Servants of Knowledge
Tamil Nadu Gazette · Government of Tamil Nadu

Tamil Nadu Acts and Ordinances.

Published 14 June 2023

Type
Ordinary
Gazette no.
24
Part
Part IV
Notifications
Tamil Nadu Ordinance No. 4/2022
Section
Section 2_T_Supp
Identifier
in.gazette.tamilnadu.2023-06-14.Ordinary_24_Part-IV_Section-2_T_Supp
Languages
English, Tamil
Published at
Original source ↗

© [Regd. No. TN/CCN/467/2012-14. தமிழ்நாடு அரசு [R. Dis. No. 197/2009. 2023 [விலை: ரூ. 5.60 காசு

தமிழ்நாடு அரசிதழ் ஆணையின்படி வெளியிடப்பட்டது.

எண் 24] சென்னை, புதன்கிழமை, ஜூன் 14, 2023 வைகாசி 31, சோபகிருது, திருவள்ளுவர் ஆண்டு-2054

பகுதி IV—பிரிவு 2 இன் இணைப்பு

2022-ஆம் ஆண்டு அக்டோபர் திங்கள் 1-ஆம் நாளன்று ஆளுநரால் பிறப்பிக்கப்பட்ட பின்வரும் அவசரச் சட்டமானது பொதுத் தகவலுக்காக இதன்மூலம் வெளியிடப்படுகிறது.

தமிழ்நாடு அவசரச் சட்ட எண். 4/2022.

தமிழ்நாடு மாநிலத்தில் இணையவழி சூதாட்டங்களைத் தடை செய்தலுக்கும் இணையவழி விளையாட்டுகளை ஒழுங்குமுறைப்படுத்துவதற்குமானதோர் அவசரச் சட்டம்.

சமீபத்திய ஆண்டுகளில், இணையவழி சூதாட்ட அடிமைத்தனத்தினால் பலர் தாங்க முடியாத கடனைப் பெறுவதால், அது தற்கொலைகளுக்கு வழிவகுக்கிறது என்பதாலும்;

மேலும், இணையவழி சூதாட்டங்களுக்கு அடிமையாதலானது நிதி நெருக்கடியினை ஏற்படுத்துகிறது மற்றும் பல குடும்பங்களை சீரழிக்கிறது என்பதாலும்;

மேலும், பெரும்பாலும் இணைய வழியில் உள்ள சூதாட்ட சீர்குலைவானது, உலக சுகாதார நிறுவனத்தால் (WHO) அங்கீகரிக்கப்பட்டு, அதன் சர்வதேச நோய்களின் வகைப்பாட்டில் (11வது திருத்தம்) சேர்க்கப்பட்டுள்ளது. இது விடாப்பிடியான அல்லது திரும்பத்திரும்ப நிகழ்கிற விளையாடும் நடத்தை அமைப்பினால் வகைப்படுத்தப்படுகிறது மற்றும் விளையாட்டின் மீதான பலவீனமான கட்டுப்பாடானது மற்ற செயல்பாடுகளை விட சூதாட்டத்திற்கு முன்னுரிமை அளிப்பதனை வெளிப்படுத்துகிறது மற்றும் அவ்வாறு தொடர்ந்து விளையாடுவது தனிநபர், குடும்பம், சமூகம், கல்வி, தொழில் அல்லது முக்கிய செயல்பாடுகள் பிறவற்றில் எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்துகிறது என்பதாலும்;

தமிழ்நாடு சட்டம் 2021/1.

மேலும், மாண்பமை சென்னை உயர் நீதிமன்றமானது, பொது ஆணையின் மூலம் 03.08.2021-ஆம் தேதியிட்ட நீதிப்பேராணை மனு எண்.18022/2020 மற்றும் பிறவற்றில் இணைவெளியில் பணையம் வைத்தல் அல்லது பந்தயம் கட்டுதலானது, அரசமைப்பை மீறுகிறதென தடை செய்வதுடன், மாநிலத்தில் பந்தயம் கட்டுதல் மற்றும் சூதாட்டம் ஆகியவற்றில் அரசமைப்பின் உரிமை உணர்வுக்கு உத்திரவாதம் அளிக்கக்கூடிய ஒரு பொருத்தமான சட்டத்தினை சுதந்திரத்துடன் கொண்டு வருவதுமான 2021-ஆம் ஆண்டு தமிழ்நாடு சூதாட்டம் மற்றும் காவலர் சட்டங்கள் (திருத்தச்) சட்டத்தின் II–ஆம் பகுதியினை நீக்கியது என்பதாலும்;

IV-2-24-(T-Sup)-1

[1]2 மேலும், அரசானது, இணையவழி விளையாட்டுகள் மீது புதிய சட்டம் ஒன்றினை இயற்றி அறிவுரை வழங்குவதற்கு மாண்புமிகு ஓய்வுபெற்ற நீதிபதி திரு. K. சந்துரு அவர்களின் தலைமையின் கீழ் ஐந்து நபர்களைக் கொண்ட குழு ஒன்றை அமைத்தது என்பதாலும்;

மேலும், குழுவானது அதன் அறிக்கையில், செயல்முறையின் இயல்சார் இடைவெளியின் வரைக்கூறுகள், விளையாடும் நேரம், விளையாடுபவர்கள் மற்ற விளையாட்டாளர்களுடனான உறவு, அடிமையாதலின் அளவு, தொடர்புடைய பணத்தின் அளவு, பொருளாதார நடவடிக்கை நிலை, அமைப்பாளரின் இலாப அளவுகோல் மற்றும் கடனின் பங்கு ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு, சீரற்ற வெளியீட்டு உருவாக்கி எதனையும் உள்ளடக்காத வார்த்தை விளையாட்டுகள் அல்லது பலகை விளையாட்டுகள் தவிர்த்து இணையவழி ரீதியிலான விளையாட்டு எதுவும் இணையவழி அல்லாத விளையாட்டுடன் ஒப்பீடு செய்யப்படவியலாது என கவனிக்கப்பட்டது என்பதாலும்;

மேலும், இணையவழி ரம்மி உள்ளிட்ட இணையவழி வகையிலான விளையாட்டுக்களைப் பொறுத்தநேர்வில், சீரற்ற வெளியீட்டு உருவாக்கிகளுக்கான நிரல்நெறிமுறையானது உருவாக்குநர்களுக்குத் தெரியும் எனவும், எனவே, அவை போலி சீரற்ற உருவாக்கிகள் எனவும்; அத்தகைய விளையாட்டுகளை எந்திரங்களுடன் (அமைப்பு அல்லது பயனாளர்களுடன் தொடர்பு கொள்ள வடிவமைக்கப்பட்ட ஒரு தன்னாட்சி நிரலாக்கம் அல்லது பாத்திரம்) விளையாடலாம் எனவும்; சூதாட்ட அமைப்புகளின் மையப்படுத்தப்பட்ட வழங்கி (server) கட்டமைப்பை தணிக்கை செய்ய எந்த வழிமுறையும் இல்லை எனவும்; மேலும் விளையாட்டுகளைக் கையாளவும், தொடர்ந்து விளையாடுவதற்கு விளையாட்டாளர்களைக் கவருவதற்கும் செயற்கை நுண்ணறிவானது பயன்படுத்தப்படலாம் எனவும்; அறிக்கையில் கூறப்பட்டுள்ளது என்பதாலும்;

மேலும் கூறப்பட்ட அறிக்கையானது, இணையவழி சூதாட்டங்களை பொதுவாக இரண்டு வகைகளாக வகை செய்கிறது. அதாவது, ஒன்று குறைந்தபட்ச அல்லது புறக்கணிக்கத்தக்க சீரற்ற காரணியைக் கொண்டது மற்றும் மற்றொன்று சீரற்ற நிகழ்வு/எண்ணிக்கை அது உருவாக்கிகளைக் கொண்டது. அது சீரற்ற போலி மற்றும் அடிமையாக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டும் அதற்கிணங்கியவாறு முந்தையதை ஒழுங்குபடுத்தவும், பிந்தையதைத் தடை செய்யவும் பரிந்துரை செய்கிறது என்பதாலும்;

மேலும், பள்ளிக்கல்வித் துறையின் இரண்டு இலட்சத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர்களிடம், பள்ளி மாணவர்களின் மீது இணையவழி விளையாட்டுகளால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து ஆய்வு செய்வதற்காக அரசு சமீபத்தில் நடத்திய ஆய்வில், எழுபத்து நான்கு விழுக்காட்டிற்கும் அதிகமான ஆசிரியர்கள், பதிலாளர்கள் மாணவர்களின் கவனம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அறுபத்து ஏழு விழுக்காடு பதிலாளர்கள் அதிகமான கண் குறைபாடுகளை கவனித்தாகவும், அவர்களில் எழுபத்து நான்கு விழுக்காட்டிற்கும் அதிகமான மாணவர்கள் அறிவுத்திறன், எழுதும் திறன் மற்றும் படைப்பாற்றல் ஆகியவற்றில் குறைபாட்டைக் கண்டதாகவும், எழுபத்து ஆறு விழுக்காட்டிற்கும் அதிகமான மாணவர்களின் சுயமதிப்பீட்டில் கணிசமான குறைவை அவர்கள் கவனித்துள்ளதாகவும். எழுபத்தேழு விழுக்காட்டிற்கும் அதிகாமான மாணவர்களின் கோபப்படும் தன்மை அதிகரிப்பதையும்; எழுபத்திரண்டு விழுக்காட்டிற்கும் அதிகமான மாணவர்களின் ஒழுக்கமின்மையை கவனித்ததாகவும் கூறினார்கள் என்பதாலும்;

மேலும், அரசானது, முன்மொழியப்பட்ட சட்டத்தின் மீது பொது மக்களின் கருத்தினைக் கேட்கும்போது, தொண்ணூற்று ஒன்பது விழுக்காட்டிற்கும் அதிகமாக, அதாவது மொத்தமாக பெறப்பட்ட 10,735 மின்னஞ்சல்களில் 10,708 மின்னஞ்சல்களானது, இணையவழி சூதாட்டங்களின் மீது முழுமையான தடையினை விதிக்கக் கோரியுள்ளது என்பதாலும்;

