©
GOVERNMENT OF TAMIL NADU
2023
[Regd. No. TN/CCN/467/2012-14.
[R. Dis. No. 197/2009.
[Price: Rs. 3.20 Paise.
| TAMIL NADU GOVERNMENT GAZETTE PUBLISHED BY AUTHORITY | ||
No. 22] CHENNAI, WEDNESDAY, MAY 31, 2023 Vaikasi 17, Sobakiruthu, Thiruvalluvar Aandu–2054
Part II—Section 1
Notifications or Orders of specific character or of particular interest to the
public issued by Secretariat Departments.
NOTIFICATIONS BY GOVERNMENT
CONTENTS Pages.
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத் துறை
பழங்குடியினர் நலம் நரிக்குறவன் குருவிக்காரன் சமுதாய மக்களுக்கு பழங்குடியினர் சாதிச்
சான்றிதழ் வழங்குதல் குறித்து வழிகாட்டு நெறிமுறைகள் பற்றிய அறிவிக்கை .. 38-41 வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை
புதிதாக உருவாக்கப்பட்ட கள்ளிக்குடி வருவாய் வட்டத்தில் 3 முதுநிலை வருவாய் ஆய்வாளர் மிகை பணியிடங்கள் – திருமங்கலம் வருவாய் வட்டத்திலுள்ள இலங்கை அகதிகள் முகாமிற்கு மீள தக்க வைத்தல் பற்றிய அறிவிக்கை .. 41-43
[37]
DTP—II-1—2238 TAMIL NADU GOVERNMENT GAZETTE [Part II—Sec. 1
NOTIFICATIONS BY GOVERNMENT
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத் துறை
No. II(1)/ADTW/17/2023.
[ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலம் - நரிக்குறவன், குருவிக்காரன் சமுதாய மக்களுக்கு பழங்குடியினர் சாதிச் சான்றிதழ் வழங்குதல் குறித்து வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்படுகின்றன.]
கீழ்க்்கண்ட அரசாணை வெளியிடப்படுகிறது:-
[அரசாணை (நிலை) எண். 63, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல (சாமெ.1)த் துறை, 5 மே 2023, சித்திரை 22, சோபகிருது, திருவள்ளுவர் ஆண்டு-2054.]
படிக்கப்பட்டது:
1. இந்திய சட்டம் மற்றும் நீதி (LD) அமைச்சகத்தால் வெளியிடப்பட்ட அரசிதழ் எண். 1/2023 நாள் 03.01.2023.
2. அரசாணை (நிலை) எண். 38, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் (சா.மெ 1) நலத்துறை, நாள் 17.03.2023 ஆணை:- எண். 63, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத், துறை, 2023 மே 5
மேலே முதலாவதாகப் படிக்கப்பட்ட அரசிதழில் இந்திய அரசின் சட்டம் மற்றும் நீதி (Legislative Department) அ்மைச்சகம், நரிக்குறவன், குருவிக்காரன் சமுதாயத்தை தமிழ்நாட்டில் 37-ஆவது இனமாக பழங்குடியினர் பட்டியலில் இணைத்து அறிவிக்கை வெளியிட்டது.
2. அதனைத் தெடர்ந்து, மேலே இரண்டாவதாகப் படிக்கப்பட்ட அரசாணையில் நரிக்குறவன் குருவிக்காரன் சமுதாயத்தினர் அனைத்து அரசியலமைப்பு, பாதுகாப்பு மற்றும் நலத்திட்டங்களைப் பெற தகுதியடைய ஏதுவாக தமிழக அரசால் ஆணை வெளியிடப்பட்டது.
3. பழங்குடியினர் மக்களுக்கு சாதிச் சான்றிதழ் வழங்க அதிகாரம் வழங்கப்பட்டுள்ள வருவாய் கோட்டாட்சியர்கள் / சார் ஆட்சியர்கள் நரிக்குறவன், குருவிக்காரன் சமுதாய மக்களுக்கு பழங்குடியினர் சாதிச் சான்றிதழ் வழங்குவதற்கு ஏதுவாக வழிகாட்டு நெறிமுறைகள் (ஆங்கிலம் மற்றும் தமிழில்) வெளியிடப்படுகின்றன.
