©
GOVERNMENT OF TAMIL NADU 2023
[Regd. No. TN/CCN/467/2012-14.
[R. Dis. No. 197/2009.
[Price: Rs. 4.80 Paise.
| தமிழ்நாடு அரசிதழ் சிறப்பு வெளியீடு ஆணையின்படி வெளியிடப்பட்டது. | ||
No. 132A] சென்னை, வியாழக்கிழமை, ஏப்ரல் 20, 2023 சித்திரை 7, சோபகிருது, திருவள்ளுவர் ஆண்டு-2054
பகுதி IV—பிரிவு 1
தமிழ்நாடு சட்டமுன்வடிவுகள்தமிழ்நாடு சட்டமுன்வடிவுகள்
பொருளடக்கம்பொருளடக்கம்
பக்கங்கள் சட்டமுன்வடிவுகள்:சட்டமுன்வடிவுகள்:
எண் 17/2023—தமிழ்நாடு நகர்ப்புர உள்ளாட்சி அமைப்புகள் (திருத்தச்) சட்டம் .. .. .. 2-4 எண் 18/2023—தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகச் (திருத்தச்) சட்டம் .. 5-7 எண் 19/2023—தமிழ்நாடு நிதிநிலை நிருவாக பொறுப்புடைமை (திருத்தச்) சட்டம் .. .. 8-9 எண் 20/2023—தமிழ்நாடு ஒளிவுமறைவற்ற ஒப்பந்தப்புள்ளிகள் (திருத்தச்) சட்டம் .. .. 10-12
[1]
DTP—Ex-IV-1-T(132A)2 தமிழ்நாடு அரசிதழ் சிறப்பு வெளியீடு 2023 ஆம் ஆண்டு ஏப்ரல் திங்கள் 20 ஆம் நாளன்று தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் அறிமுகப்படுத்தப்பட்ட பின்வரும் சட்டமுன்வடிவு, நோக்கக் காரண விளக்கவுரையுடன் சேர்த்து, தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை விதிகளின் 130 ஆம் விதியின் கீழ் பொதுத் தகவலுக்காக வெளியிடப்படுகின்றது.
சட்டமன்றப் பேரவை சட்டமுன்வடிவு எண். 17/20232023 சட்டமன்றப் பேரவை சட்டமுன்வடிவு எண். 17
1998 ஆம் ஆண்டு தமிழ்நாடு நகர்ப்புர உள்ளாட்சி அமைப்புகள் சட்டத்தை 1998 ஆம் ஆண்டு தமிழ்நாடு நகர்ப்புர உள்ளாட்சி அமைப்புகள் சட்டத்தை மேலும் திருத்தம் செய்வதற்கானதொரு சட்டமுன்வடிவு. மேலும் திருத்தம் செய்வதற்கானதொரு சட்டமுன்வடிவு.
இந்தியக் குடியரசின் எழுபத்தி நான்காம் ஆண்டில் தமிழ்நாடு மாநிலச்
சட்டமன்றப் பேரவையினால் பின்வருமாறு சட்டமியற்றப்படுவதாகுக:-
குறுந்தலைப்பு
1. (1) இந்தச் சட்டம், 2023 ஆம் ஆண்டு தமிழ்நாடு நகர்ப்புர உள்ளாட்சி
மற்றும் தொடக்கம். அமைப்புகள் (திருத்தச்) சட்டம் என வழங்கப்பெறும்.
(2) இது 2023-ஆம் ஆண்டு ஏப்ரல் திங்கள் 13-ஆம் நாளன்று
நடைமுறைக்கு வந்திருப்பதாகக் கொள்ளப்படுதல் வேண்டும்.
91 ஆம்
தமிழ்நாடு சட்டம் பிரிவிற்கான
9/1999.
மாற்றீடு.
