©
GOVERNMENT OF TAMIL NADU 2023
[Regd. No. TN/CCN/467/2012-14.
[R. Dis. No. 197/2009.
[Price: Rs.14.40 Paise.
| தமிழ்நாடு அரசிதழ் சிறப்பு வெளியீடு ஆணையின்படி வெளியிடப்பட்டது. | ||
No. 131A] சென்னை, புதன்கிழமை, ஏப்ரல் 19, 2023 சித்திரை 6, சோபகிருது, திருவள்ளுவர் ஆண்டு-2054
பகுதி IV—பிரிவு 1
தமிழ்நாடு சட்டமுன்வடிவுகள்தமிழ்நாடு சட்டமுன்வடிவுகள்
பொருளடக்கம்பொருளடக்கம்
பக்கங்கள் சட்டமுன்வடிவுகள்:சட்டமுன்வடிவுகள்:
எண்.13/2023—தமிழ்நாடு நீக்கறவு செய்தல் (இரண்டாம்) சட்டம் .. .. .. .. 2-12 எண்.14/2023— தமிழ்நாடு நகர் மற்றும் ஊரமைப்பு (மூன்றாவது திருத்த) திருத்தச் சட்டம் .. 13-30 எண்.15/2023—தமிழ்நாடு மீன்வளப் பல்கலைக்கழகத் (திருத்தச்) சட்டம் .. .. .. 31-32 எண்.16/2023—தமிழ்நாடு கடைகள் மற்றும் நிறுவனங்கள் (திருத்த) திருத்தச் சட்டம் .. 33-36
[1]
DTP—Ex-IV-1-T(131A)2 தமிழ்நாடு அரசிதழ் சிறப்பு வெளியீடு 2023ஆம் ஆண்டு ஏப்ரல் திங்கள் 19 ஆம் நாளன்று தமிழ்நாடு சட்டமன்றப்
பேரவையில் அறிமுகப்படுத்தப்பட்ட பின்வரும் சட்டமுன்வடிவு, நோக்கக் காரண
விளக்கவுரையுடன் சேர்த்து, தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை விதிகளின் 130 ஆம்
விதியின் கீழ் பொதுத் தகவலுக்காக வெளியிடப்படுகின்றது.
சட்டமன்றப் பேரவை சட்டமுன்வடிவு எண். 13//20232023
சட்டமன்றப் பேரவை சட்டமுன்வடிவு எண். 13
குறித்த சில இயற்றுச் சட்டங்களை நீக்கறவு செய்வதற்கானதொரு குறித்த சில இயற்றுச் சட்டங்களை நீக்கறவு செய்வதற்கானதொரு சட்டமுன்வடிவு.சட்டமுன்வடிவு.
இணைப்புப்பட்டியலில் குறிப்பிடப்பட்டுள்ள இயற்றுச் சட்டங்கள் வழக்கத்திலிருந்தவை அல்லது மற்றபடி வழக்கத்தில் இல்லாமல் போயிருக்கிற அல்லது குறித்த வகையில் மற்றபடி வெளிப்படையாக நீக்கறவு செய்யப்பட்டதன் மூலம் தவிர பிறவாறு நடைமுறையில் இருக்கக்கூடியது அற்றுபோகக் கூடியவையான இருப்பவை கட்டாயமாக நீக்கறவு செய்யப்படுதல் வேண்டும் என்பது உகந்ததாய் இருப்பதாலும்;
இந்தியக் குடியரசின் எழுபத்தி நான்காம் ஆண்டில் தமிழ்நாடு மாநிலச்
சட்டமன்றப் பேரவையால் பின்வருமாறு சட்டமியற்றப்படுவதாகுக:-
1. இந்தச் சட்டம், 2023 ஆம் ஆண்டு தமிழ்நாடு நீக்கறவு செய்தல்
குறுந்தலைப்பு.
(இரண்டாம்) சட்டம் என்று வழங்கப்பெறும்.
குறித்த சில
2. இணைப்புப்பட்டியலில் குறிப்பிடப்பட்டுள்ள இயற்றுச் சட்டங்கள்
இயற்றுச்
ஈங்கிதனால் நீக்கறவு செய்யப்படுகின்றன.
சட்டங்களின்
நீக்கறவு.
காப்புரைகள்.
3. இந்தச் சட்டத்தால் நீக்கறவு செய்யப்படும் இயற்றுச் சட்டம் எதுவும் பிற இயற்றுச் சட்டம் எதனையும் பாதிக்காது. அதில் நீக்கறவு செய்யப்பட்ட இயற்றுச் சட்டம் பயன்படுத்தப்பட்டிருக்கிற போதும் சேர்க்கப்பட்டிருக்கிற போதும் அல்லது சுட்டப்படும் போதும்.
மற்றும் இந்தச் சட்டம் செல்லுந்தன்மையையோ, செல்லாத் தன்மையையோ அல்லது செல்திறத்தையோ அல்லது ஏற்கனவே செய்து முடிக்கப்பட்ட எதனையும் அல்லது பாதிக்கப்பட்டதையோ அல்லது உரிமையையோ, உரிமை மூலத்தையோ, கடப்பாட்டையோ அல்லது ஏற்கனவே பெறப்பட்ட கடப்பாட்டினை அதிகப்படியானதையோ அல்லது ஏற்படுத்தப்பட்டிருப்பதையோ அல்லது தீர்வு எதனையும் அல்லது தொடர்பான நடைமுறையை அல்லது பற்று எதனலிருந்தும் அல்லது பற்றினை விடுவிப்பதை, தண்டம், உதவியையோ, கடப்பாட்டினையோ, கோருதலையோ அல்லது ஏற்கனவே வழங்கப்பட்ட உறுதிமொழியையோ அல்லது நிரூபிக்கப்படும் கடந்தகால செயல் அல்லது விசயம் எதனையும் பாதிக்காது;
கொள்கை எதனையும் அல்லது சட்டத்தின் ஆட்சியை அல்லது ஏற்படுத்தப்பட்ட அதிகாரவரம்பை அல்லது அமைவுமுறையையோ அல்லது வாதுரையின் போதோ, வழக்கத்தையோ அல்லது நடைமுறையையோ அல்லது இருந்து வரும் பழக்கவழக்கத்தையோ, வழக்காறையோ, சலுகையையோ, தடையையோ, விலக்கையோ, அலுவலகத்தையோ அல்லது பணியமர்த்தத்தையோ எவ்வாறிருப்பினும் அவை முறையே எந்த முறையிலும் ஈங்கிதனால் இயற்றுச் சட்டத்தில் அல்லது இயற்றுச் சட்டம் எதிலிருந்தும் எந்த முறையிலும் உறுதி செய்யப்பட்டிருக்கலாம் அல்லது ஏற்பளிக்கப்பட்டிருக்கலாம் அல்லது அதன்மூலம் பெறப்பட்டிருக்கலாம் என்றிருக்கிற எதுவும் பாதிக்காத வகையில் இருக்கும்;
இயற்றுச் சட்டம் எதுவும் புத்துயிரளித்தல் அல்லது அதிகாரவரம்பு எதனையும் மீட்டெடுத்தல், பதவி, பழக்கவழக்கம், பொறுப்பு, உரிமை, உரிமை மூலம், சலுகை, தடை, விலக்கு, பயன்படுத்துதல், செய்தொழில், நடைமுறை அல்லது பிற பொருட்பாடு அல்லது தற்பொழுது இல்லாமல் இருக்கும் பொருள் அல்லது செல்லாற்றலிலுள்ளவை இந்தச் சட்டத்தால் நீக்கறவு செய்யப்படுவதால் பாதிப்பிற்குள்ளாகாது.
தமிழ்நாடு அரசிதழ் சிறப்பு வெளியீடு 3இணைப்புப் பட்டியல்
நீக்கறவுகள்
(2 ஆம் பிரிவைக் காண்க)
ஆண்டு எண்
குறுந்தலைப்பு
வரிசை எண். (1) (2) (3)
(4)
குடியரசுத் தலைவரின் சட்டங்கள்
1. 1976 12 1976 ஆம் ஆண்டு தமிழ்நாடு பொது வகையங்கள் விளக்கத் (திருத்தச்) சட்டம்.
2. 1976 18 1976 ஆம் ஆண்டு தமிழ்நாடு பயிரிடும் குத்தகைதாரர்கள் பாதுகாப்பு (திருத்தச்) சட்டம்.
3. 1976 39 1976 ஆம் ஆண்டு சென்னை மாநகர காவல் (திருத்தச்) சட்டம்.
4. 1977 3 1977 ஆம் ஆண்டு தமிழ்நாடு கடன் நிவாரணச் சட்டங்கள் (திருத்தச்) சட்டம்.
5. 1988 3 1988 ஆம் ஆண்டு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகம், தமிழ்நாடு, (திருத்தச்) சட்டம்.
6. 1988 13 1988 ஆம் ஆண்டு பச்சையப்பா அறக்கட்டளை மற்றும் பட்டியலிடப்பட்ட பொதுப் பொறுப்பாட்சிகள் மற்றும் அறக்கட்டளைகள் (மேலாண்மையை எடுத்துக்கொள்ளுதல்) திருத்தச் சட்டம்.
தமிழ்நாடு சட்டங்கள்
7. 1973 30 1973 ஆம் ஆண்டு தமிழ்நாடு தனியார் மின்சார விநியோக நிறுவனங்கள் (கையகப்படுத்துதல்) சட்டம்.
8. 1975 4 1974 ஆம் ஆண்டு சென்னை மாநகரக் காவல் மற்றும் தமிழ்நாடு நகர இடையூறுகள் (திருத்தச்) சட்டம்.
9. 1975 17 1975 ஆம் ஆண்டு சென்னை மாநகர காவல் (திருத்தச்) சட்டம்.
10. 1975 30 1975 ஆம் ஆண்டு தமிழ்நாடு நகர இடையூறுகள் (திருத்தச்) சட்டம்.
11. 1975 35 1975 ஆம் ஆண்டு தமிழ்நாடு சம்பளங்கள் வழங்கல் (திருத்தச்) சட்டம்.
12. 1975 37 1975 ஆம் ஆண்டு தமிழ்நாடு ஓமியோபதி மருத்துவ முறை மற்றும் ஓமியோபதி மருத்துவர்கள் (திருத்தச்) சட்டம்.
13. 1975 46 1975 ஆம் ஆண்டு தமிழ்நாடு கல்வி நிறுவனங்கள் (சொத்துக்கான தற்காலிக கட்டுப்பாடு) திருத்தம் மற்றும் செல்லுந்தன்மைச் சட்டம்.
14. 1975 50 1975 ஆம் ஆண்டு தமிழ்நாடு தனியார் மின்சார விநியோக நிறுவனங்கள் (கையகப்படுத்துதல்) திருத்தச் சட்டம்.
15. 1977 1 1977 ஆம் ஆண்டு தமிழ்நாடு கடன் நிவாரணச் சட்டங்கள் (இரண்டாம் திருத்தச்) சட்டம்.
16. 1977 10 1977 ஆம் ஆண்டு சென்னைப் பல்கலைக்கழக (திருத்தச்) சட்டம்.
17. 1978 2 1978 ஆம் ஆண்டு தமிழ்நாடு கடன் நிவாரணச் சட்டங்கள் (திருத்தச்) சட்டம்.
18. 1978 32 1978 ஆம் ஆண்டு தமிழ்நாடு மதுவிலக்கு (திருத்தச்) சட்டம்.
19. 1979 15 1979 ஆம் ஆண்டு தமிழ்நாடு இயக்கூர்தி வரிவிதிப்பு (திருத்தச்) சட்டம்.
20. 1979 42 1979 ஆம் ஆண்டு சென்னைப் பல்கலைக்கழக மற்றும் மதுரை-காமராசர் பல்கலைக்கழக (திருத்தச்) சட்டம்.
21. 1979 45 1979 ஆம் ஆண்டு தமிழ்நாடு வன (திருத்தச்) சட்டம்.
4 தமிழ்நாடு அரசிதழ் சிறப்பு வெளியீடுஆண்டு எண்
குறுந்தலைப்பு
வரிசை எண். (1) (2) (3)
(4)
22. 1979 63 1979 ஆம் ஆண்டு சென்னை மாநகர காவல் (திருத்தச்) சட்டம்.
23. 1980 7 1979 ஆம் ஆண்டு தமிழ்நாடு பயிரிடும் குத்தகைதாரர்களைப் பாதுகாத்தல் மற்றும் நியாயமான குத்தகை செலுத்துதல் (திருத்தச்) சட்டம்.
24. 1980 9 1979 ஆம் ஆண்டு சென்னைப் பல்கலைக்கழக மற்றும் மதுரை-காமராசர் பல்கலைக்கழக (இரண்டாம் திருத்தச்) சட்டம்.
25. 1980 10 1980 ஆம் ஆண்டு தமிழ்நாடு சம்பளங்கள் வழங்கல் (திருத்தச்) சட்டம்.
26. 1980 17 1980 ஆம் ஆண்டு தமிழ்நாடு பயிரிடும் குத்தகைதாரர்கள் (நியாயமான குத்தகை செலுத்துதல்) திருத்தச் சட்டம்.
27. 1981 19 1981 ஆம் ஆண்டு தமிழ்நாடு வருவாய் மீட்பு (திருத்தச்) சட்டம்.
28. 1981 38 1981 ஆம் ஆண்டு தமிழ்நாடு சம்பளங்கள் வழங்கல் (இரண்டாம் திருத்தச்) சட்டம்.
29. 1981 41 1981 ஆம் ஆண்டு தமிழ்நாடு வன (திருத்தச்) சட்டம்.
30. 1981 51 1981 ஆம் ஆண்டு தமிழ்நாடு மதுவிலக்கு (இரண்டாம் திருத்தச்) சட்டம்.
31. 1981 58 1981 ஆம் ஆண்டு தமிழ்நாடு சம்பளங்கள் வழங்கல் (மூன்றாம் திருத்தச்) சட்டம்.
32. 1981 59 1981 ஆம் ஆண்டு தமிழ்நாடு நிலச் சீர்திருத்தங்கள் (நில உச்சவரம்பு நிர்ணயித்தல்) திருத்தச் சட்டம்.
33. 1981 65 1981 ஆம் ஆண்டு தமிழ்நாடு வேளாண் தொழிலாளர்களின் நியாயமான ஊதியங்கள் (இரண்டாம் திருத்தச்) சட்டம்.
34. 1982 24 1982 ஆம் ஆண்டு தமிழ்நாடு சம்பளங்கள் வழங்கல் (இரண்டாம் திருத்தச்) சட்டம்.
35. 1982 42 1982 ஆம் ஆண்டு தமிழ்நாடு மதுவிலக்கு (திருத்தச்) சட்டம்.
36. 1983 5 1983 ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்ற (தகுதியின்மையைத் தடுக்கும்) திருத்தச் சட்டம்.
37. 1983 27 1983 ஆம் ஆண்டு தமிழ்நாடு இயக்கூர்தி வரிவிதிப்பு (திருத்தச்) சட்டம்.
38. 1983 33 1983 ஆம் ஆண்டு தமிழ்நாடு மதுவிலக்கு (இரண்டாம் திருத்தச்) சட்டம்.
39. 1983 45 1983 ஆம் ஆண்டு பாரதியார் பல்கலைக்கழக (திருத்தச்) சட்டம்.
40. 1983 46 1983 ஆம் ஆண்டு சென்னைப் பல்கலைக்கழக மற்றும் மதுரை-காமராசர் பல்கலைக்கழக (திருத்தச்) சட்டம்.
41. 1983 48 1983 ஆம் ஆண்டு தமிழ்நாடு இந்து சமய மற்றும் அறநிலைக் கொடைகள் (திருத்தம் மற்றும் செல்லுந்தன்மைச்) சட்டம்.
42. 1984 2 1983 ஆம் ஆண்டு தமிழ்நாடு நிலச் சீர்திருத்தங்கள் (நில உச்சவரம்பு நிர்ணயித்தல்) இரண்டாம் திருத்தச் சட்டம்.
43. 1984 11 1984 ஆம் ஆண்டு தமிழ்நாடு சம்பளங்கள் வழங்கல் (திருத்தச்) சட்டம்.
44. 1984 12 1984 ஆம் ஆண்டு தமிழ்நாடு திரையரங்குகள் (ஒழுங்குமுறைப்படுத்துதல்) திருத்தச் சட்டம்.
45. 1984 16 1984 ஆம் ஆண்டு பச்சையப்பா அறக்கட்டளை (மேலாண்மையை எடுத்துக்கொள்ளுதல்) திருத்தச் சட்டம்.
46. 1984 17 1984 ஆம் ஆண்டு தமிழ்நாடு நிலை வண்டிகள் மற்றும் ஒப்பந்த வண்டிகள் (கையகப்படுத்துதல்) திருத்தச் சட்டம்.
தமிழ்நாடு அரசிதழ் சிறப்பு வெளியீடு 5ஆண்டு எண்
குறுந்தலைப்பு
வரிசை எண். (1) (2) (3)
(4)
47. 1984 19 1984 ஆம் ஆண்டு சென்னை மாநகர காவல் மற்றும் தமிழ்நாடு மாவட்ட காவல் (திருத்தச்) சட்டம்.
48. 1985 15 1985 ஆம் ஆண்டு தமிழ்ப் பல்கலைக்கழக (திருத்தச்) சட்டம்.
49. 1985 20 1985 ஆம் ஆண்டு பாரதியார் பல்கலைக்கழக மற்றும் பாரதிதாசன் பல்கலைக்கழக (திருத்தச்) சட்டம்.
50. 1985 22 1985 ஆம் ஆண்டு பச்சையப்பா அறக்கட்டளை (மேலாண்மையை எடுத்துக்கொள்ளுதல்) திருத்தச் சட்டம்.
51. 1985 29 1985 ஆம் ஆண்டு தமிழ்நாடு மதுவிலக்கு (திருத்தச்) சட்டம்.
52. 1985 44 1985 ஆம் ஆண்டு தமிழ்நாடு தொழில் நிறுவனங்கள் (பணியாளருக்கு நிரந்தர தகுதிநிலை வழங்குதல்) திருத்தச் சட்டம்.
53. 1985 45 1985 ஆம் ஆண்டு தமிழ்நாடு இயக்கூர்தி வரிவிதிப்பு (திருத்தச்) சட்டம்.