4. மேலும் தற்போது மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பிரிவிலிருந்து பழங்குடியினர் பிரிவிற்கு மாற்றப்பட்டுள்ள நரிக்குறவன், குருவிக்காரன் சமுதாய மக்களுக்கு பழங்குடியினர் சாதிச் சான்றிதழை மேற்காணும் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி வழங்க சம்மந்தப்பட்ட அலுவலர்கள் அனைவருக்கும் அறிவுறுத்துமாறு கூடுதல் தலைமைச் செயலாளர், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அவர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
5. ஏற்கனவே மிகவும் பிற்படுத்தப்பட்டோர் சாதிச் சான்றிதழ் மின்வடிவிலான (Digital) முறையில் பெற்றுள்ள நரிக்குறவன், குருவிக்காரன் சமுதாய மக்களுக்கு புதிய மின் வடிவிலான (Digital) சாதிச் சான்றிதழ் வழங்குவதற்கான நடவடிக்கையை விரைந்து எடுக்குமாறும் மற்றும் அட்டை வடிவிலான மிகவும் பிற்படுத்தப்பட்டோர் சாதிச் சான்றிதழ் வைத்துள்ளவர்களின் சாதிச் சான்றிதழை ரத்து செய்து பழங்குடியினர் சாதிச் சான்றிதழ் வழங்குவது தொடர்பாக புதிய இணைய தொகுப்பு (Online Module) உருவாக்க நடவடிக்கை மேற்கொள்ளுமாறும் வருவாய் நிருவாக ஆணையர் கேட்டுக்கொள்ளப்படுகிறார்.
Guidelines for Scheduled Tribe Community Certicate for Narikoravan, Kurivikkaran.
Notification in Government of India Gazette was published on 03.01.2023 and as Tamil Nadu Government order was issued on 17.03.2023 and as all the legal statutory processes is over guidelines are being issued in respect of issuing of Scheduled Tribe certificates to Narikoravan, Kurivikkaran.
Date of Implementation: 03.01.2023
Narikoravan, Kurivikkaran community will be eligible for obtaining Scheduled Tribe Community Certificate from the date of Publishing Gazette by Government of India, in which Narikoravan, Kurivikkaran is transferred from Most Backward category to Scheduled Tribe Community. i.e from 03.01.2023.
Classification on Narikoravan, Kurivikkaran for the issue of Scheduled Tribe Certificate
The Narikoravan, Kurivikkaran community people can be classified into three categories for the propose of issue of community certificate.
Category I: Those Narikoravan, Kurivikkaran who do not have any community certificate and need to apply afresh for getting a Scheduled Tribe community certificate.
May 31, 2023] TAMIL NADU GOVERNMENT GAZETTE 39Category II: Those Narikoravan, Kurivikkaran who are already having MBC certificate either as digital certificate or as hard copy i.e card certificate which was issued earlier.
Category III: Those Narikoravan, Kurivikkaran who have Certificates issued earlier but they have petitions or complaints or whose certificates or related documents are missing in the concern Taluk Office.
The following principles have to be kept in mind and taken into consideration, in order to streamline the issue of Scheduled Tribe Certificate to these two communities.
(i) The earlier MBC certificates were issued based on the guidelines, field verification and scrutiny by the issuing authority. They clearly identify the individual as belonging to that particular community.
(ii) The earlier certificate as belonging to that particular community was issued by the government authorized official and that certificate remains valid document for identification.
(iii) Only the Narikoravan, Kurivikkaran community classification has been changed from the MBC classification to the Scheduled Tribe classification. Any re-examination of all earlier certificates will create undue hardships for this disadvantaged community and will create hindrance in availing various Government Schemes.
In view of these circumstances the following Guidelines are proposed for issue of Scheduled Tribe
Certificates to Narikoravan, Kurivikkaran persons
Category I:
For new applicants the Scheduled Tribe certificate shall be issued as per the existing procedure, guidelines and norms in force for the issue of Scheduled Tribe certificate issued by the Revenue Department from time to time. The applicants need to apply through the online portal and the Scheduled Tribe Certificate will be issued by Revenue Divisional Officer as per the current guidelines.
Category II:
Those Narikoravan, Kurivikkaran who are already having Most Backward Community certificate either as digital certificate or as hard copy i.e card certificate which was issued earlier can be further classified into two categories as Category A and Category B. Category A are all those who have a digital certificate and category B are all those who have the older hard copy card certificate.
Category II-A
This category includes all those who have the digital certificates issued through the online system. For all those who are having Most Backward Community digital certificate, the existing digital certificates data base will be changed as Narikoravan, Kurivikkaran Scheduled Tribes in the data base by the Revenue Divisional Officer/Sub-Collector.
After carrying out the needed changes, the new digital certificate will be issued by the Revenue Divisional Officer / Sub-Collector after cancelling the earlier issued digital Most Backward Community Certificate. The procedure to issue this through online will be created as a separate procedure.
