© தமிழ்நாடு அரசு 2023
[Regd. No. TN/CCN/467/2012-14. [R. Dis. No. 197/2009. [விலை: ரூ. 2.40 காசு
| தமிழ்நாடு அரசிதழ் ஆணையின்படி வெளியிடப்பட்டது. | ||
எண் 28] சென்னை, புதன்கிழமை, ஜூலை 12, 2023 ஆனி 27, சோபகிருது, திருவள்ளுவர் ஆண்டு–2054
பகுதி II—பிரிவு 2 இன் இணைப்பு
அரசாங்க அறிவிப்புகளின் தமிழ் மொழிபெயர்ப்புகள்
வீட்- -டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை
அறிவிக்கைகள்
[அரசாணை (நிலை) எண். 220, வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி [ந.வ 4 (2)]த் துறை, 2 டிசம்பர் 2022.] தமிழ்நாடு 1971ஆம் ஆண்டு நகர் ஊரமைப்புச் சட்டத்தின் (தமிழ்நாடு சட்டம் 35/1972) 10ஆம் பிரிவைச் சேர்ந்த (1) உட்பிரிவின் (b) பகுதியில் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களைக் கொண்டு, தமிழ்நாட்டு ஆளுநர் அவர்கள், 10-4-1974 ஆம் நாளிட்ட தமிழ்நாடு அரசிதழின் பகுதி II—பிரிவு 2-இல் 204 ஆம் பக்கத்தில் (ஆங்கிலத்தில்) வெளியிடப்பட்ட ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித் துறையின் II/(2)/RUL/1995/74,ஆம் எண் அறிவிக்கை வாயிலாக அறிவிக்கப்பட்ட போடிநாயக்கனூர் உள்ளூர் திட்டமிடல் பகுதியுடன் பின்வரும் வருவாய் கிராமங்களின் பகுதிகளைச் சேர்ப்பதற்கான அவருடைய நோக்கத்தை இதனால் அறிவிக்கிறார். அவையாவன:-
"வருவாய் கிராமங்களின் எண் மற்றும் பெயர்
5. மேலச்சொக்கநாதபுரம் (பகுதி)
8. போடி"
(2) இந்த அறிவிக்கை தமிழ்நாடு அரசிதழில் வெளியிடப்பட்ட நாளிலிருந்து இரண்டு திங்கள் கால அளவிற்குள், மேற்சொன்ன பகுதிகளிலுள்ள யாதொரு குடியிருப்பாளர் அல்லது யாதொரு உள்ளூர் அதிகார மன்றம் அல்லது நிறுவனத்திற்கு அவ்வாறு சேர்ப்பதற்குக் கருதப்பட்டுள்ள பகுதிகள் குறித்த யாதொரு மறுப்புரை அல்லது கருத்துரை ஏதேனுமிருப்பின் அதனை எழுத்து வடிவில் அளிக்கலாம். மேற்சொன்ன கால அளவு முடிவடைவதற்குள் பெறப்படும் ஏதேனும் மறுப்புரைகள் அல்லது கருத்துரைகள் மேற்சொன்ன சட்டத்தின் 10 ஆம் பிரிவைச் சேர்ந்த (4) உட்பிரிவிற்கிணங்க மேற்கொண்டும் நடவடிக்கை எடுப்பதற்கு முன்னர் அரசால் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்படும். எழுத்துப்பூர்வமான மறுப்புரைகள் அல்லது கருத்துரைகள் அரசு முதன்மைச் செயலாளர், வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை, தலைமைச் செயலகம், புனித ஜார்ஜ் கோட்டை, சென்னை-600 009 என்ற முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.
[அரசாணை (நிலை) எண். 221, வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி [UD4 (2)]த் துறை, 2 டிசம்பர் 2022.] தமிழ்நாடு 1971ஆம் ஆண்டு நகர் ஊரமைப்புச் சட்டத்தின் (தமிழ்நாடு சட்டம் 35/1972) 10ஆம் பிரிவைச் சேர்ந்த (1) உட்பிரிவின் (b) பகுதியில் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களைக் கொண்டு தமிழ்நாட்டு ஆளுநர் அவர்கள், 17-4-1974ஆம் நாளிட்ட தமிழ்நாடு அரசிதழின் பகுதி II—பிரிவு 2-இல் 220ஆம் பக்கத்தில் (ஆங்கிலத்தில்) வெளியிடப்பட்ட ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சி நிருவாகத் துறையின் II/(2)/RUL/2151/74, ஆம் எண் அறிவிக்கையில், ஸ்ரீவில்லிபுத்தூர் உள்ளூர் திட்டமிடல் பகுதியாக அறிவிக்கப்பட்ட அத்தகைய பகுதியில் பின்வரும் வருவாய் கிராமங்களைச் சேர்ப்பதற்கான அவரது நோக்கத்தை இதனால் அறிவிக்கிறார்.
