©
GOVERNMENT OF TAMIL NADU
2023
[Regd. No. TN/CCN/467/2012-14.
[R. Dis. No. 197/2009.
[Price: Rs. 9.60 Paise.
| TAMIL NADU GOVERNMENT GAZETTE PUBLISHED BY AUTHORITY | ||
No. 31] CHENNAI, WEDNESDAY, AUGUST 2, 2023 Aadi 17, Sobakiruthu, Thiruvalluvar Aandu–2054
Part II—Section 1
Notifications or Orders of specific character or of particular interest to the
public issued by Secretariat Departments.
NOTIFICATIONS BY GOVERNMENT
CONTENTS
Pages.
வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை
வருவாய் நிருவாகம் – ஆட்சி எல்லை – கள்ளக்குறிச்சி மாவட்டம் – சங்கராபுரம் மற்றும் திருக்கோவிலூர் வருவாய் வட்டங்களை சீரமைத்து வாணாபுரத்தை தலைமையிடமாகக் கொண்டு புதிய வருவாய் வட்டம் உருவாக்குதல். .. .. .. .. 56-77
[55]
DTP—II-1—3156 TAMIL NADU GOVERNMENT GAZETTE [Part II—Sec. 1
NOTIFICATIONS BY GOVERNMENT
வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை
No. II(1)/REVDM/23/2023
வருவாய் நிருவாகம் – ஆட்சி எல்லை – கள்ளக்குறிச்சி மாவட்டம் – சங்கராபுரம் மற்றும் திருக்கோவிலூர் வருவாய் வட்டங்களை சீரமைத்து வாணாபுரத்தை தலைமையிடமாகக் கொண்டு புதிய வருவாய் வட்டம் உருவாக்குதல் - ஆணை வெளியிடப்படுகிறது.
கீழ்க்கண்ட அரசாணை வெளியிடப்படுகிறது:-
[அரசாணை (நிலை) எண். 359, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை, வருவாய் நிருவாக அலகு, வ.நி-1(1) பிரிவு, 17 ஜூலை 2023, ஆடி 1, சோபகிருது, திருவள்ளுவர் ஆண்டு-2054.]
படிக்கவும்:-
1. அரசாணை (நிலை) எண். 279, வருவாய் [வ.நி.1(1)]த் துறை, நாள் 09.06.2003.
2. கூடுதல் தலைமைச் செயலாளர்/வருவாய் நிருவாக ஆணையர் கடித எண். பணி.3(4)/46605/2022, நாள் 20.08.2022, 18.11.2022 மற்றும் 27.04.2023.
3. அரசு கடித எண். e-2304805/வ.நி.1(1)/2022-4, நாள் 09.01.2023.
4. கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியரின் கடித எண் ந.க. அ2/ 3101/2020, நாள் 11.07.2023.
ஆணை:-எண். 359, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை, வருவாய் நிருவாக அலகு, வ.நி-1(1) பிரிவு, 17 ஜூலை 2023.
தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை கூட்டத்தொடர் 2022-2023ஆம் ஆண்டிற்கான மானியக் கோரிக்கையின் போது மாண்புமிகு அமைச்சர் (வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை) அவர்கள் கீழ்க்கண்ட அறிவிப்பினை வெளியிட்டுள்ளார்கள்:-
"கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் வருவாய் வட்டத்தினைச் சீரமைத்து புதிய வாணாபுரம் வருவாய் வட்டம்
ரூ.7.56 கோடி செலவில் உருவாக்கப்படும்".
2. மேற்காணும் மாண்புமிகு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் அவர்களின் அறிவிப்பின் அடிப்படையில், மேலே பார்வை இரண்டில் படிக்கப்பட்ட கூடுதல் தலைமைச் செயலாளர்/வருவாய் நிருவாக ஆணையரின் கடிதங்களில், கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் மற்றும் திருக்கோவிலூர் வருவாய் வட்டங்களைச் சீரமைத்து வாணாபுரம் புதிய வருவாய் வட்டம் உருவாக்குவது குறித்து மாவட்ட ஆட்சியரிடமிருந்து அறிக்கை பெறப்பட்டு பரிசீலிக்கப்பட்டதில், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கள்ளக்குறிச்சி மற்றும் திருக்கோவிலூர் ஆகிய இரண்டு கோட்டங்களும், கள்ளக்குறிச்சி, சங்கராபுரம், சின்னசேலம், உளுந்தூர்பேட்டை, திருக்கோவிலூர் மற்றும் கல்வராயன்மலை ஆகிய ஆறு வருவாய் வட்டங்களும் அடங்கியுள்ளன. இவற்றில் தற்போதுள்ள சங்கராபுரம் வட்டத்திலுள்ள சிறுபனையூர், கள்ளிப்பாடி, லா.கூடலூர், அலியாபாத், பிரிவிடையாம்பட்டு, மண்டகப்பாடி மற்றும் பல கிராம மக்கள் மற்றும் பொதுமக்கள் தங்களது அத்தியாவசிய சேவைகளான வாரிசு சான்று, பட்டா மாற்றம், சாதிச்சான்று, வருமான சான்று, இருப்பிட சான்று உள்ளிட்ட பல்வேறு சான்றுகளை பெறுவதற்கு, தற்போதைய சங்கராபுரம் வட்டத்தின் தலைமையிடம் சுமார் 40 கி.மீ தொலைவில் அமைந்துள்ளதால் வந்துசெல்ல சிரமப்பட வேண்டியுள்ளதாலும், இதனால் வருவாய்த்துறை சார்ந்த சேவைகளை பெறுவதற்கு அக்கிராம மக்கள் ஒருநாள் முழுவதையும் முழுமையாக செலவழிக்கப்பட வேண்டியுள்ளது எனவும், அதோடு மட்டுமல்லாமல் போக்குவரத்துக் கட்டணமும், இரண்டு மூன்று பேருந்துகள் மாறி மாறி பயணம் செய்தும் வட்ட தலைமை அலுவலகமான சங்கராபுரம் வட்டாட்சியர் அலுவலகத்திற்கு வரவேண்டியுள்ளது மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள சங்கராபுரம் வட்டத்தில் ஒரு பகுதியாக உள்ள அதாவது புதிய வட்டமாக உத்தேசிக்கப்பட்டுள்ள வாணாபுரம் கிராமத்தை சுற்றியுள்ள கிராமங்கள் பொருளாதாரத்திலும், வேலைவாய்ப்பிலும், கல்வி அறிவிலும், இயற்கை வளத்திலும் போக்குவரத்து வசதியிலும் மிகவும் பின்தங்கி உள்ளன எனவும், எனவே வெகுதொலைவில் உள்ள கிராமங்களைப் பிரிப்பதன் மூலம் அம்மக்களுக்கு கால விரையம் மற்றும் பண விரையத்தை குறைக்கவும், உடனடியாக அரசின் நலத்திட்டங்களை பொதுமக்கள் விரைந்து பெற்றிட வசதியாக வாணாபுரம் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களை ஒருங்கிணைத்து வாணாபுரம் வட்டமாக உருவாக்கிட, தற்போது கள்ளக்குறிச்சி வருவாய் கோட்டத்திற்குட்பட்ட சங்கராபுரம் வட்டத்திலிருந்து ரிஷிவந்தியம், அரியலூர், வடபொன்பரப்பி ஆகிய குறுவட்டங்கள் மற்றும் திருக்கோவிலூர் வருவாய் கோட்டத்திற்குட்பட்ட திருக்கோவிலூர் வட்டத்தில் தற்போதுள்ள மணலூர்பேட்டை குறுவட்டத்தில் 11 வருவாய் கிராமங்களை மட்டும் சேர்த்து வடபொன்பரப்பி, அரியலூர், ரிஷிவந்தியம் மற்றும் மணலூர்பேட்டை (11) குறுவட்டங்களாக மறுசீரமைத்து வாணாபுரம் கிராமத்தை தலைமையிடமாகக் கொண்டு புதிய வட்டத்தினை உருவாக்கலாம் என தெரிவித்துள்ளார்.