54. 1986 14 1986 ஆம் ஆண்டு பச்சையப்பா அறக்கட்டளை (மேலாண்மையை எடுத்துக்கொள்ளுதல்) திருத்தச் சட்டம்.
55. 1986 16 1986 ஆம் ஆண்டு தமிழ்நாடு மதுவிலக்கு (திருத்தச்) சட்டம்.
56. 1986 19 1986 ஆம் ஆண்டு தமிழ்நாடு சம்பளங்கள் வழங்கல் (திருத்தச்) சட்டம்.
57. 1986 20 1986 ஆம் ஆண்டு பாரதியார் பல்கலைக்கழக மற்றும் பாரதிதாசன் பல்கலைக்கழக (திருத்தச்) சட்டம்.
58. 1986 21 1986 ஆம் ஆண்டு அண்ணா பல்கலைக்கழக (திருத்தச்) சட்டம்.
59. 1986 22 1986 ஆம் ஆண்டு தமிழ்ப் பல்கலைக்கழக (திருத்தச்) சட்டம்.
60. 1986 33 1986 ஆம் ஆண்டு தமிழ்நாடு மதுவிலக்கு (இரண்டாம் திருத்தச்) சட்டம்.
61. 1986 34 1986 ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்ற (தகுதியின்மையைத் தடுக்கும்) திருத்தச் சட்டம்.
62. 1986 38 1986 ஆம் ஆண்டு தமிழ்நாடு திரைப்படங்கள் (ஒழுங்குமுறைப்படுத்துதல்) திருத்தச் சட்டம்.
63. 1986 50 1986 ஆம் ஆண்டு தமிழ்நாடு அங்கீகரிக்கப்பட்ட தனியார் பள்ளிகள் (ஒழுங்குமுறைப்படுத்துதல்) திருத்தச் சட்டம்.
64. 1986 52 1986 ஆம் ஆண்டு தமிழ்நாடு கள்ளச்சாராயக்காரர்கள், மருந்துச்சரக்கு குற்றவாளிகள், குண்டர்கள், விபச்சாரத் தொழில் குற்றவாளிகள் மற்றும் குடிசை நில அபகரிப்பாளர்கள் ஆகியோரின் அபாயகரமான நடவடிக்கைகளைத் தடுத்தல் (திருத்தச்) சட்டம்.
65. 1986 57 1986 ஆம் ஆண்டு தமிழ்நாடு நிலச் சீர்திருத்தங்கள் (நில உச்சவரம்பு நிர்ணயித்தல்) திருத்தச் சட்டம்.
66. 1986 69 1986 ஆம் ஆண்டு தமிழ்நாடு சம்பளங்கள் வழங்கல் (இரண்டாம் திருத்தச்) சட்டம்.
67. 1986 72 1986 ஆம் ஆண்டு தமிழ்ப் பல்கலைக்கழக (இரண்டாம் திருத்தச்) சட்டம்.
68. 1987 1 1986 ஆம் ஆண்டு தமிழ்நாடு அங்கீகரிக்கப்பட்ட தனியார் பள்ளிகள் (ஒழுங்குமுறைப்படுத்துதல்) மற்றும் தனியார் கல்லூரிகள் (ஒழுங்குமுறைப்படுத்துதல்) திருத்தச் சட்டம்.
69. 1987 9 1987 ஆம் ஆண்டு பச்சையப்பா அறக்கட்டளை (மேலாண்மையை எடுத்துக்கொள்ளுதல்) திருத்தச் சட்டம்.
70. 1987 21 1987 ஆம் ஆண்டு அழகப்பா பல்கலைக்கழக (திருத்தச்) சட்டம்.
6 தமிழ்நாடு அரசிதழ் சிறப்பு வெளியீடுஆண்டு எண்
குறுந்தலைப்பு
வரிசை எண். (1) (2) (3)
(4)
71. 1987 24 1987 ஆம் ஆண்டு தமிழ்நாடு திரைப்படங்கள் (ஒழுங்குமுறைப்படுத்துதல்) திருத்தச் சட்டம்.
72. 1987 25 1987 ஆம் ஆண்டு தமிழ்நாடு இயக்கூர்தி விதிப்பு (இரண்டாம் திருத்தச்) சட்டம்.
73. 1987 29 1985 ஆம் ஆண்டு தமிழ்நாடு நிலச் சீர்திருத்தங்கள் (நில உச்சவரம்பு நிர்ணயித்தல்) திருத்தச் சட்டம்.
74. 1987 30 1987 ஆம் ஆண்டு தமிழ்நாடு தனியார் கல்லூரிகள் (ஒழுங்குமுறைப்படுத்துதல்) திருத்தச் சட்டம்.
75. 1987 39 1987 ஆம் ஆண்டு தமிழ்நாடு அங்கீகரிக்கப்பட்ட தனியார் பள்ளிகள் (ஒழுங்குமுறைப்படுத்துதல்) திருத்தச் சட்டம்.
76. 1987 44 1987 ஆம் ஆண்டு தமிழ்நாடு சம்பளங்கள் வழங்கல் (திருத்தச்) சட்டம்.
77. 1987 45 1987 ஆம் ஆண்டு தமிழ்நாடு தமிழ் அறிஞர்களுக்கு ஓய்வூதியம் வழங்கல் மற்றும் இதர வகைமுறைகள் (திருத்தச்) சட்டம்.
78. 1987 47 1987 ஆம் ஆண்டு தமிழ்நாடு காணொலிப் பதிவிகள் வாயிலாக தொலைக்காட்சித் திரையில் திரைப்படங்களின் கண்காட்சி (ஒழுங்குமுறைப்படுத்துதல்) திருத்தச் சட்டம்.
79. 1987 48 1987 ஆம் ஆண்டு தமிழ்நாடு திரைப்படங்கள் (ஒழுங்குமுறைப்படுத்துதல்) மூன்றாம் திருத்தச் சட்டம்.
80. 1987 50 1987 ஆம் ஆண்டு தமிழ்நாடு மருத்துவப் பல்கலைக்கழக (திருத்தச்) சட்டம்.
81. 1987 55 1987 ஆம் ஆண்டு தமிழ்நாடு நிலச் சீர்திருத்தங்கள் (நில உச்சவரம்பு நிர்ணயித்தல்) திருத்தச் சட்டம்.
82. 1987 57 1987 ஆம் ஆண்டு பச்சையப்பா அறக்கட்டளை மற்றும் பட்டியலிடப்பட்ட பொதுப் பொறுப்பாட்சிகள் மற்றும் அறக்கட்டளைகள் (மேலாண்மையை எடுத்துக்கொள்ளுதல்) மூன்றாம் திருத்தச் சட்டம்.
83. 1988 1 1987 ஆம் ஆண்டு தமிழ்நாடு கள்ளச் சாராயக்காரர்கள், மருந்துச்சரக்கு குற்றவாளிகள், குண்டர்கள், விபச்சாரத் தொழில் குற்றவாளிகள் மற்றும் குடிசை நில அபகரிப்பாளர்கள் ஆகியோரின் அபாயகரமான நடவடிக்கைகளைத் தடுத்தல் (திருத்தம்) சட்டம்.
84. 1989 1 1989 ஆம் ஆண்டு தமிழ்நாடு மதுவிலக்கு (திருத்தச்) சட்டம்.
85. 1989 2 1989 ஆம் ஆண்டு தமிழ்நாடு மதுவிலக்கு (இரண்டாம் திருத்தச்) சட்டம்.
86. 1989 11 1989 ஆம் ஆண்டு தமிழ்நாடு சம்பளங்கள் வழங்கல் (திருத்தச்) சட்டம்.
87. 1989 12 1989 ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்ற (தகுதியின்மையைத் தடுக்கும்) திருத்தச் சட்டம்.
88. 1989 13 1989 ஆம் ஆண்டு தமிழ்நாடு சிறார் சீர்திருத்தப் பள்ளிகள் (திருத்தச்) சட்டம்.
89. 1989 25 1989 ஆம் ஆண்டு தமிழ்நாடு இயக்கூர்தி வரிவிதிப்பு (திருத்தச்) சட்டம்.
90. 1989 29 1989 ஆம் ஆண்டு தமிழ்நாடு பல்கலைக்கழகங்கள் சட்டங்கள் (திருத்தச்) சட்டம்.
91. 1989 30 1989 ஆம் ஆண்டு தமிழ்நாடு நிலச் சீர்திருத்தங்கள் (நில உச்சவரம்பு நிர்ணயித்தல்) திருத்தம் (திருத்தச்) சட்டம்.
92. 1989 33 1989 ஆம் ஆண்டு தமிழ்நாடு சம்பளங்கள் வழங்கல் (இரண்டாம் திருத்தச்) சட்டம்.
93. 1990 4 1990 ஆம் ஆண்டு தமிழ்நாடு சம்பளங்கள் வழங்கல் (திருத்தச்) சட்டம்.
94. 1990 7 1990 ஆம் ஆண்டு சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் அகற்றல் (திருத்தச்) சட்டம்.
தமிழ்நாடு அரசிதழ் சிறப்பு வெளியீடு 7ஆண்டு எண்
குறுந்தலைப்பு
வரிசை எண். (1) (2) (3)
(4)
95. 1990 8 1990 ஆம் ஆண்டு பச்சையப்பா அறக்கட்டளை மற்றும் பட்டியலிடப்பட்ட பொதுப் பொறுப்பாட்சிகள் மற்றும் அறக்கட்டளைகள் (மேலாண்மையை எடுத்துக்கொள்ளுதல்) திருத்தச் சட்டம்.
96. 1990 12 1990 ஆம் ஆண்டு தமிழ்நாடு மதுவிலக்கு (திருத்தச்) சட்டம்.
97. 1990 18 1990 ஆம் ஆண்டு தமிழ்நாடு தமிழ் அறிஞர்களுக்கு ஓய்வூதியம் வழங்கல் மற்றும் இதர வகைமுறைகள் (திருத்தச்) சட்டம்.
98. 1990 20 1990 ஆம் ஆண்டு தமிழ்நாடு வழக்குரைஞர்கள் நலநிதிய (திருத்தச்) சட்டம்.
99. 1990 25 1990 ஆம் ஆண்டு தமிழ்நாடு பொது சுகாதார (திருத்தச்) சட்டம்.
100. 1990 28 1990 ஆம் ஆண்டு தமிழ்நாடு இயக்கூர்தி வரிவிதிப்பு (திருத்தச்) சட்டம்.
101. 1990 32 1989 ஆம் ஆண்டு டாக்டர் எம்.ஜி.ஆர் மருத்துவப் பல்கலைக்கழகம், தமிழ்நாடு, (திருத்தம் மற்றும் செல்லுந்தன்மைச்) சட்டம்.
102. 1990 37 1990 ஆம் ஆண்டு தமிழ்நாடு சம்பளங்கள் வழங்கல் (இரண்டாம் திருத்தம்) சட்டம்.
103. 1990 39 1990 ஆம் ஆண்டு தமிழ்நாடு குடியிருப்புச் சட்டங்கள் (திருத்தச்) சட்டம்.
104. 1991 5 1991 ஆம் ஆண்டு தமிழ்நாடு இயக்கூர்தி வரிவிதிப்பு (திருத்தச்) சட்டம்.
105. 1991 9 1991 ஆம் ஆண்டு டாக்டர் எம்.ஜி.ஆர் மருத்துவப் பல்கலைக்கழகம், தமிழ்நாடு, (திருத்தச்) சட்டம்.
106. 1991 16 1991 ஆம் ஆண்டு தமிழ்நாடு பயிரிடுதல் குத்தகைதாரர்களின் குத்தகை நிலுவை (நிவாரண) திருத்தச் சட்டம்.
107. 1991 17 1991 ஆம் ஆண்டு பச்சையப்பா அறக்கட்டளை மற்றும் பட்டியலிடப்பட்ட பொதுப் பொறுப்பாட்சிகள் மற்றும் அறக்கட்டளைகள் (மேலாண்மையை எடுத்துக்கொள்ளுதல்) திருத்தச் சட்டம்.
108. 1991 25 1991 ஆம் ஆண்டு தமிழ்நாடு பயிரிடும் குத்தகைதாரர்களின் குத்தகை நிலுவை (நிவாரணம்) இரண்டாம் திருத்தச் சட்டம்.
109. 1991 26 1991 ஆம் ஆண்டு தமிழ்நாடு பல்கலைக்கழகங்கள் சட்டங்கள் (திருத்தச்) சட்டம்.
110. 1991 31 1991 ஆம் ஆண்டு தமிழ்நாடு நீதிமன்ற கட்டணம் மற்றும் வழக்குகள் மதிப்பீடு (திருத்தச்) சட்டம்.
111. 1991 33 1991 ஆம் ஆண்டு தமிழ்நாடு இயக்கூர்தி வரிவிதிப்பு (இரண்டாம் திருத்தச்) சட்டம்.
112. 1991 37 1991 ஆம் ஆண்டு தமிழ்நாடு மதுவிலக்கு (திருத்தச்) சட்டம்.
113. 1991 39 1991 ஆம் ஆண்டு தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர் மருத்துவப் பல்கலைக்கழகம், சென்னை (மூன்றாம் திருத்தச்) சட்டம்.
114. 1991 41 1991 ஆம் ஆண்டு தமிழ்நாடு நகர் மற்றும் ஊரமைப்பு (திருத்தச்) சட்டம்.
115. 1991 42 1991 ஆம் ஆண்டு தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர் மருத்துவப் பல்கலைக்கழகம், சென்னை (இரண்டாம் திருத்தச்) சட்டம்.
116. 1991 44 1991 ஆம் ஆண்டு தமிழ்நாடு காணொலிப்பேழை பதிவிகள் வாயிலாக தொலைக்காட்சித் திரையில் திரைப்படங்களின் கண்காட்சி (ஒழுங்குமுறைப்படுத்துதல்) திருத்தச் சட்டம்.
117. 1992 1 1991 ஆம் ஆண்டு தமிழ்நாடு நகர்ப்புற நில வரிவிதிப்பு (திருத்தச்) சட்டம்.
8 தமிழ்நாடு அரசிதழ் சிறப்பு வெளியீடுஆண்டு எண்
குறுந்தலைப்பு
வரிசை எண். (1) (2) (3)
(4)
118. 1992 2 1991 ஆம் ஆண்டு தமிழ்நாடு தனியார் கல்லூரிகள் (ஒழுங்குமுறைப்படுத்துதல்) திருத்தச் சட்டம்.
119. 1992 3 1992 ஆம் ஆண்டு தமிழ்நாடு பல்கலைக்கழகங்கள் சட்டங்கள் (திருத்தச்) சட்டம்.
120. 1992 5 1992 ஆம் ஆண்டு தமிழ்நாடு மாநில வீட்டு வசதி வாரியம் (திருத்தம் மற்றும் செல்லுந்தன்மைச்) சட்டம்.
121. 1992 6 1992 ஆம் ஆண்டு சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் அகற்றல் (திருத்தச்) சட்டம்.
122. 1992 8 1992 ஆம் ஆண்டு தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர் மருத்துவப் பல்கலைக்கழகம், சென்னை (திருத்தச்) சட்டம்.
123. 1992 9 1991 ஆம் ஆண்டு தமிழ்நாடு பல்கலைக்கழகங்கள் சட்டங்கள் (இரண்டாம் திருத்தச்) சட்டம்.
124. 1992 10 1992 ஆம் ஆண்டு பச்சையப்பா அறக்கட்டளை மற்றும் பட்டியலிடப்பட்ட பொதுப் பொறுப்பாட்சிகள் மற்றும் அறக்கட்டளைகள் (மேலாண்மையை எடுத்துக்கொள்ளுதல்) திருத்தச் சட்டம்.
125. 1992 21 1992 ஆம் ஆண்டு தமிழ்நாடு பல்கலைக்கழகங்கள் சட்டங்கள் (இரண்டாம் திருத்தச்) சட்டம்.
126. 1992 25 1992 ஆம் ஆண்டு தமிழ்நாடு பூமிதான (திருத்தச்) சட்டம்.
127. 1992 28 1992 ஆம் ஆண்டு தமிழ்நாடு நகர் மற்றும் ஊரமைப்பு (திருத்தச்) சட்டம்.
128. 1992 34 1992 ஆம் ஆண்டு தமிழ்நாடு இயக்கூர்தி வரிவிதிப்பு (திருத்தச்) சட்டம்.
129. 1992 35 1992 ஆம் ஆண்டு தமிழ்நாடு இயக்கூர்தி வரிவிதிப்பு (இரண்டாம் திருத்தச்) சட்டம்.
130. 1992 38 1992 ஆம் ஆண்டு தமிழ்நாடு இந்து சமய மற்றும் அறநிலைக் கொடைகள் (திருத்தச்) சட்டம்.
131. 1992 47 1992 ஆம் ஆண்டு தமிழ்நாடு மதுவிலக்கு (திருத்தச்) சட்டம்.
132. 1992 48 1992 ஆம் ஆண்டு தமிழ்நாடு மதுவிலக்கு (மூன்றாம் திருத்தம்) திருத்தச் சட்டம்.
133. 1993 1 1992 ஆம் ஆண்டு சென்னைப் பல்கலைக்கழக மற்றும் அண்ணாமலைப் பல்கலைக்கழக (திருத்தச்) சட்டம்.
134. 1993 5 1992 ஆம் ஆண்டு தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழக (இரண்டாம் திருத்தச்) சட்டம்.
135. 1993 9 1992 ஆம் ஆண்டு சென்னைப் பல்கலைக்கழக மற்றும் அண்ணாமலைப் பல்கலைக்கழக (இரண்டாம் திருத்தச்) சட்டம்.
136. 1993 14 1993 ஆம் ஆண்டு தமிழ்நாடு மதுவிலக்கு (திருத்தச்) சட்டம்.
137. 1993 15 1993 ஆம் ஆண்டு தமிழ்நாடு இயக்கூர்தி வரிவிதிப்பு (திருத்தச்) சட்டம்.
138. 1993 16 1993 ஆம் ஆண்டு தமிழ்நாடு இயக்கூர்தி வரிவிதிப்பு (இரண்டாம் திருத்தச்) சட்டம்.