மேலும், இணையவழி சூதாட்ட நிறுவனங்கள், சிந்தனையாளர்கள், அரசியல் கட்சிகள், விளையாட்டு வீரர்களின் சங்கம் மற்றும் சமூக ஆர்வளர்கள் ஆகியோரின் பிரதிநிதிகள் அடங்கிய பதினேழு பங்கேற்பாளர்களுக்கு நேரில் தங்களது கருத்துகளைத் தெரிவிக்க வாய்ப்பானது வழங்கப்பட்டது. அவர்கள் தொழில்துறையின் சுயக் கட்டுப்பாட்டினை ஒழுங்குமுறைப்படுத்துவதை அனுமதித்தல், அரசின் மூலம் ஒழுங்குமுறைப்படுத்துதல், உண்மையான பணம் தொடர்புடைய விளையாட்டுகளை மற்ற பிறவகையான விளையாட்டுகளிலிருந்து3 வேறுபடுத்துதல், வயது மற்றும் பணம் தொடர்புடைய கட்டுப்பாடுகளை வழங்குதல், விளம்பரங்களை தடை செய்தல், பணச்சலவை செய்தலைத் தடுத்தல், குறைதீர்க்கும் இயங்குமுறையை வழங்குதல் மற்றும் இணையவழி சூதாட்டங்களுக்கு முழுவதுமாக தடைவிதித்தல் போன்ற பல்வேறு பரிந்துரைகளையும், கோரிக்கைகளையும், அரசிடம் முன்வைத்துள்ளனர் என்பதாலும்;

மேலும், இணையவழி விளையாட்டுகள் மற்றும் சூதாட்டங்களின் சிக்கல்களை பழைய ஈரிணைய வாய்ப்பு (Binary) விளையாட்டுக்கு மாறாக திறன் விளையாட்டு என்பதன் மூலம் சரிசெய்ய இயலாது என்று கருதப்படுகிறது. அடிப்படை மட்டத்தில் தகவல் தொழில்நுட்பமானது எவ்வாறு செயல்படுகிறது என்பதையும் இயல்சார்ந்த மற்றும் பொதுவான இணைய வழிக்கும் இடையேயுள்ளதும் மற்றும் உடல்சார்ந்த மற்றும் இணையவழி விளையாட்டுக்களுக்கு இடையேயுள்ளதுமான நெருக்கடியானதொரு வேறுபாடுகளையும் புரிந்து கொள்கின்ற புதிய கருத்தியல் கட்டமைப்பு தேவைப்படுகிறது என்பதாலும்;

மேலும், ஒரு மென்பொருளில் உண்மையான சீரற்ற வெளியீடானது சாத்தியமில்லை என்பதும், சீரற்றவை எதுவும் உருவாக்குபவரால் எழுதப்பட்ட குறிப்பிட்டதொரு நிரல்நெறிமுறையினைச் சார்ந்திருக்கும் என்பதும் நிரல்நெறிமுறையின் தணிக்கையானது, விளையாட்டு வழங்குநருக்குச் சாதகமாக வடிவமைக்கப்பட்ட மறைமுக நிரல்நெறிமுறைகள் எதனையும் கண்டறிவதை கடினமாக்குகிறது என்பதும் இணையவழி விளையாட்டில் உள்ள செயற்கை நுண்ணறிவின் மேலான விளைவானது, விளையாட்டு சேவைவழங்குநர்/ செயலாக்குநர் உண்மையில் அனைத்து அட்டைகளையும் வைத்திருப்பதுடன், விளையாடுபவர்/ நுகர்வோருக்கு முற்றிலும் நியாயமற்ற விளையாட்டுச் சூழ்நிலையை உருவாக்க முடியும் என்பதும்; போலி சீரற்ற நிலையினை சோதிப்பதற்கு அறிவியல் பூர்வமாக சரிபார்க்கப்பட்ட நிரல்நெறிமுறை ஏதும் தற்போதில்லை என்பதும் நிரூபிக்கப்பட்ட அறிவியல் உண்மை என்பதாலும்;

மேலும், இணையவழி விளையாட்டுகளின் வடிவமைப்பின் உள்ளார்ந்த அடிமைத்தனமும் விளையாடுபவர்களால் செலுத்தப்படும் பணமும், முழுமையான விளையாட்டுமுறையினை சுரண்டலுக்கும் அடிமையாக்கும் தன்மைக்கும் சமமானதாக்குகிறது, அது உடல்நல அபாயம் மட்டுமல்லாது சமூக மற்றும் பொருளாதாரத்தில் பெருவாரியான விகிதத்தில் ஊறு விளைவிப்பினை ஏற்படுத்துகிறது என்பதாலும்;

மேலும், இளைஞர்கள் மீதான இணையவழி சூதாட்டம் மற்றும் இணையவழி விளையாட்டுக்களின் அடிமையாதலின் விளைவுகளின் மீதான பல ஆராய்ச்சி ஆய்வுகளானது, ஆக்ரோசமான நடத்தையின் வளர்ச்சி, மோசமான கண்பார்வை, சிந்தனைத்திறன் குறைதல், பகுப்பாய்தல் சிந்தனை குறைதல், உற்பத்தித்திறன் குறைதல் போன்ற எதிர்மறை விளைவுகளை சுட்டிக்காட்டுகின்றன. எனவே, இவை மாநிலத்தின் மற்றும் அதன் மக்கள் தொகையின் நீண்ட எதிர்கால வாய்ப்புகளைப் பாதிக்கும் ஒரு சக்திவாய்ந்த தீமையாகப் பார்க்கப்படுதல் வேண்டும் என்தாலும்;

மேலும், இணையவழி விளையாட்டானது அடிமைத்தனத்தின் மூலம் குடும்பங்களின் அழிவு மற்றும் தற்கொலை மரணங்களை ஏற்படுத்துகிறது, மக்களின் உடல் நலத்தை பாதிக்கிறது, சமூக ஒழுங்கை சீர்குலைக்கிறது மற்றும் பொது ஒழுங்கைப் பேணுவதில் ஊறு ஏற்படுத்துகிறது என்பதாலும்;

மேலும், அரசானது, கூறப்பட்ட குழுவின் அறிக்கை, பள்ளி ஆசிரியர்களுக்கிடையேயான ஆய்வு முடிவுகள், அந்த கருப்பொருளின் மீதான ஆய்வுகள், பங்குரிமையாளர்கள் மற்றும் பொதுமக்களின் கருத்துகள் ஆகியவற்றைக் கவனமாக கருத்தில் கொண்டு, பின்னர் மாநிலத்தில் இணையவழி சூதாட்டத்தினை தடை செய்வதற்கும் இணையவழி விளையாட்டுகளை ஒழுங்குமுறைப்படுத்துவதற்கும் சட்டமொன்றை இயற்றுவதென முடிவு செய்துள்ளது என்பதாலும்;

மேலும் தமிழ்நாடு சட்டமன்றமானது, அமர்வில் இல்லாதிருப்பதால் மற்றும் தமிழ்நாடு ஆளுநர் இதில் இதன்பின்பு காணப்படுகின்ற நோக்கங்களுக்காக உடனடியாக நடவடிக்கை எடுப்பது அவருக்கு அவசியமாக்குவதாக தற்போதுள்ள சூழ்நிலைகள் இருப்பதாக மனநிறைவடைந்திருப்பதால்;

4

எனவே, அரசமைப்பு சட்டத்தின் 213-ஆம் உறுப்பின் (1)-ஆம் கூறால் அளிக்கப்பட்டுள்ள அதிகாரங்களைப் பயன்படுத்தி ஆளுநர் ஈங்கிதனால் பின்வரும் அவரசச் சட்டத்தை பிறப்பிக்கிறார்:-

அத்தியாயம்-I.

முன்னுரை.

குறுந்தலைப்பு மற்றும்

தொடக்கம்.

1. (1) இந்த அவசரச் சட்டமானது, 2022-ஆம் ஆண்டு தமிழ்நாடு இணையவழி சூதாட்டத்தைத் தடை செய்தல் மற்றும் இணையவழி விளையாட்டுகளை ஒழுங்குமுறைப்படுத்துதல் அவசரச்சட்டம் என வழங்கப் பெறும்.

(2) இது அறிவிக்கையின் வாயிலாக அரசால் குறிப்பிடப்படலாகும் அத்தகைய

தேதியன்று நடைமுறைக்கு வருதல் வேண்டும்.

பொருள் வரையறைகள்.

2. இந்த அவசரச் சட்டத்தின் தறுவாய் வேறு பொருள் குறித்தாலன்றி.-

a) "மேல்முறையீட்டு அதிகார அமைப்பு" என்பது 13-ஆம் பிரிவின் கீழ்

அரசால் நிறுவப்பட்ட மேல்முறையீட்டு அதிகார அமைப்பு என்று பொருள்படும்;

b) "குறிப்பிடப்பட்ட நாள்" என்பது 1-ஆம் பிரிவின் (2)-ஆம் உட்பிரிவின்

கீழ் குறிப்பிடப்பட்ட தேதி என்று பொருள்படும்;

c) "அதிகார அமைப்பு" என்பது, 3-ஆம் பிரிவின் கீழ் நிறுவப்பட்ட

தமிழ்நாடு இணையவழி சூதாட்ட அதிகார அமைப்பு என்று பொருள்படும்;

d) "இருப்பிடத்தின் அடிப்படையில் இணைய உள்ளடக்கத்தினை தடை செய்தல்" என்பது பயனர்களின் புவியியல் இருப்பிடத்தின் அடிப்படையில், இணையவழி உள்ளடக்கம், இணையவழி பயன்பாடுகள் அல்லது இணையவழி சேவைகளை அணுகுவதிலிருந்து பயனர்களைக் கட்டுப்படுத்துவது என்று பொருள்படும்;

e) "அரசு" என்பது மாநில அரசு என்று பொருள்படும்;

f) "உள்ளூர் இணையவழி விளையாட்டுகளின் வழங்குநர்" என்பது,-

i. மைய மேலாண்மை மற்றும் சேவைக் கட்டுபாட்டினை

இம்மாநிலத்திற்குள்; அல்லது

ii. வாடிக்கையாளர்களால் அணுகுவதற்காக கிடைக்கக்கூடிய சேவையினை இம்மாநிலத்திற்குள் தொகுத்து வழங்குகின்ற; இணையவழி விளையாட்டு வழங்குநர் என்று பொருள்படும்;

g) "உள்ளூர் அல்லாத இணையவழி விளையாட்டு வழங்குநர்' என்பது உள்ளூர் இணையவழி விளையாட்டுகள் வழங்குநராக அல்லாத இணையவழி விளையாட்டுகள் சேவை வழங்குநர் எவரும் என்று பொருள்படும்;

h) "பிற பந்தயப் பொருட்கள்" என்பது பணத்திற்கு சமமானதாக அங்கீகரிக்கப்பட்ட எதையும் உள்ளடக்கியது மற்றும் கணினிவழி கடன்கள், கணினிவழி நாணயங்கள், கணினிவழி அடையாள வில்லைகள், கணினிவழி பொருள்கள் அல்லது இணையவழி விளையாட்டிற்காக அல்லது அதன் ஒரு பகுதியாக அல்லது அதன் தொடர்புடையதாக வாங்கப்பட்ட அதனையொத்த பொருள் எதுவும் என்று பொருள்படும்;

i) "இணையவழி சூதாட்டம்" என்பது இணையவழியில் பணயம் வைத்தல் அல்லது பந்தயம் கட்டுதல் மற்றும் பணம் அல்லது பிற பந்தயப் பொருட்களை எந்த வகையிலும், இணையவழி விளையாட்டுக்கான வாய்ப்பு எதனையும் உள்ளடக்கியது என்று பொருள்படும்;.