[ 1 ]
DTP-II-2-(28) (T Sup)—12 வருவாய் கிராமங்களின் பெயர் மற்றும் எண்
5. பொன்னாங்கன்னி பகுதி
6. சிங்கம்மாள்புரம் பகுதி
7. வெங்கடேஸ்வரபுரம் பகுதி
8. குருக்கள்குளம் பகுதி
9. வடக்கு ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதி
20. தைலாகுளம்
21. ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதி
22. அத்திகுளம் செங்குளம் பகுதி
23. படிக்காசுவைத்தான்பட்டி
25. அயன் நாச்சியார் கோவில் பகுதி
(2) இந்த அறிவிக்கை தமிழ்நாடு அரசிதழில் வெளியிடப்படும் நாளிலிருந்து இரண்டு திங்கள் கால அளவிற்குள், மேற்சொன்ன பகுதிகளிலுள்ள யாதொரு குடியிருப்பாளர் அல்லது யாதொரு உள்ளூர் அதிகார அமைப்பு அல்லது நிறுவனம், சேர்க்கக் கருதப்பட்டுள்ள பகுதிகள் குறித்து யாதொரு மறுப்புரை அல்லது கருத்துரையை எழுத்து வடிவில் அரசிடம் அளிக்கலாம். மேற்சொன்ன கால அளவு முடிவடைவதற்குள் பெறப்படும் மறுப்புரைகள் அல்லது கருத்துரைகள் ஏதேனுமிருப்பின், அவை மேற்சொன்ன சட்டத்தின் 10 ஆம் பிரிவைச் சேர்ந்த (4) உட்பிரிவின்படி மேற்கொண்டும் நடவடிக்கை எடுப்பதற்கு முன்னர் பரிசீலனைக்கு எடுத்துக்ெ காள்ளப்படும். மறுப்புரைகள் அல்லது கருத்துரைகள் எழுத்துவடிவில், அரசு முதன்மைச் செயலாளர், வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை, தலைமைச் செயலகம், புனித ஜார்ஜ் கோட்டை, சென்னை-600 009 என்ற முகவரிக்கு அனுப்பி வைக்கப்பட வேண்டும்.
ஹிதேஷ் குமார் எஸ். மக்வானா,
அரசு முதன்மைச் செயலாளர்.
(தமிழாக்கம்)
ந. அருள், இயக்குநர் (கூ.பொ), தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தி (மொழிபெயர்ப்பு)த் துறை.
[அரசாணை (நிலை) எண். 55, வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி [நவ4 (2)]த் துறை, 9 ஜூன் 2023.] தமிழ்நாடு 1971ஆம் ஆண்டு நகர் ஊரமைப்புச் சட்டத்தின் (தமிழ்நாடு சட்டம் 35/1972) 10ஆம் பிரிவைச் சேர்ந்த (1) உட்பிரிவின் (b) பகுதியில் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களைக் கொண்டு தமிழ்நாட்டு ஆளுநர் அவர்கள், 10-4-1974 ஆம் நாளிட்ட தமிழ்நாடு அரசிதழின் பாகம் II—பிரிவு 2-இல் 208ஆம் பக்கத்தில் (ஆங்கிலத்தில்) வெளியிடப்பட்ட ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சி நிருவாகத் துறையின் II/(2)/RUL/2012/74,ஆம் எண் அறிவிக்கையில், துறையூர் உள்ளூர் திட்டமிடல் பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ள அத்தகைய பகுதியுடன், பின்வரும் வருவாய் கிராமங்களின் பகுதிகளைச் சேர்ப்பதற்கான அவருடைய நோக்கத்தை இதனால் அறிவிக்கிறார். அவையாவன:-
வருவாய் கிராமங்களின் எண் மற்றும் பெயர்
23. முத்தையம்பாளையம் (பகுதி)
04. அம்மாபட்டி.
