Servants of Knowledge
Tamil Nadu Gazette · Government of Tamil Nadu

Notifications or Orders of interest to a section of the public issued by Secretariat Departments

Published 24 May 2023

Type
Ordinary
Gazette no.
21
Part
Part II
Notifications
ENVIRONMENT AND CLIMATE CHANGE DEPARTMENT - Notification
Section
Section 2-T-Sup
Identifier
in.gazette.tamilnadu.2023-05-24.Ordinary_21_Part-II_Section-2-T-Sup
Languages
English, Tamil
Published at
Original source ↗

© தமிழ்நாடு அரசு 2023

[Regd. No. TN/CCN/467/2012-14. [R. Dis. No. 197/2009. [விலை: ரூ. 4.00 காசு

தமிழ்நாடு அரசிதழ் ஆணையின்படி வெளியிடப்பட்டது.

எண் 21] சென்னை, புதன்கிழமை, மே 24, 2023 வைகாசி 10, சோபகிருது, திருவள்ளுவர் ஆண்டு–2054

பகுதி II—பிரிவு 2 இன் இணைப்பு

அரசாங்க அறிவிப்புகளின் தமிழ் மொழிபெயர்ப்புகள்

சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறை

அறிவிக்கை

[அரசாணை (நிலை) எண். 193, சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத்(F.R.5)துறை, 7 நவம்பர் 2022.] அட்டவணையில் குறிப்பிடப்பட்டுள்ளவாறு, கிருஷ்ணகிரி மாவட்டத்தின் அஞ்செட்டி வட்டம், தருமபுரி மாவட்டத்தின் பென்னாகரம் மற்றும் பாலக்கோடு வட்டங்களின் காப்பு வனப்பகுதிகள், தமிழ்நாட்டின் காவிரி வடக்கு வனவிலங்குகள் சரணாலயத்திற்கும், கருநாடக மாநிலத்திலுள்ள காவிரி வனவிலங்குகள் சரணாலயத்திற்கும் இடையில் அமைந்துள்ளது. இப்பகுதி போதுமான சுற்றுச்சூழல், விலங்கின மற்றும் தாவர முக்கியத்துவம் பெற்றிருப்பதுடன், வனவிலங்குகளையும், அவற்றின் வாழ்விடங்களையும் பாதுகாப்பதற்கும், மனிதர்களுக்கும் யானைகளுக்குமிடையே ஏற்படும் மோதலைக் குறைப்பதற்கும் வனவிலங்குகள் சரணாலயமாக இதனை நிருவகிக்க வேண்டியது அவசியமாகும் என்பதாலும்,

இது 686.406 சதுர கிலோ மீட்டர் பரப்பளவைக் கொண்டு, தென்னிந்தியாவில் ஒரு முக்கியமான யானை வாழ்விடமாகவும், காவிரி ஆற்றைச் சார்ந்துள்ள ஏராளமான நதிசார் வாழ்வினங்களுக்கு இன்றியமையாததாகவும் அமைந்துள்ளது என்பதாலும், அட்டவணையில் குறிப்பிடப்பட்டுள்ள காப்பு வனங்கள், காவிரி வடிநிலத்தின் ஒரு தனித்துவமான சூழலியல் அமைப்பை உருவாக்குவதுடன், ஸ்டான்லி நீர்த்தேக்கத்தில் நுழைவதற்கு முன்பு காவிரி ஆற்றின் கடைப்பகுதி வனங்களைக் கொண்ட தாழ்வான பகுதிகளாக அமைவதாலும்,

அட்டவணையில் குறிப்பிடப்பட்டுள்ள பகுதியானது, காவிரி ஆற்றின் இரு கரைகளிலும் 50 கிலோமீட்டருக்கும் அதிகமான நீளத்திற்கு ஒரே மாதிரியான சட்டத் தகுதிநிலையையும் பாதுகாப்பையும் கொண்டுள்ள, பாதுகாக்கப்பட்ட பகுதிகளின் ஒரு பெரிய, தொடர்ச்சியான தொடரமைப்பாகும். இந்நிலப்பரப்பு, நீலகிரி உயிர்க்கோளக் காப்பகத்தின் தொடர்ச்சி கருநாடகாவின் மாதேசுவரன் மலை விலங்குகள் சரணாலயம், பில்லிகிரி ரங்கசுவாமி கோயில் புலிகள் காப்பகம், தமிழ்நாட்டின் சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் மற்றும் ஈரோடு வனக்கோட்டம் வழியாக மேற்கொண்டும் நீலகிரி உயிர்க்கோளக் காப்பகம் வரையில் நீள்வதாலும்,

அட்டவணையில் குறிப்பிடப்பட்டுள்ள பகுதி பரப்பளவில் பெரியதாக இருப்பதாலும், நந்திமங்கலம்-உலிபண்டா யானை வழித்தடம், கோவைப்பள்ளம்-அனேபிட்டஹல்லா யானை வழித்தடம் என இரண்டு முக்கியமான யானை வழித்தடங்கள் அடையாளம் காணப்பட்டிருப்பதாலும்,