139. 1993 33 1993 ஆம் ஆண்டு தமிழ்நாடு இயக்கூர்தி வரிவிதிப்பு (மூன்றாம் திருத்தச்) சட்டம்.
140. 1993 34 1993 ஆம் ஆண்டு தமிழ்நாடு தமிழ் அறிஞர்களுக்கு ஓய்வூதியம் வழங்கல் மற்றும் இதர வகைமுறைகள் (திருத்தச்) சட்டம்.
141. 1994 4 1993 ஆம் ஆண்டு தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழக (திருத்தச்) சட்டம்.
142. 1994 8 1994 ஆம் ஆண்டு தமிழ்நாடு திறந்தவெளி இடங்கள் (சிதைவினைத்தடுத்தல்) திருத்தச் சட்டம்.
143. 1994 10 1994 ஆம் ஆண்டு தமிழ்நாடு இயக்கூர்தி வரிவிதிப்பு (திருத்தச்) சட்டம்.
தமிழ்நாடு அரசிதழ் சிறப்பு வெளியீடு 9ஆண்டு எண்
குறுந்தலைப்பு
வரிசை எண். (1) (2) (3)
(4)
144. 1994 11 1994 ஆம் ஆண்டு தமிழ்நாடு திரைப்படங்கள் (ஒழுங்குமுறைப்படுத்துதல்) திருத்தச் சட்டம்.
145. 1994 13 1994 ஆம் ஆண்டு தமிழ்நாடு தொழிலாளர் நல நிதிய (திருத்தச்) சட்டம்.
146. 1994 16 1993 ஆம் ஆண்டு தமிழ்நாடு சங்கங்கள் பதிவு (திருத்தச்) சட்டம்.
147. 1994 30 1994 ஆம் ஆண்டு தமிழ்நாடு இந்து சமய மற்றும் அறநிலைக் கொடைகள் (திருத்தச்) சட்டம்.
148. 1994 36 1994 ஆம் ஆண்டு தமிழ்நாடு இயக்கூர்தி வரிவிதிப்பு (இரண்டாம் திருத்தச்) சட்டம்.
149. 1994 39 1994 ஆம் ஆண்டு தமிழ்நாடு இந்து சமய மற்றும் அறநிலைக் கொடைகள் (நான்காம் திருத்தச்) சட்டம்.
150. 1994 40 1994 ஆம் ஆண்டு தமிழ்நாடு குடிநீர் வழங்கல் மற்றும் வடிகால் வாரியம் (திருத்தச்) சட்டம்.
151. 1994 41 1994 ஆம் ஆண்டு சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் அகற்றல் (திருத்தச்) சட்டம்.
152. 1994 44 1994 ஆம் ஆண்டு தமிழ்நாடு பிச்சை எடுத்தலை தடைசெய்தல் (திருத்தச்) சட்டம்.
153. 1994 46 1994 ஆம் ஆண்டு தமிழ்நாடு பொதுச் சொத்து (சேதம் மற்றும் இழப்பினை தடுத்தல்) திருத்தச் சட்டம்.
154. 1994 47 1994 ஆம் ஆண்டு தமிழ்நாடு நிலச் சீர்திருத்தங்கள் (நில உச்சவரம்பு நிர்ணயித்தல்) திருத்தச் சட்டம்.
155. 1994 50 1994 ஆம் ஆண்டு தமிழ்நாடு சிறார் சீர்திருத்தப் பள்ளிகள் (திருத்தச்) சட்டம்.
156. 1994 54 1994 ஆம் ஆண்டு தமிழ்நாடு இயக்கூர்தி வரிவிதிப்பு (மூன்றாம் திருத்தச்) சட்டம்.
157. 1994 60 1994 ஆம் ஆண்டு பச்சையப்பா அறக்கட்டளை மற்றும் பட்டியலிடப்பட்ட பொதுப் பொறுப்பாட்சிகள் மற்றும் அறக்கட்டளைகள் (மேலாண்மையை எடுத்துக்கொள்ளுதல்) திருத்தச் சட்டம்.
158. 1995 13 1995 ஆம் ஆண்டு சென்னை பெருநகரப் பகுதி நிலத்தடி நீர் (ஒழுங்குமுறைப்படுத்துதல்) திருத்தச் சட்டம்.
159. 1995 14 1995 ஆம் ஆண்டு தமிழ்நாடு குடிநீர் வழங்கல் மற்றும் வடிகால் வாரியம் (இரண்டாம் திருத்தச்) சட்டம்.
160. 1995 17 1995 ஆம் ஆண்டு தமிழ்நாடு குடிநீர் வழங்கல் மற்றும் வடிகால் வாரியம் (திருத்தச்) சட்டம்.
161. 1995 25 1995 ஆம் ஆண்டு தமிழ்நாடு இந்து சமய மற்றும் அறநிலைக் கொடைகள் (மூன்றாம் திருத்தச்) சட்டம்.
162. 1995 41 1995 ஆம் ஆண்டு சென்னை மாநகர காவல் (இரண்டாம் திருத்தச்) சட்டம்.
163. 1997 24 1997 ஆம் ஆண்டு தமிழ்நாடு தகவல் அறியும் உரிமைச் சட்டம்.
164. 1997 64 1997 ஆம் ஆண்டு தமிழ்நாடு மின்சார (நுகர்வு மீதான வரிவிதிப்பு) திருத்தச் சட்டம்.
165. 1999 18 1999 ஆம் ஆண்டு தமிழ்நாடு கடைகள் மற்றும் நிறுவனங்கள் (திருத்தச்) சட்டம்.
166. 2000 45 2000 ஆம் ஆண்டு தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழக (திருத்தச்) சட்டம்.
167. 2003 37 2003 ஆம் ஆண்டு தமிழ்நாடு அத்தியாவசிய சேவைகள் பராமரிப்பு (திருத்தச்) சட்டம்.
168. 2008 32 2008 ஆம் ஆண்டு தமிழ்நாடு மதிப்பு கூட்டு வரி (திருத்தச்) சட்டம்.
169. 2008 60 2008 ஆம் ஆண்டு தமிழ்நாடு விற்பனை வரி (நிலுவைத்தொகையை தீர்வு செய்தல்) சட்டம்.
10 தமிழ்நாடு அரசிதழ் சிறப்பு வெளியீடுஆண்டு எண்
குறுந்தலைப்பு
வரிசை எண். (1) (2) (3)
(4)
170. 2009 17 2009 ஆம் ஆண்டு தமிழ்நாடு மதிப்பு கூட்டு வரி (திருத்தச்) சட்டம்.
171. 2009 23 2009 ஆம் ஆண்டு தமிழ்நாடு மதிப்பு கூட்டு வரி (மூன்றாம் திருத்தச்) சட்டம்.
172. 2010 10 2010 ஆம் ஆண்டு தமிழ்நாடு கேளிக்கை வரி (திருத்தச்) சட்டம்.
173. 2010 20 2010 ஆம் ஆண்டு தமிழ்நாடு விற்பனை வரி (நிலுவைத்தொகையை தீர்வு செய்தல்) சட்டம்.
174. 2010 41 2010 ஆம் ஆண்டு தமிழ்நாடு விற்பனை வரி (நிலுவைத்தொகையை தீர்வு செய்தல்) திருத்தச் சட்டம்.
175. 2017 46 2017 ஆம் ஆண்டு தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழக (திருத்தச்) சட்டம்.
தமிழ்நாடு அரசிதழ் சிறப்பு வெளியீடு 11நோக்கக் காரண விளக்கவுரைநோக்கக் காரண விளக்கவுரை
தமிழ்நாடு மாநில சட்ட ஆணையமானது, குறித்த சில இயற்றுச் சட்டங்கள் மிகவும் பழமையானதாகவும் வழக்கத்தில் இல்லாமல் போயிருக்கிறதாலும், அச்சட்டங்களை நீக்கறவு செய்வதற்கு, 2018 ஆம் ஆண்டு மே மாதம் தொடங்கி 2022 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் முடிகின்ற காலகட்டத்திலான தனது பல்வேறு அறிக்கைகளில் (இருபதாம் அறிக்கை முதல் அறுபத்தி ஆறாம் அறிக்கை வரை) பரிந்துரை செய்துள்ளது. மாநில சட்ட ஆணையத்தின் கூறப்பட்ட பரிந்துரைகளைக் கருத்தில் கொண்டும், மிகவும் பழமையான மற்றும் வழக்கத்தில் இல்லாமல் போயிருக்கிற சட்டங்களை நீக்கறவு செய்வதெனவும் அரசு முடிவு செய்துள்ளது.
2. இந்தச் சட்டமுன்வடிவு மேற்சொன்ன முடிவிற்கு செயல் வடிவம் கொடுக்க விழைகிறது.
எஸ். இரகுபதி, சட்டத்துறை அமைச்சர்.
கி. சீனிவாசன், செயலாளர்.
தலைமைச் செயலகம், சென்னை, 2023 ஜனவரி 19.
12 தமிழ்நாடு அரசிதழ் சிறப்பு வெளியீடு தமிழ்நாடு அரசிதழ் சிறப்பு வெளியீடு 132023ஆம் ஆண்டு ஏப்ரல் திங்கள் 19 ஆம் நாளன்று தமிழ்நாடு சட்டமன்றப்
பேரவையில் அறிமுகப்படுத்தப்பட்ட பின்வரும் சட்டமுன்வடிவு, நோக்கக் காரண
விளக்கவுரையுடன் சேர்த்து, தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை விதிகளின் 130 ஆம்
விதியின் கீழ் பொதுத் தகவலுக்காக வெளியிடப்படுகின்றது.
சட்டமன்றப் பேரவை சட்டமுன்வடிவு எண். 14//20232023
சட்டமன்றப் பேரவை சட்டமுன்வடிவு எண். 14
2018 ஆம் ஆண்டு தமிழ்நாடு நகர் மற்றும் ஊரமைப்புச் 2018 ஆம் ஆண்டு தமிழ்நாடு நகர் மற்றும் ஊரமைப்புச் (மூன்றாவது திருத்தச்) சட்டத்தினை திருத்தம் செய்வதற்கானதொரு (மூன்றாவது திருத்தச்) சட்டத்தினை திருத்தம் செய்வதற்கானதொரு சட்டமுன்வடிவு.சட்டமுன்வடிவு.
குறுந்தலைப்பு.
இந்தியக் குடியரசின் எழுபத்தி நான்காவது ஆண்டில் தமிழ்நாடு
மாநிலச் சட்டமன்றப் பேரவையால் பின்வருமாறு சட்டமியற்றப்படுவதாகுக:-
1. இந்தச் சட்டம், 2023 ஆம் ஆண்டு தமிழ்நாடு நகர் மற்றும் ஊரமைப்பு (மூன்றாவது திருத்த) திருத்தச் சட்டம் என வழங்கப்பெறும்.
தமிழ்நாடு சட்டம்
2 ஆம் பிரிவிற்கான 31/2018.
திருத்தம்.
2. (இதன்பின்பு இதில் முதன்மைச் சட்டம் எனக் குறிப்பிடப்படுவதான) 2018 ஆம் ஆண்டு தமிழ்நாடு நகர் மற்றும் ஊரமைப்புச் (மூன்றாவது திருத்தச்) சட்டத்தின் 2 ஆம் பிரிவிலுள்ள, (3) ஆம் கூறிற்காக, பின்வரும் கூறானது மாற்றாக அமைக்கப்படுதல் வேண்டும், அதாவது:-
(3) 22 ஆம் கூறிற்கு பின்பு, பின்வரும் கூறானது
உட்புகுத்தப்படுதல் வேண்டும், அதாவது:-
(22-A)- நிலச் சேர்ம பகுதி மேம்பாட்டுத் திட்டம் என்பது, தனி நபரால் அல்லது தனி நபர்களால் ஒன்றாக இணைக்கப்பட்டுள்ள குழுவால் சொந்தமாக்கப்பட்ட நிலத்தில் உள்ள ஒரு திட்டம் மற்றும் உரிய திட்ட அதிகார அமைப்பினால் மேம்படுத்தப்பட்ட மற்றும் அத்தகைய மேம்பாட்டு நிலத்தின் பகுதியை அசல் உரிமையாளருக்கு உரிமை மாற்றம் செய்தல் மற்றும் அத்தகைய நிலத்தின் எஞ்சியுள்ள பகுதியை பொதுவான வசதிகள் மற்றும் சிறப்பு வசதிகள் உருவாக்குவதற்காக அல்லது விற்பனைக்காக பயன்படுத்துதல் என்று பொருள்படும்..
6 ஆம் பிரிவிற்கான 3. திருத்தச் சட்டத்தின் 6 ஆம் பிரிவிற்காக, பின்வரும் பிரிவானது
மாற்றீடு.
மாற்றாக அமைக்கப்படுதல் வேண்டும், அதாவது:-
6. முதன்மைச் சட்டத்தின் IV எனும் அத்தியாயத்திற்கு பின்பு,
பின்வரும் அத்தியாயம் உட்புகுத்தப்படுதல் வேண்டும், அதாவது:-
அத்தியாயம் IV A.அத்தியாயம் IV A.
நிலச் சேர்ம பகுதி மேம்பாட்டுத் திட்டம்.நிலச் சேர்ம பகுதி மேம்பாட்டுத் திட்டம்.
39-A. நிலச் சேர்ம பகுதி மேம்பாட்டுத் திட்டம் ஒன்றை உருவாக்குவதற்கான உட்கருத்தை விளம்புகை செய்தல்.- (1) உரிய திட்ட அதிகார அமைப்பானது, அறிவிக்கையின் மூலம், ஒழுங்கான முழுமையான நடைமுறையில் அதன் அதிகார வரம்பிற்குட்பட்ட பகுதி எதனையும் மேம்படுத்தும் நோக்கத்திற்காக, அந்த பகுதியில் நிலச் சேர்ம பகுதி மேம்பாட்டுத் திட்டம் (இதன் பின்னர் இந்த அத்தியாயத்தில் திட்டம் எனச் சுட்டப்படலாகும்) ஒன்றை உருவாக்குவதற்கு அதன் உட்கருத்தை விளம்புகைச்செய்யலாம்:
வரம்புரையாக உரிய திட்ட அதிகார அமைப்பு, அத்தகைய விளம்புகையை வெளியிடுவதற்கு முன்னால் அரசினுடைய முன் அனுமதியைப் பெறுதல் வேண்டும்:
மேலும் வரம்புரையாக சென்னைப் பெருநகர வளர்ச்சிக் குழுமம் அல்லாத உரிய திட்ட அதிகார அமைப்பு எதுவும், இயக்குநர் மூலமாக அரசுக்கு அத்தகைய கருத்துருவை அனுப்புதல் வேண்டும்:
14 தமிழ்நாடு அரசிதழ் சிறப்பு வெளியீடுமேலும் வரம்புரையாக உரிய திட்ட அதிகார அமைப்பானது, அரசுத்துறை, பொதுத்துறை நிறுவனம் எதுவும் அல்லது மாநில அரசு அல்லது மைய அரசால் சொந்தமாக்கப்பட்ட அல்லது கட்டுப்படுத்தப்பட்ட சட்டப்படி அமைந்த குழுமம் அல்லது திட்டப்பகுதி ஒன்றில் எழுபது விழுக்காடு நில உரிமையாளர்கள் ஆகியோரால் முன்மொழியப்பட்ட திட்டம் எதனையும் மாற்றத்துடனோ அல்லது மாற்றம் எதுவும் இல்லாமலோ ஏற்றுக் கொள்ளலாம்.
விளக்கம்.-இந்தப்பிரிவு மற்றும் 39-C ஆம் பிரிவின் (1) ஆம் உட்பிரிவின் நோக்கத்திற்காக, "மாநில அரசு அல்லது மைய அரசு எதனினாலும் சொந்தமாக்கப்பட்ட அல்லது கட்டுப்படுத்தப்பட்ட சட்டப்படி அமைந்த குழுமம்" என்பது 2013 ஆம் ஆண்டு நிறுமங்கள் சட்டத்தின் (மையச் சட்டம். 18/2013) 2 ஆம் பிரிவின் (45)-ஆம் கூறின் பொருளின்படியான அரசு நிறுமம் ஒன்று, 1975-ஆம் ஆண்டு தமிழ்நாடு சங்கங்கள் பதிவுச் சட்டத்தின்படி (தமிழ்நாடு சட்டம் 27/1975) பதிவுசெய்யப்பட்ட சங்கம் ஒன்று, அல்லது மாநிலத்தில் அப்போதைக்கு நடைமுறையில் உள்ள நேரிணையான சட்டம் எதனின்படியும் மாநில அரசு எவற்றினாலும் நிறுவப்பட்ட அல்லது நிருவகிக்கப்பட்ட சங்கம் மற்றும் மைய அரசால் அல்லது மாநில அரசால் அல்லது மைய அரசால் பகுதியாகவும் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட மாநில அரசுகளால் பகுதியாகவும் கொடுக்கப்பட்ட பங்கு மூலதனம் ஐம்பத்தொன்று விழுக்காட்டிற்கு குறையாமலிருக்கின்ற மாநிலத்தில் நடைமுறையிலிருக்கின்ற கூட்டுறவு சங்கங்கள் தொடர்புடைய சட்டம் எதனின் பொருளின்படியான ஒரு கூட்டுறவு சங்கம் ஆகியவை உள்ளடங்கலான மைய அல்லது மாநில சட்டத்தின்படியாகவோ அல்லது அதன்படியாகவோ அமைக்கப்பட்ட கூட்டுருமக்குழுமம் எதுவும் என்று பொருள்படும்.
(2) (1)ஆம் உட்பிரிவின்படியான விளம்புகையானது, உரிய திட்ட அதிகார அமைப்பால் வகுத்துரைக்கப்படலாகும் அத்தகைய முறையில் அந்தப் பகுதி மாவட்ட அரசிதழில் மற்றும் அந்தப் பகுதியின் முதன்மையான தினசரி நாளிதழ்கள் இரண்டில் அறிவிக்கையின் வாயிலாக, அத்தகைய முறையில் வெளியிடப்படுதல் வேண்டும். அவற்றில் ஒன்று தமிழ் நாளிதழாக இருத்தல் வேண்டும் மற்றும் அத்தகைய அறிவிக்கையில் வகுத்துரைக்கப்படலாகும் அத்தகைய விவரங்களைக் கொண்டிருத்தல் வேண்டும் மற்றும் முன்மொழியப்பட்ட திட்டப்பகுதியின் எல்லைகளைக் காட்டும் திட்டத்தினை பொதுமக்கள் ஆய்வு செய்வதற்கான நேரம் மற்றும் இடத்தினை குறிப்பிடுதல் வேண்டும்.
