Servants of Knowledge
Tamil Nadu Gazette · Government of Tamil Nadu

Notifications or Orders of interest to a section of the public issued by Secretariat Departments

Published 13 September 2023

Type
Ordinary
Gazette no.
37
Part
Part II
Notifications
Notifications or Orders of interest to a section of the public issued by Secretariat Departments
Section
Section 2-T-Sup
Identifier
in.gazette.tamilnadu.2023-09-13.Ordinary_37_Part-II_Section-2-T-Sup
Languages
English, Tamil
Published at
Original source ↗

© தமிழ்நாடு அரசு 2023

[Regd. No. TN/CCN/467/2012-14. [R. Dis. No. 197/2009. [விலை: ரூ. 2.40 காசு

தமிழ்நாடு அரசிதழ் ஆணையின்படி வெளியிடப்பட்டது.

எண் 37] சென்னை, புதன்கிழமை, செப்டம்பர் 13, 2023 ஆவணி 27, சோபகிருது, திருவள்ளுவர் ஆண்டு–2054

பகுதி II—பிரிவு 2 இன் இணைப்பு

அரசாங்க அறிவிப்புகளின் தமிழ் மொழிபெயர்ப்புகள்

வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை

அறிவிக்கைகள்

[அரசாணை (நிலை) எண். 223, வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி [ந.வ4(2)]த் துறை, 2 டிசம்பர் 2022.] தமிழ்நாடு 1971 ஆம் ஆண்டு நகர் ஊரமைப்புச் சட்டத்தின் (தமிழ்நாடு சட்டம் 35/1972) 10ஆம் பிரிவைச் சேர்ந்த (1) உட்பிரிவின் (b) பகுதியில் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களைக் கொண்டு, தமிழ்நாட்டு ஆளுநர் அவர்கள், 19.06.1974 ஆம் நாளிட்ட தமிழ்நாடு அரசிதழின் பாகம் II-பிரிவு 2-இல் 327 ஆம் பக்கத்தில் (ஆங்கிலத்தில்) வெளியிடப்பட்ட ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித் துறையின் II(2)/RUL/3033/74 ஆம் எண் அறிவிக்கையில் வருவாய் கிராமங்களாக அறிவிக்கப்பட்டுள்ளவாறு அருப்புக்கோட்டை உள்ளூர் திட்டமிடல் பகுதியுடன், பின்வரும் வருவாய் கிராமங்களைச் சேர்ப்பதற்கான அவருடைய நோக்கத்தை இதனால் அறிவிக்கிறார். அவையாவன:-

"வருவாய் கிராமங்களின் எண் மற்றும் பெயர்.

40. ஆத்திபட்டி

41. கட்டக்கஞ்சம்பட்டி

11. பாலையம்பட்டி

42. கஞ்சநாயக்கன்பட்டி

43. அருப்புக்கோட்டை(ஊரகப்பகுதி)

12. பெரியபுளியம்பட்டிபகுதி

15. மேட்டுத்தொட்டியான்குளம்

16. செம்பட்டி

2. இந்த அறிவிக்கை, தமிழ்நாடு அரசிதழில் வெளியிடப்பட்ட நாளிலிருந்து இரண்டு திங்கள் கால அளவிற்குள் மேற்சொன்ன பகுதிகளிலுள்ள யாதொரு குடியிருப்பாளர் அல்லது யாதொரு உள்ளூர் அதிகார மன்றம் அல்லது நிறுவனத்திற்கு அவ்வாறு கூடுதலாக சேர்ப்பதற்குக் கருதப்பட்டுள்ள பகுதிகள் தொடர்பாக யாதொரு மறுப்புரை அல்லது கருத்துரை ஏதேனுமிருப்பின் அதனை எழுத்து வடிவில் அளிக்கலாம். மேற்சொன்ன கால அளவு முடிவடைவதற்குள் பெறப்படும் ஏதேனும் மறுப்புரைகள் அல்லது கருத்துரைகள், மேற்சொன்ன சட்டத்தின் 10ஆம் பிரிவைச் சேர்ந்த (4) உட்பிரிவிற்கிணங்க மேற்கொண்டும் நடவடிக்கை எடுப்பதற்கு முன்னர் அரசால் பரீசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்படும். எழுத்துப்பூர்வமான மறுப்புரைகள் அல்லது கருத்துரைகள் அரசு முதன்மைச் செயலாளர், வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை, தலைமைச் செயலகம், புனித ஜார்ஜ் கோட்டை, சென்னை - 600 009 என்ற முகவரிக்கு அனுப்பி வைக்கப்பட வேண்டும்.

