Servants of Knowledge
Tamil Nadu Gazette · Government of Tamil Nadu

Tamil Nadu Acts and Ordinance (Tamil) ACT No. 22/2023 -

Published 02 August 2023

Type
Ordinary
Gazette no.
31
Part
Part IV
Section
Section 2_T_Sup
Identifier
in.gazette.tamilnadu.2023-08-02.Ordinary_31_Part-IV_Section-2_T_Sup
Languages
English, Tamil
Published at
Original source ↗

© [Regd. No. TN/CCN/467/2012-14. தமிழ்நாடு அரசு [R. Dis. No. 197/2009. 2023 [விலை: ரூ. 0.80 காசு

தமிழ்நாடு அரசிதழ் ஆணையின்படி வெளியிடப்பட்டது.

எண் 31] சென்னை, புதன்கிழமை, ஆகஸ்ட் 2, 2023 ஆடி 17, சோபகிருது, திருவள்ளுவர் ஆண்டு-2054

பகுதி IV—பிரிவு 2 இன் இணைப்பு

தமிழ்நாடு மாநில சட்டமன்றப் பேரவையின் பின்வரும் சட்டமானது 2023 ஆம்

ஆண்டு ஜூன் திங்கள் 21 ஆம் நாளன்று ஆளுநரின் ஏற்பிசைவைப் பெற்றது மற்றும்

அது பொதுத் தகவலுக்காக இதன்மூலம் வெளியிடப்படுகிறது:-

சட்ட எண். 22/2023.

2003ஆம் ஆண்டு சிகரெட்டுகள் மற்றும் பிற புகையிலைத் தயாரிப்புகள்

(விளம்பரம் செய்தலைத் தடைசெய்தல் மற்றும் வணிகம் மற்றும் வாணிபம், உற்பத்தி

செய்தல், வழங்குதல் மற்றும் விநியோகம் செய்தலை முறைப்படுத்துதல்) சட்டத்தை

தமிழ்நாடு மாநிலத்திற்கு பொருந்தும் வகையில் திருத்தம் செய்வதற்கானதொரு சட்டம்.

இந்தியக் குடியரசின் எழுபத்தி மூன்றாம் ஆண்டில் தமிழ்நாடு மாநிலச் சட்டமன்றப்

பேரவையினால் பின்வருமாறு சட்டமியற்றப்படுவதாகுக:-

குறுந்தலைப்பு 1. (1) இந்தச் சட்டம், 2022 ஆம் ஆண்டு சிகரெட்டுகள் மற்றும் பிற புகையிலைத்

மற்றும் தொடக்கம்.

தயாரிப்புகள் (விளம்பரம் செய்தலைத் தடைசெய்தல் மற்றும் வணிகம் மற்றும் வாணிபம்,

உற்பத்தி செய்தல், வழங்குதல் மற்றும் விநியோகம் செய்தலை முறைப்படுத்துதல்) தமிழ்நாடு

திருத்தச் சட்டம் என வழங்கப்பெறும்.

(2) இது மாநில அரசு, அறிவிக்கையின் வாயிலாக குறிப்பிடப்படலாகும் அத்தகைய

தேதியன்று நடைமுறைக்கு வருதல் வேண்டும்.

மையச் சட்டம்

3ஆம் பிரிவிற்கான 2. (இதன்பின்பு இதில் முதன்மைச் சட்டம் எனக் குறிப்பிடப்படுவதான) 2003ஆம்

34/2003.

திருத்தம்.

ஆண்டு சிகரெட்டுகள் மற்றும் பிற புகையிலைத் தயாரிப்புகள் (விளம்பரம் செய்தலைத்

தடைசெய்தல் மற்றும் வணிகம் மற்றும் வாணிபம், உற்பத்தி செய்தல், வழங்குதல் மற்றும்

விநியோகம் செய்தலை முறைப்படுத்துதல்) சட்டத்தின் 3ஆம் பிரிவில், (e) கூறுக்குப் பின்பு,

பின்வரும் கூறானது உட்புகுத்தப்படுதல் வேண்டும், அதாவது:-

"(ee) "புகைக்குழல் கூடம்" என்பது, பகிர்ந்துகொள்ளும் புகைக்குழல் அல்லது

தனியாக வழங்கப்படக் கூடிய தென்னைப் புகைக்குழலில் இருந்து புகையிலையைப்

புகைப்பதற்கு மக்கள் ஒன்று கூடுவதற்கான ஒரு அமைவிடம் என்று பொருள்படும்;".

