© தமிழ்நாடு அரசு 2023
[Regd. No. TN/CCN/467/2012-14. [R. Dis. No. 197/2009. [விலை: ரூ. 3.20 காசு
| தமிழ்நாடு அரசிதழ் ஆணையின்படி வெளியிடப்பட்டது. | ||
எண் 26] சென்னை, புதன்கிழமை, ஜூன் 28, 2023 ஆனி 13, சோபகிருது, திருவள்ளுவர் ஆண்டு–2054
பகுதி II—பிரிவு 2 இன் இணைப்பு
அரசாங்க அறிவிப்புகளின் தமிழ் மொழிபெயர்ப்புகள்
வேளாண்மை மற்றும் உழவர் நலத் துறை
அறிவிக்கை-I
[அரசாணை (நிலை) எண். 32, வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை, 24 பிப்ரவரி 2023.] 1966ஆம் ஆண்டு விதைகள் சட்டத்தின் (மத்தியச் சட்டம் 54/1966) 4ஆம் பிரிவைச் சேர்ந்த (2) உட்பிரிவில் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களைக் கொண்டு, தமிழ்நாட்டு ஆளுநர் அவர்கள், இச்சட்டத்தின் கீழ் விதை ஆய்வாளரால் யாதொரு அறிவிக்கையிடப்பட்ட இனம் அல்லது வகையைச் சேர்ந்த விதைகளைப் பகுப்பாய்வு செய்யும் நோக்கத்திற்காக, திருப்பூரிலுள்ள விதை பரிசோதனை ஆய்வகத்தை, மாநில விதை ஆய்வகமாக இதனால் அறிவிக்கிறார்.
அறிவிக்கை-II
[அரசாணை (நிலை) எண். 32, வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை, 24 பிப்ரவரி 2023.] 1966ஆம் ஆண்டு விதைகள் சட்டத்தின் (மத்தியச் சட்டம் 54/1966) 12ஆம் பிரிவில் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களைக் கொண்டு, தமிழ்நாட்டு ஆளுநர் அவர்கள், திருப்பூரிலுள்ள விதை பரிசோதனை ஆய்வகத்தின் முதுநிலை வேளாண் அலுவலரை "விதை ஆய்வாளராக " இதனால் நியமிக்கிறார். அவர், திருப்பூர் மாவட்ட அதிகார வரம்பெல்லைக்குட்பட்டு செயல்படுவார்.
சி. சமயமூர்த்தி, வேளாண் உற்பத்தி ஆணையர் மற்றும் அரசுச் செயலாளர்.
(தமிழாக்கம்)
ந. அருள், இயக்குநர் (மு.கூ.பொ), தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தி (மொழிபெயர்ப்பு)த் துறை.
வீட்- -டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை
[அரசாணை (நிலை) எண். 266, வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி [UD4 (2)]த் துறை, 21 டிசம்பர் 2022.] தமிழ்நாடு 1971ஆம் ஆண்டு நகர் ஊரமைப்புச் சட்டத்தின் (தமிழ்நாடு சட்டம் 35/1972) 10ஆம் பிரிவைச் சேர்ந்த (4) உட்பிரிவின் கீழ் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களைக் கொண்டு, தமிழ்நாட்டு ஆளுநர் அவர்கள் கீழ்க்காணும் அட்டவணையில் குறிப்பிடப்பட்டவாறாக, திருக்கோவிலூர் பேரூராட்சி மற்றும் 2 கிராமங்களில் அடங்கியுள்ள பகுதிகளை, திருக்கோவிலூர் உள்ளூர் திட்டமிடல் பகுதியாக இதனால் அறிவிக்கிறார். அவ்வாறு செய்வதற்கான நோக்கம், மேற்சொன்ன சட்டத்தின் 10 ஆம் பிரிவைச் சேர்ந்த (2) உட்பிரிவின் (b) பகுதியின் கீழ் கோரியுள்ளவாறாக ஏற்கெனவே வெளியிடப்பட்டுள்ளது.