விவர அட்டவணையில் குறிப்பிடப்பட்டுள்ள பகுதி, 35 வகைப் பாலூட்டிகளும், 238 வகைக்கு குறையாத பறவையினங்களும் பல்லுயிர்ப் பெருக்கத்திற்கு உதவும் வகையில் அமைந்திருப்பதாலும், லெயித் இலகு ஓட்டு ஆமைகள் (Leith's Soft-shelled turtles), சாம்பல் நிற அணில் (Grizzled Giant Squirrel), ஆற்று நீர் நாய் (Smooth-coated Otter), சதுப்புநில முதலை (Marsh Crocodile), நாற்கொம்பு கலைமான் (Four-horned Antelope), சிறிய மீன் கழுகு (Lesser Fish Eagle) போன்ற சில விலங்குகள், பெரும்பாலும் காவிரி நதி மற்றும் அதன் ஆற்றங்கரை வனச்சூழலை மட்டுமே சார்ந்திருப்பதுடன் அருகி வரும் உயிரினங்களாகப் பட்டியலிடப்பட்டிருப்பதால் அவற்றின் வசிப்பிடத்தைப் பாதுகாக்கும் முழுமுயற்சிகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டியிருப்பதாலும், இதற்கு அருகாமையில் அடுத்தடுத்து அமைந்துள்ள கருநாடகாவின் மாதேசுவரன் மலை வனவிலங்குகள் சரணாலயம், பன்னர்கட்டா தேசிய பூங்கா போன்ற பகுதிகளில் புலிகள் வெற்றிகரமாகப் பாதுகாக்கப்பட்டதைத் தொடர்ந்து, கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக உள்நாட்டில் அருகி வந்த புலிகளின் எண்ணிக்கை அதிகரிக்கத் தொடங்கியுள்ளன. இந்த சரணாலயத்தின் வனப்பகுதிகள் அதே நிலப்பரப்பின் ஒரு பகுதியாகும். மேலும், பாதுகாப்பு மற்றும் வாழ்விட மேம்பாட்டின் வாயிலாக இரை ஆதாரத்தை மீட்டெடுக்க இயலும் என்பதுடன், இப்பகுதி கடந்த காலத்தில் இருந்தது போல், மீண்டும் புலிகளின் பெருக்கத்தை ஊக்குவித்து சிறுத்தை மற்றும் அருகி வரும் ஏனைய பெரிய மாமிச உண்ணிகளின் பாதுகாப்பையும் மேம்படுத்தும் என்பதாலும், DTP-II-2-(21) (T Sup)—1

[ 1 ]2 எனவே, தற்போது 1972 ஆம் ஆண்டு வனவிலங்கு (பாதுகாப்பு) சட்டத்தின் (மத்தியச் சட்டம் 53/1972) 26-A-ஆம் பிரிவைச் சேர்ந்த (1) உட்பிரிவின் (b) பகுதியில் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களைக் கொண்டு, தமிழ்நாட்டு ஆளுநர் அவர்கள் தமிழ்நாடு 1882- ஆம் ஆண்டு வனச்சட்டத்தின் (தமிழ்நாடு சட்டம் 5/1882) கீழ், காப்பு வனங்களாக அறிவிக்கப்பட்டு கீழ்க்காணும் விவர அட்டவணையில் குறிப்பிடப்பட்டுள்ள எல்லைகளைக் கொண்ட பகுதி, வனவிலங்கு மற்றும் அதன் சுற்றுச்சூழலை பாதுகாத்து, உருவாக்கி மேம்படுத்தும் நோக்கத்திற்கான போதிய சூழலியல், விலங்கின, தாவர, இயற்கை மற்றும் விலங்கியல் முக்கியத்துவம் கொண்டிருப்பதாக கருதியுள்ளதால், கீழ்க்காணும் விவர அட்டவணையில் குறிப்பிடப்பட்டுள்ள பகுதிகளை, 08.11.2022 ஆம் நாளிலிருந்து செயலுக்கு வரும் வகையில் சரணாலயமாக இதனால் அறிவிக்கிறார்.

விவர அட்டவணை

(1) மாவட்டங்களின் பெயர்: கிருஷ்ணகிரி மற்றும் தருமபுரி

(2) வட்டங்களின் பெயர்: (a) கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள அஞ்செட்டி வட்டம்

