Servants of Knowledge
Tamil Nadu Gazette · Government of Tamil Nadu

Notifications by Government - Tamil Translation LABOUR WELFARE AND SKILL DEVELOPMENT DEPARTMENT - Notification -

Published 30 August 2023

Type
Ordinary
Gazette no.
35
Part
Part III
Section
1A_T_Sup
Identifier
in.gazette.tamilnadu.2023-08-30.Ordinary_35_Part-III_1A_T_Sup
Languages
English, Tamil
Published at
Original source ↗

© தமிழ்நாடு அரசு 2023

[Regd. No. TN/CCN/467/2012-14.

[R. Dis. No. 197/2009.

[விலை: ரூ. 0.80 காசு

தமிழ்நாடு அரசிதழ் ஆணையின்படி வெளியிடப்பட்டது.

எண் 35] சென்னை, புதன்கிழமை, ஆகஸ்ட் 30, 2023 ஆவணி 13, சோபகிருது, திருவள்ளுவர் ஆண்டு-2054

பகுதி III—பிரிவு 1(a) இன் இணைப்பு

அரசாங்க அறிவிப்புகளின் தமிழ் மொழிபெயர்ப்புகள்

தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை

அறிவிக்கை

[அரசாணை (நிலை) எண். 162, தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு (M2)த் துறை, 6 டிசம்பர் 2022.] 1948 ஆம் ஆண்டு தொழிற்சாலைகள் சட்டத்தின் (மத்தியச் சட்டம் 63/1948) 87 ஆம் பிரிவு மற்றும் 112 ஆம் பிரிவில் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களைக் கொண்டு, தமிழ்நாட்டு ஆளுநர் அவர்கள், தமிழ்நாடு 1950 ஆம் ஆண்டு தொழிற்சாலைகள் விதிகளில் பின்வரும் திருத்தங்களை இதனால் மேற்கொள்கிறார். மேற்சொன்ன சட்டத்தின் 115 ஆம் பிரிவின்கீழ் தேவைப்பட்டவாறு இந்த வரைவுத் திருத்தம் ஏற்கனவே வெளியிடப்பட்டுள்ளது.

திருத்தங்கள்

மேற்சொன்ன விதிகளில்,-

(1) விதி 63-B-இல், "புனித ஜான் அவசர சிகிச்சை ஊர்தி அமைப்பு" என்ற சொற்றொடருக்குப் பின்னர், "அல்லது தமிழ்நாடு உயர்திறன் மேம்பாட்டு மையம்-சுகாதார நலன்" என்ற சொற்றொடர் சேர்த்துக் கொள்ளப்பட வேண்டும்.

(2) விதி 95-இல், அட்டவணை XVII-இல், பத்தி 4-இல் "புனித ஜான் அவசர சிகிச்சை ஊர்தி அமைப்பு" என்ற சொற்றொடருக்குப் பின்னர், "அல்லது தமிழ்நாடு உயர்திறன் மேம்பாட்டு மையம்-சுகாதார நலன்" என்ற சொற்றொடர் சேர்த்துக் கொள்ளப்பட வேண்டும்.

(3) விதி 95-இல், அட்டவணை XXIV-இல், பத்தி 12-இன் துணைப்பத்தி (c)-இல், "புனித ஜான் அவசர சிகிச்சை ஊர்தி அமைப்பு'' என்ற சொற்றொடருக்குப் பின்னர், "அல்லது தமிழ்நாடு உயர்திறன் மேம்பாட்டு மையம்-சுகாதார நலன்" என்ற சொற்றொடர் சேர்த்துக் கொள்ளப்பட வேண்டும்.

முகமது நசிமுத்தின்,

அரசு கூடுதல் தலைமைச் செயலாளர்.

(தமிழாக்கம்)

ந. அருள், இயக்குநர் (கூ.பொ),

தமிழ் வளர்ச்சி மற்றும்

செய்தி (மொழிபெயர்ப்பு)த் துறை.

தமிழ்நாடு அரசுக்காக சென்னை எழுதுபொருள் மற்றும் அச்சுத் துறை இயக்குநரால்

அச்சிடப்பட்டு வெளியிடப்பட்டது.

III-1a-(35) (T Sup)—1

Cite this issue. Tamil Nadu Gazette, Government of Tamil Nadu, 30 August 2023. Indian Gazettes, https://egazette.servantsofknowledge.in/details/in.gazette.tamilnadu.2023-08-30.Ordinary_35_Part-III_1A_T_Sup/. Archive identifier in.gazette.tamilnadu.2023-08-30.Ordinary_35_Part-III_1A_T_Sup.