[ 1 ]
DTP-II-2-(26) (T Sup)—12
அட்டவணை
| உள்ளூர் திட்டமிடல் பகுதியின் பெயர் | உள்ளுர் திட்டமிடல் பகுதியை உருவாக்கும் பகுதி (வருவாய் கிராமங்களில் பெயர் மற்றும் எண்) |
| ( 1 ) | ( 2 ) |
| திருக்கோவிலூர் | திருக்கோவிலூர் பேரூராட்சி |
| 53 திருக்கோவிலூர் (வடக்கு & தெற்கு) | |
| 52 கீழையூர் |
அபூர்வா, அரசு முதன்மைச் செயலாளர்.
(தமிழாக்கம்)
ந. அருள், இயக்குநர் (மு.கூ.பொ), தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தி (மொழிபெயர்ப்பு)த் துறை.
தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை
[அரசாணை (2ப) எண். 98, தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு (J1)த் துறை, 2 ஜனவரி 2023.] 1948 ஆம் ஆண்டு குறைந்தளவு ஊதியங்கள் சட்டத்தின் (மத்தியச் சட்டம் 11/1948) 3 ஆம் பிரிவைச் சேர்ந்த (1) உட்பிரிவின் (b) பகுதி மற்றும் 5 ஆம் பிரிவைச் சேர்ந்த (2) உட்பிரிவு ஆகியவற்றில் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களைக் கொண்டும், 18-07-2018 ஆம் நாளிட்ட தமிழ்நாடு அரசிதழின் பாகம்-II, பிரிவு 2ல் 641 முதல் 643 வரையிலான பக்கங்களில் (ஆங்கிலத்தில்) வெளியிடப்பட்ட தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறையின் II(2)/LE/618/2018ஆம் எண் அறிவிக்கையின் பதிலிட்டகற்றீடாகவும் தமிழ்நாட்டு ஆளுநர் அவர்கள், ஆலோசனைக் குழுவுடன் கலந்தாலோசித்தப் பின்னரும், தமிழ்நாடு மாநிலத்தில் தோல் பொருள் தயாரிப்புத் தொழிலில் பணியமர்த்தப்பட்டுள்ள கீழ்க்காணும் விவர அட்டவணையின் (1) நெடும்பத்தியில் குறிப்பிடப்பட்டுள்ள பணியாளர் வகையினருக்கு வழங்கத்தக்கக் குறைந்தளவு ஊதிய வீதங்களை, அந்த விவர அட்டவணையின் (2) நெடும்பத்தியின் நிகரான பதிவுகளில் குறிப்பிட்டுள்ளவாறு, இதனால் திருத்தியமைக்கிறார். இதன் வரைவு, மேற்சொன்ன சட்டத்தின் 5 ஆம் பிரிவை சேர்ந்த (1) ஆம் உட்பிரிவின் (b) பகுதியில் கோரப்பட்டுள்ளவாறு ஏற்கனவே வெளியிடப்பட்டுள்ளது.
(2) இந்த அறிவிக்கை, தமிழ்நாடு அரசிதழில் வெளியிடப்படும் நாளிலிருந்தும் அந்நாள் முதற்கொண்டும் செயலுக்கு வரும்.