Category II-B
For the card certificate holders, the individual possessing Most Backward Community certificate need to surrender their Most Backward Community Certificate through an online module by selecting the place of issue of the earlier certificate. The Revenue Divisional Officer/Sub-Collector of the place where the certificate was issued will cross verify and confirm the genuinity of the Community Certificate in original Issuance Register available in the Taluk Office. After verifying the genuinity of earlier Certificate, the Scheduled Tribe certificate will be issued through on line mode by the Revenue Divisional Officer/Sub-Collector. The original card certificate issued will be cancelled by the concerned Revenue Divisional Officer/Sub-Collector. A new online module will be created for this process.
Category III
With respect to the doubtful cases with regard to earlier Most Backward Community certificate or missing details in Taulk Office, field verification needs to be done by the Revenue Divisional Officer/Sub-Collector. Scheduled Tribe certificate can be issued by treating these cases as a new case, based on the reports of field verification. In case of missing certificate or documents or registers, such applications may be treated as new certificates and procedure for issue of Scheduled Tribe certificate needs to be followed.
40 TAMIL NADU GOVERNMENT GAZETTE [Part II—Sec. 1நரிக்குறவன், குருவிக்காரன் சமுதாயத்திற்கு பழங்குடியின சாதிச் சான்றிதழ் வழங்குவதற்கான
வழிகாட்டு நெறிமுறைகள்
நரிக்குறவன், குருவிக்காரன் சமுதாய மக்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்த்து ஒன்றிய அரசின் அரசிதழில் 03.01.2023 அன்று அறிவிக்கை தொடர்ந்து, தமிழ்நாடு அரசு 17.03.2023 அன்று அரசாணை வெளியிடப்பட்டது, அதனைத் தொடர்ந்து சட்ட செயல்முறைகளும் முடிந்துவிட்ட நிலையில், "நரிக்குறவன், குருவிக்காரன்" ஆகியோருக்கு பழங்குடியினர் சாதிச் சான்றிதழ்கள் வழங்குவது தொடர்பான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்படுகின்றன.
நடைமுறைப்படுத்தப்படும் நாள்: 03.01.2023
நரிக்குறவன், குருவிக்காரன் சமுதாயத்தினர் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் வகுப்பிலிருந்து பழங்குடியினர் சமுதாயத்திற்கு மாற்றப்படுவதாக ஒன்றிய அரசால் அரசிதழில் வெளியிடப்பட்ட நாளிலிருந்து அதாவது 03.01.2023ஆம் நாளிலிருந்து நரிக்குறவன், குருவிக்காரன் சமுதாயத்தினர் பழங்குடியினர் சாதிச் சான்றிதழ் பெறுவதற்கு தகுதி பெறுவர்.
பழங்குடியினர் சான்றிதழ் வழங்குவதற்காக நரிக்குறவன், குருவிக்காரன் சமுதாயத்தினரை வகைப்படுத்துதல் நரிக்குறவன், குருவிக்காரன் சமுதாய மக்களை சாதிச் சான்றிதழ் வழங்கும் நோக்கத்திற்காக மூன்று வகையினராக வகைப்படுத்தலாம்.
வகைப்பாடு I: யாதொரு சாதிச் சான்றிதழும் பெற்றிராத மற்றும் பழங்குடியினர் சாதிச் சான்றிதழ் பெறுவதற்காக புதிதாக விண்ணப்பிக்க வேண்டிய நரிக்குறவன், குருவிக்காரன் சமுதாயத்தினர்.
வகைப்பாடு II: மிகவும் பிற்படுத்தப்பட்டோர் சாதிச் சான்றிதழை எண்மிய (Digital) சான்றிதழாக அல்லது அச்சு வடிவிலான அதாவது முன்னர் வழங்கப்பட்ட அட்டை சான்றிதழ் பெற்றுள்ள நரிக்குறவன், குருவிக்காரன்.
வகைப்பாடு III: முன்னரே வழங்கப்பட்ட சாதிச் சான்றிதழ்களைப் பெற்றது தொடர்பாக, சம்பந்தப்பட்ட வட்டாட்சியர் அலுவலகத்தில் பெறப்பட்டாலோ அல்லது சாதி சான்றிதழ்களோ அல்லது அது தொடர்பான ஆவணங்கள் தொலைந்து போனாலோ இவ்வகையில் அடங்குவதாக இருக்கும்.