ஹிதேஸ்குமார்.எஸ். மக்வானா, அரசு முதன்மைச் செயலாளர்.

(தமிழாக்கம்)

ந. அருள், இயக்குநர் (மொழிபெயர்ப்பு, மு. கூ.பொ) , தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தி (மொழிபெயர்ப்பு)த் துறை.

[ 1 ]

II-2-(37) (T Sup)—12

தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை

அறிவிக்கைகள்

[அரசாணை (ப) எண். 615, தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு (J1 )த் துறை, 12 டிசம்பர் 2022.] 1948 ஆம் ஆண்டு குறைந்தளவு ஊதியங்கள் சட்டத்தின் (மத்தியச் சட்டம் 11/1948) 3ஆம் பிரிவைச் சேர்ந்த (1) உட்பிரிவின் (b) பகுதி 5 ஆம் பிரிவைச் சேர்ந்த (2) உட்பிரிவு ஆகியவற்றில் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களைக் கொண்டு வெளியிடக் கருதிய பின்வரும் வரைவு அறிவிக்கை, மேற்சொன்ன சட்டத்தின் 5 ஆம் பிரிவைச் சேர்ந்த (1) உட்பிரிவின் (b) பகுதியில் கோரியுள்ளவாறு, அதனால் பாதிக்கப்படக்கூடிய அனைவரின் தகவலுக்காக இதனால் வெளியிடப்படுகிறது.

2. இந்த வரைவு அறிவிக்கை, தமிழ்நாடு அரசிதழில் வெளியிடப்படும் நாளிலிருந்து இரண்டு திங்கள் கால அளவு முடிவடையும் நாளன்று அல்லது அதற்குப் பின்னர் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்றும், இது தொடர்பாக மேற்சொன்ன கால அளவு முடிவடைவதற்கு முன்னர் யாதொரு நபரிடமிருந்து பெறப்படும் யாதொரு மறுப்புரை அல்லது கருத்துரை தமிழ்நாடு அரசால் பரிசீலிக்கப்படுமென்றும் இதனால் அறிவிக்கப்படுகிறது. மறுப்புரை அல்லது கருத்துரை ஏதேனுமிருப்பின், அதனை, சென்னை-600 006 இல் DMS வளாகத்திலுள்ள தொழிலாளர் நல ஆணையாளர் வாயிலாக அரசு கூடுதல் தலைமைச் செயலாளர், தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை, தலைமைச் செயலகம், சென்னை - 600 009 என்ற முகவரிக்கு அனுப்பி வைக்கப்பட வேண்டும்.

வரைவு அறிவிக்கை

1948 ஆம் ஆண்டு குறைந்தளவு ஊதியங்கள் சட்டத்தின் (மத்தியச் சட்டம் 11/1948) 3 ஆம் பிரிவைச் சேர்ந்த (1) உட்பிரிவின் (b) பகுதி, 5 ஆம் பிரிவைச் சேர்ந்த (2) உட்பிரிவு ஆகியவற்றில் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களைக் கொண்டும், 7.8.2019ஆம் நாளிட்ட தமிழ்நாடு அரசிதழின் பாகம் II-பிரிவு 2இல், 734 ஆம் பக்கத்தில் (ஆங்கிலத்தில்) வெளியிடப்பட்ட தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறையின் II(2)/தொவேவா/647/2019 ஆம் எண் அறிவிக்கைக்கு பதிலிட்டகற்றீடாகவும் தமிழ்நாட்டு ஆளுநர் அவர்கள், தமிழ்நாடு மாநிலத்தில் பூத்தையல், சரிகை போன்ற கைவேலைப்பாட்டுத் தொழிலில் பணியமர்த்தப்பட்டுள்ளோருக்கான கீழேயுள்ள விவர அட்டவணையின் (3) நெடும்பத்தியில் நிகரான பதிவுகளில் குறிப்பிடப்பட்டுள்ளவாறாக இதனால் திருத்தியமைக்கிறார்.

