© [Regd. No. TN/CCN/467/2012-14. தமிழ்நாடு அரசு [R. Dis. No. 197/2009. 2023 [விலை: ரூ. 12.00 காசு
| தமிழ்நாடு அரசிதழ் ஆணையின்படி வெளியிடப்பட்டது. | ||
எண் 20] சென்னை, புதன்கிழமை, மே 17, 2023 வைகாசி 3, சோபகிருது, திருவள்ளுவர் ஆண்டு-2054
பகுதி IV—பிரிவு 2 இன் இணைப்பு
தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையின் பின்வரும் சட்டமானது 2023 ஆம்
ஆண்டு பிப்ரவரி திங்கள் 21 ஆம் நாளன்று ஆளுநரின் ஏற்பிசைவைப் பெற்றது
மற்றும் அது பொதுத்தகவலுக்காக இதன்மூலம் வெளியிடப்படுகிறது:-
சட்ட எண். 3/2023.
1984ஆம் ஆண்டு தமிழ்நாடு கட்டடம் மற்றும் கட்டுமானத் தொழிலாளர்கள்
(வேலைவாய்ப்பு நிபந்தனைகள் மற்றும் பல்வகை முறைகள்) சட்டத்தை
நீக்கறவு செய்வதற்கானதொரு சட்டம்.
இந்தியக் குடியரசின் எழுபத்தி மூன்றாம் ஆண்டில் தமிழ்நாடு மாநிலச்
சட்டமன்றப் பேரவையால் பின்வருமாறு சட்டமியற்றப்படுவதாகுக:-
குறுந்தலைப்பு 1. இந்தச் சட்டம், 2023ஆம் ஆண்டு தமிழ்நாடு கட்டடம் மற்றும் கட்டுமானத்
தொழிலாளர்கள் (வேலைவாய்ப்பு நிபந்தனைகள் மற்றும் பல்வகை முறைகள்)
நீக்கறவுச் சட்டம் என வழங்கப்பெறும்.
தமிழ்நாடு சட்டம்
2. 1984ஆம் ஆண்டு தமிழ்நாடு கட்டடம் மற்றும் கட்டுமானத் தொழிலாளர்கள்
(வேலைவாய்ப்பு நிபந்தனைகள் மற்றும் பல்வகை முறைகள்) சட்டம் ஈங்கிதனால்
29/1986 இன் நீக்கறவு
தமிழ்நாடு சட்டம் 29/1986.
நீக்கறவு செய்யப்படுகின்றது.
(ஆளுநரின் ஆணைப்படி)
ச. கோபி ரவிகுமார், அரசுச் செயலாளர் (சட்டமியற்றல்), சட்டத் துறை.
(தமிழாக்கம்)
வெ. அரசகுமார், உதவி இயக்குநர்,
சட்ட (தமிழ்ப்பிரிவு)த் துறை.
IV-2-20-(T-Sup)-1
[1]2 தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையின் பின்வரும் சட்டமானது 2023-ஆம் ஆண்டு
மார்ச் திங்கள் 6 ஆம் நாளன்று ஆளுநரின் ஏற்பிசைவைப் பெற்றது மற்றும் அது
பொதுத்தகவலுக்காக இதன் மூலம் வெளியிடப்படுகிறது:-
சட்ட எண். 4/2023.
குறித்த சில இயற்றுச் சட்டங்களை நீக்கறவு செய்வதற்கானதொரு சட்டம்.
இணைப்புப்பட்டியலில் குறிப்பிடப்பட்டுள்ள இயற்றுச் சட்டங்கள் வழக்கத்திலிருந்தவை
அல்லது மற்றபடி வழக்கத்தில் இல்லாமல் போயிருக்கிற அல்லது குறித்த வகையில்
மற்றபடி வெளிப்படையாக நீக்கறவு செய்யப்பட்டதன் மூலம் தவிர பிறவாறு நடைமுறையில்
இருக்கக்கூடியது அற்றுபோகக் கூடியவையான இருப்பவை கட்டாயமாக நீக்கறவு
செய்யப்படுதல் வேண்டும் என்பது உகந்ததாய் இருப்பதாலும்;
இந்தியக் குடியரசின் எழுபத்தி மூன்றாம் ஆண்டில் தமிழ்நாடு மாநிலச் சட்டமன்றப்
பேரவையால் பின்வருமாறு சட்டமியற்றப்படுவதாகுக:-
குறுந்தலைப்பு.
1. இந்தச் சட்டம், 2023-ஆம் ஆண்டு தமிழ்நாடு நீக்கறவு செய்தல் சட்டம் என்று
வழங்கப்பெறும்.
குறித்த சில
2. இணைப்புப்பட்டியலில் குறிப்பிடப்பட்டுள்ள இயற்றுச் சட்டங்கள் ஈங்கிதனால்
இயற்றுச்
நீக்கறவு செய்யப்படுகின்றன.
சட்டங்களின்
நீக்கறவு.
காப்புரைகள்.
3. இந்தச் சட்டத்தால் நீக்கறவு செய்யப்படும் இயற்றுச் சட்டம் எதுவும் பிற
இயற்றுச் சட்டம் எதனையும் பாதிக்காது. அதில் நீக்கறவு செய்யப்பட்ட இயற்றுச் சட்டம்
பயன்படுத்தப்பட்டிருக்கிறபோதும் சேர்க்கப்பட்டிருக்கிறபோதும் அல்லது சுட்டப்படும் போதும்;
மற்றும் இந்தச் சட்டம் செல்லுந்தன்மையையோ, செல்லாத் தன்மையையோ
அல்லது செல்திறத்தையோ அல்லது ஏற்கனவே செய்து முடிக்கப்பட்ட எதனையும்
அல்லது பாதிக்கப்பட்டதையோ அல்லது உரிமையையோ, உரிமை மூலத்தையோ,
கடப்பாட்டையோ அல்லது ஏற்கனவே பெறப்பட்ட கடப்பாட்டினை அதிகப்படியானதையோ
அல்லது ஏற்படுத்தப்பபட்டிருப்பதையோ அல்லது தீர்வு எதனையும் அல்லது தொடர்பான
நடைமுறையை அல்லது பற்று எதனலிருந்தும் அல்லது பற்றினை விடுவிப்பதை, தண்டம்,
உதவியையோ, கடப்பாட்டினையோ, கோருதலையோ அல்லது ஏற்கனவே வழங்கப்பட்ட
உறுதிமொழியையோ அல்லது நிரூபிக்கப்படும் கடந்தகால செயல் அல்லது விசயம்
எதனையும் பாதிக்காது;
கொள்கை எதனையும் அல்லது சட்டத்தின் ஆட்சியை அல்லது ஏற்படுத்தப்பட்ட
அதிகாரவரம்பை அல்லது அமைவுமுறையையோ அல்லது வாதுரையின் போதோ,
வழக்கத்தையோ அல்லது நடைமுறையையோ அல்லது இருந்து வரும் பழக்கவழக்கத்தையோ,
வழக்காறையோ, சலுகையையோ, தடையையோ, விலக்கையோ, அலுவலகத்தையோ
அல்லது பணியமர்த்தத்தையோ எவ்வாறிருப்பினும் அவை முறையே எந்த முறையிலும்
ஈங்கிதனால் இயற்றுச் சட்டத்தில் அல்லது இயற்றுச் சட்டம் எதிலிருந்தும் எந்த முறையிலும்
உறுதி செய்யப்பட்டிருக்கலாம் அல்லது ஏற்பளிக்கப்பட்டிருக்கலாம் அல்லது அதன்மூலம்
பெறப்பட்டிருக்கலாம் என்றிருக்கிற எதுவும் பாதிக்காத வகையில் இருக்கும்;
இயற்றுச் சட்டம் எதுவும் புத்துயிரளித்தல் அல்லது அதிகாரவரம்பு எதனையும்
மீட்டெடுத்தல், பதவி, பழக்கவழக்கம், பொறுப்பு, உரிமை, உரிமை மூலம், சலுகை, தடை,
விலக்கு, பயன்படுத்துதல், செய்தொழில், நடைமுறை அல்லது பிற பொருட்பாடு அல்லது
தற்பொழுது இல்லாமல் இருக்கும் பொருள் அல்லது செல்லாற்றலிலுள்ளவை இந்தச்
சட்டத்தால் நீக்கறவு செய்யப்படுவதால் பாதிப்பிற்குள்ளாகாது.
3இணைப்புப் பட்டியல்.
நீக்கறவுகள்.
(2ஆம் பிரிவைக் காண்க)
வ.
ஆண்டு எண் குறுந்தலைப்பு
எண்.
(1) (2) (3)
(4)
தமிழ்நாடு சட்டங்கள்
1. 1930 XI 1930-ஆம் ஆண்டு தமிழ்நாடு உள்ளாட்சி மன்றங்கள் (திருத்தச்) சட்டம்.
2. 1942 XXIV 1942-ஆம் ஆண்டு சென்னை மாநகராட்சி, மாவட்ட நகராட்சிகள் மற்றும் உள்ளாட்சி மன்றங்கள் (இரண்டாம் திருத்தச்) சட்டம்.
3. 1946 XVI 1946-ஆம் ஆண்டு தமிழ்நாடு மாவட்ட நகராட்சிகள் மற்றும் உள்ளாட்சி மன்றங்கள் (இரண்டாம் திருத்தச்) சட்டம்.
4. 1947 II 1947-ஆம் ஆண்டு தமிழ்நாடு மாவட்ட நகராட்சிகள் மற்றும் உள்ளாட்சி மன்றங்கள் (திருத்தச்) சட்டம்.
5. 1947 XXXIV 1947-ஆம் ஆண்டு அபின் மற்றும் அபாயகரமான மருந்துச் சரக்குகள் (தமிழ்நாடு திருத்தச்) சட்டம்.
6. 1951 XXXII 1951-ஆம் ஆண்டு அபின் (தமிழ்நாடு திருத்தச்) சட்டம்.
7. 1954 III 1954-ஆம் ஆண்டு தமிழ்நாடு தனியார் காடுகளைப் பாதுகாத்தல் (திருத்தச்) சட்டம்.
8. 1954 XVIII 1954-ஆம் ஆண்டு தமிழ்நாடு தனியார் காடுகளைப் பாதுகாத்தல் (இரண்டாம் திருத்தச்) சட்டம்.
9. 1954 XXX 1954-ஆம் ஆண்டு தமிழ்நாடு தனியார் காடுகளைப் பாதுகாத்தல் (மூன்றாம் திருத்தச்) சட்டம்.
10. 1955 XVI 1955-ஆம் ஆண்டு சென்னை மாநகர காவல் மற்றும் சூதாட்ட (திருத்தச்) சட்டம்.
11. 1955 XXXIV 1955-ஆம் ஆண்டு குற்றவியல் நடைமுறை தொகுப்பு (தமிழ்நாடு திருத்தச்) சட்டம்.
12. 1955 XXXV 1955-ஆம் ஆண்டு தமிழ்நாடு தனியார் காடுகளைப் பாதுகாத்தல் (திருத்தச்) சட்டம்.
13. 1956 XXXI 1956-ஆம் ஆண்டு குற்றவியல் நடைமுறை தொகுப்பு (தமிழ்நாடு திருத்தச்) சட்டம்.
14. 1957 XV 1957-ஆம் ஆண்டு தமிழ்நாடு தனியார் காடுகளைப் பாதுகாத்தல் (திருத்தச்) சட்டம்.
15. 1959 20 1959-ஆம் ஆண்டு தமிழ்நாடு தனியார் காடுகளைப் பாதுகாத்தல் (திருத்தச்) சட்டம்.
16. 1960 17 1960-ஆம் ஆண்டு தமிழ்நாடு ஊராட்சி ஒன்றிய குழுக்கள் (முதல் அரசியலமைப்பிற்கான சிறப்பு வகைமுறைகள்) சட்டம்.
17. 1960 22 1960-ஆம் ஆண்டு தமிழ்நாடு தனியார் காடுகளைப் பாதுகாத்தல் (திருத்தச்) சட்டம்.
18. 1961 27 1961-ஆம் ஆண்டு தமிழ்நாடு ஊராட்சிகள் (மாற்றப்பட்ட ஆட்சிப் பகுதிக்கு நீட்டிப்பு) மற்றும் ஊராட்சி ஒன்றிய குழுக்கள் (முதல் அரசியலமைப்பிற்கான சிறப்பு வகைமுறைகள்) திருத்தச் சட்டம்.
19. 1961 33 1961-ஆம் ஆண்டு தமிழ்நாடு தனியார் காடுகளைப் பாதுகாத்தல் (திருத்தச்) சட்டம்.
20. 1961 45 1961-ஆம் ஆண்டு தமிழ்நாடு மலைப்பகுதிகள் (மரங்களைப் பாதுகாத்தல்) திருத்தச் சட்டம்.
21. 1962 16 1962-ஆம் ஆண்டு தமிழ்நாடு தொழிற்சாலை நிறுவனங்கள் (தேசிய மற்றும் பண்டிகைக் கால விடுமுறைகள்) திருத்தச் சட்டம்.
4வ.
ஆண்டு எண் குறுந்தலைப்பு
எண்.
(1) (2) (3)
(4)
22. 1963 23 1963-ஆம் ஆண்டு தமிழ்நாடு தனியார் காடுகளைப் பாதுகாத்தல் (திருத்தச்) சட்டம்.
23. 1965 12 1965-ஆம் ஆண்டு தமிழ்நாடு தனியார் காடுகளைப் பாதுகாத்தல் (திருத்தச்) சட்டம்.
24. 1965 32 1965-ஆம் ஆண்டு தமிழ்நாடு தனியார் காடுகளைப் பாதுகாத்தல் (தொடர்ச்சிச்) சட்டம்.
25. 1969 16 1969-ஆம் ஆண்டு தமிழ்நாடு ஊராட்சிகள் (இரண்டாம் திருத்தச்) சட்டம்.
26. 1970 7 1970-ஆம் ஆண்டு தமிழ்நாடு தொழிற்சாலை நிறுவனங்கள் (தேசிய மற்றும் பண்டிகைக் கால விடுமுறைகள்) திருத்தச் சட்டம்.
27. 1970 11 1970-ஆம் ஆண்டு தமிழ்நாடு ஊராட்சிகள் (திருத்தச்) சட்டம்.
28. 1970 29 1970-ஆம் ஆண்டு தமிழ்நாடு கூட்டுறவுச் சங்கங்கள் (திருத்தச்) சட்டம்.
29. 1970 31 1970-ஆம் ஆண்டு தமிழ்நாடு கூட்டுறவுச் சங்கங்கள் (இரண்டாம் திருத்தச்) சட்டம்.
30. 1970 32 1970-ஆம் ஆண்டு தமிழ்நாடு கூட்டுறவுச் சங்கங்கள் (மூன்றாம் திருத்தச்) சட்டம்.
31. 1971 38 1971-ஆம் ஆண்டு தமிழ்நாடு கூட்டுறவுச் சங்கங்கள் (திருத்தச்) சட்டம்.
32. 1971 39 1971-ஆம் ஆண்டு தமிழ்நாடு கூட்டுறவுச் சங்கங்கள் (இரண்டாம் திருத்தச்) சட்டம்.
33. 1972 15 1972-ஆம் ஆண்டு தமிழ்நாடு ஊராட்சிகள் (திருத்தச்) சட்டம்.
34. 1975 34 1975-ஆம் ஆண்டு தமிழ்நாடு ஊராட்சிகள் மற்றும் ஊராட்சி ஒன்றிய குழுக்கள் (பதவி காலத்தினை நீட்டித்தல்) சட்டம்.
35. 1978 6 1978-ஆம் ஆண்டு தமிழ்நாடு ஊராட்சிகள் (அலுவலர்களின் பதவி காலத்தினை நீட்டித்தல்) சட்டம்.
36. 1979 22 1979-ஆம் ஆண்டு தமிழ்நாடு ஊராட்சி ஒன்றிய குழுக்கள் (தனி அலுவலர்களை நியமனம் செய்தல்) இரண்டாம் திருத்தச் சட்டம்.
