Servants of Knowledge
Tamil Nadu Gazette · Government of Tamil Nadu

Notifications or Orders of interest to a section of the public issued by Secretariat Departments HOUSING AND URBAN DEVELOPMENT DEPARTMENT - Notification -

Published 19 July 2023

Type
Ordinary
Gazette no.
29
Part
Part II
Section
Section 2-T-Sup
Identifier
in.gazette.tamilnadu.2023-07-19.Ordinary_29_Part-II_Section-2-T-Sup
Languages
English, Tamil
Published at
Original source ↗
[Regd. No. TN/CCN/467/2012-14. [R. Dis. No. 197/2009. © தமிழ்நாடு அரசு 2023 [விலை: ரூ. 0.80 காசு[விலை: ரூ. 0.80 காசு
தமிழ்நாடு அரசிதழ் ஆணையின்படி வெளியிடப்பட்டது.

எண் 29] சென்னை, புதன்கிழமை, ஜூலை 19, 2023 ஆடி 3, சோபகிருது, திருவள்ளுவர் ஆண்டு–2054

பகுதி II—பிரிவு 2 இன் இணைப்பு

அரசாங்க அறிவிப்புகளின் தமிழ் மொழிபெயர்ப்புகள்

வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை.வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை.

அறிவிக்கைகள்அறிவிக்கைகள்

[அரசாணை (நிலை) எண். 13 வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி (UD1)த் துறை, 7 பிப்ரவரி 2023.] தமிழ்நாடு 1971 ஆம் ஆண்டு நகர் ஊரமைப்புச் சட்டத்தின் (தமிழ்நாடு சட்டம் 35/1972) 10ஆம் பிரிவைச் சேர்ந்த (1) உட்பிரிவின் (c) பகுதியில் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களைக் கொண்டு, தமிழ்நாட்டு ஆளுநர் அவர்கள், காஞ்சிபுரம் புதிய நகரத்தின் பகுதிகளாகப் பின்வரும் பகுதிகளைக் குறிப்பிடுவதற்கான அவருடைய நோக்கத்தை இதனால் அறிவிக்கிறார். அவையாவன:-

புதிய நகரமாக அமைக்கப்படவிருக்கும் பகுதி

(வருவாய்க் கிராமங்களின் எண் மற்றும் பெயர்)

59. ஏனாத்தூர் 60. நல்லூர் 63. பாப்பாங்குழி 55. வையாவூர் 56. கலையனூர் 26. புத்தேரி 20. மேலம்பி 21. கீழம்பி 66. சித்தேரிமேடு 62. கோனேரிக்குப்பம் 61. திருமால்பாடிதாங்கல் 27. கீழ்கதிர்பூர் 65. திம்மசமுத்திரம் 64. கருப்படிதட்டடை 24. அச்சுக்கட்டு 23. நெட்டேரி 54. அரப்பனஞ்சேரி 22. சிறுகாவேரிப்பாக்கம்DTP-II-2-(29) (T Sup)—1 [ 1 ] 2 2. இந்த அறிவிக்கை தமிழ்நாடு அரசிதழில்தமிழ்நாடு அரசிதழில் வெளியிடப்பட்ட நாளிலிருந்து இரண்டு திங்கள் கால அளவிற்குள், மேற்சொன்ன பகுதிகளில் வசிக்கும் யாதொரு நபர் அல்லது யாதொரு உள்ளூர் அதிகார அமைப்பு அல்லது நிறுவனம் இக்கருத்துரு குறித்த யாதொரு மறுப்புரை அல்லது கருத்துரையை எழுத்துவடிவில் அரசிடம் அளிக்கலாம் என்றும், மேற்சொன்ன கால அளவு முடிவடைவதற்குள் பெறப்படும் மறுப்புரை அல்லது கருத்துரை ஏதேனுமிருப்பின், அரசின் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்றும் இதனால் அறிவிக்கப்படுகிறது. மறுப்புரைகள் அல்லது கருத்துரைகள் எவையேனுமிருப்பின் அரசு முதன்மைச் செயலாளர், வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை, தலைமைச் செயலகம், புனித ஜார்ஜ் கோட்டை, சென்னை-600 009 என்ற முகவரிக்கு அனுப்பி வைக்கப்பட வேண்டும்.