| பணியாளர்களின் வகைகள் | குறைந்தளவு அடிப்படை ஊதிய வீதங்கள் நாளொன்றுக்கு ( ரூ . காசு.) | |
| ( 1 ) | ( 2 ) | |
| விலங்கின் ரோமத்தை நீக்குகிற பகுதி: | ||
| 1. | உதவி செய்பவர்கள் | 198.50 |
| 2. | தோலை பளபளபாக்குபவர் | 200.50 |
| 3. | ஸ்கட்டர்கள் (Scudders) | 200.50 |
| 4. | ஆட்டின் தோலை உரிப்பவர் | 200.50 |
| தோல் பதனிடுதல் மற்றும் சாயம் தோய்க்கும் பிரிவு: | ||
| 1. | உதவி செய்பவர்கள் | 198.50 |
| 2. | கொள்கலன் எடுத்துச் செல்லும் வேலையாள் | 198.50 |
| 3. | ரோமம் நீக்குபவர்கள் | 203.50 |
| 4. | மயிரிழையைப் பகுப்பவர்கள் | 203.50 |
| 5. | ரோமம் நீக்க கற்றுக் கொள்பவர்கள் | 198.50 |
| 6. | பாமிங் உதவியாளர்கள் | 198.50 |
| சீரமைக்கும் பிரிவு: | ||
| 1. | உதவியாட்கள் | 198.50 |
| 2. | இயந்திரத்தை இயக்குபவர் | 198.50 |
| 3. | கையினால் சீரமைப்பவர் | 198.50 |
| அடுக்கி வைக்கும் பிரிவு: | ||
| 1. | உதவியாட்கள் | 198.50 |
| 2. | பஸ்டர்கள் (Busters) | 198.50 |
| 3. | அடுக்கி வைப்பவர்கள் | 198.50 |
| இறுத்தெடுக்கும் பிரிவு: | ||
| 1. | உதவியாட்கள் | 198.50 |
| 2. | இறுத்தெடுப்பவர்கள் | 198.50 |
| பணி முற்றாக்கல் பிரிவு : | ||
| 1. | உதவியாட்கள் | 198.50 |
| 2. | பதப்படுத்துபவர்கள் | 198.50 |
| 3. | தெளிப்பவர்கள் | 198.50 |
| பணி முற்றாக்கல் இயந்திரப் பிரிவு: | ||
| 1. | உதவியாட்கள் | 198.50 |
| 2. | பொலிவூட்டும் இயந்திரத்தை இயக்குபவர் | 198.50 |
| 3. | சாணைக்கல் சக்கரத்தை இயக்குபவர் | 198.50 |
| 4. | பளபளப்பு ஏற்படுத்தும் இயந்திரத்தை இயக்குபவர் (Cow) | 198.50 |
| 5. | சீராக்குபவர்கள் | 198.50 |
| 6. | அழுத்துகிற இயந்திரத்தை இயக்குபவர்கள் | 198.50 |
| 7. | கைகளினால் சுருக்கம் நீக்குவர்கள் | 198.50 |
| 8. | தாடை ரோமம் நீக்குபவர்கள் | 198.50 |
| 9. | பளபளப்பாக்கும் இயந்திரத்தை இயக்குபவர்கள் (Glaze Kid) | 202.00 |
| வார்ப்பு உலை பிரிவு: | ||
| 1. | உதவியாட்கள் | 198.50 |
| 2. | பொருத்துநர்கள் | 202.00 |
| 3. | ஓட்டுநர்கள் | 205.50 |
| 4. | கொத்தனார் | 203.50 |
| 5. | தச்சர்கள் | 203.50 |
| 6. | பொருத்துநர்கள் மற்றும் ஓட்டுநர்கள் (பயில்பவர்) | 198.50 |
| புழக்கடை பிரிவு: | ||
| 1. | டீமர்கள் (Deamers) | 198.50 |
| 2. | சீரமைப்பவர்கள் | 198.50 |
| பொது: | ||
| 1. | மேஸ்திரிகள் | 6088.00/திங்களொன்றுக்கு |
| 2. | எழுத்தாளர்கள்/காசாளர்கள் | 6088.00/திங்களொன்றுக்கு |
| 3. | காவலாள் | 6088.00/திங்களொன்றுக்கு |
ஏனைய தோல் பதனீட்டு தொழிற்சாலைகள்:
(i) விலங்கின் ரோமத்தை நீக்குகிற குழியில் அல்லது தோலை நீக்குகிற குழியில் தோல் மற்றும் உரிவைகளைப் பதனிடுவதற்கு, முதல் யூனிட்டுக்கு ரூபாய் 67.07 காசுகள் மற்றும் மேற்கொள்ளப்படும் ஒவ்வொரு கூடுதல் யூனிட் பணிக்கும் ரூபாய் 6.99 காசுகள் வீதம் ஊதியம் வழங்கப்பட வேண்டும்.
