© தமிழ்நாடு அரசு 2023
[Regd. No. TN/CCN/467/2012-14. [R. Dis. No. 197/2009. [விலை : ரூ. 3. 20 காசு
| தமிழ்நாடு அரசிதழ் ஆணையின்படி வெளியிடப்பட்டது. | ||
எண் 23] சென்னை, புதன்கிழமை, ஜூன் 7 2023 வைகாசி 24, சோபகிருது, திருவள்ளுவர் ஆண்டு-2054
பகுதி III—பிரிவு 1(a) இன் இணைப்பு
அரசாங்க அறிவிப்புகளின் தமிழ் மொழிபெயர்ப்புகள்
தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை
அறிவிக்கை
[அரசாணை (நிலை) எண். 33, தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு (Q1)த் துறை, 08 மார்ச் 2023] இந்திய அரசமைப்புச் சட்டத்தின் 309 ஆம் பிரிவின் வரம்பு நிபந்தனையில் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களைக் கொண்டு, தமிழ்நாட்டு ஆளுநர் அவர்கள், பின்வரும் விதிகளை இதனால் இயற்றுகிறார்:-
1. குறுந்தலைப்பு.- இவ்விதிகள் தமிழ்நாடு 2023 ஆம் ஆண்டு குடிமைப் பணிகள் (கருணை அடிப்படையில் பணி நியமனம்) விதிகள் என அழைக்கப்படும்.
2. பொருள் விளக்கங்கள்.- (1) இவ்விதிகளில், சந்தர்ப்பம் வேறு பொருள் குறித்தாலன்றி மற்றபடி,-
(a) "மாவட்டம்" என்பது ஒரு வருவாய் மாவட்டம் எனப் பொருள்படும்;
(b) "படிவம்" என்பது இவ்விதிகளில் இணைக்கப்பட்டுள்ள ஒரு படிவம் எனப் பொருள்படும்;
(c) "அரசு" என்பது மாநில அரசு எனப் பொருள்படும்;
(d) "அரசுப் பணியாளர்" என்பது அரசு செயற்பாடுகளுடன் தொடர்புடைய யாதொரு பணி அல்லது பணியிடத்திற்கு நியமிக்கப்பட்டுள்ள நபர் ஒருவர், ஒரு பணியில் தகுதிகாண் பருவத்தினர் ஒருவர், தகுதிகாண் பருவம் நிறைவு செய்த ஒருவர் மற்றும் நிலைப்பணியாளர் ஆகியோரை உள்ளடக்கியதாகும்.
இருப்பினும், இவ்விதிகளின் நோக்கத்திற்காக பின்வரும் நபர்கள் அரசுப் பணியாளர்களாகக் கருதப்பட மாட்டார்கள்:-
(i) அடிப்படை விதிகளின் 56 ஆம் விதியைச் சேர்ந்த (1) துணைவிதியின் (c) பகுதியின் கீழ் பணியில் தக்க வைக்கப்பட்ட நபர் ஒருவர்;
(ii) பணி நீட்டிப்பிலுள்ள அல்லது மறு பணியமர்த்தம் செய்யப்பட்ட நபர் ஒருவர்;
(iii) நிரந்தரமற்ற, தற்காலிக அல்லது ஒப்பந்த அடிப்படையில் தொகுப்பூதியத்தில் அல்லது தினக்கூலி அடிப்படையில் நியமிக்கப்பட்ட நபர் ஒருவர்;
(iv) காலமுறை ஊதியத்தின் முறையின் கீழ் பணியமர்த்தப்படாத நபர் ஒருவர்; மற்றும்
(v) சிறப்பு காலமுறை ஊதியத்தின் யாதொரு பணியிடத்தில் பணியமர்த்தப்பட்ட நபர் ஒருவர்.
விளக்கம்.- ஒரு நிறுவனம், கழகம், அமைப்பு, உள்ளாட்சி அமைப்பு, மற்றொரு மாநில அரசு அல்லது ஒன்றிய அரசில் பணியமர்த்தப்பட்டுள்ள அரசுப் பணியாளர் ஒருவர், இவ்விதிகளின் நோக்கத்திற்காக, அவரது சம்பளம் மாநிலத்தின் தொகுப்பு நிதி நீங்கலாக வேறு ஆதாரங்களிலிருந்து பெறப்படினும், அவர் அரசுப் பணியாளராகக் கருதப்பட வேண்டும்;
(e) "துறைத் தலைவர்" என்பது, இவ்விதிகளின் நோக்கத்திற்காகத் துறைத் தலைவராக அறிவிக்கப்பட்டிருப்பினும் இல்லாவிடினும், நேரடியாக அரசின் சார்நிலையில் அமைந்த துறையின் முதன்மை அலுவலர் எனப் பொருள்படும்;
(f) "குடும்பம்" என்பது,-
(i) இறந்த அல்லது மருத்துவ இயலாமை காரணமாகப் பணிஓய்வு பெற்ற திருமணமான அரசுப் பணியாளர் குறித்த நேர்வில், மேற்சொன்ன அரசுப் பணியாளர் இறந்த அல்லது மருத்துவ இயலாமை காரணமாகப் பணிஓய்வு பெற்ற காலத்தில் அவரைச் சார்ந்திருந்த அவரது சட்டப்பூர்வ வாழ்க்கைத் துணை, மகன், மகள் (தத்தெடுக்கப்பட்ட மகன் அல்லது மகள் உட்பட);
III-1a-(23) (T Sup)—1
[ 1 ]2 (ii) இறந்த திருமணமாகாத அரசுப் பணியாளர் குறித்த நேர்வில், அவரது தந்தை, தாய், சகோதரர் அல்லது சகோதரி;
(iii) மருத்துவ இயலாமை காரணமாகப் பணிஓய்வு பெற்ற திருமணமாகாத அரசுப் பணியாளர் குறித்த நேர்வில், அவரது சகோதரர் அல்லது சகோதரி;
(iv) இறந்த அல்லது மருத்துவ இயலாமை காரணமாகப் பணிஓய்வு பெற்ற வாழ்க்கைத் துணையை இழந்த அரசுப் பணியாளர் அல்லது மணவிலக்கு பெற்ற அரசுப் பணியாளர் குறித்த நேர்வில், மேற்சொன்ன அரசுப் பணியாளர் இறந்தபோது அல்லது மருத்துவ இயலாமை காரணமாகப் பணிஓய்வு பெற்ற போது அவரைச் சார்ந்திருந்த அவரின் மகன், மகள் (தத்தெடுக்கப்பட்ட மகன் அல்லது மகள் உட்பட);
(v) குழந்தைகளற்ற அல்லது இவ்விதிகளின் கீழ் நியமிக்கப்பட தகுதியற்ற அகவை முதிராக் குழந்தைகளையுடைய, வாழ்க்கைத் துணையை இழந்த அல்லது மணவிலக்கு பெற்ற இறந்த அரசுப் பணியாளர் குறித்த நேர்வில், அவரின் தந்தை அல்லது தாய்;
இருப்பினும், மேற்சொன்ன தந்தை மற்றும் தாய், 6 ஆம் விதியின் (1) உட்பிரிவில் குறிப்பிடப்பட்டுள்ள உயரளவு வயது வரம்பைக் கடந்துவிட்ட நேர்வில், மேற்சொன்ன தந்தை மற்றும் தாயால் நேமகம் செய்யப்படும் அரசுப் பணியாளரின் சகோதரர் அல்லது சகோதரி;
(vi) குழந்தைகளற்ற அல்லது இவ்விதிகளின் கீழ் நியமிக்கப்பட தகுதியற்ற அகவை முதிராக் குழந்தைகளையுடைய, வாழ்க்கைத் துணையை இழந்த அல்லது மணவிலக்கு பெற்ற, மருத்துவ இயலாமை காரணமாகப் பணிஓய்வு பெற்ற அரசுப் பணியாளர் குறித்த நேர்வில், அவரது தந்தை அல்லது தாயால் நேமகம் செய்யப்படும் அவரின் சகோதரர் அல்லது சகோதரி.
