Servants of Knowledge
Tamil Nadu Gazette · Government of Tamil Nadu

Notifications by Government - Tamil Translation LABOUR WELFARE AND SKILL DEVELOPMENT DEPARTMENT - Notification -

Published 30 August 2023

Type
Ordinary
Gazette no.
35
Part
Part II
Section
Section 2A_T_Sup
Identifier
in.gazette.tamilnadu.2023-08-30.Ordinary_35_Part-II_Section-2A_T_Sup
Languages
English, Tamil
Published at
Original source ↗

© தமிழ்நாடு அரசு 2023

[Regd. No. TN/CCN/467/2012-14. [R. Dis. No. 197/2009. [விலை: ரூ. 2.40 காசு

தமிழ்நாடு அரசிதழ் ஆணையின்படி வெளியிடப்பட்டது.

எண் 35] சென்னை, புதன்கிழமை, ஆகஸ்ட் 30, 2023 ஆவணி 13, சோபகிருது, திருவள்ளுவர் ஆண்டு–2054

பகுதி II—பிரிவு 2 இன் இணைப்பு

அரசாங்க அறிவிப்புகளின் தமிழ் மொழிபெயர்ப்புகள்

தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை

அறிவிக்கைகள்

[அரசாணை (நிலை) எண் 67, தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு (I1)த் துறை, 12 ஏப்ரல் 2023.] தமிழ்நாடு 1982ஆம் ஆண்டு உடலுழைப்புத் தொழிலாளர்கள் (வேலைவாய்ப்பையும் பணி நிலைமைகளையும் முறைப்படுத்துதல்) சட்டத்தின் (தமிழ்நாடு சட்டம் 33/1982) 6 ஆம் பிரிவைச் சேர்ந்த (1) உட்பிரிவில் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களைக் கொண்டு, தமிழ்நாட்டு ஆளுநர் அவர்கள், தமிழ்நாட்டில் உப்பளங்களில் பணிபுரியும் அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு "தமிழ்நாடு உப்பளத் தொழிலாளர்கள் நல வாரியத்தை" இதனால் அமைக்கிறார்.

தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை

[அரசாணை (ப) எண். 245 தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் (J2)த் துறை, 17 மே 2023]

1948 ஆம் ஆண்டு குறைந்தளவு ஊதியங்கள் சட்டத்தின் (மத்தியச் சட்டம் 11/1948) 9ஆம் பிரிவு மற்றும் 5ஆம் பிரிவைச் சேர்ந்த (1) உட்பிரிவின் (a) பகுதியில் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களைக் கொண்டு, தமிழ்நாட்டு ஆளுநர் அவர்கள், கல் மற்றும் ஏனைய பொருட்களைக் கொண்டு சிற்ப வேலைப்பாடுகள் செய்வதற்கு பணியமர்த்தப்படுபவர்களுக்கான குறைந்தளவு ஊதிய வீதங்களை நிர்ணயிப்பது தொடர்பாக, விசாரணைகளை மேற்கொள்வதற்கும் மாநில அரசுக்கு ஆலோசனைகளை வழங்குவதற்கும் பின்வரும் உறுப்பினர்கள் கொண்ட குழு ஒன்றை இதனால் நியமிக்கிறார்.

தனி நபர்கள்:-

(1) தொழிலாளர் துறை இணை ஆணையர்-II, சென்னை தலைவர்
(2) தொழிலாளர் துறை உதவி ஆணையர், (செயலாக்கம்), காஞ்சிபுரம். செயலாளர்
(3) கோட்ட உதவி இயக்குநர். பொருளியல் மற்றும் புள்ளியல் துறை, காஞ்சிபுரம். உறுப்பினர்

[ 1 ]

II-2-(35) (T Sup)—12 வேலையளிப்பவரின் பிரதிநிதிகள்:-

(1) திரு. M. சம்பத், தொழிலாளர் முன்னேற்ற கூட்டமைப்பு, எண். சுவாமிமலை அஞ்சல், 3A/11, கள்ளர் தெரு, கும்பகோணம் வட்டம் உறுப்பினர்
(2) திரு. E. ஜெயக்குமார், இந்திய தேசிய வணிக சங்க கூட்டமைப்பு, எண். 29/13, வெங்கடச்சாலம் தெரு, இராயபுரம், சென்னை-600 013. உறுப்பினர்
(3) திரு. P. கணேசன், இந்த் மஸ்தூர் சபா எண்.10/437, ராஜஸ்ரீ தெரு, சூரமங்கலம், சேலம்-636 005. உறுப்பினர்

