஆயினும், இது, உத்தேசிக்கப்பட்ட சட்டமியற்றுகையின் விளைவாக மாநில அரசின் தொகுப்பு நிதியிலிருந்து செய்ய நேர்தலுக்குரிய செலவினங்களை இந்த நிலையில் துல்லியமான அளவு மதிப்பீடு செய்வது இயலாததாகும்.

பி. மூர்த்திபி. மூர்த்தி, வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர்.

கி. சீனிவாசன், செயலாளர்.

தலைமைச் செயலகம், சென்னை, 2023 ஏப்ரல் 18.

தமிழ்நாடு அரசுக்காக சென்னை எழுதுபொருள் மற்றும் அச்சுத் துறை இயக்குநரால் அச்சிடப்பட்டு வெளியிடப்பட்டது.

Cite this issue. Tamil Nadu Gazette, Government of Tamil Nadu, 18 April 2023. Indian Gazettes, https://egazette.servantsofknowledge.in/details/in.gazette.tamilnadu.2023-04-18.Extraordinary_130_Part-IV_Section-1/. Archive identifier in.gazette.tamilnadu.2023-04-18.Extraordinary_130_Part-IV_Section-1.