[அரசாணை (நிலை) எண். 60, வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி (UD4(2)த் துறை, 16 ஜூன் 2023.] தமிழ்நாடு 1971ஆம் ஆண்டு நகர் ஊரமைப்புச் சட்டத்தின் (தமிழ்நாடு சட்டம் 35/1972) 10ஆம் பிரிவைச் சேர்ந்த (4) உட்பிரிவி்ல் (b)-ல் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களைக் கொண்டு, தமிழ்நாட்டு ஆளுநர் அவர்கள், 25.09.1974 ஆம் நாளிட்ட தமிழ்நாடு அரசிதழின்தமிழ்நாடு அரசிதழின் பாகம் II பிரிவு 2-ல், 495-ஆம் பக்கத்தில் (ஆங்கிலத்தில் வெளியி்டப்பட்ட ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சி நிருவாகத்துறையின் II(2)/RUL/4115/74ஆம் எண் அறிவிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ளவாறான ஈரோடு உள்ளூர் திட்டமிடல் பகுதியில் பின்வரும் வருவாய் கிராமத்தின் பகுதியைச் சேர்ப்பதற்கான அவரது நோக்கத்தை இதனால் அறிவிக்கிறார்.

(வருவாய் கிராமத்தின் எண் மற்றும் பெயர்)

10. நொச்சிப்பாளையம்

2. இந்த அறிவிக்கை தமிழ்நாடு அரசிதழில்தமிழ்நாடு அரசிதழில் வெளியிடப்படும் நாளிலிருந்து இரண்டு திங்கள் கால அளவிற்குள், மேற்சொன்ன பகுதிகளிலுள்ள யாதொரு குடியிருப்பாளர் அல்லது யாதொரு உள்ளூர் அதிகார அமைப்பு அல்லது நிறுவனம், சேர்க்கக் கருதப்பட்டுள்ள பகுதிகள் குறித்த யாதொரு மறுப்புரை அல்லது கருத்துரையை எழுத்து வடிவில் அரசிடம் அளிக்கலாம். மேற்சொன்ன கால அளவு முடிவடைவதற்குள் பெறப்படும் மறுப்புரைகள் அல்லது கருத்துரைகள் ஏதேனுமிருப்பின் அவை மேற்சொன்ன சட்டத்தின் 10 ஆம் பிரிவைச் சேர்ந்த (4) உட்பிரிவின்படி மேற்கொண்டும் நடவடிக்கை எடுப்பதற்கு முன்னர் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்படும். மறுப்புரைகள் அல்லது கருத்துரைகள் எழுத்துவடிவில், அரசு முதன்மைச் செயலாளர், வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை, தலைமைச் செயலகம், புனித ஜார்ஜ் கோட்டை, சென்னை-600 009 என்ற முகவரிக்கு அனுப்பி வைக்கப்பட வேண்டும்.

அபூர்வா, அரசு முதன்மைச் செயலாளர்.

(தமிழாக்கம்)

ந. அருள், இயக்குநர் (முகூபொ), தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தி (மொழிபெயர்ப்பு)த் துறை.

தமிழ்நாடு அரசுக்காக சென்னை எழுதுபொருள் மற்றும் அச்சுத் துறை இயக்குநரால் அச்சிடப்பட்டு வெளியிடப்பட்டது.
Cite this issue. Tamil Nadu Gazette, Government of Tamil Nadu, 19 July 2023. Indian Gazettes, https://egazette.servantsofknowledge.in/details/in.gazette.tamilnadu.2023-07-19.Ordinary_29_Part-II_Section-2-T-Sup/. Archive identifier in.gazette.tamilnadu.2023-07-19.Ordinary_29_Part-II_Section-2-T-Sup.