2. 1998 ஆம் ஆண்டு தமிழ்நாடு நகர்ப்புர உள்ளாட்சி அமைப்புகள் (இதன் பின்பு இதில் முதன்மைச் சட்டம் எனக் குறிப்பிடப்படுவதான) சட்டத்தின் 91 ஆம் பிரிவிற்காக, பின்வரும் பிரிவானது மாற்றாக அமைக்கப்படுதல் வேண்டும், அதாவது:-
91. கல்வி வரி விதித்தல் மற்றும் வசூலித்தல்:- மன்றமானது, அதன் பகுதிக்குள்ளாக, நிலங்கள், கட்டடங்கள், தொலைத்தொடர்பு கோபுரங்கள் மற்றும் நிலத்தின் மீதுள்ள அல்லது இணைக்கப்பட்ட சேமிப்பு கட்டமைப்புகள் ஆகிய அனைத்தின் ஆண்டு மதிப்பில் ஐந்து விழுக்காட்டிற்கு மிகாத, மன்றத்தினால் நிர்ணயிக்கப்படலாகும் அத்தகைய வீதத்தில் கல்வி வரி விதிப்பினை நிர்ணயம் செய்யலாம் மற்றும் அத்தகைய வரியினை வசூலிக்கலாம்..
செல்லுந்தன்மை. 3. முதன்மைச் சட்டத்தில் அடங்கியுள்ளது எது எவ்வாறிருப்பினும், 2023 ஆம் ஆண்டு ஏப்ரல் திங்கள் 13 ஆம் நாளன்று தொடங்கி, இந்தச் சட்டம் தமிழ்நாடு அரசிதழில் வெளியிடப்படும் தேதியுடன் முடிவடையும் காலத்தின் போது, முதன்மை சட்டத்தின்படி விதிக்கப்பட்ட, வசூலிக்கப்பட்ட அல்லது செலுத்தப்பட்ட கல்வி வரியானது, அனைத்து நோக்கத்திற்காக, இச்சட்டத்தின் 2 ஆம் பிரிவினால் மாற்றீடு செய்யப்பட்டவறான முதன்மைச் சட்டத்தின் 91 ஆம் பிரிவானது அனைத்து நேரங்களிலும் நடைமுறையில் இருந்ததைப் போல, சட்டத்துடன் இணங்கிய வகையில் செல்லுந்தன்மையுடன் விதிக்கப்பட்டது, வசூலிக்கப்பட்டது அல்லது செலுத்தப்பட்டது எனக் கொள்ளப்படுதல் வேண்டும். அத்தகைய வரியானது விதிக்கப்பட்ட, வசூலிக்கப்பட்ட அல்லது செலுத்தப்பட்ட போது மற்றும் அனைத்து சட்டங்கள், செயல்முறைகள் ஆகியவற்றிற்கு இணங்கி அல்லது அதிகார அமைப்பு அல்லது அலுவலர் எவராலும் செய்யப்பட்ட அத்தகைய வரியின் வசூலித்தல் அல்லது செலுத்துதல் தொடர்பான எதுவும் அல்லது எடுக்கப்பட்ட நடவடிக்கை எதுவும் அனைத்து நோக்கத்திற்காக, சட்டத்துடன் இணங்கிய வகையில் செல்லுந்தன்மையுடன் செய்யப்பட்டிருப்பதாக அல்லது எடுக்கப்பட்டிருப்பதாக கொள்ளப்படுதல் வேண்டும்.
தமிழ்நாடு அரசிதழ் சிறப்பு வெளியீடு 3நோக்கக் காரண விளக்கவுரை.நோக்கக் காரண விளக்கவுரை.
2000-ஆம் ஆண்டு முதல் இடைநிறுத்தப்பட்ட 1998-ஆம் ஆண்டு தமிழ்நாடு நகர்ப்புர உள்ளாட்சி அமைப்புகள் சட்டமானது (தமிழ்நாடு சட்டம் 9/1999), 2022-ஆம் ஆண்டு தமிழ்நாடு நகர்ப்புர உள்ளாட்சி அமைப்புகள் (திருத்தச்) சட்டத்தினால் (தமிழ்நாடு சட்டம் 35/2022) புதுப்பிக்கப்பட்டு, நடைமுறைப்படுத்தப்பட்டது. கூறப்பட்ட தமிழ்நாடு சட்டம் 35/2022 இன்படி திருத்தப்பட்டவாறான கூறப்பட்ட தமிழ்நாடு சட்டம் 9/1999 மற்றும் அதன் கீழ் உருவாக்கப்பட்ட 2023 ஆம் ஆண்டு தமிழ்நாடு நகர்ப்புர உள்ளாட்சி அமைப்பு விதிகள் ஆகியன 2023 ஆம் ஆண்டு ஏப்ரல் திங்கள் 13 ஆம் நாள் முதல் நடைமுறைக்கு கொண்டு வரப்பட்டுள்ளன.