(ii) பயிற்சி பெறாத தொழிலாளர்களுக்கு, நாளொன்றுக்கு ரூபாய் 198.50 வழங்கப்பட வேண்டும்.
செய்யும் வேலைக்கேற்ற ஊதியம் பெறும் தொழிலாளர்கள்:
முதல் யூனிட்டைப் பொறுத்தவரையில், மேற்கொள்ளப்பட்ட பணிக்காக ரூபாய் 104.79 காசுகளும், மேற்கொள்ளப்படும் ஒவ்வொரு கூடுதல் யூனிட் பணிக்கும் ரூபாய் 46.12 காசுகள் வீதமும் ஊதியம் வழங்கப்பட வேண்டும். விலங்கின் ரோமத்தை நீக்குகிற அல்லது தோலை நீக்குகிற குழியில் மேற்கொள்ளப்பட்ட ஒவ்வொரு கூடுதல் யூனிட் பணிக்கும் ரூ. 6.99 வழங்கப்பட வேண்டும்.
தோல் பதனீடு மற்றும் தோல் பொருள் தயாரிப்பு தொழிலில் உள்ள பொதுவான வகையினர்:
(1) எழுத்தர்/காசாளர் - திங்களொன்றுக்கு ரூபாய் 6088.00
(2) மேஸ்திரி அல்லது மேற்பார்வையாளர் - திங்களொன்றுக்கு ரூபாய் 6088.00
(3) காவலாள் - திங்களொன்றுக்கு ரூபாய் 6024.00
விளக்கங்கள்:—
(i) மேலே நிர்ணயிக்கப்பட்ட அடிப்படை ஊதியங்களுடன் கீழே குறிப்பிடப்பட்டவாறு அகவிலைப்படி தொழிலாளர்களுக்கு வழங்கப்படும். அகவிலைப்படியைக் கணக்கிடுவதற்கு 2010 ஆம் ஆண்டிற்கான அனைத்திந்திய நுகர்வோர் சராசரி விலைக்குறியீட்டு எண்ணுடன் இணைக்கப்பட்டுள்ளது (அதாவது 2001 ஆம் ஆண்டில் 100 புள்ளிகள் என்பதை அடிப்படையாகக் கொண்டு தற்போது கணக்கிடப்பட்ட 176 புள்ளிகளாகும்). 176 புள்ளிகளுக்கு மேல் உயரும் ஒவ்வொரு புள்ளிகளுக்கும், அகவிலைப்படி நாளொன்றுக்கு ரூ. 1.12 காசுகள் (ஓரு ரூபாய் பன்னிரெண்டு காசுகள் மட்டும்) கூடுதலாக அகவிலைப்படி வழங்கப்பட வேண்டும்.
(ii) ஒரே தன்மையுடைய பணியை செய்யும்போது ஆண் மற்றும் பெண் தொழிலாளர்களுக்கு வழங்கும் ஊதியத்தில் எவ்வித வேறுபாடும் இருக்கக்கூடாது.
(iii) ஏதேனும் தோல் பதனீட்டு தொழிற்சாலை மற்றம் தோல் பொருள் தயாரிப்புத் தொழிலில் செய்யும் வேலைக்கேற்ற ஊதியம் பெறுகிற தொழிலாளர்களை பணியில் அமர்த்துகிறவிடத்து, வழக்கமான வேலை நாள் ஒன்றுக்காக, அவர்கள் ஒவ்வொருவருக்கும் வழங்குகிற ஊதியம், அந்த வகையினருக்காக நிருணயிக்கப்பட்டுள்ள குறைந்தளவு ஊதியங்களைவிட குறைவாக இருக்கக்கூடாது.
