© தமிழ்நாடு அரசு 2023
[Regd. No. TN/CCN/467/2012-14. [R. Dis. No. 197/2009. [விலை : ரூ. 0.80 காசு
| தமிழ்நாடு அரசிதழ் ஆணையின்படி வெளியிடப்பட்டது. | ||
எண் 20] சென்னை, புதன்கிழமை, மே 17, 2023 வைகாசி 3, சோபகிருது, திருவள்ளுவர் ஆண்டு-2054
பகுதி III—பிரிவு 1(a) இன் இணைப்பு
அரசாங்க அறிவிப்புகளின் தமிழ் மொழிபெயர்ப்புகள்
சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத் துறை
அறிவிக்கை
[அரசாணை ( நிலை ) எண். 41, சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வன (வனம் 13)த் துறை, 28 பிப்ரவரி 2023.] தமிழ்நாடு 1882 ஆம் ஆண்டு வனச்சட்டத்தின் (தமிழ்நாடு சட்டம் 5/1882) 26 ஆம் பிரிவு, 35 மற்றும் 63 ஆம் பிரிவுகளில் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களைக் கொண்டு, தமிழ்நாடு ஆளுநர் அவர்கள், தமிழ்நாடு 2010 ஆம் ஆண்டு மரம் சார்ந்த தொழிற்சாலைகளை முறைப்படுத்துதல் விதிகளில் பின்வரும் திருத்தங்களை இதனால் செய்கிறார்.
திருத்தங்கள்
மேற்சொன்ன விதிகளில், விதி 12 இல்,
(1) துணை விதி (1)-இல், பகுதி (a)-இல், "அரசு" என்ற சொற்றொடருக்குப் பதிலாக, "சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்றம் அமைச்சகத்தில் மத்திய அரசின் தொடர்புடைய மண்டல அலுவலகத்தின் தலைவர்" என்ற சொற்றொடர் அமைத்துக் கொள்ளப்பட வேண்டும்;
(2) துணை விதி (2)-இல், "நேர்விற்கேற்ப, அரசு அல்லது வனப்பாதுகாவலர் அல்லது புலிகள் காப்பு வனத்தின் களப்பணி இயக்குநர் அதனை முடிவு செய்வார்" என்ற சொற்றொடருக்குப் பதிலாக, "மேல்முறையீடு செய்த 60 நாட்களுக்குள் சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்றம் அமைச்சகத்தில் மத்திய அரசின் தொடர்புடைய மண்டல அலுவலகத்தின் தலைவர் உரிய உத்தரவைப் பிறப்பிப்பார்'' என்ற சொற்றொடர் அமைத்துக் கொள்ளப்பட வேண்டும்;
(3) துணை விதி (3)-இல், "நேர்விற்கேற்ப, அரசு அல்லது வனப்பாதுகாவலர் அல்லது புலிகள் காப்பு வனத்தின் களப்பணி இயக்குநர்" என்ற சொற்றொடருக்குப் பதிலாக, "சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்றம் அமைச்சகத்தில் மத்திய அரசின் தொடர்புடைய மண்டல அலுவலகத்தின் தலைவர்", என்ற சொற்றொடர் அமைத்துக் கொள்ளப்பட வேண்டும்.
சுப்ரியா சாஹு. அரசு கூடுதல் தலைமைச் செயலாளர்.
(தமிழாக்கம்)
ந. அருள், இயக்குநர் (மு.கூ.பொ) தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தி (மொழிபெயர்ப்பு)த் துறை.
தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை
[அரசாணை (நிலை) எண். 243, தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தக (MMC.1)த் துறை, 14 டிசம்பர் 2022.] 2 திருத்தம்
மேற்சொன்ன விதிகளில், 36 ஆம் விதியைச் சேர்ந்த, துணை விதி (1A)-ன், பகுதி இ -ல், "தேசிய பூங்காக்கள், வன உயிரினச் சரணாலயங்கள், புலிகள் காப்பகங்கள், யானை வழித்தடங்கள் மற்றும் காப்புக்காடுகள்" என்ற சொற்றொடருக்குப் பதிலாக தேசிய பூங்காக்கள், வன உயிரினச் சரணாலயங்கள், புலிகள் காப்பகங்கள் மற்றும் யானை வழித்தடங்கள்" என்ற சொற்றொடர் அமைத்துக் கொள்ளப்படவேண்டும்.
