© [Regd. No. TN/CCN/467/2012-14.
GOVERNMENT OF TAMIL NADU [R. Dis. No. 197/2009.
2023 [Price: Rs. 1.60 Paise.
| TAMIL NADU GOVERNMENT GAZETTE PUBLISHED BY AUTHORITY | ||
No. 22] CHENNAI, WEDNESDAY, MAY 31, 2023 Vaikasi 17, Sobakiruthu, Thiruvalluvar Aandu–2054
Part VI—Section 2
Notifications of interest to a section of the public
issued by Heads of Departments, etc.
NOTIFICATIONS BY HEADS OF DEPARTMENTS, ETC.
CONTENTS
Pages.
COLLECTORS AND LOCAL AUTHORITIES
இராமநாதபுரம் மாவட்ட ஆட்சித்தலைவர் மற்றும் கிராம ஊராட்சிகளின் ஆய்வாளர்
இராமநாதபுரம் மாவட்டம், திருப்புல்லாணி ஊராட்சி ஒன்றியம், மேலமடை கிராம ஊராட்சித்
தலைவர் பதவி நீக்கம்செய்தல் பற்றிய அறிவிக்கை .. .. .. .. .. .. 278 மாநில தேர்தல் அலுவலர் மற்றும் நகராட்சி நிர்வாக இயக்குநர், சென்னை-28.
21-11-2011-ல் நகராட்சிகளில் நடைபெற்ற மறைமுகத் தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்ட நிலைக்குழு
உறுப்பினர்களின் பெயர்ப் பட்டியலில் உள்ள திருத்தங்கள் .. .. .. .. .. 278-279
[277]
DTP—VI-2 (22) 278
TAMIL NADU GOVERNMENT GAZETTE
[Part VI—Sec. 2 NOTIFICATIONS BY HEADS OF DEPARTMENTS, ETC.
COLLECTORS AND LOCAL AUTHORITIES
இராமநாதபுரம் மாவட்ட ஆட்சித்தலைவர் மற்றும் கிராம ஊராட்சிகளின் ஆய்வாளர்.
இராமநாதபுரம் மாவட்டம், திருப்புல்லாணி ஊராட்சி ஒன்றியம், மேலமடை கிராம ஊராட்சித் தலைவர்
பதவிநீக்கம் செய்தல் பற்றிய அறிவிக்கை
(ந.க. ஊ. நி6/2547/2022)
No. VI(2)/11/2023.
இராமநாதபுரம் மாவட்டம், திருப்புல்லாணி ஊராட்சி ஒன்றியம், மேலமடை ஊராட்சி மன்றத் தலைவர் திரு. கே. இளையபாரதி என்பவர் அவ்வூராட்சியின் நிர்வாக அலுவலர் என்ற முறையில் செயல்படும் போது ஊராட்சியில் நிதி மற்றும் நிர்வாக முறைகேடுகள் நடைபெற்றுள்ளதாக ஆய்வில் கண்டறியப்பட்டு 1994-ம் ஆண்டு தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டம் பிரிவு 205-ன்கீழ் அன்னாருக்கு விளக்கம் கோரும் அறிவிப்பு வழங்கப்பட்டது.
ஊராட்சி மன்றத் தவைலர் மீதான குற்றச்சாட்டுகளுக்கு விளக்கம் ஏதும் சமர்ப்பிக்கவில்லை. எனவே, 1994-ம் ஆண்டு தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டம் பிரிவு 205-ன்படி மேலமடை கிராம ஊராட்சி மன்றத் தலைவர் திரு. கே. இளையபாரதி என்பவரின் நிர்வாகத்தில் காணப்பட்ட நிதி முறைகேடுகள் தொடர்பாக அவரை மேலமடை ஊராட்சி மன்றத் தலைவர் பதவியிலிருந்து நீக்கம் செய்ய உத்தேசிக்கப்பட்டு, இது குறித்து அந்த கிராம ஊராட்சியின் கருத்துக்களை அறிந்து கொள்வதற்காக மேலமடை கிராம ஊராட்சி உறுப்பினர்களின் கூட்டத்தினை அவ்வூராட்சி மன்ற அலுவலகத்தில் நடத்திட கீழக்கரை வட்டாட்சியருக்கு உத்தரவிடப்பட்டது.