(b) தருமபுரி மாவட்டத்திலுள்ள பென்னாகரம் மற்றும் பாலக்கோடு வட்டங்கள்

(3) சரணாலயத்தின் பெயர்: காவிரி தெற்கு வனவிலங்கு சரணாலயம்

(4) சரணாலயத்தின் பரப்பளவு: 68,640.613 எக்டேர் அல்லது

686.406 சதுர கிலோமீட்டர்

காப்பு வனம் குறித்த விவரங்கள்

தொ. எண். காப்பு வனத்தின் பெயர் காப்பு வனத்தின் மொத்தப் பரப்பளவு ( எக்டேரில்) சாலைகள் நீங்கலாக சரணாலயத்தின் பரப்பளவு ( எக்டேரில்)
( 1 ) ( 2 ) ( 3 ) ( 4 )
I கிருஷ்ணகிரி மாவட்டம்:
1 கெஸ்தூர் காப்புவனம் 5,855.460 5,855.460
2 கெஸ்தூர் காப்பு வனத்துடன் சேர்க்கப்பட்டது 145.680 145.680
3 கெஸ்தூர் விரிவாக்க காப்பு வனம் 2,574.210 2,574.210
4 மஞ்சுகொண்டப்பள்ளி காப்புவனம் 365.485 365.485
5 பிலிக்கல் காப்புவனம் 5,433.310 5,429.440
6 உரிகம் காப்புவனம் 3,231.010 3,221.608
7 மல்லஹள்ளி காப்புவனம் 4,034.001 4,034.001
8 தக்கட்டி காப்பு வனம் 4,341.470 4,341.361
9 உலிபண்டா காப்புவனம் 3,241.530 3,238.680
10 உலிபண்டா விரிவாக்க காப்பு வனம் 62.580 62.580
11 உப்ராணி காப்பு வனம் 4,831.950 4,830.069
12 நாட்றம்பாளையம் காப்பு வனம் 4,986.941 4,981.590
13 பிலிகுண்டுலு காப்பு வன விரிவாக்கம்-II 58.980 58.980
14 பிலிகுண்டுலு காப்பு வனம் 6,092.138 6,088.281
15 ஒட்டப்பட்டிகாப்பு வனம் 2,557.620 2,554.840
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மொத்தப் பரப்பளவு 47,812.365 47,782.265
II தருமபுரி மாவட்டம்
16 ஒட்டபட்டி (பகுதி) 3,046.170 3,046.170
17 கூட்டிராயன் (பகுதி) 6,666.860 6,666.860
18 மொரப்பூர் காப்புவனம் 7,816.190 7,816.190
19 காசர்குலி காப்பு வனம் 3,290.940 3,284.608
20 காசர்குலி விரிவாக்க காப்பு வனம் 44.520 44.520
தருமபுரி மாவட்டத்தில் மொத்தப் பரப்பளவு 20,864.680 20,858.348
சரணாலயத்தின் மொத்த பரப்பளவு 68,677.045 68,640.613
3

நாற்புற எல்லை விவரம்

மேற்கு: கருநாடகம்-தமிழ்நாடு மாநிலங்களுக்கு இடையேயான எல்லையில் உள்ள கெஸ்தூர் விரிவாக்க காப்பு வனத்தின் வடக்குப் புள்ளியிலிருந்து தொடங்கி, காவிரி - தெற்கு வனவிலங்குகள் சரணாலயத்தின் எல்லையானது பொதுவாக, கெஸ்தூர் காப்பு வனத்தின் மேற்கு எல்லை வழியாக தெற்கு நோக்கிச்சென்று, கெஸ்தூர் காப்பு வனத்தின் தென்மேற்கு மூலையில் காவிரி நதி வரை செல்கிறது.

தெற்கு: அங்கிருந்து, கெஸ்தூர் காப்பு வனத்தின் தென்மேற்குப் பகுதியில் தொடங்கும் எல்லையானது, காவிரி ஆற்றின் வழியே கிழக்கு நோக்கியும், கிருஷ்ணகிரி மாவட்டத்தின் மாநிலங்களுக்கு இடையேயான எல்லை வழியே கெஸ்தூர் காப்புவனம், பிலிக்கல் காப்புவனம், மல்லஹள்ளி காப்புவனம், நாட்றம்பாளையம் காப்பு வனம் ஒட்டப்பட்டி காப்புவனத்தின் தெற்கு எல்லை வழியாகவும் சென்று, கிருஷ்ணகிரி மாவட்டத்தின் ஒட்டப்பட்டி காப்பு வனத்தில் தொடங்கி தருமபுரி மாவட்டத்தின் ஒட்டப்பட்டி காப்பு வனம் வரை செல்லும் ஆனேபெத்தமடுவு ஓடை வரை செல்கிறது. பிறகு அவ்வெல்லையானது, தென்கிழக்கே தருமபுரி மாவட்டத்தின் ஒட்டப்பட்டி காப்புவனத்தில் ஆனைபெத்தமடுவு ஓடை வழியாகச் சென்று அவ்வோடை தருமபுரி மாவட்டத்தின் ஒட்டப்பட்டி காப்புவனத்திலுள்ள சின்னார் ஆற்றில் இணையும் வரை செல்கிறது.

கிழக்கு: அங்கிருந்து, எல்லை பொதுவாக வடகிழக்கு திசையில் தருமபுரி மாவட்டத்தின் ஒட்டப்பட்டி காப்பு வனம் வழியாக சின்னார் ஆற்றின் வழியே ஒட்டப்பட்டி, கூட்டிராயன், மொரப்பூர், காசர்குலி காப்புவனத்தின் கிழக்கு எல்லைகள் வழியாகச் சென்று, காசர்குலி காப்பு வனத்தின் வடகிழக்கு இறுதிப்பகுதியிலிருந்து, எல்லையானது வடமேற்குத் திசையில் திரும்பி காசர்குலி காப்பு வனம், காசர்குலி காப்பு வன விரிவாக்கம் ஆகியவற்றின் வட எல்லை காவிரி வடக்கு வனவிலங்குகள் சரணாலயத்தின் தொழுவபெட்டா விரிவாக்க காப்பு வனத்தின் வடகிழக்கு எல்லையைச் சந்திக்கிறது.