2. கல்வி வரியானது, கூறப்பட்ட தமிழ்நாடு சட்டம் 9/1999ன் மூலம் நீக்கறவு செய்யப்பட்ட 1920 ஆம் ஆண்டு தமிழ்நாடு மாவட்ட நகராட்சிகள் சட்டம் (தமிழ்நாடு சட்டம் V/1920 ) மற்றும் பிற மாநகராட்சி சட்டங்களின்படி சொத்தின் ஆண்டு மதிப்பின் மீது விதிக்கப்பட்டது. அதே ஒப்புமையின் பேரில், சொத்தின் ஆண்டு மதிப்பின் மீதான கல்வி வரியினை விதிப்பதற்கும், வசூலிப்பதற்கும் மாநகராட்சிகள், நகராட்சி மன்றங்கள் மற்றும் பேரூராட்சிகள் ஆகியவற்றை இயலச் செய்வதெனவும், மேற்சொன்ன நோக்கத்திற்காக, கூறப்பட்ட 1998 ஆம் ஆண்டு தமிழ்நாடு நகர்ப்புர உள்ளாட்சி அமைப்புகள் சட்டத்தை (தமிழ்நாடு சட்டம் 9/1999) தக்கவாறு திருத்துவதெனவும் அரசு முடிவு செய்துள்ளது.
3. இச்சட்ட முன்வடிவானது மேற்சொன்ன முடிவிற்கு செயல்வடிவம் கொடுக்க விழைகிறது.
கே.என்.நேரு, கே.என்.நேரு, நகராட்சி நிருவாகத் துறை அமைச்சர்.
4 தமிழ்நாடு அரசிதழ் சிறப்பு வெளியீடுசட்டமியற்று அதிகார ஒப்படைவு பற்றிய குறிப்பு. சட்டமியற்று அதிகார ஒப்படைவு பற்றிய குறிப்பு.
இந்தச் சட்டமுன்வடிவின் 2 ஆம் கூறானது, அதன் பகுதிக்குள்ளாக மற்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ள வீதத்தில், கல்வி வரியை விதிக்க நகராட்சிகளின் மன்றத்திற்கு அதிகாரமளிக்கின்றது.
2. ஒப்படைவு செய்யப்பட்ட அதிகாரங்கள் இயல்பானவையேயன்றி தனித்தன்மை வாய்ந்தவையல்ல.
கே.என்.நேரு, கே.என்.நேரு, நகராட்சி நிருவாகத் துறை அமைச்சர்.
கி. சீனிவாசன்,கி. சீனிவாசன், செயலாளர்.
தலைமைச் செயலகம், சென்னை, 2023 ஏப்ரல் 20.
தமிழ்நாடு அரசிதழ் சிறப்பு வெளியீடு 52023 ஆம் ஆண்டு ஏப்ரல் திங்கள் 20 ஆம் நாளன்று தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் அறிமுகப்படுத்தப்பட்ட பின்வரும் சட்டமுன்வடிவு, நோக்கக் காரண விளக்கவுரையுடன் சேர்த்து, தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை விதிகளின் 130 ஆம் விதியின் கீழ் பொதுத் தகவலுக்காக வெளியிடப்படுகின்றது.
சட்டமன்றப் பேரவை சட்டமுன்வடிவு எண். 18/20232023 சட்டமன்றப் பேரவை சட்டமுன்வடிவு எண். 18
1989-ஆம் ஆண்டு தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் 1989-ஆம் ஆண்டு தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகச் சட்டத்தினை மேலும் திருத்தம் செய்வதற்கானதொரு பல்கலைக்கழகச் சட்டத்தினை மேலும் திருத்தம் செய்வதற்கானதொரு சட்டமுன்வடிவு.சட்டமுன்வடிவு.
இந்தியக் குடியரசின் எழுபத்தி நான்காம் ஆண்டில் தமிழ்நாடு மாநிலச்
சட்டமன்றப் பேரவையினால் பின்வருமாறு சட்டமியற்றப்படுவதாகுக:-
குறுந்தலைப்பு
மற்றும் தொடக்கம்.