3. மேலும், கள்ளக்குறிச்சி மாவட்டத்திலுள்ள சங்கராபுரம் மற்றும் திருக்கோவிலூர் வருவாய் வட்டங்களைச் சீரமைத்து வடப்பொன்பரப்பி, ரிஷிவந்தியம், அரியலூர் மற்றும் மணலூர்பேட்டை ஆகிய 4 குறுவட்டங்களுடன் 85 வருவாய் கிராமங்களை உள்ளடக்கி வாணாபுரத்தைத் தலைமையிடமாகக் கொண்டு புதிய வாணாபுரம் வருவாய் வட்டம் உருவாக்கலாம் என்றும், புதிதாக உருவாக்கப்படவுள்ள வாணாபுரம் வருவாய் வட்டத்திற்கு மொத்தமுள்ள 48 பணியிடங்களில் மறுபரவலமர்த்தல் அடிப்படையில் 10 பணியிடங்களும், புதிதாக தோற்றுவிப்பதன் அடிப்படையில் 38 பணியிடங்களை உருவாக்கலாம் என்றும், புதியதாக உருவாக்கப்படவுள்ள வாணாபுரம் வருவாய் வட்டத்திற்கு ஒரு வருடத்திற்கு தோராயமாக ஏற்படும் தொடரும் செலவினம் ரூ.1,43,01,860 மற்றும் தொடரா செலவினம் ரூ.46,52,709 நிதி ஒப்பளிப்பு செய்யலாம் என்றும் தெரிவித்துள்ளார்.
Aug. 2, 2023] TAMIL NADU GOVERNMENT GAZETTE 574. கூடுதல் தலைமைச் செயலாளர்/வருவாய் நிருவாக ஆணையர் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் கள்ளக்குறிச்சி மாவட்டம் ஆகியோர்களின் கருத்துருக்களை அரசு நன்கு ஆய்வு செய்து அதனை ஏற்று கீழ்க்கண்டவாறு ஆணையிடுகிறது:-
i. கள்ளக்குறிச்சி மாவட்டத்திலுள்ள சங்கராபுரம் மற்றும் திருக்கோவிலூர் வருவாய் வட்டங்களைச் சீரமைத்து வடப்பொன்பரப்பி, ரிஷிவந்தியம், அரியலூர் மற்றும் மணலூர்பேட்டை ஆகிய 4 குறுவட்டங்களுடன் 85 வருவாய் கிராமங்களை உள்ளடக்கி வாணாபுரத்தைத் தலைமையிடமாகக் கொண்டு புதிய வாணாபுரம் வருவாய் வட்டமாக உருவாக்கப்படுகிறது. (இணைப்பு 5-இல் உள்ளபடி)
ii. புதிதாக உருவாக்கப்படவுள்ள வாணாபுரம் வருவாய் வட்டத்திற்கு அனுமதிக்கப்பட வேண்டிய 44 பணியிடங்களில் [சங்கராபுரம் வருவாய் வட்டத்திற்கு ஒப்பளிக்கப்பட்ட பணியிடங்களிலிருந்து 9 மிகைப்பணியிடங்கள் மற்றும் திருக்கோவிலூர் வருவாய் வட்டத்திற்கு ஒப்பளிக்கப்பட்ட பணியிடங்களிலிருந்து 2 மிகை பணியிடத்தையும் சேர்த்து] 11 பணியிடங்கள் மறுபரவலமர்த்தல் அடிப்படையில் 33 பணியிடங்கள் புதியதாக தோற்றுவிக்கப்படுகிறது.
iii. புதிதாக உருவாக்கப்படவுள்ள வாணாபுரம் வருவாய் வட்டத்திற்கு ஒரு வருடத்திற்கு, தோராயமாக ஏற்படும் தொடரும் செலவினம் ரூ.1,38,58,500/- (ரூபாய் ஒரு கோடியே முப்பத்து எட்டு இலட்சத்து ஐம்பத்தி எட்டாயிரத்து ஐநூறு மட்டும்) மற்றும் தோராயமாக ஏற்படும் தொடரா செலவினம் ரூ.40,90,200/- (ரூபாய் நாற்பது இலட்சத்து தொண்ணூராயிரத்து இருநூறு மட்டும்) நிதி ஒப்பளிப்பு செய்யப்படுகிறது. (இணைப்பு 3-இல் உள்ளபடி)
iv. தொகுப்பு கிராமங்களை பிரித்து புதிதாக தொகுப்பு கிராமங்களை உருவாக்குதல் தொடர்பாக நடைமுறையில் உள்ள விதிமுறைகள், சட்டம் மற்றும் அரசாணைகள் பின்பற்றப்பட வேண்டும்.
v. இரவுக் காவலர், மசால்சி, புல உதவியாளர் போன்ற பணியிடங்கள் அரசு ஆணை (நிலை) எண். 49, பணியாளர் மற்றும் நிருவாக சீர்திருத்தத்துறை, நாள் 14.5.2002-இன்படி வெளிமுகமை (outsourcing) மூலமாக ஒப்பந்த (contract) அடிப்படையில் நிரப்பப்பட வேண்டும்.
vi. அலுவலக உதவியாளர் பணியிடங்களை தமிழ்நாடு அடிப்படைப்பணிக்கான சிறப்பு விதிகளில், விதி-4(a) (நியமனம்)-ஐயும், அரசாணை (நிலை) எண்.44, தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை, நாள் 11.03.2015-ஐயும் உடன் நிகழ்வாக பின்பற்றப்படுவதுடன், நடைமுறையில் உள்ள உரிய விதிகள் சட்டம்/அரசாணைகளை பின்பற்றி நிரப்பப்பட வேண்டும்.
vii. மறுபரவலமர்த்தல் மூலம் சங்கராபுரம் மற்றும் திருக்கோவிலூர் வருவாய் வட்டங்களிலிருந்து வாணாபுரம் வருவாய் வட்டத்திற்கு மாற்றப்பட வேண்டிய பணியிடங்கள், அப்பணியிடங்களுக்குரிய தளவாடங்களுடன் வாணாபுரம் வருவாய் வட்டத்திற்கு மாற்றம் செய்யப்பட வேண்டும்.
viii. ஏற்கனவே உள்ள வட்டங்களில், வட்டப் பிரிவினைக்குப்பின் உள்ள பணியிடங்கள் பொதுவான பணியாளர் மாதிரியில் (Generalized Staff Pattern) வரையறுத்துள்ளவற்றிற்கு மிகாமல் இருக்க வேண்டும். அவ்வாறு மிகைப்பணியிடமாக கண்டறியப்பட்ட பணியிடங்கள் அரசுக்கு சரண் செய்யப்பட வேண்டும் அல்லது தேவைப்படும் இடங்களுக்கு மாற்றம் செய்யப்பட வேண்டும். இல்லையெனில், புதிய வருவாய் வட்டம் துவக்கப்பட்டவுடன் அப்பணியிடங்கள் நிரப்பப்படாமல் காலியாக வைக்கப்பட வேண்டும். அப்பணியிடங்களுக்கு சம்பளம் பெற்று வழங்கக் கூடாது.
ix. அலுவகத்திற்கான வாடகை பொதுப்பணித்துறை பரிந்துரையின் அடிப்படையில் நிர்ணயிக்கப்பட்டு பெற்று வழங்க வேண்டும்.
5. மேலே பத்தி 4-இல் ஒப்பளிக்கப்பட்ட செலவினங்கள் பின்வரும் கணக்குத் தலைப்பின்கீழ் பற்று வைக்கப்பட வேண்டும்.
I. பணியாளர் சம்பளங்கள்
சம்பளம் மற்றும் தகுதியுள்ள பிறபடிகள் புதிதாக தோற்றுவிக்கப்பட்ட மறுபரவலமர்த்தப்பட்ட பணியாளர்களுக்கு கீழக்கண்ட கணக்குத் தலைப்பு/ உப தலைப்புகளில் பற்று வைக்கப்படும்.
