Servants of Knowledge
Tamil Nadu Gazette · Government of Tamil Nadu

Notifications or Orders of specific character or of particular interest to the public issued by Secretariat Departments LABOUR WELFARE AND SKILL DEVELOPMENT DEPARTMET - Notification -

Published 05 July 2023

Type
Ordinary
Gazette no.
27
Part
Part II
Section
Section 1-T-Sup
Identifier
in.gazette.tamilnadu.2023-07-05.Ordinary_27_Part-II_Section-1-T-Sup
Languages
English, Tamil
Published at
Original source ↗

© தமிழ்நாடு அரசு 2023

[Regd. No. TN/CCN/467/2012-14. [R. Dis. No. 197/2009. [விலை : ரூ. 1.60 காசு

தமிழ்நாடு அரசிதழ் ஆணையின்படி வெளியிடப்பட்டது.

எண் 27] சென்னை, புதன்கிழமை, ஜூலை 5, 2023 ஆனி 20, சோபகிருது, திருவள்ளுவர் ஆண்டு–2054

பகுதி II—பிரிவு 1 இன் இணைப்பு

அரசாங்க அறிவிப்புகளின் தமிழ் மொழிபெயர்ப்புகள்

தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை

[அரசாணை (நிலை) எண். 47, தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் (R2)த் துறை, 13 மார்ச் 2023] சேவைகள் அல்லது பயன்கள் அல்லது மானியங்களை வழங்குவதற்கான அடையாள ஆவணமாக ஆதாரைப் பயன்படுத்துவது, அரசின் வழங்கல் நடைமுறைகளை எளிதாக்குவதோடு, வெளிப்படைத்தன்மை மற்றும் திறனை அளிப்பதுடன் ஒருவரின் அடையாளத்தை மெய்ப்பிக்க பல்வேறு ஆவணங்களை அளிப்பதைத் தவிர்ப்பதன் வாயிலாக பயனாளிகள் தங்கள் உரிமைகளை நேரடியாக வசதியாகவும் தடையற்ற முறையிலும் பெற உதவுகிறது என்பதாலும்;

தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை (இனி துறை எனக் குறிப்பிடப்படும்), வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறையின் (இனிமேல் செயல்படுத்தும் முகமை எனக் குறிப்பிடப்படும்) www.tnvelaivaaippu.gov.in இணையதளத்தில் தங்கள் பெயரைப் பதிவு செய்துள்ள தமிழ்நாட்டைச் சேர்ந்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பற்ற இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பின்மை உதவித் திட்டத்தை (இனி திட்டம் எனக் குறிப்பிடப்படும்) நிர்வகித்து வருகிறது என்பதாலும், மேலும், மேற்கூறிய திட்டமானது தமிழ்நாடு அரசின் தொகுப்பு நிதியிலிருந்து மேற்கொள்ளப்படும் தொடர் செலவினங்களுடன் தொடர்புடையது என்பதாலும்,

2016 ஆம் ஆண்டு ஆதார் (நிதி மற்றும் பிற மானியங்கள், பயன்கள், சேவைகள் ஆகியவற்றை உண்மையான பயனாளிகளைக் கண்டறிந்து வழங்குதல் சட்டத்தின் (மத்தியச் சட்டம் 18/2016) 7 ஆம் பிரிவின்படி (இனி மேற்சொன்ன சட்டம் எனக் குறிப்பிடப்படும்) தமிழ்நாடு அரசு தற்போது பின்வருவனவற்றை இதனால் அறிவிக்கிறது அதாவது:-

(1) இத்திட்டத்தின் கீழ் பயன்களைப் பெறத் தகுதியுடைய தனிநபர் ஒருவர் ஆதார் எண்ணை வைத்திருப்பதற்கான சான்றை வழங்க வேண்டும் அல்லது அவர் ஆதார் அட்டை நம்பகத்தன்மைக்கு உட்படுத்தப்பட வேண்டும்.

(2) இத்திட்டத்தின் கீழ் பயன்களைப் பெற விரும்பும் ஆதார் எண்ணைக் கொண்டிராத அல்லது இதுவரை ஆதார் எண் பெறுவதற்கு விண்ணப்பிக்காத ஆனால் மேற்சொன்ன சட்டத்தின் 3 ஆம் பிரிவின்கீழ் ஆதார் எண் பெறுவதற்கு உரிமையுடைய யாதொரு நபரும், இத்திட்டத்தில் பதிவு செய்வதற்கு முன்னர் ஆதார் எண் பதிவுக்கு விண்ணப்பிக்க வேண்டியது அவசியமாகும். அத்தகைய நபர்கள் யாதொரு ஆதார் பதிவு மையத்திற்கும் சென்று (இந்திய தனித்துவ அடையாள ஆணையத்தின்) (UIDAI) இணையதளமான https://www.uidai.gov.in-இல் பட்டியல் இடம் பெற்றுள்ளது) பதிவு செய்யவேண்டும்.