(g) "மருத்துவ இயலாமை காரணமாகப் பணிஓய்வு பெற்ற" என்பது, அடிப்படை விதி 74-இன் கீழ் இயற்றப்பட்ட அரசுப் பணியாளர்களின் விடுப்பு நடைமுறைக்கான விதிகளின் விதி 24(b)-உடன் படிக்கப்பட்ட அடிப்படை விதி 56(2)-இன் கீழ் 'பொது நலன் கருதி, மருத்துவ இயலாமை காரணமாக எஞ்சிய பணிக்காலம் ஐந்தாண்டுகளுக்குக் குறையாத காலஅளவில் இருக்கும்போது அரசுப் பணியாளரைப் பணியிலிருந்து ஓய்வு பெறுவதற்கு உத்தரவிடப்பட்ட' எனப் பொருள்படும். அதற்கிணங்க, "மருத்துவ இயலாமை காரணமாகப் பணிஓய்வு பெறுதல்" என்பதும் பொருள் கொள்ளப்படும்.
(2) இவ்விதிகளில் பயன்படுத்தப்பட்டு ஆனால் பொருள் விளக்கம் அளிக்கப்படாத சொற்களும் சொற்றொடர்களும், தமிழ்நாடு 2016 ஆம் ஆண்டு அரசுப் பணியாளர்கள் (பணி நிலைமைகள்) சட்டத்தில் (தமிழ்நாடு சட்டம் 14/2016) அவற்றுக்கென வழங்கப்பட்டுள்ள அதே பொருளைக் கொண்டிருக்கும்.
3. நியமனத்திற்கான தகுதி.- (1) பின்வரும் வகைகளைச் சேர்ந்த அரசுப் பணியாளர்களின் குடும்ப உறுப்பினர்கள், கருணை அடிப்படையில் பணி நியமனம் பெறத் தகுதியுடையவர்கள் ஆவர்,:-
(a) பணியிடைநீக்கம் செய்யப்பட்டோர் உட்பட, பணியிலிருக்கும் போது இறந்த அரசுப் பணியாளர்கள்;
(b) எஞ்சிய பணிக்காலம் ஐந்து ஆண்டுகளுக்குக் குறையாமல் உள்ளபோது மருத்துவ இயலாமை காரணமாக பணிஓய்வு பெற்ற அரசுப் பணியாளர்கள்;
(c) 1872 ஆம் ஆண்டு இந்திய சாட்சியச் சட்டத்தின் (மத்தியச் சட்டம் 1/1872) 107 அல்லது 108 ஆம் பிரிவுகளின் கீழ், அகவை முதிர்வு காரணமாக ஓய்வுபெறும் நாளிற்கு முந்தைய நாளிலிருந்து இறந்துவிட்டதாக தகுதிவாய்ந்த நீதிமன்றத்தால் அறிவிக்கப்பட்ட காணாமல் போன அரசுப் பணியாளர்கள்.
(2) இறந்த அல்லது மருத்துவ இயலாமை காரணமாகப் பணி ஓய்வு பெற்ற அரசுப் பணியாளரின் பின்வரும் குடும்ப உறுப்பினர்கள், இதன் கீழ் அளிக்கப்பட்டுள்ள முன்னுரிமை வரிசையில், கருணை அடிப்படையில் பணி நியமனம் பெறத் தகுதியுடையவராவர்,:-
(a) சட்டப்படித் திருமணம் செய்து கொண்ட வாழ்க்கைத் துணை:
இருப்பினும், தனிநபர் சட்டத்தால் அனுமதிக்கப்படுகிறவாறு சட்டப்படித் திருமணம் செய்துள்ள வாழ்க்கைத் துணையின் எண்ணிக்கை ஒன்றுக்கு மேற்பட்டிருக்கும் நேர்வில், ஏனைய வாழ்க்கைத் துணைகளால் அளிக்கப்படுகிற தடையில்லாச் சான்றிதழின் அடிப்படையில், அவர்களில் ஒருவர்;
(b) இறந்த அல்லது மருத்துவ இயலாமை காரணமாகப் பணி ஓய்வு பெற்ற அரசுப் பணியாளரின் மகன் அல்லது மகள் (தத்தெடுக்கப்பட்ட மகன் அல்லது மகள் உட்பட);
(c) உடல் நலமின்மை காரணமாகப் பணிநியமனத்திற்கு வகைசெய்ய இயலாத குழந்தைகளையுடைய அல்லது குழந்தைகளற்ற அல்லது உரிய அகவை எய்தாத குழந்தைகளையுடைய, இறந்த அல்லது மருத்துவ இயலாமை காரணமாக பணி ஓய்வு பெற்ற திருமணமாகாத அரசுப் பணியாளரின் அல்லது மணவிலக்கு பெற்ற அல்லது வாழ்க்கைத் துணையை இழந்த அரசுப் பணியாளரின் பெற்றோர்;
(d) உடல் நலமின்மை காரணமாகப் பணிநியமனத்திற்கு வகைசெய்ய இயலாத குழந்தைகளையுடைய அல்லது குழந்தைகளற்ற அல்லது உரிய அகவை எய்தாத குழந்தைகளையுடைய, இறந்துவிட்ட அல்லது மருத்துவ இயலாமை காரணமாகப் பணி ஓய்வு பெற்ற திருமணமாகாத அரசுப் பணியாளரின் அல்லது மணவிலக்கு பெற்ற அல்லது வாழ்க்கைத் துணையை இழந்த அரசுப் பணியாளரின் சகோதரர் அல்லது சகோதரி.
(3) இறந்த அல்லது மருத்துவ இயலாமை காரணமாகப் பணி ஓய்வு பெற்ற அரசுப் பணியாளரின் குடும்பம் கருணை அடிப்படையில் பணி நியமனம் பெறுவதற்கு பின்வரும் நிபந்தனைகளுக்குட்பட்டு தகுதி பெறும். அவையாவன:-
(a) குடும்பம் வறிய நிலையில் இருத்தல் வேண்டும்.
(b) குடும்பத்தின் யாதொரு உறுப்பினரும் அரசு அல்லது யாதொரு தனியார் நிறுவனத்தில் முறையான பணியில்இ ருத்தல் கூடாது.
ஆனால், அரசுப் பணியாளர் இறப்பதற்கு முன்னர் அல்லது மருத்துவ இயலாமை காரணமாகப் பணி ஓய்வு பெறுவதற்கு முன்னர், அக்குடும்பத்தின் உறுப்பினர் ஒருவர், நிரந்தரப் பணியிலிருந்து, அக்குடும்பத்திற்கு யாதொரு பண உதவியும் அளிக்காமல் தனியாக வாழ்ந்து வருவது அக்குடும்பத்தை தகுதியற்றதாகிவிடாது:
மேலும், அக்குடும்ப உறுப்பினரில் ஒருவர் இராணுவப் பணியிலிருப்பது அக்குடும்பத்தைத் தகுதியற்றதாகிவிடாது.