13. கீரம்பூர்
54. வெங்கடேசபுரம்.
(2) இந் த அ றி விக் கை தமிழ்நாடு அரசிதழில் ெ வளி யிட ப்ப டு ம் ந ா ளி லி ருந்து இ ர ண் டு தி ங்க ள் கால அளவிற்குள், மேற்சொன்ன பகுதிகளில் வசிக்கும் யாதொரு நபர் அல்லது யாதொரு உள்ளூர் அதிகார அமைப்பு அல்லது நிறுவனம், அவ்வாறு சேர்ப்பதற்குக் கருதப்பட்டுள்ள பகுதிகள் தொடர்பாக யாதொரு மறுப்புரை அல்லது கருத்துரையை எழுத்துப்பூர்வமாக அரசிடம் அளிக்கலாம். மேற்சொன்ன கால அளவிற்குள் மறுப்புரைகள்3 அல்லது கருத்துரைகள் எவையேனும் வரப்பெறுமாயின், அவை மேற்சொன்ன சட்டத்தின் 10 ஆம் பிரிவைச் சேர்ந்த (4) உட்பிரிவின்படி மேற்கொண்டும் நடவடிக்கை எடுப்பதற்கு முன்னர் பரிசீலனைக்கு எடுத்துக்ெ காள்ளப்படும். எழுத்துப்பூர்வமான மறுப்புரைகள் அல்லது கருத்துரைகள், அரசு முதன்மைச் செயலாளர், வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை, தலைமைச் செயலகம், புனித ஜார்ஜ் கோட்டை, சென்னை-600 009 என்ற முகவரிக்கு எழுத்துப் பூர்வமாக அனுப்பி வைக்கப்பட வேண்டும்.
அபூர்வா, அரசு முதன்மைச் செயலாளர்.
(தமிழாக்கம்)
ந. அருள், இயக்குநர் (கூ.பொ), தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தி (மொழிபெயர்ப்பு)த் துறை.
தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை
அறிவிக்கைகள்
[அரசாணை (ப) எண். 569, தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு (J2)த் துறை, 24 நவம்பர் 2022] 1948 ஆம் ஆண்டு குறைந்தளவு ஊதியங்கள் சட்டத்தின் (மத்தியச் சட்டம் 11/1948) 5ஆம் பிரிவைச் சேர்ந்த (1) உட்பிரிவின் (a) பகுதி மற்றும் 9 ஆம் பிரிவில் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களைக் கொண்டு, தமிழ்நாட்டு ஆளுநர் அவர்கள், நூற்பு நெசவு ஆலைகள் நூற்பாலைகள், நெசவாலைகள், முன்வரையற்ற ஆலைகள் உள்ளிட்ட துணி நூல் ஆலைகளிலும் மேற்சொன்ன ஆலைகளில் பஞ்சடிக்கும் அறை, சிக்கெடுத்தல், நீட்டுதல் கைவினைச் சட்டங்கள், நூற்றல், முறுக்கேற்றுதல், மடித்தல், சுற்றுதல், சிப்பமிடுதல், பாவு போடுதல் மற்றும் ஏனைய பணிகளிலும் தனியாக அல்லது கூட்டாக பணிகளை மேற்கொள்ளும் வகையில் (பணி பயில்வோர் நீங்கலாக பணியமர்த்தப்பட்டுள்ளோருக்கான குறைந்தளவு ஊதிய வீதங்களை நிருணயிப்பது தொடர்பாக, விசாரணைகளை மேற்கொண்டு, மாநில அரசிற்கு ஆலோசனை வழங்குவதற்கு பின்வரும் நபர்கள் அடங்கிய குழுவினை இதனால் நியமிக்கிறார்.
