| TAMIL NADU GOVERNMENT GAZETTE PUBLISHED BY AUTHORITY EXTRAORDINARY | ||
No. 181] CHENNAI, FRIDAY, MAY 12, 2023 Chithirai 29, Sobakiruthu, Thiruvalluvar Aandu-2054
Part VI—Section 2
Notifications or Orders of interest to a section of the public
issued by Heads of Departments, etc.
NOTIFICATIONS BY HEADS OF DEPARTMENTS, ETC.
COLLECTORS AND LOCAL AUTHORITIES
திருப்பூர் மாவட்ட ஆட்சித் தலைவர் மற்றும் ஊராட்சிகளின் ஆய்வாளர்
திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டை வட்டம், உடுமலைப்பேட்டை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட போடிபட்டி ஊராட்சி மன்ற தலைவர் பதவி நீக்கம் குறித்த அறிவிக்கை
[ந.க.எண்.530/2022/அ1/உ.இ(ஊ)]
No. VI(2)/8(a)/2023.
திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டை வட்டம், உடுமலைப்பேட்டை ஊராட்சி ஒன்றியம், போடிபட்டி ஊராட்சி மன்றத்தலைவர் திரு.தா.சௌந்தரராஜன் ஊராட்சி நிதி நிர்வாக செயல்பாடுகளில் முறைகேடு செய்திருப்பதும் மற்றும் ஊராட்சி நிதியில் பல்வேறு தலைப்புகளின்கீழ் விதிமுறைகளை பின்பற்றாமல் செலவினம் மேற்கொண்டு அதன் மூலம் ஊராட்சி நிதிக்கு ரூ.71,88,123/- இழப்பு ஏற்படுத்தியது ஆகிய காரணங்களுக்காக இவர் தொடர்ந்து ஊராட்சி மன்றத்தலைவராக செயல்பட்டால் ஊராட்சி நிதிக்கு பெருமளவு நிதியிழப்பு ஏற்படுத்துவார் என்பதுடன் தனது அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்வார் என்பதை கருத்தில் கொண்டு தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டம் 1994 பிரிவு 205 உட்பிரிவு (11)-ல் ஊராட்சிகளின் ஆய்வாளர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவருக்கு அளிக்கப்பட்டுள்ள அதிகாரத்தினை பயன்படுத்தி போடிபட்டி ஊராட்சி மன்றத்தலைவர் திரு. தா. சௌந்தரராஜன் என்பவரை ஊராட்சி மன்றத்தலைவர் பதவியிலிருந்து நீக்கம் செய்து இதன்மூலம் அறிவிப்பு செய்யப்படுகிறது.
தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டம் 1994 பிரிவு 262(1)-ன்கீழ் இந்த பதவி நீக்கம் குறித்த அறிவிப்பு தமிழ்நாடு அரசிதழ் தமிழ்நாடு அரசிதழ் சிறப்பு வெளியீட்டில் வெளியிடப்படும் நாள் முதல் அமுலுக்கு வரும்.
மரு. சு. வினீத்,
திருப்பூர், 2023 மே 12. ஊராட்சிகளின் ஆய்வாளர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர்.
PRINTED AND PUBLISHED BY THE DIRECTOR OF STATIONERY AND PRINTING, CHENNAI ON BEHALF OF THE GOVERNMENT OF TAMIL NADU
VI-2 Ex. (181)