1. (1) இந்தச் சட்டம், 2023 ஆம் ஆண்டு தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத் (திருத்தச்) சட்டம் என வழங்கப்பெறும்.
(2) இது, உடனடியாக நடைமுறைக்கு வருதல் வேண்டும்.
11-ஆம் பிரிவிற்கானத் தமிழ்நாடு சட்டம்
திருத்தம், 42/1989.
2. (இதன்பின்பு இதில் முதன்மைச் சட்டம் என குறிப்பிடப்படுவதான) 1989 ஆம் ஆண்டு தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகச் சட்டத்தின் 11 ஆம் பிரிவில்,
(1) (1) ஆம் உட்பிரிவில்,-
(a) வேந்தர் எனும் சொற்றொடருக்காக, அரசு எனும்
சொற்றொடரானது மாற்றாக அமைக்கப்படுதல் வேண்டும்;
(b) அதன் வகைமுறையில், வேந்தர் மற்றும் அவர் எனும் சொற்றொடர்களுக்காக, முறையே, அரசு மற்றும் அவர்கள் எனும் சொற்றொடர்களானவை மாற்றாக அமைக்கப்படுதல் வேண்டும்.
(2) (2)ஆம் உட்பிரிவில்,-
(a) (i) ஆம் கூறுக்காக, பின்வரும் கூறானது மாற்றாக
அமைக்கப்படுதல் வேண்டும், அதாவது:-
(i) அரசின் இரண்டு பேராளர்களில், ஒருவர், உச்ச நீதிமன்றம் அல்லது உயர்நீதிமன்றம் ஒன்றின் ஓய்வு பெற்ற நீதிபதியாக இருத்தல் வேண்டும், மற்றும் மற்றொருவர், அரசு முதன்மைச் செயலாளர் படிநிலைக்கும் குறையாத மாநில அரசின் ஓய்வு பெற்ற அல்லது பதவியிலுள்ள அலுவலராக இருத்தல் வேண்டும் அல்லது சிறந்த கல்வியாளராக இருத்தல் வேண்டும்;
(b) (ii) ஆம் கூறானது விட்டு விடப்படுதல் வேண்டும்;
(3) (2-A)-ஆம் உட்பிரிவில், (ii) ஆம் கூறில், வேந்தருடன் கலந்தாய்வு செய்து எனும் சொற்றொடரானது விட்டுவிடப்படுதல் வேண்டும்;
(4) (2-B)-ஆம் உட்பிரிவில், வேந்தர் எனும்
சொற்றொடரானது விட்டுவிடப்படுதல் வேண்டும்;
(5) (2-D)-ஆம் உட்பிரிவில், வேந்தர் எனும் சொற்றொடர், அது காணப்படுகின்ற மூன்று இடங்களில், அரசு எனும் சொற்றொடரானது மாற்றாக அமைக்கப்படுதல் வேண்டும்;
(6) (3)-ஆம் உட்பிரிவிற்கான, இரண்டாம் வரம்புரையில், (a) மற்றும் (b) கூறுகளில் உள்ள, வேந்தர் எனும் சொற்றொடருக்காக, அரசு எனும் சொற்றொடரானது மாற்றாக அமைக்கப்படுதல் வேண்டும்6 தமிழ்நாடு அரசிதழ் சிறப்பு வெளியீடு 11-A எனும்
3. முதன்மைச் சட்டத்தின் 11-ஆம் பிரிவிற்குப் பின்பு, பின்வரும்
புதிய பிரிவை
பிரிவானது உட்புகுத்தப்படுதல் வேண்டும், அதாவது:-
உட்புகுத்துதல்.