37. 1982 39 1982-ஆம் ஆண்டு தமிழ்நாடு ஊராட்சிகள் (தனி அலுவலர்களை நியமனம் செய்தல்) இரண்டாம் திருத்தச் சட்டம்.
38. 1984 22 1984ஆம் ஆண்டு தமிழ்நாடு பொது விற்பனை வரி (இரண்டாம் திருத்தச்) சட்டம்.
39. 1984 23 1984ஆம் ஆண்டு தமிழ்நாடு பொது விற்பனை வரி (மூன்றாம் திருத்தச்) சட்டம்.
40. 1984 27 1984-ஆம் ஆண்டு தமிழ்நாடு கேளிக்கைகள் வரி (இரண்டாம் திருத்தச்) சட்டம்.
41. 1984 28 1984-ஆம் ஆண்டு தமிழ்நாடு பொது விற்பனை (நான்காம் திருத்தச்) சட்டம்.
42. 1985 9 1985-ஆம் ஆண்டு தமிழ்நாடு ஊராட்சி ஒன்றிய குழுக்கள் (தனி அலுவலர்களை நியமனம் செய்தல்) திருத்தச் சட்டம்.
43. 1985 10 1985-ஆம் ஆண்டு தமிழ்நாடு ஊராட்சிகள் (தனி அலுவலர்களை நியமனம் செய்தல்) திருத்தச் சட்டம்.
44. 1985 17 1985-ஆம் ஆண்டு தமிழ்நாடு கேளிக்கைகள் வரி (திருத்தச்) சட்டம்.
45. 1985 18 1985-ஆம் ஆண்டு தமிழ்நாடு பொது விற்பனை வரி (திருத்தச்) சட்டம்.
46. 1985 19 1985-ஆம் ஆண்டு தமிழ்நாடு பொது விற்பனை வரி (இரண்டாம் திருத்தச்) சட்டம்.
47. 1985 26 1985-ஆம் ஆண்டு தமிழ்நாடு ஊராட்சிகள் ஒன்றிய குழுக்கள் (தனி அலுவலர்களை நியமனம் செய்தல்) இரண்டாம் திருத்தச் சட்டம்.
48. 1985 27 1985-ஆம் ஆண்டு தமிழ்நாடு ஊராட்சிகள் (தனி அலுவலர்களை நியமனம் செய்தல்) இரண்டாம் திருத்தச் சட்டம்.
5வ.
ஆண்டு எண் குறுந்தலைப்பு
எண்.
(1) (2) (3)
(4)
49. 1985 34 1985-ஆம் ஆண்டு தமிழ்நாடு கேளிக்கைகள் வரி (இரண்டாம் திருத்தச்) சட்டம்.
50. 1985 35 1985-ஆம் ஆண்டு தமிழ்நாடு கேளிக்கைகள் வரி (மூன்றாம் திருத்தச்) சட்டம்.
51. 1985 36 1985-ஆம் ஆண்டு தமிழ்நாடு பொது விற்பனை வரி (மூன்றாம் திருத்தச்) சட்டம்.
52. 1985 43 1985-ஆம் ஆண்டு தமிழ்நாடு வரிவிதிப்புச் சட்டங்கள் (பொருந்தா வரம்புகள்) சட்டம்.
53. 1986 9 1986-ஆம் ஆண்டு தமிழ்நாடு ஊராட்சிகள் ஒன்றிய குழுக்கள் (தனி அலுவலர்களை நியமனம் செய்தல்) திருத்தச் சட்டம்.
54. 1986 10 1986-ஆம் ஆண்டு தமிழ்நாடு ஊராட்சிகள் (தனி அலுவலர்களை நியமனம் செய்தல்) திருத்தச் சட்டம்.
55. 1986 36 1986-ஆம் ஆண்டு தமிழ்நாடு பொது விற்பனை வரி (திருத்தச்) சட்டம்.
56. 1986 37 1986-ஆம் ஆண்டு தமிழ்நாடு உணவகங்கள் மற்றும் தங்கும் விடுதிகளின் ஆடம்பர பொருள்கள் மீதான வரி (திருத்தச்) சட்டம்.
57. 1986 40 1986-ஆம் ஆண்டு தமிழ்நாடு பொது விற்பனை வரி (இரண்டாம் திருத்தச்) சட்டம் 58. 1986 41 1986-ஆம் ஆண்டு தமிழ்நாடு பொது விற்பனை வரி (மூன்றாம் திருத்தச்) சட்டம்.
59. 1986 42 1986-ஆம் ஆண்டு தமிழ்நாடு பொது விற்பனை வரி (நான்காம் திருத்தச்) சட்டம்.
60. 1986 43 1986-ஆம் ஆண்டு தமிழ்நாடு பொது விற்பனை வரி (ஐந்தாம் திருத்தச்) சட்டம்.
61. 1986 44 1986-ஆம் ஆண்டு தமிழ்நாடு பொது விற்பனை வரி (ஆறாம் திருத்தச்) சட்டம்.
62. 1989 36 1989-ஆம் ஆண்டு தமிழ்நாடு கூட்டுறவுச் சங்கங்கள் (திருத்தச்) சட்டம்.
63. 1992 19 1992-ஆம் ஆண்டு தமிழ்நாடு கூட்டுறவுச் சங்கங்கள் (திருத்தம் மற்றும் சிறப்பு வகைமுறைகள்) சட்டம்.
64. 1992 32 1992-ஆம் ஆண்டு தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழக (திருத்தச்) சட்டம்.
65. 1992 33 1992-ஆம் ஆண்டு தமிழ்நாடு சம்பளங்கள் வழங்கல் (திருத்தச்) சட்டம்
66. 1993 8 1993-ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை (தகுதியின்மையைத் தடுக்கும்) திருத்தச் சட்டம்.
67. 1993 21 1993-ஆம் ஆண்டு தமிழ்நாடு சம்பளங்கள் வழங்கல் (திருத்தச்) சட்டம்.
68. 1994 35 1994-ஆம் ஆண்டு தமிழ்நாடு சம்பளங்கள் வழங்கல் (இரண்டாம் திருத்தச்) சட்டம்.
69. 1994 57 1994-ஆம் ஆண்டு தமிழ்நாடு சம்பளங்கள் வழங்கல் (மூன்றாம் திருத்தச்) சட்டம்.
70. 1995 6 1995-ஆம் ஆண்டு தமிழ்நாடு மீன் வளர்ப்பு (ஒழுங்குமுறைப்படுத்துதல்) சட்டம்.
71. 1995 11 1995-ஆம் ஆண்டு தமிழ்நாடு சம்பளங்கள் வழங்கல் (திருத்தச்) சட்டம்.
72. 1995 22 1995-ஆம் ஆண்டு தமிழ்நாடு சம்பளங்கள் வழங்கல் (இரண்டாம் திருத்தச்) சட்டம்.
73. 1995 24 1995-ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை (தகுதியின்மையைத் தடுக்கும்) திருத்தச் சட்டம்.
74. 1995 40 1995-ஆம் ஆண்டு தமிழ்நாடு சம்பளங்கள் வழங்கல் (மூன்றாம் திருத்தச்) சட்டம்.
75. 1997 9 1997-ஆம் ஆண்டு தமிழ்நாடு சம்பளங்கள் வழங்கல் (திருத்தச்) சட்டம்.
76. 1997 15 1997-ஆம் ஆண்டு தமிழ்நாடு கடல் வாரியம் (திருத்தச்) சட்டம்.
77. 1997 23 1997-ஆம் ஆண்டு தமிழ்நாடு சம்பளங்கள் வழங்கல் நீக்கறவு (திருத்தச்) சட்டம்6 வ.
ஆண்டு எண் குறுந்தலைப்பு
எண்.
(1) (2) (3)
(4)
78. 1997 52 1997-ஆம் ஆண்டு தமிழ்நாடு சம்பளங்கள் வழங்கல் (இரண்டாம் திருத்தச்) சட்டம்.
79. 1997 66 1997-ஆம் ஆண்டு தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழக (திருத்தச்) சட்டம்.
80. 1998 22 1998-ஆம் ஆண்டு தமிழ்நாடு பொது விற்பனை வரி (சிறப்பு வகைமுறைகள் மற்றும் செல்லுந்தன்மை) சட்டம்.
81. 1998 25 1998-ஆம் ஆண்டு தமிழ்நாடு பொது விற்பனை வரி (மூன்றாம் திருத்தச்) சட்டம்.
82. 1998 26 1998-ஆம் ஆண்டு தமிழ்நாடு கேளிக்கைகள் வரி (சிறப்பு வகைமுறைகள்) சட்டம்.
83. 1998 31 1998-ஆம் ஆண்டு தமிழ்நாடு உள்ளூர் பகுதிகளில் மோட்டார் வாகனங்கள் நுழைவதற்கான வரி (இரண்டாம் திருத்தச்) சட்டம்.
84. 1998 32 1998-ஆம் ஆண்டு தமிழ்நாடு கேளிக்கைகள் வரி (திருத்தச்) சட்டம்.
85. 1998 45 1998-ஆம் ஆண்டு தமிழ்நாடு பொது விற்பனை வரி (நான்காம் திருத்தச்) சட்டம்.
86. 1998 46 1998-ஆம் ஆண்டு தமிழ்நாடு கேளிக்கைகள் வரி (திருத்தம்) திருத்தச் சட்டம்.
87. 1998 47 1998-ஆம் ஆண்டு தமிழ்நாடு கேளிக்கைகள் வரி (இரண்டாம் திருத்தச்) சட்டம்.
88. 1999 12 1999-ஆம் ஆண்டு தமிழ்நாடு விற்பனை வரி, கேளிக்கைகள் வரி மற்றும் ஆடம்பர வரி (பூசல்களுக்கான தீர்வு) சட்டம்.
89. 1999 13 1999ஆம் ஆண்டு தமிழ்நாடு உணவகங்கள் மற்றும் தங்கும் விடுதிகளின் ஆடம்பர பொருள்கள் மீதான வரி (திருத்தச்) சட்டம்.
90. 1999 14 1999-ஆம் ஆண்டு தமிழ்நாடு பொது விற்பனை வரி (நான்காம் திருத்தச்) சட்டம்.
91. 1999 15 1999-ஆம் ஆண்டு தமிழ்நாடு பொது விற்பனை வரி (ஐந்தாம் திருத்தச்) சட்டம்.
92. 1999 26 1999-ஆம் ஆண்டு தமிழ்நாடு பொது விற்பனை வரி (இரண்டாம் திருத்தச்) சட்டம்.
93. 1999 27 1999-ஆம் ஆண்டு தமிழ்நாடு பொது விற்பனை வரி (மூன்றாம் திருத்தச்) சட்டம்.
94. 1999 28 1999-ஆம் ஆண்டு தமிழ்நாடு பொது விற்பனை வரி (ஆறாம் திருத்தச்) சட்டம்.
95. 1999 36 1999-ஆம் ஆண்டு தமிழ்நாடு பொது விற்பனை வரி (திருத்தச்) சட்டம்.
96. 1999 42 1999-ஆம் ஆண்டு தமிழ்நாடு பொது விற்பனை வரி (எட்டாம் திருத்தச்) சட்டம்.
97. 1999 47 1999-ஆம் ஆண்டு தமிழ்நாடு பொது விற்பனை வரி (ஏழாம் திருத்தச்) சட்டம்.
98. 1999 50 1999-ஆம் ஆண்டு தமிழ்நாடு கூட்டுறவுச் சங்கங்கள் (திருத்தச்) சட்டம்
99. 2000 2 1999-ஆம் ஆண்டு தமிழ்நாடு தொழில் நோக்கங்களுக்காக நிலம் கையப்படுத்துதல் (திருத்தச்) சட்டம்.
100. 2000 6 2000-ஆம் ஆண்டு தமிழ்நாடு பொது விற்பனை வரி (திருத்தச்) சட்டம்.
101. 2000 7 2000-ஆம் ஆண்டு தமிழ்நாடு பொது விற்பனை வரி (இரண்டாம் திருத்தச்) சட்டம்.
102. 2000 11 2000-ஆம் ஆண்டு தமிழ்நாடு ஆடம்பர பொருட்கள் மீதான வரி (திருத்தச்) சட்டம்.
103. 2000 12 2000-ஆம் ஆண்டு தமிழ்நாடு பொது விற்பனை வரி (மூன்றாம் திருத்தச்) சட்டம்.
104. 2000 13 2000-ஆம் ஆண்டு தமிழ்நாடு பொது விற்பனை வரி (நான்காம் திருத்தச்) சட்டம்.
105. 2000 14 2000-ஆம் ஆண்டு தமிழ்நாடு பொது விற்பனை வரி (ஐந்தாம் திருத்தச்) சட்டம்.
106. 2000 15 2000-ஆம் ஆண்டு தமிழ்நாடு பொது விற்பனை வரி (ஆறாம் திருத்தச்) சட்டம்.
107. 2000 16 2000-ஆம் ஆண்டு தமிழ்நாடு பொது விற்பனை வரி (ஏழாம் திருத்தச்) சட்டம்.
108. 2000 17 2000-ஆம் ஆண்டு தமிழ்நாடு கேளிக்கைகள் வரி (திருத்தச்) சட்டம்.
109. 2000 18 2000-ஆம் ஆண்டு தமிழ்நாடு கேளிக்கைகள் வரி (இரண்டாம் திருத்தச்) சட்டம்.
110. 2000 22 2000-ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை (தகுதியின்மையைத் தடுக்கும்) திருத்தச் சட்டம்.
7வ.
ஆண்டு எண் குறுந்தலைப்பு
எண்.
(1) (2) (3)
(4)
111. 2000 32 2000-ஆம் ஆண்டு தமிழ்நாடு பொது விற்பனை வரி (எட்டாம் திருத்தச்) சட்டம்.
112. 2000 36 2000-ஆம் ஆண்டு தமிழ்நாடு சம்பளங்கள் வழங்கல் (திருத்தச்) சட்டம்
113. 2000 38 2000-ஆம் ஆண்டு தமிழ்நாடு பொது விற்பனை வரி (ஒன்பதாம் திருத்தச்) சட்டம்.
114. 2000 39 2000-ஆம் ஆண்டு தமிழ்நாடு பொது விற்பனை வரி (பத்தாம் திருத்தச்) சட்டம்.
115. 2000 40 2000-ஆம் ஆண்டு தமிழ்நாடு பொது விற்பனை வரி (பதினொன்றாவது திருத்தச்) சட்டம்.
116. 2000 41 2000-ஆம் ஆண்டு தமிழ்நாடு பொது விற்பனை வரி (பன்னிரண்டாவது திருத்தச்) சட்டம்.
117. 2000 42 2000-ஆம் ஆண்டு தமிழ்நாடு கேளிக்கைகள் வரி (மூன்றாம் திருத்தச்) சட்டம்.
118. 2000 47 2000-ஆம் ஆண்டு தமிழ்நாடு உள்ளூர் பகுதிகளில் மோட்டார் வாகனங்கள் நுழைவதற்கான வரி (திருத்தச்) சட்டம்.
119. 2001 14 2001-ஆம் ஆண்டு தமிழ்நாடு ஒளிவுமறைவற்ற ஒப்பந்தப்புள்ளிகள் (திருத்தச்) சட்டம்.
120. 2001 21 2001-ஆம் ஆண்டு தமிழ்நாடு கேளிக்கைகள் வரி (திருத்தச்) சட்டம்.
121. 2001 23 2001-ஆம் ஆண்டு தமிழ்நாடு பொது விற்பனை வரி (திருத்தச்) சட்டம்.
122. 2001 24 2001-ஆம் ஆண்டு தமிழ்நாடு பொது விற்பனை வரி (இரண்டாம் திருத்தச்) சட்டம்.
123. 2002 5 2002-ஆம் ஆண்டு தமிழ்நாடு பொது விற்பனை வரி (திருத்தச்) சட்டம்.
124. 2002 12 2002-ஆம் ஆண்டு தமிழ்நாடு பொது விற்பனை வரி (இரண்டாம் திருத்தச்) சட்டம்.