(iv) நாள் ஊதிய வீதங்களைக் கணக்கிட, திங்கள் ஊதியத்தை 26 ஆல் வகுக்க வேண்டும்.
(v) திங்கள் ஊதியத்தைக் கணக்கிட, நாள் ஊதியத்தை 30 ஆல் பெருக்க வேண்டும்.
(vi) தற்போது வழங்கப்பட்டு வரும் ஊதியங்கள், இங்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள குறைந்தளவு ஊதியங்களைக் காட்டிலும் அதிகமாக இருக்குமிடங்களிலெல்லாம், அதே ஊதியம் தொடர்ந்து வழங்கப்பட வேண்டும்.
முகமது நசிமுத்தின்,
அரசு கூடுதல் தலைமைச் செயலாளர்.
(தமிழாக்கம்)
ந. அருள், இயக்குநர் (மு.கூ.பொ) தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தி (மொழிபெயர்ப்பு)த் துறை.
[அரசாணை (ப) எண். 641, தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு (J1)த் துறை, 22 டிசம்பர் 2022.] 1948ஆம் ஆண்டு குறைந்தளவு ஊதியங்கள் சட்டத்தின் (மத்தியச் சட்டம் 11/1948) 3ஆம் பிரிவைச் சேர்ந்த (1) உட்பிரிவின் (b) பகுதி, 5ஆம் பிரிவைச் சேர்ந்த (2) உட்பிரிவு ஆகியவற்றில் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களைக் கொண்டு வெளியிடக் கருதியுள்ள கீழ்க்காணும் வரைவு அறிவிக்கை, மேற்சொன்ன சட்டத்தின் 5ஆம் பிரிவைச் சேர்ந்த (1) உட்பிரிவின் (b) பகுதியில் கோரியுள்ளவாறு, அதனால் பாதிக்கப்படக்கூடிய அனைவரின் தகவலுக்காக இதனால் வெளியிடப்படுகிறது.
2. இந்த வரைவு அறிவிக்கை தமிழ்நாடு அரசிதழில் வெளியிடப்படும் நாளிலிருது இரண்டு திங்கள் கால அளவு முடிவடையும் நாளன்று அல்லது அதற்குப் பின்னர் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்படுமென்றும், மேற்சொன்ன கால அளவு முடிவடைவதற்கு முன்னர், இது தொடர்பாக, யாதொரு நபரிடமிருந்தும் வரப்பெறுகிற யாதொரு மறுப்புரை அல்லது கருத்துரையை தமிழ்நாடு அரசு பரிசீலிக்குமென்றும் இதனால் அறிவிக்கப்படுகிறது. மறுப்புரை அல்லது கருத்துரை ஏதேனுமிருப்பின் அதனை, சென்னை-600 006 DMS வளாகத்திலுள்ள தொழிலாளர் நல ஆணையாளர் வாயிலாக அரசு கூடுதல் தலைமைச் செயலாளர், தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை, தலைமைச் செயலகம், சென்னை-600 009 என்ற முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.