i. வருவாய் பணியிடங்கள் – ரூ.83,54,712/-
2053 – 00 மாவட்ட நிருவாகம் - 094 ஏனைய பணியாளரமைப்பு - மாநிலச் செலவினங்கள் - AB வட்டப் பணியாளரமைப்புகள் - 301 சம்பளங்கள் – 01 அடிப்படை சம்பளம்
[IFHRMS DPC 2053 00 094 AB 30101]
ii. தேர்தல் பணியிடங்கள் – ரூ.9,79,800/-
2015-00 தேர்தல்கள் - 102 தேர்தல் அதிகாரிகள் - மாநிலச் செலவினங்கள் - AA சட்டப்பேரவை, நாடாளுமன்றத் தொகுதிகள் - 301 சம்பளங்கள் – 01 அடிப்படை சம்பளம்
[IFHRMS DPC 2015 00 102 AA 30101]
iii. நில அளவைப் பணியிடங்கள் – ரூ.24,31,608/-
2029-00 நில வருவாய் - 102 நில அளவை நிலவரி ஏற்பாட்டுப் பணிகள் மாநிலச் செலவினங்கள்- AF நில அளவை பராமரிப்பு பணி - 301 சம்பளங்கள் - 01 அடிப்படை சம்பளம்
[IFHRMS DPC 2029 00 102 AF 30101]58 TAMIL NADU GOVERNMENT GAZETTE [Part II—Sec. 1 iv. குடிமைப் பொருள் பணியிடங்கள் – ரூ.13,12,080/-
3456-00 நுகர்பொருள் வழங்கல் 001 நெறிப்படுத்துதலும் நிருவாகமும் - மாநிலச் செலவினங்கள் AB மாவட்ட பணியாளரமைப்பு - 301 சம்பளங்கள் - 01 அடிப்படை சம்பளம்
[IFHRMS DPC 3456 00 001 AB 30101]
II. 2053-00 மாவட்ட நிருவாகம் - 094 ஏனைய பணியாளரமைப்பு - மாநிலச் செலவினங்கள் - AB வட்டப் பணியாளரமைப்புகள்
i. 305 அலுவலகச் செலவுகள் 01 தொலைபேசிக் கட்டணங்கள் ரூ.41,100/- தொடரும் செலவினம் ரூ.25,500/- மற்றும் தொடராச் செலவினம் ரூ.15,600/-
[IFHRMS DPC 2053 00 094 AB 30501]
ii. 305 அலுவலகச் செலவுகள் - 03 மின் கட்டணங்கள் ரூ.3,60,000/-
[IFHRMS DPC 2053 00 094 AB 30503]
iii. அலுவலகச் செலவுகள் - 05 அறைகலன்கள் ரூ.10,95,000/-
[IFHRMS DPC 2053 00 094 AB 30505]
iv. 306 வாடகை; கட்டண வீதங்கள், வரிகள் 01 வாடகை (பொதுப் பணித்துறையின் இறுதி திட்ட மதிப்பீட்டிற்கு உட்பட்டது) – ரூ.1,000/-
[IFHRMS DPC 2053 00 094 AB 30601]
v. 319 இயந்திரமும் சாதனமும் 01 வாங்குதல் ரூ.2,60,000/-
[IFHRMS DPC 2053 00 094 AB 31901]
vi. 321 மோட்டார் வண்டிகள் 01 வாங்குதல் ரூ.16,40,000/-
[IFHRMS DPC 2053 00 094 AB 32101]
vii. 345 பெட்ரோலியம் எண்ணெய் மற்றும் மசகெண்ணெய் ரூ.3,64,800/-
[IFHRMS DPC 2053 00 094 AB 34501]
viii. 376 கணினியும் துணை பாகங்களும் 01 வாங்குதல் ரூ.10,80,600/-
[IFHRMS DPC 2053 00 094 AB 37601]
ix. 305 அலுவலகச் செலவுகள் - 02 ஏனைய சில்லறை செலவுகள் ரூ.30,000/-
[IFHRMS DPC 2053 00 094 AB 30502]
6. மேலே பத்தி 4-இல் ஒப்பளிப்பு வழங்கப்பட்டுள்ள செலவினம் ஒரு "புது துணைப் பணி" (New Instrument of Service) குறித்த செலவினமாகும். இதற்கான சட்டமன்ற பேரவையின் ஒப்புதல் பின்னர் பெறப்படும். மேற்குறித்த ஒப்புதலை எதிர்நோக்கி, இச்செலவினம் முதற்கண் எதிர்பாராச் செலவின நிதியிலிருந்து (Contingency Fund) முன்பணம் பெறுவதன் மூலம் மேற்கொள்ளப்படும். முன்பணத்தை அனுமதிக்கின்ற ஆணைகள் நிதித் (வ.செ.பொ.1) துறையில் தனியாக பிறப்பிக்கப்படும். அடுத்து வரும் துணை மானியக் கோரிக்கையில் இச்செலவினம் சேர்க்கப்பட்டு சட்டமன்றப் பேரவையின் ஒப்புதல் பெறும் வரையில் நடப்பாண்டிற்கு தேவைப்படும் செலவினத்தை சரியாகக் கணக்கிட்டு, எதிர்பாரா செலவின நிதியிலிருந்து முன்பணம் பெறத் தேவையான விண்ணப்பத்தை எதிர்பாரா செலவின நிதி விதிகள் 1963-இல் உள்ள அட்டவணை "A" படிவத்துடன் இவ்வரசாணையின் நகலுடன் இணைத்து நிதி (வ.செ.பொ.1) துறைக்கு நேரடியாக அனுப்பி வைக்குமாறு கூடுதல் தலைமைச் செயலாளர்/வருவாய் நிருவாக ஆணையர் அவர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார். மேலும், இக்கூடுதல் செலவினத்திற்கான உரிய கருத்துருவை 2023-2024ஆம் ஆண்டிற்கான துணை மதிப்பீடுகளில் சேர்ப்பதற்கு தவறாது உரிய நேரத்தில் நிதி (வருவாய்/வ.செ.பொ.1) துறைக்கு அனுப்பி வைக்கமாறு கூடுதல் தலைமைச் செயலாளர்/வருவாய் நிருவாக ஆணையர் அவர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்.
7. இவ்வரசாணையின் இணைப்பில் கண்டுள்ள அறிவிக்கைகள் தமிழ்நாடு அரசிதழில் வெளியிடப்படும். இப்புதிய வருவாய் வட்டம் 19.07.2023ஆம் நாள் முதல் செயல்படும்.
8. வாணாபுரம் புதிய வருவாய் வட்டம் உருவாக்குவது குறித்து மேலே பத்தி 4-இல் தெரிவிக்கப்பட்டுள்ள ஆணையினை செயல்படுத்த தக்க நடவடிக்கை மேற்கொள்ளுமாறு கூடுதல் தலைமைச் செயலாளர்/ வருவாய் நிருவாக ஆணையர் கேட்டுக் கொள்ளப்படுகிறார்.
9. இந்த அரசாணை நிதித்துறையின் கோ.எண். 26125/நிதி(வருவாய்)/2023, நாள் 17.07.2023 மற்றும் அ.சா.கு.
எண். 26125/ மை.ம.ஆ.பி/2023, நாள் 17.07.2023-இல் பெற்ற இசைவுடன் வெளியிடப்படுகிறது. கூடுதல் நிதியொதுக்கப் பேரேடு எண். 0546 (ஐநூற்று நாற்பத்து ஆறு)
(IFHRMS Additional Sanction Ledger No. 2023070546)
PSL No. 202307PSL0128Aug. 2, 2023] TAMIL NADU GOVERNMENT GAZETTE 59
இணைப்பு-I
[அரசாணை (நிலை) எண். 359, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை, நாள் 17.07.2023] வாணாபுரம் புதிய வருவாய் வட்டத்திற்கான பணியிட விவரங்கள்
வாணாபுரம் புதிய வருவாய் வட்டம் உருவாக்கப்பட்ட பின்னர் சங்கராபுரம் மற்றும் திருக்கோவிலூர் வருவாய் வட்டங்களிலிருந்து மாறுதல் செய்யப்பட வேண்டிய மற்றும் புதியதாக உருவாக்கப்பட வேண்டிய பணியிடங்கள் ஆகியவற்றின் விவரம் பொதுவான பணியாளர் மாதிரி (Generalized Staff Pattern)-இன்படி பின்வருமாறு தரப்படுகிறது.
