Servants of Knowledge
Tamil Nadu Gazette · Government of Tamil Nadu

Notifications or Orders of specific character or of particular interest to the public issued by Secretariat Departments

Published 24 May 2023

Type
Ordinary
Gazette no.
21
Part
Part II
Notifications
ADIDRAVIDAR AND TRIBAL WELFARE DEPARTMENT - Adi-Dravidar and Tribal Welfare
Section
Section 1
Identifier
in.gazette.tamilnadu.2023-05-24.Ordinary_21_Part-II_Section-1
Languages
English, Tamil
Published at
Original source ↗

©

GOVERNMENT OF TAMIL NADU

2023

[Regd. No. TN/CCN/467/2012-14.

[R. Dis. No. 197/2009.

[Price: Rs. 1.60 Paise.

TAMIL NADU GOVERNMENT GAZETTE PUBLISHED BY AUTHORITY

No. 21] CHENNAI, WEDNESDAY, MAY 24, 2023 Vaikasi 10, Sobakiruthu, Thiruvalluvar Aandu–2054

Part II—Section 1

Notifications or Orders of specific character or of particular interest to the

public issued by Secretariat Departments.

NOTIFICATIONS BY GOVERNMENT

CONTENTS Pages.

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத் துறை

ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலம் - தமிழ்நாடு தூய்மைப் பணியாளர் நல வாரியம் - புதிய துணைத் தலைவர், அலுவல் சார்ந்த மற்றும் அலுவல் சாரா உறுப்பினர்களை நியமனம் செய்தல் - திருத்தியமைத்தல் - ஆணை - வெளியிடப்படுகிறது. .. .. 34-36

[33]

DTP—II-1—2134 TAMIL NADU GOVERNMENT GAZETTE [Part II—Sec. 1

NOTIFICATIONS BY GOVERNMENT

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத் துறை

No.II(1)/ADTW/16/2023.

[ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலம் - தமிழ்நாடு தூய்மைப் பணியாளர் நல வாரியம் - புதிய துணைத் தலைவர், அலுவல் சார்ந்த மற்றும் அலுவல் சாரா உறுப்பினர்களை நியமனம் செய்தல் - திருத்தியமைத்தல் - ஆணை வெளியிடப்படுகிறது.] கீழ்க்்கண்ட அரசாணை வெளியிடப்படுகிறது:-

[அரசாணை (நிலை) எண். 61, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல (ஆதிந.6)த் துறை, 3 மே 2023, சித்திரை 20, சோபகிருது, திருவள்ளுவர் ஆண்டு-2054.]

படிக்கப்பட்டது:

1. அரசாணை (நிலை) எண்.71, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத் (ஆதிந6) துறை, நாள்: 11.06.2007 2. அரசாணை (நிலை) எண்.30, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத் (ஆதிந6) துறை, நாள்: 25.02.2021 3. மேலாண்மை இயக்குநர் தாட்கோ, கடித ந.க.எண். S3/7969/2010, நாள்: 22.09.2021 மற்றும் 02.02.2023 ஆணை:- எண். 61, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல ( ஆதிந6 )த், துறை, 3 மே 2023.

மேலே முதலாவதாகப் படிக்கப்பட்ட அரசாணையில், தூய்மைப் பணிபுரிவோருக்கு கல்வி, சமூக மற்றும் பொருளாதார மேம்பாட்டிற்கென அரசு செயல்படுத்தும் பல்வேறு திட்டங்களின் செயலாக்கத்தை கண்காணித்து, அவற்றின் முன்னேற்றத்தை உறுதி செய்யவும், மாண்புமிகு ஆதிதிராவிடர் நலத் துறை அமைச்சர் அவர்களை தலைவராகவும், 13 அலுவல் சார்ந்த உறுப்பினர்கள் மற்றும் 11 அலுவல் சாரா உறுப்பினர்களைக் கொண்டும் "தூய்மைப் பணிபுரிவோர் நல வாரியம்" அமைத்து ஆணை வெளியிடப்பட்டது.

2. மேலே இரண்டாவதாகப் படிக்கப்பட்ட அரசாணையில், மாண்புமிகு ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் அவர்களை தலைவராகவும், திரு. கு. கோவிந்தராஜ், இ.ஆ.ப., (ஓய்வு) அவர்களை உபதலைவராகவும், 13 அலுவல் சார்ந்த உறுப்பினர்கள் மற்றும் 14 அலுவல் சாரா உறுப்பினர்களைக் கொண்டும் இவ்வாரியம் திருத்தியமைக்கப்பட்டு ஆணை வெளியிடப்பட்டது.