11-A. துணைவேந்தரை நீக்குதல்11-A. துணைவேந்தரை நீக்குதல்.-.- இந்தச் சட்டத்தின் வகைமுறைகளை மேற்கொள்ள மறுத்தல் அல்லது வேண்டுமென்றே செயல்படாமல் இருத்தல் அல்லது அவரிடம் உற்றமைந்துள்ள அதிகாரங்களை தவறாகப் பயன்படுத்துதல் போன்ற காரணத்தின் பேரில் பிறப்பிக்கப்பட்ட அரசின் ஆணை ஒன்றினாலன்றி, துணைவேந்தரானவர் அவரின் பதவியிலிருந்து நீக்கப்படுதல் ஆகாது. துணைவேந்தரை பதவி நீக்கம் செய்வதற்கு முன்மொழியப்பட்ட நேர்வில், அரசானது .-
(i) உயர்நீதிமன்றத்தின் நீதிபதியாக; அல்லது
(ii) அரசு தலைமைச் செயலாளர் படிநிலைக்கு குறையாத அரசு
அலுவலராக,
இருக்கிற அல்லது இருந்துள்ள அத்தகைய நபர் ஒருவரினால் விசாரணை ஒன்றை மேற்கொள்ள ஆணையிடுதல் வேண்டும்,
அதில் துணைவேந்தருக்கு விளக்கம் ஒன்றை அளிப்பதற்கு வாய்ப்பு ஒன்று வழங்கப்படுதல் வேண்டும். விசாரணை அறிக்கையினை கருத்தில் கொண்டு, துணைவேந்தருக்கு விசாரணை அறிக்கையின் நகல் ஒன்று அளிக்கப்பட்டு மற்றும் அதன் மீது அவரது மேல் விளக்கம் ஏதேனும் இருப்பின், அதனை, நீக்கத்திற்கான ஆணை ஒன்றினை செய்வதற்கு முன்பு, சமர்ப்பிக்கக் கோருதல் வேண்டும்..
தமிழ்நாடு அரசிதழ் சிறப்பு வெளியீடு 7நோக்கக் காரண விளக்கவுரை.நோக்கக் காரண விளக்கவுரை.
முன்னதாக, குஜராத், தெலுங்கானா மற்றும் கர்நாடகா மாநிலங்களின் குறித்த சில மாநில பல்கலைக்கழகச் சட்டங்களின் வழியில், மாநில பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்களை நியமனம் செய்வதற்கும், அதன்படி அவர்களுக்கு அதிகாரம் வழங்குவதற்கும் அரசானது முடிவு செய்தது. அதற்கிணங்க, இம்மாநிலத்திலுள்ள பன்னிரண்டு மாநில பல்கலைக்கழகச் சட்டங்களை திருத்தம் செய்வதற்காக, 2022 ஆம் ஆண்டு தமிழ்நாடு பல்கலைக்கழக (திருத்தச்) சட்ட முன்வடிவானது (சட்டமன்றப் பேரவை சட்ட முன்வடிவு எண். 24/2022) ஏப்ரல் 25, 2022 அன்று மாநிலச் சட்டமன்றப் பேரவையில் இயற்றப்பட்டது. மேலும், 1982 ஆம் ஆண்டு தமிழ்ப் பல்கலைக்கழக சட்டத்தினை (தமிழ்நாடு சட்டம் 9/1982) திருத்தம் செய்வதற்கானதொரு சட்ட முன்வடிவானது மாநிலச் சட்டமன்றப் பேரவையில் அக்டோபர் 19, 2022 அன்று மேற்சொன்ன நோக்கத்திற்காக இயற்றப்பட்டது. மேற்கூறிய முடிவிற்கிணங்கி, அந்த நோக்கத்திற்காக, அரசானது, 1989 ஆம் ஆண்டு தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகச் சட்டத்தினை (தமிழ்நாடு சட்டம் 42/1989) தக்கவாறு திருத்தம் செய்வதென முடிவு செய்துள்ளது.
2. இந்தச் சட்ட முன்வடிவானது மேற்சொன்ன முடிவுக்கு செயல்வடிவம் கொடுக்க விழைகிறது.
அனிதா ஆர். ராதாகிருஷ்ணன், அனிதா ஆர். ராதாகிருஷ்ணன், மீன்வளம்-மீனவர் நலத்துறை
மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர்.
கி. சீனிவாசன்,கி. சீனிவாசன், செயலாளர்.
தலைமைச் செயலகம், சென்னை, 2023 ஏப்ரல் 20.
8 தமிழ்நாடு அரசிதழ் சிறப்பு வெளியீடு2023 ஆம் ஆண்டு ஏப்ரல் திங்கள் 20 ஆம் நாளன்று தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் அறிமுகப்படுத்தப்பட்ட பின்வரும் சட்டமுன்வடிவு, நோக்கக் காரண விளக்கவுரையுடன் சேர்த்து, தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை விதிகளின் 130 ஆம் விதியின் கீழ் பொதுத் தகவலுக்காக வெளியிடப்படுகின்றது.