(c) பகுதிகள் (a) மற்றும் (b) இன் நோக்கத்திற்காக, மற்றும் நேர்விற்கேற்ப, அரசுப் பணியாளர் இறுதியாக வசித்த அல்லது வசிக்கின்ற பகுதியின் வட்டாட்சியரிடமிருந்து படிவம்-II-இல் ஒருங்கிணைந்த சான்றிதழ் பெறப்பட வேண்டும்:
3ஆனால், அரசுப் பணியாளர், வேறொரு மாநிலத்தைப் பிறப்பிடமாகக் கொண்ட அல்லது கொண்டுள்ள நேர்வில், அவரது சொந்த மாநிலத்தின் தொடர்புடைய வருவாய்க் கோட்ட அலுவலரிடமிருந்து அல்லது துணை ஆட்சியரிடமிருந்து சான்றிதழ் பெறப்பட வேண்டும்.
விளக்கம்.- இந்த விதியின் நோக்கத்திற்காக, "வறிய நிலையிலுள்ள ஒரு குடும்பம்" என்பது அனைத்து ஆதாரங்களிலிருந்தும் ஆண்டொன்றுக்கு ரூபாய் 3 இலட்சத்திற்கு மேற்படாமல் வருவாய் ஈட்டும் குடும்பம் எனப் பொருள்படும்:
ஆனால், நேர்விற்கேற்ப, இறந்த அரசுப் பணியாளரின் குடும்ப ஓய்வூதியம் அல்லது மருத்துவ இயலாமை காரணமாக பணி ஓய்வு பெற்ற அரசுப் பணியாளரின் ஓய்வூதியத்தை இக்கணக்கில் சேர்த்துக்கொள்ள கூடாது.
(4) ஐயப்பாடுகளைக் களையும் வகையில், இதனால் பின்வருமாறு விளக்கமளிக்கப்படுகிறது,-
(a) இறந்த அல்லது மருத்துவ இயலாமை காரணமாகப் பணி ஓய்வு பெற்ற அரசுப் பணியாளர் குடும்பத்தின் யாதொரு உறுப்பினரும், நிரந்தரமற்ற, தற்காலிக அல்லது ஒப்பந்த அடிப்படையிலான தினக்கூலியில் அல்லது தொகுப்பூதியத்தில் பணியமர்த்தப்பட்டிருப்பது, இவ்விதிகளின் கீழ் பணிநியமனம் பெற விண்ணப்பிப்பதற்கு அக்குடும்பத்திற்குத் தடையாக அமையாது;
(b) இறந்த அரசுப் பணியாளரின் வாழ்க்கைத் துணை, இவ்விதிகளின் கீழ் நியமனம் பெற விண்ணப்பித்து, பணி நியமனம் பெறுவதற்கு முன்னர் மறுமணம் செய்கின்ற நேர்வில், அவர் பணி நியமனம் பெறுவதற்குத் தகுதியற்றவராகக் கருதப்பட மாட்டார்.
4. நேமகம்.- (1) இறந்த அல்லது மருத்துவ இயலாமை காரணமாகப் பணி ஓய்வு பெற்ற அரசுப் பணியாளரின் வாழ்க்கைத் துணை, உடல் நலமின்மை காரணமாகப் பணி நியமனத்திற்கு விண்ணப்பிக்க இயலாத நேர்வில், விதி 3-இல் குறிப்பிடப்பட்டுள்ள தகுதிக்குட்பட்டு, அவ்வாழ்க்கைத் துணையால் நேமகம் செய்யப்படுகிற, மகன் அல்லது மகளுக்குப் பணி நியமனம் வழங்கப்படலாம்.
(2) திருமணமாகாமல் இறந்த அரசுப் பணியாளரின் பெற்றோரின் உடல் நலமின்மை காரணமாகப் பணி நியமனத்திற்கு விண்ணப்பிக்க இயலாத நேர்வில், விதி 3-இல் குறிப்பிடப்பட்டுள்ள தகுதிக்குட்பட்டு, அப்பெற்றோரால் நேமகம் செய்யப்படுகிற, சகோதரர் அல்லது சகோதரிக்குப் பணி நியமனம் வழங்கப்படலாம்.
(3) இறந்த, மணவிலக்கு பெற்ற அல்லது வாழ்க்கைத் துணையை இழந்த அரசுப் பணியாளருக்கு குழந்தைகள் இல்லாத நிலையில் அல்லது உரிய அகவை எய்தாத குழந்தைகள் உள்ள நிலையில் அல்லது அத்தகைய இறந்த அரசுப் பணியாளரின் குழந்தைக்கு உடல்நலமின்மை காரணமாகப் பணி நியமனம் வழங்க இயலாத நிலையில் மற்றும் இறந்த அரசுப் பணியாளரின் பெற்றோர், அவர்களது உடல்நலமின்மை காரணமாக விண்ணப்பிக்க இயலாத நிலையில், விதி 3-இல் குறிப்பிடப்பட்டுள்ள தகுதிக்குட்பட்டு அப்பெற்றோரால் நேமகம் செய்யப்படுகிற, சகோதரர் அல்லது சகோதரிக்கு பணி நியமனம் வழங்கப்படலாம்.
5. விண்ணப்பிப்பதற்கான கால அளவு.- இவ்விதிகளின் கீழ் பணி நியமனம் பெறுவதற்கான ஒவ்வொரு விண்ணப்பமும், அரசுப் பணியாளர் இறந்த நாளிலிருந்து அல்லது மருத்துவ இயலாமை காரணமாக பணி ஓய்வு பெற்ற நாளிலிருந்து அல்லது 1872 ஆம் ஆண்டு இந்திய சாட்சியச் சட்டத்தின் (மத்தியச் சட்டம் 1/1872) 107 அல்லது 108 ஆம் பிரிவுகளின் கீழ், காணாமல் போன அரசுப் பணியாளர் இறந்துவிட்டதாக அறிவிக்கப்படுகிற நீதிமன்ற உத்தரவு கிடைக்கப்பெறும் நாளிலிருந்து மூன்று ஆண்டுகளுக்குள் அளிக்கப்பட வேண்டும்.
6. வயது வரம்பு.- (1) கருணை அடிப்படையில் நியமனம் செய்யப்படும் பணியிடம் தொடர்பாக இவ்விதிகளில் என்ன சொல்லியிருப்பினும், பணி நியமனத்திற்கு விண்ணப்பிக்கும் நாளில்,-
(a) இறந்த அல்லது மருத்துவ இயலாமை காரணமாகப் பணி ஓய்வு பெற்ற அரசுப் பணியாளரின் வாழ்க்கைத் துணை அல்லது இறந்த அரசுப் பணியாளரின் பெற்றோர், ஐம்பது வயதை நிறைவு செய்திருக்கக் கூடாது; மற்றும்
(b) இறந்த அல்லது மருத்துவ இயலாமை காரணமாகப் பணி ஓய்வு பெற்ற அரசுப் பணியாளரின் மகன், மகள், சகோதரர் அல்லது சகோதரி, நாற்பது வயதை நிறைவு செய்திருக்கக் கூடாது.