3. மேலே, மூன்றாவதாகப் படிக்கப்பட்ட மேலாண்மை இயக்குநர் தாட்கோ அவர்கள் தமது கடிதங்களில், மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்கள் தலைமையில் 08.07.2021 அன்று நடைபெற்ற ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை ஆய்வுக் கூட்டத்தில், தூய்மைப் பணிபுரிவோர் நல வாரியத்தில் புதிய துணைத் தலைவர் மற்றும் உறுப்பினர்களை நியமித்து வாரியம் திருத்தியமைக்கப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டதன் அடிப்படையில் 14 அலுவல் சார்ந்த உறுப்பினர்கள் மற்றும் 12 அலுவல் சாரா உறுப்பினர்களைக் கொண்டும் திருத்தியமைக்கலாம் எனப் பரிந்துரை செய்துள்ளார்.

4. மேலாண்மை இயக்குநர் தாட்கோ, அவர்களின் பரிந்துரையை அரசு கவனமுடன் பரிசீலனை செய்து, மாண்புமிகு ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் அவர்களை தலைவராகவும், திருமதி செ. கனிமொழி பத்மநாபன், கோவை மாவட்டம் அவர்களை உப தலைவராகவும், 14 புதிய அலுவல் சார்ந்த உறுப்பினர்கள் மற்றும் 12 அலுவல் சாரா உறுப்பினர்களைக் கொண்டும் இவ்வாரியம் கீழ்க்கண்டவாறு திருத்தியமைக்க அரசு உத்தேசித்து அவ்வாறே ஆணையிடுகிறது:-

அலுவல் சார்ந்த உறுப்பினர்கள்:

அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் / முதன்மைச் செயலாளர் / செயலாளர்.

1. ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை.

2. நிதித்துறை

3. நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை

4. ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை

5. தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை

6. பள்ளிக் கல்வித் துறை

7. மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை

8. வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை9. இயக்குநர் / ஆணையர், ஆதிதிராவிடர் நலத் துறை 10. இயக்குநர், பழங்குடியினர் நலத் துறை 11. மேலாண்மை இயக்குநர், தாட்கோ - உறுப்பினர் செயலர். 12. இயக்குநர் / ஆணையர் பேரூராட்சிகள் May 24, 2023] TAMIL NADU GOVERNMENT GAZETTE 35 13. இயக்குநர் / ஆணையர், நகராட்சி நிர்வாகம், சென்னை.

14. இயக்குநர் / ஆணையர், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை

அலுவல் சாரா உறுப்பினர்கள்:

உறுப்பினர்

1. திரு. பூ. மூக்கையா, த/பெ. பூலான்,

எண்.23, பெரியார் நகர்,

தெற்கு தெரு,

பாளையங்கோட்டை,

திருநெல்வேலி மாவட்டம்.

உறுப்பினர்

2. திரு. செ. ரமேஷ், த/பெ. செல்வராஜ், 6/134, சுக்காம்பட்டி, அரூர் (அஞ்சல்), மோகனூர் வட்டம், நாமக்கல் மாவட்டம்

உறுப்பினர்

3. திரு. ரெ. விஜயசங்கர்,

த/பெ. ரெங்கன், நெ.1/303, மாதவன் நகர் - கிழக்கு, அய்யனடைப்பு, கோரம்பள்ளம், தூத்துக்குடி மாவட்டம்.

4. திரு. க. குருநாதன்,

உறுப்பினர்

உதவி காவல் ஆய்வாளர் (ஓய்வு) எம்.ஐ.ஜீ--156, தமிழ் பல்கலைக் கழக வளாகம், சிந்தாமணி, மருத்துவக் கல்லூரி-வல்லம் சாலை, தஞ்சாவூர் மாவட்டம்.

உறுப்பினர்

5. திரு. தே. கண்ணன், த/பெ. தேவராஜ், எண்.14, அருந்ததியர் தெரு, விழுப்புரம் டவுன், விழுப்புரம் மாவட்டம்.

6. திரு. பெ. தங்கவேல்,

உறுப்பினர்

துப்புரவு பணியாளர் முன்னேற்ற சங்கம், மதுரை மாவட்ட தலைவர், த/பெ. பெருமாள், நெ.26, கே. பிளாக், தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பு, மேலவாசல், மதுரை மாவட்டம்.