வடக்கு: அங்கிருந்து, எல்லையானது, கிருஷ்ணகிரி மாவட்டத்தின் காவிரி வடக்கு வனவிலங்குகள் சரணாலயத்தின் தொழுவபெட்டா காப்புவன விரிவாக்கமும் தருமபுரி மாவட்டத்தின் காசர்குலி காப்பு வனமும் அவற்றின் வடபுறத்தில் சந்திக்கும் மாவட்ட எல்லைப் பகுதியில் தொடங்கி தெற்கு நோக்கி, தருமபுரி மாவட்டம் மொரப்பூர் காப்பு வனம் மற்றும் தருமபுரி கோட்டத்தின் கூட்டிராயன் காப்பு வனத்தின் மேற்கு எல்லை வழியாக பிலிகுண்டுலு காப்பு வனத்தின் வடகிழக்குப் புள்ளிவரை செல்கிறது. அதன்பிறகு அவ்வெல்லையானது பிலிகுண்டுலு காப்பு வனத்தின் வடக்கு மற்றும் மேற்கு எல்லை வழியாக நாட்றம்பாளையம் காப்புவனம் வரை செல்கிறது. அங்கிருந்து வடமேற்கு திசையில் நாட்றம்பாளையம் காப்பு வனத்தின் கிழக்கு எல்லை வழியாகவும், ஷேஷராஜபுரத்துக்கு அருகே உப்ராணி காப்பு வனத்தின் கிழக்கு எல்லை வழியாகவும் செல்கிறது. அங்கிருந்து வடக்கு திசையில் உப்ராணி காப்புவனத்தின் கிழக்கு எல்லை வழியாக தமசேனப்பள்ளி அருகே உள்ள அஞ்செட்டி கிராமம் வரை செல்கிறது. அங்கிருந்து, எல்லையானது, உப்ரானி காப்பு வனத்தின் வடக்கு எல்லை வழியாகச் சென்று, அதன்பிறகு, உலிபண்டா காப்பு வனத்தின் கிழக்கு எல்லை வழியாக, தமிழ்நாடு-கருநாடகம் மாநிலங்களின் எல்லை வரை செல்கிறது. பின்னர், அது மாநிலங்களுக்கு இடையேயான எல்லையில் தெற்கு நோக்கிச் சென்று, உலிபண்டா காப்பு வனத்தின் மேற்கு எல்லை வழியாகச் செல்கிறது. அங்கிருந்து, எல்லையானது தக்கட்டி காப்பு வனத்தின் வடக்கு எல்லை வழியாகவும், உரிகம் காப்பு வனத்தின் கிழக்கு எல்லை வழியாகவும் வடமேற்கு திசையில், தமிழ்நாடு-கருநாடக மாநிலங்களுக்கு இடையேயான எல்லை வரை செல்கிறது. பின்னர், இவ்வெல்லை தொடக்கப் புள்ளியை அடையும் வரை மாநிலங்களுக்கு இடையேயான எல்லை வழியாகச் செல்கிறது.

நீக்கப்பட்ட பகுதிகள்:

பின்வரும் சாலைகள், பாதைகள் மற்றும் அடைவுப்பகுதிகள் காவிரி தெற்கு வனவிலங்குகள் சரணாலயத்திலிருந்து நீக்கப்படும்:-

1. சாலைகள் மற்றும் பாதைகள் :

தொ. எண். ( 1 ) சாலைகள் மற்றும் பாதைகள் ( 2 ) நீளம் ( கிலோமீட்டரில்) ( 3 ) அகலம் ( கிலோமீட்டரில்) ( 4 )
-----முதல் ( புவியிடச்சுட்டிகளுடன்) -----வரை ( புவியிடச்சுட்டிகளுடன்)
I கிருஷ்ணகிரி மாவட்டம்:
(i) பூமரத்துக்குளி கிராமம் (நாட்றம்பாளையம் அடைவுப்பகுதி) அட்சரேகை : 12.23247o N தீர்க்கரேகை : 77.73437o E கிருஷ்ணகிரி மற்றும் தருமபுரி மாவட்டங்களின் எல்லை: (நாட்றம்பாளையம் மற்றும் ஒட்டப்பட்டி காப்புவனங்கள்) அட்சரேகை : 12.15660o N தீர்க்கரேகை : 77.74946o E 10.840 7.50
(ii) ஏத்தக்கிணறு (எட்டாக்கிணோறு) கிராமம் (நாட்றம்பாளையம் அடைவுப்பகுதி) அட்சரேகை : 12.2628o N தீர்க்கரேகை : 77.7809oE கேம்பக்கேரை (கேம்பக்கேரை) கிராமம் (பிலிகுண்டுலா காப்புவனம்) அட்சரேகை : 12.26675o N தீர்க்கரேகை : 77.81958o E 6.429 6.00
(iii) அஞ்செட்டி கிராமம் அட்சரேகை : 12.33885o N தீர்க்கரேகை : 12.69095o E தக்கட்டி கிராமம் (உப்ரானி மற்றும் ஹுலிபண்டா காப்புவனங்கள்) அட்சரேகை : 12.32298o N தீர்க்கரேகை : 77.65866o E 5.465 6.00