தொழிலாளர்களின் பிரதிநிதிகள்:-

(1) Dr. M. சந்திரசேகரன், எண்.22, முத்துமாரியம்மன் தெரு, கடம்பாடி கிராமம் & அஞ்சல், திருக்கழுக்குன்றம் வட்டம், செங்கல்பட்டு - 603 104. உறுப்பினர்
(2) திரு. M. மகேஷ்குமார், தங்க சிற்ப கற்கள், (Golden Sculpture Stones) எண்.272, பஜனை கோயில் தெரு, சுலேரி கிராமம், மாமல்லபுரம் - 603 104. உறுப்பினர்
(3) திரு. T. பாஸ்கரன், கிரியேட்டிவ் ஸ்கல்ப்டர்ஸ், (Creative Sculptors) ஐந்து ரதங்கள் எதிரில், கல்பாக்கம் சாலை, மாமல்லபுரம் - 603 104. உறுப்பினர்

தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை

[அரசாணை (2ப) எண். 45, தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு (J1 )த் துறை, 10 ஜூலை 2023.] 1948 ஆம் ஆண்டு குறைந்தளவு ஊதியங்கள் சட்டத்தின் (மத்தியச் சட்டம் 11/1948) 3 ஆம் பிரிவைச் சேர்ந்த (1) உட்பிரிவின் (a) பகுதி 5 ஆம் பிரிவைச் சேர்ந்த (2) உட்பிரிவு ஆகியவற்றில் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களைக் கொண்டும், 4.05.2022ஆம் நாளிட்ட தமிழ்நாடு அரசிதழின் பாகம் II, பிரிவு 2 – இல் 700 ஆம் பக்கத்தில் (ஆங்கிலத்தில்) வெளியிடப்பட்ட தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறையின் II(2)/LWSD/324/2022 ஆம் எண் அறிவிக்கைக்கு பதிலிட்டகற்றீடாக தமிழ்நாட்டு ஆளுநர் அவர்கள், மேற்சொன்ன சட்டத்தின் 5ஆம் பிரிவைச் சேர்ந்த (1) உட்பிரிவின் (a) பகுதியின் கீழ் நியமிக்கப்பட்ட குழுவின் ஆலோசனையைக் கருதிப்பார்த்தப் பின்னர், தமிழ்நாடு மாநிலத்தில் தீப்பெட்டி தயாரிப்புத் தொழிலில் பணியமர்த்தப்பட்டுள்ள கீழேயுள்ள விவர அட்டவணையின் (2) நெடும்பத்தியில் குறிப்பிடப்பட்டுள்ள தொழிலாளர் வகையினருக்கு வழங்கத்தக்க குறைந்தளவு ஊதிய வீதங்களை அதன் (3) நெடும்பத்தியின் நிகரான பதிவுகளில் குறிப்பிடப்பட்டுள்ளவாறாக இதனால் நிர்ணயிக்கிறார்.

(2) இந்த அறிவிக்கை தமிழ்நாடு அரசிதழில் வெளியிடப்படும் நாளிலிருந்தும், அந்த நாள் முதற்கொண்டும் செயலுக்கு வரும்.