(2) கருணை அடிப்படையில் நியமனம் செய்யப்படும் பணியிடம் தொடர்பாக இவ்விதிகளில் என்ன சொல்லியிருப்பினும், பணி நியமனத்திற்கு விண்ணப்பிக்கும் நாளன்று விண்ணப்பதாரருக்கு யாதொரு குறைந்தளவு வயது வரம்பு இல்லை:
ஆனால், விண்ணப்பதாரருக்குப் பதினெட்டு வயது நிறைவடையாத வரையில், அவருக்குப் பணி நியமனம் வழங்கப்படக்கூடாது.
7. கல்வித் தகுதி.- இந்த விதிகளின் கீழ் பணி நியமனம் செய்யப்படுவதற்கு, விண்ணப்பதாரர், விண்ணப்பிக்கும் நாளன்று தமிழில் போதிய தகுதியுடன் அவர் விண்ணப்பித்துள்ள பணியிடத்திற்காக வரையறுக்கப்பட்டுள்ள கல்வித் தகுதியையும் பெற்றிருக்க வேண்டும்.
8. பணி நியமன விண்ணப்பம்.- (1) இறந்த அல்லது மருத்துவ இயலாமை காரணமாகப் பணி ஓய்வு பெற்ற அரசுப் பணியாளரின் குடும்பத்தைச் சேர்ந்த தகுதியான நபர் ஒருவர் இந்த விதிகளில் பணி நியமனம் செய்யப்படுவதற்கான விண்ணப்பத்தை நேர்விற்கேற்ப படிவம்- I-இல் இதற்கெனவே உருவாக்கப்பட்டுள்ள துறையின் வலைவிவரப்பக்கத்தில் அல்லது வலைத்தளம் வாயிலாக இணைய வழியாக அல்லது தொடர்புடைய அரசுப் பணியாளர் இறந்தபோது அல்லது மருத்துவ இயலாமை காரணமாகப் பணி ஓய்வு பெற்ற போது பணிபுரிந்த அலுவலகத் தலைவரிடம் எழுத்து வடிவில் விண்ணப்பிக்கலாம்.
(2) விண்ணப்பத்துடன் பின்வரும் சான்றிதழ்கள் இணைக்கப்பட வேண்டும், அவையாவன:-
(அ) நேர்விற்கேற்ப, அரசுப் பணியாளரின் இறப்புச் சான்றிதழ் அல்லது மருத்துவ அடிப்படையில் தகுதியின்மை செய்யப்பட்டதன் காரணமாக ஓய்வு பெற்றதற்கான ஆணை.
(ஆ) இறந்த அரசுப் பணியாளர் குறித்த நேர்வில் சட்டப்படியான வாரிசுச் சான்றிதழ்
(இ) படிவம்-II-இல் ஒருங்கிணைந்த சான்றிதழ்
(ஈ) விண்ணப்பதாரரின் பிறப்புச் சான்றிதழ்
(உ) விண்ணப்பதாரரின் கல்வித் தகுதி சான்றிதழ்கள்4 (ஊ) தத்தெடுக்கப்பட்ட மகன் அல்லது மகள் குறித்த நேர்வில், பதிவு செய்யப்பட்ட தத்தெடுப்பு ஆவணம்.
(எ) உறுதிமொழிச் சான்றிதழ்,-
(i) இறந்த அல்லது மருத்துவ இயலாமை காரணமாகப் பணி ஓய்வு பெற்ற அரசுப் பணியாளரின் மகன் அல்லது மகள் குறித்த நேர்வில், பணிநியமனம் செய்யப்படுவதன்பேரில், நேர்விற்கேற்ப உடன்பிறந்தோரையும் பெற்றோரையும் அவர் பேணிப் பாதுகாக்க வேண்டும்;
(ii) இறந்த அல்லது மருத்துவ இயலாமை காரணமாக பணி ஓய்வு பெற்ற அரசுப் பணியாளரின் சகோதரர் அல்லது சகோதரி, பணிநியமனம் செய்யப்படுவதன்பேரில், நேர்விற்கேற்ப அவரின் பெற்றோரையும் இறந்த அல்லது மருத்துவ இயலாமை காரணமாகப் பணி ஓய்வு பெற்ற அரசுப் பணியாளரின் குழந்தைகளையும் பேணிப் பாதுகாக்க வேண்டும்;
(3) படிவம்-I-இல் குறிப்பிடப்பட்டுள்ளவாறு, விண்ணப்பிக்கப்பட்ட பணியிடத்தை பின்னர் எக்காரணம் கொண்டும் மாற்றுவதற்கு அனுமதிக்கப்பட மாட்டாது.
9. மாற்று விண்ணப்பம்.- விண்ணப்பதாரர் ஒருவர் இந்த விதிகளின் கீழ் பணி நியமனம் செய்யப்படுவதற்கு விண்ணப்பித்த நாளிலிருந்து ஓராண்டு காலத்திற்குள், அவரது உடல் நலமின்மை காரணமாக அல்லது வேறு ஏதேனும் காரணத்திற்காக, எழுத்துப்பூர்வமாக அவர் அளித்த கோரிக்கையின் அடிப்படையில், விதி (3)-இன் துணை விதி(2)-இல் குறிப்பிடப்பட்டுள்ள முன்னுரிமை வரிசையில் தகுதிக்குட்பட்டு மாற்று விண்ணப்பம் ஒன்றை அளிப்பதற்கு குடும்பத்தின் வேறோர் உறுப்பினரை நேமகம் செய்வதற்கு நியமன அலுவலரால் அனுமதிக்கப்படலாம்.
ஆனால், ஒரு முறைக்கு மேல் அத்தகைய மாற்று விண்ணப்பம் அளிப்பதற்கு அனுமதிக்கப்பட மாட்டாது.
மேலும், அசல் விண்ணப்பதாரர் பணி நியமனம் செய்யப்பட்ட பின்னர் அத்தகைய விண்ணப்பம் ஏதும் அளிப்பதற்கு அனுமதிக்கப்பட மாட்டாது.
(2) இந்த விதிகளின் கீழ் பணி நியமனம் வழங்கப்படுவதற்கு முன்னர் விண்ணப்பதாரர் மரணமடையும் நேர்வில், விதி (3)-இன் துணை விதி(2)-இல் குறிப்பிடப்பட்டுள்ள முன்னுரிமை வரிசையின்படி குடும்பத்தின் மற்றொரு தகுதிவாய்ந்த உறுப்பினர் பணி நியமனத்திற்கான மாற்று விண்ணப்பத்தை அளிக்கலாம்.
10. பணி நியமனத்தின் கீழ் நிரப்பப்படும் பணியிடங்கள்.- விண்ணப்பிக்கும் நாளன்று விண்ணப்பதாரர் பெற்றுள்ள கல்வித் தகுதியின் அடிப்படையில் தொகுதி-"C" மற்றும் தொகுதி-"C"-இல் வரையறுக்கப்பட்டுள்ள பணியிடங்களில் பணி நியமனம் செய்யப்பட வேண்டும்.
விளக்கம்.- இந்த விதிகளின் செயல் நோக்கத்திற்காக, தொகுதி "C" அல்லது தொகுதி "D" பணியிடங்கள் என்பது தமிழ்நாடு 2016ஆம் ஆண்டு அரசுப் பணியாளர்கள் (பணி நிபந்தனைகள்) சட்டத்தின் (தமிழ்நாடு சட்டம் 14/2016) விவர அட்டவணை- XIII-இல் வகைப்படுத்தப்பட்டுள்ள பணியிடங்கள் எனப் பொருள்படும்.