இந்த இரு சமுதாயத்தினருக்கும் பழங்குடியினர் சாதிச் சான்றிதழ் வழங்குவதை முறைப்படுத்துவதற்கு ஏதுவாக பின்வரும் கோட்பாடுகள் கவனத்தில் கொண்டு பரிசீலிக்கப்பட வேண்டும்.
1. முன்னர் வழங்கப்பட்ட பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் சான்றிதழ்கள் வழிகாட்டு குறிப்புகள், களப்பணி சரிபார்ப்பு மற்றும் வழங்கல் அதிகாரியின் கூர்ந்தாய்வின் அடிப்படையில் வழங்கப்பட்டவையாகும். தனிநபர் அக்குறிப்பிட்ட சாதியைச் சேர்ந்தவர் என்பதை அவை தெளிவாக குறித்து காட்டுகின்றன.
2. குறிப்பிட்ட சாதியைச் சேர்ந்தவர் என ஏற்கனவே வழங்கப்பட்ட சான்றிதழ் அதிகாரமளிக்கப்பட்ட அரசு அலுவலரால் வழங்கப்பட்டது. அந்த சான்றிதழ் அந்நபர் குறிப்பிட்ட சாதியை சேர்ந்தவர் எனக் குறிப்பிட்டுக் காட்டுவதற்காக செல்திறன்மிக்க ஆவணமாக இருக்கும்.
3. நரிக்குறவன், குருவிக்காரன் சமுதாயத்தின் வகைப்பாடு மட்டுமே மிகப் பிற்படுத்தப்பட்டோர் வகையிலிருந்து பழங்குடியினர் வகைக்கு மாற்றப்பட்டுள்ளது. முன்னரே வழங்கப்பட்ட அனைத்து சான்றிதழ்களையும் மறு ஆய்வு செய்வதென்பது சிரமநிலையிலுள்ள இந்த சமுதாயத்தினருக்கு தேவையற்ற இன்னல்களை ஏற்படுத்துவதாகவும், பல்வேறு அரசு திட்டங்களை பெறுவதில் தடைகளை ஏற்படுத்துவதாகவும் அமையும்.
மேற்காணும் சூழ்நிலையில் நரிக்குறவன், குருவிக்காரன் மக்களுக்கு பழங்குடியினர் சாதிச் சான்றிதழ்களை வழங்குவதற்கு கீழ்க்காணும் வழிகாட்டு நெறிமுறைகள் பின்பற்றப்பட வேண்டும்.
வகைப்பாடு-I: புதிய விண்ணப்பதாரர்களுக்கு பழங்குடியினர் சான்றிதழ் வழங்குவது தொடர்பாக வருவாய்துறையால் அவ்வபோது வெளியிடப்படும் செயலிலுள்ள நடைமுறைகள், வழிகாட்டிக் குறிப்புகள், வரையறைகளைப் பின்பற்றி பழங்குடியினர் சான்றிதழ் வழங்கப்படும். விண்ணப்பத்தாரர்கள் சான்றிதழ் கோரி இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க வேண்டும். நடைமுறையிலுள்ள வழிகாட்டுதலின்படி, வருவாய் கோட்டாட்சியரால் பழங்குடியினர் சாதிச் சான்றிதழ் வழங்கப்படும்.
வகைப்பாடு-II
ஏற்கனவே மின்வடிவிலான சான்றிதழாகவோ (Digital Certificate) / அச்சுப்படியாகவோ அதாவது. அட்டை வடிவிலான ஏற்கனவே வழங்கப்பட்ட சான்றிதழ்களில் மேலும் வகை A வகை B என இரு வகையான சான்றிதழ் உள்ள நரிக்குறவன், குருவிக்காரன் இந்த வகையைச் சார்ந்தவர்களாவர். மின்சான்றிதழ்கள் கொண்டவர்கள் அனைவரும் A வகையைச் சார்ந்தவர் ஆவர். பழைய அச்சு வடிவிலான அட்டை சான்றிதழ் வைத்திருப்போர் அனைவரும் B வகையைச் சார்ந்தவர் ஆவர்.