5வரைவு அறிவிக்கை
1948ஆம் ஆண்டு குறைந்தளவு ஊதியங்கள் சட்டத்தின் (மத்தியச் சட்டம் 11/1948) 3ஆம் பிரிவைச் சேர்ந்த (1) உட்பிரிவின் (b) பகுதி, 5ஆம் பிரிவைச் சேர்ந்த (2) உட்பிரிவிலும் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களைக் கொண்டும், 26-06-2019ஆம் நாளிட்ட தமிழ்நாடு அரசிதழின் பாகம்-II-பிரிவு 2-இல், 551 முதல் 554 வரையிலான பக்கங்களில் (ஆங்கிலத்தில்) வெளியிடப்பட்ட தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறையின் II(2)/தொ.வே/487/2019-ஆம் எண் அறிவிக்கையினை ரத்து செய்துவிட்டு அதற்குப் பதிலாகவும், தமிழ்நாடு ஆளுநர் அவர்கள், தமிழ்நாடு மாநிலத்தில் உணவு பதப்படுத்தும் தொழிலில் பணியமர்த்தப்பட்டுள்ள கீழேயுள்ள விவர அட்டவணையின் (1) நெடும்பத்தியில் குறிப்பிடப்பட்டுள்ள பணியாளர் வகையினருக்கு அந்த விவர அட்டவணையின் (2) மற்றும் (3) ஆம் நெடும்பத்திகளின் நிகரான பதிவுகளில் குறிப்பிடப்பட்டுள்ளவாறு வழங்கத்தக்க குறைந்தளவு ஊதிய வீதங்களை, இதனால் திருத்தியமைக்கிறார்.
விவர அட்டவணை
உணவு பதப்படுத்தும் தொழிலில் வேலைவாய்ப்பு
| தொடர் எண் | பணியாளர் வகையினர் | குறைந்தளவு அடிப்படை ஊதிய வீதங்கள் | |
| மண்டலம்-A | மண்டலம்-B | ||
| ( ரூ . காசு) ( மாதமொன்றுக்கு) | ( ரூ . காசு) ( மாதமொன்றுக்கு) | ||
| ( 1 ) | ( 2 ) | ( 3 ) | ( 4 ) |
| I. பொதுவான வகையினா்: | |||
| 1. | மேலாளர் | 8892.00 | 8735.00 |
| 2. | வேதியியலாளர் | 7806.00 | 7705.00 |
| 3. | மேற்பார்வையாளர் | 7705.00 | 7604.00 |
| 4. | கணக்காளர் | ||
| 5. | காசாளர் | ||
| 6. | எழுத்தர் | 7588.00 | 7502.00 |
| 7. | தண்டலர் (Collection Clerk) | ||
| 8. | தட்டச்சர் | ||
| 9. | விற்பனைக்குப் பொறுப்பாளர் | ||
| 10. | பண்டகசாலை காப்பாளர் | ||
| 11. | பதிவு செய்கின்ற / பொருள் ஒப்படைப்பு செய்கின்ற எழுத்தர் | 7514.00 | 7428.00 |
| 12. | விற்பனை உதவியாளர்/பட்டி எழுத்தர் | ||
| 13. | ஓட்டுநர் | ||
| 14. | அலுவலகப் வேலையாள்/பொருள் ஒப்படைப்பு செய்யும் வேலையாள் | 7270.00 | 7196.00 |
| 15. | பாதுகாவலர்/காவலாள் | ||
| 16. | பெருக்குபவர்/துப்புரவுப் பணியாளர் |
| தொடர் எண் | தொழிலாளர் வகையினர் | குறைந்தளவு அடிப்படை ஊதிய வீதங்கள் | |||
| மண்டலம்-A | மண்டலம்-B | ||||
| ( 1 ) | ( 2 ) | ( 3 ) | ( 4 ) | ||
| நாள் வீதம் ( ரூ . காசு) | மாதாந்திர வீதம் ( ரூ . காசு) | நாள் வீதம் ( ரூ . காசு) | மாதாந்திர வீதம் ( ரூ . காசு) | ||
| ( a ) | ( b ) | ( a ) | ( b ) | ||
| II. சிறப்பு வகையினர்: | |||||
| A. ஊறுகாய்கள் மற்றும் மசாலா பொடி தயாரிப்பு: | |||||
| 1. | நறுக்குபவர் | 288.00 | 7513.00 | 283.00 | 7438.00 |
| 2. | கலக்குபவர் | ||||
| 3. | பொடித்து கலக்குபவர் | ||||