| வ. எண். | பணியிடத்தின் பெயர் | சங்கராபுரம் வருவாய் வட்டம் | திருக்கோவிலூர் வருவாய் வட்டம் | புதிதாக உருவாக்கப்படவுள்ள வாணாபுரம் வருவாய் வட்டம் (4 குறுவட்டம்) | ||||||
| (5 குறுவட்டம்) (பிரிவினைக்கு முன்) அனுமதிக்கப்பட்ட பணியிடம் | (2 குறுவட்டம்) பணியிடம் (பிரிவினைக்கு பின்) நிறுத்தி வைக்கப்பட வேண்டிய | மிகைப் பிணியிடங்கள் | (4 குறுவட்டம்) (பிரிவினைக்கு முன்) அனுமதிக்கப்பட்ட பணியிடம் | (4 குறுவட்டம்) நிறுத்தி வைக்கப்பட வேண்டிய பணியிடம் (பிரிவினைக்கு பின்) | மிகைப் பணியிடங்கள் | மறுபரவலமர்த்தல் மூலம் நிரப்பப்படும் பணியிடங்கள் | புதிய பணியிடம் தோற்றுவிக்கப்பட வேண்டிய | மொத்தப் பணியிடம் அனுமதிக்கப்பட வேண்டிய | ||
| (1) | (2) | (3) | (4) | (5) | (6) | (7) | (8) | (9) | (10) | (11) = 9+10 |
| அ. | பொதுப்பிரிவு | |||||||||
| 1. | வட்டாட்சியர் | 1 | 1 | 0 | 1 | 1 | 0 | 0 | 1 | 1 |
| 2. | தலைமையிடத்து துணை வட்டாட்சியர் | 1 | 1 | 0 | 1 | 1 | 0 | 0 | 1 | 1 |
| 3. | மண்டல துணை வட்டாட்சியர் | 1 | 0 | 1 | 1 | 1 | 0 | 1 | 1 | 2 |
| 4. | வருவாய் ஆய்வாளர் | 5 | 2 | 3 | 3 | 3 | 0 | 3 | 1 | 4 |
| 5. | உதவியாளர் | 3 | 2 | 1 | 3 | 3 | 0 | 1 | 2 | 3 |
| 6. | இளநிலை உதவியாளர் | 2 | 1 | 1 | 1 | 1 | 0 | 1 | 1 | 2 |
| 7. | தட்டச்சர் (பொது + சபாதி) | 1 | 1 | 0 | 1 | 1 | 0 | 0 | 2 | 2 |
| 8. | பதிவுறு எழுத்தர் (பொது + சபாதி) | 1 | 1 | 0 | 2 | 2 | 0 | 0 | 2 | 2 |
| 9. | அலுவலக உதவியாளர் (பொது + சபாதி + வட்ட வழங்கல் பிரிவு) | 5 | 5 | 0 | 5 | 5 | 0 | 0 | 5 | 5 |
| 10. | ஈப்பு ஓட்டுநர் (பொது + சபாதி) | 2 | 2 | 0 | 2 | 2 | 0 | 0 | 2 | 2 |
| 11. | இரவு காவலர் | 0 | 0 | 0 | 0 | 0 | 0 | 0 | 1 | 1 |
| 12. | மசால்சி | 0 | 0 | 0 | 1 | 1 | 0 | 0 | 1 | 1 |
| ஆ. | சமூக பாதுகாப்பு திட்டப் பிரிவு | |||||||||||
| 13. | தனி வட்டாட்சியர் | 1 | 1 | 0 | 1 | 1 | 0 | 0 | 1 | 1 | ||
| 14. | உதவியாளர் | 1 | 1 | 0 | 1 | 1 | 0 | 0 | 1 | 1 | ||
| 15. | இளநிலை உதவியாளர் | 1 | 1 | 0 | 0 | 0 | 0 | 0 | 1 | 1 | ||
| இ. | தேர்தல் பிரிவு | |||||||||||
| 16. | துணை வட்டாட்சியர் | 1 | 1 | 0 | 1 | 1 | 0 | 0 | 1 | 1 | ||
| 17. | உதவியாளர் | 1 | 1 | 0 | 1 | 1 | 0 | 0 | 1 | 1 | ||
| ஈ. | வட்ட வழங்கல் பிரிவு | |||||||||||
| 18. | வட்ட வழங்கல் அலுவலர் | 1 | 1 | 0 | 1 | 1 | 0 | 0 | 1 | 1 | ||
| 19. | உதவியாளர் | 1 | 1 | 0 | 1 | 1 | 0 | 0 | 1 | 1 | ||
| 20. | இளநிலை உதவியாளர் | 1 | 1 | 0 | 2 | 1 | 1 | 1 | 0 | 1 | ||
| 21. | தனி வருவாய் ஆய்வாளர் | 1 | 1 | 0 | 1 | 1 | 0 | 0 | 1 | 1 | ||
| உ. | நில அளவைப் பிரிவு | |||||||||||
| 22. | மண்டல துணை ஆய்வாளர் | 1 | 1 | 0 | 1 | 1 | 0 | 0 | 1 | 1 | ||
| 23. | வட்டசார் ஆய்வாளர் | 1 | 1 | 0 | 1 | 1 | 0 | 0 | 1 | 1 | ||
| 24. | முதுநிலை வரைவாளர் | 1 | 1 | 0 | 1 | 1 | 0 | 0 | 1 | 1 | ||
| 25. | குறுவட்ட நிலஅளவர் | 5 | 2 | 3 | 3 | 3 | 0 | 3 | 1 | 4 | ||
| 26. | புல உதவியாளர் | 1 | 1 | 0 | 2 | 1 | 1 | 1 | 1 | 2 | ||
| மொத்தம் (அ+ஆ+இ+ஈ+உ) | 40 | 31 | 9 | 38 | 36 | 2 | 11 | 33 | 44 | |||
இணைப்பு–II
[அரசாணை (நிலை) எண். 359, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை, நாள் 17.07.2023] வாணாபுரம் புதிய வருவாய் வட்டத்திற்கு புதியதாக ஒப்பளிக்கப்படும் பணியிடங்கள்
| வ . எண். | பணியிடங்களின் பெயர் | நிலை மற்றும் ஊதிய விகிதம் (In pay revised scale) | புதிய பணியிடம் |
| 1. | வட்டாட்சியர் | நிலை-20, ரூ.37,700-1,38,500/- | 1 |
| 2. | தனி வட்டாட்சியர் (சமூக பாதுகாப்புத் திட்டம்) | நிலை-20, ரூ.37,700-1,38,500/- | 1 |
| 3. | தலைமையிடத்து துணை வட்டாட்சியர் | நிலை-18, ரூ.36,900-1,35,100/- | 1 |
| 3. | மண்டல துணை வட்டாட்சியர் | நிலை-18, ரூ.36,900-1,35,100/- | 1 |
| 4. | வட்ட வழங்கல் அலுவலர் (துணை வட்டாட்சியர்) | நிலை-18, ரூ.36,900-1,35,100/- | 1 |
| 5. | தேர்தல் துணை வட்டாட்சியர் | நிலை-18, ரூ.36,900-1,35,100/- | 1 |
| 6. | வட்டத் துணை ஆய்வாளர் (நிலஅளவைப் பிரிவு) | நிலை-12, ரூ.35,600-1,30,800/- | 1 |
| 7. | வட்டசார் ஆய்வாளர் (நிலஅளவைப் பிரிவு) | நிலை-11, ரூ.35,400-1,30,400/- | 1 |
| 8. | முதுநிலை வரைவாளர் (நிலஅளவைப் பிரிவு) | நிலை-11, ரூ.35,400-1,30,400/- | 1 |
| 9. | உதவியாளர் | நிலை-10, ரூ.20,600-75,900/- | 5 |
| 10. | வருவாய் ஆய்வாளர் | நிலை-10, ரூ.20,600-75,900/- | 1 |
| 11. | குறுவட்ட நில அளவர் (நிலஅளவைப் பிரிவு) | நிலை-10, ரூ.20,600-75,900/- | 1 |
| 12. | இளநிலை உதவியாளர் | நிலை-8, ரூ.19,500-71,900/- | 3 |
| 13. | தட்டச்சர் | நிலை-8, ரூ.19,500-71,900/- | 2 |
| 14. | பதிவுறு எழுத்தர் | நிலை-2, ரூ.15,900-58,500/- | 2 |
| 15. | ஈப்பு ஓட்டுநர் | நிலை-8, ரூ.19,500-71,900/- | 2 |
| 16. | அலுவலக உதவியாளர் | நிலை-1, ரூ.15,700-58,100/- | 5 |
| 17. | புல உதவியாளர் | நிலை-1, ரூ.15,700-58,100/- | 1 |
| 18. | மசால்சி | நிலை-1, ரூ.15,700-58,100/- | 1 |
| 19. | இரவுக் காவலர் | வெளிமுகமை (Outsourcing) | 1 |
| மொத்தம் | - | 33 |
இணைப்பு–III
[அரசாணை (நிலை) எண். 359, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை, நாள் 17.07.2023] புதிதாக உருவாக்கப்பட்டுள்ள வாணாபுரம் வருவாய் வட்டத்திற்கான
தொடரும் / தொடரா செலவினம்
தொடரும் செலவினங்கள் (ஒரு வருடத்திற்கு)
| வ . எண். | பொருளடக்கம் | தொகை ( ரூபாயில்) |