125. 2002 13 2002-ஆம் ஆண்டு தமிழ்நாடு பொது விற்பனை வரி (மூன்றாம் திருத்தச்) சட்டம்.
126. 2002 16 2002-ஆம் ஆண்டு தமிழ்நாடு உள்ளூர் பகுதிகளில் மோட்டார் வாகனங்கள் நுழைவதற்கான வரி (திருத்தச்) சட்டம்.
127. 2002 17 2002-ஆம் ஆண்டு தமிழ்நாடு விற்பனை வரி (பூசல்களுக்கான தீர்வு) சட்டம்.
128. 2002 18 2002-ஆம் ஆண்டு தமிழ்நாடு பொது விற்பனை வரி (நான்காம் திருத்தச்) சட்டம்.
129. 2002 19 2002-ஆம் ஆண்டு தமிழ்நாடு பொது விற்பனை வரி (ஐந்தாம் திருத்தச்) சட்டம்.
130. 2002 20 2002-ஆம் ஆண்டு தமிழ்நாடு பொது விற்பனை வரி (ஆறாம் திருத்தச்) சட்டம்.
131. 2002 22 2002-ஆம் ஆண்டு தமிழ்நாடு பொது விற்பனை வரி (ஏழாம் திருத்தச்) சட்டம்.
132. 2002 24 2002-ஆம் ஆண்டு தமிழ்நாடு ஆடம்பர பொருட்கள் மீதான வரி (திருத்தச்) சட்டம்.
133. 2002 43 2002-ஆம் ஆண்டு தமிழ்நாடு ஒளிவுமறைவற்ற ஒப்பந்தப்புள்ளிகள் (திருத்தச்) சட்டம்.
8வ.
ஆண்டு எண் குறுந்தலைப்பு
எண்.
(1) (2) (3)
(4)
134. 2002 47 2002-ஆம் ஆண்டு தமிழ்நாடு பொது விற்பனை வரி (எட்டாம் திருத்தச்) சட்டம்.
135. 2002 48 2002-ஆம் ஆண்டு தமிழ்நாடு பொது விற்பனை வரி (ஒன்பதாம் திருத்தச்) சட்டம்.
136. 2002 51 2002-ஆம் ஆண்டு தமிழ்நாடு உள்ளூர் பகுதிகளில் மோட்டார் வாகனங்கள் நுழைவதற்கான வரி (இரண்டாம் திருத்தச்) சட்டம்.
137. 2002 54 2002-ஆம் ஆண்டு தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழக (திருத்தச்) சட்டம்.
138. 2003 1 2003-ஆம் ஆண்டு தமிழ்நாடு ஆடம்பர பொருட்கள் மீதான வரி (திருத்தச்) சட்டம்.
139. 2003 2 2003-ஆம் ஆண்டு தமிழ்நாடு கேளிக்கைகள் வரி (திருத்தச்) சட்டம்.
140. 2003 15 2003-ஆம் ஆண்டு தமிழ்நாடு கேளிக்கைகள் வரி (மூன்றாம் திருத்தச்) சட்டம்.
141. 2003 21 2003-ஆம் ஆண்டு தமிழ்நாடு பொது விற்பனை வரி (திருத்தச்) சட்டம்.
142. 2003 22 2003-ஆம் ஆண்டு தமிழ்நாடு உள்ளூர் பகுதிகளில் மோட்டார் வாகனங்கள் நுழைவதற்கான வரி (திருத்தச்) சட்டம்.
143. 2003 23 2003-ஆம் ஆண்டு தமிழ்நாடு கேளிக்கைகள் வரி (இரண்டாம் திருத்தச்) சட்டம்.
144. 2003 31 2003-ஆம் ஆண்டு தமிழ்நாடு மதுவிலக்கு (திருத்தச்) சட்டம்.
145. 2003 40 2003-ஆம் ஆண்டு தமிழ்நாடு பொது விற்பனை வரி (இரண்டாம் திருத்தச்) சட்டம்.
146. 2004 2 2004-ஆம் ஆண்டு தமிழ்நாடு மதுவிலக்கு (திருத்தச்) சட்டம்.
147. 2004 6 2004-ஆம் ஆண்டு தமிழ்நாடு நிதிநிலை நிருவாக பொறுப்புடைமை (திருத்தச்) சட்டம் 148. 2004 18 2004-ஆம் ஆண்டு தமிழ்நாடு கூட்டுறவு சங்கங்கள் (இரண்டாம் திருத்தச்) சட்டம்.
149. 2004 20 2004-ஆம் ஆண்டு தமிழ்நாடு விலங்குகள் மற்றும் பறவைகள் பலியிடுவதை தடைசெய்தல் (நீக்கறவு) சட்டம்.
150. 2004 32 2004-ஆம் ஆண்டு தமிழ்நாடு கள்ளச்சாராயக்காரர்கள், மருந்து சரக்கு குற்றவாளிகள், வனக் குற்றவாளிகள், குண்டர்கள், விபச்சாரத் தொழில் குற்றவாளிகள், குடிசை நில அபகரிப்பாளர்கள் ஆகியோரின் அபாயகரமான நடவடிக்கைகளைத் தடுத்தல் (திருத்தச்) சட்டம்.
151. 2005 5 2005-ஆம் ஆண்டு தமிழ்நாடு சம்பளங்கள் வழங்கல் (திருத்தச்) சட்டம்.
152. 2005 7 2005-ஆம் ஆண்டு தமிழ்நாடு நிதிநிலை நிருவாக பொறுப்புடைமை (திருத்தச்) சட்டம்.
153. 2006 16 2008-ஆம் ஆண்டு தமிழ்நாடு கள்ளச்சாராயக்காரர்கள், மருந்து சரக்கு குற்றவாளிகள், வனக் குற்றவாளிகள், குண்டர்கள், விபச்சாரத் தொழில் குற்றவாளிகள், குடிசை நில அபகரிப்பாளர்கள் மற்றும் காணொளி திருடர்கள் ஆகியோரின் அபாயகரமான நடவடிக்கைகளைத் தடுத்தல் (திருத்தச்) சட்டம்.
154. 2006 24 2006-ஆம் ஆண்டு தமிழ்நாடு சம்பளங்கள் வழங்கல் (திருத்தச்) சட்டம்.
155. 2006 31 2006-ஆம் ஆண்டு தமிழ்நாடு சம்பளங்கள் வழங்கல் (இரண்டாம் திருத்தச்) சட்டம்.
156. 2007 22 2007-ஆம் ஆண்டு தமிழ்நாடு மதுவிலக்கு (திருத்தச்) சட்டம்.
157. 2008 23 2008-ஆம் ஆண்டு தமிழ்நாடு மதுவிலக்கு (திருத்தச்) சட்டம்.
158. 2008 16 2008-ஆம் ஆண்டு தமிழ்நாடு கள்ளச்சாராயக்காரர்கள், மருந்து சரக்கு குற்றவாளிகள், வனக் குற்றவாளிகள், குண்டர்கள், விபச்சாரத் தொழில் குற்றவாளிகள், மணல் கடத்தும் குற்றவாளிகள், குடிசை நில அபகரிப்பாளர்கள் மற்றும் காணொளி திருடர்கள் ஆகியோரின் அபாயகரமான நடவடிக்கைகளைத் தடுத்தல் (திருத்தச்) சட்டம்.
9வ.
ஆண்டு எண் குறுந்தலைப்பு
எண்.
(1) (2) (3)
(4)
159. 2008 44 2008-ஆம் ஆண்டு தமிழ்நாடு கடைகள் மற்றும் வணிக நிறுவனங்கள் (திருத்தச்) சட்டம்.
160. 2008 51 2008-ஆம் ஆண்டு தமிழ்நாடு பிற்படுத்தப்பட்ட கிருத்துவர்கள் மற்றும் பிற்படுத்தப்பட்ட
இஸ்லாமியர்கள் (கல்வி நிறுவனங்களில் இட ஒதுக்கீடு மற்றும் மாநிலத்தின் கீழுள்ள
பணிகளில் நியமனங்கள் அல்லது பதவிகள்) திருத்தச் சட்டம்.
161. 2008 62 2008-ஆம் ஆண்டு தமிழ்நாடு கூட்டுறவு சங்கங்கள் (மூன்றாம் திருத்தச்) சட்டம்.
162. 2009 13 2009-ஆம் ஆண்டு தமிழ்நாடு சம்பளங்கள் வழங்கல் (திருத்தச்) சட்டம்.
163. 2010 1 2010-ஆம் ஆண்டு தமிழ்நாடு சம்பளங்கள் வழங்கல் (திருத்தச்) சட்டம்.
164. 2010 11 2010-ஆம் ஆண்டு தமிழ்நாடு நிதிநிலை நிருவாக பொறுப்புடைமை (திருத்தச்) சட்டம்.
165. 2010 31 2010-ஆம் ஆண்டு தமிழ்நாடு சம்பளங்கள் வழங்கல் (இரண்டாம் திருத்தச்) சட்டம்.
166. 2010 39 2010-ஆம் ஆண்டு தமிழ்நாடு கூட்டுறவுச் சங்கங்கள் (மூன்றாம் திருத்தச்) சட்டம்.
167. 2010 43 2010-ஆம் ஆண்டு தமிழ்நாடு நிதிநிலை நிருவாக பொறுப்புடைமை (இரண்டாம் திருத்தச்)
சட்டம்.
168. 2012 37 2012-ஆம் ஆண்டு தமிழ்நாடு கூட்டுறவுச் சங்கங்கள் (மூன்றாம் திருத்தச்) சட்டம்.
169. 2012 38 2012-ஆம் ஆண்டு தமிழ்நாடு கூட்டுறவுச் சங்கங்கள் (நான்காம் திருத்தச்) சட்டம்.
(ஆளுநரின் ஆணைப்படி)
ச. கோபி ரவிகுமார், அரசுச் செயலாளர் (சட்டமியற்றல்) சட்டத் துறை.
(தமிழாக்கம்)
வெ. அரசகுமார், உதவி இயக்குநர், சட்ட (தமிழ்ப்பிரிவு)த் துறை.
10 11தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையின் பின்வரும் சட்டமானது, 2023-ஆம் ஆண்டு
மார்ச் திங்கள் 13-ஆம் நாளன்று ஆளுநரின் ஏற்பிசைவைப் பெற்றது மற்றும் அது
பொதுத்தகவலுக்காக இதன் மூலம் வெளியிடப்படுகிறது:-
சட்ட எண். 5/2023.
2016 ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசுப் பணியாளர்கள் (பணி நிபந்தனைகள்) சட்டத்தை மேலும் திருத்தம் செய்வதற்கானதொரு சட்டம்.
இந்தியக் குடியரசின் எழுபத்தி மூன்றாம் ஆண்டில் தமிழ்நாடு மாநிலச் சட்டமன்றப்
பேரவையினால் பின்வருமாறு சட்டமியற்றப்படுவதாகுக:-
குறுந்தலைப்பு 1. (1) இந்தச் சட்டம் 2023 ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசுப் பணியாளர்கள்
மற்றும் (பணி நிபந்தனைகள்) திருத்தச் சட்டம் என வழங்கப்பெறும்.
தொடக்கம்.
(2) இது, 2021-ஆம் ஆண்டு டிசம்பர் திங்கள் 1 ஆம் நாளன்று நடைமுறைக்கு
வந்துவிட்டதாக கொள்ளப்படுதல் வேண்டும்.
தமிழ்நாடு சட்டம் 2. (இதன்பின்பு இதில் முதன்மைச் சட்டம் எனக் குறிப்பிடப்படுவதான) 2016-ஆம் ஆண்டு
14/2016.
தமிழ்நாடு அரசுப் பணியாளர்கள் (பணி நிபந்தனைகள்) சட்டத்தின் 21 ஆம் பிரிவிற்குப்
21-A எனும் புதிய பிரிவினை பின்பு, பின்வரும் பிரிவானது உட்புகுத்தப்படுதல் வேண்டும், அதாவது:-
உட்புகுத்துதல்.
"21-A. ஆட்சேர்ப்புக்கான கட்டாய தமிழ் மொழித் தாள்.-(1) 21 ஆம் பிரிவில்
உள்ளடங்கியது எது எவ்வாறு இருப்பினும், 2021 ஆம் ஆண்டு டிசம்பர் திங்கள் 1 ஆம்
நாளன்றும் அது முதற்கொண்டும், ஆட்சேர்ப்புக்காக, நேரடி ஆட்சேர்ப்பு மூலம் எந்தவொரு
பணியிலும் எந்தவொரு பதவிக்கும், விண்ணப்பிக்கும் நபர் எவரும் ஆட்சேர்ப்புக்காக
நடத்தப்படும் தேர்வில் தமிழ் மொழித் தாளில் நாற்பது விழுக்காட்டிற்குக் குறையாமல்
மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெறுதல் வேண்டும்.
(2) தமிழ் மொழித் தாளுக்கான பாடத்திட்டம் மற்றும் உள்ளடக்கம் ஆகியன
அவ்வப்போது அரசால் ஆணையிடப்படலாகிறவாறு இருத்தல் வேண்டும்".
செல்லுந்தன்மை.
3. முதன்மைச் சட்டம் அல்லது நீதிமன்றம் அல்லது பிற அதிகார அமைப்பு எவற்றாலும்
வழங்கப்பட்ட தீர்ப்புகள், தீர்ப்பாணைகள் அல்லது கட்டளைகள் எதிலும், அடங்கியுள்ளது
எது எவ்வாறிருப்பினும், 2021 ஆம் ஆண்டு டிசம்பர் திங்கள் 1 ஆம் நாளன்று தொடங்கும்
காலத்தின் போதும் தமிழ்நாடு அரசிதழில் இந்தச் சட்டம் வெளியிடப்படும் தேதியுடன்
முடிவடையும் போதும் செய்யப்பட்ட எதுவும் அல்லது எடுக்கப்பட்ட நடவடிக்கை எதுவும்,
அனைத்து நோக்கத்திற்காக, அனைத்து நேரங்களிலும் இந்தச் சட்டம் நடைமுறையில்
இருந்ததைப் போல, சட்டத்துடன் இணங்கிய வகையில் செல்லுந்தன்மையுடன்
செய்யப்பட்டிருப்பதாகக் கொள்ளப்படுதல் வேண்டும்.
(ஆளுநரின் ஆணைப்படி)
ச. கோபி ரவிகுமார்,
அரசுச் செயலாளர் (சட்டமியற்றல்),
சட்டத் துறை.
(தமிழாக்கம்)
வெ. அரசகுமார்,
உதவி இயக்குநர்,
சட்டத் துறை12 13 தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையின் பின்வரும் சட்டமானது 2023-ஆம்
ஆண்டு மார்ச் திங்கள் 15 ஆம் நாளன்று ஆளுநரின் ஏற்பிசைவைப் பெற்றது
மற்றும் அது பொதுத்தகவலுக்காக இதன் மூலம் வெளியிடப்படுகிறது:-
சட்ட எண். 6/2023.
1987-ஆம் ஆண்டு தமிழ்நாடு வேளாண் விளைபொருளைச் சந்தைப்படுத்துதல் (முறைப்படுத்துதல்) சட்டத்தை மேலும் திருத்தம் செய்வதற்கானதொரு சட்டம்.
இந்தியக் குடியரசின் எழுபத்தி மூன்றாம் ஆண்டில் தமிழ்நாடு மாநிலச்
சட்டமன்றப் பேரவையினால் பின்வருமாறு சட்டமியற்றப்படுவதாகுக:-
குறுந்தலைப்பு மற்றும் 1. (1) இந்தச் சட்டம், 2023-ஆம் ஆண்டு தமிழ்நாடு வேளாண்
தொடக்கம்.
விளைபொருளைச் சந்தைப்படுத்துதல் (முறைப்படுத்துதல்) திருத்தச் சட்டம் என
வழங்கப்பெறும்.
(2) இது, 2022 ஆம் ஆண்டு நவம்பர் திங்கள் 30-ஆம் நாளன்று
நடைமுறைக்கு வந்துவிட்டதாகக் கொள்ளப்படுதல் வேண்டும்.