May 31, 2023] TAMIL NADU GOVERNMENT GAZETTE 41வகைப்பாடு II A
இந்த வகையானது, இணைய வழியில் வழங்கப்பட்ட மின்சான்றிதழ்கள் வைத்திருப்பவர்களைக் கொண்டதாகும். ஏற்கனவே மின்வடிவிலான மிகப் பிற்படுத்தப்பட்டோர் சான்றிதழ்கள் கொண்டவர்களைப் பொறுத்தவரை, வருவாய் கோட்டாட்சியர் / சார் ஆட்சியரால் பராமரிக்கப்பட்டுவரும் தரவுதளத்தில் ஏற்கனவே உள்ள மின்சான்றிதழ்களின் தரவுதளம் நரிக்குறவன், குருவிக்காரன் – பழங்குடியினர் என மாற்றம் செய்யப்படும். தேவையான மாற்றங்களை மேற்கொண்டபின், ஏற்கனவே வழங்கப்பட்ட மின்வடிவிலான மிகப்பிற்படுத்தப்பட்டோர் சான்றிதழ் இரத்து செய்யப்பட்டு புதியமின் வடிவிலான (Digital Certificate) சான்றிதழ் வருவாய் கோட்டாட்சியர்/சார் ஆட்சியரால் வழங்கப்படும். இணைய வழியில் வழங்குவதற்கான நடைமுறை தனியாக துவங்கப்படும்.
வகைப்பாடு II-B
அட்டைச் சான்றிதழ் வைத்திருப்பவர்களில், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான சாதிச் சான்றிதழைக் கொண்ட தனிநபர்கள், முந்தைய சான்றிதழ் வழங்கப்பட்ட இடத்தைத் தேர்ந்தெடுத்து, இணைய வழி வாயிலாக தங்களது மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான சான்றிதழை ஒப்படைக்க வேண்டும். சான்றிதழ் வழங்கப்பட்ட இடத்தின் வருவாய் கோட்டாட்சியர்/சார் ஆட்சியர், சாதிச் சான்றிதழின் உண்மைத்தன்மையை, வட்டாட்சியர் அலுவலகத்தில் கிடைக்கும் அசல் சான்றிதழ் வழங்கல் பதிவேட்டில் சரிபார்த்து உறுதிப்படுத்துவார். முந்தைய சான்றிதழின் உண்மைத் தன்மையை சரிபார்த்த பின்னர், பட்டியல்/பழங்குடியிர் சாதிச் சான்றிதழ் வருவாய் கோட்டாட்சியர்/சார் ஆட்சியரால் இணைய வழியில் வழங்கப்படும். முன்னர் வழங்கப்பட்ட அசல் அட்டைச் சான்றிதழ் சம்பந்தப்பட்ட வருவாய் கோட்டாட்சியர்/சார் ஆட்சியரால் இரத்து செய்யப்படும் இதற்கென புதிய இணைய தொகுப்பு (online module) உருவாக்கப்படும்.
வகைப்பாடு-III
முந்தைய மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான சாதிச் சான்றிதழ் அல்லது வட்டாட்சியர் அலுவலகத்தில் விடுபட்ட விவரங்கள் தொடர்பான இனங்கள் குறித்து, வருவாய் கோட்டாட்சியர் / சார் ஆட்சியரால் களஆய்வு செய்யப்பட வேண்டும். களஆய்வு அறிக்கைகளின் அடிப்படையில் இந்நேர்வுகளை புதிய நேர்வாகக் கருதி, பழங்குடியினர் சாதிச் சான்றிதழை வழங்கலாம். சான்றிதழ் தொலைந்து போவது அல்லது ஆவணங்கள் அல்லது பதிவேடுகள் தொலைந்திருப்பின், அவ்விண்ணப்பங்கள் புதிய சான்றிதழுக்கான விண்ணப்பங்களாகக் கருதி பழங்குடியின சாதிச் சான்றிதழை வழங்குவதற்கான நடைமுறை பின்பற்றப்படவேண்டும்.
க. லட்சுமி பிரியா, அரசு செயலாளர்.
வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை
No. II(1)/REVDM/18/2023.
[வருவாய் நிருவாகம் – ஆட்சி எல்லை – மதுரை மாவட்டம் – புதிதாக உருவாக்கப்பட்ட கள்ளிக்குடி வருவாய் வட்டத்தில் 3 முதுநிலை வருவாய் ஆய்வாளர் மிகைப் பணியிடங்கள் – திருமங்கலம் வருவாய் வட்டத்திலுள்ள இலங்கை அகதிகள் முகாமிற்கு மீள தக்க வைத்தல் – திருத்த ஆணை வெளியிடப்படுகின்றது.]
கீழ்க்கண்ட அரசாணை வெளியிடப்படுகிறது:-
[அரசாணை நிலை எண். 185, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் வ.நி.1(1) துறை, 17 ஏப்ரல் 2023, சித்திரை 4, சோபகிருது, திருவள்ளுவர் ஆண்டு-2054]
படிக்கவும் :-
1. அரசாணை (நிலை) எண். 268, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை [வ.நி.1(1)]த் துறை, நாள் 24.07.2018.