அதனை தொடர்ந்து, கீழக்கரை வட்டாட்சியரால் 30-11-2022 அன்று பிற்பகல் 3.00 மணியளவில் நடத்தப்பட்ட மேலமடை ஊராட்சியின் கூட்டத்தில் ஊராட்சி மன்றத் தலைவர் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் மீது அன்னார் விளக்கம் ஏதும் சமர்ப்பிக்காததால், ஊராட்சி மன்றத் தலைவரை பதவிநீக்கம் செய்யும் மாவட்ட ஆட்சித்தலைவர்/ஊராட்சிகளின் ஆய்வாளர் அவர்களின் செயற்குறிப்பு ஆகியவற்றை முன்வைத்து ஊராட்சி மன்ற உறுப்பினர்களின் கருத்து பரிசீலிக்கப்பட்டன. ஊராட்சியின் செயல் அலுவலராகிய ஊராட்சி மன்றத் தலைவர் தனது கட்டாய மற்றும் அடிப்படை கடமைகளிலிருந்து தவறி அரசினால் ஊராட்சி வளர்ச்சிக்கு வழங்கப்படும் நிதிகளில் முறைகேடு செய்வதும், அரசின் விதிமுறைகளை மீறி மிகைச் செலவினங்கள் செய்தும் முறைகேடுகளில் ஈடுபட்டுள்ளது உறுதி செய்யப்பட்டது. எனவே, மாவட்ட ஆட்சித்தலைவர்/ஊராட்சிகளின் ஆய்வாளர் அவர்களின் செயற்குறிப்புக்கு ஆதரவாக ஊராட்சி மன்ற உறுப்பினர்களின் கருத்து தெரிவித்துள்ளார்கள்.
மேலமடை ஊராட்சி மன்றத் தலைவர் மீது பிறப்பிக்கப்பட்ட குற்றச்சாட்டுகள், கீழக்கரை வட்டாட்சியரால் நடத்தப்பட்ட சிறப்புக் கூட்டத்தில் ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் தெரிவித்த கருத்துகள் ஆகியவை மாவட்ட ஆட்சித்தலைவர்/ஊராட்சிகளின் ஆய்வாளர் அவர்களால் உளத்தேர்வின்படி கூர்ந்தாய்வு செய்யப்பட்டு, மேலமடை ஊராட்சி மன்றத் தலைவர் திரு. கே. இளையபாரதி என்பவரை ஊராட்சி மன்றத் தலைவர் பதவியிலிருந்து நீக்கம் செய்து அறிவிக்கை வெளியிடப்படுகிறது.
ஜானி டாம் வர்கீஸ்,
இராமநாதபுரம், 2023 ஏப்ரல் 26. மாவட்ட ஆட்சித்தலைவர்/ஊராட்சிகளின் ஆய்வாளர்.
மாநில தேர்தல் அலுவலர் மற்றும் நகராட்சி நிர்வாக இயக்குநர், சென்னை-28.
21-11-2011-ல் நகராட்சிகளில் நடைபெற்ற மறைமுகத் தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்ட நிலைக்குழு உறுப்பினர்களின் பெயர்ப் பட்டியலில் உள்ள திருத்தங்கள்
திருத்த அறிவிக்கை
(ந.க.எண். 21286/2017/எம்ஏ2)
No. VI(2)/12/2023.
மாநில தேர்தல் அலுவலர் / நகராட்சி நிர்வாக இயக்குநர் அவர்களுக்கு வழங்கப்ட்ட அதிகாரத்தின்கீழ் 21-11-2011 அன்று நகராட்சிகளில் நடைபெற்ற மறைமுகத் தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்ட வரிவிதிப்பு மேல்முறையீட்டு குழு உறுப்பினர், நி்யமனக் குழு உறுப்பினர் மற்றும் ஒப்பந்தக்குழு உறுப்பினர் ஆகியோரின் பெயர்ப் பட்டியல் தமிழ்நாடு அரசிதழ் எண். 36, நாள் 07-09-2022-ல் வெளியிடப்பட்டதில் உள்ள திருத்தங்களை குறிப்பிட்டு, தமிழ்நாடு பேரூராட்சிகள், நகராட்சிகள் மற்றும் மாநகராட்சிகள் (தேர்தல்கள்) விதிகள், 2006 விதி 113(2)-ன்படி மாநில தேர்தல் அலுவலர்/நகராட்சி நிர்வாக இயக்குநர் அவர்கள் தமிழ்நாடு மாநில அரசிதழில் வெளியிடுகிறார்.