தமிழ்நாடு சட்டம்
33-ஆம் பிரிவிற்கான 2. (இதன்பின்பு இதில் முதன்மைச் சட்டம் என குறிப்பிடப்படுவதான)
27/1989.
திருத்தம்.
1987 ஆம் ஆண்டு தமிழ்நாடு வேளாண் விளைபொருளைச் சந்தைப்படுத்துதல்
(முறைப்படுத்துதல்) சட்டத்தின் 33-ஆம் பிரிவில், (1)-ஆம் உட்பிரிவில் உள்ள
வகைமுறையில், "பதினொரு ஆண்டுகள் மற்றும் ஆறு மாதங்கள்" எனும்
சொற்றொடருக்காக, "பன்னிரண்டு ஆண்டுகள் மற்றும் ஆறு மாதங்கள்" எனும்
சொற்றொடரானது மாற்றாக அமைக்கப்படுதல் வேண்டும்.
தமிழ்நாடு அவசரச்
நீக்கறவு மற்றும் 3. (1) 2022-ஆம் ஆண்டு தமிழ்நாடு வேளாண் விளை பொருளைச்
சட்டம் 5/2022.
காப்புரை.
சந்தைப்படுத்துதல் (முறைப்படுத்துதல்) இரண்டாம் திருத்த அவசரச் சட்டமானது
ஈங்கிதனால் நீக்கறவு செய்யப்படுகிறது.
(2) அத்தகைய நீக்கறவு எவ்வாறிருப்பினும், கூறப்பட்ட அவசரச்
சட்டத்தால் திருத்தப்பட்டவாறான முதன்மைச் சட்டத்தின்படி செய்யப்பட்ட செயல்
எதுவும் அல்லது எடுக்கப்பட்ட நடவடிக்கை எதுவும் இந்தச் சட்டத்தினால்
திருத்தப்பட்டவாறான, முதன்மைச் சட்டத்தின்படி செய்யப்பட்டதாக அல்லது
எடுக்கப்பட்டதாக கொள்ளப்படுதல் வேண்டும்.
செல்லுந்தன்மை. 4. முதன்மைச் சட்டத்தில் அடங்கியுள்ள எது எவ்வாறிருப்பினும், 2022
நவம்பர் 30 ஆம் தேதியிலிருந்தும் மற்றும் அது முதற்கொண்டும் சந்தைக்
குழுக்களின் ஒரு தனி அலுவலரின் அதிகாரங்களை செலுத்தும் மற்றும்
செயற்பணிகளை நிறைவேற்றும் நபர் ஒவ்வொருவரும், இந்தச் சட்டத்தால்
திருத்தம் செய்யப்பட்டவாறான முதன்மைச் சட்டத்தின் 33 ஆம் பிரிவின் (1) ஆம்
உட்பிரிவின்படி அத்தகைய தனி அலுவலர்களாக பணியர்த்தப்பட்டுள்ளதாகக்
கொள்ளப்படுதல் வேண்டும் மற்றும் 2022 நவம்பர் 30 ஆம் நாள் தொடங்கியும்,
2022 டிசம்பர் 15 ஆம் நாள் முடிவடையும் காலஅளவு வரை கூறப்பட்ட
தனி அலுவலர்களால் செய்யப்பட்ட செயல் எதுவும் அல்லது எடுக்கப்பட்ட
நடவடிக்கை எதுவும், இந்தச் சட்டத்தால் திருத்தம் செய்யப்பட்டவாறான,
முதன்மைச் சட்டத்தின்படி செல்லுந்தன்மையுடன் செய்யப்பட்டிருப்பதாக அல்லது
எடுக்கப்பட்டிருப்பதாகக் கொள்ளப்படுதல் வேண்டும்.
(ஆளுநரின் ஆணைப்படி)
ச. கோபி ரவிகுமார்,
அரசுச் செயலாளர் (சட்டமியற்றல்),
சட்டத்துறை.
(தமிழாக்கம்)
வெ. அரசகுமார்,
உதவி இயக்குநர்,
சட்டத் துறை14 15 தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையின் பின்வரும் சட்டமானது 2023 ஆம்
ஆண்டு ஏப்ரல் திங்கள் 7-ஆம் நாளன்று ஆளுநரின் ஏற்பிசைவைப் பெற்றது
மற்றும் அது பொதுத்தகவலுக்காக இதன் மூலம் வெளியிடப்படுகிறது: -
சட்ட எண். 9/2023.
தமிழ்நாடு மாநிலத்தில் இணையவழி சூதாட்டத்தை தடைசெய்தலுக்கும் இணையவழி விளையாட்டுகளை ஒழுங்குமுறைப்படுத்துவதற்குமானதொரு சட்டம்.
சமீபத்திய ஆண்டுகளில், இணையவழி சூதாட்ட அடிமைத்தனத்தினால் பலர்
தாங்க முடியாத கடனைப்பெறுவதால், அது தற்கொலைகளுக்கு வழிவகுக்கிறது
என்பதாலும்;
மேலும், இணையவழி சூதாட்டங்களுக்கு அடிமையாதலானது நிதி
நெருக்கடியினை ஏற்படுத்துகிறது மற்றும் பல குடும்பங்களை சீரழிக்கிறது
என்பதாலும்;
மேலும், பெரும்பாலும் இணைய வழியில் உள்ள சூதாட்ட சீர்குலைவானது,
உலக சுகாதார நிறுவனத்தால் (WHO) இனங்கண்டறியப்பட்டு, அதன் சர்வதேச
நோய்களின் வகைப்பாட்டில் (11வது திருத்தம்) சேர்க்கப்பட்டுள்ளது. இது
விடாப்பிடியான அல்லது திரும்பத்திரும்ப நிகழ்கிற விளையாடும் நடத்தை
அமைப்பினால் வகைப்படுத்தப்படுகிறது மற்றும் விளையாட்டின் மீதான
பலவீனமான கட்டுப்பாடானது மற்ற செயல்பாடுகளை விட சூதாட்டத்திற்கு
முன்னுரிமை அளிப்பதனை வெளிப்படுத்துகிறது மற்றும் அவ்வாறு தொடர்ந்து
விளையாடுவது தனிநபர், குடும்பம், சமூகம், கல்வி, தொழில் அல்லது முக்கிய
செயல்பாடுகள் பிறவற்றில் எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்துகிறது
என்பதாலும்;
தமிழ்நாடு சட்டம்
மேலும், மாண்பமை சென்னை உயர்நீதிமன்றமானது, பொது ஆணையின்
1/2021.
மூலம் 03.08.2021-ஆம் தேதியிட்ட நீதிப்பேராணை மனு எண். 18022/2020
மற்றும் பிறவற்றில், மாநிலத்தில் பந்தயம் கட்டுதல் மற்றும் சூதாட்டம்
ஆகியவற்றில் அரசமைப்பின் உரிமை உணர்வுக்கு உத்திரவாதம் அளிக்கக்கூடிய
ஒரு பொருத்தமான சட்டத்தினை கொண்டு வருவதற்கான சுதந்திரத்துடன்,
இணையவெளியில் பணயம்வைத்தல் அல்லது பந்தயம் கட்டுதலை தடை செய்த
2021-ஆம் ஆண்டு தமிழ்நாடு சூதாட்டம் மற்றும் காவலர் சட்டங்கள் (திருத்தச்)
சட்டத்தின் II–ஆம் பகுதி அரசமைப்பை மீறுகிறதென நீக்கியது என்பதாலும்;;
மேலும், அரசானது, இணையவழி விளையாட்டுகள் மீது புதிய சட்டம்
ஒன்றினை இயற்ற அறிவுரை வழங்குவதற்கு மாண்புமிகு ஓய்வுபெற்ற நீதிபதி
திரு. K. சந்துரு அவர்களின் தலைமையின் கீழ் ஐந்து நபர்களைக் கொண்ட
குழு ஒன்றை அமைத்தது என்பதாலும்;
மேலும், குழுவானது அதன் அறிக்கையில், செயல்முறையின்
இயல்சார் இடைவெளியின் வரைக்கூறுகள், விளையாடும் நேரம், மற்ற
விளையாட்டாளர்களுடனான விளையாடுபவர்களின் உறவு, அடிமையாதலின்
அளவு, தொடர்புடைய பணத்தின் அளவு, பொருளாதார நடவடிக்கை நிலை,
அமைப்பாளரின் இலாப அளவுகோல் மற்றும் கடனின் பங்கு ஆகியவற்றைக்
கருத்தில் கொண்டு, சீரற்ற வெளியீட்டு உருவாக்கி எதனையும் உள்ளடக்காத
வார்த்தை விளையாட்டுகள் அல்லது பலகை விளையாட்டுகள் தவிர்த்து
இணையவழி ரீதியிலான விளையாட்டு எதுவும் இணையவழி அல்லாத
விளையாட்டுடன் ஒப்பீடு செய்யப்படவியலாது என கண்டறியப்பட்டது என்பதாலும்;
16மேலும், இணையவழி ரம்மி உள்ளிட்ட இணையவழி வகையிலான
விளையாட்டுக்களைப் பொறுத்தநேர்வில், சீரற்ற வெளியீட்டு உருவாக்கிகளுக்கான
நிரல்நெறிமுறையானது உருவாக்குநர்களுக்குத் தெரியும் எனவும், எனவே,
அவை போலி சீரற்ற உருவாக்கிகள் எனவும்; அத்தகைய விளையாட்டுகளை
எந்திரங்களுடன் (அமைப்பு அல்லது பயனாளர்களுடன் தொடர்பு கொள்ள
வடிவமைக்கப்பட்ட ஒரு தன்னாட்சி நிரலாக்கம் அல்லது பாத்திரம்)
விளையாடலாம் எனவும்; சூதாட்ட அமைப்புகளின் மையப்படுத்தப்பட்ட வழங்கி
(server) கட்டமைப்பை தணிக்கை செய்ய எந்த வழிமுறையும் இல்லை எனவும்;
மேலும் விளையாட்டுகளைக் கையாளவும், தொடர்ந்து விளையாடுவதற்கு
விளையாட்டாளர்களைக் கவருவதற்கும் செயற்கை நுண்ணறிவானது
பயன்படுத்தப்படலாம் எனவும்; அறிக்கையில் கூறப்பட்டுள்ளது என்பதாலும்;
மேலும் கூறப்பட்ட அறிக்கையானது, இணையவழி விளையாட்டுகளை
பொதுவாக இரண்டு வகைகளாக வகை செய்கிறது. அதாவது, ஒன்று
குறைந்தபட்ச அல்லது புறக்கணிக்கத்தக்க சீரற்ற காரணியைக் கொண்டது மற்றும்
மற்றொன்று சீரற்ற நிகழ்வு அல்லது எண்ணிக்கை உருவாக்கிகளைக் கொண்டது.
அது சீரற்ற போலி மற்றும் அடிமையாக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டும்
அதற்கிணங்கியவாறு முந்தையதை ஒழுங்குபடுத்தவும், பிந்தையதைத் தடை
செய்யவும் பரிந்துரை செய்கிறது என்பதாலும்;
மேலும், பள்ளிக்கல்வித் துறையின் இரண்டு இலட்சத்திற்கும் மேற்பட்ட
ஆசிரியர்களிடம், பள்ளி மாணவர்களின் மீது இணையவழி விளையாட்டுகளால்
ஏற்படும் பாதிப்புகள் குறித்து ஆய்வு செய்வதற்காக அரசு சமீபத்தில் நடத்திய
ஆய்வில், எழுபத்து நான்கு விழுக்காட்டிற்கும் அதிகமான ஆசிரியர்கள்,
பதிலாளர்கள் மாணவர்களின் கவனம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அறுபத்து ஏழு
விழுக்காடு பதிலாளர்கள் அதிகமான கண் குறைபாடுகளை கண்டறிந்ததாகவும்,
அவர்களில் எழுபத்து நான்கு விழுக்காட்டிற்கும் அதிகமான மாணவர்கள்
அறிவுத்திறன், எழுதும் திறன் மற்றும் படைப்பாற்றல் ஆகியவற்றில் குறைபாட்டைக்
கண்டறிந்ததாகவும், எழுபத்து ஆறு விழுக்காட்டிற்கும் அதிகமான மாணவர்களின்
சுயமதிப்பீட்டில் கணிசமான குறைவை அவர்கள் கண்டறிந்ததாகவும்.