2. கூடுதல் தலைமைச் செயலாளர்/வருவாய் நிருவாக ஆணையர் கடித எண். பணி 3(4)/24659/2017, நாள் 16.07.2019.
ஆணை: எண். 185, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை, 17 ஏப்ரல் 2023.
பார்வை ஒன்றில் படிக்கப்பட்ட அரசாணையில் மதுரை மாவட்டத்தில் திருமங்கலம் வருவாய் வட்டத்தை பிரித்து கள்ளிக்குடியைத் தலைமையிடமாகக் கொண்டு புதிய வருவாய் வட்டம் உருவாக்கப்பட்டது. மேலும், மதுரை மாவட்டத்திற்கென்று ஒதுக்கப்பட்ட 9 தனி வருவாய் ஆய்வாளர்கள் பணியிடங்களில், 3 தனி வருவாய் ஆய்வாளர் பணியிடங்கள் பொதுப் பணியிடங்களாக அதாவது வருவாய்த் துறையின் மிகைப் பணியிடங்களாகக் கருதப்பட்டு திருமங்கலம் வட்டத்திற்கென மீளத் தக்க வைக்கப்படாமல் விடப்பட்டுள்ளதால், திருமங்கலம் வட்டத்திலுள்ள இலங்கை அகதிகள் முகாமிற்கென வருவாய் ஆய்வாளர் பணியிடங்கள் ஏதும்42 TAMIL NADU GOVERNMENT GAZETTE [Part II—Sec. 1 இல்லாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும், மேற்கூறப்பட்ட 3 வருவாய் ஆய்வாளர் பணியிடங்களையும் மீளத் தக்க வைக்க அரசாணை (நிலை) எண்.268, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை [வ.நி.1(1)]த் துறை, நாள் 24.07.2018-இல் கீழ்கண்டவாறு மாற்றங்களை செய்யக்கோரி கூடுதல் தலைமைச் செயலாளர்/ வருவாய் நிருவாக ஆணையர் பார்வை இரண்டில் படிக்கப்பட்ட தனது கடிதத்தில் பரிந்துரை செய்துள்ளார்.
( i ) மதுரை மாவட்ட வருவாய் அலகில் அமைந்துள்ள திருமங்கலம் வருவாய் வட்டத்தினைப் இரண்டாகப் பிரித்து, கள்ளிக்குடியைத் தலைமையிடமாகக் கொண்டு புதிய கள்ளிக்குடி வருவாய் வட்டம் உருவாக்கி அரசாணை (நிலை) எண்.268, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை [வ.நி.1(1)] துறை, நாள் 24.07.2018. மூலம் ஆணை பிறப்பிக்கப்பட்டது,
( ii ) அகதிகள் மறுவாழ்வு மற்றும் தமிழகத்திற்கு வெளியே வாழும் தமிழர்கள் நல ஆணையரக அறிக்கையில் பின்வருமாறு தெரிவிக்கப்பட்டது.
அரசாணை (நிலை) எண் 734, பொது (மறுவாழ்வு-1) துறை, நாள் 12.08.2014-இன் மூலம், இலங்கை அகதிகளின் மறுவாழ்வு பணிக்கென, தமிழ்நாடு முழுவதுமாக 170 பணியிடங்கள் ஒப்பளிக்கப்பட்டுள்ளன.
660 அகதிகளுக்கு ஒரு தனி ஆய்வாளர் என்ற அடிப்படையில் மதுரை மாவட்டத்தில் திருமங்கலம் வட்டம் உட்பட மொத்தம் 9 தனி வருவாய் ஆய்வாளர்கள் பணியிடங்கள் ஒப்பளிக்கப்பட்டுள்ளன.
மேற்படி பணியாளர்களுக்கான நிர்வாக செலவினங்கள் மைய அரசிடமிருந்து மீளப் பெறப்பட்டு வருவதால், இதில் மாநில அரசுக்கு எந்தவித கூடுதல் நிதிச் சுமையும் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் இல்லை.
