© GOVERNMENT OF TAMIL NADU 2023
[Regd. No. TN/CCN/467/2012-14.
[R. Dis. No. 197/2009.
[Price: Rs. 7.20 Paise.
| தமிழ்நாடு அரசிதழ் சிறப்பு வெளியீடு ஆணையின்படி வெளியிடப்பட்டது. | ||
No. 135A] சென்னை, வெள்ளிக்கிழமை, ஏப்ரல் 21, 2023 சித்திரை 8, சோபகிருது, திருவள்ளுவர் ஆண்டு-2054
பகுதி IV—பிரிவு 1
தமிழ்நாடு சட்டமுன்வடிவுகள்
பொருளடக்கம்
பக்கங்கள் சட்டமுன்வடிவுகள்:
எண். 21/2023—தமிழ்நாடு நில ஒருங்கிணைப்பு (சிறப்புத் திட்டங்களுக்கான) சட்டம் .. .. 2-8 எண். 22/2023—தமிழ்நாடு நீக்கறவு செய்தல் (மூன்றாம்) சட்டம். .. .. .. .. 9-12 எண். 23/2023—தமிழ்நாடு நிதி ஒதுக்கச் சட்டம் .. .. .. .. .. .. 13-18
[1]
DTP—Ex-IV-1 (135A)2 தமிழ்நாடு அரசிதழ் சிறப்பு வெளியீடு 2023 ஆம் ஆண்டு ஏப்ரல் திங்கள் 21 ஆம் நாளன்று தமிழ்நாடு சட்டமன்றப்
பேரவையில் அறிமுகப்படுத்தப்பட்ட பின்வரும் சட்டமுன்வடிவு, நோக்கக் காரண
விளக்கவுரையுடன் சேர்த்து, தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை விதிகளின்
130 ஆம் விதியின்கீழ் பொதுத் தகவலுக்காக வெளியிடப்படுகின்றது.
சட்டமன்றப் பேரவை சட்டமுன்வடிவு எண் 21/2023
மாநிலத்தில் முக்கியத்துவம் வாய்ந்த திட்டங்களை நிறுவுவதற்காக நிலங்களை ஒருங்கிணைப்பதற்கும் அதனுடன் தொடர்புடைய அல்லது அதற்கு இடைவிளைவான பொருட்பாடுகளுக்காகவும் வகை செய்வதற்கானதொரு சட்டமுன்வடிவு.
இந்தியக் குடியரசின் எழுபத்தி நான்காம் ஆண்டில் தமிழ்நாடு மாநிலச்
சட்டமன்றப் பேரவையினால் பின்வருமாறு சட்டமியற்றப்படுவதாகுக:-
குறுந்தலைப்பு மற்றும்
தொடக்கம்.
1. (1) இந்தச் சட்டம், 2023 ஆம் ஆண்டு தமிழ்நாடு நில ஒருங்கிணைப்பு (சிறப்புத் திட்டங்களுக்கான) சட்டம் என வழங்கப்பெறும்.
(2) இது மாநில அரசு அறிவிக்கையின் வாயிலாக குறித்திடலாகும்
அத்தகைய தேதியன்று நடைமுறைக்கு வருதல் வேண்டும்.
பொருள்
2. இந்தச் சட்டத்தின் தறுவாய் வேறு பொருள் குறித்தாலன்றி:-
வரையறைகள்.
(a) "ஆட்சியர்" என்பது, மாவட்ட ஆட்சியர் மற்றும் இந்தச் சட்டத்தின் கீழ் ஆட்சியரின் பணிகளை செயல்படுத்துவதற்கு அரசால் இதற்கென நியமிக்கப்பட்ட அலுவலர் எவரையும் உள்ளடக்கும் என்று பொருள்படும்;
(b) "தகுதி வாய்ந்த அதிகார அமைப்பு" என்பது, இந்தச் சட்டத்தின் கீழ் தகுதி வாய்ந்த அதிகார அமைப்பின் அதிகாரங்களைச் செலுத்துவதற்கும் செயல்பாடுகளை செயல்படுத்துவதற்கும் அரசினால் அறிவிக்கையின் மூலம் குறித்துரைக்கப்பட்ட அலுவலர், குழு அல்லது அதிகார அமைப்பு எதுவும் என்று பொருள்படும்;
(c) "நிபுணர் குழு" என்பது, 4 ஆம் பிரிவின் (2) ஆம்
உட்பிரிவின்படி அமைத்துருவாக்கப்பட்ட குழு என்று பொருள்படும்;
(d) "அரசு" என்பது மாநில அரசு என்று பொருள்படும்;
மையச்சட்டம் 69/1980.
(e) இந்தச் சட்டத்தின் நோக்கத்திற்காக "அரசு நிலம்" என்பது, அரசிடம் உற்றமைந்துள்ள அல்லது அரசால் சொந்தமாக்கப்பட்ட நிலங்கள் என்று பொருள்படும், ஆனால் 1980 ஆம் ஆண்டு வன (பாதுகாப்புச்) சட்டத்தின் வரம்பெல்லையின் கீழ் நிலம் எதனையும் உள்ளடக்காது;
(f) "உரித்தமுடைய நபர்" என்பது, திட்ட நிலத்தில் அல்லது அதிலிருந்து பத்து கிலோ மீட்டர் சுற்றளவிற்குள் வழக்கமாக வசிக்கக்கூடிய நபர் எவரும் என்று பொருள்படும் மற்றும் திட்ட நிலங்களின் பகுதி எதுவும் அவரின் வழியுரிமையில் அல்லது சொந்தத்தில் இருந்தால் அத்தகைய தூரத்திற்கு அப்பாற்பட்டுள்ள நபரெவரையும் உள்ளடக்கும்;
மையச்சட்டம் 30/2013.
தமிழ்நாடு சட்டம்
31/1978.
தமிழ்நாடு சட்டம்
10/1999.
தமிழ்நாடு சட்டம் (g) "நிலம் கையகப்படுத்துதல் சட்டம்" என்பது, 2013 ஆம் ஆண்டு நியாயமான இழப்பீடு மற்றும் நிலம் கையகப்படுத்துதலில் வெளிப்படைத்தன்மை, புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்றச் சட்டம் என்று பொருள்படும் மற்றும் அந்தச் சட்டத்திற்கான நான்காம் இணைப்புப் பட்டியலிலுள்ள சட்டம் எதனையும் மற்றும் 1978 ஆம் ஆண்டு தமிழ்நாடு ஆதிதிராவிடர் நலத்திட்டங்களுக்காக நிலம் கையகப்படுத்துதல் சட்டம், 1997 ஆம் ஆண்டு தமிழ்நாடு தொழில்துறை நோக்கங்களுக்காக நிலம் கையகப்படுத்துதல் சட்டம் மற்றும் 2001 ஆம் ஆண்டு தமிழ்நாடு நெடுஞ்சாலைச் சட்டம் ஆகியவற்றை உள்ளடக்கும்;
34/2002.
(h) "திட்ட நிலம்" என்பது,-
(i) திட்ட சார்பாளரால் சொந்தமாக்கப்பட்ட நிலம்;
தமிழ்நாடு அரசிதழ் சிறப்பு வெளியீடு 3(ii) நிலம் கையகப்படுத்துதல் சட்டத்தின் கீழ் அத்தகைய நிலங்களை கையகப்படுத்துதலுக்காக அரசு நிர்வாக அனுமதி வழங்கியதின் பேரில் அரசு அல்லது அரசு சார்புடைய முகைமை தவிர பிற நபர் எவராலும் சொந்தமாக்கப்பட்ட தனியார் நிலங்கள்;
(iii) அரசு நிலங்கள் அல்லது அதன் இடையேயான அரசு சார்புடைய நிலங்கள் அல்லது (i) மற்றும் (ii)-உட்கூறுகளில் சுட்டப்பட்ட நிலங்களை ஒட்டிய நிலங்கள்;
ஆகியன உள்ளடங்கலான திட்டத்திற்கு தேவையான
மொத்தமான நிலங்கள் என்று பொருள்படும்;
(i) "திட்ட சார்பாளர்" என்பது, 100 ஹெக்டேருக்கு குறையாத பரப்பளவு தேவைப்படலாகும் உள்கட்டமைப்பு, தொழில்துறை, வணிகம் அல்லது வேளாண் பயன்பாடுகளுக்கான திட்டம் ஒன்றினை செயல்படுத்துவதற்கு முன்மொழிகின்ற சட்டப்பூர்வ நபர் எவரும் என்று பொருள்படும்;
(j) "அரசு சார்புடைய முகமை" என்பது, உள்ளாட்சி அதிகார அமைப்பு, பல்கலைக்கழகங்கள், ஐம்பது விழுக்காடு பங்கிற்கு மேல் வைத்திருக்கும் அரசு நிறுமம், மாநிலச் சட்டமன்றத்தின் இயற்றுச் சட்டத்தின் கீழ் அமைத்துருவாக்கப்பட்ட மற்றும் அரசின் கட்டுப்பாட்டின் கீழுள்ள வாரியம் அல்லது அதிகார அமைப்பை உள்ளடக்கியது என்று பொருள்படும்;
(k) "அரசு சார்புடைய நிலம்" என்பது, அரசு சார்புடைய
முகமையினால் சொந்தமாக்கப்பட்ட நிலம் என்று பொருள்படும்;
(l) "சிறப்பு திட்டம்" என்பது, 100 ஹெக்டேர் நிலத்திற்கு குறையாமல் தேவைப்படலாகும் மற்றும் அரசினால் அத்தகையவாறு அறிவிக்கை செய்யப்படலாகும் திட்டம் எதுவும் என்று பொருள்படும்.