விளக்கம்.- இந்தப் கூறின் நோக்கத்திற்காக பணயம் வைத்தல் அல்லது பந்தயம் கட்டுதலானது, பந்தயங்களின் சேகரிப்பு அல்லது கோருதலையும், வெற்றிகள் அல்லது பரிசுகளின் பெறுதல் அல்லது வழங்குதலையும், பணமாகவோ அல்லது பிறவாறாகவோ அல்லது பந்தயம் எதனையும் பொறுத்தும் அல்லது பணயம் அல்லது பந்தயம் அல்லது அத்தகைய சேகரிப்பு, கோருதல், பெறுதல் அல்லது வழங்குதல் ஆகியவற்றுக்கு உதவ அல்லது அதனை எளிதாக்கும் நோக்கமுடைய எந்தவொரு செயலையும் உள்ளடக்கியதாகக் கருதப்படுதல் வேண்டும்.

5

(j) "இணையவழி விளையாட்டுச் சேவை" என்பது, இணையவழியில் பணயம் வைத்தல் அல்லது பந்தயம் கட்டுதல் அல்லது இணையவழி வாய்ப்புக்கான சேவை எதுவும் மற்றும், சேவையின் வாடிக்கையாளர் பணம் கொடுக்கிறார் அல்லது ஒப்புக்கொள்கிறார் அல்லது அதன் நோக்கத்திற்காக பிற பங்கு பொருட்களை வைக்கிறார் என்று பொருள்படும்;

(k) "இணையவழி விளையாட்டு" என்பது, விளையாட்டில் பங்கேற்பாளர்கள் இருந்தாலும் அல்லது இல்லாவிட்டாலும், மின்னணு அல்லது மின்னிலக்க சாதனத்தில் விளையாடப்படும் மற்றும் இணையம் அல்லது பிற வகையான மின்னணு எதிலும் அல்லது தகவல்தொடர்புகளை எளிதாக்குவதற்கான பிற தொழில்நுட்பம், ஒரு மென்பொருளாக நிர்வகிக்கப்பட்டு இயக்கப்படும் விளையாட்டு என்று பொருள்படும்;

(l) "இணையவழி விளையாட்டுக்கான வாய்ப்பு" என்பது,-

(i) வாய்ப்பின் ஓர் உட்கூறு மற்றும் திறமையின் ஓர் உட்கூறு ஆகிய இரண்டையும் ஈடுபடுத்துகிற மற்றும் திறமையின் உட்கூறின் மீது வாய்ப்பின் உட்கூறானது ஆதிக்கம் செலுத்துகிற; அல்லது

(ii) மிகச்சிறந்த திறமையால் மட்டுமே அகற்றப்படக்கூடிய

வாய்ப்பின் ஓர் உட்கூறினை ஈடுபடுத்துகிற; அல்லது

(iii) வாய்ப்பின் உட்கூறுகளை ஈடுபடுத்துகிற ஒரு விளையாட்டு;

அல்லது

(iv) சீரற்ற அல்லது நிகழ்வு உருவாக்கியினால் வேலை செய்யக்கூடிய அட்டைகள், பகடை, சக்கரம் அல்லது பிற சாதனத்தை ஈடுபடுத்துகிற இணையவழி விளையாட்டு எதனையும் உள்ளடக்குகிறது என்று பொருள்படும்;

(m) "இணையவழி விளையாட்டு வழங்குநர்" என்பது இணையவழி விளையாட்டு எதையும் நடத்துவதற்காக சேவையை வழங்கும் நபர் எவரும் என்று பொருள்படும்;

(n) "இணையவழி விளையாட்டு வழங்கி" என்பது ,இணையவழி விளையாட்டுகள் வழங்குநரால் நிறுவப்பட்ட அல்லது பராமரிக்கப்பட்ட பெருமுகக் கணினி அல்லது கணினிகளின் தொகுப்பு எதுவும், இணையவழி விளையாட்டிலிருந்து எழும் பரிவர்த்தனைகளை ஏற்றுக்கொள்கிறது, செயலாக்குகிறது, சேமிக்கிறது, சரிபார்க்கிறது, மேலும் இது இணையவழி விளையாட்டின் முழு அமைப்பையும் நிர்வகிக்கிறது, கண்காணிக்கிறது மற்றும் கட்டுப்படுத்துகிறது என்று பொருள்படும்;

(o) "கட்டண நுழைவாயில்" என்பது, வங்கி அல்லது கடன் அட்டை கணக்குத் தகவலை நேரடியாக வழங்காமல் வணிகர்களுக்கு வங்கிகள் அல்லது நிதி நிறுவனங்களுக்கிடையே பயனர் ஒருவரின் நிதி பரிமாற்றத்தை அங்கீகரிக்கும் சேவை என்று பொருள்படும்;

(p) "வகுத்துரைக்கப்பட்டது" என்பது இந்த அவசரச் சட்டத்தின் கீழ்

செய்யப்பட்ட விதிகளால் வகுத்துரைக்கப்பட்டது என்று பொருள்படும்;

(q) "ஒழுங்குமுறைவிதிகள் " என்பது 5 ஆம் பிரிவின் கீழ் அதிகார

அமைப்பினால் செய்யப்பட்ட ஒழுங்குமுறைவிதிகள் என்று பொருள்படும்;

(r) "இணைப்புப்பட்டியல்" என்பது இந்த அவசரச் சட்டத்துடன் இணைந்த

இணைப்புப் பட்டியல் என்று பொருள்படும்;

(s) "மாநிலம்" என்பது தமிழ்நாடு மாநிலம் என்று பொருள்படும்;

(t) இதில் பயன்படுத்தப்பட்ட மற்றும் இந்த அவசரச் சட்டதில்

மையச்சட்டம் 21/2000.

பொருள்வரையறை செய்யப்படாத, ஆனால் 2000-ஆம் ஆண்டு தகவல் தொழில்நுட்பச் சட்டத்தில் பொருள் வரையறை செய்யப்பட்டுள்ள சொற்கள் மற்றும் சொற்றொடர்கள் முறையே, இந்தச் சட்டத்தில் அதற்கென குறித்தொதுக்கப்பட்ட அதே பொருளைக் கொண்டிருத்தல் வேண்டும்.

6

அத்தியாயம்-II.

தமிழ்நாடு இணையவழி விளையாட்டு அதிகார அமைப்பு.

தமிழ்நாடு இணையவழி

சூதாட்ட அதிகார

அமைப்பினை

3. (1) அரசானது, அறிவிக்கையின் மூலம், இந்த அவசரச் சட்டத்தின் கீழ் அதற்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களை செயலுறுத்தவும், அதற்கு குறித்தொதுக்கப்பட்ட செயற்பணிகளை நிறைவேற்றவும் அறிவிக்கையில் குறிப்பிடலாகும் அத்தகைய தேதியிலிருந்து, தமிழ்நாடு இணையவழி விளையாட்டு அதிகார அமைப்பு என்று அழைக்கப்படும் ஓர் அதிகார அமைப்பை நிறுவலாம்.

நிறுவுதல்

(2) அதிகார அமைப்பானது அரசால் பெயர்குறிப்பிடப்படும் பின்வரும்

உறுப்பினர்களைக் கொண்டிருத்தல் வேண்டும், அதாவது:-

a) அரசு தலைமைச் செயலாளர் படிநிலைக்கு குறையாத

பதவியிக்லிருந்து ஓய்வு பெற்ற ஓர் அலுவலர்-தலைமையாளர்;

b) காவல்துறை தலைவர் படிநிலைக்குக் குறையாத பதவியிலிருந்து

ஓய்வு பெற்ற ஓர் அலுவலர்-உறுப்பினர்;

c) தகவல் தொழில் நுட்பத்துறையில் புலமை வாய்ந்த ஒருவர்-

உறுப்பினர்;

d) சிறப்புமிக்க உளவியலாளர் ஒருவர்- உறுப்பினர்;

e) இணையவழி விளையாட்டில் புலமை வாய்ந்த ஒருவர்-உறுப்பினர்;

(3) அதிகார அமைப்பின் தலைவர் மற்றும் உறுப்பினர்கள், அரசால் தீர்மானிக்கப்படலாகும் அத்தகைய ஊதியம் மற்றும் படித்தொகைகளைப் பெறுதல் வேண்டும்.

அதிகார அமைப்பின்

செயற்பணிகள்.

(4) அரசானது அதிகார அமைப்பின், ஆலோசனையுடன் இந்த அவசரச்சட்டத்தின் கீழ் அதன் அதிகாரங்களையும் செயற்பணிகளையும் திறமையுடன் நிறைவேற்றுவதற்காக, தேவையெனக் கருதலாகும், அத்தகைய அலுவலர்கள் மற்றும் பணியாளர்களை அதிகார அமைப்பிற்கு அளிக்கலாம்.

4. (1) அதிகார அமைப்பானது பின்வரும் செயற்பணிகளை நிறைவேற்றுதல்

வேண்டும், அதாவது:-

a) இணையவழி விளையாட்டுகளை ஒழுங்குமுறைப்படுத்துதல்;

b) உள்ளூர் இணையவழி விளையாட்டு வழங்குநர்களுக்கு பதிவுச்

சான்றிதழை வழங்குதல்;

c) இணைப்புப் பட்டியலில் சேர்ப்பதற்காக, இணையவழி விளையாட்டுக்கான

வாய்ப்புகளை அடையாளம் காணுதல் மற்றும் அரசிற்கு பரிந்துரைத்தல்;

d) இம்மாநிலத்தில் இணையவழி விளையாட்டுகள் வழங்குநர்களின்

செயற்பணிகளை மேற்பார்வையிடுதல்;

e) இணையவழி விளையாட்டு வழங்குநர்களின் செயல்பாடுகள்

தொடர்பான தகவல் மற்றும் தரவினை சேகரித்தல் மற்றும் பராமரித்தல்;

f) இந்த அவசரச் சட்டத்தின் நோக்கங்களுக்காக, தேவையெனக்

மையச் சட்டம் 21/2020.