சட்டமன்றப் பேரவை சட்டமுன்வடிவு எண். 19/20232023 சட்டமன்றப் பேரவை சட்டமுன்வடிவு எண். 19
2003 ஆம் ஆண்டு தமிழ்நாடு நிதிநிலை நிருவாக பொறுப்புடைமைச் 2003 ஆம் ஆண்டு தமிழ்நாடு நிதிநிலை நிருவாக பொறுப்புடைமைச் சட்டத்தை மேலும் திருத்தம் செய்வதற்கானதொரு சட்ட முன்வடிவு. சட்டத்தை மேலும் திருத்தம் செய்வதற்கானதொரு சட்ட முன்வடிவு.
இந்தியக் குடியரசின் எழுபத்தி நான்காம் ஆண்டில் தமிழ்நாடு மாநிலச் சட்டமன்றப் பேரவையால் பின்வருமாறு சட்டமியற்றப்படுவதாகுக:-
குறுந்தலைப்பு
மற்றும்
1. (1) இந்தச் சட்டம், 2023 ஆம் ஆண்டு தமிழ்நாடு நிதிநிலை நிருவாக பொறுப்புடைமை (திருத்தச்) சட்டம் என வழங்கப்பெறும்.
தொடக்கம்.
(2) இது உடனடியாக நடைமுறைக்கு வருதல் வேண்டும்.
4-ஆம்
தமிழ்நாடு சட்டம் பிரிவிற்கான
16/2003.
2. 2003 ஆம் ஆண்டு தமிழ்நாடு நிதிநிலை நிருவாக பொறுப்புடைமைச் சட்டத்தின் 4- ஆம் பிரிவில், (2) ஆம் உட்பிரிவில்,-
திருத்தம்.
(1) (a) கூறில், 2023-2024 எனும் சொற்றொடருக்காக, 2025-2026 எனும் சொற்றொடரானது மாற்றாக அமைக்கப்படுதல் வேண்டும்;
(2) (b) கூறில், 2024 ஆம் ஆண்டு மார்ச்சு மாதம் 31 ஆம் தேதி எனும் சொற்றொடருக்காக, 2025 ஆம் ஆண்டு மார்ச்சு மாதம் 31 ஆம் தேதி எனும் சொற்றொடரானது மாற்றாக அமைக்கப்படுதல் வேண்டும்.
தமிழ்நாடு அரசிதழ் சிறப்பு வெளியீடு 9நோக்கக் காரண விளக்கவுரைநோக்கக் காரண விளக்கவுரை
15 ஆம் நிதிக்குழுவானது, தனது 2021-2026 ஆண்டிற்கான அறிக்கையில், எரிசக்தி துறையின் குறித்த சில செயல்திறன் வரைகூறுகளின் அடிப்படையில், 2021-2022 முதல் 2024-2025 வரையிலான காலஅளவினை உள்ளடக்கி வழங்கப்பட்ட முதல் நான்கு ஆண்டுகள் ஒவ்வொன்றிற்குமான மொத்த மாநில உள்நாட்டு உற்பத்தி மதிப்பீட்டில் 0.50 விழுக்காடு அளவு கூடுதல் கடன் பெறுதலுக்கான இடத்தினை மாநிலங்களுக்கு வழங்க பரிந்துரைத்துள்ளது. மேலும், நிதிக்குழுவானது, மொத்த மாநில உள்நாட்டு உற்பத்திக்கு நிகர கடன்பெறுதலுக்கான வரம்பினை 2021-2022, 2022-2023 மற்றும் 2023-2024 முதல் 2025-2026 வரையுள்ள ஆண்டுகளில் முறையே, 4 விழுக்காடு, 3.5 விழுக்காடு மற்றும் 3 விழுக்காடாக தீர்மானிக்கவும் வழங்கப்பட்ட காலஅளவின் முதல் நான்கு ஆண்டுகளில் மாநிலத்தால் கடன்பெறுதலுக்கான வரம்பை முழுமையாகப் பயன்படுத்த முடியாவிட்டால், வழங்கப்பட்ட காலஅளவிற்குள் அடுத்தடுத்த ஆண்டுகள் எதிலும், பயன்படுத்தப்படாத கடன் தொகையைப் பெறவும் பரிந்துரைத்துள்ளது.