39-B. திட்டங்களை உருவாக்குவதற்கு உரிய திட்ட அதிகார
அமைப்பை வேண்டுறுத்துவதற்கு அரசுக்கான அதிகாரம்.- 39-A ஆம் பிரிவில் அடங்கியுள்ள எது எவ்வாறு இருப்பினும், அரசானது, குறித்துரைக்கப்பட்ட பகுதி எதற்காகவும் திட்டம் ஒன்றை உருவாக்குவதற்கு மற்றும் அதன் ஒப்புதலுக்காகவும், உரிய திட்ட அதிகார அமைப்பு எதற்கும் பணிப்புரை வழங்கலாம். அத்தகைய நேர்வில், உரிய திட்ட அதிகார அமைப்பு, 39-A ஆம் பிரிவின் கீழ் திட்டம் ஒன்றை உருவாக்குவதற்கான உட்கருத்தை விளம்புகை செய்வதற்தாக மற்றும் இந்த அத்தியாயத்தில் வகைசெய்யப்பட்ட திட்டத்தை தயாரிப்பதற்காக மேலும் செயலாற்றுதல் வேண்டும்.
39-C. நிலத்தின் மேம்பாட்டுப் பணிகளின் மீதான கட்டுப்பாடுகள்.- (1) 39-A ஆம் பிரிவின்படி திட்டம் ஒன்றினை உருவாக்குவதற்கான உட்கருத்துடன் விளம்புகையானது வெளியிடப்பட்ட தேதியன்றோ அல்லது அதன் பின்போ, நபர் எவரும், இந்தத்திட்டத்தில் அடங்கும் பகுதிக்குள், உரிய திட்ட அதிகார அமைப்பிடமிருந்து அனுமதி பெறாமல் மேம்பாட்டுபணி எதனையும் நிறைவேற்றுதலாகாது:
தமிழ்நாடு அரசிதழ் சிறப்பு வெளியீடு 15வரம்புரையாக, ஏற்பளிக்கப்பட்ட வரைவுத் திட்டத்தின் வெளியீட்டுத் தேதியில் அல்லது அதன் பின்னர், உரிய திட்ட அதிகார அமைப்பானது, நியமன அலுவலருடன் கலந்தாலோசித்து, அரசுத் துறை எதற்கும் பொதுத்துறை நிறுவனம் அல்லது மாநில அரசு அல்லது மைய அரசால் எதனாலும் சொந்தமாக்கப்பட்ட அல்லது கட்டுப்படுத்தப்பட்ட சட்டப்படி அமைந்த குழுமம் ஆகியவற்றுக்கு மேம்பாட்டு பணி எதனையும் செய்வதற்கான அனுமதியினை வழங்கலாம்:
மேலும் வரம்புரையாக, பிற நபர் எவரும், வகுத்துரைக்கப்படலாகிறவாறான வடிவத்திலும், முறையிலும் ஏற்பளிக்கப்பட்ட வரைவுத்திட்டத்தின் வெளியீட்டுக்குப் பின்னர், மேம்படுத்தும் பணி எதனையும் செய்வதற்கான அனுமதி வேண்டி விண்ணப்பிக்கலாம்.
(2) திட்டப் பகுதியில் மேம்பாட்டுப் பணி எதனையும் செய்வதற்கான அனுமதிக்கான விண்ணப்பம் ஒன்றைப் பெற்றதன் பேரில் உரிய திட்ட அதிகார அமைப்பானது, அதற்கான எழுத்து வடிவிலான ஒப்புகைச் சீட்டு ஒன்றினை அனுப்புதல் வேண்டும்.
(3) உரிய திட்ட அதிகார அமைப்பானது நியமன அலுவலருடன் கலந்தாலோசித்த பின்னர், அனுமதியின் தேவைக்கான நோக்கம் மற்றும் அத்தகைய நோக்கத்திற்கான தகுதிவாய்ந்த இடம் தொடர்பாக, அது பொருத்தமெனக் கருதப்படும் அத்தகைய நிபந்தனைக்குட்பட்டு திட்டப்பகுதியில் மேம்பாட்டுப் பணியினைச் செய்வதற்கான அனுமதியினை வழங்கலாம் அல்லது அதற்கான காரணங்களைக் குறிப்பிட்டு அனுமதியினை வழங்க மறுக்கலாம்:
வரம்புரையாக, அத்தகைய நிபந்தனை எதுவும், ஏற்பளிக்கப்பட்ட
வரைவுத் திட்டத்திற்கிணங்கியவாறு இருத்தல் வேண்டும்.
(4) நபர் எவரும், (1) ஆம் உட்பிரிவின் வகைமுறைகள் அல்லது (4) ஆம் உட்பிரிவின்படி விதிக்கப்பட்ட நிபந்தனைகள் எதனையும் மீறுகின்றவிடத்து, உரிய திட்ட அதிகார அமைப்பானது அத்தகைய நபரை, செயல்பட்டுக்கொண்டிருக்கும் பணியினை நிறுத்துவதற்கும் மற்றும், வகுத்துரைக்கப்படலாகும் முறையில் விசாரணை ஒன்றை நடத்திய பின்னர், கட்டடம் அல்லது பிற மேம்பாடு எதனையும் அகற்றுவதற்கும், இடித்துத்தள்ளுவதற்கும் அல்லது மாற்றியமைப்பதற்கும் மற்றும் அத்தகைய விதிமீறல் நடந்த நிலம் அல்லது கட்டடத்தை, அதன் உண்மை நிலையிலேயே மீண்டும் உருவாக்குவதற்கும் எழுதப்பட்ட அறிவிக்கையின் மூலம் பணிக்கலாம்.
(5) இந்தப் பிரிவில் விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளானது, 39-I ஆம் பிரிவின் (2) ஆம் உட்பிரிவின் கீழ் உட்கருத்தின் விளம்புகை காலாவதியாகின்ற நிகழ்வு அல்லது 39-O-ஆம் பிரிவின் (2) ஆம் உட்பிரிவின் கீழ் முதனிலைத் திட்டத்தினை வெளியிடுவதன்பேரில் அல்லது, 39-U ஆம் பிரிவின்படி திட்டத்தினை திரும்பப் பெறுமிடத்தும், செயல்பாட்டிலிருந்து நிறுத்தம் செய்யப்படுதல் வேண்டும்.
(6) (1) ஆம் உட்பிரிவில் அடங்கியுள்ள எது எவ்வாறிருப்பினும் 39-I ஆம் உட்பிரிவின் படி, வரைவுத் திட்டமானது வெளியிடப்பட்ட பின்னர், உரிய திட்ட அதிகார அமைப்பானது, திட்டத்தின் நோக்கத்திற்காக, திட்டப்பகுதியில் மேம்பாட்டுப்பணி எதனையும் செயல்படுத்தலாம்.
(7) இந்தப் பிரிவின் வகைமுறைகளானது, மைய அரசு அல்லது மாநில அரசு ஒன்றினால் மேற்கொள்ளும் செயல்பாட்டிலுள்ள கட்டுமானம் எதற்கும் பொருந்தாது.
16 தமிழ்நாடு அரசிதழ் சிறப்பு வெளியீடுவிளக்கம்.- செயல்பாட்டிலுள்ள கட்டுமானம் என்பது, பின்வரும் சேவைகள் எதனுடைய செயல்பாடு, பராமரிப்பு, மேம்பாடு அல்லது செயலுறுத்தம் எதற்காகவும் தேவையானதான தற்காலிகமாக அல்லது நிரந்தரமாகவுள்ள, கட்டுமானம் எதுவும் என்று பொருள்படும், அதாவது:-
(a) இருப்புப்பாதைகள்;
(b) தேசிய நெடுஞ்சாலைகள்;
(c) தேசிய நீர்வழிப்பாதைகள்;
(d) பெரிய துறைமுகங்கள்;
(e) வான்வழிகள் மற்றும் வானூர்தித் தளங்கள்;
(f) தபால்கள், தொலைபேசிகள், கம்பியில்லா பேசிகள்,
ஒலி பரப்பல் மற்றும் இதுபோன்ற பிற தொலை
தொடர்பு முறைகள்;
(g) மின்சாரத்திற்கான வட்டார மின் தொகுப்பு;
(h) பாதுகாப்புப் படை;
(i) துரித ரயில்;
(j) சிறு துறைமுகங்கள்; அல்லது
(k) அத்தகைய சேவையின் செயல்பாடு, பராமரிப்பு, மேம்பாடு அல்லது செயலுறுத்தமானது சமூக வாழ்விற்குத் தேவையானதென மாநில அரசானது கருதினால், அது அறிவிக்கையின் மூலம், இந்தக் கூறின் நோக்கத்திற்காக, ஒரு சேவையென, விளம்புகை செய்யப்பட வேண்டிய பிற சேவை எதுவும்.
(8) ஐயங்களைக் களைவதற்காக, இதன்மூலம் விளம்புகை
செய்யப்படுவது யாதெனில்,-
(i) இரயில்வேயினைப் பொருத்த நேர்வில், புதிய குடியிருப்புக் கட்டடங்கள் (வரையறுக்கப்பட்ட அத்தியாவசிய செயல்பாட்டு ஊழியர்களுக்கான தங்கும் விடுதிகள், குடியிருப்புகள் தவிர), ரயில்வே குடியிருப்புகளிலுள்ள சாலைகள் மற்றும் வடிகால்கள், உணவுவிடுதிகள், மன்றங்கள், நிறுவனங்கள் மற்றும் பள்ளிகள்; மற்றும்
(ii) பிற சேவைகள் எதனையும் பொருத்த நேர்வில், புதிய கட்டடம், புதிய கட்டமைப்பு அல்லது புதிய நிறுவல் அல்லது அதன் மீது செய்யப்பட்ட விரிவாக்க எதுவும் ஒரு செயல்பாட்டு கட்டடம் என கருதப்படுதல் ஆகாது.
39-D. நியமன அலுவலரை நியமனம் செய்தல்.- 39-A ஆம் பிரிவின் (1) உட்பிரிவின் கீழ் உட்கருத்தின் விளம்புகை வெளியிடப்பட்ட தேதியிலிருந்து ஒரு மாதத்திற்குள், இத்திட்டத்தின் நோக்கத்திற்காக, நேர்விற்கேற்ப, நகரமைப்பு மற்றும் சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம் அல்லது தொடர்புடைய நகர்புர வளர்ச்சிக் குழுமத்தின் உதவி இயக்குநர் படிநிலைக்கு குறையாத ஒரு அலுவலரை நியமித்தல் வேண்டும் மற்றும் நியமன அலுவலராக துணைத் திட்டமிடுபவரின் படிநிலைக்கு குறையாத ஓர் அலுவலரை நியமனஞ்செய்தல் வேண்டும்.
தமிழ்நாடு அரசிதழ் சிறப்பு வெளியீடு 1739-E. நியமன அலுவலரின் கடமைகள். நியமன
அலுவலரின் கடமைகளாவன,
(a) வரைவு திட்டத்தின் மீது பெறப்பட்ட ஆட்சேபனைகள் மற்றும் கருத்துக்களை ஆய்வு செய்வதில் உரிய திட்ட அதிகார அமைப்பிற்கு உதவுதல்;
(b) முதனிலை திட்டம் மற்றும் இறுதி திட்டத்தினை தயார்
செய்தல்;
(c) பொதுநோக்கத்திற்கான மனைகள் உள்ளடங்கலான இறுதி மனைகளின் எல்லையை வரையறை செய்தல் மற்றும் இறுதி மனை ஒதுக்கீடு பெற்றவர்களை முடிவு செய்தல்;
(d) நில உரிமையாளரிடமிருந்து வசூலிக்கப்பட வேண்டிய
அல்லது செலுத்தப்பட வேண்டிய தொகையினை மதிப்பீடு செய்தல்;
(e) நில உரிமையாளர்களுக்கு கொடுக்கப்படவேண்டிய
இழப்பீட்டினை நிர்ணயம் செய்தல்; மற்றும்
(f) வகுத்துரைக்கப்படலாகும் அத்தகைய பிற பொருட்பாடுகள்.
39-F. நியமன அலுவலரின் சில முடிவுகள் இறுதியானது. செலவுத்தொகையினை மதிப்பீடு செய்தல், உரிமையாளரால் அல்லது உரிமையாளருக்கு செலுத்தப்பட வேண்டிய தொகையினை மதிப்பீடு செய்தல், உரிமையாளர்களுக்கு செலுத்தப்படக்கூடிய இழப்பீட்டினை நிர்ணயம் செய்தல் மற்றும் மேம்பாட்டு உரிமையினை உரிமைமாற்றம் செய்தல் ஆகியவை தவிர உள்ள பொருட்பாடுகளில் நியமன அலுவலரின் ஒவ்வொரு முடிவும் இறுதியானதாக இருத்தல் வேண்டும் மற்றும் தொடர்புடைய அனைத்தையும் கட்டுப்படுத்துதல் வேண்டும்.
39-G. பூசலிலுள்ள உடைமை. (1) திட்டம் ஒன்றை தயாரிப்பதற்கான கருத்தின் விளம்புகையின் பொருட்டு, பகுதி ஒன்று உள்ளடங்கலாக நிலம் அல்லது கட்டடம் எதனின் உடைமையின் கோரிக்கை பூசல் ஏற்படுத்தப்படுகின்றவிடத்தும், வருவாய் பதிவுருக்களில் செய்யப்பட்ட பதிவு எதுவும் அல்லது மிகவும் பொருத்தமான அத்தகைய பூசல் கோரிக்கைக்கு துல்லியமானதாக அல்லாத அல்லது முடிவுறாததாக இருக்குமிடத்தும், உரிய திட்ட அதிகார அமைப்பு அல்லது நியமன அலுவலர் ஆகியோரின் கோரிக்கையின்பேரில், அந்தத்திட்டத்தை நிறைவேற்றுவதற்கு முன்னால் எந்த நேரத்திலும், நிலம் அல்லது கட்டடத்திற்கு உரிமையாளராக கருதப்படுகின்றவரை தீர்மானிக்கும் நோக்கத்திற்காக வகுத்துரைக்கப்படலாகும் அத்தகைய நேரத்திற்குள் அரசானது அத்தகைய அலுவலரால் விசாரணை ஒன்றை மேற்கொள்ளச் செய்யலாம் மற்றும் அந்த அலுவலரின் முடிவே இறுதியானதாகும்:
வரம்புரையாக, உரிமையியல் நீதிமன்றம் அல்லது பிற அதிகார அமைப்பு எதனின் முன்பும் நிலுவையிலுள்ள நிலம் அல்லது கட்டடம் ஆகியவற்றின் உடைமை தொடர்பாக பூசல் ஏதேனுமிருப்பின், உரிமையியல் நீதிமன்றம் அல்லது அதிகார அமைப்பானது பிறவாறாக பணித்தாலன்றி, திட்டப்பகுதியில் அத்தகைய நிலம் அல்லது கட்டடத்தை உள்ளடக்குவதற்கு இது தடையாகாது மற்றும் உரிமையியல் நீதிமன்றம் அல்லது அதிகார அமைப்பின் ஆணை அல்லது முடிவானது, உரிய திட்ட அதிகார அமைப்பு அல்லது நியமன அலுவலர் ஆகியோரை கட்டுப்படுத்துதல் வேண்டும்.
18 தமிழ்நாடு அரசிதழ் சிறப்பு வெளியீடு(2) 39-S பிரிவின் கீழ் அரசினால் இறுதித் திட்டமானது ஒப்புதலளிக்கப்பெற்ற பின்னர், உரிமையியல் நீதிமன்றத்தினால் தீர்ப்பாணை எதுவும் பிறப்பிக்கப்படுகிறவிடத்து, அத்தகைய இறுதித் திட்டமானது, அத்தகைய தீர்ப்பாணையின் அளவிற்கேற்ப மாறுபட்டதாகக் கொள்ளப்படுதல் வேண்டும்.