கள்ளிக்குடி புதிய வட்டம் உருவாக்கி வெளியிடப்பட்டுள்ள அரசாணையில், மதுரை மாவட்டத்திற்கென்று ஒதுக்கப்பட்ட 9 தனி வருவாய் ஆய்வாளர் (அகதிகள்) பணியிடங்களில், 3 தனி வருவாய் ஆய்வாளர் பணியிடங்கள் மிகைப் பணியிடங்களாக கருதப்பட்டு, திருமங்கலம் வட்டத்திற்குகென மீளத் தக்க வைக்கப்படாமல் விடுப்பட்டுள்ளதாகவும், இதனால் திருமங்கலம் வட்டத்திலுள்ள இலங்கை அகதிகள் முகாமிற்கென வருவாய் ஆய்வாளர்கள் பணியிடங்கள் ஏதும் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும், எனவே மேற்குறிப்பிட்ட 3 வருவாய் ஆய்வாளர் (அகதிகள்) பணியிடங்களையும் மீளத் தக்க வைக்க, அரசாணை (நிலை) எண். 268, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை [வ.நி.1(1)]த் துறை, நாள் 24.02.2018-ற்கு உரிய திருத்தம் பெற்று ஆணை வழங்குமாறு கோரியுள்ளார்.
(iii) மேலும், புதிய வட்டத்திற்கான பொதுவான பணியாளர் மாதிரியின் (Staff Pattern) படி புதிய வட்டத்தில் உள்ள குறுவட்டங்களின் எண்ணிக்கையின் அடிப்படையில், வருவாய் ஆய்வாளர் பணியிடங்களின் எண்ணிக்கை அமைய வேண்டும்.
இதன்படி கள்ளிக்குடி வட்டத்தில் உள்ள மூன்று குறுவட்டங்கள் மற்றும் திருமங்கலம் வட்டத்தில் உள்ள மூன்று குறுவட்டங்களுக்கு மொத்தம் 6 பணியிடங்கள் அரசால் ஒப்பளிப்பு செய்யப்பட்டுள்ளது. ஆனால், திருமங்கலம் வட்டத்தில் உள்ள இலங்கை அகதிகள் முகாமிற்கான (உச்சப்பட்டி கிராமம்) அரசின் பொதுத்துறையால் ஏற்கனவே அனுமதிக்கப்பட்ட 3 உதவியாளர் நிலையிலான முதுநிலை வருவாய் ஆய்வாளர் பணியிடங்கள் (தற்காலிகம்) புதிய கள்ளிக்குடி வருவாய் வட்டம் உருவாக்கப்பட்ட அரசாணையில் மிகைப் பணியிடங்களாக குறிப்பிடப்பட்டு, அவை திருமங்கலம் வட்டத்திற்கு ஒப்பளிக்கப்படவில்லை. இப்பணியிடங்கள் மூன்றும், பொதுவான பணியாளர் மாதிரியின் வரையறைக்குள் வராத சிறப்பு பணியிடங்கள் என்பதாலும், இதற்கான நிருவாக செலவினங்கள் மைய அரசிடமிருந்து மீள பெறப்படுவதாக அகதிகள் மறுவாழ்வு இயக்குநர் தெரிவித்துள்ளதாலும், இந்நேர்வில், அகதிகள் மறுவாழ்வு இயக்குநரின் பரிந்துரையின் படி திருமங்கலம் வட்டத்தில் உள்ள இலங்கை அகதிகள் முகாமிற்கான 3 முதுநிலை வருவாய் ஆய்வாளர் (உதவியாளர் நிலை) பணியிடங்களை திருமங்கலம் வட்டத்திற்கு ஒப்பளிப்பு செய்து அரசாணை (நிலை) எண்.268, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை [வ.நி.1(1)] துறை, நாள் 24.07.2018. அரசாணைக்கு, திருத்த அரசாணை வழங்குமாறு கேட்டுக் கொண்டுள்ளார்.