விவர அட்டவணை

தீப்பெட்டி தயாரிப்புத் தொழிலில் வேலைவாய்ப்பு

தொடர் எண் தொழிலாளர் வகை குறைந்தளவு அடிப்படை ஊதிய வீதங்கள் ( ரூபாயில்)
( 1 ) ( 2 ) ( 3 )
வகை-I-மாத ஊதியம்
(1) மேலாளர், முதலாள், பயிற்சி பெற்ற தொழில்நுட்ப பணியாளர்கள், தலைமை தரக் கட்டுப்பாட்டு அலுவலர். மாதமொன்றுக்கு ரூ.10000
தொடர் எண் தொழிலாளர் வகை குறைந்தளவு அடிப்படை ஊதிய வீதங்கள் ( ரூபாயில்)
( 1 ) ( 2 ) ( 3 )
(2) மேற்பார்வையாளர்கள், கணக்காளர், பண்டக காப்பாளர், இருப்பு பராமரிப்பாளர், ஓரளவு பயிற்சி பெற்ற தொழில்நுட்ப பணியாளர்கள், ஓட்டுநர் மாதமொன்றுக்கு ரூ.8000
(3) எழுத்தர், கணினி இயக்குபவர், தரவு உள்ளீட்டாளர். மாதமொன்றுக்கு ரூ.7000
(4) காவலாள், ஏவலாள், சிற்றேவலர் (Office Boy) மாதமொன்றுக்கு ரூ.4940
வகை-II-தினசரி வீத ஊதியம்
(1) தோய்ப்பவர், வேதிப்பொருளினை தோய்ப்பவர், மெழுகு தோய்ப்பவர், வெண்மெழுகு இடுபவர்கள், தையலிடுபவர், நறுக்குபவர்கள் மற்றும் உரிப்பவர்கள், பக்க வண்ணம் பூசுபவர்கள். நாளொன்றுக்கு ரூ.300
(2) இயந்திரத்தை இயக்குபவர், முறைமாற்றத்திற்கான பொறுப்பாளர், வேதிப்பொருளினை அரைப்பவர், வேதிப்பொருளினை கலக்குபவர், சமப்படுத்துதல் மற்றும் தயாரித்தல், மெழுகு இழை பிரித்தெடுப்பவர் மற்றும் அனைத்து வேதிப்பொருள் செயல்முறையில் ஈடுபட்டுள்ள பணியாளர்கள். நாளொன்றுக்கு ரூ.250
(3) சட்டம் மற்றும் பெட்டி சமன்படுத்துபவர்கள், 10 மற்றும் 100 எண்ணிக்கையில் அடுக்கு சட்டத்தில் சீர்படுத்துபவர் மற்றும் மூட்டை கட்டுபவர், சிப்பமாக்குதலை சரிபார்ப்பவர், பெட்டி நிரப்புதலை சரிபார்ப்பவர்கள் மற்றும் தாள் வெட்டுபவர்கள், விளிம்புச் சட்டத்தில் பொருத்துபவர்கள் (Frame Takers), விளிம்புச் சட்டத்தில் அளிப்பவர்கள் (Frame Givers) நாளொன்றுக்கு ரூ.220
(4) சுத்தம் செய்பவர்கள், காவலாள், ஏவலாள், சிற்றேவலர், ஏனைய பயிற்சி பெறாத பொதுப் பணியாளர்கள், பொருட்களை தூக்கி செல்லும் பயிற்சி பெறாதோர் மற்றும் மேற்சொன்ன இனங்களில் குறிப்பிடப்படாத ஏனைய பணியாளர்கள். நாளொன்றுக்கு ரூ.190
3

வகை-III - தீப்பெட்டி தயாரிப்பு தொழிலில் செய்யும் வேலைக்கேற்ப

ஊதியம் பெறும் வகைப்பணிகளில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்கள்

தொடர் எண் ( 1 ) பணி வகை ( 2 ) செய்யும் வேலைக்கேற்ற ஊதியம் ( 3 )
விலை (ரூ. காசு) யூனிட் / பெட்டிகள் / கட்டம்
(1) 50 எண்ணிக்கையிலான மர தீக்குச்சிகள் அடங்கிய தீப்பெட்டிகளை கொண்டு பெட்டி நிரப்புதல் 4.75 100 பெட்டிகள் ஒன்றுக்கு
(2) 50 எண்ணிக்கையிலான மெழுகு தீக்குச்சிகள் அடங்கிய தீப்பெட்டிகளை கொண்டு பெட்டி நிரப்புதல் 5.50 100 பெட்டிகள் ஒன்றுக்கு
(3) ஒட்டுச் சீட்டு ஒட்டுதல் 1.50 100 பெட்டிகள் ஒன்றுக்கு
(4) கட்டுதல் 0.27 கட்டு ஒன்றுக்கு
(5) சட்டத்தை நிரப்புதல்
42மிமீ 3.80 சட்டம் ஒன்றுக்கு
53மிமீ, 70 மிமீ, 95 மிமீ, 105 மிமீ, 170 மிமீ, 220 மிமீ, 280 மிமீ 6.40 சட்டம் ஒன்றுக்கு
(6) 10 மற்றும் 100 எண்ணிக்கையிலாக சிப்பமிடுதல் 0.85 10 எண்ணிக்கையிலான சிப்பங்கள் 10-க்கு மற்றும் 100 எண்ணிக்கையிலான சிப்பம் ஒன்றுக்கு
(7) வெளிப்புற பெட்டியை ஒட்டுதல் 2.25 யூனிட் ஒன்றுக்கு
4