எழுபத்தேழு விழுக்காட்டிற்கும் அதிகமான மாணவர்களின் கோபப்படும் தன்மை
அதிகரிப்பதையும்; எழுபத்திரண்டு விழுக்காட்டிற்கும் அதிகமான மாணவர்களின்
ஒழுக்கமின்மையை கண்டறிந்ததாகவும் கூறினார்கள் என்பதாலும்;
மேலும், அரசானது, கொண்டுவரப்பட உள்ள சட்டத்தின்
மீது பொது மக்களின் கருத்தினைக் கேட்கும்போது,
தொண்ணூற்று ஒன்பது விழுக்காட்டிற்கும் அதிகமாக, அதாவது மொத்தமாக
பெறப்பட்ட 10,735 மின்னஞ்சல்களில் 10,708 மின்னஞ்சல்களானது, இணையவழி
சூதாட்டங்களின் மீது முழுமையான தடையினை விதிக்கக் கோரியுள்ளது
என்பதாலும்;
மேலும், இணையவழி சூதாட்ட நிறுவனங்கள், சிந்தனையாளர்கள்,
அரசியல் கட்சிகள், விளையாட்டு வீரர்களின் சங்கம் மற்றும் சமூக ஆர்வலர்கள்
ஆகியோரின் பிரதிநிதிகள் அடங்கிய பதினேழு பங்கேற்பாளர்களுக்கு நேரில்
தங்களது கருத்துகளைத் தெரிவிக்க வாய்ப்பானது வழங்கப்பட்டது. அவர்கள்
தொழில்துறையின் சுய கட்டுப்பாட்டினை ஒழுங்குமுறைப்படுத்துவதை
அனுமதித்தல், அரசின் மூலம் ஒழுங்குமுறைப்படுத்துதல், உண்மையான பணம்
தொடர்புடைய விளையாட்டுகளை மற்ற பிறவகையான விளையாட்டுகளிலிருந்து
வேறுபடுத்துதல், வயது மற்றும் பணம் தொடர்புடைய கட்டுப்பாடுகளை
வழங்குதல், விளம்பரங்களை தடை செய்தல், பணச்சலவை செய்தலைத்
தடுத்தல், குறைதீர்க்கும் இயங்குமுறையை வழங்குதல் மற்றும் இணையவழி
சூதாட்டங்களுக்கு முழுவதுமாக தடைவிதித்தல் போன்ற பல்வேறு
பரிந்துரைகளையும், கோரிக்கைகளையும், அரசிடம் முன்வைத்துள்ளனர்
என்பதாலும்;
17மேலும், இணையவழி விளையாட்டுகள் மற்றும் சூதாட்டங்களின் சிக்கல்களை
பழைய ஈரிணைய வாய்ப்பு (Binary) விளையாட்டுக்கு மாறாக திறன் விளையாட்டு
என்பதன் மூலம் சரிசெய்ய இயலாது என்று கருதப்படுகிறது. அடிப்படை
மட்டத்தில் தகவல் தொழில்நுட்பமானது எவ்வாறு செயல்படுகிறது என்பதையும்
இயல்சார்ந்த மற்றும் பொதுவான இணைய வழிக்கும் இடையேயுள்ளதும் மற்றும்
இயல்சார்ந்த மற்றும் இணையவழி விளையாட்டுக்களுக்கு இடையேயுள்ளதுமான
நெருக்கடியானதொரு வேறுபாடுகளையும் புரிந்து கொள்கின்ற புதிய கருத்தியல்
கட்டமைப்பு தேவைப்படுகிறது என்பதாலும்;
மேலும், ஒரு மென்பொருளில் உண்மையான சீரற்ற வெளியீடானது
சாத்தியமில்லை என்பதும், சீரற்றவை எதுவும் உருவாக்குபவரால் எழுதப்பட்ட
குறிப்பிட்டதொரு நிரல்நெறிமுறையினைச் சார்ந்திருக்கும் என்பதும்
நிரல்நெறிமுறையின் தணிக்கையானது, விளையாட்டு வழங்குநருக்குச் சாதகமாக
வடிவமைக்கப்பட்ட மறைமுக நிரல்நெறிமுறைகள் எதனையும் கண்டறிவதை
கடினமாக்குகிறது என்பதும் இணையவழி விளையாட்டில் உள்ள செயற்கை
நுண்ணறிவின் மேலான விளைவானது, விளையாட்டு சேவைவழங்குநர்/
செயலாக்குநர் உண்மையில் அனைத்து அட்டைகளையும் வைத்திருப்பதுடன்,
விளையாடுபவர்/நுகர்வோருக்கு முற்றிலும் நியாயமற்ற விளையாட்டுச்
சூழ்நிலையை உருவாக்க முடியும் என்பதும்; போலி சீரற்ற நிலையினை
சோதிப்பதற்கு அறிவியல் பூர்வமாக சரிபார்க்கப்பட்ட நிரல்நெறிமுறை ஏதும்
தற்போதில்லை என்பதும் நிரூபிக்கப்பட்ட அறிவியல் உண்மை என்பதாலும்;
மேலும், இணையவழி விளையாட்டுகளின் வடிவமைப்பின் உள்ளார்ந்த
அடிமைத்தனமும் விளையாடுபவர்களால் செலுத்தப்படும் பணமும், முழுமையான
விளையாட்டு முறையினை சுரண்டலுக்கும் அடிமையாக்கும் தன்மைக்கும்
காரணமாகிறது, அது உடல்நல அபாயம் மட்டுமல்லாது சமூக மற்றும்
பொருளாதாரத்தில் பெருவாரியான விகிதத்தில் பாதிப்பினை ஏற்படுத்துகிறது
என்பதாலும்;
மேலும், இளைஞர்கள் மீதான இணையவழி சூதாட்டம் மற்றும் இணையவழி
விளையாட்டுக்களின் அடிமையாதலின் விளைவுகளின் மீதான பல ஆராய்ச்சி
ஆய்வுகளானது, ஆக்ரோசமான நடத்தையின் வளர்ச்சி, மோசமான கண்பார்வை,
சிந்தனைத்திறன் குறைதல், பகுப்பாய்தல் சிந்தனை குறைதல், உற்பத்தித்திறன்
குறைதல் போன்ற எதிர்மறை விளைவுகளை சுட்டிக்காட்டுகின்றன. எனவே, இவை
மாநிலத்தின் மற்றும் அதன் மக்கள் தொகையின் நீண்ட எதிர்கால வாய்ப்புகளைப்
பாதிக்கும் ஒரு சக்திவாய்ந்த தீமையாகப் பார்க்கப்படுதல் வேண்டும் என்பதாலும்;
மேலும், இணையவழி விளையாட்டானது அடிமைத்தனத்தின் மூலம்
குடும்பங்களின் அழிவு மற்றும் தற்கொலை மரணங்களை ஏற்படுத்துகிறது,
மக்களின் உடல் நலத்தை பாதிக்கிறது, சமூக ஒழுங்கை சீர்குலைக்கிறது மற்றும்
பொது ஒழுங்கைப் பேணுவதில் ஊறு ஏற்படுத்துகிறது என்பதாலும்;
மேலும், அரசானது, மேற்கூறப்பட்ட குழுவின் அறிக்கை, பள்ளி
ஆசிரியர்களுக்கிடையேயான ஆய்வு முடிவுகள், அந்த கருப்பொருளின்
மீதான ஆய்வுகள், பங்குரிமையாளர்கள் மற்றும் பொதுமக்களின் கருத்துகள்
ஆகியவற்றைக் கவனமாக கருத்தில் கொண்டு, பின்னர் மாநிலத்தில் இணையவழி
சூதாட்டத்தினை தடை செய்வதற்கும் இணையவழி விளையாட்டுகளை
ஒழுங்குமுறைப்படுத்துவதற்கும் சட்டமொன்றை இயற்றுவதென முடிவு
செய்துள்ளது என்பதாலும்;
இந்தியக் குடியரசின் எழுபத்தி மூன்றாம் ஆண்டில் தமிழ்நாடு மாநிலச்
சட்டமன்றப் பேரவையால் பின்வருமாறு சட்டமியற்றப்படுவதாகுக:-
18அத்தியாயம்-I.
முன்னுரை.
குறுந்தலைப்பு மற்றும்
1. (1) இந்தச் சட்டமானது, 2022-ஆம் ஆண்டு தமிழ்நாடு இணையவழி
தொடக்கம்.
சூதாட்டத்தைத் தடை செய்தல் மற்றும் இணையவழி விளையாட்டுகளை
ஒழுங்குமுறைப்படுத்துதல் சட்டம் என வழங்கப் பெறும்.
(2) இது அறிவிக்கையின் வாயிலாக மாநில அரசால்
குறிப்பிடப்படலாகும் அத்தகைய தேதியன்று நடைமுறைக்கு வருதல் வேண்டும்.
பொருள் வரையறைகள். 2. இந்தச் சட்டத்தின் தறுவாய் வேறு பொருள் குறித்தாலன்றி.-
(a) "மேல்முறையீட்டு அதிகார அமைப்பு" என்பது 13-ஆம் பிரிவின்
கீழ் அரசால் நிறுவப்பட்ட மேல்முறையீட்டு அதிகார அமைப்பு என்று பொருள்படும்;
(b) "குறிப்பிடப்பட்ட நாள்" என்பது 1-ஆம் பிரிவின் (2)-ஆம்
உட்பிரிவின் கீழ் குறிப்பிடப்பட்ட தேதி என்று பொருள்படும்;
(c) "அதிகார அமைப்பு" என்பது, 3-ஆம் பிரிவின் கீழ் நிறுவப்பட்ட
தமிழ்நாடு இணையவழி விளையாட்டு அதிகார அமைப்பு என்று பொருள்படும்;
(d) "இருப்பிடத்தின் அடிப்படையில் இணைய உள்ளடக்கத்தினை
தடை செய்தல்" என்பது பயனர்களின் புவியியல் இருப்பிடத்தின் அடிப்படையில்,
இணையவழி உள்ளடக்கம், இணையவழி பயன்பாடுகள் அல்லது இணையவழி
சேவைகளை அணுகுவதிலிருந்து பயனர்களைக் கட்டுப்படுத்துவது என்று
பொருள்படும்;
(e) "அரசு" என்பது மாநில அரசு என்று பொருள்படும்;
(f) "உள்ளூர் இணையவழி விளையாட்டுகளின்வழங்குநர்" என்பது, -
i. மைய மேலாண்மை மற்றும் சேவைக் கட்டுப்பாட்டினை
இம்மாநிலத்திற்குள்; அல்லது
ii. வாடிக்கையாளர்களால் அணுகுவதற்காக கிடைக்கக்கூடிய
சேவையினை இம்மாநிலத்திற்குள் தொகுத்து வழங்குகின்ற;
இணையவழி விளையாட்டு வழங்குநர் என்று பொருள்படும்;
(g) "உள்ளூர் அல்லாத இணையவழி விளையாட்டு வழங்குநர்'
என்பது உள்ளூர் இணையவழி விளையாட்டுகள் வழங்குநராக அல்லாத
இணையவழி விளையாட்டுகள் சேவை வழங்குநர் எவரும் என்று பொருள்படும்;
(h) "பிற பந்தயப் பொருட்கள்" என்பது பணத்திற்கு சமமானதாக
அங்கீகரிக்கப்பட்ட எதையும் உள்ளடக்கியது மற்றும் கணினிவழி கடன்கள்,
கணினிவழி நாணயங்கள், கணினிவழி அடையாள வில்லைகள், கணினிவழி
பொருட்கள் அல்லது இணையவழி விளையாட்டிற்காக அல்லது அதன் ஒரு
பகுதியாக அல்லது அதன் தொடர்புடையதாக வாங்கப்பட்ட அதனையொத்த
பொருள் எதுவும் என்று பொருள்படும்;
(i) "இணையவழி சூதாட்டம்" என்பது இணையவழியில் பணயம்
வைத்தல் அல்லது பந்தயம் கட்டுதல் மற்றும் பணம் அல்லது பிற பந்தயப்
பொருட்களை எந்த வகையிலும், இணையவழி விளையாட்டுக்கான வாய்ப்பு
எதனையும் உள்ளடக்கியது என்று பொருள்படும்;
19விளக்கம்.- இந்தக் கூறின் நோக்கத்திற்காக, பணயம் வைத்தல்
அல்லது பந்தயம் கட்டுதலானது, பந்தயங்களின் சேகரிப்பு அல்லது கோருதலையும்,
வெற்றிகள் அல்லது பரிசுகளின் பெறுதல் அல்லது வழங்குதலையும், பணமாகவோ
அல்லது பிறவாறாகவோ அல்லது பந்தயம் எதனையும் பொறுத்தும் அல்லது
பணயம் அல்லது பந்தயம் அல்லது அத்தகைய சேகரிப்பு, கோருதல், பெறுதல்
அல்லது வழங்குதல் ஆகியவற்றுக்கு உதவ அல்லது அதனை எளிதாக்கும்
நோக்கமுடைய எந்தவொரு செயலையும் உள்ளடக்கியதாகக் கருதப்படுதல்
வேண்டும்;
(j) "இணையவழி விளையாட்டுச் சேவை" என்பது, இணையவழியில்
பணயம் வைத்தல் அல்லது பந்தயம் கட்டுதல் அல்லது இணையவழி வாய்ப்புக்கான
சேவை மற்றும், சேவையின் வாடிக்கையாளர் பணம் கொடுக்கிறார் அல்லது
ஒப்புக்கொள்கிறார் அல்லது அதன் நோக்கத்திற்காக பிற பந்தயப் பொருட்களை
வைக்கிறார் என்று பொருள்படும்;
(k) "இணையவழி விளையாட்டு" என்பது, விளையாட்டில்
பங்கேற்பாளர்கள் இருந்தாலும் அல்லது இல்லாவிட்டாலும், மின்னணு அல்லது
மின்னிலக்க சாதனத்தில் விளையாடப்படும் மற்றும் இணையம் அல்லது பிற
வகையான மின்னணு எதிலும் அல்லது தகவல்தொடர்புகளை எளிதாக்குவதற்கான
பிற தொழில்நுட்பம், ஒரு மென்பொருளாக நிர்வகிக்கப்பட்டு இயக்கப்படும்
விளையாட்டு என்று பொருள்படும்;
(l) "இணையவழி விளையாட்டுக்கான வாய்ப்பு" என்பது,-
(i) வாய்ப்பின் ஓர் உட்கூறு மற்றும் திறமையின் ஓர் உட்கூறு ஆகிய
இரண்டையும் ஈடுபடுத்துகிற மற்றும் திறமையின் உட்கூறின் மீது வாய்ப்பின்
உட்கூறானது ஆதிக்கம் செலுத்துகிற; அல்லது
(ii) மிகச்சிறந்த திறமையால் மட்டுமே அகற்றப்படக்கூடிய
வாய்ப்பின் ஓர் உட்கூறினை ஈடுபடுத்துகிற; அல்லது
(iii) வாய்ப்பின் உட்கூறுகளை ஈடுபடுத்துகிற ஒரு விளையாட்டு;
அல்லது
(iv) சீரற்ற வெளியீட்டு அல்லது நிகழ்வு உருவாக்கியினால்
வேலை செய்யக்கூடிய அட்டைகள், பகடை, சக்கரம் அல்லது பிற சாதனத்தை
ஈடுபடுத்துகிற இணையவழி விளையாட்டு எதனையும் உள்ளடக்குகிறது என்று
பொருள்படும்;
(m) "இணையவழி விளையாட்டு வழங்குநர்" என்பது இணையவழி
விளையாட்டு எதையும் நடத்துவதற்காக சேவையை வழங்கும் நபர் எவரும் என்று
பொருள்படும்;
(n) "இணையவழி விளையாட்டு வழங்கி" என்பது ,இணையவழி
விளையாட்டுகள் வழங்குநரால் நிறுவப்பட்ட அல்லது பராமரிக்கப்பட்ட பெருமுகக்
கணினி (Mainframe computer) அல்லது கணினிகளின் தொகுப்பு எதுவும்,
இணையவழி விளையாட்டிலிருந்து எழும் பரிவர்த்தனைகளை ஏற்றுக்கொள்கிறது,
செயலாக்குகிறது, சேமிக்கிறது, சரிபார்க்கிறது, மேலும் இது இணையவழி
விளையாட்டின் முழு அமைப்பையும் நிர்வகிக்கிறது, கண்காணிக்கிறது மற்றும்
கட்டுப்படுத்துகிறது என்று பொருள்படும்;
20(o) "கட்டண நுழைவாயில்" என்பது, வங்கி அல்லது கடன் அட்டை
கணக்குத் தகவலை நேரடியாக வழங்காமல் வணிகர்களுக்கு வங்கிகள்
அல்லது நிதி நிறுவனங்களுக்கிடையே பயனர் ஒருவரின் நிதி பரிமாற்றத்தை
அங்கீகரிக்கும் சேவை என்று பொருள்படும்;
(p) "வகுத்துரைக்கப்பட்டது" என்பது இந்தச் சட்டத்தின் கீழ்
செய்யப்பட்ட விதிகளால் வகுத்துரைக்கப்பட்டது என்று பொருள்படும்;
(q) "ஒழுங்குமுறைவிதிகள் " என்பது 5 ஆம் பிரிவின் கீழ் அதிகார
அமைப்பினால் செய்யப்பட்ட ஒழுங்குமுறைவிதிகள் என்று பொருள்படும்;
(r) "இணைப்புப்பட்டியல்" என்பது இந்தச் சட்டத்துடன் இணைந்த
இணைப்புப் பட்டியல் என்று பொருள்படும்;
(s) "மாநிலம்" என்பது தமிழ்நாடு மாநிலம் என்று பொருள்படும்;
(t) இதில் பயன்படுத்தப்பட்ட மற்றும் இந்தச் சட்டத்தில் பொருள்வரையறை
மையச்சட்டம் 21/2000.
செய்யப்படாத, ஆனால் 2000-ஆம் ஆண்டு தகவல் தொழில்நுட்பச் சட்டத்தில்
பொருள் வரையறை செய்யப்பட்டுள்ள சொற்கள் மற்றும் சொற்றொடர்கள்
முறையே, இந்தச் சட்டத்தில் அதற்கென குறித்தொதுக்கப்பட்ட அதே பொருளைக்
கொண்டிருத்தல் வேண்டும்.
தமிழ்நாடு இணையவழி
அத்தியாயம்-II.
விளையாட்டு அதிகார
தமிழ்நாடு இணையவழி விளையாட்டு அதிகார அமைப்பு.
அமைப்பினை
நிறுவுதல்.
3. (1) அரசானது, அறிவிக்கையின் மூலம், இந்தச் சட்டத்தின் கீழ் அதற்கு
வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களை செயலுறுத்தவும், அதற்கு குறித்தொதுக்கப்பட்ட
செயற்பணிகளை நிறைவேற்றவும் அறிவிக்கையில் குறிப்பிடலாகும் அத்தகைய
தேதியிலிருந்து, தமிழ்நாடு இணையவழி விளையாட்டு அதிகார அமைப்பு என்று
அழைக்கப்படும் ஓர் அதிகார அமைப்பை நிறுவலாம்.