திட்ட நிலத்தினை
ஒருங்கிணைப்
பதற்கான 3. (1) திட்ட சார்பாளரானவர், திட்ட நிலத்தினை ஒருங்கிணைக்கும் முன்மொழிவு ஒன்றுக்கான விண்ணப்பம் ஒன்றினை வகுத்துரைக்கப்பட்ட படிவத்தில் அரசிற்குச் சமர்ப்பிக்கலாம்.
விண்ணப்பம்.
(2) திட்ட நிலத்தினை ஒருங்கிணைப்பதற்கான
முன்மொழிவானது,-
(a) (i) திட்ட நிலத்தில், ஒட்டு மொத்த சேமிப்பு நீர்
குறைக்கப்படாது; மற்றும்
(ii) வாய்க்கால்கள், கால்வாய்களின் கொள்திறம் அல்லது திட்ட நிலத்தின் மேல்நிலை மற்றும் கீழ்நிலை ஆகிய இரண்டு வகையிலும் நீரோட்டமானது குறைக்கப்படாததற்கான பிற ஏற்பாடுகள் எதற்குமான சான்றிதழுடன் வகுத்துரைக்கப்பட்ட படிவத்தில், நீரியல் சார்ந்த ஒரு திட்டம்,-
(b) திட்டமிடப்பட்ட படிவத்தில், திட்ட நிலத்தின் உரிமையின்
விவரங்களைக் கொண்ட நில உரிமைத் திட்டம்.
(c) நில பயன்பாட்டுத் திட்டம், பரிந்துரைக்கப்பட்ட படிவத்தில், திட்ட நிலத்தின் பயன்பாட்டின் விவரங்களைக் கொண்ட நில உரிமைத் திட்டம்.
ஆகியவற்றை உள்ளடக்குதல் வேண்டும்.
சிறப்பு திட்டத்தின்
அறிவிக்கை.
4. (1) 3 ஆம் பிரிவின் கீழ் விண்ணப்பம் ஒன்றை பெறுவதன் பேரில், வகுத்துரைக்கப்பட்ட காரணிகள் மற்றும் நிபந்தனைகளைக் கருத்தில் கொண்டு, இந்தத் திட்டம் மாநிலத்திற்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும் என்று அரசு மனநிறைவடைந்தால், இந்தச் சட்டத்தின் நோக்கங்களுக்காக, இந்தத்திட்டத்தை ஒரு சிறப்பு திட்டமாக அறிவிக்கலாம் மற்றும் இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட உள்ள மாவட்ட ஆட்சியருக்கு விண்ணப்பத்தை மேலனுப்புதல் வேண்டும்.
4 தமிழ்நாடு அரசிதழ் சிறப்பு வெளியீடு(2) கூடிய விரைவில், சிறப்புத் திட்டத்தின் அறிவிப்பின் பேரில், பின்வரும் உறுப்பினர்களைக் கொண்ட நிபுணர் குழு ஒன்றை அரசானது அமைத்தல் வேண்டும் அதாவது,-
(i) திட்ட நிலத்தின் மீது அதிகார வரம்பைக் கொண்ட
நீர்வளத்துறை கண்காணிப்பு பொறியாளர்-தலைமையாளர்;
(ii) திட்ட நிலத்தின் மீது அதிகார வரம்பைக் கொண்ட
கால்நடை பராமரிப்பு மற்றும் பராமரிப்பு பணிகள் இணை இயக்குநர்- உறுப்பினர்;
(iii) அரசால் நியமிக்கப்பட்ட சுற்றுச் சூழல் பாதுகாப்பு
அல்லது நீர் மேலாண்மை துறையில் சிறந்த நபர் ஒருவர்-உறுப்பினர்;
(iv) அரசால் நியமிக்கப்பட்ட கட்டடப் பொறியியல், நீரியல், சூழலியல், சுற்றுச்சூழல் அல்லது தொடர்புடைய பாடங்களின் துறையில் சிறந்த கல்வியாளர் ஒருவர்-உறுப்பினர்; மற்றும்
(v) குழுவின் ஒருங்கிணைப்பாளராக செயல்படுகின்ற
மாவட்ட வருவாய் அலுவலர்.
நில ஒருங்கிணைப்பின்
முன்மொழிவினை
வெளியிடுதல்.
5. (1) நிபுணர் குழுவானது, திட்ட சார்பாளரின் நில ஒருங்கிணைப்பு முன்மொழிவை வெளியிடுதல் வேண்டும் மற்றும் உரித்தமுடைய நபர்களின் கருத்துக்களைக் கண்டறிவதற்கு, வகுத்துரைக்கப்படலாகும் அத்தகைய முறையில், பொது விசாரணைக்கான தேதி, நேரம், மற்றும் இடம் பற்றிய போதுமான விளம்பரம் செய்த பிறகு ஒருங்கிணைப்பாளரால் பொது விசாரணையை நடத்துதல் வேண்டும்.
(2) நிபுணர் குழுவின் ஒருங்கிணைப்பாளரானவர், அரசு சார்புடைய முகமை ஏதேனுமிருப்பின் கலந்தாலோசனை செய்து, திட்ட நிலம் உற்றமைந்துள்ளவரிடம் திட்டத்திற்காக அவர்களது நிலத்தை விட்டுக்கொடுப்பதற்கு அவர்களின் ஒப்புதலைப் பெறுதல் வேண்டும்.
வரைவு
ஒருங்கிணைப்பு
திட்டம்.
6. (1) நிபுணர் குழுவானது, திட்ட சார்பாளரின் முன்மொழிவின் அடிப்படையில், உரித்தமுள்ள நபர்களின் கருத்துகள், அரசு சார்புடைய முகமையின் பிறவாறான பொருந்தக்கூடிய ஒப்புதல் மற்றும் குழுவின் கருத்துகள் ஆகியவற்றையும் உள்ளடக்கிய வரைவு நில ஒருங்கிணைப்புத் திட்டத்தைத் தயாரித்தல் வேண்டும் மற்றும் அதை மாவட்ட ஆட்சியரிடம் ஒப்புதலுக்காக சமர்பித்தல் வேண்டும்.
(2) ஒப்புதலின் பேரில், ஆட்சியரானவர் அதை மாவட்ட அரசிதழிலும், இரண்டு முதன்மையான நாளிதழ்களிலும் வெளியிடுதல் வேண்டும். அவற்றுள் ஒன்று தமிழில் இருத்தல் வேண்டும். வரைவு ஒருங்கிணைப்புத் திட்டம் வெளியிடப்பட்டதிலிருந்து முப்பது நாட்களுக்குள் உரித்தமுள்ள நபர் எவரும் தங்கள் கருத்துகள் அல்லது பரிந்துரைகளை எழுத்துப்பூர்வமாக ஆட்சியரிடம் சமர்ப்பித்தல் வேண்டும்.
இறுதி நில
ஒருங்கிணைப்புத்
திட்டம்.
வரம்புரையாக, வரைவு நில ஒருங்கிணைப்புத் திட்டமானது, அரசிடம் உற்றமைந்துள்ள திட்ட சார்பாளரின் நிலங்கள் தவிர, வேறு நபர்களின் நிலங்கள் ஏதேனுமிருந்தாலன்றி, வெளியிடப்படுதல் ஆகாது.
7. (1) ஆட்சியரானவர், வரைவு ஒருங்கிணைப்பு திட்டம் வெளியிடப்பட்ட நாளிலிருந்து முப்பது நாட்கள் காலவதியாகும்போது, வரைவு நில ஒருங்கிணைப்பு திட்டம் மற்றும் கருத்துகள் மற்றும் பரிந்துரைகள் எதனையும் பெற்றால், தகுதிவாய்ந்த அதிகார அமைப்புக்கு, அதன் மீதான பரிந்துரைகளை அனுப்புதல் வேண்டும்.