| 4. | உதவியாள் | 280.00 | 7266.00 | 277.50 | 7212.00 |
| 5. | சுத்தம் செய்பவர் | ||||
| 6. | சிப்பமாக்குபவர் | ||||
| B. பழக்கலவை மற்றும் பழக்கூழ் தயாரிப்பு: | |||||
| 1. | இயந்திர கம்மியர் | 320.00 | 8341.00 | 315.00 | 8189.00 |
| 2. | மின்னியற்றி இயக்குபவர் | 288.00 | 7513.00 | 285.50 | 7438.00 |
| 3. | கொதிகலன் இயக்குபவர் | ||||
| 4. | ஸ்கேமர் இயக்குபவர் | ||||
| 5. | கலக்குபவர் / நறுக்குபவர் | ||||
| 6. | சுத்தம் செய்பவர் | 278.50 | 7290.00 | 277.00 | 7212.00 |
| 7. | வகைப்படுத்துபவர் | ||||
| 8. | உதவியாள் | ||||
| 9. | சுமை ஏற்றி இறக்குபவர் | ||||
| C. பனிக்கூழ் தயாரிப்பு: | |||||
| 1. | கலவை அறை இயக்குபவர் | 320.00 | 8341.00 | 315.00 | 8189.00 |
| 2. | உறைகலன் (ப்ரீசர்) இயக்குபவர் | ||||
| 3. | இயந்திர கம்மியர் | ||||
| 4. | மின் கம்மியர் | 297.50 | 7740.00 | 293.00 | 7626.00 |
| 5. | தச்சர் | ||||
| 6. | அடைப்புவேலை (டிங்கர்) செய்பவர் | ||||
| 7. | குளிர்பதன அறை வேலையாள் | 288.00 | 7513.00 | 283.00 | 7438.00 |
| 8. | தூய்மையாக்கும் அறை வேலையாள் | ||||
| 9. | உதவியாள் | 278.50 | 7290.00 | 277.00 | 7212.00 |
| D. சேமியா தயாரிப்பு: | |||||
| 1. | முதலாள் | 297.50 | 7740.00 | 293.00 | 7626.00 |
| 2. | சிப்பமாக்குபவர் | 278.50 | 7290.00 | 227.00 | 7212.00 |
| 3. | பொதுவான வகை தொழிலாளர் | ||||
| E. தேங்காய் உற்பத்திப் பொருட்கள் தயாரிப்பு: | |||||
| 1. | இயந்திரம் இயக்குபவர் | 320.00 | 8341.00 | 315.00 | 8189.00 |
| 2. | தோல் உரிப்பவர் | 297.50 | 7740.00 | 293.00 | 7626.00 |
| 3. | உடைப்பவர் | ||||
| 4. | பொதுவான தொழிலாளர் | 278.50 | 7290.00 | 277.00 | 7212.00 |
| F. கடலை மிட்டாய் தயாரிப்பு: | |||||
| 1. | நறுக்குபவர் | 288.00 | 7513.00 | 283.00 | 7438.00 |
| 2. | மாஸ்டர் | ||||
| 3. | சிப்பமாக்குபவர் | 278.50 | 7290.00 | 277.00 | 7212.00 |
| G. பால்கோவா தயாரிப்பு: | |||||
| 1. | கோவா தயாரிப்பவர் | 320.00 | 8341.00 | 315.00 | 8189.00 |
| 2. | சிப்பமாக்குபவர் | 278.50 | 7290.00 | 277.00 | 7212.00 |
| H. இனிப்புகள் மற்றும் காரவகைகள் தயாரிப்பு: | |||||
| 1. | இனிப்பு தயாரிப்பவர் | 320.00 | 8341.00 | 315.00 | 8189.00 |
| 2. | கொள்முதல் செய்பவர் | 297.50 | 7740.00 | 293.00 | 7626.00 |
| 3. | உற்பத்தி உதவியாள் | ||||
| 4. | சிப்பமாக்குபவர் | 286.50 | 7513.00 | 283.00 | 7438.00 |
| 5. | சுத்தம் செய்பவர் | 278.50 | 7290.00 | 277.00 | 7212.00 |
விளக்கங்கள்:—
(1) மண்டலங்களின் வகைப்பாடு: மண்டலம் A மற்றும் B-இல் பின்வரும் பகுதிகள் அடங்கும்:-
மண்டலம் A: அனைத்து மாநகராட்சிகள்.
