© தமிழ்நாடு அரசு 2023
[Regd. No. TN/CCN/467/2012-14. [R. Dis. No. 197/2009. [விலை: ரூ. 0.80 காசு
| தமிழ்நாடு அரசிதழ் ஆணையின்படி வெளியிடப்பட்டது. | ||
எண் 41] சென்னை, புதன்கிழமை, அக்டோபர் 11, 2023 புரட்டாசி 24, சோபகிருது, திருவள்ளுவர் ஆண்டு–2054
பகுதி II—பிரிவு 2 இன் இணைப்பு
அரசாங்க அறிவிப்புகளின் தமிழ் மொழிபெயர்ப்புகள்
வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை
அறிவிக்கை
[அரசாணை (நிலை) எண். 127, வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி [ந.வ4(2)]த் துறை, 13 செப்டம்பர் 2023.] 1971 ஆம் ஆண்டு தமிழ்நாடு நகர ஊரமைப்புச் சட்டத்தின் (தமிழ்நாட்டு சட்டம் 35/1972) 10ஆம் பிரிவைச் சேர்ந்த (4) உட்பிரிவில் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களைக் கொண்டு, தமிழ்நாட்டு ஆளுநர் அவர்கள், மேட்டூர் உள்ளூர் திட்டமிடல் பகுதியில் பின்வரும் வருவாய் கிராமங்களை சேர்த்து 17.04.1974 ஆம் நாளிட்ட தமிழ்நாடு அரசிதழின் பாகம் II-பிரிவு 2-இல் 222 ஆம் பக்கத்தில் (ஆங்கிலத்தில்) வெளியிடப்பட்ட ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித் துறையின் II(2)/RUL/2162/74 ஆம் எண் அறிவிக்கையில் பின்வரும் திருத்தத்தை இதனால் செய்கிறார். அவ்வாறு செய்வதற்கான நோக்கம் மேற்சொன்ன சட்டத்தின் 10 ஆம் பிரிவைச் சேர்ந்த (1) உட்பிரிவின் (b) பகுதியில் கோரியுள்ளவாறாக ஏற்கெனவே வெளியிடப்பட்டுள்ளது.
திருத்தம்
மேற்சொன்ன அறிவிக்கையில் உள்ள அட்டவணையில் பின்வரும் அட்டவணை சேர்த்துக் கொள்ளப்பட வேண்டும், அதாவது:-
அட்டவணை
" வருவாய் கிராமங்களின் எண் மற்றும் பெயர்
13. P.N.பட்டி(பகுதி)
14. வீரக்கல்புதூர்
அபூர்வா,
அரசு முதன்மைச் செயலாளர்.
(தமிழாக்கம்)
ந. அருள்,
இயக்குநர் (கூ.பொ),
தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தி (மொழிபெயர்ப்பு)த் துறை.
அச்சிடப்பட்டு வெளியிடப்பட்டது.
II-2-(41) (T Sup)—1