கருதப்படும் போது, 2000-ஆம் ஆண்டு தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின்படி உரிய நடவடிக்கை எடுக்குமாறு அரசை வேண்டுதல்;

g) இணையவழி விளையாட்டு வழங்குநர் எவருக்கும் எதிராக பெறப்பட்ட

குறைகள் அல்லது புகார்களை முடிவு செய்தல்;

h) வகுத்துரைக்கப்படலாகும் அத்தகைய முறையில் அரசுக்கு காலமுறை

அறிக்கைகளை அனுப்புதல்;

i) இணையவழி விளையாட்டு தொடர்பான பொருட்பாடு எதன்மீதும்

அரசுக்கு ஆலோசனை கூறுதல்; மற்றும்

j) வகுத்துரைக்கப்படலாகும் அத்தகைய பிற செயற்பணிகளை

நிறைவேற்றுதல்.

(2) இந்த அவசரச் சட்டத்தின் கீழ் அதன் கடமைகளை திறம்பட நிறைவேற்றுவதற்கும், அதன் செயற்பணிகளை புரிவதற்கும், அதிகார அமைப்பானது அதன் உறுப்பினர்களுக்கிடையேயிருந்து, அது பொருத்தமெனக் கருதலாகும் அத்தகைய எண்ணிக்கையிலான குழுக்களை அமைத்துருவாக்கலாம்.

7

ஒழுங்குமுறை

விதிகளைச்

செய்வதற்கான 5. (1) அதிகார அமைப்பானது, அறிவிக்கையின் மூலம், அரசின் முன் ஒப்புதலுடன், இந்த அவசரச் சட்டத்தின் வகைமுறைகளை நிறைவேற்றுவதற்காக, இந்த அவசரச் சட்டத்தின் வகைமுறைகளுடன் அல்லது அதன் கீழ் உருவாக்கப்பட்ட விதிகளுடன் இணங்கி ஒழுங்குமுறை விதிகளை ஏற்படுத்தலாம்.

அதிகாரம்.

(2) குறிப்பாக மற்றும் மேற்கூறிய அதிகாரத்தின் பொதுப்பாங்கிற்கு

பாதகமின்றி,-

(a) இணையவழி விளையாட்டுகளை விளையாடுவது தொடர்பான கால வரம்பு, பண வரம்பு, வயது வரம்பு அல்லது அத்தகைய பிற கட்டுப்பாடுகள்; மற்றும்

(b) அதன் செயல்பாடுகளை ஒழுங்குமுறைப்படுத்துவதற்கான

செயல்முறை போன்றவற்றிற்காக அத்தகைய ஒழுங்குமுறைகளை வழங்கலாம்.

தகவலை பெறுவதற்கான

அதிகாரம்.

6. (1) அதிகார அமைப்பு அல்லது அதனால் அதிகாரமளிக்கப்பட்ட அலுவலர் எவரும், இந்த அவசரச் சட்டத்தின் மூலம் அல்லது அதன் கீழ் அறிவிக்கப்பட்ட செயற்பணிகளை நிறைவேற்றுவதற்கு, இணையவழி விளையாட்டு வழங்குநர் அல்லது இணையவழி விளையாட்டினை விளையாடுபவர் எவரிடமிருந்தும் தகவல் எதனையும் பெறுவதற்கு தேவைப்படலாகும் அத்தகைய நடவடிக்கைகளை எடுக்கலாம்.

(2) அதிகார அமைப்பானது, தேவையெனக் கருதலாகும் அத்தகைய தகவல்களை வழங்குவதற்கு, இணையவழி விளையாட்டு வழங்குநர் எவரையுமோ அல்லது இணையவழி விளையாட்டு இணையதளம் எதனில் பொறுப்பு வகிக்கக்கூடிய நபர் எவரையுமோ, இணையவழி விளையாட்டு தொடர்பான நடவடிக்கை எதையும் மேற்கொள்ளக்கூடிய நிறுவனத்தையோ அல்லது வளாகத்தையோ கோருவதற்கு ஆணை பிறப்பிக்கலாம்.

மையச் சட்டம் V/1908.

(3) அதிகார அமைப்பானது, இந்த அவசரச் சட்டத்தின்படி அதன் செயற்பாடுகள் எதனையும் நினைவேறறுனகயில் பின்ேரும் ச்பாருட்பாடுகனைப் ச்பாறுதத ேனகயில், 1908 ஆம் ஆண்டு உரினையியல் நனைமுனை சதபாகுப்புச் ெடைததின் கீழ் ேழக்கு ஒன்னை விெபாரிக்கும் வ்பாது உரினையியல் நீதிைன்ைததிைம் உறைனைந்துள்ை அவத அதிகபாரஙகனைக் சகபாண்டிருக்கும், அதபாேது:-

(a) தரப்பினர் எவருக்கும் அழைப்பாணை விடுத்தல் மற்றும் நபரெவரின் வருகையை உறுதி செய்தல்;

(b) உறுதிமொழியின் மீது வாய்மொழி சாட்சியம் அல்லது பிராமணப் பத்திரத்தின் மீது எழுதப்பட்ட சாட்சியத்தினைப் பெறுதல்;

(c) ஆவணம் எதனின் கண்டுபிடிப்பினையும் சமர்ப்பித்தலையும் கோருதல்;

(d) நீதிமன்றம் அல்லது அலுவலகம் எதனிடமிருந்தும் பொது பதிவுரு எதனையுமோ அல்லது அதன் நகல்களையுமோ கோருதல்;

(e) சாட்சிகள் அல்லது ஆவணங்களை விசாரணை செய்வதற்கு அழைப்பாணை விடுத்தல்; மற்றும்

(f) வகுத்துரைக்கப்படலாகும் பிற பொருட்பாடு எதுவும்.

அத்தியாயம்-III.

பொதுவான தடைகள்.

7. (1) இணையவழி சூதாட்டமானது தடை செய்யப்பட்டுள்ளது.

இணையவழி

சூதாட்டத்தையும்,

இணையவழி

விளையாட்டுக்கான (2) இணைப்புப் பட்டியலில் குறிப்பிடப்பட்டுள்ள இணையவழி விளையாட்டுக்கான வாய்ப்புகளை பணம் அல்லது பிற பந்தயப் பொருட்களைக் கொண்டு விளையாடுவது தடை செய்யப்பட்டுள்ளது.

வாய்ப்பையும் தடை

செய்தல்.

(3) இணையவழி விளையாட்டை வழங்குநர் எவரும், இணையவழி சூதாட்டங்களின் சேவையினை வழங்கவோ அல்லது இணைப்புப் பட்டியலில் குறிப்பிடப்பட்டுள்ள இணையவழி விளையாட்டுக்கான வாய்ப்பு எதனையும் பணம் அல்லது பிற பந்தயப் பொருட்கள் கொண்டு விளையாடுவதையோ அல்லது ஒழுங்குமுறை விதிகளை மீறுகின்ற பிற இணையவழி விளையாட்டு எதனையும் விளையாடுவதையோ எந்த வடிவிலும் அனுமதித்தல் கூடாது.

8

விளம்பரப்

படுத்துதலை

தடை செய்தல்.

8. இணையவழி சூதாட்டத்தில் ஈடுபடுவதற்கோ அல்லது இணைப்புப் பட்டியலில் குறிப்பிடப்பட்டுள்ள இணையவழி விளையாட்டுக்கான வாய்ப்பு எதனையும் பணம் அல்லது பிற பந்தயப் பொருட்களைக் கொண்டு விளையாடுவதற்கோ இம்மாநிலத்தில், நபர் எவரையும் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ ஊக்குவிக்கின்ற அல்லது தூண்டுகின்ற எதனையும் மின்னணு தொடர்பு வழிமுறைகள் உள்ளடலங்களாக ஊடகம் எதிலும் நபர் எவரும் விளம்பரம் செய்தலோ அல்லது செய்யப்படுதலோ கூடாது.

நிதி பரிமாற்றத்திற்கான

தடை.

9. எந்தவொரு வங்கியும், நிதி நிறுவனமும் அல்லது கட்டண நுழைவுவாயில் வழங்குநரும், இணையவழி சூதாட்டம் எதற்காகவும் அல்லது அட்டவணையில் குறிப்பிடப்பட்டுள்ள இணையவழி விளையாட்டுக்கான வாய்ப்பு எதற்காகவும் பணம் செலுத்துவதற்கான எந்தவொரு பரிவர்த்தனை அல்லது நிதி அங்கீகாரத்திலும் ஈடுபடுதல் கூடாது.

அத்தியாயம்-IV.

உள்ளூர் இணையவழி விளையாட்டுகள் வழங்குநர்களுக்கான ஒழுங்குமுறை விதிகள்.

உள்ளூர் இணையவழி

விளையாட்டுகள்

வழங்குநர்களின்

பதிவு.

10. (1) குறிப்பிடப்பட்ட நாளன்றும் அது முதற்கொண்டும், உள்ளூர் இணையவழி விளையாட்டுகள் வழங்குநரானவர் அதிகார அமைப்பிடமிருந்து தக்கவாறு பெறப்பட்ட பதிவுச்சான்றிதழுக்கு இணங்கியவாறன்றி, எந்தவொரு இணையவழி விளையாட்டினையும் நடத்துவதற்கு சேவை எதனையும் வழங்குதல் கூடாது.

(2) இணையவழி விளையாட்டு எதனையும் நடத்துவதற்காக, சேவை எதனையும் வழங்குகின்ற உள்ளூர் இணையவழி விளையாட்டுகள் வழங்குநர் ஒவ்வொரும் குறிப்பிடப்பட்ட நாளுக்கு உடனடியாக முன்னர், இந்த அவசரச் சட்டத்தின் III-ஆம் அத்தியாயத்தில் அடங்கியுள்ள பொதுவான தடைகளுக்குட்பட்டு, குறிப்பிடப்பட்ட நாளிலிருந்து தொண்ணூறு நாட்களுக்கு மிகாதவொரு கால அளவிற்கு, அத்தகைய சேவையினை வழங்குவதைத் தொடரலாம்:

வரம்புரையாக, அத்தகைய உள்ளூர் இணையவழி விளையாட்டுகள் வழங்குநரானவர், குறிப்பிடப்பட்ட நாளிலிருந்து முப்பது நாட்கள் கால அளவிற்குள் இந்தப் பிரிவின்படி பதிவு செய்தலுக்கான விண்ணப்பம் செய்தல் வேண்டும்.