(2) தகுதி வாய்ந்த அதிகார அமைப்பானது, வரைவு நில ஒருங்கிணைப்பு திட்டம் பெறப்பட்ட தேதியிலிருந்து இரண்டு மாதங்களுக்குள், திட்ட சார்பாளரால் ஒரு குறிப்பிட்ட காலத்திற்குள், இணங்குவதற்கு ஒப்புதல் அளித்தல் வேண்டும் அல்லது அது பொருத்தமெனக் கருதலாகும் அத்தகைய நிபந்தனைகளுடன் ஒப்புதல் அல்லது ஒப்புதல் அளித்தல் வேண்டும்.
தமிழ்நாடு அரசிதழ் சிறப்பு வெளியீடு 5(3) (2) ஆம் உட்பிரிவின்படி தகுதிவாய்ந்த அதிகார அமைப்பினால் வரைவு நில ஒருங்கிணைப்பு திட்டத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டதன்பேரில், அது இறுதியானதாகும் மற்றும் இறுதி நில ஒருங்கிணைப்புத் திட்டம் தமிழ்நாடு அரசிதழிலும், அந்தப் பகுதியின் இரண்டு முதன்மையான தினசரி நாளிதழ்களிலும் வெளியிடப்படுதல் வேண்டும். அதில் ஒன்று தமிழில் இருத்தல் வேண்டும்.
வரம்புரையாக, குறிப்பிடப்பட்ட காலத்திற்குள் திட்ட சார்பளருக்கு நிபந்தனைகள் இணங்கவில்லையெனில், தகுதிவாய்ந்த அதிகார அமைப்பானது, முழுவதுமாகவோ அல்லது பகுதியாகவோ இறுதி நில ஒருங்கிணைப்பு திட்டத்தை ரத்து செய்யலாம் அல்லது மாற்றியமைக்கலாம்.
மேலும் வரம்புரையாக, அத்தகைய ரத்து அல்லது மாற்றமானது திட்ட சார்பாளருக்கு கேட்பதற்கான நியாயமான வாய்ப்பு ஒன்று வழங்கினாலன்றி செய்யப்படுதல் ஆகாது.
மேல்முறையீடு.
8. (1) 7 ஆம் பிரிவின் (2) ஆம் உட்பிரிவின் படி ஏற்படுத்தப்பட்ட தகுதிவாய்ந்த அதிகார அமைப்பின் முடிவு ஒன்றினால் பாதிப்படைந்த நபர் எவரும், இறுதி நில ஒருங்கிணைப்புத் திட்டத்தின் வெளியீட்டுத் தேதியிலிருந்து முப்பது நாட்களுக்குள், வகுத்துரைக்கப்படலாகும் அத்தகைய முறையில் அரசிடம் மேல்முறையீடு செய்யலாம்.
(2) (1) ஆம் உட்பிரிவின்படி, மேல்முறையீடு ஒன்றினை பெற்றதன்பேரில், அரசானது, மேல்முறையீட்டாளருக்கு கேட்பதற்கான வாய்ப்பினை வழங்கிய பின்னர், மேல்முறையீட்டினை இரண்டு மாதங்கள் கால அளவிற்குள் முடிவு செய்தல் வேண்டும்.
பதிவுருக்களைக்
கோருவதற்கான
மாநில அரசின்
அதிகாரம்.
9. அரசானது, தானாகவோ அல்லது நபர் எவராலும் ஏற்படுத்தப்பட்ட விண்ணப்பத்தின் பேரிலோ, எந்த நேரத்திலும், ஆட்சியர், நிபுணர் குழு அல்லது தகுதி வாய்ந்த அதிகார அமைப்பு ஆகியவற்றினால் நிறைவேற்றப்பட்ட ஆணை, தயாரிக்கப்பட்ட அல்லது அங்கீகரிக்கப்பட்ட திட்டம் எதனுடைய சட்ட உரிமை அல்லது தகுதியுடைமை குறித்து அவர்களை மனநிறைவடையச் செய்வதன் நோக்கத்திற்காக, தகுதி வாய்ந்த அதிகார அமைப்பின் முன்பு நிலுவையிலுள்ள அல்லது அவற்றால் முடிவு செய்யப்பட்ட வழக்கு எதனின் பதிவுருக்களையும் கோரலாம் மற்றும் ஆய்வு செய்யலாம் மற்றும் அது பொருத்தமெனக் கருதலாகும், அதில் குறித்திடலாகும் அத்தகைய ஆணையை நிறைவேற்றலாம்;
வரம்புரையாக, ஆணை அல்லது திட்டம் எதுவும், பாதிக்கப்பட்ட நபர்களுக்கு கேட்பதற்கான வாய்ப்பொன்றினை வழங்காமல், வேறுபடவோ, மாறுபடவோ ஆகாது.
நீர் நிலைகளை
பாதுகாத்தல்
10. (1) ஒரு நதி, நீரோடை அல்லது பிற நீர்வழிகள் இயற்கை நிகழ்வுகளால் அதன் போக்கை மாற்றி, நபர் எவருக்கும் சொந்தமான நிலத்தின் வழியாக செல்லும் சந்தர்ப்பங்களில், நிலத்தின் உரிமையாளர், தனக்குச் சொந்தமான நிலத்துக்குப் மாற்றாக அரசு முடிவு செய்யும் நிலம் வழங்கக் கோரி வகுத்துதுரைக்கப்பட்ட படிவத்திலும் முறையிலும் விண்ணப்பம் ஒன்றை ஆட்சியருக்கு செய்யலாம்.
(2) ஆட்சியர், வருவாய் பதிவேடுகளை சரிபார்த்து, இட அமைப்பு விவர மதிப்பீட்டை ஏற்படுத்திய பிறகு, இந்த பொருட்பாடுகளில் தொடர்வதற்கு முதல் நோக்கில், விண்ணப்பத்துடன் அரசுக்கு அறிக்கையை அனுப்ப வேண்டும்.
(3) ஆட்சியரின் அறிக்கை பெறப்பட்டதிலிருந்து அறுபது நாட்களுக்குள், விண்ணப்பதாரரின் கோரிக்கையை ஆராய்ந்து அரசுக்கு பரிந்துரை செய்ய, 4 ஆம் பிரிவின் (2) ஆம் உட் பிரிவில் குறிப்பிடப்பட்டுள்ளபடி உறுப்பினர்களைக் கொண்ட ஒரு நிபுணர் குழுவை அரசு அமைக்க வேண்டும்.
(4) அதன் பிறகு, அரசு நிபுணர் குழுவின் பரிந்துரையின் அடிப்படையில் பொருத்தமான இறுதி இறுதி ஆணைகளை வெளியிடுதல் வேண்டும்.
6 தமிழ்நாடு அரசிதழ் சிறப்பு வெளியீடுஅலுவலர்கள் மற்றும்
மையச்சட்டம் பணியாளர்கள்
XLV/1860.
பொது
ஊழியர்களாக
11. இந்தச் சட்டத்தின் படி செயல்படுகின்ற அலுவலர் மற்றும் பணியாளர் ஒவ்வொருவரும் 1860 ஆம் ஆண்டு இந்திய தண்டனைத் தொகுப்புச் சட்டத்தின் 21 ஆம் பிரிவின் பொருள்வரையறைக்குள் வருகின்ற பொது ஊழியராக கருதப்படுதல் வேண்டும்.
இருத்தல்.
நல்லெண்ணத்தில்
எடுக்கப்பட்ட
நடவடிக்கைக்குப்
பாதுகாப்பு.
12. இந்தச் சட்டத்தின் கீழ் நல்லெண்ணத்தில் செய்யப்பட்ட அல்லது செய்யக்கருதப்பட்ட எதற்காகவும், அதிகார அமைப்பு, அலுவலர் அல்லது பிற பணியாளர்கள் எவருக்கும் எதிராக உரிமை வழக்கு, குற்ற வழக்கு அல்லது பிற சட்ட நடவடிக்கைகள் எதுவும் தொடரப்படுதல் ஆகாது.
இடர்ப்்பாடுகளை
நீக்குவதற்கான
அதிகாரம்.
13. இந்தச் சட்டத்தின் வகைமுறை எதையும் செயல்படுத்துவதில் இடர்ப்பாடு எதுவும் எழுமானால், அரசு, தமிழ்நாடு அரசிதழில் வெளியிடப்படும் ஆணை ஒன்றின் மூலமாக, இந்தச் சட்டத்தின் வகைமுறைகளுக்கு முரணாக இல்லாத வகையில், இந்த இடர்ப்பாட்டை நீக்குவதற்குத் தேவையானதும் உகந்ததுமான அத்தகைய வகைமுறைகளைச் செய்யலாம்:
வரம்புரையாக, அத்தகைய ஆணை எதுவும் இந்தச் சட்டத்தின் தொடக்கத் தேதியிலிருந்து இரண்டு ஆண்டுகள் முடிவடைந்த பின்னர் பிறப்பிக்கப்படுதல் ஆகாது.
விதிகளைச்
14. (1) அரசானது, இந்தச் சட்டத்தின் நோக்கங்களை
செய்வதற்கான மேற்கொள்வதற்காக விதிகளைச் செய்யலாம்.