2. நிதிக்குழுவின் மேற்சொன்ன பரிந்துரைகளின் அடிப்படையில், 2025-26 ஆம் ஆண்டில் வருவாய் பற்றாக்குறையை நீக்குவதற்கு, குறிக்கப்பட்ட கால வரம்பினை நீட்டிப்பதற்காகவும், கிடைக்கக்கூடிய அதிகபட்ச நிதி இடத்தினைப் பயன்படுத்திக் கொள்வதற்காக, 2025, மார்ச்சு 31 ற்குள் மொத்த மாநில உள்நாட்டு உற்பத்தியின் நிதிநிலைப்பற்றாக்குறையினை மூன்று விழுக்காடு வரை குறைப்பதற்காகவும், 2003 ஆம் ஆண்டு தமிழ்நாடு நிதிநிலை நிருவாக பொறுப்புடைமைச் சட்டத்தை (தமிழ்நாடு சட்டம் 16/2003) திருத்தம் செய்வதென அரசானது முடிவு செய்துள்ளது.
3. இந்தச் சட்ட முன்வடிவானது மேற்சொன்ன முடிவிற்கு செயல்வடிவம் கொடுக்க விழைகிறது.
முனைவர். பழனிவேல் தியாக ராஜன், முனைவர். பழனிவேல் தியாக ராஜன்,
நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சர்.
கி. சீனிவாசன்,கி. சீனிவாசன், செயலாளர்.
தலைமைச் செயலகம், சென்னை, 2023 ஏப்ரல் 20.
10 தமிழ்நாடு அரசிதழ் சிறப்பு வெளியீடு2023 ஆம் ஆண்டு ஏப்ரல் திங்கள் 20 ஆம் நாளன்று தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் அறிமுகப்படுத்தப்பட்ட பின்வரும் சட்டமுன்வடிவு, நோக்கக் காரண விளக்கவுரையுடன் சேர்த்து, தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை விதிகளின் 130 ஆம் விதியின் கீழ் பொதுத் தகவலுக்காக வெளியிடப்படுகின்றது.
சட்டமன்றப் பேரவை சட்டமுன்வடிவு எண். 20/20232023 சட்டமன்றப் பேரவை சட்டமுன்வடிவு எண். 20
1998 ஆம் ஆண்டு தமிழ்நாடு ஒளிவுமறைவற்ற ஒப்பந்தப்புள்ளிகள் 1998 ஆம் ஆண்டு தமிழ்நாடு ஒளிவுமறைவற்ற ஒப்பந்தப்புள்ளிகள் சட்டத்தை மேலும் திருத்தம் செய்வதற்கானதொரு சட்டமுன்வடிவு. சட்டத்தை மேலும் திருத்தம் செய்வதற்கானதொரு சட்டமுன்வடிவு.
இந்தியக் குடியரசின் எழுபத்தி நான்காம் ஆண்டில் தமிழ்நாடு மாநிலச்
சட்டமன்றப் பேரவையினால் பின்வருமாறு சட்டமியற்றப்படுவதாகுக:-
குறுந்தலைப்பு
1. (1) இந்தச் சட்டம் 2023 ஆம் ஆண்டு தமிழ்நாடு ஒளிவுமறைவற்ற
மற்றும்
ஒப்பந்தப்புள்ளிகள் (திருத்தச்) சட்டம் என வழங்கப்பெறும்.
தொடக்கம்.
(2) இது, உடனடியாக நடைமுறைக்கு வருதல் வேண்டும்.
9-ஆம்
தமிழ்நாடு சட்டம் பிரிவிற்கான
43/1998.
திருத்தம்.