தனி நபர்கள்:-
| 1. | கூடுதல் தொழிலாளர் ஆணையர், கோயம்புத்தூர். | தலைவர் |
| 2. | உதவி தொழிலாளர் ஆணையர் (அமலாக்கம்), கோயம்புத்தூர். | செயலாளர். |
| 3. | புள்ளியல் உதவி இயக்குநர். பொருளாதாரம் மற்றும் புள்ளியல் துறை, கோயம்புத்தூர். | உறுப்பினர் |
| 4. | இணை இயக்குநர் (துணி நூல்), கைத்தறி மற்றும் துணிநூல் இயக்குநரகம், குறளகம். இரண்டாவது தளம், சென்னை-600 018. | உறுப்பினர் |
| தொழிலகப் பாதுகாப்பு மற்றும் சுகாதார இணை இயக்குநர்-I. திருப்பூர். | உறுப்பினர் |
வேலையளிப்போர் பிரதிநிதிகள்:-
| 1. | டாக்டர். கே. செல்வராஜு, பொதுச் செயலாளர். தென்னிந்திய பஞ்சாலைகள் சங்கம் (SIMA), எண்.41, ரேஸ் கோர்ஸ், கோயம்புத்தூர்-641 018. | உறுப்பினர் |
| 2. | திரு. எஸ். ஜெகதீஸ் சந்திரன், தென்னிந்திய நூற்பாலை அதிபர்கள் சங்கம் (SISPA), மனை எண்17.19, ஆசிரியர்கள் காலனி, கோல்டுவின்ஸ், சிவில் ஏரோட்ரோம் அஞ்சல், கோயம்புத்தூர்-641 014. | உறுப்பினர் |
| 3. | திரு. எஸ். வெங்கடேஷ், தேசிய பஞ்சாலைக் கழகம் (NTC), எண்.35 B, சோமசுந்தரம் மில்ஸ் ரோடு, கோயம்புத்தூர்-641 009. | உறுப்பினர் |
| 4. | டாக்டர். எம். ராமகிருஷ்ணன், லாயல் நிறுவனம், 83/41, முதல் முதன்மைச் சாலை, ராஜா அண்ணாமலைபுரம், சென்னை-600 028. | உறுப்பினர் |
| 5. | டாக்டர். கே. வெங்கடாச்சலம், தமிழ்நாடு நூற்பாலையாளர்கள் சங்கம், திண்டுக்கல், எண்.2, மாடர்ன் நகர், கரூர் ரோடு, திண்டுக்கல்-624 001, | உறுப்பினர் |
| 6. | திரு. ஆர். கோபாலகிருஷ்ணன், ராயல் கிளாசிக் நிறுவனம், எண்.40, ஆர்.ஆர்.லே அவுட், முதல் தெரு, மங்களம் ரோடு, திருப்பூர்-641 604. | உறுப்பினர் |
பணியாளர் பிரதிநிதிகள்:-
| 1. | திரு. எம். பஷீர் அகமது, தொழிலாளர் முன்னேற்றச் சங்கப் பேரவை, எண்.138 A, வடக்கு சௌராஷ்ட்ராபுரம், நாகல்நகர், திண்டுக்கல்-624 003. | உறுப்பினர் |
| 2. | திரு. எம். தியாகராஜன், கோவை பெரியார் மாவட்ட திராவிட பஞ்சாலை தொழிலாளர் முன்னேற்றச் சங்கம், எண்.204, வி.கே. கிருஷ்ணன் தெரு, சித்தாபுதூர், கோயம்புத்தூர்-641 044. | உறுப்பினர் |
| 3. | திரு. டி.எஸ். ராஜாமணி, ஹிந்த் மஸ்தூர் சபா (HMS), 28, ராணி கார்டன் விமான நிலைய சாலை, சிங்காநல்லூர், கோயம்புத்தூர்-641 005. | உறுப்பினர் |
| 4. | திரு. ஜி. ஸ்ரீனிவாசன், தேசிய பஞ்சாலை தொழிலாளர் சங்கம், 1848, திருச்சி ரோடு, (முதல் தளம்), இராமநாதபுரம், கோயம்புத்தூர்-641 045. | உறுப்பினர் |
| 5. | திருமதி எம். ஆறுமுகம், கோவை ஜில்லா மில் தொழிலாளர் சங்கம், அனைத்திந்திய தொழிற்சங்க காங்கிரஸ், எண்.99, ரங்கன் தெரு, காட்டூர், கோயம்புத்தூர்-641 009. | உறுப்பினர் |
| 6. | திரு. சி. பத்மநாபன், இந்திய தொழிற்சங்க மையம், அமுதம் இல்லம், பூங்கோதை நகர், கோயம்புத்தூர்-641 014. | உறுப்பினர் |
[அரசாணை (நிலை) எண். 87, தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு (J1)த் துறை, 6 ஜுன் 2023] தமிழ்நாடு 1982 ஆம் ஆண்டு உடலுழைப்புத் தொழிலாளர் (வேலைவாய்ப்பை முறைப்படுத்துதலும் பணி நிலைமைகளும்) சட்டத்தின் (தமிழ்நாடு சட்டம் 33/1982) 6 ஆம் பிரிவைச் சேர்ந்த (3) மற்றும் (5) ஆம் உட்பிரிவுகளின் கீழ் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களைக் கொண்டும் 26.02.2021 ஆம் நாளிட்ட தமிழ்நாடு அரசிதழின் பாகம் II—பிரிவு 2-இல் 1 முதல் 3 வரையிலான பக்கங்களில் (ஆங்கிலத்தில்) வெளியிடப்பட்ட தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறையின் II/(2)/வேவா/132(t-1)/2021 ஆம் எண் அறிவிக்கையின் பதிலிட்டகற்றீடாகவும் தமிழ்நாட்டு ஆளுநர் அவர்கள், தமிழ்நாடு காலணி, தோல் பொருட்கள் தயாரிப்பு மற்றும் தோல் பதனிடும் தொழிலாளர் நல வாரியத்தில் பின்வரும் உறுப்பினர்களை இதனால் நியமனம் செய்கிறார்.