| 1 | ஆண்டொன்றுக்கு பணியாளர்களின் ஊதியம் மற்றும் படிகள் | 1,30,78,200 |
| 2 | கட்டிட வாடகை (பொதுப்பணித்துறையின் மூலம் நிர்ணயிக்கப்படும்) | தனியே அனுப்பப்படும் |
| 3 | மின்சாரக் கட்டணம் (நுகர்வு) | 3,60,000 |
| 4 | வாகன எரிபொருள் செலவு | 3,64,800 |
| 5 | தொலைபேசிக் கட்டணம் | 25,500 |
| 6 | சில்லறை செலவினம் | 30,000 |
| மொத்தம் | 1,38,58,500 | |
| 1 | புதிய வாகனம் வாங்குதல் | 16,40,000 |
| 2 | புதிய கணிணி மற்றும் அச்சுப்பொறிகள் வாங்குதல் | 10,23,000 |
| 3 | தளவாட பொருட்கள் | 10,95,000 |
| 3 | புதிய நகலெடுக்கும் இயந்திரம் வாங்குதல் | 1,38,000 |
| 4 | தொலை நகலெடுக்கும் இயந்திரம் | 17,000 |
| 5 | புதிய வருடி நகலி வாங்குதல் | 57,600 |
| 6 | புதிய தீயணைப்பான் கருவி வாங்குதல் | 24,000 |
| 7 | புதிய குளிர்சாதனம் வாங்குதல் | 80,000 |
| 8 | புதிய தொலைப்பேசி இணைப்பு | 15,000 |
| 9 | செறிவு அட்டை (சி.யூ.ஜி) சிம்கார்டு | 600 |
| மொத்தம் | 40,90,200 |
இணைப்பு–IV
[அரசாணை (நிலை) எண். 359, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை, நாள் 17.07.2023] ஆட்சி எல்லைப்பட்டியல்–வாணாபுரம் வட்டத்தைப் பிரித்தலுக்கான படிவம் வட்டச்சீரமைப்பிற்கு பின்
| வ . எண். | ஆட்சி எல்லை | புதிய வட்டம் | மறுசீரமைப்பிற்கு பிறகு சங்கராபுரம் வட்டம் | மறுசீரமைப்பிற்குப் பிறகு திருக்கோவிலூர் வட்டம் |
| விளக்கங்கள் | வாணாபுரம் | சங்கராபுரம் | திருக்கோவிலூர் | |
| 1 | தலைமையிடம் | வாணாபுரம் | சங்கராபுரம் | திருக்கோவிலூர் |
| 2 | பரப்பளவு (ச.கி.மீ) | 431.26 | 294.10 | 266.49 |
| 3 | மக்கள்தொகை | 2,36,460 | 1,57,783 | 1,77,819 |
| 4 | வருவாய் கோட்டத்தின் பெயர் | கள்ளக்குறிச்சி | கள்ளக்குறிச்சி | திருக்கோவிலூர் |
| 5 | சட்டமன்றத் தொகுதியின் பெயர் | ரிஷிவந்தியம் | சங்கராபுரம் | திருக்கோவிலூர்/ரிஷிவந்தியம் |
| 6 | பாராளுமன்றத் தொகுதியின் பெயர் | கள்ளக்குறிச்சி | கள்ளக்குறிச்சி | கள்ளக்குறிச்சி |
| 7 | நகராட்சிகளின் எண்ணிக்கை | - | - | 1 (திருக்கோவிலூர்) |
| 8 | ஊராட்சி ஒன்றியங்களின் எண்ணிக்கை | 03 (ரிஷிவந்தியம், சங்கராபுரம், தியாகத்துருகம்) | 02 (சங்கராபுரம், கள்ளக்குறிச்சி) | 02 (திருக்கோவிலூர், ரிஷிவந்தியம்) |
| 9 | பேரூராட்சிகளின் எண்ணிக்கை | 01 (மணலூர்பேட்டை) | 01 (சங்கராபுரம்) | - |
| 10 | குறுவட்டங்களின் எண்ணிக்கை | 04 | 02 | 04 |
| 11 | வருவாய் கிராமங்களின் எண்ணிக்கை | 85 | 59 | 75 |
| 12 | கிராம பஞ்சாயத்துகளின் எண்ணிக்கை | 75 | 41 | 67 |
| 13 | தலைமையிடத்திலிருந்து வெகு தொலைவில் உள்ள கிராமத்தின் பெயர் | பிரிவிடையாம்பட்டு (32 கி.மீ) | மூலக்காடு (22 கி.மீ) | மேலந்தல் (25 கி.மீ) |
இணைப்பு–V
அரசாணை (நிலை) எண். 359, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை, நாள் 17.07.2023
அறிவிக்கை–1
தமிழ்நாடு அரசு இதனால் அறிவிப்பது யாதெனில் கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் மற்றும் திருக்கோவிலூர் வருவாய் வட்டங்களைச் சீரமைத்து 19.07.2023ஆம் நாளிலிருந்து வாணாபுரத்தை தலைமையிடமாகக் கொண்டு புதிய வருவாய் வட்டம் கீழ்க்காணும் அட்டவணையில் காட்டப்பட்டுள்ள வருவாய் கிராமங்களை தனது ஆட்சி எல்லைகளாகக் கொண்டு செயல்படும்.
| வ . எண். | வட்டத்தின் பெயர் | குறுவட்டத்தின் பெயர் | வ . எண். | வருவாய் கிராமத்தின் எண். | வருவாய் கிராமத்தின் பெயர் |
| 1. | வாணாபுரம் | வடபொன்பரப்பி (23 கிராமங்கள்) | 1 | 36 | மூங்கில்துறைப்பட்டு |
| 2 | 38 | பொரசப்பட்டு | |||
| 3 | 37 | பொறுவள்ளூர் | |||
| 4 | 43 | அருளம்பாடி | |||
| 5 | 41 | உலகலப்பாடி | |||
| 6 | 42 | வடபொன்பரப்பி | |||
| 7 | 34 | வடகீரனூர் | |||
| 8 | 31 | பிரம்மகுண்டம் | |||
| 9 | 32 | ராயசமுத்திரம் | |||
| 10 | 35 | மேல்சிறுவள்ளூர் | |||
| 11 | 33 | மணலூர் | |||
| 12 | 30 | பவுஞ்சிப்பட்டு | |||
| 13 | 69 | பாக்கம் | |||
| 14 | 70 | கடுவனூர் | |||
| 15 | 39 | மங்கலம் | |||
| 16 | 40 | ஈருடையாம்பட்டு | |||
| 17 | 45 | ஆதனூர் | |||
| 18 | 67 | தொழுவந்தாங்கல் | |||
| 19 | 68 | காணாங்காடு | |||
| 20 | 29 | லக்கிநாயக்கன்பட்டி | |||
| 21 | 28 | ரங்கப்பனூர் | |||
| 22 | 27 | புதுப்பட்டு | |||
| 23 | 26 | இராவுத்தநல்லூர் | |||
| ரிஷிவந்தியம் (21 கிராமங்கள்) | 24 | 144 | ரிஷிவந்தியம் | ||
| 25 | 145 | வெங்கலம் | |||
| 26 | 149 | முட்டியம் | |||
| 27 | 150 | மண்டகப்பாடி | |||
| 28 | 146 | முனிவாழை | |||
| 29 | 148 | அலியாபாத் | |||
| 30 | 147 | பிரிவிடையாம்பட்டு | |||
| 31 | 132 | சூளாங்குறிச்சி | |||
| 32 | 137 | பல்லகச்சேரி | |||
| 33 | 104 | பழையசிறுவங்கூர் | |||
| 34 | 135 | பள்ளிப்பட்டு | |||
| 35 | 136 | வேளானந்தல் | |||
| 36 | 133 | சித்தேரிப்பட்டு | |||
| 37 | 101 | கீழ்ப்பாடி | |||
| 38 | 134 | சித்தால் | |||
| 39 | 140 | பேரால் | |||
| 40 | 141 | சாத்தப்புத்தூர் | |||
| 41 | 142 | பாவந்தூர் | |||
| 42 | 143 | பாசார் | |||
| 43 | 138 | களையநல்லூர் | |||
| 44 | 139 | பீளமேடு | |||
| அரியலூர் (20 கிராமங்கள்) | 45 | 60 | சின்னகொள்ளியூர் | ||
| 46 | 61 | பெரியகொள்ளியூர் | |||
| 47 | 65 | அரியலூர் | |||
| 48 | 66 | அத்தியூர் | |||
| 49 | 58 | ஓடியந்தல் | |||
| 50 | 57 | மரூர் | |||
| 51 | 62 | நாகல்குடி | |||
| 52 | 63 | வாணாபுரம் | |||
| 53 | 56 | கடம்பூர் | |||
| 54 | 54 | சீர்ப்பனந்தல் | |||
| 55 | 59 | எடுத்தனூர் | |||