  1. அடைவுப்பகுதிகள் ↩
தொ. எண். ( 1 ) சாலைகள் மற்றும் பாதைகள் ( 2 ) நீளம் ( கிலோமீட்டரில்) ( 3 ) அகலம் ( கிலோமீட்டரில்) ( 4 )
-----முதல் ( புவியிடச்சுட்டிகளுடன்) -----வரை ( புவியிடச்சுட்டிகளுடன்)
(iv) தக்கட்டி கிராமம் அட்சரேகை : 12.33399o N தீர்க்கரேகை : 77.63988o E உரிகம் (உரிகம் காப்பு வனம்) கிராமம் அட்சரேகை : 12.32241o N தீர்க்கரேகை : 77.62232o E 5.410 6.00
(v) அத்திநத்தம் குறுக்குச்சாலை அட்சரேகை : 12.33841o N தீர்க்கரேகை : 77.62584o E அத்திநத்தம் கிராமம் ஜோடிக்கெரே வழி (உரிகம்) அட்சரேகை : 12.30591o N தீர்க்கரேகை : 77.63878o E 5.610 6.00
(vi) அத்திநத்தம் குறுக்குத் தெரு அட்சரேகை : 12.33841o N தீர்க்கரேகை : 77.62584o E உடுபரணே (உடுபரணே) கிராமம் (உரிகம் காப்புவனம்) அட்சரேகை : 12.34827o N தீர்க்கரேகை : 77.61300o E 2.200 6.00
(vii) உரிகம் கிராமம் அட்சரேகை : 12.31635o N தீர்க்கரேகை : 77.60257o E பிலிக்கல் கிராமம் (உரிகம் காப்புவனம்) அட்சரேகை : 12.31877o N தீர்க்கரேகை : 77.59330o E 1.850 6.00
(viii) பிலிக்கல் கிராமம் அட்சரேகை : 12.31993o N தீர்க்கரேகை : 77.59418o E முத்திகரை கிராமம் (உரிகம் காப்புவனம்) அட்சரேகை : 12.32519o N தீர்க்கரேகை : 77.59404o E 0.600 6.00
(ix) அத்திநத்தம் கிராமம் அட்சரேகை : 12.28761o N தீர்க்கரேகை : 77.64797o E நூறுந்துசாமிமலை கிராமம் (தக்கட்டி காப்புவனம்) அட்சரேகை : 12.28634o N தீர்க்கரேகை : 77.64858o E 0.182 6.00
(x) பிலிக்கல் கிராமம் அட்சரேகை : 12.28276o N தீர்க்கரேகை : 77.55996o E பேல்பட்டி (பாயில்பட்டி) கிராமம் (பிலிக்கல் காப்புவனம்) அட்சரேகை : 12.31750o N தீர்க்கரேகை : 77.58387o E 6.450 6.00
(xi) சூலகுண்டா கிராமம் அட்சரேகை : 12.40140o N தீர்க்கரேகை : 77.64375o E ஹூலிபண்டா(உலிபண்டா) கிராமம் (உலிபண்டா காப்புவனம்) அட்சரேகை : 12.42215o N தீர்க்கரேகை : 77.64291o E 2.420 6.00
II தருமபுரி மாவட்டம்
(xii) திம்மலன்மேடு கிராமம் அட்சரேகை : 12.29153o N, தீர்க்கரேகை : 77.94362o E கோட்டூர்மலை கிராமம் (காசர்குலி காப்புவனம்) அட்சரேகை : 12.27708o N தீர்க்கரேகை : 77.94182o E 2.136 7.50
(xii) தொ. எண். ( 1 ) சீங்காடு கிராமம் அட்சரேகை : 12.31487o N தீர்க்கரேகை : 77.92456o E எரிமலை வழி அலக்காட்டு கிராமம் (காசர்குலி காப்புவனம்) அட்சரேகை : 12.31720o N தீர்க்கரேகை : 77.88472o E அடைவுப்பகுதிகளின் பெயர் ( 2 ) 6.307 7.50
I கிருஷ்ணகிரி மாவட்டம்
1. நாட்றம்பாளையம், கெர்ஹட்டி
2. அத்திநத்தம்
தொ. எண். ( 1 ) அடைவுப்பகுதிகளின் பெயர் ( 2 ) காப்பு வனங்களின் பெயர் ( 3 )
3. நூறுண்டுசாமிமலை, சிவபுரம் தக்கட்டி, உரிகம்
4. உடுபரணி உரிகம்
5. சிக்கபெட்டா உப்ரானி
6. பிலிக்கல் பிலிக்கல், உரிகம்
7. உரிகம் கெஸ்தூர் விரிவாக்கம், கெஸ்தூர், பிலிக்கல்
8. நந்திபுரம் பிலிக்கல், மல்லஹல்லி, உரிகம்
9. மஞ்சுகொண்டபள்ளி, பேல்பட்டி, கெஸ்தூர் பிலிக்கல், மஞ்சுகொண்டபள்ளி
10. பிலிகுண்டுலு நாட்றம்பாளையம்
II தருமபுரி மாவட்டம்
11. கோட்டூர்மலை மொரப்பூர், காசர்குலி மற்றும் காசர்குலி விரிவாக்கம்
12. வெத்தலைக்கால் கூட்டிராயன்
13. குண்டுக்கல் மொரப்பூர், காசர்குலி மற்றும் காசர்குலி விரிவாக்கம்
14. எரிமலை மொரப்பூர், காசர்குலி மற்றும் காசர்குலி விரிவாக்கம்
15. அலகட்டா மொரப்பூர், காசர்குலி மற்றும் காசர்குலி விரிவாக்கம்
16. மொரப்பூர் கோவில் நிலம் மொரப்பூர்
4 5

சுப்ரியா சாகு, அரசு கூடுதல் தலைமைச் செயலாளர்.

(தமிழாக்கம்)

ந. அருள், இயக்குநர் (மு.கூ.பொ), தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தி (மொழி பெயர்ப்பு)த் துறை.

வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை.

[அரசாணை (நிலை) எண். 198, வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி [ந.வ 4 (2)]த் துறை, 11 நவம்பர் 2022.]