அதிகாரம்.
(2) (a) இந்தச் சட்டத்தின்படி செய்யப்பட்ட விதிகள் அனைத்தும் தமிழ்நாடு அரசிதழில் வெளியிடப்படுதல் வேண்டும் மற்றும் அவை குறிப்பிட்டதொரு நாளில் நடைமுறைக்கு வருதல் வேண்டுமென வெளிப்படையாகத் தெரிவிக்கப்பட்டிருந்தாலன்றி, அவை அவ்வாறு வெளியிடப்பட்ட நாளில் நடைமுறைக்கு வருதல் வேண்டும்.
(b) இந்தச் சட்டத்தின் படி பிறப்பிக்கப்பட்ட அறிவிக்கைகள் அனைத்தும் அவை குறிப்பிட்டதொரு நாளில் நடைமுறைக்கு வருதல் வேண்டுமென வெளிப்படையாகத் தெரிவிக்கப்பட்டிருந்தாலன்றி, அவை அவ்வாறு வெளியிடப்பட்ட நாளில் நடைமுறைக்கு வருதல் வேண்டும்.
(3) இந்தச் சட்டத்தின் கீழ், செய்யப்பட்ட விதி அல்லது பிறப்பிக்கப்பட்ட ஆணை அல்லது அறிவிக்கை ஒவ்வொன்றும் அது அவ்வாறு செய்யப்பட்ட அல்லது பிறப்பிக்கப்பட்ட பின்னர் கூடிய விரைவில் சட்டமன்றப் பேரவையின் முன்பு வைக்கப்படுதல் வேண்டும் மற்றும் அது அவ்வாறு வைக்கப்பட்ட கூட்டத்தொடர் அல்லது அடுத்தக் கூட்டத்தொடர் முடிவடைவதற்கு முன்பு அத்தகைய விதி அல்லது ஆணை அல்லது அறிவிக்கை ஏதொன்றிலும் மாறுதல் எதையும் சட்டமன்றப் பேரவை செய்யுமாயின் அந்த விதி அல்லது ஆணை அல்லது அறிவிக்கையானது அதன் பின்னர் அவ்வாறு மாற்றியமைக்கப்பட்ட வடிவத்தில் மட்டுமே நடைமுறைக்கு வருதல் வேண்டும் அல்லது நேர்விற்கேற்ப நடைமுறைக்கு வராது போதல் வேண்டும். எனினும் அத்தகைய மாற்றம் அல்லது நீக்கம் எதுவும் அந்த விதி அறிவிக்கை அல்லது ஆணையின்படி முன்னதாகச் செய்யப்பட்ட செயல் எதனின் செல்லுந்தன்மைக்கு குந்தகமின்றி இருத்தல் வேண்டும்.
தமிழ்நாடு அரசிதழ் சிறப்பு வெளியீடு 7நோக்கக் காரண விளக்கவுரை
நிலமானது, உற்பத்தி மற்றும் மாநிலத்தின் பொருளாதார மேம்பாட்டிற்கான ஒரு முக்கியக்காரணியாகும். அரசு நிலங்களை ஒருங்கிணைத்தல் மற்றும் முடிவு செய்தல், பரிமாற்றம், உரிமை மாற்றம், மாற்றியமைத்தல் மற்றும் ஒப்படைப்பு மற்றும் குத்தகை போன்றவற்றில் தற்போதுள்ள நடைமுறைகளானது காலனித்துவ காலத்திலிருந்தே அவ்வப்போது வெளியிடப்பட்ட நிர்வாக அறிவுறுத்தல்கள் மூலம் இரண்டு நூற்றாண்டுகளுக்கும் மேலாக படிப்படியாகத் தோன்றியுள்ளன. நிலமானது தொடர்புடைய உள்ளாட்சி அமைப்புச் சட்டங்கள் போன்ற பல்வேறு சட்டங்களால் நிர்வகிக்கப்படுகிறது, அதில் அத்தகைய உள்ளாட்சி அமைப்புகளில் அரசு நிலத்திற்கு உரிமையளிக்கப்பெற்றுள்ளது. பல சட்டங்களில் நிலத்தைப் பற்றிய பலவிதமான நிர்வாக அறிவுறுத்தல்கள் மற்றும் குறிப்புகளானவை நிலத்தை ஒருங்கிணைப்பதில் தாமதம் மற்றும் நிச்சயமற்ற தன்மைக்கும் வழிவகுக்கிறது, நேரம் மற்றும் செலவு மீறல் மற்றும் பொது பண இழப்புக்கும் வழிவகுக்கிறது.
2. மேலும், நீர்நிலைகள் பல, குறிப்பாக ஆறுகள் மற்றும் ஓடைகள், காலப்போக்கில், இயற்கை நிகழ்வுகளால், அவற்றின் பரப்பையும் போக்கையும் மாற்றிக் கொள்கின்றன. இதுபோன்ற நீர்நிலைகளை பொது நலன் கருதி பாதுகாக்கப்பட வேண்டும். தனியாருக்குச் சொந்தமான நிலத்தின் வழியாக தண்ணீர் அதன் போக்கை மாற்றினால், தனியாருக்குச் சொந்தமான நிலத்திற்காக அரசின் முடிவினால் நிலத்தை வழங்குவதற்கு வருவாய் வாரியத்தின் நிலையான ஆணை (26-A) வகைசெய்கிறது. அத்தகைய நிலப்பரிமாற்றத்தின் செயல்முறையை ஒழுங்குபடுத்துவதற்கும், அத்தகைய நீர்நிலைகளை திறம்பட பாதுகாப்பதற்கும், சட்டப்பூர்வ ஆதரவு வழங்கப்படலாம் என்று கருதப்படுகிறது.
3. மேற்கண்ட சூழ்நிலையில், மாநிலத்திற்கு முக்கியத்துவம் வாய்ந்த பெரிய திட்டங்களுக்காக அரசு நிலங்களை ஒருங்கிணைக்கும் செயல்முறையை முறைப்படுத்தவும், அத்தகைய நீர்நிலைகளை பாதுகாக்கவும் சட்டம் ஒன்றை இயற்ற அரசு முடிவு செய்துள்ளது.
4. இந்தச் சட்டமுன்வடிவானது மேற்சொன்ன முடிவிற்கு செயல்வடிவம் கொடுக்க விழைகிறது.
கே.கே.எஸ்.எஸ்.ஆர். இராமச்சந்திரன், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர்.
8 தமிழ்நாடு அரசிதழ் சிறப்பு வெளியீடுசட்டமியற்று அதிகார ஒப்படைவு பற்றிய குறிப்பு
இந்தச் சட்ட முன்வடிவின் 1(2), 2(b) மற்றும் (I), 3, 4(1), 5(1), 8(1),9, 10(1) மற்றும் (4),13 மற்றும் 14 ஆகிய கூறுகளானவை, அதில் குறிப்பிடப்பட்டுள்ள நோக்கங்களை நிறைவேற்றுவதற்கு நேர்விற்கேற்ப, அறிவிக்கைகள் அல்லது ஆணைகளை வழங்குவதற்கு அல்லது விதிகளை உருவாக்குவதற்கு அரசுக்கு அதிகாரமளிக்கின்றது.
2. ஒப்படைவு செய்யப்பட்ட அதிகாரங்கள் இயல்பானவையேயன்றி தனித்தன்மை வாய்ந்தவையல்ல.
கே.கே.எஸ்.எஸ்.ஆர். இராமச்சந்திரன், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர்.
கி. சீனிவாசன்,
செயலாளர்.
தலைமைச் செயலகம், சென்னை, 2023 ஏப்ரல் 21.
தமிழ்நாடு அரசிதழ் சிறப்பு வெளியீடு 92023 ஆம் ஆண்டு ஏப்ரல் திங்கள் 21 ஆம் நாளன்று தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் அறிமுகப்படுத்தப்பட்ட பின்வரும் சட்டமுன்வடிவு, நோக்கக் காரண விளக்கவுரையுடன் சேர்த்து, தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை விதிகளின் 130 ஆம் விதியின்கீழ் பொதுத் தகவலுக்காக வெளியிடப்படுகின்றது.
சட்டமன்றப் பேரவை சட்டமுன்வடிவு எண். 22/2023
குறித்த சில இயற்றுச் சட்டங்களை நீக்கறவு செய்வதற்கானதொரு சட்டமுன்வடிவு.
இந்தியக் குடியரசின் எழுபத்தி நான்காம் ஆண்டில் தமிழ்நாடு மாநிலச்
சட்டமன்றப் பேரவையால் பின்வருமாறு சட்டமியற்றப்படுவதாகுக:-
குறுந்தலைப்பு.