39-H. வரைவுத்திட்டத்தின் உள்ளடக்கம்.- வரைவுத் திட்டமானது, பின்வரும் பொருண்மைகள் அனைத்திற்காகவும் அல்லது எவற்றுக்காகவும் வழங்கப்படலாம், அதாவது:-
(a) காலியாகவுள்ள அல்லது ஏற்கனவே கட்டப்பட்ட நிலத்தை, கட்டுமான தளங்களாக அமைத்தல் அல்லது மீண்டும் அமைத்தல்;
(b) பாதைகள், தெருக்கள், சாலைகள் மற்றும் தகவல்தொடர்புகளின் கட்டுமானம், மாற்றுவழி, விரிவாக்கம், மாறுபாடு, மேம்பாடு அல்லது மூடல்;
(c) கட்டடங்கள், பாலங்கள் மற்றும் பிற கட்டமைப்புகளின்
கட்டுதல், மாற்றியமைத்தல், அகற்றுதல் அல்லது இடித்தல்;
(d) எல்லைகளை மறுபகிர்வு செய்தல் மற்றும் திட்டப்பகுதியில் உள்ள சொத்துக்களின் உரிமையாளர்களுக்குச் சொந்தமான மனைகளை மறுசீரமைப்பு செய்தல்;
(e) உரிய திட்ட அதிகார அமைப்பினால் கையகப்படுத்தப்பட்ட அல்லது அவற்றுக்குச் சொந்தமாக்கப்பட்ட நிலத்தினை விற்பனை, பரிமாற்றம், குத்தகை அல்லது பிறவாறாக அகற்றுதல்;
(f) போக்குவரத்து வசதிகள்;
(g) நீர் வழங்குதல்;
(h) விளக்குகள் அமைத்தல்;
(i) கழிவுநீர் மற்றும் மேற்பரப்பு வடிகால் மற்றும் கழிவுநீர்
வெளியேற்றம் உள்ளடங்கலான வடிகால்;
(j) தெருக்கள், சாலைகள், சதுக்கங்கள், வீடுகள், மத அல்லது தொண்டு நோக்கங்களுக்கான கட்டடங்கள், திறந்த வெளிகள், தோட்டங்கள், பொழுதுபோக்கு மைதானங்கள், பள்ளிகள், சந்தைகள், கடைகள், தொழிற்சாலைகள், மருத்துவமனைகள், மருந்தகங்கள், பொதுக் கட்டடங்கள் மற்றும் அனைத்து வகையான பொது நோக்கங்களுக்காகவுள்ள நிலத்தினை பங்கீடு அல்லது ஒதுக்கீடு செய்தல் மற்றும் மேற்குறிப்பிட்ட நோக்கங்களுக்காக, பங்கீடு அல்லது ஒதுக்கீடு செய்யப்பட்டதும், மறு அமைத்துருவாக்கப்பட்டதுமான மனைகள் அல்லது பகுதிகளை வரையறை செய்தல் மற்றும் எல்லைகளை வரையறை செய்தல்;
(k) தொல்லியல் அல்லது வரலாற்று ஆர்வமுள்ள அல்லது இயற்கை எழில் கொஞ்சும் இடங்கள் அல்லது மதநோக்கங்களுக்காக பயன்படுத்தப்படும் அல்லது பொது வழிபாட்டுடன் தொடர்புடைய இடங்கள் கால்வாய், குளம் அல்லது ஆற்று ஓரங்கள், கடலோரப்பகுதிகள் மற்றும் பிற இயற்கை பகுதிகள் அல்லது இயற்கை அழகுள்ள இடங்களை பாதுகாத்தல் மற்றும் பொருட்கள் அல்லது இடங்களின் எல்லையை வரையறை செய்தல்;
தமிழ்நாடு அரசிதழ் சிறப்பு வெளியீடு 19(l) கட்டடங்களின் தன்மை, அடர்த்தி, கட்டடக்கலை அம்சங்கள் மற்றும் உயரம் போன்றவை தொடர்பாகவும், சாலைகள், ரயில் பாதைகள் மற்றும் மின்விநியோக பாதைகளுக்கான கட்டடங்கள் அல்லது கட்டுப்பாட்டு பாதைகள் மற்றும் அந்த நோக்கங்கள் உரியதாக இருந்தாலும் இல்லாவிட்டாலும் அத்தகைய கட்டடங்கள் அல்லது குறிப்பிடப்பட்ட பகுதிகள் மற்றும் போதிய திறந்தவெளிகளை பராமரித்தலுக்கான வகைமுறைகள் ஆகியவற்றின் மீது கட்டுப்பாடுகள் மற்றும் நிபந்தனைகளை விதித்தல்;
(m) தாழ்வான, சதுப்புநிலம் அல்லது ஆரோக்கியமற்ற பகுதிகளை நிரப்புதல் அல்லது மீட்டமைத்தல் அல்லது நிலத்தினை சமன் செய்தல்;
(n) புதிய தெருக்கள் அல்லது சாலைகள், கட்டுமானம் மாற்றுவழி, விரிவாக்கம், மறுவமைப்பு, மேம்பாடு ஆகியவற்றை அமைத்தல் மற்றும் தெருக்கள் மற்றும் சாலைகளை மூடுதல் மற்றும் பயன்பாட்டு இணைப்புகள், தகவல் தொடர்பு இணைப்புகள் போன்றவற்றை நிறுத்துதல்;
(o) மொத்தமாக, திட்டத்தின் கீழ் வருகின்ற மொத்த நிலப்பரப்பில் நாற்பது விழுக்காட்டிற்கு மேலாக அல்லாத பரப்பளவில் நிலத்தினை பின்வரும் நோக்கங்கள் அனைத்திற்காகவும் அல்லது எதற்காகவும் ஒதுக்கீடு செய்தல், அதாவது:-
(i) சாலைகளுக்காக;
(ii) பூங்காக்கள், விளையாட்டு மைதானங்கள்,
தோட்டங்கள் மற்றும் திறந்தவெளி பகுதிகளுக்காக;
(iii) பள்ளி, மருந்தகம், தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் மற்றும் பொதுப் பயன்பாடுகள் போன்ற அத்தகைய சமூக கட்டமைப்புகளுக்காக;
(iv) மேம்பாட்டின் தன்மையைப் பொறுத்து, குடியிருப்பு, வணிக நிறுவனம் அல்லது தொழிற்சாலை பயன்பாட்டிற்காக, உரிய திட்டமிடல் அதிகார அமைப்பினால் விற்பனைக்காக;
(v) பொருளாதார நலிவடைந்த நபர்களுக்காகவும் திட்டப்பரப்பிடத்திலுள்ள அவர்களின் உடைமைகளை பறித்த நபர்களுக்காகவும், வீட்டுவசதி வழங்கும் நோக்கத்திற்காக, மொத்தமாக, திட்டத்தின் கீழ் வருகின்ற மொத்த நிலப்பரப்பில் பத்து விழுக்காட்டிற்கு மேலாக நிலத்தினை ஒதுக்கீடு செய்வதற்காக:
வரம்புரையாக, (iv) ஆம் உட்கூறில் குறிப்பிடப்பட்டுள்ள நிலத்தை விற்பனை செய்வதன் மூலம் கிடைக்கும் வருமானமானது, உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் இறுதித் திட்டத்தின் படியான இழப்பீட்டுத் தொகை ஆகியன வழங்கும் நோக்கத்திற்காகவும் பயன்படுத்தப்படுதல் வேண்டும்;
(p) மறு அமைத்துருவாக்கப்பட்ட மனைகளை அறுபது விழுக்காட்டிற்குக் குறையாத அளவில் திருப்பி அளிப்பதற்காக அல்லது இறுதித்திட்டத்தின் படி இழப்பீடு வழங்குவதற்காக; மற்றும்
(q) வகுத்துரைக்கப்படலாகும் அத்தகைய பிற
பொருட்பாடுகளுக்காக
விளக்கம்.- இந்த அத்தியாயத்தின் நோக்கத்திற்காக; மறு அமைத்துருவாக்கப்பட்ட மனை என்பது திட்டத்தை உருவாக்குவதன் மூலம் எந்த வகையிலும் மாற்றியமைக்கப்பட்ட ஒரு மனை என்று பொருள்படும் மற்றும் இது ஒரு மனையின் உரிமையினை மாற்றியமைப்பதையும் உள்ளடக்கும்.
20 தமிழ்நாடு அரசிதழ் சிறப்பு வெளியீடு39-I. வரைவுத் திட்டத்தினை உருவாக்குதல் மற்றும் வெளியிடுதல்- (1) 39-A ஆம் பிரிவின் கீழ் திட்டம் ஒன்றை உருவாக்குவதற்கான நோக்கத்தின் விளம்புகையை வெளியிடப்பட்ட தேதியிலிருந்து ஒன்பது மாதங்களுக்குள், உரிய திட்ட அதிகார அமைப்பானது, நியமன அலுவலருடன் கலந்தாலோசனை செய்ததன் பேரில், திட்டத்தின் வகைமுறைகளை நிறைவேற்றுவதற்காக, வரைவு ஒழுங்குமுறைகள் ஏதேனுமிருப்பின் அதனுடனிணைந்து திட்டப்பகுதிக்கான வரைவுத் திட்டம் ஒன்றை, வகுத்துரைக்கப்படலாகிறவாறான அத்தகைய முறையில் உருவாக்குதல் வேண்டும் மற்றும் அதனை மாவட்ட அரசிதழில் வெளியிடுதல் வேண்டும்:
வரம்புரையாக, உரிய திட்ட அதிகார அமைப்பின் வேண்டுகோளின் பேரில், அரசானது, அறிவிக்கையின் வாயிலாக மேற்சொன்ன கால அளவினை, மேலும் ஆறு மாதங்கள் கால அளவிற்கு நீட்டிப்பு செய்யலாம்.
(2) கூறப்பட்ட பதினைந்து மாதங்களுக்குள் வரைவுத் திட்டமானது வெளியிடப்படவில்லையெனில், திட்டமொன்றை உருவாக்குவதற்கான நோக்கத்தின் விளம்புகையானது காலாவதியாகிவிடும்:
வரம்புரையாக, அத்தகைய விளம்புகையின் காலாவதி எதுவும், அதே பகுதியினைப் பொறுத்து எந்த நேரத்திலும், புதிய விளம்புகை ஒன்றினை உருவாக்குவதிலிருந்து அரசை தடுத்தலாகாது.
39-J. மனைகளின் மறு அமைத்துருவாக்கம்,- (1) 39-I ஆம் பிரிவில் குறிப்பிடப்பட்டுள்ள வரைவுத் திட்டத்தில், மனை ஒவ்வொன்றின் அளவு மற்றும் வடிவம் ஆகியன கட்டட நோக்கங்களுக்கு பொருத்தமானதாகவும், மனையொன்று ஏற்கனவே கட்டப்பட்டிருக்குமிடத்து அந்த கட்டடங்களுக்கு பொருத்தமான மாற்றங்கள் இருக்கும் வகையில் செய்யப்படுதல் வேண்டும், திறந்தவெளிகளைப் பொறுத்தவரையில் திட்டத்தின் வகைமுறைகளுடன் இணங்கியிருத்தல் வேண்டும்.
(2) (1)ஆம் உட்பிரிவின் நோக்கங்களுக்காக, வரைவுத் திட்டமானது பின்வரும் கருத்துருக்களை உள்ளடக்கியிருக்கலாம், அதாவது:-
(a) தேவைப்பட்டால், அசல் மனை ஒன்றினை மறு அமைத்துருவாக்குவதன் மூலம், அசல் மனையின் எல்லைகளை மாற்றியமைப்பதன் மூலம் இறுதி மனை ஒன்றினை உருவாக்குதல்;
(b) அருகிலுள்ள நிலங்களை முழுமையகவோ அல்லது பகுதியாகவோ மறுசீரமைப்பு செய்வதன்மூலம் அசல் மனை ஒன்றிலிருந்து இறுதி மனையினை உருவாக்குதல்;
(c) தனித்தனியாக அல்லது கூட்டாக உரிமையாகவுள்ள உரிமையாளரிடமிருக்கும் ஒவ்வொரு இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட அசல் மனைகளை உரிமையாளரின் ஒப்புதலுடன், இதன்பின்பு எல்லைகளை மாற்றியமைத்தோ அல்லது மாற்றியமைக்காமலோ இறுதி மனையாக பொது உரிமையாளரிடம் வழங்குதல்;
(d) உரிமையாளர் எவருக்கும் திட்டத்தின் முன்னேற்றத்திற்காக உடைமை பறிக்கப்பட்ட இறுதி மனையொன்றை ஒதுக்குதல்; அல்லது
(e) நபர் ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு அசல்மனை
ஒன்றின் உடைமையை வழங்குதல்;
தமிழ்நாடு அரசிதழ் சிறப்பு வெளியீடு 21விளக்கம்.- இந்த அத்தியாயத்தின் நோக்கத்திற்காக.-
(i) இறுதி மனை என்பது அசல் மனையிலிருந்து மறுஅமைத்துருவாக்கம் செய்யப்பட்டு, இறுதி மனையாக திட்டம் ஒன்றின் மூலம் ஒதுக்கப்பட்ட மனை என்று பொருள்படும்;
(ii) அசல் மனை என்பது திட்டத்தின் நோக்கத்திற்காக உரிய திட்ட அதிகார அமைப்பினால், ஒரு தனி மனையாக காட்டப்படுவதற்காக எண்ணிடப்பட்ட மற்றும் தனியாகவோ அல்லது கூட்டாகவோ உடைமையிலிருக்கும் தொடர்புடைய மனை என்று பொருள்படும்.
39-K. வரைவுத் திட்டத்திற்கு பொது மக்களின் ஆலோசனை.-நபரெவரும், 39-I-ஆம் பிரிவின் கீழ் வரைவுத் திட்டம் வெளியிடப்பட்ட தேதியிலிருந்து அறுபது நாட்களுக்குள், உரிய திட்ட அதிகார அமைப்பிடம் எழுத்துவடிவிலான அவரின் ஆட்சேபனைகளையோ அல்லது கருத்துக்களையோ சமர்ப்பிக்கலாம். உரிய திட்ட அதிகார அமைப்பானது அத்தகைய ஆட்சேபனை அல்லது கருத்துக்களை கருத்தில் கொண்டு வரைவுத் திருத்தத்தினை, அது தக்கதென கருதியவாறு மாற்றியமைக்கலாம் மற்றும் அதனை முப்பது நாட்களுக்கு பின்னரல்லாது ஒப்பதலுக்காக அரசிடம் சமர்ப்பித்தல் வேண்டும்.
39-L. வரைவுத் திட்டத்திற்கு அரசின் ஒப்புதல்.- (1) அரசானது, 39-K ஆம் பிரிவின் கீழ் வரைவுத்திட்டத்தைப் பெற்றதன் பேரில், அது பொருத்தமெனக் கருதலாகும், அத்தகைய விசாரணையை மேற்கொண்ட பின்பு, மற்றும் நேர்விற்கேற்ப, இயக்குநர் அல்லது சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம் அல்லது தொடர்புடைய நகர்ப்புர வளர்ச்சி குழுமத்தினை கலந்தாலோசித்தப் பின்பு, அதனைப் பெற்ற தேதியிலிருந்து மூன்று மாதங்களுக்கு பின்னரல்லாமல்.-
(i) பொருத்தமெனக் கருதலாகும் அத்தகைய நிபந்தனைகளுக்குட்பட்டு மாற்றங்களுடனோ அல்லது மாற்றங்களின்றியோ வரைவுத்திட்டத்தினை ஏற்றுக்கொள்ளலாம்; அல்லது
(ii) வரைவுத்திட்டத்தினை ஏற்றுக் கொள்ள மறுக்கலாம்;
அல்லது
(iii) பணிக்கப்படலாகும் அத்தகைய கால அளவிற்குள், அத்தகைய மாற்றங்களை மேற்கொள்வதற்கும், வரைவுத் திட்டத்தில் நிலம் எதனையும் சேர்ப்பதற்கு அல்லது நீக்குவதற்கான வழிகாட்டுதலை உள்ளடக்கி, உரிய திட்ட அதிகார அமைப்பிடம் வரைவுத் திட்டத்தினை திருப்பி அனுப்பலாம். உரிய திட்ட அதிகார அமைப்பானது, நியமன அலுவலருடன் கலந்தாலோசனை செய்து, அரசின் அத்தகைய பணிப்புரைகளுக்கு இணங்கி, அத்தகைய பணிப்புரைகள் பெறப்பட்ட தேதியிலிருந்து ஒரு மாதத்திற்குள் வரைவுத் திட்டத்தினை ஒப்புதலுக்காக அரசிடம் மீண்டும் சமர்ப்பித்தல் வேண்டும்.
(2) உரிய திட்ட அதிகார அமைப்பிடமிருந்து திருத்தப்பட்ட வரைவுத் திட்டம் பெறப்பட்ட உடன் அரசானது அந்த வரைவுத் திட்டத்தினை ஏற்றுக் கொள்ளலாம் மற்றும் ஏற்றுக்கொள்ளப்பட்ட வரைவுத் திட்டமானது, தமிழ்நாடு அரசு சிறப்பிதழ் மற்றும் அந்தப் பகுதியின் முதன்மையான தினசரி நாளிதழ்கள் இரண்டில் வெளியிடப்படுதல் வேண்டும். அவற்றில் ஒன்று தமிழ் நாளிதழாக இருத்தல் வேண்டும். ஏற்பளிக்கப்பட்ட வரைவுத் திட்டமானது, நியமன அலுவலரின் அலுவலகத்தில் அலுவலக நேரத்தில் ஆய்வு மேற்கொள்வதற்காக பொது வெளியிலும் வைக்கப்படுதல் வேண்டும்.
22 தமிழ்நாடு அரசிதழ் சிறப்பு வெளியீடு(3) ஏற்பளிக்கப்பட்ட வரைவு திட்டத்தால் பாதிக்கப்பட்ட நபர் எவரும், தமிழ்நாடு அரசிதழில்தமிழ்நாடு அரசிதழில் அது வெளியிடப்பட்ட தேதியிலிருந்து இரண்டு மாதங்களுக்குள், நியமன அலுவலரிடம் வகுத்துரைக்கப்படலாகும் அத்தகைய முறையில் தனது மறுப்பினை முன்வைக்கலாம்.
(4) திட்டப்பகுதியில் ஐம்பது விழுக்காட்டிற்கும் அதிகமான நிலங்களை வைத்திருக்கும் நபர்கள் வரைவுத் திட்டத்திற்கு தங்களது மறுப்பினை தெரிவித்தால், நியமன அலுவலர், உரிய திட்ட அதிகார அமைப்பு மூலம் அரசுக்கு மறுப்புகளை மேலனுப்புதல் வேண்டும் மற்றும் அரசு அறிவிக்கையின் மூலம் திட்டத்தை திரும்பப் பெறுதல் வேண்டும்.
39-M. உரிய திட்ட அதிகார அமைப்பிடம் நிலத்தினை அளித்தல்.- 39-L ஆம் பிரிவின் (2) ஆம் உட்பிரிவின் கீழ் ஏற்பளிக்கப்பட்ட வரைவு திட்டத்தினை வெளியிடப்பட்ட தேதியிலிருந்து இரண்டு மாதங்கள் நிறைவடைந்ததன் பேரில், 39-H ஆம் பிரிவின் (g), (h), (i) மற்றும் (o) கூறுகளில் குறிப்பிடப்பட்டுள்ள நோக்கங்களுக்காக தேவையான அனைத்து நிலங்களிலும் வில்லங்கங்கள் அனைத்திலிருந்தும் விடுபட்டு உரிய திட்ட அதிகார அமைப்பிடம் அளித்தல் வேண்டும். உரிய திட்ட அதிகார அமைப்பானது, திட்டத்திற்கு முரணான கட்டமைப்புகள் அல்லது கட்டடங்களை, அப்புறப்படுத்துதல், அகற்றுதல், மூடி முத்திரையிடுதல் உள்ளிட்ட தேவைப்படலாகிறவாறான உரிய நடவடிக்கைகளை எடுக்கலாம் மற்றும் கூறப்பட்ட பொது நோக்கங்களை நிறைவேற்றுவதற்காக கூறப்பட்ட நிலத்தில், வகுத்துரைக்கப்படலாகும் அத்தகைய முறையில் அதற்குச் செலவாகின்ற தொகையினை திரும்பப் பெறலாம்:
வரம்புரையாக, உரிய திட்ட அதிகார அமைப்பிடம் அத்தகைய நிலங்களை அளித்தலானது, அத்தகைய நிலங்களை உரிமையாளர்களின் சொந்தமுடைமை உரிமையை பாதிக்காது.