11. இட ஒதுக்கீட்டு விதி.- இந்த விதிகளின் கீழ் மேற்கொள்ளப்படும் பணிநியமனங்களுக்கு தமிழ்நாடு 2016ஆம் ஆண்டு அரசுப் பணியாளர்கள் (பணி நிபந்தனைகள்) சட்டத்தின் (தமிழ்நாடு சட்டம் 14/2016) 27ஆம் பிரிவில் குறிப்பிடப்பட்டுள்ள இட ஒதுக்கீட்டு விதி பொருந்தாது.
12. பணி நியமன உச்சவரம்பு.- (1) ஒரு துறையில் கருணை அடிப்படையில் நியமனம் செய்யப்படும் நபர்களின் மொத்த எண்ணிக்கை, யாதொரு நேரத்திலும், தற்காலிகமாகவோ நிரந்தரமாகவோ அத்துறையில் தொகுதி "C"-இல் இணைக்கப்பட்டுள்ள அனைத்து வகையிலான பணியடங்களுக்கு ஒப்பளிக்கப்பட்ட மொத்த எண்ணிக்கையின் ஐந்து விழுக்காட்டிற்கு மிகையாக இருக்கக் கூடாது.
(2) தொகுதி "D" பதவிகளைப் பொறுத்த வரை, அத்தகைய உச்சவரம்பு ஏதுமில்லை.
13. பணி நியமனத்தில் முன்னுரிமை வரிசைமுறை.- நேர்விற்கேற்ப, அரசுப் பணியாளர் மரணமடைந்த நாள் அல்லது 1872ஆம் ஆண்டு இந்திய சாட்சியச் சட்டத்தின் (மத்தியச் சட்டம் 1/1872) 107 அல்லது 108ஆம் பிரிவுகளின் கீழ் நீதிமன்றத்தால் அறிவிக்கப்பட்டவாறான இறந்த நாள் அல்லது மருத்துவ இயலாமை காரணமாகப் பணி ஓய்வு பெற்ற நாள் என்ற வரிசை முறையில், தகுதிவாய்ந்த விண்ணப்பதாரர்களிலிருந்து கருணை அடிப்படையில் பணி நியமனம் செய்யப்பட வேண்டும்.
14. விண்ணப்பங்கள் மீது நடவடிக்கை மேற்கொள்வதற்கான நடைமுறை.- (1) இறந்தபோது அரசுப் பணியாளர் பணிபுரிந்த அலுவலகத்தின் தலைவர் அரசுப் பணியாளரின் இறப்பு குறித்து உடனடியாக துறைத் தலைவருக்கு தகவல் தெரிவித்து தேவையான விவரங்களை ஒரு மாதத்திற்குள் துறைத் தலைவரிடம் அளிக்க வேண்டும்.
(2) அலுவலகத் தலைவர், இயன்ற விரைவில் ஆனால் அரசுப் பணியாளர் இறந்த நாளிலிருந்து முப்பது நாட்களுக்கு மிகாமல், இறந்த அரசுப் பணியாளரின் குடும்பத்தினருக்கு கருணை அடிப்படையிலான நியமனத்திற்கான வழிவகை குறித்து உரிய ஒப்புகையுடன் எழுத்துப்பூர்வமாக தெரிவிக்க வேண்டும்.
(3) விதி 8-இன் துணை விதி(1)-இன் கீழ், இறந்த அல்லது மருத்துவ இயலாமை காரணமாகப் பணி ஓய்வு பெற்ற அரசுப் பணியாளரின் குடும்ப உறுப்பினர் எவரிடமிருந்தேனும், பணி நியமனத்திற்கென ஏதேனும் விண்ணப்பம் வரப்பெற்றதன்பேரில், இந்த விதிகளின் கீழ் நியமனத்திற்கான அனைத்து நிபந்தனைகளையும் விண்ணப்பதாரர் நிறைவு செய்துள்ளாரா என்பதை அலுவலகத் தலைவர் ஆராய்ந்து செய்து, அவ்வாறு அவர் நிறைவு செய்திருப்பாராயின், விண்ணப்பம் பெறப்பட்ட நாளிலிருந்து ஒரு மாதத்திற்குள் அத்தகைய நியமனத்திற்கான காலிப்பணியிட விவரத்தைக் குறிப்பிட்டு அவரது அறிக்கையுடன் அவ்விண்ணப்பத்தைத் துறைத் தலைவருக்கு அனுப்ப வேண்டும்.
(4) இந்த விதிகளின் கீழ் பணி நியமனம் செய்யப்படுவதற்கான தேவைகளை விண்ணப்பதாரர் நிறைவு செய்யாத நேர்வில், அலுவலகத் தலைவர் விண்ணப்பம் பெறப்பட்ட நாளிலிருந்து ஒரு மாத காலத்திற்குள் விண்ணப்பத்தை நிராகரிப்பதற்கான ஆணையைப் பிறப்பித்து அத்தகவலை விண்ணப்பதாரருக்குத் தெரிவிக்க வேண்டும்.
(5) விண்ணப்பதாரர், துணை விதி (4)-இன் கீழ் நிராகரிப்பு ஆணையால் பாதிக்கப்பட்டிருப்பாராயின், அத்தகைய ஆணை பெறப்பட்ட நாளிலிருந்து இரண்டு மாத கால அளவிற்குள் துறைத் தலைவரிடம் மேல்முறையீடு செய்யலாம்;
5இருப்பினும், துறைத் தலைவரால் நிராகரிப்பு ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ள நேர்வில், தலைமைச் செயலகத்தின் தொடர்புடைய துறையின் அரசுச் செயலாளரிடம் மேல்முறையீடு செய்ய வேண்டும்.
(6) துணை விதி (3)-இன் கீழ், அலுவலகத் தலைவரிடமிருந்து விண்ணப்பம் கிடைக்கப்பெற்றதன்பேரில், இந்த விதிகளின் கீழ் பணி நியமனம் செய்யப்படுவதற்கான அனைத்து நிபந்தனைகளையும் விண்ணப்பதாரர் நிறைவு செய்துள்ளாரா என்பதை துறைத் தலைவர் உறுதி செய்து, அலுவலகத் தலைவரிடமிருந்து அறிக்கை பெறப்பட்ட நாளிலிருந்து பதினைந்து நாட்களுக்குள், இறந்த அல்லது மருத்துவ இயலாமை காரணமாகப் பணி ஓய்வு பெற்ற நபர், அவரின் இறப்பின்போது பணிபுரிந்த அலுவலகத்திலுள்ள ஏதேனும் காலிப்பணியிடத்தில் அல்லது அவரின் நிருவாகக் கட்டுப்பாட்டின் கீழுள்ள வேறு ஏதேனும் அலுவலகத்தில் அவரை பணி நியமனம் செய்து பணி நியமன ஆணை வழங்க வேண்டும்:
இருப்பினும், காலிப்பணியிடம் ஏதுமில்லையெனில் அல்லது மூன்று மாத காலத்திற்குள் காலிப்பணியிடம் உருவாவதற்கான வாய்ப்பு இல்லையெனில், இறந்த அல்லது மருத்துவ இயலாமை காரணமாகப் பணி ஓய்வு பெற்ற அரசுப் பணியாளர் இறுதியாக பணிபுரிந்த மாவட்டத்தின் ஆட்சியருக்கு அலுவலகத் தலைவரின் அறிக்கையுடன் அந்த விண்ணப்பத்தைத் துறைத் தலைவர் அனுப்ப வேண்டும்.