1. இந்தச் சட்டம், 2023 ஆம் ஆண்டு தமிழ்நாடு நீக்கறவு செய்தல்
(மூன்றாம்) சட்டம் என்று வழங்கப்பெறும்.
குறித்த சில இயற்றுச் 2. இணைப்புப்பட்டியலில் குறிப்பிடப்பட்டுள்ள இயற்றுச் சட்டங்கள்
ஈங்கிதனால் நீக்கறவு செய்யப்படுகின்றன.
சட்டங்களின் நீக்கறவு.
காப்புரைகள்.
3. (2) ஆம் பிரிவின்படி இயற்றுச் சட்டங்களின் நீக்கறவு எதுவும்
இருந்தபோதிலும்,-
தமிழ்நாடு சட்டம்
XXVI/1948
தமிழ்நாடு சட்டம்
XXX/1956
தமிழ்நாடு சட்டம்
27/1963
தமிழ்நாடு சட்டம்
31/1963
தமிழ்நாடு சட்டம்
30/1964
தமிழ்நாடு சட்டம்
31/1964
தமிழ்நாடு சட்டம்
32/1964
தமிழ்நாடு சட்டம்
39/1964
தமிழ்நாடு சட்டம்
11/1973
தமிழ்நாடு சட்டம்
31/1973
(a) 1948 ஆம் ஆண்டு தமிழ்நாடு எஸ்டேட் (ஒழித்தல் மற்றும் ரயத்துவாரியாக மாற்றுதல்) சட்டம், 1956 ஆம் ஆண்டு தமிழ்நாடு எஸ்டேட் (துணைச்) சட்டம், 1963 ஆம் ஆண்டு தமிழ்நாடு குத்தகை (ஒழித்தல் மற்றும் ரயத்துவாரியாக மாற்றுதல்) சட்டம், 1963 ஆம் ஆண்டு தமிழ்நாடு இனாம் (துணைச்) சட்டம், 1964 ஆம் ஆண்டு தமிழ்நாடு (மாற்றப்பட்ட பகுதி) ரயத்துவாரித் தீர்வுச் சட்டம், 1964 ஆம் ஆண்டு கன்னியாகுமரி ஸ்ரீபன்டரவாக நில (ஒழித்தல் மற்றும் ரயத்துவாரியாக மாற்றுதல்) சட்டம், 1964 ஆம் ஆண்டு தமிழ்நாடு (மாற்றப்பட்ட பகுதி) திருப்புவரம் செலுத்துதல் ஒழிப்புச் சட்டம், 1964 ஆம் ஆண்டு தமிழ்நாடு (மாற்றப்பட்ட பகுதி) ஜென்மிகரம் செலுத்துதல் ஒழிப்புச் சட்டம், 1972 ஆம் ஆண்டு கன்னியாகுமரி ஸ்ரீபாதம் நிலம் (ஒழித்தல் மற்றும் ரயத்துவாரியாக மாற்றுதல்) சட்டம் அல்லது 1972 ஆம் ஆண்டு தமிழ்நாடு இலவச நிலங்கள் மீதான ரயத்துவாரி மதிப்பீட்டுச் சட்டம் ஆகியவற்றின்படி, நேர்விற்கேற்ப, உதவி நிலவரித்திட்ட அலுவலர், நிலவரித்திட்ட அலுவலர் அல்லது நிலவரித்திட்ட இயக்குநர் எவரின் முன்பும் நிலுவையிலுள்ள கோரிக்கை அல்லது செயல்நடவடிக்கை எதுவும், இந்தச் சட்டம் தொடங்கப்பட்ட தேதியிலும், அது முதற்கொண்டும் சென்னை நிலநிருவாக ஆணையருக்கு மாற்றப்படுதல் வேண்டும் மற்றும் கூறப்பட்ட சட்டங்கள் நீக்கறவு செய்யப்படாத போதுள்ளவாறு கேட்கப்படுதலும் முடித்து வைக்கப்படுதலும் வேண்டும் மற்றும் நிலநிருவாக ஆணையரினால் வெளியிடப்பட்ட ஆணையானது இறுதியானதாக இருத்தல் வேண்டும்;
தமிழ்நாடு சட்டம்
I/1908
தமிழ்நாடு சட்டம்
XXX/1947
தமிழ்நாடு சட்டம்
XXVI/1948
தமிழ்நாடு சட்டம்
XXX/1956
தமிழ்நாடு சட்டம்
27/1963
தமிழ்நாடு சட்டம்
31/1963
தமிழ்நாடு சட்டம்
31/1964
(b) 1908 ஆம் ஆண்டு தமிழ்நாடு எஸ்டேட் சட்டம், 1947 ஆம் ஆண்டு தமிழ்நாடு எஸ்டேட் (வரி குறைப்புச்) சட்டம், 1948 ஆம் ஆண்டு தமிழ்நாடு எஸ்டேட் (ஒழித்தல் மற்றும் ரயத்துவாரியாக மாற்றுதல்) சட்டம், 1956 ஆம் ஆண்டு தமிழ்நாடு எஸ்டேட் (மாற்றப்பட்ட பகுதி) சட்டம், 1963 ஆம் ஆண்டு தமிழ்நாடு குத்தகை (ஒழித்தல் மற்றும் ரயத்துவாரியாக மாற்றுதல்) சட்டம், 1963 ஆம் ஆண்டு தமிழ்நாடு இனாம்கள் (துணைச்) சட்டம், 1964 ஆம் ஆண்டு கன்னியாகுமரி ஸ்ரீபன்டரவாக நில (ஒழித்தல் மற்றும் ரயத்துவாரியாக மாற்றுதல்) சட்டம், 1964 ஆம் ஆண்டு தமிழ்நாடு (மாற்றப்பட்ட பகுதி) திருப்புவரம் செலுத்துதல் ஒழிப்புச் சட்டம், 1964 ஆம் ஆண்டு தமிழ்நாடு (மாற்றப்பட்ட பகுதி) ஜென்மிகரம் செலுத்துதல் ஒழிப்புச் சட்டம், 1972 ஆம் ஆண்டு கன்னியாகுமரி ஸ்ரீபாதம் நிலம் (ஒழித்தல் மற்றும் ரயத்துவாரியாக மாற்றுதல்) சட்டம் ஆகியவற்றின்படி, நேர்விற்கேற்ப, தீர்ப்பாயம், மேல்முறையீட்டு தீர்ப்பாயம், சிறப்பு தீர்ப்பாயம் அல்லது சிறப்பு மேல்முறையீட்டு தீர்ப்பாயம் எவற்றின் முன்பும் இந்தச் சட்டம் தொடங்கப்பட்ட தேதியன்று நிலுவையிலுள்ள அனைத்து10 தமிழ்நாடு அரசிதழ் சிறப்பு வெளியீடு தமிழ்நாடு சட்டம்
32/1964
தமிழ்நாடு சட்டம்
39/1964 வழக்குகளும், பிற செயல்நடவடிக்கைகளும், இந்தச் சட்டங்கள் நீக்கறவு செய்யப்படாத போதுள்ளவாறு இந்தச்சட்டங்களின் வகைமுறைகளுக்குட்பட்டு தொடர்ந்து கேட்கப்படுதலும் முடித்து வைக்கப்படுதலும் வேண்டும்.
தமிழ்நாடு சட்டம்
11/1973
தமிழ்நாடு சட்டம்
XXVI/1948
தமிழ்நாடு சட்டம்
31/1964
தமிழ்நாடு சட்டம்
32/1964
தமிழ்நாடு சட்டம்
39/1964 (c) 1948 ஆம் ஆண்டு தமிழ்நாடு எஸ்டேட் (ஒழித்தல் மற்றும் ரயத்துவாரியாக மாற்றுதல்) சட்டம், 1964 ஆம் ஆண்டு கன்னியாகுமரி ஸ்ரீபன்டரவாக நில (ஒழித்தல் மற்றும் ரயத்துவாரியாக மாற்றுதல்) சட்டம், 1964 ஆம் ஆண்டு தமிழ்நாடு (மாற்றப்பட்ட பகுதி) திருப்புவரம் செலுத்துதல் ஒழிப்புச் சட்டம் மற்றும் 1964 ஆம் ஆண்டு தமிழ்நாடு (மாற்றப்பட்ட பகுதி) ஜென்மிகரம் செலுத்துதல் ஒழிப்புச் சட்டம் ஆகியவற்றின்படி, இந்தச் சட்டத்தின் தொடக்கத் தேதியன்று மதங்கள், கல்வி அல்லது தொண்டு நிறுவனங்களுக்கு செலுத்த வேண்டிய தஸ்திக் தொகையானது இந்தச் சட்டங்கள் நீக்கறவு செய்யப்படாத போதுள்ளவாறு தொடர்ந்து செலுத்தப்படுதல் வேண்டும்.
இணைப்புப் பட்டியல்
நீக்கறவுகள்
(2 ஆம் பிரிவைக் காண்க)
வரிசை.