39-N. முதனிலை திட்டத்தினைத் தயாரித்தல்.- (1) நியமன அலுவலரானவர், ஏற்பளிக்கப்பட்ட வரைவு திட்டம் அது வெளியிடப்பட்ட தேதியிலிருந்து ஒன்பது மாதங்கள் கால அளவிற்குள் பெறப்பட்ட ஆட்சேபனைகள் ஏதேனுமிருந்து அவற்றை கருத்தில் கொண்ட பின்பு, திட்டப்பரப்பிடத்தில் உள்ள நிலத்தின் உரிமையாளர்களுக்கு அறிவிப்பு வழங்கிய பின்பும் முதனிலை திட்டத்தை வகுத்துரைக்கப்பட்ட முறையிலும் வகுத்துரைக்கப்பட்ட படிவத்திலும் தயார் செய்தல் வேண்டும். முதனிலை திட்டமானது,-
(a) பொது நோக்கம் எதற்காகவும் அல்லது உரிய திட்ட அதிகார அமைப்பின் நோக்கங்களுக்காக ஒதுக்கப்பட்ட அல்லது தனி ஒதுக்கீடு செய்யப்பட்ட பரப்பிடங்களை வரையறை மற்றும் எல்லை வரையறை செய்தல், மேலும் இறுதியான மனைகளை எல்லை வரையறை செய்தல்:
(b) ஓர் இறுதியான மனையை ஒதுக்கப்பட வேண்டிய நபர் அல்லது நபர்களை தீர்மானித்தல் மற்றும் அத்தகைய மனை பொதுவான உரிமையில் உள்ள நபர்களுக்கு ஒதுக்கப்படும்போது அத்தகைய நபர்களின் பங்குகளை முடிவு செய்தல்;
(c) அசல் மனை ஒன்றிலுள்ள உரிமை எதையும் இறுதியான மனைக்கு மொத்தமாகவோ அல்லது பகுதியாகவோ மாற்றுவதற்கு வழங்குதல்;
(d) பிணையுள்ள கடனளித்தவர், அடைமானம் பெறுபவர்கள், குத்தகைக்காரர்கள் அல்லது அசல் மனையில் பாதுகாக்கப்பட்ட உரிமையை பெற்றதாகக் கூறும் பிற நபர்களின் உரிமைகளை பதிவு செய்தல்; மற்றும்தமிழ்நாடு அரசிதழ் சிறப்பு வெளியீடு 23 (e) திட்டத்தில் வழங்கப்பட்ட பணிகள் உரிய திட்ட அதிகார அமைப்பினால் எந்த காலத்திற்குள் முடிக்கப்படலாம் என்பதை குறிப்பிடுதல்;
(2) நியமன அலுவலர், அவ்வாறு தயாரிக்கப்பட்ட முதனிலைத் திட்டத்தை, உரிய திட்ட அதிகார அமைப்பு மூலம், அரசின் ஏற்பிற்காக சமர்பித்தல் வேண்டும்.
39-O. அரசால் முதனிலைத் திட்டத்திற்கு ஏற்பளித்தல்.- (1) முதனிலைத் திட்டத்தினை பெற்றுக்கொண்டதன்பேரில், அரசானது, அது பெறப்பட்ட தேதியிலிருந்து இரண்டு மாதங்களுக்குள் ஏற்றுக்கொள்ளுதல் வேண்டும் அல்லது தேவையென கருதப்படலாகும் அத்தகைய மாற்றங்களுடன் ஏற்றுக்கொள்ளுதல் வேண்டும் அல்லது அரசால் இதன்பொருட்டு குறிப்பிடப்பட்ட அத்தகைய பணிப்புரைகளுக்கிணங்கியவாறும் அத்தகைய காலத்திற்குள்ளும் திட்டத்தை மாற்றம் செய்வதற்கு அல்லது திட்டத்தை புதியதாக தயார் செய்வதற்கு கூறப்பட்ட திட்டத்தை நியமன அலுவலருக்கு திருப்பி அனுப்பலாம்.
(2) அரசினால் ஏற்பளிக்கப்பட்டவாறான முதனிலைத் திட்டமானது, தமிழ்நாடு அரசிதழில் வெளியிடப்படுதல் வேண்டும் மற்றும் அந்தப் பகுதியின் முதன்மையான தினசரி நாளிதழ்கள் இரண்டில் வெளியிடப்படுதல் வேண்டும். அவற்றில் ஒன்று தமிழ் நாளிதழாக இருத்தல் வேண்டும் மற்றும் அத்தகைய அறிவிக்கையில், கூறப்பட்ட திட்டத்தினை பொதுமக்கள், ஆய்வு செய்வதற்கான இடம் மற்றும் நேரத்தைக் குறிப்பிடுதல் வேண்டும்.
(3) (2)ஆம் உட்பிரிவின் படியான ஓர் அறிவிக்கையானது அந்த முதனிலைத் திட்டம் தக்கவாறு உருவாக்கப்பட்டு மற்றும் ஏற்பளிக்கப்பட்டது என்பதற்கான இறுதிச் சான்றாக இருத்தல் வேண்டும்.
39-P. முதனிலைத் திட்டத்தின் செயல்விளைவு.- (1) முதனிலைத் திட்டமானது, தமிழ்நாடு அரசிதழில் வெளியிடப்பட்ட தேதியன்றும் அதன் பின்பும்,-
(a) உரிய திட்ட அதிகார அமைப்பினால் வேண்டப்படும் நிலங்கள் அனைத்தும், அத்தகைய திட்டத்தில் அவை பிறவாறு தீர்மானிக்கப்பட்டாலன்றி, அனைத்து வில்லங்கங்களிலிருந்தும் விடுபட்டு உரிய திட்ட அதிகார அமைப்பிடம் முழுமையாக உரிமை அளிக்கப்பெறுதல் வேண்டும்.
(b) இறுதி மனைகளாக மறு உருவாக்கப்பட்டிருக்கும் அசல் மனைகளின் உரிமைகள் அனைத்தும், தீர்மானிக்கப்படுதல் வேண்டும் மற்றும் இறுதி மனைகளானது, நியமன அலுவலரால் முடிவு செய்யப்பட்டவாறான அசல் நில உரிமையாளரின் உரிமைகளுக்கு உட்பட்டவாறு இருத்தல் வேண்டும்.
(2) உரிய திட்ட அதிகார அமைப்பானது,-
(a) திட்டத்திற்குப் புறம்பாக உள்ள கட்டடங்கள் அல்லது அமைப்புகளை அப்புறப்படுத்துதல், நீக்குதல், மூடிமுத்திரையிடுதல், ஆகியவை உள்ளிட்ட திட்டத்தினை நடைமுறைப்படுத்துதல், அதனால் ஏற்பட்ட செலவுத் தொகையினை வகுத்துரைக்கப்படலாகும் அத்தகைய முறையில், வசூலித்தல்; மற்றும்
(b) வருவாய், நில அளவை மற்றும் நிலவரித் திட்டம் மற்றும் பதிவுத்துறைகளின் பதிவேடுகளில் முதனிலைத் திட்டத்தில் செய்யப்பட்ட பொதுநோக்கங்களுக்காக ஒதுக்கப்பட்ட மனைகள் உட்பட இறுதி மனைகளின் ஒதுக்கீட்டின் படி மாற்றத்தை மேற்கொள்ளுதல்;
24 தமிழ்நாடு அரசிதழ் சிறப்பு வெளியீடு39-Q. இறுதித் திட்டத்தை தயாரித்தல்.- (1) நி ய ம ன அலுவலர், தமிழ்நாடு அரசிதழில் முதனிலைத் திட்டத்தை வெளியிட்ட பின்பு, அதிலிருந்து ஒன்பது மாதங்கள் கால அளவிற்குள், இறுதித் திட்டத்தை இதன்கீழ் குறிப்பிடப்பட்ட முறையில் தயார் செய்தல் வேண்டும்:-
(a) வகுத்துரைக்கப்படலாகும் முறையில், அசல் மனைகளின் மதிப்பை மதிப்பிடுதல் மற்றும் திட்டப்பகுதியிலுள்ள அசல் மனைகளின் மதிப்புகளுக்கும் இறுதி மனைகளின் மதிப்புகளுக்கும் இடையே உள்ள வேறுபாட்டை சரி செய்தல்;
(b) பொது நோக்கங்களுக்காக, ஒதுக்கீடு செய்யப்பட்ட அல்லது தனி ஒதுக்கீடு செய்யப்பட்ட அல்லது திட்டப் பகுதியில் நில உரிமையாளர்கள் அல்லது குடியிருப்பாளர்களுக்கு முழுமையாகவோ அல்லது பகுதியாகவோ நலம் பயக்கின்ற உரிய திட்ட அதிகார அமைப்பினால் மேம்படுத்துவதற்கான பகுதிகளை உறுதி செய்தல்;
(c) பொது நோக்கம் ஒன்றுக்காகவும் அல்லது இந்தத் திட்ட பரப்பிடத்திற்குள் உரிமையாளர்கள் அல்லது குடியிருப்பாளர்களுக்கு பாதியும் மற்றும் பொது மக்களுக்கு பாதியும் பயனளிக்கும் உரிய திட்ட அதிகார அமைப்பின் நோக்கத்திற்காகவும் ஒதுக்கீடு செய்யப்பட்ட அல்லது தனி ஒதுக்கீடு செய்யப்பட்ட மனை ஒவ்வொன்றிற்கும் இழப்பீடாக செலுத்த வேண்டிய தொகைகளை, வகுத்துரைக்கப்படலாகும் முறையில் மதிப்பிடுதல் மற்றும் அவ்வாறு செலுத்தப்படவேண்டிய இழப்பீடானது திட்டத்தின் தொகையில் சேர்க்கப்படுதல் வேண்டும்;
(d) திட்டப்பகுதியில் உள்ளடங்கியுள்ள மனைகள் ஒவ்வொன்றினை பொறுத்து வகுத்துரைக்கப்படலாகும் முறையில் சேர்கின்ற மதிப்பினை கணக்கிடுதல்;
(e) அத்தகைய மனையினைப் பொறுத்து கணக்கிடப்பட்ட மதிப்பின் தொகுப்பிற்கு ஏற்ப, இறுதி திட்டத்தில் மனை ஒவ்வொன்றின் மீது விதிக்கப்படும் மேம்பட்ட பங்களிப்பினை வகுத்துரைக்கப்படலாகும் முறையில் கணக்கிடுதல்;
வரம்புரையாக, மேம்பட்ட இழப்பீடானது, மதம் சார்ந்த அல்லது தொண்டு நோக்கத்திற்காக ஒதுக்கப்பட்ட தனிச் சிறப்புடைய மனைகளை பொறுத்தவரையில் விதிக்கப்படுதல் கூடாது.
(f) இத்திட்டத்தின் காரணமாக, ஒருதலைப்பட்சமாக பாதிக்கப்பட்ட உரிமைக்காக, நில உரிமையாளர் எவருக்கும் இழப்பீடு வழங்க வேண்டும் என்பதற்கான அவரின் முன் ஏற்படுத்தப்பட்ட கோரிக்கைகள் குறித்து வகுத்துரைக்கப்படலாகும் முறையில் மதிப்பிடுதல்;
(g) முதனிலை திட்டத்தின்படி இறுதி மனைகள் யாருக்கு ஒதுக்கப்பட்டது என்பதை, வகுத்துரைக்கப்படலாகும் முறையிலும், படிவத்திலும் பதிவு செய்தல்;
(h) வகுத்துரைக்கப்படலாகும் அத்தகைய பிற
செயல்பாடுகளை செய்தல்;
(2) இறுதி திட்டத்தை தயாரித்தவுடன், நியமன அலுவலரானவர், தொடர்புடைய நபர்களுக்கும் உரிய திட்ட அதிகார அமைப்பிற்கும் (1) ஆம் உட்பிரிவின் (a) முதல் (f) வரையிலான கூறுகளை பொறுத்து, வந்தடைந்த மொத்தத் தொகை உள்ளடங்கலான விவரங்களை, இறுதித் திட்டத்தை ஏற்பிற்காக அரசிடம் சமர்பிக்கும் முன் தெரிவித்தல் வேண்டும்.
தமிழ்நாடு அரசிதழ் சிறப்பு வெளியீடு 2539-R. மேல்முறையீடு.- (1) 39-Q ஆம் பிரிவின் (2) ஆம் உட்பிரிவின் கீழ் தெரிவிக்கப்பட்ட நியமன அலுவலரின் முடிவுகளால் பாதிக்கப்பட்ட நபர் எவரும், அதனைப் பெற்றுக்கொண்டதன் தேதியிலிருந்து ஒரு மாதத்திற்குள், வகுத்துரைக்கப்படலாகும் அத்தகைய முறையில், நேர்விற்கேற்ப, இயக்குநர் அல்லது சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம் அல்லது தொடர்புடைய நகர்ப்புற மேம்பாட்டு அதிகார அமைப்பிடம், மேல்முறையீடு செய்யலாம்.
(2) (1)ஆம் உட்பிரிவின் கீழ் மேல்முறையீட்டினை பெற்றுக்கொண்டதன் பேரில், இரண்டு மாதங்கள் கால அளவிற்குள், கேட்பதற்கான வாய்ப்பொன்றை மேல்முறையீட்டாளருக்கு வழங்கிய பின்பு சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமத்தின் இயக்குநர் அல்லது தொடர்புடைய நகர்ப்புற மேம்பாட்டு அதிகார அமைப்பானது, மேல்முறையீட்டை முடிவு செய்தல் வேண்டும்.
(3) நேர்விற்கேற்ப, இயக்குநர் அல்லது சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம் அல்லது தொடர்புடைய நகர்ப்புற மேம்பாட்டு அதிகார அமைப்பின் முடிவு பாதிக்கப்பட்டட நபர் எவரும், (2)ஆம் உட்பிரிவின் கீழ் அத்தகைய முடிவினை தெரிவிக்கப்பட்டதன் தேதியிலிருந்து ஒரு மாதத்திற்குள் வகுத்துரைக்கப்படலாகும் அத்தகைய படிவத்திலும், அத்தகைய முறையிலும் அரசுக்கு மேல்முறையீடு செய்யலாம்:
வரம்புரையாக, அரசானது, மேல்முறையீட்டாளர் குறித்த நேரத்தில் மேல்முறையீடு செய்யாததற்காக, போதிய காரணத்தால் தடுக்கப்பட்டதாக, மனநிறைவடைந்தால், கூறப்பட்ட காலத்திற்கு அப்பாலும் செய்யப்பட்ட மேல்முறையீடு ஒன்றை ஏற்றுக்கொள்ளலாம்.
(4) (3)ஆம் உட்பிரிவின் கீழ் மேல்முறையீடு ஒன்றை பெற்றுக்கொண்டதன் பேரில், அரசானது, மேல்முறையீட்டாளருக்கு கேட்பதற்கான வாய்ப்பொன்றை வழங்கிய பின்பு, இரண்டு மாதங்களுக்குள் அது பொருத்தமெனக் கருதலாகும் அத்தகைய ஆணையைப் பிறப்பிக்கலாம்.
39-S.அரசினால் இறுதி திட்டத்திற்கு ஏற்பளித்தல்.
(1) நியமன அலுவலரிடமிருந்து இறுதி திட்டம் பெறப்பட்டதன் பேரில், அரசானது, அது பெறப்பட்ட தேதியிலிருந்து இரண்டு மாதங்களுக்குள் ஏற்பளிக்கலாம் அல்லது தேவையெனக்கருதலாகும் அத்தகைய மாற்றங்களுடன் ஏற்பளிக்கலாம். அரசால் பணிக்கப்பட்டிருந்தால், நியமன அலுவலரானவர் அதன்பின்பு அந்த திட்டத்தை மாற்றியமைத்தல் வேண்டும் மற்றும் அதனை ஏற்பிற்காக அரசிடம் சமர்ப்பித்தல் வேண்டும்.
விளக்கம்.- இரண்டு மாதங்கள் காலவரம்பை கணக்கிடும் நோக்கத்திற்காக, நேர்விற்கேற்ப, இயக்குநர், சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம் அல்லது தொடர்புடைய நகர்ப்புர வளர்ச்சிக் குழுமம் மற்றும் அரசு ஆகியவற்றின் முன்பு நிலுவையில் இருந்த மேல்முறையீட்டின் கால அளவானது தவிர்க்கப்படுதல் வேண்டும்.
(2) ஏற்பளிக்கப்பட்ட இறுதி திட்டம், தமிழ்நாடு அரசிதழில்தமிழ்நாடு அரசிதழில் மற்றும் அந்தப் பகுதியின் முதன்மையான தினசரி நாளிதழ்கள் இரண்டில் வெளியிடப்படுதல் வேண்டும் அவற்றில் ஒன்று தமிழ் நாளிதழாக இருத்தல் வேண்டும் மற்றும் அத்தகைய அறிவிக்கையில், திட்டத்தினை பொதுமக்கள் ஆய்வு செய்வதற்கான இடம் மற்றும் நேரத்தை குறிப்பிடுதல் வேண்டும்.
(3) (2)ஆம் உட்பிரிவின்படியான ஓர் அறிவிக்கையானது அந்த ஒன்று, இறுதி திட்டம் தக்கவாறு உருவாக்கப்பட்டு மற்றும் ஏற்பளிக்கப்பட்டது என்பதற்கான இறுதிச் சான்றாக இருத்தல் வேண்டும்.