(7) இந்த விதிகளின் கீழ் பணி நியமனம் செய்யப்படுவதற்கு விண்ணப்பித்துள்ள இறந்த நபரின் வாழ்க்கைத் துணை மறுமணம் செய்துள்ள நேர்வில், இறந்த நபரின் குழந்தைகளையும் பெற்றோரையும் அவ்வாழ்க்கைத்துணை பராமரிப்பார் என்பதற்கான உறுதிமொழியை அவரிடமிருந்து பெற்ற பின்னரே அவருக்கு பணி நியமன ஆணையை பணி நியமன அலுவலர் வழங்க வேண்டும்.
(8) ஒவ்வொரு மாவட்டத்தின் மாவட்ட ஆட்சியரும் பணி மூப்பு அடிப்படையில் இந்த விதிகளின் கீழ் பெறப்பட்ட மற்றும் நிலுவையிலுள்ள விண்ணப்பங்களின் எண்ணிக்கையை குறிப்பிடும் பதிவேடு ஒன்றை வைத்துவர வேண்டும். காலாண்டின் இறுதிக்குப் பின்னர், மாதத்தின் 15ஆம் நாளுக்கு முன்னர் அரசின் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறைக்கு இது தொடர்பான காலாண்டு அறிக்கையை மாவட்ட ஆட்சியர் அனுப்ப வேண்டும்.
(9) தொடர்புடைய மாவட்ட ஆட்சியரால் வைத்துவரப்படும் பதிவேட்டில் விண்ணப்பதாரர்கள் எவரும் இல்லை என்ற சான்றிதழைப் பெற்ற பின்னரே, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அல்லது வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி இயக்ககத்தால் நிரப்பப்பட வேண்டி தொகுதி "C" அல்லது தொகுதி "D" பணியிடங்களில் உள்ள காலிப்பணியிடங்களை துறைத் தலைவர் வழங்க வேண்டும்.
(10) படிவம் III-இல் வரையறுக்கப்பட்டுள்ள வடிவில், இந்த விதிகளின் கீழ் பெறப்பட்ட, தொகுதி "C" மற்றும் தொகுதி "D" பணியிடங்களில் நியமனம் செய்யப்படுவதற்கான விண்ணப்பங்களின் விவரங்களைத் தனியே காட்சிப்படுத்துகிற ஒரு தனி வலைப்பக்கத்தை தலைமைச் செயலகத்திலுள்ள துறைகள், துறைத் தலைவர்கள் மற்றும் மாவட்ட ஆட்சியர்கள் தத்தம் வலைதளங்களில் இடம்பெறச் செய்ய வேண்டும். நிலுவை விவரங்கள் திங்கள்தோறும் முதல் நாளன்று நாளதுவரையாக்கப்பட வேண்டும்.
(11) ஒரு குடும்பத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட நபருக்கு இந்த விதிகளின் கீழ் பணி நியமனம் வழங்கப்படக் கூடாது.
(12) உள்ளபடியான காலிப்பணியிடங்களில் மட்டுமே இந்த விதிகளின் கீழ் பணி நியமனம் செய்யப்பட வேண்டும். அதற்கென மிகைப்பணியடங்கள் ஏதும் உருவாக்கப்படக் கூடாது.
15. தலைமைச் செயலகத் துறைகளுக்கு சிறப்பு விதித்துறைகள்.- (1) தலைமைச் செயலகத் துறைகளில், தொகுதி "C"-இல் உள்ள ஏதேனும் பணியிடங்களில் நியமனம் செய்யப்படுவதற்கு விண்ணப்பதாரர் தகுதி பெற்று அத்தகைய பதவிகளில் காலிப்பணியிடம் ஏதும் இல்லாதபோது,-
(அ) அவரது விருப்பத்திற்குட்பட்டும், தொகுதி 'C'-இல் உள்ள பதவியில் பின்னர் பணிநியமனம் கோரமாட்டேன் என்ற உறுதியளிப்பதன் பேரிலும் தமிழ்நாடு தலைமைச் செயலகத்தில் தொகுதி "D"-இல் உள்ள குறைந்த பதவித்தரத்தில் அவர் நியமிக்கப்படலாம்; அல்லது
(ஆ) பிற துறைகளில் தொகுதி "C"-இல் உள்ள பொருத்தமான பணியிடத்தில் நியமனம் செய்யப்படுவதற்காக, சென்னை மாவட்ட ஆட்சியருக்கு அந்த விண்ணப்பம் அனுப்பப்படலாம்.
(2) தலைமைச் செயலகத் துறைகளில், இந்த விதிகளின் கீழ் பின்வருமாறு பணி நியமனம் செய்யப்பட வேண்டும்,- (அ) உதவியாளர், தட்டச்சர் மற்றும் நேர்முக எழுத்தர் பதவிகளுக்கு மனித வள மேலாண்மை துறையால் பணி நியமனம் வழங்கப்பட வேண்டும். தொடர்புடைய துறைகள், இந்த விதிகளின்படி விண்ணப்பத்தின் மீது நடவடிக்கை மேற்கொண்டு பணி நியமன ஆணை பெறும் பொருட்டு, அதன் பரிந்துரையுடன் கோப்பினை மனித வள மேலாண்மை துறைக்கு அனுப்ப வேண்டும்.
(ஆ) அலுவலக உதவியாளர் மற்றும் பதிவுரு எழுத்தர் பணியிடங்களில் தொடர்புடைய துறையால் பணி நியமனம் வழங்கப்பட வேண்டும்.
16. பணி நியமனங்களை வரன்முறைப்படுத்துதல்.- நியமன அலுவலர், இந்த விதிகளின் கீழ் நியமனம் செய்யப்பட்ட நபரின் பணியை அவரின் தகுதிகுட்பட்டு அவர் பணியில் சேர்ந்த நாளிலிருந்து ஓராண்டிற்குள் வரன்முறைப்படுத்த வேண்டும்.
17. விதித்துறைகளைத் தளர்த்துவதற்கான அதிகாரம்.- இந்த விதிகளைச் செயற்படுத்துவது யாதொரு நபருக்கும் இடர்பாட்டினை ஏற்படுத்துகிற நேர்வில் எழுத்து மூலமாக பதிவு செய்யப்பட வேண்டிய காரணத்திற்காக அவ்வாறு செய்வது அவசியமானது அல்லது உகந்தது என அரசு கருதுமாயின், ஆணை வாயிலாக, இந்த விதிகளின் யாதொரு விதித்துறைகளையும் தளர்த்தலாம்.
இருப்பினும், யாதொரு பணியிடத்தில் நியமனம் செய்யப்படுவதற்காக வரையறுக்கப்பட்டுள்ள கல்வித் தகுதி தளர்த்தப்படக் கூடாது.
18. பொருள் விளக்கம்.- இந்த விதிகளின் பொருள் விளக்கம் குறித்து ஏதேனும் ஐயப்பாடு எழும் நேர்வில், அரசுக்கு அனுப்பப்படலாம். அது குறித்த அரசின் முடிவே இறுதியானதாகும்.