எண். ஆண்டு எண் குறுந்தலைப்பு
(1) (2) (3)
(4)
1. 1862 IV 1862 ஆம் ஆண்டு தமிழ்நாடு இனாம் விடுவிப்புச் சட்டம்.
2. 1866 IV 1866 ஆம் ஆண்டு தமிழ்நாடு இனாம் விடுவிப்புச் சட்டம்.
3. 1869 VIII 1869 ஆம் ஆண்டு தமிழ்நாடு இனாம் சட்டம்.
4. 1908 I 1908 ஆம் ஆண்டு தமிழ்நாடு எஸ்டேட் சட்டம்.
5. 1947 XXX 1947 ஆம் ஆண்டு தமிழ்நாடு எஸ்டேட் (வரி குறைப்புச்) சட்டம்.
6. 1948 XXVI 1948 ஆம் ஆண்டு தமிழ்நாடு எஸ்டேட் (ஒழித்தல் மற்றும் ரயத்துவாரியாக மாற்றுதல்) சட்டம்.
7. 1955 XXIII 1955 ஆம் ஆண்டு புதுக்கோட்டை (இனாம் தீர்வு செய்தல்) சட்டம்.
8. 1956 XXX 1956 ஆம் ஆண்டு தமிழ்நாடு எஸ்டேட் (துணைச் ) சட்டம்.
9. 1963 27 1963 ஆம் ஆண்டு தமிழ்நாடு குத்தகை (ஒழித்தல் மற்றும் ரயத்துவாரியாக மாற்றுதல்) சட்டம்.
10. 1963 31 1963 ஆம் ஆண்டு தமிழ்நாடு இனாம் (துணைச்) சட்டம்.
11. 1964 30 1964 ஆம் ஆண்டு தமிழ்நாடு (மாற்றப்பட்ட பகுதி) ரயத்துவாரித் தீர்வுச் சட்டம்.
12. 1964 31 1964 ஆம் ஆண்டு கன்னியாகுமரி ஸ்ரீபன்டரவாக நில (ஒழித்தல் மற்றும் ரயத்துவாரியாக மாற்றுதல்) சட்டம்.
13. 1964 32 1964 ஆம் ஆண்டு தமிழ்நாடு (மாற்றப்பட்ட பகுதி) திருப்புவரம் செலுத்துதல் ஒழிப்புச் சட்டம்.
14. 1964 39 1964 ஆம் ஆண்டு தமிழ்நாடு (மாற்றப்பட்ட பகுதி) ஜென்மிகரம் செலுத்துதல் ஒழிப்புச் சட்டம்.
15. 1973 11 1972 ஆம் ஆண்டு கன்னியாகுமரி ஸ்ரீபாதம் நில (ஒழித்தல் மற்றும் ரயத்துவாரியாக மாற்றுதல்) சட்டம்.
16. 1973 31 1972 ஆம் ஆண்டு தமிழ்நாடு இலவச நிலங்கள் மீதான ரயத்துவாரி மதிப்பீட்டுச் சட்டம்.
தமிழ்நாடு அரசிதழ் சிறப்பு வெளியீடு 11நோக்கக் காரண விளக்கவுரை
மாண்பமை மெட்ராஸ் உயர்நீதிமன்றமானது, 1948 ஆம் ஆண்டு தமிழ்நாடு எஸ்டேட் (ஒழித்தல் மற்றும் ரயத்துவாரியாக மாற்றுதல்) சட்டத்தின்படி வழங்கப்பட்ட நிலத்தீர்வை பட்டாவை ரத்து செய்வதற்கான அரசின் ஆணையை, நீதிப்பேராணைகள் 14418/2003, 13723/2004, 1635& 2401/2021 ஆகியவற்றின் 29.04.2022 ஆம் தேதியிட்ட அதன் பொது ஆணையில் தனது மறுப்பை தெரிவித்து அனைத்து நீதிப் பேராணை மனுக்களையும் தள்ளுபடி செய்கையில், காலப்போக்கினால், ரயத்துவாரி நிலங்களானது, அத்தகைய நிலங்களாக இருப்பதற்கான அதன் தன்மையை தற்போது இழந்துவிட்டதாகவும் மற்றும் ரயத்துவாரி சட்டங்கள் செல்லுந்தன்மையை இழந்துள்ளதாகவும் கருதியது. மாண்பமை உயர்நீதிமன்றமானது, அனைத்து இனாம் எஸ்டேட் சட்டங்களும், அவை இயற்றப்பட்ட நோக்கங்களை நிறைவேற்றிவிட்டதனால் அவை நீக்கறவு செய்யப்படவேண்டுமெனவும் இனி அவை தேவையானவையல்ல எனவும் மேற்சொன்ன ஆணைகளில் கருத்து தெரிவித்தது. அதற்கிணங்கி, அவற்றின் தேவை மற்றும் நோக்கங்கள் முடிந்துவிட்ட சட்டங்களைக் கண்டறியத் தேவையான நடவடிக்கைகளை எடுக்கவும், சட்ட ஆணையத்துடன் கலந்தாலோசித்து அத்தகைய இயற்றுச் சட்டங்களை நீக்கறவு செய்வதற்காக உறுதியான மற்றும் தேவையான நடவடிக்கைகளை எடுக்கவும் உயர்நீதிமன்றமானது உத்தரவிட்டுள்ளது.
2. கூறப்பட்ட உயர்நீதிமன்றத்தின் மேற்சொன்ன ஆணையைக் கருத்தில் கொண்டு மாநிலச் சட்ட ஆணையத்துடன் கலந்தாலோசித்து, பின்வரும் பதினாறு மிகவும் பழமையான மற்றும் வழக்கத்தில் இல்லாமல் போயிருக்கிற சட்டங்களை நீக்கறவு செய்வதென அரசானது முடிவு செய்துள்ளது, அதாவது:-
(1) 1862 ஆம் ஆண்டு தமிழ்நாடு இனாம் விடுவிப்புச் சட்டம்.
(2) 1866 ஆம் ஆண்டு தமிழ்நாடு இனாம் விடுவிப்புச் சட்டம்.
(3) 1869 ஆம் ஆண்டு தமிழ்நாடு இனாம் சட்டம்.
(4) 1908 ஆம் ஆண்டு தமிழ்நாடு எஸ்டேட் சட்டம்.
(5) 1947 ஆம் ஆண்டு தமிழ்நாடு எஸ்டேட் (வரி குறைப்புச்) சட்டம்.
(6) 1948 ஆம் ஆண்டு தமிழ்நாடு எஸ்டேட் (ஒழித்தல் மற்றும் ரயத்துவாரியாக மாற்றுதல்) சட்டம்.
(7) 1955 ஆம் ஆண்டு புதுக்கோட்டை (இனாம் தீர்வு செய்தல்) சட்டம்.
(8) 1956 ஆம் ஆண்டு தமிழ்நாடு எஸ்டேட்(துணைச் ) சட்டம்.
(9) 1963 ஆம் ஆண்டு தமிழ்நாடு குத்தகை (ஒழித்தல் மற்றும் ரயத்துவாரியாக மாற்றுதல்) சட்டம்.
(10) 1963 ஆம் ஆண்டு தமிழ்நாடு இனாம் (துணைச் ) சட்டம்.
(11) 1964 ஆம் ஆண்டு தமிழ்நாடு (மாற்றப்பட்ட பகுதி) ரயத்துவாரித் தீர்வுச் சட்டம்.
(12) 1964 ஆம் ஆண்டு கன்னியாகுமரி ஸ்ரீபன்டரவாக நில (ஒழித்தல் மற்றும் ரயத்துவாரியாக மாற்றுதல்) சட்டம்.
(13) 1964 ஆம் ஆண்டு தமிழ்நாடு (மாற்றப்பட்ட பகுதி) திருப்புவரம் செலுத்துதல் ஒழிப்புச் சட்டம்.
(14) 1964 ஆம் ஆண்டு தமிழ்நாடு (மாற்றப்பட்ட பகுதி) ஜென்மிகரம் செலுத்துதல் ஒழிப்புச் சட்டம்.
(15) 1972 ஆம் ஆண்டு கன்னியாகுமரி ஸ்ரீபாதம் நில (ஒழித்தல் மற்றும் ரயத்துவாரியாக மாற்றுதல்) சட்டம்.
(16) 1972 ஆம் ஆண்டு தமிழ்நாடு இலவச நிலங்கள் மீதான ரயத்துவாரி மதிப்பீட்டுச் சட்டம்.
3. இந்தச் சட்ட முன்வடிவு மேற்சொன்ன முடிவிற்கு செயல் வடிவம் கொடுக்க விழைகிறது.
எஸ். ரகுபதி, சட்டத்துறை அமைச்சர்.
கி. சீனிவாசன்,
தலைமைச் செயலகம், சென்னை,
செயலாளர்.
2023 ஏப்ரல் 21.