விவர அட்டவணை

பூத்தையல் சரிகை போன்ற கைவேலைப்பாட்டுத் தொழிலில் வேலைவாய்ப்பு

தொடர் எண். ( 1 ) பணியாளர்களின் வகைகள் ( 2 ) குறைந்தளவு அடிப்படை ஊதியங்கள் ( நாளொன்றுக்கு) ( 3 ) ( ரூ . காசு)
(1) தேர்ச்சி பெற்றவர்கள் : 1. வடிவமைப்பாளர் (Designer) 2. சட்டத்தில் துணி பொருத்துநர் (Frame Fitting and Setting Worker) 3. காகித உருவரை பதியவைத்தல் / சாயம் தோய்ப்பவர் (Paper Tracing / Dyeing Worker) 4. பூ வேலைப்பாடு, கல் பதித்தல் போன்ற பணி செய்யும் பணியாளர் (Aari Worker) 5. சரிகை வேலைப்பாடு பணியாளர் (Zardosi Worker) 6. பூ வேலைப்பாடு, கல் பதித்தல் போன்ற பணி மற்றும் சரிகை வேலைப்பாடு செய்யும் பணியாளர் (Aari and Zardosi Worker) 407.00
(2) ஓரளவு தேர்ச்சி பெற்றவர்கள் : 1. மாதிரி உருவாக்குபவர் (Sample Maker) 2. வண்ணம் அமைக்கும் பணியாளர் (Colour Setting Worker) 387.00
தொடர் எண். ( 1 ) பணியாளர்களின் வகைகள் ( 2 ) குறைந்தளவு அடிப்படை ஊதியங்கள் ( நாளொன்றுக்கு) ( 3 ) ( ரூ . காசு)
(3) தேர்ச்சி பெறாதவர்கள் : 1. காகித உருவரை பதியவைத்தல் மற்றும் சாயம் தோய்த்தல் உதவியாளர் (Paper Tracing and Dyeing Helper) 2. நேர்த்தியாக்கும் பணிகள் (Trimming Works) 3. ஓர வேலைப்பாடுகள் (தண்டி, டிக்கி, கர்டானா, போத்) (Outline Works) 368.00
3

விளக்கங்கள்.- அகவிலைப்படி:- மேலே நிர்ணயிக்கப்பட்ட குறைந்தளவு அடிப்படை ஊதியவீதங்களுடன் தொழிலாளர்களுக்கு கீழே குறிப்பிட்டுள்ளவாறு அகவிலைப்படி வழங்கப்பட வேண்டும்.

(i) அகவிலைப்படியானது, 2010 ஆம் ஆண்டிற்கான சென்னை மாநகர நுகர்வோர் சராசரி விலைக்குறியீட்டு எண்ணுடன் இணைக்கப்பட்டுள்ளது. (அதாவது 2001 ஆம் ஆண்டில் 100 புள்ளிகள் என்பதை அடிப்படையாகக் கொண்டு தற்போது கணக்கிடப்பட்ட 161 புள்ளிகள்). 161 புள்ளிகளுக்கு மேல் உயரும் ஒவ்வொரு புள்ளிக்கும் நாள் ஒன்றுக்கு ரூ. 2.27 (இரண்டு ரூபாள் இருபத்து ஏழு காசுகள் மட்டும்) கூடுதலாக அகவிலைப்படி வழங்கப்பட வேண்டும்.