வகை-IV - வண்ண தீப்பெட்டி தயாரிப்பு தொழிலில் செய்யும் வேலைக்கேற்ப

ஊதியம் பெறும் வகைப்பணிகளில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்கள்

தொடர் எண் ( 1 ) பணி வகை ( 2 ) செய்யும் வேலைக்கேற்ற ஊதியம் ( 3 )
சட்டத்தை நிரப்புதல் விலை (ரூ.காசு) யூனிட் / பெட்டிகள் / சட்டம்
(1) 45 மிமீ ரூ.6.80 சட்டம் ஒன்றுக்கு
50 மிமீ ரூ.6.40 சட்டம் ஒன்றுக்கு
60 மிமீ ரூ.6.40 சட்டம் ஒன்றுக்கு
80 மிமீ ரூ.6.00 சட்டம் ஒன்றுக்கு
110 மிமீ ரூ.5.60 சட்டம் ஒன்றுக்கு
140 மிமீ ரூ.5.60 சட்டம் ஒன்றுக்கு
180 மிமீ ரூ.5.00 சட்டம் ஒன்றுக்கு
(2) பெட்டியை நிரப்புதல் விலை (ரூ.காசு) யூனிட் / பெட்டிகள் / சட்டம்
50 மிமீ ரூ.5.00 யூனிட் ஒன்றுக்கு
60 மிமீ ரூ.6.40 யூனிட் ஒன்றுக்கு
80 மிமீ ரூ.6.40 யூனிட் ஒன்றுக்கு
110 மிமீ ரூ.7.00 யூனிட் ஒன்றுக்கு
140 மிமீ ரூ.7.00 யூனிட் ஒன்றுக்கு
180 மிமீ ரூ.7.30 யூனிட் ஒன்றுக்கு
5

10 எண்ணிக்கையிலான

விலை

யூனிட் / பெட்டிகள் / சட்டம்

யூனிட் பெட்டியை சிப்பமாக்குதல்

(ரூ. காசு)

50 மிமீ ரூ.1.60 யூனிட் ஒன்றுக்கு

(3) 60 மிமீ ரூ.1.70 யூனிட் ஒன்றுக்கு

80 மிமீ ரூ.1.80 யூனிட் ஒன்றுக்கு

110 மிமீ ரூ.1.80 யூனிட் ஒன்றுக்கு

140 மிமீ ரூ.1.80 யூனிட் ஒன்றுக்கு

180 மிமீ ரூ.1.80 யூனிட் ஒன்றுக்கு

விலை

யூனிட் / பெட்டிகள் / சட்டம்

(4) அட்டை பெட்டியின்

வெளிப்புறத்தை ஒட்டுதல்

(ரூ. காசு)

50 மிமீ ரூ.1.10 யூனிட் ஒன்றுக்கு

60 மிமீ ரூ.2.40 யூனிட் ஒன்றுக்கு

80 மிமீ ரூ.2.70 யூனிட் ஒன்றுக்கு

110 மிமீ ரூ.2.90 யூனிட் ஒன்றுக்கு

140 மிமீ ரூ.2.90 யூனிட் ஒன்றுக்கு

180 மிமீ ரூ.3.20 யூனிட் ஒன்றுக்கு

10 கட்டுகளாக இணைத்து

விலை

யூனிட் / பெட்டிகள் / சட்டம்

கட்டுதல்

(ரூ. காசு)

50 மிமீ ரூ.2.60 யூனிட் ஒன்றுக்கு

60 மிமீ ரூ.2.70 யூனிட் ஒன்றுக்கு

80 மிமீ ரூ.2.70 யூனிட் ஒன்றுக்கு

110 மிமீ ரூ.2.70 யூனிட் ஒன்றுக்கு

140 மிமீ ரூ.2.70 யூனிட் ஒன்றுக்கு

180 மிமீ ரூ.2.90 யூனிட் ஒன்றுக்கு

விளக்கங்கள்: :- (1) அகவிலைப்படி : - மேலே நிர்ணயிக்கப்பட்ட குறைந்தளவு அடிப்படை ஊதிய வீதங்களுடன் தொழிலாளர்களுக்கு கீழே குறிப்பிடப்பட்டுள்ளவாறு அகவிலைப்படி வழங்கப்பட வேண்டும்.