12 தமிழ்நாடு அரசிதழ் சிறப்பு வெளியீடு தமிழ்நாடு அரசிதழ் சிறப்பு வெளியீடு 132023 ஆம் ஆண்டு ஏப்ரல் திங்கள் 21 ஆம் நாளன்று தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் அறிமுகப்படுத்தப்பட்ட பின்வரும் சட்டமுன்வடிவு, நோக்கக் காரண விளக்கவுரையுடன் சேர்த்து, தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை விதிகளின் 130 ஆம் விதியின்கீழ் பொதுத் தகவலுக்காக வெளியிடப்படுகின்றது.
சட்டமன்றப் பேரவை சட்டமுன்வடிவு எண். 23/2023
2023 ஆா ஆஆ ஏ ஏ மர 1 ஆா நாஏ ெதநெராட கமடநஆட
ப க, ந காக ே ந, ர க, ந காக மநகாக ெதந,கமடகமல ெதநைை ள ஒ , ெசட சை ெசசதத நகெதந சசெடசக.
இமட, ,ட ட எபக நட நா ஆஆஏ த ந மநகா
சசெமடற ேைப சடநஏ டசமந சசெடதறபசதந, :-
1. இத சசொக 2023 ஆா ஆஆ த ந கம ஒ , (எஆ. 2) சசொ எக
,தைா.
சழர ெபா.
.
2023-ஆா ஆஆ 2. மநகா அ க 2023 ஆா ஆஆ த ந கம ஒ , (டகா மநட
ஏ ஏ மர 1 ஆா சந, ா) சசெகமட 2-ஆா ஏ ,க ை , பசெ இ ஆ இாசசக
நாஏ ெதநெராட எபக ஐதந க எத எஆபக இ ஆ ே நேட இபக இ ஆ
த ந சசொ __/2023.
கமடநஆட இாசசக அபக எசெந ா ெதநைை ட உளெ,,ாடற ாக 2023 ஆா
ப க, ந காக ஆஆ ஏ ஏ மர 1 ஆா நாஏ ெதநெராட கமடநஆட ப க, ந காக
ே ந, ர க, ந கா ே ந, ர க, ந கா ேதைசபச மநக நட, இாசசக பமடறந க
மநகாக
ெதந,கமடகமல அத பக ஒடப ே நேட எபக ஏ இாசசக அபதந ா பந,, ேமதபெநதெதந ெதநை ைட-
கம ஒ , ெசதஏ.
இைண பசடலட (3) ஆா ாபகமஏ (column)
(a)
அக ளசநக அத ஆஆத ந க த ந சசெமடற
ேப ைசடநஏ அமம, பசெ மநடரை ளா;
இைண பசடலட (4) ஆா ாபகமஏ (column) அக ளசநக
(b)
அத ஆஆத ந மநகாக ெதந,கமடகமத, சநசெபசெ ெசாககைதா;
எமெ நசதத ந மநகாக ெதந,கமடகமல ஒ , ெசடாநா.
14 தமிழ்நாடு அரசிதழ் சிறப்பு வெளியீடு2ேகாைக
பக ேநாகக எ
(1)
(2)
மால சடமற001
ஆந ம அைமசரைவ002
வாக003
ஆ ராட ம பழன 004
நல ைற
ேவளாைம ம உழவ நல ைற 005
காைநட பராம (காைநட பராம, 006
பாவள, வள ம னவ நல ைற)
வள ம னவ நல (காநைட 007
பராம, பாவள, வள ம னவ நல ைற)
பாவள (காநைட பராம, பாவள, 008
வள ம னவ நல ைற) பதபேடா, க
009
பதபேடா ம
பாைமன நல ைற
வகவக (வகவ ம 010
ப ைற)
ைரதாக ம பர ப 011
(வகவ ம ப ைற)
ற (ற, உண ம 012
கேவா பாகா ைற)
இைண பய. (2-ஆ ைவ காக).
கா ெதாைகக ேமபடாம சடமற
மால
ேபரைவயா ெதாய ெமாத
சாடபட
வாககபட
(3) (4) (5) (.) (.) (.)
54,92,000 88,21,79,000
...
...
...
1,00,00,000 87,66,87,000வவா ... லதன கட 1,00,00,000
17,89,31,000 71,22,47,000
...
...
...
...
53,33,16,000வவா ... லதன கட ...
353,17,10,000 1,747,37,75,000
...
...
...
...
1,394,20,65,000வவா ... லதன கட ...
20,00,53,000 3,015,82,27,000
... 497,02,81,000
...
1,000 2,995,81,74,000வவா 497,02,81,000 லதன கட 1,000
1,03,000 14,124,44,43,000
... 129,00,98,000
...
1,00,17,000 14,124,43,40,000வவா 129,00,98,000 லதன கட 1,00,17,000
1,000 1,310,42,52,000
... 141,08,33,000
...
40,00,000 1,310,42,51,000வவா 141,08,33,000 லதன கட 40,00,000
1,000 618,41,04,000
... 739,85,05,000
...
...
618,41,03,000வவா 739,85,05,000 லதன கட ...
1,000 41,59,12,000
... 81,07,75,000
...
...
41,59,11,000வவா 81,07,75,000 லதன கட ...
3,00,05,000 1,227,78,13,000
... 352,32,93,000
...
1,000 1,224,78,08,000வவா 352,32,93,000 லதன கட 1,000
3,000 523,82,35,000
...
1,000
...
40,00,000 523,82,32,000வவா 1,000 லதன கட 40,00,000
1,000 429,47,94,000
...
...
...
...
429,47,93,000வவா ... லதன கட ...
4,000 4,983,37,09,000
...
6,000
...
2,00,03,000 4,983,37,05,000வவா 6,000 லதன கட 2,00,03,000 3தமிழ்நாடு அரசிதழ் சிறப்பு வெளியீடு 15 ேகாைக
பக ேநாகக எ
(1)
(2)
உண ம கேவா பாகா 013
(ற, உண ம கேவா பாகா ைற)
எச ைற014
ழ ம காலைல மாற 015
(ழ, காலைல மாற ம வனைற)
ைற016
ைகத ம (ைகத, 017
ைகற, ம கத ைற) கத, ராம ெதாக ம
018
ைகைன ெபாக (ைகத, ைகற, ம கத ைற) மவ ம மக நவா ைற 019
உயக ைற020
ெநசாைலக ம
021
ைறகக ைற
காவ (உைற, மல ம 022
ஆயைவ ைற)
யைண ம பக 023
(உைற, மல ம
ஆயைவ ைற)
ைறக ம த பக 024
(உைற, மல ம
ஆயைவ ைற)
இயக த சடக - 025
வாக (உைற, மல ம ஆயைவ ைற)
கா ெதாைகக ேமபடாம சடமற
மால
ேபரைவயா ெதாய ெமாத
சாடபட
வாககபட
(3) (4) (5) (.) (.) (.)
4,000 10,975,87,71,000
... 301,14,09,000
...
1,000 10,975,87,67,000வவா 301,14,09,000 லதன கட 1,000
1,000 8,379,29,33,000
... 72,27,04,000
... 2,241,95,03,000 8,379,29,32,000வவா 72,27,04,000 லதன கட 2,241,95,03,000
... 128,76,73,000
...
4,99,00,000
...
3,63,86,000 128,76,73,000வவா 4,99,00,000 லதன கட 3,63,86,000
18,000 2,330,96,33,000
... 390,02,81,000
... 112,62,53,000 2,330,96,15,000வவா 390,02,81,000 லதன கட 112,62,53,000
2,000 1,151,44,07,000
...
1,000
...
5,000 1,151,44,05,000வவா 1,000 லதன கட 5,000
2,000 224,86,95,000
...
...
...
...
224,86,93,000வவா ... லதன கட ...
46,43,000 17,525,84,58,000
1,000 1,134,91,17,000
...
40,00,000 17,525,38,15,000வவா 1,134,91,16,000 லதன கட 40,00,000
2,000 6,405,61,20,000
2,000 561,15,15,000
...
1,000 6,405,61,18,000வவா 561,15,13,000 லதன கட 1,000
2,000 2,028,87,60,000
4,000 17,435,47,34,000
...
40,00,000 2,028,87,58,000வவா 17,435,47,30,000 லதன கட 40,00,000
6,00,10,000 10,667,43,07,000
... 122,97,92,000
... 21,55,01,000 10,661,42,97,000வவா 122,97,92,000 லதன கட 21,55,01,000
1,000 489,28,82,000
... 80,00,00,000
...
1,000 489,28,81,000வவா 80,00,00,000 லதன கட 1,000
5,02,000 447,18,81,000
...
1,69,00,000
...
...
447,13,79,000வவா 1,69,00,000 லதன கட ...
1,000 610,33,47,000
...
1,000
...
...
610,33,46,000வவா 1,000 லதன கட ...