19. காப்புரை.- இந்த விதிகள் செயலுக்கு வரும் நாளன்று, கருணை அடிப்படையில் பணிநியமனம் செய்யப்படுவதற்கு விண்ணப்பித்துள்ள அல்லது கருணை அடிப்படையில் ஏதேனும் பணியிடத்தில் பணிநியமனம் செய்யப்பட்டுள்ள யாதொரு நபரையும் இந்த விதிகளில் உள்ள எவையும் எவ்வகையிலும் பாதிக்காது.
6படிவம் – I
(8(1) ஆம் விதியைக் காண்க)
கருணை அடிப்படையில் பணிநியமனத்திற்கான விண்ணப்பப் படிவம்.
| 1. | விண்ணப்பதாரரின் பெயர் | |
| 2. | பிறந்த நாள் (பிறப்புச் சான்றிதழ் இணைக்கப்பட வேண்டும | |
| 3. | வயது (விண்ணப்பிக்கும் நாளன்றுள்ளவாறாக) | |
| 4. | விண்ணப்ப நாள் | |
| 5. | கல்வித் தகுதி (விண்ணப்பிக்கும் நாளன்றுள்ளவாறாக) சான்றிதழ்கள் இணைக்கப்பட வேண்டும்). | |
| 6. | விண்ணப்பதாரர் தமிழில் போதிய தகுதியைப் பெற்றுள்ளாரா? | |
| 7. | இருப்பிட/குடியிருப்பு முகவரி | |
| 8. | இறந்த / மருத்துவ இயலாமை காரணமாக பணி ஓய்வு பெற்ற அரசுப் பணியாளருடனான உறவுமுறை (தத்தெடுக்கப்பட்டிருப்பின், தத்தெடுப்பு சான்றிதழ் இணைக்கப்பட வேண்டும். | |
| 9. | திருமண நிலை (திருமணமானவரா / திருமணமாகாதவரா) | |
| 10. | விண்ணப்பிக்கும் பதவியின் பெயர் (தொகுதி "C" அல்லது தொகுதி "D" என குறிப்பிடப்பட வேண்டும். | |
| 11. | இறந்த / மருத்துவ இயலாமை காரணமாக பணி ஓய்வு பெற்ற அரசுப் பணியாளரின் பெயர் | |
| 12. | இறந்த நாள் / மருத்துவ இயலாமை காரணமாக பணி ஓய்வு பெற்ற நாள் / உரிய நீதிமன்ற உத்தரவு வாயிலாக இறந்ததாக அறிவிக்கப்பட்ட நாள் | |
| 13. | இறந்த அல்லது மருத்துவ இயலாமை காரணமாக பணி ஓய்வு பெற்ற அரசுப் பணியாளர், இறந்த நேரத்தில் அல்லது மருத்துவ இயலாமை காரணமாக பணி ஓய்வு பெற்ற நேரத்தில் வகித்த பதவி, பணி புரிந்த இடம் மற்றும் அலுவலகம் | |
| 14. | பணி ஓய்வு பெறும் நாள் (இறக்காமலிருந்து அவர் பணியில் தொடர்ந்திருப்பாரெனில்) | |
| 15. | அரசுப் பணியாளர் இறந்த நாளில் அவரின் வயது | |
| 16. | இறந்த அல்லது மருத்துவ இயலாமை காரணமாக பணி ஓய்வு பெற்ற நாளன்றுள்ளவாறான அரசுப் பணியாளரின் பணிக்கால அளவு | |
| 17. | பணி ஓய்வு பெற்ற நாளில் அவரின் வயது (மருத்துவ இயலாமை குறித்த நேர்வில்) | |
| 18. | இறந்த / மருத்துவ இயலாமை காரணமாக பணி ஓய்வு பெற்ற அரசுப் பணியாளருக்கு எதிரான குற்றச்சாட்டு ஏதும் நிலுவையில் உள்ளதா? | |
| 19. | குடும்ப உறுப்பினர்களின் விவரங்கள் (பெயர், வயது, உறவுமுறை, திருமண நிலை, தொழில் ஆகியவை குறிப்பிடப்பட வேண்டும்) | |
| 20. | குடும்ப உறுப்பினர்களின் அனைத்து ஆதாரங்களிலிருந்து பெறப்படும் வருமான விவரங்கள் (அவரைச் சார்ந்துள்ள பிற நபர்களால் பெறப்படும் ஓய்வூதியம், அசையும்/அசையா சொத்துக்களிலிருந்து பெறப்படும் வருமானம் உட்பட) (தொடர்புடைய அதிகாரியிடமிருந்து பெறப்பட்ட சான்றிதழ் இணைக்கப்பட வேண்டும்). | |
| 21. | இறந்த அல்லது மருத்துவ இயலாமை காரணமாக பணி ஓய்வு பெற்ற அரசுப் பணியாளரை சார்ந்த மற்ற உறுப்பினர்கள் எவரேனும் அரசு / தனியார் நிறுவனத்தில் முறையான பணியில் உள்ளனரா? | |
| 22. | இறந்தவரைச் சார்ந்துள்ள ஏனைய உறுப்பினர்களிடமிருந்து தடையில்லாச் சான்றிதழ் பெறப்பட்டுள்ளதா? (பொருந்துகிறவாறாக) | |
| 23. | விண்ணப்பதாரர் அளிக்க விரும்புகின்ற ஏனைய யாதொரு தகவல் |
உறுதிமொழி
----------- ஆகிய நான், நன்கு அறிந்த வரையிலும், நம்புகிற வரையிலும் மேற்கண்ட விவரங்கள் உண்மையானவை என்று இதனால் உறுதியளிக்கிறேன். என் தரப்பில் ஏதேனும் தவறாக தெரிவிக்கப்பட்டிருந்தாலோ அல்லது ஆதாரத்தை மறைத்திருப்பது கண்டறியப்பட்டாலோ, இந்த விதிகளின் கீழ் கருணை அடிப்படையில் எனக்கு அளிக்கப்பட்ட பணி நியமனத்தை முன் அறிவிப்பின்றி அல்லது யாதொரு காரணமும் தெரிவிக்காமல் பணி முற்றுவிப்பு செய்யப்படுவதற்கு நான் ஒப்புக்கொள்கிறேன்.
இடம்: விண்ணப்பதாரரின் கையொப்பம் நாள்: மேலொப்பமிடப்பட்டது
அலுவலக தலைவர்7 படிவம் II
விதி 8(2) (c)-ஐ காண்க
கருணை அடிப்படையில் பணி நியமனத்திற்கான ஒருங்கிணைந்த சான்றிதழ் 1. திரு/திருமதி/செல்வி ----------என்பவர் -------- அலுவலகத்தில் ----------- பணியிடத்தில் பணியில் இருந்த போது ----------- நாளன்று இறந்தார்.
2. அவரின் நிரந்த குடியிருப்பு முகவரி --------------, அவர் கடைசியாக குடியிருந்த முகவரி ----------------
3. இறந்த அரசுப் பணியாளரின் சட்டப்பூர்வ வாரிசுதாரர்களின் விவரங்கள் பின்வருமாறு;-
| தொ. எண் (1) | பெயர் (2) | வயது (3) | உறவு முறை (4) | திருமண நிலை (5) | கல்வித் தகுதி (6) | ே வ ை ல வ ா ய் ப் பு / ப ணி வி வ ர ங் க ள் ( ம ா நி ல அ ர சு , ெ ப ா து த் து ை ற நி று வ ன ங் க ள் / ம த் தி ய அரசு/தனியார் முதலியன) (7) | வேலை அளிப்பவரின் விவரங்கள் (8) | மாதாந்திர சம்பளம் (ரூ) (9) | ஆண்டு வருமானம் (ரூ) 10) |
(i) இறந்த அரசுப்பணியாளருக்கு மற்றொரு கணவர் / மனைவி இல்லை.
