© தமிழ்நாடு அரசு 2023
[Regd. No. TN/CCN/467/2012-14.
[R. Dis. No. 197/2009.
[விலை: ரூ. 0.80 காசு
| தமிழ்நாடு அரசிதழ் ஆணையின்படி வெளியிடப்பட்டது. | ||
எண் 28] சென்னை, புதன்கிழமை, ஜூலை 12, 2023 ஆனி 27, சோபகிருது, திருவள்ளுவர் ஆண்டு-2054
பகுதி III—பிரிவு 1(a) இன் இணைப்பு
அரசாங்க அறிவிப்புகளின் தமிழ் மொழிபெயர்ப்புகள்
அறிவிக்கை
தொழில்கள், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை
[அரசாணை (நிலை) எண். 244, தொழில்கள், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தக (MMC.1)த் துறை, 14 டிசம்பர் 2022.] 1957ஆம் ஆண்டு சுரங்கங்கள் மற்றும் கனிமங்கள் (மேம்பாடு மற்றும் ஒழுங்குமுறை) சட்டத்தின் (மத்தியச் சட்டம் 67/1957) 15ஆம் பிரிவைச் சேர்ந்த (1), (1A), உட்பிரிவு ஆகியவற்றில் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களைக் கொண்டு, தமிழ்நாட்டு ஆளுநர் அவர்கள், 1959ஆம் ஆண்டு சிறு கனிம சலுகை விதிகளில் பின்வரும் திருத்தங்களை இதனால் மேற்கொள்கிறார். அதாவது:-
திருத்தங்கள்
மேற்சொன்ன விதிகளில்,-
(1) விதி 7 இல், துணை விதி (5)-இல், ''சவுடு என்று பொதுவாக அழைக்கப்படும் மண்'' என்ற சொற்றொடருக்குப் பதிலாக. ''கட்டுமானப் பணி, கரையோரங்கள், சாலைகள், ரயில்வே மற்றும் கட்டடங்களில் நிரப்புவதற்கு அல்லது சமன் செய்வதற்குப் பயன்படுத்தப்படும் சாதாரண மண்'' என்ற சொற்றொடர் அமைத்துக் கொள்ளப்பவேண்டும்;
(2) விதி 12 இல்.-
(a) ''சவுடு'' என்ற சொற்றொடர் இடம் பெற்றுள்ள இடங்களிலெல்லாம், அதனை விட்டுவிட வேண்டும்:
(b) துணை விதி (2) இல்,
(i) பகுதி (a) இல், "( சென்னை, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்கள் நீங்கலாக)'' என்ற சொற்றொடர் விட்டுவிடப்பட வேண்டும்;
(ii) பகுதி (b) இன் இரண்டாவது வரம்பு நிபந்தனையில், "மண்'' என்ற சொற்றொடருக்குப் பதிலாக, "சாதாரண மண்'' என்ற சொற்றொடர் அமைத்துக் கொள்ளப்பட வேண்டும்;
(c) துணை விதி (2-A) இல், பகுதி (a) இல், "மண்'' என்ற சொற்றொடருக்குப் பதிலாக, "சாதாரண மண்'' என்ற சொற்றொடர் அமைத்துக் கொள்ளப்பட வேண்டும்;
(d) துணை விதி (4) இல், ''மண்'' என்ற சொற்றொடருக்குப் பதிலாக, "சாதாரண மண்'' என்ற சொற்றொடர் அமைத்துக் கொள்ளப்பட வேண்டும்;
(3) விதி 36 இல், துணை விதி (1-A ) இல் பகுதி (d) இல் ''500 மீட்டர்'' என்ற சொற்றொடருக்குப் பதிலாக, "300 மீட்டர்'' என்ற சொற்றொடர் அமைத்துக் கொள்ளப்பட வேண்டும்;
2(5) விதி 36-B இல், துணை விதி (1) இன் வரம்பு நிபந்தனையில் ''மண்'' என்ற சொற்றொடருக்குப் பதிலாக, "சாதாரண மண்'' என்ற சொற்றொடர் அமைத்துக் கொள்ளப்பட வேண்டும் : மற்றும்
(6) பிற்சேர்க்கை II இல் "அ. உரிமக் கட்டணம்'' என்ற தலைப்பின் கீழ் அட்டவணையின் நெடும்பத்தி (1) இன் தொடர் எண் 4-க்கு நேரான நெடும்பத்தி (2 ) இல். "மண்'' என்ற சொற்றொடருக்குப் பதிலாக, "சாதாரண மண்'' என்ற சொற்றொடர் அமைத்துக் கொள்ளப்பட வேண்டும்.
எஸ். கிருஷ்ணன்,
அரசு கூடுதல் தலைமைச் செயலாளர்.
(தமிழாக்கம்)
ந. அருள், இயக்குநர் (கூ.பொ),
தமிழ் வளர்ச்சி மற்றும்
செய்தி (மொழிபெயர்ப்பு)த் துறை.