(2) அதிகார அமைப்பானது அரசால் பெயர்குறிப்பிடப்படும் பின்வரும்
உறுப்பினர்களைக் கொண்டிருத்தல் வேண்டும், அதாவது:-
(a) அரசு தலைமைச் செயலாளர் படிநிலைக்கு குறையாத
பதவியிலிருந்து ஓய்வு பெற்ற ஓர் அலுவலர்-தலைமையாளர்;
(b) காவல்துறை தலைவர் படிநிலைக்குக் குறையாத
பதவியிலிருந்து ஓய்வு பெற்ற ஓர் அலுவலர்-உறுப்பினர்;
(c) தகவல் தொழில் நுட்பத்துறையில் புலமை வாய்ந்த
ஒருவர்-உறுப்பினர்;
(d) சிறப்புமிக்க உளவியலாளர் ஒருவர்- உறுப்பினர்;
(e) இணையவழி விளையாட்டில் புலமை வாய்ந்த
ஒருவர்-உறுப்பினர்.
(3) அதிகார அமைப்பின் தலைமையாளர் மற்றும் உறுப்பினர்கள்,
அரசால் தீர்மானிக்கப்படலாகும் அத்தகைய ஊதியம் மற்றும் படித்தொகைகளைப்
பெறுதல் வேண்டும்.
(4) அரசானது அதிகார அமைப்பின், ஆலோசனையுடன் இந்தச்
சட்டத்தின் கீழ் அதன் அதிகாரங்களையும் செயற்பணிகளையும் திறமையுடன்
நிறைவேற்றுவதற்காக, தேவையெனக் கருதலாகும், அத்தகைய அலுவலர்கள்
மற்றும் பணியாளர்களை அதிகார அமைப்பிற்கு அளிக்கலாம்.
21அதிகார அமைப்பின் 4. (1) அதிகார அமைப்பானது பின்வரும் செயற்பணிகளை நிறைவேற்றுதல்
செயற்பணிகள்.
வேண்டும், அதாவது:-
(a) இணையவழி விளையாட்டுகளை ஒழுங்குமுறைப்படுத்துதல்;
(b) உள்ளூர் இணையவழி விளையாட்டு வழங்குநர்களுக்கு பதிவுச்
சான்றிதழை வழங்குதல்;
(c) இணைப்புப் பட்டியலில் சேர்ப்பதற்காக, இணையவழி வாய்ப்பு
விளையாட்டுக்களை அடையாளம் காணுதல் மற்றும் அரசிற்கு பரிந்துரைத்தல்;
(d) இம்மாநிலத்தில் இணையவழி விளையாட்டுகள் வழங்குநர்களின்
செயற்பணிகளை மேற்பார்வையிடுதல்;
(e) இணையவழி விளையாட்டு வழங்குநர்களின் செயல்பாடுகள்
தொடர்பான தகவல் மற்றும் தரவினை சேகரித்தல் மற்றும் பராமரித்தல்;
(f) இந்தச் சட்டத்தின் நோக்கங்களுக்காக, தேவையெனக்
கருதப்படும் போது, 2000ஆம் ஆண்டு தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின்படி
உரிய நடவடிக்கை எடுக்குமாறு அரசை வேண்டுதல்;
(g) இணையவழி விளையாட்டு வழங்குநர் எவருக்கும் எதிராக
பெறப்பட்ட குறைகள் அல்லது புகார்களை முடிவு செய்தல்;
(h) வகுத்துரைக்கப்படலாகும் அத்தகைய முறையில் அரசுக்கு
காலமுறை அறிக்கைகளை அனுப்புதல்;
(i) இணையவழி விளையாட்டு தொடர்பான பொருட்பாடு எதன்மீதும்
அரசுக்கு ஆலோசனை கூறுதல்; மற்றும்
(j) வகுத்துரைக்கப்படலாகும் அத்தகைய பிற செயற்பணிகளை
நிறைவேற்றுதல்.
(2) இந்தச் சட்டத்தின் கீழ் அதன் கடமைகளை திறம்பட
நிறைவேற்றுவதற்கும், அதன் செயற்பணிகளை புரிவதற்கும், அதிகார
அமைப்பானது அதன் உறுப்பினர்களுக்கிடையேயிருந்து, அது பொருத்தமெனக்
கருதலாகும் அத்தகைய எண்ணிக்கையிலான குழுக்களை அமைத்துருவாக்கலாம்.
ஒழுங்குமுறை
5. (1) அதிகார அமைப்பானது, அறிவிக்கையின் மூலம், அரசின் முன்
விதிகளைச்
ஒப்புதலுடன், இந்தச் சட்டத்தின் வகைமுறைகளை நிறைவேற்றுவதற்காக,
செய்வதற்கான
இந்தச் சட்டத்தின் வகைமுறைகளுடன் அல்லது அதன் கீழ் உருவாக்கப்பட்ட
அதிகாரம்.
விதிகளுடன் இணங்கி ஒழுங்குமுறை விதிகளை ஏற்படுத்தலாம்.
(2) குறிப்பாக மற்றும் மேற்கூறிய அதிகாரத்தின் பொதுப்பாங்கிற்கு
பாதகமின்றி,-
(a) இணையவழி விளையாட்டுகளை விளையாடுவது தொடர்பான
கால வரம்பு, பண வரம்பு, வயது வரம்பு அல்லது அத்தகைய பிற கட்டுப்பாடுகள்;
மற்றும்
(b) அதன் செயல்பாடுகளை ஒழுங்குமுறைப்படுத்துவதற்கான
செயல்முறை போன்றவற்றிற்காக அத்தகைய ஒழுங்குமுறைவிதிகளை வழங்கலாம்.
22தகவலைப்
6. (1) அதிகார அமைப்பு அல்லது அதனால் அதிகாரமளிக்கப்பட்ட
பெறுவதற்கான
அலுவலர் எவரும், இந்தச் சட்டத்தின் மூலம் அல்லது அதன் கீழ் அறிவிக்கப்பட்ட
அதிகாரம்.
செயற்பணிகளை நிறைவேற்றுவதற்கு, இணையவழி விளையாட்டு வழங்குநர்
அல்லது இணையவழி விளையாட்டினை விளையாடுபவர் எவரிடமிருந்தும்
தகவல் எதனையும் பெறுவதற்கு தேவைப்படலாகும் அத்தகைய நடவடிக்கைகளை
எடுக்கலாம்.
(2) அதிகார அமைப்பானது, தேவையெனக் கருதலாகும் அத்தகைய
தகவல்களை வழங்குவதற்கு, இணையவழி விளையாட்டு வழங்குநர் எவரையுமோ
அல்லது இணையவழி விளையாட்டு இணையதளம் எதனில் பொறுப்பு
வகிக்கக்கூடிய நபர் எவரையுமோ, இணையவழி விளையாட்டு தொடர்பான
நடவடிக்கை எதையும் மேற்கொள்ளக்கூடிய நிறுவனத்தையோ அல்லது
வளாகத்தையோ கோருவதற்கு ஆணை பிறப்பிக்கலாம்.
(3) அதிகார அமைப்பானது, இந்தச் சட்டத்தின்படி அதன்
செயற்பாடுகள் எதனையும் நிறைவேற்றுகையில் பின்வரும் பொருட்பாடுகளைப்
பொறுத்த வகையில், 1908 ஆம் ஆண்டு உரிமையியல் நடைமுறை தொகுப்புச்
மையச் சட்டம் V/1908.
சட்டத்தின் கீழ் வழக்கு ஒன்றை விசாரிக்கும் போது உரிமையியல் நீதிமனறத்திடம்
உற்றமைந்துள்ள அதே அதிகாரங்களைக் கொண்டிருக்கும், அதாவது:-
(a) தரப்பினர் எவருக்கும் அழைப்பாணை விடுத்தல் மற்றும்
நபரெவரின் வருகையை உறுதி செய்தல்;
(b) உறுதிமொழியின் மீது வாய்மொழி சாட்சியம் அல்லது
பிரமாணப் பத்திரத்தின் மீது எழுதப்பட்ட சாட்சியத்தினைப் பெறுதல்;
(c) ஆவணம் எதனின் கண்டுபிடிப்பினையும் சமர்ப்பித்தலையும்
கோருதல்;
(d) நீதிமன்றம் அல்லது அலுவலகம் எதனிடமிருந்தும் பொது
பதிவுரு எதனையுமோ அல்லது அதன் நகல்களையுமோ கோருதல்;
(e) சாட்சிகள் அல்லது ஆவணங்களை விசாரணை செய்வதற்கு
அழைப்பாணை விடுத்தல்; மற்றும்
(f) வகுத்துரைக்கப்படலாகும் பிற பொருட்பாடு எதுவும்.
அத்தியாயம்-III.
பொதுவான தடைகள்.
இணையவழி 7. (1) இணையவழி சூதாட்டமானது தடை செய்யப்பட்டுள்ளது.
சூதாட்டத்தையும், (2) இணைப்புப் பட்டியலில் குறிப்பிடப்பட்டுள்ள இணையவழி வாய்ப்பு
இணையவழி வாய்ப்பு விளையாட்டுகளை பணம் அல்லது பிற பந்தயப் பொருட்களைக் கொண்டு
விளையாட்டுகளையும் விளையாடுவது தடை செய்யப்பட்டுள்ளது.
தடை செய்தல்.
(3) இணையவழி விளையாட்டை வழங்குநர் எவரும், இணையவழி
சூதாட்டங்களின் சேவையினை வழங்கவோ அல்லது இணைப்புப் பட்டியலில்
குறிப்பிடப்பட்டுள்ள இணையவழி வாய்ப்பு விளையாட்டு எதனையும் பணம்
அல்லது பிற பந்தயப் பொருட்கள் கொண்டு விளையாடுவதையோ அல்லது
ஒழுங்குமுறை விதிகளை மீறுகின்ற பிற இணையவழி விளையாட்டு எதனையும்
விளையாடுவதையோ எந்த வடிவிலும் அனுமதித்தல் கூடாது.
விளம்பரப்படுத்துதலை 8. இணையவழி சூதாட்டத்தில் ஈடுபடுவதற்கோ அல்லது இணைப்புப்
தடை செய்தல்.
பட்டியலில் குறிப்பிடப்பட்டுள்ள இணையவழி வாய்ப்பு விளையாட்டு எதனையும்
பணம் அல்லது பிற பந்தயப் பொருட்களைக் கொண்டு விளையாடுவதற்கோ
இம்மாநிலத்தில், நபர் எவரையும் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ
ஊக்குவிக்கின்ற அல்லது தூண்டுகின்ற எதனையும் மின்னணு தொடர்பு
வழிமுறைகள் உள்ளடங்களாக ஊடகம் எதிலும் நபர் எவரும் விளம்பரம் செய்தலோ
அல்லது செய்யப்படுதலோ கூடாது.
23நிதி பரிமாற்றத்திற்கான 9. எந்தவொரு வங்கியும், நிதி நிறுவனமும் அல்லது கட்டண
தடை.
நுழைவுவாயில் வழங்குநரும், இணையவழி சூதாட்டம் எதற்காகவும் அல்லது
இணைப்புப் பட்டியலில் குறிப்பிடப்பட்டுள்ள இணையவழி வாய்ப்பு விளையாட்டு
எதற்காகவும் பணம் செலுத்துவதற்கான எந்தவொரு பரிவர்த்தனை அல்லது நிதி
அங்கீகாரத்திலும் ஈடுபடுதல் கூடாது.
அத்தியாயம்-IV.
உள்ளூர் இணையவழி விளையாட்டுகள் வழங்குநர்களுக்கான ஒழுங்குமுறை விதிகள்.
உள்ளூர் இணையவழி 10. (1) குறிப்பிடப்பட்ட நாளன்றும் அது முதற்கொண்டும், உள்ளூர்
விளையாட்டுகள் இணையவழி விளையாட்டுகள் வழங்குநரானவர் அதிகார அமைப்பிடமிருந்து
வழங்குநர்களின் தக்கவாறு பெறப்பட்ட பதிவுச்சான்றிதழுக்கு இணங்கியவாறன்றி, எந்தவொரு
பதிவு.
இணையவழி விளையாட்டினையும் நடத்துவதற்கு சேவை எதனையும் வழங்குதல்
கூடாது.
(2) இணையவழி விளையாட்டு எதனையும் நடத்துவதற்காக, சேவை
எதனையும் வழங்குகின்ற உள்ளூர் இணையவழி விளையாட்டுகள் வழங்குநர்
ஒவ்வொருவரும் குறிப்பிடப்பட்ட நாளுக்கு உடனடியாக முன்னர், இந்தச் சட்டத்தின்
III-ஆம் அத்தியாயத்தில் அடங்கியுள்ள பொதுவான தடைகளுக்குட்பட்டு,
குறிப்பிடப்பட்ட நாளிலிருந்து தொண்ணூறு நாட்களுக்கு மிகாதவொரு கால
அளவிற்கு, அத்தகைய சேவையினை வழங்குவதைத் தொடரலாம்:
வரம்புரையாக, அத்தகைய உள்ளூர் இணையவழி விளையாட்டுகள்
வழங்குநரானவர், குறிப்பிடப்பட்ட நாளிலிருந்து முப்பது நாட்கள் கால அளவிற்குள்
இந்தப் பிரிவின்படி பதிவு செய்தலுக்கான விண்ணப்பம் செய்தல் வேண்டும்.
(3) பதிவு செய்வதற்கான விண்ணப்பம் ஒவ்வொன்றும்,
வகுத்துரைக்கப்படலாகும் அத்தகைய கட்டணத்துடன் அத்தகைய படிவத்தில்
அதிகார அமைப்பிடம் செய்யப்படுதல் வேண்டும்.
(4) (3)-ஆம் உட்பிரிவின் கீழ் விண்ணப்பம் ஒன்று பெறப்பட்டதன்
பேரில், அதிகார அமைப்பானது, அது தேவையெனக் கருதலாகும் அத்தகைய
விசாரணையை மேற்கொண்டதன் பின்பு, பதிவுச் சான்றிதழை வழங்கலாம்
அல்லது வழங்க மறுக்கலாம்:
வரம்புரையாக, விண்ணப்பதாரருக்கு கேட்பதற்கான நியாயமான
வாய்ப்பொன்று வழங்கப்பட்டாலன்றி, பதிவுச் சான்றிதழை வழங்குவதற்கான
விண்ணப்பமானது மறுக்கப்படுதலாகாது.
(5) ஒவ்வொரு பதிவுச் சான்றிதழும், பின்வரும் வரையறைகளுக்குட்பட்டு,
வகுத்துரைக்கப்படலாகிறவாறான அத்தகைய படிவத்தில் வழங்கப்படுதல்
வேண்டும். அதாவது:-
(a) இணையவழி விளையாட்டுகள் வழங்குநரானவர், இணையவழி
சூதாட்டங்களின் சேவை எதனையும் வழங்கவோ அல்லது இணைப்புப்பட்டியலில்
குறிப்பிடப்பட்டுள்ள இணையவழி வாய்ப்பு விளையாட்டு எதனையும் பணம் அல்லது
பிற பந்தயப் பொருட்களைக் கொண்டு விளையாடுவதையோ அனுமதித்தல்
கூடாது;
(b) இணையவழி விளையாட்டுகள் வழங்குநரானவர்,
ஒழுங்குமுறைவிதிகளை மீறுகின்ற இணையவழி விளையாட்டு எதையும்
விளையாட அனுமதிக்கவோ அல்லது அனுமதித்தலை ஏற்படுத்தவோ கூடாது.
(6) (5) ஆம் உட்பிரிவின் படி வழங்கப்பட்ட பதிவுச் சான்றிதழானது
மூன்று ஆண்டுகள் கால அளவிற்கு செல்லுந்தன்மை கொண்டதாக இருத்தல்
வேண்டும்.
24பதிவுச் சான்றிதழை
11. (1) (a) இந்தச் சட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட பதிவுச் சான்றிதழ்
இடைநிறுத்தம் செய்தல் பொய்யாக அல்லது மோசடியின் முலம் பெறப்பட்டது;
மற்றும் திரும்பப்
(b) பதிவுச் சான்றிதழை வைத்திருப்பவர், வழங்கப்பட்ட பதிவுச்
பெறுதல்.