2. மேற்காணும் சூழ்நிலையில் கூடுதல் தலைமைச் செயலாளர்/வருவாய் நிருவாக ஆணையரின் பரிந்துரையினை ஏற்று, மதுரை மாவட்டத்தில் புதியதாக உருவாக்கப்பட்ட கள்ளிக்குடி வருவாய் வட்டத்தில் உள்ள மூன்று குறுவட்டங்கள் மற்றும் திருமங்கலம் வட்டத்தில் உள்ள மூன்று குறுவட்டங்களுக்கு மொத்தம் 6 பணியிடங்கள் அரசால் ஒப்பளிப்பு செய்யப்பட்டுள்ளது. ஆனால், திருமங்கலம் வட்டத்தில் உள்ள இலங்கை அகதிகள் முகாமிற்கான (உச்சப்பட்டி கிராமம்) அரசின் பொதுத்துறையால் ஏற்கெனவே வெளியிடப்பட்ட அரசாணை (நிலை) எண். 734, பொது (மறுவாழ்வு-1) துறை, நாள் 12.08.2014-இன்படி அனுமதிக்கப்பட்ட 3 உதவியாளர் நிலையிலான முதுநிலை வருவாய் ஆய்வாளர் பணியிடங்களை (தற்காலிகம்) அரசாணை (நிலை) எண். 268, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை [வ.நி.1(1)] துறை, நாள் 24.07.2018-இன்படி புதிதாக உருவாக்கப்பட்ட கள்ளிக்குடி வருவாய் வட்ட அரசாணையில் மிகைப் பணியிடங்களாக குறிப்பிடப்பட்டு, அவை திருமங்கலம் வட்டத்திற்கு ஒப்பளிக்கப்படவில்லை. இப்பணியிடங்கள் மூன்றும், பொதுவான பணியாளர் மாதிரியின் வரையறைக்குள் வராத சிறப்பு பணியிடங்கள் என்பதாலும், இதற்கான நிருவாக செலவினங்கள் மைய அரசிடமிருந்து மீளப் பெறப்படுகிறது. மேலும், இந்திய அரசாங்கத்தால் நிருவாக செலவை திருப்பிச் செலுத்தும் வரை மட்டுமே இப்பணியிடங்கள் ஒப்புக் கொள்ளப்படும் என்றும் இந்திய அரசாங்கத்தால் நிருவாக செலவை திருப்பிச் செலுத்துவதை நிறுத்தினால் இந்தப் பதவிகளின் பணிநீட்டிப்பு நிறுத்தப்பட வேண்டும் என்ற நிபந்தனைக்குட்பட்டு திருமங்கலம் வட்டத்தில் உள்ள இலங்கை அகதிகள் முகாமிற்கான 3 முதுநிலை வருவாய் ஆய்வாளர் (உதவியாளர் நிலை) பணியிடங்களை திருமங்கலம் வட்டத்திற்கு ஒப்பளிப்பு செய்து அரசாணை (நிலை) எண். 268, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை [வ.நி.1(1)] துறை, நாள் 24.07.2018-இல் இணைப்பு-II, அ.பொதுப்பிரிவில் வரிசை எண்.-6இல் கீழ்க்கண்டவாறு திருத்தம் செய்து ஆணையிடப்படுகிறது.
May 31, 2023] TAMIL NADU GOVERNMENT GAZETTE 43| வரிசை எண் | பணியிடங்கள் | தற்காலிகம் / நிரந்தரம் | திருமங்கலம் வட்டத்தின் தற்போதைய பணியிடங்கள் | திருமங்கலம் வட்டத்தில் நிறுத்தி வைக்கப்பட வேண்டிய பணியிடங்கள் | கள்ளிக்குடி வட்டத்தின் பணியிடங்கள் | |||
| மாறுதல் செய்யப்பட வேண்டியன | புதியதாக தோற்றுவிக்கப்பட வேண்டிய பணியிடங்கள் | மொத்தம் | ||||||
| (1) | (2) | (3) | (4) | (5) | (6) | (7) | (8) | |
| அ. பொதுப்பிரிவு | ||||||||
| 6 | முதுநிலை வருவாய் ஆய்வாளர் (உதவியாளர் நிலை) (அகதிகள் முகாம்) | நிரந்தரம் | 0 | 0 | 0 | 0 | 0 | |
| தற்காலிகம் | 3 | 3 | 0 | 0 | 0 |
3. மேற்குறிப்பிட்ட ஆணைக்கிணங்க அரசாணை (நிலை) எண். 268, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை [வ.நி.1(1)] துறை, நாள் 24.07.2018 மற்றும் அதன் இணைப்புகளுக்கான உரிய திருத்தங்கள் மேற்கண்டவாறு வெளியிடப்படுகின்றன.
4. மேற்கண்ட திருத்த ஆணையினை செயல்படுத்திட தக்க நடவடிக்கை மேற்கொள்ளுமாறு கூடுதல் தலைமைச் செயலாளர்/ வருவாய் நிருவாக ஆணையர் மற்றும் மதுரை மாவட்ட ஆட்சியர் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
(ஆளுநரின் ஆணைப்படி)
குமார் ஜயந்த், அரசு கூடுதல் தலைமைச் செயலாளர்.
PRINTED AND PUBLISHED BY THE DIRECTOR OF STATIONERY AND PRINTING, CHENNAI ON BEHALF OF THE GOVERNMENT OF TAMIL NADU