May. 31, 2023] TAMIL NADU GOVERNMENT GAZETTE 279
அட்டவணை-I
21-11-2011 அன்று தேர்ந்தெடுக்கப்பட்ட வரிவிதிப்பு மேல்முறையீட்டு குழு உறுப்பினர்களுக்கான பெயர் விவரங்களில் திருத்தங்கள்.
(1) தமிழ்நாடு மாநில அரசிதழ் பக்கம் 246-247-ல் வரிசை எண் 1 முதல் 7 வரை "செங்கல்பட்டு மாவட்டம்" என்று வெளியிடப்பட்டுள்ளதை "காஞ்சிபுரம் மாவட்டம்" எனத் திருத்தம் செய்யப்படுகிறது.
(2) தமிழ்நாடு மாநில அரசிதழ் பக்கம் 247-ல் வரிசை எண் 8-ல் "செம்பாக்கம் பேரூராட்சியினை செம்பாக்கம் நகராட்சி'' என வெளியிடப்பட்டுள்ளது நீக்கம் செய்யப்படுகிறது.
(3) தமிழ்நாடு மாநில அரசிதழ் பக்கம் 247-ல் வரிசை எண் 10-ல் திருவள்ளூர் மாவட்டம், பூவிருந்தவல்லி நகராட்சியில் "திரு. எஸ் நெல்சன், வார்டு எண். 21'' என்பவரின் பெயர் சேர்க்கப்படுகிறது.
அட்டவணை-II
21-11-2011 அன்று தேர்ந்தெடுக்கப்பட்ட நியமனக் குழு உறுப்பினர்களுக்கான பெயர் விவரங்களில் உள்ள திருத்தங்கள்.
(1) தமிழ்நாடு மாநில அரசிதழ் பக்கம் 260-ல் வரிசை எண். 1 முதல் 7 வரை "செங்கல்பட்டு மாவட்டம்" என்று வெளியிடப்பட்டுள்ளதை "காஞ்சிபுரம் மாவட்டம்" எனத் திருத்தம் செய்யப்படுகிறது.
(2) தமிழ்நாடு மாநில அரசிதழ் பக்கம் 260-ல் வரிசை எண். 8-ல் "செம்பாக்கம் நகராட்சி'' என வெளியிடப்பட்டுள்ளது நீக்கம் செய்யப்படுகிறது.
(3) தமிழ்நாடு மாநில அரசிதழ் பக்கம் 261-ல் வரிசை எண். 20-ல் வேலூர் மாவட்டம், ஆம்பூர் நகராட்சியில் 23-வது வார்டில் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர் "திரு. எ. ஜமீல்'' என வெளியிடப்பட்டுள்ளதை "திரு. எ. ஜமீல் அகமது'' எனத் திருத்தம் செய்யப்படுகிறது.
(4) தமிழ்நாடு மாநில அரசிதழ் பக்கம் 263-ல் வரிசை எண். 80-ல், மதுரை மாவட்டம், திருமங்கலம் நகராட்சியில், நியமனக்குழு உறுப்பினர் தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர் பெயர் "திரு. எம். போத்திராஜா'' வார்டு எண். 17 என்று மட்டும் திருத்தம் செய்யப்படுகிறது. மேலும், "(21-11-2011 முதல் 10-05-2014 வரை) எஸ்.ஏ. ராஜா உசேன் (18-05-2014 முதல்) வார்டு எண்: 20'' என்பது நீக்கம் செய்யப்படுகிறது.
அட்டவணை-III
21-11-2011 அன்று தேர்ந்தெடுக்கப்பட்ட ஒப்பந்தக் குழு உறுப்பினர்களுக்கான பெயர் விவரங்களில் உள்ள திருத்தம் (1) தமிழ்நாடு மாநில அரசிதழ் பக்கம் 264-ல் வரிசை எண் 1 முதல் 7 வரை "செங்கல்பட்டு மாவட்டம்" என்று வெளியிடப்பட்டுள்ளதை "காஞ்சிபுரம் மாவட்டம்" எனத் திருத்தம் செய்யப்படுகிறது.
பா. பொன்னையா,
சென்னை-28, 2023 மே 13. மாநில தேர்தல் அலுவலர்/நகராட்சி நிர்வாக இயக்குநர்.
PRINTED AND PUBLISHED BY THE DIRECTOR OF STATIONERY AND PRINTING, CHENNAI ON BEHALF OF THE GOVERNMENT OF TAMIL NADU