27-II-1-(T Sup)—1

[ 1 ]2 (3) 2016 ஆம் ஆண்டு ஆதார் ஒழுங்குமுறை (பதிவு செய்தல் மற்றும் புதுப்பித்தல்) விதிகளின் ஒழுங்குமுறை விதி எண் 12 இன்படி ஆதார் எண் பெறுவதற்கு நாளது வரையில் பதிவு செய்யாத பயனாளிகளுக்கு துறையானது அதன் செயற்படுத்தும் முகவரமைப்பு வாயிலாக ஆதார் பதிவுக்கான வசதி வாய்ப்புகளை வழங்க வேண்டும். மேலும், தொடர்புடைய வட்டாரத்தில் அல்லது வட்டத்தில் ஆதார் பதிவு மையம் இல்லையெனில், துறையானது, அதன் செயற்படுத்தும் முகவரமைப்பு வாயிலாக தற்போதுள்ள இந்திய தனித்துவ அடையாள ஆணையத்தின் (UIDAI) பதிவாளராகத் தம்மை பதிவு செய்து கொண்டு, வசதியான இடங்களில் ஆதார் பதிவு வசதிகளை வழங்க வேண்டும்.

இருப்பினும், தனிநபருக்கு ஆதார் எண் ஒதுக்கீடு செய்யப்படும் வரை, பின்வரும் ஆவணங்களை அளிக்க வேண்டும் என நிபந்தனைக்குட்பட்டு அத்தகைய நபருக்கு திட்டத்தின் கீழான பயன்கள் வழங்கப்பட வேண்டும்.

அதாவது:-

(அ) அவர் பதிவு செய்திருப்பாராயின், அவருடைய ஆதார் பதிவு அடையாளச் சீட்டு: மற்றும்

(ஆ) பின்வரும் ஆவணங்களில் ஏதேனும் ஒன்று, அதாவது:-

(i) ஒளிப்படத்துடன் கூடிய வங்கி அல்லது அஞ்சலக கணக்குப் புத்தகம்: அல்லது

(ii) நிரந்தர கணக்கு எண் (PAN) அட்டை; அல்லது

(iii) கடவுச்சீட்டு; அல்லது

(iv) குடும்ப அட்டை; அல்லது

(v) வாக்காளர் அடையாள அட்டை; அல்லது

(vi) மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதிச் சட்ட அட்டை: அல்லது

(vii) ஒளிப்படத்துடன் கூடிய கிசான் (விவசாய) கணக்குப் புத்தகம்: அல்லது

(viii) 1988 ஆம் ஆண்டு மோட்டார் வாகனச் சட்டம், (மத்திய சட்டம் 59/1988) கீழ் உரிமம் வழங்கும் அதிகாரியால் வழங்கப்பட்ட ஓட்டுநர் உரிமம்; அல்லது

(ix) அரசிதழ் பதிவு பெற்ற அலுவலர் அல்லது வட்டாட்சியரால் அலுவலக விவரக் குறிப்பேட்டில் வழங்கப்பட்ட அத்தகைய நபரின் ஒளிப்படத்துடன் கூடிய அடையாளச் சான்றிதழ்; அல்லது

(x) துறையால் குறிப்பிடப்பட்டுள்ள வேறு ஏதேனும் ஆவணம்;

மேலும், மேற்கூறிய ஆவணங்கள் அந்த நோக்கத்திற்கென்றே துறையால் நியமிக்கப்பட்ட அலுவலர் ஒருவரால் சரிபார்க்கப்பட வேண்டும்.

2. இத்திட்டத்தின்கீழ் பயனாளிகளுக்கு பயன்களை சிரமமின்றி வழங்குவதற்கேதுவாக, துறையானது அதன் செயல்பாட்டு முகவரமைப்பு வாயிலாக, ஊடகங்களில் பரவலாக விளம்பரம் செய்து, மேற்சொன்ன தேவையைப் பற்றிப் பயனாளிகள் அறிந்து கொள்வதை உறுதி செய்வதற்குத் தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் செய்ய வேண்டும்.