26 தமிழ்நாடு அரசிதழ் சிறப்பு வெளியீடு39-T. திட்டத்தின் மாறுபாடு. (1) இறுதி திட்டத்தின் வெளியீட்டிற்குப்பின்னர், சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம், தொடர்புடைய நகர்ப்புர வளர்ச்சிக் குழுமம் அல்லது உரிய திட்ட அதிகார அமைப்பானது, தாமாகவோ அல்லது திட்டப்பகுதியில் உள்ள நிலத்தின் உரிமையாளர் ஒருவரின் விண்ணப்பத்தின் பேரிலோ, அந்த திட்டத்தில் தவறு, முறைகேடு அல்லது உறுதியின்மை காரணமாக குறைபாடுடையதாக கருதினால், திட்டத்தின் உரிய மாறுபாடுகளுக்காக அரசிடம் வேண்டலாம்:
வரம்புரையாக, திட்டத்தில் மேலுமான மாறுபாட்டிற்காக
வேண்டுகோள் எதுவும் அரசால் ஏற்றுக் கொள்ளப்படுதல் ஆகாது.
(2) நேர்விற்கேற்ப, உரிய திட்ட அதிகார அமைப்பு, சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம் அல்லது தொடர்புடைய நகர்ப்புர வளர்ச்சிக் குழுமம் ஆகியவற்றிலிருந்து பெறப்பட்ட அத்தகைய வேண்டுகோளின் பேரில் அரசானது, மனநிறைவடையுமானால் தமிழ்நாடு அரசிதழில் மாற்றியமைத்து வெளியிடுவதன் மூலம் அந்தத் திட்டத்தினை மாற்றியமைக்கலாம் மற்றும் அந்தப் பகுதியில் இரண்டு முதன்மையான நாளிதழ்களில் வெளியிடவேண்டும். அவற்றுள் ஒன்று தமிழ் நாளிதழாக இருத்தல் வேண்டும்:
வரம்புரையாக, பூங்காக்கள், விளையாட்டு மைதானங்கள், தோட்டங்கள் மற்றும் திறந்தவெளிகள் ஆகியவற்றின் நோக்கத்திற்காக ஒதுக்கப்பட்ட நிலத்தின் பயன்பாடுகளானவை பிற நோக்கம் எதற்காகவும் மாற்றப்படுதலாகாது:
(3) (1) மற்றும் (2) ஆம் உட்பிரிவுகளில் அடங்கியுள்ள எது எவ்வாறாயிருப்பினும், இறுதி திட்டமானது இந்தச் சட்டத்திற்கு இணங்கிய வகையில் தயாரிக்கப்பட்ட மற்றும் ஏற்பளிக்கப்பட்ட அடுத்து வரும் திட்டம் ஒன்றினால் மாற்றியமைக்கலாம் அல்லது நீக்கலாம்.
39-U. திட்டத்தினை திரும்பப் பெறுதல்.- இந்த அத்தியாயத்தில் அடங்கியுள்ளது எது எவ்வாறிருப்பினும், அரசானது ஆணையின் மூலம், பதிவு செய்யும் காரணங்களுக்காக, திட்டம் எதனையும் திரும்பப் பெறலாம்:
வரம்புரையாக, அத்தகைய திரும்பப்பெறுதல் எதுவும்,
முதனிலைத்திட்டத்தின் ஏற்பளிப்பிற்கு பின் ஆணையிடப்படலாகாது:
மேலும் வரம்புரையாக, திட்டத்தின் அத்தகைய திரும்பப் பெறுதலின் பேரில், அரசு செலவில், 39-A-ஆம் பிரிவின் கீழ் உட்கருத்தின் விளம்புகை வெளியிடப்பட்ட தேதியன்று இருந்ததைப் போல அசல் நிலைமைக்கு நிலமானது மீட்டெடுக்கப்படுதல் வேண்டும்.
39-V. உயர்நீதிமன்றத்தின் மூலமாக சீராய்வு. 39-R. ஆம் பிரிவின் (4) ஆம் உட்பிரிவின்படியான அரசின் ஆணை ஒன்றின் மூலம் பாதிக்கப்பட்ட நபர் எவரும், அவருக்கு ஆணையின் நகல் தெரிவிக்கப்பட்ட தேதியிலிருந்து அறுபது நாட்கள் காலஅளவிற்குள் அத்தகைய ஆணையின் சீராய்விற்கான விண்ணப்பம் ஒன்றை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யலாம்:
வரம்புரையாக, உயர்நீதிமன்றம் கூறப்பட்ட அறுபது நாட்கள் கால அளவிற்குள் மனுதாரரால் விண்ணப்பம் செய்யப்படவில்லை என்பதற்கு போதுமான காரணம் இருப்பதாக அது மனநிறைவடைந்தால், மேலுமான முப்பது நாட்கள் கால அளவிற்கு விண்ணப்பத்தினை ஏற்றுக்கொள்ளலாம்.
தமிழ்நாடு அரசிதழ் சிறப்பு வெளியீடு 2739-W. நிலுவைத் தொகையினை வசூலித்தல். (1) இந்தச் சட்டத்தின்படியோ அல்லது அதன்படி செய்யப்பட்ட விதி அல்லது ஒழுங்குமுறைகள் எதனின்படியோ உரிய திட்ட அதிகார அமைப்பிற்கு, கடன் தொகை எதுவும், நில வருவாய் செலுத்தத்திற்கு உட்பட்டு அதன்பேரில் அரசுக்கு நிலுவை ஏதேனும் இருப்பின் எந்த மனையின் பேரில் கடன் உள்ளதோ அந்த மனையின் பேரில் முதல் சாற்றுரைக்கப்படும்.
(2) இந்தச் சட்டத்தின்படி அல்லது அதன்படி செய்யப்பட்ட விதி அல்லது ஒழுங்குமுறை எதனின்படியான உரிய திட்ட அதிகார அமைப்பிற்கு, கோரிக்கையின்பேரில் செலுத்தப்படாத கடன் தொகை எதுவும், நில வருவாயின் நிலுவைத் தொகை போன்றே வசூலிக்கப்படுதல் வேண்டும்.
39-X. திட்டப்பகுதிகளில் பணிகளை நிறைவேற்றுதல். (1) உரிய திட்ட அதிகார அமைப்பானது, இறுதித் திட்டத்தில் நிர்ணயிக்கப்பட்ட கால அளவிற்குள் திட்டப் பரப்பிடத்திற்குள் உள்ள அனைத்து பணிகளையும் நிறைவேற்றுதல் வேண்டும்:
வரம்புரையாக, அரசானது, உரிய திட்ட அதிகார அமைப்பின் வேண்டுகோளின்பேரில், அந்தப் பணியினை நிறைவு செய்வதற்காக நிர்ணயிக்கப்பட்ட கால அளவைவிட இரண்டு மடங்கிற்கு மிகாத மேலுமான கால அளவினை வழங்கலாம்.
39-Y. உள்ளாட்சிமன்றச் சட்டத்தால் விண்ணப்பத்தை இடைநிறுத்துதல். (1) திட்டப் பகுதிகளுக்குள் உள்ளாட்சி மன்றச் சட்டத்தின்படி உள்ளாட்சி அதிகார அமைப்பால் செயல்படுத்தப்படும் அதிகாரங்கள் மற்றும் செயற்பணிகள் எதனையும் பணிப்புரைக்கலாம், அத்தகைய திட்டப்பகுதியுடன் தொடர்புடைய, அறிவிக்கப்படலாகும் அத்தகைய நோக்கங்களுக்காக அத்தகைய கால அளவிற்காக கூறப்பட்ட சட்டத்தின்படி உரிய திட்ட அதிகார அமைப்புக்கு மாற்றப்படவோ மற்றும் நிறைவேற்றப்படவோ வேண்டுமென அரசு அறிவுறுத்தலாம்.
விளக்கம்.- இந்தப்பிரிவின் நோக்கத்திற்காக,
(a) உள்ளாட்சி அதிகார அமைப்பு என்பது,
(i) 1998ஆம் ஆண்டு தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் சட்டத்தின்படி (தமிழ்நாடு சட்டம் 9/1999) அமைத்துருவாக்கப்பட்ட மாநகராட்சி அல்லது நகராட்சி எதுவும்;
(ii) 1994ஆம் ஆண்டு தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டத்தின்படி (தமிழ்நாடு சட்டம் 21/1994) அமைத்துருவாக்கப்பட்ட மாவட்ட ஊராட்சி அல்லது ஊராட்சி ஒன்றிய குழு அல்லது கிராம ஊராட்சி; அல்லது
(iii) 1970ஆம் ஆண்டு தமிழ்நாடு குடிநீர் வழங்கல் மற்றும் வடிகால் வாரியச் சட்டம் (தமிழ்நாடு சட்டம் 4/1971) அல்லது 1978 ஆம் ஆண்டு சென்னை பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்றல் சட்டம் (தமிழ்நாடு சட்டம் 28/1978) ஆகிய சட்டத்தின்படி அமைத்துருவாக்கப்பட்ட வாரியம் என்று பொருள்படும்.
(b) உள்ளாட்சி அமைப்புச் சட்டம் என்பது,
(i) 1998ஆம் ஆண்டு தமிழ்நாடு நகர்ப்புர
உள்ளாட்சி அமைப்புகள் சட்டம் (தமிழ்நாடு சட்டம் 9/1999);
(ii) 1994ஆம் ஆண்டு தமிழ்நாடு ஊராட்சிகள்
சட்டம் (தமிழ்நாடு சட்டம் 21/1994);
28 தமிழ்நாடு அரசிதழ் சிறப்பு வெளியீடு(iii) 1970ஆம் ஆண்டு தமிழ்நாடு குடிநீர் வழங்கல் மற்றும் வடிகால் வாரியச் சட்டம் (தமிழ்நாடு சட்டம் 4/1971); மற்றும்
(iv) 1978ஆம் ஆண்டு சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்றல் சட்டம் (தமிழ்நாடு சட்டம் 28/1978); என்று பொருள்படும்.
(2) (1)ஆம் உட்பிரிவின்படி அறிவிக்கப்பட்ட கால அளவு முடிவுற்ற பின்னர், திட்டப்பகுதியில் உள்ள பொதுவான தெரு, குடிநீர் மற்றும் கழிவுநீரகற்றல் முறை, தெருவிளக்கு போன்ற வசதிகள் மற்றும் சொத்துக்கள் அனைத்தும் மற்றும் உரிய திட்ட அதிகார அமைப்பு அல்லது நியமன அலுவலர் ஆகியோரால் உருவாக்கப்பட்ட அத்தகைய பிற வசதிகள் ஆகியன உள்ளாட்சி அதிகார அமைப்பிடம் உற்றமைந்திருத்தல் வேண்டும்.
தமிழ்நாடு அரசிதழ் சிறப்பு வெளியீடு 29நோக்கக் காரண விளக்கவுரை
மாநிலத்தில் நிலச் சேர்மப்பகுதி மேம்பாட்டு திட்டத்தினை நிறைவேற்றுவதற்கு, 1971 ஆம் ஆண்டு தமிழ்நாடு நகர் மற்றும் ஊரமைப்புச் சட்டமானது (தமிழ்நாடு சட்டம் 35/1972), 2018 ஆம் ஆண்டு தமிழ்நாடு நகர் மற்றும் ஊரமைப்புச் (மூன்றாவது திருத்தச்) சட்டத்தின் மூலம் (தமிழ்நாடு சட்டம் 31/2018) திருத்தப்பட்டது. கூறப்பட்ட சட்டமானது இதுவரையில் நடைமுறைக்கு கொண்டுவரப்படவில்லை. நிலச் சேர்மப்பகுதி மேம்பாட்டு திட்டமானது, புதிய பகுதிகளின் திட்டமிட்ட மேம்பாட்டை இயலச் செய்கிறது, அடிப்படை வசதிகளை வழங்குகிறது மற்றும் அரசின் பெரிய உட்கட்டமைப்பு முன்மொழிவுகளுக்காக நிலம் கையகப்படுத்தும் செயல்முறை மூலம் பிறவாறு கையகப்படுத்தப்படக்கூடிய நிலத்தை திரட்டுகிறது. நிலச் சேர்மப்பகுதி மேம்பாட்டு திட்டங்களானது நில உரிமையாளர்களும் அரசின் ஊக்குவிப்பு முகமைகளும் ஏற்றுக்கொள்ளக்கூடிய வடிவில் செயல்படுத்தப்படும்போது, மாநிலத்தின் நகர்ப்புற வளர்ச்சியில் ஒரு பெரிய மாற்றமாக இருக்கும். கூறப்பட்ட தமிழ்நாடு சட்டம் 31/2018-இன் தற்போதைய வகைமுறைகளானது, மாநிலத்தில் அத்தகைய திட்டங்களை ஊக்குவிப்பதற்கு பயனுள்ளதாக இல்லை. அத்தகைய திட்டங்களை வெற்றிகரமாக செயல்படுத்தி வரும் பல்வேறு மாநிலங்களின் சட்டங்கள் ஆய்வு செய்யப்பட்டு, கூறப்பட்ட தமிழ்நாடு சட்டம் 31/2018-இல் உள்ள குறைகள் கண்டறியப்பட்டன. அத்தகைய திட்டங்களில் நில உரிமையாளர்கள் அதிக அளவில் பங்கேற்பதை ஊக்குவிக்கவும், மாநிலத்தில் உட்கட்டமைப்பை திறம்பட செயல்படுத்துவதற்காகவும், மேம்படுத்துவதற்காகவும் கூறப்பட்ட திட்டத்தின் வகைமுறைகளை சீரமைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. மேற்சொன்ன முடிவிற்கு செயல்வடிவம் கொடுப்பதற்கு, கூறப்பட்ட 2018 ஆம் ஆண்டு தமிழ்நாடு நகர் மற்றும் ஊரமைப்புச்(மூன்றாவது திருத்த) சட்டத்தினை (தமிழ்நாடு சட்டம் 31/2018) தக்கவாறு திருத்தம் செய்வதென அரசானது முடிவு செய்துள்ளது.
2. இச்சட்டமுன்வடிவானது மேற்சொன்ன முடிவிற்கு செயல்வடிவம் கொடுக்க விழைகிறது.
சு. முத்துசாமி, சு. முத்துசாமி,
வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர்.
30 தமிழ்நாடு அரசிதழ் சிறப்பு வெளியீடுசட்டமியற்றும் அதிகார ஒப்படைவு பற்றிய குறிப்பு
சட்டமியற்றும் அதிகார ஒப்படைவு பற்றிய குறிப்பு
சட்டமுன்வடிவின் 3 ஆம் கூறினால் உட்புகுத்தப்படுவதற்கு முன்மொழியப்பட்ட 39-A, 39-B, 39-C, 39-E, 39-G, 39-H, 39-I, 39-L, 39-M, 39-N, 39-P, 39-Q, 39-R, 39-U மற்றும் 39-Y ஆகிய பிரிவுகளானவை, அவற்றில் குறித்துரைக்கப்பட்டுள்ள நோக்கங்களை நிறைவேற்றுவதற்காக, நேர்விற்கேற்ப, விதிகளைச் செய்வதற்கோ அல்லது அறிவிக்கைகள் அல்லது ஆணைகள் அல்லது பணிப்புரைகளை பிறப்பிப்பதற்கோ அரசுக்கு அதிகாரம் அளிக்கிறது.
2. ஒப்படைவு செய்யப்பட்ட அதிகாரங்கள் இயல்பானவையேயன்றி தனித்தன்மை வாய்ந்தவை அல்ல.
சு. முத்துசாமி, சு. முத்துசாமி, வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர்.
கி. சீனிவாசன், செயலாளர்.
தலைமைச் செயலகம், சென்னை, 2023 ஏப்ரல் 19.
தமிழ்நாடு அரசிதழ் சிறப்பு வெளியீடு 312023ஆம் ஆண்டு ஏப்ரல் திங்கள் 19ஆம் நாளன்று தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் அறிமுகப்படுத்தப்பட்ட பின்வரும் சட்டமுன்வடிவு, நோக்கக் காரண விளக்கவுரையுடன் சேர்த்து, தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை விதிகளின் 130 ஆம் விதியின் கீழ் பொதுத் தகவலுக்காக வெளியிடப்படுகின்றது.
சட்டமன்றப் பேரவை சட்டமுன்வடிவு எண். 15//20232023
சட்டமன்றப் பேரவை சட்டமுன்வடிவு எண். 15
2012ஆம் ஆண்டு தமிழ்நாடு மீன்வளப் பல்கலைக்கழகச் சட்டத்தினை மேலும் திருத்தம் செய்வதற்கானதொரு சட்டமுன்வடிவு.
இந்தியக் குடியரசின் எழுபத்தி நான்காம் ஆண்டில் தமிழ்நாடு மாநிலச்
சட்டமன்றப் பேரவையினால் பின்வருமாறு சட்டமியற்றப்படுவதாகுக:-
1. (1) இந்தச் சட்டம், 2023 ஆம் ஆண்டு தமிழ்நாடு மீன்வளப் குறுந்தலைப்பு மற்றும் தொடக்கம்.
பல்கலைக்கழகத் (திருத்தச்) சட்டம் என வழங்கப்பெறும்.
(2) இது, உடனடியாக நடைமுறைக்கு வருதல் வேண்டும்.
தமிழ்நாடு சட்டம்
11ஆம் பிரிவிற்கானத் 21/2012.
திருத்தம்.
2. (இதன்பின்பு இதில் முதன்மைச் சட்டம் என குறிப்பிடப்படுவதான) 2012 ஆம் ஆண்டு தமிழ்நாடு மீன்வளப் பல்கலைக்கழகச் சட்டத்தின் 11 ஆம் பிரிவில்,
(1) (1) ஆம் உட்பிரிவில்,-
(a) வேந்தர் எனும் சொற்றொடருக்காக, அரசு எனும்
சொற்றொடரானது மாற்றாக அமைக்கப்படுதல் வேண்டும்;
(b) அதன் வகைமுறையில், வேந்தர் மற்றும் அவர் எனும் சொற்றொடர்களுக்காக, முறையே, அரசு மற்றும் அவர்கள் எனும் சொற்றொடர்களானவை மாற்றாக அமைக்கப்படுதல் வேண்டும்.