(3) பதிவு செய்வதற்கான விண்ணப்பம் ஒவ்வொன்றும், வகுத்துரைக்கப்படலாகும் அத்தகைய கட்டணத்துடன் அத்தகைய படிவத்தில் அதிகார அமைப்பிடம் செய்யப்படுதல் வேண்டும்.

(4) (3)-ஆம் உட்பிரிவின் கீழ் விண்ணப்பம் ஒன்று பெறப்பட்டதன் பேரில், அதிகார அமைப்பானது, அது தேவையெனக் கருதலாகும் அத்தகைய விசாரணையை மேற்கொண்டதன் பின்பு, பதிவுச் சான்றிதழை வழங்கலாம் அல்லது வழங்க மறுக்கலாம்:

வரம்புரையாக, விண்ணப்பதாரருக்கு கேட்பதற்கான நியாயமான வாய்ப்பொன்று வழங்கப்பட்டலான்றி, பதிவுச் சான்றிதழை வழங்குவதற்கான விண்ணப்பமானது மறுக்கப்படுதலாகாத

(5) ஒவ்வொரு பதிவுச் சான்றிதழும், பின்வரும் வரையறைகளுக்குட்பட்டு, வகுத்துரைக்கப்படலாகிறவாறான அத்தகைய படிவத்தில் வழங்கப்படுதல் வேண்டும். அதாவது :-

(a) இணையவழி விளையாட்டுகள் வழங்குநரானவர், இணையவழி சூதாட்டங்களின் சேவை எதனையும் வழங்கவோ அல்லது இணைப்புப்பட்டியலில் குறிப்பிடப்பட்டுள்ள இணையவழி விளையாட்டுக்கான வாய்ப்பு எதனையும் பணம் அல்லது பிற பந்தயப் பொருட்களைக் கொண்டு விளையாடுவதையோ அனுமதித்தல் கூடாது;

(b) இணையவழி விளையாட்டுகள் வழங்குநரானவர், ஒழுங்குமுறைவிதிகளை மீறுகின்ற இணையவழி விளையாட்டு எதையும் விளையாட அனுமதிக்கவோ அல்லது அனுமதித்தலை ஏற்படுத்தவோ கூடாது.

(6) (5) ஆம் உட்பிரிவின் படி வழங்கப்பட்ட பதிவுச் சான்றிதழானது மூன்று

ஆண்டுகள் கால அளவிற்கு செல்லுந்தன்மை கொண்டதாக இருத்தல் வேண்டும்.

9

.

பதிவுச் சான்றிதழை 11. (1) (a) இந்த அவசரச் சட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட பதிவுச் சான்றிதழ்

இடைநிறுத்தம் பொய்யாக அல்லது மோசடியின் முலம் பெறப்பட்டது;

செய்தல் மற்றும்

திரும்பப் பெறுதல் (b) பதிவுச் சான்றிதழை வைத்திருப்பவர், வழங்கப்பட்ட பதிவுச் சான்றிதழுக்குட்பட்டு, அதன் நிபந்தனைகளுக்கு இணங்கத் தவறிவிட்டார்; அல்லது

(c) பதிவுச் சான்றிதழை வைத்திருப்பவர், இந்த அவசரச் சட்டம், விதிகள் அல்லது ஒழுங்குமுறைவிதிகள் ஆகியவற்றின் வகைமுறைகள் எவற்றையும் மீறிவிட்டார், என இதன்பொருட்டு அதனிடம் ஏற்படுத்தப்பட்ட குறிப்பின் பேரிலோ அல்லது வேறுவிதமாகவோ அதிகார அமைப்பானது மனநிறைவடைந்தால், பின்னர், பதிவுச் சான்றிதழை வைத்திருப்பவர் பொறுப்பேற்கக்கூடிய பிற நடவடிக்கைகள் எதற்கும் குந்தகமின்றி, அதிகார அமைப்பானது, அவருக்கு காரணம் காட்டுவதற்கா வாய்ப்பொன்றை வழங்கிய பின்பு, ஆணையொன்றின் மூலம் அதற்கான காரணங்களைக் கூறி பதிவுச் சான்றிதழை திரும்பப் பெறலாம்.

(2) (1) ஆம் உட்பிரிவில், அடங்கியிருப்பது எது எவ்வாறிருப்பினும், இணையவழி விளையாட்டு வழங்குநருக்கு வழங்கப்பட்ட பதிவுச்சான்றிதழானது இடைநிறுத்தம் செய்யப்பட வேண்டும் என்று அதிகார அமைப்பு முதன்நோக்கத்தினை கொண்டிருக்குமிடத்து, அதிகார அமைப்பானது, சான்றிதழை திரும்பப் பெறுவதற்கு முன்னர் எந்த நேரத்திலும், எழுத்துப்பூர்வமாக காரணங்களைப் பதிவு செய்யலாம்.

மேல்முறையீடு.

12. (1) 11 ஆம் பிரிவின் கீழ் பதிவுச் சான்றிதழை திரும்பப்பெறும் அல்லது இடைநிறுத்தம் செய்யும் அதிகார அமைப்பின் ஆணையொன்றின் மூலம் பாதிக்கப்பட்ட நபர் எவரும், ஆணையானது அவருக்குத் தெரிவிக்கப்பட்ட நாளிலிருந்து பதினைந்து நாட்களுக்குள் மேல்முறையீட்டு அதிகார அமைப்பிடம், மேல்முறையீடு செய்யலாம்:

வரம்புரையாக, அந்த கால அளவிற்குள் மேல்முறையீட்டினை தாக்கல் செய்யாததற்குப் போதுமான காரணம் இருப்பதாக அதிகார அமைப்பானது மனநிறைவடைந்தால், அது கூறப்பட்ட பதினைந்து நாட்கள் காலவதியான பின்பும் மேல்முறையீட்டினை ஏற்றுக்கொள்ளலாம்.

(2) மேல்முறையீட்டு அதிகார அமைப்பானது, மேல்முறையீட்டாளருக்கு கேட்பதற்கான நியாயமான வாய்ப்பொன்று வழங்கப்பட்ட பின்பு, மேல்முறையீடு பெறப்பட்ட தேதியிலிருந்து ஒரு மாத கால அளவினை மீறாத நேர்வு எதிலும், முடிந்தவரையில் அதனை முடிவு செய்தல் வேண்டும்.

மேல்முறையீட்டு அதிகார

அமைப்பினை 13. (1) அரசானது, அறிவிக்கையின் மூலம் தலைமையாளர் மற்றும் இரண்டு பிற உறுப்பினர்களுக்கு மிகாதவர்களைக் கொண்டிருக்கும் மேல்முறையீட்டு அதிகார அமைப்பு ஒன்றினை நிறுவலாம்.

நிறுவுதல்.

(2) அவர் உயர்நீதிமன்றத்தின் ஓய்வு பெற்ற நீதிபதியாகவோ அல்லது உயர்நீதிமன்றத்தின் நீதிபதியாவதற்கு தகுதியுடைய நபராகவோ இருந்தாலன்றி மேல்முறையீட்டு அதிகார அமைப்பின் தலைமையாளராக நியமிக்கப்படுவதற்கு நபரொருவர் தகுதியுடையவராகார்.

(3) மேல்முறையீட்டு அதிகார அமைப்பின் உறுப்பினர்களின் நியமனத்திற்கான

தகுதிகளானது வகுத்துரைக்கப்படலாகிறவாறு இருத்தல் வேண்டும்.

(4) மேல்முறையீட்டு அதிகார அமைப்பின் தலைமையாளர் மற்றும் உறுப்பினர்கள், அரசால் தீர்மானிக்கப்படலாகும் அத்தகைய ஊதியம் மற்றும் படித்தொகைகளைப் பெறுதல் வேண்டும்.

(5) அரசானது மேல்முறையீட்டு அதிகார அமைப்பின், ஆலோசனையுடன் இந்த அவசரச்சட்டத்தின் கீழ் அதன் அதிகாரங்களையும் செயற்பணிகளையும் திறமையுடன் நிறைவேற்றுவதற்காக, தேவையெனக் கருதலாகும், அத்தகைய அலுவலர்கள் மற்றும் பணியாளர்களை மேல்முறையீட்டு அதிகார அமைப்பிற்கு அளிக்கலாம்.

(6) இந்த அவசரச் சட்டத்தின் வகைமுறைகளுக்குட்பட்டு, மேல்முறையீட்டு

அதிகார அமைப்பானது அதன் சொந்த நடைமுறையை ஒழுங்குமுறைப்படுத்தலாம்.

10

அத்தியாயம்-V.

உள்ளூர் அல்லாத இணையவழி விளையாட்டு வழங்குநர்களுக்கான ஒழுங்குமுறை விதிகள்.

14. (1) இம்மாநிலத்தில், உள்ளூர் அல்லாத இணையவழி விளையாட்டு

கட்டுப்பாடுகள்.

வழங்குநர் எவரும்,-

(a) இணையவழி சூதாட்ட சேவை எதனையும் வழங்குதல்;

(b) இணைப்புப்பட்டியலில் குறிப்பிடப்பட்டுள்ள இணையவழி விளையாட்டுக்கான வாய்ப்பு எதையும் பணம் அல்லது பிற பந்தைய பொருட்களுடன் விளையாட அனுமதித்தல்; அல்லது

(c) விதிமுறைகளுக்கு மாறாக பிற இணையவழி விளையாட்டு

எதையும் விளையாட அனுமதித்தல், கூடாது.

(2) உள்ளூர் அல்லாத இணையவழி விளையாட்டுகள் வழங்குநர், அவர் உரிய கவனத்துடன் செயல்பட்டிருந்தால் அல்லது அந்த நோக்கத்திற்காக பயனரின் புவியியல் இருப்பிடத்தின் அடிப்படையில் இணைய உள்ளடக்கத்தினை தடை செய்தலை இம்மாநிலத்தில் வழங்கியிருந்தால் அவர், (1) ஆம் உட்பிரிவை மீறியதாகக் கருதப்படமாட்டார்.