தொ. எண். வட்டத்தின் பெயர் கிராம எண். வருவாய் கிராமத்தின் பெயர்
1 அவினாசி 20 தெக்கலூர்
2 அவினாசி 21 செம்பியநல்லூர்
3 அவினாசி 22 வேலாயுதம்பாளையம்
4 அவினாசி 23 புதுப்பாளையம்
5 அவினாசி 24 கணியாம்பூண்டி
6 அவினாசி 25 ராக்கியாபாளையம்
7 அவினாசி 26 பழங்கரை
8 அவினாசி 27 அவிநாசி
9 அவினாசி 34 ஈட்டிவீரம்பாளையம்
10 அவினாசி 40 பெருமாநல்லூர்
11 அவினாசி 41 காளிபாளையம்
12 பல்லடம் 01 சாமளாபுரம்
13 பல்லடம் 02 இச்சிப்பட்டி
14 பல்லடம் 03 பூமலூர்
15 பல்லடம் 04 வேலம்பாளையம்
16 பல்லடம் 05 சுக்கம்பாளையம்
17 பல்லடம் 06 செம்மிபாளையம்
35 பல்லடம் 24 எலவந்தி
36 பல்லடம் 25 கேத்தனூர்
37 பல்லடம் 26 வாலிபாளையம்
38 பல்லடம் 27 எ. வடமலைபாளையம்
39 பல்லடம் 28 வி. காளிபாளையம்
40 பல்லடம் 29 காட்டூர்
41 திருப்பூர் வடக்கு 01 பொங்குபாளையம்
42 திருப்பூர் வடக்கு 02 கணக்கம்பாளையம்
43 திருப்பூர் வடக்கு 03 நெருப்பெரிச்சல்
44 திருப்பூர் வடக்கு 04 செட்டிபாளையம்
45 திருப்பூர் வடக்கு 05 வேலம்பாளையம்
46 திருப்பூர் வடக்கு 06 தொட்டிபாளையம்
47 திருப்பூர் வடக்கு 07 மண்ணரை
48 திருப்பூர் தெற்கு 08 திருப்பூர்
49 திருப்பூர் தெற்கு 09 ஆண்டிபாளையம்
50 திருப்பூர் தெற்கு 10 மங்கலம்
51 திருப்பூர் தெற்கு 11 இடுவாய்
6

ஹிதேஸ்குமார். எஸ். மக்வானா, அரசு முதன்மைச் செயலாளர்.

(தமிழாக்கம்)

ந. அருள், இயக்குநர் (மு.கூ.பொ), தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தி (மொழி பெயர்ப்பு)த் துறை.

[அரசாணை (நிலை) எண். 213, வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி [ந.வ 4 (2)]த் துறை, 28 நவம்பர் 2022.] தமிழ்நாடு 1971 ஆம் ஆண்டு நகர் ஊரமைப்புச் சட்டத்தின் (தமிழ்நாடு சட்டம் 35/1972) 2ஆம் பிரிவைச் சேர்ந்த தொடர் (48) ஆம் பகுதியில் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களைக் கொண்டு, தமிழ்நாட்டு ஆளுநர் அவர்கள் சேலம் மாவட்டத்திலுள்ள பின்வரும் வருவாய் கிராமங்களை சேலம் நகர திட்டமிடல் பகுதியாக இதனால் அறிவிக்கிறார்.

தமிழ்நாடு 1971 ஆம் ஆண்டு நகர் ஊரமைப்புச் சட்டத்தின் (தமிழ்நாடு சட்டம் 35/1972) 2 ஆம் பிரிவைச் சேர்ந்த (48) ஆம் பகுதியில் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களைக் கொண்டு, தமிழ்நாட்டு ஆளுநர் அவர்கள் திருப்பூர் மாவட்டத்திலுள்ள பின்வரும் வருவாய் கிராமங்களை திருப்பூர் நகர திட்டமிடல் பகுதியாக இதனால் அறிவிக்கிறார்.