சான்றிதழுக்குட்பட்டு, அதன் நிபந்தனைகளுக்கு இணங்கத் தவறிவிட்டார்;
அல்லது
(c) பதிவுச் சான்றிதழை வைத்திருப்பவர், இந்தச் சட்டம், விதிகள்
அல்லது ஒழுங்குமுறைவிதிகள் ஆகியவற்றின் வகைமுறைகள் எவற்றையும்
மீறிவிட்டார், என இதன்பொருட்டு அதனிடம் ஏற்படுத்தப்பட்ட குறிப்பின் பேரிலோ
அல்லது வேறுவிதமாகவோ அதிகார அமைப்பானது மனநிறைவடைந்தால்,
பின்னர், பதிவுச் சான்றிதழை வைத்திருப்பவர் பொறுப்பேற்கக்கூடிய பிற
நடவடிக்கைகள் எதற்கும் குந்தகமின்றி, அதிகார அமைப்பானது, அவருக்கு
காரணம் காட்டுவதற்கான வாய்ப்பொன்றை வழங்கிய பின்பு, ஆணையொன்றின்
மூலம் அதற்கான காரணங்களைக் கூறி பதிவுச் சான்றிதழை திரும்பப் பெறலாம்.
(2) (1) ஆம் உட்பிரிவில், அடங்கியிருப்பது எது எவ்வாறிருப்பினும்,
இணையவழி விளையாட்டு வழங்குநருக்கு வழங்கப்பட்ட பதிவுச்சான்றிதழானது
இடைநிறுத்தம் செய்யப்பட வேண்டும் என்று அதிகார அமைப்பு
முதன்நோக்கத்தினை கொண்டிருக்குமிடத்து, அதிகார அமைப்பானது,
சான்றிதழை திரும்பப் பெறுவதற்கு முன்னர் எந்த நேரத்திலும், எழுத்துப்பூர்வமாக
காரணங்களைப் பதிவு செய்யலாம்.
மேல்முறையீடு. 12. (1) 11 ஆம் பிரிவின் கீழ் பதிவுச் சான்றிதழை திரும்பப்பெறும் அல்லது
இடைநிறுத்தம் செய்யும் அதிகார அமைப்பின் ஆணையொன்றின் மூலம்
பாதிக்கப்பட்ட நபர் எவரும், ஆணையானது அவருக்குத் தெரிவிக்கப்பட்ட
நாளிலிருந்து பதினைந்து நாட்களுக்குள் மேல்முறையீட்டு அதிகார அமைப்பிடம்,
மேல்முறையீடு செய்யலாம்:
வரம்புரையாக, அந்த கால அளவிற்குள் மேல்முறையீட்டினை தாக்கல்
செய்யாததற்குப் போதுமான காரணம் இருப்பதாக அதிகார அமைப்பானது
மனநிறைவடைந்தால், அது கூறப்பட்ட பதினைந்து நாட்கள் காலவதியான பின்பும்
மேல்முறையீட்டினை ஏற்றுக்கொள்ளலாம்.
(2) மேல்முறையீட்டு அதிகார அமைப்பானது, மேல்முறையீட்டாளருக்கு
கேட்பதற்கான நியாயமான வாய்ப்பொன்று வழங்கப்பட்ட பின்பு, மேல்முறையீடு
பெறப்பட்ட தேதியிலிருந்து ஒரு மாத கால அளவினை மீறாத நேர்வு எதிலும்,
முடிந்தவரையில் அதனை முடிவு செய்தல் வேண்டும்.
மேல்முறையீட்டு அதிகார
13. (1) அரசானது, அறிவிக்கையின் மூலம் தலைமையாளர் மற்றும் இரண்டு
அமைப்பினை
பிற உறுப்பினர்களுக்கு மிகாதவர்களைக் கொண்டிருக்கும் மேல்முறையீட்டு
நிறுவுதல்.
அதிகார அமைப்பு ஒன்றினை நிறுவலாம்.
(2) அவர் உயர்நீதிமன்றத்தின் ஓய்வு பெற்ற நீதிபதியாகவோ அல்லது
உயர்நீதிமன்றத்தின் நீதிபதியாவதற்கு தகுதியுடைய நபராகவோ இருந்தாலன்றி
மேல்முறையீட்டு அதிகார அமைப்பின் தலைமையாளராக நியமிக்கப்படுவதற்கு
நபரொருவர் தகுதியுடையவராகார்.
(3) மேல்முறையீட்டு அதிகார அமைப்பின் உறுப்பினர்களின்
நியமனத்திற்கான தகுதிகளானது வகுத்துரைக்கப்படலாகிறவாறு இருத்தல்
வேண்டும்.
(4) மேல்முறையீட்டு அதிகார அமைப்பின் தலைமையாளர் மற்றும்
உறுப்பினர்கள், அரசால் தீர்மானிக்கப்படலாகும் அத்தகைய ஊதியம் மற்றும்
படித்தொகைகளைப் பெறுதல் வேண்டும்.
25(5) அரசானது மேல்முறையீட்டு அதிகார அமைப்பின், ஆலோசனையுடன்
இந்தச் சட்டத்தின் கீழ் அதன் அதிகாரங்களையும் செயற்பணிகளையும்
திறமையுடன் நிறைவேற்றுவதற்காக, தேவையெனக் கருதலாகும், அத்தகைய
அலுவலர்கள் மற்றும் பணியாளர்களை மேல்முறையீட்டு அதிகார அமைப்பிற்கு
அளிக்கலாம்.
(6) இந்தச் சட்டத்தின் வகைமுறைகளுக்குட்பட்டு, மேல்முறையீட்டு
அதிகார அமைப்பானது அதன் சொந்த நடைமுறையை ஒழுங்குமுறைப்படுத்தலாம்.
அத்தியாயம்-V.
உள்ளூர் அல்லாத இணையவழி விளையாட்டு வழங்குநர்களுக்கான ஒழுங்குமுறை விதிகள்.
கட்டுப்பாடுகள்.
14. (1) இம்மாநிலத்தில், உள்ளூர் அல்லாத இணையவழி விளையாட்டு
வழங்குநர் எவரும்,-
(a) இணையவழி சூதாட்ட சேவை எதனையும் வழங்குதல்;
(b) இணைப்புப்பட்டியலில் குறிப்பிடப்பட்டுள்ள இணையவழி
வாய்ப்பு விளையாட்டு எதையும் பணம் அல்லது பிற பந்தைய பொருட்களுடன்
விளையாட அனுமதித்தல்; அல்லது
(c) விதிமுறைகளுக்கு மாறாக பிற இணையவழி விளையாட்டு
எதையும் விளையாட அனுமதித்தல் கூடாது.
(2) உள்ளூர் அல்லாத இணையவழி விளையாட்டுகள் வழங்குநர்,
அவர் உரிய கவனத்துடன் செயல்பட்டிருந்தால் அல்லது அந்த நோக்கத்திற்காக
பயனரின் புவியியல் இருப்பிடத்தின் அடிப்படையில் இணைய உள்ளடக்கத்தினை
தடை செய்தலை இம்மாநிலத்தில் வழங்கியிருந்தால் அவர், (1) ஆம் உட்பிரிவை
மீறியதாகக் கருதப்படமாட்டார்.
(3) (2) ஆம் உட்பிரிவின் நோக்கத்திக்காக, உள்ளூர் அல்லாத
இணையவழி விளையாட்டு வழங்குநர், பின் வருவனவற்றைக் கொண்டிருந்தால்
உரிய கவனத்துடன் செயல்பட்டதாகக் கருதப்படுவார்,-
(a) இம்மாநிலத்தில் இயல்ரீதியாக (physically present)
இருக்கும் வாடிக்கையாளர்களுக்கு இணையவழி சூதாட்டத்தையும் சில
இணையவழி விளையாட்டுகள் விளையாடுவதையும் இம்மாநிலம் தடைசெய்கிறது
என வருங்கால வாடிக்கையாளர்களுக்கு அறிவித்தல்;
(b) இம்மாநிலத்தில் வாடிக்கையாளர்கள் இயல்ரீதியாக இருந்தால்,
வாடிக்கையாளர்கள் சேவையைப் பயன்படுத்தக் கூடாது என்ற வெளிப்படையான
நிபந்தனையுடன் ஒப்பந்தங்களில் நுழைதல்;
(c) இம்மாநிலத்தில் வாடிக்கையாளர்கள் இயல்ரீதியாக இல்லை
என்பதை உறுதிப்படுத்த போதுமான தனிப்பட்ட விவரங்களை வழங்குதல்;
(d) தொடர்புடைய வாடிக்கையாளர்களின் கணக்குகள்
திறக்கப்பட்ட போதும் வாடிக்கையாளர்களுக்கு சேவை வழங்கப்பட்ட காலம்
முழுவதும் இம்மாநிலத்தில் வாடிக்கையாளர்கள் இயல்ரீதியாக இல்லை என்பதை
குறிப்பிடும் தரவுகளை அளித்தல்; மற்றும்
(e) இம்மாநிலத்தில் இயல்ரீதியாக இருக்கும் நபர் எவரும்
இணையவழி சூதாட்ட சேவையையோ அல்லது 7ஆம் பிரிவின்கீழ் தடை
செய்யப்பட்ட இணையவழி வாய்ப்பு விளையாட்டையோ அணுக முடியாது என்பதை
உறுதிப்படுத்த மற்ற அனைத்து நியாயமான நடவடிக்கைகளையும் எடுத்திருத்தல்.
26கட்டுப்பாடுகளுக்கு
15. (1) 14 ஆம் பிரிவில் குறிப்பிடப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் எதற்கும்
இணங்காததை
இணங்கத் தவறிய உள்ளூர் அல்லாத விளையாட்டு வழங்குநர்கள்,
கையாளுவதற்கான வகுத்துரைக்கப்படலாகும் அத்தகைய காலத்திற்குள் பதிலை வழங்குவதற்காக,
நடைமுறை.
அதிகார அமைப்பால் வகுத்துரைக்கப்படலாகும் அத்தகைய படிவத்திலும்,
முறையிலும் காரணம் கேட்கும் அறிவிப்பு ஒன்றை வழங்குதல் வேண்டும். பதில்
எதுவும் பெறப்படவில்லை அல்லது பெறப்பட்ட பதில் திருப்திகரமாக இல்லை
எனில், அதிகார அமைப்பானது (2) மற்றும் (3) ஆம் உட்பிரிவுகளுக்குட்பட்டு
நடவடிக்கையைத் தொடரலாம்.
(2) அதிகார அமைப்பானது, உள்ளூர் அல்லாத இணையவழி
விளையாட்டு வழங்குநரால் வழங்கப்படும் சேவையை இந்த மாநிலத்தில் உள்ள
நபர்கள் அணுகுவதைத் தடைசெய்ய, 2000 ஆம் ஆண்டு தகவல் தொழில்நுட்ப மையச்சட்டம் 21/2000.
சட்டத்தின் 69-A ஆம் பிரிவின் கீழ் அதிகாரத்தைப் செயலுறுத்துவதற்கு,
நேர்விற்கேற்ப மைய அரசு அல்லது இதன்பொருட்டு மைய அரசால்
அதிகாரமளிக்கப்பட்ட தனி அலுவலரிடம் கோருவதற்கு அரசிடம் பரிந்துரை
செய்தல் வேண்டும்:
வரம்புரையாக,-
(a) எழுத்துப் பூர்வமாகப் பதிவு செய்ய வேண்டிய
காரணங்களுக்காக, அதிகார அமைப்பின் பரிந்துரையின்படி செயல்பட அரசு
மறுக்கலாம்; அல்லது
(b) அதிகார அமைப்பின் பரிந்துரையை அரசு ஏற்கும் பட்சத்தில்,
பரிந்துரை பெறப்பட்ட நாளிலிருந்து பதினைந்து நாட்களுக்குள் மைய அரசிடம்
சாதாரணமாக கோரிக்கையை செய்தல் வேண்டும்.
(3) (2) ஆம் உட்பிரிவின் கீழ் அதிகார அமைப்பினால் செய்யப்பட்ட
பரிந்துரையின் நகல், தொடர்புடைய உள்ளூர் அல்லாத இணையவழி விளையாட்டு
வழங்குநருக்கு வழங்கப்படுதல் வேண்டும்.
அத்தியாயம்-VI.
குற்றச் செயல்கள் மற்றும் தண்டனைகள்
7, 8, 10 மற்றும் 16. (1) இணையவழி சூதாட்டத்தில் ஈடுபடுகின்ற அல்லது
14-ஆம் பிரிவுகளை இணைப்புப்பட்டியலில் குறிப்பிடப்பட்டுள்ள இணையவழி வாய்ப்பு விளையாட்டு
மீறுதலுக்கான எதனையும் விளையாடுகின்ற பணம் அல்லது பிற பந்தையப் பொருட்கள்
தண்டனைகள் கொண்டு 7-ஆம் பிரிவினை மீறுகின்ற அல்லது ஒழுங்குமுறைவிதிகளை
மீறுகின்றவாறு பிற இணையவழி விளையாட்டு எதனையும் விளையாடுகின்ற
நபர் எவரும், மூன்று மாதங்கள் வரை நீட்டிக்கலாகும் ஒரு காலஅளவிற்கு சிறை
தண்டனை அல்லது ஐந்தாயிரம் ரூபாய் வரை நீட்டிக்கலாகும் அபராதம் அல்லது
இரண்டும் விதித்துத் தண்டிக்கப்படுதல் வேண்டும்.
(2) 8 ஆம் பிரிவுக்கு முரணாக ஊடகம் எதிலும் விளம்பரத்தினை
ஏற்படுத்துகின்ற அல்லது ஏற்படுத்தக் காரணமாக இருக்கின்ற நபர் எவரும்,
ஓர் ஆண்டு வரை நீட்டிக்கலாகும் ஒரு காலஅளவிற்கு சிறை தண்டனை
அல்லது ஐந்து லட்சம் ரூபாய் வரை நீட்டிக்கலாகும் அபராதம் அல்லது இரண்டும்
விதித்துத் தண்டிக்கப்படுதல் வேண்டும்.
(3) இணையவழி சூதாட்ட சேவை அல்லது இணைப்புப் பட்டியலில்
குறிப்பிடப்பட்டுள்ள இணையவழி வாய்ப்பு விளையாட்டு எதையும் பணம்
அல்லது பிற பந்தையப் பொருட்கள் கொண்டு வழங்குகின்ற நபர் எவரும்
அல்லது 10-ஆம் பிரிவின் (1), (2) அல்லது (5)-ஆம் உட்பிரிவின் அல்லது
14-ஆம் பிரிவின் வகைமுறைகளை மீறுகின்ற நபர் எவரும், மூன்று ஆண்டுகள்
வரை நீட்டிக்கலாகும் ஒரு காலஅளவிற்கு சிறை தண்டனை அல்லது பத்து
லட்சம் ரூபாய் வரை நீட்டிக்கலாகும் அபராதம் அல்லது இரண்டும் விதித்துத்
தண்டிக்கப்படுதல் வேண்டும்.
27வரம்புரையாக, மைய அரசு அல்லது இதன்பொருட்டு
மைய அரசால் அதிகாரமளிக்கப்பட்ட தனி அலுவலரால்,
மையச்சட்டம் 21/2000. 2000-ஆம் ஆண்டு தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின்
69-Aஆம் பிரிவின்படி அதிகாரமானது செயல்படுத்தப்பட்டால் மட்டுமே
14-ஆம் பிரிவினை மீறியதற்காக உள்ளூர் அல்லாத இணையவழி
விளையாட்டுகளின் வழங்குநரானவர் தண்டிக்கப்படுதல் வேண்டும்.
(4) (a) (2)-ஆம் உட்பிரிவின் கீழ் குற்றம் ஒன்றிற்காக தண்டிக்கப்
பெற்ற நபர் எவரும், அதே வகைமுறையின் கீழ் மீண்டும் ஒரு குற்றத்திற்காக
தண்டிக்கப்பட்டால், அவர் இரண்டாவது மற்றும் அடுத்தடுத்த ஒவ்வொரு
குற்றத்திற்கும் ஓர் ஆண்டுக்குக் குறையாத, ஆனால் மூன்று ஆண்டுகள் வரை
நீட்டிக்கலாகும் ஒரு காலஅளவிற்கு சிறை தண்டனை விதித்துத் தண்டிக்கப்படுதல்
வேண்டும் மற்றும் ஐந்து லட்சம் ரூபாய்க்குக் குறையாத, ஆனால் பத்து லட்ச
ரூபாய் வரை நீட்டிக்கலாகும் அபராதமும் சேர்த்து விதிக்கப்படுதல் வேண்டும்.