(3) (2) ஆம் உட்பிரிவின் நோக்கத்திக்காக, உள்ளூர் அல்லாத இணையவழி விளையாட்டு வழங்குநர், பின் வருவனவற்றைக் கொண்டிருந்தால் உரிய கவனத்துடன் செயல்பட்டதாகக் கருதப்படுவார்,-

(a) இம்மாநிலத்தில் இயல்ரீதியாக (physically present) இருக்கும் வாடிக்கையாளர்களுக்கு இணையவழி சூதாட்டத்தையும் சில இணையவழி விளையாட்டுகள் விளையாடுவதையும் இம்மாநிலம் தடைசெய்கிறது என வருங்கால வாடிக்கையாளர்களுக்கு அறிவித்தல்;

(b) இம்மாநிலத்தில் வாடிக்கையாளர்கள் இயல்ரீதியாக இருந்தால், வாடிக்கையாளர்கள் சேவையைப் பயன்படுத்தக் கூடாது என்ற வெளிப்படையான நிபந்தனையுடன் ஒப்பந்தங்களில் நுழைதல்;

(c) இம்மாநிலத்தில் வாடிக்கையாளர்கள் இயல்ரீதியாக

இல்லை என்பதை உறுதிப்படுத்த போதுமான தனிப்பட்ட விவரங்களை வழங்குதல்;

(d) தொடர்புடைய வாடிக்கையாளர்களின் கணக்குகள் திறக்கப்பட்ட போதும் வாடிக்கையாளர்களுக்கு சேவை வழங்கப்பட்ட காலம் முழுவதும் இம்மாநிலத்தில் வாடிக்கையாளர்கள் இயல்ரீதியாக இல்லை என்பதை குறிப்பிடும் தரவுகளை அளித்தல்; மற்றும்

(e) இம்மாநிலத்தில் இயல்ரீதியாக இருக்கும் நபர் எவரும் இணையவழி சூதாட்ட சேவையையோ அல்லது 7ஆம் பிரிவின்கீழ் தடை செய்யப்பட்ட இணையவழி விளையாட்டுக்கான வாய்ப்பையோ அணுக முடியாது என்பதை உறுதிப்படுத்த மற்ற அனைத்து நியாயமான நடவடிக்கைகளையும் எடுத்திருத்தல்.

கட்டுப்பாடுகளுக்கு

இணங்காததை

கையாளுவதற்கான

நடைமுறை.

15. (1) 14 ஆம் பிரிவில் குறிப்பிடப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் எதற்கும் இணங்கத் தவறிய உள்ளூர் அல்லாத விளையாட்டு வழங்குநர்கள், வகுத்துரைக்கப்படலாகும் அத்தகைய காலத்திற்குள் பதிலை வழங்குவதற்காக, அதிகார அமைப்பால் வகுத்துரைக்கப்படலாகும் அத்தகைய படிவத்திலும், முறையிலும் காரணம் கேட்கும் அறிவிப்பு ஒன்றை வழங்குதல் வேண்டும். பதில் எதுவும் பெறப்படவில்லை அல்லது பெறப்பட்ட பதில் திருப்திகரமாக இல்லை எனில், அதிகார அமைப்பானது (2) மற்றும் (3) ஆம் உட்பிரிவுகளுக்கு இணங்கித் தொடரலாம்.

மையச்சட்டம் 2/21000.

(2) அதிகார அமைப்பானது, உள்ளூர் அல்லாத இணையவழி விளையாட்டு வழங்குநரால் வழங்கப்படும் சேவையை இந்த மாநிலத்தில் உள்ள நபர்கள் அணுகுவதைத் தடைசெய்ய, 2000 ஆம் ஆண்டு தகவல் தொழில்நுட்ப

சட்டத்தின் 69A-ஆம் பிரிவின் கீழ் அதிகாரத்தைப் செயலுறுத்துவதற்கு, நேர்விற்கேற்ப மைய அரசு அல்லது இதன்பொருட்டு மைய அரசால் அதிகாரமளிக்கப்பட்ட தனி அலுவலரிடம் கோருவதற்கு அரசிடம் பரிந்துரை செய்தல் வேண்டும்,-

வரம்புரையாக,-

(a) எழுத்துப்பூர்வமாகப் பதிவு செய்ய வேண்டிய காரங்ளுக்காக, அதிகார

அமைப்பின் பரிந்துரையின்படி செயல்பட அரசு மறுக்கலாம்; அல்லது11 (b) அதிகார அமைப்பின் பரிந்துரையை அரசு ஏற்கும் பட்சத்தில், பரிந்துரை பெறப்பட்ட நாளிலிருந்து பதினைந்து நாட்களுக்குள் மைய அரசிடம் சாதாரணமாக கோரிக்கையை செய்தல் வேண்டும்.

(3) (2) ஆம் உட்பிரிவின் கீழ் அதிகார அமைப்பினால் செய்யப்பட்ட பரிந்துரையின் நகல், தொடர்புடைய உள்ளூர் அல்லாத இணையவழி விளையாட்டு வழங்குநருக்கு வழங்கப்படுதல் வேண்டும்.

அத்தியாயம்-VI.

குற்றச் செயல்கள் மற்றும் தண்டத் தொகைகள்

7, 8, 10 மற்றும் 16. (1) இணையவழி சூதாட்டத்தில் ஈடுபடுகின்ற அல்லது இணைப்புப்பட்டியலில் 14-ஆம் பிரிவுகளை

மீறுதலுக்கான குறிப்பிடப்பட்டுள்ள இணையவழி விளையாட்டுக்கான வாய்ப்பு எதனையும்

தண்டத் தொகை.

விளையாடும், பணம் அல்லது பிற பந்தையப் பொருட்கள் கொண்டு 7-ஆம்

பிரிவினை மீறுகின்ற அல்லது ஒழுங்குமுறைவிதிகளை மீறுகின்றவாறு

பிறஇணையவழி விளையாட்டு எதனையும் விளையாடுகின்ற நபர் எவரும், மூன்று

மாதங்கள் வரை நீட்டிக்கலாகும் ஒரு காலஅளவிற்கு சிறை தண்டனை அல்லது

ஐந்தாயிரம் ரூபாய் வரை நீட்டிக்கலாகும் அபராதம் அல்லது இரண்டும் விதித்துத்

தண்டிக்கப்படுதல் வேண்டும்.

(2) 8 ஆம் பிரிவுக்கு முரணாக ஊடகம் எதிலும் விளம்பரத்தினை ஏற்படுத்துகின்ற அல்லது ஏற்படுத்தக் காரணமாக இருக்கின்ற நபர் எவரும், ஓர் ஆண்டு வரை நீட்டிக்கலாகும் ஒரு காலஅளவிற்கு சிறை தண்டனை அல்லது ஐந்துலட்ச ரூபாய் வரை நீட்டிக்கலாகும் அபராதம் அல்லது இரண்டும் விதித்துத் தண்டிக்கப்படுதல் வேண்டும்.

(3) இணையவழி சூதாட்ட சேவை அல்லது இணைப்புப் பட்டியலில் குறிப்பிடப்பட்டுள்ள இணையவழி விளையாட்டுக்கான வாய்ப்பு எதையும் பணம் அல்லது பிற பந்தையப் பொருட்கள் கொண்டு வழங்குகின்ற நபர் எவரும் அல்லது 10-ஆம் பிரிவின் (1) ,(2) அல்லது (5)-ஆம் உட்பிரிவின் அல்லது 14ஆம் பிரிவின் வகைமுறைகளை மீறுகின்ற நபர் எவரும், மூன்று ஆண்டுகள் வரை நீட்டிக்கலாகும் ஒரு காலஅளவிற்கு சிறை தண்டனை அல்லது பத்துலட்ச ரூபாய் வரை நீட்டிக்கலாகும் அபராதம் அல்லது இரண்டும் விதித்துத் தண்டிக்கப்படுதல் வேண்டும்.

மையச்சட்டம் 21/2000.

வரம்புரையாக, மைய அரசு அல்லது இதன்பொருட்டு மைய அரசால் அதிகாரமளிக்கப்பட்ட தனி அலுவலரால், 2000ஆம் ஆண்டு தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின் 69-Aஆம் பிரிவின்படி அதிகாரமானது செயல்படுத்தப்பட்டால் மட்டுமே 14-ஆம் பிரிவினை மீறியதற்காக உள்ளூர் அல்லாத இணையவழி விளையாட்டுகளின் வழங்குநரானவர் தண்டிக்கப்படுதல் வேண்டும்.

(4) (a) (2)-ஆம் உட்பிரிவின் கீழ் குற்றம் ஒன்றிற்காக தண்டிக்கப் பெற்ற நபர் எவரும், அதே வகைமுறையின் கீழ் மீண்டும் ஒரு குற்றத்திற்காக தண்டிக்கப்பட்டால், அவர் இரண்டாவது மற்றும் அடுத்தடுத்த ஒவ்வொரு குற்றத்திற்கும் ஓர் ஆண்டுக்குக் குறையாத, ஆனால் மூன்று ஆண்டுகள் வரை நீட்டிக்கலாகும் ஒரு காலஅளவிற்கு சிறை தண்டனை விதித்துத் தண்டிக்கப்படுதல் வேண்டும் மற்றும் ஐந்து லட்சம் ரூபாய்க்குக் குறையாத, ஆனால் பத்துலட்ச ரூபாய் வரை நீட்டிக்கலாகும் அபராதமும் சேர்த்து விதிக்கப்படுதல் வேண்டும்.

(b) (3)-ஆம் உட்பிரிவின் கீழ் குற்றம் ஒன்றிற்காக தண்டிக்கப் பெற்ற நபர் எவரும், அதே வகைமுறையின் கீழ் மீண்டும் ஒரு குற்றத்திற்காக தண்டிக்கப்பட்டால், அவர் இரண்டாவது மற்றும் அடுத்தடுத்த ஒவ்வொரு குற்றத்திற்கும் மூன்று ஆண்டுகளுக்குக் குறையாத, ஆனால் ஐந்து ஆண்டுகள் வரை நீட்டிக்கலாகும் ஒரு காலஅளவிற்கு சிறை தண்டனை விதித்துத் தண்டிக்கப்படுதல் வேண்டும் மற்றும் பத்து லட்சம் ரூபாய்க்குக் குறையாத, ஆனால் இருபது லட்சம் ரூபாய் வரை நீட்டிக்கலாகும் அபராதமும் சேர்த்து விதிக்கப்படுதல் வேண்டும்.

குற்றங்களை

விசாரணைக்கு

எடுத்துக்

கொள்ளுதல்.

17. நீதிமன்றம் எதுவும், இந்த அவசரச் சட்டம், இதன் கீழ் செய்யப்பட்ட விதிகள் அல்லது ஒழுங்குமுறைவிதிகளின் படி தண்டிக்கப்படலாகும் குற்றம் எதனையும், அதிகார அமைப்பினால் இதன் பொருட்டு அதிகாரமளிக்கப் பெற்ற அலுவலர் எவராலும் செய்யப்பட்ட எழுத்துப் பூர்வமான முறையீட்டினாலன்றி, விசாரணைக்கு எடுத்துக் கொள்ளுதல் கூடாது.