7. திரு. கு. மகாலிங்கம்,

உறுப்பினர்

த/பெ. ப. குருசாமி, நெ. 2/310, பாண்டியன் நகர், வீரபாண்டி, திருமால்புரம் அஞ்சல், மதுரை மாவட்டம்.

8. திரு. நா. சேகர்,

உறுப்பினர்

வங்கி முதுநிலை மேலாளர் (ஓய்வு) த/பெ. நாராயணன், நெ. 1572, ஆனந்த் நகர், எண்.1, டோல்கேட், பிச்சாண்டார் கோவில் அஞ்சல், திருச்சி மாவட்டம்.

36 TAMIL NADU GOVERNMENT GAZETTE [Part II—Sec. 1

உறுப்பினர்

9. திரு. ஆர்.பி. மோகன், த/பெ. பெருமாள், 110, தென்றல் வீதி, அருள்வேலவன் நகர், ஈரோடு மாவட்டம்.

உறுப்பினர்

10. திரு. சி. சீனிவாசன், த/பெ. சின்னபையன், க.எண்.19, என்.எஸ்.கே. தெரு, கலைவாணர் நகர், பாடி, சென்னை-50.

11. திரு. G.K. ராஜன் (எ) கோவிந்தராஜன்,

உறுப்பினர்

த/பெ. G. கன்னியப்பன், கதவு எண்.158, 6-வது பிளாக், பெரியார் நகர், புளியந்தோப்பு, (TNSCB), சென்னை-12

உறுப்பினர்

12. திரு. தி. அரிஷ்குமார், த/பெ. - அ. தியாகு, 6/665, கணபதி நகர், ராஜாஜிபுரம், திருவள்ளூர் மாவட்டம்.

5. மேலே, பத்தி 4-இல் புதியதாக நியமிக்கப்பட்டுள்ள துணைத் தலைவர் மற்றும் அலுவல் சாரா உறுப்பினர்களின் பதவி காலம் மூன்று ஆண்டுகள் ஆகும். இவ்வாரியத்தின் உறுப்பினர் செயலராக மேலாண்மை இயக்குநர் தாட்கோ அவர்களே தொடர்ந்து செயல்படுவார். மேலும் இவ்வாரியத்தின் துணைத் தலைவர் மற்றும் உறுப்பினர்கள் அவ்வப்போது நடைமுறையில் இருக்கும் அரசு விதிகளுக்குட்பட்டு பயணப்படி மற்றும் தினப்படி பெற உரிமை அளிக்கப்படுகிறது. துணைத் தலைவர் மற்றும் அலுவல் சாரா உறுப்பினர்களுக்கு பயணப்படி / தினப்படி பெற்று வழங்க மேலாண்மை இயக்குநர், தாட்கோ அவர்களுக்கு அதிகாரம் வழங்கப்படுகிறது.

5. மேலே, பத்தி 5-இல் அனுமதியளிக்கப்பட்ட செலவினம் கீழ்காணும் கணக்குத் தலைப்பின் கீழ் பற்று வைக்கப்பட வேண்டும்.

"2225 ஆதிதிராவிடர், பழற்குடியினர் மற்றும் ஏனைய பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் நலன்.01. ஆதிதிராவிடர் நலன் - 001 நெறிப்படுத்துதலும் நிருவாகமும் - AC தலைமையிடப் பணியாளர்கள் - ஆதிதிராவிடர் பழங்குடியினர் நலத்துறை - 304 பயணச் செலவுகள் - 01 சுற்றுப் பயணப்படிகள் (IFHRMS) த.தொ.கு. 2225 01 001 AC 30401) என்ற தலைப்பில் பற்று வைக்கப்பட வேண்டும்.

7. இவ்வரசாணைக்கு அரசாணை (நிலை) எண்.1177, நிதி (படிகள்-1) நாள் 19.09.1997-இன்படி நிதித்துறையின் இசைவு தேவையில்லை.

(ஆளுநரின் ஆணைப்படி)

க. லட்சுமி பிரியா, அரசு செயலாளர்.

PRINTED AND PUBLISHED BY THE DIRECTOR OF STATIONERY AND PRINTING, CHENNAI ON BEHALF OF THE GOVERNMENT OF TAMIL NADU

Cite this issue. Tamil Nadu Gazette, Government of Tamil Nadu, 24 May 2023. Indian Gazettes, https://egazette.servantsofknowledge.in/details/in.gazette.tamilnadu.2023-05-24.Ordinary_21_Part-II_Section-1/. Archive identifier in.gazette.tamilnadu.2023-05-24.Ordinary_21_Part-II_Section-1.