| (ரிஷிவந்தியம் குறுவட்டத்தினைச் சேர்ந்த 9 கிராமங்கள்) | 56 | 97 | யால் | ||
| 57 | 95 | மையனூர் | |||
| 58 | 98 | பொற்பாலப்பட்டு | |||
| 59 | 96 | பெரியபகண்டை | |||
| 60 | 64 | ஏந்தல் | |||
| 61 | 100 | லா. கூடலூர் | |||
| 62 | 99 | அவிரியூர் | |||
| 63 | 103 | மேலப்பழங்கூர் | |||
| 64 | 102 | நூரோலை | |||
| மணலூர்பேட்டை (21 கிராமங்கள்) | 65 | 11 | மணலூர்பேட்டை | ||
| 66 | 10 | சித்தப்பட்டினம் | |||
| 67 | 7 | தேவரடியார்குப்பம் | |||
| 68 | 8 | ஜம்பை | |||
| 69 | 6 | அத்தியந்தல் | |||
| 70 | 5 | முருக்கம்பாடி | |||
| 71 | 2 | காங்கியனூர் | |||
| 72 | 1 | மேலந்தல் | |||
| 73 | 3 | பள்ளிச்சந்தல் | |||
| 74 | 4 | கொங்கணாமூர் | |||
| 75 | 9 | செல்லங்குப்பம் | |||
| (அரியலூர் குறுவட்டத்தினைச் சேர்ந்த 10 கிராமங்கள்) | 76 | 50 | ஜம்படை | ||
| 77 | 51 | திருவரங்கம் | |||
| 78 | 47 | ஆற்கவாடி | |||
| 79 | 46 | சுத்தமலை | |||
| 80 | 49 | சீர்பாதநல்லூர் | |||
| 81 | 48 | அரும்பராம்பட்டு | |||
| 82 | 44 | வடமாமாந்தூர் | |||
| 83 | 52 | சு. கள்ளிப்பாடி | |||
| 84 | 55 | சிறுபனையூர் | |||
| 85 | 53 | மணியந்தல் |
அறிவிக்கை–2
[அரசாணை (நிலை) எண். 359, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை, நாள் 17.07.2023] சங்கராபுரம் வட்டத்தில், வாணாபுரம் வட்டப் பிரிவினைக்கு முன் உள்ள கிராமங்களின் பெயர்கள் (குறுவட்டங்கள் வாரியாக)
| கோட்டத்தின் பெயர் | வட்டத்தின் பெயர் | குறுவட்டத்தின் பெயர் | வ . எண். | வருவாய் கிராமத்தின் எண். | வருவாய் கிராமத்தின் பெயர் |
| கள்ளக்குறிச்சி | சங்கராபுரம் | 1. வடபொன்பரப்பி (24 கிராமங்கள்) | 1 | 29 | லக்கிநாயக்கன்பட்டி |
| 2 | 26 | இராவுத்தநல்லூர் | |||
| 3 | 28 | ரங்கப்பனூர் | |||
| 4 | 27 | புதுப்பட்டு | |||
| 5 | 39 | மங்கலம் | |||
| 6 | 40 | ஈருடையாம்பட்டு | |||
| 7 | 45 | ஆதனூர் | |||
| 8 | 36 | மூங்கில்துறைப்பட்டு | |||
| 9 | 38 | பொரசப்பட்டு | |||
| 10 | 37 | பொறுவள்ளூர் | |||
| 11 | 43 | அருளம்பாடி | |||
| 12 | 41 | உலகலப்பாடி | |||
| 13 | 42 | வடபொன்பரப்பி | |||
| 14 | 34 | வடகீரனூர் | |||
| 15 | 31 | பிரம்மகுண்டம் | |||
| 16 | 32 | ராயசமுத்திரம் | |||
| 17 | 35 | மேல்சிறுவள்ளூர் | |||
| 18 | 33 | மணலூர் | |||
| 19 | 30 | பவுஞ்சிப்பட்டு | |||
| 20 | 69 | பாக்கம் | |||
| 21 | 70 | கடுவனூர் | |||
| 22 | 67 | தொழுவந்தாங்கல் | |||
| 23 | 68 | காணாங்காடு | |||
| 24 | 04 | மூலக்காடு | |||
| 2. அரியலூர் (21 கிராமங்கள்) | 25 | 61 | பெரியகொள்ளியூர் | ||
| 26 | 60 | சின்னகொள்ளியூர் | |||
| 27 | 65 | அரியலூர் | |||
| 28 | 66 | அத்தியூர் | |||
| 29 | 50 | ஜம்படை | |||
| 30 | 51 | திருவரங்கம் | |||
| 31 | 47 | ஆற்கவாடி | |||
| 32 | 46 | சுத்தமலை | |||
| 33 | 49 | சீர்பாதநல்லூர் | |||
| 34 | 48 | அரும்பராம்பட்டு | |||
| 35 | 44 | வடமாமந்தூர் | |||
| 36 | 52 | சு.கள்ளிப்பாடி | |||
| 37 | 54 | சீர்ப்பனந்தல் | |||
| 38 | 59 | எடுத்தனூர் | |||
| 39 | 55 | சிறுபனையூர் | |||
| 40 | 53 | மணியந்தல் | |||
| 41 | 56 | கடம்பூர் | |||
| 42 | 58 | ஓடியந்தல் | |||
| 43 | 57 | மரூர் | |||
| 44 | 62 | நாகல்குடி | |||
| 45 | 63 | வாணாபுரம் | |||
| ரிஷிவந்தியம் (30 கிராமங்கள்) | 46 | 144 | ரிஷிவந்தியம் | ||
| 47 | 145 | வெங்கலம் | |||
| 48 | 149 | முட்டியம் | |||
| 49 | 150 | மண்டகப்பாடி | |||
| 50 | 146 | முனிவாழை | |||
| 51 | 148 | அலியாபாத் | |||
| 52 | 147 | பிரிவிடையாம்பட்டு | |||
| 53 | 138 | களையநல்லூர் | |||
| 54 | 139 | பீளமேடு | |||
| 55 | 132 | சூளாங்குறிச்சி | |||
| 56 | 137 | பல்லகச்சேரி | |||
| 57 | 104 | பழையசிறுவங்கூர் | |||
| 58 | 135 | பள்ளிப்பட்டு | |||
| 59 | 136 | வேளானந்தல் | |||
| 60 | 133 | சித்தேரிப்பட்டு | |||
| 61 | 97 | யால் | |||
| 62 | 95 | மையனூர் | |||
| 63 | 98 | பொற்பாலம்பட்டு | |||
| 64 | 96 | பெரியபகண்டை | |||
| 65 | 64 | ஏந்தல் | |||
| 66 | 100 | லா. கூடலூர் | |||
| 67 | 99 | அவிரியூர் | |||
| 68 | 101 | கீழ்ப்பாடி | |||
| 69 | 134 | சித்தால் | |||
| 70 | 140 | பேரால் | |||
| 71 | 141 | சாத்தப்புத்தூர் | |||
| 72 | 142 | பாவந்தூர் | |||
| 73 | 103 | மேலப்பழங்கூர் | |||
| 74 | 102 | நூரோலை | |||
| 75 | 143 | பாசார் | |||
| 4. ஆலத்தூர் (28 கிராமங்கள்) | 76 | 112 | சேஷசமுத்திரம் | ||
| 77 | 111 | நெடுமானூர் | |||
| 78 | 119 | ஆலத்தூர் | |||
| 79 | 127 | அரியபெருமானூர் | |||
| 80 | 129-1 | தண்டலை (வடக்கு) | |||
| 81 | 129-2 | தண்டலை (தெற்கு) | |||
| 82 | 131 | அகரகோட்டாலம் | |||
| 83 | 130 | அணைகரைகோட்டாலம் | |||
| 84 | 128 | வாணியந்தல் | |||
| 85 | 108 | ராமராஜபுரம் | |||
| 86 | 107 | பழையனூர் | |||
| 87 | 109 | மஞ்சப்புத்தூர் | |||
| 88 | 110 | வடசெட்டியந்தல் | |||
| 89 | 106 | வளையாம்பட்டு | |||
| 90 | 115 | மேலப்பட்டு | |||
| 91 | 116 | கீழப்பட்டு | |||
| 92 | 117 | பரமநத்தம் | |||
| 93 | 118 | நெய்வாநத்தம் | |||
| 94 | 105 | கல்லேரிக்குப்பம் | |||
| 95 | 124 | மோகூர் | |||
| 96 | 125 | சோமண்டார்குடி | |||
| 97 | 126 | மோ. வன்னஞ்சூர் | |||
| 98 | 123 | க. அலம்பலம் | |||
| 99 | 122 | செம்படாக்குறிச்சி | |||
| 100 | 121 | பொன்பரப்பட்டு | |||
| 101 | 120 | திருக்கணங்கூர் | |||
| 102 | 114 | மூரார்பாத் | |||
| 103 | 113 | சோழம்பட்டு | |||