12

குற்றங்களை சட்டப்படி

சமரசம் செய்து

கொள்வதற்கான

அதிகாரம்.

18. (1) இதன்பொருட்டு அறிவிக்கையின் மூலம் அரசால் சிறப்பு அதிகாரம் அளிக்கப்பட்ட அலுவலர் எவரும், அத்தகைய குற்றத்தின் தீர்வு உடன்பாட்டினால் 16-ஆம் பிரிவின் (1)-ஆம் உட்பிரிவின் கீழ் ஒரு குற்றத்தை செய்த நபர் எவரிடமிருந்தும் அத்தகைய குற்றத்திற்காக குறிப்பிடப்பட்டுள்ள அபராதத் தொகையின் அதிகபட்ச அளவிற்கு மேற்படாத ஆனால் கூறப்பட்ட தொகையின் ஐம்பது விழுக்காட்டிற்கு குறையாத ஒரு மொத்த தொகையினை ஏற்றுக் கொள்ளலாம்.

(2) அத்தகைய அலுவலருக்கு, அத்தகைய மொத்த தொகையினை செலுத்தியதன் பெயரில், குற்றஞ்சாட்டப்பட்ட நபர் சிறைக்காவலில் இருந்தால், அவர் விடுவிக்கப்படுதல் வேண்டும் மற்றும் அவருக்கு எதிராக, அத்தகைய குற்றம் தொடர்பாக மேல் நடவடிக்கைகள் எதுவும் எடுக்கப்படுதலாகாது.

(3) (1)-ஆம் உட்பிரிவின் கீழ் குற்றம் ஒன்றை சட்டப்படி சமரசம் செய்துகொள்ள, நபரெவருக்கும் ஒரேஒரு முறை மட்டுமே அனுமதியானது வழங்கப்படுதல் வேண்டும்.

நிறுமங்களால்

செய்யப்படும்

குற்றங்கள்.

19. (1) இந்த அவசரச் சட்டத்தின்படியான குற்றம் ஒன்று நிறுமம் ஒன்றினால் செய்யப்பட்டிருக்கிறவிடத்து, அந்தக் குற்றம் செய்யப்பட்ட நேரத்தில், அந்த நிறுமத்தின் அலுவலை நடத்தி வருவதற்கு, அந்த நிறுமத்தின் பொறுப்பைக் கொண்டிருந்தவரும், அதற்குப் பொறுப்பாயிருந்தவருமான நபர் ஒவ்வொருவரும், அதோடு அந்த நிறுமமும், அந்தக் குற்றத்தினைச் செய்ததாகக் கருதப்படுதலும், அதற்கிணங்க நடவடிக்கை எடுக்கப்படுதலும், தண்டிக்கப்படுதலும் வேண்டும்:

வரம்புரையாக, இந்த உட்பிரிவில் அடங்கியுள்ள எதுவும், அந்தக் குற்றம் தமக்குத் தெரியாமல் செய்யப்பட்டதாக அல்லது அத்தகைய குற்றம் செய்யப்படாமல் தடுக்க தாம் உரிய முயற்சி அனைத்தையும் மேற்கொண்டதாக நபர் எவரும் மெய்பிப்பாரானால், அவரை தண்டனை எதற்கும் உள்ளாக்குதலாகாது.

மையச் சட்டம் 18/2013.

(2) (1) ஆம் உட்பிரிவில் என்ன அடங்கியிருந்த போதிலும், இந்த அவசரச் சட்டத்தின் படி குற்றம் எதுவும் ஒரு நிறுமத்தினால் செய்யப்பட்டிருந்து, அந்நிறுமத்தின் இயக்குநர், மேலாளர், செயலாளர் அல்லது 2013ஆம் ஆண்டு நிறுமங்கள் சட்டத்தில் வரையறை செய்யப்பட்டவாறான முக்கிய நிர்வாக பணியாளர்கள் உள்ளடங்கலான பிற அலுவலர் எவரின் இசைவுடனோ, மறைமுக ஆதரவுடனோ அந்தக் குற்றம் செய்யப்பட்டிருக்கிறது அல்லது அவர்பாலுள்ள கவனக்குறைவு எதற்கும் சாட்டத்தக்கதாக இருக்கிறது என்று மெய்ப்பிக்கப்படுகிறவிடத்து, அந்த இயக்குநர் மேலாளர், செயலாளர் அல்லது முக்கிய நிர்வாக பணியாளர்கள் உள்ளடங்கலான பிற அலுவலர் அந்தக் குற்றதைச் செய்திருப்பதாகக் கருதப்படுதலும், அதற்கிணங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுத் தண்டிக்கப்படுதலும் வேண்டும்.

விளக்கம்-இந்தப் பிரிவின் நோக்கங்களுக்காக-

(அ) 'நிறுமம்' என்பது கூட்டமைப்பு எதுவும், என்று பொருள்படும் மற்றும் ஒரு நிறுவகத்தை, அல்லது பிற தனிநபர்களின் கழகத்தை உள்ளடக்கும்; மற்றும்

(ஆ) 'இயக்குநர்' என்பது, ஒரு நிறுவகத்தைப் பொறுத்தவரையில்,

அந்த நிறுவகத்திலுள்ள ஒரு கூட்டாளி என்று பொருள்படும்.

அதிகார அமைப்பு மற்றும்

அத்தியாயம்-VII.

மேல்முறையீட்டு

பல்வகை.

அதிகார அமைப்பின்

தலைமையாளர்,

உறுப்பினர்கள்,

அலுவலர்கள் மற்றும்

மையச் சட்டம் பணியாளர்கள்

XLV/1860.

முதலானோர் பொது

20. இந்த அவசரச் சட்டத்தின் வகை முறைகள் எதனையும் ஒட்டி செயல்படுகின்ற அல்லது செயல்படுவதாகப் புலப்படுகின்றபோது, அதிகார அமைப்பு மற்றும் மேல்முறையீட்டு அதிகார அமைப்பின் தலைமையாளர், ஒவ்வொரு உறுப்பினர்களும், அதிகார அமைப்பு மற்றும் மேல்முறையீட்டு அதிகார அமைப்பின் அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள், இந்திய தண்டனைத் தொகுப்புச் சட்டத்தின் 21-ஆம் பிரிவின் பொருளின்படி, பொது ஊழியர்களாகக் கருதப்படுதல் வேண்டும்.

ஊழியர்கள் ஆவர்.

நல்ல எண்ணத்தில்

எடுக்கப்பட்ட

நடவடிக்கைக்குப்

பாதுகாப்பு.

21. இந்த அவசரச் சட்டம், விதிகள் அல்லது ஒழுங்குமுறை விதிகளின்படி, அவரது அலுவலக செயல்பாடுகளை நிறைவேற்ற அல்லது அவரது அதிகாரங்களை பயன்படுத்த நல்ல எண்ணத்தில் செய்யப்பட்ட அல்லது செய்யக் கருதப்பட்ட செயல் எதற்காகவும், பொது ஊழியர்கள் எவருக்கும் எதிராக, உரிமை வழக்கு, குற்ற வழக்கு அல்லது பிற சட்ட நடவடிக்கை எதுவும் தொடரப்படுதல் ஆகாது.

13

இந்த அவசரச் சட்டம்,

பிற சட்டங்களின்

மதிப்பினை 22. இந்த அவசரச் சட்டத்தின் வகைமுறைகளானது, கூடுதலாக இருக்குமேயன்றி, அப்போதைக்கு நடைமுறையில் உள்ள பிற சட்டத்தின் வகைமுறைகள் எதனின் மதிப்பினையும் குறைப்பதில்லை.

குறைப்பதில்லை.

இணையவழி

விளையாட்டுக்கான

வாய்ப்பு எனக் 23. (1) இந்த அவசரச் சட்டத்தின் நோக்கங்களுக்காக, இணைப்புப்பட்டியலில் குறிப்பிடப்பட்டுள்ள இணையவழி விளையாட்டு எதுவும் ஓர் இணையவழி விளையாட்டுக்கான வாய்ப்பு எனக் கருதப்படுதல் வேண்டும்.

கருதப்படுதல் மற்றும்

இணைப்புப்பட்டியலை

திருத்துவதற்கான

அதிகாரம்.

(2) அரசு அறிவிப்பின் மூலம், அதிகார அமைப்பின் பரிந்துரையின் பேரில், அட்டவணையில் இணையவழி விளையாட்டு எதையும் தவிர்க்கலாம் அல்லது சேர்க்கலாம் மற்றும் அத்தகைய அறிவிக்கையை வெளியிடும்போது, அட்டவணை அதற்கேற்ப திருத்தப்பட்டதாகக் கருதப்படுதல் வேண்டும்.

விதிகளைச் 24. (1) அரசானது, இந்த அவசரச் சட்டத்தின் நோக்கங்களை

செய்வதற்கான நிறைவேற்றுவதற்கான விதிகளைச் செய்யலாம்.

அதிகாரம்.

(2) (a) இந்த அவசரச் சட்டத்தின்படி செய்யப்பட்ட விதிகள் அனைத்தும் தமிழ்நாடு அரசிதழில் வெளியிடப்படுதல் வேண்டும் மற்றும் அவை குறிப்பிட்டதொரு நாளில் நடைமுறைக்கு வருதல் வேண்டுமென வெளிப்படையாகத் தெரிவிக்கப்பட்டிருந்தாலன்றி அவை அவ்வாறு வெளியிடப்பட்ட நாளிலேயே நடைமுறைக்கு வருதல் வேண்டும்.

(b) இந்த அவசரச் சட்டத்தின்படி பிறப்பிக்கப்பட்ட அறிவிக்கைகள் அனைத்தும், அவை குறிப்பிட்டதொரு நாளில் நடைமுறைக்கு வருதல் வேண்டும் என்று சொல்லப்பட்டிருந்தாலன்றி அவை அவ்வாறு வெளியிடப்பட்ட நாளிலேயே நடைமுறைக்கு வருதல் வேண்டும்.