3. பயனாளிகளின் தெளிவற்ற உயிரியளவியல் காரணமாகவோ வேறு ஏதேனும் காரணத்தாலோ ஆதார் உறுதிச் சோதனை தோல்வியுறும் அனைத்து நேர்வுகளிலும் பின்வரும் வழிமுறைகளை பின்பற்ற வேண்டும். அதாவது

(அ) கைரேகை தெளிவின்றி இருக்கும் நேர்வில், உறுதிப்படுத்துவதற்காக, ஒருங்கிணைந்த இடர் தகவல் அமைப்பு வருடல் (Scan) அல்லது முக வடிவை உறுதி செய்யும் வசதி போன்றவை ஏற்றுக்கொள்ளப்படும். அவ்வகையில், துறையானது தடையற்ற முறையில் பயன்களை வழங்குவதற்காக அதன் செயல்பாட்டு முகவரமைப்பு வாயிலாக கைரேகை உறுதி செய்யும் வசதியுடன் ஒருங்கிணைந்த இடர் தகவல் அமைப்பு வருடிகள் (Scanners) அல்லது முகத்தின் வடிவை உறுதி செய்வதற்கான வசதிகளுக்கு ஏற்பாடு செய்துதர வேண்டும்.

(ஆ) கைரேகைகள் அல்லது ஒருங்கிணைந்த இடர் தகவல் அமைப்பு வருடி (Scan) அல்லது முக வடிவை உறுதி செய்தல் போன்ற உயிரியளவியல் உறுதிச் சோதனைகள் தோல்வியுறும் நேர்வில், சாத்தியமான மற்றும் ஏற்றுக்கொள்ளக்கூடிய சூழல்களிலெல்லாம், ஒருமுறை பெறப்படும் ஆதார் கடவுச் சொல் அல்லது குறிப்பிட்ட கால அளவிற்கு செல்திறனுள்ள நேர அடிப்படையிலான ஒருமுறை பெறப்படும் கடவுச் சொல் ஆகியவற்றின் வாயிலாக உறுதிச் சோதனைகளை மேற்கொள்ளலாம்.

(இ) உயிரியளவியல் அல்லது ஒரு முறை பெறப்படும் ஆதார் கடவுச்சொல் அல்லது நேர அடிப்படையிலான ஒரு முறை பெறப்படும் கடவுச்சொல் உறுதிப்படுத்துதல் சாத்தியமில்லாத ஏனைய அனைத்து நேர்வுகளிலும், ஆதார் அட்டையில் அச்சிடப்பட்டுள்ள விரைவு பதில் (QR) குறியீட்டின் வாயிலாக பயனாளிகளின் நம்பகத்தன்மையைச் சரிபார்த்து, திட்டப் பயன்களை வழங்கலாம். மேலும், வசதியான இடங்களில் விரைவு பதில் குறியீட்டு படிப்பிற்குத் தேவையான ஏற்பாடு துறையில் அதன் செயற்பாட்டு முகவரமைப்பு வாயிலாகச் செய்து தரப்பட வேண்டும்.

3

4. மேற்கூறியவற்றுடன், இத்திட்டத்தின் கீழ் யாதொரு தகுதியுடைய பயனாளியும் தனக்குரிய பயன்களைப் இழக்காமலிருப்பதை உறுதி செய்வதற்காக, மத்திய அரசின் அமைச்சரவைச் செயலகத்தைச் சேர்ந்த நேரடி பலன் பரிமாற்றத் திட்டத்தின் 19.12.2017 ஆம் நாளிட்ட அலுவலகக் குறிப்பாணையில் குறிப்பிடப்பட்டுள்ள விடுபாடுகளைக் கையாளும் ஏற்பாட்டுமுறையை துறை தனது செயற்பாட்டு முகவரமைப்பு வாயிலாகப் பின்பற்ற வேண்டும்.

5. இந்த அறிவிக்கை, தமிழ்நாடு அரசிதழில் வெளியிடப்படும் நாளிலிருந்து செயலுக்கு வரும்.

முகமது நசிமுத்தின், அரசு கூடுதல் தலைமைச் செயலாளர்.

(தமிழாக்கம்)

ந. அருள், இயக்குநர் (கூ.பொ.), தமிழ் வளர்ச்சி மற்றும், செய்தி (மொழிபெயர்ப்பு)த் துறை.

தமிழ்நாடு அரசுக்காக சென்னை எழுதுபொருள் மற்றும் அச்சுத் துறை இயக்குநரால்

அச்சிடப்பட்டு வெளியிடப்பட்டது.

Cite this issue. Tamil Nadu Gazette, Government of Tamil Nadu, 05 July 2023. Indian Gazettes, https://egazette.servantsofknowledge.in/details/in.gazette.tamilnadu.2023-07-05.Ordinary_27_Part-II_Section-1-T-Sup/. Archive identifier in.gazette.tamilnadu.2023-07-05.Ordinary_27_Part-II_Section-1-T-Sup.