(ii) முந்தைய 12 மாதங்களுக்கான (அதாவது ஜனவரியிலிருந்து டிசம்பர் வரை) சராசரி விலைக்குறியீட்டினை அடிப்படையாகக் கொண்டு, ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் முதல் நாள் அன்று அகவிலைப்படி கணக்கிடப்பட வேண்டும்.

(iii) முந்தைய ஆண்டிற்கான சென்னை மாநகர நுகர்வோர் சராசரி விலைக் குறியீட்டு எண்ணை அடிப்படையாகக் கொண்ட முதல் கணக்கீடு, இந்த அறிவிக்கை தமிழ்நாடு அரசிதழில் வெளியிடப்படும் நாளிலிருந்து செயலுக்கு வரும்.

(2) பணியின் தன்மை ஒரே மாதிரியாக இருக்கும்போது, ஆண் மற்றும் பெண் தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் ஊதியத்தில் எவ்வித வேறுபாடும் இருக்கக்கூடாது.

(3) மாதந்திர ஊதியத்தைக் கணக்கிடுவதற்கு, நாள் ஊதியத்தை 30ஆல் பெருக்க வேண்டும்.

(4) தற்போது வழங்கப்பட்டு வரும் ஊதியங்கள், இங்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள குறைந்தளவு ஊதியங்களைக் காட்டிலும் அதிகமாக இருக்குமிடங்களிளெல்லொம், அதே உயரளவு ஊதியம் தொடர்ந்து வழங்கப்பட வேண்டும்.

தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை

அறிவிக்கை

[அரசாணை(நிலை) எண்.124, தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு(I2)த் துறை, 21 ஜூலை 2023] தமிழ்நாடு 1982ஆம் ஆண்டு உடலுழைப்புத் தொழிலாளர்கள் (வேலை வாய்ப்பினையும் பணி நிலைமைகளையும் முறைப்படுத்துதல்) (தமிழ்நாடு சட்டம் 33/1982) சட்டத்தின் 4-ஆம் பிரிவில் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களைக் கொண்டு, தமிழ்நாட்டு ஆளுநர் அவர்கள், ஆலோசனை குழுவுடன் கலந்தாலோசித்த பின்னர், தமிழ்நாடு 1994ஆம் ஆண்டு உடலுழைப்புத் தொழிலாளர்கள் (கட்டுமானத் தொழிலாளர்கள்) நலத் திட்டத்தில் பின்வரும் திருத்தங்களை இதனால் செய்கிறார். அவையாவன:-

திருத்தங்கள்

மேற்சொன்ன திட்டத்தில்,

(1) பகுதி 3-இல், இனம் (10)-க்கு பின்னர், பின்வரும் இனம் சேர்த்துக் கொள்ளப்பட வேண்டும், அதாவது:-

"(11) பணியிடத்தில் ஏற்பட்ட ஒரு விபத்தின் காரணமாக இறந்த உடலுழைப்பு தொழிலாளரின் உடலை எடுத்துச் செல்வதற்கான நிதியுதவி.";

4

(2) பகுதி 14A-க்கு பின்னர், பின்வரும் பகுதி சேர்த்துக் கொள்ளப்பட வேண்டும், அதாவது:-

"14B. பணியிடத்தில் ஏற்பட்ட ஒரு விபத்தின் காரணமாக இறந்த உடலுழைப்பு தொழிலாளரின் உடலை எடுத்துச் செல்வதற்கான நிதியுதவி.- (1) பணியிடத்தில் நிகழ்ந்த ஒரு விபத்தின் காரணமாக உடலுழைப்பு தொழிலாளர் ஒருவர் இறந்து விட்டாரெனில், இறந்த உடலுழைப்புத் தொழிலாளியின் உடலை மருத்துவமனையில் இருந்து அவரது சொந்த ஊருக்குக்கு எடுத்துச் செல்வதற்கான நிதியுதவியைப் பெறுவதற்கு அவரது நேமகதாரர் அல்லது சட்டப்பூர்வ வாரிசுகள் தகுதியுடையவராவார்கள்.