416 தமிழ்நாடு அரசிதழ் சிறப்பு வெளியீடு ேகாைக
பக ேநாகக எ
(1)
(2)
026 வச ம நகற வள ைற ெதா, த ஊ ம 027
வதக ைற
ெச ம ளபர (த வள 028
ம ெச ைற)
லா - கைல ம பபா (லா, 029
பபா ம அறைலயக ைற) எெபா ம அ (த வள 030
ம ெச ைற)
தகவ ெதாபய ம ட 031
ேசைவக ைற
ெதாலாள நல ம ற
032
ேமபா ைற
சட ைற033
நகரா வாக ம வழக 034
ைற
மதவள ேமலாைம ைற035
ட, வள ம ற யக 036
ைற
மல ம ஆயைவ (உைற, 037
மல ம ஆயைவ ைற) ெபா ைற038
கா ெதாைகக ேமபடாம சடமற
மால
ேபரைவயா ெதாய ெமாத
சாடபட
வாககபட
(3) (4) (5) (.) (.) (.)
2,000 3,742,29,22,000
... 2,000,00,08,000
... 8,226,50,03,000 3,742,29,20,000வவா 2,000,00,08,000 லதன கட 8,226,50,03,000
3,000 2,063,78,87,000
... 504,30,06,000
... 700,23,34,000 2,063,78,84,000வவா 504,30,06,000 லதன கட 700,23,34,000
1,000 144,80,99,000
...
1,000
...
...
144,80,98,000வவா 1,000 லதன கட ...
7,000 201,46,67,000
... 153,16,26,000
...
80,00,000 201,46,60,000வவா 153,16,26,000 லதன கட 80,00,000
9,05,000 166,54,47,000
... 15,50,30,000
...
...
166,45,42,000வவா 15,50,30,000 லதன கட ...
... 113,43,28,000
...
1,000
...
40,00,000 113,43,28,000வவா 1,000 லதன கட 40,00,000
6,000 1,483,78,32,000
... 202,90,62,000
...
1,20,00,000 1,483,78,26,000வவா 202,90,62,000 லதன கட 1,20,00,000
... 88,60,24,000
...
...
...
40,00,000 88,60,24,000வவா ... லதன கட 40,00,000
3,000 14,258,04,91,000
... 9,498,46,29,000
... 719,08,04,000 14,258,04,88,000வவா 9,498,46,29,000 லதன கட 719,08,04,000
134,02,22,000 291,68,04,000
...
2,98,06,000
...
3,00,00,000 157,65,82,000வவா 2,98,06,000 லதன கட 3,00,00,000
8,000 408,07,75,000
... 74,25,01,000
...
50,00,000 408,07,67,000வவா 74,25,01,000 லதன கட 50,00,000
2,000 205,25,98,000
...
...
...
...
205,25,96,000வவா ... லதன கட ...
1,26,47,000 699,79,66,000
... 150,00,02,000
...
8,00,00,000 698,53,19,000வவா 150,00,02,000 லதன கட 8,00,00,000 5தமிழ்நாடு அரசிதழ் சிறப்பு வெளியீடு 17 ேகாைக
பக ேநாகக எ
(1)
(2)
கடடக (ெபா ப ைற) 039
வள ைற040
வவா ம ேபட ேமலாைம 041
ைற
ஊரக வள ம ஊரா ைற 042
ப க ைற043
, ம நதர ெதா 044
வனக ைற
சக நல ம மக உைம ைற 045
த வள (த வள ம 046
ெச ைற)
இ சமய அறைலய ைற (லா, 047
பபா ம அறைலயக ைற) ேபாவர ைற048
இைளஞ நல ம ைளயா 049
ேமபா ைற
ஓயக, ஏைனய ஓகால 050
நைமக
இயைக றக த ய த 051
கா ெதாைகக ேமபடாம சடமற
மால
ேபரைவயா ெதாய ெமாத
சாடபட
வாககபட
(3) (4) (5) (.) (.) (.)
2,000 427,31,78,000
1,000 1,065,67,36,000
...
80,00,000 427,31,76,000வவா 1,065,67,35,000 லதன கட 80,00,000
2,000 3,155,82,55,000
24,14,34,000 5,075,73,74,000
...
80,00,000 3,155,82,53,000வவா 5,051,59,40,000 லதன கட 80,00,000
30,05,000 8,198,98,47,000
1,000
72,000
...
40,00,000 8,198,68,42,000வவா 71,000 லதன கட 40,00,000
4,000 20,953,53,38,000
... 1,607,82,46,000
...
40,00,000 20,953,53,34,000வவா 1,607,82,46,000 லதன கட 40,00,000
13,000 39,700,51,42,000
... 598,41,26,000
...
40,00,000 39,700,51,29,000வவா 598,41,26,000 லதன கட 40,00,000
1,000 1,349,23,94,000
... 10,00,03,000
... 150,00,02,000 1,349,23,93,000வவா 10,00,03,000 லதன கட 150,00,02,000
2,000 7,663,34,91,000
... 81,76,57,000
...
2,000 7,663,34,89,000வவா 81,76,57,000 லதன கட 2,000
3,000 116,96,58,000
...
...
...
40,00,000 116,96,55,000வவா ... லதன கட 40,00,000
6,00,00,000 577,26,60,000
...
1,000
...
...
571,26,60,000வவா 1,000 லதன கட ...
1,000 6,455,28,48,000
... 900,00,03,000
... 700,80,09,000 6,455,28,47,000வவா 900,00,03,000 லதன கட 700,80,09,000
1,000 403,11,10,000
...
1,000
...
1,000 403,11,09,000வவா 1,000 லதன கட 1,000
23,45,00,000 41,231,89,72,000
...
...
...
...
41,208,44,72,000வவா ... லதன கட ...
2,000 1,500,01,73,000
...
...
...
...
1,500,01,71,000வவா ... லதன கட ...
618 தமிழ்நாடு அரசிதழ் சிறப்பு வெளியீடு ேகாகைெதாைகககேைைேடயபபாட
சகபடமறடை
டா லை ேகாேைகை
பகககைேநாேகாககக
ேபரைவயா ை ெதாைவயலவயை ெடாலதக எள
சாகபடபகபல
வாேககேகடபகபலைைை
(1)
(2)
(3) (4) (5)
(.) (.) (.)
1,000 1,104,23,75,000 டாயமலைவறதாககைந லைலைற052
...
2,00,22,000
...
25,00,000
1,104,23,74,000வவாாை 2,00,22,000 ததகை கபம 25,00,000
1,000 7,259,16,22,000 றடலைவகபைெசய ாேகலைலைற053
...
...
...
25,00,000
7,259,16,21,000வவாாை ... ததகை கபம 25,00,000
... 719,06,38,000 வதகை(யம ,ைகா ை ைடாயறகை
054
... 391,66,51,000 டயமகைவதலலைற)
...
1,000
719,06,38,000வவாாை 391,66,51,000 ததகை கபம 1,000
58,303,30,63,000 58,303,30,63,000 கபமைெச க
...
...
...
...
...வவாாை ... ததகை கபம ...
...
...
ெபாலேைகபம-வடைெசலலத
...
...
43,825,70,60,000 43,825,70,60,000
...வவாாை ... ததகை கபம ...
வவாாை
ெடாலதக
ததகை
253,664,82,61,000 58,869,59,00,000 312,534,41,61,000 44,355,52,67,000 24,14,43,000 44,379,67,10,000 12,899,98,29,000 43,825,70,60,000 56,725,68,89,000
கபம
310,920,33,57,000 102,719,44,03,000 413,639,77,60,000 ெபெடாலதக
ைேநாேகை-ைகாரணைமேகைரை.
இசகபமவவாதல-
(a) 2023ைஆகைஆளைஏடர ைவாகை1 ஆகைநாக ைெதாபாயைவயாளயகாகைதநாைசகபடமறடை ேபரைவயா ைஅடவேகடபகபைடாபயாகைமக;
அதைஆளயகாக,ைடா லைெதாைவயலவமைலைசாகபடபகபைெச தலைதக,
(b)
எவவெகாவதயைலை ேதைவடபகை ெதாைககைமை டா லவமை ெதாைை வயலவலை ஒலேை ெசாயை வைகை ெசாவதயகாக,ை அரசைடடை சகபலவமை 204-ஆகை உமடமை (1)-ஆகை ைதெயாகை அகடபலதடபமறல.
ைதவவைப பேவ ைவயாகைராாம
வைடயமகைடபதைவமைேட ாளைடைலைறை
அைடசவ.
கி. சீனிவாசன்,
செயலாளர்.
தலைமைச் செயலகம், சென்னை, 2023 ஏப்ரல் 21.
தமிழ்நாடு அரசுக்காக சென்னை எழுதுபொருள் மற்றும் அச்சுத் துறை இயக்குநரால் அச்சிடப்பட்டு வெளியிடப்பட்டது.