ச. கிருஷ்ணன், அரசு கூடுதல் தலைமைச் செயலாளர்.
(தமிழாக்கம்)
ந. அருள், இயக்குநர் (மு.கூ.பொ) தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தி (மொழிபெயர்ப்பு)த் துறை.
தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை
[அரசாணை (நிலை) எண். 56, தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு (H11)த் துறை, 21 மார்ச் 2023.] தமிழ்நாடு 1958 ஆம் ஆண்டு உணவு நிறுவனங்கள் (தமிழ்நாடு சட்டம் 13/1958) சட்டத்தின் 29 ஆம் பிரிவில் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களைக் கொண்டும், 21.06.2017 ஆம் நாளிட்ட தமிழ்நாடு அரசிதழின் பாகம் III-பிரிவு 1(a)-இல், 108 முதல் 109 வரையிலான பக்கங்களில் (ஆங்கிலத்தில்) வெளியிடப்பட்ட தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறையின் SRO A-29/2017 ஆம் எண் அறிவிக்கையின் பதிலிட்டகற்றீடாகவும். தமிழ்நாட்டு ஆளுநர் அவர்கள், தமிழ்நாடு 1959 ஆம் ஆண்டு உணவு நிறுவனங்கள் விதிகளில் பின்வரும் திருத்தங்களை இதனால் செய்கிறார். அவையாவன:
திருத்தங்கள்
மேற்சொன்ன விதிகளில்,-
(1) 3 ஆம் விதியின் துணை விதி (2)-இல், அட்டவணைக்குப் பதிலாக, பின்வரும் அட்டவணை அமைத்துக் கொள்ளப்பட வேண்டும். அதாவது:
"அட்டவணை"
பதிவிற்குத் தொடர்புடைய ஆங்கில ஆண்டின் யாதொரு நாளில் பணியமர்த்தப்படுவதற்கு உத்தேசிக்கப்படும் பணியாளர்களின் எண்ணிக்கையானது:-
| பணியாளர்களின் எண்ணிக்கை | கட்டணம் ( ரூபாயில்) |
| 5-க்குள் இருப்பின் | 500/- |
| 5-க்கு அதிகமாக ஆனால் 10-க்கு மிகாமல் இருப்பின் | 1,000/- |
| 10-க்கு அதிகமாக ஆனால் 20-க்கு மிகாமல் இருப்பின் | 2,000/- |
| 20-க்கு அதிகமாக ஆனால் 50-க்கு மிகாமல் இருப்பின் | 5,000/- |
| 50-க்கு அதிகமாக ஆனால் 100-க்கு மிகாமல் இருப்பின் | 10,000/- |
| 100-க்கு அதிகமாக ஆனால் 500-க்கு மிகாமல் இருப்பின் | 20,000/- |
| 500-க்கு அதிகமாக இருப்பின் | 1,00,000/- |
(2) 5-A ஆம் விதியின் துணை விதி (3)-இல், "நூறு ரூபாய்'' என்னும் சொற்களுக்குப் பதிலாக "இருநூறு ரூபாய்" என்னும் சொற்கள் அமைத்துக் கொள்ளப்பட வேண்டும்.
(3) 6-A ஆம் விதியின் துணை விதி (2)-இல், "ஒரு நூறு ரூபாய்'' என்னும் சொற்களுக்குப் பதிலாக "இருநூறு ரூபாய்" என்னும் சொற்கள் அமைத்துக் கொள்ளப்பட வேண்டும்.
(4) 7ஆம் விதியின் உட்பிரிவு (1)-இல், "ஒரு நூறு ரூபாய்'' என்னும் சொற்களுக்குப் பதிலாக "இருநூறு ரூபாய்" என்னும் சொற்கள் அமைத்துக் கொள்ளப்பட வேண்டும்.