விளக்கம்.- இந்த பகுதியின் செயல்நோக்கத்திற்காக, "விபத்து" என்பது ஒரு உடலுழைப்புத் தொழிலாளருக்கு அவர் செய்து கொண்டிருந்த பணியின்போது, முழுமையாக மற்றும் நேரடியாக அவருடைய பணியிலிருந்த எழுந்த விபத்தின் விளைவாக அவருக்கு மரணத்தை ஏற்படுத்தியது எனப் பொருள்படும், ஆனால், வேண்டுமென்றே தன்னைத் தானே காயப்படுத்திக் கொள்ளுதல், தற்கொலை, தற்கொலை முயற்சி, போதையூட்டும் மதுபானம் அல்லது போதைப்பொருள் அல்லது மனப் பிறழ்வினால் ஏற்படும் மரணம், அல்லது யாதொரு சட்டம் அல்லது விதிகள், விதித்துறைகள் அல்லது அவ்வப்போது பொருந்தக்கூடிய அறிவுறுத்தல்களை மீறுவதால் ஏற்படும் மரணம் ஆகிய எவையும் இதில் சேராது/அடங்காது.

(2) வழங்கத்தக்க/வழங்கப்பட வேண்டிய நிதியுதவித் தொகை பின்வருமாறு:-

(அ) தமிழ்நாடு உடலுழைப்புத் தொழிலாளர்:- மத்திய அரசின் நேரடி ஆட்சிப்பகுதியின் புதுச்சேரி உட்பட தமிழ்நாடு ஏற்படும் போக்குவரத்து செலவு கீழ் வரும் மாநிலத்திற்குள் மருத்துவமனையிலிருந்து தொழிலாளரின் சொந்த ஊருக்கு எடுத்துச் செல்கிற அரசு அமரர் ஊர்திக்கான உள்ளபடியான போக்குவரத்து செலவு
(ஆ) ம ா நி ல ங் க ளு க் கி ை ட ே ய ய ா ன தொழிலாளர்.- தமிழ்நாடு மாநிலத்திற்கு வெளியே ஏற்படும் போக்குவரத்து செலவு பு ல ம் பெ ய ர் மருத்துவமனையிலிருந்து சம்பந்தப்பட்ட மாநிலத்தில், தொழிலாளரின் சொந்த ஊருக்கு அரசு அமரர் ஊர்தி அல்லது தொடர் வண்டியில் அல்லது விமானத்தில் எடுத்துச் செல்வதற்கு ஆகும் உள்ளபடியான போக்குவரத்து செலவு உயரளவாக ரூ.1,00,000/- (ரூபாய் ஒரு இலட்சம் மட்டும்)

3. கோரிக்கை.- (a) பணியிடத்தில் அவர் பணியை மேற்கொள்ளும்போது யாதொரு விபத்து காரணமாக உடனடியாக மரணம் ஏற்பட்டதன் காரணமாக, அதற்கான கோரிக்கை, விவர அட்டவணை II இல் உள்ள படிவம் DD-இல் நேமகதாரரால் அல்லது சட்டப்படியான வாரிசுதாரரால், சம்பந்தப்பட்ட மாவட்டத்தின் தொழிலாளர் உதவி ஆணையரிடம் (சமூகப் பாதுகாப்புத் திட்டம்) அளிக்கப்பட வேண்டும்.

(b) சம்பந்தப்பட்ட மாவட்டத்தின் தொழிலாளர் உதவி ஆணையர் (சமூகப் பாதுகாப்புத் திட்டம்), இந்தப் பகுதியின் விதித்துறைகளுக்கிணங்க, இறந்த தொழிலாளரின் உடலை எடுத்துச் செல்வது குறித்த போக்குவரத்து செலவுக்கான நிதியுதவியை வழங்குவதற்கான ஒவ்வொரு விண்ணப்பத்தையும் ஆய்வு செய்ய வேண்டும்.