(i) அகவிலைப்படியானது, 2010 ஆம் ஆண்டிற்கான சென்னை மாநகர நுகர்வோர் சராசரி விலைக்குறியீட்டு எண்ணுடன் இணைக்கப்பட்டுள்ளது. (அதாவது 2001 ஆம் ஆண்டில் 100 புள்ளிகள் என்பதை அடிப்படையாகக் கொண்டு தற்போது கணக்கிடப்பட்ட 161 புள்ளிகள் ஆகும்). 161 புள்ளிகளுக்கு மேல் உயரும் ஒவ்வொரு புள்ளிக்கும் மாதமொன்றுக்கு ரூ.30.67 (முப்பது ரூபாய் அறுபத்தேழு காசுகள் மட்டும்) கூடுதலாக அகவிலைப்படி வழங்கப்பட வேண்டும்.

(ii) அகவிலைப்படியானது முந்தைய 12 மாதங்களுக்கான (அதாவது ஜனவரியிலிருந்து டிசம்பர் வரை) சராசரி நுகர்வோர் விலைக் குறியீட்டினை அடிப்படையாகக் கொண்டு, ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் முதல் நாளன்று கணக்கிடப்பட வேண்டும்.

6

(iii) முந்தைய ஆண்டிற்கான சென்னை மாநகர சராசரி நுகர்வோர் விலைக் குறியீட்டு எண்ணை அடிப்படையாகக் கொண்ட அகவிலைப்படியின் முதல் கணக்கீடு, இந்த அறிவிக்கை தமிழ்நாடு அரசிதழில் வெளியிடப்படும் நாளிலிருந்து செயலுக்கு வரும்.

(2) செய்யும் வேலைக்கேற்ப ஊதியம் பெறும் தொழிலாளர்களை பொறுத்த நேர்வில், அவர்கள் ஒரு நாளில் எட்டு மணி நேரம் வேலை செய்வதற்குட்பட்டு, அவர்களுக்கு அகவிலைப்படி வழங்கப்படும். செய்யும் வேலைக்கேற்ப ஊதியம் பெறும் தொழிலாளர்கள், நாளொன்றுக்கு எட்டு மணி நேரத்திற்கு குறைவாக வேலை செய்யும் நேர்வில், அவர் விகிதாச்சார அகவிலைப்படியை பெறுவதற்கு மட்டுமே உரிமையுடையவராவர்.

(3) நாள் ஊதியத்தைக் கணக்கிடுவதற்கு மாதாந்திர ஊதியத்தை 26ஆல் வகுக்க வேண்டும்.

(4) மாத ஊதியத்தைக் கணக்கிடுவதற்கு நாள் ஊதியத்தை 30ஆல் பெருக்க வேண்டும்.

(5) பணியின் தன்மை ஒரே மாதிரியாக இருக்கும்போது, ஆண் மற்றும் பெண் பணியாளர்களுக்கு வழங்கப்படும் ஊதியத்தில் எவ்வித வேறுபாடும் இருக்கக்கூடாது.

(6) தற்போது வழங்கப்பட்டு வரும் ஊதியங்கள், இங்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள குறைந்தளவு ஊதியங்களைக் காட்டிலும் அதிகமாக இருக்குமிடங்களிலெல்லாம் அதே ஊதியம் தொடர்ந்து வழங்கப்பட வேண்டும்.

முகமது நசிமுத்தின்,

அரசு கூடுதல் தலைமைச் செயலாளர்.

(தமிழாக்கம்)

ந. அருள், இயக்குநர் (கூ.பொ) தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தி (மொழிபெயர்ப்பு)த் துறை.

தமிழ்நாடு அரசுக்காக சென்னை எழுதுபொருள் மற்றும் அச்சுத் துறை இயக்குநரால்

அச்சிடப்பட்டு வெளியிடப்பட்டது.

Cite this issue. Tamil Nadu Gazette, Government of Tamil Nadu, 30 August 2023. Indian Gazettes, https://egazette.servantsofknowledge.in/details/in.gazette.tamilnadu.2023-08-30.Ordinary_35_Part-II_Section-2A_T_Sup/. Archive identifier in.gazette.tamilnadu.2023-08-30.Ordinary_35_Part-II_Section-2A_T_Sup.