| சங்கராபுரம் (30 கிராமங்கள்) | 104 | 81 | சங்கராபுரம் | ||
| 105 | 80 | காட்டுவன்னஞ்சூர் | |||
| 106 | 84 | தேவபாண்டலம் | |||
| 107 | 85 | அ. பாண்டலம் | |||
| 108 | 86 | சு. குளத்தூர் | |||
| 109 | 88 | ஆரூர் | |||
| 110 | 89 | வரகூர் | |||
| 111 | 91 | திம்மனந்தல் | |||
| 112 | 90 | செல்லக்காகுப்பம் | |||
| 113 | 93 | விரியூர் | |||
| 114 | 94 | அரசராம்பட்டு | |||
| 115 | 92 | கிடங்குடையாம்பட்டு | |||
| 116 | 23 | மல்லாபுரம் | |||
| 117 | 25 | புத்திராம்பட்டு | |||
| 118 | 24 | சிட்டந்தாங்கல் | |||
| 119 | 73 | மூக்கனூர் | |||
| 120 | 72 | உலகுடையாம்பட்டு | |||
| 121 | 71 | சிவபுரம் | |||
| 122 | 83 | சௌந்திரவள்ளி பாளையம் | |||
| 123 | 74 | ஊராங்கானி | |||
| 124 | 82 | தியாகராஜபுரம் | |||
| 125 | 75 | பூட்டை | |||
| 126 | 79 | செம்பராம்பட்டு | |||
| 127 | 78 | பொய்க்குணம் | |||
| 128 | 76 | அரசம்பட்டு | |||
| 129 | 77 | கொசப்பாடி | |||
| 130 | 87 | வடசிறுவள்ளூர் | |||
| 131 | 21 | பாச்சேரி | |||
| 132 | 20 | புதுப்பாலப்பட்டு | |||
| 133 | 19 | கள்ளிப்பட்டு |
அறிவிக்கை-3
[அரசாணை (நிலை) எண். 359, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை, நாள் 17.07.2023] சங்கராபுரம் வட்டத்தில், வாணாபுரம் வட்டப் பிரிவினைக்கு பின் சங்கராபுரம் வட்டத்தில் எஞ்சியுள்ள கிராமங்களின் பெயர்கள் (குறுவட்டங்கள் வாரியாக)
| கோட்டத்தின் பெயர் | வட்டத்தின் பெயர் | குறுவட்டத்தின் பெயர் | வ . எண். | வருவாய் கிராமத்தின் எண். | வருவாய் கிராமத்தின் பெயர் |
| கள்ளக்குறிச்சி | சங்கராபுரம் | சங்கராபுரம் (31 கிராமங்கள்) | 1 | 81 | சங்கராபுரம் |
| 2 | 80 | காட்டுவன்னஞ்சூர் | |||
| 3 | 84 | தேவபாண்டலம் | |||
| 4 | 85 | அ. பாண்டலம் | |||
| 5 | 86 | சு. குளத்தூர் | |||
| 6 | 88 | ஆரூர் | |||
| 7 | 89 | வரகூர் | |||
| 8 | 91 | திம்மனந்தல் | |||
| 9 | 90 | செல்லக்காகுப்பம் | |||
| 10 | 93 | விரியூர் | |||
| 11 | 94 | அரசராம்பட்டு | |||
| 12 | 92 | கிடங்குடையாம்பட்டு | |||
| 13 | 23 | மல்லாபுரம் | |||
| 14 | 25 | புத்திராம்பட்டு | |||
| 15 | 24 | சிட்டந்தாங்கல் | |||
| 16 | 73 | மூக்கனூர் | |||
| 17 | 72 | உலகுடையாம்பட்டு | |||
| 18 | 71 | சிவபுரம் | |||
| 19 | 83 | சௌந்திரவள்ளி பாளையம் | |||
| 20 | 74 | ஊராங்கானி | |||
| 21 | 82 | தியாகராஜபுரம் | |||
| 22 | 75 | பூட்டை | |||
| 23 | 79 | செம்பராம்பட்டு | |||
| 24 | 78 | பொய்க்குணம் | |||
| 25 | 76 | அரசம்பட்டு | |||
| 26 | 77 | கொசப்பாடி | |||
| 27 | 87 | வடசிறுவள்ளூர் | |||
| 28 | 21 | பாச்சேரி | |||
| 29 | 20 | புதுப்பாலப்பட்டு | |||
| 30 | 19 | கள்ளிப்பட்டு | |||
| 31 | 04 | மூலக்காடு | |||
| (ஆலத்தூர் 28 கிராமங்கள்) | 32 | 112 | சேஷசமுத்திரம் | ||
| 33 | 111 | நெடுமானூர் | |||
| 34 | 119 | ஆலத்தூர் | |||
| 35 | 127 | அரியபெருமானூர் | |||
| 36 | 129-1 | தண்டலை (வடக்கு) | |||
| 37 | 129-2 | தண்டலை (தெற்கு) | |||
| 38 | 131 | அகரகோட்டாலம் | |||
| 39 | 130 | அணைகரை கோட்டாலம் | |||
| 40 | 128 | வாணியந்தல் | |||
| 41 | 108 | ராமராஜபுரம் | |||
| 42 | 107 | பழையனூர் | |||
| 43 | 109 | மஞ்சப்புத்தூர் | |||
| 44 | 110 | வடசெட்டியந்தல் | |||
| 45 | 106 | வளையாம்பட்டு | |||
| 46 | 115 | மேலப்பட்டு | |||
| 47 | 116 | கீழப்பட்டு | |||
| 48 | 117 | பரமநத்தம் | |||
| 49 | 118 | நெய்வாநத்தம் | |||
| 50 | 105 | கல்லேரிக்குப்பம் | |||
| 51 | 124 | மோகூர் | |||
| 52 | 125 | சோமண்டார்குடி | |||
| 53 | 126 | மோ. வன்னஞ்சூர் | |||
| 54 | 123 | க. அலம்பலம் | |||
| 55 | 122 | செம்படாக்குறிச்சி | |||
| 56 | 121 | பொன்பரப்பட்டு | |||
| 57 | 120 | திருக்கணங்கூர் | |||
| 58 | 114 | மூரார்பாத் | |||
| 59 | 113 | சோழம்பட்டு |
அறிவிக்கை–4
[அரசாணை (நிலை) எண். 359, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை, நாள் 17.07.2023] திருக்கோவிலூர் வட்டத்தில், வாணாபுரம் வட்டம் உருவாக்கிடுவதற்கு முன் உள்ள கிராமங்களின் பெயர்கள்
(குறுவட்டங்கள் வாரியாக)
| கோட்டத்தின் பெயர் | வட்டத்தின் பெயர் | குறுவட்டத்தின் பெயர் | வ . எண் | வருவாய் கிராமத்தின் எண் | வருவாய் கிராமத்தின் பெயர் |
| திருக்கோவிலூர் | திருக்கோவிலூர் | மணலூர்பேட்டை (24 கிராமங்கள்) | 1 | 1 | மேலந்தல் |
| 2 | 2 | காங்கியனூர் | |||
| 3 | 3 | பள்ளிச்சந்தல் | |||
| 4 | 4 | கொங்கனாமூர் | |||
| 5 | 5 | முருக்கம்பாடி | |||
| 6 | 6 | அத்தியந்தல் | |||
| 7 | 7 | தேவரடியார்குப்பம் | |||
| 8 | 8 | ஜம்பை | |||
| 9 | 9 | செல்லங்குப்பம் | |||
| 10 | 10 | சித்தப்பட்டினம் | |||
| 11 | 11 | மணலூர்பேட்டை | |||
| 12 | 12 | ஜா. சித்தாமூர் | |||
| 13 | 13 | சாங்கியம் | |||
| 14 | 14 | சொரையப்பட்டு | |||
| 15 | 15 | கொழுந்திராம்பட்டு | |||
| 16 | 16 | நெடுங்கம்பட்டு | |||
| 17 | 17 | டி. அத்திப்பாக்கம் | |||
| 18 | 18 | சடைகட்டி | |||
| 19 | 19 | புத்தகரம் | |||
| 20 | 20 | குலதீபமங்கலம் | |||
| 21 | 21 | அகஸ்தியர்மூலை | |||
| 22 | 22 | விளந்தை | |||
| 23 | 23 | கோட்டகம் | |||
| 24 | 24 | கழுமலம் | |||
| திருப்பாலபந்தல் (25 கிராமங்கள்) | 25 | 25 | முடியனூர் | ||
| 26 | 26 | தகடி | |||
| 27 | 27 | மிலாரிப்பட்டு | |||
| 28 | 28 | கூவனூர் | |||
| 29 | 29 | அருதங்குடி | |||
| 30 | 30 | எடையூர் | |||
| 31 | 31 | திருப்பாலபந்தல் | |||