(c) விபத்து குறித்த முதல் தகவல் அறிக்கை, வாரிசு சான்றிதழ், இறப்பு சான்றிதழ் மற்றும் உடற்கூராய்வு அறிக்கைகள் ஆகியவற்றை வழங்குவதற்கான உரிய அதிகாரியால் வழங்கப்பட்ட அத்தகைய சான்றிதழ்கள் அல்லது சம்பந்தப்பட்ட மாவட்டத்தின் தொழிலாளர் உதவி ஆணையரால் (சமூகப் பாதுகாப்புத் திட்டம்) கோரப்படுகிற ஏனைய யாதொரு ஆவணங்களை நேமகதாரர் அல்லது வாரிசுதாரர்கள் அளிக்க வேண்டும்.

(d) சம்பந்தப்பட்ட மாவட்டத்தின் தொழிலாளர் உதவி ஆணையர் (சமூகப் பாதுகாப்புத் திட்டம்), கோரிக்கை பெறப்பட்ட நாளிலிருந்து இரண்டு பணி நாட்களுக்குள் அவற்றை உரியமுறையில் சரிபார்த்து, கோரிக்கைக்கான ஒப்புதலுக்கு அனுமதி வழங்குவதற்காக துணைப்பகுதி (2)-இல் குறிப்பிடப்பட்டுள்ள நிதியுதவியை வழங்குவதற்கான விண்ணப்பத்தை, சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சியரிடம்/ மாவட்ட கண்காணிப்பு குழுத் தலைவரிடம் அளிக்க வேண்டும். மாவட்ட ஆட்சியரின் முடிவே இறுதியானதாகும். மாவட்ட ஆட்சித் தலைவரால் கோரிக்கை விண்ணப்பத்திற்கு ஒப்புதல் வழங்கப்பட்டவுடன், நேமகதாரர் அல்லது சட்டப்படியான வாரிசுதாரர் உள்ளபடியாக ஏற்பட்ட செலவினத்திற்கான செலவுச் சீட்டுகளை அளிப்பதன் பேரில், சம்பந்தப்பட்ட மாவட்டத்தின் தொழிலாளர் உதவி ஆணையர் (சமூகப் பாதுகாப்புத் திட்டம்), நேமகதாரருக்கு அல்லது சட்டப்படியான வாரிசுதாரருக்கான நிதியுதவிக்கு ஒப்பளிப்பு செய்து, சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சித்தலைவர் வாயிலாக அத்தகைய நிதியுதவியை வழங்க வேண்டும்.

(e) அவசர கால நேர்வுகளில், காலதாமதத்தை தவிர்ப்பதற்கு, சம்பந்தப்பட்ட மாவட்ட நிருவாகம், மாநிலங்களுக்கிடையேயான புலம்பெயர் தொழிலாளர்கள் உட்பட, இறந்த கட்டுமானப் பணியாளர்களின் உடலை அவர்களின் சொந்த ஊருக்கு எடுத்துச் செல்வதற்கான செலவை ஏற்றுக் கொள்ளலாம். துணைப் பகுதி 3(d) –இல் குறிப்பிடப்பட்டுள்ள நடைமுறைகளைப் பின்பற்றிய பின்னர் சம்பந்தப்பட்ட மாவட்ட நிருவாகத்திடம் இந்த நிதியுதவித்தொகை திருப்பிச் செலுத்தப்பட வேண்டும்.