அவர்களின் விவரம் வருமாறு:-
அ.அரசுப் பிரதிநிதிகள்:-
| 1. | திரு. எஸ். புகழேந்தி, சட்டப் பேரவை முன்னாள் உறுப்பினர். | தலைவர் |
| 2. | அரசு கூடுதல் தலைமைச் செயலாளர், தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை, சென்னை-600 009. | உறுப்பினர் |
| 3. | அரசு முதன்மைச் செயலாளர், நிதித்துறை, சென்னை-600 009. | உறுப்பினர் |
| 4. | அரசு செயலாளர், ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை, சென்னை-600 009. | உறுப்பினர் |
| 5. | முதன்மைச் செயலாளர்/தொழிலாளர் ஆணையர், தொழிலாளர் ஆணையரகம், சென்னை-600 006. | உறுப்பினர் |
| 6. | தலைமை செயல் அலுவலர், தமிழ்நாடு கதர் மற்றும் கிராமத் தொழில் வாரியம், சென்னை-600 108. | உறுப்பினர் |
அ. வேலையளிப்பவர்களின் பிரதிநிதிகள்:-
| 1. | திரு. சி.எம். ஜபருல்லா, தென்னிந்திய தோல் பதனிடுவோர் மற்றும் வணிகர் சங்கம், எண்.139/1B. சென்னை பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை, அம்மணந்தாங்கல் கிராமம், வாலாஜாபேட்டை-632 513. | தலைவர் |
| 2. | திரு. சி. ரமேஷ், எண்.34, சிதம்பரனார் தெரு, திண்டுக்கல்-624 001. | உறுப்பினர் |
| 3. | திரு. அ.அபுபக்கர் அப்துல் ஜலீல், எண்.7.3/8, உமர் பரூக் தெரு, கீரனூர் அஞசல், பழனி வட்டம், திண்டுக்கல்-624 617. | உறுப்பினர் |
இ. உடலுழைப்புத் தொழிலாளர்களின் பிரதிநிதிகள்:-
| 1. | திரு. வி. கலைநேசன், தொழிலாளர் முன்னேற்றச் கூட்டமைப்பு, எண்.79, எண்.79, பழைய ஆம்பூர் சாலை, பேர்ணாம்பட்டு-635 810. | தலைவர் |
| 2. | திரு. ஆர். முருகானந்தம், ஹிந்த் மஸ்தூர் சபா, எண்.4/46, பாப்பிநாயக்கனஹள்ளி கிராமம், பாலக்கோடு வட்டம், தருமபுரி-636 806. | உறுப்பினர் |
| 3. | திரு. கி. ராமசாமி, த/பெ. கிருஷ்ணன், தொழிலாளர் விடுதலை முன்னணி, அங்கனூர் கிராமம் மற்றும் அஞ்சல், செந்துறை வட்டம், அரியலூர்-621 709. | உறுப்பினர் |
முகமது நசிமுத்தின்,
அரசு கூடுதல் தலைமைச் செயலாளர்.
(தமிழாக்கம்)
ந. அருள், இயக்குநர் (கூ.பொ) தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தி (மொழிபெயர்ப்பு)த் துறை.
தமிழ்நாடு அரசுக்காக சென்னை எழுதுபொருள் மற்றும் அச்சுத் துறை இயக்குநரால்
அச்சிடப்பட்டு வெளியிடப்பட்டது.