| 32 | 32 | பூமாரி | |||
| 33 | 33 | துரிஞ்சிப்பட்டு | |||
| 34 | 34 | பரடாப்பட்டு | |||
| 35 | 35 | நரியந்தல் | |||
| 36 | 36 | தேவியந்தல் | |||
| 37 | 37 | மாடாம்பூண்டி | |||
| 38 | 38 | இரும்பலக்குறிச்சி | |||
| 39 | 39 | பொ. மெய்யூர் | |||
| 40 | 40 | பொன்னியந்தல் | |||
| 41 | 41 | கோமாளூர் | |||
| 42 | 42 | பனப்பாடி | |||
| 43 | 43 | தத்தனுார் | |||
| 44 | 44 | கொணக்கலவாடி | |||
| 45 | 45 | சோழவாண்டிபுரம் | |||
| 46 | 46 | பாடியந்தல் | |||
| 47 | 47 | திம்மச்சூர் | |||
| 48 | 48 | கோளப்பாறை | |||
| 49 | 49 | நெடுமுடையான் | |||
| திருக்கோவிலூர் (25 கிராமங்கள்) | 50 | 50 | கரடி | ||
| 51 | 51 | டி. கீரனூர் | |||
| 52 | 52 | கீழையூர் | |||
| 53 | 53-1 | திருக்கோவிலூர் (வடக்கு) | |||
| 54 | 53-2 | திருக்கோவிலூர் (தெற்கு) | |||
| 55 | 54 | ஆவியூர் | |||
| 56 | 55 | தேவியகரம் | |||
| 57 | 56 | கச்சிக்குவச்சான் | |||
| 58 | 57 | அரும்பாக்கம் | |||
| 59 | 58 | கீழத்தாழனூர் | |||
| 60 | 59 | மேலத்தாழனூர் | |||
| 61 | 60 | கனகனந்தல் | |||
| 62 | 61 | சிவனார்த்தாங்கல் | |||
| 63 | 62 | தனகனந்தல் | |||
| 64 | 63 | வெண்மார் | |||
| 65 | 64 | வேங்கூர் | |||
| 66 | 65 | ஜி. அரியூர் | |||
| 67 | 66 | செங்கணாங்கொல்லை | |||
| 68 | 67 | மேமாளூர் | |||
| 69 | 68 | காடியார் | |||
| 70 | 69 | ஆலூர் | |||
| 71 | 70 | மொகலார் | |||
| 72 | 71 | பழங்கூர் | |||
| 73 | 72 | பெரியானூர் | |||
| 74 | 73 | எரவலம் | |||
| ஆவிக்கொளப் பாக்கம் (12 கிராமங்கள்) | 75 | 74 | காட்டுப்பையூர் | ||
| 76 | 75 | ஆவிக்கொளப்பாக்கம் | |||
| 77 | 76 | முதலூர் | |||
| 78 | 77 | வடக்குநெமிலி | |||
| 79 | 78 | அத்தண்டமருதூர் | |||
| 80 | 79 | வடமருதூர் | |||
| 81 | 82 | டி. குன்னாத்தூர் | |||
| 82 | 83 | கொடியூர் | |||
| 83 | 84 | எல்ராம்பட்டு | |||
| 84 | 85 | வடமலையனூர் | |||
| 85 | 86 | வில்லிவலம் | |||
| 86 | 89 | வீரணாம்பட்டு |
அறிவிக்கை-5
[அரசாணை (நிலை) எண். 359, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை, நாள் 17.07.2023] திருக்கோவிலூர் வட்டம், வாணாபுரம் வட்டம் உருவாக்கத்திற்கு பின் உள்ள கிராமங்களின் பெயர்கள்
(குறுவட்டங்கள் வாரியாக)
| கோட்டத்தின் பெயர் | வட்டத்தின் பெயர் | குறுவட்டத்தின் பெயர் | வ . எண். | வருவாய் கிராமத்தின் எண். | வருவாய் கிராமத்தின் பெயர் |
| திருக்கோவிலூர் | திருக்கோவிலூர் | குலதீபமங்கலம் (13 கிராமங்கள்) (புதிய குறுவட்டம்) | 1 | 12 | ஜ. சித்தாமூர் |
| 2 | 13 | சாங்கியம் | |||
| 3 | 14 | சொரையப்பட்டு | |||
| 4 | 15 | கொழுந்திராம்பட்டு | |||
| 5 | 16 | நெடுங்கம்பட்டு | |||
| 6 | 17 | டி. அத்திப்பாக்கம் | |||
| 7 | 18 | சடைகட்டி | |||
| 8 | 19 | புத்தகரம் | |||
| 9 | 20 | குலதீபமங்கலம் | |||
| 10 | 21 | அகஸ்தியர்மூலை | |||
| 11 | 22 | விளந்தை | |||
| 12 | 23 | கோட்டகம் | |||
| 13 | 24 | கழுமலம் | |||
| திருப்பாலபந்தல் (25 கிராமங்கள்) | 14 | 25 | முடியனூர் | ||
| 15 | 26 | தகடி | |||
| 16 | 27 | மிலாரிப்பட்டு | |||
| 17 | 28 | கூவனூர் | |||
| 18 | 29 | அருதங்குடி | |||
| 19 | 30 | எடையூர் | |||
| 20 | 31 | திருப்பாலபந்தல் | |||
| 21 | 32 | பூமாரி | |||
| 22 | 33 | துரிஞ்சிப்பட்டு | |||
| 23 | 34 | பரடாப்பட்டு | |||
| 24 | 35 | நரியந்தல் | |||
| 25 | 36 | தேவியந்தல் | |||
| 26 | 37 | மாடாம்பூண்டி | |||
| 27 | 38 | இரும்பலக்குறிச்சி | |||
| 28 | 39 | பொ. மெய்யூர் | |||
| 29 | 40 | பொன்னியந்தல் | |||
| 30 | 41 | கோமாளூர் | |||
| 31 | 42 | பனப்பாடி | |||
| 32 | 43 | தத்தனூர் | |||
| 33 | 44 | கொணக்கலவாடி | |||
| 34 | 45 | சோழவாண்டிபுரம் | |||
| 35 | 46 | பாடியந்தல் | |||
| 36 | 47 | திம்மச்சூர் | |||
| 37 | 48 | கோளப்பாறை | |||
| 38 | 49 | நெடுமுடையான் | |||
| திருக்கோவிலூர் (25 கிராமங்கள்) | 39 | 50 | கரடி | ||
| 40 | 51 | டி. கீரனூர் | |||
| 41 | 52 | கீழையூர் | |||
| 42 | 53-1 | திருக்கோவிலூர் (வடக்கு) | |||
| 43 | 53-2 | திருக்கோவிலூர் (தெற்கு) | |||
| 44 | 54 | ஆவியூர் | |||
| 45 | 55 | தேவியகரம் | |||
| 46 | 56 | கச்சிக்குவச்சான் | |||
| 47 | 57 | அரும்பாக்கம் | |||
| 48 | 58 | கீழத்தாழனூர் | |||
| 49 | 59 | மேலத்தாழனூர் | |||
| 50 | 60 | கனகனந்தல் | |||
| 51 | 61 | சிவனார்த்தாங்கல் | |||
| 52 | 62 | தனகனந்தல் | |||
| 53 | 63 | வெண்மார் | |||
| 54 | 64 | வேங்கூர் | |||
| 55 | 65 | ஜி. அரியூர் | |||
| 56 | 66 | செங்கணாங்கொல்லை | |||
| 57 | 67 | மேமாளூர் | |||
| 58 | 68 | காடியார் | |||
| 59 | 69 | ஆலூர் | |||
| 60 | 70 | மொகலார் | |||
| 61 | 71 | பழங்கூர் | |||
| 62 | 72 | பெரியானூர் | |||
| 63 | 73 | எரவலம் | |||
| ஆவிக்கொளப்பாக்கம் (12 கிராமங்கள்) | 64 | 74 | காட்டுப்பையூர் | ||
| 65 | 75 | ஆவிக்கொளப்பாக்கம் | |||
| 66 | 76 | முதலூர் | |||
| 67 | 77 | வடக்குநெமிலி | |||
| 68 | 78 | அத்தண்டமருதூர் | |||
| 69 | 79 | வடமருதூர் | |||
| 70 | 82 | டி.குன்னத்தூர் | |||
| 71 | 83 | கொடியூர் | |||
| 72 | 84 | எல்ராம்பட்டு | |||
| 73 | 85 | வடமலையனூர் | |||
| 74 | 86 | வில்லிவலம் | |||
| 75 | 89 | வீரணாம்பட்டு |
குமார் ஜயந்த்,
அரசு கூடுதல் தலைமைச் செயலாளர்.
PRINTED AND PUBLISHED BY THE DIRECTOR OF STATIONERY AND PRINTING, CHENNAI ON BEHALF OF THE GOVERNMENT OF TAMIL NADU