5

(3) விவர அட்டவணை II-இல், படிவம் D-க்கு பின்னர், பின்வரும் படிவம் சேர்த்துக் கொள்ளப்பட வேண்டும், அதாவது;-

"[படிவம்-DD

[காண்க பகுதி 14 B (3) (a)]

பணியிடத்தில் நிகழ்ந்த விபத்து காரணமாக இறந்த உடலுழைப்புத் தொழிலாளரின் உடலை எடுத்துச் செல்வதற்கான நிதியுதவியை

வழங்குவதற்கான விண்ணப்பம்

பெறுநர்

தொழிலாளர் உதவி ஆணையர் (சமூகப் பாதுகாப்புத் திட்டம்)

--------- மாவட்டம்

1. (a) இறந்த உடலுழைப்புத் தொழிலாளரின் பெயர் :

(b) முழுமையான முகவரி (இறக்கும் காலத்தின்போது):

(c) வயது (இறக்கும் நாளன்று):

(d) பணியின் தன்மை:

(e) ஆதார் எண்:

2. (a) பகுதி:

(b) இடம்:

(c) வட்டம்:

(d) மாவட்டம்:

(e) மாநிலம் :

3. இறந்த பணியாளர்,-

(a) வாரியத்தில் பதிவு செய்துள்ளாரா:

(b) பதிவு செய்யவில்லையா:

(c) மாநிலங்களிடையே புலம்பெயர்ந்த பதிவு செய்துள்ள தொழிலாளர்:

(d) மாநிலங்களிடையே புலம்பெயர்ந்த பதிவு செய்யாத தொழிலாளர்:

4. விபத்து நடந்த நாள் மற்றும் நேரம்:

5. விபத்து நடந்த இடம் (முழு முகவரியுடன்) :

6. இறந்த நாள் மற்றும் நேரம்:

7. இறந்த இடம்:

8. இறப்பிற்கான காரணம்:

9. நேமகதாரர்/சட்டப்படியான வாரிசுதாரர்களின்பெயர்:

(a) இறந்த தொழிலாளருடனான உறவுமுறை:

(b) நேமகதாரர்/சட்டப்படியான வாரிசுதாரர்களின் வயது:

(c) முழு முகவரி (அஞ்சல் குறியீட்டு எண்ணுடன்):

(d) ஆதார் எண்:

10. நேமகதாரர்/சட்டப்படியான வாரிசுதாரர்களின் வங்கி விவரங்கள்:

(a) வங்கியின் பெயர் மற்றும் வங்கி கணக்கு எண்:

(b) MICR குறியீடு மற்றும் IFSC குறியீட்டெண்:

(வங்கி கணக்கு புத்தகத்தின் முதல் பக்கம் இணைக்கப்பட வேண்டும்)

11. ஆவணங்கள்:-

(i) விபத்து நடந்த இடத்திற்கு அருகேயுள்ள காவல் நிலையத்திலிருந்து பெறப்பட்ட முதல் தகவல் அறிக்கையின் சான்றொப்பமிட்டநகல் இணைக்கப்பட வேண்டும்: (ii) அசல் உடற்கூராய்வு அறிக்கை இணைக்கப்பட வேண்டும்: (iii) இறப்பு சான்றிதழின் அசல் இணைக்கப்பட வேண்டும்: (iv) வாரிசு சான்றிதழின் அசல் இணைக்கப்பட வேண்டும்: 6 12. மத்திய அரசின் நேரடி ஆட்சிப் பகுதியின் கீழ் வரும் புதுச்சேரி உட்பட மாநிலத்திற்குள்ளான போக்குவரத்து செலவு (அரசு அமரர் ஊர்தியின் உள்ளபடியான பட்டியின் அசல் இணைக்கப்பட வேண்டும்) :

13. மாநிலத்திற்கு வெளியே ஏற்பட்ட போக்குவரத்து செலவினம் (அரசு அமரர் ஊர்தி/தொடர்வண்டி/விமானத்தின் உள்ளபடியான பட்டியின் அசல் இணைக்கப்பட வேண்டும்) :