2. 1998 ஆம் ஆண்டு தமிழ்நாடு ஒளிவுமறைவற்ற ஒப்பந்தப்புள்ளிகள் சட்டத்தின் 9ஆம் பிரிவில், (3) ஆம் உட் பிரிவிற்காக, பின்வரும் உட்பிரிவானது மாற்றாக அமைக்கப்படுதல் வேண்டும், அதாவது:-
(3) ஒப்பந்த புள்ளி கோரும் அதிகார அமைப்பானது.-
(a) மேலும், அவ்வப்போது, அறிவிக்கையின் மூலம், அரசால் குறிப்பிடப்படலாகும் இணைய-வலைவாயிலில் ஒப்பந்தப்புள்ளிகளைக் கோரும் அறிவிப்பினை வெளியிடுதல் வேண்டும்; மற்றும்
(b) வகுத்துரைக்கப்படலாகும் கொள்முதலின் மதிப்பைப் பொறுத்து பரவலாக நடைமுறையில் இருக்கும் தினசரி செய்தித்தாள்களில் ஒப்பந்தப்புள்ளிகளைக் கோரும் அறிவிப்பினை வெளியிடுதல் வேண்டும்..
தமிழ்நாடு அரசிதழ் சிறப்பு வெளியீடு 11நோக்கக் காரண விளக்கவுரைநோக்கக் காரண விளக்கவுரை
1998ஆம் ஆண்டு தமிழ்நாடு ஒளிவு மறைவற்ற ஒப்பந்தப் புள்ளிகள் சட்டமானது, (தமிழ்நாடு சட்டம் 43/1998), அரசு கொள்முதலில் வெளிப்படை தன்மைக்கு வகை செய்கிறது. ஒப்பந்தப்புள்ளிகளை கோருவதற்கும், ஏற்றுக்கொள்ளுவதற்குமான நடைமுறைகளை ஒழுங்குமுறைப்படுத்துகிறது. கூறப்பட்ட சட்டமானது, ஒப்பந்தப்புள்ளி கோரும் அதிகார அமைப்பினை ஒப்பந்தப்புள்ளி அறிவிப்பினை இந்திய வர்த்தக இதழிலும், தினசரி செய்தித்தாள்களிலும் வெளியிடப்படுவதை கட்டாயமாக்குகிறது. காகிதம் இல்லாத, மனிதத் தொடர்பு இல்லாத மற்றும் வெளிப்படையான இணையதள (டிஜிட்டல்) சேவைகளை குடிமக்களுக்கு செயலூக்கத்துடன் வழங்குவதற்கான அரசாங்கத்தின் கொள்கைக்கு இணங்க, ஒப்பந்தப்புள்ளிகளை கோரும் அறிவிப்பினை இணைய-வலை வாயிலில் வெளியிடப்படுவதோடு, தினசரி செய்தித்தாள்களிலும், வெளியிடப்படலாம் என்று கருதப்படுகிறது. எனவே, 1998ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டம் 43-ஐ அதற்கேற்ற வகையில் திருத்தம் செய்ய அரசு முடிவு செய்துள்ளது.
2. இச்சட்ட முன்வடிவு மேற்சொன்ன முடிவுக்கு செயல் வடிவம் கொடுக்கவிழைகிறது.
முனைவர். பழனிவேல் தியாக ராஜன், முனைவர். பழனிவேல் தியாக ராஜன், நிதி மற்றும் மனித வள மேலாண்மைத் துறை அமைச்சர்.
12 தமிழ்நாடு அரசிதழ் சிறப்பு வெளியீடுசட்டமியற்று அதிகார ஒப்படைவு பற்றிய குறிப்பு. சட்டமியற்று அதிகார ஒப்படைவு பற்றிய குறிப்பு.
இந்தச் சட்டமுன்வடிவின் 2ஆம் கூறானது அதில் குறித்துரைக்கப்பட்ட நோக்கத்திற்காக அறிவிப்பை வெளியிடுவதற்கு அரசுக்கு அதிகாரமளிக்கின்றது.
2. ஒப்படைவு செய்யப்பட்ட அதிகாரங்கள் இயல்பானவையேயன்றி தனித்தன்மை வாய்ந்தவையல்ல.
முனைவர் பழனிவேல் தியாக ராஜன், முனைவர் பழனிவேல் தியாக ராஜன், நிதி மற்றும் மனித வள மேலாண்மைத் துறை அமைச்சர்.
கி. சீனிவாசன்,கி. சீனிவாசன், செயலாளர்.
தலைமைச் செயலகம், சென்னை, 2023 ஏப்ரல் 20.
தமிழ்நாடு அரசுக்காக சென்னை எழுதுபொருள் மற்றும் அச்சுத் துறை இயக்குநரால் அச்சிடப்பட்டு வெளியிடப்பட்டது.