வ எண். வட்டத்தின் பெயர் கிராம எண். வருவாய் கிராமத்தின் பெயர்
(1) (2) (3) (4)
1 ஓமலூர் 5 பாலபள்ளி கோம்பை
2 ஓமலூர் 6 டேனிஷ்பேட்டை
3 ஓமலூர் 7 காடயாம்பட்டி
4 ஓமலூர் 8 நடுப்பட்டி
5 ஓமலூர் 9 நாச்சனம்பட்டி
6 ஓமலூர் 10 ஏலத்தூர்
7 ஓமலூர் 11 குண்டுக்கல்
8 ஓமலூர் 12 கொங்குபட்டி
9 ஓமலூர் 13 மரக்கோட்டை
10 ஓமலூர் 14 மூக்கனூர்
11 ஓமலூர் 15 தீவட்டிப்பட்டி
64 ஓமலூர் 65 கருவாட்டுப்பாறை காப்பு வனப்பகுதி
65 ஓமலூர் 66 சாமிநாயக்கன்பட்டி
66 ஓமலூர் 67 வெள்ளக்கல்பட்டி
67 ஓமலூர் 68 மாங்குப்பை
68 ஓமலூர் 69 பாகல்பட்டி
69 ஓமலூர் 70 செல்லப்பிள்ளைகுட்டை
70 ஓமலூர் 71 முத்துநாய்க்கன்பட்டி
71 ஓமலூர் 74 கோணகப்பாடி
72 ஓமலூர் 75 குருக்குப்பட்டி
73 ஓமலூர் 76 தாரமங்கலம்
74 ஓமலூர் 77 சிக்கம்பட்டி
75 ஓமலூர் 78 கசுவிரெட்டிப்பட்டி
76 ஓமலூர் 79 அரூர்பட்டி
77 ஓமலூர் 80 ராமிரெட்டிப்பட்டி
78 ஓமலூர் 81 செலவடை
79 ஓமலூர் 82 அரியம்பட்டி
80 ஓமலூர் 83 இலவம்பட்டி
81 ஓமலூர் 84 பணிக்கனூர்
82 ஓமலூர் 85 இடையப்பட்டி
83 ஓமலூர் 87 பாப்பம்பாடி
84 ஓமலூர் 96 தெசவிளக்கு
85 ஓமலூர் 99 அழகுசமுத்திரம்
86 ஓமலூர் 131 கருக்கல்வாடி
87 சங்ககிரி 40 புதூர்
88 சங்ககிரி 41 ஏகாபுரம்
89 சங்ககிரி 45 ஏரணபுரம்
90 சங்ககிரி 46 கனககிரி
91 சங்ககிரி 47 கூடலுர்
92 சங்ககிரி 48 கண்டர்குலமாணிக்கம்
93 சங்ககிரி 66 இடங்கணசாலை
94 சங்ககிரி 67 தெப்பக்குட்டை
95 சங்ககிரி 68 நடுவனேரி
96 சேலம் - சேலம் நகராட்சி பகுதி வார்டு A முதல் N வரை (சேலம் பழைய நகராட்சி பகுதி)
97 சேலம் 1 கீரபாப்பம்பாடி
98 சேலம் 2 மாரமங்கலத்துப்பட்டி
99 சேலம் 3 மூடுதுரை
100 சேலம் 4 குள்ளனம்பட்டி
101 சேலம் 5 கரிச்சிப்பட்டி
142 சேலம் 46 உடையாப்பட்டி
143 சேலம் 47 அம்மாபேட்டை
144 சேலம் 48 குமாரசாமிபட்டி
145 சேலம் 49 அஸ்தம்பட்டி
146 சேலம் 50 அய்யம்பெருமாள்பட்டி
147 சேலம் 51 அழகாபுரம் புதூர்
148 சேலம் 52 எருமாபாளையம்
149 சேலம் 53 தாதகாபட்டி
150 சேலம் 54 ஆண்டிப்பட்டி
151 சேலம் 58 ஆண்டிப்பட்டி
152 சேலம் 59 அன்னதானப்பட்டி
153 சேலம் 60 பள்ளப்பட்டி
154 சேலம் 61 மெய்யனூர்
155 சேலம் 62 அன்னதானப்பட்டி
156 சேலம் 63 பள்ளப்பட்டி
157 சேலம் 64 மெய்யனூர்
158 சேலம் 65 பேடிநாயக்கன்பட்டி
159 சேலம் 66 சூரமங்கலம்
160 சேலம் 67 அரியாக்கவுண்டன்பட்டி
161 சேலம் 68 சேலத்தான்பட்டி
162 சேலம் 69 ஆண்டிப்பட்டி
163 சேலம் 70 சௌதாபுரம்
164 சேலம் 71 கந்தம்பட்டி
165 சேலம் 72 கொண்டலாம்பட்டி
166 சேலம் 73 புத்தூர்
167 சேலம் 74 நெய்க்காரப்பட்டி
168 சேலம் 75 புரநாட்டாமங்கலம்
169 சேலம் 76 கொண்டலாம்பட்டி
170 சேலம் 77 சீலநாயக்கன்பட்டி
171 சேலம் 78 நிலவாரப்பட்டி
172 சேலம் 79 தம்மநாயக்கன்பட்டி
173 சேலம் 80 அட்டவணை பூலாவேரி
174 சேலம் 81 அக்கரஹார பூலாவரி
175 சேலம் 82 உத்தம சோழபுரம்
176 சேலம் 83 அரியாம்பாளையம்
177 சேலம் 84 பெருமாம்பட்டி
178 சேலம் 85 இளம்பிள்ளை
179 சேலம் 86 பெருமாகவுண்டன்பட்டி
180 சேலம் 87 ராமாபுரம்
181 சேலம் 88 ரெட்டிப்பட்டி
222 சேலம் 129 மல்லூர்
223 சேலம் 130 பள்ளித்தெருப்பட்டி
224 சேலம் 131 சந்தியூர் ஆட்டையாம்பட்டி
225 சேலம் 132 கெஜ்ஜல்நாயக்கன்பட்டி
226 சேலம் 133 ஜருகுமலை
227 சேலம் 134 பனமரத்துப்பட்டி
228 சேலம் 135 திப்பம்பட்டி
229 சேலம் 136 குரால்நத்தம்
230 சேலம் 137 கோணமடுவு
231 சேலம் 138 வேடப்பட்டி
232 சேலம் 139 நூலாத்துக்கோம்பை
233 சேலம் 140 சாம்பகுட்டைப்பட்டி
234 சேலம் 141 அடிமலைப்பட்டி
235 சேலம் 142 தும்பல்பட்டி
236 சேலம் 143 ஜல்லு ஆத்துப்பட்டி
237 சேலம் 144 கம்மாளப்பட்டி
238 சேலம் 145 வலசையூர்
239 சேலம் 146 சுக்கம்பட்டி
240 சேலம் 147 தாதனூர்
241 சேலம் 148 மூக்கனூர்
242 சேலம் 149 கத்திரப்பட்டி
243 சேலம் 150 ஆச்சாங்குட்டப்பட்டி புதூர்
244 சேலம் 151 அரமனூர்
245 சேலம் 152 ஆச்சாங்குட்டப்பட்டி
246 சேலம் 153 குப்பனூர்
247 சேலம் 156 அக்ரஹாரநாட்டாமங்கலம்
248 சேலம் 158 காரப்பட்டி
249 சேலம் 159 பெரியக்கவுண்டாபுரம்
250 சேலம் 160 சின்னக்கவுண்டாபுரம்
251 சேலம் 161 அயோத்தியாப்பட்டிணம்
252 சேலம் 162 மின்னாம்பள்ளி
253 சேலம் 163 குள்ளம்பட்டி
254 சேலம் - ஜல்லு ஆத்துப்பட்டி காப்பு வனம்
255 சேலம் - ஜருகுமலை காப்பு வனம்
256 சேலம் 221 கஞ்சமலை காப்பு வனம்
257 சேலம் - நாகர்மலை காப்பு வனம்
258 வாழப்பாடி 17 கோலாத்துக்கோம்பை
259 வாழப்பாடி 18 நீரமுள்ளிக்குட்டை
260 வாழப்பாடி 19 அனுப்பூர்
261 வாழப்பாடி 20 விளாம்பட்டி
262 வாழப்பாடி 21 கூட்டாத்துப்பட்டி
263 வாழப்பாடி 22 பாலப்பட்டி
264 வாழப்பாடி 23 ஏரிப்புதூர்
265 வாழப்பாடி 32 சர்க்கார் நாட்டாமங்கலம்
266 வாழப்பாடி 33 கருமாபுரம்
267 வாழப்பாடி 34 மேட்டுப்பட்டி
268 வாழப்பாடி 35 பெருமாள்பாளையம்
269 வாழப்பாடி 36 காட்டுவேப்பிலைப்பட்டி
7 8 9 10