(ii) இறந்த அரசுப் பணியாளரின் சட்டப்பூர்வ வாரிசுதாரர் / வாரிசுதாரர்கள் இறந்த அரசுப் பணியாளர் இறந்த நாளுக்கு முன்னரே பணியமர்த்தப்பட்டு, குடும்பத்திற்கு ஆதரவளித்து / ஆதரவளிக்காமல் தனியாக வசித்து வருகின்றனர்.
4. இறந்த அரசுப் பணியாளர் ________ மற்றும் அவருடைய சட்டப்படியான வாரிசுகள் வைத்திருக்கும் அசையா சொத்துகளின் விவரங்கள் பின்வருமாறு:-
| தொ. எண் (1) | பெயர் (2) | (3) | வயது ஆதார் எண் (4) | அசையா சொத்துக்கள், நிலம் மற்றும் குடியிருப்பு வீடுகள் உட்பட கட்டடங்கள் (ஒவ்வொரு சொத்தின் விவரமும் தனித்தனியே அளிக்க வேண்டும்) (5) | வாடகை வருமானம் உட்பட பெறப்படும் ஆண்டு வருமானம். (ரூ.) (6) | ||||
| மாவட்டம் | வருவாய் கிராமம் | நில அளவை எண் | பரப்பு | (நிலம் குறித்த நேர்வில்) மொத்த வழிகாட்டி மதிப்பு (ரூ.) (குடியிருப்பு வீடு உட்பட கட்டிடம் குறித்த நேர்வில் இருந்தால் அதன் தற்போதைய மதிப்பு (ரூ.) | |||||
| 1 | இறந்த அரசுப் பணியாளரின் பெயர் | ||||||||
| 2 | சட்டப்படியான வாரிசு-1 | ||||||||
| 3 | சட்டப்படியான வாரிசு-2 |
5. இறந்த அரசுப் பணியாளரின் பெயரில் மற்றும் அவரது சட்டப்படியான வாரிசுகளின் பெயரிலுள்ள அசையும் சொத்துகளின் விவரங்கள் வருமாறு:-
| தொ. எண் (1) | பெயர் (2) | சொத்து விவரங்கள் (3) | தற்போதைய மதிப்பு (ரூ) (4) | அத்தகைய சொத்துக்களிலிருந்து பெறப்படும் ஆண்டு வருமானம். (ரூ.) (5) |
| 1 | இறந்துவிட்ட அரசு பணியாளரின் பெயர் | |||
| 2 | சட்டப்படியான வாரிசு-1 | |||
| 3 | சட்டப்படியான வாரிசு-2 முதலானோர் |
6. இறந்த அரசுப் பணியாளரின் குடும்பம் திங்களொன்றிற்கு ரூ ............ குடும்ப ஓய்வூதியம் பெற்று வருகிறது. குடும்ப ஓய்வூதியத்தின் ஆண்டு மதிப்பு ரூ................... ஆகும். இறந்த அரசுப் பணியாளரின் அனைத்து சட்டப்படியான வாரிசுகளின் அனைத்து வகையிலுமான ஆண்டு வருமானம் ரூ. .... ஆகும் (குடும்ப ஓய்வூதியம் நீங்கலாக)
7. அரசுப் பணியாளர் இறந்த பிறகு, இறந்த அரசுப் பணியாளரின் குடும்பம் வறிய நிலையில் உள்ளது/இல்லை.
8. _________ மாவட்டத்தின் _______ வட்டத்தின், வட்டாட்சியராகிய ____ என்கிற நான், என் முன் அளிக்கப்பட்ட அனைத்து ஆவணங்களையும் சரிபார்த்து, விரிவான விசாரணைக்குப் பின்னர், திரு/திருமதி/செல்வி _________ என்பவருக்கு (கருணை அடிப்படையில் பணி நியமனம் கோரும் விண்ணப்பதாரரின் பெயர்) இந்த ஒருங்கிணைந்த சான்றிதழை வழங்கியுள்ளேன்.
கருணை அடிப்படையில் நியமனம் கோரும் நோக்கத்திற்காக இந்தச் சான்றிதழ் தனியருக்கு வழங்கப்படுகிறது.
வட்டாட்சியர்
படிவம்-III
(விதி 14ன் துணை விதி (10)ஐ காண்க)
பகுதி-A
தொகுதி –"C" பணியிடங்ளுக்கு கருணை அடிப்படையில் பணி நியமனம் செய்வதற்கான
விண்ணப்பங்களின் பட்டியல்.
--------------- மாதத்தின் முதல் நாளன்றுள்ளவாறான நிலை.
| தொ. எண். | இ ற ந் த / ம ரு த் து வ இயலாமை காரணமாக பணி ஓய்வு பெற்ற அரசுப் பணியாளரின் பெயர். | இறந்த நாள் / மருத்துவ இயலாமை காரணமாக பணி ஓய்வு பெற்ற நாள் / இறந்ததாக நீதிமன்றத்தால் அறிவிக்கப்பட்ட நாள் | நி ய ம ன ம் ே க ா ரு ம் விண்ணப்பதாரரின் பெயர் மற்றும் உறவு முறை. | விண்ண ப் ப ந ா ள் மற்றும் வயது. | த ற் பே ா ை த ய நிலை. |
| (1) | (2) | (3) | (4) | (5) | (6) |
பகுதி-B
தொகுதி –"D'' பணியிடங்களுக்கு கருணை அடிப்படையில் பணி நியமனம் செய்வதற்கான
விண்ணப்பங்களின் பட்டியல்.
--------------- மாதத்தின் முதல் நாளன்றுள்ளவாறான நிலை.
| தொ. எண். | இ ற ந் த / ம ரு த் து வ இயலாமை காரணமாக பணி ஓய்வு பெற்ற அரசுப் பணியாளரின் பெயர். | இறந்த நாள் / மருத்துவ இயலாமை காரணமாக பணி ஓய்வு பெற்ற நாள் / இறந்ததாக நீதிமன்றத்தால் அறிவிக்கப்பட்ட நாள் | நியமனம் கோரும் விண்ண ப் ப த ா ர ரி ன் பெயர் மற்றும் உறவு முறை. | விண்ணப்ப நாள் மற்றும் வயது. | த ற் பே ா ை த ய நிலை. |
| (1) | (2) | (3) | (4) | (5) | (6) |
முகமது நசிமுத்தின், அரசு கூடுதல் தலைமைச் செயலாளர்.
(தமிழாக்கம்)
ந. அருள், இயக்குநர் (மு.கூ.பொ), தமிழ் வளர்ச்சி மற்றும்
செய்தி (மொழிபெயர்ப்பு)த் துறை.
தமிழ்நாடு அரசுக்காக சென்னை எழுதுபொருள் மற்றும் அச்சுத் துறை இயக்குநரால்
அச்சிடப்பட்டு வெளியிடப்பட்டது.