4A எனும் புதிய 3. முதன்மைச் சட்டத்தின் 4 ஆம் பிரிவிற்கு பின்பு, பின்வரும் பிரிவானது பிரிவினை உட்புகுத்தப்படுதல் வேண்டும், அதாவது:- உட்புகுத்துதல். IV-2-31-(T-Sup)-1 [1] 2

"4A புகைக்குழல் கூடத்தினை தடைசெய்தல்.- இந்தச் சட்டத்தில் அடங்கியிருப்பது எவ்வாறிருப்பினும், நபரெவரும், அவருக்குச் சொந்தமாகவோ அல்லது பிற

நபர் எவரின் சார்பாகவோ, உணவுக் கூடம் உள்ளடங்கலான எந்த இடத்திலும், புகைக்குழல்

கூடம் எதனையும் திறக்கவோ அல்லது நடத்தவோ அல்லது வாடிக்கையாளர்களுக்கு

புகைக்குழலினை வழங்கவோ கூடாது.

விளக்கம்.- "உணவுக்கூடம்" என்பது உணவு அல்லது சாராயம், மது, கோதுமைச் சாராயம், பார்லி சாராயம் அல்லது பிற தானியவகையிலான மதுபானங்களை உள்ளடக்காதச்

சிற்றுண்டி வகை எதனையும், சாதாரண வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படுகின்றதும்

நுகர்வுக்காக விற்கப்படுகின்றதுமான இடம் எதுவும் என்று பொருள்படும்.".

12ஆம்

4. முதன்மைச் சட்டத்தின் 12ஆம் பிரிவில் (1)ஆம் உட்பிரிவில்:-

பிரிவிற்கான

திருத்தம்.

(i) (b) கூறில், "அல்லது செய்யப்படுகிற" எனும் சொற்றொடருக்குப் பின்பு, "அல்லது"

எனும் சொற்றொடரானது சேர்க்கப்படுதல் வேண்டும்;

(ii) அவ்வாறு திருத்தப்பட்டவாறான (b) கூறுக்குப் பின்பு, பின்வரும் கூறானது

சேர்க்கப்படுதல் வேண்டும், அதாவது:-

"(c) புகைக்குழல் கூடம் எதுவும் நடத்தப்படுகிறவிடத்து.".

13A எனும் புதிய

5. முதன்மைச் சட்டத்தின் 13ஆம் பிரிவிற்கு பின்பு, பின்வரும் பிரிவானது

பிரிவினை உட்புகுத்தப்படுதல் வேண்டும், அதாவது:-

உட்புகுத்துதல்.

"13A. கைப்பற்றுதலுக்கான அதிகாரம்,- மாநில அரசினால் அதிகாரமளிக்கப்பட்ட, உதவி ஆய்வாளர் படிநிலைக்குக் குறையாத, காவல்துறை அலுவலர் எவரும்,

4A ஆம் பிரிவின் அந்த வகைமுறைகளானவை மீறப்படுகிறது அல்லது மீறப்பட்டுள்ளது என

நம்புவதற்கான காரணத்தைக் கொண்டிருந்தால், புகைக்குழல் கூடத்தின் உட்பொருளாகவோ

அல்லது துணைப் பொருளாகவோ பயன்படுத்தப்பட்ட மூலப்பொருள் அல்லது பொருள்

எதனையும் அவர் கைப்பற்றலாம்."

21A எனும் புதிய

6. முதன்மைச் சட்டத்தின் 21ஆம் பிரிவிற்கு பின்பு, பின்வரும் பிரிவானது

பிரிவினை உட்புகுத்தப்படுதல் வேண்டும், அதாவது:-

உட்புகுத்துதல்.

"21A. புகைக்குழல் கூடத்தினை நடத்துவதற்கான தண்டனை.- 4Aஆம் பிரிவின் வகைமுறைகளை மீறுகிறவர் எவரும், ஓர் ஆண்டிற்கு குறையாத ஆனால்

மூன்று ஆண்டுகள் வரை நீட்டிக்கப்படலாகும் ஒரு காலஅளவிற்கு சிறைத் தண்டனையும்

இருபதாயிரம் ரூபாய்க்குக் குறையாத, ஆனால் ஐம்பதாயிரம் ரூபாய் வரை நீட்டிக்கப்படலாகும்

அபராதமும் விதித்துத் தண்டிக்கப்படுதல் வேண்டும்.".

(ஆளுநரின் ஆணைப்படி)

ச. கோபி ரவிகுமார், அரசு செயலாளர் (சட்டமியற்றல்), சட்டத் துறை.

(தமிழாக்கம்)

வெ. அரசகுமார், இயக்குநர், சட்ட (தமிழ்ப்பிரிவு)த் துறை.

தமிழ்நாடு அரசுக்காக சென்னை எழுதுபொருள் மற்றும் அச்சுத் துறை இயக்குநரால் அச்சிடப்பட்டு வெளியிடப்பட்டது.
Cite this issue. Tamil Nadu Gazette, Government of Tamil Nadu, 02 August 2023. Indian Gazettes, https://egazette.servantsofknowledge.in/details/in.gazette.tamilnadu.2023-08-02.Ordinary_31_Part-IV_Section-2_T_Sup/. Archive identifier in.gazette.tamilnadu.2023-08-02.Ordinary_31_Part-IV_Section-2_T_Sup.