ஹிதேஸ்குமார் எஸ். மக்வானா, அரசு முதன்மைச் செயலாளர்.

(தமிழாக்கம்)

ந. அருள், இயக்குநர் (மு.கூ.பொ), தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தி (மொழி பெயர்ப்பு)த் துறை.

[அரசாணை (நிலை) எண். 32, வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி [ந.வ 4 (2)]த் துறை, 8 மார்ச் 2023.] தமிழ்நாடு 1971 ஆம் ஆண்டு நகர் ஊரமைப்புச் சட்டத்தின் தமிழ்நாடு சட்டம் 35/1972, 10-ஆம் பிரிவைச் சேர்ந்த 4 உட்பிரிவில் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களைக் கொண்டு தமிழ்நாட்டு ஆளுநர் அவர்கள், கம்பம் உள்ளூர் திட்டமிடல் பகுதியில் பின்வரும் வருவாய் கிராமங்களைச் சேர்த்து 17.04.1974 ஆம் நாளிட்ட தமிழ்நாடு அரசிதழின் பாகம் II—பிரிவு 2 இல் 222 ஆம் பக்கத்தில் (ஆங்கிலத்தில்) வெளியிடப்பட்ட ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சி நிருவாகத் துறையின் II(2)RUL/2161/1974 ஆம் எண் அறிவிக்கையில் பின்வரும் திருத்தத்தை இதனால் செய்கிறார். அவ்வாறு சேர்ப்பதற்கான நோக்கம் மேற்சொன்ன சட்டத்தின் 10 ஆம் பிரிவைச் சேர்ந்த (1) உட்பிரிவின் (b) பகுதியில் கோரியுள்ளவாறாக ஏற்கெனவே வெளியிடப்பட்டுள்ளது.

திருத்தம்

மேற்சொன்ன அறிவிக்கையில் உள்ள அட்டவணைக்குப் பதிலாக, பின்வரும் அட்டவணை அமைத்துக் கொள்ளப்பட வேண்டும்.

அதாவது:-

அட்டவணை

வருவாய் கிராமங்களின் எண் மற்றும் பெயர் தேனிவட்டம்

25. கம்பம் (பகுதி)

24 உத்தமபுரம் (பகுதி)

23. புதுப்பட்டி

22 ஹனுமந்தன்பட்டி

அபூர்வா, அரசு முதன்மைச் செயலாளர்.

(தமிழாக்கம்)

ந. அருள், இயக்குநர் (மு.கூ.பொ),

தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தி (மொழி) பெயர்ப்புத் துறை.

தமிழ்நாடு அரசுக்காக சென்னை எழுதுபொருள் மற்றும் அச்சுத் துறை இயக்குநரால்

அச்சிடப்பட்டு வெளியிடப்பட்டது.

Cite this issue. Tamil Nadu Gazette, Government of Tamil Nadu, 24 May 2023. Indian Gazettes, https://egazette.servantsofknowledge.in/details/in.gazette.tamilnadu.2023-05-24.Ordinary_21_Part-II_Section-2-T-Sup/. Archive identifier in.gazette.tamilnadu.2023-05-24.Ordinary_21_Part-II_Section-2-T-Sup.