(2) (2-D) ஆம் உட்பிரிவில், வேந்தர் எனும் சொற்றொடருக்காக, அவை காணப்படுகின்ற மூன்று இடங்களிலும், அரசு எனும் சொற்றொடரானது மாற்றாக அமைக்கப்படுதல் வேண்டும்;
(3) (3) ஆம் உட்பிரிவின் முதலாம் வகைமுறைக்குப் பதிலாக பின்வரும் வகைமுறையானது மாற்றாக அமைக்கப்படுதல் வேண்டும், அதாவது;-
வரம்புரையாக
(a) துணை வேந்தர், அரசுக்கு முகவரியிட்டு, தாம் கையொப்பமிட்டு எழுத்து வாயிலாகவும், இரண்டு திங்கள் கால அறிவிப்பு கொடுத்தற்குப் பின்பும் தனது பதவியை விட்டு விலகலாம்;
(b) இந்தச் சட்டத்தின் வகைமுறைகளை மேற்கொள்ள மறுத்தல் அல்லது வேண்டுமென்றே செயல்படாமல் இருத்தல் அல்லது அவரிடம் உற்றமைந்துள்ள அதிகாரங்களை தவறாகப் பயன்படுத்துதல் போன்ற காரணத்தின் பேரில் பிறப்பிக்கப்பட்ட அரசின் ஆணை ஒன்றினாலன்றி, துணைவேந்தரானவர் அவரின் பதவியிலிருந்து நீக்கப்படுதல் ஆகாது. துணைவேந்தரை பதவி நீக்கம் செய்ய முன்மொழியப்பட்ட ஒரு நேர்வில், அரசானது.-
(i) உயர்நீதிமன்றத்தின் நீதிபதியாக இருக்கும்; அல்லது
(ii) அரசு தலைமைச் செயலாளர் படிநிலைக்கு குறையாத அரசு அலுவலராக இருக்கிற அல்லது இருந்துள்ள அத்தகைய நபர் ஒருவரினால் விசாரணை ஒன்றை மேற்கொள்ள ஆணையிடுதல் வேண்டும்,
அதில் துணைவேந்தருக்கு விளக்கம் ஒன்றை அளிப்பதற்கு வாய்ப்பு ஒன்று வழங்கப்படுதல் வேண்டும். விசாரணை அறிக்கையினை கருத்தில் கொண்டு, துணைவேந்தருக்கு விசாரணை அறிக்கையின் நகல் ஒன்று அளிக்கப்பட்டு மற்றும் அதன் மீது அவரது மேல் விளக்கம் ஏதேனும் இருப்பின், அதனை, நீக்கத்திற்கான ஆணை ஒன்றினை செய்வதற்கு முன்பு, சமர்ப்பிக்கக் கோருதல் வேண்டும்..
32 தமிழ்நாடு அரசிதழ் சிறப்பு வெளியீடுநோக்கக் காரண விளக்கவுரைநோக்கக் காரண விளக்கவுரை
முன்னதாக, குஜராத், தெலுங்கானா மற்றும் கர்நாடகா மாநிலங்களின் குறித்த சில மாநில பல்கலைக்கழகச் சட்டங்களின் வழியில், மாநில பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்களை நியமனம் செய்வதற்கும், அதன்படி அவர்களுக்கு அதிகாரம் வழங்குவதற்கும் அரசானது முடிவு செய்தது. அதற்கிணங்க, இம்மாநிலத்திலுள்ள பன்னிரண்டு மாநில பல்கலைக்கழகச் சட்டங்களை திருத்தம் செய்வதற்காக, 2022 ஆம் ஆண்டு தமிழ்நாடு பல்கலைக்கழக (திருத்தச்) சட்ட முன்வடிவானது (சட்ட மன்றப் பேரவை சட்ட முன்வடிவு எண். 24/2022) ஏப்ரல் 25, 2022 அன்று மாநிலச் சட்டமன்றப் பேரவையில் இயற்றப்பட்டது. மேற்கூறிய முடிவிற்கிணங்கி, அந்த நோக்கத்திற்காக, அரசானது, 2012 ஆம் ஆண்டு தமிழ்நாடு மீன்வளப் பல்கலைக்கழகச் சட்டத்தினை (தமிழ்நாடு சட்டம் 21/2012) தக்கவாறு திருத்தம் செய்வதென முடிவு செய்துள்ளது.
2. இந்தச் சட்டமுன்வடிவானது மேற்சொன்ன முடிவுக்கு செயல்வடிவம் கொடுக்க விழைகிறது.
அனிதா ஆர். ராதாகிருஷ்ணன்,அனிதா ஆர். ராதாகிருஷ்ணன், மீன்வளம்-மீனவர் நலத்துறை மற்றும் கால்நடை பராமரிப்புற துறை அமைச்சர்.
கி. சீனிவாசன், செயலாளர்.
தலைமைச் செயலகம், சென்னை, 2023 ஏப்ரல் 19.
தமிழ்நாடு அரசிதழ் சிறப்பு வெளியீடு 332023ஆம் ஆண்டு ஏப்ரல் திங்கள் 19-ஆம் நாளன்று தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் அறிமுகப்படுத்தப்பட்ட பின்வரும் சட்டமுன்வடிவு, நோக்கக் காரண விளக்கவுரையுடன் சேர்த்து, தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை விதிகளின் 130 ஆம் விதியின் கீழ் பொதுத் தகவலுக்காக வெளியிடப்படுகின்றது.
சட்டமன்றப் பேரவை சட்டமுன்வடிவு எண். 16//20232023
சட்டமன்றப் பேரவை சட்டமுன்வடிவு எண். 16
2018ஆம் ஆண்டு தமிழ்நாடு கடைகள் மற்றும் நிறுவனங்கள் 2018ஆம் ஆண்டு தமிழ்நாடு கடைகள் மற்றும் நிறுவனங்கள் (திருத்தச்) சட்டத்தை மேலும் திருத்தம் செய்வதற்கானதொரு (திருத்தச்) சட்டத்தை மேலும் திருத்தம் செய்வதற்கானதொரு சட்டமுன்வடிவு.சட்டமுன்வடிவு.
இந்தியக் குடியரசின் எழுபத்தி நான்காம் ஆண்டில் தமிழ்நாடு மாநிலச்
சட்டமன்றப் பேரவையினால் பின்வருமாறு சட்டமியற்றப்படுவதாகுக:-
குறுந்தலைப்பு.
1. இந்தச் சட்டம், 2023 ஆம் ஆண்டு தமிழ்நாடு கடைகள் மற்றும்
நிறுவனங்கள் (திருத்த) திருத்தச் சட்டம் என வழங்கப்பெறும்.
தமிழ்நாடு சட்டம்
3ஆம்
27/2018.
பிரிவிற்கான மாற்றீடு.
2. 2018 ஆம் ஆண்டு தமிழ்நாடு கடைகள் மற்றும் நிறுவனங்கள் (திருத்தச்) சட்டத்தின் 3 ஆம் பிரிவிற்காக, பின்வரும் பிரிவானது மாற்றாக அமைக்கப்படுதல் வேண்டும், அதாவது:-
3. கடைகள் மற்றும் நிறுவனங்களைப் பதிவு செய்தல்.- (1) 2018ஆம் ஆண்டு தமிழ்நாடு கடைகள் மற்றும் நிறுவனங்கள் (திருத்தச்) சட்டத்தின் தொடக்கத் தேதியன்றும் அதுமுதற்கொண்டும், பத்து அல்லது அதற்கு மேற்பட்ட வேலையாட்கள் பணிபுரிகின்ற நிறுவனம் ஒவ்வொன்றின் பணியமர்த்துநரானவர், தன்னுடைய வணிகம் தொடங்கப்பட்ட தேதியிலிருந்து ஆறு மாத காலத்திற்குள் பதிவிற்காக விண்ணப்பித்து பதிவுச் சான்றிதழ் ஒன்றினைப் பெறுதல் வேண்டும்.
(2) (1) ஆம் உட்பிரிவின்படியான பதிவு செய்வதற்கான
விண்ணப்பம் ஒவ்வொன்றும், வகுத்துரைக்கப்படலாகும் அத்தகைய படிவம் மற்றும் அத்தகைய முறையில் அத்தகைய கட்டணத்துடன் ஒருங்கே செய்யப்படுதல் வேண்டும்.
(3) (2) ஆம் உட்பிரிவின்படி, விண்ணப்பம் ஒன்றினைப்
பெற்றுக் கொண்டதன் பேரில், ஆய்வாளரானவர், நிறுவனத்தைப் பதிவு
செய்தல் வேண்டும் மற்றும் வகுத்துரைக்கப்படலாகிறவாறு அத்தகைய
படிவத்தில் பணியமர்த்துநருக்கு இருபத்தி நான்கு மணி நேரத்திற்குள்
பதிவுச் சான்றிதழை வழங்குதல் வேண்டும். அவ்வாறு ஆய்வாளரால்
விண்ணப்பத்தை பெற்றுக் கொண்ட தேதியிலிருந்து இருபத்தி நான்கு
மணி நேர கால அளவிற்குள் பதிவுச் சான்றிதழ் வழங்கப்படாவிட்டால், இந்தச் சட்டத்தின் கீழ் பதிவுச் சான்றிதழானது வழங்கப்பட்டதாகக் கொள்ளப்படுதல் வேண்டும்.
(4) ஆய்வாளர், வகுத்துரைக்கப்படலாகும் அத்தகைய படிவத்தில்,
நிறுவனங்களின் பதிவேட்டினைப் பராமரித்தல் வேண்டும்.
(5) பதிவுச் சான்றிதழானது, பணியமர்த்துநரால் நிறுவனத்தின்
முக்கியமான இடத்தில் காட்சிக்கு வைக்கப்படுதல் வேண்டும்.
(6) பணியமர்த்துநரானவர், வகுத்துரைக்கப்படலாகும் அத்தகைய
கட்டணத்துடன் ஒருங்கே (2) ஆம் உட்பிரிவின்படி தாக்கல் செய்யப்பட்ட
விண்ணப்பப் படிவத்தில் அளிக்கப்பட்டுள்ள விவரங்கள் எதிலும்
செய்த மாற்றம் எதையும், அத்தகைய மாற்றம் செய்ததிலிருந்து முப்பது நாட்கள் காலத்திற்குள் ஆய்வாளருக்கு தகவல் அளித்தல் வேண்டும். ஆய்வாளர், அத்தகைய தகவலைப் பெற்றுக் கொண்டதன் பேரில்,
பதிவுச் சான்றிதழை திருத்தம் செய்தல் வேண்டும் அல்லது புதிய பதிவுச்
சான்றிதழை வழங்குதல் வேண்டும்.
34 தமிழ்நாடு அரசிதழ் சிறப்பு வெளியீடு(7) பணியமர்த்துநரானவர், நிறுவனம் மூடப்பட்ட முப்பது நாட்கள்
கால அளவிற்குள், அத்தகைய மூடப்பட்ட தகவலை ஆய்வாளருக்கு
தெரிவித்தல் வேண்டும் மற்றும் அத்தகைய தகவலைப் பெற்றுக்
கொண்டதன் பேரில், அவர் பதிவுச் சான்றிதழை ரத்து செய்தல்
வேண்டும்:
வரம்புரையாக, நிறுவனம் மூடப்பட்ட அத்தகைய தகவலைப்
பெற்றுக்கொண்டதன் பேரில், பிறவாறு ஆய்வாளரானவர்
மனநிறைவடைகிறவிடத்து, அவர் அத்தகைய பதிவுச் சான்றிதழை ரத்து
செய்தல் வேண்டும்:
மேலும் வரம்புரையாக, பணியமர்த்துநருக்கு முறையிடுவதற்கான
ஒரு வாய்ப்பு வழங்கப்பட்டிருந்தாலன்றி முதலாம் வரம்புரையின்படி ரத்து
செய்யப்படுதல் கூடாது.
(8) (1) ஆம் உட்பிரிவில் அடங்கியிருப்பது எது எவ்வாறிருப்பினும், 2018 ஆம் ஆண்டு தமிழ்நாடு கடைகள் மற்றும் நிறுவனங்கள் (திருத்தச்) சட்டத்தின் தொடக்கத் தேதியன்று பத்து அல்லது அதற்கு மேற்பட்ட வேலையாட்கள் பணிபுரிகின்ற தற்போதுள்ள நிறுவனம் ஒவ்வொன்றின் பணியமர்த்துநரானவர், வகுத்துரைக்கப்படலாகிறவாறான அத்தகைய படிவத்தில் தானே செய்யப்பட்ட விளம்புகையுடன் நிறுவனத்தின் விவரங்களை 2018 ஆம் ஆண்டு தமிழ்நாடு கடைகள் மற்றும் நிறுவனங்கள் (திருத்தச்) சட்டத்தின் தொடக்கத் தேதியிலிருந்து ஓர் ஆண்டிற்குள் ஆய்வாளருக்கு அளித்தல் வேண்டும். ஆய்வாளரானவர், பணியமர்த்துநரால் அளிக்கப்பட்ட தகவலை நிறுவனங்களின் பதிவேட்டில் பதிவு செய்த பின்பு பதிவுச் சான்றிதழ் ஒன்றினை வழங்குதல் வேண்டும்.
(9) (3) ஆம் உட்பிரிவின்படி வழங்கப்பட்ட பதிவுச் சான்றிதழ் ஒன்று தொலைந்து, சிதைக்கப்பட்டு அல்லது அழிக்கப்பட்டுவிட்டால், பணியமர்த்துநரானவர், இரண்டாம்படி பதிவுச் சான்றிதழ் ஒன்றினை வழங்குவதற்காக, வகுத்துரைக்கப்படலாகும் அத்தகைய கட்டணத்துடன் ஒருங்கே, ஆய்வாளரிடம் விண்ணப்பம் ஒன்றினை செய்தல் வேண்டும். ஆய்வாளர், அத்தகைய விண்ணப்பத்தைப் பெற்றதன்பேரில், பதிவுச் சான்றிதழின் இரண்டாம் படியினை பணியமர்த்துநரிடம் வழங்குதல் வேண்டும்.
தமிழ்நாடு அரசிதழ் சிறப்பு வெளியீடு 35நோக்கக் காரண விளக்கவுரைநோக்கக் காரண விளக்கவுரை
1947ஆம் ஆண்டு தமிழ்நாடு கடைகள் மற்றும் நிறுவனங்கள் சட்டமானது (தமிழ்நாடு சட்டம் XXXVI/1947), கடைகள் மற்றும் நிறுவனங்களில் பணிபுரியும் நபர்களின் வேலைநேரம், வாரஓய்வு, விடுமுறைகள், உடல் ஆரோக்கியம் மற்றும் பாதுகாப்பு போன்ற அத்தகைய வேலை நிபந்தனைகளை ஒழுங்குபடுத்துகிறது.
2. முன்னதாக, இந்திய அரசின் பரிந்துரைகளைக் கருத்தில் கொண்டு, கடைகள் மற்றும் நிறுவனங்களைப் பதிவு செய்தல், பதிவினை புதுப்பித்தல் மற்றும் பெண் பணியாளர்களுக்கெதிரான பாகுபாட்டினைத் தடுத்தல் போன்றவைகளுக்காக, கூறப்பட்ட தமிழ்நாடு சட்டம் XXXVI/1947 ஆனது, 2018 ஆம் ஆண்டு தமிழ்நாடு கடைகள் மற்றும் நிறுவனங்கள் (திருத்தச்) சட்டத்தின் (தமிழ்நாடு சட்டம் 27/2018) மூலம் திருத்தம் செய்யப்பட்டது. கூறப்பட்ட திருத்தச் சட்டம் 27/2018 ஆனது, அதன் பின்னர் பதிவினை புதுப்பிக்கும் வழிமுறைகளை விட்டொழிப்பதற்காகவும், விண்ணப்பித்த தேதியிலிருந்து ஒரு நாளுக்குள் பதிவுச் சான்றிதழ் வழங்குவதை உறுதிசெய்வதற்காகவும் தமிழ்நாடு சட்டம் 26/2021 இன் மூலம் திருத்தம் செய்யப்பட்டது. கூறப்பட்ட திருத்தச் சட்டம் 27/2018 ஆனது இன்றுவரை நடைமுறைக்கு கொண்டு வரப்படவில்லை.
3. கூறப்பட்ட திருத்தச் சட்டம் 27/2018 இன் மூலம் திருத்தப்பட்டவாறான, கூறப்பட்ட தமிழ்நாடு சட்டம் XXXVI/1947 ஆனது, பதிவுச் சான்றிதழ் வழங்குவதற்காக வகுத்துரைக்கப்படுகின்ற கட்டணம் அல்லது பதிவுச் சான்றிதழின் திருத்தங்கள் மற்றும் பதிவுச் சான்றிதழின் இரண்டாம்படியினை வழங்குதல் ஆகியவற்றிற்கு வகை செய்து கொடுக்கவில்லை. எனவே, அரசானது, 2018 ஆம் ஆண்டு தமிழ்நாடு கடைகள் மற்றும் நிறுவனங்கள் (திருத்தச்) சட்டத்தினை, கூறப்பட்ட நோக்கங்களுக்காக, திருத்தம் செய்வதென முடிவு செய்துள்ளது.
4. இந்தச் சட்டமுன்வடிவு மேற்சொன்ன முடிவிற்குச் செயல்வடிவம் கொடுக்க விழைகிறது.
சி.வி. கணேசன், சி.வி. கணேசன், தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர்.
36 தமிழ்நாடு அரசிதழ் சிறப்பு வெளியீடுசட்டமியற்று அதிகார ஒப்படைவு பற்றிய குறிப்பு சட்டமியற்று அதிகார ஒப்படைவு பற்றிய குறிப்பு
இச்சட்டமுன்வடிவின் 2ஆம் கூறினால் மாற்றீடு செய்வதற்கு முன்மொழியப்பட்ட 3ஆம் பிரிவானது அதில் குறித்துரைக்கப்பட்ட நோக்கங்களை நிறைவேற்றுவதற்காக, விதிகளைச் செய்வதற்கு அரசுக்கு அதிகாரம் அளிக்கின்றது.
2. ஒப்படைவு செய்யப்பட்ட அதிகாரங்கள் இயல்பானவையேயன்றி தனித்தன்மை வாய்ந்தவை அல்ல.
சி.வி. கணேசன், சி.வி. கணேசன், தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர்.
கி. சீனிவாசன், செயலாளர்.
தலைமைச் செயலகம், சென்னை, 2023 ஏப்ரல் 19.
தமிழ்நாடு அரசுக்காக சென்னை எழுதுபொருள் மற்றும் அச்சுத் துறை இயக்குநரால் அச்சிடப்பட்டு வெளியிடப்பட்டது.