(b) (3)-ஆம் உட்பிரிவின் கீழ் குற்றம் ஒன்றிற்காக தண்டிக்கப்
பெற்ற நபர் எவரும், அதே வகைமுறையின் கீழ் மீண்டும் ஒரு குற்றத்திற்காக
தண்டிக்கப்பட்டால், அவர் இரண்டாவது மற்றும் அடுத்தடுத்த ஒவ்வொரு
குற்றத்திற்கும் மூன்று ஆண்டுகளுக்குக் குறையாத, ஆனால் ஐந்து ஆண்டுகள்
வரை நீட்டிக்கலாகும் ஒரு காலஅளவிற்கு சிறை தண்டனை விதித்துத்
தண்டிக்கப்படுதல் வேண்டும் மற்றும் பத்து லட்சம் ரூபாய்க்குக் குறையாத,
ஆனால் இருபது லட்சம் ரூபாய் வரை நீட்டிக்கலாகும் அபராதமும் சேர்த்து
விதிக்கப்படுதல் வேண்டும்.
குற்றங்களை
17. நீதிமன்றம் எதுவும், இந்தச் சட்டம், இதன் கீழ் செய்யப்பட்ட விதிகள்
விசாரணைக்கு
அல்லது ஒழுங்குமுறைவிதிகளின் படி தண்டிக்கப்படலாகும் குற்றம் எதனையும்,
எடுத்துக் கொள்ளுதல். அதிகார அமைப்பினால் இதன் பொருட்டு அதிகாரமளிக்கப் பெற்ற அலுவலர்
எவராலும் செய்யப்பட்ட எழுத்துப் பூர்வமான முறையீட்டினாலன்றி, விசாரணைக்கு
எடுத்துக் கொள்ளுதல் கூடாது.
குற்றங்களை சட்டப்படி
18. (1) இதன்பொருட்டு அறிவிக்கையின் மூலம் அரசால் சிறப்பு அதிகாரம்
சமரசம் செய்து
அளிக்கப்பட்ட அலுவலர் எவரும், அத்தகைய குற்றத்தின் தீர்வு உடன்பாட்டினால்
கொள்வதற்கான
16-ஆம் பிரிவின் (1)-ஆம் உட்பிரிவின் கீழ் ஒரு குற்றத்தை செய்த நபர்
அதிகாரம்.
எவரிடமிருந்தும் அத்தகைய குற்றத்திற்காக குறிப்பிடப்பட்டுள்ள அபராதத்
தொகையின் அதிகபட்ச அளவிற்கு மேற்படாத ஆனால் கூறப்பட்ட தொகையின்
ஐம்பது விழுக்காட்டிற்கு குறையாத ஒரு மொத்த தொகையினை ஏற்றுக்
கொள்ளலாம்.
(2) அத்தகைய அலுவலருக்கு, அத்தகைய மொத்த தொகையினை
செலுத்தியதன் பெயரில், குற்றஞ்சாட்டப்பட்ட நபர் சிறைக்காவலில் இருந்தால்,
அவர் விடுவிக்கப்படுதல் வேண்டும் மற்றும் அவருக்கு எதிராக, அத்தகைய
குற்றம் தொடர்பாக மேல் நடவடிக்கைகள் எதுவும் எடுக்கப்படுதலாகாது.
(3) (1)-ஆம் உட்பிரிவின் கீழ் குற்றம் ஒன்றை சட்டப்படி சமரசம்
செய்துகொள்ள, நபரெவருக்கும் ஒரேஒரு முறை மட்டுமே அனுமதியானது
வழங்கப்படுதல் வேண்டும்.
நிறுமங்களால்
19. (1) இந்தச் சட்டத்தின்படியான குற்றம் நிறுமம் ஒன்றினால்
செய்யப்படும்
செய்யப்பட்டிருக்கிறவிடத்து, அந்தக் குற்றம் செய்யப்பட்ட நேரத்தில், அந்த
குற்றங்கள்.
நிறுமத்தின் அலுவலை நடத்தி வருவதற்கு, அந்த நிறுமத்தின் பொறுப்பைக்
கொண்டிருந்தவரும், அதற்குப் பொறுப்பாயிருந்தவருமான நபர் ஒவ்வொருவரும்,
அதோடு அந்த நிறுமமும், அந்தக் குற்றத்தினைச் செய்ததாகக் கருதப்படுதலும்,
அதற்கிணங்க நடவடிக்கை எடுக்கப்படுதலும், தண்டிக்கப்படுதலும் வேண்டும்:
வரம்புரையாக, இந்த உட்பிரிவில் அடங்கியுள்ள எதுவும், அந்தக் குற்றம்
தமக்குத் தெரியாமல் செய்யப்பட்டதாக அல்லது அத்தகைய குற்றம் செய்யப்படாமல்
தடுக்க தாம் உரிய முயற்சி அனைத்தையும் மேற்கொண்டதாக நபர் எவரும்
மெய்பிப்பாரானால், அவரை தண்டனை எதற்கும் உள்ளாக்குதலாகாது.
28(2) (1) ஆம் உட்பிரிவில் என்ன அடங்கியிருந்த போதிலும், இச்சட்டத்தின்
கீழ் குற்றம் எதுவும் ஒரு நிறுமத்தினால் செய்யப்பட்டிருந்து, அந்நிறுமத்தின்
மையச் சட்டம் 18/2013.
இயக்குநர், மேலாளர், செயலாளர் அல்லது 2013-ஆம் ஆண்டு நிறுமங்கள்
சட்டத்தில் வரையறை செய்யப்பட்டவாறான முக்கிய நிர்வாக பணியாளர்கள்
உள்ளடங்கலான பிற அலுவலர் எவரின் இசைவுடனோ, மறைமுக ஆதரவுடனோ
அந்தக் குற்றம் செய்யப்பட்டிருக்கிறது அல்லது அவர்பாலுள்ள கவனக்குறைவு
எதற்கும் சாட்டத்தக்கதாக இருக்கிறது என்று மெய்ப்பிக்கப்படுகிறவிடத்து, அந்த
இயக்குநர், மேலாளர், செயலாளர் அல்லது முக்கிய நிர்வாக பணியாளர்கள்
உள்ளடங்கலான பிற அலுவலர் அந்தக் குற்றதைச் செய்திருப்பதாகக்
கருதப்படுதலும், அதற்கிணங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுத் தண்டிக்கப்படுதலும்
வேண்டும்.
விளக்கம்.- இந்தப் பிரிவின் நோக்கங்களுக்காக-
(a) 'நிறுமம்' என்பது கூட்டமைப்பு எதுவும், என்று பொருள்படும் மற்றும் ஒரு
நிறுவகத்தை அல்லது பிற தனிநபர்களின் கழகத்தை உள்ளடக்கும்; மற்றும்
(b) 'இயக்குநர்' என்பது, ஒரு நிறுவகத்தைப் பொறுத்தவரையில், அந்த
நிறுவகத்திலுள்ள ஒரு கூட்டாளி என்று பொருள்படும்.
அத்தியாயம்- VII.
பல்வகை.
அதிகார அமைப்பு மற்றும் மையச் சட்டம் XLV/1860. 20. இந்தச் சட்டத்தின் வகை முறைகள் எதனையும் ஒட்டி செயல்படுகின்ற
மேல்முறையீட்டு அல்லது செயல்படுவதாகப் புலப்படுகின்றபோது, அதிகார அமைப்பு
அதிகார அமைப்பின் மற்றும் மேல்முறையீட்டு அதிகார அமைப்பின் தலைமையாளர், ஒவ்வொரு
தலைமையாளர், உறுப்பினர்களும், அதிகார அமைப்பு மற்றும் மேல்முறையீட்டு அதிகார அமைப்பின்
உறுப்பினர்கள், அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள், இந்திய தண்டனைத் தொகுப்புச் சட்டத்தின்
அலுவலர்கள் மற்றும் 21-ஆம் பிரிவின் பொருளின்படி, பொது ஊழியர்களாகக் கருதப்படுதல்
பணியாளர்கள் வேண்டும்.
முதலானோர் பொது
ஊழியர்கள் ஆவர்.
நல்ல எண்ணத்தில் 21. இந்தச் சட்டம், விதிகள் அல்லது ஒழுங்குமுறை விதிகளின்படி, அவரது
எடுக்கப்பட்ட அலுவலக செயல்பாடுகளை நிறைவேற்ற அல்லது அவரது அதிகாரங்களை
நடவடிக்கைக்குப் பயன்படுத்த நல்ல எண்ணத்தில் செய்யப்பட்ட அல்லது செய்யக் கருதப்பட்ட
பாதுகாப்பு.
செயல் எதற்காகவும், பொது ஊழியர்கள் எவருக்கும் எதிராக, உரிமை வழக்கு,
குற்ற வழக்கு அல்லது பிற சட்ட நடவடிக்கை எதுவும் தொடரப்படுதல் ஆகாது.
இந்தச் சட்டம், பிற 22. இந்தச் சட்டத்தின் வகைமுறைகளானது, கூடுதலாக இருக்குமேயன்றி,
சட்டங்களின் அப்போதைக்கு நடைமுறையில் உள்ள பிற சட்டத்தின் வகைமுறைகள் எதனின்
மதிப்பினை மதிப்பினையும் குறைப்பதில்லை.
குறைப்பதில்லை.
இணையவழி வாய்ப்பு 23. (1) இந்த சட்டத்தின் நோக்கங்களுக்காக, இணைப்புப்பட்டியலில்
விளையாட்டு எனக் குறிப்பிடப்பட்டுள்ள இணையவழி விளையாட்டு எதுவும் ஓர் இணையவழி வாய்ப்பு
கருதப்படுதல் மற்றும் விளையாட்டு எனக் கருதப்படுதல் வேண்டும்.
இணைப்புப் பட்டியலை (2) அரசு அறிவிப்பின் மூலம், அதிகார அமைப்பின் பரிந்துரையின்
திருத்துவதற்கான பேரில், இணைப்புப் பட்டியலில் இணையவழி விளையாட்டு எதையும் தவிர்க்கலாம்
அதிகாரம்.
அல்லது சேர்க்கலாம் மற்றும் அத்தகைய அறிவிக்கையை வெளியிடும்போது,
இணைப்புப் பட்டியல் அதற்கேற்ப திருத்தப்பட்டதாகக் கருதப்படுதல் வேண்டும்.
29விதிகளைச் 24. (1) அரசானது, இந்தச் சட்டத்தின் நோக்கங்களை நிறைவேற்றுவதற்கான
செய்வதற்கான விதிகளைச் செய்யலாம்.
அதிகாரம்.
(2) (a) இந்தச் சட்டத்தின்படி செய்யப்பட்ட விதிகள் அனைத்தும் தமிழ்நாடு அரசிதழில் வெளியிடப்படுதல் வேண்டும் மற்றும் அவை குறிப்பிட்டதொரு நாளில் நடைமுறைக்கு வருதல் வேண்டுமென வெளிப்படையாகத் தெரிவிக்கப்பட்டிருந்தாலன்றி அவை அவ்வாறு வெளியிடப்பட்ட நாளிலேயே நடைமுறைக்கு வருதல் வேண்டும்.
(b) இந்தச் சட்டத்தின்படி பிறப்பிக்கப்பட்ட அறிவிக்கைகள் அனைத்தும், அவை குறிப்பிட்டதொரு நாளில் நடைமுறைக்கு வருதல் வேண்டும் என்று சொல்லப்பட்டிருந்தாலன்றி அவை அவ்வாறு வெளியிடப்பட்ட நாளிலேயே நடைமுறைக்கு வருதல் வேண்டும்.
(3) இந்தச் சட்டத்தின்படி செய்யப்பட்ட விதி அல்லது பிறப்பிக்கப்பட்ட அறிவிக்கை அல்லது ஆணை ஒவ்வொன்றும் அது அவ்வாறு செய்யப்பட்ட அல்லது பிறப்பிக்கப்பட்ட பின்னர், கூடிய விரைவில் சட்டமன்றப் பேரவையில் வைக்கப்படுதல் வேண்டும் மற்றும் அது அவ்வாறு வைக்கப்பட்ட கூட்டத்தொடர் அல்லது அதனையடுத்த கூட்டத்தொடர் முடிவடைவதற்கு முன்னர் அத்தகைய விதி அல்லது அறிவிக்கை அல்லது ஆணை எதிலும் மாறுதல் எதனையும் சட்டமன்றப் பேரவையானது செய்யுமாயின் அல்லது அத்தகைய விதி அல்லது அறிவிக்கை அல்லது ஆணை எதுவும் செய்யப்படுதலோ அல்லது பிறப்பிக்கப்படுதலோ கூடாது என சட்டமன்றப் பேரவை முடிவு செய்யுமாயின், அந்த விதி அல்லது அறிவிக்கை அல்லது ஆணையானது அதன்பின்னர் அவ்வாறு மாற்றியமைக்கப்பட்ட வடிவத்திலேயே நடைமுறைக்கு வருதல் வேண்டும் அல்லது நேர்விற்கேற்ப, நடைமுறைக்கு வராது போதல் வேண்டும்; எனினும் அவ்வாறான மாறுதல் அல்லது நீக்கம் எதுவும், அந்த விதி அல்லது அறிவிக்கை அல்லது ஆணையின்படி முன்னரே செய்யப்பட்ட செயல் ஏதொன்றின் செல்லுந்தன்மைக்கும் குந்தகமின்றி இருத்தல் வேண்டும்.
இடர்ப்பாடுகளை
25. இந்தச் சட்டத்தின் வகைமுறைகள் எதனையும் செயற்படுத்துவதில்
நீக்குவதற்கான
இடர்ப்பாடு ஏதேனும் எழுமானால் அரசானது, தமிழ்நாடு அரசிதழில்
அதிகாரம்.
வெளியிடப்படும் ஆணையின் வாயிலாக, அந்த இடர்ப்பாட்டை நீக்குவதற்குத்
தேவைப்படலாகும் அல்லது உகந்ததாக அதற்குத் தோன்றுகிற, இந்தச் சட்டத்தின்
வகைமுறைகளுக்கு முரணாக இல்லாத அத்தகைய வகைமுறைகளைச்
செய்யலாம்.
வரம்புரையாக, இந்தச் சட்டம் தொடங்கிய தேதியிலிருந்து
இரண்டாண்டுக்கால அளவு முடிவடைந்த பின்னர் அத்தகைய ஆணை எதுவும்
பிறப்பிக்கப்படுதல் கூடாது.
தமிழ்நாடு அவசரச் நீக்கறவு. 26. 2022-ஆம் ஆண்டு தமிழ்நாடு இணையவழி சூதாட்டத்தைத் தடை
சட்டம் 4/2022.
செய்தல் மற்றும் இணையவழி விளையாட்டுகளை ஒழுங்குமுறைப்படுத்துதல்
அவசரச் சட்டமானது இதன்மூலம் நீக்கறவு செய்யப்படுகிறது.
30இணைப்புப்பட்டியல்.
[23 ஆம் பிரிவைக் காண்க]
இணையவழி வாய்ப்பு விளையாட்டுகள்.
(1) ரம்மி
(2) போக்கர்
(ஆளுநரின் ஆணைப்படி)
ச. கோபி ரவிகுமார், அரசுச் செயலாளர் (சட்டமியற்றல்), சட்டத் துறை.
(தமிழாக்கம்)
வெ. அரசகுமார், உதவி இயக்குநர், சட்ட (தமிழ்ப்பிரிவு)த் துறை.
தமிழ்நாடு அரசுக்காக சென்னை எழுதுபொருள் மற்றும் அச்சுத் துறை இயக்குநரால்
அச்சிடப்பட்டு வெளியிடப்பட்டது.