நேமகதாரர்/சட்டப்படியான வாரிசுதாரர்களின் கையொப்பம்

நேமகதாரரால்/சட்டபடியான வாரிசுதாரர்களால் அளிக்கப்படும் உறுதிமொழி.*

மேலே அளிக்கப்பட்ட விவரங்கள் எனக்கு நன்கு தெரிந்த வரையிலும், சரியானதெனவும், உண்மையானதெனவும் இதனால் நான் உறுதியளிக்கிறேன். மேலே அளிக்கப்பட்ட யாதொரு தகவல் தவறானதென இறுதியில் கண்டறியப்படும் நேர்வில், பணிபுரியும் இடத்தில் விபத்து ஏற்பட்டு மரணமடைந்ததால், உடலை எடுத்துச் செல்வதற்காக நிதியுதவியாக பெறப்பட்ட முழு தொகையையும் திருப்பி செலுத்துவதற்கு நான் ஒப்புக்கொள்கிறேன்.

நான், ஏனைய யாதொரு நலவாரியம் அல்லது தமிழ்நாடு அரசால் அமைக்கப்பட்ட நலவாரியங்கள் அல்லது ஏனைய யாதொரு அரசுத் திட்டங்களின் கீழ் கோரிக்கை வாயிலாக இது போன்று பலனை பெறவில்லை எனவும் இதனால் உறுதியளிக்கிறேன்.

இடம்:

நாள்:

நேமகதாரர்/சட்டப்படியான வாரிசுதாரரின் கையொப்பம் *யாதொரு தவறான தகவல்/சான்றளிப்பு சட்ட நடவடிக்கைக்குட்பட்டதாகும்.

ஒப்பளிப்பு

பணியிடத்தில் ஏற்பட்ட விபத்து காரணமாக இறந்த திரு/திருமதி/செல்வி ------ உடலுழைப்புத் தொழிலாளரின் உடலை எடுத்துச் செல்வதற்காக, உரிய சரிபார்ப்பிற்கு பின்னர், அந்த உடலுழைப்பு தொழிலாளரின் நேமகதாரர்/சட்டப்படியான வாரிசுதாரர்களான திரு/திருமதி/செல்வி ------க்கு நிதியுதவியாக ரூ.------/-க்கு (ரூபாய் ----- மட்டும்) இதனால் நான் ஒப்பளிக்கிறேன்.

இடம்:

நாள்:

தொழிலாளர் உதவி ஆணையர் (சமூகப் பாதுகாப்புத் திட்ட ம்) ------- மாவட்டம்

ஒப்புகைச் சீட்டு

பணியிடத்தில் ஏற்பட்ட விபத்து காரணமாக மரணமடைந்த செல்வி/திரு/திருமதி ------ என்கிற மரணமடைந்த உடலுழைப்புத் தொழிலாளர் குறித்த நேர்வில், அவரின் உடலை எடுத்துச் செல்வதற்கு, நிதியுதவி ஒப்பளிப்பதற்கான கோரிக்கை விண்ணப்பம் செல்வி/ திரு/திருமதி .............. என்பவரிடமிருந்து பெறப்பட்டது.

தொழிலாளர் உதவி ஆணையரின் (சமூகப் பாதுகாப்புத் திட்டம்) கையொப்பம்

தேதியுடன்

-------------- மாவட்டம்

பெயர்:

அலுவலக முத்திரை:

பதவிப் பெயர்:

முகமது நசிமுத்தின்,

அரசு கூடுதல் தலைமைச் செயலாளர்.

(தமிழாக்கம்)

ந. அருள்,

இயக்குநர் (கூ.பொ),

தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தி (மொழிபெயர்ப்பு)த் துறை.

தமிழ்நாடு அரசுக்காக சென்னை எழுதுபொருள் மற்றும் அச்சுத் துறை இயக்குநரால்

அச்சிடப்பட்டு வெளியிடப்பட்டது.

Cite this issue. Tamil Nadu Gazette, Government of Tamil Nadu, 13 September 2023. Indian Gazettes, https://egazette.servantsofknowledge.in/details/in.gazette.tamilnadu.2023-09-13.Ordinary_37_Part-II_Section-2-T-Sup/. Archive identifier in.gazette.tamilnadu.2023-09-13.Ordinary_37_Part-II_Section-2-T-Sup.