(3) இந்த அவசரச் சட்டத்தின்படி செய்யப்பட்ட விதி அல்லது பிறப்பிக்கப்பட்ட அறிவிக்கை அல்லது ஆணை ஒவ்வொன்றும் அது அவ்வாறு செய்யப்பட்ட அல்லது பிறப்பிக்கப்பட்ட பின்னர், கூடிய விரைவில் சட்டமன்றப் பேரவையில் வைக்கப்படுதல் வேண்டும் மற்றும் அது அவ்வாறு வைக்கப்பட்ட கூட்டத்தொடர் அல்லது அதனையடுத்த கூட்டத்தொடர் முடிவடைவதற்கு முன்னர் அத்தகைய விதி அல்லது அறிவிக்கை அல்லது ஆணை எதிலும் மாறுதல் எதனையும் சட்டமன்றப் பேரவையானது செய்யுமாயின் அல்லது அத்தகைய விதி அல்லது அறிவிக்கை அல்லது ஆணை எதுவும் செய்யப்படுதலோ அல்லது பிறப்பிக்கப்படுதலோ கூடாது என சட்டமன்றப் பேரவை முடிவு செய்யுமாயின், அந்த விதி அல்லது அறிவிக்கை அல்லது ஆணையானது அதன்பின்னர் அவ்வாறு மாற்றியமைக்கப்பட்ட வடிவத்திலேயே நடைமுறைக்கு வருதல் வேண்டும் அல்லது நேர்விற்கேற்ப, நடைமுறைக்கு வராது போதல் வேண்டும்; எனினும் அவ்வாறான மாறுதல் அல்லது நீக்கம் எதுவும், அந்த விதி அல்லது அறிவிக்கை அல்லது ஆணையின்படி முன்னரே செய்யப்பட்ட செயல் ஏதொன்றின் செல்லுந்தன்மைக்கும் குந்தகமின்றி இருத்தல் வேண்டும்.

இடர்ப்பாடுகளை 25. இந்த அவசரச் சட்டத்தின் வகைமுறைகள் எதனையும்

நீக்குவதற்கான

அதிகாரம்.

செயற்படுத்துவதில் இடர்ப்பாடு ஏதேனும் எழுமானால் அரசானது, தமிழ்நாடு அரசிதழில் வெளியிடப்படும் ஆணையின் வாயிலாக, அந்த இடர்ப்பாட்டை நீக்குவதற்குத் தேவைப்படலாகும் அல்லது உகந்ததாக அதற்குத் தோன்றுகிற, இந்த அவசரச் சட்டத்தின் வகைமுறைகளுக்கு முரணாக இல்லாத அத்தகைய வகைமுறைகளைச்செய்யலாம்.

இணைப்புப்பட்டியல்.

[23 ஆம் பிரிவைக் காண்க]

இணையவழி விளையாட்டுளின் வாய்ப்பு.

(1) ரம்மி விளக்கவுரை (2) போக்கர்

குடிமகன்களின் மனநலத்தைப் பாதுகாக்கும் பொறுப்பும், பந்தயம் கட்டுதல் உட்பட எந்த வடிவத்திலும் சூதாட்டத்தின் தீய விளைவுகளிலிருந்து பாதுகாக்கும் பொறுப்பும் அரசிற்கு உள்ளது. இதன் காரணத்தால், 1930-ஆம் ஆண்டு தமிழ்நாடு சூதாட்டச் சட்டம் (தமிழ்நாடு சட்டம் III/1930) மற்றும் 1888-ஆம் ஆண்டு சென்னை மாநகரக் காவல் சட்டம் (தமிழ்நாடு சட்டம் III/1888) ஆகியவற்றில் பிரதிபலிக்கும் வகையில், தனிநபர் சூதாட்டம் மற்றும் பந்தயம் கட்டுதல் ஆகியவற்றை தடை செய்யும் நீண்டகாலக் கொள்கையை அரசு பேணி வருகிறது. இணையவழி விளையாட்டின் பரவல், குறிப்பாக அடிமையாக்கும் இணையவழி விளையாட்டுகள் மற்றும் இணையம் வழியாக விளையாடப்படும் சூதாட்ட விளையாட்டுகள் அரசின் முயற்சிகளை14 முறியடிக்க அச்சுறுத்துகிறது. முதலாவதாக, மின்னணு தகவல் தொடர்பு மூலம் சூதாட்டமானது, எல்லா நேரங்களிலும் எந்த இடத்திலிருந்தும், தொலைத்தொடர்பு திறன் கொண்ட சாதனத்தை அணுகக்கூடிய நபர் எவருக்கும் கிடைக்கிறது. இரண்டாவதாக இணையவழி சூதாட்டம் மனிதர்கள் அல்லாத/ கணினி பங்கேற்பாளர்களுடன் போட்டியிடும் வீரர்களை உள்ளடக்கியது, அவை பல்வேறு கணினி நெறிமுறைகளால் கட்டுப்படுத்தப்படுகின்றன. அத்தகைய தொலைதூர விளையாட்டுகளில் ஈடுபடும் வாய்ப்பு அல்லது திறமையின் படிநிலை, தொடர்புடைய கணினி நெறிமுறை அல்லது நிரலாக்கத்தை (Program) தனியாக மதிப்பீடு செய்ய முடியாது. இறுதியாக, தொலைநிலையான சூதாட்டம் பெரும்பாலும் மாநிலங்களின் நிதிக்கண்காணிப்பை தவிர்த்து, இணைய பணப்பரிமாற்றங்கள் மற்றும் அடையாள வில்லை (Tokens) மூலம் நடைபெறுகிறது. இவ்வாறு இணையவழி சூதாட்டம் மக்களின் மன நலத்தை கணிசமாக பாதிக்கிறது மற்றும் பல குடும்பங்களை நிதி நெருக்கடியில் ஆழ்த்தியுள்ளது. மேலும், மாநில மற்றும் அதன் மக்கட்தொகையில் நீண்டகால வாய்ப்புகளை பாதிக்கும்.

2. இதேபோல, சூதாட்டம் மற்றும் பந்தயம் கட்டுதல் போன்ற தொடர்பில்லாத பிற இணையவழி விளையாட்டுகளும் தனிப்பட்ட, குடும்ப, சமூக, கல்வி, தாெழில் அல்லது பொது மக்களின் செயல்பாட்டின் பிற முக்கியப் பகுதிகளில் எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்துவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. மேலும், இந்த விளையாட்டுகளினால் பள்ளி மாணவர்களும் பாதிக்கப்படுகின்றனர், இதன் விளைவாக, நுண்ணறிவு பலம், எழுதும் திறன் மற்றும் படைப்பாற்றல் ஆகியன குறைகின்றன.

3. இதனால், இணையவழி சூதாட்டம் மற்றும் இணையவழி விளையாட்டுகள் இயற்கையில் அடிமையாக்கும் தன்மை கொண்டவை மற்றும் தகுதிவாய்ந்த ஒழுங்குமுறைவிதிகளை வடிவமைப்பதில் சிரமங்களை ஏற்படுத்தும் போது, பொது ஒழுங்கிற்கு அச்சுறுத்தலை பன்மடங்கு அதிகரிக்கிறது. இணையவழி விளையாட்டுகளின் மீது புதிய சட்டத்தை இயற்றுவதற்கு, அரசுக்கு அறிவுரை வழங்குவதற்கு ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி திரு. K. சந்துரு அவர்களின் தலைமையில் உருவாக்கப்பட்ட குழுவானது அதன் அறிக்கையில், பல்வேறு வரைக்கூறுகளை காரணமாக எடுத்துக்கொண்டால், விளையாட்டு எதனின் இணையவழி பதிப்பானது சீரற்ற வெளியீட்டு உருவாக்கி (Random Outcome Generators) எதிலும் ஈடுபடாத வார்த்தை விளையாட்டுகள் அல்லது பலகை விளையாட்டுகளின் நேர்வுகளைத் தவிர அந்த விளையாட்டின் இணையவழியல்லாத பதிப்புடன் ஒப்பிட முடியாது மற்றும் சீரற்ற உருவாக்கியை (Random Generators) உள்ளடக்கிய இணையவழி விளையாட்டுகளின் வாய்ப்புக்களை உருவாக்குபவர்களுக்கு தெரியும். எனவே, அவை போலியான சீரற்ற உருவாக்கிகள் (Random Generators) ஆகும்; அத்தகைய விளையாட்டுகள் இயந்திரத்துடன் விளையாடக்கூடியவை; அத்தகைய விளையாட்டு முறைகளை மேற்பார்வையிட இயங்கமைவு எதுமில்லை: மற்றும் அந்த விளையாட்டுகளை கையாளவும், தொடர் ஈடுபாட்டிற்கு விளையாட்டாளர்களை கவர்ந்திழுக்கவும், செயற்கை நுண்ணறிவு பயன்படுத்தப்படலாம் எனக் கண்டறிந்துள்ளது.

4. கூறப்பட்ட குழுவின் அறிக்கை, அரசுப்பள்ளி மாணவர்களின் மீது இணையவழி விளையாட்டுகளால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து பள்ளி ஆசிரியர்களிடையே நடத்தப்பட்ட ஆய்வின் முடிவுகள், இது குறித்த ஆராய்ச்சி ஆய்வுகள் மற்றும் பங்கேற்பாளர்கள் மற்றும் பொதுமக்களின் கருத்துக்கள் மற்றும் பல்வேறு சட்டங்களை ஆய்வு செய்த பின்னர் அதன்படி உள்ள முடிவுகள் ஆகியவற்றை கவனமாக பரிசீலனை செய்த பின்னர் அரசானது, இணையவழி சூதாட்டங்களை தடைசெய்வதெனவும், இணையவழி விளையாட்டுகளை ஒழுங்குமுறைப்படுத்துவதெனவும் முடிவு செய்துள்ளது.

5. இந்த அவசரச் சட்டமானது மேற்சொன்ன முடிவிற்குச் செயல்வடிவம் கொடுக்க விழைகிறது.

(ஆளுநரின் ஆணைப்படி)

ச. கோபி ரவிகுமார், அரசு செயலாளர் (சட்டமியற்றல்), சட்டத்துறை.

(தமிழாக்கம்)

வெ. அரசகுமார், உதவி இயக்குநர், சட்ட(தமிழ்ப்பிரிவு)த் துறை.

தமிழ்நாடு அரசுக்காக சென்னை எழுதுபொருள் மற்றும் அச்சுத் துறை இயக்குநரால்

அச்சிடப்பட்டு வெளியிடப்பட்டது.

Cite this issue. Tamil Nadu Gazette, Government of Tamil Nadu, 14 June 2023. Indian Gazettes, https://egazette.servantsofknowledge.in/details/in.gazette.tamilnadu.2023-06-14.Ordinary_24_Part-IV_Section-2_T_Supp/. Archive identifier in.gazette.tamilnadu.2023-06-14.Ordinary_24_Part-IV_Section-2_T_Supp.