மண்டலம் B: மாநகராட்சிப் பகுதிகள் நீங்கலான அனைத்துப் பகுதிகள்.
(2) அகவிலைப்படி: மேற்சொன்ன தொழிலாளர்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட குறைந்தளவு அடிப்படை ஊதிய வீதங்களுடன் கூடுதலாக கீழே குறிப்பிடப்பட்டுள்ளவாறு அகவிலைப்படி வழங்கப்பட வேண்டும்.
(i) அகவிலைப்படி, 2010ஆம் ஆண்டிற்கான சென்னை மாநகர நுகர்வோர் சராசரி விலைக்குறியீட்டு எண்ணுடன் இணைக்கப்பட்டுள்ளது (அதாவது 2001 ஆம் ஆண்டில் 100 புள்ளிகள் என்பதை அடிப்படையாகக் கொண்டு தற்போது கணக்கிடப்பட்ட 161 புள்ளிகள்). 161 புள்ளிகளுக்கு மேல் உயரும் ஒவ்வொரு புள்ளிக்கும் திங்கள் ஒன்றுக்கு ரூ.44.65 (நாற்பத்து நானகு ரூபாய் அறுபத்தைந்து காசுகள் மட்டும்) கூடுதலாக அகவிலைப்படி வழங்கப்பட வேண்டும்.
(ii) முந்தைய 12 மாதங்களுக்கான (அதாவது ஜனவரியிலிருந்து டிசம்பர் வரை) சராசரி விலைக்குறியீட்டினை அடிப்படையாகக் கொண்டு ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் முதல் நாளிலிருந்து அகவிலைப்படி கணக்கிடப்பட வேண்டும்.
(iii) முந்தைய ஆண்டிற்கான சென்னை மாநகர சராசரி நுகர்வோர் விலைக் குறியீட்டினை அடிப்படையாகக் கொண்ட முதல் கணக்கீடு, இந்த அறிவிக்கை தமிழ்நாடு அரசிதழில் வெளியிடப்படும் நாளிலிருந்து செயலுக்கு வரும்.
(3) (i) நாள் ஊதிய வீதங்களைக் கணக்கிடுவதற்கு, மாதாந்திர ஊதிய வீதங்களை 26 ஆல் வகுக்க வேண்டும்.
(ii) மாதாந்திர ஊதிய வீதங்களைக் கணக்கிடுவதற்கு, நாள் ஊதிய வீதங்களை 30 ஆல் பெருக்க வேண்டும்.
(4) பணியின் தன்மை ஒரே மாதிரியாக இருக்கும்போது, ஆண் மற்றும் பெண் தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் ஊதியத்தில் எவ்வித வேறுபாடும் இருக்கக்கூடாது.
(5) தற்போது வழங்கப்பட்டு வரும் ஊதியங்கள், இங்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள குறைந்தளவு ஊதியங்களைக் காட்டிலும் அதிகமாக இருக்குமிடங்களிலெல்லாம் அதே ஊதியம் தொடர்ந்து வழங்கப்பட வேண்டும்.
முகமது நசிமுத்தின், அரசு கூடுதல் தலைமைச் செயலாளர்.
(தமிழாக்கம்)
ந. அருள், இயக்குநர் (மு.கூ.பொ) தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தி (மொழிபெயர்ப்பு)த் துறை.
தமிழ்நாடு அரசுக்காக சென்னை எழுதுபொருள் மற்றும் அச்சுத் துறை இயக்குநரால்
அச்சிடப்பட்டு வெளியிடப்பட்டது.